சேதமில்லாத ஹிந்துஸ்தானம்? – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..

“சேதமில்லா ஹிந்துஸ்தானம் – இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” – என்று பாப்பாவுக்கு சொன்னவர் பாரதியார். ஆனால் அந்நிய சக்தி நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் போது மகாகவியின் சேதமில்லா ஹிந்துஸ்தான கனவு எட்டாக் கனவோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஏற்கனவே எட்வின் அந்தோணியோ அல்பினோ மெய்னோ @ சோனியாகாந்தியின் ஆட்சியிலே, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட மூவர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை (Interlocutor’s Report) காஷ்மீரை முழுமையாக பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கும் நோக்கில் தயார் செய்யப்பட்டுள்ளது. மதம் மாற்றம் மற்றும் அயல் நாட்டு ஊடுருவல் காரணமாக அருணாச்சலபிரதேசம், நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் பகுதிகளில் வாழும் நம் தேச பிரஜைகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதோடு, இப்பகுதிகளில் காஷ்மீர் பிரச்சனையை ஒத்த பிரச்சனை உருவாகும் அறிகுறி காணப்படுகின்றது. தற்போது தெற்கே குமரிமுனையில் வாழும் பொதுமக்களின் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் பாரதத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் கடைசி மாவட்டம். 1672 சதுர கிலோ மீட்டர் நிலபரப்பை கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த ஜனத்தொகை, 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,76,034 ஆகும். நான்கு தாலுக்காக்களும், ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும், 81 வருவாய் கிராமங்களும் கொண்ட சிறிய மாவட்டம் கன்னியாகுமாரி மாவட்டம். மொத்த ஜனத்தொகையில் 14,71,228 பேர் படித்தவர்கள் ஆவர். இம்மாவட்டத்தில் மொத்தம் 3,41,206 வீடுகள் உள்ளன.

1980-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கன்னியாகுமாரி மாவட்டத்தில், கிறிஸ்தவர் எண்ணிக்கை பெரும்பான்மை அடைந்துவிட்டதால், இம்மாவட்டத்தில் தொல்லை ஆரம்பமாகியது. எந்த ஒரு பகுதியிலும், சிறுபான்மையாக இருந்த சமுதாயம், பெரும்பான்மை சமுதாயமாக மாறுகின்ற போது அப்பிரிவினர் அப்பகுதியில் போராளிகளாகவும், கிளர்ச்சி பிரிவினராகவும், தான் தோன்றித் தனமாக (defiant) நடப்பவர்களாகவும் மாறிவிடுவர். இதற்கு கன்னியாகுமாரி மாவட்டம் விதிவிலக்கல்ல.

கன்னியாகுமாரியில்; கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பதட்ட நிலை ஏற்பட காரணமாக கடந்த முப்பது ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகள் நடந்து வந்துள்ளன. முக்கியமான முதல் நிகழ்ச்சியாக, கன்னியாகுமாரிக்கருகே கடலில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் எழுப்ப திட்டமிட்டபோது, கிறிஸ்தவர்கள் அப்பாறையின் மீது சிலுவை ஒன்றை வைத்து அப்பாறையை புனித சேவியர் பாறை என்று அழைக்க தொடங்கினர். அப்பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு சின்னம் எழுப்ப 1963-ல் தேவஸ்தானம் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இப்பாறையில் சுவாமி விவேகானந்தர் வந்ததன் நினைவாக நினைவு சின்ன பட்டயக்கல் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததன் பெயரில், 7.1.1963-ம் தேதி மாண்புமிகு திரு.மா.பொ.சிவஞானம் அவர்கள் நினைவு சின்ன பட்டய கல்லை அமைத்தார். கிறிஸ்தவர்கள் வன்செயலில் ஈடுபட்டு அப் பட்டயக்கல்லை சேதப்படுத்திவிட்டு, அவ்விடத்தில் மரத்தால் ஆன சிலுவையை வைத்தனர். இறுதியில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு பாறை அமைப்பதில் இந்துக்கள் வெற்றி பெற்று 6.11.1964-ம் தேதி அடிக்கல் நாட்டினர்.

1975-ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் நினைவாலயத்திற்கு விவேகானந்த கேந்திரம் படகு விடுவதை கிறிஸ்தவ மீனவர்கள் தடுத்தனர். பிரச்சனையை சீர் செய்ய தமிழக அரசாங்கம் படகு விடும் பொறுப்பை 1981-ம் ஆண்டு தன்வசம் எடுத்துக் கொண்டது அதன் காரணமாக ஆறு ஆண்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது.

1981-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் குலசேகரத்தில் ஐக்கிய கிறிஸ்தவர் ஒற்றுமை மாநாடும் ஊர்வலமும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிறிஸ்தவ மத தலைவர்கள் இந்து மதத்தை தாக்கி பேசினார்கள். 28.2.1982-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கோடைத் திருவிழா தொடங்கியது. மண்டைக்காடு கடற்கரை அருகில் அமைந்துள்ள சகாய மாதா கோவிலில் ஒலிபெருக்கியில் இடைவிடாமல் இசை ஒலிபரப்பப்பட்டது. வடக்கு பக்கத்தில் அமைந்திருந்த பகவதி அம்மன் கோவிலை நோக்கி அதிகாரிகள் பிறப்பித்திருந்த உத்தரவுகளை மீறி இந்த ஒலிபரப்பி வைக்கப்பட்டிருந்தது. 1.3.1982 அன்று மாலை கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கேரள பெண்கள் வழக்கமாக கடலில் குளிக்க சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்கள். ஏ.வி.எம் கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த சில பெண் யாத்திரிகர்கள் மான பங்கப் படுத்தப் பட்டனர். இதனால் விளைந்த கொந்தளிப்பை அடுத்து காவலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை அடுத்து ஈத்தாமொழி மற்றும் மேலமணக்குடி பகுதியில் கிறிஸ்தவர்கள் அத்துமீறி உருவாக்கிய கலவரத்தில் மீண்டும் 15.3.1985-ம் தேதி மேலமணக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது.

எனவே தமிழக அரசாங்கம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிரந்தரமாக சீர் செய்ய விரும்பி ஓய்வுபெற்ற நீதிபதி பி.வேணுகோபால் அவர்களின் தலைமையில் ஆணைக்குழு ஒன்றினை விசாரணைக்காக நியமித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி திரு.பி.வேணுகோபால் ஆணைக் குழுவின் அறிக்கை 21.9.1985-ம் தேதி தமிழக அரசின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஏற்று தமிழக பொது (சட்டம் ஒழுங்கு-B) துறை தனது 29.4.1986-ம் தேதியிட்ட அரசாணை நிலை எண் 916-ஐ பிறப்பித்து, பின்னர் அதன் நகல் தமிழக அரசின் அனைத்து துறைகள், முதலமைச்சரின் தனிச் செயலர், தமிழக உள்துறையின் அரசு செயலர் மற்றும் சிறப்பு ஆணையர், சென்னை காவல்துறை இயக்குநர் மற்றும் கன்னியாகுமாp மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.

அரசாணை நிலை எண் 916-ன் பிரிவு 2(2)-ன் படி “வெவ்வேறு மதத்தினர் வழிபடும் ஆலயங்கள் மற்றும் பொது வழிபாடுகள் மிகவும் அருகருகே உருவாவதை தடைசெய்யலாம்”. பிரிவு 2(1)ன்படி “(கிறிஸ்தவ) மதமாற்றத்தால் இனக் கலவரங்கள் ஏற்படுவதாலும் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்படுவதாலும், மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் வன்முறை, ஏமாற்றுதல் போன்ற காரணங்களால் அல்லது பொருளுதவி என்ற போர்வையில் மதமாற்றத்தை தூண்டுதல் என்பன போன்ற காரணங்களால் செய்யப்படும் மதம் மாற்றத்தை தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது போல, தமிழ்நாட்டிலும் இதனை பின்பற்றி ஓர் சட்டம் இயற்றலாம்.”

பிரிவு 2(11)-ன்படி “இனக்கலவரங்களின் போது நடுநிலைமை வகித்தும் சார்பற்ற முறையிலும் நடந்து கொள்ள போதுமான அனுபவம் மிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடும் அதிகாரிகளை இனக் கலவரங்களினால் பதட்ட நிலை ஏற்படும் இடங்களில் நியமிக்கலாம்”.

பிரிவு 2(4)ன் படி “இருதரப்பட்ட மத வழிபாடு ஆலயங்களில் ஒலிபெருக்கி அமைப்பதை கட்டுபடுத்த வேண்டும் இதற்காக காவல் துறை சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரலாம்”.

மேற்படி பரிந்துரைகளையும் சட்ட, நீதி, நிர்வாகம் மற்றும் காவல்துறை சம்பந்தப்பட்ட பரிந்துரைகளையும் மதமாற்ற தடுப்பு சட்டம் இயற்றபட வேண்டும் என்ற பரிந்துரையையும் ஏற்றுக் கொண்டு, தமிழக அரசாங்கம் நீதிபதி பி.வேணுகோபால் விசாரணை குழுவின் கண்டுபிடிப்புகளின் படி 1.3.1982 அன்று மண்டைக்காடு பகுதியிலும், 15.3.1982 அன்று மேலமணக்குடியிலும் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நியாயமானதுதான் என்று ஆளுநரின் ஆணைப்படி ஏற்றுக் கொண்டது.

உரிய நேரத்தில் பிரச்சனைகளை உரியவாறு கண்டறிந்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருப்பின், கன்னியாகுமாரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டிற்கு பின் பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் தமிழக அரசாங்கம் தமிழக பொது (சட்டம்; ஒழுங்கு) துறையின் அரசாணை நிலை எண் 916-ஐ 29.4.1986-ம் தேதி பிறப்பித்ததோடு தன் பணி முடிந்து விட்டது என்று கண்களை மூடிக் கொண்டது. ஓய்வுபெற்ற நீதிபதி பி.வேணுகோபால் விசாரணை குழுவின் பரிந்துரைகளை அமல் செய்வதில் கன்னியாகுமாரி மாவட்ட நிர்வாகத்தை சரிவர வழிநடத்தாமல் சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கை கடைபிடித்தது.

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் மதம் மாற்றமும், மத மாற்ற ஜெப கூட்டங்களும் தீவிரமடைந்தது. பல பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் திடீர் சர்ச்சுகள் ஸ்தாபிக்கப்பட்டு வருவது கிராமப் புரங்களிலும், நகரப்புரங்களிலும் இந்துக்களுக்கு பெரும் அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. தோவாளை தாலுக்காவில் எட்டாமடை பகுதியில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் புராதனமான அஷ்ட காளீஸ்வரி அம்மன் கோவிலின் மதில் சுவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் கிறிஸ்தவ வெறியர்கள் இடித்து தரைமட்டமாக்கி கோவில் நிலத்தை அபகரித்தார்கள். அகஸ்தீஸ்வரம் தாலுகா இடலாக்குடி பகுதியில் இஸ்லாமிய பெண்ணை காதலித்து மணந்து, இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்த ரமேஷ்குமார் என்ற இந்து சகோதரரின் கழுத்தை அறுத்து இஸ்லாமியர்கள் கொன்ற கோர சம்பவம் இந்த ஆண்டுதான் அரங்கேறியது. விளவங்கோடு தாலுகா செருகோல் பஞ்சாயத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி திருவட்டார் போலீசாரின் பாதுகாப்புடன் திடீர் சர்ச்சில் ஜெபக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இராஜக்கமங்கலம் ஒன்றியத்தில் ஹிந்து மக்களுக்கு சொந்தமான பண்ணையூர் பகுதியில் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிக்க தமிழக அரசே முன்னின்று உதவி செய்தது. இன்னும் பல பகுதிகளில் மதம் மாற்றமும், திடீர் சர்ச்சுகளும், அனுமதி இல்லாத ஜெபக்கூட்டங்களும் கிறிஸ்தவர்களால் நடத்தப்படுவது தொடர்ந்து மாவட்டத்தின் அமைதியை குலைத்து வருகிறது.

கிறிஸ்தவர்களுக்கு நீதி, இந்துக்களுக்கு அநீதி என்ற முறையில் திடீர் சர்ச்சுகளையோ, பெந்தகொஸ்தே சபைகளையோ கிறிஸ்தவ மதமாற்ற கொள்கைகளையோ தட்டிக் கேட்கவும், கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் என்றைக்குமே திராணி இருந்ததில்லை. அதுபோலவே இம்மாவட்டத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் என்றென்றைக்கும் ஹிந்துக்களுக்கு தொடர்ந்து சங்கு ஊதுவது நடந்து வருகிறது. ஜஸ்டிஸ் வேணுகோபால் விசாரணை குழுவானது “கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான இடங்களில் வழிபாட்டு தலங்களை புதிதாக ஏற்படுத்துவதில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே போட்டி மனப்பான்மை உள்ளது. எனவே புதிதாக வழிபாட்டு இடங்களை ஏற்படுத்துவதையும் அமைப்பதையும் அல்லது தற்போது உள்ள இடத்தை அல்லது கட்டிடத்தை புதிய வழிபாட்டு இடமாக மாற்றுவதையும் முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மோதல்கள் சமூக அரசியலில் செல்வாக்கு பெறுவதற்காக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட போராட்டமாகும்” என்று சுட்டிக் காட்டியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் அவர்கள் மீது நித்திரவிளை காவல்நிலையத்தார் கிறிஸ்தவர்களின் பொய்யான புகாரை ஏற்று கொலை வழக்கு பதிவு செய்திருப்பது மாவட்டம் முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை ஒன்றியம், நடைக்காவு மற்றும் சாத்தன்கோடு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். நடைக்காவு சந்திப்பிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் “ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயம், சாத்தன்கோடு” அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைச் சார்ந்த எட்டு குடும்பங்கள் மாத்திரமே, சாத்தன்கோடு பகுதியில் தாமசிக்கும் இந்து குடும்பங்கள் ஆகும். மற்றவர்கள் யாவரும் கிறிஸ்தவர்கள் தாம்.

1982ம் ஆண்டு ஏற்பட்ட மண்டைக்காடு மதக் கலவரங்களுக்குப் பிறகு, மாவட்டத்தில் எதிர் காலங்களில் மதக்கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி திரு.பி.வேணுகோபால் ஆணைக்குழு, கன்னியாகுமரி மாவட்டத்தை “மத உணர்வு நுட்பம்” (Religious Sensitive) மிகுந்த மாவட்டமாக பிரகடனம் செய்தது.

இந்நிலையில் 26.8.2012-ம் தியதி மாலை சுமார் 7.00 மணிக்கு சாத்தன்கோடு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திலிருக்கும் திரு.ஞானமுத்து என்பவரது வீட்டில் வைத்து, “ஆலங்கோடு நடைக்காவு சி.எஸ்.ஐ. சபையின்” கிளை கூட்டம், மேற்படி சபை போதகரின் தலைமையில் சுமார் நூறு பொதுமக்களுடன் உரிய காவல் நிலையத்தில் உரிய அனுமதி பெறாமல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் சாத்தன்கோடு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமது ஆலயத்திற்கு அருகே இதே போன்ற சி.எஸ்.ஐ. சபையின் ஜெபகூட்டம் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, சாத்தன் கோட்டிலிருக்கும் ஞானமுத்துவின் வீட்டருகே கூட ஆரம்பித்தார்கள். மேற்படி பகுதி கொல்லங்கோடு மற்றும் நித்திரவிளை காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்டதால் தகவல் கிடைத்ததும் இரு நிலைய அதிகாரிகளும் திரு.ஞானமுத்து அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

இந்நிலையில் நடைக்காவு சந்திப்பில் இருக்கும் நியூ ஹேர் ஸ்டைல் சலூனில் இந்து மதத்தைச் சேர்ந்த கோபி மகன் முருகன் சவரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எட்வின் ராஜ் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆயுதங்களோடு நடைக்காவு சந்திப்பிற்கு வந்தார்கள். முருகனைப் பார்த்ததும் எட்வின்ராஜ் மற்றும் கண்டால் தெரியும் நபர்கள், “லே மஹாவிஷ்ணு கோயில்காரன் முருகன் இங்கிருக்கான். அவனை கொல்லுங்கல” என்றபடி முருகனை சலூனிலிருந்து இழுத்து வெளியே போட்டு தாக்க ஆரம்பித்தார்கள். இந்நிலையில் அப்பகுதியில் நின்றிருந்த இந்துக்கள் முருகனை காப்பற்ற முயற்சி செய்தார்கள். இதனால் ஏற்பட்ட கைகலப்பில் திரு.எட்வின் ராஜ் அவர்கள் காயமடைந்தார்கள். பின்னர் சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது. எட்வின் ராஜின் மரணத்திற்கும் திரு.தர்மராஜ் அவர்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாதொரு தொடர்பும் இல்லை. சம்பவம் நடக்கும் போது அவர் நடைக்காவு சந்திப்பில் இல்லை. மேற்படி கைகலப்பு சம்பவம் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் நடைக்காவு சந்திப்பில் இருமதத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே நடந்த கைகலப்பில் தற்செயலாக நடந்தது. மரணமடைந்த எட்வின் ராஜ் அவர்கள் முதலில் மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜிற்கு கொண்டு செல்லப் பட்டிருக்கிறார்.

மதத்துவேஷம் காரணமாக நிரபராதிகளை குற்றவாளிகள் ஆக்கும் நோக்கத்தில் திருவனந்தபுரம் போகும் வழியில், எட்வின் ராஜ் அவர்கள் உடன் சென்றவர்களாலேயே கொல்லப் பட்டிருக்கக் கூடும் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆலங்கோடு-நடைக்காவு சி.எஸ்.ஐ சபைக்காரர்கள் மதத்துவேஷம் காரணமாக மேற்படி மரணம் குறித்து பொய்யான தகவல்களோடு புனைந்து திரு.ஜெயராஜ் அவர்கள் மூலம் கொடுத்த புகாரை ஏற்று, நித்திரவிளை காவல் நிலையத்தார் குற்ற எண்-229,2012 என்ற குற்ற வழக்கினை, பாஜக மாவட்ட தலைவர் திரு.தர்மராஜ் அவர்களை முதல் குற்றவாளியாக்கி, தர்மராஜ் முதல்பரின் மீது இ.த.ச பிரிவுகள், 147, 148, 153A, 294(b), 307 மற்றும் 302 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். உண்மைக்குப் புறம்பான வகையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் மீது பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்துள்ளது, இம்மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி கொலை சம்பவம் முழுக்க முழுக்க காவல்துறையின் அஜாக்கிரதையால் ஏற்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் கிறிஸ்தவ மதமாற்ற முகவர்கள் மற்றும் சபைகளின் கூட்டம் நடத்துவது சமீப காலங்களில் அதிகத்துள்ளது.

தமிழக அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு ஜஸ்டிஸ் வேணுகோபால் விசாரணை குழுவின் பரிந்துரைகளை ஏற்று பிறப்பித்த பொது (சட்டம் ஓழுங்கு) துறையின் அரசாணை நிலை எண் 916 ஐ உடனடியாக முழுமையாக நிரந்தரமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் செய்ய வேண்டும். இல்லையேல் இம்மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை எட்டாக் கனவாகிவிடும் என்பது துல்லியம். இதற்கு கிறிஸ்தவ சபையினர் மேற்கொண்ட மதமாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக, நமது தேசத் தந்தை காந்தியடிகள் அவர்கள் பின்வருமாறு கூறியதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.

“மதமாற்றம் என்பது, அது எங்கு நிகழ்ந்திருப்பினும் சரி, அந்த மதமாற்றங்களானவை எவ்வாறு சொன்னாலும் ஆத்மார்த்தமான (மெய்யுணர்தல் மூலம் நிகழ்ந்த) செயலல்ல, அவை மாறுவோர் தங்களுடைய வசதிக்காக மதம் மாறிய செயல்கள் ஆகும். எனக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்து, நான் சட்டம் இயற்ற கூடுமானால், மதமாற்றங்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவேன் என்பது உறுதி. இந்து குடும்பங்களை பொறுத்தவரை கிறிஸ்தவ சமய பரப்பு, பணி அமைப்பு, சமய பிரச்சாரம் செய்து அக்குடும்பத்தில் சமய மாற்றத்தை ஏற்படுத்துமானால், குடும்பம் நிலைகுலைவதற்கு ஏதுவாகிறது. அக்குடும்பத்தினரில் பலர் வேறு சமயத்தை தழுவும் போது நடை உடை பாவனைகள், மொழி, உணவு வழக்கங்கள் ஆகியவற்றை பொறுத்தவரையில் வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்யும்”

மகாத்மா காந்தி கூறுவதற்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளதற்கு காரணம் மதம் மாற்றம் மட்டுமே. தொடரும் மதம் மாற்றம் காரணமாக உள்ளூர் பழக்க வழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் தொல்லை ஏற்பட்டுள்ளதோடு, உள்ளூர் அமைப்புகள் கலைக்கப்பட்டு திருவிதாங்கோடு பகுதியில் பெரிய நாயகி அம்மன் கோவில் பெரிய நாயகி மாதா தேவாலயமாக மாற்றப்பட்ட போது குமரி மாவட்ட ஹிந்து சமுதாயம் மட்டற்ற வேதனை அடைந்தது. இதன் காரணமாக இம் மாவட்டத்தில் பிளவு ஏற்பட்டு, இந்து சமுதாயத்தில் நிலையான சிதைவு உருவாகியிருக்கின்றது. அதன் காரணமாக சமுதாய அமைப்புகள் கலைக்கப்பட்டு, பண்பாடுகள் குறித்த மோதல்கள் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. ஆகையால் வகுப்பினரிடையே மதமாற்றம் நிலையான ஒற்றுமையை முழுமையாக கலைத்துவிட்டது. எனவே பிரச்சனையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசாங்கம் தமிழக அரசு பொதுத்துறை அரசாணை நிலை எண்-916ஐ நிரந்தரமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் செய்ய வேண்டும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி “மதமாற்றம் ஒரு வன்முறை” என்று கூறியுள்ளார்., காஷ்மீரின் ஒரு பகுதியை நாம் இழந்ததை போல, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மதமாற்றம் என்ற வன்முறையின் காரணமாக பாரதத்தின் தென் குமரியையும் நாம் நிரந்தரமாக இழக்க நேரிட்டுவிடுமோ என்ற அச்சம் விஷ்வரூபம் எடுத்துள்ளது.

[கட்டுரை ஆசிரியர் திருமதி.  விக்டோரியா கௌரி பா.ஜ.க மகளிர் அணியின் தேசிய செயலர்.] 

15 Replies to “சேதமில்லாத ஹிந்துஸ்தானம்? – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..”

  1. வேணுகோபால் அவர்களின் பரிந்துரையை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும்.ஏன், மொத தமிழ் நாட்டிலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

  2. THE POISON OF CHRISTIAN POLITICAL VIOLENCE DIRECTED AND FINANCED BY FOREIGN FUNDS THROUGH THE NGOs WILL DESTROY HINDUISM AND INDIA.SECULARISM IS NOT BEING BLIND TO THE SPREAD OF CHRISTIAN POISON.

  3. அன்பு இந்து சகோதரர்களே

    இந்து நாடான இந்தியாவில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது நமது மூதாதையர் கட்டிஎழுப்பிய சனாதன தர்மத்துக்கு ஏற்ப்பட்டநிலையை பார்த்தீர்களா கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மை, பரசுராம க்ஷேத்திரம் என கூறப்படும் கேரளாவில் இந்துக்கள் சிறுபான்மை,ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மேகாலயா,நாகலாந்து,மிசோரம்,ஏற்கனவே கிறிஸ்தவ மாநிலங்கலாகிவிட்டன.திரிபுரா,அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அஸ்ஸாம் போன்ற கிழக்கிந்திய மாநிலங்களின் நிலையை சொல்லவேண்டியதில்லை.இதற்க்கு அனைத்து இந்திய இந்து மடாலயங்களும் சகல தத்துவார்த்த பேதங்களையும் மறந்து ஒன்றுகூடி பொதுவான முடிவு ஒன்றுக்கு வந்து இந்த மத மாற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.இல்லாவிடில் கேரளா மாநிலம் போன்றே மற்ற மாநிலங்களும் ஆகிவிடக்கூடாது அல்லவா.இன்று இலங்கையல் வடகிழக்கு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மை ஆகிக்கொண்டு வருகிறார்கள். அங்கு பௌத்தமத ஆதிக்கம். அமெரிக்காவில் முஸ்லிம்களை தாக்கி படம் எடுத்ததற்காக இன்று உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள் கிளர்ந்து எழுந்துள்ளன.எவ்வளவு ஒற்றுமை.ஏன் இந்த ஒற்றுமை நம்மிடம் இல்லாமல் போய்விட்டது.ஈழத்தில் தமிழ் இந்துக்களுக்கு ஏற்ப்பட்டஅவல நிலையை எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். என்ன நடந்தது. காஷ்ம்மீரில் இன்று என்ன நடக்கிறது இப்படியாக ஒவ்வொரு விஷயமும் செக்குலரிசம் என்ற போர்வையில் நடக்கிறது. இதை தடுக்க இந்து மத இயக்கங்கள் என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

  4. பொதுவாகவே கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எந்த இடத்தில் பெரும்பான்மையாக இருந்தாலும் அவ்விடம் ஒட்டுமொத்த இந்திய கூட்டமைப்பில் இருந்து விலக துடிக்கும் உதரணமாக காஷ்மீர்,மிசாரம் நாகலாந்து,அருனச்சலப்ரதேஷம் ஆகியவற்றை கூறலாம் தற்போது அதே நிலை தான் குமரிக்கும் ஏற்பட்டிருகிறது மதசார்பின்மை என்கிற பெயரில் நமது அரசும் உடந்தையாக இருக்கிறது ..இப்பிரச்சனை குமரியில் மட்டுமல்ல தூத்துக்குடி,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் நடக்கிறது

    நமஸ்காரம்.
    Anantha Saithanyan

  5. இது வரை ஆட்சியில் உள்ள எந்த அரசும் ஹிந்துக்களை கருத்தில் கொள்ளவில்லை.
    சென்னையில் தரமணியில் ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளேயே 5,6, கிறிஸ்தவ மத மாற்று அமைப்புகளின் வழிபாட்டுத் தலங்கள் என்று சொல்லிக் கொண்டு கூடாரங்களில் ஆரம்பித்து இன்று கட்டிடங்களாக உருவெடுத்து உள்ளன. மிகப் பெரும் அபாயத்தை ஹிந்துக்களுக்கு உருவாக்கியிருக்கிறார்கள். ஹிந்துக்கள் ஒன்று பட்டு இதை எதிர் கொள்ள வேண்டும்.
    வாழ்க பாரதம்.

  6. கன்னியாகுமரி மாவட்டத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை துணிவாகவும் உறுதியாகவும், அருமையாக எழுதியிருக்கிறார் சகோதரி விக்டோரியா கௌரி அவர்கள்.

    அன்னிய மதத்தைத் துறந்து தாய்மதமாம் இந்து மதம் தழுவிய பாரம்பரியம் அவருடையது. தேசிய உணர்வை முன்னெடுக்கும் அரசியல் இயக்கமான பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர் அவர், அவரது தலைமையின் கீழ் தமிழக பாஜக மகளிர் அணி மேன்மேலும் மாநிலம் முழுதும் வளர வேண்டும் என்பதே ஒரு பாஜக தொண்டனாக எனது ஆசை.

    வாழ்க பாரதம்! வளர்க பாஜக!

    நன்றி.

  7. a detailed one by our sister. this article must be printed and distributed in tamilnadu. we need people like this sister to address people . then bjp in tamilnadu can grow fast

  8. நல்ல கட்டுரை. சரியான நேரத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒரு தகவல் பிழை இருக்கிறது என்று நினைக்கிறேன். அரசு படகு போக்குவரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டது 1977 ல் என்று நினைக்கிறேன்.சரி பார்க்கவும். போக்குவரத்தை மட்டுமல்ல. படகுகளையும் தன்வசம் அடுத்துக்கொண்டது. அதற்க்கு compensation கொடுக்கவே இல்லை. நீதி மன்றம் உத்தரவு போட்ட பின்பும் அதை கொடுக்கவில்லை.அதன் மேல் போடப்பட்ட நீதி மன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில்.

  9. இந்தக் கட்டுரை குமரி மாவட்டம் சார்ந்த பல செய்திகளைத் தெளிவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உணர்வூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. கட்டுரைக்கு மிக்க நன்றி.

  10. Religion is distinct from faith, belief, honesty as many as good human qualities. Follow periyar, the ever born great tamil leader.
    How any one forgets once forced topless women of kanyakumari district.. Do u want to see us to return to that culture. Better become an example to start with.

  11. EV Ramaswamy Naicker’s Mother tongue was Kanada. NOt Tamil.
    he was a believer in God .
    Not an atheist.
    His so-called atheism was only for the public consumption.
    . He did not follow what he preached

  12. வேணுகோபால் அவர்களின் பரிந்துரையை .இந்தியா முழுவுதும் நடைமுறைபடுத்த வேண்டும்.
    மத மாற்றம் தடை செய்ய வேண்டும்

    நன்றி சகோதரி அருமையான கட்டுரை

  13. The writer of the article, is partially true and partially wrong.Being a christian, I strongly believe that religion is one’s own right and nobody has the right to criticize that unless the person reports that he changed his religion due to someone’s force. And I too object the constant meetings held by sudden Christians churches that are being created but the same fits for the other religions as well. There was only occasional very few instances were Christian vs Hindu violence occurred. But the writer must remember that inter religion marriages are still happening and both the Hindus and Christians are blood blood relations. Don’t ever try to provoke this difference. We kanyakumari District people leave in peace and harmony and mostly everybody is secular. Work for peace and harmony in the region and don’t create differences.

  14. The writer seems to have biased to her core and written with Hidden agenda of creating divided violence. Almost everyone in the district of kanyakumari are blood relatives irrespective of the religion they follow or beliefs or status. This is one of the self proclamations by highly selfish individuals, we keep hearing in the district now. I would appreciate, if the author could bring out the unity of people in the district irrespective of any differences. After all everyone is human, and everyone is having their own life in their way. Somebody more concerned about their neighbours home never been useful for their life in their sufferings. The sad part is these individuals dont care others sufferings and they don’t want others to care for some one’s sufferings.
    ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது . பணபித்து மதம் பிடித்து அலைய வைக்கும் . –இது பழமொழி

  15. இந்திய ஒரு இந்து நாடு இந்துக்களுக்கு சொந்தமானது. இந்துக்கள் எதார்த்தமாக இருப்பதால் கிருத்துவம் போன்ற தீய சக்திகள் நம்மை அடிமைப்படுத்த நினைக்கிறது . நாம் நமது வீரத்தைக் காட்டவேண்டும். சிறிய அளவிலான போர் தனம் நமக்கு வேண்டும். அதுதான் நமது வீரத்தை பறை சாற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *