வாழ்த்துக்கள் நரேந்திர மோடி!

நரேந்திர மோடியைப் போன்றதொரு தலைவர் நமக்கு அடிக்கடி வாய்ப்பதில்லை. ஒரு தேசத்தின் அரசியல் வரலாற்றில், அதன் கொந்தளிப்புகளின் ஊடாக, மக்களின் கனவுகளையும் அபேட்சைகளையும் சுமந்து, தங்கள் சுய உழைப்பாலும் தியாகத்தாலும் இலட்சியவாதத்தாலும் மேலேறி வருகிறார்கள் அவர்கள். அந்தத் தருணத்தில் வரலாற்றின் போக்கையே மாற்றுகிறார்கள். கனவுகளை விதைத்து, அவற்றை மெய்ப்படச் செய்கிறார்கள்.

குஜராத் மாபெரும் தலைவருக்கு மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி மாலை சூட்டுயிருக்கிறது. நாளைய இந்தியா2014-ல் தில்லியில் அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

TH_FB_narendra_modi

18 Replies to “வாழ்த்துக்கள் நரேந்திர மோடி!”

  1. மனத்தில் தூய்மை, செயலில் நேர்மை, பேசுவது வாய்மை, நா வன்மை,
    தேச பக்தி, நம் கலாச்சாரத்தில் பற்று, பெரியோர்களை மதிக்கும் பண்பாடு, அரசியலை அரசியலாக நினைக்கும் உயரிய பண்பு, தேனீ போன்ற சுறுசுறுப்பு ,எறும்பு போன்று உழைப்பு, மக்களின் மேல் பேரன்பு -நூறாண்டு காலம் வருவானா என்று நாம் ஏங்கிய தலைவன் இதோ.
    அவனை அரியணையில் ஏற்ற வேண்டியது இனி நம் கடமை.
    இல்லையெனில் மடமை.
    சென்ற நூற்றாண்டில் ஒரு காவி வீரன் நரேந்திரன் வந்து பாரத அன்னைக்காக கனவு ஒன்று கண்டான்
    இந்த நூற்றாண்டில் வந்தே விட்டான் மற்றொரு நரேந்திரன் அவனது கனவை நனவாக்க
    வாழ்க பல்லாண்டு மோடி

    இரா. ஸ்ரீதரன்

  2. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்! தங்கள் சேவை நம் தேசத்திற்கு தேவை.
    மாண்புமிகு அய்யா வாஜ்பாய் வழி நின்று, அன்னையின் மூவர்ணக்கொடி பட்டொளி வீச , தாங்கள் தில்லியில் அரியணை ஏறும் நாள் தொலைவில் இல்லை.

  3. வாழ்த்துக்கள்! இந்தியாவிற்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது.
    வளர்ச்சியை மனதில் வைத்து வாக்கு அளிக்க வேண்டும், வெறும் பொய் வாக்குறுதிகளை அல்ல. மக்களை ஏமாற்றும் மனிதர்களிடம் இருந்து நாட்டைக் காக்க பாரதிய ஜனதா கட்சி தன்னை த் சரியாக தயார் செய்து கொள்ள வேண்டும்.
    அனைவரும் வெறும் எண்ணிகையை வைத்து கருத்துக்கள் சொல்லலாம், ஆனால் 2007 தேர்தலில் கேசுபாய் படேல் கட்சிக்கு உள் இருந்து பலவித சங்கடங்களை மோதிக்கு ஏற்படுத்தினார். 2012 ல் தனிக் கட்சி தொடங்கி மறை முகமாக காங்கிரசுடன் கூட்டு வைத்து செயல் பட்டார்.
    ஆனாலும் மக்கள் மோதியையும் அவரின் வளர்ச்சியை நோக்கிய செயல் பாட்டையும் மட்டும் பார்த்து வாக்கு அளித்துள்ளனர்.
    நன்றி.
    வாழ்க பாரதம்!

  4. மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோதியின் வெற்றி மகத்தானது. போலி மதச்சார்பின்மை வாதிகள், புரட்டு ஊடகங்களின் பிரச்சாரத்திற்கு எதிராக, உட்பகை ஆகியவற்றினையும் வென்று குஜராத் முதல்வராக பதவியேற்கும் ஸ்ரீ நரேந்திரர் பெற்றிருக்கும் வெற்றியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவரை பாஜக தனது பிரதமர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கும் என்று நம்புகிறேன். வலுவான மக்களின் பெருமதிப்பைப் பெற்ற பிரதமராக திரு மோதி விளங்குவார் தேசிய அளவில் இந்தியத்திரு நாட்டிற்குத்தேவைப்படும் துணிச்சலான பலமான பிரதமராக விளங்கக்கூடிய திறமை, தகுதி ஆண்மை திரு மோதி அவர்களுக்கு மட்டுமே இன்று உள்ளது. ஆகவே ஒப்பாரும் மிக்காருமற்ற மாமனிதர் ஸ்ரீ நரேந்திர மோதியின் சீரிய தலைமை ஏற்போம். ஒரு சிறிய வேண்டுகோள். எனது வட இந்திய நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் மோடி என்று சொல்லாமல் மோதி என்றே அழைக்கிறார்கள். எனவே யார் அவர் மீது மோதினாலும் வெற்றிகண்ட ஸ்ரீ க்ருஷ்ணரைபோல நவீன இந்தியாவில் விளங்கும் ஸ்ரீ நரேந்திரரை ஸ்ரீ மோதி என்றே எழுதும்படி அனைவரையும் வேண்டுகிறேன்
    வாழ்க பாரதம் வெல்க தேசியம்.
    சிவஸ்ரீ.

  5. முற்றிலும் உண்மை. நரேந்திர மோடியின் வெற்றி, நல்லவர்களின் மனதில் இருக்கும் எதிர் கால நம்பிக்கையின் வெற்றி…

    அது இருக்கட்டும்! இடையில் என்னவாயிற்றோ தெரியவில்லை. இரண்டு நாட்களாக நான் தமிழ் ஹிந்துவில் நுழைய முயற்சிக்கும் போது malicious software has been deducted. This may harm your computer என்ற எச்சரிக்கை வந்ததே! தெய்வாதீனமாக இன்று நான் காணும் தமிழ் ஹிந்து அப்படியே இருப்பதில் மகிழ்ச்சி.

    நன்றி,
    பிரஸ்!!!

  6. இந்த மாபெரும் தலைவனை குஜராத் புரிந்து கொண்டது போல இந்தியா முழுமையும் புரிந்து கொண்டால் அது நமது தேசத்துக்கே மிகவும் நல்லது.இதை நமது மக்கள் புரிந்து வாழ இறைவன் அவர்களுக்கு மனத் தெளிவைத் தரட்டும்.
    கூட இருக்கும் கூட்டணி காரர் நிதிசுக்கு இந்த எண்ணம் முதலில் வரவேண்டும் .
    நிதிஷுடைய வெற்றி உடன் உள்ள பிஜேபி ,லாலு வெறுப்பு இரண்டின் மூலம் என்பதை இவர் உணர வேண்டும்.
    பிஜேபி தலைவர்களும் தங்களது கனவுகளை இந்த நாட்டுக்காக விட்டுக் கொடுத்து உழைக்க முன்வரவேண்டும்.
    ஈஸ்வரன்,பழனி.

  7. நரேந்திர மோடியின் இந்த வெற்றியின் சிறப்பு என்னவெனில்-

    1. நான்காவது முறையாக முதல்வர்.

    2. எந்த ஒரு பொருளையும் இலவசமாக தருவதாக , தேர்தல் வாக்குறுதி கொடுக்கவில்லை.

    3. முதல்வராக மூன்று பொதுதேர்தல்களை சந்தித்து வென்றுள்ளார்.

    4. படேல் சமுதாயத்தினரின் வாக்கை பாஜகவிடமிருந்து பிரிக்க சதி செய்த காங்கிரசின் திட்டமிட்ட முயற்சி படுதோல்வி அடைந்தது..

  8. ஹிந்து ஹ்ருதய சாம்ராட் என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்கள் வெகு விரைவில் பாரத ப்ரதமமந்த்ரியாக வர வாழ்த்துக்கள்.

  9. தன் மனதில் பட்டதை துணிவாக,தெளிவாக எழுதியிருக்கும் சாரு நிவேதிதாவின் இந்தப் பதிவை மனம் திறந்து பாராட்டுகிறேன் –

    நரேந்திர மோடி – https://charuonline.com/blog/?p=58

  10. மோடியின் வெற்றியினால் பிஜேபி மகிழ்வதற்கு ஏதுமில்லை. பிஜேபி மத்திய தலைவர்கள் இதனைப் பெரிதாக்க விரும்பவில்லை.

    இந்த ஆண்டு நடந்த தேர்தல்களில், உத்தர்கண்ட், ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் ஆட்சியை, மோசமாக ஆண்டதால், இழந்துள்ளது. உ பி தேர்தலில், 2007 தேர்தலை விட குறைவான இடங்களையே பெற்றுள்ளது. பஞ்சாபில், அகாலி தளத்துடன் ஆட்சியைப் பிடித்தாலும், பிஜேபியின் சொந்தக்கணக்கு 2007 ஆண்டை விட குறைவு.

    அடுத்த ஆண்டு (2013), மிகுந்த சோதனை மிக்க ஆண்டாக பிஜேபிக்கு இருக்கும். கர்நாடகா (ஏப்ரல் / மே ), ம.பி, ராஜஸ்தான், தில்லி (நவம்பர் / டிசம்பர் ) தேர்தல் நடக்க உள்ளன. கர்நாடகா பூட்ட கேஸ். ம.பி மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு.
    ராஜஸ்தான் – ஆட்சியின் எதிர்ப்பால் பதவிக்கு வந்தால் உண்டு. தில்லியில், ஷீலா தீட்சித் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளார்.

    2014 மே மாதம் மக்களவைத் தேர்தல். மிகவும் முக்கியமான தேர்தல்.

  11. இந்திரா காங்கிரஸ் கட்சி குஜராத் தேர்தலின்போது சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு வழங்குவதாக கூறி பிரச்சாரம் செய்தது. அந்த பொய் பிரச்சாரமும் எடுபடவில்லை.

  12. \\\\இந்த ஆண்டு நடந்த தேர்தல்களில், உத்தர்கண்ட், ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் ஆட்சியை, மோசமாக ஆண்டதால், இழந்துள்ளது. \\\

    ஸ்ரீ நாகராஜன், உத்தராகண்ட் மற்றும் ஹிமாசல் ப்ரதேஷ் போன்ற ராஜ்யங்களில் பாஜகவின் ஆட்சி மற்றைய ராஜ்யங்களில் ஆட்சி செய்த / செய்து வரும் காங்க்ரஸ் ஆட்சியை விட மேல் தான்.

    தோற்றதற்கு முக்ய காரணம் உள் கட்சி குடுமி பிடி சண்டை. ஆனால் இது பாஜக என்ன அதன் முந்தைய அவதாரமான பாரதீய ஜனசங்க் காலத்திலிருந்து இயக்கத்தை படுத்தி வரும் வ்யாதி.

    ஸ்ரீ பால்ராஜ் மாதோக் மற்றும் ஸ்ரீ நானாஜீ தேஷ்முக் போன்ற பெரியோர்களெல்லாம் கூட பல சமயங்களில் இந்த ப்ரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    இப்போது தான் பெரிய லிஸ்டே உண்டே. சர்வ ஸ்ரீமான் கள் சங்கர்சிங்க் வகேலா, சுரேஷ்பாய் மெஹ்தா, கேஷுபாய் படேல், கோவர்த்தன் தாஸ் ஜடஃபியா, கல்யாண்சிங்க், கோவிந்தாசார்யா,பாபுலால் மராண்டி, மதுகோடா, சன்யாசினி உமாபாரதி. இதுவெல்லாம் போதாதென்று சமீப சேர்க்கை ஸ்ரீ எடியூரப்பா. அப்பப்பா – குடுமிபிடி சண்டையிலிருந்து பாஜகவிற்கு விமோசனமிருந்தால் ஹிந்துஸ்தானத்திற்கு நல்லது.

    ராமஜன்ம பூமி இயக்கத்திற்குப் பின் பாஜகவிற்கு எண்பத்து சொச்சம் இடங்கள் கிடைத்த போது, சங்கத்தில் ஒரு ஹிந்திப் பாட்டு தேசமுழுதும் பாடப்பட்டது. ‘பத் கா அந்திம் லக்ஷ்ய நஹீ ஹை”. முடிவான லட்சியம் பதவியல்ல என்று அர்த்தம். இந்தப்பாட்டு எல்லா பாஜக அரசியல் வாதிகளின் காதிலும் கேழ்க்கும் படி உரக்கப்பாடப்பட்டால் நல்லது.

  13. நமது இந்திய மத்திய அரசு அதிகாரம் கையில் இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் செய்யும் கூத்துக்கள் சொல்லி மாளவில்லை. இதற்கு என்று விடிவு காலம் ஏற்படும் என்று தெரியவில்லை ?

    முதல் மந்திரிகள் மாநாட்டில் இருந்து தமிழக முதல்வர் வெளிநடப்பு செய்ததாக செய்தி வந்துள்ளது. சென்ற முதல்வர்கள் மாநாட்டில் அஸ்ஸாம் மாநில முதல்வர் பேச 30 நிமிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவரோ தீய சக்தியான இந்திராகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த அழுக்கு. அஸ்ஸாம் மாநிலத்தைவிட மூன்று மடங்கு பெரிய மாநிலமான தமிழகத்தையும், அதன் பிரச்சினைகளையும் பற்றி பேச , தமிழக முதல்வருக்கும் பத்து நிமிடம், சிறிய பகுதிகளான பாண்டிச்சேரி, கோவா, லட்சத்தீவு, அந்தமான், டெல்லி, மேகாஅலையா, சிக்கிம், திரிபுரா போன்ற எல்லா மாநில அல்லது யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் தலா பத்து நிமிடம் என்பது ஒரு கேலிக்கூத்து.

    உ பி , மகாராஷ்டிரம், பீகார் , மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் , ஆந்திரம் போன்ற பெரிய மாநிலங்களின் முதல்வர்களுக்கும் அதே பத்து நிமிடம் என்பது காங்கிரஸ் அரசின் மூளை இல்லாத செயலையே காட்டுகிறது. சென்ற முறை நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் நடந்ததே ஒரு அயோக்கியத்தனம். இந்த முறை மேலும் அயோக்கியத்தனம் செய்துள்ளனர் மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் கட்சியினர்.

    எல்லா மாநில முதல்வர்களையும் டெல்லிக்கு அழைத்து பேசவைக்கும்போது , சில விஷயங்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதாலேயே இத்தகைய மீட்டிங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பத்து நிமிஷத்துக்குள் மேல் பேச முடியாது என்றால் , இத்தகைய கூட்டத்துக்கு பதிலாக ஒரு பாக்ஸ் அல்லது இமெயில் மூலம் கடிதம் அனுப்பிவிட்டு , அந்த கடிதத்தை பிரதமர் படிக்கிறார் அல்லது படிக்கவில்லை என்ற உண்மை கூட தெரியாமல் சும்மா இருக்க வேண்டும். இது என்ன ஜனநாயகமா ? அசல் காட்டுமிராண்டி தனமாக இருக்கிறது. நமது அரசியல் சட்டத்தை திருத்தி, இதுபோன்ற ஊழல் மற்றும் சர்வாதிகார அரசை , நீதிமன்றங்கள் மூலம் கலைக்க வழிவகை செய்ய வேண்டும். நம் நாட்டை விட்டு காங்கிரஸ் என்ற தீய சக்தி ஒழிந்தால் நம் நாடு சிறிதாவது முன்னேற வழி ஏற்படும்.

  14. அன்புள்ள அத்விகா , பிஜேபியும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 (ஐம்பது) லட்சம் வீடுகளை (நலிந்தோருக்கு இலவசமாக ) கட்டிக் கொடுப்பதாக கூறியுள்ளது. ஒரு சிறு கணக்கு. 50 லட்சம் வீடுகளில் சராசரியாக 4 நபர்கள் வசிப்பதாக வைத்துக் கொள்வோம் . மொத்தம் 2 கோடி வருகிறது. அதாவது, 33% மக்கள் தொகை (குஜராத்தில் ஜனத்தொகை 6 கோடி ) இன்றைய நிலவரப்படி மிக ஏழைகளாக உள்ளனர். இதனை செய்து முடிப்பது இயலாத காரியம். தமிழ் நாட்டில் குடிசை மாற்று வாரியம் கட்டியது போல் தான் செய்து தர முடியும்.

    2002, 2007, 2012 ஆண்டு மாநிலத் தேர்தல்களில் பிஜேபி ஏறக்குறைய 66% இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால், 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் 55% இடங்களையே பிடிக்க முடிந்தது.

    பிஜேபி காங்கிரசுக்கு மாற்றாக இல்லாமல் காங்கிரசாகவே மாறி விட்டது. இதுதான் பரிதாபம்.

  15. “முதல் மந்திரிகள் மாநாட்டில் இருந்து தமிழக முதல்வர் வெளிநடப்பு செய்ததாக செய்தி வந்துள்ளது”

    These guys will make a big propaganda about Our CM’s attitude and finally end up saying she is arrogant. Common people should not believe this kind of criticism on her. She sticks to her guns but at the same time, she does not do which will harm the people. Though she would have taken few bad decisions in the past, she had been completely changing her attitude towards common people.

    The decision of walking out from the meet is severely criticised by the media as a question upon her arrogance. But people who have their common sense will completely disagree with it. An article in today’s issue of THE HINDU stated that Dr. Singh poo poohed her complaint of restricting timelines. This kind of articles clearly reveal that there is a major part of the Media backs Congress Govt just for their own welfare but not caring about the real needs of the nation.

    Mr. Modi has supported our CM in her prompt agitation to restriction of timelines in NDC meet. Because in 10 minutes time not even a company’s economic growth can be discussed with a prper analysis. Then think about somebody completing their speech about a state like Tamilnadu’s major challenges, needs, steps to be taken for socio – economic reforms & resources allocation. If someone tells you that could be done in 10 minutes, then it is merely an eye-wash meet.

    Jayalalitha is not interested in eye-wash meets, she needs a support from the centre in several major issues but their level of support & treatment to opposition governing states is very evident from their time allocation. The central govt & its crooked supporters of the media are to be totally disregarded in all sorts.

  16. நம் வீட்டில் எதோ சிறு மனஸ்தாபமோ குறையோ உள்ளது என்பதால் எதிர் வீட்டுக் காரனை தலையில் தூக்கி வைத்துக் கொள்ளலாமா?
    காங்கிரஸ் எப்படி அறுபது வருடங்களாக நாட்டை சீரழித்து விட்டது என்று நாம் பார்த்தாகி விட்டது.
    ஹிந்து விரோதம், சிறுபான்மையினர் என்று சொல்லி அவர்களுக்கு ஏராளமான சலுகைகள், அவர்களை ஹிந்துக்களுடன் சேராமல் பார்த்துக் கொள்வது, ஊழலோ ஊழல், ஜனநாயக ஸ்தாபனங்களை குட்டிச்சுவராக்கியது ,பயங்கர வாதிகளைக் கண்டு கொள்ளாமல் விடுவது, ஹிந்துக்களை கிள்ளுக் கீரையாக நினைப்பது, ஹிந்து சாதுக்களின் மீதும், ஹிந்து இயக்கங்களின் மீதும் பொய் வழக்குகள் போடுவது,ஸ்ரீலங்கா, மலேசியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ் , ஆப்கனிஸ்தான் , ஏன் அமெரிக்கா , ஆஸ்த்ரேலியா ,ரஷ்யா .ஜெர்மனி ,அயர்லாந்து முதலிய நாடுகளில் கூட ஹிந்துக்களின் மேல் தாக்குதல் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது, அல்லது அதற்கு உதவுவது ( ஸ்ரீலங்கா), சில்லறை வணிகம் அது இது என்று வெள்ளைக்காரப் பண முதலைகளை இங்கு ஊடுருவி கொள்ளை அடிக்க விடுவது, குடும்ப ஆட்சி- இத்யாதி , இத்யாதி
    இதை விட பீஜி பீ ஆட்சி ஒன்றும் மோசமாக இருக்காது .
    குறைந்த பட்சம் அவர்கள் தேச விரோதிகளை ஆதரிக்கவோ வளரவோ விடமாட்டார்கள் .

  17. அன்புள்ள திரு நாகராஜன் ,

    குஜராத் மாநில பாஜக சட்டசபை தேர்தல் அறிக்கையை தயவு செய்து பார்க்கவும்.
    கீழே வீட்டு வசதி பற்றி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள முக்கிய வார்த்தைகள் வருமாறு:-

    1.” including people’s participation ”

    2.”by taking a nominal contribution of Rs.50,000 only ”

    3. “at an affordable rate to industrial labourers,

    ” எதுவுமே முற்றிலும் இலவசம் ” என்று கழகங்கள் பாணி அறிவிப்பு எதுவும் இல்லை.

    தாங்கள் மோடிக்கு எதிராக செயல்படும் சீனக்கம்யூனிஸ்ட் ஆதரவு பத்திரிக்கையான ” தி ஹிந்து ” போன்ற சில நாட்டுவிரோத பத்திரிகைகளில் அடிக்கடி தவறான செய்தியை படித்திருப்பீர்களோ என்று அஞ்சுகிறேன். வலைத்தளத்திலேயே அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் முழுவதுமாக கிடைக்கிறது. பரபரப்பான மீடியா அரைகுறையாக பல செய்திகளை வெளியிடுகிறது. அதனால் தான் பல தவறான கருத்துக்கள் பரவுகின்றன.

    பிஜேபி சங்கல்ப பத்ரா 2012.

    “My own home in my area”- is a dream of every individual and for fulfilling this dream we will
    implement Mukhymantishri Grih Samrudhhi Yojana.
    o An ambitious project of Rs. 33,000 crores to be implemented by setting up a separate
    department to be headed by the Chief Minister
    o For ensuring transparent and timebound allocation, a State level Housing regulatory authority
    shall be set up
    o The project will be implemented including people’s participation and giving relaxation in GDCR,
    FSI and land prices
    o Total 50 lakh pucca houses will be built up in next five years including 28 lakh houses in rural
    area and 22 lakh houses in urban area
    o Well developed colonies with good basic amenities and houses of 36 sq. meter each will be
    provided to 7.5 lakh slum dwellers in urban area.
    o 7.5 lakh houses consisting of 2 rooms and kitchen will be built up for economically weaker
    sections with annual income upto Rs. 1 lakh by taking a nominal contribution of Rs.50,000 only
    o 3.5 lakh houses will be constructed under Urban Affordable Housing for urban lower middle
    class having an annual income above Rs. 1 lakh but upto Rs. 2.50 lakh.
    o 3.5 lakh 2 BHK houses will be constructed for middle class families with an annual income above
    Rs. 2.50 lakh but less than Rs. 5 lakh in urban area.
    o Housing Township scheme for providing housing at an affordable rate to industrial labourers,
    workers, skilled workers etc, near their work place.
    In 40 years, the earlier governments had given hardly 12 lakh houses to people (totaling both urban and
    rural) i.e. on an average 30,000 houses per year while the present BJP government has given 22 lakh
    houses in last 11 years at an average of 1 lakh houses per year. Those having a track record of only
    30,000 houses in a year are promising today that they will construct 3 lakh houses per year. Had they
    done this in 40 years, today none would have been houseless.” மீடியாக்கள் பலரையும் குழப்பி தங்கள் விருப்பத்துக்கு மக்களை வளைய வைக்க முடியுமா என்று முயல்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *