ஆண்டாள் மீது வக்கிர அவதூறு

னோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2012-13 ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தில் இளநிலை (BA, BSc) முதலாண்டு முதல் பருவம் தமிழ்பாடப்பகுதியில் தோழர்.டி.செல்வராஜ் எழுதிய நோன்பு என்னும் சிறுகதைத் தொகுதி இடம் பெற்றுள்ளது. இச்சிறுகதைத் தொகுதியில் அமைந்த ’நோன்பு’ என்னும் சிறுகதை பாடநூலில் இடம் பெறும் தகுதி அற்றது.

இச்சிறுகதையின் நோக்கம் விஷமத்தனமானது; மரபுவழி வந்த பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் எண்ணமுடையது. ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் ஆகிய மூவரும் இச்சிறுகதையின் முக்கிய பாத்திரங்கள்.’புதிய கோணத்தில் மறுவாசிப்பு’ என்னும் போர்வையில் இம்மூவர் மீதும் அவதூறு பேசுவதே கதையின் நோக்கம் ஆகின்றது.

ஆண்டாள் துளசிச்செடி அருகில் கண்டெடுக்கப்பட்டவள் என்பது வைணவ மரபு. அவளை தாசிமகள் ஆக்கியுள்ளது இக்கதை. பெரியாழ்வார் அகத்தில் கண்ணனையும் புறத்தில் ஆண்டாளையும் வளர்த்த பெரும் பேறு உடையவர். அவரை ஆன்மஞானம் பெற்றவராகவும், பக்தியில் கனிந்த சீலம் நிரம்பியவராகவும் தமிழ்மரபு போற்றும். அவரை தாசி உறவு பெற்றவராகச் சித்தரிக்கிறது இக்கதை. பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லப தேவன் தெய்வீக விஷயங்களில் ஆர்வம் மிக்கவனாகவும், சம்வாதங்களை ஆதரித்தவனாகவும் மரபுச் செய்திகள் கூறும். அவனைப் பெண் பித்தனாகச் சித்தரிக்கின்றது இச்சிறுகதை. இச்சிறுகதை காட்டும் இச்சித்தரிப்புகள் அனைத்துமே சான்றாதாரங்கள் அற்றவை. உயர்மனச் சூழலில் மானுட விழுப்பம் கருதிப் பேணியப் பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் கதாசிரியரின் உள்நோக்கம் சிந்தித்தற்குரியது. கற்பனை சுதந்திரம் என்னும் பெயரில் இவர் நிகழ்த்தும் கலாச்சார அவதூறு கண்டிக்கத்தக்கது, ‘மறுவாசிப்பு’ என்னும் பெயரில், முதல் வாசிப்பே அறியாத மாணவ மன வயலில் இவர் விதைக்கும் ‘பிழை வாசிப்பு’ கல்வி ஆர்வலர்களால் தண்டிக்கத்தக்கது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் மரபு வழிப் போற்றப்படும் மேன்மைச் சித்திரங்களை எழுத்தாளர் சுதந்திரம் என்னும் முகமூடி அணிந்து சேறுவாரி எறிதல்; அதனைப் பாடத்திட்டக்குழுவுக்கு பரிந்துரை செய்தல்; அது பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறுதல் ஆகிய மூன்று குற்றங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும். நிகழ்ந்த குற்றங்களுக்கு காரணமாகிய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இனிமேல் இவ்வகைக் குற்றங்கள் நிகழாவண்ணம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் இது பல்கலைக்கழகத்தின் பெயருக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.

நமது சிந்தனையில் தெளிவு வேண்டும். இது கல்விசார்ந்த (academic) விஷயம். பிரச்சார மண்டபம் அன்று. நல்லவற்றை இழிவுபடுத்துவதும், தீயவற்றை அங்கீகரித்து மேலெடுத்துச் செல்வதும் ஷேக்ஸ்பியரின் மாக்பெத்தில் வரும் வழி கெடுக்கும் நடனப்பாட்டு. ‘Fair is foul and foul is fair’ என்று வீரன் மாக்பெத் வரும் வழியில் பாடி ஆடிக்கொண்டிருக்கும் இருட்குரலே நாடகத்தில் வியாபிக்கும். இந்த நடனப்பாட்டின் நிழல் விழுந்த ஆய்வுகள் ஏற்கனவே முற்போக்கு என்னும் பெயரில் தமிழில் நிறையவே வருகின்றன. காரைக்காலம்மையைக் கொச்சைப்படுத்தி, ஔவையாரை இழிவுபடுத்தி, ஆண்டாளை அவதூறு செய்து ‘தோழர்கள்’ சிலர் எழுதியுள்ளனர். இடக்கை ஆசிர்வாதங்கள் இவர்களுக்கு உண்டு. உலக அரங்கில் தமிழின் பெருமிதங்களாக கருதவல்ல உயர் சிகரப்படைப்புகள் தந்த இப்பெண்களை அவமானப்படுத்துவது தமிழினத்தை அவமானப்படுத்துவது ஆகும்.

அன்னியச் சித்தாந்தங்களுக்கு விலைபோகும் போது, சின்னஞ்சிறு சௌகரியங்களில் மிதப்பு காணும் போது, உயர் லட்சியங்களுக்கு கண்ணடைக்கும் போது, இது நிகழும். இவர்களின் செயல்பாடு மானுட மேன்மைக்கு எதிரானது. சிந்தனை மண்டலத்தில் பிழை மனச்சித்திரங்கள் சித்தாந்த முலாம் பூசி நுழைய முற்படும்போது எளிதில் வலிமை பெற ஏற்ற இடமாகப் பாமர வாக்குவங்கிகளையும், பல்கலைக்கழக வளாகங்களையும் குறி வைக்கக் காண்கின்றோம். பல்கலைக்கழகம் பன்மடங்கு எச்சரிக்கையுடன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கிறது.

அவதூறு பரப்பும் ஒரு மனநோய்க்கு பாடத்திட்டத்தில் இலக்கிய அறிமுகம் வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம். மாணவர் நலனும், பல்கலைக்கழகத்தின் தரமும், நாட்டின் எதிர்காலமும், ஒரு சிலரின் சித்தாந்த வெறிக்கும் பொருளாதார லாபத்துக்கும் பலியாகிவிடக்கூடாது.

வாழ்க்கைச் சிதறல்களில் ஏதேனும் ஓர் அனுபவத்துளி நோக்கிய அழகிய பாய்ச்சல் மொழிநுட்பத்தோடு சிறுகதைகளில் நிகழல் வேண்டும். Singleness of aim and singleness of effect முக்கியம் என்பது பாலபாடம். குருவிக் கழுத்துக்குக் குறிபார்க்கும் அர்ஜுன அம்பு சிறுகதை. வாமனம் நெடுமாலாகும் வித்தையும் அங்குண்டு. மனிதநேய தடாகங்களில் குள்ளக் குளிர்ந்து நீராடாத போது, மன அழுக்கைச் சுரண்டிச் சுருட்டும் சோம்பல் விரலுக்கு ‘நோன்பு’ போலும் சிறுகதையே திரளும். அனுபவத்தில் நேர்மை, கருத்தோட்டத்தில் தெளிவு, வாழ்வியலில் அழகும் ஆழமும் பருகும் துடிப்பு, உலகத்தரத்துக்கு உன்னதங்களைத் தரும் திறன் – என விரியும் சிறுகதை உலகம் தமிழுக்கு உண்டு. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ஜெயகாந்தனின் ‘யுக சந்தி’, சுந்தர ராமசாமியின் ‘சீதைமார்க் சீயக்காய்த் தூள்’, லாசராவின் ‘ஜனனி’, ஜெயமோகனின் ‘அறம்’ … என ஒரு பல்வண்ணப் பார்வை குழல் (Kaleidoscope) தந்து மாணவ மன மண்டலத்தை உயர் சிகரங்களில் உலவச் செய்ய வேண்டியது பல்கலைக்கழகத்தின் கடமை. இதற்கு ஏற்ப பாடத்திட்டக் குழுவை நெறிமுறைப்படுத்த வேண்டும்.

சில வினாக்கள்:

1. ‘ஆண்டாள் தேவதாசி வம்சத்துக் குலக்கொடி’ என்கிறது ‘நோன்பு’ என்னும் சிறுகதை. இது வரலாற்று ஆதாரம் சிறிதும் அற்றது. எனவே அவதூறு. ஆண்டாளை அவ்வாறு கூறுவதற்கு ஆதாரம் தர இயலுமா?

2. ஆண்டாளைத் தேவதாசியாகச் சித்தரிப்பது ‘எழுத்தாளன் சுதந்திரம்’ என்று கூறித் தப்பலாம்; ‘தேவதாசி என் பார்வையில் இழிந்தவர் அன்று’ என கூறி வாதிடலாம். எனில், சமகாலப்பெண்களில் யாரையேனும் அல்லது தமது உறவுப் பெண்டிர் (மன்னிக்கவும்) யாரையேனும் இவ்வாறு சித்தரிப்பது தோழர்களுக்கு ஏற்புடையதுதானா?

3. பெரியாழ்வார் ஆண்டாளை வளர்த்த செய்தி குருபரம்பரைக் கதைகள் வழி அறியலாகும் மரபுச்செய்தி. இதை நிராகரித்து ஆண்டாள் மனத்துக்கு ஒவ்வாத, ஆண்டாளை மதிப்போர்க்கு மனம் ஏற்காத – இழிவுச் சித்திரம் படைத்தல்தான் மறுவாசிப்பா? இது இலக்கிய கயமை ஆகாதா?

4. ’கோட்டை மதிலுக்கு வெளியே கேட்கும் தோட்டி மகனின் ஓலம் ஓநாயின் ஒப்பாரியாகக் காற்றில் கலந்து மறைகிறது.’ என்கிறது கதை. மானுட நேயம் பேசுவோரிடம் சாதி இழிவுப்பார்வையின் உவமை வரலாமா? மதுரைவீரன் திரைப்படத் தாக்கத்தின் முதிராப் பார்வைப் பதிவா? அது மட்டும்தானா? இது அடிமனத்தில் ஒளிந்திருக்கும் சாதிய வக்கிரத்தின் வெளிப்பிதுங்கல் என ஆழப்பார்வை காட்டவில்லையா? இப்புத்தகத்தையே பாடத்திட்டத்தில் வருவதைத் தடுக்க இது போதுமான காரணம் ஆகாதா? ஔசித்தியம் என ஒன்று பாரத மரபில் காட்டப்படுமே!

5. ’விளக்கின் கதிர்கள் காமன் எறிந்த கனலாகத்’ தகிப்பது முதிரா மனத்தின் மூன்றாந்தர எழுத்தாளர்களின் ’வாய்ப்பாடுகள்’ அல்லவா?

6. ’கைக்கட்டாரியுடன் ரோந்து வரும் ஊமையான கச்சணிந்த காவற் பெண்டிர்’ ஆண்டாள் காலப்பின்னணியில் இல்லையே? சங்க இலக்கியத்திலிருந்து அல்லது சாண்டில்யனின் கதைகளிலிருந்து H.G.வெல்ஸின் காலயந்திரத்தில் ஏறி எப்படி வந்தார்கள்?

7. ‘ஸ்ரீ வில்லிபுத்தூர் என்னும் அப்புண்ணிய ஸ்தலம் நிலவொளியில் ஜலக் கீரிடையாடிக் கொண்டிருக்கிறது’ என அறிமுகப்படுத்துகிறது சிறுகதை. கோபுரக் காட்சியின் சித்திரமோ ’பூரித்து எழுந்து நிற்கும் குமரிப்பெண்ணின் கச்சணிந்த கொங்கை’யாக ஆசிரியருக்குக் காட்சியளிக்கிறது. தமிழக உன்னதங்களை இளநிலை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நடையா இது? ஆசிரியரின் இழிமனப் பிதுங்கல்கள் அல்லவா இவை?

8. தமிழக அரசின் சின்னம் கோயிற் கோபுரம். அது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரப்பதிவு, இரண்டையும் இழிவுபடுத்தும் இக்கதைக்குப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அனுமதி வழங்கலாமா? இம்மனநிலை தவறென எச்சரிக்கும் வகையில் இவரது நூற்களுக்குப் பல்கலைக்கழக ‘மஞ்சள் அட்டை’ (வேணுமானால் சிவப்பு அட்டை) எனும் ஒரு தடைமுறை உருவாக்கலாமே.

9. “எத்தனை எத்தனையோ ஆரணங்குகளைக் கண்டிருந்தாலும் அனுபவித்திருந்தாலும்…” என்றெல்லாம் பாண்டிய மன்னனின் பலவீனத்தைச் சித்தரிப்பது விரசமான வருணனை அல்லவா? கீழ்த்தர கதைத் தொழிலில் பாமர பலவீனத்துக்கு தீனி தரும் கருவும் பின்னலும் நடையும் கொண்ட சிறுகதையைத் தாங்கிய இந்நூல் எந்தத் துணிவுடன் பாடத்திட்டத்தின் முன் சென்று நின்றது? மாணவர்க்குப் பல்கலைக் கழகம் வழி அறிமுகப்படுத்த வேண்டிய செய்தியும் அதைச் சுமக்கும் நடையும் இத்துணை அளவு தரம் தாழலாமா?

10. நூலின் அட்டைப்படத்திலும் ஆடும் தோற்றத்தில் தரப்பட்ட சலங்கை அணிந்த பாதம் அதிர்ச்சி தருகிறது. பெண்ணொருத்தியின் குனிந்த நிலைச் சித்திரம் போலும் அருவருக்கும் தோற்றம் அதில் உண்டு. ஆசிரியரின் மனவிகாரம் தரும் விரசம் இச்சித்திரத் தேர்வில் வெளிப்படவில்லையா? மாணவ மாணவியர் கையிலேந்தும் நூலில் இவ்வகை அட்டைப்படத்தை பல்கலைக் கழகமே தருதல் சரியா?

11. ’மார்க்சீயப் பார்வையில்’ படைத்ததாக ‘முற்போக்கு இலக்கிய வட்டத்தில் இயங்கியவராக’ ‘சோஷலிஸ்ட் யதார்த்தப் படைப்பாளியாக’ இந்நூலின் பின்னட்டை புகழ்கிறது. இக்கதை ஆண்டாள் வரலாற்றைப் புதிய கோணத்தில் மறுவாசிப்பு செய்த முதல்கதை என புகழப் பட்டுள்ளது. அருவருப்பான அபத்தத்தை இவர் சார்ந்திருக்கும் சித்தாந்த வட்டம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

12. தரம் தாழ்ந்து பாடத்திட்டக் குழுவில் பரிந்துரை சந்தைகளில் தந்திர லாவகங்களுடன் செயல்படும் தற்கால இலக்கிய வணிகர்கள் கல்லூரியின் அறிமுகநிலை மாணவர்களுக்கு இவ்வகை நூல்களை விலைப் படுத்துவது – மொழிக்கும், பண்பாட்டுக்கும், நாட்டுக்கும் பெருங்கேடு. நவீன இலக்கிய சோலைக்குள் இளங்கலை மாணவர்கள் செல்ல உதவ வேண்டிய பல்கலைக்கழகத்தை ’நச்சுப் பொய்கை’யாக்கவே வழிவகுக்கும் இத்தகைய செயல்பாடுகள் நிறைந்த சூழ்நிலையில் பல்கலைக்கழகம் கல்விக் கடமையாற்றத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

பேரா. என்.சுப்பிரமணியம் அவர்கள் நாகர்கோவில் தெ.தி. இந்துகல்லூரியில் தமிழ்துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் குறிப்பாக பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர்.

இது குறித்த பத்திரிகை செய்தி:

னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இந்த கீழ்த்தரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அவதூறு சிறுகதை பாடத்திட்டத்திலிருந்து உடனடியாக நீக்கப் படவேண்டும். அனைத்து இந்து சமூக, ஆன்மிக அமைப்புகளும் பல்கலைக் கழகத்திற்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று கோருகிறோம். வாசகர்கள் இந்த இணைப்பில் உள்ள மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டும் பல்கலைக் கழகத்திற்குத் தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்கலாம்.

58 Replies to “ஆண்டாள் மீது வக்கிர அவதூறு”

  1. //
    4. ’கோட்டை மதிலுக்கு வெளியே கேட்கும் தோட்டி மகனின் ஓலம் ஓநாயின் ஒப்பாரியாகக் காற்றில் கலந்து மறைகிறது.’ என்கிறது கதை. மானுட நேயம் பேசுவோரிடம் சாதி இழிவுப்பார்வையின் உவமை வரலாமா? மதுரைவீரன் திரைப்படத் தாக்கத்தின் முதிராப் பார்வைப் பதிவா? அது மட்டும்தானா? இது அடிமனத்தில் ஒளிந்திருக்கும் சாதிய வக்கிரத்தின் வெளிப்பிதுங்கல் என ஆழப்பார்வை காட்டவில்லையா? இப்புத்தகத்தையே பாடத்திட்டத்தில் வருவதைத் தடுக்க இது போதுமான காரணம் ஆகாதா? ஔசித்தியம் என ஒன்று பாரத மரபில் காட்டப்படுமே!
    //

    ஆண்டாள் நாச்சியார் வாழ்ந்த காலகட்டத்தில் ‘தோட்டி’ என்றொரு சாதியே பாண்டிய நாட்டிலோ, தமிழகத்திலோ இல்லை. தலித்துகளின் வரலாறை அறியாத அரைவேக்காடுகள், தலித் ஆதரவு முற்போக்கு முகமூடியை மாட்டிக்கொண்டு தலித்துகளை இழிவு படுத்துவதை ஒரு பல்கலைக் கழகம் அனுமதித்திருப்பது வெட்கக்கேடு.

  2. வயிறு எரியச் செய்யும் செய்தி. கடவுள் தான் இந்த நாட்டைக் காக்க வேண்டும். தொலைக்காட்சியில் மட்டமான நெடுந்தொடர்களையும், மானாடி, மயிலாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பவர்களுக்கும் இத்தகைய சிந்தனைகள் தான் தோன்றும். வேறே என்ன சொல்வது? சமச்சீர் கல்வித்திட்டப் பாட நூல்களில் உள்ள தவறுகள் போதாது என இப்போ இது வேறே! :(((((

  3. மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் அனைத்து கைப்பேசி எண்களும் switch off செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் ஹிந்து வாசகர்கள் கீழ் கண்ட தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு கண்டனத்தை தெரிவிக்கவும்.

    Registrar
    Manonmaniam Sundaranar
    University
    0462 – 2333741, 2338721
    0462 – 2338632 (Direct)

    சில அலுவலர்கள் விசம புத்தியுடன் ஹிந்தியில் பதில் அளிக்கின்றனர். ஹிந்து சகோதரர்கள் தொடர்ச்சியாக அவர்களுக்கு கைப்பேசியிலும் fax மூலமும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

  4. ஜாதி மறுப்பு என்ற முகமூடியை அணிந்து ஹிந்து சமயப்பெரியோர்களை மோசமாக சித்தரிக்கும் முயற்சி. அச்சுக்கூடமிருப்பவர் ஸ்வதந்த்ர ஹிந்துஸ்தானத்தில் எதை வேண்டுமானால் ப்ரசுரம் செய்யவியலும். அது தனிநபர் ஸ்வதந்த்ரம் என யாரும் வாதிட இயலும். ஆனால் இது போன்ற சரித்ரத்தில் இல்லாத தர்க்கத்திற்கு ஒவ்வாத தரம் தாழ்ந்த ஒரு புஸ்தகத்தை ஒரு சர்வகலாசாலை ஏன் தனது வித்யார்த்திகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்?

  5. எனது ஈமெயில் மூலமாக ம சு பலகலைக்கழக துணை வேந்தருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.

  6. இந்தப் புத்தகம் 1958ம் ஆண்டு செல்வராஜ் அவர்களால் எழுதப்பட்டது. அவரது சிறுகதையை பாடத்தில் சேர்த்ததற்காக நாம் கண்டனங்கள் தெரிவிக்கும் அதே நேரத்தில், இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் எனவும், இதை பதிப்பித்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம், பதிப்பை நிறுத்தவும் நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

  7. நாத்திக-திராவிட, போலி கம்முனிச, ஆப்ரஹாமிய நரிதனங்களால் விளையும் இத்தகைய வினைகளை வன்மையாக கண்டிக்கிறோம்!

    என்று ஸ்ரீ ராமரின் திரு உருவ படத்திற்கு அவமரியாதை செய்தார்களோ அன்றே அந்த கைகளை நறுக்கி இருந்தால் இத்தகைய துணிவு அவர்களுக்கு வராது! இந்த பல்கலைகழக துணைவேந்தரும், பதிவாளரும், அகாடெமிக் கவுன்சில் உருபினர்களும் பதவி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்! இந்த பதிப்பகமும் தடை செய்ய பட வேண்டும்! என்றோ எழுதிய பதிவு இன்று அச்சேறுவது எதற்காக? இதன் பின்புலம் என்ன? இதில் மிசநரிகளின் பங்கு எந்த அளவுக்கு? ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருகோயில் நிர்வாகம் இதற்கு என்ன செய்ய போகிறது?

  8. கண்டனத்தைத் தெரிவித்து, இந்தப் பாடத்தை நீக்கவும் கோரி மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன்..

  9. பற்ப்பல தொல்காபியங்களும் இலக்கியங்களும் புராணங்களும் படைத்தவர்களின் எண்ணங்களையெல்லாம் சீரழிக்கும் விதமாக புதுமை என்கிற போர்வையில் குறுகிய, வக்கிர மனப்பான்மையுடன் மாணவர்களுக்கு புகட்டும் இந்த பல்கலை கழகத்தை கோர்ட்டுக்கு இழுக்கவேண்டும். இது ஒரு தனி ஜாதி மத பிரச்சனை இல்லை. வரலாற்றையும், புராணங்களையும் இழுவுபடுத்தும் செயல். என்றோ வரைந்த கார்டூனை பற்றி பல பக்கங்கள் எழுதும் கழகங்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவுக்குமா??.

  10. நோன்பு கதை கொண்ட “நோன்பு” புத்தகம் கல்லூரிக் கல்விப் பாடத்திட்டத்தில் எவ்வாறு சேர்க்கப்பட்டது? யாரோ ஒருதனிமனிதனின் தூண்டுதல் காரணமாக சேர்க்கப்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அவரைத்தவிர Board of studies உறுப்பினர் ஒருவராவது படித்துப் பார்த்திருந்தால் இன்று ஏற்பட்டிருக்கும் அவல நிலை வந்திருக்காது. அசிங்கியமான பொருள் தோன்றும்படியான அட்டைப்படம் கூட எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
    முதல் கதையே (கோணலே) கல்லுரியில் பயில ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு முற்றும் கோணலாக ஆகிவிடக்கூடாதல்லவா .இந்த நூலையே தவிர்த்து விட்டு சமநிலை தவறா நல்லாசிரியர்களைக் கொண்டு வேறொரு நல்ல நூலை தெரிந்தெடுப்பது ஒன்றே ம.சு.பல்கலைகழகத்தின் மேல் படிந்துள்ள மாசு நீங்குவதற்கான நல்வழியாகும்

  11. நபியை கார்டூன் போட்டதற்கு ஏற்பட்ட எதிர்விளைவுகள் என்னவென்று விவரமறிந்தவர் அறிவர். சகிப்பு தன்மை அல்லது இறைவன் விட்ட வழி என்று இருப்பது இந்துகளின் பண்பு எனவேதான் இதுபோன்ற குப்பைகள் அச்சேறி பாடதிட்டத்திலும் இடம் பெற்று வயிற்றெரிச்சலை கொட்டி கொள்கின்றன. மதச்சார்பற்ற அரசின் கட்டுபாட்டில் இயங்கும் பல்க(கொ)லை கழகம் குறைந்த பட்சம் டாவின்சி கோட்”ஐ பாடத் திட்டத்தில் வைக்குமா என்று அறிய தகவலறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தலாமா?

  12. எந்த நூலையும் தடை செய்ய நாம் கோரவில்லை. தமிழ்ஹிந்து.காம் படைப்பு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் ஆதரிக்கிறது. ‘நோன்பு’போன்ற மட்டமான ஆபாசமான இலக்கிய தரமற்ற பிரச்சார சிறுகதை தொகுப்பையும் கூட கருத்தியல் தளத்தில் முழுமையாக நிராகரிக்கும் தமிழ்ஹிந்து.காம் அதை தடை செய்ய கோரவில்லை. ஆனால் இந்த மட்டமான கீழ்த்தர அவதூறு பிரச்சாரம் மாணவர்கள் மீது பாசிச முறையில் இலக்கியம் என திணிக்கப்படுவதை தமிழ்ஹிந்து.காம் ம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

  13. ” நாம் இவ்வளவு தான் “.நம்மை அம்மாதிரி இறைவன் சமைத்து/படைத்து உள்ளான்.
    மேலிருந்து கீழ் வரை அப்படிப்பட்ட ஆட்கள் தான் உள்ளனர்.சும்மா எதற்கு “டென்ஷன்”
    ஆவுறீங்க?என்ற ஞானோபதேசம் தான் பதிலாக அமையும்.
    இறைவன் ஒருவனால் தான் மட்டுமே இந்நிலையை மாற்ற இயலும்,ஏனெனில் அவன்தான் “இதுகளையும்”சமைத்து/படைத்து உள்ளான்.

  14. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாம் நம்மையே ஏமாற்றிக்கொண்டு வருகிறோம். எதற்கும் ஒரு கட்டுப்பாடு தேவை.

    எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் கல்வித்துறை மற்றும் அறிவுலகில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டு சக்திகளைப் பற்றி வெளிப்படியாக எழுதி தனியொரு ஆளாகப் போராடி வருவது தான் இங்கு நினைவுக்கு வருகிறது.

    மனோன்மணியம் பல்கலைக்கழகம் வசந்திதேவி, க.ப.அறவாணன் போன்ற இடது சார்புள்ள, திராவிடக் கருத்தியல் கொண்ட துணைவேந்தர்களால் நிர்வகிக்கப்பட்டது. அவர்களிடம் மு.வ. போன்றவர்களின் கல்வி மேதமையை எதிர்பார்க்க முடியாது. இந்தக் கழிசடைகளின் தாக்கமே ஆண்டாள் மீதான அவதூறு கதை பாடத்திட்டத்தில் சேரக் காரணம்.

    முகமது நபி வரலாற்றை சித்திரக்கதையாக வெளியிட்ட சிறுவர் மலரைக் கண்டித்து, மதுரையில் தினமலர் நாளிதழ்களை இஸ்லாமியர்கள் எரித்தது தான் நினைவுக்கு வருகிறது. மறுநாளே தினமலர் முதல் பக்கத்தில் இஸ்லாமியரிடம் மன்னிப்பு கேட்டது. அம்பேத்கர் கார்டூனை வெளியிட்டதற்காக எழுந்த எதிர்ப்பால் என் சி இ ஆர் டி பேராசிரியர்கள் பதவி விலக வேண்டி வந்தது. ஆக எந்த இடத்தில் எதிர்விளைவு கடுமையாக இருக்குமோ அங்கு தான் தவறுகள் திருத்தப்படுகின்றன.

    எழுத்து சுதந்திரம் என்பது எதையும் அறிவின்றி எழுத கொடுக்கப்பட்ட உரிமை அல்ல. இந்த அபத்தமான சிறுகதை பல்கலை பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டதை கண்டித்து ஹிந்து வழக்கரிஞர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வேண்டும். ஹிந்து இயக்கங்கள் இதை ஒரு கௌரவப் பிரச்னையாக மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும். மாணவ அமைப்பான ஏ பி வி பி ஏற்கனவே தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை கூர்மையாக்கி, இந்த சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்குமாறு அரசை நிர்பந்திக்க வேண்டும்.

    ஹிந்துக்கள் அறவழியில் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டு. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இதை ஏற்கனவே குஜராத் நிரூபித்துள்ளது. பல்கலையில் கல்வியாளர்களாக வேடமிட்டு நச்சுக் கருத்துக்களைப் பரப்பும் விஷமிகளை தமிழக அரசு களை எடுக்க வேண்டும்.

    ”இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்று” என்ற அருந்தமிழ்ப் பாவை ஆண்டாளை மாசுபடுத்துவது தமிழகத்தையே அவமதிப்பது. அரசு உடனடியாகச் செயல்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    -சேக்கிழான்

  15. ஏற்கனவே இடதுசாரி எழுத்தாளர் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய ‘தாண்டவபுரம்’ நாவலில் தமிழின் ஞானக்குழந்தை திருஞானசம்பந்தரை அவதூறு செய்திருந்தார்கள். எப்போதோ செல்வராஜ் எழுதிய ‘நோன்பு சிறுகதை’ இப்போது மனோன்மனியம் பலகலையில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது போல, இந்த நாவலும் ஒருசமயம் விஷ விருட்சத்தைப் பரப்பக் கூடும். இந்த நாவலையும் எதிர்த்து இப்போது குரல் கொடுக்க வேண்டும்.

    சைவ குலக்கொழுந்து திருஞான சம்பந்தரையும் வைணவத் திருமகள் ஆண்டாளையும் அவதூறு செய்பவர்கள் இடதுசாரி, முற்போக்கு வியாதிகளாகவே இருப்பதை கவனத்தில் கொள்வது நல்லது. அந்த இயக்கத்தில் நட்புக்காக உறுப்பினராக இருக்கும் தன்மானமுள்ள எழுத்தாளர்கள் வெளியேற வேண்டும்.

    -சேக்கிழான்

  16. I strongly condemn the behaviour of Manonmaniam Sundaranar University officials for publishing fabulous, scandalous stories about Kothai Nacchiyar; which is an insult to the Hindhu community..The short story about Kothai should be immediately withdrawn from the syllabus..I appeal all our Hindu brotherhood to ignore these type of vicious stories..Because Hinduism is not a man made religion..It is not a religion but Sanadana dharma..the way of life..! Kothai Nacchiyar was one of the greatest poet, revolutionary of Tamil era….The so called Marxicists cannot rewrite Tamil History..So..Don’t worry my dear brotherhood…inspite of all these stories…Thiruppavai will survive..so does the Thamizh language…! Aandal thiruvadikalae charanam…!

  17. கருத்து சுதந்திரம் வரவேற்க பட வேண்டியது … இதை ஏற்று கொள்வதும் , ஒதுக்குவதையும் மாணவர்களிடம் விட்டுவிடுவோம் ….

  18. அன்பார்ந்த ஸ்ரீமான் சேக்கிழான்,

    க்றைஸ்தவ இஸ்லாமிய கோட்பாடுகளைப் பற்றியோ அந்த மதத்து சான்றோர்களைப் பற்றி அம்மதத்தவரால் ஏற்றுக்கொள்ள இயலாத கதை கட்டுரை அல்லது ஓவியங்கள் எப்போதாவது வருஷத்தில் ஒருமுறை அல்லது அபூர்வமாக பல வருஷங்களில் ஒருமுறை என ப்ரசுரத்தில் வரும். மேலும் சமூஹ ரீதியில் ஒன்றாக ஒரு பெரும் சக்தியாக திரண்டு இம்மாதிரி விஷயங்களை எதிர் கொள்ளும் வலிமை இச்சமூஹத்தினருக்கு உண்டு.

    ஹிந்து மதம் பற்றி ஹிந்துக்கடவுளர்கள் பற்றி ஹிந்துச் சான்றோர்கள் பற்றி ஹிந்துஸ்தானத்திலும் உலக அளவிலும் வாரத்திற்கு ஒன்றாவது அவதூறானா கதை கட்டுரை அல்லது ஓவியங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பாத ரக்ஷையில்,மதுபான குப்பிகளில் மற்றும் உள்ளாடைகளில் ஹிந்து கடவுளர்களை அச்சிடுவது —– எம்.எஃப் ஹுஸைன் போன்று தெரஸா போப் போன்றவர்களை ஆடையுடனும் ஹிந்து கடவுளர்களை ஆடையில்லாமலும் அதுவும் காட்சிகளை புராணங்களில் சொன்னபடி இல்லாது முன்பின் முரணாக வடிப்பது—– சுர்ஹட் லாடரி மற்றும் போபால் விஷவாயு இத்யாதி காண்டங்களில் அபகீர்த்தி பெற்ற காலஞ்சென்ற ஸ்ரீ அர்ஜுன் சிங் தனது ஸஹமத் அமைப்பு மூலம் ராமாயண கண்காட்சிகளில் சீதையை ராமனின் தங்கை என்றெல்லாம் தோன்றியபடி புனைவு செய்து இது பலான தேசத்து ராமாயணத்தில் உள்ளது என்றெல்லாம் கதை சொல்லியது—–மன்மதன் அம்பு, தாண்டவபுரம் இத்யாதி இத்யாதி —- இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இம்மாதிரி நிகழ்வுகள் எப்போதோ நிகழ்வதில்லை அடிக்கடி நிகழ்பவை என்பது முக்யமாக கவனிக்க வேண்டிய விஷயம்.

    ஹிந்துக்களுக்கு இவற்றை எதிர் கொள்ள மூன்று வழிகள் எனக்குத் தெரிந்து.

    புறந்தள்ளுதல்.

    உண்ணாவ்ரதம், ஊர்வலம் என ஔபசாரிகமாக எதிர்த்தல்

    ந்யாயாலயம் சென்று வழக்காடி ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறல்.

    இதுபோன்றவை அடிக்கடி நிகழ்வதால் ஹிந்து இயக்கங்கள் இப்படிப்பட்ட நிகழ்வுகளை எதை எதை எதிர்ப்பது எவ்வாறு எதிர்ப்பது என்ற ப்ரசனம் எழும். இதற்கு உத்தரம் கடினமானது.

    ஆண்டாள் புஸ்தக விஷயத்தில் புஸ்தகத்தை தடை செய்ய வேண்டி ந்யாயாலயம் சென்றால் ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வாய்ப்புண்டா என்பது சந்தேகமாக உள்ளது. சட்டம் தெரிந்தவர்கள் விஷயத்தை தெளிவாக்கலாம். ஆனால் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இப்படியான தரம் தாழ்ந்த புஸ்தகத்தை திணிப்பதிலிருந்து விலக்கு பெற வழக்காடி வெற்றி பெற இயலும் என தோன்றுகிறது.

  19. தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவின் கவனத்திற்கு :
    இன்றைய தினமலர் செய்தி:

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பெட்டி கொடுக்கும் பல்கலை. ஹிந்து இயக்கங்களின் எதிர்பிற்கு பணிந்தது பல்கலை.. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அவர்களின் தரப்பு விளக்கம்…

    நெல்லை பல்கலை பாடத்தில் ஆண்டாள் சிறுகதை இல்லை! – ஜூன் 27,2012

    திருநெல்வேலி: “”நெல்லை பல்கலை தமிழ்பாடத்தில் ஆண்டாள் பற்றிய கதையே இடம் பெறவில்லை, என நெல்லை பல்கலை பேராசிரியர் தெரிவித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ்இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் பாடத்தில், முதல் பகுதியில் கதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள “ஆண்டாள் என்ற சிறுகதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் குறித்து சர்ச்சையான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெல்லை பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: நெல்லை பல்கலைக்கு உட்பட்ட இளங்கலை தமிழ்பாடத்தை வடிவமைப்பது கல்லூரி பேராசிரியர்கள்தான். பாடத்திட்டத்தை வடிவமைக்கும்போது ஆண்டாள் குறித்த சிறுகதை சேர்க்க கூறினர். ஆனால் அதில் சர்ச்சை இருந்ததால், சரஸ்வதி என்ற கதை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடங்களை ஒப்புதல் பெற்றுள்ள பாடப்புத்தகத்தை, என்.சி.பி.எச்.,நிறுவனத்தினர் இனிதான் அச்சடிக்க உள்ளார்கள்.அச்சடித்து வெளிவராத புத்தகத்தில் இல்லாத சிறுகதை குறித்து ஏன் சர்ச்சை என தெரியவில்லை, என்றார். வழக்கமாக நெல்லை பல்கலையின் முக்கிய புத்தகங்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தினர்தான் வெளியிடுகின்றனர். அவ்வாறு புத்தகத்தை அச்சிட ஆர்டர் கிடைக்காத யாரோ தனிநபர்கள் கிளப்பிவிட்ட வதந்திதான் இந்த சர்ச்சை என பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

  20. இந்த ‘சரஸ்வதி’ என்ற சிறுகதை நம் அன்னை கலைமகளை போற்றுவதாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்!

  21. நான் கருத்து சுதந்திரத்தை முற்றும் முழுவதுமாக ஆதரிப்பவன். ஆனால் பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய புத்தகங்களை பாடத்திட்டத்தில் வைப்பது குறித்து என்னால் பேச முடியாது. ஏனெனில் நான் கல்வியாளன் இல்லை.

    இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும், தமிழ் ஹிந்து இணைய தளத்தின் ஆசிரியர் குழு தெளிவாக தன் கருத்தை ஒரு மறுமொழியில் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது மட்டுமல்ல, வணங்கத்தக்கது. I Salute You.

    திரு.சேக்கிழான்,
    நீங்கள் சமகால அரசியல் குறித்த பல கட்டுரைகளை எழுதுபவர். ஆகவே மறுமொழி எழுதுகையில் நிதானத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    “இந்த சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்குமாறு அரசை நிர்பந்திக்க வேண்டும். ஹிந்துக்கள் அறவழியில் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டு. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இதை ஏற்கனவே குஜராத் நிரூபித்துள்ளது.”

    எதிர்காலத்தில் மேற்கூறிய வாக்கியங்களைப் போன்று எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  22. கண்டனங்களைத் தொலைபேசியும், மின்னஞ்சலிலும் தெரிவிப்பதில் அர்த்தமில்லை. அ. மார்க்ஸ் கும்பல் இந்தியா டுடே இலக்கிய மலரை எதிர்கொண்டது போலச் செய்வதுதான் உத்தமம். வக்கிரமான இக்கதையின் பக்கங்ளைக் கொண்டு மலம் துடைத்து அதை ம.சு. பல்கலைக்கழகத்துக்கு குரியர் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

  23. அன்பர் ஆர்.பாலாஜிக்கு,

    தங்கள் கருத்துக்கு நன்றி. //மறுமொழி எழுதுகையில் நிதானத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.// நான் அவ்வளவு எளிதாக உணர்ச்சிவசப்படுபவன் அல்ல. அதே சமயம், சுயமரியாதைக்கு பங்கம் வரும் வகையில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படும்போது என்னால் பொறுத்திருந்து கதைக்க முடியவில்லை. சும்மாவா சொன்னார் ‘ரௌத்திரம் பழகு’ என்று பாரதியார்?

    நான் கோவையில் நடந்த பல அநீதியான நிகழ்வுகளை நேரடி சாட்சியாக பார்த்திருக்கிறேன். ‘ஆபாசத்தில் சிறந்தது ராமாயணமா? மகாபாரதமா?’ என்ற தி.க அதி புத்திசாலிகளின் பட்டிமன்றம் 1989 வாக்கில் (அப்போது திமுக ஆட்சி இருந்தது) கோவையில் அதுவும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஆத்துப்பாலம் பகுதியில் நடத்தப்பட்டது. அது தான் கோவையில் மத மோதல்களுக்கு மூலமாக அமைந்தது. தி.க. கூலிகளைக் கொண்டு இந்து மதத்தை தூஷிப்பதில் பிற மதத்தவருக்கு உள்ள ஈடுபாடு முக்கியமானது. இதே தான் மனோன்மணியம் பல்கலையிலும் நடந்திருக்கும் என்பதே என் கணிப்பு. இதை புரிந்துகொள்ள/ உறுதி செய்துகொள்ள, நீங்கள் எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் கடந்த நான்கு நாட்களாக வந்துள்ள பதிவுகளை கொஞ்சம் வாசிக்க வேண்டும்.

    1998 லேயே, இடதுசாரி தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள், விடுதலை இறையியல் என்ற பெயரில் மயக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள், தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினவாதிகளிடையே நிலவும் உள்ளார்ந்த நட்புறவு குறித்து ‘விஜயபாரதம்’ தீபாவளி மலரில் நான் கட்டுரை எழுதி இருக்கிறேன். அப்போது குறிப்பிட்டதை விட பல மடங்கு அதிகமாக இந்து மதம் மீதும், இந்திய தேசம் மீதும் வன்மமும் காழ்ப்புணர்வும் இப்போது பரப்பப்படுகின்றன- மேற்கண்ட நான்கு வகையினரால்.

    இன்னமும் எத்தனை நாட்களுக்கு இதனை நாம் புரிந்தும் புரியாமல், தவிக்கப் போகிறோம்? குஜராத்தில் அடங்கிக் கிடந்த பொருமல் தானே கோத்ராவால் வெடித்தது? அந்தப் பொருமலை உருவாக்கியவர்களும் தானே குற்றவாளி? இது குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தை நியாயப்படுத்த நான் கூறுவதல்ல. ஆனால், எந்த ஒரு இடத்தில் அநீதி தலைவிரித்து ஆடுகிறதோ, அங்கு அநீதிக்கு எதிரான ஆவேசமும் வெளிப்படத் தானே செய்யும்?

    அரசை நிர்பந்திப்பதில் அறவழி போராட்டங்களை கையாளலாம். அதில் தவறில்லை. அரசு கண்டுகொள்ளாவிட்டால் அரசியல்ரீதியாக பதிலடி கொடுக்கலாம். அதுவும் முடியாவிட்டால், சாது மிரள்வதில் தவறில்லை என்பதே என் நிலைப்பாடு. குற்றம் செய்தவரை விட அதற்கு தூண்டுகோலாக இருந்தவர் தான் அதிக குற்றம் செய்தவர் என்பதே என் கருத்து. அநீதியைக் கண்டிப்பதில் எதற்கு நிதானம் தேவை?

    மற்றபடி, நமது கருத்து வன்முறைக்கு உறுதுணை புரிந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் இதனை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறேன். பாம்பு கடிக்க வேண்டியதில்லை; சீறினால் போதும். இல்லாவிடில் முனிவரின் உபதேசத்தால் அப்பாவியாக அடி வாங்கிய பாம்பின் கதை தான் நமக்கும்.

    அன்பர் க்ருஷ்ண குமார்,

    //ஆண்டாள் புஸ்தக விஷயத்தில் புஸ்தகத்தை தடை செய்ய வேண்டி ந்யாயாலயம் சென்றால் ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வாய்ப்புண்டா என்பது சந்தேகமாக உள்ளது. // உங்கள் கருத்து உண்மை தான். அதற்காக நாம் தயங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? விளைவைப் பற்றிய கவலையின்றி நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்து போராடுவது ஒன்றே இப்போதுள்ள சரியான வழி. நாம் தயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடியும் நம் மீது வீசப்படும் அவதூறுகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கும்.

    -சேக்கிழான்

  24. அன்புள்ள ஆர்.பாலாஜி,

    பாடத்திட்டத்தில் எதை வைக்க வேண்டும் என்று சொல்ல நாம் கல்வியாளராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பாடத்திட்டம் என்பது ஒரு தலைமுறையை உருவாக்கும் அறிவுக் கருவூலம். அதில் விஷத்தைத் திணிப்பதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது என்பது, உணவுப் பண்டத்தில் கலப்படம் செய்வதை கண்டும் அமைதியாக இருப்பது போன்றதே. கல்வித் திட்டத்தில் மத விரோத, தேச விரோதக் கருத்துக்கள் புகுத்தப்படுவதைக் கண்டிக்கும் உரிமையும் கடமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு; கண்டிப்பாக உண்டு.

    -சேக்கிழான்

  25. கட்டுரை ஆசிரியரின் செந்தமிழும் செந்தண்மையும் போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியன.

    இந்த இழிசெயலைச் செய்த தோழர்(?) டி. செல்வராஜின் செயலோ செருப்படிக்கே உரியது.

  26. அன்புள்ள அடியவன்,

    செருப்புக்கள் ஒன்றும் செல்வராஜ் அளவுக்கு இழிபொருள் அல்ல. உடனடியாக செருப்பிடம் மன்னிப்பு கேளுங்கள்.

  27. கல்வியாளன் என்று யாரும் கொம்பு முளைத்தவன் கிடையாது. திருட்டு இயக்கங்கள் கல்வித்துறையில் ஏராளமான அசிங்கங்களை செய்து வருகின்றன. நாம் எல்லாருமே கல்வியாளர்கள் தான். தமிழ் நாட்டை அசிங்கங்கள் பதவியை பிடித்த அறுபத்தேழு முதல் , தமிழக கல்வித்துறையில் கல்வியாளர் என்று எவரும் கிடையாது. லட்ச ரூபாய் டாக்டர்களும், ( உதயகுமார் டாக்டர்களும் ) ஐந்து லட்சரூபாய் பி எச் டி களும் தான் , தமிழகத்தில் உலாவுகின்றன. பல்கலை துணைவேந்தர் இரண்டு கோடி ரூபாய். எனவே, நீங்கள் சொல்வதுபோல , கல்வியாளன் என்று யாரும் இல்லை. எல்லாம் கமிஷன் ஏஜெண்டுகள் தான். திமுகவினர் தான் இந்த சீர்கேடுகளை ஆரம்பித்து, வசூல் வேட்டையை அதிகரித்தனர். திமுகவினரால் கல்வியாளர் என்று பொய் முத்திரை பெற்றவர்கள் எல்லாமே, திமுக கட்சிக்காரர்களும், ஜெயில் சிங்கு போல , தரை பெருக்கவும் தயார் என்று அறிவித்த தன்மான சிங்கங்களும் தான்.

  28. //வழக்கமாக நெல்லை பல்கலையின் முக்கிய புத்தகங்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தினர்தான் வெளியிடுகின்றனர். //
    இந்தப் புத்தக நிறுவனத்தினர் சோவியத்தே சொர்க்கம் என்று செஞ்சட்டைக்கு சொம்பு தூக்கும் கும்பல் அல்லவா? அதனால் தான் தோழரின் கருத்தைச் சேர்த்துள்ளனர்.

    //வக்கிரமான இக்கதையின் பக்கங்ளைக் கொண்டு மலம் துடைத்து அதை ம.சு. பல்கலைக்கழகத்துக்கு குரியர் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.//

    செய்யலாம்…. ஆனால் இந்துக்களில் பலர் இன்னும் காந்தியத் தாக்கத்தில் இருந்து வெளிவரவில்லை. என்ன இருந்தாலும் நாம் இப்படிச் செய்யக்கூடாது என்று சேம் சைடு கோல் அடிப்பார்களே!!
    தர்ணா போராட்டம், கொடி பிடித்தல், கோஷமிடுதல் என்று இடதுசாரிகள் பழ(க்)கிய பாணியிலேயே சென்றால் என்ன impact இருக்கப் போகிறது? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டும். அந்தக் கண்றாவிப் புத்தகப் பக்கங்களை எரித்தாலும் குற்றமில்லை.

  29. “கருத்து சுதந்திரம் வரவேற்க பட வேண்டியது … இதை ஏற்று கொள்வதும் , ஒதுக்குவதையும் மாணவர்களிடம் விட்டுவிடுவோம் ….”

    அபத்தம்; உங்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தவறான தகவல்களுடன் எவராவது ஏதாவது எழுதினால் கருத்து சுதந்திரம் என்று ஏற்றுக்கொள்வீர்களா? வரலாறும், மரபும் பின்னிப்பிணைந்த புனிதமான ஒருவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஆதாரமில்லாத தகவல்களைக் கொண்டு கணண்டவற்றையும் எழுதி அதை, பெரும்பாலும் வாசிப்பு அனுபவமே இல்லாத மாணவர்களிடம் அதைத் திணிப்பது என்பது என்ன வகையான கருத்து சுதந்திரம்.

    ரொம்ப………. நல்லவனாக இருக்க முயற்சிக்காதீர்கள்; அப்புறம் நீங்கள் நீங்களாக இருக்க முடியாது பிரசாத்.

  30. ஆட்சியாளர்களுக்கு என்ன பாஷை புரியுமோ அதே பாஷியில்தான் பேச வேண்டும்.காஞ்சி பெரியவர் கைதானபோது ஒரு ஹிந்து பீடாதிபதியை கைது செய்ததையும் கைது செய்த விதத்தையும் எதிர்த்து முதளில சாலைக்கு வந்து குரல் கொடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸ்வயம்சேவகர்கள் அதன் பிறகு பொதுக்கூட்டம் , மனிதச்சங்கிலி போராட்டம், ஆர்பாட்டம் எல்லாம் செய்தும் முதல்வர் சட்டசபையில் பேசும்போது ‘ நான் செய்த இந்த செயலை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். கைது நடவடிக்கையால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை’ என்று கூறினார். இவர் என்ன எதிபார்கிறார்? மணிக்கணக்கில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்படி ஊர்வலம், அதில் தடியடி ,துப்பாக்கி சூடு, நான்கு பஸ்களை கொளுத்துதல், கடைகளை சூறையாடுதல் எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிபார்கிறாரா .

  31. பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே மெய் போலும்மே.
    வெறுமனே கண்டனம் செய்வதால் யாருக்கு லாபம் .? நம் அரசு தீவிர வாதத்தை எதிர்க்கும் லட்சணம் தான் அது.
    அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
    கலிபோர்னியா பள்ளி பாட புத்தகங்களில் இப்படியான வக்கிரம் ஒரு சில பெற்றோரின் முயற்சியால் [ அவர்கள் நீதி மன்றங்கள் ஒழுங்காக உள்ளதாலும்]
    தடுக்கப்பட்டது. விவரம் அறிந்தோர் பகிர்ந்து கொள்ளலாம்.
    அதையே இங்கும் செய்ய வேண்டும்.
    அங்கே ராஜன் ஜெட் என்பவர் இது போன்ற விஷன்யங்களை எதிர்த்து வென்றிருக்கிறார்.
    கோர்டுக்கு செல்வதே தேவையில்லை என்பது வீண் வாதம் . நிறுவன ரீதியாக
    சென்றால் இப்படிப்பட்ட கோஷ்டிகளுக்கு இவ்வளவு தைரியம் வராது.

    இன்று நம் வீட்டு பெண்ணை பார்த்து ரவுடித்தனம் செய்பவன் நாம் கண்டிக்கிறேன் என்று சொல்லி சும்மா இருந்தால் விட்டால் நாளை என்னவெல்லாம் செய்யலாம் சிந்திக்க வேண்டும்.
    இது ஜனநாயக நாடு -ஜனநாயக முறையில் எதிர் கொள்ளத்தான் வேண்டும்.
    சரவணன்

  32. பிட் அடித்து பாசானவ்ர்களும் சிறுகதை என்ற பெயரில் தன மன வக்கிரங்களை வெளியிடும் சில கீழ்த்தரமான சிந்தனை உடையவனுடைய புத்தகத்தை அங்கீகரித்த சுந்தரனார் பல்கலை கழகத்தின் மேல் வழக்கு தொரப்பட்டு அந்த இழிவான பாடம் நீக்கப்படவேண்டும்.
    .கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் முட்டாள்கள் செய்யும் காட்டுமிராண்டித்தனம்தான் இது.
    இந்த அறிவிலிகள் மற்ற எந்த மதத்தைப் பற்றி ஒரு வரி எழுத முடியுமா ????.. மல்லாக்கா படுத்துக்கொண்டு எச்சில் துப்பிக்கொள்ளும் மடையன் இதை எழுதியவன்.
    .இந்த மாதிரி கதைகளை வேறு எந்த மதத்தை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக எழுத மாட்டார்கள் .
    WE WIL TAKE UP THIS MATTER TO HONOURABLE.C.M.
    IF GOD BE WITH US, WHO CAN BE AGAINST US.
    S VE SHEKHER

  33. Saw yesterday’s news that the portion defaming Andal has been removed from the text books.

    Thanks to tamil hindu & many readers for highlighting the same.

  34. ஆண்டாள் பற்றிய சிறுகதையால் அதிருப்தி – நெல்லை பல்கலையில் சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம்:

    செய்தி – https://tamilhindu.com/wp-content/uploads/aandal_news_1.jpg

    இந்த போராட்டத்தில் முனைந்து ஈடுபட்ட அனைத்து இந்து இயக்கங்களுக்கும் பாராட்டுக்கள். குறிப்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் உறுப்பினர்களான மாணவர்கள் பல்கலை தலைமை பீடங்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் சாத்தியக் கூறுகளையும் துச்சமாக மதித்து இந்தப் போராட்டத்தில் இறங்கினார்கள். அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுதல்கள்:

    அ.பா.வி.ப சுவரொட்டிகள்:
    https://tamilhindu.com/wp-content/uploads/aandal_news.jpg

  35. தோழரின் முழுப்பெயர் டேனியல் செல்வராஜ் என்பது சமீபத்தில் தெரியவந்த செய்தி.

    இந்த ஒரு கதையை நீக்குவதுடன் இது நிற்கக் கூடாது. இந்தப் புத்தகத்தையே பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேன்டும். பின்னட்டையில் “மார்க்சிய சித்தாந்தவாதி” என்று தானே அடையாளப் படுத்திக் கொள்ளும் ஒருவருடைய சிறுகதைத் தொகுப்பு முதலில் தேர்ந்தெடுக்கப் பட்டது எப்படி என்பதைக் குறித்தும் விசாரணை நடத்தப் படவேண்டும்.

    அ.ராமசாமி கருத்துடன் உடன்படுகிறேன் – https://ramasamywritings.blogspot.com/2012/06/blog-post_28.html

    தமிழ் நவீன இலக்கியத்தின் குறிப்பிடத்தகக்க பல்வண்ணங்களை மாணவர்கள் அறியத் தருமாறு வேறு வேறு கதாசிரியர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு (anthology) தான் பாடமாக வைக்கப் பட வேண்டுமே ஒழிய, ஒரே ஆசிரியரின் சிறுகதைத் தொகுப்பு அல்ல.

    அப்படி வைத்தால், அது புதுமைப்பித்தன், தி.ஜா, லாசரா போல ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையின் சிறுகதைகளாக இருக்க வேண்டும்.

  36. ம.சு. பல்கலைக் கழகத்திற்கு ஒரு கேள்வி – “மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்” என்று தானே லேபிள் போட்டுக் கொண்டவரது சிறுகதைத் தொகுப்பை பாடத்திட்டமாக வைக்கிறீர்கள், அவர் வக்கிர ம்னோபாவம் கொண்ட, கலையுணர்வு வற்றிய ஒரு எழுத்தாளராக இருந்தும் கூட.

    “இந்து்த்துவ முற்போக்கு எழுத்தாளர்” ஆலந்தூர் மள்ளன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு பாடத்திட்டத்தில் ஏற்கப் படுமா என்று அறிய விரும்புகிறேன். தோழர் செல்வராஜின் குப்பைக் கதைகளை விட, ஆ.மள்ளனின் கதைகள் எல்லா வகையிலும் பல மடங்கு சிறப்பானவை – அவற்றில் உள்ள அறிவியல், தத்துவம், நாட்டாரியல், தலித்தியம், பண்பாட்டு சமூகவியல் தளங்கள் தமிழின் பல எழுத்தாளர்கள் தொடாதவை. மிகப் புதுமையானவையும் கூட.

    இப்படி ஒரு கோரிக்கையை சாத்தியமாக்கும் வகையில் உடனடியாக ஆ.மள்ளனின் சிறுகதைத் தொகுப்பு அச்சில் வர வேண்டும். அதற்கு இந்து இயக்கங்கள் உட்பட எல்லாரும் முயற்சி எடுக்க வேண்டும்.

  37. // S VE SHEKHER on June 28, 2012 at 12:41 pm //

    அட நம்ம எஸ்.வி.சேகர் அவர்களா? உங்களது கருத்தை தெளிவாக, வெளிப்படையாக வந்து இங்கு பதிவு செய்ததற்கு மிக்க நன்றி சார்.

  38. மிகத்தெளிவாக ஒரு எதிர்ப்புக் கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு நன்றி. திருமதி.ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் எழுதிய எதிர்ப்புக் கட்டுரையை இங்கே காணலாம்:-

    https://jayasreesaranathan.blogspot.in/2012/06/blasphemous-story-on-andal-and.html

  39. ” அ.ராமசாமி கருத்துடன் உடன்படுகிறேன் “//https://ramasamywritings.blogspot.com/2012/06/blog-post_28.html”

    இங்கே அவர் இப்படி எழுதி இருக்கிறார்.

    “தினத்தந்தியில் செய்தியாக வந்துள்ள இந்தக் குறிப்பின் விரிவான கண்டனம் தமிழ் இந்து இணைய தளம் வழியாக ஏற்கெனவே நான் வாசித்த ஒன்று தான். எல்லா நேரங்களிலும் இது போன்ற கண்டனங்கள் அல்லது எதிர்ப்புணர்வின் பின்னணியில் வியாபார நோக்கம் மட்டுமே இருக்கும் என்பதை நானறிவேன். பட்டப்படிப்பில் சேரும் 90 சதவீத மாணாக்கர்கள் வாங்க வேண்டிய பகுதி –ஒன்று பாடப் பகுதிகள் குறித்து மட்டும் தான் எதிர்ப்புணர்வும் கண்டனங்களும் எழுகின்றன. மற்றவற்றைப் பற்றி கடவுள் நம்பிக்கை கொண்ட பக்தர்களும்சரி, அரசியல் சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை கொண்ட இயக்கவாதிகளும்சரி கவலைப்படுவதில்லை. தங்களின் சிறுகதைத் தொகுப்பு அல்லது நாவல் அல்லது உரைநடைத் தொகுப்பு பாடப்பகுதியாக ஆகாமல் போகும் நபர்கள் அல்லது பதிப்பகத்தாரின் தூண்டுதலும் இந்த எதிர்ப்புணர்வில் பின்னணியாக இருக்கும் என்பதை நான் அறிவேன். ”

    சாய்

  40. நக்கிப்பிழைக்கும் நாய்களுக்குத்தெரியுமா செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் உள்ள வித்தியாசம் ?

    “தோழரின் முழுப்பெயர் டேனியல் செல்வராஜ் என்பது சமீபத்தில் தெரியவந்த செய்தி.”

    இதுபோல இந்து பெயரில் ஒளிந்துகொண்டு இந்து கடவுள்கள் மேல் சேறு வீசும் “மாபெரும் மாற்றுமத வீரர்”களின் கழிவுகளை பாடத்திட்டத்தில் வைக்கும் அது பல்கலைக்கழகமா அல்லது கழிப்பிடமா ?

  41. மறுவாசிப்பு என்ற பெயரால் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் இம்மாதிரியான விஷமங்கள் அனைவரும் ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.

  42. மதிப்பிற்குரிய கிருஷ்ணகுமார் அய்யா அவர்களுக்கு……

    //ஆண்டாள் புஸ்தக விஷயத்தில் புஸ்தகத்தை தடை செய்ய வேண்டி ந்யாயாலயம் சென்றால் ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வாய்ப்புண்டா என்பது சந்தேகமாக உள்ளது. //

    நிச்சயம் கிடைக்காது…..ஏனெனில் அங்கும் இவர்கள் தானே இருக்கிறார்கள்…..முன்னாள் முதல்வர் திரு. பக்தவத்சலம் அவர்கள் குறிப்பிட்டதைப்ப்போல் விஷக்கிருமிகள் எங்கும் பரவி விட்டன……

    உயர் நீதிமன்றத்தில் உள்ள ” நீதி அரசர்” ஒருவர் தொடர்ந்து ஹிந்துக்கள் மனம் புண்படும் படியான தீர்ப்புகளையே வழங்கி வருகிறார்….அவர் வக்கீலாக இருந்தபோதே தீவிர ஹிந்து மத துவேஷி….. இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் சட்டத்தில் உள்ளபடி வழங்கப்பட வேண்டும் …ஆனால் இந்த” நீதியரசரோ ” தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளை தீர்ப்பில் திணிக்கிறார்…. சமீபத்தில் ஒரு வார இதழில் தனது ” சாதனைகளை ”பற்றிய கட்டுரையில் தான் ஹிந்து மதத்தை வெறுப்பதற்கான காரணங்களை குறிப்பிட்டு ,எப்படி ஈ .வே.ரா வை பின்பற்றி நாத்திகனானேன் என்று மார்தட்டியிருந்தார்….. சமீபத்தில் கூட ஒரு வழக்கின் தீர்ப்பில் தமிழ் நாட்டின் ஒவ்வொரு பள்ளியிலும் ஈ.வே.ராவின் சிலையை நிறுவ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்….. இந்திய அரசியல் சட்டம் மத நம்பிக்கையை அங்கீகரிக்கிறது……மத பழக்க வழக்கங்களில் அரசுகள் தலையிடக்கூடாதேன்று சட்டம் உள்ளது….இதன் அடிப்படையில்தான் ராம ஜென்ம பூமி தீர்ப்பு வழங்கப்பட்டது….அப்படியிருக்க வெளிப்படையாக ஹிந்து மதத்தை இழிவு செய்து பிழைப்பு நடத்திய ராமசாமியை மாணவர்கள் மீது ஏன் திணிக்க வேண்டும்,?இப்படிப்பட்டவர்கள் எல்லாம் எப்படி நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்கள்? அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளை இழிவுபடுத்திய மதச்சார்பின்மைவாதிகள் இதெல்லாம் பற்றி மூச்சு விட மாட்டார்கள்…… ஹிந்து என்றால் திருடன் என்று ஒரு மாநில முதல்வர் பொது மேடையில் பேசுவார்…. அதற்காக அவர்மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யும் நீதிமன்றங்கள் உள்ள நம் நாட்டில் ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எண்ணினால் ,அதுதான் மூட நம்பிக்கை……

  43. சென்ற பா.ஜ.க ஆட்சியில் பாடத்திட்டங்கள் திருத்தப்பட்டபோது, ‘கல்வி காவிமயமாக்கப்படுகிறது’ என்று ஓலமிட்டவர்கள் எங்கே போனார்களாம் ?

  44. // சாய் on June 29, 2012 at 6:10 pm
    ” அ.ராமசாமி கருத்துடன் உடன்படுகிறேன் “//https://ramasamywritings.blogspot.com/2012/06/blog-post_28.html”
    இங்கே அவர் இப்படி எழுதி இருக்கிறார். //

    அன்புள்ள சாய், சுட்டிக் காட்டியதற்கு நன்றி. நான் உடன்படுகிறேன் என்று கூறியது “பல ஆசிரியர்களின் படைப்புகள் அடங்கிய தொகுப்பை பாடமாக வைக்க வேண்டும்” என்ற கருத்துடன் மட்டும் தான். அவர் கூறும் மற்ற அவதூறுகளுடன் அல்ல என்பதைத் தெளிவு படுத்துகிறேன்.

  45. அன்பார்ந்த ஸ்ரீமான் சான்றோன் அவர்களே

    திறந்த மனதுடனேயே இங்கு பதிப்பிக்கப்பெறும் விவாதங்கள் வாயிலாக நமது எதிர்வினைகள் எவ்வாறு இருக்க வேண்டும் அதன் சாதக பாதகங்கள் யாவை என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    ஒன்று நிச்சயமாகப் புரிபடுகிறது. ஹிந்து மதம் பற்றிய கடவுளர் பற்றிய வக்ரமான ஆபாசமான கதைகள், புனைவுகள், ஓவியங்கள் இவைகளுக்கெதிராக ஹிந்துக்கள் கண்டிப்பாக தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தல் அவசியம். அது ஔபசாரிகமாகவே ஆயினும் சரி. இல்லாவிடில் வக்ர மனமுடையவர்கள் தாங்கள் என்ன தான் சமைத்தாலும் அதற்கு ஹிந்துக்கள் பக்ஷத்திலிருந்து ஒரு சாதாரண எதிர்ப்பு கூட கிளம்பாது என துணிவு கொள்வர்.

    ஹிந்துக்கள் எதிர் கொள்ள வேண்டிய ப்ரச்சினைகள் பல உள்ளதால் இது போன்ற எதிர்ப்புகள் நிறுவன ரீதியிலும் திட்டமிட்டபடிக்கும் இருப்பது நமது முயற்சிகளும் உழைப்புகளும் விரயமாகாமல் இருக்க வழிவகுக்கும்.

    மரத்தில் பூக்கும் அனைத்துப் பூக்களும் கனிகளாகவது இல்லை. அது போல் நமது முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிய சாத்தியம் இல்லை. ஆனால் முயல வேண்டும். அடிக்கிற இடத்தில் அடித்தால் வலிக்கும் என பழமொழி உண்டல்லவா. மன்மதன் அம்பு திரைப்படத்தில் ஸ்ரீ கமலஹாசன் அவர்களது ஆபாசப்பாட்டினை முனைந்து எதிர்த்ததில் அது திரையிடப்படாததில் அவருக்கு கணிசமான பண நஷ்டம் ஏற்பட்டிருக்கும். “நோன்பு” புஸ்தகத்தை தடை செய்ய இயலாவிடினும் இது போன்ற விஷமத்தனமான ஒரு குப்பையை மாணாக்கர்களுக்கு பயில்விப்பதை தடை செய்ய முடிந்தது கூட ஞாயமான ஒரு முயற்சிக்கு கிட்டிய வெற்றி தான்.

    “நோன்பு” புஸ்தகம் ந்யாயாலயத்தால் தடைசெய்யப்பட சாத்யக்கூறுகள் என்ன என்பது பற்றி தேர்ந்த வழக்கறிஞர்களின் கருத்து என்ன என்பது தெரியவில்லை. இதைக் கருத்துச் சுதந்திரம் என்ற கோணத்தில் அணுகாது அவதூறுக்கருத்துக்களை முனைந்து பரப்பும் விஷமிகளுக்கு சட்ட ரீதியாக தண்டனை கிடைக்க வழி உண்டா என்ற ரீதியில் அணுகி தண்டனை கிடைக்க வழி செய்தால் குப்பைகளை இலக்கியம் என சமைக்கும் விஷமிகள் எழுதுமுன் சற்று யோசிக்கவாவது செய்வர்.

    \\\\ ஹிந்து என்றால் திருடன் என்று ஒரு மாநில முதல்வர் பொது மேடையில் பேசுவார்…. அதற்காக அவர்மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யும் நீதிமன்றங்கள் உள்ள நம் நாட்டில் ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எண்ணினால் ,அதுதான் மூட நம்பிக்கை……\\\\

    கண்டிப்பாக உளச்சோர்வு கொள்ளாதீர்கள். 2G வழக்காடும் ஸ்ரீமான் சுப்ரமண்ய ஸ்வாமி அவர்களுக்கு கீழ்க்கோர்ட்டு மேல் கோர்ட்டு என எங்கெங்கு எப்படியெப்படி சோதனைகள். இருப்பினும் விடாப்பிடியாக வாதாடியதில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஜெயம் கிட்டியதல்லவா? நீதியரசர்களும் மனிதர்கள் தானே. ஹிந்துக்களென்ன முஸல்மான்களென்ன. தன் தனித்த விருப்பு வெறுப்புகள் சார்ந்த கொள்கைப்படியல்லாது நீதி சார்ந்து நீதி வழங்கும் நீதியரசர்களும் ஹிந்துஸ்தானத்தில் நிறைய உள்ளனர் என்பது மனதிற்கு நிறைவைத்தருகிறது.

    \\\\ஆனால் இந்த” நீதியரசரோ ” தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளை தீர்ப்பில் திணிக்கிறார்…. சமீபத்தில் ஒரு வார இதழில் தனது ” சாதனைகளை ”பற்றிய கட்டுரையில் தான் ஹிந்து மதத்தை வெறுப்பதற்கான காரணங்களை குறிப்பிட்டு ,எப்படி ஈ .வே.ரா வை பின்பற்றி நாத்திகனானேன் என்று மார்தட்டியிருந்தார்\\\

    இப்படி தன் தனிக்கொள்கைப்படி நீதி வழங்குவதில் பெருமிதம் கொள்ளும் நீதியரசர் உள்ளார் என்பது வருத்தமளிக்கும் விஷயம் தான். ராமஜன்மபூமி வழக்கில் நீதி சார்ந்து அதன்படி ஹிந்துக்களுக்குச் சாதகமான நீதியளித்த சிப்கத் உல்லாஹ் கான் என்ற நீதியரசர் இஸ்லாமியர் என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். முயற்சி திருவினையாக்கும்.

  46. Dear All:

    I have recd the following email as response from a friend in Dubai:

    What is the use in just removing the article? It should be replaced with atleast twice the equivalent (as atonement) giving full factual information (if not the true glorification they deserve). Then these things will not happen. Every misinformation has to be replaced with twice the equivalent of factual information. Then the nonsense will stop. Otherwise these will continue.

    Is it secular only for deformation? When it comes to giving historical facts it becomes communal. If imagination is justified then factual information should be doubly justified.

    If it’s secular to portray an imaginary Andal, is it less secular when true facts are presented. Why the govt. cannot pressurize the University to include a lesson on Andal (based on facts and not fiction). It is not communal anyway as it is just imaginary article replaced with historical information with no change in the subject matter (which is deemed to be secular – topic of Andal).

    Next time there will be some other article on some great Hindu saint or God. Again we can protest and remove the article and this will continue. The nonsense will stop only when there is a contrary effect and it will continue as long as we are fighting to retrieve the lost ground and not consider poaching into the enemy territory. It’s always a losing battle for Hindus (no gain, only loss) and they always can attempt again with no loss to themselves (only gain, no loss).

    Somebody should pressurize the present govt to include an article on Andal (removing will not suffice).

    Vivek

  47. அன்புள்ள ஜடாயு
    தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
    பல ஆசிரியர்களின் படைப்புக்கள் அடங்கிய தொகுப்பு என்பது நல்ல யோசனையே.
    ஆனால் தெளிவான , நிதானமான , உள்நோக்கமில்லாத நடுநிலையான குழு பரிந்துரைத்ததாக இருக்க வேண்டும்.நம் கோயில்களே நம் கட்டுபாட்டில் இல்லாத போது கல்வி கோயிலாக இருக்க வேண்டிய நிறுவனங்கள் இப்படி இருப்பது அதிசயம் இல்லையே?

    மேலும் அந்த புத்தகம் ஆண்டாள் என்ற பெயரை மாற்றி வேறு பெயர் போட்டு பாடத்திட்டத்தில் தான் இன்னும் உள்ளது என்று ஒரு தகவல் வேறு.
    விஷயம் தெரிந்த அன்பர்கள் விவரம் சொல்லவும்.

    இந்த ஆபாசப் புத்தகத்தை பரிந்துரைத்த பொறுப்பில் இருந்தவரும் கிருத்துவ கல்லூரியை சேர்ந்த கிருத்துவ பெண்மணி.

    பலவாறாக யார் யார் எப்படி எப்படி அழிக்கும் வேளையில் உதவலாம் என்று தெளிவாக யோசித்து ஒரு கூட்டமே அலைகிறது.

    திருமதி ஜெயஸ்ரீயின் பதிவில் . பல ஆதாரங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார். மேலே ஒருவர் இணைப்பு கொடுத்துள்ளார் .
    சாய்

  48. காம ரசம் பொங்க இவர்கள் ‘இலக்கியம்’ என்கிற பெயரில் வக்கிரம் செய்து மகிழ்ந்துகொள்ள, ஹிந்து இலக்கியங்களைத் தேடி வராமல் வேறு ஸ்வயமாகச் சிந்திக்கத் தெரிந்தால்தானே..!

    கடவுள் மறுப்பு என்பது உலகில் அநேகமாகத் தமிழகத்தில் பரப்பப்படும் அளவுக்கு எந்த இடத்திலும் காணப்படவில்லை. இருக்கட்டும். அது இவர்களின் கருத்துரிமையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். இதைத் தங்கள் மேடைகளிலும் தனிச் சுற்று இதழ்களிலும் செய்துகொண்டுதாம் இருக்கிறார்கள். அது தொலையட்டும்.

    ஆனால், இளைஞர்களின்/யுவதியர்களின் மனங்களில் வக்கிரத்தைப் பரப்பப் பொதுப் பாடத் திட்டங்களுக்குள் கூட இத்தகைய ‘கருத்துக்கள்…?!’ நுழைவது மிகக் கொடுமை.

    இந்நாட்டில் தேசப் பற்று என்பது மிகவும் குறைந்துகொண்டே வந்து கொண்டிருப்பது.

    எந்த ஒரு நாடும் தன் நாட்டுப் பெருமைகளை இந்த அளவுக்குத் தன் நாட்டினராலோ அல்லது அயல் நாட்டினராலோ இழிவாகச் சித்தரிக்க அனுமதிப்பதில்லை.

    தேசத்தின் உயர் பரிமாண அடையாளங்களைப் பட்டியலிட்டு, அவற்றுக்குச் சட்டப் பூர்வமான பாதுகாப்பு அளிக்க வேண்டியது இந்நாட்டு அரசியல் சட்டமியற்றுவோரின் பெருங்கடமையாகிறது.

    ஸ்ரீ ஆண்டாளை மட்டுமல்ல இவர்கள் பழித்தும் இழித்தும் பரப்புவது. ஹிந்து சமயம் சொல்லும் எந்த உயர்வான தத்துவத்தை அல்லது புருஷோத்தமரை/உத்தமியை இவர்கள் மதித்துப் பரப்பியிருக்கிறார்கள்?

    இவர்களால் எல்லாம் இந்நாட்டு உயர் விழுமியங்களைக் களங்கப் படுத்திட முடியாது என்றாலும் இத்தகைய கொடுஞ்செயல்கள் நல்லோர் மனங்களைப் புண் படுத்துவது உண்மை.

    நல்லோர் சாபம் இவர்களைச் சும்மா விடாது. ஆண்டாள் வடிவில் வாழ்ந்த ஆண்டவன் இத்தகைய வன் கொடுமைகளுக்கு நல்ல முடிவைத் தரட்டும்.

  49. ///‘கல்வி காவிமயமாக்கப்படுகிறது’ என்று ஓலமிட்டவர்கள் எங்கே போனார்களாம் ?///

    கல்வி இப்போது …

    பாவி மயமாக்கப்படுகிறது !

  50. இங்கு கருத்து கூறியுள்ள அனைவர்க்கும், அவர்களுக்கு எந்த மொழியில் சொன்னால் புரியுமோ அந்த மொழியில் சொல்ல அனைத்து ஹிந்து மத உணர்வாளர்களும் துவங்கினால் இவர்களின் கொட்டம் அடங்கும்.

  51. பொதுவாகவே, எந்த மூடநம்பிக்கைகளையும் பாடத்திட்டத்தில் சேர்க்காமலிருப்பது சாலவும் சிறந்தது. இதற்கு யாருமே தடையாக நிற்கக்கூடாது.

  52. \\\\\திரு. கிருஷ்ணகுமார்,
    “இராமன்” என்றோர் வில்லாதி வில்லன் இருந்தான், அவன் தன் கர்ப்ப மனைவி சீதாவைப் பரிவின்றிக் காட்டுக்கு அனுப்பினான் என்பதை நம்பி நான் “சீதாயணம்” என்றோர் நாடகத்தைப் பழைய திண்ணைப் பகுதியில் முன்பே எழுதி யுள்ளேன்.
    https://jayabarathan.wordpress.com/seethayanam/பொறுமை இருந்தால் படித்துப் பாருங்கள்.\\\\

    மதிப்பிற்குறிய விக்ஞானி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் எழுதிய ஒரு வ்யாசத்திற்கு எதிர்வினையாக “திண்ணை” தளத்தில் நான் சமர்ப்பித்திருந்த ஒரு வ்யாசத்தின் விவாதத்தினூடே அன்பர் அவர்கள் மேற்கண்ட தன் நாடகத்தை பரிந்துரைத்திருந்தார்.

    நாடகத்தின் கருப்பொருளை விவரிக்கும் முறையில் மதவெறுப்பு தென்பட்டது.

    இங்கு கருத்துப்பகிரும் வாசகர்கள் இந்த நாடகத்தை வாசித்ததுண்டா?

    இந்த வ்யாசத்தில் விவாதிக்கப்படும் “நோன்பு” சிறுகதையுடன் ஒத்ததாக இந்த நாடகம் கருதப்படலாமா?

  53. prasath on June 27, 2012 at 1:24 pm

    கருத்து சுதந்திரம் வரவேற்க பட வேண்டியது … இதை ஏற்று கொள்வதும் , ஒதுக்குவதையும் மாணவர்களிடம் விட்டுவிடுவோம் ….
    கருத்து சுதந்திரம் எனேக்குமுண்டா? அப்படிஎன்றால் உங்க வீட்டில் உள்ள பெண்களை வேசி என்றால் சும்மா இருப்பீர்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *