நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

ந்த பெண்மணி வெளிநாட்டு பெண்மணி. ஆனால் இந்த தேசத்துக்காகவே வாழ்ந்தார். இந்த நாட்டுக்காக இந்நாட்டு மக்களுக்காக அவர்களில் ஒருவராக வாழ்ந்து தன்னைத்தானே அணு அணுவாக அவர்களுக்காக சமர்ப்பித்தார். ஏழை எளிய மக்கள் வாழும் குப்பங்களில் சேரிகளில் இறங்கி சென்று வேலை செய்தார். சாதாரண காலங்களில் மட்டுமல்ல பெரிய நோய் அந்த மாநகரம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த காலத்தில். அவர் யார்?

இந்த கேள்வியை கேளுங்கள். எந்த இந்து குழந்தையும் உடனடியாக இதற்கு பதிலளிக்கும்: அன்னை தெரெசா!

ஆனால் தெரசா செய்த ‘சேவை’யின் பின்னால் துல்லியமான பொருளாதார கணக்குகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளின் மத மற்றும் பண்பாட்டு மேலாண்மையை தூக்கிப் பிடிக்கும் பதாகை தாங்கியாக தெரசாவை முன்னாள் காலனிய சக்திகளும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும் முன்வைத்தன. மனிதர்களை குறித்து கவலைப்படாத, மனிதர்களை இழிவு செய்கிற இந்திய பண்பாட்டினால் அவலமடைந்தவர்களுக்கு மேற்கத்திய காருண்யத்தின் சரணாலயமாக தெரசா உலக ஊடகங்களில் காட்டப்பட்டார். தெரசா ஆற்றியது சேவை அல்ல; மேற்கத்திய பண்பாட்டு மத மேலாண்மையை மூன்றாம் உலகநாடுகள் ஏற்பதற்கான பிரச்சார முதலீடு.

ஆனால்… ஆனால், மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய பண்பாட்டின் மீதும் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீதும் முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம். அவர்தான் மார்கெரட் எலிஸபெத் நோபிள் என்கிற சகோதரி நிவேதிதை. பாரதத்துக்கு சமர்ப்பணமாக மேற்கு அளித்த சகோதரி அவர். உண்மையாக சமுதாயத்துக்கு தொண்டு செய்த அவரை, வழக்கம் போலவே போலி பகட்டுகளை மட்டுமே மதிக்கும் சமுதாயமாக மாறிவிட்ட நாம், மறந்துவிட்டோம்.

இந்நிலையில்தான் இரு நூல்கள் அவரது சமாதியின் நூற்றாண்டு விழாவின் போது வெளியிடப்பட்டுள்ளன.

 

யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா திருநெல்வேலி ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி முதல்வராக இருபது ஆண்டுகள் சேவை செய்தவர். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரது ஆராய்ச்சி ‘சகோதரி நிவேதிதையின் எழுத்துக்களில் பாரத தரிசனமும் பாரத விரோத போக்கின் மீது எதிர் தாக்குதலும்’ என்பதாகும். அவருக்கு தீட்சை அளித்த சுவாமி சித்பவானந்தர் அவருக்கு அளித்த கட்டளை ‘சகோதரி நிவேதிதையின் பெருமையை உலகறியச் செய்’ என்பதாகும். அவ்விதத்தில் வெளியாகி உள்ளவை இந்த இரு நூல்களும்.

’வினா விடைகளில் ஒரு வியத்தகு வாழ்வு’ – இந்நூல் கேள்வி பதில்களாக சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை விவரிக்கிறது. உதாரணமாக பிளேக் நோய் கல்கத்தாவை பீடித்து வாட்டிய காலகட்டத்தில் சகோதரி நிவேதிதையின் சேவையை இந்நூல் இப்படி விளக்குகிறது:

கேள்வி 129: சகோதரி நிவேதிதை பிளேக் நோய் நிவாரணப் பணியில் என்னென்ன செய்தார்?

நிவாரணக்குழு உறுப்பினர்களான ராமகிருஷ்ண மடத்துத் துறவியருடன் சேர்ந்து நிவாரணப் பணி எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட்டார். அதைச் செயல்படுத்துவதில் குழு உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருந்தார். நிவாரணப் பணிக்காக அரசு அதிகாரிகளை சந்தித்தார். திட்டமிடுதல் மட்டுமின்றி களத்திலும் இறங்கிப் பணி செய்து கொண்டிருந்தார். தொண்டர்களோடு இணைந்து தானும் வேலைகள் அனைத்தையும் செய்தார். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஓய்வின்றி அவர் உழைத்தார். பிளேக் நோயாளிகளை தானே நேரடியாக கவனித்து சிகிச்சை செய்தார். நிவாரணப் பணிக்கு தேவையான நிதி திரட்டினார். அதன் பொருட்டு வேண்டுகோள்கள் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார். மாணவர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார். பிளேக் நோய் நிவாரணம் குறித்தும் சுகாதரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார். ஒரு பகுதியில் தெருவை சுத்தம் செய்ய எவரும் வராத போது தாமே துடப்பத்தை எடுத்துக் கொண்டு சென்று சுத்தம் செய்யலானார். அவர் படைத்திருந்த ஆற்றல்களையெல்லாம் பொது நலத்திற்கு பயன்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. மரணத்தோடு போர் புரிவது போலிருந்தது அவர் சலிக்காமல் செய்த சேவை. (பக்.22)

வெறும் காய்கறிகளையும் பாலையும் மட்டும் உண்டு வாழ்ந்தபடி பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையாற்றி வந்த சகோதரி ஒரு கட்டத்தில் அந்த பாலையும் மக்களுக்காக தியாகம் செய்தார். அந்த ஆச்சார வாதம் நிறைந்த எதிர்ப்பு சூழலில் பெண் குழந்தைகளுக்கு என கல்விச் சாலை தொடங்கினார். தாய்வழிக் கல்வி புகட்டினார்.

இக்கட்டத்தில் விவேகானந்தரிடம் ஆலோசனை கேட்கிறார் நிவேதிதை. அப்போது விவேகானந்தர் அளித்த அறிவுரை தனி கேள்வி-பதிலாக முன்வைக்கப்படுகிறது: “அதை (ஆலோசனையை) நீ பள்ளிக் குழந்தைகளிடமிருந்தே கற்றுக் கொள்வாய்’ என்றார் சுவாமி விவேகானந்தர். (பக்.23)

பன்முக மேதமை கொண்டவராக இருந்த நிவேதிதை அறிவியலில் இந்தியர்களின் பங்களிப்பு இனிவரும் நாட்களில் பண்பாட்டு மேன்மையையும் விடுதலையையும் வலியுறுத்தவும் சமூக மேம்பாட்டுக்கும் முக்கியமானது என அறிந்து கொண்டார். எனவே ஜகதீஷ் சந்திர போஸுக்கு அவர் மிகவும் உதவி செய்தார். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு செய்த பல இடைஞ்சல்களை சகோதரி எதிர்த்து போராடினார். கொடி பிடிக்கவில்லை. கோஷங்கள் போடவில்லை. அமைதியாக மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார். (பக்.25) அன்று 1901 ஆம் ஆண்டு சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையில் முக்கியமானது. ஏன்? அந்த ஆண்டில்தான் சகோதரி நிவேதிதை பாரதம் விடுதலை பெற்றால் ஒழிய முழுமையான மேம்பாடு பாரதத்துக்கு கிடைக்காது என முடிவுக்கு வந்தார். (பக்.31)

237 கேள்வி பதில்கள் மூலம் சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை இந்த நூல் விளக்குகிறது. முக்கியமான சில புகைப்படங்கள் உள்ளன. மாணவ மாணவிகள் சகோதரியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் அவரது முக்கியமான கருத்துக்கள் ஆகியவற்றை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

சகோதரி நிவேதிதையின் சமாதி தின நூற்றாண்டை ஒட்டி அதே ஆசிரியை எழுதியுள்ள மற்றொரு நூல் ‘நிகரில்லா நிவேதிதை’. வினாவிடை நூலில் கூறப்பட்டுள்ள விசயங்களின் விரிவான சித்திரத்தை இந்த நூலில் நாம் காண்கிறோம்.

‘நிகரில்லா நிவேதிதா’ நூல் ஆறு கட்டுரைகள் கொண்டு விளங்குகிறது. ஒவ்வொன்றும் சகோதரி நிவேதிதையின் ஒவ்வொரு பரிமாணத்தை ஆழமாக விளக்குகிறது. முதல் கட்டுரை ‘உன்னத குருவின் உத்தம சிஷ்யை’ இக்கட்டுரை சுவாமி விவேகானந்தர் எவ்விதமாக சகோதரி நிவேதிதையை மெய்ஞான பயிற்சிகள் மூலம் பாரத தேச சேவைக்கு பக்குவப்படுத்தினார் என்பதை விளக்குகிறது. அதில் சுவாமிஜி கடுமையாக இருந்தார். உதாரணமாக, சகோதரி நிவேதிதை ‘பொதுவாக உலக மக்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஆங்கிலேயர் அவ்வாறல்ல’ என கூறினார். ‘பொதுவாக உலக மக்கள் குணத்திலிருந்து ஒரு இனத்தை மட்டும் மேம்படுத்தி சொல்லும் தேசபக்தி பாவமே தவிர வேறெதுவுமில்லை’ என கடுமையாக கூறினார் சுவாமி விவேகானந்தர். (பக்.20)

அடுத்த கட்டுரை ‘சகோதரி நிவேதிதையும் பாரத பண்பாடும்’. பாரத பண்பாட்டின் ஒவ்வொரு கூறுக்கும் சகோதரி நிவேதிதை அளித்த கூர்மையான பார்வையை கண்டு வியக்காமல் இருக்க இயலவில்லை. குடும்ப அமைப்பாகட்டும், தினசரி நடைமுறை வாழ்க்கையாகட்டும், ஹிந்துக்களின் சமயச் சடங்குகள். கோவில் திருவிழாக்கள், தேசிய இதிகாசங்கள் என தொடங்கி வேப்பமர வழிபாடு வரை அனைத்தையும் சகோதரி நிவேதிதை ஆழமாக கவனித்து விரிவாக பதிவு செய்துள்ளது மட்டுமல்ல ஒரு அன்னியராக வெளியிலிருந்து மதிப்பிடாமல் ஒரு ஹிந்துவாக உள்ளே வாழ்ந்து உணர்ந்த தன்மையை இக்கட்டுரை நமக்கு அளிக்கிறது. இது வெறும் பண்பாட்டு மேன்மை மட்டும் சார்ந்த விசயமல்ல. ஒரு ஹிந்து சமூகவியல் – உள்ளார்ந்த பார்வை நமக்கு இன்று தேவைப்படுகிறது. அதற்கான தொடக்கப்புள்ளியை சகோதரி நிவேதிதை அளித்துள்ளார். அதை நாம் பயன்படுத்தி வளர்த்தெடுத்தோமா என்கிற சங்கடமான கேள்வியையும் அது நம்முள் எழுப்புகிறது.

அடுத்தது ‘சகோதரி நிவேதிதையும் சேவையும்’. எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள், குடிசை குடிசையாக சென்று பணியாற்றினர், எப்படி நிவேதிதா தானே களமிறங்கி பணியாற்றியதன் மூலம் முன்னுதாரணமாக விளங்கினார் என்பதையெல்லாம் இப்பகுதி தெளிவாக விளக்குகிறது. (நிகரில்லா நிவேதிதா பக். 71-2) அத்துடன் இது ஏதோ ஒரு ஆதாய அறுவடைக்காக செய்யப்படும் முதலீடு அல்ல மாறாக சேவைக்காகவே செய்யப்படும் சேவை. சேவையே வழிபாடாக அதுவே இலட்சியமாக நடத்தப்படும் சேவை. இச்சேவையின் தத்துவார்த்த உள்ளீடு ஸ்ரீ ராமகிருஷ்ண – விவேகானந்த சேவை தத்துவம் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.

சகோதரி நிவேதிதை அடிப்படையில் ஒரு கல்வியாளர். குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவர். அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிப்பதே உண்மையான விடுதலையின் முதல் படியும் முக்கிய படியும் ஆகும் என்பதை உணர்ந்தவர். இங்கிலாந்தில் கல்வியாளராகவே அவர் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். வசதியான கல்விசாலை ஒன்றில் கிடைத்த வேலையை துறந்து நிலக்கரி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி சேவை புரிய சென்றவர் அவர். அறிவியல் பூர்வமாகவும் நடைமுறைப்பூர்வமாகவும் கல்வி அமையவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

குழந்தை எந்த பிராணியைப் பார்த்தும் அருவருப்பு அடைவதோ அச்சம் கொள்வதோ கூடாது. அதன் பொருட்டு இந்த ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே சிலந்தி, கொசு, தட்டான், வண்ணத்துப்பூச்சி நத்தை புழுக்கள் மரவட்டை ஆகிய ஜந்துக்களை குழந்தை தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். உயிரினங்களைப் பார்த்து அவை நமக்கு தோழர்கள் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்கிறார் நிவேதிதா. (பக்.93)

100 ஆண்டுகளுக்கு முன்னர் நிவேதிதா கூறிய இந்த கல்வியியல் கோட்பாடு இன்னும் நம் உயிரியல் கல்வியில் எட்டப்படாமலே உள்ளது என்பது எத்தனை வேதனையான விசயம்? அதே நேரத்தில் உயிரியலையும் சூழலியலையும் முழுமையாக கற்க இதுவே மிகவும் முதன்மையான வழிமுறை என்பதை இன்று சர்வதேச அளவில் உயிரியல் கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். மாணவர்கள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் கல்விமுறையை சகோதரி வலியுறுத்தினார். குழந்தையின் ஒரு கேள்விக்கு திருப்திகரமான பதிலை அளிக்க ஐம்பது கேள்விகளுக்கு ஆசிரியருக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர். ’சகோதரி நிவேதிதையின் கல்விக்கொள்கைகள்’ என ஒரு கட்டுரையும் ’சகோதரி நிவேதிதை ஆற்றிய கல்விப்பணி’ என ஒரு கட்டுரையும் உள்ளன. இவை கல்வியில் அதன் தரத்தில் அதன் முக்கியத்துவத்தில் சகோதரி நிவேதிதை காட்டிய ஈடுபாட்டை விளக்குகின்றன. அத்துடன் பெண் கல்விக்காக எத்தனையோ சவால்களையும் எதிர்ப்புகளையும் மீறி சகோதரி நிவேதிதை உழைத்தார் என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதி கட்டுரை சகோதரி நிவேதிதையின் தேசியம் குறித்ததாகும். பாரதத்தின் தேசிய கொடியை முதலில் உருவாக்கியவர் சகோதரியே. ததீசி முனிவரின் முதுகெலும்பால் உருவான வஜ்ஜிரம் வலிமை மற்றும் தன்னிகரற்ற தியாகத்தின் பண்பாட்டு-தொன்ம சின்னமாகும். அதையே இந்த தேசத்தின் சின்னமாக அவர் பொறித்திருந்தார். மகாபாரதத்தில் தாய் காந்தாரி கூறும் வார்த்தைகளான ’எங்கு அறமோ அங்கே வெற்றி’ (யதோ தர்மஸ் ததோ ஜய:) எனும் வார்த்தைகள் தேச இலச்சினை வாக்கியமாக சகோதரி கருதினார். தேசியம் என்பதை குறுகிய இனவாதமாக சகோதரி முன்வைக்கவில்லை.

– மகோன்னதமான தொன்மை வாய்ந்த பாரத பண்பாடு
– அதன் பன்மையில் ஒருமை காணும் திருஷ்டி
– உலககுருவாக விளங்கும் திறம் கொண்டிருப்பினும் உலக அரங்கில் இன்று பாரதம் அடைந்துள்ள வீழ்ச்சி
– அதிலிருந்து எப்படி மீண்டெழுவது

இந்த அனைத்துத் தன்மைகளையும் கணக்கில் கொண்டு அறிவார்ந்த தேசிய கருத்தாக்கங்களை அவர் முன்வைத்தார்.

உதாரணமாக காந்தார கலை என்பது மேற்கத்திய தாக்கத்தால் ஏற்பட்டது; அது மட்டுமல்ல இந்திய கலை வளர்ச்சியே மேற்கத்திய கலை தாக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான் என ஒரு மேற்கத்திய ‘மேதாவி’ கூறினார். அதை மறுத்து, காந்தார கலையில் உள்ள மேற்கத்திய தாக்கமே அதன் பலவீனம் என்றும், காந்தார கலைக்கு முந்தைய மகத கலையின் இயல்பான சுதேசிய வளர்ச்சியை அஜந்தா குகைகளில் காண முடிகிறது என்பதையும், அது அந்த காலகட்டத்தின் மேற்கத்திய கலை வளர்ச்சியைக் காட்டிலும் மேன்மையானதாக இருப்பதையும் அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் நிவேதிதை முன்வைத்தார்.

இந்த இரு நூல்களும் சகோதரி நிவேதிதையின் சமாதி நூற்றாண்டுக்கு தமிழ் இந்துக்கள் அவர் நினைவுக்கு அளித்துள்ள அர்ப்பணமாகும். தமிழ்நாட்டில் பெண் விடுதலையை பரப்பிய பொது உணர்வில் பெரிய அளவில் கொண்டு சென்றவர் பாரதி. அதற்கு பாரதிக்கு குருவாக அமைந்தவர் நிவேதிதை. எனவே அந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் துறவி ஒருவர் இந்த இருநூல்களையும் எழுதியிருப்பது சரியான நன்றிக்கடனே. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் இந்த இருநூல்களையும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வரலாற்றுக் கடமையாகும்.

நிகரில்லா நிவேதிதா
(விலை ரூ 45/-)

வினா-விடையில் ஒரு வியத்தகு வாழ்வு
(விலை ரூ 40/-)

ஆசிரியை: பூஜனீய யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா

நூல் வெளியிடுவோர்:
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973

ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:

நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி

நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை. 

விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. 

16 Replies to “நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்”

  1. நிவேதிதை எனும் தேவதையைத் தொழுகிறேன்.

    இந்துக்களை உற்சாகமூட்டி, வலிமைகொள்ளச் செய்த அவள் என்னையும் வல்லவனாகவும் நல்லவனாகவும் ஆக்குவாளாக.

    இப்புத்தகத்தை எழுதி நிவேதிதையின் அருளை தமிழருக்குத் தந்த யதீஷ்வரி க்ருஷ்ணப்ரிய அம்பாஜியின் பாதங்களை வணங்குகிறேன்.

    .

  2. ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் அரங்கில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

    What are the dates of the book fair ?

  3. விஜயபாரதம் இதழில் இவரது ”நிவேதிதை 100” என்ற தொடரை தொடர்ந்து படித்துவருகிறேன். கிருஸ்துவத்தை பரப்ப வந்தர் தெரேசா. ஹிந்துவாக வாழ்ந்து ஹிந்துமதத்தின் மேன்மைகளை உலக அரங்கில் பரைசாற்றிய நிவேதிதாவின் கால் தூசுக்குக்கூட லாயக்கியற்றவர். யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அவர்கள் தொடர் கட்டுரையிலிருந்து சில வரிகள்

    ”ஆசியாவில் இஸ்லாம்” என்ற தமது உரையில் சகோதரியின் நினைவில் கொள்ளத்தக்க வார்த்தைகள். இந்திய முஸ்லிமின் கடமை இப்போது என்ன ? அரேபியாவுடன் தன்னை இணைத்துக் கொள்வதல்ல. இந்தியாவுடன் – அதாவது தன்னுடைய சுவீகாரத் தாய்நாடாகவும் தன்னை வரவேற்று உபசரித்து வாழ இடம் கொடுத்துவரும் நாடாகவும் விளங்கும் பாரதத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதே.

    ”டைனமிக் ரிலிஜன்” அதாவது செயல் திறம் மிக்க சமயம் என்ற சொற்பொழிவை அவர் ஆற்றியபோது அதை கேட்ட ஐரோப்பிய நன்பர்களில் சிலர் ”இது டைனமிக் ரிலிஜனா அல்லது டைனமைட் ரிலிஜனா” என்று கேட்டனர். அத்துணை வேகம் அவரது வார்த்தைகளில். சமுதாயத்தின் முடநம்பிக்கைகளை உடைத்து எறிவதாகவும் ஏகாதிபத்திய அரசைத் தூள்தூளாக்கவேண்டும் என்ற ஆவேசத்தை ஊட்டுவதாகவும் இருந்த்து அந்த சொற்பொழிவு.

    வஜ்ரம் போன்ற அவரது சொற்பொழிவுகளை பற்றியும் விடுதலைகாக போராடிய இன்னல்களை பற்றியும் அவரது சமூகசேவைகளை நாம் பொதுஜனங்களிடம் வெகுவாக கொண்டு செல்லவில்லை என்பது ஒரு குறையே

  4. The Author of this book is a friend,guide,philosopher to me.She is not only a Sanyaasini but also an Educationist.A Doctorate,social reformer,&spiritual giant Swami Chidbhavananda’s disciple.Now Her Holyness lives inShri Sharadha Ashram– Tiruvannamalai & doing Spiritual Service.04175-235246. Like you I am also inspired by her writings & speeches.
    Tirupparaitturai-Va.Somusir.— Hari Ohm.

  5. I know why u are praising Nivethitha and demonising Therasa… he simple reason is religion.. Theresa didn’t accept HINDUISM … But Nivethitha did.. Why u ppl are this much biased… If INDIA was so cultured then y we needed Nivethitha and Therasa?? Can u say there is no one in INDIA got their lives saved because of Therasa…

    //ஆனால் தெரசா செய்த ‘சேவை’யின் பின்னால் துல்லியமான பொருளாதார கணக்குகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளின் மத மற்றும் பண்பாட்டு மேலாண்மையை தூக்கிப் பிடிக்கும் பதாகை தாங்கியாக தெரசாவை முன்னாள் காலனிய சக்திகளும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும் முன்வைத்தன. மனிதர்களை குறித்து கவலைப்படாத, மனிதர்களை இழிவு செய்கிற இந்திய பண்பாட்டினால் அவலமடைந்தவர்களுக்கு மேற்கத்திய காருண்யத்தின் சரணாலயமாக தெரசா உலக ஊடகங்களில் காட்டப்பட்டார். தெரசா ஆற்றியது சேவை அல்ல; மேற்கத்திய பண்பாட்டு மத மேலாண்மையை மூன்றாம் உலகநாடுகள் ஏற்பதற்கான பிரச்சார முதலீடு.//
    How many days will u believe i this nonsense “INDIA was great and cultured but westerners spoiled it”
    1) Who introduced caste system in INDIA ??
    2)How many inventions had INDIANS made in the last 1000 years ??
    3)How many INDIANS(Not NRIs) won Nobel prizes for science or technology still now ??
    4)Why INDIAN kings didnt had modern weapons compared to ENGLISH when ENGLISH invaded here ??

    WIll blame christians for all the above..

    //”ஆசியாவில் இஸ்லாம்” என்ற தமது உரையில் சகோதரியின் நினைவில் கொள்ளத்தக்க வார்த்தைகள். இந்திய முஸ்லிமின் கடமை இப்போது என்ன ? அரேபியாவுடன் தன்னை இணைத்துக் கொள்வதல்ல. இந்தியாவுடன் – அதாவது தன்னுடைய சுவீகாரத் தாய்நாடாகவும் தன்னை வரவேற்று உபசரித்து வாழ இடம் கொடுத்துவரும் நாடாகவும் விளங்கும் பாரதத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதே.//

    Good joke u ppl welcomed and gave land to Muslims or Chritians ?? This is our country too.. We don’t need anyone’s approval or help to live here…

    EVEN IF U LIE U SHOULD LIE REASONABLY…

  6. தன்மானமுள்ள ஒவ்வொரு பாரதீயரின் வீட்டிலும்
    இருக்க வேண்டிய புத்தகங்கள் இவை.
    அறிமுகப்படுத்திய அரவிந்தனுக்கு நன்றி.

    – சேக்கிழான்

  7. சகோதரி நிவேதிதை பற்றிய இந்த இரு நூல்களும் சரியான நேரத்தில் வந்துள்ளன. மகான் சித்பவானந்தரின் வழி வந்த மாதாஜி யதீஸ்வரி க்ருஷ்ணப்ரிய அம்பாஜி அவர்களுக்கும் குருதேவரின் பூரண அருள் கிடைக்குமாக. பொது நூலகங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களிலும் இவ்விரு நூல்களையும் கொண்டு சேர்க்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒவ்வொருவருக்கு இந்நூல்களைப் பரிசாகத் தந்து படிக்கச் செய்ய வேண்டும். சகோதரி நிவேதிதையின் புகழ் பரவுவதன் மூலம் பாரதத்தின் தொல் புகழ் பரவும் என்பதில் ஐயமில்லை.

  8. வணக்கம்
    வெளிப்படையான சேவை உண்மையானதாக இருந்தாலும் தெரேசா அம்மையாரை உலகமயமாக்கியது ஊச்டகம்தான். இந்திய ஊடகங்களும்தான் இந்திய ஊடகங்களில் பெரும்பான்மையும் அன்றும் இன்றும் இந்துக்களின் கைகளில்தானே இருக்கின்றன.ஏன் மற்றவர்களால் பார்ப்பனிய ஊடகம் என்று பரவலாக அறியப்பட்ட ஒரு தினசரிக்கு கருத்துப்பதிபவர்களில் நானுமொருவன். சிலசெய்திகளுக்கு மறைமுகமாகக்கூட கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தொடர்புபடுத்தி கர்துதுப்பதிந்தால் அதனை வெளியிடமாட்டார்கள்.ஆனல் இஸ்லாமிய கிறிஸ்தவ பெயர்களில் இந்த்துக்களைத் தரங்குறைத்து தாராளமாக கருத்து பதிவாகும். நான் பலமுறை சிந்த்திததுண்டு ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு முஸ்லிம்தான் அப்பத்திரிகையின் தணிக்கையாலரோ என்று.
    என்னவோ பெரு மதிப்பிற்குரிய அன்னை நிவேதிதை பிரிந்து நூற்றாண்டு ஆகிவிட்டது.நிகழ்காலத்தில் இவ்வாறு சேவைபுரியும் இந்துக்களையவது அடியளங்கன்ன்டு அவர்களை ஊக்கப்படுத்துவதுடன் வெளயுலகிற்கும் தெரியப்படுத்த ஆவன செய்வோம்.எங்கும் சிவமயம்.சுப்ரமணியம் லோகன்.

  9. அன்புள்ள திரு.அ.நீ,

    உங்களைப்போலல்லாதவர் எவராவது இவ்விமர்சனத்தை வைத்திருந்தால் பொருட்படுத்தியிருக்கமாட்டேன். எனவே எனது கேள்வி.

    “அவரது சேவைக்குப்பின்னால் துல்லியமான பொருளாதார கணக்குகள் இருந்தன” என்ற வாக்கியத்தின்மூலம் தெரசாவே திட்டமிடப்பட்ட பொருளாதார கணக்குகளோடுதான் தனது ‘சேவை’-யை துவங்கினார் என்று சொல்கிறீர்களா ?

    முன்னாள் காலனீய சக்திகளும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும் அவரை தமது கீழ்த்தரமான சுயநல குறிக்கோள்களுக்காக பயன்படுத்திக்கொண்டதற்கும் மேற்கத்திய காருண்யத்தின் சரணாலயமாக தெரசா உலக ஊடகங்களில் காட்டப்பட்டதற்கும் தெரசா பொறுப்பாளியாவாரா ?

    அல்லது தெரசா தெரிந்தே / முன் தீர்மானத்துடனேயே அந்த திட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டார் என்று கூற இயலுமா ?

    அன்புடன்
    முத்துக்குமார்

  10. மொரார்ஜிதேசாய் பிரதமராக இருந்தபோது ஒ.பி.தியாகி அவர்கள் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர முயன்றபோது அந்நிய தெரசா அவர்கள் நமது நாட்டில் உள்ள அவரது சேவை மையங்களை மூடி விட்டு சொந்த நாட்டுக்கு சென்று விடுவதாக மிரட்டியவர் என்பதை மறந்துவிட வேண்டாம். மீடியாக்களே இவரைப் பிரபலப் படுத்தினார்கள். ஒரு லக்ஷத்திற்கும் மேல் சேவைப் பணிகள் செய்துவரும் சேவா பாரதி மீடியா கண்களில் படுவதில்லை.

  11. 1. தெரசாவே திட்டமிடப்பட்ட பொருளாதார கணக்குகளோடுதான் தனது ‘சேவை’-யை துவங்கினார் என்று சொல்கிறீர்களா ?

    ஆம். திட்டமிடப்பட்ட ஒரு கிறிஸ்தவ தாக்குதலாகவே தனது ‘சேவை’யை தெரசா தொடங்கினார். எந்த கிறிஸ்தவ பிரச்சார தாக்குதலும் நிர்வாக பொருளாதார கணக்குகள் அடங்கிய -லாப நஷ்ட கணக்குகள் உட்பட- திட்டமே ஆகும்.

    2. மேற்கத்திய காருண்யத்தின் சரணாலயமாக தெரசா உலக ஊடகங்களில் காட்டப்பட்டதற்கும் தெரசா பொறுப்பாளியாவாரா ?

    பொறுப்பாளி ஆவார். ஏனெனில் மேற்கத்திய ஊடகங்களில் தெரசா கல்கத்தாவின் வறுமையை பன்மடங்காக பொய்யாக சித்தரித்தார். தெருக்கள் தோறும் மக்கள் இறந்து கிடப்பதாகவும் அதை பிறர் கவனிக்காமல் செல்வதாகவும் தம்முடைய மத தொண்டர்கள் மட்டுமே ஆதரவற்று இறப்போரை கவனிப்பதாகவும் அவர் கூறினார். ஒரே நாளில் மேற்கத்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் காலையில் ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்ட மக்கள் ஒவ்வொரு நாளும் ஆதரவில்லாமல் கல்கத்தா தெருக்களில் இறக்க விடப்படுவதாக கூறிய அதே தெரசா அன்று மாலை அதை ஊடகப் பேட்டியில் 5000 ஆக கூறியது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

    3.அல்லது தெரசா தெரிந்தே / முன் தீர்மானத்துடனேயே அந்த திட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டார் என்று கூற இயலுமா ?

    கூற இயலும். தெரசாவின் தகிடுதத்தங்களை அண்மையில் காலமான கிறிஸ்டோபர் கிட்சன்ஸ் தமது நூல் ‘missionary position’ இல் ஆவணப்படுத்தியுள்ளார். அரூப் சட்டர்ஜி எழுதிய ‘Mother Teresa the Final Verdict’ மற்றொரு முக்கிய ஆவணம்.

  12. தெரசா நிறுவிய மிஷனரீஸ் ஆஃப் சாரிடீஸ் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி ஃபேஸ்புக்கில் ஒரு இயக்கமே நடந்து கொண்டிருக்கிறது –

    https://www.facebook.com/missionariesofcharity

    இந்தப் பக்கத்தை இதுவரை 5968 பேர் லைக் செய்திருக்கிறார்கள்.

  13. அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன் ,

    அன்னை தெரசா பற்றிய உண்மைகளை தோலுரித்துக்காட்டிய தங்கள் தெளிவான பதிலுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

  14. அரவிந்தன் நீலகண்டன் அவர்களக்கு,

    அது மட்டும் இன்றி ஊடகங்களில் அன்னை தெரேசா மட்டுமே இந்தியாவை காக வந்த இறைதூதர் போன்ற சித்திரமும் உருவாக பட்டுள்ளது,இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் மேற்கத்திய பின்புலம் கொண்டவை ஆகையால் அவ்வாறன ஒரு கருத்தோற்றம் அங்கு உருவாகப்பட்டுள்ளது..ஆயினும் தன்னலம் கருதாது தொண்டாற்றிய எத்தனையோ இந்து மத தொண்டர்கள்,மகான்கள்,சேவை ஊழியர்களின் அர்பணிப்பு பதிவு செய்ய படாமல் போனது நம் துரதிஷ்டவசமே..

  15. ஆசிரியர் குழு மற்றும் தமிழ் ஹிந்து வாசகர்களை

    எனது வலைபதிவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்

    https://ennulennaithedi.blogspot.com/

    என் பதிவில் குறைகள், நிறைகள் போன்றவற்றை உங்களை போன்றோர் எடுத்து சொன்னால் எனது பதிவை மேலும் செம்மையாக்க உதவும்.

    நன்றி

  16. விளக்கமளித்த அ.நீ-க்கும், கூடுதல் விபரம் தந்த நண்பர்கள் சந்திரமௌலி மற்றும் ஜடாயு-க்கும் நன்றி.

    தெரெசா அவர்களது சேவைக்குப்பின்னான Hidden Agenda பற்றி மேலோட்டமாகவன்றி ஆதாரபூர்வமாகவெல்லாம் கேள்விப்பட்டதில்லை. அதை தெரிந்துகொள்ளும் முகமாகவே எனது கேள்விகள்.

    அன்புடன்
    முத்துக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *