நரேந்திர மோடி எனும் சாமுராய்

போருக்கு ஆயத்தமாகும் பாஜக தளபதி
போருக்கு ஆயத்தமாகும் பாஜக தளபதி

நரேந்திர மோடிக்கும் ராமாயண வாலிக்கும் ஒரு பெரும் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் அசகாய பலசாலிகள், யாராலும் நேர்மையான யுத்தத்தில் தோற்கடிக்க முடியாத சக்திமான்கள். யாருடன் எதிர்த்து போரிடுகிறார்களோ அவர்களின் பலத்தை இருவரும் பெற்று விடுவார்கள். காவிய நாயகன் வாலியை போலவே காவி நாயகன் மோடியும் அத்தகைய வரம் பெற்றவர். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தையும் சேர்த்து பெற்றுக்கொண்டு களத்தில் இருப்பவர் . தேசிய அரசியலில் நரேந்திர மோடியின் எழுச்சிக்கு முன்பு வரை அரசியல் என்பது காங்கிரஸ் செய்யும் களவாணித்தனங்களை மட்டுமே மையமாக கொண்டு சுழன்று வந்தது.  ஆனால் மோடியின் தேசிய அரசியல் பிரவேசத்திற்கு பின் அனைத்தும் மோடி மையப்படுத்தப்பட்ட அரசியலாகவும் செய்தியாகவும் மாறி விட்டது. அரசியல், மற்றும் செய்தி உலகின் மைய அச்சு மோடியை வைத்து சுழல துவங்கி விட்டது.

பில்லா என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் “ என்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஏன் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்கியது “ என்று அதைப்போலத்தான் மோடி, அவரின் அரசியல் வாழ்வு முழுக்க திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு பீகாரில் பாஜக தயவுடன் இவ்வளவு நாளும் வெற்றி பெற்று அரசு அதிகாரத்தில் இருந்த நீதிஷ்குமார், தீடீரென மதச்சார்பின்மை பேய் பிடித்து பாஜகவுடனான 17 ஆண்டு கால கூட்டணியை முறித்து கொண்டார். அனைத்து பத்திரிக்கைகளும், ஆங்கில செய்தி ஊடகங்களும் ஏதோ நிதிஷ்குமார் அடுத்த பிரதமர் என்ற அளவுக்கு பேசத்துவங்கி விட்டன. மூன்றாவது அணி ஏற்பட்டு அது ஆட்சியை கைப்பற்றி விடும் என்பது போன்ற புது உளறல்களை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மோடிக்கு இது பெரும் பின்னடைவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவற்றை எல்லாம் பொய்பிக்க இருக்கிறார் மோடி எனும் சாமுராய். களத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது போர் வெற்றியை தீர்மானிப்பதில்லை, எத்தனை பேர் உணர்வோடும், வீரத்தோடும் போராடுகிறார்கள் என்பது தான் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாகும்.

மோடியை தனிமைப்படுத்துவது தான் இந்திய அரசியலுக்கு நல்லது என்கிறார் நிதிஷ் . ஆனால் தன்னந்தனியாக வென்று வாகை சூடும் அயராத சாமுராய் ஆக விஸ்வரூபம் எடுப்பார் மோடி. பலமான எதிரிகளிடம் மோதும் போது தான் அபாரமான பலமுள்ளவனாக மாறுவது வீரர்களுக்கு இயல்பு. சோதனைகளை சாதனைக்கு உரிய களமாக மாற்றுவது சரித்திர நாயகர்களுக்கு உரியது . நாட்டை சீரழிக்கும் காங்கிரஸ் அரசு, அதன் அயல் நாட்டு தலைமையின் ஆபத்தான செல்வ வளம், கிறிஸ்த்தவ எண்ணிக்கை பலம்,. இந்தியாவை துண்டாடத்துடிக்கும் துரோகிகளுடனான உறவு. அந்நிய சதிகள், கம்யூனிஸ விஷ வித்துக்களின் வதந்தி பிரச்சாரம், தீவிரவாதிகளின் பயம் மோடி வந்தால் நம்மால் வாலாட்ட முடியாதே என்பதற்காக பூணும் மதச்சார்பின்மை வேடம். அயல் நாடுகள் சுயமரியாதையுள்ள , சுய அறிவுள்ள, தேசபக்தியுள்ள சிந்திக்க தெரிந்த வலுவான தலைமை அமையக்கூடாது என்பதற்காக தங்களின் முழு பலத்தையும் மோடிக்கு எதிராக பிரயோகிக்கின்றன.  சொந்த சகோதரர்களுக்குள் பிரிவினையை விதைத்து நாட்டை நாசமாக்க விளையும் அந்நிய சக்திகள், அதற்கும் பலியாகும் சில அப்பாவிகளையும் உள்ளடக்கியுள்ள படையை கொண்டு போருக்கு புறப்படும் இந்த வீரனுக்கு துணை நிற்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை .

அகண்ட பாரதத்தை நோக்கி ...

அகண்ட பாரதத்தை நோக்கி …

மோடியின் வாழ்க்கை முழுக்கவே ஏராளமான சோதனைகளை சாதனைகளாக மாற்றிய நிகழ்வுகள் தான். மாபெரும் வீரர்கள் வரலாற்றில் அடித்தட்டிலிருந்து சில நேரம் உருவாகி விஸ்வரூபம் எடுப்பார்கள் .  அடித்தட்டு மக்களின் கனவு, அவர்களின் வலி இவற்றை உணர்ந்துள்ள ஒரு தலைவனுக்கு இந்த தேசத்தின் நிலை, அதன் பாரம்பரிய பெருமை, அயல் தேசங்களின் அச்சுறுத்தல்கள், அபாயங்கள், சதிகள் பற்றிய அறிவும், தெளிவும் இருந்து அதை தீர்க்கும் ஞானமும், மூத்தோர்களின் ஆசியும் உள்ள ஒரு தனித்தன்மையான தலைவனாக உருவெடுக்கிறார் மோடி. 1950 செப்டம்பரில் மிக சாதாரண விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார். வறுமையை உரமாக கொண்டு வளர்ந்தார். தகப்பனார் மற்றும் சகோதர்ர்க்கு உதவியாக தேனீர் டம்ளர்களை கழுவி வைக்கும் சாமான்யனாக இருந்து இன்று பாரதத்தை வழி நடத்தும் அளவுக்கு தன் உழைப்பாலும், முயற்சியாலும் முன்னெறி இருக்கிறார். பள்ளி பருவத்திலேயே இந்திய பாகிஸ்தான் போரின் போது, ராணுவ வீரர்களுக்கு சேவையாற்றி முன்மாதிரியான வாழ்க்கையை துவங்குகிறார். எம்.ஏ. அரசியல் படிக்கிறார். அரசியல் தத்துவங்கள் பற்றி ஆழமாக கற்கிறார். ஆர்.எஸ்.எஸ் ஸின் தன்னலமற்ற தேச சேவையில் இணைத்து கொள்கிறார். இந்து சமய அறத்தை முன்னிறுத்தும் மாணவ சேவை அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷித்தில் பங்கேற்று தன்னை செதுக்கி கொள்கிறார்.

 

modi0061967ல் குஜராத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்ட போது இரவு பகல் பாராது சேவை செய்கிறார், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் . இதற்கு உரமாக இருந்து கை கொடுத்தனர் அவரின் சக ஏபிவிபி தொண்டர்கள். கல்லூரியில் படிக்கும் போதே நெருங்கிய சங்க தொடர்பில் இருந்த மோடி . தன் கல்லூரி படிப்பிற்கு பிறகு சங்கத்தில் பிரச்சாரகராக தன்னை அர்ப்பணித்து கொள்கிறார். பிரச்சாரக்குள் எனப்படுபவர்கள் ஒரு ரிஷியை போல வாழ்பவர்கள். மிக்க்குறைந்த உணவு, மற்றும் உடை மட்டும் கொண்டு அதிக அளவு சேவையை மக்களுக்கு ஆற்றுவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் அவர்களின் பணி. பல நேரங்களில் சாப்பிட எதுவும் கிடைக்காது, கடுமையான பணிச்சூழலில் பணியாற்ற வேண்டி இருக்கும். இளமையின் அனைத்து இன்பங்களையும் தியாகம் செய்து கொண்டு தங்களை பாரதத்தாயின் பாதத்தில் சமர்பித்து கொண்டு தொண்டையும், தியாகத்தையும் மட்டுமே கைக்கொண்டு வாழ வேண்டும். இந்த காரணத்திற்காகவே மோடி பிரதமராக மிகவும் பொருத்தமானவராக இருக்கிறார். தன் வாழ்க்கையை, தன் புலன் இன்பங்களை, குடும்பத்தை, இளமையை இந்த தேசத்திற்காக , இந்த தேசத்தின் நலனுக்காக தியாகம் செய்த ரிஷி போன்ற தலைவன் நம்மை தலைமை ஏற்க வேண்டுமா ? அல்லது ஒரு அந்நிய கைக்கூலியின் மகனும், தேசத்தின் சாபமுமான ஒரு மக்கு இளவரசன் நமக்கு தலைமை ஏற்க வேண்டுமா ?

1977 இந்த தேசம் அவசர நிலையை எதிர் கொண்ட போது மோடி அதன் அடக்குமுறையையும் அராஜகத்தையும் எதிர்த்து போராடினார், சிறை சென்றார்.தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 20 இளமையான துடிப்புள்ள ஆண்டுகளை ஆர். எஸ்.எஸ் ஸின் சேவையில் கழித்த மோடி 1987ல் பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைகிறார். ஒவ்வொரு படியாக முன்னேறுகிறார். இவரின் அயராத உழைப்பும், அரவணைத்து செல்லும் குணமும், திறமையான வேலை வாங்கும் தன்மையும் ,யுக்தியும் அர்ப்பணிப்பும் இவருக்கு மாநில செயலாளர் பதவியை பெற்று தருகிறது. மதி நுட்பமும், அரசியல் யுக்தியில் தேர்ச்சியும் பெற்ற மோடியின் வழிகாட்டுதலும் உழைப்பும் 1995ல் குஜராத்தில் பாஜக ஆட்சி அமைய மிக முக்கியமான காரணியாகிறது. அத்வானியின் ரத யாத்திரையை வெற்றிகரமாக பொறுப்பேற்றுக்கொண்டு நடத்தியதில் மோடியின் பங்கு சிறப்பானது. பாஜகவின் ஆட்சி காலத்தின் போது தேசிய செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றினார் மோடி. மேலும் 5 மாநிலங்களுக்கு பிரபாரியாக அவர் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் அமைந்திருந்த கேசுபாய் படேல் அரசு 2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூஜ் பூகம்பம் என்ற பேரிடரை அனுபவமில்லாமல் கையாண்டது. இது தூய்மைவாதிகளான பாஜகவினருக்கு சங்கடத்தை அளித்த்து. உடனடியாக கேஷிபாய் படேல் நீக்கப்பட்டு அறிவுக்கூர்மையும், ஆற்றலும் மிகுந்த இளம் மோடியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனை இவன் முடிப்பான் என ஆய்ந்து அதனை அவன் கண் விடல் எனும் குறளுக்கேற்ப தனக்கிடப்பட்ட பணியை செவ்வனே செய்து நாட்டிற்கும், கட்சிக்கும் பெருமை சேர்த்தார் மோடி.

களத்தில் இறங்கி ஆறுதல் சொல்லும் தலைவன்
களத்தில் இறங்கி ஆறுதல் சொல்லும் தலைவன்

பேரிடர் மேலாண்மையில் மிகபெரும் சாதனைகளை அநாயசமாக செய்தார் மோடி, அதற்கு அவருக்கு துணை நின்றது தன்னலமற்ற சேவையை லட்சியமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், அதன் பயிற்சியும் ஆகும். இயற்கையின் கோபத்தால் நொறுங்கி உருக்குலைந்த குஜராத் நகரங்களை மறுகட்டமைப்பு செய்தார் மோடி. உருக்குலைந்த நகர்களை மிகவும் திட்டமிட்டு புதிய வளர்ச்சிக்கு உரிய வகையில் செப்பனிட்டு வடித்தெடுத்தார். பேரழிவிலிருந்த ஒரு நகரை சாம்பலில் இருந்து உயிர்த்தெழ வைத்தார். பூகம்பம் எனும் பேரிடர் சோதனையை வளர்ச்சிக்குரிய திட்டமிட்ட நகராக மாற்ற கிடைத்த ஒரு சாதனை வாய்ப்பாக மாற்றிக்கொண்டவர் மோடி. ஆட்சி கட்டிலில் ஏறிய நொடி முதல் அயராத சவால்களை அநாயசமாக சந்தித்து அவற்றை வாய்ப்பாக மாற்றுபவர் மோடி. 2001க்கு முன்பான குஜராத்தில் இந்துக்கள் என்றால் கிள்ளுக்கீரைகள் என்று நினைத்து கொண்டு தீவிரவாத , வகுப்புவாத இயக்கங்கள் அவர்களை தாக்கி அழித்து பணத்தை கொள்ளையடித்து வந்தன. குஜராத் என்பது மதக்கலவரங்களின் கூடாரமாக இருந்து வந்தது. கோத்ராவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு அயோத்தியில் வழிபாடு முடித்து விட்டு வந்த அப்பாவி இந்துக்களை ரயில் பெட்டிக்குள் அடைத்து 100க்கும் மேற்பட்ட அப்பாவிகளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றார்கள். வேண்டுமென்றே மதக்கலவரத்தை தூண்டி தீவிரவாதத்திற்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும் மோடியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தார்கள் .

அதில் சந்தேகம் வராமல் இருப்பதற்காக இஸ்லாமியர்களையும் கொன்று இந்துக்களையும் கொன்று தீவிரவாதிகள் கொலைவெறிதாண்டவம் ஆடினார்கள். மோடி நிர்வாகம் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியது. கலவரத்தில் 758 இஸ்லாமியர்களும் 264 இந்துக்களும் கொலை செய்யப்பட்டார்கள்.

guj01ஆனால் அதுவே அங்கு கடைசி வன்முறையாக ஆனது. அடுத்த 12 ஆண்டுகளில் ஒரு மதக்கலவரம் கூட நடக்காத முன்னோடி மாநிலமாக குஜராத்தை மாற்றி விட்டார் மோடி. கடினமான சோதனைகளை சாதனைகள் ஆக்குவது மோடிக்கு இயல்பான ஒன்றாகும். கல்வி வளர்ச்சி, தொழில் வளத்தில் பின்னால் இருந்த குஜராத்தை முன்ணனிக்கு கொண்டு வந்தார். அபாரமான சாலைகளை கொண்டு நகரங்களை இணைத்தார். மெட்ரோவை குஜராத்திற்கு கொண்டு வர முனைந்தார். காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்க மறுத்து விட்ட்து. உடனே சாலை போக்குவரத்திலேயே மிக உத்திரவாதமானதும் பெரும்பயனளிக்க கூடியதுமான விரைவு போக்குவரத்தை குஜராத்தில் அறிமுகப்படுத்தினார். நர்மதா அணைக்கட்டு பிரச்சினையை எப்போதும் ஊதிக்கொண்டே மக்களுக்கு பயன்படாமல் செய்து கொண்டிருந்த போலி கம்யூனிஸ்ட்களை ஒடுக்கி நர்மதா திட்டத்தை செம்மையாக செயல்படுத்தினார்.

 

தொழில் வளத்திற்கு இன்றியமையாத மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்து புதிய மிகை மின் மாநிலமாக மாற்றிக்காட்டினார். மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளில் நீண்ட கால நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு அமல்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதை ஒவ்வொரு கட்டத்திலும் உறுதி செய்தார். பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சர்வதேச சந்தைகளின் நுட்பங்களை விளக்க பொருளாதார நிபுணர்களை துணைக்கழைத்தார்.  அடித்தட்டு இஸ்லாமியர்கள் பல பேர் ஈடுபட்டிருந்த பட்டம் செய்யும் பாரம்பரிய தொழிலை மேம்படுத்த மேலாண்மை வல்லுனர்கள் வந்தார்கள். அவர்களின் வாழ்க்கை பாதையையே மாற்றி அமைத்தார். நிலையான ஆட்சியை ஏற்படுத்தினார். பால் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து உயர்த்தினார். கல்வி, அறிவில் நடுனிலையில் இருந்த குஜராத்தை மிகவும் உயர்த்தினார். மின்சார சிக்கனத்தை மாணவர்கள் மூலம் சாதித்து காட்டினார்.

modi3ஜோதிகிராம்யோஜனா(https://www.gujaratcmfellowship.org/document/Gujarat%20Overall%20Development/Jyotigram%20Yojana%20Article_Devika%20Devaiah_2010.pdfதிட்டத்தின்மூலம்குஜராத் முழுக்க மின் வினியோகத்தை சீர்படுத்தினார். விவசாயிகளுக்கு தனி மின்பாதைகளை அமைத்து அவர்களுக்கு தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்தார்.  (தமிழகம் போன்ற மாநிலத்தில் எப்போது  மின்சாரம்  வரும் , போகும் என்பதெல்லாம் இறைவனுக்கே தெரியாது.)  18065  கிராமங்களுக்கு  24  மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்காக 1204 கோடி ரூபாயில்  வெறும் 30 மாதங்களில் இதை சாதித்து  காட்டினார்.  76518 கிமீட்டருக்கு  புதிய மின்கம்பிகள் போடப்பட்டுள்ளன. 2559 பெரிய ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளது. இது  போக  புதிதாக 18724 புது  ட்ரான்ஸ்பார்மர்கள்  போடப்பட்டுள்ளது.   17,00.000 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. அதன் வழியே மின்இணைப்புகளின் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்ட செயல்திறனுடன்  செயல்படுவதை  அரசு  உறுதி  செய்ததது. 56,307 கி.மீட்டருக்குபுதிய ht லைன்களும், 22146 கிமீட்டருக்குபுதிய lt லைன்களும்ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில்இந்தியாவின் 32 மாநிலங்களில்  நடக்காத  சாதனை இது. இத்தோடு  மின்சாரவாரியம்  லாபகரமாக  இயங்கும் ஒரேமாநிலம்  மோடியின் குஜராத். இன்னும் சிறிதுநாளில் காந்திநகர் முழுசூரியசக்தி நகரமாகும்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மோடியின் பாய்ச்சல். இந்தியாவிற்கே முன் மாதிரியான இ-மம்தா திட்டத்தை அறிமுகம் செய்தார். குஜராத் கர்ப்பிணிகளின் ஆரோக்கிய மேம்பாடு, மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றிய அக்கறையோடு செயல்படும் திட்டம் (https://articles.timesofindia.indiatimes.com/2011-07-25/ahmedabad/29812366_1_pregnant-women-infant-mortality-mamta) கர்ப்பிணிகளின் உணவு பழக்க வழக்கத்திற்கேற்ப அவர்களுக்கு போதுமான சத்து கிடைப்பதை அரசே உறுதிப்படுத்துவது. பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அரசு மற்றும் மக்களின் பங்களிப்புடன் சிறப்பான குழந்தைகளை, அதாவது ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உறுதி செய்வது தான் மம்தா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொது சுகாதாரத்திலும், ஏழைகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் சிறப்பான அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்தையும் , தங்கு தடையற்ற மருத்துவ வசதிகளையும் மக்களுக்கு அர்ப்பணித்தார் மோடி. சிரஞ்சீவியோஜனா மூலம் தனியார் மருத்துவ மனைகளிலும் ஏழை மக்களுக்கு குறைவான விலையில் மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

உள்கட்டமைப்பு, நகர நிர்வாகம், மின் ஆளுமை, தொழில் வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, கல்வி , விவசாயம் சிறு தொழில் முனைவோர் மேம்பாடு, சிறு , குறு வணிகர்களின் தொழில் வளர்ச்சி பாதுகாப்பு, சட்டம் , ஒழுங்கு, அரசு சலுகைகள், உதவித்தொகைகள் உடனே கிடைக்க ஏற்பாடு. போக்குவரத்து துறையில் புரட்சி, கப்பல் கட்டும் தொழில்,உள் நாட்டு விமான போக்குவரத்து, வைர வியாபாரம், பஞ்சு நுகர்வு, ஜவுளித்தொழிலுக்கான சிரப்பு ஊக்கம், பால் பொருட்கள் உற்பத்தி, உலக தரத்தில் பெருகும் கல்வி கூடங்கள், உயர்தர சாலைகள். மனித வள மேம்பாடு என்று எதை எடுத்து கொண்டாலும் குஜராத் நிகழ்த்திய பாய்ச்சல்கள் அபாரமானது. இந்த பணிரெண்டு ஆண்டுகளில் மோடியின் தலைமையில் ஏற்பட்ட வளர்ச்சி 50 ஆண்டுகளில் காங்கிரஸ் நிகழ்த்தி காட்டாத சாதனை தான். இவை அனைத்தும் ஆதாரங்களோடு இணையத்தில் கிடைக்கிறது. வளர்ச்சி அரசியலில் மோடியை குற்றம் சொல்ல முடியாதவர்கள், மதச்சார்பின்மை எனும் அசிங்கமான ஆயுதத்தை எடுத்து கொண்டு ஆடுகிறார்கள்.

namoஎதற்கெடுத்தாலும், கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்பு நடந்தது என்று ஒரு பிலாக்கணத்தை வைக்கிறார்கள். தேசிய சிறுபான்மை கமிஷன் எனும் சிறுபான்மை அடிவருடி அமைப்பே 730 பேர்கள் தான் இஸ்லாமியர்கள் இறந்தார்கள் என்று காங்கிரஸ் கைக்கூலி அரசாங்கத்திடம் அறிக்கை அளித்த பிறகும், இன்னும் ஏதேதோ எண்ணிக்கைகளை இட்டுக்கட்டி மோடி மீதான மாய பயத்தை கட்டமைக்கிறார்கள். இறந்த போன 300க்கும் மேற்பட்ட அப்பாவி இந்துக்களுக்கு அஞ்சலி என்று சொல்லகூட துப்பில்லாத இவர்களிடம் நாம் என்ன கருணையை பிச்சை ஏந்திக்கொண்டா கேட்க முடியும், இந்த நாட்டில் மதச்சார்பற்ற வேசித்தனம் என்பது இந்துக்களை காறி உமிழ்ந்து முஸ்லீம் லீக்குடனுடம், கிறிஸ்த்தவ பயங்கரவாதிகளுடன் கொள்ளும் வியாபார கூட்டு என்பது தான். இந்த வியாபார உத்தியை பயன்படுத்தி தான் காங்கிரஸ் எனும் இத்தாலிய அடிமை அந்நிய நிறுவனம் இந்த மக்களை ஏமாற்றி நம்மை எல்லாம் அயல் நாட்டிற்கு விற்றுக்கொண்டிருக்கிறது. கோத்ராவில் ரயிலில் வந்த அப்பாவி இந்துக்களை பெட்ரோல் ஊற்றி கதற கதற இந்து பெண்களையும், குழந்தைகளையும், ராம பக்தர்களையும் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த இஸ்லாமிய சதிகாரர்களை பற்றி ஒரு வார்த்தை சொல்லக்கூட ஆண்மையற்று இருந்த  நபும்சக பேடிகளுக்கு நடுவே ./ சிறுபான்மை வாக்கு வங்கிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பயங்கரவாத செயல்களை செய்து கொண்டிருந்த தீவிரவாதிகளை சட்டத்தின் வழியில் நியாயமான முறையில் தைரியமாக ஆண்மையோடு ஒடுக்கினார் மோடி. மக்களை காப்பாற்றினார் ஒடுக்கப்பட்டதாலேயே தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து சொந்த மாநில மக்களின் அபரிமிதமான மக்கள் செல்வாக்கை பெற்றார்.  அப்படி 3 வது முறையாக முதல்வராக போட்டியிடுகையில் பல இன்னல்களை சந்தித்தார். சாதி ரீதியில் பிற்பட்டவர் என விமர்சிக்க பட்டு ஒடுக்க நினைத்த அனைத்து அரச வம்ச சதிகளையும் மக்கள் சக்தி கொண்டு முறியடித்தார். மீண்டும் மகுடம் சூடினார்.

modi007மோடி. மரண வியாபாரி என்று சொன்ன காங்கிரஸ் 1,40,000 தமிழ் மக்களை கொன்று அழிக்க ஆயுதம் வழங்கிய சோனியா காங்கிரஸ். 60,000 பெண்கள் விதவையாக தாலி அறுத்து கொண்டு தெருவில் பிச்சை எடுக்க வைத்த காங்கிரஸ். 10,000க்கும் மேற்பட்ட சீக்கியர்களை கொன்று ரத்தம் குடித்த கொலைகார காங்கிரஸ் துளியும் வெக்கமின்றி மோடியை இன்று குற்றம் சாட்டுகிறது.இந்த தேசத்தின் எல்லையில் 19 கிமீட்டர் ஊடுருவும் சீனாவை கண்டிக்க துப்பில்லாத, முதுகெலும்பற்ற அரசியல்வாதிகளும், கட்சிகளும் இன்று மோடியை விமர்சிக்க வந்து விட்டன. ஊழலில் ஊறி முடை நாற்றம் எடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மோடியை விமர்சிக்க வழியின்றி சிபிஐ ஐ அதற்கு தகுந்தாற் போல ஏவி இஸ்ராத் ஜகான் போலி என்கவுண்டர் என்று புது பொய்யை திரிக்கிறது. இதுவரை மோடி மீது அனைவரும் சொன்ன குற்றச்சாட்டை அவர் பொய் என்று நிருபித்தே வந்திருக்கிறார். இப்போதும் அப்படியே நிருபிப்பார். வஞ்சகத்தில் ஊறியுள்ள காங்கிரஸ் கட்சி பெரும் நிதியை காட்டி நிதிஸை விலைக்கு வாங்கியும், மம்தா, முல்லா முலாயம் போன்ற மூன்றாந்தர அரசியலாளர்களை கொண்டு காங்கிரஸிக்கு எதிரான மக்களின் ஓட்டை பிரிக்க 3 வது அணி என்ற ஒரு போலியான அமைப்பை ஏற்படுத்த முயல்கிறது.

பீகாரிலே ஏதோ நிதிஷ் குமார் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்று இருந்தது போலவும், அவரின் நிழலில் பாஜக குளிர் காய்ந்த்து போலவும் இன்று பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்களும்,காங்கிரஸ் கட்சியும் இவ்வளவு நாள் என்ன சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இன்று மதச்சார்பின்மை நோயால் வாட்டப்பட்டிருக்கும் நிதிஷ் குமார் தான் கோத்ராவில் ரயிலில் வந்த அப்பாவி கர சேவகர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய போது ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். அப்போது இவர் என்ன சின்ன குழந்தையாகவா இருந்தார். அன்று தெரியாத உண்மை இன்று என்ன தெரிந்து விட்டது. இதே மோடியின் பிரச்சார பலத்தை வெக்கமில்லாமல் பெற்று தானே 2003ல் ஆட்சிக்கட்டிலில் ஏறினீர்கள் நிதிஷ் என்று யாரும் இவர்களை கேட்க மாட்டார்கள்,

மோடியை பாராட்டி நிதிஷ் குமாரின் பேச்சு, கோத்ரா சம்பவத்திற்கு பிறகு (https://www.youtube.com/watch?v=WQYK62Qp97E ) ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சி விலாசம் இல்லாமல் போயிருக்கும் அன்று பாஜகவும், வாஜ்பாய் என்ற நல்ல மனிதரும் இல்லாவிட்டால், இன்று நாதியற்று ஒரு அரசியல் அநாதையாக தான் நிதிஷ் குமாரும், சிவானந்த திவாரியும், சரத்யாதவும் நின்று இருப்பார்கள். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்கிறார் வள்ளுவர். பாஜக என்ற கட்சி செய்த நன்றியை மறந்து விட்டு கேவலமாக காங்கிரஸ் வீசும் எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அதன் பின்னால் சென்று பாஜகவுக்கு துரோகம் செய்யும் நிதிஷ் அவர்களே காலம் உங்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும். காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது என்றால் நமக்கு எதிரான வாக்குகள் மூன்றாவது அணி என்றும் பாஜக ஆதரவு என்றும், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் அளிக்கும் ஆதரவு இவற்றை கொண்டு அராஜகத்தால் ஆட்சிக்கு வந்து விடலாம் என கனவு காண்கிறது. அந்த கனவை மோடி தன்னந்தனியாக உடைத்து எறிவார். சிவாஜி திரைப்படத்தில் ஒரு வசனம் சிங்கம் சிங்கிளாத்தான் வரும், சிறு நரிகள் தான் கூட்டமாக வரும் என்று சொல்வார். அது போல மோடி சிங்கிளான சிங்கம் தான் . தனித்தே பல சாதனைகளை புரிவார்.

modi005பாஜக தனியாக நின்றால் எதையும் சாதிக்க முடியாது . மோடி தலைமையில் அது தோற்று போகும் என்று சாபம் கொடுக்கும் கம்யூனிஸ்ட்கள் முதலில் இரட்டை இலக்க தொகுதிகளை ஜெயிக்க ஏதாவது வழியிருக்கிறதா என்று பாருங்கள். பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கயவர்களே பாஜக மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்களின் நியாய உணர்வின் மீதும், தேச பக்தியும் , சூடு, சொரணையும் உள்ள மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. உங்களை போல திருட்டுதனம் செய்து ஈனப்பிழைப்பு பிழைத்தும், அயல் நாட்டிற்கு என் தேசத்தை அடகு வைத்தும் முறையற்ற முறையில் ஜெயிக்க விரும்பவில்லை . மோடி ஒற்றை ஆள் தான் ஆனால் ஒரு வெற்றிகரமான போர் உத்தி வகுப்பாளரும், தளராத தளகர்த்தரும் ஆவார். காங்கிரஸ் கட்சியில் உள்ளது போல கூலிக்கு மாரடிக்கிற கொள்ளைகூட்டம் அல்ல பாஜக . நெஞ்சிலே கொள்கை ஏந்தி, நெற்றியிலே தேச பக்தியை சுடராக கொண்டிருக்கும் தியாக செம்மல்களின் கூட்டம் பாஜக. அயராது பாடுபடும் அஞ்சாத சிங்கங்களையும் சிறுத்தைகளையும் கொண்ட அரசியல் இயக்கம் பாஜக. ஒவ்வொரு அரசியல் இயக்கமும் பாஜகவின் நிழலில் வளர்ந்து பலம் பெற்ற பிறகு அதை எட்டி உதைத்து விட்டு செல்வதையே தொழிலாக கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தேசத்திற்காக அனைத்தையும் பொறுத்து கொண்டு அயராது கடமையாற்ற மோடி பின்னால் ஒரு பெரும் மக்கள் இயக்கமே தயாராக இருக்கிறது. மேலும் ஒரு பூரண ஸ்வயம் சேவக் இந்த தேசத்தை ஆளும் போது தான் இதன் மகத்துவம் பரிபூரணமாக வெளிவரும்.

கூட்டணி பலம் இல்லாத பாஜக என்று விமர்சிக்கும் அரசியல் அறிஞர்களுக்கு வரலாறு தெரியவில்லை. மகா பாரதத்தில் பாண்டவர்கள் 7 அக்ரோணி சேனைகள் மட்டும் தான் வைத்திருந்தார்கள், கெளரவர்கள் 11 அக்ரோணி சேனைகளை கொண்டிருந்தார்கள், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சல்லியன், பூரிசிரவசு, அஸ்வத்தாமன் என்று ஏராளமான வீரத்தலைமைகளை பெற்றிருந்தார்கள். வென்றது பாண்டவர்கள் தானே . வரலாற்றில்  1526 ஆம் ஆண்டு  நடந்த முதலாம் பானிபட் போரை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். வெறும் 8000 படை வீர்ர்களுடன் வந்த பாபர்,200000 அதிகமான இப்ராஹிம் லோடியின் படையை சின்னாபினாமாக்கி வெற்றி அடைந்தார். ஒரே வித்யாசம் தான் பாபரிடம் போர் உத்தியும், பீரங்கியும் இருந்தது. லோடியிடம் வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான படை மட்டும் இருந்தது . லோடியிடம் இல்லாத்து இன்று மோடியிடம் இருக்கிறது. பாஜகவிடம் இருக்கிறது மோடி எனும் சாமுராயும், அஞ்சாத துணிவுள்ள பாஜக தொண்டர்களும் இணைந்தால் போதும், தர்மம் நிச்சயம் வெல்லும். பாரத்த்தை பாஜக அரசாளும். பாரதம் உலகிற்கே முன்னுதாரணமாக திகழும். மோடி மிளிர்வார், தன்னந்தனியாக ….

38 Replies to “நரேந்திர மோடி எனும் சாமுராய்”

  1. வாலி ரெடி . ராமன் ரெடியா?

  2. மிக நேர்த்தியாக….புள்ளி விவரங்கள்… ஆதார தரவுகளுடன் எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கான உழைப்புக்கு நண்பருக்கு முதலில் பாராட்டுகள். கட்டுரையில் மோடி மீதான அதீத அன்பின் காரணமாக மேடை பேச்சின் வாசனை சில இடங்களில் தெரிகிறது.//பாஜக என்ற கட்சி செய்த நன்றியை மறந்து விட்டு கேவலமாக காங்கிரஸ் வீசும் எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அதன் பின்னால் சென்று பாஜகவுக்கு துரோகம் செய்யும் நிதிஷ் அவர்களே காலம் உங்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும். // இப்படி எல்லாம்.
    மிக அவசரமாக செயல்பட்டு நம்பத்தகுந்த கூட்டாளியான நிதிஷ்குமாரை இழந்ததன் மூலம் சுமார் 30 மக்களவை இடங்களை பாஜக இழக்க போகிறது.
    மிக நீண்டநாள் கூட்டாளியாக இருந்தவர் பிரிய எத்தனைக்கும் போது அமைதியாக க குலுக்கி பிரிந்திருந்தால் பாஜகவின் மரியாதை உயர்ந்திருக்கும்.
    மோடி ஒரு வசீகரமான தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் எல்லா விஷயங்களிலும் தம் கட்சியை விட தன்னையே முன்னிருத்திக் கொள்ளும் சுய தம்பட்ட ஆசாமியாக இருக்கிறார்.
    இது பல மாநிலங்களைக் கொண்ட பல தலைவர்களை உள்ளடக்கிய பொதுத்தேர்தலை சந்திக்க வழி செய்யாது. ஜெயலலிதாவால் எப்படி தேசிய அளவில் ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்க முடியாதோ அதே போலத் தான் மோடியும்.
    கட்சிக்கு பின்னால் நின்று கூட்டணிகளின் ஆலோசனையோடு தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று எல்லோரது வாயாலும் மோடி எங்கள் பிரதமர் என்று சொல்ல வைக்க ஏன் பொறுமை இல்லை.
    அத்வானி அவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்கிற வேட்டை… அதனூடே கம்பெனிகளின் பிரமோஷன் தான் இந்த மோடி மாயை. இந்த நிலை நீட்டித்தால் ராகுல் காந்தி பிரதமாரவது உறுதியாகிவிடும்.
    இது தேசத்திற்கு எத்தனை பெரிய இழப்பை தரும் தெரியுமா? ஆக கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டியது கட்டாயம்.
    மோடி மோடி என்கிற சத்தத்தில் கொள்கை…செயல்திட்டம் எல்லாம் பின்னுக்கு தள்ளிப்போய்விடும்.
    கூட்டணிக்கு யாரும் கிட்டே வர மாட்டார்கள். ஆறு மாநிலங்களில் சுமார் 130 சீட்டுக்கு மேல் வாங்க முடியாமல பாஜக ஓரங்கட்டப்படும். ஆக நிதானமாக கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தேவையான இலக்க இடங்களை கைப்பற்ரிய பிறகு பிரதமரை பற்றி யோசிப்பது நல்லது.
    இணையம் மூலம் கருத்துருவாக்கம் செய்ய முடியும். ஆனால் வரிசையில் நின்று ஓட்டு போடுபவர்கள் அதிகம் இணையத்தை படித்துக் கொண்டிருப்பவர்கள் இல்லை. ஆக வெகுஜன மீடியாக்களில் பல தலைவர்கள் மோடியின் ஆக்கிரமிப்பை பற்றி பேசும் போது எதிர் விளைவை ஏற்படுத்தி விடும். ராகுலுக்கு ரத்தின கம்பளத்தை விரித்த பெருமை அதி வேக பாஜக மோடி தாசர்களை சேரும்.
    என் விருப்பம் உறுதியாக மண்மோகன் அரசு நீக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் அதற்கான வாய்ப்பை பாஜகவின் சமீபத்திய செயல்பாடுகள் சிதைத்து வருவது கண்கூடு.
    சாமுராய் ஆரவாரத்தோடு களம் காண்பதற்கு முன்னால் எதிரிகளை நண்பனாக்கும் தந்திரம் கற்க வேண்டும். எதிரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்வது ஆற்றல் விரையத்தை ஏற்படுத்தி வெற்றிக் காண போரட்டத்தை அதிகப் படுத்திவிடும்.
    பாரத அன்னை வெல்லட்டும்

  3. வருங்கால இந்திய PM திரு மோடியின் எதிரிகளுக்கு அவர் செய்த சாதனைகள் தெரிவதில்லை. இந்த மறுமொழியினை 3வது முறையாக type செய்துகொண்டிருக்கிறேன். காரணம் 2 முறை மின்சாரம் cut ஆகி திரும்ப திரும்ப type செய்துகொண்டிருக்கிறேன். (UPS இல்லை என்பதால் ) இப்படி இருக்கிறது தமிழ்நாட்டின் கதி. குஜராத்தில் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் உள்ளது. இங்கிருக்கும் அறிவாளிகள் கஷ்டத்தை அனுபவித்தபிறகும்
    குஜராத்தை பாராட்டாமல் தூற்ற மனம் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. உபரி மின்சாரத்தை வெளியே விற்று மின்வாரியம் லாபத்தில் இயங்குகிறது. ஆனால் இங்கு நிலைமை?

    போலி மதசாற்பற்றவாதிகளுக்கு 2002 கோத்ரா சம்பவம் ஒன்று கையில் மாட்டி கொண்டிருக்கிறது. கீறல் விழுந்த record போல அதையே சொல்லிகொண்டிருக்கும் அவர்கள் 1969 ல் செப்டெம்பர் மாதம் அகமதாபாத் நகரில் நடந்த வகுப்பு கலவரங்களில் 512 (five hundred and twelve ) க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை மட்டும் பேசமாட்டார்கள். காரணம் அப்போது குஜராத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரஸ் களவாணி பயல்கள் என்பதால். இந்த கலவரம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஜெக்மோகன் ரெட்டி தனது அறிக்கையில் “Most of the congressmen participated directly or indirectly in the communal violence ” என்று தெரிவித்தார்.

    போலி மதசார்பற்ற வாதிகளுக்கு “secularism ” என்ற தீரா மன நோய் பிடித்துள்ளது மன நோய் பிடித்துள்ளவன் ” அதோ அவன் என்னை அடிக்க வரான் இதோ அவன் என்னை கொல்ல வரான்” என்று சும்மாவே உளறுவது போல பிஜேபி ஆட்சி minority களை அழித்துவிடும் கொன்றுவிடும் என்று
    pseudo secularists வாய்க்கு வந்தபடி உளறி கொண்டிருக்கின்றனர்.

    17-6=2013 அன்று Polimer டிவியில் “மக்களுக்காக” programme ல் பீட்டர் அல்போன்ஸ் என்ற காங்கிரஸ் கயவாளி “நிதீஷ் தன நெற்றியில் திருமண் அணிந்து கொள்ளவும் குல்லாய் அணிந்துகொள்ள தயார்.” ஆனால் மோடி ஒரு முஸ்லிம் கொடுத்த குல்லாயினை அணிந்துகொள்ள மறுத்துவிட்டார்” எனவே அவர் ஒரு மதவாதி” என்று மோடி மீது குற்றம் சாட்டினர். நான் கேட்கிறேன்.”கருணாநிதி கோவிலில் திருநீறு கொடுத்தால் அணிந்துகொள்ள மறுப்பார். அதே நேரத்தில் ரம்ஜான் நோன்பு நேரத்தில் தலையில் . குல்லாய் அணிந்து கொண்டு குட்டிகுரங்கு மாதிரி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு கஞ்சி குடிப்பார். பீட்டரின் காமாலை கண்களுக்கு அவர் மட்டும் நல்லவராக தெரிகிறாரோ? அவர் இன்னொன்றும் கேட்டார். பிஜேபி ஒரு முஸ்லிமை PM ஆக ஆக்க தயாரா? பிஜேபி தான் ஒரு முஸ்லிமை ஜனாதிபதியாக ஆக்கியது.என்பதை மறந்துவிட்டார். Namonia குறித்து பீதி அடைந்துள்ள இத்தாலி நாட்டு இறக்குமதி நம் sonia தனது மகன் ராகுல் காந்திக்கு பதிலாக நான் ஒரு முஸ்லிமை பிரதம மந்திரியாக ஆக்குவேன் என்று உறுதிமொழி கொடுப்பாரா? பாகிஸ்தானில் இந்துக்கள் ஒரு MLA ஆக கூட முடியாது. ஆனால் இந்தியாவில் 15 % ஜனத்தொகை காரனுக்கு PM பதவி வேண்டும் என்று 7% கிறிஸ்தவன் recommendation செய்கிறான். ஊழல் பெரூச்சாளிகளின் ஒட்டுமொத்த தலைவி தன மகனை PM ஆக அழகு பார்க்க தவமாக காத்துகிடகிறார்.

    758 முஸ்லிம்களின் கொலைக்கு காரணமான மோடி ஒரு “மரண வியாபாரி” என்றால் 3000 சீக்கியர்கள் கொலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சியினர் என்ன “மல்லிகைபூ வியாபாரியா?” தினம் ஆடு வெட்டி வெட்டி பழக்கப்பட்ட கசாப்பு கடைக்காரனிடம் கேட்டல் கூட இதற்கு அருமையான பதில் சொல்வானே!
    1956 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இரக்குமதியான கோதுமையுடன் பார்தீனியா விதைகளும் சேர்ந்து வந்துவிட்டன அவை புனேவில் தரிசு நிலங்களில் பரவ தொடங்கி இன்று நாடு பூராவும் வியாபித்து ஆஸ்துமா வியாதியினை விருத்தி செய்துகொண்டிருக்கிறது. அந்த பார்த்தீனிய செடிக்கு English ல் “Congress weed ” என்று சொல்வார்கள். ஆஸ்துமாவை கொடுக்கும் காங்கிரஸ் weed னை அழிப்போம் நாட்டுக்கு ஆபத்தை கொடுக்கும் காங்கிரஸ் கட்சியினை ஒழிப்போம்.
    கட்டுரை எழுதிய திரு ராஜமாணிக்கம் அவர்களுக்கு நன்றி. குஜராத்தில் மட்டும் பிஜேபி எழுச்சியோடு இருந்தால் போதாது. மற்ற மாநிலங்களிலும் எழுச்சி பெறவேண்டும். குறிப்பாக தமிழ் நாட்டில் பிஜேபி தூங்கி கொண்டிருக்கிறது. அங்கங்கே ஓடுகிறார்கள் ஓடிவருகிறார்கள் ஆனால் net result என்னவென்றால் பூஜ்யம் தான் ஒரு தொகுதிய்லாவது ஒரு MLA வரமுடியவில்லை என்றால் ஓடி ஓடி உழைத்து என்ன பலன்? சரியான பாதையில் செல்லவில்லை என்று பொருள். ஆகவே தமிழ்நாட்டில் அதன் அசுர வளர்ச்சிக்கு தேவையான கருத்துகளை அடுத்தமுறை எழுதுங்கள். அதே போல வெறும் எழுதுவதோடு நில்லாமல் அனைவரும் 2014 தேர்தலில் களம் இறங்கி வாழ்வா சாவா என்ற முடிவோடு உழைக்கவேண்டும். அதை எல்லாம்
    அவர்கள் பார்துகொள்வர்கள் அவர்களை விட நாம் என்னத்தை கிழித்துவிட போகிறோம் என்று திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கட்டுரை மட்டும் எழுதினால் போதாது (யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை பொதுவாக கூறுகிறேன்) ஒரு கை பார்த்து விடுவோம் ஒருவரும் விதி விலக்கின்றி அனைவரும் வாருங்கள் இந்து சகோதரர்களே!

  4. மிகவும் அருமையாக தொகுக்கப்பட்ட வ்யாசம். வாழ்த்துக்கள் ஸ்ரீ ராஜமாணிக்கம்.

    \\\அவரின் அரசியல் வாழ்வு முழுக்க திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.\\\

    பிரிட்டனின் ப்ரதமராக ஜான் மேஜர் அவர்கள் இது போன்று திட்டமிட்டு ஆட்சியை பிடித்ததாக கேட்டிருக்கிறேன். மோடியும் சாதித்துக் காட்டுவார்.

    \\\மோடியை தனிமைப்படுத்துவது தான் இந்திய அரசியலுக்கு நல்லது என்கிறார் நிதிஷ் \\\

    பாஜாகாவை / ஜனசங்கத்தை / ஆர். எஸ். எஸ் ஐ தனிமைப்படுத்துவது தான் அடல்ஜி ஆட்சிக்கு வரும் வரை நிகழ்ந்த கதை. அடல்ஜி மற்றும் அத்வானிஜி இதை மாற்றிக் காட்டினர். நிகழ வேண்டிய மாறுதல் நரேந்த்ரபாய் மூலம்.

    நிதீஸ் பாபு நரேந்த்ரபாய் பற்றி யோசிப்பது இருக்கட்டும். தான் பூ மஞ்சத்தில் அமர்ந்திருப்பதாக எண்ண வேண்டாம். லாலு யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஒன்றும் பேன் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நவீன் பட்நாயக் போல நிதீஸ் பாபு தொடர முடியாது. லாலு யாதவிற்கு தன் நிலை புரிய வெகு காலம் ஆயிற்று. அடுத்தது நிதீஸ் பாபுவுக்கும் அதே கதை தொடரும்.

    \\\மோடிக்கு இது பெரும் பின்னடைவு\\\

    தற்சமயம் பின்னடைவு தான். ஆனால் பின்னடைவு தாத்காலிகமே.

    \\\அகண்ட பாரதத்தை நோக்கி …\\\

    தமிழ் ஹிந்து மட்டும் தான் ஒரு ஸ்வயம் சேவகர் மட்டிலும் தான் இப்படி சிந்திக்க இயலும். அகண்ட பாரதம் அமைந்தே தீரும்.

    \\\மிக நீண்டநாள் கூட்டாளியாக இருந்தவர் பிரிய எத்தனைக்கும் போது அமைதியாக க குலுக்கி பிரிந்திருந்தால் பாஜகவின் மரியாதை உயர்ந்திருக்கும்.\\\

    @ செந்தில்குமார், மிக மிகச் சரியான நிலைப்பாடு. ஜனதா தளம் இதற்கு முயற்சி செய்தது. ஆயினும் பாஜாக கிட்டத்தட்ட ஜட்கா முறையில் உறவை துண்டித்தது போன்று ஒரு பாவனையை தோற்றுவித்துள்ளது.

    \\பாரத அன்னை வெல்லட்டும்\\\

    உறுதியாக. பாரத அன்னையின் வெற்றி பாஜாக மூலம்.

    அன்பர் பூவண்ணன் அவர்கள் நிச்சயம் குஜராத் சர்க்காரின் குறைகளை பட்டியலிடுவார். குறைகள் இருக்கவும் செய்யலாம். ஆனால் குறைகளை ஒவ்வொன்றாக சர்க்கார் நிவர்த்தி செய்தும் வருகிறது என்பதை அவர் அடியோடு ஒதுக்கி விடுவார்.

    திட்டப்பணிகள் ஆகட்டும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ஆகட்டும். பத்து வருஷங்களாக குஜராத் சாதித்து வருவதை மறுக்க இயலாது.

  5. மோடியின் எழுச்சி வரவேற்கத் தக்கது. பழயன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை. கந்தல்களாகி விட்ட அத்வானி, சுஷ்மா போன்றவர்கள் தானாகவே விலகினால்
    பா. ஜ. க புனர் ஜன்மம் எடுக்க வழி உண்டு. சனாதன தர்மமான ஹிந்து தர்மமே உண்மையான சம தர்ம மதம். இதுவே எல்லா மதத்தையும் மதிக்கும் மதம்.
    பா. ஜ. க “சம தர்மமே எங்கள் கொள்கை” என்று தைர்யமாக பறை சாற்ற வேண்டும்.

  6. ஆரம்பத்தில் அத்வானி அவர்களை உறுதியானவர் என்றும், இரும்பு மனிதர் என்றும், ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு பக்க பலமாக இருப்பார் என்றும், பாகிஸ்தான், சைனா வின் வாலை ஒட்ட நறுக்குவார் என்றும் நம்பினோம். பதவியில் அமர்ந்ததும் நடந்ததெல்லாம் வேறு. இவர்கள் ஆட்சியிலும்தான் சிறுபான்மையினர்களுக்கு சலுகைகள் பல தரப்பட்டன. வாஜ்பாய் அரசு அஜ் மானியத்தையும், செல்லும் பயணிகள் எண்ணிக்கையையும் உயர்தியது. ராமர் கோவில் கட்டுவதை அடியோடு மறந்துவிட்டது. நேரு குடும்ப ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் மெத்தன போக்கையே கடைபிடித்தது. ராகுல் அமெரிக்க விமான நிலையத்தில் கணக்கில் வராமல் கையில் பல லஷ்சம் டாலர் பணம் வைத்திருந்ததால் கைதாகி காவலில் வைக்கப்பட்டார். பின்பு வாஜ்பாய் அவர்களின் தலையீட்டால் விடுதலை ஆனார். மேலும் சோனியாவை சில வழக்குகளில் சிக்கவைத்து அவர்களது குடும்பம் அரசியல் முன்னேற்றம் பெறுவதை தடுத்திருக்கலாம் ! ஏன் செய்யவில்லை ?
    சோனியா பிரதமர் ஆனால் நான் மொட்டை போடுவேன் என்று சொன்ன சுஷ்மா இன்று அவர் தோளில் கைபோட்டு வலம் வருகிறார்.. அத்வானி சோனியாவை கண்டால் தலைவணங்குகிறேன் என்று காலை தொடும் அளவுக்கு கழுத்தை தொங்கபோடுவது ஏன் ? அவரை சோனியாஜி என்று எடியூரப்பாவை எட்டி என்றுதான் அழைக்கிறார் !! சமீபத்தில் நடந்த பல இடை தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. (உத்திரகண்ட்-ஜார்கண்ட்-இமாசல பிரதேசம்- கர்நாடகம்) இதற்கெல்லாம் பொறுப்பேற்பவர்கள் யார் என்றே தெரியவில்லை ? ஆனால் அத்வானி தனது வலை தளத்தில் பொதுவாகவே இன்று மக்கள் தேசிய கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். அவர் மேலும் கர்நாடக தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார். கர்நாடக ஐகோர்ட் எடியூரப்பாவை விடுவித்தபின் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தாமல் அத்வானி அடம்பிடித்து ஆனந்த குமாரை பதவியில் அமர்த்த பெறும் முயற்சி எடுத்தது ஏன் ? அதன் பலன் தான் எடியூரப்பா தனி கட்சி பாஜக படுதோல்வி.
    பாஜக ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸைபோல் போலி செக்யூலரிச போர்வையை போர்திக்கொண்டுதான் ஆட்சி செய்தார்கள். சமீபத்தில் அத்வானி அவர்கள் ” மை கன்டிரி மை லைப் ” என்ற புத்தகத்தை உருது மொழியில் எழுதி அந்த புத்தக வெளியீட்டு விழாவி்ற்கு ஹிந்துகளை வெறுக்கும் ”Aziz Burney-Editor-Rashtriya Sahara ” என்பவரை அழைத்து தனது செக்யூலர் கொள்கையை உறுதிசெய்தார். பாகிஸ்தான் சென்று ஜின்னாவை பாராட்டியதும் இதைப்போல்தான். காந்தகார் விமான கடத்தலில் 3 தீவிரவாதிகளை விடுவித்து பயணிகளை மீட்டபொழுதும் உள்துறை அமைச்சகம் இவர் பொறுப்பில் தான் இருந்தது. டிசம்பர் 2006 இல் மன்மோகன் இந்தியாவின் செல்வ வளங்கள் வளர்சிகளின் முதன்மை பங்கு இஸ்லாமியருக்குதான் என்று வெளிப்படையாக மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் கொள்கையை அறிவித்தபோது ஒரு பாஜக வினரும் எதிர்காதது ஏன் ? எந்த ஒரு ஊழல் வழக்கையும் பாஜகவினர் ஏற்று நடத்தாதது ஏன் ? இன்று சுப்பிரமணியசாமி தனிமையில் ஊழலை எதிர்த்து போராடுகிறார். இன்னமும் நிறைய சொல்லலாம். இப்படி தனக்குதானே சூடுவைத்துக்கொள்வதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்
    இன்று நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மோதிதான். திரு சோ அவர்களேகூட தன் குருநாதர் அத்வானியை பின் தள்ளி மோதியை முன் நிறுத்துகிறார். மூன்று முறை தேர்தலை வென்று இன்று குஜராத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிகாட்டியவர் மோதி. அவரது சமீபத்திய பேச்சுக்களும் ஒர் வித்தியாசமான நடுநிலைதன்மையுடன் பொறுப்பான செயல்களை எப்படி செய்ய வேண்டும் என்கிற அவரது அணுகுமுறை எல்லாம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களும் வாய்திறந்துகூட சொல்லாத ஒன்று என்பதை நாம் உணரவேண்டும் ? இவரும் செக்யூலரிஸ வியாதியால் பாதிக்கப்பட்டு பல்டி அடிப்பாரா என்பது ஹிந்துகளின் தலை எழுத்தை பொறுத்துதான் அமையும் !!! ???

    cont……

  7. //கந்தல்களாகி விட்ட அத்வானி, சுஷ்மா போன்றவர்கள் தானாகவே விலகினால்
    பா. ஜ. க புனர் ஜன்மம் எடுக்க வழி உண்டு. // மிக மோசமான வார்த்தைப் பிரயோகம். பாஜக வை கட்டமைத்த அற்புதமான தலைவர் அத்வானி. வரலாறு தெரியாமல் மூத்த தலைவரை கந்தல் என்று விமர்சிப்பது அழகல்ல

  8. Recent quotes of NaMo (ஓம் நமோ நாராயணா- வருவாயா ? செய்வாயா?) –
    • On Secularism: Every Indian citizen needs protection. Making distinctions of minority and majority is nothing but vote-bank politics.
    • Justice for all and appeasement of none; minimum govt, maximum governance
    • இந்த இரண்டையும் செய்தாலே இந்தியாவின் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்
    • The NaMo Mantra: Civil servants must serve the interests of the poor and not pander to elected politicians and governments.
    • Old wisdom’s will never fail us, that is the belief I have always drawn from.
    • This nation does not need Acts, it needs Action. Referring to the UPA government he said, Acts are only needed when there is no sign of action.
    • The National Rural Employment Guarantee Scheme should have been a scheme to ensure public participation in the development of the nation.
    • All one needs is to change the approach to out-of-box thinking.
    • Grievance redress is one of the most important things in a democracy. The poorest of the poor need to feel empowered.
    • Individuals come and go, so there is a great need to institutionalize ideas. Leader and personality-driven schemes cannot sustain.
    • A public movement is necessary to ensure development but today there is a huge divide between the government and the people in India.
    • My experience in Gujarat shows that howsoever big a problem might be, it is not insurmountable if we have the will to act.
    • The UPA government has failed to inculcate the nationalist spirit in the common people to encourage their participation in nation building
    • People think they are giving a five-year contract of governance to politicians. Democracy must be a bond between the people and politicians.
    • Our mindset is our biggest problem. We must be able to convert difficulties into opportunities.
    • The power of discretion vested in decision-makers breeds’ corruption in this country. There is a definite need for a policy-driven state.
    • The age of military and economic power is over. The 21st century is all about knowledge. And historically, India has always led when knowledge is at the forefront
    • Waste management & solar power generation should be institutionalized for better environmental pollution control
    • Privatizing Indian Railways.
    • For all our Defense requirement we have to make our own indigenous war ammunition and equipment. Instead of importing these items we have to start exporting.

    cont..

  9. இன்று இந்தியாவில் ஒரு அரசியல்கட்சிவிடாமல் இந்த செக்யூலரிஸ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் பாதிப்பு பாஜக வில் 50 சதவிகிதம் காங்கிரஸில் 100 சதவிகிதம் மற்ற கட்சிகள் 50 – 100 இடைப்பட்ட சதவிகிதம் பாதிப்பில் செயல்படுகிறது. என்னதான் செக்யூலரிசம் பேசி செயல்பட்டாலும் இந்த கிருஸ்துவனும் துலுக்கனும் தங்கள் மதத்தை சார்ந்தவர் என்றால் எந்த கட்சியில் இருந்தாலும் மொத்தமாக ஒட்டு அளிப்பார்கள் இல்லையேல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் ஒட்டு அளிப்பார்கள். எனவே காங்கிரஸ் தவிற மற்ற கட்சிகளின் இந்த செக்யூலர் கோஷம் காங்கிரஸ் கட்சிக்கு சொற்ற சதவிகித வாக்கை பெற்று ஆட்சியை பிடிக்கும் பலத்தை இன்றுவரை அளித்துக்கொண்டிருக்கிறது என்பதை யாரும் உணர்வதாக தெரியவில்லை .

  10. @எஸ் .ஆர் .செந்தில்குமார் …………

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே……. இன்னும் எத்தனை நாளைக்கு திரு.அத்வானி அவர்களின் தவறான நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக உத்தேசம்……?

    அத்வானி அவர்களின் எண்ணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்……அதை அவர் வெளிப்படுத்திய விதம் நிச்சயம் பாஜகவுக்கு நன்மை அளிப்பதல்ல……சொல்லப்போனால் , நிதிஷ் குமார் இவ்வளவு அவசரமாக வெளியேறியதன் காரணம் அத்வானி அவர்களின் நடவடிக்கையே……

    பீகார் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் நிதிஷ் முதலில் அடக்கி வாசித்தார்……நரேந்திர மோடி அவர்கள் பாஜக தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டதைப்பற்றி கேட்கப்பட்டபோது , அது பாஜகவின் உட்கட்சி விவகாரம் என்றுதான் சொன்னார்…..தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக இருப்பதாகவும் சொன்னார்…..

    அத்வானியின் ராஜினாமாவை அடுத்து , பாஜக குழம்பியிருக்கும் நேரத்தை பயன்படுத்தி கூட்டணியை விட்டு வெளியேறி, இடைத்தேர்தல் தோல்வியை மறக்கடிக்க முயற்சி செய்கிறார்…….இதனால் அவருக்கு நிச்சயம் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை…….லாலு யாதவுக்கு மறுவாழ்வு அளித்தது மட்டுமே மிச்சம்……பீகார் ஒன்றும் ஒரிசா அல்ல,,,…பீகாரில் பாஜகவுக்கு நல்ல கட்டமைப்பு உண்டு……..

    // மிக நீண்டநாள் கூட்டாளியாக இருந்தவர் பிரிய எத்தனைக்கும் போது அமைதியாக க குலுக்கி பிரிந்திருந்தால் பாஜகவின் மரியாதை உயர்ந்திருக்கும்.//

    உங்களுக்கு ஆங்கில செய்தி சேனல்கள் பார்க்கும் வழக்கமில்லை என்று நினைக்கிறேன்…..கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிவானந்த் திவாரி போன்ற ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் மோடி அவர்களை வரம்பு மீறி விமர்சித்து வந்துள்ளனர்……லாலுவின் கட்சியில் இருந்து நிதிஷின் கட்சியில் வந்து ஒட்டிக்கொண்ட சிவானந்த் திவாரி எப்போதுமே மோடி அவர்களை மிக கேவலமாக விமர்சிப்பார்……சரத் யாதவோ , நிதிஷோ அந்த ஆளை கண்டித்ததே கிடையாது……இதுதான் குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் வேலை……

    கூட்டணி முறிவை தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத்தான் இத்தனை நாட்களாகியுள்ளது……..நிதிஷ் காரணமில்லாமல் மோடியை வெறுத்து செயல்பட ஆரம்பித்தவுடன் பாஜக தொண்டர்கள் மத்தியில் மனவேற்றுமை ஏற்பட்டுவிட்டது……இடைத்தேர்தலில் பாஜக தொண்டர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தான் நிதிஷ் கட்சி தோல்வியை தழுவியது…….

    //கூட்டணிக்கு யாரும் கிட்டே வர மாட்டார்கள். ஆறு மாநிலங்களில் சுமார் 130 சீட்டுக்கு மேல் வாங்க முடியாமல பாஜக ஓரங்கட்டப்படும். //

    இதெல்லாம் உங்கள் கணிப்பா ? இல்லை ஆசையா ?

    காரணம் கடந்த சில நாட்களாக இது போன்ற கணிப்புகள் தூள்கிளப்புகின்றன…….
    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களுக்கு மேல் உள்ளது…..அரசியலில் இது மிக நீண்ட காலம்….. அதற்கு முன்பாக ஐந்து மாநில தேர்தல்கள் வர இருக்கின்றன…..அவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெல்ல நல்ல வாய்ப்புள்ளது……[ மத்தியப்பிரதேசம் , ராஜஸ்தான் , டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ] அப்போது தேர்தல் களமே மாறிவிடும்…..வெல்லும் கூட்டணியில் ஒட்டிக்கொள்ள பல மாநிலக்கட்சிகள் முயற்சி செய்யும்…..

    2009 தேர்தலின் போது பல மாதங்களுக்கு முன்பாகவே அத்வானி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்…….நடந்தது என்ன? சரி …ஒரு வாதத்துக்காக அத்வானி அவர்களை முன் நிறுத்தினால் நிறைய கூட்டணி கட்சிகள் கிடைக்கும் என்றே வைத்துக்கொள்வோம்…….அதனால் பாஜகவுக்கு என்ன பலன்? மோடி அவர்களைத்தவிர வேறு யாரை முன் நிறுத்தினாலும் பாஜக தொண்டர்கள் வேலை செய்ய மாட்டார்கள்….பாஜகவுக்கு படுதோல்வி நிச்சயம்…..கூட்டணி கட்சிகள் வெங்காயமே போச்சு என்று காங்கிரஸ் கூட்டணிக்கு மாறிவிடுவார்கள்…..இருக்கவே இருக்கு மதச்சார்பின்மை…….

    மோடி மட்டுமே தொண்டர்களின் ஒரே சாய்ஸ்……இதுதான் நிதர்சனம்…….இதை நன்கு தெரிந்துகொண்டதால்தான் , ஆர்.எஸ். எஸ் சும் , ராஜ்நாத் சிங்கும் மோடி அவர்களை முன் நிறுத்துகிறார்கள்……சொல்லப்போனால் , தொகாடியா போன்றவர்கள் நரேந்திர மோடி அவர்களை விரும்பாதவர்கள்…….ஆனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை……மோடி அவர்களைத்தவிர வேறு யாரை முன் நிறுத்தினாலும் பாஜக நூறு இடங்களைக்கூட தாண்டாது…..

  11. அத்வானி நிலைகண்டு கலங்கினேன் அரசியலில் அவரை பின்னுக்குக் தள்ளுவார்கள் என்று நினைத்தே இருக்க மாட்டார் இந்த பழுத்த அரசியல்வாதி.

  12. \\//கந்தல்களாகி விட்ட அத்வானி, சுஷ்மா போன்றவர்கள் தானாகவே விலகினால்
    பா. ஜ. க புனர் ஜன்மம் எடுக்க வழி உண்டு. // மிக மோசமான வார்த்தைப் பிரயோகம். பாஜக வை கட்டமைத்த அற்புதமான தலைவர் அத்வானி. \\\

    உண்மை தான். மோசமான வார்த்தை ப்ரயோகமே. ஸ்ரீ அத்வானி ஜி அவர்கள் கந்தல் கழிசல் இல்லை தான்.

    ஸ்ரீ அத்வானி ஜி செங்கல் செங்கலாக கட்டமைத்து உருவாக்கியது பாஜக.

    பாஜக உருவானதில் அத்வானி ஜிக்கு பெரும் பங்குண்டு.

    அதே அளவுக்கு என்றில்லாவிட்டாலும் சற்றேறக்குறைய கட்சிக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பல கார்யகர்த்தர்களுக்கும் இந்த இயக்கத்தில் பெரும் பங்குண்டு.

    மோசமான வார்த்தைகளை ப்ரயோகம் செய்வதற்கு அத்வானி ஜி அவர்களுக்கு மட்டிலும் தான் அதிகாரம் உண்டு போலும்.

    தன் ராஜினாமாக் கடிதத்தில் அவரது வார்த்தை ப்ரயோகம் :-

    \\\For some time I have been finding it difficult to reconcile either with the current functioning of the party, or the direction in which it is going. I no longer have the feeling that this is the same idealistic party created by Dr. Mookerji, Pandit Deendayalji, Nanaji and Vaypayeeji, whose sole concern was the country, and its people. Most leaders of ours are now concerned just with their personal agendas.\\\

    உப்பிட்ட தேசத்திற்கு த்ரோஹம் செய்து தேசத்தைத் துண்டாடிய அரக்கப்பதரான முஹம்மத் அலி ஜின்னாவை அத்வானி ஜி அவர்கள் போற்றியதை பண்டித ஷ்யாம ப்ரசாத முகர்ஜியோ அல்லது தீன் தயாள் உபாத்யாயரோ இருந்திருந்தால் நிச்சயம் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். சரி போகட்டும்…….போறாத காலம்…..அவலை நினைத்து உரலை இடித்தாகி விட்டது.

    அது என்ன? கட்சியின் பெரும்பான்மையான தலைவர்கள் தங்கள் சொந்த லக்ஷ்யங்களுக்காகவே பாடுபடுகிறார்கள் என்ற வசை? இது சரியான வார்த்தை ப்ரயோகமா?

    குண்டர்படையாலும் பாங்க்ளாதேசத்திலிருந்து ரேஷன் கார்டு கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட முஸல்மான் ஓட்டுக்களாலும் பதவியைத் தொடர்ந்து வைத்துக்கொள்ள முடியும் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டிய கம்யூனிஸ பயங்கரவாதிகளின் மத்தியில் மக்களுக்காக உழைப்பதன் மூலம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று காட்டியுள்ளது பாஜக்.

    ஒரு நரேந்த்ரபாய் மோடி மட்டும் இல்லை. மானனீய சிவ்ராஜ் சிங்க் சௌஹான் மற்றும் மானனீய ரமண் சிங்க் அவர்களும் மானனீய மனோஹர் பாரிக்கரும் அவர்களைச் சார்ந்த பல கார்யகர்த்தர்களும் மக்களுக்கு உழைப்பதன் மூலமும் நாட்டிற்கு சேவை செய்வதன் மூலமும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் —– என உலகத்திற்குக் காட்டியுள்ளனர்.

    கட்சியின் பெரும்பான்மைத் தலைவர்கள் சொந்த லக்ஷ்யங்களுக்காகப் பாடுபடுகின்றனர் என்பது மோசமான வார்த்தை ப்ரயோகமே.

    குல்கர்னி ( அத்வானிக்கு ஜின்னாவைப் புகழ துர்போதனை செய்த பெருந்தகை) தற்போது நரேந்த்ரபாய் அவர்களை வசைபாடுவதில் இறங்கி உள்ளார். (அல்லது அத்வானி ஜி யை உசுப்பி விடுவதில் இறங்கி உள்ளார்). அத்வானி ஜி எப்படியெல்லாம் பேசப்போகிறார் என்பதைக் காலம் காட்டும்.

    மோசமான வார்த்தை ப்ரயோகங்களை தவிர்க்க வேண்டியது தொண்டர்கள் மட்டும் அல்ல. தலைவர்களும் கூட.

  13. \\\ மோடி மட்டுமே தொண்டர்களின் ஒரே சாய்ஸ்……இதுதான் நிதர்சனம்…….இதை நன்கு தெரிந்துகொண்டதால்தான் , ஆர்.எஸ். எஸ் சும் , ராஜ்நாத் சிங்கும் மோடி அவர்களை முன் நிறுத்துகிறார்கள்……சொல்லப்போனால் , தொகாடியா போன்றவர்கள் நரேந்திர மோடி அவர்களை விரும்பாதவர்கள்…….ஆனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை……மோடி அவர்களைத்தவிர வேறு யாரை முன் நிறுத்தினாலும் பாஜக நூறு இடங்களைக்கூட தாண்டாது…..\\\\

    மிகவும் நிதர்சனமான விஷயம்.

    அதே அளவு நிதர்சனமான விஷயம். ஜனதா தளம் பாஜகவுடனான தனது உறவை சுமுகமாக முடித்துக்கொள்ள விழைந்துள்ளது. ஆனால் உறவைத் துண்டித்துக்கொண்டது போன்ற படிக்கு கூட்டணி முறிவு ஏற்பட்டது தேவையற்றது.

    நரேந்த்ரபாய் அவர்களுக்கு நல்லாட்சியில் எவ்வளவு அக்கறை உள்ளதோ அது போன்றே அக்கறையும் நாணயமான அரசியலுக்கும் சொந்தக்காரர் நிதிஷ் குமார். பீஹாரில் நிதிஸ் பாபு என அன்புடன் அழைக்கப்படும் பெருந்தகை. மிகவும் கஷ்டமான சமயங்களில் கூட பாஜகவுடனான உறவை பேணியவர்.

    குல்கர்னி அத்வானி ஜிக்கு துர்போதனை செய்தது போல் இவருக்கும் யாரோ துர்போதனை செய்து லாலு யாதவுக்கும் காங்க்ரஸுக்கும் நற்பணி செய்துள்ளனர்.

    பாஜகவிற்கும் ஜனதாதளத்திற்கும் இன்று பீஹாரில் அடிதடி சண்டை. இது தேவையில்லாத ஒன்று. தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.

    வருங்காலத்தில் நரேந்த்ரபாய் அவர்கள் தனிப்பெரும்பான்மையுடன் கூட ஆட்சியில் வர வழி வகுக்கலாம். ஆனால் அதற்கான தூரம் மிக அதிகம். அதுவரை மற்ற பல கட்சிகளை நரேந்த்ரபாய் பாஜக வசம் கொணர வேண்டும். அவசியம் செய்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காலம் பதில் சொல்லும்.

  14. is it sangh parivar man never go wrong route because of in india was colonised by british that time sangh not oppose any british regime and they very close and supporting british raj in india should countinue, and post indipendence they chenge this faithfullness to america and his dollar because of sangh has collected every year huge doller in his real donours even still today v h p leader thoghadia not opposing any war in iraq lot of kids and womens has died that sangh teach the his religious faith to kill kids and womens may ram only know come to the point even today also any sangh leader not oppose and american occupation inthe world may be they india is us next target that time sangh get big benefit from us goverment and that is thingh one person did not condemn war in the name of fake allegation how he will be oppose his policy .we know all that one mannu mohan facist narendra all are same wine in different bottle mainly congress for bofors means b j p have 1 eddurappa 2 reddy brothers 3 ahmedabad riots al least congress do corruption but b j p do corruption plus murders in minority this is bonus is like malegaon kind of new trail jai ramji jai hind

  15. Crocodie tears are plenty for Advaniji from quarters which until yestesrday were inimical and opposed to him and his party. Every one should exert to support Shri Modiji. GOD save the country from psuedo secularists.

  16. நரேந்திர மோதி- குஜராத் கலவரம் – 2002 என மீண்டும் மீண்டும் காங்கிரஸ்காரர்கள் கூட்டிசைத்துப் பாடிக்கொண்டிருக்கவேண்டும்?
    மஹாராஷ்ட்ரா- மும்பயில் 1993 இல் காங்கிரஸ் அரசாங்கம் தானே பதவியிலிருந்து? அதைப்பற்றி எந்த காங்கிரஸ்காரனும் ஏன் பேசுவதில்லை?
    உத்தரப் பிரதேஷ் ‘மல்லியானா’, ‘மீரட்’ கலவரங்களைப்பற்றி ஏன் எந்த காங்கிரஸ்காரனும் பேசுவதில்லை? அச்சமயத்தில் காங்கிரஸ் அரசாங்கம் தானே பதவியிலிருந்தது?
    பீஹாரில் காங்கிரஸ் அரசாங்கத்தில் நடந்த பாகல்பூர், ஜாம்ஷட்பூர் கலவரங்களைப்பற்றி ஏன் எந்த காங்கிரஸ்காரனும் பேசுவதில்லை?
    டில்லியில் 1984இல் நடந்த குற்றமொன்றில்லாத சீக்கியர்கள்மீது கலவரம் நிகழ்த்தியது காங்கிரஸ் வெறியர்கள் ஜகதீஷ் டைட்லர் போன்ற ரௌடிக் கும்பல்கள் தானே? அவர்களைப்பற்றி எந்த காங்கிரஸ்காரனும் ஏன் பேசுவதில்லை?
    அடிக்கடி குஜராத் கலவரத்தைப்பற்றியே மோதியையும் இதிலிணைத்து எல்லா காங்கிரஸ்காரனும் கூட்டிசைத்துப் பாடிக்கொண்டே இருப்பது ஏன் எதற்காக? இதன் உள் நோக்கம் என்ன? எதற்காக இக்கலவரம் நடந்தது என்ற உண்மை தெரிந்தும் திரித்துப் பேசுவது ஏன்?
    இதையெல்லாம் கேட்க நினைத்துப் பார்ப்பதற்குக் கூட காங்கிரஸில் எந்த நாதியும் இல்லையா? இவைகள் எதைக் காட்டுகின்றன?

  17. “அத்வானி போன்ற உள்ளிருந்தே காலை இழுக்கும் நண்பர்கள் இருக்கும் வரை பாஜகவுக்கு வேறு எந்த பகைவனும் வேண்டாம்” என ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை படித்தேன். சரியாகத்தானிருக்கிறது.
    திருக்குறள் (882)
    வாள்போல் பகைவரை அஞ்சற்க, அஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு.

  18. எனதருமை தேசபக்தியுள்ள இந்திய மக்களுக்கு எனதன்பான வேண்டுகோள்::-ஆங்கிலேயனிடமிருந்து 1947 ஆகஸ்ட் 15 ல் நாம் அடைந்தோம் சுதந்திரம் ஆனால் தரித்திரம் ஊழல் தேசதுரோகம் மட்டும் நாட்டில் இன்று நிரந்தரம்.
    1. இன்று ரூபாயின் மதிப்பு படுபாதாளத்தில் விழுந்துவிட்டது. நமது . பொருளாதார மேதை சிங்கின் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பெருத்த சேதாரம் கண்டுள்ளது என் குற்றசாட்டிற்கு ஆதாரம் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு. வேட்டி கட்டிய ஒரு தமிழனின் .திறமை(!) யின் காரணமாக இன்று விவசாயிகள் வேட்டி வாங்கி கட்டகூட நிதியாதாரம் இல்லை.
    2. மாதத்திற்கு 2 முறை பெட்ரோல் விலை ஏறுகிறது.
    3. ஒரு அயல்நாட்டுகாரியின் தலைமையில் உள்ள ஒரு கட்சியின் ஆட்சியில் சரியான அயல்நாட்டு கொள்கை இல்லாததால் அண்டை நாடுகள் அனைத்தும் நமக்கு சண்டை நாடுகளாக மாறிவிட்டன.
    4. நகரவாசி முதல் கிராமவாசி வரை விஷம் போல் ஏறும்
    விலைவாசியால் ஒரு நரகவாசி (Hell Dweller) படும் கஷ்டத்தை தினம் தினம் அனுபவிக்கின்றனர்.
    5. மாநிலங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாத வக்கற்ற அரசு.
    6. நக்சலைட் தொல்லை , தீவிரவாதிகள் தொல்லை இவற்றை அழித்து ஒழிக்க அக்கறையும் இல்லை, திறமையும் இல்லை.
    7. ஊழல் மலிந்த அரசு. ஏதோ 1 அல்லது 2 ஊழல்கள் செய்தால் மனதில் நினைவில் வைத்துகொள்ளலாம். தினம் ஒரு ஊழல் என்ற கணக்கில் பட்டியல் நீளுவதால் நினவில் நிறுத்துவது ரொம்ப கஷ்டம்.
    8. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தோல்விதான். காரணம் திட்டம் தீட்டுவதே ஏதுமறியாத மக்களின் ஓட்டை வாங்கத்தானே! அதனால்தான் அதில் பல ஓட்டைகள் உள்ளன. சுதந்திர போராட்டத்திற்கு காந்தி, வ.ஊ.சி பாரதியார் கட்டபொம்மன், காமராஜர், இன்னும் பலபேர் பாடுபட்டதைவிட ராஜீவ் இந்திரா ஆகிய இரு காந்திகள் ரொம்ப ரொம்பவே பாடுபாட்டிருக்கின்றனர். அதனால்தான் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அந்த திட்டங்களுக்கு அவர்கள் 2 பேர பெயரை மட்டும் சூட்டுவார்கள்..

    தமிழ் நாட்டு மக்கள் அறிவாளிகள். ஒரே ஆட்சியை தொடர்ந்து நீடிக்கவிடமாட்டர்கள். திமுக தான் ஆளுகின்ற 5 வருடத்தில் தப்பு செய்தால் அடுத்த தடவை வீட்டுக்குத்தான். அதேபோலதான் அதிமுக வின் கதியும். அதே போல மத்தியுலும் மாற்றம் செய்யாத காரணத்தால்தான் தொடர்ந்து ஊழல் செய்கிறது. தங்களை யாரும் ஆட்ட முடியாது அசைக்கமுடியாது என்று நினைக்கிறது. அதனால் திராவிட கட்சிகளை போல செய்த தவறுக்கு வருந்தவோ அதன் பின் திருந்தவோ காங்கிரெஸ் கட்சிக்கு வழி இல்லை. ஆகவே வரப்போகும் 2014 தேர்தலில் நன்றாக யோசித்து வாக்கு அளியுங்கள் அதற்காக 3 ம் தர அரசியல் வாதிகள் நடத்தும் 3ம் அணியினை தேர்ந்தேடுத்துவிடாதிர்கள். அப்படி செய்தால் காங்கிரஸ் அதை ஆதரித்து கடைசியில் காலை வாரிவிடும் மூன்றே நாளில் 3ம் அணி முறிந்துபோகும்..(இதற்கு பழைய வரலாறுகள் உள்ளன) பின்னர் ஈசியாக மீண்டும் அந்த எமகாதக கட்சி ஆட்சிக்குவந்துவிடும்..
    ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். குஜராத்தை பாருங்கள் அந்த வளர்ச்சி மற்ற மாநிலங்களுக்கும் வரவேண்டும் என்றால் மோடி ஆட்சி வரவேண்டும். நாங்கள் ஊழல் பேர்வழி எடியுரப்பாவை ஆதரிக்க சொல்லவில்லை. நீங்கள் கண்கூடாக காணும் நல்லாட்சி நாயகன் நமோ (= நரேந்திர மோடி)வை நம்புங்கள் நல்லதே நடக்கும். ஒரு சான்ஸ் கொடுத்து தான் பாருங்களேன் அன்பு மக்களே சரிப்படவில்லை என்றால் அடுத்த 5 வது ஆண்டு அவரை தூக்கி எறிந்த விடுங்கள் குப்பை தொட்டிக்கு போகட்டும்.
    போலி மத சார்பற்ற போக்கிரிகள் வெறுமனே “அய்யயோ அவர்கள் மதவாதிகள் அவர்கள் வந்தால் நாடு சுடுகாடுவிடும் என்று சொல்வார்கள்.(இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா சொர்கமாக இருப்பதுபோல) வீட்டில் வயதானவர்கள் சின்ன குழந்தையினை பார்த்து “அங்கே போகாதே அங்கு போனால் பூச்சாண்டி உன்னை பிடித்து கொண்டு போய்விடும்” என்று சொல்வார்கள். அந்த குழந்தையும் பயந்து அங்கே போகாது. அப்படிதான் நீங்களும் காங்கிரஸ் என்ற ஏமாற்றுக்காரன் சொல்வதை நம்புகிறீர்கள். பூச்சாண்டி என்று ஒன்று உள்ளதா? அந்த குழந்தை தைரியத்தோடு சென்றால் அது குழந்தையினை பிடித்து சாப்பிடும் என்று நீங்கள் நம்புவீர்களா? அதுபோலதான் இதுவும். கோத்ரா ரயில் சம்பவத்தில் கரசேவை பக்தர்கள் சாவிற்கு முழு மூல காரணம் யார்? விஷ செடி விதையினை விதைத்தவர்கள் யார்? 2002 சம்பவததிரக்கு பிறகு இன்று வரை ஏதாவது அசம்பாவிதம் நடந்துள்ளதா பாருங்கள். குஜராத் வளர்ச்சி பாதையில் பீடு நடை போடுகிறது. அந்த வளர்ச்சி இந்தியா முழுவதும் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
    Dear muslim brothers , Please vote for development and not for appeasement

  19. அருமையான எழுத்தாக்கம்! நன்றி திரு. ராஜமாணிக்கம் அவா்களே! தொடரட்டும் உங்கள் பணி. பாரத அன்னையின் அளப்பரிய கருணையினால் மோடி அவா்கள் பாரதத்தை காவிக்கொடியின் கீழ் கொண்டு வந்து பாரில் உயா்த்துவார். கோட்டையில் காவிக்கொடி பறக்கும் நாளுக்காக காத்திருப்போம் (மிக விரைவில்).

    நன்றியுடன்
    கு. சுரேஷ்

  20. அற்புதமான கட்டுரை. மோடியின் தலைமையில் மாபெரும் நாடாக பாரதம் தலை நிமிர்ந்து நிற்கும் நாள் தொலைவில் இல்லை.

  21. You can take it from me that Modiji will be the man to go to Advaniji very devotedly and sincerely as a very first act for getting his blessings on being elected as PM of India in BJP raj in 2014. He is so broad-minded to forget his bitter experiences of the past (these days in 2013) and interested only in the welfare of Bharatmata and her children, that is people of India.

  22. “மோடி. மரண வியாபாரி என்று சொன்ன காங்கிரஸ் 1,40,000 தமிழ் மக்களை கொன்று அழிக்க ஆயுதம் வழங்கிய சோனியா காங்கிரஸ். 60,000 பெண்கள் விதவையாக தாலி அறுத்து கொண்டு தெருவில் பிச்சை எடுக்க வைத்த காங்கிரஸ். 10,000க்கும் மேற்பட்ட சீக்கியர்களை கொன்று ரத்தம் குடித்த கொலைகார காங்கிரஸ் துளியும் வெக்கமின்றி மோடியை இன்று குற்றம் சாட்டுகிறது.”

    கட்டுரையின் மேற்கண்ட பகுதி காங்கிரசின் உண்மையான உருவத்தைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. யாரோ எழுதிக் கொடுத்ததை ஆரம்பப் பள்ளிக் குழந்தையைப் போல தடுமாறும் கொச்சை இந்தியில் பேசி, தன்னை இந்திரா காந்தி என்று நினைத்துக் கொண்டு, இந்த நாட்டின் சுதந்திரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டவரைப் போல மேடையேறியதும் பதிவிசாக இந்திராவைப் போல தலையில் முக்காடு போட்டுக்கொண்டு இந்த நாட்டின் குடும்பப் பெண்ணைப் போல காட்டிக் கொள்ளும் சொனியாவின் பிதற்றல் மோடி ஒரு மரண வியாபாரி என்பது. மகாத்மாவின் மறைவுக்குப் பின், நேருவின் மரணத்துக்குப் பின் என்றுகூட சொல்லலாம், காங்கிரஸ் யாருடைய கரங்களில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். யாரையும் விலைகொடுத்து வாங்கிவிடமுடியும் என்பதை நிதீஷ் மூலம் நிரூபித்திருக்கும் காங்கிரஸ் போட்டிருக்கும் மனக்கணக்கு எத்தனை தூரம் மோடியின் ராஜதந்திரத்துக்கும், செயல் வீரத்துக்கும் முன்பாக நிற்க முடியும் என்பதை பார்க்கப் போகிறோம். போலி அரசியல் வாதிகள் பேசும் மதச் சார்பின்மை என்பது ஊரை ஏமாற்ற உபயோகப்படும் பொருளற்ற சொல். யார் இங்கு மதத்தை விட்டு விலகி நிற்பவர்கள். ஆட்சியில் மதங்கள் தலையிட்டு கேடு செய்வதனைத் தடுப்பதுதான் செகூலரிசம். காங்கிரஸ்காரர்களில் தமிழகத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்த ஒருவர் “பார்ப்பனர்கள்” என்று ஒரு ஜாதியாரை தொலைக்காட்சி பேட்டியொன்றில் வசைபாடுகிறார். அவர் ஒரு கிறிஸ்தவர். இவர் போன்றவர்கள் செகூலரிசம் பேசினால் பார்க்கிறவர்கள் சிரிப்பார்கள்.

  23. ஸ்ரீவிஸ்வநாதன் பீட்டர் அல்போன்ஸ் கருத்துபற்றி
    “ஆனால் மோடி ஒரு முஸ்லிம் கொடுத்த குல்லாயினை அணிந்துகொள்ள மறுத்துவிட்டார்” எனவே அவர் ஒரு மதவாதி” என்று மோடி மீது குற்றம் சாட்டினர். நான் கேட்கிறேன்.”கருணாநிதி கோவிலில் திருநீறு கொடுத்தால் அணிந்துகொள்ள மறுப்பார்”. ஏன் இந்த பீட்டர் அல்போன்ஸ் திரு நீறு அணிவாரா? என்ன அபத்தமான விளக்கம் மதச்சார்பின்மைக்கு. அந்த பாலிமர் உரையாடலை நானும் கொஞ்ச நேரம் பார்த்தேன். ஸ்ரீ எல் ஜி நல்ல விளக்கம் கொடுத்தால். அனால் சரியான டிஃபென்ஸ் என்றாலும் அஃபென்ஸ் சரியில்லை. நம்ம வீர. ராஜமாணிக்கம் ஸ்ரீ விஸ்வ நாதன் மாதிரி பதிலாக காங்கிரஸின் வண்டவாளத்தினை புட்டு புட்டு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  24. காங்கிரஸ் என்பது ஒரு மரணவியாபாரிகளின் கட்சி . பெரிய நாட்டை பிளக்க வெள்ளையன் சதி செய்தபோது , அந்த சதிக்கு உடன்பட்டு நாட்டை கூறிட்டனர் காங்கிரசார். அதனால் தான் நாட்டுப்பிரிவினையின் போது, கோடிக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.காஷ்மீரில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் 3 நாட்கள் தாமதம் செய்த ஜவகர்லால் நேருவால் வந்ததுதான் காஷ்மீர் பிரச்சினை. 1970-71 ஆம் ஆண்டில் வங்காள போரின்போது , இந்தியாவுக்குள் நுழைந்த அகதிகளை , ரேஷன் கார்டு கொடுத்து, இந்தியக்குடிமக்கள் என்று ஆக்கிவிட்டனர். அவர்களை பங்களா தேசத்துக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். அதனால் , அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நம் நாட்டு மக்கள் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். 1975-லே அவசர நிலைமை பிரகடனம் செய்து , பல கோடி மக்களை சிறையிலேயே கொன்றனர் காங்கிரஸ்காரர்கள் தான். அப்போது நம் தமிழ் நாட்டைச்சேர்ந்த ஒரு அரசியல் தலைவர் ( மஞ்சள் அவருக்கு அதிருஷ்ட நிறம்) சாத்தூர் பாலகிருஷ்ணனை கொன்றாயே சண்டாளி, மேயர் சிட்டிபாபுவை கொன்றாயே , இரத்தக்காட்டேரி , குடித்த ரத்தம் போதாதா இன்னமுமா இரத்தவெறி பிடித்து அலைகிறாய் என்று வீரவசனம் பேசி, அவருடைய குடும்ப கட்சியின் ” எம் ஒலியில் ” கடிதமும் கட்டுரைகளும் எழுதியதும், எமெர்ஜென்சி முடிந்தவுடன் , அதே ரத்தக்காட்டேரியுடன் கைகுலுக்கி காலில் விழுந்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக்க என்று அழைத்து காஷ்மீர பண்டிதரின் மகளின் காலில், புனித மோட்சம் அடைந்ததும் நாடறிந்த வரலாறு. 1984-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் அப்பாவி சீக்கியரை கொன்று 8000 பிணங்களை உருவாக்கி சாதனை செய்தனர். காங்கிரஸ் காரர்கள் ஆசை ஆனாலும் இன்னமும் நிறைவேறவில்லை. நம் நாட்டை முற்றிலும் அழித்தால் தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும். எனவே காங்கிரஸ்காரனுக்கு மீண்டும் ஓட்டுப்போட்டு நம் நாடு அழிய , காங்கிரஸ்காரனுக்கு யாரும் துணைபோகமாட்டார்கள். இந்தியாவில் மரணவியாபாரி என்றாலே காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.

  25. நண்பர் ஸ்ரீ வீர. ராஜமானிக்கம் ஸ்ரீ மோதியை ஒரு சாமுராய் ஆக வர்ணித்துள்ளார். அதில் மிகையில்லை. அவரை வாலியோடு ஒப்பிட்டுள்ளார். தனக்கு நேரோடு நேர் நின்று போரிடுபவர்களின் வலிமையில் பாதியை ஈர்த்துக்கொள்ளும் வரம் பெற்றவன் வாலி. ஆனால் திரு மோதியை வாலியின் மற்ற குணாதியசங்களைக்கொண்டவராக அவர் உருவகிக்கவில்லை. எனினும் வாலியை காவிய நாயகன் என்று வீர.ரா கூறுவது தவறு. ஸ்ரீ ராமாயண வீர காவியத்தில் நாயகன் ஸ்ரீ ராமபிரன் மட்டுமே. உணர்ச்சிவசப்பட்டு ஸ்ரீ வீர.ரா வாலியை நாயகன் என்று கூறிவிட்டார் அவ்வளவுதான். மாபெரும் சிவபக்தன் மாவீரன் என்றாலும் வாலி வீழ்ந்தான் தான் செய்த சோதரத்ரோகத்தால் என்பதே ராமாயணம் காட்டும் உண்மை.
    மாவீரர் மோதி மெய்யாகவே ஒரு தேசிய நாயகர் என்பதில் எள்ளவிலும் ஐயமில்லை. காங்கிரஸ்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும், பிராந்தியவாதிகளுக்கும், பிரிவினை வாதிகளுக்கும் அவர் சிம்ம சொப்பனம். அவர் ஸ்ரீ ராமனையும் ஸ்ரீ அனுமனையும் ஒருங்கே நிகர்த்த தலைவர். அவர் தலைமையில் நம் அன்னை பாரதம் வெற்றி மேல் வெற்றி பெறும்.

  26. தேசத்தில் மிகப் பெரும் துயரமாக த்வாதச ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் மஹாதேவர் கோயில் கொண்டிருக்கும் கோவிலருகே வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரிடர் நிகழ்ந்துள்ளது. கேதார்நாத் (கேதாரீஸ்வரர் கோவில்), பத்ரிநாத் (நரநாராயணர் கோவில்)மற்றும் ஹேம்குண்ட் சாஹேப் குருத்வாரா (கட்வால் பகுதி) பிதோராகட் (குமாவுன் பகுதி) பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து சென்ற யாத்ரிகர்கள் பத்ரமாகத் திரும்பியுள்ளனர் எனக் கேழ்க்க நேர்ந்தது. தென்னாடுடைய இறைவன் பெருங்கருணை.

    ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழப்பு என காலம் கடந்து செய்தித்தாட்களும் ஊடகங்களும் மனம் போன போக்கில் இது சம்பந்தமாகச் செய்திகள் வெளியிடுகின்றன. இறந்த உயிர்கள் ஹிந்துக்களது என்றால் அதிலும் கூட அலக்ஷ்யம் இருக்கும் போல.

    யுவராஜர் ராகுல் காந்தி அவர்கள் விதேச யாத்ரையாகப் போய் உள்ளார். அதைப்பற்றிக் கேழ்வி கேட்கப்பட்டதற்கு காங்க்ரஸ் சர்க்கார் அவர் பாதித்த இடங்களைப் பார்க்க வந்தால் மீட்புப்பணிகள் பாதிக்கப்படும். ஆக என்ன செய்தோம் எனப்பார்ப்பீர். யார் போனார்கள் எனப்பார்க்காதீர்கள் என நீட்டி முழக்கியுள்ளார்கள்.

    நரேந்த்ரபாய் மோடி அவர்கள் வெள்ளப்பகுதிக்கு விரைந்து சென்று தன் ராஜ்யத்திலிருந்து முக்யமான திறமைசாலிகளான அதிகாரிகளை வரவழைத்து ஆயிரக்கணக்கான யாத்ரிகர்களை மீட்டிருக்கிறார். சேதமான கோவிலின் புறப்பகுதிகளை திறம்பட செப்பனிட வழிவகுப்பதாகவும் சொல்லியிள்ளார். காங்க்ரஸுக்கு வயிற்றிப்போக்கை ஏற்படுத்தியுள்ளது இது. எனவே அந்த உதவியைக் காட்டமாக மறுத்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போல இங்கும் திருப்பணி செய்ய உத்தேசித்துள்ளனரா எனக்காலமே பதில் சொல்லும். ப்ரதேச காங்க்ரஸ் சர்க்கார் கையைப்பிசைந்து கொண்டும் மத்திய சர்க்கார் மிகவும் நிதானமாகவும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

    இருமுறை கேதார் யாத்ரை சென்றுள்ளேன். கோவிலின் பின்புறம் தொலைவில் மிக ப்ரம்மாண்டமான பர்வதம் உள்ளது. வெள்ளப்பெருக்கின் போது பாராங்கற்களும் நீரிடிகளும் மண்ணுமாக விழுந்ததில் கோவில் மட்டும் சேதமாகாது அருகாமையிலுள்ள பல இடங்கள் பெரும் சேதத்துக்குள்ளானது தெரிய வருகிறது. பல நூறு பேர்கள் கோவில் பரிசரத்திற்கருகில் இறந்துள்ளனர். கோவிலுக்கருகில் உள்ள காவல் தேவதையை புனல்மின் திட்டத்திற்காக வேண்டி அப்புறப்படுத்தியபின் இது போன்றதொரு விபத்து நிகழ்ந்ததாக பக்தர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

    பத்ரிநாத் கோவிலுக்கு பத்ரிநாத் பஸ்நிலையம் வரை பஸ் போக்குவரத்து உண்டு. கேதார் நாத்துக்கு கௌரிகுண்ட் (குப்த்காசிக்கு அருகாமையில் உள்ள ஸ்தலம்) வரை மட்டிலும் பஸ் போக்கு வரத்து. அதன் பின் நடந்து அல்லது மலைக்குதிரை / கோவேறுகழுதையின் மூலம் / அல்லது பல்லக்குத் தூக்கிகள் மூலம் இறைவனை தரிசிக்க கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் மலை மீது பயணம். அருகாமையில் பஞ்ச் கேதார் என்ற ஐந்து கேதாரீஸ்வர ஸ்தல யாத்ரை செல்பவர்களும் உண்டு. மற்ற ஸ்தலங்களின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.

    MI17 ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவத்தினர் மிகத்திறமையாக யாத்ரிகர்களை மீட்டு வருகின்றனர். பலர் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது யாத்ரிகர்கள் உயிரைக் காப்பாற்றியமை பெரும் பாராட்டுக்குறியது. அதே சமயம் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற ரீதியில் சிக்கிக்கொண்ட யாத்ரீகர்களிடம் தங்க மேலும் உண்ண மட்டுமீறிய பண வசூல் என்ற படிக்கான அவலங்களும் அரங்கேறியுள்ளது. ப்ரதம மந்த்ரியின் Disaster Management சரியான படிக்கு இயங்காததால் சரியான சமயத்தில் ராணுவத்தை அரசு deploy செய்யாததால் விரைவில் பணிகள் துவங்கப்படவில்லை.

    இன்னும் மீட்கப்படாத யாத்ரிகர்கள் இறையருளால் விரைவில் மீட்கப்படவேண்டி அனைவரும் ப்ரார்த்தனை செய்யவேண்டுமென்று இருகரம் கூப்பி முறையிட்டுக்கொள்கிறேன்.

    ஹர ஹர மஹாதேவ
    பம் பம் போல்

  27. அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் வீர ராஜமாணிக்கம்.

  28. தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் இருந்து இன்றைய பாஜகவினர் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. – 1951- டிசம்பர் மாதம் அன்றைய மெட்ராஸ் ( இன்றைய சென்னை ) பெருநகரில் திமுகவினரின் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் கடைசி நாளில் இரவு எட்டு மணிக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசுவது எனவும் , வேட்பாளர்கள் பட்டியலை அண்ணா அவர்கள் வெளியிடுவார் எனவும் நிகழ்ச்சி நிரலில் கண்டிருந்தது. அண்ணா அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்த போது, மக்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் , அந்த மாநாட்டுப்பந்தலுக்குள் தன் பாதுகாவலர்களுடன் ( personal guards ) உள்ளே நுழைந்தார். நுழைவாயிலில் இருந்து , அவர் மேடைக்கு வந்துசேர கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக கால்மணி நேரத்துக்குமேல் ஆகிவிட்டது. இதனால் அண்ணா அவர்களின் பேச்சு தடைப்பட்டது. எம் ஜி ஆர் மேடையில் ஏறி , அண்ணாவுக்கும், கூட்டத்தினருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு , மேடையில் பின் வரிசையில் போய், அமர்ந்துவிட்டார். அப்போது அண்ணா அவர்கள் தன்னுடைய பேச்சை மீண்டும் தொடர்ந்தார் ஆனால் கூச்சல் நிற்கவில்லை. எம் ஜி ஆரை பேச சொல்லுங்கள் என்று திமுக கொள்கை தங்கங்கள் கூக்குரல் இட்டனர். பார்த்தார் அண்ணா. இனி தான் பேசினால் எடுபடாது என்பதை புரிந்துகொண்டு, வேட்பாளர் பட்டியல் பத்திரிக்கைகளுக்கு கொடுத்து, நாளை காலை பத்திரிகைகளில் வெளிவரும் என்று சொல்லி, தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்டு , உட்கார்ந்துவிட்டார். மாயூரம் கிட்டப்பா போன்ற மூத்த தலைவர்கள் அண்ணாவிடம் தங்கள் வருத்தத்தை வெளியிட்டு , எம் ஜி ஆர் அவர்களை இனிமேல் நம் கட்சிக்கூட்டத்துக்கு அழைக்கவேண்டாம். அவரால் கூட்டத்தின் அமைதி கெடுகிறது என்று சொன்னார்கள். அதற்கு அண்ணா அவர்கள் நாம் வெற்றிக்கனியை பறிக்கவேண்டும், ராமச்சந்திரனின் முகத்தை காட்டினாலே முப்பது லட்சம் ஓட்டு கூடுதலாக கிடைக்கும் . அப்போது தான் நாம் காங்கிரசுக்கு சமாதி கட்டமுடியும் என்று சொல்லி கூட இருந்தவர்களின் வாயை அடைத்தார். எம் ஜி ஆருக்கு இருந்த செல்வாக்கை கண்டு அண்ணா அவர்கள் பொறாமைப்படவில்லை. அதை வைத்து திமுகவுக்கு வெற்றிபெற பயன்படுத்தி ஆட்சியை பிடித்தார். அதே போல பாஜகவினரும் , அத்வானி போன்ற பெருந்தலைவர்களும் , நரேந்திர மோதியின் செல்வாக்கை பயன்படுத்தி ி ஆட்சியை பிடித்து மீண்டும் மத்திய அரசில் அமர , வழி வகுக்க வேண்டும். நிதீஷ் குமார் விலகியிருப்பது பாஜகவுக்கும், நம் நாட்டுக்கும் நல்லது. வேறுபல மாநில கட்சிகளை அணுகி கூட்டணி அமைக்க முயல்க. முடியாவிட்டாலும் தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் , முன்பு தெலுங்கு தேசம் வந்ததுபோல மாநில கட்சிகள் படை எடுத்து , பாஜக அணிக்கு வரும். நரேந்திர மோடிதான் அடுத்த இந்தியப் பிரதமர்.

  29. வாயே திறவாத மன்மோகன் சிங்கை உண்மை பேசுபவர் என்று புகழ்ந்து, வாங்கிய காசுக்கு கூவவேண்டுமே என்று , நிதீஷ் குமார் பேசியுள்ளார். மத்திய அரசின் நிதி உதவி என்ற பெயரில் 44000 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ள தாசானுதாசர் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் என்ற பொதியை சுமக்கும் கழுதையாக மாறினால் , இத்தாலி ராணியின் கால் கழுவி , மஞ்சள் துண்டு முனிவரைப்போல தானும் வாழலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் இவருக்கு சாட்டையடி சவுக்கடி வரும் 2014- தேர்தலில் காத்திருக்கிறது.

  30. பீஹாரிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட காங்கிரெஸ் எம். பி. ஷகீல் அஹமது மூலம் மொரிஷியஸ் தீவில் இருக்கும் உல்லாச ஹோட்டலில் பீஹார் முதல்வருக்கு உள்ள பங்கு பற்றி பொருளாதாரக் குற்றப் பிரிவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று மிரட்டல் விடுத்து நிதீஷ் குமாருடன் திரை மறைவில் பேரம் பேசப்பட்டதை மறைத்து, எதோ மதச்சார்பற்ற கொள்கையை காப்பாற்ற தியாகம் செய்துவிட்டதாக போலியாக ஒரு நாடகமாடிய நிதீஷ்குமாரின் முகத்திரை கிழிக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஏதோ நரேந்திர மோடியை பா.ஜ. க. முன்னிறுத்தியதன் மூலம் செக்யூலர் தீட்டு பட்டுவிட்டதாக பொதுமக்களை நம்ப வைக்க இவர்கள் போட்ட நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்.

  31. மத்தியில் தாமரை ஆட்சி மலரவும் தமிழ் நாட்டில் அக்கட்சி காலூன்றவும் இதோ என் ஆலோசனைகள்::::::—–
    1, குஜராத்தில் மட்டும்தான் மோடிக்கு செல்வாக்கு உள்ளது என்று எதிரிகள் கூறுகின்றனர். அதனால் மோடிஜி மாதத்திற்கு 2 மாநிலங்கள் என்ற கணக்கில் அணைத்து மாநிலங்களுக்கும் சென்று ஒரு மாநிலத்தில் minimum 10 முக்கிய நகரங்கள் என்ற கணக்கில் பொதுகூட்டம் நடத்தி உரையாற்றவேண்டும். இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ளன. இப்படி செய்தால் அடுத்த 10 வது மாதத்தில் பிஜேபி ஆட்சி பி ற க் கு ம்
    2 இந்த தேர்தலில் கோவில் கட்டுவதை பிரதான படுத்தாமல் வளர்ச்சி, காங்கிரஸ் ஆட்சியின் ஊழல், விலைவாசி, உயர்வு பெட்ரோலின் தாறுமாறான விலை ஏற்றம், தீவிரவாதம் போன்றவற்றை மட்டும் மிக காட்டமாக பேசவேண்டும்
    3, தேர்தலின்போது scientific technology யினை பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
    4. தமிழகத்தில் பிஜேபி க்கு என்று பத்திரிக்கை பலம் கிடையாது. அதனால் உடனடியாக ஒரு தமிழ் தினசரி துவக்கவேண்டும் அதில் வெறும் பக்தி புராண கதைகளை வெளியிடாமல் எதிரிகளின் குற்றச்சாட்டுகளை (மதவாத கட்சி & ஆர் எஸ் எஸ் பற்றி அபாண்டம்) ஆதாரபூரவமாக மறுப்புகளை காட்டமாக வெளியிடவேண்டும்.
    5, பிஜேபி சார்பில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டி இடாமல் வெற்றி வாய்ப்புள்ள 3 தொகுதிகளில் மட்டும் (கன்னியாகுமரி மாவட்டம்) தீவிர கவனம் செலுத்தவேண்டும். அணைத்து தமிழ் நாட்டு தலைவர்களும் அங்கே பிரசாரம் செய்யவேண்டும். மற்ற மாநில தலைவர்களயும் அந்த 3 இடங்களில் பிரச்சாரம் செய்ய அழைத்துவரவேண்டும். வெளி மாவட்ட கட்சி தொண்டர்கலை அழைத்து வந்து குழு அமைத்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று canvas செய்யவேண்டும்.
    7. முடிந்தால் ஏதேனும் சிறு கட்சிகளோடு கூட்டு வைத்துகொள்ளலாம் ஆனால் minority களை தாஜா செயும் கட்சிகளை ஒதுக்கிடவேண்டும்.
    8.தமிழ் நாட்டில் பிஜேபி க்கு என்று ஒரு டிவி சேனல் இல்லை Lotus News என்று ஒன்றுள்ளது.ஆனால் எதற்கும் பயனில்லா சானெல் அது. மக்களால் காரி துப்பப்பட்ட “நித்தி” யின் பேச்சை ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. “இமையம் டிவி” வைகோ வின் பேச்சை ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. அதுபோல பிஜேபி தலைவர்களின் பேச்சை ஒளிபரப்பிடாமல் ஒரு காமுகனின் பேச்சை கேட்க வேண்டயதாய் உள்ளது.
    GV tv யில் கூட அன்றாட பிரச்சனைகளை குறித்து பிரமுகர்களை அழைத்து Debate நடத்துகிறது. அதையாவது lotus டிவி செய்கிறதா? மேலும் செய்திகளை மூச்சிவிடாமல் வாசிப்பார்கள் மூச்சிவிடாமல் பாடுவது போல ஏதாவது போட்டியா? இடை இடையே வானிலை அறிக்கைவேறு. எவனாவது இந்த கன்றாவி டிவியினை பார்ப்பானா? எனவே ஒரு ஜனரஞ்சகமான அதே நேரத்தில் கட்சி வளர்ச்சிக்கு பெருமளவு உதவும் வகையில் ஒரு டிவி சேனல் ஐ உடன் துவக்கவேண்டும்.
    9. கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் ஒரு தீவிர drive னை உடன் மேற்கொள்ளவேண்டும். திக திமுக ஆகிய கட்சிகளால் பிஜேபி மீது ஒரு வெறுப்புணர்வு மக்கள் மத்தியில் உள்ளது. அதனை போக்கும் வகையில் அவர்களின் குற்ற சாட்டுகளுக்கு பதிலளித்து booklets பிரிண்ட் செய்து உறுப்பினர்களை சேர்க்கும்போது விநியோகிக்கவேண்டும். புத்தகத்தை படித்து மக்கள் மனம் மாறுவார்கள்.
    10/ சன் நியூஸ் டிவி யில் debate ல் கலந்து கொண்டாலே கட்சி வளர்ந்து விடும் என்று நம் தமிழ் நாட்டு கட்சி தலைவர்கள் பகல் கனவு கொண்டிருக்க கூடாது. L G (=இல கணேசன்) என்பவர் காலி L G பெருங்காய டப்பா. டிவி debate களில் அவரால் smart ஆக பேச தெரியவில்லை Debate நடத்துபவர் களும் பிஜேபி நபர்களை பேசவிடுவதில்லை அதனால்தான் நமக்கொரு
    டிவி சானெல் தேவை என்று வாதிடுகிறேன்.
    11. கட்சி பிரசாரத்திற்கு பேச்சு திறமை உள்ள youth களை பயன்படுத்தவேண்டும்.அவர்களுக்கு தேவை எனில் ஓர் workshop நடத்தலாம்.
    12. உள்ளூர் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை கண்டிக்கும் வகையில் நூதனமான போராட்டங்களை நடத்தவேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியல் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பாடும். கோவில் பிரச்னை ஒன்றிற்காக மட்டும் போராடினால் மக்கள் வெறுப்படைவார்கள்.
    13. தமிழ் ஹிந்து வில் கட்டுரை எழுதுவோர் கண்டிப்பாய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும்.
    14. தமிழ் ஹிந்து வில் வரும் அரசியல் கட்டுரைகளில் திமுக அதிமுக பற்றிய கட்டுரைகளை booklet ஆக அச்சடித்து தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விநியோகிக்கவேண்டும்.
    15. பிஜேபி ஒரு மதவாத கட்சி அல்ல என்று காட்டும் வகையல் பிரசார மேடையில் முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவ SC & ST பிரமுகர்களை உட்கார அல்லது பேசவைக்கவேண்டும்.
    18 வரும் தேர்தலில் வாஜ்பாயை (“கருணா” மாதிரி wheel chair ல்) மிக முக்கிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வைக்கவேண்டும். அவரும் மறுக்காமல் பெருந்தன்மையோடு வரவேண்டும்.
    19.பிரிந்துபோன பிஜேபி பிரமுகர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டு வரவேண்டும்.
    20. எந்த கட்சியும் சாராமல் மதில் மேல் பூனையாக உள்ள பிஜேபி மீது நற்பதிப்பு கொண்டுள்ள personality களை பத்திரிகைகளில் அறிக்கை விட செய்யலாம்.
    21. தேர்தல் அறிக்கையில் (manifesto ) அணைத்து மக்களையும் கவரும் வகையில் நன்றாக யோசித்து கவனமாக அனைவரயும் கலந்து ஜாக்கிரதையாக தயாரிக்கவேண்டும்.
    22. இன்னும் தேர்தல் தேதி எங்கேயோ இருக்கிறது. அதற்குள் என்ன அவசரம் என்று சோம்பி இராமல் இன்றே பணிகளை துவங்கவேண்டும்.
    23. மேடையில் பேசுவது அறிக்கை விடுவது போன்ற விஷயங்களில் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாக செய்யவேண்டும். ஏன் எனில்
    காங்கிரஸ் காரர்கள் அதை பெரியதாக குற்றம் சாட்டி பேசுவார்கள். அவர்களுக்கு மீடியா வும் ஒத்து ஊதும். நாம்தான் careful ஆக இருக்கவேண்டும்.
    24.தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் நல்ல பெயர்கொண்டவர்களாக இருக்கவேண்டும். அவர்களின் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும். அவர்களின் நற்குணங்களை விளம்பரபடுத்தவேண்டும். நல்லதை (விளம்பரம் வேண்டாம் என்று) மூடி மறைப்பதால் தீமைதான் விளையும். (இப்படிதான் RSS செய்யும் நற்காரியங்களை நாமே மூடி மறைப்பதால் RSS பற்றி திமுக செய்யும் பொய் பிரசாரத்தால் அதர்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
    25. பிஜேபி கட்சியின் well – wishers வேறு ஏதாவது கருத்துகளை சொல்ல விருப்பபட்டால் இங்கே சொல்லலாமே! please do
    .

  32. நண்பர் ஸ்ரீ விஸ்வநாதன் நல்லப்பரிந்துரைகளை வழங்ககியிருக்கிறார். அவை நிச்சய்ம் பாஜக ஆட்சிக்கு வர வழிவகுக்கும். ஆனால் ஸ்ரீ நித்யானந்தரைப்பற்றி அவர் எழுதியவை அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
    தமிழகத்தில் பாஜக திரு விஜகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணிக்கு முயற்சிக்கவேண்டும். அது தமிழகத்தில் ஏற்கனவே பெருகிவரும் ஸ்ரீ மோதிஜி அலையை பாராளுமன்ற சீட்டுகளாக மாற்ற வழிவகுக்கும். தேமுதிக திமுக உள்ளிட்ட ஐமுகூ அணியில் இருப்பதைவிட தேசிய ஜன நாயக்கூட்டணியில் அங்கம் வகிப்பது தமிழகத்திற்கும் நன்மைபயக்கும். காங்கிரசை வீழ்த்துவது நாட்டுக்கும் பயன் தரும்.
    சிவஸ்ரீ.

  33. கபில் சிப்பல் இன்று அளித்துள்ள பேட்டியில் நரேந்திர மோடியை தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.நமது சுப்ரீம் கோர்ட்டின் மூலம் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரித்து , மோடி மீது எவ்வித குற்றமும் இல்லை என்று அறிவித்து உள்ளது. அதை மூடி மறைத்து, மோடி மீது , மீண்டும் மீண்டும் பொய்க்குற்றச்சாட்டுக்களை கூறிவரும் அயோக்கியர்களுக்கு மனசாட்சியே கிடையாது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ,பெரிய கலவரம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களில் இந்துக்களும், முஸ்லீம்களும் அடக்கம். அந்த படுகொலைகளுக்கு எப்படி ஜவஹர்லால் நேரு பொறுப்பல்லவோ, அதே போல குஜராத்தில் நடந்த வன்முறைகளுக்கும் மோடி எவ்விதத்திலும் பொறுப்பல்ல. இந்த வன்முறைகளுக்கு யார் பொறுப்பு தெரியுமா ? கோத்ரா ரயில் நிலையத்தில் பயணிகள் பெட்டியை பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி ஐம்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொலை செய்த இஸ்லாமிய தீவிர வாதிகளே, அதன் பின்னர் நடந்த பதில்தாக்குதலுக்கு காரணம்.

  34. நாம் அனைவரும் தேர்தலில் பி ஜே பி கட்சிக்கு வாக்களித்து காங்கரஸின் முகத்தில் கரியைப் பூச வேண்டும்.
    அவர்கள் மோடியின் செல்வாக்கைக் கண்டு அஞ்சுகிறார்கள்.அதனால்தான் இவ்வளவு கூச்சல்.

  35. எப்படியும் வந்துவிடுவார் நரேந்திரா மோடி பிரதமராக. காலை 6 மணி அளவில் சிக்னலை கடக்கும் பொது சிகப்பு விளக்கு எறிந்தால் கூட நின்றுதான் செல்ல வேண்டும். இன்று எதனை பேர் இதனை செய்கிறோம். மக்களே கரப்ட் ஆகி உள்ளார்கள் என்பது தான் உண்மை. முதலில் நாம் அவர்கள் மனங்களையும் சலவை செய்ய வேண்டும். இதற்கு வழிவகுக்கும் ஹிந்து தத்துவங்களை எதாவது ஒரு வடிவில் பத்து பேருக்காவது தினமும் சொல்ல வேண்டும். மற்ற மாற்றங்கள் காலபோக்கில் தானாய் நிரந்தரமாய் நிகழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *