கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!

தமிழகத்தில்  ஜனவரி கடைசி வாரம் மிகவும் பரபரப்பான நிகழ்வுகளால்  திரைப்படத்தின் உச்சகட்டக் காட்சி போல மாறி இருந்தது. இந்த நிகழ்வுகளின் அடிநாதம் கமலஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தால் விளைந்தது. இந்த நிகழ்வுகள், நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களை, நமது தலைவர்களை, நமது கலைஞர்களை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது எனில் மிகையில்லை.

Viswaroopam 3
‘இஸ்லாமிய சகோதரர்’களை சீண்டிய ‘கலைஞானி’

நடிகர் கமலஹாசன் இயக்கி, தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ படம் அதன் தயாரிப்பு உத்திகளுக்காக பரவலான கவனம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு நிலவியது. இடையே ‘திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே டிடி.எச்-சில் படம் வெளியாகும்’ என்ற கமலின் அறிவிப்பால் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடகம் சில நாட்களுக்கு நடந்தது.

அந்த நாடகம் அமுங்கிய வேளை, இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்திரித்திருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் துவங்கின. படத்தின் முன்னோட்ட துண்டுக் காட்சிகளைக் கண்டு (டிரெய்லர்) இந்த முடிவுக்கு முஸ்லிம் அமைப்புகள் வந்தன.

இது தொடர்பாக கமலை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்தபோது, படம் வெளியாகும் முன்னர் கண்டிப்பாக அவர்களுக்கு திரையிட்டுக் காட்டுவதாக உறுதி அளித்தாராம். இதைத் தான், வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொண்ட கதை  என்பார்கள்.

Muslim Demonstration
இது ஆர்ப்பாட்டமா? மிரட்டலா?

திட்டமிட்டபடி விஸ்வரூபம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகி இருக்க வேண்டும். அதற்கு முன் இந்தப் படத்தை தனது ஆருயிர் நண்பர்களான ‘இஸ்லாமிய சகோதரர்’களுக்கு திரையிட்டுக் காட்டினார் கமல். படத்தில் ஆப்கானிஸ்தானில் இயங்கும்  தலிபான் பயங்கரவாதிகள் குறித்த காட்சிகள் இருக்கவே, இஸ்லாமிய சகோதரர்கள் வெகுண்டார்கள். இந்தப் படம் இஸ்லாமியர்களை தவறாக சித்திரிக்கிறது என்று போர்க்கொடி உயர்த்தினார்கள்.

அவர்களை சமாளிக்க கமலால் முடியவில்லை. ”நான் என்றும்    இஸ்லாமியர்களின் நண்பன்; இஸ்லாமியர்களை உயர்வாகக் காட்டுவதே எனது நோக்கம்” என்றெலாம் அவர் மன்றாடினார். ‘அது எப்படி,  படத்தில் வரும் பயங்கரவாதிகள் அனைவரையும் இஸ்லாமியர்களாகக் காட்டலாம்?  பயங்கரவாதிகள் குர்ஆன் ஓதும் காட்சிகள் கூடாது. ஒரு ஆப்கன் பயங்கரவாதி தமிழ் பேசுவதாக வரும் காட்சி தமிழகத்தில் முஸ்லிம்கள் மீது தவறான (!) அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடும்’ என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. மாநில அரசின் தலைமை செயலரை நேரில் சந்தித்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்குமாறும், அவ்வாறு தடுக்காவிட்டால் மறுநாள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்கள். ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் ஒருங்கிணைந்து வைத்த கோரிக்கையைக் கண்டு மிரண்ட தமிழக  அரசு, 15 நாட்களுக்கு இப்படத்துக்கு தடை விதித்தது.

இந்தத் தடை முக்கியமான விவாதத்தை கிளப்பியது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) சான்றளித்த பிறகு எந்தப் படத்தையும் எந்த அரசும் தடை செய்யக் கூடாது. இதற்கு பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் ஆதரவாக உள்ளன. ஆனால், தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி அனுமதித்த  ‘விஸ்வரூபம்’  படத்தை தன்னிச்சையாக தடை செய்தது.

Theatre Attack
கருத்துக் குருடர்களால் நொறுக்கப்பட்ட திரையரங்கு

இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அரசின் தடையை விலக்கினார். ஆயினும் மறுநாள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டு இப்படம் வெளியாகாமல் தமிழக அரசு தடுத்தது. சில இடங்களில் படம் திரையிடப்பட்டபோதும் அரை மணி நேரத்தில் படம் நிறுத்தப்பட்டது; சில இடங்களில் திரையரங்குகள் தாக்கப்பட்டன.  இதனிடையே, தடை விலக்க உத்தரவுக்கு எதிரான ஆணையை மேல் முறையீட்டில் பெற்ற அரசு, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை தொடர்வதாக அறிவித்தது. இதனால் பல இடங்களில் கமல் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், ‘விஸ்வரூபம் திரையிடப்படும் தமிழகத்தில் உள்ள ஐநூறுக்கு மேற்பட்ட திரையரங்குகளுக்கு காவல்துறையால் பாதுகாப்பு வழங்க முடியாது; இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கிய பிறகே படத்தை  வெளியிட முடியும்’ என்று அரசு அறிவித்தது.

Kamal and karuna
ப.சி. குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதியுடன் கமல்

இந்த தொடர் நிகழ்வுகளால் ஜனவரி 25 முதல் மாதக் கடைசி வரை, ஊடக வட்டாரங்களில் விஸ்வரூபமே பேச்சாக இருந்தது. இதற்கு, கமலுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான தனிப்பட்ட பகையே காரணம் என்று சிண்டு முடிய முயன்றார் ராசதந்திரி கருணாநிதி. அதிகாரப் பசி கொண்ட ப.சி.யை பிரதமராக தகுதி படைத்தவர் என்று ஒரு கூட்டத்தில் கமல் பேசியதால் தான் ஜெயலலிதா இவ்வாறு பழி வாங்குகிறார் என்றும் ஒரு பிரசாரம் உலா வந்தது. கடைசியில் ஜெயலலிதாவே பேட்டி அளித்து, இந்த ஊகங்களை மறுக்க வேண்டியதாயிற்று.

தமிழக அரசின் நிர்பந்தத்தால் முஸ்லிம் அமைப்புகளுடன் மீண்டும் பேச்சு நடத்தி, படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளில் கத்தரி போட்டு வெளியிட கமல் உறுதி அளித்துவிட்டார். இதற்காக அரசு- கமல் தரப்பு- முஸ்லிம் தரப்பு என்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றார் மனிதநேய (?) மக்கள் கட்சித் தலைவர் ஒருவர்.

அதன்படி, தணிக்கைத் துறையை விட மேலானவர்களான  இஸ்லாமிய அமைப்பினர் கூறிய பல ‘பிழை’களை திருத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் ‘கலைஞானி’ கமல். இப்போது இஸ்லாமிய அமைப்புகளும் கமல் தரப்பும்,  அரசு தலைமை செயலாளர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அரசும் விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை நீக்கி கொள்வதாக அறிவித்திருக்கிறது. வரும் 8-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தகவல்.

இப்போதைக்கு அரசும் இஸ்லாமிய அமைப்புகளும் செய்த சண்டித்தனத்தால் கருத்து சுதந்திரம் கத்திரி போடப்பட்டிருக்கிறது. ஆயினும், இந்த சர்ச்சை  உருவாக்கி உள்ள பல கேள்விகளை கத்தரி போட்டு தடுத்துவிட   முடியாது.

கமலுக்கு சில கேள்விகள்:

1. சென்சார் போர்டில் சான்றும் அனுமதியும் பெற்ற பிறகு எந்தப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சொன்னீர்கள். ஆனால், சென்சார் போர்டு அனுமதித்த படத்தை வெளியீட்டுக்கு முன்னதாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஏன் திரையிட்டுக் காட்டினீர்கள்?  உங்களுக்கே சென்சார் போர்டு மீது நம்பிக்கை இல்லையா?

2. இது தொடர்பான தொலைகாட்சி விவாதத்தில், இயக்குனர் சீனு ராமசாமி, ”எனது நீர்ப்பறவை  படத்துக்கு கிறிஸ்தவர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். படத்தை தங்களுக்கு  திரையிட்டுக் காட்டி ஒப்புதல் பெற  வேண்டும் என்று சொன்னார்கள் .நான் மறுத்து விட்டேன்”  என்றார். அவருக்கு இருந்த தெளிவும் துணிவும் உங்களுக்கு ஏன் இல்லை?

Manmathan ambu
ஹிந்துக்களின் நம்பிக்கை மட்டும் கமலுக்கு இளப்பமா?

3. இந்தப் படத்தை தயாரிக்க சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்துள்ளேன் என்று தான் உருகினீர்களே ஒழிய, கருத்து சுதந்திரம் குறித்து உங்களிடம் தார்மிக ஆவேசம் இல்லாமல்  போனது  ஏன்? ‘மன்மதன் அம்பு’ படத்தில் வரலட்சுமி விரதத்தை கேலி பேசும் வாலியின் பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது படத்தின் தயாரிப்பாளர் அதை  நீக்க ஒப்புக் கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்து,  நீங்கள் கருத்து சுதந்திரம் என்று கொண்டாடினீர்கள். இப்போதும் ‘கருத்து சுதந்திரம் தான் எனது லட்சியம்’ என்று நெஞ்சு நிமிர்த்தி நீங்கள் ஏன் பேசவில்லை?

4. இப்போதும்கூட, தேவையில்லாமல் விநாயகரை (அப்படி ஒரு கடவுள் இல்லையாம்) வம்புக்கு இழுக்கிறீர்கள். அதாவது ஹிந்து தெய்வங்களை கேலி பேசினால் முஸ்லிம்கள் மகிழ்ந்து உங்கள் படத்துக்கு ஆதரவளிப்பர் என்று எதிர்பார்க்கிறீர்களா? இது பச்சையான சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?

Dasavatharam
சைவ- வைணவ மோதலை தசாவதாரத்தில் உருவாக்கிய கமல்

5. ‘தசாவதாரம்’ படத்தில் வரலாற்றைத் திரித்து சைவ- வைணவ மோதல் காட்சிகளை திணித்தீர்கள். அதை ஹிந்துக்கள் எதிர்த்தபோதும், நீங்கள் அதை பொருட்படுத்தவே இல்லை. இப்போது மட்டும் முஸ்லிம்களின் எதிர்ப்புக்காக படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட எப்படி சம்மதித்தீர்கள்?  இல்லாவிட்டால் அவர்கள் ‘வெட்டி விடுவார்கள்’ என்ற பயம் தானே காரணம்?

6. நிலைமை கைமீறிப் போன பிறகு, மதச்சார்பில்லாத நாட்டுக்கு ஓடிப் போவேன் என்றீர்களே. இந்தியா தவிர வேறெங்கு இளித்தவாய்த் தனமான  மதச்சார்பற்ற நாடு இருக்கிறது என்று சொல்வீர்களா? அதாவது ஹிந்துக்களை நீங்கள் குட்டிக் கொண்டிருந்தபொதெல்லாம் உங்கள் மதச்சார்பின்மைக்கு ஆபத்து நேரவில்லை; முஸ்லிம்களை விமர்சித்தால் ஆபத்தாகி விடுகிறது என்று சொல்கிறீர்கள் என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?

7. இத்தனைக்குப் பிறகும் இஸ்லாமிய சகோதரர்களை நான் நம்புகிறேன். அவர்கள் தவறு செய்யவில்லை என்று கைப்பிள்ளைத்தனமாக, எவ்வாறு அரசை குற்றம் சாட்டும் விதமாக பேசுகிறீர்கள்? இவன் எத்தனை அடித்தாலும் தாங்குவான் என்று உங்களை எதிர்க்கும் மதவெறிக் கும்பல் கருதி விடாதா?

அரசுக்கு சில கேள்விகள்:

1. நாட்டில் எத்தனையோ தலைபோகும் பிரச்னைகள் இருக்கும்போது, அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, விஸ்வரூபம் படத்தை தடுக்க அரசு ஏன் இந்த அளவுக்கு மல்லுக் கட்டியது?  முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கி விடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறதா? அப்படியானால்,  கைப்பிடி அளவுள்ள மதவெறிக் கும்பலை கையாளத் தெரியாத அளவுக்கு தமிழக அரசு பலவீனமானதா? அண்டை மாநிலங்களில் விஸ்வரூபம்  எந்தப் பிரச்னையும் இன்றி திரையிடப்பட்டதே. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அதிகம் என்றோ, அவர்களால் சமூகத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றோ அரசு கருதுகிறதா?

Kamal and Jeya
இவர்கள் நண்பர்களா? எதிரிகளா?

2. சென்னை உயர் நீதிமன்றம் தடை நீக்கிய அரை மணிநேரத்தில், இரவோடு இரவாக அத உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் அளவுக்கு இப்படத்தை இஸ்லாமிய சகோதரர்கள் எதிர்க்கிறார்களா? அவ்வாறு உளவுத் துறை  கூறும் தகவல்கள் உண்மையெனில்,  கலவரத்தைத் தூண்ட வாய்ப்புள்ள அமைப்புகள் மீது ஏன் அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது? விஸ்வரூபம் படம் வெளியான சில திரையரங்குகளைத் தாக்கிய முஸ்லிம் அமைப்புகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

3. சிறுபான்மையினருக்கு ஆதரவாக நடந்தால்  அதிமுக-வுக்கு லாபம் என்று கணக்கிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இன்னமுமா இஸ்லாமியர்களை அதிமுக நம்புகிறது? அவ்வாறு ஜெயலலிதாவை தவறாக வழிநடத்தும் மதியூகி யாரோ?

4. விஸ்வரூபம் பட விவகாரத்தில் மாநில அரசு மீதான நம்பகத்தன்மை படுபாதாளத்துக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதையேனும் உளவுத் துறை அரசுக்கு தெரிவித்துள்ளதா?

5. விஸ்வரூபம விவகாரத்தால் மின்வெட்டு போன்ற அத்தியாவசிய பிரச்னைகளில் இருந்து மக்கள் மனம் மாறிவிடும் என்று ஜெயலலிதா நினைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. உண்மையில் ஏற்கனவே நற்பெயரை இழந்துவரும் அதிமுக அரசுக்கு  ‘விஸ்வரூபம்’ உச்சகட்ட சறுக்கல் என்பதை யாராவது எடுத்துச் சொல்வார்களா?

Muslim p0ster 1
இந்தச் சுவரொட்டிக்கு அனுமதி கொடுத்தது யார்?

6. எதிர்காலத்தில் ஹிந்துக்களை கேவலப்படுத்தும் திரைப்படங்கள் வெளிவருமானால், அதற்கும் ஜெயலலிதாவின் மதச்சார்பற்ற அரசு தடை விதிக்குமா?   ‘விஸ்வரூபம் படம் தமிழகத்தில் ஒடாது’ என்று தவ்ஹீத் ஜமாத்   மாநிலம் முழுவதும்  சுவரொட்டி ஒட்டி இருப்பதற்கு அரசு அனுமதி வழங்கி  இருக்கிறதா?

7. கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சிறப்புரிமையா? ஹிந்து இயக்கங்கள் நடத்தும் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அரசு, முன்னறிவிப்பின்றி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் இஸ்லாமிய இயக்கங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? அரசு அவர்களுக்கு அஞ்சுகிறதா?

இஸ்லாமிய அமைப்புகளுக்கு சில கேள்விகள்:

1. இனிமேல் முஸ்லிம் பெயருடன்  யாரும் எந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கினாலும் உங்களிடம் தான் அனுமதி பெற வேண்டுமா? இனிமேல் யார் எந்தப் படம்  எடுத்தாலும் அதற்கான சென்சார் போர்டு  சான்றிதழை   உங்களிடம் தான் பெற வேண்டுமா?

2. ஆப்கனில் உள்ள தீவிரவாதிகளை குறித்து படம் எடுத்தால், நீங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? 1910களில் கிலாபத் இயக்கத்தின் போது துருக்கியின் கலிபா பதவி இழந்தார் என்பதற்காக, சம்பந்தமே இல்லாமல் இந்தியாவில் சக இந்துக்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட அப்போதைய முஸ்லிம் லீக்கிற்கும் உங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லையே!  நீங்கள் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்களா?

Anwar
பயங்கரவாதிகளுக்கு அவர்கள் பாணியிலேயே தண்டனை? -1

3. கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஒருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தக் குற்றவாளிகள்  இன்னமும் பலர் கைதாகவில்லை என்பதை நீங்கள் அறிந்திராமல்  இருக்க முடியாது.  ‘அன்வர்’ என்ற படம் கேரளத்தில் முஸ்லிம்களாலேயே எடுக்கப்பட்டு தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்ததை நீங்கள் அறிவீர்களா? அதில் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு கதாநாயகனான முஸ்லிம் கதாபாத்திரம் அளிக்கும் தண்டனையை பார்த்தீர்களா?

4. ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும், ‘விஸ்வரூபம்’  படத்திலும் கதாநாயகனான கமல் முஸ்லிம் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார் என்பதை ஏன் உங்களால் பெருமிதமாகக் காண  முடியவில்லை? ஓர்  இஸ்லாமியர் பயங்கரவாதத்தை  எதிர்ப்பது பாவமா?  உங்கள் கண்மூடித்தனமான எதிர்ப்பு பொதுமக்களிடையே உங்களைப் பற்றி உருவாக்கும் எதிர்மறை சித்திரம் குறித்து உணர்ந்திருக்கிறீர்களா? உங்களை மாநில அரசு தவறாக முன்னிறுத்துவதாக நீங்கள் உணரவில்லையா?

Unnaip pol oruvan
பயங்கரவாதிகளுக்கு அவர்கள் பாணியிலேயே தண்டனை? – 2

5. குண்டுவீசித் தாக்குவதும்,  திரையரங்குகளைத் தாக்குவதும்,  பத்திரிகைகளைக் கொளுத்துவதும் தான், நமது அரசியல்வாதிகளையும் ஊடக அறிஞர்களையும்,  திரையுலக நண்பர்களையும்  அச்சத்தில் வைத்திருக்கிறது   என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஓர் இயல்பான உரையாடல் மூலமாக உங்கள் எதிர்ப்பை உங்களால் பதிவு செய்ய முடியாதா?

6. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது என்று ‘பத்வா’  வெளிடுகிறீர்களே. உங்கள் இஸ்லாமில் கருத்து சுதந்திரமே கிடையாதா? உண்மையிலேயே முகமது நபி இவ்வாறு தான் கூறினாரா?

7. ”முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல; ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள்” என்ற பொதுவான கருத்துருவாக்கம் ஏற்பட்டுள்ளதை அறிவீர்களா? இதை மாற்ற மனப்பூர்வமாக என்ன நடவடிக்கையை இதுவரை நீங்கள்  எடுத்திருக்கிறீர்கள்?  முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்ற  எண்ணத்தை  வலுப்படுத்துவதாகவே உங்கள் செயல்பாடுகள் அமைந்துள்ளதை உணர்ந்திருக்கிறீர்களா?

சில பொதுவான அச்சங்கள்…

உலகம் முழுவதுமே இஸ்லாமியர்களை எவ்வாறு கையாள்வது என்பது தான் நாகரீக அரசுகளின் சிக்கலாக மாறி உள்ளது. பிரான்ஸ் தேசத்தில் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்ட சமயத்திலும்,   டென்மார்க்கில் ஒருவர் முகமது நபி கார்ட்டூன் வெளியிட்ட  சமயத்திலும், அமெரிக்காவில் ஒரு கிறிஸ்தவ வெறியன் முகமது நபியை கேவலப்படுத்தும் விதமாக ஒரு திரைப்படம் எடுத்த சமயத்திலும், அதன் எதிரொலிகள் உலக அளவில் வன்முறையாகவே காணப்பட்டன.

Anna Salai riot
சென்னை, அண்ணா சாலையில் முஸ்லிம்கள் நடத்திய கலவரம்

யாரோ பற்றவைத்த தீக்கு சம்பந்தம் இல்லாத பலர் இரையாவது  சகஜமாகி இருக்கிறது. முகமது நபியை அவமதிக்கும் அமெரிக்கப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  சென்னை- அண்ணா சாலையில் இஸ்லாமிய அமைப்புகள்  நடத்திய காட்டு தர்பாரை யாரும் மறந்திருக்க முடியாது.

அண்மையில் நடிகர் விஜய் நடித்து வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் பல காட்சிகள் முஸ்லிம்களை கேவலமாக சித்திரிப்பதாகக் கூறி, முஸ்லிம்கள் மிரட்டல் விடுத்ததால் அந்தப் படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்டன. அதற்கு அப்போது தமிழக அரசு துணை போனது. “சென்சார் போர்டு சான்றிதழ் பெற்ற ஒரு படத்தை  இஸ்லாமியர்களுக்காக மறு தணிக்கை செய்யலாமா?” என்று எந்த அறிவுஜீவியும் அப்போது கேட்கவில்லை.

அண்மையில் சவூதி அரேபியாவில் இலங்கையைச்  சேர்ந்த முஸ்லிம் இளம்பெண் ஒருவர் தலை துண்டித்து தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து செய்தி வெளியிட்ட தமிழ்ப் பத்திரிகைகள் மிரட்டப்பட்டன. இளம்பெண் தண்டிக்கப்பட்டதை விமர்சித்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் என்ற சாகுல் ஹமீது மிக கேவலமாக  வசைபாடப்பட்டார்.

Muslim Poster 2
நமது பத்திரிகைகள் இனியேனும் திருந்துமா?

கேரளத்தில் கல்லூரித் தேர்வுத்தாளில் முஸ்லிம்களை அவமதிக்கும் விதமான கேள்வியை தயாரித்த கிறிஸ்தவப் பேராசிரியர் ஒருவரின் கை வெட்டப்பட்டது. அண்மையில் நடிகர் கமலையும் அவரது மகள் சுருதி கமல்ஹாசனையும் சம்பந்தப்படுத்தி மிக கேவலமாகப் பேசி இருக்கிறார் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஒருவர். அது யூ-டியூபிலும் உலா வருகிறது.

மொத்தத்தில் ஹிந்துக்களை விமர்சிப்பதாகட்டும், வன்முறையில் இறங்குவதாகட்டும், முஸ்லிம் அமைப்புகளிடையே பெரும் போட்டியே நிலவுகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய ஜவ்ஹீத் ஜமாஅத், மனிதநேய மக்கள் கட்சி (தமுமுக-வின் அரசியல் பிரிவு), சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சி (பாப்புலர்  ப்ரண்ட் அமைப்பின் அரசியல் கட்சி) , முஸ்லிம் லீக், தேசிய லீக் என, எந்த ஒரு முஸ்லிம் அமைப்பாக இருந்தாலும், அமைதி  வழி யாருக்கும் பிடித்தமானதாக இல்லை.

ஏனெனில், இது அவர்களது மரபிலேயே ஊறிவிட்ட ஒன்றாகிவிட்டது. முஸ்லிம் மதத்தில் உள்ள பழமைவாதிகளை விட அதில் உள்ள சீர்திருத்தவாதிகள் தான் சமீபகாலமாக அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.  ஏனெனில், இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல அது ஓர் சர்வதேச அரசியல் இயக்கத்தின் வழிமுறை. இந்தப் பிணைப்பிலிருந்து இஸ்லாம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை.

Visvaroopam 1
எதிர்காலத்திலாவது முதுகில் குத்தாமல் இருப்பாரா கமல்?

நமது அச்சம் என்னவென்றால், கமலுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை,  நாளை யாருக்கும் ஏற்படலாம். அப்போது நமது அரசுகளும் இதே கலைஞர்களும் ஊடகங்களும் எப்படி செயல்படுவர்?  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக  தங்களைக்  கருதிக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு அஞ்சி, மென்மையான இலக்குகளை  திரையுலகும் ஊடகங்களும் தாக்குவது அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. (இப்போதே கமல் அதைத் தானே செய்கிறார்?) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி தானே?

இன்று இஸ்லாமியர்களுக்கு அஞ்சி மண்டியிடும் கலைஞர்களும் அரசும், நாளை இஸ்லாமியர்களை திருப்திப்படுத்த ஹிந்துக்களை மிதிக்கவும் தயங்க மாட்டார்கள்.  இதற்கு சரித்திரம் பல முன்னுதாரணங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இதுவே இப்போதைய நமது ஆகப் பெரிய கவலை.

39 Replies to “கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!”

  1. பல பரிமாணங்களை எடுத்து விளாசுகிரீர்கள் சேக்கிழான் மிக்க நன்றி;

    இவர்களுக்கெல்லாம் ஒரு தரப்பு என்றாவது இருக்கிறது, போலி மற்றும் உண்மை(!? இருக்கா என்ன) மதச்சார்பின்மை பேசும் மாக்களுக்கும் “போக்கு” குழாம்களுக்கும் சோத்து வேஷங்களை, கேள்விகளை தனிக்கட்டுரையாக வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்

    நன்றி,
    சஹ்ரிதயன்

  2. இக்கட்டுரையில் “இஸ்லாமிய அமைப்பினர்” என்று வரும் இடங்களில் எல்லாம் “வஹாபிய இஸ்லாமிய அமைப்பினர்” என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும். இந்த விவகாரம் முழுவதிலும் நாம் வருத்தத்துடன் அவதானிக்கும் விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் மற்ற எல்லா இஸ்லாமிய அடையாளங்களையும் மீறி, இந்த வகையினர் தான் மேலெழுந்திருக்கிறார்கள் என்பதே.

    தமிழகத்தின் தலைசிறந்த திரைக்கலைஞர்களில் ஒருவரான நடிகர் நாசர் இப்படத்தில் தாலிபான் தீவிரவாதியாக நடித்துள்ளார். காபிர்கள் எல்லாரையும் கொல்வது தான் ஜிகாதியின் கடமை என்று ஒரு அராபிய வசனமும் பேசுகிறார். அவருக்கு படத்தின் கதையும் பின்னணீயும் நன்கு தெரியும் என்றே கருத வேண்டியுள்ளது, இருப்பினும் நடித்துள்ளார் என்பதை வைத்து, அவர் தனது இஸ்லாமிய மதத்தையும் இந்த பயங்க்ரவாதத்தையும் வேறுபடுத்தி பார்த்துள்ளார் என்றே தோன்றூகிறது. கலவரம் செய்யும் இந்த அமைப்புகள் பற்றி மட்டும் தான் நமது ஊடகங்கள் சொல்கின்றன. இந்தப் படத்தை பார்த்த சூஃபி சமயக் கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்லாமிய அமைப்புகள் (சுன்னத் – உல் ஜமாத் ) காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று அறிகிறேன். படத்தை எதிர்க்கும் வஹாபியர்களை எதிர்த்து இந்த அமைப்புகள் கூட்டங்கள் கூட நடத்தினார்களாம்.. அதை ஏன் ஊடகங்கள் பெரிய அளவில் கவர் செய்யவில்லை என்பது புரியவில்லை.

    கபீர்தாசருடன், சூஃபி ஞானிகளுடன், குணங்குடி மஸ்தான், செய்குத் தம்பி பாவலர், தக்கலை பீர் முகமது அப்பா, டாக்டர் அப்துல் கலாம் ஆகியோருடன் அல்ல, தாலிபானிய பயங்கரவாதிகளுடன் தான் தமிழகத்தின் முஸ்லீம்கள் தங்களை அடையாளம் காண்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை வெற்றிகரமாக இந்த வஹாபிய அமைப்புகள் ஏற்படுத்தி விட்டிக்கின்றன. இது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. வஹாபியர்களது நடவடிக்கைகளால் உண்மையில் இந்துக்களை விட அதிகம் பாதிக்கப் படுபவர்கள் சாதாரண இஸ்லாமியர்களே. அவர்கள் தங்களது குரலை இன்னும் உரத்து ஒலிக்கச் செய்ய வேண்டும். அதற்குத் தான் மாநில அரசும், மீடியாவும் மற்ற தேசிய-சமூல நல்லிணக்க சக்திகளும் உதவ வேண்டும். ஆனால் இங்கு என்னடாவென்றால் மானில அரசு வஹாபியர்களுக்கு அடிபணிகிறது. வஹாபியர்களின் அராஜகத்திற்கு அரசே அடிபணிவதைப் பார்த்து, மற்ற சாதாரண இஸ்லாமியர்கள் என்ன நினைப்பார்கள்? அவர்களும் வஹாபியத்தின் பக்கம் அணி திரள்வது தான் நடக்கும்.. ஏற்கனவே அத்தகைய போக்கு தமிழகத்தில் வேரூன்றிக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் இந்த விவகாரம் நமக்கு உணர்த்தியிருக்கிறது..

    திரைப்படமும் மிக சமநிலையுடன் இருப்பதாக சொல்ல முடியாது. அமெரிக்க ஆதரவுப் பார்வையே படத்தில் தூக்கலாக உள்ளது – இது கமலின் சொந்த அரசியல் நிலைப்பாடாகவோ, அல்லது தனது பார்வையாளர்களை குஷிப்படுத்தும் அவரது முயற்சியாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக் கூடும். ஆயினும், வஹாபிய இஸ்லாமின் உண்மையான முகம் எவ்வளவு கொடூரமானது, வக்கிரமானது, அனைத்து மனிதப் பண்புகளையும் நசுக்கி மிதித்து அழிக்கக் கூடியது என்பதை ஒரு சராசரி சினிமா பார்க்கும் பார்வையாளனுக்கும் உறைக்கும் வகையில் காட்சிப் படுத்தியதற்காக இந்த ”உலக நாயக” அதிரடி மசாலாப் படத்தைப் பாராட்டலாம்.

  3. நல்ல கட்டுரை. “மூட கமல் ரசிகர்களுக்குச் சில கேள்விகள்” என்ற பகுதியும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  4. இனி தலிபான்களை பற்றி திரைப்படம் எடுப்பவர்கள், பயங்கரவாதிகள் காவியும், திருநீறும் (அல்லது) திருமண்ணும், உத்திராட்ஷ் கொட்டையும் அணிந்துகொண்டு கந்தசஷ்டி கவசத்தையோ / திருப்பாவையோ இசைக்கும் வண்ணம் எடுக்கவும். ஏனெனில் ஊருக்கு இளைத்தவன் ஹிந்து தானே! இந்த நாட்டில் மூத்த மருமகன் நம்ம பாய். இளைய மருமகன் நம்ம பாதிரி. ஹிந்து, ஆகாத மகன். வாழ்க போலி மதச்சார்பின்மை!

  5. கட்டுரை பல்முனை நோக்குடையதாக இருக்கிறது. இடையில் நீங்கள் வெளியிட்டுள்ள ப.சி. நூல் வெளியீட்டு விழாவில் கமலின் பேச்சு பற்றி இல்லை. அதில் இவர் ப.சி. பிரதமராக வரவேண்டுமென்று கருதினால் அவர் பெயரைச் சொல்லி சிதம்பரம் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே? அதைவிட்டு ‘வேட்டி கட்டியவர்’ எனும் குறியீடு ஏன்? வேட்டி கட்டியவர் என்றால் கோடானு கோடி பேரைக் குறிக்கும், அவ்வளவு ஏன் அந்த விழாவில் தலைமையேற்றிருந்த மு.க.வையும்தான் குறிக்கும். புடவை கட்டியவர் என்றால் மம்தாவையும் சொல்லலாம், ஜெயலலிதாவையும் குறிக்கலாம். விழா கொண்டாடியவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அது சோனியாவையும்கூட குறிக்கலாம். இதுபோன்ற புதிர்கள் இல்லாமல் நேரடியாக இன்னார் வருவதை நான் விரும்புகிறேன் என்று சொல்ல முடியாதவர் இந்த கமல். இப்படியொரு பிரகடனம் வெளியிட்டதால் வேட்டி கட்டியவர் அனைவரையும் திருப்தி படுத்திவிட்டதாக அவரது எண்ணம். “நெஞ்சில் உறமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி” நடந்து கொள்ளாமல், எவரையும் சாந்திராமல் தனித்து சுயமாக சிந்தித்து நடந்து கொள்ளும் ஆற்றலே சிறந்தது. தசாவதாரத்தில் சைவ வைணவ விரோதத்தைக் காட்டியதுபோல இந்துக்களைப் பிரிக்கும் முயற்சிகளைக் கைவிடுவது நல்லது. எனக்கு அரசியலும் இல்லை, மதமும் இல்லை என்றவர் எதற்காக இவை இரண்டையும் வைத்துக் குழப்பிக் கொண்டு குழம்புகிறார்? சோழன் குலோத்துங்கன் சைவப் பற்றாளன். சிதம்பரம் பெருமாளைக் கடலில் எறிந்ததாக இவர் போட்டுக் குழப்பியதற்கு சரியான விளக்கத்தை அறிஞர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

  6. வஹாபிய இசுலாம் வேறு சூஃபி இசுலாமியர்கள் வேறு என்று காட்ட முனைகிறார் இந்த ஜடாயு என்பவர். இதற்கும் கமல ஹாசனின் பரப்புரைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

    அன்புடன் கலந்து பழகுவதால் இசுலாமிய விஷத்தை இனிய அமிர்தமாக மாற்றலாம் என்று நினைத்ததால் இந்துக்களில் பெரும்பான்மையானோர் இசுலாமியராக மாறியதுதான் நடந்தது.

    சூஃபிக்கள் அனைவரும் நல்லவர்கள் என்று ஜடாயு சொல்கிறார். உண்மையில் இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் முகம்மதிய மதத்தைப் பரப்பியவர்கள் சூஃபிக்கள். அதன் விளைவு என்ன என்பதை நாம் இப்போது பார்க்கிறோம்.

    சூஃபிக்களில் ஒரு சிலர் முகம்மதுவின் கருத்துக்கு மாறாக இசுலாத்திற்கு முந்தைய சிந்தனைப் போக்கைப் பின்பற்றினார்கள்தான். மற்ற மதங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்கள்தான். ஆனால், எந்த சூஃபியும் மத மாற்றம் அவசியம் இல்லை என்று சொல்லவில்லை. கிருத்துவத்தின் மிஷநரிகள் போல இவர்கள் இசுலாத்தின் மிஷநரிகள்.

    வரலாற்றில் இசுலாமிய மன்னர்கள் இசுலாத்தைப் பின்பற்றாதபோது அவர்களைக் கண்டித்து கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற இசுலாமியப் புனிதக் கடமைகளைச் செய்ய சூஃபிக்கள் வலியுறுத்தியதை வரலாறைப் படிப்பவர்கள் அறியலாம். காலிஃபேட்டுக்கள் கூட சரியில்லை என்று வருந்தி துருக்க ஒட்டோமான்களை எதிர்த்து 13ம் நூற்றாண்டில் சூஃபிக்கள் போர் தொடுத்தனர் !!!

    ஜடாயு எதை வஹாபியம் என்கிறாரோ அதை அப்போதே செய்தவர்கள் சூஃபிக்கள். குரானை எந்த சூஃபியும் கொலைகார நூல் என்று சொல்லி மறுக்கவில்லை. இந்தியாவில் இசுலாமிய மதமாற்றத்தைப் பெரும்பாலும் பரப்பியது சூஃபிக்கள்தான். எந்த சூஃபியும் இசுலாமிய அரசு தவிர மற்ற அரசுகளும் இருக்கலாம் என்று சொன்னதே இல்லை.

    மாறாக, இசுலாமிய அரசர்களுக்குப் பெருமளவில் படை திரட்டிக் கொடுத்தவர்கள் சூஃபிக்கள். இசுலாத்திற்கு ஆதரவாக நடந்த ஜிகாத்களில் பெரும்பான்மையான ஜிகாத்துக்களை நடத்தியவர்கள் சூஃபிக்களே. அவர்கள் அந்தக் காலத்து வஹாப்புக்கள்.

    எங்கனம் பிற சமூகங்களில் உள்ள மதப் பழக்கங்களை நம்பிக்கைகளைத் தன்னகத்தே கிருத்துவர்களின் கத்தோலிக்கம் எடுத்துக் கொள்கிறதோ அதைப் போன்ற இசுலாமிய கத்தோலிக்கம்தான் இந்த சூஃபியிசம்.

    மற்ற மதங்களை அழிக்க வேண்டும் என்பதில் எந்த சூஃபியும் வேறு கருத்து கொண்டிருக்கவில்லை. உங்கள் ராமரையும் கிருஷ்ணனையும் இசுலாமிய வரையறைக்குள் வைத்து அவர்கள் ஏற்றுக்கொள்வார்களே ஒழிந்து உங்களுக்கான வரையறையை உருவாக்கும் சுதந்திரத்தை உங்களுக்கு அவர்கள் கொடுக்கப் போவதில்லை. பல தெய்வங்களை வணங்கினாலும் ஆபிரகாமிய சட்டகத்துக்குள்தான் சூஃபியிசமும் இயங்குகிறது.

    கபீர் தாசரின் குரு ராமானந்தர். அவரை இசுலாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்களுடன் பட்டியல் போட்டிருப்பதே அநியாயம். எந்த சூஃபி மார்க்கத்தினர் கபீர் தாசரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற அடிப்படையான கேள்வி கேட்கக்கூட இந்துக்களுக்குத் தோன்றவில்லை.

    அப்துல் கலாம் மற்றும் நடிகர் நாசர் போன்றோரை வஹாபியர்களும் சரி சூஃபிக்களும் சரி பயன்படுத்திக்கொள்வார்களே ஒழிந்து தனது குழந்தைகளின் வழிகாட்டியாகக் காட்ட மாட்டார்கள்.

    ஜடாயு, நீங்கள் யாரை நல்ல முஸ்லீம்களாக ஏற்றுக்கொள்கிறீர்களோ அவர்களது அரசியல் நிலைப்பாடு என்ன ?

    அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் இசுலாமியர்களை முன்வைத்தது இசுலாம் ஒரு அமைதி மார்க்கம் என்று தக்கியா செய்வதில் இந்துக்களை அடிமைப்படுத்துகிற கொலை செய்யச் சொல்லுகிற கற்பழிக்கச் சொல்லுகிற இசுலாமுக்குத்தான் லாபம். இசுலாமியர்களின் மூலம் ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்கிறவர்களுக்கு லாபம். மற்றவர்கள் எல்லாம் கமல ஹாசனுக்குக் கைதட்டி விசிலடித்துப் பின்னர் குண்டு வெடிப்பில் சாக வேண்டியதுதான்.

    பக்தியை மறை ஞான உணர்வை எங்கு பார்த்தாலும் கொண்டாடும் குணம் இந்துக்களுக்கு உண்டுதான். அந்த உணர்வுதான் அவர்களை ஆபிரகாமியர்களிடம் இருந்து காப்பாற்றுகிறது. ஆனால், பக்தி மற்றும் மறை ஞானத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் இசுலாமிய அரசியலையும் அறியாமல் சேர்த்து கொண்டாடி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் மூடத்தனத்தை இந்துகள் நிறுத்த வேண்டும். இசுலாமிய அரசியல் பேசுகிற கட்டுரையில் வந்து குணங்குடி மஸ்தான் குன்றக்குடி சுல்தான் என்று அலட்டுவது அப்துல் காதர் அமாவாசை விரதம் இருப்பார் என்ற தவறான புரிதலை உண்மை எனக்காட்டும் அறிவற்ற செயல்.

    அரசியலுக்கும் ஆன்மீகத்துக்கும் மதிப்பு அளிப்பவர்கள் நிறுத்துவார்கள். கமல ஹாசன் போலத் தன்னை நடுநிலைவாதி என வலிந்து காட்ட விரும்புகிற, மற்ற இந்துக்களை விட மேம்பட்ட சிந்தனைவாதிகள் என்று காட்ட விரும்புகிற மௌடீகம் உள்ளவர்கள் நிறுத்த மாட்டார்கள்.

    குரானையும், கீதையையும், பைபிளையும் ஒதுக்காத எவரும் உண்மையான நல்லிணக்கம் கொள்ள முடியாது. கடவுளை மறுக்கிற, அனைத்து மதங்களையும் மறுக்கிற பகுத்தறிவுவாதம் மட்டும்தான் மதம் என்கிற பெயரில் நடக்கும் கொடூரத்தைத் தட்டிக் கேட்கும்.

    நான் ரொம்ப நல்லவன்டா என்று காட்ட விரும்புகிறவர்கள் இனி அவரவர் ஜல்லியை இங்கு கொட்டுங்கள். மற்றவர்கள் பெங்களூருவில் உள்ள கர்நாடக ரேஷனலிஸ்ட் அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் நாத்திகவாத அமைப்பை முதன் முறையாக உருவாக்குவது பற்றிப் பேசுவோம்.

  7. வாட்டர், ஃபயர் திரைப்படத்தின் போது இந்தியாவில் நிகழ்நதவற்றுக்கு இக்கட்டுரையாசிரியர் மற்றும் தமிழ்ஹிந்துவின் நிலைப்பாடு என்ன என்பதைச் சொல்லுங்கள். அப்போதுதான் கட்டுரை முழுமை பெறும்.

  8. அருமையான வ்யாசம்.

    \\\\\\\\\இப்போதும்கூட, தேவையில்லாமல் விநாயகரை (அப்படி ஒரு கடவுள் இல்லையாம்) வம்புக்கு இழுக்கிறீர்கள். அதாவது ஹிந்து தெய்வங்களை கேலி பேசினால் முஸ்லிம்கள் மகிழ்ந்து உங்கள் படத்துக்கு ஆதரவளிப்பர் என்று எதிர்பார்க்கிறீர்களா? இது பச்சையான சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?\\\\\

    இது பச்சையான சந்தர்ப்பவாத மதவிரோதத்திற்குத் தூபம் போடும் போக்கு. உண்மையில் மதசார்பின்மை என்று ஒரு சமாசாரம் இருக்குமானால் தண்டிக்கப்பட வேண்டிய போக்கு. ஹிந்துஸ்தான மதசார்பின்மை இலக்கணமே ஹிந்துவை இகழ் மற்றவரை புகழ் என்பது தானே.

    \\\\அவ்வாறு உளவுத் துறை கூறும் தகவல்கள் உண்மையெனில், கலவரத்தைத் தூண்ட வாய்ப்புள்ள அமைப்புகள் மீது ஏன் அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது?\\\\

    அப்படியெல்லாம் ஏதாவது செய்து விட்டால் தமிழினத் தலைவர் கலைக்ஞர் கருணாநிதி அவர்களுக்கு முத்தான வாய்ப்பு கிட்டிவிடும் என்ற ஆரம்பப் பாடம் அம்மணிக்குத் தெரியவில்லையென்றால் சொல்லிக்குடுக்க தொண்டர்படை உள்ளதே.

    \\\\சிறுபான்மையினருக்கு ஆதரவாக நடந்தால் அதிமுக-வுக்கு லாபம் என்று கணக்கிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இன்னமுமா இஸ்லாமியர்களை அதிமுக நம்புகிறது? \\\\

    மன் மே ஹை விஸ்வாஸ், பூரா ஹை விஸ்வாஸ், ஹம் ஹோங்கே காம்யாப் ஏக் தின் – மனதில் விஸ்வாசம் வேண்டும். முழுமையான விஸ்வாசம் வேண்டும். நாம் வெற்றியை அடைவோம் என்று – அப்படின்னு ஒரு ஹிந்திப் பாட்டு உண்டு. அம்மணி பல் மொழி வல்லுநர். கேட்டிராமலா இருப்பார்.

    \\\எதிர்காலத்தில் ஹிந்துக்களை கேவலப்படுத்தும் திரைப்படங்கள் வெளிவருமானால், அதற்கும் ஜெயலலிதாவின் மதச்சார்பற்ற அரசு தடை விதிக்குமா?\\\\

    பகுத்தறிவாளர்கள் தமிழகத்தில் செய்துள்ள மூடநம்பிக்கை ப்ரசாரம் வலுவற்றதா என்பதை காலம் தெரிவிக்கும்.

    \\\\ கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சிறப்புரிமையா? ஹிந்து இயக்கங்கள் நடத்தும் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அரசு, முன்னறிவிப்பின்றி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் இஸ்லாமிய இயக்கங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? அரசு அவர்களுக்கு அஞ்சுகிறதா?\\\\

    ஹிந்துஸ்தான மதசார்பின்மைக் கொள்கையையே போட்டுத் தாக்கும் கேள்வி

    \\\ 1910களில் கிலாபத் இயக்கத்தின் போது துருக்கியின் கலிபா பதவி இழந்தார்\\\\

    (நாது) ராம ராம!!!!! கிலாபத் என்று சொன்னால் என்னென்னவெல்லாமோ ஞாபகம் வருதே

    \\\\ உங்கள் கண்மூடித்தனமான எதிர்ப்பு பொதுமக்களிடையே உங்களைப் பற்றி உருவாக்கும் எதிர்மறை சித்திரம் குறித்து உணர்ந்திருக்கிறீர்களா? \\\\

    துர்போதனையிலேயே வளரும் அடிப்படைவாத இயக்கங்களுக்கு எதற்காக போதனை? இவர்கள் போட்ட வெறியாட்டத்தில் பகுத்தறிவு போதை கூட கொஞ்சம் கொஞ்சம் தெளிய ஆரம்பித்து உள்ளதை பார்க்கிறேன்.

    \\\ஓர் இயல்பான உரையாடல் மூலமாக உங்கள் எதிர்ப்பை உங்களால் பதிவு செய்ய முடியாதா?\\\\

    ஜெனாப் ஜெய்னுலாபுத்தீன் சாயபு அவர்கள் ஒரு இயல்பான உரையாடல் நிகழ்த்தியதாகவும் அது பகுத்தறிவு வாதிகள் மற்றும் மதவாதிகளால் இழித்துரைக்கப்பட்டதும் கூட செய்தி தான்.

    \\\ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள்” என்ற பொதுவான கருத்துருவாக்கம் ஏற்பட்டுள்ளதை அறிவீர்களா?\\\\

    அது மட்டும் இல்லை தாடி வைத்தவனெல்லாம் முஸல்மான் என்றும் ஒரு கருத்து உருவாகி அப்பாவி சர்தார்களெல்லாம் அமேரிக்காவில் அடிபடுகிறார்கள்.

    \\\\கபீர்தாசருடன், சூஃபி ஞானிகளுடன், குணங்குடி மஸ்தான், செய்குத் தம்பி பாவலர், தக்கலை பீர் முகமது அப்பா, டாக்டர் அப்துல் கலாம் ஆகியோருடன் அல்ல, தாலிபானிய பயங்கரவாதிகளுடன் தான் தமிழகத்தின் முஸ்லீம்கள் தங்களை அடையாளம் காண்கிறார்கள்\\\\

    தமிழகத்தில் ஸூஃபி இஸ்லாம் உத்தர பாரதம் போல் காலூன்றவில்லை என்பது நிதர்சனம்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல் வஹாபியம் இங்கு கோலூச்ச முனைவது தெரிகிறது.

    \\\\இன்று இஸ்லாமியர்களுக்கு அஞ்சி மண்டியிடும் கலைஞர்களும் அரசும், நாளை இஸ்லாமியர்களை திருப்திப்படுத்த ஹிந்துக்களை மிதிக்கவும் தயங்க மாட்டார்கள். \\\\

    எச்சரிக்கை. விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகம் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் வெளிவரும் என்று கமல் ஹாஸன் பயமுறுத்தியுள்ளார். சர்வ நிச்சயமாக படு கேவலமாக ஹிந்துக்களை / ஹிந்து மரபுகளை சித்தரிக்க முனைவார். அதை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்?

  9. Kamala Hassan does not have a licence to insult any body in any way he likes to make money through cinema just because he is a “KALAIGNAN”.
    For the past several years Tamil cinema made money through vulgar dialogues,scenes and stories insulting the Brahmins endlessly.The DK,DMK elements and the Christian elements which are in abundance in the Cini field and in the press have encouraged this as a clandestine “anti-hindu” activity in the name of “Kalai” and “entertainment”.
    Kamala hasan who is a “pahuhtharivalan” by his own declaration has kept vulgar scenes depicting “BRAHMANA DWESHAM” in this film just for entertainment and make his money.He will not remove these scenes unless he is kicked suitably by serious opposition which is not there.
    His “Viswaroopam” is only “Dwesha Viswaroopam”.The affected parties are fully within their rights to prevent Kamalhassan from “encashing” the available climate of mis-trust and hatred.
    We only sincerely hope that this perverted and misguided artist and the other similar ones available in Tamil cinema and Tamil politics in plenty learn their lessons and do not try to en cash through cinema displaying “DWESHAM” against any caste or religious community in India.
    Tamil Cinema has harmed the Tamil people and culture and religion very seriously for the past 50 years or so.Deterioration which has set in is affecting the Tamil people very seriously now.
    Let not Tamil Cinema spoil peace and tranquility and culture all over India through such misadventures like “DWESHA VISWAROOPAM”

  10. on times now interview intellectual kamal told, ” i think it is god’s wish”. then with artificial ugly laugh he told ” i am not believing God. i can say it is Nature’s wish”.
    from this dialogue what you understand about kamal.
    when asked about his PM candidate, he told PC’s mother is like his mother and she came to tell her condolences when kamal’s mother died.
    when asked why he could not meet CM after stay order, he was giving a lenghthy reply without directly answering.
    during his interview he never told about freedom of expression.
    there were so many good actors in tamil film industry other Sivaji like renga rao, subbiah, M.R radha. he is a cheap person, cruel business man.

  11. அன்புள்ள இங்கர்சால் வசந்த குமார்,

    // சூஃபிக்கள் அனைவரும் நல்லவர்கள் என்று ஜடாயு சொல்கிறார். //

    அப்படி நான் சொல்லவில்லை.. சூஃபிக்கள் குறித்த வரலாற்றை ஓரளவு படித்துள்ளேன். டாக்டர் டேவிட் ஃபிராலி தமது நூலில் (Awaken Bharata) சூபிக்கள் குறித்த நீண்ட கட்டுரையில் அந்த சமயப் பிரிவை முழுமையாக மதிப்பிட்டுள்ளார். சூஃபி பிரிவினரிலும் வன்முறையாளர்களும் ஜிகாதிகள்ம் இருந்துள்ளனர் என்பதையும் அவர் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார். வஹாபியத்திற்கு மாற்றாக தமிழக முஸ்லிம்கள் ஆதர்சமாகக் கருதக் கூடிய சில இஸ்லாமிய சான்றோர்கள் பெயரை நான் அளித்தேன், அவ்வளவே.

    தமிழக முஸ்லிம்களும் இந்த மண்ணின் மைந்தர்களே.. இஸ்லாம் என்ற மதத்தின் ஆக்கிரமிப்புவாத, வன்முறைக் கோட்பாடுகளால் பாதிக்கப் பட்டவர்களாகவே (victims) அவர்களைக் கருத வேண்டியது. எனவே உங்களது கோபமும், எதிர்ப்பும், ஆற்றாமையும் எல்லாம் முஸ்லிம்கள் என்ற மக்கள் கூட்டத்தின் மீதானதாக அல்ல, அவர்களை இயக்கும் வன்முறை சித்தாந்தத்தின் மீதானதாகவே இருக்க வேண்டும்.

    முஸ்லிம்களை தாஜா செய்வது, வாக்கு வங்கியாகக் கருதுவது போலி மதச்சார்பின்மை அரசியலின் பாணி – அதை நாம் எதிர்க்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள்களை எந்த வகையிலும் தாஜா செய்யாமல் அதே சமயம் அவர்களை இந்தியப் பண்பாட்டுடனும் இந்திய தேசியத்துடனும் பிணைக்கும் கூறுகளை வலுப்படுத்துவதே இந்துத்துவ அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும். நான் இங்கு முன் மொழிந்ததும் அதுவே.

  12. ஹிந்துக்கள் அரசியல் ரீதியாக பல பிரிவுகளாக பிரிந்திருப்பது பெரும் தடை கல். அந்த தடை நீங்கி ஒற்றுமையாய் ஒரே குரலாய் ஒலிக்கும் போது தான் ஹிந்துக்களுக்கான மதிப்பு கிடைக்கும்.

  13. கந்தர்வன் அவர்கள் சொல்வது போலவே ‘முட்டாள் கமல் ரசிகர்களுக்குச் சில கேள்விகள் ‘ எனும் பகுதியும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    பரவாயில்லை; கட்டுரையின் அடுத்த பகுதியாக அதையும் இணைக்கலாம்.

    தேவ்

  14. \\\\\\ஆனால் முஸ்லிம்கள்களை எந்த வகையிலும் தாஜா செய்யாமல் அதே சமயம் அவர்களை இந்தியப் பண்பாட்டுடனும் இந்திய தேசியத்துடனும் பிணைக்கும் கூறுகளை வலுப்படுத்துவதே இந்துத்துவ அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும். \\\

    முத்தான வார்த்தை.

    \\\\நான் ரொம்ப நல்லவன்டா என்று காட்ட விரும்புகிறவர்கள் இனி அவரவர் ஜல்லியை இங்கு கொட்டுங்கள்.\\\

    There you put a barrier for a meaningful and genuine discussion. Neverthless, points of agreements and disagreements.

    \\\\பக்தியை மறை ஞான உணர்வை எங்கு பார்த்தாலும் கொண்டாடும் குணம் இந்துக்களுக்கு உண்டுதான். அந்த உணர்வுதான் அவர்களை ஆபிரகாமியர்களிடம் இருந்து காப்பாற்றுகிறது. ஆனால், பக்தி மற்றும் மறை ஞானத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் இசுலாமிய அரசியலையும் அறியாமல் சேர்த்து கொண்டாடி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் மூடத்தனத்தை இந்துகள் நிறுத்த வேண்டும். \\\\

    முற்றிலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உள்வாங்க வேண்டிய பொன்னான வார்த்தைகள்.

    கொண்டாட வேண்டியதைக் கொண்டாடி ஒதுக்க வேண்டியதை சரியாக அடையாளம் கண்டு அடையாளம் காட்டி ஒதுக்கலாமே.

    அன்பார்ந்த இங்கர்சால் வசந்த குமார் ஸூஃபி சம்ப்ரதாயத்தினரின் exclusivist மனப்பான்மையை உள்ளது உள்ள படி பட்டியலிட்டுள்ளீர்கள். ஆனால் அவர்களிடம் உள்ள நிறைகளை அறவே ஒதுக்க முனைவது சரியல்ல எனப் படுகிறது. க்றைஸ்தவர்களது inculturation என்ற விஷமத்தனமான doctrine லிருந்து ஸூஃபி சம்ப்ரதாயத்தினரின் போக்கு வேறானது என்பது என் புரிதல்.

    பின்னர் ஸூஃபிக்கள் அனைவரும் ஜிஹாதி மனப்பான்மையுடன் மட்டும் தான் இருந்தனர் என்று சொல்வது தவறு என்பதற்கு நான் மற்றவருடன் பகிரும் ஒரு உதாஹரணம் மீர் தகீ மீர். (Meer Taqi Meer) ஒரு ஷேர் (உர்தூ குறுங்கவிதை)

    மீர் கே தீன்-ஓ-மஜ்ஹப் கா
    பூச் தே க்யா ஹோ உன் ஹே தோ

    தொகாஷ்கா கைன்சா டைர் மே பைடா
    கப் கா தர்க் இஸ்லாம் கியா

    மீருடைய நம்பிக்கை மற்றும் விச்வாஸம் பற்றி என்ன சொல்ல
    உட்காருவது கோவில், நெற்றியில் திலகம், இஸ்லாத்தை எப்போதோ விட்டு விட்டாரே

    உர்தூ ஷாயர் (கவி) ஜெனாப் மீர்- தகீ-மீர் அவர்கள் ப்ரஸித்தி வாய்ந்த ஷாயர் மிர்ஜா காலிப் (Mirza Ghalib) அவர்களுக்கு முற்காலத்திய ப்ரஸித்தி வாய்ந்த ஷாயர்.

    \\\\\குரானையும், கீதையையும், பைபிளையும் ஒதுக்காத எவரும் உண்மையான நல்லிணக்கம் கொள்ள முடியாது.\\\\

    ம்ஹும். ஏற்க இயலா நாஸ்திக வாதியின் பார்வை. நாஸ்திகம் பேசுபவர்கள் ஹிந்து மதத்தை மட்டும் கரித்துக்கொட்டி ஆப்ரஹாமிய மதங்களுக்கு சாமரம் போடும் போக்கிலிருந்து தங்களது போக்கு வித்யாசமாய் உள்ளது. அதற்கு வாழ்த்துக்கள். ஹிந்துவான எனக்கு தத்வ தர்சனம் பேசும் பகவத் கீதை முற்றிலும் ஏற்பானது. குரான்-ஏ-ஷெரீஃப் மற்றும் பைபள் புஸ்தகங்களில் ஏற்க இயன்ற கருத்தொற்றுமைகளுக்கு சாத்யம் உள்ள பகுதிகளை ஹிந்துக்கள் த்வேஷிப்பதாக நான் அறியவில்லை. இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் ஹிந்துக்களிடம் திணிக்கப்படுவதைத் தான் ஹிந்துக்கள் எதிர்க்கிறார்கள்.

    உலகில் பிறந்த மனிதர்கள் எவரிடத்தில் தான் குறைகள் இல்லை. ஆனால் குறைகளை மட்டும் பட்டியலிட்டு நிறைகளை அறவே ஒதுக்குவது சரியல்ல.

    இதையெல்லாம், தாங்கள் தங்களது அலகீடான

    \\\\நான் ரொம்ப நல்லவன்டா என்று காட்ட விரும்புகிறவர்கள்\\\ என்று எடுத்துக்கொள்ளலாம். அது சரியாகவும் இருக்கலாம்.

  15. இந்துக்கள் சுயசிந்தனை உடையவர்கள். ஆபிரகாமியரைப்போல ,ஆட்டு மந்தைபோல ஒரே வழியில் செல்பவர்கள் அல்ல. சுய சிந்தனை இல்லாத ஜடங்கள் தான் எவனோ சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளும். ஆனால் அறிவுள்ள மனிதர்கள் யார் சொன்னாலும், அது அனுபவத்தில் சரியாக வருமா என்பதை ஆராய்ந்து பார்த்து அதன் பின்னரே ஏற்பார்கள்.

  16. //தமிழகத்தில் நாத்திகவாத அமைப்பை முதன் முறையாக உருவாக்குவது பற்றிப் பேசுவோம்.//

    நாதிகனாவது மிகவும் எளிதாயிற்றே ! ஒன்றும் நம்பாமல் சும்மா இருந்தால் போதுமானதே !! இதற்காக ஒரு அமைப்பில் சேர வேண்டுமா என்ன ? ஜாபாலி ஏற்கனவே பேசி முடித்து விட்டார் – ஆளை விடுங்கள் சாமி !!!

  17. ஒரு முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் போட்டியிட்டார்.
    அப்போது நிருபர்கள் ராஜாஜியிடம் அதைப் பற்றி கருத்து கேட்டனர்.
    அதற்கு ராஜாஜி ” ஒரு கசாப்புக் கடைக்காரன் பசுவிடம் பால் கறந்து கொண்டிருந்தால் கூட மனதுக்குள் ‘இந்தப் பசுவை வெட்டினால் எவ்வளவு மாமிசம் கிடைக்கும்’ என்றுதான் எண்ணிக் கொண்டிருப்பான்.
    அது போல்தான் ராணுவத் தளபதியாக இருந்தவர் ஜனாதிபதியாக ஆனாலும் போர் மீது தான் நாட்டம் இருக்கும்’ என்றார்”
    அது போல்தான் இந்த ‘ சுஃபி ‘ எல்லாம்!

  18. இப்போது இருப்பது போன்ற தலைவர்கள், சினிமாக் காரர்கள், பத்திரிகைகள்,டீவீக்கள் தொடர்ந்தால் எதிர் காலத்தில் கமலின் உயிரினும் மேலான ‘சகோதரர்கள்’ நாட்டில் பெரும்பான்மையாக ஆகி விடுவார்கள்.

    அப்போது கமல் அல்லது அவரது பிள்ளையோ பேரனோ வேறு தொழிலுக்குப் போய் விடுவார்கள் ஏனென்றால் ‘அன்பு மதம்’ சினிமாவுக்கும் , இசைக்கும் எதிரானதாமே!

  19. விஸ்வரூபம் திரைப்படம் குறித்து இவ்வளவு தூரம் மாய்ந்து மாய்ந்து விவாதித்துத் தள்ளினார்கள் தமிழர்கள்.. இப்போது படம் வெளிவரும் நிலையில், உள்ளுக்குள் என்ன நடந்தது என்பது பற்றி கசியும் விவரங்களைக் கேட்கையில் இன்னும் மோசமாக எல்லாரும் முட்டாளாக்கப் பட்டுள்ளார்கள் என்று தோன்றுகீறது..

    புண்படுதல் பற்றிய உணர்ச்சிகரமான வாதங்களும் வன்முறை மிரட்டல்களும் எல்லாம் பொதுவெளியில். உள்ளுக்குள் படத்தை வெளியே கொண்டு வரும் முன் பெரிய அளவில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு கப்பம் செலுத்தப் பட்டுள்ளதாக சொல்கிறார்கள் (படத்தின் பட்ஜெட்டில் 20% !!!) இவ்வளவு பணம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாத மூளைச் சலவைகளுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் செல்வழிக்கப் படப் போகிறது.. அரபு நாடுகளில் இருந்து குவியும் பெட்ரோ டாலர்கள் போக, உள்ளூரிலும் பயங்கரவாத மிரட்டலைக் காட்டியே கொள்ளையடிக்கிறார்கள் இந்த அமைப்புகள்.. ஔரங்கசீப் இந்துக்கள் மீது ஜிசியா வரி விதித்து, அந்த சுரண்டல் பணத்தை வைத்து படைதிரட்டி மேலும் இந்துக்களை கொன்றொழித்து, இந்து ஆலயங்களை தகர்த்தது வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. அது தான் ஞாபகம் வருகிறது.

    1990களில் தாவூத் இப்ராகீம் பாலிவுட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போன்ற சூழல் இப்போது தமிழ்த் திரையிலகில் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.. இனி ஒவ்வொரு படத்தயாரிப்பாளரும் இப்படி கப்பமும் செலுத்து விட்டு, கூடுதலாக முஸ்லிம் உணர்வுகளை “புண்படுத்தும்” சமாசாரங்களை சொல்லாமல் இருக்கவும் பழக வேண்டும்… இந்த விவகாரத்தில் இறுதியாக முழு வெற்றியடைந்திருப்பது இந்த மதவெறி அமைப்புகள் மட்டுமே. கமலஹாசனை, தமிழக அரசை, தமிழக சிவில் சமூகத்தை எல்லாரையும் படிய வைத்து விட்டார்கள்.

    இதன் உச்சகட்டம் “500 தியேட்டர்களில் வன்முறை வெடித்தால் தமிழக போலீஸ் பாதுகாப்பளிப்பது நடைமுறை சாத்தியம் அல்ல” என்று தமிழக அரசு வக்கீலே ஒரு தரப்பு வாதத்தை வைத்தது. இதை இப்படியே நீட்டினால் “எதிர்காலத்தில் தமிழகத்தில் 50 பொது இடங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இந்துக்கள் மீது இந்த பயங்கரவாத அமைப்புகள் வன்முறைத் தாக்குதல் நடத்தினால்… ” என்ற கேள்வி எழுகிறது. அப்போது தமிழக அரசு பாதுகாப்பளிக்கும் என்று நாம் நம்ப இடமிருக்கிறதா?

  20. கமல் ஒரு ஞான சூன்யம். சமணர்களை சைவர்கள் கழுவில் ஏற்றவில்லை. வாதத்தில் தோற்றால், தாங்கள் சைவர்களாக மாறுகிறோம் அல்லது கழுவில் ஏறுகிறோம் என்று சமணர்கள் தான் சபதம் செய்து , வாதத்தில் தோற்றபின் , தாங்களே கழுவில் ஏறினர். உண்மை இவ்வாறிருக்க இவனைப்போன்ற பேடிகள் , திரித்துக்கூறுவதால் உண்மையை மறைக்க முடியாது.

  21. Raja அவர்கள் இன்று இங்கே இடுகை செய்துள்ள வீடியோவைப் பார்த்த பிறகு தான் எனக்கும் கமல் இவ்வளவு ஞானசூனியம் என்று தெரிகிறது…

    எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் சைவத்தைத் திட்டுவது கமலுக்கு வாடிக்கையான வழக்கம்… இது தசாவதாரத்திலே தொடங்கி இன்று வரை தொடர்வதாகவே தெரிகிறது…

  22. how cheap and idiotic
    Just to hide the utter foolishness and illiteracy of such actors and to prevent the youth of our country to become intelligent such actors are promoted as messiahs by the media.

    So the people should not respect them
    They should stop wasting their money y on such worthless persons.
    It is clear they have no brains and no idea to inspire the youth in a positive way
    They adopt the tactic of patting on each others’ back.

    They also fool the people by going to great lengths about how they made a particular scene etc as if they are very brilliant – but which is actually very foolish!

  23. மிக அருமையான பதிவு!
    கலைஞானியின் மின்னஞ்சல் இருந்தால் அவருக்கும் இதை கண்டிப்பாக அனுப்ப வேண்டும். கமலின் பதில் என்னவாக இருக்கும்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம்..

    ராம்

  24. ஒன்றை மனதில் கொள்ள வேண்டும் பத்திரிகையகட்டும், சினிமாவகட்டும் எத்தனை பங்கு முஸ்லிம்கள் படிக்கிறார்கள், அல்லது பார்கின்றனர். தமிழ் பத்திரிகை படிக்கும் நண்பர்கள் அதிகம் இந்துகல்தான் . அதனால் லாபம் பார்க்கும் பத்திரிகைகள் இந்துக்களுக்கு ஆதரவாக செய்தி வெளி இடுவதில் பயபடுகின்றன. அதே போல் கமலு ம் அவருடைய படத்தை பார்க்கதா முஸ்லிம்களுக்கு பயந்து படத்தின் பல பகுதிகளை நீக்கி இருப்பது அசிங்கம் இனியாவது பத்திரிகையகட்டும், சினிமாவகட்டும் து ணிந்து செயல் படுவது தான் ஆண்மைக்கு அழகு

  25. சேக்கிழானின் சிறந்த ஆக்கம்.
    இங்கர்சால் வசந்த குமாரின் சூஃபி இஸ்லாமியர்கள் பற்றி சிறந்த விளக்கம்.
    இருவருக்கும் நன்றிகள்.

  26. இங்கே பகுத்தறிவை பற்றி திரு. இங்கர்சால் அவர்கள் குறிப்பிட்டுள்ளது, நம் தமிழ் நாட்டு திராவிட அரசியல் வாதிகள் சொல்லும் கோணத்திலேயே தான் உள்ளது. உண்மையில் பகுத்தறிவு என்பது ஒரு மேலான ஆன்மிக வார்த்தை ஆகும். சாதாரணமாக நடைமுறையில் உள்ள விக்ரஹ வழிபாடு போன்றவற்றை கடந்து, ஞான மார்க்கத்தில் நுழையும் போது ஏற்படுகிற நிலை தான் பகுத்தறிவு என்பது! நான் இந்த உடலை, இல்லை மனதா, “நான் யார்?” என்று ஒவ்வொன்றாக பகுத்து அறிவது தான் பகுத்தறிவு! இதை புரிந்து கொள்ளாமல் நாஸ்திகத்தின் அடிநாதமாக கருதுவது முட்டாள்தனம்!!

  27. “3. சிறுபான்மையினருக்கு ஆதரவாக நடந்தால் அதிமுக-வுக்கு லாபம் என்று கணக்கிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இன்னமுமா இஸ்லாமியர்களை அதிமுக நம்புகிறது?

    நிச்சயமாக நம்புகிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் பகுத்தறிவு சிகாமணிகளின் ஸ்பீக்கரை நிறுத்தவாவது இஸ்லாமிய ஆதரவு உபயோகப்பட்டது என்பதே உண்மை. அம்மா மட்டும் கமல் பக்கம் நின்றிருந்தால், அதை எப்படி கொண்டு போயிருப்பார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் தான் இங்கே ராஜா அவர்கள் கொடுத்த இணைப்பில் வெளிப்பட்டது. கமலஹாசனை நாட்டை விட்டுத் துரத்தினாலும் ஒரு சில நடிகர்களையும், சினிமா துறையினரையும், கொஞ்சம் ஸ்கூல் காலேஜ் மாணவர்களையும் தவிர யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் மீடியாவுடன் சேர்ந்து இணையத்தில் கமல் சோக புகைப்படத்தைப் போட்டு கொஞ்ச நாள் ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிக்கொண்டு இருந்திருப்பார்கள். ரஜினி ரசிகர்களாவது ராமதாசைக் கண்டித்து ‘பாபா’ பட பிரச்சனையில் போஸ்டரெல்லாம் அடித்து அவருக்கு கருப்பு கோடி காண்பித்து மண்டைகள் உடைக்கப்பட்டனர். கமலுக்கு அவர் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களே பெரிதாக தவ்ஹீத் ஜம்மாதைக் கண்டித்து போஸ்டர் கூட ஒட்டவில்லை.

    அவ்வாறு ஜெயலலிதாவை தவறாக வழிநடத்தும் மதியூகி யாரோ?”

    சோ அவர்கள் சொல்லிக் கொடுத்திருப்பதாக சந்தேகம் வேண்டாம். ஜெயலலிதா ஒன்றும் லூசு அல்ல. இந்த வேடதாரியை ஆதரித்து செமத்தியாக வாங்கிக் கட்டிகொள்வதற்கு. அதிமுக இஸ்லாமியர்களை நம்பியதோ இல்லையோ, இந்த வேடதாரிக்கு இது நிகழ வேண்டும் என்பது விதியானால் யார் தான் தடுக்க முடியும். படம் இப்போது 150 கோடிகளை கிராஸ் பண்ணுமா பண்ணாதா? என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். எனவே கமலும் win. ஜெயலலிதாவும் win. இஸ்லாமிய அமைப்புகளும் win. வாட் எ வின்-வின் சிச்சுவேஷன்? இதில் மிகப்பெரிய ஊறுகாய் யார் என்றால் நம்ம தமிழின தலைவரு தான். கடைசி வரைக்கும் அவருக்கு பெருசா அரசியல் பண்ண ஒன்னுமே கிடைக்காம, திரும்ப ஈழ தமிழருங்கள வாழ வைக்க ராஜபக்சாவ எதிர்த்து கருப்பு கொடி காட்டப் போய்ட்டாரு. அங்க இலங்கை போனப்ப திருமாவும், கனிமொழியும் ராஜபக்சாவ பாத்து “ஈ”னு சிரிச்சிட்டு சால்வை பொத்திட்டு வந்த போட்டோவேல்லாம் இப்ப facebook ல போட்டு, ஆர்ப்பாட்ட படத்தையும் பக்கத்துலயே போட்டு பசங்க கும்மி அடிக்கிறாங்க. பாவம் மனுஷன்.

  28. “எனவே கமலும் win. ஜெயலலிதாவும் win. இஸ்லாமிய அமைப்புகளும் win. வாட் எ வின்-வின் சிச்சுவேஷன்? ”
    What win win situation?
    Of course, the losers are the cowardly Hindus.

  29. “What win win situation?
    Of course, the losers are the cowardly Hindus.”

    I did not want to tell that. But you have added that bitter reality. Hmmmmmmm…….

  30. எல்லோரும் இது போன்ற visvaroobam படத்திற்கு அனேக பதிவு செய்த நீங்கள் producer -Harish Dayani தயாரித்த மயுலு படம் பார்த்தீர்களா அதில் கிராம தெய்வங்களை போலிஎன்றும்,அருள் ஆடுவதும் ,அருள்வருதுவதும் ஒரு வகை பைத்தியம் என்றும், கிராம பூஜைகள் மூடத்தனம் எனவும் நாச்தீகர்கள் எபோதும் போல் எடுத்தார் கைபிள்ளை என ஹிந்து தர்மத்தில் வுள்ள கிராம தெய்வ வழிபாடைகொச்சைபடுத்தி வுள்ளனர் . அதே சமயத்தில் மனநலம் பாதிக்க பட்டுள்ள ( அதாவது கோடங்கி -அருளடிக்கு ) வைத்தியம் ஆயுர்வத தாலே செய்கிறார்கள் -அந்த நாத்திகயற்கு தெரியவில்லையா? -எந்த ஹிந்து தரம்தில் அருளாடுவதும் ,கோடங்கி பூஜை களை கொண்டதோ அதே தர்மத்தின் யோகிகளும் ,ரிசிகளும் சித்தர்களும் தந்தது தான் தியானம் ,யோகம் ,ஆயுர்வேதம்,சித்தவைத்தியம்,,வீட்டுவைத்தியம் என அநேக தெரியவில்லையா .-எல்லா மதங்களில் நண்பிகையின் அடிப்படையில் சில பழக்கங்களை செய்கிறார்கள் ,முடிந்தால் இஸ்லாமியர்கள் -அல்லாவின் வீடு இன்று மெக்காவை பார்த்து தொழுவதையும் ,சாத்தன் என்று பாறை மீது கல்வீசுவதையும் சொலிபாருங்கள்-அப்போது தெரியும் வுங்கள் பகுத்தறிவு வீடு ,ஆப்ரகம்நிஎர்கள் அப்பத்தை இயேசுவின் maamisum என்றும் ,wine இயேசுவின் ரெக்தம் என்று ஜானச்தனம் செய்கிறார்கள் இதை kuripida முடியுமா நீங்கள் தான் அவர்களின் tholarkalaachay

  31. In viswaroopam, kamal’s wife is a brahmin who has an affair with her boss. In one scene, kamal asks her whether she will eat bacon. In another scenbe,he tells her that he will not throw his Gods into the sea or crucify them (he is a muslim in the film).

    When the muslim outfits came for talks in the presence of the govt representative, he was questioned on why he sais he will leave the country. Kamal pacified them saying that he had said that if at ll he leaves, he will go to dubai. He then told that if anyone should be angry, it should be Rama Gopalan of Hindu munnani since his film makes fun of hinduism & brahmins (which is usual in almost all his films).

    In viswaroopam-2, seems he has edited many scenes keeping this experience in mind. So, you can expect a lot of hindu bashing & muslim appeasement in part 2.

  32. அனைத்து சமூகத்தினரும் இந்துக்களைப் போல ஏமாளிகளாகவும் கோழைகளாகவும், அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொள்ளும் தந்திரம் தெரியாதவர்களாக இருப்பார்களா என்ன?

    வாழ்க இந்து சமுதாயத்தின் இந்து-விரோத எண்ணம்! வெட்கக்கேடு..

  33. கமல் ஹாசன் ஒரு கோழை தான் தயாரித்த படம் என்றுடன் காலில் விழுந்து கதறி நாட்டுவிட்டு போய் விடுவேன் என்று சொல்லி அழது படத்தின் மீது தடையை விலக்கி வருமானம் பார்த்தார் .ஆனால் இந்த்த படத்தை வேறு யாருநேனும் தயாரித்த இருந்தால் அவர் மிகவும் கவலைப் படமாட்டார் அது தான் நாத்திகம்

  34. கமல்ஹாசன் பிரச்சனையை பெரிதாக்கி இலவச விளம்பரம் தேடியதை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.

  35. The movie pollathavan (dhanush) is remade in bengali as BORBAAD. All the villain characters are muslims. but no one in Bengal bothered.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *