மஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு

mahabharata_t

நண்பர் பா.மாரியப்பன் அனுப்பியுள்ள இந்தக் கோரிக்கையை அப்படியே வெளியிடுகிறோம். ஆர்வமுள்ள தமிழ்ஹிந்து வாசகர்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு தற்போது இருப்பில் இல்லை. குறைந்த அளவே அச்சிடப் பட்ட முந்தைய வெளியீட்டின் பிரதிகள் அனைத்தும் ஒரு வருடம் முன்பு விற்றுத் தீர்ந்து விட்டன.

இந்தப் பொக்கிஷத்தை இப்போது வாசிக்க விரும்புபவர்கள் புத்தகம் கிடைக்காமல் அல்லல் உறுகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

இந்நூல் டி வி ஸ்ரீனிவாஸசாரியார் அவர்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியால் அவர்களால் தொகுக்கப்பட்டது.

இந்த மாபெரும் பணிக்குப் பின் 25 வருட உழைப்பும் தியாகமும் பல நல்லுள்ளங்கள் செய்த உதவிகளும் உள்ளன. சிலிர்ப்பூட்டும் அந்த வரலாற்றை ”மகாபாரதம் தமிழாக்கிய ம.வீ.ராமானுஜாசாரியர்” என்ற இந்தக் கட்டுரையில் வாசிக்கலாம்.

இது தொடர்பாக ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ராமன் அவர்களை நண்பர் திரு.சிவபிரசாத் தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது அவர் குறைந்தது நூறு பேர் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்து கொண்டால் கண்டிப்பாக வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார். மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும்.

விலை ரூ.4000 அல்லது அதற்கு சற்று மேல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமன் அவர்களை 09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது முன்பதிவைச் செய்து கொள்ளலாம்.

இந்தப் பதிப்பு வர வேண்டுமென்றால் குறைந்தது நூறு பேராவது முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பதால் நண்பர்கள் விரைந்து முன்பதிவு செய்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரியப்படுத்துமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

11 Replies to “மஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு”

 1. ம.வீ.ரா அவர்களின் முன்னுரைகளை மட்டும் தட்டச்சு செய்து என் முழு மஹாபாரதம் வலைப்பூவில் வெளியிட்டு வருகிறேன்.

  அந்த முன்னுரைகளைப் படித்தால், ம.வீ.ரா அவர்கள் எவ்வளவு சிரமத்திற்கிடையில் மஹாபாரதத்தைப் பதிப்பித்தார் என்பதை அவர் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.

  இயன்றவர்கள் முன்பதிவு செய்து அந்தப் புத்தகங்களை மறுபதிப்பு செய்ய ஒத்துழைக்க வேண்டும்.

 2. திரு. வெங்கட்ராமனன் அவர்களை 09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

 3. நான் ஒரு புத்தகத்தை வாங்கிக்கொள்ள அவருக்கு மெயில் அனுப்பி உள்ளேன்.
  தகவலுக்கு கோடி நமஸ்காரங்கள்.

 4. வெங்கட ரமணனை தொடர்பு கொள்ள – + 91 9894661259

  9/135 Nammalwar street, East tambaram, chennai.

 5. தற்போது புஸ்தகம் கிடைக்குமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *