ஹிந்து சமுதாய ஒற்றுமை, சமத்துவம், சமரசம் ஆகியவற்றுக்காக உழைத்த பெரும் தேசிய தலைவர் எம்.சி.ராஜா ஆவார். தம்மை தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என தம் பெயர் குறித்து கவலையின்றி தேசத்துக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைத்து தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கும் இந்து சமுதாயத்துக்காகவும் உழைத்த உத்தம பெரியவர் அம்மகான். பச்சையப்பா கல்லூரியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இல்லாமல் ஆக்கி அனைவருக்கும் அறிவுத் திருக்கோவில்களின் கதவுகளைத் திறந்துவிட செய்தவர் பெருந்தலைவர் எம்.சி.ராஜா. அவரது 130 ஆவது பிறந்த நாள் காலகட்டத்தில் அந்த மகா பெரியவரின் பாதங்களை வணங்கி அவர் நமக்கு அளித்த சமுதாய கனவை பூர்த்தி செய்ய உழைப்பதாக உறுதி எடுக்கிறது தமிழ்ஹிந்து இணையதளம். வந்தே மாதரம்!
