கோயில்கள் புற்றீசல்களா? – தி.க அவதூறுக்கு பதிலடி

ன்று, 21-07-2012 சனிக்கிழமை அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “புதுப்புது அர்த்தங்கள்” நிகழ்ச்சியில் இந்து அறநிலை துறை பற்றிய விவாதம் நடந்தது (மீண்டும் ஞாயிறு இரவு 8: 30 மணிக்கு மறு ஒளிப்பரப்பு செய்யப்படும்) பொதுவாக இது போன்ற விவாதங்களில் ஹிந்து தரப்பை சேர்ந்தவர்கள் பேச்சு முழுமையாக ஒளிப்பரப்படுவது இல்லை அல்லது அவர்களுக்கு பேச வாய்ப்பு தரப்படுவது இல்லை என்பதை பலர் கவனித்திருக்கலாம்.

ஒவ்வொறு முறையும் ஹிந்து மதம் & சமூகம் சம்மந்தப்பட்ட விவாதத்தின் பொழுது ஹிந்து இயக்கங்களை சேர்ந்த ஒருவரையும் திராவிட கட்சியை சேர்ந்த ஒருவரையும் அழைப்பார்கள். ஆனால் கிறித்துவத்தை சார்ந்தவர்களையோ அல்லது இஸ்லாமிய மதத்தினரையோ, காங்கிரஸ் கட்சிகாரர்களையோ அழைக்க மாட்டார்கள். அதே போல் கிறித்துவ மற்றும் இஸ்லாமியர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய விவாதத்தின் பொழுது அரசியல் கட்டுபாடுகள் பல கொண்ட பா.ஜ.க.வை அழைப்பார்கள். அப்பொழுது திராவிட கட்சிகளை சேர்ந்தவர்களை அழைக்க மாட்டார்கள். இது ஏன் என்பது கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் கூடப் புரிந்து கொள்ளக் கூடிய விசயமே.

மேலே சொல்லப்பட்ட விதியில் இருந்து மாறாமல் இந்த நிகழ்ச்சியிலும் இருவர் அழைக்கப் பட்டார்கள் – ஒருவர் கோயில் முறைகேடுகள் தொடர்பாக வழக்குகளைப் போட்டு நடத்தி வரும் வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி. இன்னொருவர் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த விடுதலை ராஜேந்திரன்.

சமீபத்தில் இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஒருவர் தங்களிடம் சில ஆயிரம் கோயில்களே கட்டுபாட்டில் இருக்கிறது என்று கூறியிருந்தார். நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் வீரத்துறவி ஐயா இராம கோபாலன் அவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து இன்னும் அதிக எண்ணிக்கையிலான கோயில்கள் அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை சுட்டிக் காட்டி இருந்தார் (அறிக்கை இந்தப் பதிவின் இறுதியில் உள்ளது). அதை பற்றிய விவாதத்தின் பொழுது பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைக்கும் பொய்களை அவிழ்த்து விட்டார் விடுதலை ராஜேந்திரன். அதாவது 1929 ஆம் ஆண்டு கோயில்களில் ஊழல்கள் அதிகரித்து விட்டதால் தான் கோயில்கள் சம்மந்தப்பட்ட அரசு அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் 1951 ஆம் ஆண்டு கோயில் சொத்துகளை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டது எனவும் கூறினார். இது முற்றீலும் தவறான செய்தி. அற நிலையத்துறை உருவான வரலாறு பற்றிய குறிப்புகளில் இது பற்றி தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றங்களிலும் தாசில்தார் அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் தெரு ஓரங்களிலும் புற்றீசல் போல பல கோயில்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன என்று கேட்ட கேள்விக்கு தொடர்பே இல்லாமல் ஒரு கருத்தையும் சொன்னார் தி.க. காரர். இவர் சொல்லும் நீதிமன்றங்களும், தாசில்தார் அலுவலகங்களும் மருத்துவமனைகளும் உண்மையில் ஒரு காலத்தில் கோயில்களாகவும் மற்றும் அவற்றிற்கு சொந்தமான நிலங்களாகவும் தான் இருந்தன என்பது வரலாற்றை ஓரளவு படித்தவர்களுக்கு கூடத் தெரியுமே? வங்க கடலோரம் சென்னையின் மத்தியப் பகுதியில் இருந்த பிரம்மாண்டமான சென்னகேசவ பெருமாள் கோயில் போன்ற கோயில்களை இடித்து விட்டுத் தான் வெள்ளையர்கள் தற்பொழுது சொல்லப்படும் நீதிமன்ற கட்டிடங்களையும் பல அரசு அலுவலகங்களையும் கட்டினார்கள். இதை பற்றிய பல்வேறு தகவல்கள் மதராசப் பட்டிணம் என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.

மின்சார வாரியத்தின் பெரும்பான்மையான கட்டிடங்கள் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டவை. அவ்வளவு ஏன்? சென்னை கோயம்பேடு பஸ் நிலையமே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப் பட்டது. பல ஊர்களில், பக்தர்கள் வரவும் பொங்கல் வைத்து வழிபடவும் உருவாக்கப்பட்ட, ஹிந்து சமுதாயத்திற்கு சொந்தமான, குறிப்பாக தலித் சமூகத்திற்கு சொந்தமான பரந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பஸ் நிலையங்களாக மாற்றப்பட்டன. உதாரணமாக சேலம் பஸ் நிலையம், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் என்று சொல்லி கொண்டே போகலாம். உண்மை இப்படி இருக்க கழகப் பொய்யர் வழக்கம் போல உண்மைக்கு மாறான செய்தியை வெட்கமில்லாமல் வந்து தொலைக்காட்சியில் சொல்கிறார்.

அறநிலை துறை கோயில்கள் பற்றிய விவாதம் தான் அது. ஆனால் விவாதத்தின் போது, ஆபத்து விளைவிக்கும் சாலையோர கோயில்கள் என்றும், ஆகம கோயில்கள் வேறு தமிழர் கோயில்கள் வேறு என்றும் சொன்னார் விடுதலை ராஜேந்திரன். அதோடு மட்டும் நிற்கவில்லை, கோயில் கொள்ளைகளை தடுக்கும் சக்தி உள்ளே இருக்கும் தெய்வத்திற்கு இல்லை என்று வேறு சொன்னார் (சர்ச்சில் திருட்டு நடந்தால், உள்ளே இருக்கும் ஏசுவுக்கும் சிலுவைக்கும் சக்தி இல்லாததால் தான் நடந்தது என்றும் இதே போல சொல்வாரா இந்தப் பகுத்தறிவு திலகம்? – யாராவது கேட்க வேண்டும்).

கேட்கப்பட்ட கேள்வி அறநிலை துறையின் நிர்வாகத்தை பற்றியது. ஆனால் சம்மந்தமே இல்லாமல் வேறு விசயங்களை பேசி கொண்டு இருந்தார், ஆரிய பாஷைப் பெயர் தாங்கிய திருவாளர் விடுதலை ”ராஜேந்திரன்”.

அவர் பேச்சின் படியே வரலாம். பெரும்பாலான சாலையோர கோயில்கள் இவர் சொல்லும் மாரியம்மன், செல்லியம்மன் போன்ற தமிழர் தெய்வங்களுக்கு சொந்தமானது தானே? இந்த சாலையோர கோயில்களை பற்றி இவர் கருத்து என்ன? சரி, தமிழர் கோயில்கள் என்று சொல்கிறார். தமிழகத்தில் உள்ள தமிழர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் பொழுது இவர்கள் ஏன் போராடவில்லை?

தற்பொழுது சாலையோர கோயில்கள் என்று சொல்லப்படும் கோயில்களில் பல வனக்கோயில்களாகவும் காணி கோயில்களாகவும் குல கோயில்களாகவும் இருந்தது பக்தர்களுக்கும், இந்து செயல்வீரர்களுக்குமே தெரியாது என்பது வேதனை தரும் விசயம். வன தேவதை கோயில்களும் காணி கோயில்களும் ஆக்கிரமிக்கப்பட்டு கிராம கோயில்களாகி, பின்னர் பொது கோயில்களாக உருமாறி, அதன் இடங்கள் கான்கீரீட் கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் கோயிலை சுற்றி சாலைகள் போடப்பட்டு, பின்னர் அது தெருக்கோயில் என்று சொல்லப்பட்டு இடிக்கப் படுகிறது.

மேலும் அறநிலை துறையால் ஆக்கிரமிக்கப்படும் கோயில்கள் மூச்சு கூட விட முடியாத அளவுக்கு கோயில் தல மரங்கள் உட்பட அனைத்தும் வெட்டப்பட்டு கடைகள் நிரம்பி வழியும் வியாபார தலமாக மாற்றப்படுகின்றன. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அரசாங்க நிறுவனங்களாலும் ஆதிக்க சாதி அரசியல் வியாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதனால் வேறு வழி இன்றி கோயில் வெளியில் பொங்கல் வைக்கும் அவல நிலைக்கு நமது மக்கள் தள்ளப்பட்டனர். ஆனால் சாலை போக்குரவத்திற்கு இடையூறு செய்கிறார்கள் என்று இதன் கலாசார பின்னணியையும் வரலாறையும் குறித்த எந்த அறிவும் இல்லாத கத்துக்குட்டி செய்தியாளர்கள் 24×7 தொலைக்காட்சிகளில் பொங்கல் வைப்பதைப் பற்றி உளறி கொட்டுகின்றனர். அந்த சாலைகள் மட்டுமல்ல, இவர்கள் குடியிருக்கும் வீடுகளும் கூட ஒரு காலத்தில் காணி (விவசாய) நிலமாகவும், அந்த காணி அப்பகுதியின் கோயிலுக்கு சொந்தமானதாகவும் இருந்திருப்பதற்கே அதிகபட்சம் சாத்தியம் உள்ளது என்பது இந்த அதி புத்திசாலிகளுக்கு உறைப்பதில்லை.

இப்படி ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை துரத்திய கதையாக, கோயிலையும் நீர் நிலைகளையும் விவசாய கிராமங்களையும் அழித்து / ஆக்கிரமித்து ஒரு பெரு நகரத்தை அமைத்துவிட்டு, கோயில்களைச் சுற்றி ரோடுகளை அமைத்து விட்டு, கடைசியில் கோயில்களை ஆபத்து விளைவிக்கும் தெருக் கோயில்கள் என்று பொய் பேசும் வாய்க்கு அந்த கோயிலை கட்டிய முன்னோர்கள் தான் தண்டனை தர வேண்டும்.

கிறித்துவ மிசிநரிகளும் ஜிஹாதிகளும் இந்தியாவை ஆக்கிரமிக்க டாலர்களையும் தினார்களையும் கொட்டி மத நிறுவனங்கள் என்று சொல்லி பல கோடி மதிப்பிலான நிலங்களை ஆக்கிரமித்து கொண்டு இருக்கின்றனர். பல மில்லியன் பணம் ஹஜ் யாத்திரை என்று அரசாங்கம் கொட்டி கொடுத்து கொண்டு இருக்கிறது. இதை பற்றி பேச விடுதலை ராஜேந்திரன் போன்றவர்களுக்கு துப்பு இல்லை. ஆனால் ஏழை மக்களுக்கு, குறிப்பாக தலித் சமுதாயத்திற்கு சொந்தமான கோயில்களை ஆபத்து விளைவிக்கும் சாலையோர கோயில் என்று கூசாமல் கூறுகிறார்.

சேலம் கோதண்டராமர் கோயில் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வரும் ஒரு வழக்கறிஞர் எனக்கு சொன்ன தகவல் கோயில்கள் தெரு கோயில்களாக மாற்றப்படுவதற்கும், கோயில்களில் அறநிலை துறை செய்யும் அநியாயங்களுக்கும், தெருக்கோயில்கள் பற்றிய விவாதத்திற்கும் ஒரு சிறந்த உதாரணம். பல ஆயிரம் வருட பழமையான சேலம் அயோத்தியாப்பட்டிண கோயிலை ஜவுளி கடை போல மாற்றிய நிர்வாக அதிகாரியான பெண்மணி, ஏற்காடு மலைவாச ஸ்தலத்திற்கு செல்லும் வழியில் உள்ள சேலம் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்புறம் உள்ள கோயிலுக்கும் நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

அரசு கலை கல்லூரி வருவதற்கு முன்பே அந்த கோயில் ஒரு சிறு வனக்கோயிலாக இருந்தது. வனங்கள் பிரிட்டீஷ் காரர்களால் அழிக்கப்பட்டு கடைசியில் அது தெருக் கோயிலாக மாறியது. அதாவது அந்த கோயில் அரசாங்க முறைப்படி தெருக் கோயில். சமீபத்தில் பக்தர்கள் அதிகம் வர கோயில் சிறப்பு பெற்று பணவரவு அதிகமானது. இதை அறிந்த அறநிலை துறை வெட்கமே இல்லாமல் நாய் உணவிற்கு நாக்கை தொங்க போட்டு கொண்டு வருவது போல் அதை கைப்பற்றியது. நாளை அதே கோயில் தெருக் கோயில் என்று இடிக்கப்பட்டால் அந்த கோயில் பணத்தை அடிப்படையாக வைத்து சம்பளம் வாங்கும் இந்த நிர்வாக அதிகாரி பெண்மணியோ அல்லது அவரின் அறநிலையத் துறை உயர் அதிகாரியோ போராடுவார்களா?

பொதுவாக ஊழியர்கள் தவறு செய்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அறநிலை துறையிலோ ஊழியர்கள் சம்மந்தப்பட்ட கோயில்களில் முறைகேடு நடந்தால் அவர்களுக்கு பெரிய கோயில்களில் வாய்ப்பு கிடைக்கும். மேற்படி சொல்லப்பட்ட கோயிலில் விலை உயர்ந்த நகைகள் நிர்வாக அதிகாரியின் பராமரிப்பில் கொள்ளை போனது. அவர் அதற்காக பணி இடை நீக்கம் செய்யப்பட்டு தற்பொழுது ஒரு பெரிய கோயிலில் நிர்வாக அதிகாரியாக உள்ளார். இது போன்ற அராஜக நிர்வாகம் இவர்கள் துறையில் மட்டுமே நடக்கும் விசயம்.

இது மட்டுமா? கோயில் துவஜ ஸ்தம்பத்திற்கும் கோயிலுக்கும் நடுவே சாலை போடுகின்றனர் பொது துறை அதிகாரிகள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு பிறகு அந்த துவஜ ஸ்தம்பத்தையே ஆக்கிரமிப்பு என்று சொல்லி அழிக்கின்றனர். தேர் நிலைகள் கூட இவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த தப்பவில்லை. இதை எல்லாம் ஏன் என்று கேட்க அறநிலை துறை அதிகாரிகளுக்கு துப்பு இல்லை. இதை பற்றி நாம் கேள்வி கேட்டால் இதை பற்றிய தகவல் எங்களிடம் இல்லை. இதை பற்றி எங்களுக்கு தெரியாது என்று பதில் வேறு.

வடபழனி கங்கை அம்மன் கோயில் ஒரு காலத்தில் கிராம கோயிலாக இருந்தது. ஆனால் தற்பொழுது மிக கடுமையான ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டு தெரு கோயிலாக மாற்றப்பட்டு உள்ளது. இதை எல்லாம் தடுக்க அறம் கெட்ட அறநிலை துறை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?

இன்னும் ஒரு உதாரணம் சென்னை கடற்கரையில் உள்ள அஷ்டலஷ்மி கோயில். வெவ்வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட செயற்கை கோள் புகைப்படத்தை பார்த்தாலே தெரியும் அறநிலை துறையின் யோக்கியதை என்னவென்று.


Image taken on 14-FEB-2008

காற்றோட்டம் மிக்க, விசாலமான, அலைகடல் மகளாம் லஷ்மி தேவியின் திருத்தலம். பக்தர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு பரப்பளவுடன் இருந்தது. கோயில் தல மரமும் இந்த படத்தில் தெளிவாக உள்ளது.


Image taken on 21-APR-2009


Image taken on 15-MAY-2010


Image taken on 16-MAY-2011

அறம் அற்ற துறையின் நிர்வாகத்தில் ஒரு கோயில் புனிதம் அழிக்கப்படுகிறது என்பதற்கு ஒவ்வொடு வருடமும் எடுக்கப்பட்ட மேலே சொல்லப்பட்ட படங்களே சிறந்த உதாரணம்.

இந்த கோயில் ஸ்தல மரங்களை அறமற்ற துறை வெட்ட முயற்சி செய்தது (அம்பு குறீயீடில் குறிப்பிடப்பட்டு உள்ளது). பகதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தி வைத்தனர். ஆனால் இடையில் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அந்த கோயில் தல மரம் வெட்டப்பட்டு அந்த கோயிலிலேயே எரிக்கப்பட்டது என்ற வேதனையான விசயம் எனக்கு சில தினங்களுக்கு முன்பு தெரிய வந்தது. தற்பொழுது அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் வேறு விமர்சையாக ஆபிரகாமிய அடிவருடிகளும் அறநிலையத் துறை கொள்ளையர்களும் புடைசூழ ஜவுளிக்கடை திற்ப்பு விழா போல ஆடம்பரத்துடன் நடந்தது.

இதே கோயில் வருமானம் இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக தெரு கோயிலாக மாற்றப்பட்டு திராவிட வெறியர்களின் அரசியலில் இடிக்கப்பட்டு இருக்கும். இது போன்ற ஆயிரகணக்கான அநியாயங்களை எழுத இந்த ஜென்மம் போதாது என்றே தோன்றுகிறது.

இவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆயிற்றே? கோயில் விசயத்தை பற்றி பேசுவதற்கு முன்பு திராவிட கழகத்தின் சொத்துகள் பற்றியும் அதன் தற்பொழுது உள்ள நிலையை பற்றியும் பேசட்டுமே. இது வரை அந்த சொத்தில் இருந்து கிடைத்த பணம் என்ன ஆனது? என்ன நலத் திட்டங்கள் அவர்கள் செய்து உள்ளார்கள் என்று சொல்லிவிட்டு அவர் இயக்கத்தில் உள்ள வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு கோயில்களை பற்றிய விவாதத்திற்கு வரட்டும். இல்லாவிட்டால் அவர் பெயருக்கு பின்பு வைத்து கொண்டு உள்ள விடுதலை என்பதற்கு பதில், வீரமணி அடிமை இராஜேந்திரன் என்று மாற்றி கொண்டு ஹிந்து கோயில்களை பற்றி பேசட்டும்.

20-7-2012 அன்று இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை

அறநிலையத்துறையைச்சீர்படுத்திட தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம்

தமிழகத்திருக்கோயில்களை நிர்வாகம் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை திக்குத்தெரியாமல் தடுமாறுகிறதோஎன சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் பத்திரிகை செய்தி ஒன்றில் அதன் அதிகாரி ஒருவர் அறநிலையத்துறையின்கீழ் 11 ஆயிரம் கோயில்கள் மட்டும் உள்ளதாகவும், கோயிலுக்குச் சில ஆயிரம் நிலங்கள் தான்உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? 2010இல் அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி38 ஆயிரத்து 481 கோயில்களும் அவற்றிற்கு 4 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாகவும்தெரிவித்தது. இரண்டு ஆண்டுகளில் அவை காணாமல் போய்விட்டனவா? பட்டா போட்டு தனியாருக்குத்தாரை வார்த்து விட்டனரா? மூன்றில் ஒரு பங்கு கோயில்கள் தான் அரசின் கட்டுப்பாட்டில்இருக்கிறதென்றால் மற்றைய கோயில்களின் நிலை என்ன? தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் கவனம்கொடுத்து சீர்ப்படுத்தி, மக்களுக்கு உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.

கோயில்கள்கொள்ளை போய்க்கொண்டிருக்கின்றன; கோயில் சொத்துகள் ஒருபுறம் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றன;மறுபுறம் கோயில் சிலைகள், விக்ரகங்கள், தங்க வெள்ளி, வைர நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.கோயில்களுக்குச் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இதற்குக் காரணம். எப்போது கோயில்களைஅரசு எடுத்துக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைப்பை ஏற்படுத்தியதோ அதிலிருந்துஅவை அரசின் பாதுகாப்பில் இருப்பதாகும். கோயில்களுக்கோ, அதன் சொத்துகளுக்கோ ஏற்படும்பாதகத்திற்கு அரசாங்கமே பொறுப்பாகும்.

`அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பது மக்கள் வழக்குமொழி. கோயிலுக்குப்பாதகம் செய்தவர்கள் அழிந்தே போயுள்ளார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மறக்கவேண்டாம்.

இந்துசமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் பற்றிய விவரங்களையும், அதன்சொத்துகள் பற்றியும் முழுமையான அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டும். இதில் சட்டத்திற்குப்புறம்பாக கோயில் நிலங்களைத் தனியாருக்கு மாற்றித் தந்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

தரிசனக்கட்டணக் கொள்ளையை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி வரும் ஞாயிறன்று (22-7-12) மாநிலம்தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. ஆலயங்களையும் ஆலயச் சொத்துகளையும் சரிவர நிர்வகிக்காமல்மோசடி செய்து வரும் இந்து சமய அறநிலையத் துறையை அரசு கலைத்துவிட்டு, இந்து சமய நம்பிக்கைகொண்ட ஆன்றோர்கள், இந்து இயக்கப் பொறுப்பாளர்களைக் கொண்ட தனித்து இயங்கும் வாரியத்தைஅமைக்க வேண்டும். இதுவே இன்னமும் மிஞ்சியிருக்கக்கூடிய பாரம்பரியமிக்க ஆலயங்களைப் பாதுகாப்பதற்குவழி.

தரிசனக் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி இந்து முன்னணி 25 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களிடம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மக்களிடையே கோயில்பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, பக்திபூர்வமான, உணர்வுபூர்வமான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தமாபெரும் எழுச்சியானது இந்து கோயில்களைப் பாதுகாக்கச் சரியான வழியை வருங்காலத்தில்ஏற்படுத்தும் என்று இந்து முன்னணி நம்பிக்கை தெரிவிக்கிறது.

19 Replies to “கோயில்கள் புற்றீசல்களா? – தி.க அவதூறுக்கு பதிலடி”

  1. உதாரணமாக சென்னை திநகர் பர்கிட் ரோட்டிலுள்ள நிலங்களும் ( இப்போது பங்களாக்களும், அலுவலகங்களும் உள்ளன) சைதாபேட்டை பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாகும்
    அனால் இன்று அவை பல கைகள் மாறி ( சட்டத்துக்குப் புறம்பாக)அவற்றின் சொந்தக்காரர்கள் பல கோடிகளுக்கு அதிபதி ஆகி இருக்கின்றனர்
    ஆனால் கோயிலுக்கு ஒரு பைசா கூட அதனால் வருமானமில்லை

  2. திராவிடக் கட்சிகள் வந்த பின்னர்தான் கோயில்கள் பொன் முட்டை இடும் வாத்துக்கள் என்பதை உணர்ந்து கட்சிக்காரர்களை அறங்காவலர்களாக ஆக்கி கோயில் பணத்தை கொள்ளை அடிக்கத் துவங்கினர்.

    சொல்லப் போனால் கோயில் கூடாது என்று வசனம் பேசியவர்களுக்கு மேலும் மேலும் கோயில்கள் பெருகுவது நன்மையே என்று கூட நினைப்பார்கள்..அப்போதுதானே மேலும் மேலும் கொள்ளை அடிக்கலாம்?

    சாலையோரக் கோயில்களால் ஆபத்து என்று சொல்பவர்கள் ரோடுகளை ஆக்ரமித்துக் கொண்டும், பொது மக்களுக்கு இடையூறாகவும், ஆக்ரமித்துக் கட்டப் பட்டிருக்கும் கட்சி அலுவலகங்கள், கொடிக் கம்பங்கள்., தட்டிகள் இவற்றை நீக்க வேண்டும் என்று குரல் கொடுப்பார்களா?

    பல இடங்களில் நடை பாதையை முழுதுமாக மறித்து அரசியல் தலைவர்கள்( நயவஞ்சகமாக) சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கும் தட்டிகளை அப்புறப் படுத்த வேண்டும் என்று இவர்கள் சொல்வார்களா?

  3. இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். கோயிலில் கொள்ளை போனால் அதை தடுக்கும் சக்தி கோயிலில் இருக்கும் தெய்வத்திற்கு இல்லை என்று தான் நினைக்க தோன்றுகிறது என்று தனது முட்டாள் தனத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    கோயில் கட்டப்பட்டது இறைவனுக்காக அல்ல… அது முழுக்க முழுக்க தர்ம பரிபாலனத்திற்காக து அதுவும் நமக்குகாக… ஆக அதை காப்பாற்ற வேண்டியதும் நமக்கு தான் உள்ளதே தவிர தெய்வத்திற்கு கிடையாது.

    ஒரு வேலை கோயிலில் உள்ள தெய்வங்களை இவர்களுடைய தலைவர்கள் போல ஸ்பெக்ட்ரம் முறையில் கொள்ளை அடிக்க கூடிய தலைவர்கள் என்று ராஜேந்திரன் நினைக்கிறாறோ என்னமோ?

  4. மிகவும் வேதனையான விஷயம்… தமிழகத்து இந்துக்கள் யாவரும் இவ்விஷயத்தில் பொங்கி எழ வேண்டும்… நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்…

  5. இன்றைய செய்தி: அறம் அற்ற துறையின் கையாளாக தனத்தையும் பொறுக்கி தனத்தையும் சொல்ல

    கையாளாகாத தனம்; வேலுர் கோட்டையில் ஜிஹாதிகளால் இடிக்கப்பட்ட கோயில் ஹிந்து எழுச்சியால் சீர் படுத்தப்பட்டது. இதை சீர் செய்யவோ கோயிலை மீட்கவோ வராத இந்த துறையினர் தற்பொழுது நவீன ஜிஹாதிகள் என்ற பெயருக்கு ஏற்றார் போல் தற்பொழுது கோயிலை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

    பொறுக்கி தனம்: மயிலை காபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கீரின் வேஸ் ரோடு சாலையில் பல கோடி மதிப்பிலான10 ஏக்கர் இடம் இந்திய மகளீர் அமைப்பு என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது அதை சட்ட பூர்வமாக்க இலட்சம் வாடகை பெறும் இடம் 3000 ரூபாய்க்கு துறை குண்டர்களால் கொடுக்கப்பட உள்ளது.

    இதில் என்ன விசயம் என்றால் இதுவும் ஒரு 2ஜி ஊழல் தான். அதாவது நேற்று அதாவது ஞாயிறு காலை விளம்பரம் கொடுத்து இன்று திங்கள் 11 மணிக்குள் மறுப்பு தெரிவிக்க வேண்டுமாம். அரசு அலுவலகத்தில் பணிக்கு வருவதே 10:30 மேல் தான். இந்த இலட்சணத்தில் எப்படி மறுப்பு தெரிவிப்பது.

    ஹிந்து முண்ணனி காலை 10 மணிக்கு இதற்கு மறுப்பு தெரிவிக்க போவதாக செய்தி அறிந்தேன்.

    @ விடுதலை ராஜேந்திரன்

    கோயில் சொத்து மக்கள் சொத்து என்று தானே சொன்னீர்கள். மக்கள் சொத்து களவாடப்படுகிறது. இதை ஏன் உங்கள் கூலிப்படையுடன் சென்று தடுக்க கூடாது.

    அடுத்து கோயில் சொத்தை சிக்கூலர் அரசாங்கம் நாட்டுடமை ஆக்க வேண்டும் என்று சொன்னீரே. உங்கள் ரேஸிஸ்ட் ராமசாமி மக்களிடம் இருந்து கல்லா கட்டிய பணத்தை ஏன் இன்னும் அரசுடைமை செய்யவில்லை. மசூதியையும், அமெரிக்க கிறித்துவ நிறுவனத்திற்கும் இந்த விதி பொருந்துமா?

  6. Well Said! Sri. Gomathi Chetti! Great Men like you should continue your efforts in tearing the face masks of pseudo-secular decoitic plundering HR&CE!

  7. கோயில் ஆக்கிரமிப்பு முறியடிப்பு:

    பல கோடி மதிப்புல்ல நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற இந்திய மகளீர் அமைப்பு என்ற ஆப்பிரகாமிய அடிவருடிகளின் சதி முறியடிப்பு.

    9௦௦ கோடி மதிப்பிலான ஈரோடு மாரியம்மன் கோயில் நிலத்தை கிறித்துவ மிசினரிகள் ஆக்கிரமித்து இருப்பது உண்மை என்றும் அது புறம்போக்கு நிலம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது மட்டும் இன்றி தற்பொழுது அthu அம்மனின் நிலம் என்பதை நாம் நிருபணம் செய்ய வேண்டும்.

    @ அடிவருடி ராஜேனந்திரனுக்கு,

    மாரியம்மன் தமிழர் தெய்வம் தானே. அவள் நிலத்தை கொள்ளை அடிக்கும் சர்ச பற்றி உன்னுடைய கருத்து என்ன? தெருவில் ஒரு மூலையில் வேறு வழி இல்லாமல் 4 சதுர அடியில் ஏழைகள் கோயில் கட்டினால் அது ஆக்கிரமிப்பு.ஆனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை திராவிட பதர்களோ, காலனிய ஆட்சியின் அடிவருடிகளோ ஆக்கிரமித்தால் ஜனநாயகமா?

    இப்படி பல கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து வைத்து கொண்டு உள்ள மிசினரியை பற்றி பேச உனக்கு தைரியம் இருக்கிறதா?

  8. அருமையான கட்டுரை கோமதி சார்.. இந்த திராவிட கழகத்தாரை இந்தளவுக்கு நையாண்டி செய்ததை இதுவரை நான் பார்த்ததில்லை.. ஆக இனிமேல் இந்த அயோக்கியர்களை குறிக்கும்பொழுது, மரியாதையான வார்த்தைகளை உபயோகிக்காமல், அவர்களுக்கு தகுந்த மாதிரி கழகப் பொய்யர்கள் என்றும், திராவிட ரௌடிகள் என்றும் சரியான வார்த்தையில் குறிக்க வேண்டும்..

    அடுத்து நீங்கள் சொன்ன மாதிரி இந்த அரசியல் வியாதிகள்தான் பல கோயில்களை இப்படி இடிக்க துணை புரிகிறார்கள்.. எனக்கு தெரிந்து பல குலதெய்வக் கோயில்களை வேண்டுமென்றே, இந்த இந்து அறமில்லாத் துறையின் கீழ் கொண்டு வருவது, அந்த கோயிலை சேர்ந்த அரசியல்வாதிகளே..

    போன தி.மு.க ஆட்சியில் கோயில் திருப்பணிக்கு பெரும் நிதியை ஒதுக்கினார்கள்.. ஆனால் நல்லா இருக்கும் கோயிலையும் திருப்பணி செய்கிறேன் என்று சொல்லி, இடிக்க பரிந்துறை செய்து காலி செய்துள்ளார்கள் அந்தந்த கோயில் சேர்ந்த அரசியல் வாதிகள் .. ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும்..

  9. இந்த அயோக்யர்களுக்கு ரோடு ஓரக் கோயில்கள் இடஞ்சலாம்!
    ஆனால் எங்கு பார்த்தாலும் இருக்கும் அரசியல் வாதிகளுடைய சிலைகள் என்னவாம்?
    அங்கங்கே இருக்கும் ஏசு மற்றும் மேரி மாதாசிலைகளும் ,முஸ்லீம்களின் கொடிக் கம்பங்களும் இடைஞ்சலாக இல்லையா
    அதைக் கேட்க இவர்களுக்கு முதுகெலும்பு உள்ளதா?
    மதுரையில் ரோடு போட கோயிலை இடித்த இந்த அயோக்ய அரசியல் வாதிகள் மசூதியை அந்த சாலை சுற்றி வரும்படி போட்ட்டது என்ன நியாயம்
    நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய க்ரோம் பேட்டையில் ராமர் கோயிலை இடித்தார்கள் ஆனால் மசூதியை ஒரு இஞ்சும் நகர்த்த இவர்களுக்கு துணிவில்லை
    எல்லாம் ஹிந்துக்கள கொடுத்த இடம்
    நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு நாலு ஆடு கேட்குமாம்
    ராம கோபாலன் அவர்கள் சொல்வது போல் ‘மூக்கைப் பிடித்தால் வாயைத் திறப்பான்’
    துட்டு குடுத்து சூனியம் வைத்துக் கொள்வது போல் ஹிந்துக்கள் இவர்களுக்கு ஓட்டைப் போட்டு தங்கள் அழிவை வாங்கிக் கொள்கிறார்கள்
    அது மாறினால் இவர்கள் வழிக்கு வருவார்கள்.

    இரா.ஸ்ரீதரன்

  10. முன்பு கதீட்ரல் ரோடை பாபு ஜகஜீவன் ராம் ரோடு என்று மாற்ற முயற்சித்த போது கிறிஸ்தவர்கள் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டு, அமர்க்களம் செய்து, தங்கள் பள்ளிகளில் படிக்கும் ( பெருவாரியான ஹிந்துக் ) குழந்தைகளை ஊர்வலம் விட்டு அதை நிறுத்தினார்கள்.

    ஆக்கிரமித்த வெள்ளைக்காரன் வைத்த பெயர் இனிக்கிறது
    ஆனால் நம் நாட்டு தலைவர் அதுவும் ஒரு பின் தங்கியவர் பெயர் கசக்கிறது
    அப்போது இந்த திராவிடம் பேசும் அயோக்யர்கள் எங்கு ஒப்டிப் போனார்கள்?
    ரோமிலிருந்தும், ரியாதிலிருந்தும் ‘பெட்டி’ வாங்கிக் கொண்டு இவர்கள் ஹிந்து விரோதச் செயலைச் செய்கின்றனர்.
    இரா.ஸ்ரீதரன்

  11. திரு ஸ்ரீதரன் அவர்களே,

    மதுரை சாலை போக்குவரத்து குறித்து தங்களிடன் புகைப்படம் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் அதை தமிழ் ஹிந்துவின் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். உங்களுக்கு அந்த இடம் பற்றிய தகவல் தெரிந்தால் அதை தாங்கள் google map மூலமும் குறித்து எங்களுக்கு அனுப்பலாம்.

    அது மட்டும் இன்றி பள்ளி குழந்தைகளை இது போன்று ஊர்வலத்திற்கு அழைத்து செல்வது சட்டப்படி தவறு. இதை பற்றிய ஆவணங்களோ அல்லது பத்திரிக்கை செய்திகளோ இருந்தால் கூட நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம். அல்லது மேற் குறிப்பட்ட தகவல்களை வைத்து ஒரு கட்டுரையை கூட எழுதி அனுப்பலாம்.

    தகவலுக்கு நன்றி

  12. தமிழ் நாட்டு ஊடகங்கள் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றால் நாக்கை நீட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். வாய் கிழிய பேசுகிறார்கள். அவர்களுக்கு பொய் தகவல்களை எடுத்துக் கொடுத்து பேச வைக்கிறார்கள். புதிய தலைமுறையில் ஒருவர் சதா சர்வ காலமும் பொய்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு மற்றவர்களையும் அதே பொய்யை பேசவைத்து எரிச்சலைக் கிளப்புகிறார். கூலிக்கு மாரடிக்கும் இதுபோன்ற கேவலங்களுக்கு தமிழர்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். இந்தக் கேவலங்களில் ஈடுபடுவோர் இந்து மதத்தில் பிறந்த தட்டுக்கெட்டவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  13. சென்ற வாரத்தில் செய்தித்தாளில் வந்த செய்தி:
    தெற்கு கேசவ பெருமாள் புறத்தில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான பதினெட்டு கிரௌண்ட் & ஆயிரத்து எழுநூறு சதுர அடிகள் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து . இதன் மதிப்பு தொண்ணூறு கோடி ரூபாய்கள் ஆகும்.

    அப்படி என்றால் தமிழ்நாடு பூராவும் கொள்ளை அடிக்கப் பட்ட ,சட்டத்துக்கு விரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ள கோயில் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?
    குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் வகையில் பல ஆண்டுகள் வாடகை பாக்கி எவ்வளவு இருக்கும்?
    இவர்களுக்கெல்லாம் துணை போகிறவர்கள் தான் இந்த திராவிட அரசியல் வாதிகள் .

  14. ஒரு விஷயம் , சேலம் புதிய பேருந்து நிலையம் ,ஏரியின் மேல் கட்டப்பட்டது . நிலத்தை ஆக்கிரமித்து அல்ல. அந்த நிலம் தொடர்பாகத்தான் வீரபாண்டியார் கைது செய்யப்பட்டுள்ளார்

  15. இதெற்கெல்லாம் ஆதாரம் அப்போதைய நாளிதழ்களில் வந்த செய்திகள் தான்
    கதீட்ரல் ரோடு பெயர் மாற்றக் கூத்து எம்ஜி ஆர் ஆட்சியின் போது என்று நினைக்கிறேன்.
    மதுரை சமாசாரம் கடந்த திமுக ஆட்சியின் போது.
    செய்திக் குறிப்புகளைத் திரட்ட முயற்சிப்போம்

  16. மிக அதிகமான கூட்டம் வரும் சில திருக்கோயில்களில் மட்டும் கட்டண தரிசன முறை அனுமதிக்கப்படலாம். ஆனாலும் அதற்காக தர்ம தரிசனம் மறுக்கப்படக் கூடாது. மற்றபடி ஆளே இல்லாமல் ஈ ஓட்டும் இடங்களில்கூடக் கட்டணம் வசூலிப்பது மிக மிகத் தவறு. பிற மதங்களை நாடி வரும்படி, மக்களைக் கொடுத்து ஈர்க்கும் காலத்தில், ‘கொடுத்தால்தான் கோயிலுக்குள் வரமுடியும்’ என்னும் நிலை நம்மிடையே இருப்பது மிக மிகக் கொடுமை.

    தவிரவும் பெரும்பாலான கோயில்கள் வணிக வளாகங்களாகவே மாறியுள்ளன. இறைவனுக்குத் தொண்டு செய்பவர், கேட்காமலேயே செய்வார். கொள்ளை லாப விற்பனை முறைகள், வசூல்கள், இன்னபிறவெல்லாம் தடுக்கப்பட வேண்டும்.

    மிகப் பிரசித்திபெற்ற சில கோயில்கள் தவிர (திருப்பதி, பழனி போன்றவை) ஏனைய கோயில்களை அக்கோயில்களைச் சுற்றி வாழும் மக்களே தங்கள் வருமானத்திலிருந்து பொறுப்பெடுத்துப் பராமரிக்கும் நிலை வந்தால்தான் அவை நிமிரும். எங்கோ உள்ள எதோ ஒரு செல்வந்தரிடம் நிதி திரட்டி உள்ளூரில் கோயிலைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்துவிடுவதால் மட்டும் கோயில்கள் தலை நிமிர்ந்துவிடா. மாறாக, கும்பாபிஷேகம் கண்ட பல கோயில்கள் பல, அப்பகுதி மக்கள் வழிபடப் போகாமல், வெறிச்சோடிப்போய், நாளடைவில் சிதிலமடைந்துவிடுகின்றன. தேவை கோயிலைச் சுற்றி வாழ்பவர்களின் பக்திப்பூர்வமான பார்வை. அதை வளர்க்க அவரவர் இடங்களில் நாம் பாடுபடடாக வேண்டும். தான் குடியிருக்கும் இடத்தின் அருகில் உள்ள கோயிலுக்கு தினமும் சென்று வழிபடும் பழக்கத்தை அனைவரும் வளர்த்துக்கொண்டாலே பல பிரச்னைகள் தீர்ந்துவிடும். சிந்தித்துச் செயல்படுவோம்.

  17. அறநிலையத்துறை சட்டம், அதனால் நம் கோயில்களுக்கும் ஹிந்து சமூகத்துக்கும் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள், இந்த துறையின் தோற்றம், செய்யும் தவறுகள் என்று அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கவும் பகிரவும்.
    கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கோயில் பிரச்சனைகளுக்கு போராடும் ஹிந்து சகோதரர்கள் அனைவருக்கும் இந்த லிங்கை கட்டாயம் அனுப்பவும். பொதுமக்களுக்கு அறநிலையத்துறையால் கோயில்களின் பாரம்பரியம், சொத்துக்கள் எல்லாம் எப்படி அழிந்து வணிக மையங்களாக மாறி வருகின்றன என்பதை எடுத்துரைக்க இந்த வீடியோ கட்டாயம் உதவும்.

    https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

    *கோயில்களை சர்க்கார் அறநிலையாத்துறை என்னும் துறை மூலம் ஆக்கிரமித்து கோயில் சொத்துக்களை “கவனிக்கிறது”. இதுபோல அரசாங்கம் சர்ச்களையோ, மசூதிகளையோ சுரண்டுவதில்லை. ஏன் கோயில்களுக்கு மட்டும் இந்த சாபம்?

    *கோயில் சொத்துக்களை சரிவர பராமரிக்காமல், அவற்றை அரசு வேலைகளுக்கும் அரசியல்வாதிகள் வேலைக்கும் விற்று பயன்படுத்துகிறார்கள்! அக்கிரமங்களின் உச்சம் இது. கோயில் ரெஜிஸ்டர் என்னும் புஸ்தகம் பேணப்பட வேண்டும். அதில் கோயில் சொத்துக்கள் பற்றி விவரங்கள் இருக்க வேண்டும். எந்த கோயிலிலும் அறநிலையாத்துறை முறையாக பராமரிப்பதோ பேணுவதோ இல்லை. இது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

    *இந்த அறநிலையாத்துறை மதசார்பற்ற அரசால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாரபட்சமாக நடத்தும் கொடுமை ஆகும்.

    *அறநிலையாத்துறைக்கு கோயில் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. கோயில் பூஜை முறைகளையோ, விழாக்கலையோ, பிற பணிகளையோ கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை.

    *கோயிலுக்குள் பலகாரக் கடையை “பிரசாதக்கடை” என்னும் பேரில் நடத்துவது தவறு மட்டுமல்ல அசிங்கமும் ஆகும்.

    *கோயிலுக்குள் ஆகம விரோதமாக பழைய அமைப்புகளை சிதைப்பது புதிய கட்டிடங்கள் கட்டுவது மிகப்பெரிய குற்றம். குறிப்பாக அறநிலையாத்துறை அதிகாரிகளுக்கு கோயிலுக்குள் அலுவலகம் இருக்கவே கூடாது.

    *அறநிலையாத்துறை கோயிலுக்கு ஒரு வேலைக்காரர்கள். அவ்வளவே. கோயிலை தங்கள் இஷ்டம் போல எடுத்துக் கொள்ள முடியாது. நிர்வாகம் சரியில்லை என்று சட்டப்படி நிரூபித்து கோயிலை எடுத்தாலும் அதிகபட்சம் மூண்டு முதல் ஐந்து வருடத்துக்குள் மீண்டும் நிர்வாகத்தை ஒப்படைத்து கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

    இதுபோல, இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த அறநிலையாத்துறை பற்றி உள்ளது. அனைவரும் இந்த அறநிலையாத்துறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட லிங்கில் அறநிலையாத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.கோயிலில் கருத்து வேறுபாடு என்று அறநிலையாத்துறையை உள்ளே கொண்டு வந்து விடுபவர் அந்த கடவுளுக்கே துரோகம் செய்தவனாவார். அப்படி செய்பவர் கோயிலை இடித்து கோயில் சொத்தை தின்றவர்கள் என்ன ஆவார்களோ அதே நிலைக்கு ஆளாவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அந்த புத்தகத்தின் வீடியோ இணைப்பு:https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *