விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்

விஸ்வரூபம் திரைப்படம் எதிர்பாராத விதத்தில் (அல்லது திரைப்பட தயாரிப்பாளரின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க?) பெரிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க் கிழமை சென்னை நீதிமன்றம் சொல்லப் போகும் தீர்ப்புக்காக சினிமா ரசிகர்கள் வாய்பிளந்து காத்திருக்கிறார்கள்.

பொதுஜன அளவிலும், இணையத்திலும் கமல்ஹாசன் என்ற திரைப்படக் கலைஞரின் கலை சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழர்கள் ஒட்டுமொத்தமாக பொங்கி எழுந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுவும் அந்தக் குரல்கள் தமுமுக, தவ்ஹீத் ஜமாத் மற்றும் இன்னபிற தமிழக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை நேரடியாக எதிர்த்து எழுகின்றன என்னும் போது உண்மையில் என்ன நடக்கிறது என்றே நமக்குப் புரியவில்லை.

தான் “கலாசார தீவிரவாதத்திற்கு” உட்படுத்தப் படுவதாக புலம்பி கமலஹாசன் எழுதும் கடிதத்திலும் சரி, அவரது அடுத்தடுத்த அறிக்கைகளிலும் சரி கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மிரட்டல் விடுக்கும் அராஜக இஸ்லாமியர்களையும், வன்முறையாளர்களையும் கண்டித்து ஒரு வாசகம் இல்லை. மாறாக, ”நான் என்றைக்குமே இஸ்லாமியர்களின் நலனை விரும்புபவன் தான்; நான் உங்கள் சேவகன்; ரொம்ப காசு செலவழிச்சு படம் எடுத்து விட்டேன்; மன்னிச்சு கருணை காட்டுங்க கனவான்களே” என்ற ரீதியில் கூழைக் கும்பிடு போடுகிறார் இந்த சுயமரியாதைக் காகிதப் புலி.

pooja kumar viswaroopam 1தமிழகத்திற்கு வெளியே பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் பலர் ஏற்கனவே தங்கள் விமர்சனங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் படத்தை “உலகத் தரத்துக்கு” கொண்டு போயே தீருவது என்று கச்சை கட்டியிருக்கும் கமலஹாசன் அதற்கேற்ப இந்தப் படத்தின் களமாக அமெரிக்கா, சூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஒரு தூய வஹாபிய இஸ்லாமிய அரசு எந்த அளவுக்கு கொடூரமானது, வக்கிரமானது, மனிதத் தன்மைக்கே எதிரானது என்பதை காட்சிபூர்வமாக சினிமா மூலம் பார்ப்பது செய்தி ஊடகங்களில் வழக்கமாக பதிவு செய்யப் படுவதை விட அதிக தாக்கத்தையும் அதிர்வையும் சராசரி தமிழன் மனதில் ஏற்படுத்தலாம். படத்தில் கமல்த் தனமான வழக்கமான பிரம்மாண்டங்கள், மசாலா காட்சிகளோடு நிறைய லாஜிக் ஓட்டைகளும் உண்டு. அம்சமான நாயகிகள் படத்திற்கு உண்மையிலேயே அழகு சேர்க்கிறார்கள். குமட்டல் ஏற்படுத்தும் முத்தக் காட்சிகளும், புரட்சிகரமான “காதல்” காட்சிகளும் இல்லை என்பதை ரசிக அடிப்பொடிகள் ஒரு பெரிய குறையாகவும், மற்றவர்கள் பெரிய நிம்மதியாகவும் கருத இடமிருக்கிறது.

தமிழ்ப் படத்தில் வரும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரளமாகத் தமிழ் பேசியே ஆக வேண்டும் என்ற லாஜிக் இருக்கிறது. மற்ற லாஜிக் ஓட்டைகளை சகித்துக் கொள்ளலாம், ஆனால் இது மிக மிக முக்கியம் அல்லவா? எனவே, தனது பயிற்சிக் காலத்தில் கோவையிலும் மதுரையிலும் தங்கி இருந்ததாக ஒரு முக்கிய பயங்கரவாதி கூறுகிறானாம். இதற்குத் தான் தமிழக இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் அதிகபட்ச மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது. இஸ்லாமிய ”உம்மா” தேசங்களின் எல்லைகளைக் கடந்தது, அகிலம் தழுவியது என்று அவர்கள் தானே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்? அந்த லாஜிக் இங்கே மிகச் சரியாகத் தானே பொருந்துகிறது? பிறகு ஏன் கோபம் என்று புரியவில்லை.

இந்த விவகாரம் குறித்து நமது இணைய நண்பர்களில் சிலர் தெரிவித்த முக்கியமான கருத்துக்களையும் நமது பார்வையையும் இணைத்து இங்கே அளிக்கிறோம்.

திருமலை ராஜன் (பேஸ்புக்கில்):

”விஸ்வரூபம் திரைப்படத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தடை செய்திருப்பதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஆனால் அவர்கள் இதை முதல் முறையாகச் செய்யவில்லை. இது கடைசி முறையாக இருக்கவும் போவதில்லை. சென்ற சில மாதங்களாக எல்லையில் நம்மைக் காவல் காக்கும் நம் வீரர்களின் தலைகள் கொய்யப் பட்ட பொழுதும், சென்னையில் சாலைகள் மறியல் செய்யப் பட்டு அராஜகம் நடந்த பொழுதும், ஓவைசி என்றொரு பயங்கரவாதி இந்துக்களை அழித்து விடுவேன் என்று கொக்கரித்த போதும் இணையத்தில் பெரும்பாலான நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்களுக்கு பிடித்த ஒரு சினிமா நடிகரின் படத்துக்கு தடை வந்த பொழுது மட்டும் அனைவரும் பொங்கி எழுகிறார்கள். சரி இப்பொழுதாவது உணர்ச்சி வந்திருக்கிறதே என்று ஆறுதல் பட வேண்டியதுதான். ஒரு சினிமாவையும், சினிமா நடிகரையும், படைப்புச் சுதந்திரத்தையும் விட நம் தேசமும், அதன் வீரர்களும், சுதந்திரமும் முக்கியம் என்ற உணர்வு இப்பொழுதாவது அனைவருக்கும் வரட்டும். கமலஹாசன் இந்துக்களின் உணர்வுகளை பல முறை புண்படுத்தியுள்ளார். இப்பொழுதாவது அவர் இந்து மதத்தினரின் சகிப்புத்தன்மைக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

viswaroopam-movie-1சமீபத்திய ஜூனியர் விகடன் இதழில் “விஸ்வரூபம்: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன?” என்ற ரிப்போர் வந்துள்ளது. படத்தை பார்க்க வந்த முஸ்லிம் அமைப்பினருக்கு தனது அலுவலகத்திலேயே தொழுகை நடத்தவும் கமல்ஹாசன் ஏற்பாடு செய்து தந்தாராம். தொழுகையை முடித்து விட்டு, படத்தைப் பார்த்த முஸ்லிம் அமைப்பினர் தமிழக முஸ்லிம்களை சம்பத்தப் படுத்துவது போன்று உள்ள சில காட்சிகளை மட்டும் நீக்கினால் போதாது; படத்தையே முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்ததாகத் தெரிகிறது. இதன் மூலம், தாலிபான்கள் உட்பட உலகின் மூலைமுடுக்களிலெல்லாம் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறித்த உண்மையான, நன்கு ஆவணப் படுத்தப் பட்ட செய்திகள் கூட ஒரு தமிழ்த் திரைப் படத்தில் இடம் பெறக் கூடாது என்ற நிலைப்பாட்டை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அவர்களது உண்மை முகத்தை தமிழகம் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை அவர்களே ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

இந்திய தேசிய உணர்வு கொண்ட, சுதந்திரமாக சிந்திக்கும் சில முஸ்லிம் சகோதரர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். மேற்படி அடிப்படை வாத இயக்கங்களை தீவிரமாக கண்டித்து இணையத்தில் ஆங்காங்கு அவர்கள் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களை அல்ல, படத்தைத் தடை செய்யக் கோரும் முஸ்லிம் அமைப்புகளைத் தான் தமிழக அரசு முஸ்லிம்களின் பிரதிநிதியாகக் கருதுகிறது. தமிழக வெகுஜன முஸ்லிம் சமுதாயமும் அப்படியே கருதுகிறது. இணையத்திற்கு வெளியே, கலை சுதந்திரத்திற்கு ஆதரவாக முஸ்லிம்களிடமிருந்து கவனிக்கத் தக்க வகையில் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது  மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இந்தப் படத்தை தணிக்கை செய்த சென்சார் போர்டு குழுவில் உறுப்பினராக இருந்த, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஜின்னா என்பவர் கூட, சென்சார் போர்டு குழுவின் செயல்பாட்டில் குறைபாடு உள்ளது என்று இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹர்ஷ் தமிழ் (பேஸ்புக்கில்):

சென்னையில் உள்ள லலித் கலா அகாதமியில் 2008-ம் ஆண்டு மார்ச்சு மாதம் 3-ம் தேதி மாலையிலிருந்து 9-ம் தேதி வரை ஃபிரான்ஸு நாட்டிலிருந்து வந்து இந்தியாவில் குடியுரிமை பெற்றுள்ள மூத்த பத்திரிகையாளர் திரு ஃபிரான்ஸ்வா கோதியே அவர்களின் அமைப்பான (FACT – Foundation Against Continuing Terrorism) ஃபேக்ட் ”அவுரங்கசீப் – அவர் இருந்த படியே” (Aurangazeb – As he was) என்கிற ஓவியக் கண்காட்சியை நடத்தியது. 4-ம் தேதியும் 5-ம் தேதியும் பிரச்சனை இல்லாமல் நடந்த கண்காட்சிக்கு ஆற்காடு நவாப் மூலம் 6-ம் தேதி பிரச்சனை ஏற்பட்டது.

“ஹார்மனி-இந்தியா” என்கிற “மத நல்லிணக்க” அமைப்பை நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஆற்காடு நவாப் என்ற மனிதர் 6-ம் தேதி மாலை 3 மணியளவில் கண்காட்சி அரங்கிற்கு வந்து அங்கிருந்த கண்காட்சி அமைப்பாளர்களிடம் விதண்டாவாதம் செய்தார். பின்னர் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று கூறிச் சென்றவர் “தௌஹீத் ஜமாத்”, “மனித நீதி பாசறை” “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” போன்ற இயக்கத்தவரை அரங்கிற்கு அனுப்பி வைத்தார். பிறகு அப்போதைய திமுக அரசிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கச் செய்தார்.

FACT-chennai-exhibition-attack

ஒரு பக்கம் முஸ்லிம் அமைப்பினர் கூட்டம் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட மறுபக்கம் அரசு மூலம் அழுத்தம் தொடர, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் படை சூழ வந்து ஓவியங்களைப் போட்டு உடைத்து கண்காட்சியை மூடிச் சென்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஃப்ரான்ஸ்வா கோதியே அவர்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த நான்கு பேரைக் கைதும் செய்தனர். அதில் மூன்று பேர் 50-வயதுப் பெண்மணிகள். பிறகு சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் தில்லி அருங்காட்சியக ஆவணக் காப்பகத்தில் இருக்கும் இஸ்லாமிய நூல்களின் படி வரையப் பட்ட ஓவியங்களே. இதே கண்காட்சி தில்லி, மும்பை, பெங்களூர் உட்பட இந்தியாவின் பல நகரங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அரசும், காவல்துறையும் அத்து மீறி நடந்துகொண்டன.

சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக அவர்களின் அராஜகங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவைகளை ஊக்குவிக்கவும் செய்வதில் திமுக அரசும் அதிமுக அரசும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல. அவுரங்கசீப் கண்காட்சியை இழுத்து மூடியது திமுக அரசு. விஸ்வரூபம் படத்தைத் தடை செய்துள்ளது அதிமுக அரசு. ஆளும் கட்சிகள் தான் வேறே தவிர அவற்றின் அணுகுமுறையிலோ, இஸ்லாமிய இயக்கங்களின் அராஜகத்திலோ எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

இப்போது கமலஹாசனுக்கு வரிந்து கொண்டு வரும் கருத்துச் சுதந்திரப் போராளிகள் அப்போது வாய் மூடி மௌனம் சாதித்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் இந்த விவகாரம் கருத்து சுதந்திரம், ஆனால் அது கருத்து சுதந்திரம் அல்ல; அது ஹிந்துத்துவ வெறியர்களின் செயல்பாடு மட்டுமே. நல்ல அறிவு ஜீவிகள், நல்ல போராளிகள்!

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களை தூற்றவும் அவர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தவும் சற்றும் தயங்காத பேர்வழி கமலஹாசன். அவருக்காக இன்று வாய்கிழிக்கும் முட்டாள் ஹிந்துக்களுக்கு இதோ ஒரு பரிசு – கமலின் பரிசு:

மூன்று தினங்களுக்கு முன்னால் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தபோது கமலஹாசன் சொன்னது: “விநாயகர் என்ற ஒரு கடவுளே இல்லை; ஹிந்துத்துவ வெறிக்காக விநாயகர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அரசியலுக்காக ஏற்படுத்தப்பட்ட கடவுள் விநாயகர்”

இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கும் எல்லா கலையுலக பிரமுகர்களும் ”கருத்து சுதந்திரம், நூறு கோடி பட்ஜெட், உலக நாயகன்” என்று அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் அஜித் மட்டுமே வித்தியாசமாக தனது அறிக்கையில் பிரசினையின் ஆணிவேரைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் – ”இந்திய அரசியல் சட்டம் நமது இந்திய திருநாடு ஒரு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும், இதன் மூலமாக ஒரு இந்திய குடி மகனுக்கு சமநீதி, உரிமை மற்றும் சமத்துவம் என்றும் உத்தரவாதம் அளிக்கின்றது . ஆனால் இன்றைய நிலை என்ன தெரியுமா? இந்த உத்தரவாதங்கள் திரிக்கப் பட்ட வாசகங்களும், வார்த்தைகளும், புறம் பேசி பிரித்தாள்வதும், சுயநல போக்கும் தான் என்றாகி விட்டது. நமது நாடு மத சார்பற்ற நாடுதானா என்ற ஐயம் வாக்கு வங்கி அரசியலை பார்க்கும் போதும், உணரும் போதும் தோன்றவே செய்கிறது… நமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையும் நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு நினைத்து பார்க்க இதுவே சரியான தருணம்!” என்கிறார். போலி மதச்சார்பின்மையே இந்தப் பிரசினைக்கு மூல காரணம் என்பதை வெளிப்படையாக பேசிய அஜித்துக்கு நமது பாராட்டுக்கள்.

********

கார்கில் ஜெய் எழுதுகிறார்:

மாற்றுத்திறனாளிகளை, அவர்களின் மனதை முடமாக்கும் வார்த்தைகளான சப்பாணி,குருடர்,செவிடர் என்று மிகவும் முரட்டுத் தனமாக விளித்து வீதியெங்கும் போஸ்டர் ஒட்டுவார்கள் கிறிஸ்தவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வியாதிகளினின்று விடுதலை அளிப்பதாகவும், அவர்களின் வியாதிகளுக்குக் காரணம் சைத்தான்களான ஹிந்துக் கடவுள்களே என்றும்  கிருஸ்துவ பாதிரிமார்கள் சுவிசேஷக் கூட்டங்களில் தெரிவிப்பார்கள். நம் எல்லாருக்கும் தெரிந்த இந்த கிருத்துவ மோசடியைக் கூட ஹிந்து சாமியாரே செய்வதாக படம் எடுத்தவர்தான் இந்தக் கமலஹாசன். ஹிந்துக்களை கிண்டல் செய்யவும், மதமாற்றத்திற்கு துணைபோகவும் கிருத்துவ டிவி சேனல்கள் இந்தக் காட்சியை மட்டும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின. யூட்யூபில் ‘kadhalaa kadhaala comedy’ என்று தேடினால் முதலாவதாக இந்த ஹிந்து சாமியாரைக் கிண்டல் செய்யும் இந்தக் காட்சியே வரும். கிறிஸ்தவர்களால் ஹிந்துக்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு அயோக்கியத்தனத்தை, பாதிக்கப்பட்டவர்களான ஹிந்துக்களே செய்வதாக மாற்றிக் காண்பிக்க மனதளவில் எவ்வளவு குரூர இயல்பு இருக்க வேண்டும்? இந்த குரூர புத்திக்குச் சொந்தக் காரர்தான் கமல்.

Viswaroopam_31074rs

நம் புண்ணிய பூமியின் தர்மம் நிலைக்க தியாகம் செய்தவர்கள் பலர். அவர்களின் தியாகத்தாலும், ரிஷி, சித்தர்களின் தவ வலிமையாலுமே நம் புண்யபூமி பலரின் படையெடுப்பையும் கடந்து எஞ்சி நிற்கிறது. வந்தார்களெல்லாம் வென்றார்கள். ஆனால் யாரேனும் நின்றார்களா? எல்லோரும் அழிந்தே போனார்கள். எஞ்சியிருப்பது நம் தர்மம் மட்டுமே.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நடந்த வரலாறு என்ன? சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பட்டு வேதநெறிக்கு, சைவ சமயத்திற்குத் திரும்பிய திருநாவுக்கரசர் பெருமானைக் கொன்றிட சமணர்கள் முயன்றனர். மகேந்த்ரவர்ம பல்லவன் அவருக்கு மரண தண்டனை விதித்தான். யானை அவரை இடறிக் கொல்ல மறுக்க, தூக்கி எறிந்த சுண்ணாம்புக் காளவாயும் நாதன் உறையும் இமயம்போல் தணிய, பல்லவ மன்னன் குழம்பிப் போனான். திருநாவுக்கரசரைக் கடலில் அமிழ்த்திக் கொல்ல முடிவுசெய்தான். ஒருவேளை நீரும் அவருக்கு அடிபணிந்தால்? எஞ்ஞான்றும் உயிர் பிழைக்கக் கூடாதென கல்தூணில் கட்டி கடலில் வீசினான். கடவுள் உள்ளிருக்கையில் கல்லென்ன செய்யும்? கடல்தானென்ன செய்யும்? கல்தூணே நீரில் மிந்ததுவந்து அப்பரைக் கரையில் சேர்த்தது.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே!

என்று அப்பர் பெருமான் பாடினார். ஆக நடந்த வரலாறு என்னவென்றால், சைவராகிய திருநாவுக்கரசரை பிற மதத்தினர் தூணில் கட்டி கடலில் அமிழ்த்தி கொலை செய்ய முயற்சி செய்தது.

இதை அப்படியே நேர்மாறாக மாற்றி, பாதகம் செய்தவர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களான சைவர்களும் சோழமன்னன் வேத நெறியின் மற்றொரு பிரிவாகிய வைணவப் பிரிவைச் சேர்ந்த பக்தர் ஒருவரைத் தூணில் கட்டி கடலில் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்று தசாவதாரம் படத்தில் காட்டியவர்தான் இந்தக் கமலஹாசன். சைவர்களுக்கு எதிராக நடந்த கொடுமையை சைவர்களே வேத மதமாகிய வைணவத்திற்கு எதிராகச் செய்வதாகக் காட்ட எவ்வளவு குரூர இயல்பு இருக்க வேண்டும்? இந்த குரூர புத்திக்குச் சொந்தக்காரர்தான் கமல். அதுவும் படத்தை தொடங்கும் முன் “அடித்துக் கொள்வதற்கு பிற மதத்தினர் இல்லாததால், சைவர்களும் வைணவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்த காலம்” என்று கமலஹாசனின் மிரட்டும் குரலில் அறிவிப்பும் வரும். அதாவது பிறரைக் கொல்லுதல் வரலாற்றுக் காலங்களில் இருந்தே சைவர்களின் இயல்பாம்! இப்போது இருப்பது போல் அந்தக் காலத்தில் சண்டை போடுவதற்கு ஏதுவாக முஸ்லீம்களோ அல்லது கிருத்தவர்களோ இல்லையாம். அதனால் வைணவர்களை சைவர்கள் கொன்றார்களாம். எவ்வளவு பகிரங்கமான, அழுத்தந்திருத்தமான பொய்!

இது சினிமாதானே? இதில் என்ன பெரிய உண்மை, பொய்? இதனால் என்ன பாதிப்பு எற்படப் போகிறது? என்னும் கேள்வி எழுவது இயல்பு. ஆனால் சினிமா என்னும் சக்தியின் பாதிப்புதான் தமிழ்நாட்டின் அரசு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம்மில் யாராவது, நக்கீரனை எரித்த திருவிளையாடலில் வரும் ‘புலவன் தருமி’ எப்படி இருந்திருப்பார் எனபதை நாகேஷின் முகத்தை மறந்துவிட்டு கற்பனை செய்து பார்க்க முடியுமா? சினிமாவில் நடப்பது போலவே எம்ஜியார் காப்பாற்றுவார் என்று மக்கள் நம்பி ஓட்டுப் போட்டது எல்லாரும் அறிந்ததே. இந்த உதாரணங்கள் சினிமாவின் தாக்கம் தமிழ்நாட்டு மக்களிடையே மிக அதிகம் என்பதை ஆணித்தரமாக விளக்குகின்றன. இதனால் இன்றைய சினிமா, நாளைய நம்பிக்கையாகவும், அடுத்த தலைமுறையினர்க்கு வரலாறகவும் மாற வாய்ப்பிருக்கிறது. ஹிந்துக்களே கொலைகாரர்களாக வரலாற்றால் புரிந்துகொள்ளப்பட முகாந்திரம் இருக்கிறது. இந்த சூழலில் இவ்வாறான நிகழ்வுகள் ஹிந்துக்களின் மேல் அபாண்டமாகப்பழி சுமத்தும் விஷயம் என்ற கண்ணொட்டத்துடன் அணுகினால் மட்டுமே, இது நாளய வரலாற்று உண்மையாவதை தடுக்க முடியும். ஆனால் இதை ஹிந்துக்கள் செய்வதே இல்லை.

கடவுளின் பெயரால் கொலை செய்வது ஹிந்து மதத்தில் மட்டும்தான் இல்லை. பிற எல்லா மதங்களிலும் இருக்கிறது. இயேசுவின் படை என்று கிருத்துவர்களும், அல்லாவின் படையாக ஜிகாதிகளும் கடவுளின் பெயர் சொல்லி கொலை செய்யக் கூடியவர்கள். அனால் அப்படியே தலை கீழாக அன்பே சிவம் படத்தில் கிறிஸ்தவர்கள் ஹீரோவைக் காப்பாற்றுவார்கள். ஹிந்து வில்லனோ ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சொல்லி கொலை செய்ய ஆள் அனுப்புவான், என்று படம் எடுத்திருந்தார் கமலஹாசன். இது எவ்வளவு குரூரமான கற்பனை

கமலின் குரூர புத்தி மட்டுமே அவர் இவ்வாறெல்லாம் செய்வதற்குக் காரணம் இல்லை. அவரின் போலியான மனக்குரலும், பொய்யான உணர்ச்சி வசப்படுதல் எல்லாவற்றக்கும் காரணம் அவரின் அகந்தை. அகந்தையும், போலித்தனமும் உண்மையை மறைப்பதால் கமலஹாசன் கொடுத்த எல்லா பேட்டிகளிலும் அவரின் உளறல் அதிகமாகவே இருக்கும்.

விருமாண்டி படம் எடுக்கும் பொது பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அளித்த பேட்டியில் கமலஹாசன் தமிழர் பண்பாட்டைப் பற்றி இழிவாகப் பேசினார்: ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மாறும் பண்பாடு தமிழ்ப் பண்பாடு, ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு தமிழ்ப் பெண்டிர் மார்பை மூடும் ஜாக்கெட் அணிந்ததில்லை, ‘சும்மா’தான் இருந்தார்கள், இப்போது அதுதான் தமிழ்ப் பண்பாடு என்று மூடிக் கொள்கிறார்கள் என்றார்.

இது உண்மையா? ஐரோப்பியர்கள் காட்டு மிராண்டிகளாய் நாகரீகமற்றுத் திரிந்து கொண்டிருந்த சங்ககாலம் தொட்டே இந்தியா முழுதும் துணிமணிகள் பரவி இருந்தன. பண்டை இலக்கியங்களில் பெண்களின் இளமார்பினை மூடும் உடைக்கு வம்பு, கச்சு என்றெல்லாம் பெயர் இருந்தந்து.

”வம்புடைக் கண்ணுருத் தெழுதரு முலை” (மூடியிருக்கும் துணியை மீறி மேல் எழும் மார்பகம்) என்கிறது அகநானூறு.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவரும் மார்பை பெண்கள் மறைக்கும் மரபை எழுதியுள்ளார்:

”கடாஅக் களிற்றின்மேற் கண்படாம் மாதர் – படாஅ முலைமேல் துகில்” – குறள், 1087.

ஆனால் கமலகாசனுக்கு மட்டும் நம் தாய்மார்கள் எல்லாரும் அரை நிர்வாணமாக அலைந்ததாகவே தெரிந்திருக்கிறது.

pillaiyar_statueஅடுத்து இப்போது விநாயகர் சதுர்த்தி என்று ஒன்று இல்லவே இல்லை.. ஹிந்துக்கள் கலவரம் செய்வதற்காக ஏற்பாடு செய்ததுதான் விநாயகர் சதுர்த்தி என்று மீண்டும் சொல்லி இருக்கிறார்

கேட்ட கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பேசியது அவ்வளவும். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிய மிக எளிய புரிதல் கொண்டவனுக்குக் கூட பிள்ளையார் வழிபாடு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு இருந்து வந்துள்ளது தெரியுமே. ஔவையார் பாடல் உட்பட எத்தனை இலக்கியங்கள் விநாயகரைப் போற்றுகின்றன? பிள்ளையார்பட்டி, காஞ்சி கைலாச நாதர் கோயில் முதல் தஞ்சைப் பெரிய கோயில் வரை எத்தனை கோயில்களில் புராதனமான விநாயக சிற்பங்கள் உள்ளன? இருந்தும் இவ்வளவு குரூரமாக பிள்ளையார் சதுர்த்தி இல்லை என்று பேச, எவ்வளவு ‘தான்’ என்ற அறிவை மறைக்கும் அகந்தை வேண்டும்? இத்தகைய ஒருவர் எப்படி தன்னை கலைஞன் என்று அழைத்துக் கொள்கிறார்?

தற்போது எதிர்ப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே வக்கிர புத்தியும், அகந்தையும் கொண்ட கமலஹாசனுக்கு ஒட்டுமொத்தமாக கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கும் ஹிந்துக்கள் நிலை சரியானதல்ல என்பதே என் கருத்து”

********

ஆம். தனது கருத்து சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் அனைவரும் இந்துக்கள் மட்டுமே என்பதை இப்போதாவது கமலஹாசன் உணர வேண்டும். இதுவரை ஹிந்துக்களின் உணர்வுகளை குரூரமாகவும், வக்கிரமாகவும் புண்படுத்தியதற்கு மன்னிப்பையும், இனி அவ்வாறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழியையும் வாங்கிக் கொண்டு அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளிப்பதே சரியான ஹிந்து நிலைப்பாடாக இருக்கும்.

தமிழகம் அமைதிப்பூங்காவாக அல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சொர்க்கபூமியாகி விட்டிருக்கிறது என்பதை இந்த விவகாரம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. 2012 செப்டம்பரில் அமெரிக்காவில் முகமது நபியை அவதூறு செய்யும் வகையில் திரைப்படம் வெளீயிடப் பட்டது என்பதைக் காரணம் காட்டி சென்னை மாநகரில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக அராஜக கலவரத்தில் இதே இஸ்லாமிய அமைப்புகள் ஈடுபட்டன. இதனால் இரு வாரங்களுக்கும் மேலாக அமெரிக்க தூதரகப் பணிகள் முடக்கப் பட்டு, சென்னை நகர பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாயினர். இதற்குக் காரணமானவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இப்போது, இந்த தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் தூண்டுதல் காரணமாகவும், மாநில அரசே அவர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்து விட்டது என்பதை வைத்தும் தான், மற்ற சில அண்டை மாநிலங்களிலும் இத்திரைப்படத்திற்கு எதிராக ஆங்காங்கு உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியுள்ள. ஆக, தமிழக அரசின், காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கு, தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு முக்கிய கேந்திரமாக ஆவதற்குத் தான் வழிவகை செய்து கொண்டிருக்கிறது. 1998 கோவை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அத்தகைய ஒரு சாத்தியம் ஏற்பட்ட போது காவல் துறையின் துரித நடவடிக்கைகளால் அது தடுக்கப் பட்டது. இப்போது அந்த நிலைக்கே மீண்டும் தமிழகம் சென்று கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

மத்திய தணிக்கைக் குழுவால் ஏற்கனவே சான்றிதழ் அளிக்கப் பட்ட திரைப்படத்தைப் பார்த்து விட்டு ஒரு நாளில் தீர்ப்பளிப்பதாகச் சொன்னது நீதிமன்றம். அதோடு நிற்காமல், இப்போது கமலஹாசனும் அரசாங்கமும் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று நீதிமன்றம் வாய்மொழியாக அறிவுரை கூறியிருப்பதைப் பார்த்தால், இஸ்லாமிய பயங்கரவாத மிரட்டலுக்கு நீதிமன்றமும் பயப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

கொடுமை!

82 Replies to “விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்”

 1. கமலஹாசனின் இயல்பே அயோக்கியத்தனமும், சாடிசமும்தான். அதை நேர்மாரகக் காண்பிக்க மிகுந்த பிரயத்தனப் படுவார். அவர் யோக்கியன் போலவும், அன்புமிக்கவர் போலவும் காட்டிகொள்வார். அவரின் முகமூடி கிழிந்த ஒரு தருணம் இதோ: https://www.thehindu.com/arts/magazine/living-in-past-glory/article4034360.ece

 2. Call me a sadist if you want but, I am really enjoying this. Scene of squirming Kamala Hasan before the Muslims really makes my day. The bad Karma of insulting Hinduism and it’s culture at every turn is coming back and is biting his bottom. I hope this movie never gets released in TN.

 3. மிக பரந்த பார்வையுடன் இணையத்தில் வந்திருக்கிற ஒரே கட்டுரை, நன்றி !

  //இனி அவ்வாறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழியையும் வாங்கிக் கொண்டு அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளிப்பதே சரியான ஹிந்து நிலைப்பாடாக இருக்கும்.//

  அவசரம் வேண்டாம், யாருடைய ஆதரவையும் வேண்டி நிற்பார் என்று தெரியவில்லை குறிப்பாக ஹிந்துக்களின் ஆதரவை !

  மேலும் இந்த ஒட்டு மொத்த விளையாட்டுக்கும் மூலம் கமலஹாசன் மட்டும் என்று நினைக்க முடியாது கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்கள் 🙂

 4. ennai porutha varai, islamiyargalin payangaravatha seyalgalai ellam kandum, kanamalum, iruthuvittu, islamiyargalal hindukkalukkum, intha dhesathirkkum pirachinai varumpothellam oru thurumbai kooda killipoodatha, intha maanam ketta kamalukkaga, entha oru hindu vum, oru thurumbai kooda allipooda vendiyathillai.

 5. நான் ஆமோதிக்கிறேன் ஆனால் நாட்டின் ஒருமைப்பாடு முக்கியம் அன்பரே அன்பே சிவம் மறப்போம் மன்னிப்போம் என்பதே ஹிந்து நிலைப்பாடு ஆனால் இது தொடராமல் இருக்க நமது நேர்மையான ஒத்துழைப்பு இந்த சமயத்தில் இந்த விஷயத்தில் மிக முக்கியம்

 6. இஸ்லாமிய பயங்கரவதிகளால் மிரட்டப்படுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக இந்த ஆபாசப்பேர்வழிமீது ஹிந்துக்கள் அனுதாபம் காட்டக்கூடாது……ஏனெனில் அடுத்த படத்திலேயே ஹிந்துக்களை மிகக்கேவலமாக சித்தரித்து நம் முகத்தில் கரியைப்பூசுவான் இந்த ஆள்……..

 7. Other examples that Kamal Hassan’s Hindu fans should introspect

  Anbe Shivam –
  The villain is a Shiva Bhakthar ( played by his muslim friend Nasser ). He repeats the well known slogan “Thennaadudaiya shivane potri…” whenever he commits villainy and crime. The saviors of Kamal from the road accident are all Christian missionaries, sisters. You should note how the Camera goes to focus on a Jesus statue when Kamal is helped by the hospital sisters to walk.

  Pammal K Sammandham –

  Comedy scene where Kamal acts as “Lord Shiva”.
  Available here : https://www.youtube.com/watch?v=2T9vmTUOoTs

  Man Madhan Ambu –
  Kamal is on a mission to spy Trisha for Madhavan.
  Kamal says Maddy that he saw Trisha with some other guy. When asked about the appearance of the other guy, prompt comes the reply “The man’s dress is saffron in color”. When Madhavan gets anxious about why Trisha does this, Kamal adds something like “…may be the religion is the problem ?”

  Dasavataram –

  The scene where Kamal asks ” Alagiya Singar – is that Madonna ?” when a Vaishnavaite asks if Kamal knows their Jeeyar Alagiya Singar.
  Watch here : https://www.youtube.com/watch?v=ithSV-F7Z9c

 8. In “Vasool raja m.b.b.s”, there is a scene where a lifeless patient is shown sitting as a demo piece for a medical class. When the professor says that the man has not spoken for years & is only a vegetable, kamal questions him & says “Even Lord Ranganathar in srirangam is sleeping all these years, what is wrong in the man sitting like this”?

  In “Singaravelan”, he presents some flowers to khushboo on her birthday. She smells one of the flowers & says that it stinks. For this, kamal says that this flower is dear to Vinayakar, he has such a big nose, even he does not say anything, why are you complaining?

  In “Sigappu rojakkal”, when Sridevi & kamal go to buy God idols, Sridevi looks at an idol & asks for thr price. When the shop keeper says “20 Rs.madame”, kamal asks ” So cheap? There is no costly saami available?”.

 9. இங்கே நேர்த்தியாக தொகுக்க பட்ட செய்திகள் மற்றும் ஆய்வுகள் பாராட்டுக்கு உரியவையே…! ஆனால் இந்துக்கள் இப்பொழுதாவது சிந்திப்பார்களா, ஒற்றுமையாக செயல் படுவார்கள என்று தெரியவில்லை..!!

  நான் முன்னரே சொன்ன ஒரு கருத்தை தான் திரும்ப சொல்கிறேன். இந்து மக்கள் தங்கள் மத அடிபடையில் இனைந்து செயல் படவேண்டிய காலம் இது. அது 10 ருபாய் வர்தகமாக இருந்தாலும் செரி, நாம் போடும் ஓட்டுகளாக இருந்தாலும் செரி.

  உங்கள் மளிகை சாமானில் இருந்து, வாங்கும், விற்கும் வீடு வரை இன்னாருக்கு இதனால் என்ன பயன், அவர் இந்து தானா? என்று ஆராய்ந்து செயல் படவேண்டும். மேலும் வாக்குகள் மத ரீதியாக போட்டு தான் தீரவேண்டும். பல ஆண்டுகளாக மைனரிடிகள் செய்யும் சூது இது தான். இதை செய்யாத வரையில் இந்தியாவில் இந்துகளுக்கு எந்த பயனும் இல்லை. இங்கே ஆப்ரகமிய மதங்கள் நடத்தும் அரசியல் பற்றி அடிப்படை ஞானம் கூட பல இந்துக்களுக்கு இல்லை. நாம் எல்லாரும் இனைந்து செயல் பட்டால் தான் தீர்வு..!

 10. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் இப்பிரச்சினையில் புரிந்து கொள்ள இயலவில்லை. படம் பார்த்த ஏதோ ஒரு தீர்ப்பையளிக்காமல் பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்டது மேலும் குழப்பத்தையும் அச்சத்தையும் தருகிறது.

 11. comedy pannathinga sir apuram ethukku kovila ulla pen silaigal ellam mel adai illamai araiyadai mattum uduthu irukindrana.nenga innum neraya padikkanum thambi

 12. கமல்ஹாசன் போன்றவர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்தது போலவும் ,அதி மேதாவிகள் போலவும் ( வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டு,) ஹிந்துதர்மம், பழக்க வழக்கங்கள் இவற்றை மட்டும் இழிவு செய்து கொண்டு, மற்றவர்களை உயர்த்தியும் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டும் செய்த பாவத்துக்கு இப்போது ‘ அவர்கள்’ மூலமாகவே படுகிறார்.

  இவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் ஒரு நாள் கூட குப்பை கொட்ட முடியாது
  படம் எடுப்பது, மற்றும் சுதந்திரமாக வசனம் எழுதுவது என்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது
  ஆகவே இனிமேலாவது இந்த மாதிரி தகிடுதத்தங்களை விட்டு விட்டு கண் போன்ற ,பொன் போன்ற நமது ஹிந்து , தர்மத்தையும் ,கலாச்சாரத்தையும் ஆதரித்து உலகுக்கு நன்மை செய்வாராக.

 13. கமால் ஹசனின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது, எனக்கு நினைவுக்கு வருவது ,”முற்பகல் செய்யின் பிற்ப்பகல் விளையும் ”,என்ற பழமொழிதான் . விஸ்வரூபம் படத்தில் இவர் என்ன பிதற்றியிருக்கிறார் என்பது எனக்கு தெரியாது .ஆனால் ,இதற்க்கு முன்பு இந்துக்களையும் ,இந்து கடவுளர்களையும் இவர் செய்த நிந்தனைக்கு கிடைத்த தண்டனைதான் இது என்று கொள்ள வேண்டியிருக்கிறது .நான் நினைக்கிறேன் ,இப்போதுகூட அவர் ,”கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே ?” என்ற தனது சொதப்பலான டையலாக்கை தான் சொல்லிக் கொண்டிருப்பார் …

 14. Kamalahasan is an acclaimed atheist.. But he wants title from Hindu culture: like Dasavatharam, Viswaroopam , Anbe Sivam etc. He can hurt and wound only Hindu sentiments and beliefs. When it comes to other reliegeons he becomes impotent . The latest flick should be banned for ever.

 15. //கடவுளின் பெயரால் கொலை செய்வது ஹிந்து மதத்தில் மட்டும்தான் இல்லை. //

  Bunkum.

  What kind of writing is this?

  When did people killed others in the name of Hinduism?

  Do you people have any editors or you do just copy paste job?

 16. பின்னூட்டங்களில் அருண் பாலாஜி தவிர கிட்டத்தட்ட எல்லோரும் என் கருத்தை அமோதிதத்தற்கு நன்றி. அருண் பாலாஜி, மறப்போம் மன்னிப்போம் என்பதற்கு கமலஹாசன் முதலில் ஹிந்துக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை என்பதைப் உணர்ந்து கொள்ளவேண்டும். போன வாரம் கூட விநாயகர் சதுர்த்தி என்று ஒன்று இல்லை என்றே கூறினார். தன்னுடைய அரசியல் சமநிலைக்காக, இந்த வாரத்தில் மேலும்கூட ஹிந்துக்களை அவமதிக்க வாய்ப்பு இருக்கிறது.

 17. ஜெயா அரசின் வாக்குவங்கி அரசியலின்உச்ச கட்டம் –அரசு தரப்பு வக்கீல் சொல்லும் அண்டப் புளுகு”- ,படத்துக்கு தணிக்கை சர்டிபிகேட் வாங்கியதில் முறைகேடு ”
  இதுவரை எந்த அரசும் இப்படியெல்லாம் சொன்னதில்லை
  இனிமேலாவது ஜெயலலிதாவை தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ‘துக்ளக்’ கும்பலுக்கு- புத்தி வந்தால் சரி

 18. //gopi on January 29, 2013 at 7:35 pm
  comedy pannathinga sir apuram ethukku kovila ulla pen silaigal ellam mel adai illamai araiyadai mattum uduthu irukindrana.nenga innum neraya padikkanum thambi//
  திரு. கோபி, உங்கள் மனம் போல் எண்ணங்கள், பார்வைகளும் அமைகின்றன. உங்களுக்கு நிர்வாணம் தெரிகிறது. ஆனால் எனக்கு அகநானூறும், திருக்குரளுமே தெரிகிறது. ஆதாரங்களை எழுதினேன்.

  //Rahul Madan on January 29, 2013 at 8:56 pm
  //கடவுளின் பெயரால் கொலை செய்வது ஹிந்து மதத்தில் மட்டும்தான் இல்லை. //
  Bunkum.
  What kind of writing is this?//
  திரு. ராகுல் மதன், பிற மதங்கள் கடவுளின் பெயரால் கொலை செய்துள்ளன, ஹிந்து மதத்தில் மட்டும்தான் கடவுள் பெயரால் கொலை செய்வது இல்லவே இல்லை என்றே எழுதியிருக்கிறேன். நிதானமாகப் படியுங்கள். புரியும்.

 19. ஹிந்து தர்மத்தைத் தொடர்ந்து தனது படங்களில் இழிவு படுத்திக் கொண்டிருந்த கமல ஹசன் மேல் நமக்கு ஒன்றும் மரியாதை இல்லை.
  ஆனால் மறு பக்கம் ஜெயலலிதாவின் நிஜ முகம் இதில் வெளிப் பட்டு விட்டது
  சும்மா கோயிலில் அன்னதானம் என்று ‘கடைத்தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்து’ விட் டு ஹிந்து ஆதரவாளர் போல் காட்டிக் கொண்டு மறு பக்கம், ஹஜ், பெத்லேஹெம் மானியம் கொடுப்பது , ஹஜ் quota உயர்த்த வேண்டும் என்று சொல்வது, பாதிரியிடம் கேக் சாப்பிட்டு விட்டு , நான் பைபிளைப் படித்து விட்டேன் , கான்வென்ட் கல்வி என்னை ஆளாக்கியது என்றெல்லாம் சொல்லும் வோட்டு வங்கி அரசியல் வெட்ட வெளிச்சம்.

 20. ‘என்ன வலிக்க வலிக்க கிள்ளினல்ல, அதான்; வேணும் கட்டைக்கு வேணும், வெங்கல கட்டைக்கு வேணும்’ என்று கமலை இழு(ழி)த்து இடப்படும் பின்னூட்டம் வேதனையான சிரிப்பையே தருகிறது.

  அவர் இந்து மதத்தை தேவைக்கதிகமாக விமர்சனம் என்ற பெயரில் இழிவுபடுத்துகிறார் என்பதாலேயே இப்போது அவருக்கு வந்துள்ள பிரச்சினையின் வீர்யத்தை உணராமல் ‘நல்லா அனுபவி’ என்று சொன்னால் நமக்கும் அவரை எதிர்க்கும் சைக்கோ கும்பலுக்கும் பெரிதும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். விமர்சனம் – அது அபத்தமாகவும் இழிவாகவும் இருந்தாலும் – தாங்கும் பக்குவம் உள்ளவர்கள் என்பதை உணர்த்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

  இங்கு பிரச்சினை கமலுக்குத்தான், மறுக்கவில்லை. அவரை முன்னிட்டு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய அபாயகரமான பிரச்சினை இந்த தவ்ஹீத் சைக்கோ-க்களது மிரட்டலுக்கு, அவர்களை உள்ளே தள்ளவேண்டிய அரசானது பணிந்து போய் அவர்களது காலணி துடைக்கவும் தயார் என்பது போல செயல்பட்டிருப்பது.

  கருணாநிதி கூட இந்த அளவு இரங்கி போயிருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

  ஏதோ ஜெயா டி.வி.க்கு கொடுத்த சாட்டிலைட் உரிமையை விஜய் டி.வி.க்கு மாற்றி அதிக விலைக்கு விற்றதால் வந்த கோபத்தாலும் ப.சி. பிரதமர் பதவிக்கு வரலாம் என்று கமல் சொன்னதால் வந்த வெறுப்பாலும் ஜெ இப்படி நடந்துகொள்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மையாயின், தனிப்பட்ட பிரச்சினையை மாநிலத்தின் கருத்து சுதந்தரத்தின் குரல்வளை நசுக்கும் பாசிச போக்கோடு செயல்படுகிறார் ஜெ என்று அர்த்தமாகிறது. கடும் கண்டனத்துக்கு உள்ளாகவேண்டிய போக்கு இது.

  கமல் இந்து மதத்தை நேர்மையின்றி விமர்சிப்பதை கண்டிக்க வேண்டியது வேறு தளம், அங்கெ அதை செம்மையாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கே கருத்து சுதந்தரத்தை காவு கொடுக்க ஒரு அரசே அடிப்படைவாத அமைப்பை கொஞ்சி கொம்பு சீவிவிட்டுக்கொண்டிருக்கிறது.

  இதை இப்படியே விட்டால் நாளையே கும்பல் பலம் இருக்கும் யாரும் எந்த திரைப்படத்தையும் ‘எங்களிடம் அனுமதி வாங்கிய பிறகே வெளிவிட வேண்டும்’ என்ற நிலைக்கு திரைத்துறையை கொண்டு செல்ல முடியும்.

  முளையிலேயே வெந்நீர் ஊற்றி கருகச்செய்யவேண்டிய பயங்கரவாத போக்கு இது. எல்லாரும் ஒன்று சேர்ந்து கண்டிப்போம் வாருங்கள்.

 21. ” யார் எப்பிடி போனாலும் அவிங்களை [ அதாவது நம்மை ] அடிக்கிறது ஜாலி தான்” என்று சொல்லாமல் சொல்கிறார் ஹசன். கொக்குக்கு ஒண்ணே மதி.

  என் டி தொலைக்காட்சியில் தற்போது எல்லா மதங்களும் இப்பிடித்தான் என்கிறார். தானே விரும்பி வெளிநாட்டில் செட்டிலான எம் எப் ஹுசைனை உதாரணம் காட்டுகிறார். சொந்த நாட்டின் ரவுசு தாங்காமல் அது போல் இவரும் வெளிநாட்டில் இருக்க வேண்டி வருமாம்.
  இன்று நிறைய சர்க்கஸ் பாக்கி உள்ளது.

  மன்மதன் அம்பு படம் பற்றியும் பேசி திசை திருப்ப முயற்சி செய்வார் .

  இந்த வீர சிகாமணி புல் தடுக்கி பயில்வான்களின் திசை திருப்பல் வித்தைகளை புரிந்து கொள்வோம்.
  சாய்

 22. \\\\\\\முளையிலேயே வெந்நீர் ஊற்றி கருகச்செய்யவேண்டிய பயங்கரவாத போக்கு இது. எல்லாரும் ஒன்று சேர்ந்து கண்டிப்போம் வாருங்கள்.\\\\\\

  தனி நபர் கருத்து சுதந்திரம் – அதற்கு ஆதரவு என்பதும் போலி நாஸ்திக வாதி – போலி புத்திஜீவி – ruthless unscrupulous profiteer – கமலஹாசனுக்கு ஆதரவு என்பதும் வேறு வேறான விஷயங்கள். முன்னதற்கு ஆதரவு அளிக்கையில் பின்னதும் ஆதரவு பெறும் தான். ஆனால் பின்னர் சொன்ன அர்ச்சனைகளை சேர்க்காது முன்னதான விஷயத்திற்கு தனித்து ஆதரவு தருவது என்பது நம் தலையில் மண்ணை வாரி அள்ளிக்கொட்டிக் கொள்வதற்கு சமம்.

  இன்று கஷ்டத்தில் இருக்கும் கமல்ஹாஸனுக்கு ஆதரவு அளித்தால் நாளை அவர் ஹிந்துக்களையும் ஹிந்துஸ்தானத்தையும் கேவலப்படுத்தாது இருப்பார் என்பது மூடநம்பிக்கை. இன்று ஹிந்துக்களிடமிருந்து ஆதரவை வாங்கி தன் பாக்கெட்டை ஸ்திரப்படுத்திக்கொண்டு நாளைக்கே தன் சுயரூபத்தை விஸ்வரூபமாகக் காண்பிப்பவர் தான் கமல்ஹாஸன்.

  ஸ்ரீ கண்ணன் ராமசாமி என்ற அன்பர் திண்ணை தளத்தில் மாங்கு மாங்கென்று கமல புராணம் பாடுவதையும் பல வாசகர்கள் அதற்கு மறுப்பு தெரிவிப்பதையும் இங்கு கருத்துப்பதியும் அன்பர்கள் வாசிக்க வேண்டும்.

  இந்தக்கூத்தெல்லாம் நிகழ்ந்து வருகையில் ஓசைப்படாது சில நல்ல விஷயங்களும் நடந்தேறி வருகின்றன. இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் தொலைக்காட்சி விவாதங்களில் அளவுக்கு அதிகமாக விஸ்வரூபத்துக்கும் துப்பாக்கிக்கும் எதிராக கூக்குரலிடுகையில் முற்போக்கு வாதிகள் என்று அறியப்படும் பல திரைப்படத் துறையைச் சேர்ந்த ஹிந்துக்களும் ( பொதுவில் ஹிந்துக்களை ஏளனம் செய்வதில் தயங்காதவர்கள்) கடுப்பாவது நன் கு தெரிகிறது. முன்னவர்கள் இன்னமும் அதி தீவிரமாக தங்கள் பினாத்தல் பணியைத் தொடர வேண்டும். அதன் மூலமாக பின்னவர்களின் புத்திக்கொள்முதல் ஸ்திரப்படுவதாக.

  இன்னமும் கூட கமலஹாஸன் முஸல்மான் களுக்கு கவரி வீச முனைவதும் பிள்ளையார் உத்சவம் கலவரத்திற்காக என்று பினாத்துவதும் நிகழ்கையில் இஸ்லாமிய தீவிர வாதம் என்ற விஷயமும் பொது ஜனங்களிடம் பேசப்படுவது நல்லது தான்.

  \\\\ஏதோ ஜெயா டி.வி.க்கு கொடுத்த சாட்டிலைட் உரிமையை விஜய் டி.வி.க்கு மாற்றி அதிக விலைக்கு விற்றதால் வந்த கோபத்தாலும் ப.சி. பிரதமர் பதவிக்கு வரலாம் என்று கமல் சொன்னதால் வந்த வெறுப்பாலும் ஜெ இப்படி நடந்துகொள்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மையாயின், தனிப்பட்ட பிரச்சினையை மாநிலத்தின் கருத்து சுதந்தரத்தின் குரல்வளை நசுக்கும் பாசிச போக்கோடு செயல்படுகிறார் ஜெ என்று அர்த்தமாகிறது. கடும் கண்டனத்துக்கு உள்ளாகவேண்டிய போக்கு இது.\\\\\

  சபாஷ். மாம்சபக்ஷிணியான புலி மியாவ் மியாவ் என்று கத்தும் அப்படின்னாஎதிர்பார்க்க முடியும்.

 23. ஆசிரியர் குழுவுக்கு,
  நான் இந்த மறுமொழியை எழுதுகையில், விஸ்வரூபம் படத்திற்கான தமிழக
  அரசின் தடைக்கு, இடைக்கால எதிர்தடையை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

  என் மறுமொழி விஸ்வரூபம் குறித்தோ, திரு.கமலஹாசனைக் குறித்தோ
  அதிகமாக இருக்காது. அடிப்படையில், சமூகத்தில் கருத்து சுதந்திரத்தின் தேவை,
  மாறிவரும் சூழலில் கருத்து முடக்கம் சாத்தியமா என்பதைப் பற்றியே இருக்கும்.

  எந்த ஒரு சமூகத்திற்கும் 3 வழிகள் உள்ளன.

  (அ)முழுமையாக கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுவது.
  – பழங்காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சூழல்.
  – இன்று வரை தொடரும் கிறுக்கு சீன ஆட்சியாளர்கள், சவூதி, ஈரான் போன்ற
  நாடுகளில் உள்ள வெறி பிடித்த ஆட்சியாளர்களால் உள்ள சூழல் இந்த நிலை
  குறித்து ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாக கூறிவிடலாம். அந்த சமூகம்
  நாறித்தான் போகும்.

  (ஆ)முழுமையாக கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பது.
  (முழுமையாக என்றால் 100 சதவிகிதம் இல்லை. கிட்டத்தட்ட 99 சதவிகிதம்.
  ஆனால் எழுத்துரிமை, பேச்சுரிமை போன்றவற்றில் 100 சதவிகிதம்தான்.)
  எனக்குத் தெரிந்து அமேரிக்க நாட்டில் மட்டுமே இன்று இந்நிலை நிலவுகிறது.

  (இ)ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பது.
  ஐரோப்பாவின் பல நாடுகள், இந்தியா போன்றவற்றில் இந்த நிலை. காலம் மாற
  மாற ஐரோப்பிய நாடுகளில் கருத்து சுதந்திரத்தின் தன்மையை அதிகப்படுத்தியே
  வந்துள்ளனர். ஆகவே இந்தியாவை விட கண்டிப்பாக முன்னேறிய நிலையே
  அங்குள்ளது.

  இனி என் Comments.
  (1) குறிப்பிட்ட எல்லைக்குள் கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பது என்பது
  கேட்பதற்கும், புழங்குவதற்கும் தோதானது. ஆனால் சமூகம் என்றுமே
  எப்பொழுதுமே ஒரு பதட்டத்துடன் மட்டுமே இருக்க முடியும். சல்மான் ருஷ்டி
  போனால், எம்.எஃப்.ஹுசைன்;பிறகு தஸ்லீமா நஸ்ரீன்;பிறகு வரிசையாக பல
  திரைப்படங்கள்;பிறகு வரிசையாக பல புத்தகங்கள்;பிறகு ஒவைசியின்
  பேச்சு;கடைசியாக விஸ்வரூபம்.

  (2) விஸ்வரூபம் முதல் பிரச்சினையும் அல்ல. அது கடைசி பிரச்சினையாகவும்
  இருக்காது.
  இந்திய சட்டத்தில் உள்ள ஒரு ஷரத்தைப் பற்றி பேசாமல் இந்த பிரச்சினையை
  புரிந்து கொள்ள முடியாது.
  “பொது அமைதிக்கு குந்தகம்” என்ற வார்த்தை பிரயோகம் மிகவும் முக்கியம்.
  பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்ட பிறகு; அதாவது சமூகத்தில் ஒரு
  கொந்தளிப்பான சூழல் ஏற்பட்ட பிறகு அல்லது வன்முறை ஏற்பட்ட பிறகு ஒரு
  புத்தகத்தையோ அல்லது திரைப்படத்தையோ தடை செய்வது ஒரு வகை. பொது
  அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இந்த
  சட்டத்தை பிரயோகிக்கும் அதிகாரம் தற்பொழுதைய ஆட்சி முறையில் உள்ளது.
  ஆகவே எப்படி வேண்டுமேனும் இது துஷ்பிரயோகம் செய்யப்படலாம்.

  (3)அடுத்து இந்திய முறையில் உள்ள பிரச்சினை. கருத்து சுதந்திரத்திற்கான
  எல்லை என்பது எது? மற்றும் அந்த எல்லையை முடிவு செய்வது யார்?
  இந்த கேள்விகளை ஒவ்வொருவரும் மல்லாக்க படுத்துக் கொண்டு ஒரு மணி
  நேரம் யோசித்துப் பார்த்தால் தெரிந்துவிடும். இந்த இரண்டுமே காலத்திற்கேற்றபடி
  துஷ்பிரயோகம் செய்யப்படத்தான் செய்யும். அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி,
  எந்த அரசியல் கட்சியானாலும் சரி; எந்த ஜாதி,மத அமைப்புகளானாலும் சரி;

  (4) ஒரு கருத்தை இணையம் உள்ள இன்று முடக்க முடியுமா? சத்தியமாக
  முடியாது. Salman Rushdieன் Satanic Verses சர்வசாதாரணமாக இணையத்தில்
  கிடைக்கிறது.

  (5) அடுத்து கருத்து சுதந்திரம் என்றால் என்ன? என்ற கேள்விக்கும் பதிலை நாம்
  பெற்றாக வேண்டும். என் கருத்தை சுதந்திரமாக முன்வைக்கும் உரிமையை நான்
  பெற்றிட வேண்டும் என்று எளிதாக இதை கூறி விடலாம். ஆனால் ஒரே ஒரு
  ஷரத்துதான். அந்த கருத்து மற்றோரு மனிதனின் உயிருக்கோ, உடைமைக்கோ
  பிரச்சினையை ஏற்படுத்தாத வகையில்தான் இருக்க முடியும்.

  இந்த ஷரத்தின் படி, அமேரிக்காவில் வசிக்கும் ஒரு முஸ்லீம் மதத்தலைவர்
  “அனைத்து கிறிஸ்தவர்களையும் அழிக்க வேண்டும்” என்று கூறினால் அது கருத்து
  சுதந்திரம். ஆனால் ஜார்ஜ் புஷ் என்னும் மனிதரை அழிக்க வேண்டும் என்றால் அது
  மற்றொரு மனிதனின் சுதந்திரத்தில் தலையிடும் செயல். குற்றம்.

  இதை இன்னொரு வகையாக விளங்கிக் கொள்ளலாம். என்னைக் குறித்த
  தனிப்பட்ட விமர்சனங்கள் என் உயிருக்கும், உடைமைக்கும் இடைஞ்சல்
  ஏற்படுத்தினால் அது குற்றம். உதாரணமாக என் நம்பிக்கைகள், என்
  சித்தாந்தங்களின் பற்று, வாழ்க்கையைக் குறித்த என் பார்வை போன்றவை
  எல்லாம் விமர்சனம் செய்யப்படலாம்.

  கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் உலகில் இருக்கிறார்கள். அது அவர்களின்
  அடிப்படை உரிமை. பைபிலில் உள்ள கதைகள், இராமாயணத்தில் உள்ள
  புஷ்பக விமானம் போன்ற கதைகள், குரானில் உள்ள அமானுஷ்யமான சில
  நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு மதத்தினரும் நம்பிக்கையை வைத்துக் கொள்வது
  வேறு;ஆனால் இதை நம்ப மறுத்தால் உன்னை போட்டு தள்ளிவிடுவேன் என்று
  கூறுவது என்பது வேறு; மேலும் அவற்றை விமர்சனமோ, நையாண்டியோ,
  கிண்டல் கேலியோ செய்யக்கூடாது என்றால் அந்த சட்டத்தை
  நடைமுறைபடுத்தவே முடியாது. எந்த மதக்குறியீட்டையும், எந்த பழங்குடி
  கதையையும், யாரும் சிற்பமாகவோ, கதையாகவோ, நகைச்சுவையாகவோ
  உருமாற்ற முடியாமல் போய்விடும். துஷ்பிரயோகம் செய்கிறார்களே என்று
  கோபப்பட்டு தடை செய்தால் நியாயமாக, சமூகம் முன்னேற வேண்டுமே என்ற
  எண்ணத்துடன் கலைபடைப்புகளை உருவாக்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

  இதை படிப்பவர்கள், எவ்வளவுதான் எதிர்வினை புரிந்தாலும் ஒன்றை புரிந்து
  கொள்ளத்தான் வேண்டும். துஷ்பிரயோகம் நடக்கவே செய்யும். அதை சகித்துக்
  கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியே இல்லை.

  மேலும் இவை எந்த ஒரு வாழும் மனிதனையும் விமர்சிக்க வில்லை.
  பழங்காலங்களில் வாழ்ந்த பழங்குடி சமுதாயங்களில் இருந்த நிலையை
  விமர்சனமாகவோ அல்லது குதர்க்கமாகவோ எழுதும் வகை இது. முக்கியமாக
  நாம் கவனிக்க வேண்டியது. தமிழகத்தில் திராவிட இயக்கத்தினர் பல
  தசாப்தங்களாக மத நம்பிக்கைகளை (குறிப்பாக ஹிந்து மத விஷயங்களை) குதறி
  இருக்கிறார்கள். அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை. பேசும்
  எல்லாரையும் தூக்கிலேயா போட முடியும்? நமக்கு பிடிக்க வில்லையானால்
  கேட்கக்கூடாது, படிக்கக்கூடாது அவ்வளவுதான். அல்லது எதிர் கருத்தை பேசி,
  எழுதலாம்.

  இப்படி ஒரு சமூகம் இயங்க முடியாது என்றால்; என் அதே கேள்விகள் மீண்டும்.
  கருத்து சுதந்திரத்தில் எல்லையை யார் நிர்ணயம் செய்வது? அந்த எல்லைகள்
  எவை என்று தீர்மாணித்துக் கொள்வது?

  ஒரு எழுத்தாளனோ, ஒரு ஓவியனோ, ஒரு சிற்பியோ இந்த பழங்குடி கதைகளை
  விமர்சனம் செய்யவே செய்வான். அதே போல் ஒரு அறிவியல்
  ஆராய்ச்சியாளனிடம், நீ இந்த இந்த விஷயங்களைப் பற்றி ஆராயக்கூடாது; அது
  ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது என்று ஆரம்பித்தால் ஒன்றும் நடக்காது.

  அறிவியல் பெரிய அளவில் வளராத காலத்தில், பூமியைத்தான் சூரியனும், மற்ற
  கோள்களும் சுற்றுகிறது என்று கூறினால் அது ஒருவரின் தனிப்பட்ட கருத்து.
  அப்படித்தான் பைபில்லேயே சொல்லியிருக்கு என்றால் அது மத நம்பிக்கை;
  ஆனால் அதற்கு எதிரா சொன்னா உன்ன போட்டு தள்ளிடுவேன் என்றால் அந்த
  சமூகம் உருப்பட முடியாது. வரலாறை அவதானிக்கும் பலருக்கு தெளிவாக ஒரு
  விஷயம் புரிந்துவிடும். அறிவியல் ஆராய்ச்சி எல்லையை நிர்ணயம் செய்த
  அன்றைய மதவாதிகளை, அறிவியலாளர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவே
  இல்லை. உயிருக்கு பயந்திருக்கலாம். ஆனாலும் தங்கள் ஆராய்ச்சிகளை
  தொடரவே செய்தனர்.

  நான் ஏற்கெனவே எழுதியபடி, நமக்கு 3 வழிகள் உள்ளன. ஒன்று அரேபிய வழி-அது
  நாசத்தையே விளைவிக்கும்.
  இரண்டு. கொஞ்சம் கொஞ்சமாக மேலும் கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பது.
  இதற்கு காலமும் அதிகமாகும். மேலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும்.
  மூன்று, முழுமையாக அமேரிக்க 1st Amendmentஐப் போல் சட்ட திருத்தம் கொண்டு
  வந்து விடுவது.

  சில காலம் எதிர்ப்பு இருக்கும். போராட்டம் செய்ய முடியும்.ஆனால்
  போராட்டத்தினால் புத்தகத்திற்கோ, திரைப்படத்திற்கோ தடையை ஏற்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டால் பழகி விடும்.

  நான் கூட இந்தியாவில் இப்படி நடைமுறை படுத்த முடியாது என்றுதான்
  நினைத்திருந்தேன். அமேரிக்காவில் பல தசாப்தங்களுக்கு முன்னரே, சமூகம்
  பெரிய எழுச்சியை அடைந்திராத காலத்திலேயே சட்டத்தை கொண்டு வந்து
  விட்டார்கள்.

  சிலர் இந்த சட்ட பாதுகாப்பின் மூலம் கேவலமாக எழுதவும், பேசவும் செய்வார்கள்.
  நடக்கட்டுமே!So be it
  இந்த சட்ட திருத்தத்தினால், சில வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தால் நிகழட்டும்.
  So be it.
  சிலர் இறந்து போனாலும் போகட்டும். So be it.

  (நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள கடைகள் வழக்கத்தை
  விட சீக்கிரமாக மூடப்பட வலியுறுத்தப்பட்டது. வியாபார நஷ்டத்தை யார்
  தருவார்கள்? வேண்டுமென்றே இரவு 10 மணிக்கு தீர்ப்பை அறிவிக்கிறார்கள்.
  அதாவது பயப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை நண்பகலில்
  சம்பந்தப்பட்டவர்கள் வெறியுடன் இருக்கும்போதே தீர்ப்பளித்திருக்க வேண்டும்.
  வன்முறைதான் வரட்டுமே! சிலர் மடியத்தான் மடியட்டுமே! ஒன்று கருத்து
  சுதந்திரம் கிடைக்கும் அல்லது சர்வாதிகாரம் வரும். இப்படி முணுக் முணுக்கென்று
  50 அல்லக்கைகளைக் கொண்ட டுபுக்கு குழுக்களுக்கு பயப்படுவதை விட
  வன்முறை வெறியாட்டம் நடந்து விடுவதே நல்லது; கலகம் பிறந்தால்தான் வழி
  பிறக்கும்.

  ஒவ்வொரு சம்பவத்திற்கும் எதிர்வினை செய்து கொண்டு இருப்பதை விட,
  நெடுங்காலத்திற்கு தொடரக்கூடிய, முழுமையான கருத்து சுதந்திரத்தை நான்
  முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.

  கடைசியாக சில காமெடிகள்:
  (1) ஆதி பகவன் பெயரை வைக்கக்கூடாது என்று கிளம்பியிருக்கிறது ஒரு லெட்டர்
  பேட் இயக்க கும்பல். ஆதி பகவன் என்ன இவர்களின் தாத்தாவா? குரான்
  எழுதப்பட்டது என்று கூறக்கூடாது திரு.அமிதாப் பச்சனின் மேல் ஒரு வழக்கு
  போடப்பட்டு அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

  நம் ஆசாரவாதிகள் கூட வேத மந்திரங்களை காற்றிலிருந்து நம் ரிஷிகள்
  பிடித்தார்கள் என்று கூறுவார்கள். அதை நம்புவது அவர்களின் உரிமை. ஆனால்
  நம்பித்தான் ஆகவேண்டும்; இல்லையேல் போட்டு தள்ளிடுவேன் என்றால் “அட
  போங்கயா! உங்க காமெடிக்கு முடிவே இல்லையா?” என்று கூறித்தான்
  ஆக வேண்டும்.

  “ஆதி பகவன்” பெயரை தடை செய்தால், அடுத்து இப்படித்தான் நடக்கும். இன்று
  நடக்க வில்லை என்று பெருமைப்பட எதுவுமில்லை. இந்த கடும்போக்கு ஹிந்து
  கும்பலை இன்று அனுமதித்தால் நாளை நிலைமை பரிதாபகரமாகிவிடும்.
  “மன்மதன் அம்பு” பட கவிதையை அப்படியே போட்டிருக்க வேண்டும். அதை தடை
  செய்ததால்தான் “தலைக்கு தலை” இங்கு நாட்டாமைக்கு கிளம்பியிருக்கிறார்கள்.

  (2)கமலின் விஸ்வரூபம் திரைப்படம் பல கோடிகளை கொட்டி எடுக்கப்பட்ட ஒரு
  வணிகத்திரைப்படம். நஷ்டம் ஏற்பட்டால் இவர்களின் தாத்தா பாட்டியா வந்து
  இழப்பீடு அளிக்கப்போகிறார்கள். ஒரு விஷயம். எனக்கு கமலஹாசன் என்னும்
  நடிகனை பிடிக்கும். யாருக்கேனும் பிடிக்க வில்லையெனில் படத்தை
  பார்க்காதீர்கள். விமர்சனம் எழுதுங்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையோ
  அல்லது சித்தாந்தங்களைப் பற்றியோ நான் கவலைப்படுவதில்லை. அது அவர்
  உரிமை. அதை மறுப்பது என் உரிமை.

  ஒரே ஒரு வருத்தம். நேற்று இரவு 10 மணிக்கு தீர்ப்பு வந்தவுடன் மகிழ்ச்சியில்
  அழுது விட்டேன். இன்னும் கொஞ்சம் இந்தியாவில் நீதி மிஞ்சியிருக்கிறது.

  எனக்கு பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லை. ஆனாலும் எனக்கு பிடித்த நடிகனுக்கு வணிக ரீதியாக எந்த நஷ்டமும் வந்து விடக்கூடாதே என்று நினைத்துக்
  கொண்டேன்.

  அப்பா எனக்கு பிடித்த விஷயங்களை எழுதியாகிவிட்டது.

  வியாபாரத்தை ஆதரித்தாகி விட்டது; அமேரிக்காவை ஆதரித்தாகிவிட்டது. இன்று உணவு ஜீரணமாகி விடும்.

 24. பாலாஜி

  இந்தியாவை அமேரிக்கா ஆக்கிவிட்டுத்தான் ஓய்வீர்கள் போல. வெறும் எழுத்தே உங்களுக்கு ஜீரணத்தை கொடுக்கிறது. இந்தியா அமேரிக்கா ஆகும் வரை உங்களுக்கு ஜீரணிக்க கூடாது.

  அப்பா எதுவுமே தெளிவா எல்லோருக்கும் விளங்கும்படி சொல்லாமால் உங்களுடைய எல்லா கருத்துக்கும் மறுப்பு தெரிவித்தாகிவிட்டது. இனி சாப்டவேண்டாம், சாப்டாதானே ஜெரிக்கரதபத்தி கவலைபடரத்துக்கு.

 25. R. பாலாஜி போன்ற ஹிந்துத்துவர்களும் இருக்கிறார்கள். 🙁 எல்லாவற்றையும் கண் மூடிக் கொண்டு ஆதரிப்பது … போங்க சார் போயி ஒரு பத்து அமெரிக்க ஆதரவு கட்டுரைகளை எழுதி உங்களை ஆற்றுப் படுத்திக் கொள்ளுங்க.

 26. Kamal has now offered to delete a few scenes after discussing with a few muslim “brothers’. Only some hours back, he had talked to cultural terrorism etc., What happened now?

  Also, kamal in his next film will go all out with anti hindu scenes & dialogues as is his wont.

 27. பாலாஜி m f ஹுசைன் செய்த “கலை” விமர்சனத்தை சற்று விளக்குவீர்களா?

  எனக்கு கமலகாசன் போன்ற சமுக விரோதிகளைப் பற்றி அக்கறையில்லை. என் கவலை நீதிமன்றங்கள் இவற்றை அணுகுவது தான். சிலரின் அச்சுறுத்தல் இவ்வளவு விளைவை உண்டாக்க இயலுமா? இது மேலும் நீளுகிறது. தனி மனித உரிமைகளை நீதிமாற்றம் தவிர வேறு எவர் நிலை நிறுத்துவார்? பெரும்பான்மை அரசுகளா?

  தமிழக அரசு மீது இங்கு ஏன் குறை காண வேண்டும்? இது முஸ்லிம் குழுவினருக்கும் தனி நபருக்குமான பிரச்சினை; அதிலும் சிதம்பரத்திற்கான ஆப்தரின்!

 28. \\\\\\\\)கமலின் விஸ்வரூபம் திரைப்படம் பல கோடிகளை கொட்டி எடுக்கப்பட்ட ஒரு வணிகத்திரைப்படம். நஷ்டம் ஏற்பட்டால் இவர்களின் தாத்தா பாட்டியா வந்து இழப்பீடு அளிக்கப்போகிறார்கள். \\\\\

  வணிகம் என்றால் லாபமும் நஷ்டமும் சஹஜம் தானே. வ்யாபாரத்தில் அழுகுனி ஆட்டமும் சஹஜமே. அழுகுனி ஆட்டத்தில் நஷ்டம் வந்தாலும் கூட அதையும் கமலே தான் தாங்க வேண்டும். அதையெல்லாம் மட்டும் ஏன் பாட்டி தாத்தா தாங்க வேணுமாம்? ஹிந்துஸ்தானத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட காக்ராவுக்கு (பாவாடை போன்ற ராஜஸ்தான உடை) அமேரிக்கா அழுகுனியாக தடை விதித்ததை ஸ்ரீமான் பாலாஜிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

  \\\\\\\\ஒரு கருத்தை இணையம் உள்ள இன்று முடக்க முடியுமா? சத்தியமாக முடியாது. Salman Rushdieன் Satanic Verses சர்வசாதாரணமாக இணையத்தில் கிடைக்கிறது.\\\\\\

  இதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

  அபிஷேக் மனு சிங்க்வி – காலஞ்சென்ற வீர் சிங்க்வி அவர்களின் திருக்குமாரர் – டிவியில் அதிக சத்தம் போடாது ஆனால் காங்க்ரஸுக்கு சாதகமாக – ஆனால் எடக்கு மடக்காக பேசுபவர் – அவருடைய அத்துமீறல்களை டிவி காரர்கள் அமுக்கி வாசிக்க முனைகையில் – இணையத்தில் முன்னமேயே இவைகள் அம்பலமானதால் டிவி காரர்கள் “ஙே” என்று விழிக்க வேண்டியதாகியது.

  ப்ரணாய் ராய் – பார்கா தத் – (க்றைஸ்தவ?) ராஜ்தீப் சர்தேசாய் இத்யாதி இத்யாதி பேர்வழிகளின் துஷ்ப்ரசாரங்களுக்கு எதிர் ப்ரசாரம் இணையம் தான். ஆர்னாப் கோஸ்வாமி ஏதோ மாறிவருவது போல ஒரு ப்ரமை.

  ஆனால் இதை எப்படியாவது முடக்க வேண்டும் என கேந்த்ர சர்க்கார் முனைப்பாக உள்ளது. உஷார்.

  \\\\\\அமேரிக்காவில் வசிக்கும் ஒரு முஸ்லீம் மதத்தலைவர் “அனைத்து கிறிஸ்தவர்களையும் அழிக்க வேண்டும்” என்று கூறினால் அது கருத்து சுதந்திரம். ஆனால் ஜார்ஜ் புஷ் என்னும் மனிதரை அழிக்க வேண்டும் என்றால் அது மற்றொரு மனிதனின் சுதந்திரத்தில் தலையிடும் செயல். குற்றம். \\\\\\\\

  மெச்சிக்க வேண்டியது தான் அமேரிக்க ஸ்வதந்த்ரத்தை. ஊர் முழுக்க மொடாக்குடியர்களாக இருப்பார்கள். your children and my children are playing with our children என்ற படிக்கு free for all என இருப்பார்கள். ஆனால் ராஷ்ட்ரபதி மட்டும் யோக்யமாக இருக்கணுமாம். ஊர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் முன்னாள் ராஷ்ட்ரபதி க்ளிண்டன் அவருடைய பத்னி ஹில்லாரியை ஏய்த்து விட்டு பர ஸ்த்ரீ மோனிகாவுடன் சல்லாபம் செய்தால் ஊரே ஒப்பாரி வைக்குமாம். போங்க சார் உங்க அமேரிக்காவும் அதன் ஸ்வதந்த்ரமும். ஸ்வதந்த்ரம் என்றால் துப்பாக்கி எடுத்தவன் கண்டவனையெல்லாம் சுடமுடியும் என்பது தானே அமேரிக்காவில்.

  \\\\\நம் ஆசாரவாதிகள் கூட வேத மந்திரங்களை காற்றிலிருந்து நம் ரிஷிகள் பிடித்தார்கள் என்று கூறுவார்கள். அதை நம்புவது அவர்களின் உரிமை. \\\\\

  இப்படியெல்லாம் மிகைப்படுத்தி கதை விடுவது உங்கள் உரிமை. அதை நம்பக்கூடாத கதை என்று சொல்வது ஆசாரவாதிகள் உரிமை.

  \\\\\ இருப்பதை விட, நெடுங்காலத்திற்கு தொடரக்கூடிய, முழுமையான கருத்து சுதந்திரத்தை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.\\\\\

  அப்படியானால் ஜெனாப் ஓவாய்சியிடம் மட்டும் மைக் கொடுக்காதீர்கள். சர்வ ஸ்ரீமான் கள் வருண்காந்தி மற்றும் ப்ரவீண் டொகடியா போன்று உரத்துப் பேசும் நபர்களிடமும் மைக்கைக் கொடுங்கள். எம் எஃப் ஹுஸைன் சாயபு மட்டும் படம் காமிக்கலாம் ஔரங்க்ஜேப் பற்றி மட்டும் படம் காமிக்கக் கூடாதா. அமேரிக்கா காரன் மட்டுமல்ல ஹிந்துஸ்தானத்திலும் ஆப்ரஹாமியம் பற்றி அப்புறம் நூறு நூறு படம் எடுப்பார்கள். இதெல்லாம் ஹிந்துஸ்தானத்தில் நடக்கக் கூடிய காரியமா சார். கற்பனை செய்வது உங்கள் உரிமை.

  ஹிந்துஸ்தானத்தில் இன்னும் பலப் பல வருஷங்களுக்கு :-

  இஸ்லாத்தைப் பற்றியோ க்றைஸ்தவத்தைப் பற்றியோ முற்போக்குக் காரர்கள் படம் எடுத்தால் அது கலை – இலக்கியம் என்று எல்லா முற்போக்கு வாதிகளும் சேர்ந்து கும்மி அடித்து ஒப்பாரி வைத்து இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ ஆப்ரஹாமிய வாதிகளுக்கு ப்ரவசனம் செய்வார்கள். படம் காட்டுபவருக்கு நஷ்டம் வராது பார்த்துக்கொள்வர்.

  அதே மாதிரி படம் ஹிந்து என்று முத்ரை குத்தப்பட்ட ஒருவர் எடுத்தால் அது மதவாதம்; communalism; jingoism என்று முற்போக்கு வாதிகள் ஹிந்துக்களுக்கு சுவிசேஷ ப்ரசங்கம் செய்வார்கள். அடுத்தவர் மனதை புண்படுத்தக்கூடாது; ஒரு கன்னத்தில் அறைந்தால் ஹிந்துக்கள் மறு கன்னத்தைக் காட்ட மட்டும் கூடாது எதாவது கிடைத்தால் அதால் அடுத்த கன்னத்தில் அடித்துக்கொள்ளவும் வேண்டும் என்றெல்லாம் ப்ரவசனம் செய்வார்கள்; நாம் தான் ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்று பாட்டுப் பாடிப் பாடியே பழக்கப்பட்டு விட்டோமே. அந்த ப்ரவசனம் எல்லாம் சரி என்று தான் தோணும்.

 29. தமிழக அரசு தற்போது damned if you do damned if you dont என்பது போல் செம்மையாக மாட்டிக்கொண்டுள்ளது.
  வேடிக்கை பார்க்கும் தாத்தாவுக்கோ வெகு கொண்டாட்டம்.
  படத்தை திரையிட்டாலும் பிரச்னை. இல்லாவிட்டாலும் பிரச்னை.

  இங்கே ஒருவர் சொல்வது போல் ஹசன் தனது அடுத்த படத்தில் தேவையான பிராயச்சித்தம் செய்வார். அவருக்கு அவ்வகையான பிராயச்சித்தம் பழக்கமே.

  இன்று பேசும் போதே ரொம்ப அத்வைதமாக ஹிந்துக்களும் இப்படிதான் என்றார். எல்லாரும் இந்த விஷயத்தில ஒன்று என்றார்.

  வழக்கமாக அவருக்கே புரியாதது போல் பேசுவார். இன்று என்னை போல சாதா ஜீவிகளுக்கும் புரிவது போல் பேசினார். நான் எங்கே அறிவு ஜீவியாகித்தொலைத்து விட்டேனோ என்ற பயம் வருகிறது.

  சாய்

 30. கமல் இவ்வளவு பயந்தாங்கொள்ளியாக இருப்பார் என்று நினைக்கவே இல்லை
  ‘நான் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன்’ என்றெல்லாம் சொல்வது ஒரு கோழையின் செயல்.
  எங்கிருந்தோ வந்த ஒரு கொள்கைக்குப் பயந்து அவரது முந்தையர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த இந்த பூமியை விட்டு ஓடி விடுவேன் என்பது எள்ளி நகையாடத்தக்கது
  அதனால் இவருக்கோ நாட்டுக்கோ என்ன லாபம்?
  பயங்கரவாத ‘அமைதி மதவாதிக’ளுக்கு மேலும் கொண்டாட்டம் ஆகிவிடும்
  நாம் இந்த மாதிரி ஆட்டம் போட்டே எல்லாரையும் இந்த நாட்டிலிருந்து ஒட்டி விடலாம் என்று நினைப்பார்கள்.

  கமல் மீண்டும் மீண்டும் ‘எனக்கு மதம் இல்லை, அந்த மதம் இந்த மதம் என்று இல்லை, யாராக இருந்தாலும் ‘ என்றெல்லாம் இன்னமும் மழுப்பினால் விடிவு வராது.
  உலகம் பூராவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று கொண்டிருக்கிறது.
  ஆகவே முழு உரிமையுடன் இங்கு இருந்து கொண்டு இந்த அக்கிரமங்களை ஒழிக்க தேசியவாதிகளுடன் சேர்ந்து பணி செய்ய வேண்டும்.
  ஓட வேண்டியது அவர்கள்தானே தவிர கமல் அல்ல

  இனிமேலாவது கமல் தனது ஹிந்து விரோதப் போக்கை கைவிட்டு , ஜெயலலிதா போன்றவர்களின் ஒட்டு வங்கி அரசியல் , மற்றும் கூட இருக்கும் துஷ்ட சக்திகளின் சொல் கேட்டு அரசு நடத்துவது, அதிகார துஷ்ப்ரயோகம் இவற்றை – அது வேறு அரசியல்வாதியாக இருந்தாலும் -அதை எதிர்க்கும் ஆன்ம தைர்யம் கொண்டவராக மாற வேண்டும்.

  ஹிந்து தர்மமும் மற்ற கொள்கைகளும் ஒன்று என்பது போல் தொடர்ந்து தவறாக பேசிக் கொண்டிருக்க கூடாது.

 31. ஆர். பாலாஜி, பொன். முத்துக்குமார்,

  நீங்கள் ரெண்டு பேரும் “எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா.. ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்டா” டைப் ஹிந்து போல இருக்கிறது. பெரும்பான்மை ஹிந்துக்கள் உங்களைப் போலத்தான் முற்போக்குவாதிகள். ஆகவே உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  மற்றபடி நான் க்ருஷ்ணகுமார் அவர்கள் சொன்னதை வரவேற்கிறேன். அரசியல் சமநிலைக்காக வரும் சிலநாட்களில் கமலஹாசன் ஹிந்துக்களை மேலும் அவமதிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

 32. எம்.எப்.ஹுசைன் செய்ததும் கமல் செய்ததும் ஒன்றாகாது
  ஹுசைன் அன்னை சீதையையும், பாரத மாதாவையும் மிகக் கேவலமாக வரைந்தார்
  அதற்கு யாரும் அவருக்கு ‘தணிக்கை சான்றிதழ்’ தரவில்லை .
  ஆனால் கமலின் படம் சட்ட பூர்வமாக திரைப்படத் தணிக்கைக் குழுவால் பார்க்கப் பட்டு சான்றிதழ் வழங்கப் பட்டது
  சில காட்சிகள் வெட்டப் பட்டன.

  மேலும் ஹுசைன் மீது வழக்குகள் இருந்த நிலையில் அவர் அதிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு ஒடினார்.

  மேலும் முக்கியமாக , முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்க இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் பேர் உள்ளனர்.
  ஆனால் ஹிந்துக்கள் அனாதைகளாக உள்ளனர்
  என்னதான் முயன்றாலும் ஒரு நூறு ஹிந்துக்களை அவர்களின் தர்மத்தின் பெயரால் ஒன்று சேர்க்க முடியாது.
  சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்த யாரும் ஹிந்துக்களுக்காக குரல் கொடுப்பதேயில்லை.
  ஆகவே ஹிந்துக்களின் பிரச்னைகளைப் பொருத்தவரை அரசுகளுக்கு எந்த வித நிர்ப்பந்தமோ, நெருக்கடியோ நேரிடுவதேயில்லை.

  ஆனால் மதத்தின் பெயரால் ஒரு அறைகூவல் விடுத்தால் உடனே ஆயிரக்கணக்கில் முஸ்லீம்கள் திரண்டு விடுகின்றனர்
  மேலும் ஹிந்துக்களைப் பார்த்து ‘ இவர்களால் சட்ட ஒழுங்கு குலையும்’ என்று எந்த அரசும் பயப்படுவதில்லை.

  ஆனால் முஸ்லீம்களிடம் அப்படி அல்ல. ( உலகம் முழுதுமே )
  இல்லையென்றால் ஏன் ஊருக்கு முன் படங்களையும் ,புத்தகங்களையும், சல்மான் ருஷ்டீ, தஸ்லிமா நசரீன் இவர்களின் கூட்டங்களையும், பேச்சுக்களையும் தடை செய்ய வேண்டும்?

  ஆகவே ஹிந்துகளின் எதிர்ப்பையும் முஸ்லீம்களின் எதிர்ப்பையும் ஒன்றெனக் கூறுவது விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமையும் அல்லது தெரிந்தே மக்களை எமாற்றவுமே..

 33. இனிமேலாவது கருணாநிதி ஜெயலலிதா, முலாயம் சிங்க், சோனியா, லாலு பிரசாத், மாயாவதி ,ஒமர் அப்துல்லா,சரத் பவர் , மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் இவர்களின் தொப்பி- கஞ்சி- கேக் அரசியல் நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு வைக்கும் வேட்டு என்பதை ஹிந்துக்கள் உணர வேண்டும்
  இவர்கள் என்ன பசப்பினாலும் ஓட்டுப் போடக் கூடாது.

 34. கமலஹாசன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு பயல் பாக்கியில்லாமல் எல்லார் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொண்ட ஒருவர் இப்படித்தான் அவதிப்பட வேண்டியிருக்கும்.

  இன்று காலையில் – “தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை இல்லை என்றால் நான் வெளிநாட்டிற்குப் போவேன்” – கலைஞானி.

  மாலை கூட இல்லை, மதியமே – “இஸ்லாம் சகோதரர்களுக்காக என் படத்தில் மாற்றங்களை செய்வேன்” – கலைஞானி.

  இவரை நம்பி யாராவது முஸ்லிம் எதிர்ப்பாளர்களை எதிர்த்து ‘சவுண்ட்’ விட்டிருந்தால் அவங்க நிலைமை என்ன? காத்தால உண்ணாவிரதம் உக்காந்து மதியம் லஞ்ச்க்கு கிளம்பிய மூதறிஞரும் இவரும் ஒன்று தான்.

  இதுல ஆளுங்கட்சியை குறை சொல்ல ஒரு கூட்டம் அலைகிறது. அந்தம்மா ‘பொலிடிகல் மைலேஜ்’ தேடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். இவரை நம்பி அந்தம்மா ‘நான் பாதுகாப்பு கொடுக்கிறேன், நீங்க ரிலீஸ் பண்ணுங்கோ’ என்று கூறியிருந்தால் நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும். இப்போது, எப்படிடா இந்தம்மாக்கு கேட்ட பேர் வங்கித் தரலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கும் தாத்தாவும், கருப்பு வாத்தியாரும், சில பல திக, பகுத்தறிவு அடிவருடிகளும் சேர்ந்து மொத்தமாக “பார்ப்பன, ஆரிய ஆதிக்க சக்திகளின் ஆணவபடையெடுப்பு – விஸ்வரூபம்” என்று ஒரே போடாக போட்டிருப்பார்கள்.

  தாத்தாவுக்கு இப்போது அது ஒரே சங்கடமான விஷயம். என்னடா நாம பேசறதுக்கு பெரிய அளவில ஒண்ணுமே இல்லாம போச்சே! வழக்கமா நாம போடற கோல இந்தம்மா போட்டுடுச்சேன்னு மிரண்டு போயிருப்பார் பாவம். அரசியல் மைலேஜ் தேடத்தான் செய்வார்கள். கமலை சப்போர்ட் பண்ணினால் கன்பார்மா எம்பிக்கள் கிடைக்க மாட்டார்கள். மொத்த எதிரணியும் ஒண்ணா சேர்ந்து பெரிய ஸீன் போட்டு “கொலை பண்றாங்கப்பா” போன்ற வரலாற்று சிறப்பு மிக்க காட்சிகளை அரங்கேற்றி பார்ப்பன இந்துத்வத்தை பொடிப் பொடியாக்கி இருப்பார்கள். முஸ்லிம்களை எல்லாம் கருணாநிதி தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறாரா? அவர் மட்டும் தான் அரசியல் பண்ணுவாரா? எங்களுக்கு தெரியாதா? என்று அம்மா ‘தம்’ கட்டுகிறார். நன்று.

  ஏற்கனவே பம்பாய் படத்தின் பிரச்னையில் மணிரத்தினத்தின் வீட்டில் வெடிகுண்டு வீச்சு முயற்சி நடந்தது. அப்போது அம்மா ஆட்சி தான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாட்ஷா வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் பேசப் போக, தாத்தா அப்போதைய 96 தேர்தலில் சூப்பர் ஸ்டாரை மேலும் பேச விட்டு, அரசியல் மைலேஜ் திருப்தியாக தேடிக் கொண்டார். தந்திரத்தை தந்திரத்தால் தான் எளிதாக முறியடிக்க முடியும். இப்போது அம்மா உஷாராகி விட்டார்.

  உண்மையிலேயே சினிமா பார்க்கச் செல்லும் பொதுஜனத்தின் மேல் கல்லடி பட்டாலோ, பெட்ரோல் குண்டு வீசப்பட்டாலோ, இங்கு கருத்து சுதந்திரம், அமெரிக்கா என்று மொக்கை போடுபவர்கள் பொறுப்பு ஏற்பார்களா? சத்தியமாக மாட்டார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அப்போதும் தான் அந்தம்மா மீது பழி சொல்வார்கள். இப்போதே ஆங்காங்கே ஆரம்பித்து விட்டார்கள். லிங்க் கீழே!
  https://tamil.oneindia.in/news/2013/01/30/tamilnadu-petrol-bombs-hurled-at-two-theatres-ramanathapuram-dist-168881.html

  “ஜெயா டிவி க்கு படத்தை விக்கலை.”, “கமல் அம்மாவ போய் பாத்ததே படத்த பிரச்னையில்லாம ரிலீஸ் பண்ணனும்னு தான்”, “முதல்ல ஜெயா டிவி கிட்ட விக்கரேனு சொல்லி பணம் வாங்கிகிட்டு விஜய் டிவிகிட்ட அதிக விலைக்கு படிஞ்சதால விக்க மாட்டேனு சொல்லிட்டார்”, “ப.சி பிரதமராகனும்னு பேசினது தான் காரணம்” – இப்படி ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். உண்மை என்னவோ, அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

  “கடவுள் இல்லைனு நான் எப்ப சொன்னேன்? இருந்தா நல்லா இருக்கும்னு தான சொல்றேன்.” இது உலக நாயகர் பேசிய பிரபல வசனம். இருக்கிறதா இல்லையா என்பதை இப்போது அவரே மனதில் நிறுத்திப் பார்க்கட்டும். நாம படம் வந்தா பாக்கலாம். வரலன்னா நம்ம வேலைய பாக்கலாம். முஸ்லிம் நண்பர்களுடன் சமாதானமாக போய் படத்தில் சில காட்சிகளை நீக்க ஓகே சொல்லியிருக்கிறார் கமல். அவர்களுடன் சமாதானம் ஏற்பட்டு படம் வெளிவருமா? இல்லை அரசின் தடை அப்போதும் இருக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  உண்மையான கருத்து சுதந்திரம் இங்கே நிச்சயமாக இல்லை என்று கூறி விட முடியாது. நீங்கள் ராமரையும், விநாயகரையும், சிவனையும், முருகரையும், ரங்கநாதரையும் கிண்டல் பண்ணி கவிதையும் எழுதலாம். படமும் பண்ணலாம். அப்போது கருத்து சுதந்திரம் 100க்கு 1000 மடங்கு இருக்கும். அதே உள்ளதை உள்ளபடி வேறு மதத்தினரைப் பற்றி சொன்னால் வேலைக்கே ஆகாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை நண்பர்களே! ஹிந்து மதத்தைக் கொச்சைப் படுத்துவதை மட்டும் யாரும் நிறுத்தப் போவதும் இல்லை. அதற்காக போராடப் போவதும் இல்லை. ஏன் என்றால் அந்த விஷயத்திற்கு மட்டும் இது கருத்து சுதந்திரம் உள்ள நாடு.

 35. ஆனால் ஒன்று, இந்தப் ப்ரச்னையால் தமிழ் நாட்டு மக்கள் ( படிக்காதவர்கள் கூட) இஸ்லாம் மற்றும் அதிகார வெறி , பணப் பித்துக் கொண்ட ஹிந்து அரசியல் வாதிகள் இவைகளால் எதிர்காலத்தில் பெரும் ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்து பேச ஆரம்பித்துள்ளனர்.

  அந்த வகையில் இது மிகவும் நல்லதே.

  ஆப்பை அசைத்த குரங்கு அதில் அகப்பட்டது போன்று ஜெயா அரசு, முஸ்லீம் அமைப்புகள் ஒரு பக்கமும், வாய் திறக்க முடியாமல் கருணாநிதி மற்றொரு பக்கமும் இருப்பது நல்ல வேடிக்கை.

  ஹிந்துக்கள் நன்கு ரசிக்கலாம். ஏனென்றால் இவர்கள் யாரும் ஹிந்துக்களுக்காக பொட்டுக் கண்ணீர் சிந்த மாட்டார்கள்.
  காலச் சக்கரம் இப்போது ஹிந்து தர்மத்திற்கு ஆதரவாகத் திரும்ப ஆரம்பித்து உள்ளது என்பதை இது காட்டுகிறது.

 36. எனக்கு இது திகைப்பாக வுள்ளது ,காரணம் இந்த பதிவுகளை பார்க்கும் முன் நானும் விஸ்வ ரூபம் திரைப்படத்திற்கு ஏன் இந்த தடை என்று கவலைப்பட்டும், tamilnattu வாழ் அரபியர்களின் விசுவாசிகளின் அடக்குமுறையான எதிர்ப்பையும் கண்டு ஆனால் தற்போது அறியாமை நீங்கியது , விநாயகர் என்று கடவுளே இல்லை என்று தனக்கு இருக்கும் ரசிகர் செல்வாக்கின்u அகந்தையால் , தனது செல்வாக்கின் மமதையாலும் சொன்னவருக்கு எல்லாம் விக்னங்கள் ஆகி விட்டடது ,பெரும்பாலும் படங்களில் நமது ஹிந்துவை காமெடி ஆகவும் ,தவறான மூர்க்கர்கள் என்று சித்தரித்த கமல் அவர்களுக்கா நாம் வருத்த பட வேண்டாம் எல்லாம் அவன் செயல் இதன் மூலம் நாம் இந்த இஸ்லாமிய தீவரதிகளின் போக்கையும், பலத்தையும் , அரசின் நடுநிலையையும், கண்டுகொள்ளலாம் .

 37. விஸ்வரூபம் திரைப் படம் முஸ்லிம்களைப் புண் படுத்துகிறது என்று தமிழக முஸ்லிம்கள் சொல்கிறார்கள்.ஆனால் , இந்தப் படத்தின் கதையில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செயல்படும் பயங்கரவாதிகளைத்தான் கதைக் கருவில் கொண்டுவந்துள்ளதாக சொல்கிறார்கள்.அப்படி இருக்க நம்ம மாநிலத்து லெட்டர் பேடு இயக்கங்கள் இந்தப் போடு போடுகின்றனவே, இப்போது தெரிந்ததா கமல் சார் இந்துக்களை மட்டும் மட்டம் தட்டி வந்தால் நாங்கள் எவ்வளவு காசு கொடுத்தாலும் படம் பார்ப்போம்.உங்களோட கலைத் திறமையை மெச்சி உணகளுக்கு குடிப் பிடிப்போம்.ஆனால் , எல்லாப் படத்திலும் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும் இப்போ உங்களைத் திண்டாட வைத்துவிட்டார்கள் பார்த்தீரா?எங்களைப் பற்றி யார் கத்தினாலும் நாங்கள் கவலைப் பட மாட்டோம். இது எங்கள் இயல்பு ஆனால் ,………
  கலைஞருடன் பகுத்தறிவு மேடையைப் பகிர்ந்து கொள்வீர்களே முன்னெல்லாம் . இப்போது கலைஞர் உங்களுக்கு கை தூக்கி விட்டாரா? பைத்தியக் கார இந்து ரசிகன்தான் நீங்கள் எது சொன்னாலும் செய்தாலும் கைத்கட்டி ரசிப்பான். கொண்டாடுவான் .ஆனால், இந்து அல்லாதோரை ஏதாவது உண்மையாகவே இருந்து சொன்னாலும் இப்படித்தான் நடக்கும்.இதுதான் தமிழ்நாடு.புரிந்ததா உலக நடிகரே?
  ஈஸ்வரன்,பழநி.

 38. // தனி நபர் கருத்து சுதந்திரம் – அதற்கு ஆதரவு என்பதும் போலி நாஸ்திக வாதி – போலி புத்திஜீவி – ruthless unscrupulous profiteer – கமலஹாசனுக்கு ஆதரவு என்பதும் வேறு வேறான விஷயங்கள். முன்னதற்கு ஆதரவு அளிக்கையில் பின்னதும் ஆதரவு பெறும் தான். ஆனால் பின்னர் சொன்ன அர்ச்சனைகளை சேர்க்காது முன்னதான விஷயத்திற்கு தனித்து ஆதரவு தருவது என்பது நம் தலையில் மண்ணை வாரி அள்ளிக்கொட்டிக் கொள்வதற்கு சமம். //

  இங்கு நான் முக்கியப்படுத்தும் பிரச்சினை தனி நபர் கருத்து சுதந்தரமே. கமலை முன்னிட்டு அதை இப்போது பேசவேண்டியதாகிறது, அவ்வளவே. இந்த பிரச்சினையில் அவரை பிரிக்காமல் தனியாக ஆதரவளிப்பது இயலாது. காரணம், இன்று கமல், நாளை யார் என்பது இங்கே பூதாகரமான கேள்வி. இன்னொன்று, கமல் மாதிரியான பிரபலத்திற்கே இப்படி என்றால் (நான் பிரபலம் என்றால் தனியாக நடத்தப்படவேன்றும் என்ற பொருளில் சொல்லவில்லை. நாடு முழுதும் கவனிக்கும் ஒரு நபரை – தனது தொழிலில் மிகுந்த அர்ப்பணிப்புள்ள நபரை – தீவிர சினிமா காதலரை எந்த கூச்சமும் இல்லாமல் அநீதியான வழியில் மண்டியிட வைக்கும் போக்கை சுட்டவே அப்படி சொலிகிறேன்) சாமான்யனின் நிலை என்ன ? இதோ, அரசு விதித்த தடையை நீக்கியபின் திரை அரங்கிற்கு படம் பார்க்க வந்தவர்களையே தடியடி செய்து விரட்டியுள்ளனர். இது என்ன மக்களாட்சி நடக்கும் இடம்தானா ? இதற்கு நமது ரத்தம் கொதிக்கவில்லைஎனில் – இன்னமும் ‘கமல் இந்து மதத்தை விமர்சிப்பவர் என்பதாலேயே இப்பிரச்சினையில் எனது எதிர்ப்பை பதிவு செய்யமாட்டேன்’ என்றால் – நமது ஆதரவு மத ரீதியானது மட்டுமே என்ற அளவுக்கு நாம் பாரபட்சமுள்ளவர்கள் என்றால், மன்னிக்கவும், நாம் உணர்வு மரத்துப்போகும் நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றே பொருள்.

  “இன்று கஷ்டத்தில் இருக்கும் கமல்ஹாஸனுக்கு ஆதரவு அளித்தால் நாளை அவர் ஹிந்துக்களையும் ஹிந்துஸ்தானத்தையும் கேவலப்படுத்தாது இருப்பார் என்பது மூடநம்பிக்கை. இன்று ஹிந்துக்களிடமிருந்து ஆதரவை வாங்கி தன் பாக்கெட்டை ஸ்திரப்படுத்திக்கொண்டு நாளைக்கே தன் சுயரூபத்தை விஸ்வரூபமாகக் காண்பிப்பவர் தான் கமல்ஹாஸன்.”

  நான் அப்படி நினைக்கவே இல்லை. அப்படி நிபந்தனையோடு கூடிய ஆதரவிற்கும் நான் இங்கு வக்காலத்து வாங்கவில்லை. இது தனிநபர் பிரச்சினை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்திக்கொள்கிறேன். அப்படியே அவர் விமர்சிக்கட்டுமே, என்ன அதனால் ? அவரது விமர்சனத்தால் இந்து மதமே பட்டுப்போகுமா அல்லது இந்து மதத்தவர்கள் அவரது விமர்சனத்தால் வெளியேறி போய்விடப்போகிறார்களா ?

  ஒரு கமல் (அல்லது திரைப்படத்துறையே கூட) தனது திரைப்படங்களில் வைக்கும் விமர்சனத்தால் பாதிக்கப்படும் அளவுக்கு பலவீனமானது இந்துமதம் என்று நான் நினைக்கவில்லை. இதையெல்லாம்விட கடும் அடக்குமுறை, ஒடுக்குமுறையை எல்லாம் சந்தித்து மீண்டு வந்திருக்கும் இந்து மதத்தை இவர்கள் செய்யும் விமர்சனம் பாதிக்கும் என்று நாம் புண்பட தயாராக இருந்தால் – மீண்டும் சொல்கிறேன், அந்த தவ்ஹீத் சைக்கோ-க்களுக்கும் நமக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும். அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா ?

  கமல் மட்டுமல்ல, யாருமே இந்து மதத்தையோ இந்து மத கடவுள்களையோ விமர்சிக்கவே கூடாது – செலக்டிவாகவேனும் – என்பதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டுமா ? அப்படியானால் நம்மிடம் அதிகாரம் இருந்தால் நாமும் தவ்ஹீத் போன்றவர்களது நிலைப்பாடுதான் எடுப்போமா ?

  கருத்தை கருத்தால் மட்டும் எதிர்கொள்வோம். அவரது கருத்து நமக்கு உவப்பாக இல்லாவிட்டாலும் அவரது கருத்து சுதந்தரத்துக்கு மதிப்பு கொடுப்போம்; அதற்கு பங்கம் வரும்போது எதிர்த்து குரல் கொடுப்போம்.

 39. // வணிகம் என்றால் லாபமும் நஷ்டமும் சஹஜம் தானே. வ்யாபாரத்தில் அழுகுனி ஆட்டமும் சஹஜமே. அழுகுனி ஆட்டத்தில் நஷ்டம் வந்தாலும் கூட அதையும் கமலே தான் தாங்க வேண்டும். அதையெல்லாம் மட்டும் ஏன் பாட்டி தாத்தா தாங்க வேணுமாம்? //

  உண்மைதான். ஆனால் ஏற்படும் நஷ்டமானது சரக்கு தரம் இல்லை என்பதாலோ, இடம் பொருள் தெரியாமல் விற்க முனைவதாலோ இன்னபிற இயல்பான காரணங்களாலோ என்றால் ஏற்கத்தான் வேண்டும். ஏற்றும் இருக்கிறார். அவருடைய எல்லா படங்களும் வணிகரீதியாக வெற்றி பெற்றதில்லை. ஆளவந்தான் பல தலை குப்புற விழுந்தவை உண்டு. ஆனால் வணிகரீதியாய் வெற்றி பெற எல்லா சாத்தியங்களும் கொண்ட இந்த திரைப்படத்தை முரட்டுத்தனமாக கும்பல் பலம் மற்றும் வன்முறை துணைகொண்டும் அதிகாரத்தின் உதவியோடும் முடக்கி நஷ்டம் ஏற்படுத்த முனைகிறார்கள். இது மிகவும் அநீதி.

  // மெச்சிக்க வேண்டியது தான் அமேரிக்க ஸ்வதந்த்ரத்தை. ஊர் முழுக்க மொடாக்குடியர்களாக இருப்பார்கள். your children and my children are playing with our children என்ற படிக்கு free for all என இருப்பார்கள். ஆனால் ராஷ்ட்ரபதி மட்டும் யோக்யமாக இருக்கணுமாம். ஊர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் முன்னாள் ராஷ்ட்ரபதி க்ளிண்டன் அவருடைய பத்னி ஹில்லாரியை ஏய்த்து விட்டு பர ஸ்த்ரீ மோனிகாவுடன் சல்லாபம் செய்தால் ஊரே ஒப்பாரி வைக்குமாம். போங்க சார் உங்க அமேரிக்காவும் அதன் ஸ்வதந்த்ரமும். ஸ்வதந்த்ரம் என்றால் துப்பாக்கி எடுத்தவன் கண்டவனையெல்லாம் சுடமுடியும் என்பது தானே அமேரிக்காவில். //

  இந்த ‘your children and my children are playing with our children’ நகைச்சுவையை நானும் எள்ளி நகையாடி இருக்கிறேன், அமெரிக்க வாழ்க்கையை அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் முன்பாக. இங்கே அவர்கள் பிடிக்காவிட்டாலும் கணவன்-மனைவியாக போலித்தனமாக வாழவேண்டாம் என்று நினைக்கிறார்கள். அப்படி பிரிந்துவிட்டால் உடனேயே முகத்தை திருப்பிக்கொண்டு போகவேண்டும், மற்றவர் முகத்திலேயே விழிக்கக்கூடாது என்று சங்கல்பமெல்லாம் செய்துகொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு வாழ்வியல் முறை. இதில் எள்ளி நகையாடி, எங்கள் வழியே உன்னதமானது என்பதெல்லாம் சரியான பார்வை அல்ல.

  கணவனாக கிளிண்டன் செய்தது ஏமாற்று வேலை மற்றும் துரோகம். ஒரு பணியிடத்தில் வேலை செய்பவராக அவர் செய்தது பாலியல் சுரண்டல். பணியாளர் சட்டப்படி தண்டனைக்குள்ளாகக்கூடிய குற்றம் இரண்டாவது. (வெள்ளை மாளிகை சட்டம் என்ன என்பது தெரியாது. நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகும் குற்றம் இது) இந்த துரோகமும் பணியிடத்தில் இழைத்த குற்றமும்தான் எதிர்க்கப்பட்டது, அதே காரணத்துக்காக.

  அதே போல இங்கே இருப்பவர்கள் எல்லாம் அனுதினமும் பாலியல் ஏமாற்று புரிபவர்கள் என்பதுபோல நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அது பிழை. அவர்களிடத்தில் பாலியல் சுதந்திரம் உண்டு. ஆனால் எந்த கணவனும் மனைவியும் சதா சர்வகாலமும் அடுத்தவனோடு/ளோடு படுத்துக்கொண்டிருப்பவர்கள் அல்ல. ஏமாற்றுபவர்கள் உண்டுதான், நம்மூரில் மட்டும் இல்லையா என்ன ? ஆனால் ‘One at a time’ என்பதுதான் நான் கண்டவரை அவர்கள் பின்பற்றும் வழி.

 40. // ஆர். பாலாஜி, பொன். முத்துக்குமார்,

  நீங்கள் ரெண்டு பேரும் “எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா.. ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்டா” டைப் ஹிந்து போல இருக்கிறது. பெரும்பான்மை ஹிந்துக்கள் உங்களைப் போலத்தான் முற்போக்குவாதிகள். ஆகவே உங்களுக்கு வாழ்த்துக்கள். //

  கார்கில், இந்த பிரச்சினையை கமலுடைய சொந்த பிரச்சினை என்று அவரை மட்டும் மையப்படுத்தி நீங்கள் புரிந்துகொண்டிருப்பதாலேயே இப்படி சொல்கிறீர்கள். நான் ‘பிரச்சினை கமல் அல்ல, அவரை முன்னிட்டு நாம் எதிர்க்கவேண்டியது, அடிப்படைவாத அமைப்புகளின் துணையோடு அரசே செய்யும் கருத்து சுதந்தரத்திற்கு எதிரான அடக்குமுறையே’ என்கிறேன்.

  இதில் முற்போக்கு பிற்போக்கு என்றெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை. இந்த இடத்தில், இந்த நேரத்தில் எது சரி என்று என் மனதுக்கு தோன்றுகிறதோ அதை சொல்ல விழைகிறேன், அவ்வளவுதான்.

 41. @பொன்.முத்துக்குமார், ///இந்த பிரச்சினையை கமலுடைய சொந்த பிரச்சினை என்று அவரை மட்டும் மையப்படுத்தி நீங்கள் புரிந்துகொண்டிருப்பதாலேயே இப்படி சொல்கிறீர்கள். நான் ‘பிரச்சினை கமல் அல்ல, அவரை முன்னிட்டு நாம் எதிர்க்கவேண்டியது, அடிப்படைவாத அமைப்புகளின் துணையோடு அரசே செய்யும் கருத்து சுதந்தரத்திற்கு எதிரான அடக்குமுறையே’ என்கிறேன்//

  முத்துக்குமார் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிதர்சன உண்மை இது தான். கருத்து சுதந்திரம் நம் நாட்டில் கண்டிப்பாக உள்ளது. இதே கமல் அதை பல முறை, மிக அயோக்யதனமாக இந்து கடவுள்களை கொச்சை படுத்த பயன் படுத்தி இருக்கிறார். இதை அறிவு ஜீவி தனம் என்று நினைத்து கை தட்டிய இந்துக்களே பல பேர்..!!

  இந்த கொச்சையான கோமாளி தனத்தை அதிகப்படி முகம் சுளிதோ அல்லது தர்க்க ரீதியாக வலை தளங்களில் எதிர்த்த இந்துக்களும் ஒரு சிறு அளவு உண்டு.

  ஆனால் முஸ்லிம்கள் அப்படியா?? இவர் படத்தில் சொல்லி இருக்கும் பல விஷயங்கள் அப்பட்டமான உண்மையே என்றாலும், எல்லா ஜாமதுகளும் ஒன்றாக போர் கோடி தூக்கின. அவர்களுக்கு தெரிந்த ‘அமைதி’ மார்கத்தில் இப்போது பெட்ரோல் குண்டு வீசுவதாக செய்தி வந்துள்ளது..!! இப்படி செய்ய கூடியவர்கள் முஸ்லிம்கள். நிலைமை இப்படி இருக்க, நியாமாக இருந்தாலும், இந்த அரசு கமலுக்கு சாதகமாக செய்தால் ஒரு ஒட்டு விழுமா?? அது கலைஞருக்கு தான் பயன் தரும்..!!

  ஜெயா அரசு எப்படி இந்த குழுக்களை எதிர்க்கும்? அப்படி செய்துவிட்டால் தமிழ் நாட்டில் உள்ள இந்துகளேலாம் நாளைக்கே அவர்களது நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்து, ஜெயா விற்கு ஒட்டு போட்டு விடுவார்களா? இந்துக்களே அவர்களது நியாய, தருமங்களுக்காக குரல் கொடுப்பது இல்லை, ஆனால் அரசு மட்டும் ஒட்டு போனாலும் ரொம்ப நியாயமாக நடக்க வேண்டும்..! இது எப்படி சாத்தியம்??

  ஜனநாயகத்தில், அணி திரண்ட என்னிகைகளுக்கு தான் மரியாதை. வெறும் (ஒட்டு கூட போடாத) என்னிகைகளுக்கு மதிப்பு கிடையாது. அரசும், அரசியல்வாதியும் இந்த அணிகள் வேண்டுவதையே செய்வார்கள் (அல்லது செய்வது போல் பாசாங்கு செய்வார்கள்). இப்பொழுது இந்த அணிகள் அரசிடம் சொல்வது, “கருத்து சுதந்திரம் வேண்டும் என்றால் எவ்வளவு அடித்தாலும் வாங்கி கொள்ளும் இந்துகளிடம் காட்டுங்கள். உண்மையே என்றாலும் எங்கள் இசுலாமிய மதம் பற்றியோ, இசுலாமிய ‘புனித போராளிகள்’ பற்றியோ ஒன்றும் சொல்ல கூடாது” என்பது. அதை தான் அரசு கேட்கும். கமலும் இதை நன்றாக உணர்ந்தவரே. அதனால் தான் அவர்கள் காலில் விழுந்து பாவ மன்னிப்பு கேட்கிறார்..!!

  நாம் விரும்புவது இந்துகளுக்கான அடிப்படை நியாயமோ அல்லது கருத்து சுதந்திரமோ அணியாக திரண்டால் தான் நிறைவேறும்..!!

 42. agilan,
  //கமல் அதை பல முறை, மிக அயோக்யதனமாக இந்து கடவுள்களை கொச்சை படுத்த பயன் படுத்தி இருக்கிறார். இதை அறிவு ஜீவி தனம் என்று நினைத்து கை தட்டிய இந்துக்களே பல பேர்..!!// — top notch.. I have seen that, most of foolish people think that they are honest,brilliant and forward minded and hence they clap for KHasan & KB. The veritable smart people know both KB&KH are pseudo.

  What J Jayalalitha did was very correct and smart move. Otherwise, there would be more damages, fires and even funerals might have caused by Muslims. In an extreme, un-likelyhood Karunanidhi would have called for dismissal of Govt. on the basis of order and law problems. Muslims won’t vote for her. Neither Hindus will support her if she had taken right steps supporting hindus. So she did what is politically right for her.

 43. இவ்வளவு நாள் கழித்தாவது ஹிந்துக்கள் ஒரு விஷயத்தைப் புரிந்த்கொண்டால் சரி. கருணாநிதி எவ்வளவு ஹிந்து விரோதியோ அவரைவிட ஜெயலலிதா சந்தர்பவாதி மற்றும் ஹிந்து விரோதி.இது பல சமயங்களில் நிரூபணம் ஆகிவுள்ளது. தேர்தல் சமயத்தில் கருணாநிதி வரக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவுக்கு வோட்டளித்த ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பி.ஜே.பி காரர்கள் ஆத்மசொதனை செய்து பார்க்க வேண்டிய நேரம் இது.தேர்தல் சமயத்தில் தேசவிரோத, பயங்கரவாத முஸ்லீம் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டபோது கூட இதை உணரவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

 44. பாலாஜி மற்றும் பொன்முத்துக்குமார்…

  ஏன் இவ்வளவு பதட்டம்? என் இவ்வளவு புலம்பல்?

  கமலஹாசன் யார்? அவர் ஒரு நடிகர் …உங்களுக்கும் எனக்கும் உள்ள தொழில் போல அவருக்கு நடிப்பு என்பது அவர் தொழில்…….இதில் அவர் லாபப்பட்டாலோ நஷ்டப்பட்டாலோ நமக்கென்ன? வழக்கமாக அவர் ஏமாந்த தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் அரைப்பார்……[.தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் காமெடிப்படம் எடுத்து கல்லா கட்டுவார்……] காலத்தின் கோலம் இம்முறை அவரே மாட்டிக்கொண்டுள்ளார்……விஸ்வரூபம் ரிலீசாகாவிட்டால் நமக்கு இனிமேல் சோறு கிடைக்காமல் போய்விடுமா?

  அவர் எத்தனை படங்களில் ஹிந்துக்களை நையாண்டி செய்துள்ளார் என்பதை நண்பர் பட்டியலிட்டுள்ளார்கள்……இதையெல்லாம் அவர் தெரியாமலா செய்தார்?அப்போதெல்லாம் இனித்ததா? தானாக முன்வந்து திராவிடர் கழகத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவர் தானே? அகர்ஹாரத்தில் இருந்து பெரியார் திடலுக்கு வந்தவன் என்று மார்தட்டிக்கொண்டவர்தானே?……………[ நேற்று பெட்டிகொடுக்கும்போது கூடகருப்புச்சட்டைதான் அணிந்திருந்தார் ]……இப்போது அந்த கருஞ்சட்டைக்கும்பல் வந்து காப்பாற்றட்டுமே ? நமக்கென்ன வந்தது?

  மீண்டும் மீண்டும் நான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என்று அறிவிப்பவருக்கு மதத்தை துறந்தவர்கள் ஆதரவளிக்கட்டும் ……ஹிந்துக்களாகிய நாம் என் இவரை ஆதரிக்கவேண்டும்? விஸ்வரூபம் பற்றிய பேட்டியில் விநாயகரை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன?

  // இன்று கஷ்டத்தில் இருக்கும் கமல்ஹாஸனுக்கு ஆதரவு அளித்தால் நாளை அவர் ஹிந்துக்களையும் ஹிந்துஸ்தானத்தையும் கேவலப்படுத்தாது இருப்பார் என்பது மூடநம்பிக்கை. இன்று ஹிந்துக்களிடமிருந்து ஆதரவை வாங்கி தன் பாக்கெட்டை ஸ்திரப்படுத்திக்கொண்டு நாளைக்கே தன் சுயரூபத்தை விஸ்வரூபமாகக் காண்பிப்பவர் தான் கமல்ஹாஸன். //

  கிருஷ்ணகுமார் அய்யா அவர்களின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்…..

  சரி அரசு இதில் தலையிட வேண்டிய அவசியம் என்ன?

  // இதுல ஆளுங்கட்சியை குறை சொல்ல ஒரு கூட்டம் அலைகிறது. அந்தம்மா ‘பொலிடிகல் மைலேஜ்’ தேடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். இவரை நம்பி அந்தம்மா ‘நான் பாதுகாப்பு கொடுக்கிறேன், நீங்க ரிலீஸ் பண்ணுங்கோ’ என்று கூறியிருந்தால் நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும். இப்போது, எப்படிடா இந்தம்மாக்கு கேட்ட பேர் வங்கித் தரலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கும் தாத்தாவும், கருப்பு வாத்தியாரும், சில பல திக, பகுத்தறிவு அடிவருடிகளும் சேர்ந்து மொத்தமாக “பார்ப்பன, ஆரிய ஆதிக்க சக்திகளின் ஆணவபடையெடுப்பு – விஸ்வரூபம்” என்று ஒரே போடாக போட்டிருப்பார்கள். //

  பிரசன்னா சுந்தர் அவர்கள் கூறியது சரி…..ஆனால் எங்கே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பது ஜெ வுக்கு [ எப்போதுமே ] தெரிவதில்லை…..உயர் நீதிமன்றம் தடை விதித்தவுடன் பிரச்சினையை கை கழுவியிருக்க வேண்டும்……மேலும் மேலும் அப்பீல் செய்வதால் , அவரது உள்நோக்கம் வெளிப்பட்டு விட்டது…….காஞ்சி மட வழக்கிலும் இப்படித்தான் அளவுக்கு மீறி நடந்து கொண்டார்…..[பெரியவருக்கு ஜாமீன் கிடைத்ததும் . இளையவரை கைது செய்தது…]..

  //.ஒரு கமல் (அல்லது திரைப்படத்துறையே கூட) தனது திரைப்படங்களில் வைக்கும் விமர்சனத்தால் பாதிக்கப்படும் அளவுக்கு பலவீனமானது இந்துமதம் என்று நான் நினைக்கவில்லை. //

  இப்படி ஜல்லி அடித்துக்கொண்டிருப்பதால்தான் போறவன் வர்றவனெல்லாம் நம்மை உதைக்கிறான்……நாம் இளித்துக்கொண்டு வழிகிறோம்……நாட்டின் உள்துறை அமைச்சர் [கிறித்தவர் ] ஹிந்துக்கள் பயங்கரவாதிகள் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்….நாம் அதையும் துடைத்துக்கொண்டு போகிறோம்….அந்த அளவுக்கு நம் தோல் தடித்துப்போய்விட்டது……இந்த நிலை உங்களுக்கு உவப்பாக இருக்கலாம்…..எனக்கு வலிக்கிறது…..

  //.இவ்வளவு நாள் கழித்தாவது ஹிந்துக்கள் ஒரு விஷயத்தைப் புரிந்த்கொண்டால் சரி. கருணாநிதி எவ்வளவு ஹிந்து விரோதியோ அவரைவிட ஜெயலலிதா சந்தர்பவாதி மற்றும் ஹிந்து விரோதி.இது பல சமயங்களில் நிரூபணம் ஆகிவுள்ளது. தேர்தல் சமயத்தில் கருணாநிதி வரக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவுக்கு வோட்டளித்த ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பி.ஜே.பி காரர்கள் ஆத்மசோதனை செய்து பார்க்க வேண்டிய நேரம் இது.தேர்தல் சமயத்தில் தேசவிரோத, பயங்கரவாத முஸ்லீம் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டபோது கூட இதை உணரவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.//

  சந்திரமௌலி அவர்களின் கருத்தை முழுமையாக வரவேற்கிறேன்……..நாற்பது வருடங்களுக்கு முன்பே பெருந்தலைவர் கூறியது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது…….[ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ]

  சரி …இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் நாம் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்கள் என்ன?

  1. இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் எப்படிப்பட்டவை என்பதை பெரும்பாலான ஹிந்துக்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள்…..[ நாம் எவ்வளவு பிரச்சாரம் செய்திருந்தாலும் இந்த அளவுக்கு ரீச் கிடைத்திருக்காது ]

  2. ஹிந்துக்களை இழிவு செய்தால் கண்டுகொள்ளாத அரசும் , அரசியல் கட்சிகளும் சிறுபான்மையினர் விவகாரம் என்றால் வியர்த்துவடிவது அம்பலமாகியுள்ளது…….

  3. பட உரிமையை ஜெயா டி.வி க்கு , கொடுக்காததாலும் , ஜெ.வின் ஜென்ம விரோதியான சிதம்பரத்தை பிரதமராக வேண்டும் என்றும் பேசிய கமலை பழிவாங்க எண்ணிய ஜெ வின் உள் நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் அவர் கைப்பாவையாக மாறிவிட்டதை இஸ்லாமிய இயக்கங்கள் புரிந்துக்கொண்டு அசடு வழிவதை கண்டு ரசிக்கலாம்…..[ நாட்டுப்புற பழமொழிகள் பொய்ப்பதில்லை ]

  4. கோயிலில் அன்னதானம் செய்து விட்டால் போதும் ……சிறுபான்மையினருக்கு எவ்வளவு வாரிக்கொடுத்தாலும் ஹிந்துக்களுக்கு புரியாது என்ற எண்ணத்தில் செயல்பட்ட ஜெ. வின் நினைப்பில் மண் விழுந்துள்ளது…….

  எல்லாவற்றுக்கும் மேலாக , ஹிந்துக்களை இழிவு செய்வதில் இன்பம் கண்ட ஒரு ஆபாசப்பேர்வழி படும் அவஸ்தையை ரசிக்கும் வாய்ப்பு …..

 45. Kamal has already sold his film. Then where is the question of loss?

  I am reminded of what he said during the release of “vikram”. He had gone to rajasthan for shooting. There he found houses painted in differented colors. When he asked the erason, he was told that the houses were painted according to the caste of its residents. When they asked if this praciise was not there in tamilnadu, kamal told them ” I copme from the land of Periyar where there is no differentiation between caste, creed & religion”.

  Now, has the situation changed, Mr.Haasan?

  By the way, you changed your name from kamalahasan to kamal haasan. Why? Numerology?
  I thot U said U did not believe in such things.

  Kamal is a hypocrite to the core. He deserves this treatment.

 46. \\\\\\இது என்ன மக்களாட்சி நடக்கும் இடம்தானா ? இதற்கு நமது ரத்தம் கொதிக்கவில்லைஎனில் – இன்னமும் ‘கமல் இந்து மதத்தை விமர்சிப்பவர் என்பதாலேயே இப்பிரச்சினையில் எனது எதிர்ப்பை பதிவு செய்யமாட்டேன்’ \\\\\

  ஸ்ரீமான் முத்துக்குமார், கமல்ஹாஸன் என்ற போலி நாஸ்திக வாதி – போலி புத்திஜீவி – ruthless unscrupulous profiteer அவர்களுடைய தனிநபர் கருத்து சுதந்திரத்துக்கு அவர் என்ன பேத்தினாலும் சரி ஆதரவு தாரீர் என்று நான் சொல்லி விட்டேன்.

  ஆனால் கூட அழுத்தம் திருத்தத்துடன் சொல்வது,

  \\\இது என்ன மக்களாட்சி நடக்கும் இடம்தானா ? இதற்கு நமது ரத்தம் கொதிக்கவில்லைஎனில்\\\\

  என்று கொதிநிலையெல்லாம் ஏறாது —- ஔரங்க்ஜேப் பற்றிய படக்காட்சியை சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய போலீஸ்காரர்களே வன்முறை மிக படங்களை கிழித்தெறியும் அராஜகப்போக்கை —- அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அதே தனி நபர் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது.

  இந்த விவாதங்களினூடே ஹிந்துக்கள் அழுத்தம் திருத்தமாக போலி அறிவுஜீவிகள் மற்றும் விலை போகும் ஊடக வாதிகள் இவர்கள் மண்டையில் உரைக்கும் படி சொல்ல வேண்டியது தனி நபர் கருத்து சுதந்திரம் என்பது ஹிந்துக்களுக்கும் உண்டு என்பது.

  ஜெனாப் ஓவைசியை கைது செய்ய ஆந்த்ரா போலீஸ் எத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டது. கேட்டால் அவர் வைத்திய சாலையில் இருக்கிறார் அவருக்கு சிகித்சை முடிந்ததும் கைது செய்வோம். அவருக்கு மூக்கு சளிக்கு வைத்தியமா வயிற்றுப் போக்குக்கு வைத்தியமா என்பது அல்லாஹ் தாலாவுக்கே வெளிச்சம். ஆனால் ஸ்ரீமான் வருண்காந்தியை கைது செய்வதில் எவ்வளவு துரிதம்.

  இதற்கெல்லாம் ரத்தம் கொதித்தால் உடம்புக்குத் தான் கேடு. ஆனால் விவாதங்களினூடே கருத்துச்சுதந்திரம் என்பது ஹிந்துக்களுக்கும் உள்ளது என்பதை எப்படியெல்லாம் சொல்ல வேண்டுமோ அப்படியெல்லாம் சொல்லவேண்டும் எத்தனை முறை சொல்ல வேண்டுமோ அத்தனை முறை சொல்ல வேண்டும்.

  \\\\\கமல் மட்டுமல்ல, யாருமே இந்து மதத்தையோ இந்து மத கடவுள்களையோ விமர்சிக்கவே கூடாது – செலக்டிவாகவேனும் – என்பதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டுமா ? \\\\\

  ஸ்ரீமான் முத்துக்குமார், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஹிந்து மதத்தை விமர்சிக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு ஒத்துக்கொள்ள வேண்டுமானால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆப்ரஹாமிய மதங்களை விமர்சிப்போம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இது ஹிந்துஸ்தானத்தில் இன்றைய நிலையில் நடவாக் கார்யம். கானல் நீர்.

  நிகழக்கூடிய சாத்தியம், யார் வேண்டுமானாலும் ஹிந்து மதத்தை மட்டும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிப்பர். ஆனால் ஹிந்துக்கள் மட்டும் அடக்கியே வாசிக்க வேண்டும். ஹிந்து மதத்தை T-D-H விமர்சிப்பது கருத்து சுதந்திரம்; ஹிந்துக்கள் அடுத்த மதத்தைப் பற்றி விமர்சிப்பது மதவாதம் —- என்பது —- ஹிந்துஸ்தான மதசார்பின்மை வகுக்கும் இலக்கணம்.

  ஒன்று யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள் என்று முழுச் சுதந்திரம் பெறுங்கள். பின்னர் யாரும் எப்படியும் பினாத்தலாம்.

  அது இல்லாத பக்ஷத்தில் இன்றைய ஹிந்துஸ்தான நிலைமையில் ஹிந்துக்களைப் பற்றி கண்டவனும் கண்டபடி பேசுவதற்கு மட்டும் மண்டையாட்டுவது மடமையே.

  \\\\\அப்படியே அவர் விமர்சிக்கட்டுமே, என்ன அதனால் ? அவரது விமர்சனத்தால் இந்து மதமே பட்டுப்போகுமா அல்லது இந்து மதத்தவர்கள் அவரது விமர்சனத்தால் வெளியேறி போய்விடப்போகிறார்களா ?\\\\\\

  Oops! wrongly understood. சக, ஹூண, யவனர்களை எதிர்கொண்ட ஹிந்து மதம், கமல்ஹாஸன் என்ற போலி நாஸ்திக வாதி – போலி புத்திஜீவி – ruthless unscrupulous profiteer அவர்களால் ஒன்றும் ஆகிவிடாது தான். அது பேச்சே இல்லை.

  நான் சொல்ல வருவது “கர்மண்யேவாதிகாரஸ்தே” – இந்த அறிவுக்கொழுந்து நாளை எப்படியெல்லாம் பினாத்தும் என்று தெரிந்த பின்பும் கூட தனிநபர் கருத்து சுதந்திரம் என்ற கோட்பாடுக்கு கோட்பாட்டின் அடிப்படைக்காக ஆதரவு தாரீர்.

  ஆனால் இந்த அறிவுக்கொழுந்தின் ஜகதலப்ரதாப பல்டிகளை வெளிச்சம் போட்டுக்காட்டி அதன் போலி முகத்திறையை கிழித்தெறிந்து — இத்யாதி கட ச்ராத்தமெலாம் செய்து —– கோட்பாட்டுக்கு ஆதரவு தந்தால் தான் —– அய்யா சாமி —— கருத்து சுதந்திரம் என்பது ஹிந்துக்களுக்கும் கூட இருக்கும் போல ——- என்பது முற்போக்கு, வயிற்றுப்போக்கு, குபுத்தி ஜீவி ——-இத்யாதிகளுக்கெல்லாம் நினைவிலாவது வரும். அப்படியெல்லாம் செய்யாது கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு தருவோம் என்றால் —— அன்பர் ஒருவர் சொன்னது போல் ஹிந்துக்கள் எல்லோரையும் ஸ்ரீமான் வடிவேல் ஹாஸ்யத்தில் சேர்த்து விடுவார்கள். ஏற்கனவே ஈஸ்வர அல்லா தேரோ நாம் பாட்டும் பாடும் கும்பல் நாம்.

  \\\\ஆனால் வணிகரீதியாய் வெற்றி பெற எல்லா சாத்தியங்களும் கொண்ட இந்த திரைப்படத்தை முரட்டுத்தனமாக கும்பல் பலம் மற்றும் வன்முறை துணைகொண்டும் அதிகாரத்தின் உதவியோடும் முடக்கி நஷ்டம் ஏற்படுத்த முனைகிறார்கள். இது மிகவும் அநீதி.\\\\\

  ஸ்ரீமான், உலக வணிகம் என்பதில் அநீதி என்பது மிக முக்யமான அங்கம். Enron எப்படியெல்லாம் படம் காட்டினார்கள். என்னென்னவெல்லாம் போதனை செய்தார்கள். பங்க்சர் ஆனபின்பு தானே தெரிந்தது மன்னார் அண்டு கும்பனி என்று. உங்களுக்கு வேண்டியதை மட்டும் அடைப்பிலிட்டு “காக்ரா” விஷயத்தை சவுகரியமாக விட்டு விட்டீர்களே. அமேரிக்க வ்யாபாரம் என்றால் வெளிப்படை நீதி மறைமுக அநீதி. பூஜ்ய சதமான ரிணம் என்று விதேச வங்கிகள் கதை விடுவார்கள். ஆனால் அந்த சார்ஜு இந்த சார்ஜு என்று உங்கள் பாக்கெட்டை உங்களுக்கே தெரியாது காலி செய்வார்கள். உலக ஜகதலப்ரதாபனான கமல் ஹாஸன் என்ற Unscrupulous profiteer அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று நம்ப நான் தயாரில்லை. இப்போது ஸ்ரீ சரத்குமார் என்ற நடிகர் கூட ஜெவிடம் மத்யஸ்தம் பேசுவதாக் செய்தி பார்த்தேன்.

  இந்த Unscrupulous profiteer இப்போது தன் லாபத்தை பாதுகாக்க ( வீடு போச்சு பக்கத்தூருக்குப் போறேன் டும் டும் டும் என்று நஷ்டக்கதையெல்லாம் நம்ப முடியவில்லை) படத்தில் பல கத்திரிக்கோல் சமாசாரத்துக்கு ஒத்துக்கொள்வாராம். இந்த லக்ஷணத்தில் கருத்து சுதந்திரத்துக்குப் போராட்டம் — அதற்கு உலகோரின் ஆதரவு —- என்பதெல்லாம் பொக்கை வாய் தாத்தா கொட்டைப்பாக்கு மெல்வது போலத்தான். ஜகதலப்ரதாப வ்யாபாரி நஷ்டத்துக்கு நூறு கோடி ரூபாயில் படம் காட்டுவார் என்ற கதையை கேழ்வரகில் நெய் வடிகிறது என்பவர் மட்டும் தான் கேட்பார்.

  \\\\\ஆனால் எந்த கணவனும் மனைவியும் சதா சர்வகாலமும் அடுத்தவனோடு/ளோடு படுத்துக்கொண்டிருப்பவர்கள் அல்ல. \\\

  ஸ்வாமின், த்வீபாந்தரத்திலே எல்லாரும் ஸ்த்ரீ லோலர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஊர் முழுதும் Free for all என்ற கருத்தில் மஸ்தியாக இருக்கையில் ராஷ்ட்ரபதி, ராணுவ தளபதி இத்யாதி பேர்வழிகள் மட்டும் சமத்தாக இருக்கணும் —– அது தான் கருத்து சுதந்திரம் என்று ஆசாரமாகப் பேசும் மாய்மாலத்தை தான் சுட்டிக்காட்டுகிறேன். அமேரிக்காவிலும் மனுஷ்யர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ethical values பொதுவிலே உண்டு என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

 47. உலக ஜகதலப்ரதாபன் ஸ்ரீமான் கமல்ஹாஸன் ஹிந்துக்கள் மண்டையில் (கூடவே முஸல்மான் கள் தலையிலும்) மிளகாய் அரைக்கையில் ஓசைப்படாது உத்தர பாரதத்தில் ஜெனாப் ஷாரூக் கான் என்ற நடிகர் சமீபத்தில் ஹிந்துஸ்தானத்தின் தலையில் மிளகாய் அரைத்தது விலை போகும் போலி மதசார்பற்ற ஊடகத்தால் அமுக்கி வாசிக்கப்பட்டது.

  மும்பை திரை உலகம் மிகப்பெரும்பாலும் முஹமதிய சஹோதரர்களின் கையில் இருக்கும் போதிலும் ஜெனாப் ஷாரூக் கான் என்ற நடிகர் அவர்கள் தான் புறக்கணிக்கப்படுவது போலும் தான் முஸல்மான் என்பதால் தன் ப்ராணனுக்கு ஆபத்து என்றும் நாடகமாடி வசனம் பேசி நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். கருத்து சுதந்திரம் பேணும் விலை போகும் ஊடகம் இதை சமத்தாக அமுக்கி வாசித்துள்ளது.

  வேலிக்கு ஓணான் தானே சாக்ஷி. தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்ற வசனத்தின் படி Baqi Sthan ( பாகிஸ்தான் பிளந்த பின்பு மீதி பாக்கியாக இருக்கும் ஸ்தான்) அமைச்சர் ஜெனாப் ரெஹ்மான் மாலிக் அவர்கள் ஹிந்துஸ்தானம் ஜெனாப் ஷாரூக் கானுக்கு அபயமளிக்க வேணும் என்று அறிவுரை கொடுத்துள்ளார். போதாதுக்கு Baqi Sthan பயங்கரவாதி ஆயிரம் தலை வாங்கிய அடாவடி ரத்தமணி ஜெனாப் ஹஃபீஸ் சையீத் அவர்கள் ஹிந்துஸ்தானத்தில் ஆபத்து என்றால் Baqi Sthan க்கு வா என்ற அறவுரை அளித்துள்ளார்.

  ஹிந்துஸ்தானப் பிரிவினையின் போது இங்கு வந்த படானியர் குடும்பம் ஜெனாப் ஷாரூக் கானுடைய குடும்பம். மதவெறியில் உருவான வெறுப்பு நிலப்பரப்பில் வாழ்வது கடினம் என்பதால் தானே ஹிந்துஸ்தானம் வந்தனர் இவரின் குடும்பத்தினர்.

  இங்கு வாழ்ந்து சொத்து சுகம் சேர்த்து மக்களின் அன்பைப் பெற்று ஹிந்துஸ்தானத்தின் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆனவர் ஜெனாப் ஷாரூக் கான். வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற வசனம் பொய்க்காதே. இந்த தேசத்திற்கு இழிவு சேர்க்கும் வகையில் புனைசுருட்டுக்குப் புனுகு பூசி ஜெனாப் ஷாரூக் கான் நீலிக்கண்ணீர் விடுவதும் அதற்கு Baqi Sthan அமைச்சர் மற்றும் ஜிஹாதி பயங்கரவாதிகள் ஒத்துப்பாடுவதும் மதவேறுபாடுகள் இன்றி எந்த ஒரு ஹிந்துஸ்தானியரையும் எரிச்சலடையச் செய்யும்.

  அன்னமிட்ட வீட்டிற்கு ஜெனாப் ஷாரூக் கான் கன்னகோல் வைக்க நினைப்பது பச்சைத் த்ரோஹமான செயல்.

  ஜெனாப் ஆமீர்கான் அவர்களைப் பார்த்து தேசம் என்ன எனக்கு செய்கிறது என்பதற்குப் பதில் நான் தேசத்திற்கு என்ன செய்துள்ளேன் என்பதை ஜெனாப் ஷாரூக் கான் யோஜித்துப் பார்க்கலாமே.

  அல்லது ஜெனாப் ரெஹ்மான் மாலிக் மற்றும் ஜெனாப் ஹாஃபீஸ் சையீத் அவர்களின் பேச்சு இனிக்கிறது என்றால் எல்லை தாண்டி இருக்கும் ஸ்வர்க்கம் என்ற கொடு நரகத்திற்கு போகலாமே. ஹிந்துஸ்தானத்தின் கழுத்தை ஏன் அறுக்க வேண்டும். ஹிந்துஸ்தானமென்ன அபலையான மோஹ்தர்மா ரிசானா நபீக்கா அல்லது ஜெனாப் ஷாரூக் கான் தான் என்ன அராபிய தல்வாரா (பட்டாக்கத்தி)

  எனக்குப் பரிச்சயமான அனைத்து ஹிந்துஸ்தான முஸல்மான் களும் ஜெனாப் ஷாரூக் கான் அவர்கள் பேசிய விஷமத்தனமான பேச்சுக்காக மிகவும் மனம் வருந்தினர் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

 48. ஜெயலலிதா சொல்கிறார்’ விஸ்வரூபம் திரைப்படம் ஐநூற்று இருபத்து நான்கு அரங்குகளில் வெளியாவதாக இருந்தது. அவ்வளவு அரங்குகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க எங்களிடம் போலீஸ் இல்லை’ என்று

  சரி, 524 இடங்கள் வேண்டாம் , ஒரு – ஒரே ஒரு- இடத்துக்கு- சென்னை ,திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் வழியாக விநாயக சதுர்த்தி ஊர்வலம் போக வருடத்தில் ஒரு நாள், ஒரே ஒரு நாள் , பாதுகாப்பு கொடுங்களேன்.அதற்கு கூடவா போலீஸ் இல்லை?

  கருணாநிதிதான் அவ்வாறு செய்கிறார். ஏன் நீங்களும் அவருக்குச் சளைக்காமல் அந்த வழியாக விநாயகர் போகக் கூடாது என்று தொடர்ந்து ஹிந்துக்களின் உரிமையை நசுக்கு கிறீர்கள்?

  ஆக விஷயம் அது அல்ல .
  வேறு எதோ -அது முஸ்லீம்களின் மொத்த வோட்டோ , வேறு என்னமோ என்றுதானே மக்கள் -குறிப்பாக ஹிந்துக்கள் நினைப்பர் ?

 49. இப்போது மீடியாக்கள் பிரச்னையை எப்படி கொண்டு போகிறார்கள் பார்த்தீர்களா? கமலுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஒன்றுமே தெரியாதாம். ஜெயலலிதா தான் முஸ்லிம்களைத் தூண்டி விட்டு கமலுக்கு பிரச்சனை கொடுக்கிறாராம். காவல்துறையை ஏவி விட்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுத்திருக்கலாமாம். அடக்கடவுளே… அப்பாவி முஸ்லிம்களை வைத்து அரசியல் விளையாட்டு என்று சொல்வதைத் தான் நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முஸ்லிம்கள் விருப்பம் இல்லாமல் அவர்களுக்கும் படத்திற்கும் துளியும் சம்மந்தம் இல்லாமல் எப்படி அய்யா அரசியல் விளையாட்டு சாத்தியம்? இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது!

 50. ஆனால் எங்கே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பது ஜெ வுக்கு [ எப்போதுமே ] தெரிவதில்லை…..

  I agree with you Mr.Saandron. You have pointed it perfectly which is to be realised by Jaya. As Hindus, we dont have a better leader other than Jaya in TN with people support. But it is very difficult for us to digest and support whatever troubles she creates to herself. I respect and completely agree with your sensible mentioning of the minute detail of her characteristic trait which is widely causing unwanted remarks about her Govt. It is the sole mistake of the Government to go for an appeal when the court lifted the Ban.

  But we remember (unfortunately we dont forget things so easily) the 2001 incident of BABA movie vs PMK, when numerous Rajinikanth fans were attacked by PMK party members in northern parts of TN, when the movie rolls were stolen, and theatre was broken by the atrocity of PMK members, Karunandhi kept watching all the happenings without supporting either of the two groups. It was like the CM portrayed in the movie Mudhalvan, the role played by Raghuvaran where he says when a small issue becomes a huge crisis causing troubles to General Public, “Onnu rendu kannadi udainja paravalla”. That was the attitude Mr. MK was having that time. Frustrated out of the issue where his fans were attacked, Rajnikanth supported AIADMK & BJP allience in that upcoming MP election. But the side he had taken was lost. Rajini’s voicing for supporting parties in election became a comedy and moced by Tamil Magazines that time. Nobody criticized MK for being so cunning for the political gain that time.

  But now Jaya had taken a side and appealed for further Banning of the movie that leads to public irritation. She should learn politics from MK. But for her in Tamilnadu, when it is comes to political gain, I think she had taken a right side by supporting Muslims. Because Kamal is having issues with Dalit political parties by the movie – Virumandi alies Sandiyar. Hence we may presume 19% of the dalit people are feeling happy about the movie ban. When it comes to BC, predominantly they always support Jaya which was for some reason I dont know. When it comes to Muslim community, obviously they will support Jaya. And brahmins, predominantly they are annoyed with Kamalhaasan so they will not bother much about his freedom of speech being ridiculed. So I think, on the political grounds, she did not give much scope to the opposition parties like DMK, DMDK etc to gain the political advantage. But she needs to improve a lot and learn from Mr.Mk. If I am wrong, please guide me with what stand we should take.

 51. ” They feel I have been making too many controversial films and I need to be tamed and brought to my knees. So today I am being labelled anti-Islamic because the terrorists in my film owe their allegiance to Al Qaeda.

  They forget I made a film on Hindu terrorism – Hey Ram. They also forget that I was the first actor who stood up and condemned the demolition of the Babri Masjid. I am a friend of the Muslim community. In fact because of my name, I am often mistaken for one at international airports.”

  https://canindia.com/2013/01/ill-burn-vishwaroops-tamil-version-in-front-of-jayalalithas-office-kamal-haasan/

 52. https://canindia.com/2013/01/ill-burn-vishwaroops-tamil-version-in-front-of-jayalalithas-office-kamal-haasan/

  பாம்புக்குகூட இரட்டை நாக்கு தான் உண்டு. இந்த மனிதருக்கு அதற்கு மேலும் இருக்கும் போலிருக்கிறது.
  ஒரு பெண்ணால் தன திட்டங்கள் பாழாவதாக சொல்கிறார்.
  அது சரி. எங்கே முற்போக்கு வியாதிகள்? எங்கே பெண்ணிய வாதிகள்? ஆணாதிக்கம் என்று சும்மா எப்போதும் குதிப்போரேல்லாம் இவரது அப்பட்டமான ஆணாதிக்கபோக்கை கண்டிக்க காணோம்.
  கதை வசனம் யாருடையது? கருப்பு சிகப்பு வாடை வருவது போல் உள்ளது. பெரியவர் எழுதி கொடுத்தாரோ என்னவோ?

  நடப்பது பலரும் சேர்ந்து நடத்தும் ஓர் உதவாக்கரை நாடகம்.

  நம் இளம் வீரர்கள் [ ராணுவ வீரர்கள் , கிரிகெட் அல்ல ] இளம் மனைவியை, மற்றும் குழந்தையை விட்டு நமக்காக உயிர் விடும் போது காங்க்றேஸ் பொட்டி -வாங்கி மீடியா அமுக்கி வாசிக்கிறதே அதற்கு நமக்கு ரத்தம் கொதிக்க வேண்டும்.

  ஆங்கில சானலில் தான் பெரியார் வழியில் வந்ததாக சொல்கிறார்.
  ஹூம், அதுவும் பாதி உண்மை தான். இவருக்கு இன்னும் எழுபது வயதுக்கு மேல் ஆகவில்லை. அப்போது யாரை கல்யாணம் செய்கிறாரோ பொறுத்து பார்க்க வேண்டும்.

  நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், அழற மாதிரி அழு, என்பது ஏனோ ஞாபகம் வருகிறது.

  தேவையற்ற காட்சிக்களை நீக்கி விட்டாராம். ஆப்கானிஸ்தானில் அக்ரஹாரத்தில் உள்ளோர் வில்லன்கள் என்பது போல் காட்சிகளை மாற்றினாலும் மாற்றுவார். அதுவும் கலை என்று போற்றப்படும்.

  ஊறுகாய் எப்போதோ தொட்டுக்கொள்ள வேண்டியது. வயதானால் விடப்பட வேண்டியது.
  சினிமா என்ற ஊறுகாயை உணவாக்கி கொண்ட தமிழன் கஷ்டப்படுவதில் வியப்பில்லை. இந்த போதையை விட்டு நாம் வெளியே வரும் நாளே நமக்கு நல்ல நாள்.

  சாய்.

 53. வணக்கம்,
  கமலஹாசனும் அவரதுபடமும், அதற்கு அவர்வாங்கியதாகச் சொல்லப்படும் கடனும் எப்படியோ போகட்டும். நமது வருத்தம் இதுதான்,

  கமலஹாசன், இந்துசமயம், கலாச்சாரம் பற்றி அவிழ்த்துவிட்ட புழுகுமூட்டைகள் அனைத்தும் எதிர்ப்புகளே இல்லாமல் ஆவணங்களாகிவிட்டன ஆனால் இஸ்லாம்பற்றி ஏதும் மோசமாக இல்லாதபோதே இத்துணை ரகளைகள். என்னவெல்லாமோ அறிக்கைகள்.

  ஆழ்ந்து யோசித்தால் சுயலாபத்துக்காக எதையும் செய்யும், இஸ்லாம் பெயரை பயன்படுத்தும், வலிமையான ஒரு கூட்டம் உருவாவதும், அதை அனைத்துதரப்பு அரசியல்வாதிகளும், வரவிருக்கும் பேராபத்தை உணராமல் பயன்படுத்திக்கொள்ள துடிப்பதும் தெரிகிறது. பாதிப்படையப்போவது நேர்மையாக வாழவிரும்பும் அனைத்துமதத்தையும் சேர்ந்த அப்பாவி பொதுஜனம்தான். கொஞ்சம் மத்திய கிழக்கையும் பாருங்கள்.

 54. தமிழர்கள் தடை நீங்கி படம் திரையிடப்பட்டால் பெருத்த ஆதரவு அளிப்பார்கள் என்று தோன்றுகிறது. சினிமா போதை ” எமோஷன் ப்ரொப்லெம் ” நிழலையும் நிஜத்தையும் பிரித்தறிய முடியாத மக்களாய் மாற்றீருக்கிரது.
  படித்தவர்கள் இதில் ரொம்ப மோசம். இவர்களை ஏமாற்றுவது சுலபம்.

  உண்மையில் நஷ்டம் விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே . ஹசன் செய்வது அப்பட்டமான கழக பாணி அரசியல். அவரது பேட்டிகளை கவனித்தால் நடக்கும் நாடகம் நன்றாக புரிகிறது.

  மீடியாவை பொருத்தவரை டெல்லி பெண் மரணத்துக்கு பின் ஓரளவு அவர்கள் கவனம் செலுத்தும் விஷயம் இந்த படம் தான்.

  இதனால்வேறு எது அமுக்கப்படுகிறது அல்லது மறைக்க படுகிறது என்று தற்போது புரியவில்லை.
  சாய்

 55. Prassannasundhar N , கிருஷ்ணகுமார் , சான்றோன்
  உங்களுடைய கருத்துக்களைப் படித்து ரசித்தேன்.. அவ்வளவும் யதார்த்தம்.. மிக்க நன்றி.

 56. we should not be discussing at all about the political and electoral calculation and the supposed intelligence of people like karunanidhi or jayalalitha.
  we should stop even indirectly admiring such people

  what is the need of the hour is honest politicians who are patriotic, do not compromise on the basic values and culture of the Nation and our forefathers.
  wdo not pander to extremist elements for the sake of votes
  who do not artificially create demons and bogeys to get their mass votes

  what we are to-day witnessing is phase two of the same old Gandhi-Nehru style of politics which resulted in the partition of our ancient Nation and the still smouldering muslim problem

  we should unequiovocally condemn such people and expose them.

  we should stop analysing their skills in political arithmatics.
  it is not as if everything is black and white- not all vanniyars support ramadoss- otehrwise he would have won many more seats.
  not alll muslims are against movies which allegedly portray some terrorist activity by some muslims

  it is because of cunning ( non-Muslim ) politicians like Karunanidhi, jayalalitha, Mulayam, Sonia, manmohan, lalu, Mamta and others such incidents are happening.

  They are like the kites or vultures which even though may be circling high above are always on the lookout for carcasses on the ground!

 57. விஸ்வரூபம் விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது இஸ்லாமிய இயக்கங்கள் அல்ல ,தமிழக அரசே என்பதை நாம் மறக்கக் கூடாது
  அதனாலேயே ஜெயலலிதா மீது சந்தேகம் வருகிறது.

 58. படத்தை வெளியிட அனுமதித்தால் இஸ்லாமியர்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு வன்முறை நிகழும் அதற்காக படத்தை தடைவிதித்தது சரி என்றும், கமல்ஹாசன் முஸ்லிம் அமைப்புகளுடன் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு முதல் அமைச்சர். இப்போது எமது அனுமதியுடன் வெளியாகிறது விஸ்வரூபம் படம் என்று அறிவிக்கும் இஸ்லாமிய வன்முறை அமைப்புகள். போக்குகள் அபயகரமானதாகவே உள்ளது.

 59. //பிற மதத்தினர் இல்லாததால், சைவர்களும் வைணவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்த காலம்//
  கமலின் கூற்று .உண்மைதானே..சைவர்கள் எண்ணாயிரம் சமணர்களை கொன்றதை அல்லது கொல்லப்பட்டதை (சமணர்களே விரும்பி கழுவேருவதாய் வைத்துக்கொண்டாலும் – நாயன்மார் அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டுதானே இருந்தார் ) நம் சேக்கிழார் பெருமான் எழுதி வைத்துள்ளாரே… நம் பழைய இலக்கியங்கள், ஒரு மதம் அடுத்த மதத்தின் மீது காழ்புணர்ச்சி இருந்ததைதான் பதிவு செய்கின்றன (சைவம், வைனவத்திற்க்கு இடையே இருந்த விரோதம் உட்பட..).. இதை கமல் செய்தால் தவறா..?

  முதலில்.. இந்துக்கள்.பாரதத்தில் தோன்றிய தத்துவங்களை மதிக்கிறார்களா? இல்லையே.. தமிழ் இந்துவில் கூட “சமண, புத்த, சீக்கிய ” மதங்கள் மீது புழுதி வாரி தூற்றுபவர்களுக்கு இடமளிதுகொண்டுதானே இருக்கிறது..

  நம் மதம் தழைக்க வேண்டுமானால் முதலில் சுய பரிசோதனை செய்ய வேண்டும் (அடுத்தவரை தூற்றுவதை நிறுத்துங்கள்)..
  –டி ஆர். கௌஷிக் சாஸ்திரி

  .

 60. கமலஹாசன் நாட்டை விட்டு எங்கே செல்வார்?சௌதி அரேபியாவுக்கா?
  ஒழியட்டும்.சனியன் விட்டது.

 61. இப்போது நாம் எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அரசியல் காரணங்களுக்காக அம்மாவால் கமலை சப்போர்ட் பண்ண முடியாது என்பது தெள்ளத்தெளிவு. மேலும் இஸ்லாமிய அமைப்புகளால் வன்முறை நிகழ வாய்ப்பு உள்ளது என்பதை நிறுவியாயிற்று. அந்தக் கூற்றுக்கு எந்த இஸ்லாமிய அமைப்பும் மறுப்பு கூற இயலாத சூழ்நிலையில் வகையாக மாட்டிக்கொண்டுள்ளன. எனவே வன்முறையாளர்களைக் கட்டுப் படுத்த வேண்டுமென்றால் படத்தைத் தடை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றே இப்போது நிறுவப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் இதனால் கடுப்பில் இருப்பது திண்ணம். ஆனால் சுத்தபத்தமான அரசியல் என்பதெல்லாம் இன்றைய சூழ்நிலையில் ஆகாத கதை. எனவே அனைத்து தரப்பினருக்கும் நல்லவராகப் போய் விடுவது என்பதும் நடவாத காரியம். அரசியல் ரீதியாக இந்தம்மாவிற்கு இதைத்தவிர வேறு நல்ல வழி இல்லவே இல்லை. கமலை மட்டும் ஆதரித்தோ, இஸ்லாமியர்களை சாடியோ இருந்தால் நடந்திருக்கக்கூடிய கதையே வேறு. ஊர் உலகமே ஒரு வழியில் போகும்போது இந்தம்மா மட்டும் நியாயமாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

  தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் கமலஹாசனுக்கு இது பத்தாது என்றே நினைக்கிறேன். நாம் தான் எந்த எதிர்ப்பும் காண்பிக்க மாட்டோம். வேறு எவனாவது எதிர்ப்பு தெரிவித்தாலும் நாம் குறை சொல்லுவோம். ஏன் தெரியுமா? நமக்கு நன்றாக சினிமா பார்க்க வேண்டும். நடிகர்களை உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட வேண்டும். இந்த எண்ணம் வந்தது இன்றோ நேற்றோ அல்ல. மக்கள்திலகம் காலம் முதலே இப்படித்தான். இது அவ்வளவு சீக்கிரம் மாறாது.

  இந்த ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு இந்தம்மா இஸ்லாமிய ஆதரவாளர் என்று முடிவுக்கு வர இயலாது. ஆட்சியில் உள்ளோர் செய்தே ஆக வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் அனைத்து பிரிவினரையும் அரவணைத்துச் செல்வது. இப்போது ஒரே கல்லில் அம்மா 2 மாங்காய் அடித்துள்ளார். 1. இஸ்லாமியர்களின் நட்பு ஆட்சி நடப்பது என்று நிறுவியாயிற்று. 2. இஸ்லாமியர்கள் வன்முறையாளர்கள் என்று நிறுவியாயிற்று. தூய அரசியல் என்பதெல்லாம் இந்தக் காலத்துக்கு சத்தியமாக ஒத்து வராது. அப்படி யாராவது ஆட்சி நடத்துகிறார்கள் என்றால் அது சத்தியமாக தமிழகமாக இருக்காது.
  மகாபாரதக் கண்ணன் போல குழப்பி குழப்பி மீன் பிடித்தால் தான் இன்றைய கால கட்டத்தில் குட்டைக்கு அருகேயே நிற்க முடியும். இல்லை என்றால் நெட்டித் தள்ளி விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். இருக்கும் திருடரில் கொஞ்சம் நல்ல திருடர் யார் என்று பார்த்து அவருக்கு ஆதரவளிக்க கூடிய சூழ்நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம். உண்மை விஷம் போல் கசக்கும்.

 62. அன்புள்ள டி ஆர். கௌஷிக் சாஸ்திரி அவர்களுக்கு, சைவ வைணவ பூசலும் பாரத தத்துவங்களுக்கு இடையே ஆன பூசலும் தத்துவ விவாதங்களாகவே நடந்தன. சில இடங்களில் சின்னச் சின்ன கைகலப்புகள் நிகழ்ந்திருக்கலாம்.. ஆனால் அவற்றுக்கு நடுவில் பெரிய அளவிலான வன்முறையோ ஒரு சமயப் பிரிவினரை இன்னொருவர் கொன்று அழிப்பதோ நிகழவில்லை. அயோத்தி பிரசினையின் போது மார்க்சிய வரலாற்று ஆசிரியர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஊதிப் பெருக்கி இத்தகைய பயங்கர யுத்தங்கள் நடந்ததாக கிளப்பி விட்டனர். அவை உண்மையான வரலாற்று ஆய்வாளர்களால் ஆதாரபூர்வமாக தவறானவை என்று நிரூபிக்கப் பட்டு விட்டன. அந்த ஊசிப் போன பொய் பிரசாரங்களை தூசி தட்டி எடுத்து கமல் தன் படத்தில் உலாவ விட்டிருக்கிறார்.

  சமணர் கழுவேற்றம் பற்றி சேக்கிழார் சொல்லியிருக்கிறார். ஆனால் அது வரலாறு அல்ல, ஒரு ஐதிகம் தான் என்று ஜடாயு மிகத் தெளிவாக இந்த நீண்ட கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நிறுவுகிறார் –

  சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்

  பகுதி 1: https://jataayu.blogspot.in/2009/04/1.html
  பகுதி 2: https://jataayu.blogspot.in/2009/04/2.html

 63. //sidharan on February 3, 2013 at 3:43 pm
  விஸ்வரூபம் விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது இஸ்லாமிய இயக்கங்கள் அல்ல ,தமிழக அரசே என்பதை நாம் மறக்கக் கூடாது
  அதனாலேயே ஜெயலலிதா மீது சந்தேகம் வருகிறது.//

  Who took it court in Karnataka? Jayalalitha Govt? Who did it Hyderabad ? Tamilnadu Govt ? Who did it in Kerala? ( After anti-protest by Communists the movie was screened in Kerala).

 64. D.R. Kaushik on February 3, 2013 at 7:52 pm
  //பிற மதத்தினர் இல்லாததால், சைவர்களும் வைணவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்த காலம்//
  கமலின் கூற்று .உண்மைதானே..//

  மிகப் பொறுப்பற்ற முறையில் ஆதாரமில்லாமல், கமலஹாசன் போலவே அகந்தையுடன் எழுதப்பட்ட பதிவு திரு D.R. Kaushik உடையது. சேக்கிழார் எழுதியது சமணர்களைப் பற்றி. ஆகவே சைவர்கள் வைணவர்களை அடித்துக் கொன்றார்களா என்பதற்கு சம்பந்தமில்லாதது. தொடர்பில்லா விஷயங்களை எழுதாமல் கமலஹாசன் காட்டியது போல் சைவர்கள் வீர வைஷ்ணவரை எப்போது சிலையுடன் சேர்த்துக் கடலில் தள்ளினார்கள் என்பதற்கான நிரூபனத்தையோ, அல்லது சைவர்கள் வைஷ்ணவர்களுக்கிடையான சண்டையில் பல மரணங்கள் நிகழ்ந்ததற்கான ஆதாரத்தையோ மட்டும் திரு D.R. Kaushik இங்கே கொடுக்கட்டும்.

  இல்லாவிட்டால் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது திரு D.R. Kaushik அவர்களும் கமலஹாசனும் தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 65. அப்பா இப்பதான் முதல் முதலா ஒருத்தர் ஹிந்து தருமத்தை தாக்க வந்திருக்கிறார்! நாம நம்மள மொதல்ல திருத்திக்கணும்னு சொல்கிறார் .ரொம்ப மனதுக்கு சந்தோஷமாக இருக்கு .

  என்னடா, அகில உலகத்திலேயும் எல்லோரும் ஹிந்து தர்மத்தையும், ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களையும் மட்டுமே உயர்வாகப் பேசிக்கொண்டு இஸ்லாம், கிறிஸ்தவம் இவற்றை ரொம்ப அநியாயமாகத் தாக்கிக் கொண்டிருக்கிறார்களே, இதை தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்று நினைத்தேன் !

  அது என்ன- ஜெயலலிதா, சோனியா, மன்மோகன், மாயாவதி , முலாயம், லாலு பிரசாத் , நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி , டீவீ சானல்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள் எல்லோரும் இப்படி ஹிந்து மதத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அப்பாவி கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் , இப்படி தாக்கிக் கொண்டிருக்கிறார்களே என்று ரொம்பவும் மனம் நொந்து கொண்டிருந்தேன்.

  இப்போது ஒருவர் அதற்காக வந்து விட்டதைப் பார்க்கும் போது.. அப்பா ..மகிழ்ச்சி, மகிழ்ச்சி.
  வடிவேலு மாதிரி ‘வந்துட்டா ( ன் ) ர்யா ‘ என்று கத்தத் தோன்றுகிறது!

 66. \\\\\\\தமிழ் இந்துவில் கூட “சமண, புத்த, சீக்கிய ” மதங்கள் மீது புழுதி வாரி தூற்றுபவர்களுக்கு இடமளிதுகொண்டுதானே இருக்கிறது..\\\\\

  சத்யம் வத. உண்மை பேசு.

  சமண, புத்த, சீக்கிய மதங்களை தமிழ் ஹிந்துவில் யாரும் எப்பொழுதும் புழுதி வாரி தூற்றவில்லை.

 67. கமல் ஒரு கூத்தாடி, ஊர் ரெண்டு பட்டால் அந்த கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே. அதனால் தான் தன் பிழைப்பு எங்கே நடக்கிறதோ அங்கே ஆட்டம் காட்டினான், but இப்போது தன கர்ம பலன் திருப்பி அடித்திருக்கிறது, தான் செய்த தோப்பு தனக்கே வைத்துவிட்டது ஆப்பு. இனி நாம் காணப்போகும் காட்சிகள் ஏராளம்.

  ஆண்டவன் புண்ணியத்தில் மருதநாயகம் படத்தை இன்னும் எடுக்க இயலவில்லை, அதில் என்னென்ன ஹிந்து எதிருப்பு காட்சிகள் சேர்ப்பானோ இந்த கயவன்.

 68. //இந்த ஷரத்தின் படி, அமேரிக்காவில் வசிக்கும் ஒரு முஸ்லிம் மதத் தலைவர்
  “அனைத்து கிறிஸ்தவர்களையும் அழிக்க வேண்டும்” என்று கூறினால் அது கருத்து
  சுதந்திரம். ஆனால் ஜார்ஜ் புஷ் என்னும் மனிதரை அழிக்க வேண்டும் என்றால் அது
  மற்றொரு மனிதனின் சுதந்திரத்தில் தலையிடும் செயல்//

  இதுக்கு பெயர் கருத்தா இல்லை உளறலா? அமெரிக்காவில் என்ன, உலகில் எந்த நாட்டிலும் இப்படி சொல்வதைத் தான் மத பயங்கரவாதம் என்பார்கள். இங்கு கருத்து பற்றிய பேச்சிற்கே இடமில்லை. இந்த மேற்கூறிய வாசகம் எந்த அடிப்படையில் கருத்து சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது? எதற்கும் அளவுகள் நிர்ணயிக்க முடியாது பாலாஜி அவர்களே.

  மேற்கூறிய வாசகம் ஒரு மத பயங்கரவாத கிறிஸ்தவனை நோக்கி -அதாவது உலகம் முழுவதும் உள்ள எல்லா பிற மதங்களை மற்றும் கலாச்சாரங்களையும் அழிப்பதற்கு உறுதி பூண்டு அதை நிகழ்த்தியும் வருபவனை நோக்கி- இஸ்லாமிய மதத் தலைவன் என்றில்லை, யார் வேண்டுமானாலும் சொல்லாம். இதைத் தான் தர்மம் என்ற அளவுகோலிட்டு வைத்தார்கள் முன்னோர்கள். எனக்கு ஒன்று மட்டும் ஆச்சர்யம் இப்படிப்பட்ட கருத்தை சொல்ல நீங்கள் இவ்வளவு மெனக்கட்டிருக்க வேண்டாம்.

  -க.வ.கார்த்திகேயன்

 69. I have seen this movie in UK. It talks exactly what is happening in Afgan in the name of Islam; Nothing about muslims in India. Its reffering Quran in the movie, but thats what in Afgan the people are doing, even though Quran does not insist to do that (according to Indian muslims). Who knows? this stupid kamal may join the ‘hit list’ of ‘talibans’ for ‘telling the truth as it is’ !!

 70. ஹசன் வழிமுறை என்ற ஒன்றை அவர் உடனடியாக பேடன்ட் செய்ய வேண்டும்.
  டப்பா படங்களை கொஞ்சமாவது ஓட வைக்க அடிக்கிற மாதிரி அடி; அழற மாதிரி அழறேன் நாடகம் நடத்த வேண்டும்.

  இப்போது இன்னொரு நாடகம் .தமிழகத்தின் கலை வித்தகர் ராவணன் புகழ் மணிரத்தினத்தின் கடல் படத்திற்கு கிறிஸ்தவர்களின் எதிர்ப்பாம். அப்பட்டமாக கடவுள், சாத்தான் என்று கிறிஸ்துவ இறையியலை நம்மேல் திணிக்கும் படம் அது.
  சினிமாவை விட இந்த ” அடிக்கிறாங்களே , கொல்றாங்களே” கதை நல்லாஇருக்கே ..
  சாய்

 71. kamal enna oru scientista illa oru nalla school teachera illa velanmai vignyaniya, oru nadigar avvalvu than, avar illaina bharatha naadu ondrum irunduvidadhu

 72. இனிமேல் சினிமாவில் வில்லனே இல்லாமல் வெறும் கதாநாயகனையும் , காமெடியனையும் மட்டும் வைத்துத்தான் படமெடுக்க முடியும். சிவப்பாக உள்ளவனை வில்லனாக காண்பித்தால் , சிவப்பாக இருப்பவர்கள் எல்லோரும் போராடி , படத்தை தடை செய்வார்கள். கருப்பாக உள்ளவனை வில்லனாக காண்பித்தால் கருப்பாக உள்ளவர்கள் அனைவரும் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக கூறி படத்தை தடை செய்யவேண்டும் என்பார்கள். வில்லன் பெயர் முத்துக்குமார் என்று இருந்தால் , அது எங்கள் குலதெய்வத்தின் பெயர் என்பதால் நானும் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுப்பேன். சென்சார் போர்டின் மீதும் வழக்கு தொடுப்பேன். இதே கதிதான் வேறு என்னபெயர் வைத்தாலும் நடக்கும். கருப்பன் என்று வில்லனுக்கு பெயர் வைத்தால், கருப்பசாமியை குலதெய்வமாக கொண்டவர்கள் மன வருத்தப்படுவார்கள். எனவே, இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , இனிமேல் வில்லனே இல்லாத சினிமா எடுங்கள் , அது முடியாது என்றால் சினிமா எடுப்பதை நிறுத்தி வேறு ஏதாவது தொழிலை பாருங்கள். கமல் ஒரு அயோக்கிய சிகாமணி என்று தெளிவாக தெரிந்துவிட்டது.

 73. சினிமா ஆரம்பத்தில் ” இந்த படத்தில் வரும் சம்பவங்களும், கதையும் முற்றிலும் கற்பனையே, வேறு யாரையும் குறிப்பவை அல்ல.”- என்று போட்டிருப்பார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானத்தில் நடந்த அல்காயிதா மற்றும் தாலிபானிய தீவிரவாத வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களை பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ள போது, அது இந்திய முஸ்லீம்களை எவ்விதத்திலும் குறிப்பதாகாது. அப்படியிருக்க , இந்த படத்திற்கு தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் தேவை இல்லாத போராட்டம் நடத்தி, வீணாக விளம்பரம் கொடுத்து ,” அப்படி என்ன இருக்கு அந்த படத்தில் ? ” – என்ற பரபரப்பு கலந்த ஆர்வத்தை உருவாக்கி விட்டனர். இதனால் தமிழக இஸ்லாமிய இயக்கங்களுக்கு தான் கெட்ட பெயர். அந்த தலைவர்கள் சற்று யோசிப்பார்களா ?

 74. கமலை திருத்த , உடனே 2 மாதம் பாகிஸ்தான் அனுப் வேண்டும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *