1962க்கு பின் திட்டமிட்ட ரீதியில் சீனா பாரத தேசத்தின் மீது மறைமுகமாக ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2013-ம் வருடம், ஏப்ரல் மாதம் 15ந் தேதி, சீன ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 17,000 அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் அமைந்துள்ள தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi ) என்ற இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல், ராணுவத்தினர் தங்குவதற்குறிய கூடாரங்களும் அமைத்துள்ளார்கள், , அப்பகுதியிலிருந்து வெளியேறவும் மறுத்து வந்தார்கள், பின்னர் 20 நாட்கள் கழித்து சீனா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். . நட்பு என்ற முறையில் இந்திய சீன உறவுகள் என்றைக்குமே சுமூகமாக இருந்த்தில்லை. சீனாவுடன் அவ்வப்போது மோதல் போக்கு நீடிக்கின்றது, இதற்கு முக்கிய காரணம் இந்திய சீன எல்லைப் பிரச்சினையில் ஓர் உடன்பாடு ஏற்படாததால், இந்த மோதல் போக்கு நீடிக்கிறது.
இந்திய சீன எல்லைகள்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உள்ள எல்லைக் கோட்டின் அளவு 4,056 கி.மீ. தூரம் கொண்ட பகுதியாகும். இந்த பகுதி மூன்று விதமாக பிரித்து பார்த்து நிலைமையை காணலாம். கிழக்கு பகுதி, மத்திய பகுதி, மேற்கு பகுதி, இதில் கிழக்கு பகுதி என்பது சிக்கிம் முதல் பர்மா வரை உள்ள எல்லைப் பகுதியாகும். 1890ல் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் எல்லைக் கோடு நிர்ணயக்கப்பட்டது. இது 1914-இல் வரையறுத்த எல்லைக் கோடு. காஷ்மீரிலிருந்து இன்றைய மியன்மர் வரை உள்ள எல்லைக்கோடே இந்திய அரசின் சட்ட பூர்வ இந்திய- சீன எல்லைக் கோடு. இந்த எல்லைக் கோட்டிற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றைய கால கட்டத்தில் சீனாவின் மேலாண்மை மோசமாக இருந்ததின் காரணமாகவும், திபெத் சுதந்திர நாடாக இருந்ததால், ஆங்கில அரசாங்கம் திபெத்தின் ஆட்சியாளர்கள் மூலமாக உடன்படிக்கையில் கையெழுத்து பெற்றுக் கொண்டது. இதுதான் மெக்மோகன் எல்லைக் கோடாகும் (MaMohan line ) மேற்கு பகுதியானது அக்சாய்சின் பகுதியிலிருந்து லடாக்கின் மேற்கு பகுதியான Lanka La, Niagzu stream, Demchok, Teshigong வழியாக Emis கணவாய் வரை எல்லைப் பகுதி வரையரைக்கப்பட்டது. இந்த பகுதி முழுவதும் லடாக் அரசரால் ஆட்சி செய்யப்பட்டது. திபெத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அக்சாய்சின் பகுதி சீனாவிடம் இருக்க வேண்டும் என்ற காரணத்தால், சீனா 38,000 ச.கி.லோ மீட்டா அளவு கொண்ட அக்சாய்சின் பகுதிக்கு உரிமை
கொண்டாடுகிறது. மத்திய பகுதியானது ஸ்பிட்டி பள்ளத்தாக்கு (Spiti ) முதல் ஷிப்கிலா (Shipkila ) கணவாய் வரை உள்ள பகுதியாகும். உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்வால் பகுதியும், சட்லஜ் கங்கா நீர் நிலைகள் கொண்ட பகுதி இந்தியாவின் பாரம்பரியம் கொண்ட பகுதியாகும். இந்தப பகுதியிலிருந்து 1,300 கி.மீ. தூரம் உரிமை கொண்டாடுகிறது.
1962-ல் நடந்த சண்டைக்கு பின் சீனா சட்டவிரோமாக அருணாசல பிரதேசத்தில் 20,000 ச.கி.மீ இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட லடாக் பகுதியில் 38,000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட அக்சியாசின் பகுதியையும், 1963-ல் பாகிஸ்தான் சீனாவிற்கு தானமாக கொடுத்த 5,180 ச.கி.மீ தூரத்தையம் ஆக்கிரமித்துக் கொண்டது. இவ்வாறு சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கொண்டது மட்டுமில்லாமல் இந்த பகுதிகளுக்கு உரிமை கொண்டாடுவதுடன், கிழக்கு பகுதிக்கும் மத்திய பகுதிக்கும் தடையில்லா போக்குவரத்தை உருவாக்கவும், திபெத்தின் உரிமையை நிலைநாட்டவும், கண்கானிக்கவும் மேற்படி சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்ட பகுதி சீனாவிற்கு தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவும், சீனாவும் பல முறை நடத்திய பேச்சு வார்த்தைகளில் மத்திய பகுதியின் எல்லைகளைப் பற்றியே நடந்த்தே தவிர கிழக்கு , மேற்கு பகுதியின் எல்லைகளைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடத்த படவில்லை.
சீனா இந்த எல்லைக் கோட்டை அங்கீகரிக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டாலும், 1914 முதல் 1947 வரை சீனாவின் எந்த அரசும், எல்லைப் பிரச்சினையை எடுக்கவில்லை. 1954 வரையும் கூட சீன எல்லைப் பிரச்சினையை எங்கேயும் எழுப்பவில்லை என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். 1954 மற்றும் 1956-ல் இந்திய பிரதமர் நேருவும், சீன அதிபரும் நடத்திய பேச்சு வார்த்தைகளில், சீனா தரப்பில் வெளியிட்ட பல்வேறு விதமான கருத்துக்களை புறக்கனிக்கும் விதமாக கூறிய வார்த்தையை கவனிக்க வேண்டும், “ Chinese maps not as representive Peiping’s “Claim” என்பதாகும். ஆனால் எல்லைப் பிரச்சினையை மையப்படுத்தியே 1962-ல் இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்த்து. 1986-ல் இந்திய பாராளுமன்றத்தில் அருணாசல பிரதேச மசோதா கொண்டு வந்த போது கூட, சீனா பிரச்சினையை எழுப்பவில்லை. 1954-ல் இந்தியா திபெத் பகுதி சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொண்ட போது கூட, சீன அதிபர் சூயென் லாய், எல்லைப் பிரச்சினையை எழுப்பவில்லை. 1954ல் நடந்த மாநாட்டில் கூட சீனா மெக்மோகன் கோடு பற்றிய எல்லைப் பிரச்சினையை எழுப்பவில்லை. 1960-ம் வருடம் ஏப்ரல் மாதம் சீனாவின் அதிபர் சூயென் லாய் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். அப்போது துர்க்கா தாஸ் என்பவர் பின்வருமாறு எழுதினார் “Nehru was anxious to get China to accept the McMahon Line as the Northern boundary of NEFA and Chou was willing to do so.”
1959ம் வருடம் மார்ச்சு மாதம் 10ந் தேதி திபெத்தில் சீனாவுக்கு எதிராக கலவரம் வெடித்தது, ஏப்ரல் மாதம் 18ந் தேதி சீனாவை எதிர்த்து தலாய் லாமா ஒரு அறிக்கை வெளியிட்டார், திபெத்தின் 14வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தவுடன் தான் சீனா எல்லைப் பிரச்சினையை எழுப்பியது என்பதை மறந்து விடக் கூடாது. இதற்கு முன்பாகவே சீனா திபெத்த்தை ஆக்கிரமித்த போது ஐ.நா சபையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். இந்தியாவின் ஐ.நா.சபையின் பிரதிநிதியிடம் சீனாவின் ராணுவ அதிகாரிகளான Chang Kuo – hua, Tan Kuan-San இருவரும், ” அமைதியான முறையிலேயே திபெத்தை ஆக்கிரமிப்போம், எங்களது படைகள் Changtu வரையில் மட்டும் நிலைநிறுத்தப்படும் எக்காரணத்தை கொண்டு லாசா (Lhasa ) வரை செல்ல மாட்டோம் என உறுதி கொடுக்கிறோம் என்றார்கள், இந்த வாக்குறுதிக்கு மாறாக தங்களது படைகளை லாசா வரை ஆக்கிரமித்தார்கள் என்பதை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.
1954-ல் ஏற்றுக் கொண்ட பஞ்சசீல கொள்கைக்கு மாறாக , இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்தது. குறிப்பாக பஞ்ச சீல கொள்கையில் முதல் இரண்டு அம்சங்களை சீன மீறியுள்ளது (1) mutual respect for each other’s territorial integrity and sovereignty; (2) mutual non-aggression; இந்த போக்கு நம்பிக்கை துரோகம் என்பதாகும். 1962-ல் நடந்த இந்தியா சீனா போரின் போது சீனா கைப்பற்றப்பட்ட பகுதி, சுமார்38,000 ச.கி.மீ தூரம் கொண்டு பகுதியாகும். இதில் முக்கியமான பகுதி அக்சைய் சின் என்ற பகுதியாகும். இன்று வரை சீனா ஆக்கிரமித்த பகுதி என்பதை சீனா உணரவில்லை, சீனாவிற்கு துதிபாடிகள் கூட இச் செயலை வன்மையாக கண்டிக்கவில்லை.
சீனாவின் குள்ள நரித்தனம்
1962-ல்நடந்த போருக்கு பின்னர் சீனா தந்திரமாக பல பகுதிகளில் தங்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. 1962 போருக்கு பின் அருணாசல பிரதேசத்தில் Zemithang வடக்கு பகுதியில் 60 கி.மீ தூரத்தில் உள்ள Thagla Ridge, Namka Chu, Sumdrong Chu ஆகிய பகுதிகள் 1986லிருந்து சீனாவின் வசம் உள்ளது. Bumla பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் இந்திய ராணுவம் கண்கானிப்பில் இல்லை. அந்த இடத்தில் சீன ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தில் உள்ள தின்பு ( Tingbu) என்ற பகுதியில் பாரம்பரியமாக மேய்ச்சல் நிலங்கள் உள்ள இந்தப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றி விட்டு சீனா அந்த இடத்தை தன் வசம் கொண்டு வந்துள்ளது. அருணாசல பிரதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள மேல் பகுதியில் Subansiri மாவட்டத்தில் உள்ள Asa-Pila-Maya என்ற பகுதி இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பில் தற்போது உள்ளது. அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Dibang மாவட்டத்தில் Athu-Pupu பகுதியில் 2006லிருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி உள்ளது. மத்திய அருணாசல பிரதேசத்தில் அமைந்துள்ள Kurung Kumey மாவட்டத்தில் 1962க்கு பின்னர் ஒன்பது ராணுவ முகாம்கள் இந்திய ராணுவத்திடம் இருந்தது, தற்போது இரண்டு முகாம்களை தவிர மீதமுள்ள ஏழு முகாம்களும் சீன ராணுவ வசம் உள்ளது. இவ்வாறு 4,057 கி.மீ எல்லை நெடுங்கிலும் சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்த பகுதிகள் ஏராளமாகும்.
அருணாசல பிரதேசத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தது போல், லடாக் பகுதியிலும், ஜம்மு-காஷ்மீர் பகுதியிலும் சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமில்லாமல், ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளையும் செய்து வருகிறது. இதே காலகட்டத்தில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் கட்டமைப்பு பணிகளை செய்ய முற்பட்டால், சீனா தடுப்பதும் மட்டுமில்லாமல் கட்டுமான பணிகளை சீர் குலைப்பதிலும் ஈடுபடுகிறது. லடாக் பகுதியில் உள்ள Demchok வில் 2009-ம் உள்ளுர் நிர்வாகம் நான்கு கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. ஆனால் சீனா தனது ராணுவ பலத்தை கொண்டு பணிகள் நடைபெறாமல் தடுத்துவிட்டது. இதைப் போலவே ரூ3.75 கோடி செலவில் விவசாயத்திற்காக கால்வாய் கட்டும் பணியை கூட துவங்க விடாமல் சீனா செய்து விட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இந்திய ராணுவத்தினர் தடுக்கவில்லை என்ற கோபம் கொண்டுள்ளார்கள். 2004-2005-ம் ஆண்டு சீனா மேற்படி இடங்களில் தங்களது வசதிக்காக சாலைகள் போட்டதும், கால்வாய்கள் வெட்டியதும் உலகறிந்த விஷயமாகும். இதை இந்திய அரசு தடுக்கவில்லை. 1957 அக்டோபர் மாதம் முதல் 1958 பிப்ரவரி மாதம் வரை சீனா லடாக் பகுதியில் குர்னக் (Khurnak Fort ) கோட்டையை கைப்பற்றியது மட்டுமில்லாமல், லடாக் பகுதியிலிருந்து அக்சாய் சின் பகுதிக்கு செல்லும் விதமாக Rudok to Tibet, Sugat Qarawal to Sinkiang வரை சாலைகள் அமைத்தது.
1954-ம் ஆண்டு ஜீலை மாதம் பஞ்சசீல உடன்பாடு கையெழுத்தான மூன்று மாதத்திற்குள் சீனா உத்திரபிரதேச மாநிலத்தின் எல்லையில் உள்ள பாராஹூட்டி என்ற இடத்தில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டதிற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதற்கு சீனா தெரிவித்த காரணம் வித்தியாசமானதாகும், தலாய் லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததற்காகவே இந்த கண்டனம் என தெரிவித்தாலும், உண்மையான காரணம் வேறுமாதிரியானது. ஏன் என்றால் ஊடுருவல் நடைபெற்ற வருடம் 1955, ஆனால் தலாய் லாமா அடைக்கலம் வந்த ஆண்டு 1959 மார்ச்சு மாதம், ஆகவே 1914-ல் ஏற்பட்ட சிம்லா உடன்பாடிக்கைக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்காமல், சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சீன இந்திய பகுதிக்குள் ஊடுருவலை செய்து வந்த்து. இது போல் சீனா கள்ளத் தனமாக ஊடுருவல் செய்த செயல்களை பட்டியலிட்டால் கணக்கில் அடங்காது.
1967-ல் மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு நக்ஸல்பாரி இயக்கம் துவங்கிய போது, சீனா அதை முழுமையாக ஆதரித்த்து, சீனாவின் அதிபர் மாசே துங் விடுத்த செய்தி” இந்தியா முழுவதும் வசந்தம் இடி ” (spring Thundr over India ) என்றார். இந்த இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்தது சீனா. 1967-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி நாது லா வடக்கு பகுதியில் ( Nathu La) இந்திய ராணுவத்தின் எறி குண்டு வீசும் பிரிவினர் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது, ஐந்து நாட்கள் நடந்த இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 62 பேர்கள் கொல்லப்பட்டார்கள். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 1ந்தேதி சிக்கிமின் சோழ அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள பெரிய பாறையில் ரோந்து பணி செய்து கொண்டிருந்த கூர்க்கா பட்டாலியன் ராணுவத்தினர் மீது சீன ராணுவம் நடத்திய சண்டையில் 21 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை போலவே தொடர்ந்து இந்தியா ராணுவத்தின் மீது சீனா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1981ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1987-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்திய மற்றும் சீனாவும் நடத்திய எட்டு முறை பேச்சு வார்த்தையில் எல்லைப் பிரச்சினைக்கு இறுதி முடிவு எடுக்க முடியாமல் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர், சீனாவின் அத்துமீறல் நடந்த போது, ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது எதிர்ப்பை முறையாகவும் திடமாகவும் காட்டவில்லை. அருணாசல பிரதேசத்தை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா கொடுக்க சீனா அரசாங்கம் மறுப்பு தெரிவித்த்து, மறுப்பிற்கு கொடுக்க காரணம், அருணாசல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி, எனவே சீனாவின் ஒரு பகுதியில் உள்ளவர்களுக்கு விசா தேவையில்லை என தெரிவித்தனர். ( ) 2008-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் அருணாசல பிரதேசத்திற்கு விஜயம் செய்த போது தங்களது கடுமையான எதிர்ப்பை காட்டினார்கள். இந்தியாவின் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனி அருணாசல பிரதேச எல்லைப் பகுதிக்கு சென்ற போது சீனா ராணுவத்தினர் மிரட்டும் விதமாக தங்களது துப்பாக்கி தூக்கி காட்டினார்கள். 2009 அக்டோபர் மாதம் ஆசிய டெலவல்ப் மென்ட் வங்கி அருணாசல பிரதேசத்திற்கு கொடுக்க முன் வந்த கடனை கொடுக்காமல் தடுத்தது சீனா அரசாங்கம். பின்னர் அமெரிக்காவின் உதவியுடன் கடன் பெற முடிந்தது.
2010-ல் 228 முறை சீனா லடாக் பகுதியில் ஊடுருவல் செய்துள்ளது. 2011-ம் ஆண்டு சீனா எல்லைக் கோட்டு பகுதியில் 180 முறை ஊடுருவல் செய்திருக்கிறது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் வரை 400 முறை இவ்வாறு ஊடுருவல் செய்திருக்கிறது. ( ஆதராம் மெயில் டூ டே 16.10.2012) 2012-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 3ந் தேதி இந்திய எல்லைக்குட்ட Chumar பகுதியில் உள்ள சாலையை செப்பனிட்டுக்கு கொண்டிருக்கும் போதே சீன ராணுவத்தினர் தடுத்தது மட்டுமில்லாமல் இப் பகுதியின் உரிமையை பற்றிய கேள்விகளை எழுப்பினார்கள். அப்போது கூட இந்திய அரசாங்கம் சீனாவிற்கு தக்க பதில் கொடுப்பதற்கு பதிலாக, இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது, இதற்கு மாறாக கட்டுப்பாட்டுடன் பொறுமையாக இருக்க வேண்டும் என உத்திரவிட்டது. 2013ம் ஆண்டு இதுவரை 100 தடவைக்கு மேலாக சீனா ராணுவம் தனது எல்லையை மீறி புகுந்துள்ளது. இந்திய ராணுவத்தினரின் வரைப் படத்தை அழித்தும், இந்திய பகுதியில் உள்ள பாறைகளில் சீனா என்ற வாசகத்தை ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் எழுதியதையும் மறந்து விடக் கூடாது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே பல முறை சீனா ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் ஊடுருவல் செய்திருக்கிறார்கள்.கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும், சீனாவின் ஊடுருவலை இதுவரை தடுக்க இயலவில்லை. லடாக் எல்லைப் பகுதியில் மட்டுமில்லாமல், தற்போது சீனா இந்திய கடல் பகுதியிலும் தங்களது ஊடுருவல்களை செய்து வருகிறது. நீரில் முழ்கிய பொருள்களை ஒலி அலைகள் கொண்டு அறியும் முறையில் இந்திய பெருங் கடல் பகுதியில் சீனாவின் 22 சப்மெரின்கள் இருப்பதை இந்தியாவும், அமெரிக்காவும் கண்டு பிடித்தன. இந்திய கப்பற் படைக்கு தொல்லைகள் கொடுப்பதற்காகவே சீனா தங்களது சப்மெரின் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே 2012 ஆகஸ்ட் மாதம் இம் மாதிரியான ஆய்வில் தெரியவந்த்து.
2012-ம் வருடம் மே மாதம் 19ந் தேதி அருணாசல பிரதேசத்தில் உள்ள Asaphila எனுமிடத்தில் இந்திய ராணுவத்தினரின் ரோந்து குடிசைகளை சீனா ராணுவத்தினர் நாசம் செய்தார்கள். 2003-ல் சிக்கிம் இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டதிற்கு சீனா தனது முழு சம்மதத்தையும் தெரிவித்த பின்னர், 23 சீனா ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினருடன் நேருக்கு நேர் மோதல் போக்கை உண்டாக்கினார்கள். இதை போலவே சிக்கிமின் கிழக்கு பகுதியில் உள்ள Batang La என்ற அணையிலிருந்து இந்திய ராணுவத்தினர் தண்ணீர் எடுக்க கூடாது என சீன ராணுவத்தினர் தடுத்தார்கள். T-16 யுத்த டாங்க் சிக்கிம், லடாக், அருணாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் சீனா நிறுத்தி வைத்துள்ளது.
சீனாவின் நீர்ப் போர் பிரகடனம்
நீர் மின் திட்டங்களில் சீனா எப்போதும் புதிராகவே நடந்து கொள்கிறது. பிரம்மாண்டமான திட்டங்களைக் கூட ஓசையின்றி நிறைவேற்றுவதுதான் அதன் வழக்கமே. சீனாவுக்கு கங்கை, சிந்து, பிரம்ப்புத்திரா ஆற்றங்கரைப் புகுதிகளை ஆண்டு கொள்ளும் உரிமையை திபெத் தந்திருக்கிறது. சீனாவிலிருந்து 10 முக்கிய ஆறுகள் உற்பத்தியாகி 11 நாடுகளுக்குச் செல்கின்றன. இந்த உரிமையை பயன்படுத்திக் கொண்டு சீனா ஒரு வேளை நதியைத் திருப்பி விடுவது மட்டும் நடந்து விட்டால் அது இந்தியா பாகிஸ்தான், வங்க தேசம், நேபாளம், ஆகிய நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக மாறிவிடும். 1997-ல் சர்வதேச நீராதாரங்களை போக்குவரத்து தவிர்த்த இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது குறித்த ஐ.நா.சபையின் தீர்மானத்தை எதிர்த்து சீனா உள்ளிட்ட 3 நாடுகள் வாக்களித்தன. சீனா எப்போதும் வெளிப்படையாக சொல்வதில்லை என்ற விமர்சனமும் அவ்வப்போது உலக நாடுகள் மத்தியில் எழும், சீனா எப்போதும் தனது நீர் மின் பொறியியல் திட்டங்களைப் புதிராகவே வைத்திருக்கிறது. சீனா தகவல்களை கூட அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில்லை, பார்வையிட கூட அனுமதிப்பதோ கிடையாது. மெகா திட்டங்களை கூட ஓசையின்றி செயல்படுத்துகிறது என பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்கிறது. இந்நிலையில் இந்தியா சீனாவுடனான பிரம்மபுத்திரா நதி பங்கீடு எவ்வாறு முடியும் என்பது தெரியவில்லை. ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா பயணிகளுக்கு தனி விசா, அருணாசலப் பிரதேச அந்தஸ்து ஆகிய விஷயங்களில் நாம் சீனாவை எவ்வளவோ பார்த்தாகி விட்டது, எனவே பிரம்மபுத்திரா விஷயத்தில் சீனாவை ரொம்பவே நம்ப வேண்டியதில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.
1950லிருந்து சீனா தொடர்ந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவல் செய்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள Shipkila பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் புறங்களிலும், கார்வால் பகுதியில் Barahoti இடங்களிலும், லடாக்கின் எல்லைகளிலும் ஊடுருவல் செய்வதுடன், அவ்வாப்போது துப்பாகி சண்டையும் நடக்கிறது. அருணாசல பிரதேசத்தை முழுமையாக மீட்க வேண்டி இந்தியாவின் கவனத்தை திசை திருப்பவே இவ்வாறு செய்கிறது. பேச்சு வார்த்தையின் மூலம் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கான வேண்டும் என்று இந்தியா விரும்பினாலும், சீனா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. ஆகவே ஜப்பான் ஆளுமைக்குட்ட தீவுகளில் சீனா நுழையுமானால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை செய்த்து போல் இந்தியாவும் தனது நிலைப்பாட்டை தெளிவாக உறுதியாக தெரிவிக்காத வரை சீனாவின் அத்துமீறல் தொடர்கதையாகவே இருக்கும்.
சீனாவைப் பற்றி பல்வேறு தலைவர்களின் கருத்துக்கள்.
இதற்கு முந்தை காலங்களில் பல்வேறு தலைவர்கள் எடுத்து வைத்த கருத்தை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். 1950-ம் வருடம் அக்டோபர் மாதம் 7ந் தேதி சீனா சுதந்திர நாடான திபெத்தை ஆக்கிரமிக்க தனது ராணுவத்தை உள்ளே அனுப்பியது. இச் செயலை சோவியத் அரசும் ஆதரவு தெரிவித்த்து, இந்நிலையில் டிசம்பர் மாதம் 6ந்தேதி பாராளுமன்றத்தில் நேரு இதை தெரிவித்த போது டாக்டர் சியமா பிரசாத் முகர்ஜி கூறியது ” It is no use our trying to gloss over things because these are matters which affects not only the people of Tibet, but also the security of India. “ இது இன்று வரை உண்மையாகவே இருக்கிறது. 1950-ம் வருடம் நவம்பர்மாதம் 7ந் தேதி உள்துறை அமைச்சர் சர்தார் வல்லாய் பட்டேல் நோய்வாய் பட்டிருந்த சமயம் நேருவிற்கு கடிதம் எழுதினார் அதில் “ We have to consider what new situation now faces us a r result of the diapperance of Tibet, as we knew it, and the expansion of China almost up to our gates “. என குறிப்பிட்டார். நேரு பாராளுமன்றத்தில் இந்தியா அக்சியசின் பகுதியில் ஒரு இன்ச் இடத்தை கூட விட்டுத்தராது என்றார் உடனடியாக கிருபளானி அவர்கள் “ How many miles make one inch ?” என்று வினவினார். இந்திய அரசு பனிப்போரில் அமெரிக்காவை ஆதரித்து அமெரிக்காவுடன் உறவு கொண்டு திபெத் விடுதலைக்கு உதவி கோர வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயன் கோரிக்கை வைத்தார். திரு திம்மையா தன் படைகள் சீனாவுடனான போருக்கு ஆயுத்தமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார், ஆனால் சீனாவிற்கு ஆதரவாக திரு.கிருஷ்ணமேனன் இருந்ததை தற்போது எவரும் குறிப்பிட்டு கூறுவதில்லை.
1960-ம் ஆண்டு பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் திரு.ராஜேந்திர பிரசாத் அவர்கள் தனது சொந்த மாநிலமான பீகாரில் மாணவர்களிடையே எதிர்ப்பு மற்றும் கோபம் பற்றி பேசும் போது ” இந்த இளைஞர்கள் சீன ஆக்கிமிப்பிலிருந்து இந்தியப் பகுதியின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்க வேண்டும் என விரும்புகின்றனர். அரசின் எந்த்த் தவறான அல்லது பலவீனமான நடவடிக்கைகளையும் அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.” என்றார் ( ஆதாரம் இந்திய வரலாறு காந்திக்கு பின் ஆசிரியா ராமச்சந்திர குஹா பக்கம் 483) மேலும் 1960 ஜனவரி கடைசி வாரத்தில் ஜனசங்கத்தின் தலைவர் விடுத்த கோரிக்கை தேசத்தின் சொந்த நலன்களும் சுய ம்ரியாதையும் இந்திய மண்ணை சீன ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க விரைவான சக்தி வாய்ந்த நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும். 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மற்றும் அக்டோபர் மாத மோதல்களுக்கு பிறகு சௌ என் லாய் இருதரப்பினரும் கிழக்கே மக்மோஹன் கோட்டுக்கு 20 கிலோமீட்டர் அப்பாலும், மேற்கே அப்போதைய கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பாலும் சென்றுவிட வேணட்டும் என்று நேருவிற்கு கடிதம் எழுதினார். இக் கடித்த்தின் மூலம் கூட எல்லைப் பிரச்சினையை தீர்த்த பின்னர் படைகள் வாபஸ் பெறலாம் என்பதை கூற வில்லை.
அன்பார்ந்த ஸ்ரீ சரவணன் மிக சிக்கலான பாரத சீன எல்லை ப்ரச்சினையை தள வாசகர்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.
எப்போதும் போதில்லாது சில எழுத்துப்பிழைகள் இந்த வ்யாசத்தில் காணக்கிட்டுகின்றன.
\\கிழக்கு பகுதி, மத்திய பகுதி, மேற்கு பகுதி, இதில் கிழக்கு பகுதி என்பது சிக்கிம் முதல் பர்மா வரை உள்ள எல்லைப் பகுதியாகும். 1890ல் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் எல்லைக் கோடு நிர்ணயக்கப்பட்டது. இது 1914-இல் வரையறுத்த எல்லைக் கோடு. காஷ்மீரிலிருந்து இன்றைய மியன்மர் வரை உள்ள எல்லைக்கோடே இந்திய அரசின் சட்ட பூர்வ இந்திய- சீன எல்லைக் கோடு. \\
மேற்கண்ட வாசகத்திலிருந்து எந்த எல்லைக்கோடு எப்போது நிர்ணயிக்கப்பட்டது என்பதில் தெளிவு கிட்டவில்லை. தெளிவு படுத்தவும்.
சீனப்போர் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டது.
1962ம் வருஷத்திற்குப் பின் காங்க்ரஸ் சர்க்கார் வசம் தேசம் இருந்த போதெல்லாம் நாம் நம்முடைய நிலப்பரப்புகளை இழந்து வந்துள்ளோம் என்பது வ்யாசத்தில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த எதிர்க்கட்சியும் இது பற்றி வாய் கூட திறக்காததும் காசுக்கு கூத்தடிக்கும் ஹிந்துஸ்தான ஊடகங்களும் இது பற்றி அடக்கி வாசிப்பதும் நிண நாற்றமெடுக்கும் விஷயங்கள்.
கம்யூனிஸ பயங்கரவாதிகள் ஒவ்வொரு முறை சீனா நமது நிலப்பரப்பை ஆக்ரமிக்கும் போதும் பூசி மொழுகுவதும் குழப்பவாதங்களை முன்வைப்பதும் தொடர்கதைகள்.
காந்தியடிகளின் செல்லப்பிள்ளையான நேரு மாமா அவர்கள் 1962ம் வருஷ யுத்தம் பற்றிப் பேசியது :-
I remember many a time when our senior generals came to us, and wrote to the defence ministry saying that they wanted certain things… If we had had foresight, known exactly what would happen, we would have done something else… what India has learnt from the Chinese invasion is that in the world of today there is no place for weak nations… We have been living in an unreal world of our own creation.”
The statement was made by then Indian Prime Minister Jawaharlal Nehru in Rajya Sabha, in 1963, after India’s humiliating defeat at the hands of China. It is an eye opening .
ஹிந்துஸ்தானம் 1962ம் வருஷ யுத்தத்தில் துவண்டதற்குக் காரணம்:-
The most significant reason of our defeat is that the political leadership of that time failed India. It was not Chinese betrayal, but then Prime Minister Jawaharlal Nehru and his Defence Minister V K Krishna Menon’s arrogant belief that they would solve the crisis through diplomacy and that China would not dare attack India despite the latter’s ‘Forward Policy’.
This policy and the duo’s assumption of Chinese in-action in event of crisis was firmly supported by then Intelligence Bureau Director B N Mullick, who, according to some analysts, was also responsible for misleading the political leadership.
நேருமாமா, க்ருஷ்ணமேனோன் மற்றும் பி.என் மல்லிக் போன்றோர் கம்யூனிஸ பயங்கரவாதிகள் மறைமுகமாகக் கொண்டாடும் எத்தர்கள்.
யுத்தம் பற்றி விசாரணை செய்து அறிக்கையளித்த ஹேண்டர்ஸன் – பகத் ரிபோர்டை இன்னமும் பாரத சர்க்கார் ரகசிய ஆவணமாகவே வைத்துள்ளது.
சமீபத்தில் அமேரிக்காவும் சீனாவுக்கு சலாம் போடும் போக்கில் இறங்கியுள்ளது.
இப்போதாவது ஹிந்துஸ்தானம் விழித்துக்கொண்டால் இருப்பதையாவது காத்துக்கொள்ள முடியும்.
கண்மூடித்தனமாக உள்ளிருந்து தாக்கும் த்ருதராஷ்ட்ரர்களும் கம்யூனிஸ சகுனி மாமாக்களும் ஹிந்துஸ்தானத்தில் புழங்கும் போதிலேயே பாரத யுத்தத்தை நிகழ்த்த வேண்டிய கட்டாயம் பார்த்தனுக்கு உள்ளது.
பாரத யுத்தத்தில் நற்சக்திகளுக்கு வெற்றியும் அசுர சக்திகளுக்குத் தோல்வியும் நிச்சயம்.
any thousand year india was colonised by mogal and two hundred years by british up coming hundred years americas term after china will take control by india because india dont have equal rights and rule of law it has differ by majority and ninority for eg nasser madhani is jail in several years by fake charges but pravin thoghadia freely road to spread hatreat because of he was hindu community and madhani is minority as many innocent muslim youth put behind the bars in fake cases in india no body questining about that and most of indian rulars get ashirwad from sangh parivar gurus and like balthackrey kind of criminals get national flag on their body this issue will united nations america and britain and european union never addressing because they dont get any benefit but this thing happen in sudan suddenly every body shouting so better that british raj in india or america should take it as colony winsten cherchill told long time before in british parliment that why india should not get freedom he answer the question if we give the freedom to india majority hindus kill minority muslims that what happen in gujarat assam no body acting according to law every body get part time sangh parivar job so china should be support indian dalits and muslims to fight this kind of hindu facism oter wise india may be come go danger zone like tibet
ஆங்கிலத்தில் பதிவு இட்டுள்ள நபருக்கு , முதலில் தமிழில் பதிவு இட கற்றுக்கொள். நீ எழுதியது அனைத்தும் பொய்க்குற்றச்சாட்டுக்கள். ஏனிந்த பிழைப்பு அப்பா? நீ வேறு ஏதாவது செய்யலாமே ?கோவையில் நூற்றுக் கணக்கானவரை ஊனமுற்றோராக்கியும் சுமார் 100 பேரை பினமாக்கியும் நடந்த 1998- பாதக வெடிகுண்டு திட்டத்தில் மதானியின் பங்கு என்ன என்பதை நீ மூடி மறைத்து எழுதுவதன் உள்நோக்கம் என்ன? கோத்ரா ரயில் பெட்டியை முஸ்லீம்கள் கொளுத்தி தான் தீவிரவாத, வன்முறை தாக்குதல்களுக்கு வித்திட்டு ஆரம்பித்து வைத்தனர். உன்னைப்போல பங்களா தேசத்திலிருந்து துரத்தப்பட்டு , அடித்து விரட்டப்பட்டு அனாதையாக இந்தியாவுக்குள் புகுந்த பல கோடி நாய்கள் இன்று இந்திய அமைதியை குலைத்து சதிச்செயல்களில் ஈடுபட்டு அஸ்ஸாமிலும் இதர பகுதிகளிலும் வன்முறைகளை பரப்புவதை நாடு அறியும். பிற மத நம்பிக்கைகளையும், பிற மதத்தினரையும் அழித்துவிட வேண்டும் என்பது ஆபிரகாமியரின் திட்டம். அது என்றுமே நிறைவேறாது. பாஹியான் புத்தர் சிலையை வெடி வைத்துப்பிளந்த உங்கள் தீவிரவாத முகம் சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் நன்கு தெரியும். இனியும் முகமூடிகள் உதவாது. ஈரானுக்கு அல்லது ஈராக்குக்கு ஓடு. அங்கு நடக்கும் சன்னி-ஷியா சண்டையில் நீ தியாகி என்று சொல்லி இன்னும் பல பேரை கொன்று குவிக்கலாம். உன் போன்றோருக்கு அதுதான் சரி. நீயும் அங்கேயே சமாதி ஆகலாம். உன்னைப்போலவே தமிழ் நாட்டிலும் வெள்ளையன் வெளியேறியபோது ” போகாதே போகாதே என் கனவா என்று பொட்டை புலம்பல் புலம்பிய தேசத்துரோகிகள் சிலர் இருந்தனர்- அவர்களின் வாரிசுகளும் இன்று பெரியார் திடலில் பரிசுத்த ஆவியில் வெந்த இட்டலி இடியாப்பம் கொழுக்கட்டை விற்கும் மதமாற்ற வியாபாரம் செய்து பகுத்தறிவு பணம் சம்பாதிக்கின்றனர். நீயும் அவர்களுடன் சேர்ந்து உன் மானத்தை விற்கலாம். உனக்கு தேவை அது தானே.
முதலிராஜ் என்பவர் முஸ்லிம்கள் அனைவரும் புடம் போட்ட தங்கம் போலவும் இந்துக்கள் அனைவரும் “இடி அமீன்கள்” போலவும் தனது butler english ல் எழுதி தள்ளி இருக்கிறார். இவர் என்ன முஸ்லிமா அல்லது கிறிஸ்துவரா? இல்லை இரண்டும்கெட்டானா?. முஸ்லிம்களுக்காக ரொம்பவும் வாதாடுவதால் முஸ்லிம் என்றே எடுத்துகொள்வோம். Secularism தான் இந்திய நாட்டின் பெருமிதமான கொள்கை என்று முஸ்லிம்கள் உள்பட அனைத்து pseudo secularist கள் கூறுகின்றனர். மதிமுக தலைவர் ஒரு முறை “மத சார்பின்மை கொள்கை காரணமாக தான் வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் செல்லும்போது “தலைநிமிர்ந்து” செல்லமுடிகிறது” என்று சொன்னார். அப்படியானால் இந்தியாவிற்கு வரும் secularism கடைபிடிக்காத அராபிய நாட்டு தலைவர்கள் எல்லாம் “தலைகுனிந்து” தான் வருகிறார்களா? சரி, அப்படிப்பட்ட அற்புதமான கொள்கையினை பக்கத்து பாகிஸ்தான், பங்களா தேஷ், அண்டை நாடுகளான ஆப்கன், சௌதி, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலும் அதை கொண்டு வர நீங்கள் சிப்பாரிசு செய்யலாமே!! எகிப்து நாட்டில் பிறந்து அமேரிக்க நாட்டில் வாழும் ஒரு கிறிஸ்தவன் எடுத்த “Innocence of Muslims ” என்ற படத்துக்கும் இந்துவுக்கும் என்னயா சம்பந்தம்? இந்து படம் எடுக்க சொன்னானா? கதை வசனம் எழுதினானா? Finance பண்ணினானா? படத்தில் side actor ஆக நடித்தானா? சென்னை Mount Roadல் கலாட்ட செய்து இந்துகளின் Two Wheelerகளை கொளுத்தி நாயே!!!! இப்படிப்பட்ட நீ ஒரு நல்லவனா? உத்தமனா? யோக்கியனா? அமைதியின் மொத்த உருவமா? சாந்தசொருபியா? அமைதிக்கு Nobel prize வாங்கியவனா? உலகில் முஸ்லிம்கள் எங்கெங்கு majority யோ அங்கெல்லாம் atrocity தான். உலக அமைதி இன்மைக்கு காரணம் இந்த அமைதி(!!??) மதம்தான் காரணம் என்று கூறினால் நம்பமாடீர்கள். ஆனால் கீழே ஆதாரத்தோடு செய்திகளை கூறினால் நம்புவீர்களா அப்போதும் குண்டகமண்டகமாக தான் பேசுவீர்களா?
Pakistan militants attacked and killed 24 people in Quetta ——–Indian Expresas dt 16.6.13 (Page No.12)
Car bombs kill 30 across Iraq. Nearly 2000 have been killed since the start of April (Deccan Chronicle dt 17.6.13)
Baghdad blasts kill 31 shias ————Decaan HERALD dt 19-6-13 Page 14
There is terror threat to Amarnath Yatra” – Union Home Minister Sushilkumar shinde told reporters ——- Indian Express dated 20-6-13 page no.9
Seven al-Qaeda linked gunmen detonated with a pick-up truck rigged with explosives at the gate of UN compound in Somalia’s capital. Nine people were killed — Deccan chronicle 20.6.13 p 10
Fifteen people were killed and over 30 injured in bomb blast in Peshawar on Friday worshippers at a Shia madrassa —- Indian Express dated 22-6-2013.
Boko Haram opposes secular education and secular governance and seeks to impose Islamic law (= Sharia) across Nigeria . Sixteen school children and two teachers have been killed in surgent attacks on two schools by Boko Haram
40000 இந்தியர்கள் குவைத்திலிருந்து வெளிஎற்றபடுகின்றனர். —புதிய தலைமுறை வார இதழ்
முதலிராஜ் முதலான முஸ்லிம்கள் மேற்கண்ட செய்திகளை படித்துவிட்டு என்ன சொல்லபோகிரார்களோ? பழைய பல்லவியினையே பாடுவார்களோ? இந்தியாவில் இந்துக்கள் majority ஆக இருக்கும்வரைதான் இங்கு secularism இருக்கும். இன்னும் சில வருடங்களில் நிச்சயம் இந்து இனம் minority ஆக ஆகும். அப்போது அந்த secularism குப்பை கூடைக்கும் போகும்.
There is a book written by a Chinese political interpreter”The man on the right of Mao:According to him at one point Mao thought Nehru was overbearing and it became an ego clash and this aggression took place despite Zhouenlai trying to soften the issueOf course politically the North East did not have a say and the borders were not properly protected and there wereborder villages in
NEFA paid tax to otherside also to buy peace from the depredators.Thiruvengadam
பிராடு தனமா அடுத்தவன் நாட்டில் இருந்தால் அவன் முத்தமா கொடுப்பான் ? இன்னும் அடுத்த மாதத்தில் வருவார்கள் சவுதி,துபாய் லிருந்து
. அமீர் உன் வாய் கொழுப்பை கொஞ்சம் அடக்கு. ஏதோ சௌதிக்கு போனவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று நினைதுகொண்டிருக்கிறாயா? அதில் முஸ்லிம் பிராடுகளும் அடக்கம். அவங்களும் தான் வரபோகிரார்கள். குறுகிய உள்ளம் படைத்த குள்ளநரி நீ! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது ஒரு தமிழன் (இந்து) சொன்னது.
சீனாவின் கணக்கிலடங்கா
ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்றி.2012 சீன ஆக்கிரமிப்பு போதும் கூட நம் அரசு கண்டணம் தெரிவிக்க வில்லை.மாறாக நமது ராணுவத்தை பொறுமை காக்கும்படியும் எதிரி நாட்டை எரிச்சலூட்ட வேண்டாம் என்றும் உத்தரவு இட்டது.
இப்படியே அரசும் எதிர் கட்சிகளும் வாய் மூடி மவுனியாகவே இருந்ததின்
விளைவு இன்று வரை எல்லை நெடுகிலும் பல்லாயிர கணக்கான சதுர கிலோ மீட்டர் தூரத்தை சீனா அபகரித்து உள்ளது.
தற்போதைய அரசாங்கம் தேவையான அனைத்து வகையான சாதுர்யமான நடவடிக்கை மூலம் இழந்த நமது பகுதிகளை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை இந்தியர்களின் மனதில் உள்ளது.
மீடக பட வேண்டும்.
மீடகும்.
ஜெய்ஹிந்த்.