காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்த மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை 24.5.2012-ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது. 176 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் தெரிவித்துள்ள பரிந்துரைகளால், மீண்டும் காஷ்மீர் பற்றிக் கொள்ளக் கூடிய ஆபத்து இருப்பதாக பலரும் கருதுகின்றனர். பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டு 36 மணி நேரம் கழித்து அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இதன் மீது விவாதம் நடத்தப்பட்டால், அரசுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த அறிக்கை காலம் தாழ்த்தி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் பல் வேறு காலங்களில் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பெரு முயற்சிகளை எடுத்து வந்தாலும் அது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை, பல நேரங்களில் அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன.

13.10.2010-ம் தேதி காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக மத்திய அரசு திலீப் பட்கோங்கர், ராதா குமார், எம்.என். அன்சாரி ஆகிய மூவர் கொண்ட மத்தியஸ்தர் குழு(interlocutors)வை நியமித்தது. நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினர் மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் உள்ள சுமார் 700 குழுக்களிடம் நேரிடையாகவே கண்டு, அவர்கள் தெரிவித்த  கருத்துக்களை ஆய்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார்கள். 6,000க்கும் அதிகமான மக்களைக் கண்டு பேசியதாகவும், 1,000 ஸர்பஞ்சுகளையும்(Sarpanch & Panches) கண்டு பேசியதாகவும், இதற்கிடையில் அதிக அளவில் பொதுமக்கள் கலந்து கொண்ட மூன்று கூட்டங்களையும் நடத்தி கருத்துக்களைத் தெரிந்துகொண்டதாகத் தங்களது அறிக்கையின் துவக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். இவர்களின் துவக்க உரையில் சில கேள்விகளுக்கு இடம் கொடுக்கும் விதமான கருத்துக்கள் அமைந்துள்ளன; 65 ஆண்டுகால காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது மிகவும் சிக்கலான கேள்வியாகும்.சூழ்நிலையை ஆய்வு செய்த கால கட்டம் (Situation on the ground October 2010 – August 2011) பற்றிய கருத்தையும், மத்தியஸ்தர் குழு பரிந்துரை செய்துள்ள சில விஷயங்களையும் ஆய்வு செய்தால், பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும், இன்றைய தினம் வரை காஷ்மீர் பிரச்சனையின் உண்மையை மக்கள் முன் வைக்க ஆளும் காங்கிரஸ் கட்சி முன் வரவில்லை. இது பற்றி பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் எடுத்துக் கூறும் கருத்துக்களை, காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற கட்சியினராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிகளும் வேறு பிரச்சனகளை முன் வைத்து காஷ்மீர் பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறார்கள்.எனவே மத்தியஸ்தர் குழுவின் பரிந்துரையில் காணப்படும் குறைபாடுகளையும், அதன் காரணமாக எழும் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் எனில், காஷ்மீர் மாநிலத்தில் நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே பல்வேறு சம்பவங்களை சுட்டிக் காட்டி மத்தியஸ்தர் குழுவின் பரிந்துரை இந்த நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாத சூழ்நிலை

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு விடுதலை அடைந்தது. விடுதலை பெற்ற சம்பவத்தையே கூட இன்னும் பல்வேறு தரப்பினர் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. இந்திய) நாடு விடுதலை பெறுவதற்கு இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. 18.7.1947ந் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பெயர் இந்திய விடுதலைச் சட்டம் (Indian Independence Act)-1947 என்பதாகும். இந்த சட்டத்தின் படி ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளுக்கு விடுதலை கொடுக்கப்பட்டு அது இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன, மீதமுள்ள 565 சமஸ்தானங்கள் ஒன்று இந்தியாவுடன் இருக்க வேண்டும், அல்லது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்பதுதான் சட்டத்தின் சாரம்சமாகும். 1947 ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15ந் தேதி இந்தியாவும் விடுதலை அடைந்தன. ஆனால் இந்த விடுலையின் போது இரு நாடுகளின் எல்லைகளை வரையறுப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. பொதுவாக பஞ்சாப் , வங்காளம் இரண்டு பகுதிகளும் பிரிக்கப்படுவதாகக் கருத்து நிலவியது.

மிகவும் முக்கியமான விஷயம் நாடு இரண்டாகப் பிரிந்த போது இரு நாட்டு எல்லைகள் இறுதி செய்யப்படவில்லை. 1947ம் ஆண்டு ஜீன் மாதம் 3-ம் தேதி வெளியான நாட்டின் பிரிவினை குறித்த முதல் அறிவிப்பில் இரு நாட்டு எல்லைகள் இறுதி செய்ய, இரண்டு எல்லைக் கமிஷன்கள் அமைக்கப்படுவதாகவும், இந்தக் கமிஷனில் நான்கு நீதிபதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதாகவும், இவர்களில் இருவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள். மற்ற இருவர் முஸ்லீம் லீகினால் தேர்வு செய்யப்படுபவர்கள். மேலும் இதில் ஐந்தாவதாக இங்கிலாந்து சார்பாக நடுநிலை வழக்குரைஞர் ஒருவரும் நியமிக்கப்படுவார். . இந்தக் குழுவினர் எல்லைகளை வரையறுத்து இங்கிலாந்து அரசின் அனுமதிக்காக அனுப்பபட்டு, அந்த நாட்டின் ஒப்புதல் பெற்ற பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்கள். ஆனால் நாடு பிரிந்த போது எல்லைகள் வரையறை செய்யப்படாத காரணத்தால் காஷ்மீர் அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது.

முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகள் எல்லாம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை எல்லைக் கமிஷன்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டன. இதன்படி எல்லை மாகாணமான பஞ்சாப் பிரிக்கப்பட்டால், ஜம்மு காஷமீருக்கு செல்லும் பிரதான சாலைகள், ரயில்வே லைன்கள் போன்ற அனைத்தும் பாகிஸ்தானுடன் சென்றுவிடும் என்பதைக் கவனிக்க வேண்டும், இதைக் கருத்தில் கொண்டால் ஹரிசிங் ஆண்ட நிலப்பகுதியைப் பாகிஸ்தானுடன் இணைத்தால் தான் பொருள் போக்குவரத்து வர்த்தகம் என பல விஷயங்களில் காஷ்மீர் கூடுதல் பங்களிக்கும். ஆனால் இந்தியாவுடன் சேர்த்தால், அதாவது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் உள்ளிட்ட மூன்று தாலுக்காகள் சென்று விடும். இது தான் காஷ்மீர் மாநிலத்திற்கு இந்தியாவிலிருந்து செல்லும் ஒரே வழி, இந்த வழியும் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டால் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் காஷ்மீருக்குச்  செல்ல இயலாது என்பதைக் காஷ்மீர் மகாராஜா உணர்ந்த காரணத்தால், உடனடியாக இந்தியாவுடன் இணையவில்லை என்பதை எடுத்துக் கூறக் கூட எவரும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை பலர் மறைத்து வேறு காரணங்களை எடுத்துக் கூறி பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுபவர்களும் உள்ளனர்.

இச் சூழ்நிலையில் காஷ்மீர் மகாராஜா தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று அதாவது குர்தாஸ்பூர் உட்பட மூன்று தாலுக்காக்கள் எந்தப் பகுதியில் இணைகின்றன  என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் முடிவு எடுக்கலாம் என்பதால் ஒரு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாட்டுடனும் Standstill agreement  என்ற உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டிருந்தாலும், காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்க வேறு வழிகளில் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்;. இதற்காக இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம், பாகிஸ்தான் சார்பில் ஷேக் அப்துல்லாவைத் தொடர்பு கொண்ட ஆட்கள் மூலமாக, ”காஷ்மீர் இணைப்பு விஷயத்தில் உடனடியாக முடிவு தெரிய வேண்டும் என அவசரம் காட்ட வேண்டாம். முன்னர் ஒப்புக்கொண்டுள்ளபடி, இரு நாடுகளுடனும் ஏற்கெனவே உள்ள நிலையைத் தொடர்வதுதான் இப்போதைக்குத் தேசிய மாநாட்டுக் கட்சி உட்பட அனைவரது திட்டமும், எனவே இன்னும் கொஞ்ச காலம் அவகாசம் கொடுங்கள் இணைப்புக் குறித்து முடிவெடுக்கும் போது மீண்டும் சந்தித்துப் பேசுவோம்” என தகவல் சொல்லியனுப்பினார்கள் என்ற செய்தியும் வெளியே வந்தது. தகவல் சொல்லி அனுப்பிய பாகிஸ்தான், ஷேக் அப்துல்லாவின் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தது. குறிப்பாகக் கூறவேண்டுமானால் இந்தியாவின் ஏஜெண்ட் என ஷேக் அப்துல்லாவைப் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் வர்ணித்தார். ஏனவே பாகிஸ்தானியச் சிந்தனை வேறு விதமாக அமைந்தது.

இந் நிலையில் இப்போது இருக்கும் நிலையே தொடரும் (Standstill agreement) என மன்னர் அனுப்பிய ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு அதற்கு மாறாக நடக்கத் துவங்கினார் ஜின்னா. திடீர் என ஒரு நாள் காஷ்மீருக்கு வரும் அனைத்து போக்கவரத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன, இதனால் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்திற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் குறிப்பாக உணவுப் பொருட்கள், பெட்ரோல், உப்பு உள்ளிட்ட அன்றாடத் தேவைக்கான அனைத்துப் பொருட்களும்

Maharaja Hari Singh

பாகிஸ்தானிலிருந்து காஷ்மீர் வரும் சாலையில் தான் வரவேண்டும், இதைச் துருப்புச் சீட்டாக காஷ்மீர் ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்க முயற்சி எடுத்தார்கள்.

இந் நிலையில் அக்டோபர் மாதம் 15ந் தேதி காஷ்மீர் பிரதமராக இருந்த ராமச்சந்திர காக் என்பவர் நீக்கப்பட்டு, பஞ்சாப் மாநிலத்தின் நீதிபதியாக இருந்த மெஹர்ச் சந்த மகாஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். ராமசந்திர காக் என்பவரின் மனைவி இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் ,பாகிஸ்தானுக்கு ஆதரவாக , காஷ்மீர் சமஸ்தானத்தை இணைக்க முயற்சி மேற்கொண்ட சதித் திட்டம் தெரிய வந்ததால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்றால் இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கு வர, போகத் தடையற்ற சாலைப் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையை மகாராஜா விதித்தார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் மெஹர்ச் சந்த மகாஜன் என்றால் மிகையாகாது.

ஆனால் பாகிஸ்தான் அரசு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மெஹர்ச் சந்த மகாஜனிடம் மரியாதை நிமித்தமாக பேச பிரதமர் லியாகத் அலிகான் தனது நம்பிக்கைக்குரிய ஆட்களை அனுப்பி வைத்தார். பாகிஸ்தானின் நய வஞ்சகச் செயலை நன்கு அறிந்த காரணத்தால் மெஹர்ச் சந்த மகாஜன் அவர்களைச் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். இந்தச் சூழ்நிலையில் பேச்சு வார்த்தைகள் மூலம் காஷ்மீர் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானுடன் இணைக்க இயலாது என்பதை நன்கு தெரிந்து கொண்ட ஜின்னா மாற்று வழியில் காஷ்மீரை அடையத் திட்டம் தீட்டினார். தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட சற்றுக் காலதாமதம் செய்தார்கள். எனவே இந்திய அரசாங்கம் காஷ்மீர் பிரதமரிடம் இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக சில விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும், எனவே தாங்கள் டெல்லி வருமாறு அழைத்தனர். பிரதமர் வர இயலவில்லை என்றால் வேறு அமைச்சரைக் கூட அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் பாகிஸ்தானுக்குத் தெரிந்ததின் காரணமாக, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மத்தியில் இந்தியாவின் மீது சந்தேக எண்ணங்கள் எழ துவங்கின. அதாவது இந்தியா மாற்று வழியில் காஷ்மீர் சமஸ்தானத்தை இணைப்பதற்கு வழிகளை காண முயலுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி ஆங்கிலேயே அரசுக்குக் கடிதம் எழுதினார்கள். இந்தத் திட்டத்தின் விளைவு தான் மூர்க்கத்தனம் கொண்ட பழங்குடி மலைவாழ் மக்களைத் தூண்டி விட்டு காஷ்மீர் மீது தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டார். (They attacked the princely State of Jammu and Kashmir in the guise of tribal Pathans) இதன் காரணமாக 20.10.1947ந் தேதி பழங்குடி மலைவாழ் பத்தான்கள் காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த துவங்கினார்கள்.

ஒரு புறம் பழங்குடியினரான பத்தான்களைத் தாக்குதல் நடத்தத் தூண்டி விட்டாலும், ராவல்பிண்டியில் உள்ள இஸ்லாமியர்கள் கலவரம் தொடங்க வேண்டும் என்பதற்காகவே காஷ்மீரில் ஊடுருவ எல்ல முஸ்தீபுகளும் செய்யப்பட்டன. 1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ந் தேதி காஷ்மீர் சமஸ்தானத்தில் ராணுவ பொறுப்பாளரிடமிருந்து ஒரு அறிக்கை பெறப்பட்டது.  அந்த அறிக்கையில் “On  2 and 3 September armed Muslim residents, mainly of Rawalpandi district in Pakistan had infiltrated into the State” மேற்படி அறிக்கை கிடைத்தவுடன் காஷ்மீர் சமஸ்தானத்தின் பிரதம மந்திரி மேற்குப் பஞ்சாப் பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் “on receipt of this report the Prime minister of Kashmir sent prompt telegram to the Chief Minister of West Punjab on 4th September requesting him to take prompt action”  ஆனால் உண்மை இவ்வாறு இருக்க மேற்கு பஞ்சாப் முதல்வர் இந்த செய்தியை தவறு என கூறினார். இந்த ஊடுருவல் சம்பந்தமாக பல தந்திகள் கொடுத்தாலும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியான மேற்கு பஞ்சாப் அரசு மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. இச் சூழ்நிலையில் காஷ்மீர் சமஸ்தானம் பாகிஸ்தான் அரசுக்கு விடுத்த எச்சரிக்கையில் “  ஊடுருவல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், காஷ்மீருக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதையும் நீக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் அண்டை நாட்டை உதவிக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படும்” (But it did not change the attitude of Pakistan, and ultimately the Government of Kashmir conveyed to Pakistan that if raids were not stopped and blocks of essential commodities lifted immediately it would be left with no alternative but to seek help with others) எனக் கூறப்பட்டது. இந்த செய்தியின் மூலம் பாகிஸ்தான், காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவின் உதவியை நாடப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டார்கள். இந்த உண்மை வரலாறு மறைக்கப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீரின் வடக்கு திசையில் இருந்து மலைவாழ் பழங்குடி முரட்டுக் கூட்டம் ஒன்று ஆயுதங்களுடன் பாகிஸ்தான் எல்லையைக் கடந்து, காஷ்மீருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. பாகிஸ்தான் அரசின் இருட்டறை ஆதரவோடு நடந்த இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் குல்மர்க் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முரட்டுக் கூட்டம் கிளம்பும் போதே, இந்த ஆண்டு ரம்ஜான் திருநாளை காஷ்மீரில் கொண்டாடுவோம் அதற்குள் ஸ்ரீநகரைக் கைப்பற்றுங்கள் என்று வாழ்த்து சொல்லியே ஜின்னா அனுப்பி வைத்ததாகத் தகவல்கள் உண்டு. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணப் பகுதியிலிருந்து திரட்டப்பட்ட இந்த முரட்டுக் கூட்டத்திற்கு அக்பர் கான் என்பவன் தலைமை தாங்கினான்.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாறு

1947ம் வருடம் அக்டோபர் மாதம் 20 முதல் 27ந் தேதி வரை காஷ்மீர் வரலாற்றில் மிகவும் முக்கியமான தேதியாகும். அக்டோபர் மாதம் 22ந் தேதி அதிக எண்ணிக்கை கொண்ட மலைவாழ் பழங்குடிப் பதான் கூட்டம் ஆயுதங்களுடன் முஸபராத்பாத் நகருக்கு அருகில் உள்ள Abbottabad சாலை வழியாக காஷ்மீருக்குள் நுழைய துவங்கினார்கள். இந்த நிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமானால் காஷ்மீர் சமஸ்தானத்தின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. காஷ்மீர் அரசிடம் உள்ள படையினரும் போதுமானதாக இல்லை, இதனால் செப்டம்பர் மாதம் 24ந் தேதி இந்தியாவின் உதவியை நாடுவது என மகாராஜா முடிவு செய்தார்.

காஷ்மீர் மகாராஜாவின் ராணுவ உதவி கோரிக்கை குறித்து அக்டோபர் மாதம் 25ந் தேதி இந்தியாவின் இராணுவ குழு இதுபற்றி விவாதித்தது. இந்த கூட்டத்திற்கு மவுண்ட்பேட்டன் பிரபு தலைமை தாங்கினார். இறுதியாக காஷ்மீர் சமஸ்தானத்திற்குள் இந்தியா நுழைய கூடாது என்றும், ஆனால் காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைவதாக சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டால் , இராணுவ உதவி அளிக்கலாம் என்று மவுண்ட்பேட்டன் கூறினார்(Lord Mountbatten final advise was that Indian troops should not enter into an independent country but should do so only when the State had acceded to India) . இதன் அடிப்படையில் இந்தியாவின் சார்பாக வி.பி.மேனன் உடனடியாக ஜம்மு சென்று மகாராஜாவின் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 26ந் தேதி முறைப்படி இணையும் ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார். இந்த இணைப்புக்கு இந்தியாவின் சார்பாக மவுண்ட்பேட்டன் தனது ஒப்புதலை அளித்தார்.இதன் பின்னர் உடனடியாக ஸ்ரீநகருக்கு இந்திய ராணுவம் விரைந்து சென்று மலைவாழ் பழங்குடிக் கூட்டத்தினரைத் தடுத்து நிறுத்திக் காஷ்மீர் காக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ந் தேதி முறைப்படி காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இணைப்பில் ஆர்.எஸ்.எஸ். பங்கு

மகாத்மா காந்தியடிகளும், சர்தார் பட்டேலும் காஷ்மீர் சமஸ்தானம் இந்தியவடன் இணைய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள். பல முறை இருவரும் மகாராஜாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய போதும் இவர்களின் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் மகாராஜா கொடுக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீர் சமஸ்தானப் பிரதமராக பஞ்சாப் உயர் நீதி மன்ற நீதிபதி மெஹர்சந்த் மகாஜன் நியமிக்கப்பட்ட பின், சர்தார் பட்டேல் மெஹர்சந்த் மூலம் இப்பிரச்சனையை முன் வைத்தார். இதற்காகவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜிக்கு ஒரு தகவல் மெஹர்சந்த் மகாஜன் மூலம் கொடுத்த அனுப்ப பட்டது. இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டு மகாராஜாவை சந்திக்க முற்பட்டாh ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். பஞ்சாப் காஷ்மீர் பிராந்த சங்க சாலக் ஸ்ரீ மாதவ ராவ் மூளே என்பவர் மகாராஜா சந்தித்து இணைப்பு சம்பந்தமாக பேசியதும், அதற்கு மகாராஜா எவ்வித பதிலும் கொடுக்கவில்லை. ஆகவே பிரதமர் மெஹர்சந்த் மகாஜன் மூலம் செய்யப்பட்ட ஏற்பாட்டின் படி 18.1.1947ந் தேதி மகாராஜாவை குருஜி கோல்வால்கர் சந்தித்து, காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின் போது மகாராஜா குறிப்பிட்டவை மிகவும் முக்கியமான விஷயமாகும். மகாராஜாவின் வார்த்தைகளில் குறிப்பிட வேண்டுமானால் “My state if fully dependent on Pakistan. All routes passed through Sialkot and Rawalpindi. Lahore is my airport. How can I have relations with India?“  இந்த கேள்விக்கு குருஜி நம்பிக்கை ஏற்படும் விதமாக பேசியதின் காரணமாக மகாராஜாவின் மனது இந்தியாவுடன் இணைவது என்பதில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உண்மையை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறைத்தது.

இணைப்பிற்குப் பின் நடந்த நிகழ்வுகள்

காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த பின் பிரச்சனைகள் பல்வேறு வடிவத்தில் தலை தூக்க துவங்கியது. இணைப்பிற்கு முன் பண்டித நேருவிற்கும் ஷேக் அப்துல்லாவிற்கும் நடந்த ரகசிய சந்திப்புகள், இதன் காரணமாக எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகாரங்கள் கொடுக்கும் விதமாக அரசியல் ஷரத்து 370, காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி அரசியல் சட்டம் போன்றவற்றை கொடுத்ததில் விளைவு, காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. இநத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்,

காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டும் என பல்வேறு குழுக்கள் நியமித்து பரிந்துரை செய்த பின்னும் கூட பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்பது வேதனைக்குரியது.

மத்தியஸ்தர் குழுவின் பரிந்துரைகள் (Interlocutors)

  1. அரசியல் ஷரத்து 370ல் காணப்படும் “தற்காலிமானது” என்ற வார்த்தையை நீக்கி விட்டு,  “சிறப்பான” என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் (Delete the word ‘Temporary’ from the heading of Article 370 . Replace it with the word ‘Special’)
  2. பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாட்டு கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்
  3. 1953ம் ஆண்டுக்கு முந்தைய நிலை கொண்டு வர, 1953க்கு பின் மத்திய அரசால் காஷ்மீர் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் மறு பரீசிலனை செய்ய அரசியல் அமைப்பு ஆய்வு குழு ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும், இந்த பணிகளை ஆறு மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும்
  4. மாநில அரசு, எதிர்கட்சியினரை கலந்து ஆலோசித்து 3 பெயர்களை பரிந்துரை செய்யும், பரிந்துரை .செய்யப்படும் பெயர்களில் ஒருவரை மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமிக்க வேண்டும்
  5. ஆளுநர் மற்றும் முதல்வர் என்பதற்குறிய உருது பெயரை மாநில நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும்
  6. அரசியல் ஷரத்து 356ன் படி சட்ட மன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இருப்பதை மாற்றி சட்ட மன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது, சட்டமன்ற செயல்பாடுகள் நிறுத்த வைக்கவும், மூன்று மாதத்திற்குள் சட்ட மன்ற தேர்தலை நடத்தவும் அதிகாரம் இருக்க வேண்டும்

மத்தியஸ்தர் குழுவினரின் பரிந்துரையில் முக்கியமான அம்சங்கள் காஷ்மீர் மாநிலத்திற்கு எனக் கொடுக்கப்பட்ட அரசியல் ஷரத்து 370ஐ நிரந்தரமாக்க, தற்காலிகமானது என்ற வார்த்தையை நீக்கிவிட்டு சிறப்பு அதிகாரம் என மாற்ற வேண்டும். இரண்டாவது 1953க்கு முந்தைய நிலை அங்கு கட்டாயம் பின்பற்ற வேண்டும், கடந்த 60 ஆண்டுகளாக அங்குள்ள நிலைமையை மறு ஆய்வு செய்ய வேண்டும். மூன்றாவதாக மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கின்ற ஹுரியத் மாநாட்டுக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது முக்கியமான பரிந்துரையாக காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் இந்த மூன்று பரிந்துரைகளும் இந்த நாட்டின் ஒற்றுமைக்கும், இறையான்மைக்கு பங்கம் ஏற்படுத்தும்விதமாக அமைந்துள்ளது என்பதைப் பற்றி விரிவாக பார்க்க வேண்டும்.

அரசியல் ஷரத்து 370

 ( Delete the word ‘ temporary’  ) அரசியல் ஷரத்தில் உள்ள “தற்காலிகமானது”  என்பதை நீக்கி விட்டுச் “ சிறப்பு “ (‘Special‘) என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். இந்த ஷரத்து கொண்டு வரும் போது பாராளுமன்றத்தில் இது பற்றிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து பேசிய அன்றைய பிரதம மந்திரி நேரு “காலப்போக்கில் இந்த ஷரத்து ரத்து செய்யப்படும், இந்த ஷரத்து தற்காலிகமானது “ என்றார். இந்த ஷரத்து கொண்டு வரும் போது, அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கார் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததும் இல்லாமல், இந்த ஷரத்தின் மூலம் மீண்டும் நாடு ஒரு பிரிவினையை சந்திக்கும் என்று தெரிவித்தார் . எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகாரங்கள் இந்த ஷரத்தின் மூலம் காஷ்மீர் மாநிலத்திற்குக் கிடைக்கிறது. ஆகவே இந்த ஷரத்து 370 ரத்து செய்யப்பட வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாகும். ஆனால் அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு, அரசியல் ஷரத்து 370 ல் உள்ள தற்காலிகமானது என்ற வார்த்தையை மாற்றிச் சிறப்பு என்று மாற்ற வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்கள். ஏன் இந்த ஷரத்து ரத்து செய்ய வேண்டும் என்பதற்குச் சில பிரிவுகளைப் பார்த்தால் நன்கு புரியும்.

இந்திய அரசியல் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது மட்டுமில்லாமல், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு என தனியாக ஒரு அரசியல் அமைப்பு சட்டம் (Constitution). இந்த ஷரத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி இவர்கள் செயல்பட முடியும், மற்ற எந்த மாநிலத்திற்கும் இம்மாதிரியான தனி அரசியல் அமைப்பு சட்டம் கிடையாது. காஷ்மீர் மாநிலத்திற்கு என ராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு என மூன்று விஷயங்களை தவிர மற்ற விவகாரங்களுக்கு என இந்திய பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது. காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே சட்டம் இயற்ற முடியும். பாராளுமன்றம் இயற்றும் மசோதாக்கள் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டமாக அமுலுக்கு வரும், ஆனால் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட எல்லா மசோதாகளும் காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் ஒப்புதல் ;பெற்றால் தான் அந்த மாநிலத்தில் சட்டமாக்கப்படும் என்பது எந்த மாநிலத்திற்கும் இல்லாத உரிமையாகும். இது சரியா என்பது தான் கேள்வி.

அரசியல் ஷரத்து 370ன் படி காஷ்மீர் மாநிலத்திற்கு எனத் தனி அரசியல் அமைப்பு சட்டம் இருப்பதால், பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுகிறது. இந்திய குடிமகன் எந்த மாநிலத்திலும் சொத்துக்கள் வாங்க இயலும், குடியிருக்க உரிமை உண்டு, குடியுரிமை பெறுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் ஷரத்து 370ன் படி 1947 ஆகஸ்ட் 15க்கு பின் வந்தவர்கள் எவருக்கும் இந்த உரிமை கிடையாது. அதாவது காஷ்மீர் மாநிலத்தில் குடியேறிய எவருக்கும் அவர் குடியரசுத் தலைவராக இருந்தாலும் இந்த மூன்று உரிமையும் கிடையாது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு குடியுரிமை உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த பெண்கள் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குச் சொத்து உரிமையும் கிடையாது. காஷ்மீர் மாநிலத்தில் டாக்டர் ரூபியான நஸரூல்லா(Dr.Rubeend Nasrullah) என்பவர் மருத்துவ மேல்படிப்பிற்காகக் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார். கல்லூரி நிர்வாகம் அவரின் நிரந்திர இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்கக் கோரியது. ஆனால் அரசு அவருக்கு நிரந்தர இருப்பிட சான்றிதழ் தற மறுத்துவிட்டது, ஏன் என்றால் திருமதி ரூபியான நஸரூல்லா காஷ்மீர் மாநிலத்தைச் சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் கொடுக்க இயலாது என்று தெரிவித்து விட்டார்கள். 6.2.1985ந் தேதி உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் ஷரத்து 226ன் படி எனக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரவில்லை என்பது அரசியல் ஷரத்து 370ன் கடுமையை தெரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட அரசியல் ஷரத்தில் தற்காலிகமானது என்று இருக்கும் போதே இவ்வளவு கொடுமை நடக்கிறது என்றால், சிறப்பு அதிகாரம் கொண்டது என மாற்றம் செய்யப்பட்டால் காஷ்மீர் பிரிவினையைக்   கோராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

மிகவும் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஒரு மசோதா விவாதித்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டால், குடியரசு தலைவர் எத்தனை முறை வேண்டுமானலும் திருத்தம் செய்ய கோரி மாநிலத்திற்க திருப்பி அனுப்பலாம். துமிழகத்தில் நில உச்ச வரம்பு மசோதாவிற்கு ஆறு முறை திருத்தம் செய்ய வேண்டி திருப்பி அனுப்பட்டது. ஆனால் காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஒரு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு சென்றால் அனுமதி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இரண்டாவது முறையாக காஷ்மீர் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து விட்டால், குடியரசு தலைவரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக்கப்படும். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஷேக் அப்துல்லா 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ந் தேதிக்கு முன் பாகிஸ்தான் சென்ற காஷ்மீர் முஸ்லீம்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதுடன், அவர்களின் பூர்வீகச் சொத்தும் மீட்டுக் கொடுக்கப்படும் என்ற வகையில் Resettlement Act-ஐக் கொண்டு வந்ததை மறந்து விடக்கூடாது.

அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு அரசியல் ஷரத்து 370 ல் உள்ள தற்காலிகமானது என்பதை நீக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக அரசியல் ஷரத்து 371, 371A , 371B , 371C , போன்ற சட்ட பிரிவுகளை காட்டி தங்களது கோரிக்கைக்கு வலு சேர்க்கிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள சட்டப் பிரிவுகள் மகாராஷ்ட்ரா, குஜராத், நாகாலாந்து, மனிப்பூர், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் உள்ள சில மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக மாநில ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு என்பதை ஷரத்து 370வுடன் ஒப்பிடுவது மிகப் பெரிய தவறாகும்.ஆகவே மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் உள்ள இந்த ஷரத்து 370க்கு சிறப்பு அதிகாரம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருப்பது வேடிக்கையானது.

6 Replies to “காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை”

  1. \\\இந்த ஷரத்து கொண்டு வரும் போது, அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கார் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததும் இல்லாமல், இந்த ஷரத்தின் மூலம் மீண்டும் நாடு ஒரு பிரிவினையை சந்திக்கும் என்று தெரிவித்தார் .\\\

    இந்த வ்யாசத்தில் பேசப்படாத ஆனால் இந்த ஷரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இன்னொரு பெரும் தேசத்தலைவர் அமரர் பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள்.

    முதலில் ஹிந்து மஹாசபா தலைவராக இருந்து பின்னர் பாரதீய ஜனசங்கத்தைத் தோற்றுவித்த பெருந்தகை இவர். “ஹிந்துத்வம்” என்ற அரசியல் கோட்பாட்டுக்கு வடிவமளித்த முன்னோடிகளில் ஒருவர்.

    பண்டித நேரு இவரை தாத்காலிக மந்த்ரி சபையில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டார். ஆனால் 1950ம் வருஷத்திய நேரு லியாகத் அலி தில்லி ஒப்பந்தத்தினை ஏற்காது மந்த்ரி சபையிலிருந்து ராஜினாமா செய்தார் ஸ்ரீ முகர்ஜி அவர்கள். இந்த தில்லி ஒப்பந்தம் தான் பின்னர் ஹிந்துஸ்தானத்துக்கு தீராத் தலைவலி தந்த தந்து கொண்டிருக்கும் “சிறுபான்மை சமூஹ அதிகாரங்கள்” என்ற அபாயகரமான கோட்பாட்டின் ஊற்றுக்கண். ஹிந்துஸ்தான பிற்கால அரசியலின் முக்யமான பகடைக்காய் ஆன கோட்பாடு இந்த “சிறுபான்மை சமூஹ அதிகாரங்கள்” என்றால் மிகையாகாது. ஆனால் சிறுபான்மை என்று ஏதேனும் ஒரு ஜந்து இருந்தால் தானே ப்ரச்சினையே என்ற படிக்கு பாக்கி ஸ்தானில் அரசாங்கமே இவர்களை அழித்தொழிக்கும் பணியை முல்லா மௌலவிகள் மூலம் ஷரியத் வழியே செய்தது இன்னும் செய்து வருகிறது.

    \\\ இணைப்பிற்கு முன் பண்டித நேருவிற்கும் ஷேக் அப்துல்லாவிற்கும் நடந்த ரகசிய சந்திப்புகள்,\\\

    காந்தியடிகளின் செல்லப்பிள்ளையான பண்டித நேருவிற்கும் ஷேக் அப்துல்லாவிற்கும் இடையே நடந்த ரகசிய சந்திப்புகளின் விளைவாக இந்திய தேசிய (தேசவிரோத) காங்க்ரஸ் கட்சி கஷ்மீர் ப்ராந்தியத்திற்கு நினைக்கவொண்ணா அதிகாரங்களைக் கொடுக்க முன்வந்தது. கஷ்மீருக்கென தனிக்கொடி மற்றும் ப்ரதமமந்த்ரி போன்ற சலுகைகளைக் கொடுக்க காங்க்ரஸ் தயாராக இருந்தது. ஹிந்துஸ்தானத்தின் ராஷ்ட்ரபதியாகவே இருப்பினும் கஷ்மீரத்தின் ப்ரதம மந்த்ரியின் அனுமதியில்லாது கஷ்மீரில் நுழைய இயலாது என்ற அளவிற்கு இந்திய தேசிய (தேசவிரோத) காங்க்ரஸ் கட்சி விட்டுக்கொடுக்க தயாராய் இருந்தது.

    இதைக்கடுமையாக எதிர்த்த ஸ்ரீ முகர்ஜி அவர்கள், “ஏக் தேஷ் மே தோ விதான், தோ ப்ரதான் ஔர் தோ நிஷான் நஹின் சலேகா நஹின் சலேகா” என்று முழங்கினார். ஒரே தேசத்தில் இரண்டு அரசியல் சாஸனம் இரண்டு ப்ரதம மந்த்ரி இரண்டு தேசிய சின்னங்கள் இருக்கலாகாது என்று முழங்கிய இவர் வெறும் பேச்சோடு இல்லாது என் தேசத்தில் ஒரு பகுதிக்குச் செல்ல எனக்கு அனுமதி தேவையில்லை என அனுமதி பெறாது கஷ்மீருக்கு 1953 மே மாதம் சென்றார். அங்கு சிறைவைக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்தார்.

    சட்ட திட்டங்களுக்கு உட்படாது இவரின் சவம் ப்ரேத பரிசோதனைக்குக் கூட உட்படுத்தப்படவில்லை. அதிகாரத்தில் இருந்த ப்ரதம மந்த்ரி மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (பண்டித நேரு லண்டன் சென்ற படியால் அதிகாரத்தில் இருந்த) இவர் சவத்தை தில்லிக்கு கொண்டு வர அனுமதி மறுத்தார். ஆதலால் இவரது சவம் கொல்கத்தாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

    2004ம் வருஷம் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பொதுமேடையிலேயே ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி கொல்லப்பட்டது பண்டித நேருவின் சதியால் என்று குற்றம் சாட்டினார்

    https://articles.timesofindia.indiatimes.com/2004-07-07/india/27144866_1_nehru-j-k-conspiracy

    ஆனால் இப்பெருமகனாரின் உயிர்த்யாகம் இந்திய தேசிய (தேசவிரோத) காங்க்ரஸ் கட்சி என்ற ஒட்டகத்தை மலையிலிருந்து இறக்கியது. காஷ்மீருக்கு காங்க்ரஸ் கொடுக்க எண்ணியிருந்த வானளாவிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. கஷ்மீருக்கெனத் தனியான கொடி, ப்ரதமமந்த்ரி, தேசச்சின்னம் போன்ற அவமானகரமான நிலைப்பாடு தவிர்க்கப்பட்டது.

    \\\அரசியல் ஷரத்து 370ல் காணப்படும் “தற்காலிமானது” என்ற வார்த்தையை நீக்கி விட்டு, “சிறப்பான”\\\

    பழைய புஸ்தகங்கள் அதனுள்ளேயே இருந்து உற்பத்தியாகும் கரையானால் அரிக்கப்படுகின்றன. அதற்கொப்பவே அரசியல் சாஸனம் என்ற தேசத்தின் ஆவணம் அதனுள்ளேயே இருக்கும் “மதசார்பின்மை” என்ற விவரணைக்கு உட்படாத அல்லது முனைந்து துர்விவரணைக்கு உட்படுத்தப்படும் கோட்பாட்டால் அரிக்கப்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.

    தேசத்திற்கு அரசியல் சாஸனம் அளித்த பாராளுமன்றம் கொடுத்த முக்யமான வாக்குறுதிகள் முனைந்து த்வம்சம் செய்யப்படுவதற்கு — அக்காலத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டு — ஆனால் காந்தியடிகளின் செல்லப்பிள்ளையான பண்டித நேருவின் ஷேக் அப்துல்லாவுடனான மறைமுக சதியாலோசனையின் விளைவாக குள்ளநரித்தனமாய் அரசியல் சாஸனத்தில் “தாத்காலிகமாய்” என்ற சாக்குப்போக்குடன் நுழைக்கப்பட்ட ஷரத்து– ஸ்ரீ பாபாசாஹேப் அம்பேத்கர் மற்றும் ஸ்ரீ முகர்ஜி அவர்கள் எதிர்த்த ஷரத்து — இன்று —- இந்த விஷயத்தில் இந்திய தேசிய (தேசவிரோத) காங்க்ரஸ் கட்சியின் அன்றைய மற்றும் இன்றைய நிலை என்ன என்பதை வெட்ட வெளிச்சமாக தோலுரித்துக்காட்டுகிறது.

    370 ஷரத்தின் நிலை இவ்வாறெனில் பொதுசிவில் சட்டம் , பசுவதைத் தடுப்பு சட்டம் இதைப்பற்றியெல்லாம் யாரேனும் பேசினால் அவர்கள் பிற்போக்கு வாதிகள். அதாவது அரசியல் சாஸனம் சொல்லும் விஷயங்களை நினைவுறுத்துபவர்கள் வகுப்பு வாதிகள் ஆனால் அரசியல் சாஸனம் வாக்குறுதி கொடுத்த இந்த விஷயங்களுக்கு எதிராகப்பேசுபவர்கள் மதசார்பற்றவர், அறிவுஜீவிகள், புத்திசாலிகள். மேரா பாரத் மஹான்.

    \\\18.1.1947ந் தேதி மகாராஜாவை குருஜி கோல்வால்கர் சந்தித்து, காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.\\\

    தேசப்பிரிவினையின் போது பரமபூஜனீய குருஜி அவர்களும் சங்கமும் தேசத்திற்கும் ஹிந்து சமூஹத்திற்கும் செய்த சேவைகளை பல வ்யாசங்களாக தமிழ்ஹிந்து தளம் ப்ரசுரிக்க வேண்டும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    அடைந்தால் த்ராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று முழக்கி பின்னர் மயிரைக்கட்டி மலையை இழுக்கிறேன் வந்தால் மலை போனால் மயிர் என்றெல்லாம் தத்துவங்கள் உதிர்த்த கும்பல்கள் நூற்றாண்டு கொண்டாடுகையில் தேசத்திற்கும் தேச ஒற்றுமைக்கும் பாடுபட்ட பிரிவினையை எதிர்த்த சான்றோர்களை நாம் நினைவு கூறுவது மிகவும் அவசியம்.

    \\\இது பற்றி பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் எடுத்துக் கூறும் கருத்துக்களை, காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற கட்சியினராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிகளும் வேறு பிரச்சனகளை முன் வைத்து காஷ்மீர் பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறார்கள்.\\\\

    பாரதீய ஜனசங்கத்திலிருந்து பா.ஜ.க உருவானதில் ஏற்பட்ட பச்சைக்கரையால் அவ்வப்போது பா.ஜ.க விற்கு ஏற்படும் போலிமதசார்பின்மை என்ற வ்யாதி பா.ஜ.க வையும் ஆட்டி வைக்கிறது. N.D.A காலத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராய் இருந்த ஸ்ரீ ப்ரஜேஷ் மிச்ரா அவர்களுக்கு நெருக்கமாய் இருந்ததாய் பேசப்பட்ட ஆனால் அப்பட்டமான தேசப்பிரிவினை வாதத்தில் ஊக்கமுடைய கஷ்மீரப் பிரிவினையில் ஊக்கமுடைய கஷ்மீரப்பண்டிதரான அமிதாப் மட்டூ போன்ற ஆசாமிகளை முன்னிறுத்தியபோது ஜம்முவில் இருந்த உஷ்ணம் மற்றும் கடுப்பு தேசத்திற்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

    \\\ மத்தியஸ்தர் குழு(interlocutors)\\\\

    An interlocutor is someone who formally explains the views of a government and also can relay messages back to a government.

    Arbitrator என்ற பதத்திற்கு மத்யஸ்தர் என்ற பதம் சரிவரும் என்பது என் புரிதல். interlocutor என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் “மத்யஸ்தர்” ஆகுமா அல்லது வேறு பதமுண்டா என தளத்துத் தமிழறிஞர்களிடம் அறிய ஆவலாய் உள்ளேன்.

  2. தெளிவான தகவல்களுடன் வரலாற்றுக் கட்டுரை எழுதிய சரவணனுக்கு வந்தனங்கள். ஸ்ரீமான் க்ருஷ்ணகுமார் அவர்களின் கருத்தும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுடன் சிறப்பாக இருந்தது.

    இன்று விஜய் டிவியில் ஆன்மிகம் பேசிய ஒருவர், வாரியார் சுவாமிகள் கேட்ட ‘முருகனின் தந்தை யார்?’ என்ற கேள்விக்கு, ஒரு சிறுவன் “சிவாஜி” என்று பதிலளித்தபோது வாரியார் சுவாமிகள், “இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தன் பொருளாதாரத்தையே கொடுத்த நேருவை ‘நேருஜி’ என்பது போல சிவனை சிவாஜி என்பது சரிதான் ” என்றாராம்.

    எனக்கு ஒரு சந்தேகம், நேரு அப்படி என்ன சொத்தையெல்லாம் இந்தியப் பொருளாதாரத்தையே உயர்த்துவதற்காக கொடுத்தார் ? விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

  3. //interlocutor என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் “மத்யஸ்தர்” ஆகுமா அல்லது வேறு பதமுண்டா என தளத்துத் தமிழறிஞர்களிடம் அறிய ஆவலாய் உள்ளேன்//.

    தூதுவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். மத்தியஸ்தர் என்பவர் இரு தரப்பாருக்கும் நடுவே நின்று இரு தரப்பினராலும் ஏற்கப்பட்டு, நடுநிலையில் பிரச்சினையை ஆய்ந்து சமரசம் செய்துவைக்கும் நடுவரே. அவரை ஆர்பிடேட்ரேடர் எனபதே சரி. இன்டர்லோகூட்டர் இடையில் நின்று தகவல்களைப் பரிமாற்றம் செய்பவரேயன்றி அதிகாரம் ஏதுமற்றவர். காஷ்மீர் விஷயத்தில் சோனியா காங்கிரஸ் தலைமையில் இயங்கும் விவரம் அறியாத, தேச விரோத ஆட்சி, காஷ்மீர் பிரிவினை சக்திகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இப்படியொரு குழுவை அமைத்ததே பெரும் தவறு.

    //எனக்கு ஒரு சந்தேகம், நேரு அப்படி என்ன சொத்தையெல்லாம் இந்தியப் பொருளாதாரத்தையே உயர்த்துவதற்காக கொடுத்தார் ? விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.//
    ஆஷ் ஃபார் இந்தியா, கேஷ் ஃபார் இந்திரா என்பதுதான் நேருவுக்குத் தெரிந்திருந்த பொருளாதாரம். பொருளாதாரம் தெரியாத அவர் திணித்த பொருளாதாரத்தின் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான சாத்தியக் கூறுகள் பா ஜ க தலைமையில் இயங்கிய குறுகிய கால என். டி. ஏ ஆட்சியில் உருவாகலாயின. அடுத்து வந்த சோனியா காங்கிரஸ் குமாஸ்தாக்கள் ஆட்சி அதைச் சீர்குலைத்துவிட்டது.
    ஏதோ, எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.
    -மலர்மன்னன்

  4. வழக்கம் போலவே வெளுத்து வாங்கி இருக்கிறார் ஈரோடு சரவணன்.. அனால் எப்பிடியும் mainstream மீடியா க்கள் இது போன்ற அரைகுறை செகுலர் வாதிகள் சொல்லை தான் கேட்க போகிறது… இந்திய வை எட்டு துண்டக்காமல் ஓய மாட்டார்கள் போல் இருக்கிறது..

  5. dear admin< namasthe…im request for onething abt(language)….

    please you have to publish post for english also…becoze…then only ….

    many people can read and knowing abt this very important news & facts…im so proud of you…bharath mathaki jai…take care

  6. இந்த பிரச்சனையில் இவ்வளவு கதைகள் உள்ளனவா ? இன்னும் தகவல்கள் அறியப்படாத சங்கதிகள் இருக்கக் கூடும். எழுதுங்கள். அறிந்து கொள்கின்றேன்.
    ஆமாம இவ்வளவு சங்கதிகள் நாட்டில் எத்தனை பேருக்கு தொியும். இந்துக்களின் நிலைமை பாிதாபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *