ரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்

சேலம் ஆடிட்டர் ஸ்ரீ ரமேஷ் அவர்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆகின்றன.  

அவரது  நெருங்கிய நண்பரின் இதய அஞ்சலி . 

 

homage to Ramesh

பொங்கி வழியும் புன்சிரிப்பைக் காண நேரிட்டால் எங்கே கொல்ல மனம் வராதோ என்று அஞ்சி, அந்தக் கொடிய ஜூலை 19-ஆம் நாள் இரவில், கொலை பாதகர்கள் கோழைகளைப் போல பின்னிருந்து ‘ரமேஷ்ஜி’ என்று அன்புடன் அழைக்கப் படும் ஆடிட்டர் வி.ரமேஷ் அவர்களை இரக்கமின்றி கொடிய ஆயுதங்களினால் 24 முறை வெட்டிச் சாய்த்தனர்

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்.

(குறள்- 268)

 ‘இந்த உயிர் கூட தனக்கில்லை பிறர்க்கு என்று கருதுபவனை மன்னுயிர் தொழும்’ என்கிறார் திருவள்ளுவர். உண்மைதான் – சேலம் மாநகர் மக்கள் அனைவரும் கலங்கி நின்ற தினம் ஜூலை 20-ஆம் தேதி.

அன்று தான் மிக நல்ல மனிதன் என்று ஒட்டுமொத்த சேலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் பூதஉடல் மயானத்தில் தீ மூட்டப்பட்டது.

அன்று தான்….

 • எந்த ஊருக்குச் சென்றாலும் தன் கணவன் புன்சிரிப்பு மாறாமல் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையை அவர் மனைவி சுபா இழந்த தினம்.
 • இன்னும் விதைக்கப் படாத முத்தங்களுக்கு ஏங்கிய கன்னங்களுடன், அவர் கண்மணியான அருமை மகள் ஸ்மிருதி காத்திருந்த தினம்.
 • வயது காலத்தில் தன்னை தவிக்கவிட்டுச் சென்ற மகன் இனித் திரும்ப மாட்டான் என்று அவர் அன்னை கதறி அழுத தினம்.
 • என் அண்ணன் இருக்கிறான், எனக்கு வேறெதுவும் வேண்டாம் என்று பெருமைப் பட்டுக் கொண்ட தம்பி சேஷாத்ரியின் கர்வம் பங்கப்பட்ட தினம்.
 • என் தலைவன் இருக்கிறான் என்று மார்தட்டிக் கொண்ட பல்லாயிரம் பாஜக தொண்டர்கள் நிர்கதியாய் நின்ற தினம்.
 • அமைப்பு ரீதியாகச் சிந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கி தனிமனித இழப்பைத் தாங்கிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். என்ற அற்புத அமைப்பு கூட கலங்கி நின்ற தினம்.

உடல் பெறப்பட்டதும் சிறு சலசலப்பு – அதுவும் காவல்துறை மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டதால்- முடிந்து உடல் நகர வீதிகள் வழியாக எடுத்துவரப் படுகிறது. மக்களின் கண்களில் தன்னிச்சையாக வழியும் கண்ணீர் அஞ்சலி.

கடையடைப்புக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. சொல்லாமல் சேலம் நகரெங்கும் கடைகள் அடைக்கப் படுகின்றன. கைகள் தொழுகின்றன. கால்கள் தொய்ந்து பின் செல்கின்றன.

‘வார்த்தை இன்றிப் போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்’ என்பான் கண்ணதாசன். இறுதிவரை அந்த மௌனம் நெஞ்சை அறுப்பதாக இருந்தது.

எப்படி இது சாத்தியம்?

எனக்கு வள்ளுவரைத் தவிர வேறு ஒரு பெருந்தகை இவன் மாண்பு கூறக் கிடைக்கவில்லை.

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.

(குறள்- 386)

 ஒரு சிறு முயற்சியாக, குறைந்தது ஐம்பது அறுபது பேரிடமாவது “ரமேஷ்ஜியிடம் உங்களைக் கவர்ந்த விஷயம் எது?”” என்று கேட்டிருப்பேன். ஒருவர் கூட விடாமல் சொன்ன விஷயம் “அவருடைய சிரித்த முகம்“ என்றது தான்.

புன்சிரிப்பு, வரவேற்கும் சிரிப்பு, வெள்ளைச் சிரிப்பு என்று அவரது சிரிப்பிற்கு பலரும் பரிமாணம் கொடுத்தனர். பூவாய் மலரும் சிரிப்பு,  தீபாவளி அன்று பொங்கிப் பிரகாசிக்கும் பூவாணம் போன்ற சிரிப்பு…. நான் இருக்கிறேன் என நம்பிக்கை ஊட்டும் சிரிப்பு அது.’

‘’அவன் அவ்வளவு அழகு. என் பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை. கண்ணுப் பட்டுடும்னு நானே என் பிள்ளையை நன்னாப் பார்த்ததில்லை”” என்று அவரது அன்னை அரற்றும்பொழுது, நமக்கும் அடிவயிறு கலங்குகிறது.

1974-ம் வருடம், பாரதி வித்யாலயாவில் பள்ளிப் படிப்பு. பிறகு சௌடேஸ்வரி கல்லுரியிலிருந்து பி.யூ.சி, பிறகு பி.காம். படிப்பு. அதன் பிறகு ஆடிட்டர் சுந்தரத்தின் கீழ் அப்பரண்டீஷாகச் சேர்ந்து தணிக்கைத் துறை படிப்பை முடிக்கிறார்.

முளையிலே மணத்த முல்லைக் கொடி என்றால் அது ரமேஷ்ஜி ஒருவராகத்தான் இருக்கும். தலைவர்கள் உரூவாவதில்லை; பிறக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணமாக வாழ்ந்துகாட்டிய மனிதர்.

“ரமேஷ் என் பள்ளித் தோழர். என் உற்ற நண்பர். இதற்கெல்லாம் மேலே வேறு ஏதாவது வார்த்தை கிடைக்குமானால் அதையும் போட்டுக்குங்க.. சிறு வயதில் இருந்தே அவருக்கு இன, மத, ஜாதி பாகுபாடு இருந்ததில்லை. நாங்க வன்னியர். அவங்க அய்யருங்க. வீராணம் பகுதியில எங்களுக்கு தோட்ட வீடு இருக்கு. ஒரு சைக்கிளை மிதிச்சுகிட்டு வந்துடுவாரு. எங்க தோட்டத்தில புன்னை மரம் ஒன்னு இருக்கும். அதுக்கடில கயித்துக் கட்டிலைப் போட்டுக்கிட்டு படுத்திடுவாரூ. எந்திரிச்சா நாங்க கம்பங்கூழு, கம்பங்களி இதல்லாம் தான் சாப்பிடுவோம். அவங்க அய்யமாருங்க, என்ன சாப்பிடுவாரோன்னு நினைச்சா,  நாங்க குடிக்கும் கம்பங்கூழையே வாங்கி குடிப்பாரு”” என்று ஒரு நண்பர் நினைவு கூர்கிறார்.

அவரது நட்புப் பாராட்டும் தன்மையால் நட்பு வட்டம் விரிவடையத்தொடங்கியது. சுந்தர் லாட்ஜ் என்பது சேலத்தில் ஒரு லாண்ட்மார்க்; இளைஞர்களின் கூடாரம். ரமேஷ் தன் நட்பு வட்டத்தை இங்கிருந்து தான் தொடங்குகிறார். இரண்டு அறைகள் சுந்தர் லாட்ஜில் ரமேஷ் பெயரில் எப்பொழுதும் உண்டு. ஆரம்ப காலங்களில் ரமேஷுடன் பழகிய அனைவருக்கும் சுந்தர் லாட்ஜும் ரமேஷ்ஜியும் பிரிக்க முடியாதவை என அறிவர். நண்பர்களுடன் வெற்று அரட்டையாக இருக்காது.

“அந்தப் பேச்சும், விவாதமும் தனி. எமெர்ஜென்சி காலம் அது. ஜனதா கட்சி தோன்ற தொடங்கிய நேரம். அவர் விவாதங்களில் தெறிக்கும் தொலைநோக்குப் பார்வையை இன்றும் என்னால் மறக்க முடியாது. இந்திரஜித் குப்தாவிடம் உள்துறை அமைச்சகப் பொறுப்பை வி.பி.சிங் கொடுத்ததும் கடவுள் நம்பிக்கையற்ற இடதுசாரிகள் கைகளில் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு போய்விட்டதே, இனி நாடு என்னாகுமோ என்று பதைத்தவர் ரமேஷ்.”…” சொல்லும்பொழுதே நண்பருக்கு கண்ணீர் திரள்கிறது.

ஆர்.எஸ்.எஸ். என்னும் மாபெரும் இயக்கத்தின்பால் அவர் ஈர்க்கப்படுகிறார். மண்ணில் புதைந்துகிடந்த தங்கத்தை உருக்கி புடம்போட்டு மின்ன வைக்கிறது சங்கம். கோவிந்தாச்சாரியார், பீஷ்மாசாரியார் போன்ற ஆசான்களிடம் பாலபாடம் கற்றார்.” என் பணி சங்கப் பணி. ‘’நான் தேர்ந்தெடுக்கும் உத்தியோகம் என் சங்கப் பணிக்கு ஊறு விளைவிக்கும் என்றால் அந்தப் பணி எனக்கு வேண்டாம். என் ஆளுமையின் கீழ் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஆடிட்டர் உத்தியோகத்தைத் தேந்தெடுத்தேன்“ என்பாராம்.

‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ என்ற அற்புத அமைப்பில் அவர் இணைந்ததை ஒரு ஸ்வயம்சேவகர் இவ்வாறு நினைவு கூர்கிறார்…

“சேலம் நகரில் பத்மநாபன் என்ற சங்கப் பிரசாரகர் இருந்தார். ‘பத்துஜி’ என்று தான் நாங்கள் அவரை அழைப்போம். அவர் பொறுப்பில் இருந்த சமயம் தான் ரமேஷ் ஆர்.எஸ்.எஸ்.ஸில் தன்னை இணைத்து கொண்டார். ஒருநாள் பத்துஜி வெளியூர் செல்வதற்காகப் புறப்படுகிறார்.

சங்கக் கார்யாலயத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் ரமேஷை எழுப்பி ‘நான் கிளம்பிப் போகிறேன். சங்கத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்”’ என்று கூறிச் சென்றவர், வழியில் விபத்திற்குள்ளாகி கோமா நிலையில் இருந்து உயிரை விடுகிறார்.

பத்துஜி தன்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டார். அதனால் சங்கம் தான் என் இரு கண்கள் என்ற அர்ப்பணிப்புடன் செயல் ஆற்றியவர்” அவர்…”

சங்கம் மூலம் வளர்ந்ததால் அயராத உழைப்பு, அர்பணிப்புடன் கூடிய செயல்பாடு, அனைவராலும் தொடர்பு கொள்ள முடிகின்ற எளிமை, முன்னின்று காரியம் ஆற்றும் தலைமை மாண்பு, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கு தன் உடல் பொருள் ஆவியை ஈந்து செயல்படும் தன்மை… என்று அவருடைய குணங்களை பல்வேறு தரப்பு மக்களும் அடுக்கிக்கொண்டே செல்கின்றனர்.

‘அவர் ஒரு பூர்வபாஷி’ என்றார் ஒரு நண்பர்.

புரியவில்லை என்றேன்.

“ஸ்ரீ ராமனுக்கு பூர்வபாஷி என்ற பெயர் உண்டு. எவரிடமும் முதலில் தான் முன் சென்று அறிமுகப்படுத்திப் பேசும் நல்ல குணத்தினால், அவருக்கு அப்படி ஒரு பெயர். அதேபோல எந்த அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் பார்க்கும் பொழுது முதலில் தானாக முன்வந்து பேசும் குணம் உடையவர் ரமேஷ்ஜி.”

நூற்றில் ஒரு வார்த்தை அது.

அவர் ஆற்றிய கட்சிப் பணிகளைப் பற்றி பட்டியலிடவே முடியாது. அந்தத் தலைமை மாண்புடன் ஒரு பிறவி மீண்டும் எப்பொழுது வருமோ என்று தொண்டர்கள் ஏங்குவது நிதர்சனம்.

ஓர் உதாரணம். அவரை கைபேசியில் தொடர்பு கொள்ளும்பொழுது அவர் மும்முரமாக இருந்தால், மறக்காமல் நேரம் கிடைக்கும்பொழுது அவரே கூப்பிட்டு என்ன விஷயத்திற்காக கூப்பிட்டீர்கள் என்று விசாரிக்கும் மாண்பினை நான் கேட்ட அனைவரும் கூறினர்.

 • கோவில்
 • நாடு
 • குடும்பம்
 • தன்னலம்

-இதுதான் ரமேஷ்ஜியின் வரிசைக்கிரமமான தாரக மந்திரம்.

கோவிலுக்கும், நாட்டிற்கும், குடும்பத்திற்கும் செலவிட்ட நேரம் போக அவர் தன்னலம் பற்றி யோசித்திருப்பாரா என்பது கேள்விக்குறி தான்.

நம் சுமை தாங்க ஒரு சுமைதாங்கி கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் தான் பலரும். அப்படிப்பட்ட சுமைதாங்கியாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாகவே ரமேஷ்ஜி இறுதி வரையில் வாழ்ந்து விட்டார்.

அப்படிப்பட்ட ரமேஷ்ஜியின் குடும்பத்தினரின் சுமைகளை இனி யார் தாங்குவார்களோ? நெஞ்சம் கனக்கிறது. கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது.

இன்னமும் எத்தனை ‘ரமேஷ்ஜிக்கள்’ ரத்தம் சிந்த வேண்டுமோ? இதயம் துடிக்கிறது.

 

.

19 Replies to “ரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்”

 1. Touchd by the moving tribute.Hope and pray that there need not be any mores Rmeshjis, Vellaiyans…

 2. கல்லையும் கரைய வைக்கும் கட்டுரை. ஆடிட்டர் விட்டுச்சென்ற பணியை நாம் நிறைவேற்றுவோம். மோடி பிரதமர் ஆவதற்கு நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆனதனைத்தையும் செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டு செயல்படுவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும். நிற்க. நான் ஒரு திருக்குறள் ஆய்வாளன். ’திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை;என்ற நூலையும் ’வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு’ என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டு உள்ளேன். திருக்குறள் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது என்னுடைய கருத்து. காட்டாக தாங்காள் சுட்டியுள்ள முதல் குறளுக்கு நான் கண்டிருக்கும் பொருள் இதுவாகும்: தான் என்ற ஈகோவை அறுத்துத் தள்ளி தன்னுடைய ஆன்மாவின் தொடர்பையும் வழிகாட்டுதலையும் பெற்றவனை அத்தகைய சாதனையைக் கண்டு தாமும் அவ்வாறு பெறவேண்டும் என்ற மன உந்துதலைப் பெறும் மாந்த உலகம் போற்றி வணங்கி நிற்கும். இந்த மாதிரி இடத்தில் நாகரிகம் இல்லாமல் நான் இவ்வாறு எழுதி இருப்பது சரியில்லாத செயல்தான். இருப்பினும் திருக்குறளில் இது போல 600க்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு சரியான வாழ்க்கைக்குக் பலன் தரும் பொருள்களைக் கண்டுள்ள நான் அவற்றை தமிழ்கூறும் நல்லுலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக இங்கு எழுதியுள்ளேன் என்பதை கருத்தில் கொண்டு என்னுடைய பிழையை பொறுத்துக்கொண்டு இதனை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 3. ஹிந்து விரோத சக்திகளுக்கு முக்கியமாக நல்லவர்கள் வாழக் கூடாது, வளரக் கூடாது. எனென்றால் பாரதத்தைச் சிதைக்க அவர்கள் பயன்பட மாட்டார்கள். ஊழல்வாதிகள், தர்மம்,நியாயம் இவற்றைப் பற்றி சிறிதளவும் கவலைப் படாதவர்கள் ,அரக்க குணம் படைத்தவர்கள் , நாட்டுப் பற்று சிறிதும் இல்லாதவர்கள் ,நய வஞ்சகர்கள் இவர்கள் தான் அவர்களுக்குத் தேவை .

  அவர்களை உருவாக்குவதும் அவர்கள் வேலை .

 4. படிக்கும் போது நெஞ்சு வெடிப்பது போல் உள்ளது . இந்த பண்பு நிச்சயம் சங்கத்திடம் இருந்து தான் கிடைத்துள்ளது. ஜெய் ஹிந்த் .

 5. இதுபோல்தான், மதுரையில் ஹிந்துமுன்னணியின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர் அமரர் பெ. இராஜ கோபாலன் அவர்களை, எப்பொழுதும் பரபரப்பாக உள்ள, மதுரை மீனாட்சியம்மன் ஆலய ரதவீத்யில் அமைந்துள்ள தன் வீட்டின் முன்பாகவே, மனைவி மற்றும் பிள்ளைகள் கண்முன்னே போட்டு சண்டாளர்கள், தைரிமாக அவர் செத்தபின்பும் பலமுறை வெட்டி விட்டு சாகாவசமாக சென்றனர். அந்த சொந்தங்களின் உள்ளம் எப்படி துடிதுடித்திருக்கும்! அவர் இஸ்லாமியர்களை, ‘துலுக்கர்கள்’ என்றுகூட சொல்ல விடமாட்டாத சாந்தமே வடிவானவர். நமக்கு வேகத்தோடு கூடிய விவேகம் இப்பொழுது மிக மிக அவசியம். இந்துக்களுக்காக பணியாற்றும் ஒவ்வொருவரும் மிக, மிக எச்சரிக்கையாக செயலாற்றவேண்டிய தருணம். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் நம்மையோ, நமது வீட்டையோ நோட்டமிடுவதுபோல் தெரிந்தால், தாமதிக்காமல் காவல்துறையினருக்கு தெரிவிக்கவேண்டும்.

 6. உலகெங்கும் தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து , தனி மனித சுதந்திரம், ஆக்க பூர்வ வாழ்வு மற்றும் முன்னேற்றம் இவைகள் மறுக்கப்பட்டு அல்லது மறக்கடிக்கப்பட்டு இந்த மதத்தின் அடிமையாக வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கும் கோடானு கோடி மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்.

  அது ஹிந்து தர்மத்தின் மூலமாகக் கிடைக்கும்.

 7. மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய விஷயம் ஹிந்துக்களின் ஒற்றுமை. நமது அருகில் வசிக்கும் மாற்று மதத்தினருடன் முடிந்த அளவு ஜாக்கிரதை யுடனேயே பழக வேண்டும்.
  இயக்கங்களில் இருப்பவர்கள் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  ஒன்று படுவோம். பாரதத்தாயை பணிவோம்.
  பாரதத்தின் புதல்வர்களாக குழந்தைகளை வளர்ப்போம்.
  வாழ்க பாரதம்!

 8. தொப்பி போட்ட விஜயகாந்த் முதல் ஒ. பன்னீர்செல்வம் வரை எல்லோரும் இந்த வருட ரம்ஜான் கஞ்ஜி குடித்தாகி விட்டது.

  அப்பா, இந்த ஹிந்துக்களுக்கு சொரணை என்பதே கொஞ்சமும் கிடையாதா?
  யார் வேண்டுமானாலும் சாகட்டும், நாடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், தாங்கள் தலைவர்களாக இருக்க வேண்டும் , அதிகாரம் செலுத்த வேண்டும் – இது ஒன்றுதான் குறியா ?

  தங்கள் தொழில், வேலை, செல்வம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு தேச விடுதலைப் போராட்டத்தில் குதித்த அரவிந்தர், சுபாஷ் சந்திர போஸ் , திலகர், வ உ சி அவர்கள் எங்கே ?
  இன்று நாம் காணும் இவர்கள் எங்கே?

  இரண்டு மூன்று தலை முறைக்குள் ஹிந்து சமுதாயம் இவ்வளவு கேடு கேட்டுப் போய் விட்டதே?

 9. இங்கே நாமும் , பல குடும்பங்களும் ரமேஷும் ,வெள்ளையப்பனும் மற்ற ஹிந்து இயக்கத் தோழர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டதை நினைத்து ஓலமிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா வோட்டு வங்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

  இன்றைய செய்தி :ஹஜ் மானியம் ரூபாய் 20 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்வு.
  இது 2011 ல் 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப் பட்டது. உலாமாக்களின் ஓய்வூதியத் திட்டத்தில் பயன் பெரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.. வக்பு வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை(!) சமாளிக்க ஆண்டு தோறும் வழங்கும் மானியம் 1 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.
  முஸ்லிம் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் வழங்க ஏற்பாடு. இதற்கான இணை மான்யம் 1: ! என்ற விகிதத்திலிருந்து 1:2 என்ற விகிதமாக உயர்த்தப்படுகிறது.

  வெளங்குமாய்யா ?

 10. மழை காலம் வந்து விட்டால் சிலருக்கு madras eye வந்து விடுவதை போல ரம்ஜான் வந்து விட்டால் சில அரசியல்(வியா)வாதிகளுக்கு Iftar party என்ற கொடுமையான வியாதி வந்து விடும். இது மத சார்பற்ற நாடு.மற்றும் மதம் ஒரு அபின் என்று கூறும் ஒரு கம்முனிசவாதி கல்யாணசுந்தரம் கூட ஒரு மதவிழாவில் கலந்து கொள்கிறார்.. அப்பா ஞானதேசிகா! நீ எதுக்கு தலைக்கு குல்லாய் போட்டுகொள்கிறாய்? மத சின்னம் அணிந்து கொள்பவன் ஒருவர் மத சார்பின்மைவாதியா? குல்லாய் போடாமல் கஞ்சி குடித்த ஒ.பன்னீர் செல்வத்திற்கு அந்த கஞ்சி அவர் தொண்டைக்கு உள்ளே இறங்காமல் போய் விட்டதா? அல்லது குடித்தபின் அந்த கஞ்சி வாந்தியாக வெளியே வந்து விட்டதா? குல்லாய் அணிவது தப்பில்லை என்று “கஞ்சிக்கு செத்த கயவாளிகள்” கருதினால் “கத்னா” கூட பண்ணி கொள்ளலாமே! அது மட்டும் தப்பா என்ன? நடிகர் விஜயகாந்தே! உன் மனைவிக்கு இனிமேல் பர்தா போட்டு அதன்பின் மேடை ஏற்று. உன் பொண்டாட்டியை தவிர்த்து இன்னும் 3 மனைவிகளை கட்டிகொள். இஸ்லாம் நல்ல மதம் என்றுதானே கஞ்சி குடிக்க போனாய் அப்படியானால் அது கூறும் நல்ல(!?) கொள்கைகளையும் உன் வாழ்கையில் கடைபிடித்தால் என்னவாம்! கஞ்சி குடிப்பதோடு நில்லாமல் இப்போது இன்னொரு புது வியாதி திமுக மற்றும் அதிமுகவில் உண்டாகி உள்ளது. அடுத்த ஆண்டு மற்ற கட்சிகளுக்கும் அவ்வியாதி தொற்றிகொள்ளும்.ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சேலை வழங்கும் உதவி திட்டமாம்! ஏழை மக்களின் பசிகொடுமையை மற்றவர்கள் உணர வேண்டும் என்பதுதான் ரம்ஜான் உண்ணா நோன்புவின் நோக்கம் இந்த ஒரு மாதம் உணர்ந்துவிட்டால் போதுமா? மீதி 11 மாதங்கள் அது பற்றி கவலை தேவை இல்லையா? பணக்கார முஸ்லிம்கள்தான் ஏழை முஸ்லிம்களுக்கு தானம்(அதற்கு அரபியில் “ஜகாத்” என்று சொல்கிறார்கள் என்று நினக்கிறேன். ஆனால் எனக்கு சரியாக தெரியவில்லை) செய்ய வேண்டும் என்பது அல்லாவின் 5 கட்டளைகளில் ஒரு கட்டளை ஆகும். அப்படி இருக்க அரசு மற்றும் கட்சிகள் அதை செய்தால் அவை முஸ்லிம் அரசா அல்லது முஸ்லிம் கூட்டமைப்பா? வோட்டு வங்கிக்காக எதையும் செய்ய துணியும் இவர்கள் இதுவும் செய்வார்கள் இதற்கு மேலும் செய்வார்கள். நமது பொங்கல் பண்டிகையின்போது முஸ்லிம்களை கூப்பிட்டு விருந்து வையுங்கள். அப்போது அவனுக்கு சந்தனம் மற்றும் திருநீறு கொடுங்கள். அதை பயபக்தியோடு வாங்கி நெற்றியில் அணிந்து கொள்கிறானா என்று பார்ப்போம். இதை ஒரு சவாலாக கூறுகிறேன். வரும் பொங்கல் அல்லது தீபாவளி அன்று நம் அரசியல்வாதிகள் இதை செய்கிறார்களா என்று பார்ப்போம்.

 11. இவர்களுக்கு இஸ்லாம் இவ்வளவு உயர்வாகத் தோன்றினால் ஏன் அந்த மதத்துக்கு மாற மாட்டேன் என்கிறார்கள்? தங்கள் மனைவிமார்கள், பெண்கள் இவர்களுக்கு தலை முதல் கால் வரை புர்கா போட்டு அழகு பார்க்கலாம்; தாங்களும் எப்போதும் , தொப்பி, தாடி வைத்துக் கொள்ளலாம், அரசு மான்யத்தில் ஹஜ் போகலாம், பல தாரங்களை மணம் செய்து கொள்ளலாம் ( இப்போது மட்டும் என்னவாம் என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது),

  ஆக , இவர்களுக்கு ஹிந்து தர்மத்தில் இருக்கும் சுதந்திரம் வேண்டும் – சினிமா எடுக்க, நடிக்க, நினைத்ததைப் பேச, எழுத, கடவுள் இல்லை என்று சொல்ல, சங்கீதம் கேட்க, நாட்டியம் ஆட, நல்ல உடை உடுத்த இன்னும் பல.

  அனால் இவர்கள் இந்த மாதிரி அரசியல் செய்து கொண்டே போனால் ஒரு காலத்தில் இவர்களின் எதிர்கால சந்ததியினருக்கு இவர்கள் அனுபவிக்கும் சுதந்திரம் இருக்காது , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் , சவுதி அரேபியாவில் உள்ளது போல்தான் வாழ வேண்டும் என்பது இவர்களுக்குப் புரியவில்லையா அல்லது புரிந்தும் இன்றைக்கு அனுபவித்தால் போதும் என்று நினைக்கிறார்களா ?

 12. நாம் அனைவரும் என்றைக்கு பி ஜே பிக்கு ஒட்டு போடுகிறோமோ அன்றைக்குத்தான் இதற்கு விடிவு காலம்.

 13. Mamata’s Eid gift : Reservation in higher education for minorities

  August 9, 2013
  Shravan Shuklapaksha 2, Kaliyug Varsha 5115
  Mamta Banerjee is doing everything to appease minorities, but totally ignoring Hindus. Today many districts of West Bengal have become ‘safe havens’ for illegal Bangladeshi infiltrators. To change this situation, we need to oust rulers like Mamta and establish Hindu Rashtra at the earliest ! – Editor

  West Bengal Chief Minister Mamata Banerjee on Friday announced reservation in higher education in the state for minorities while attending Eid prayers in the city’s Red Road.
  “We want youths and children from minority communities to advance in studies and become doctors, engineers and professionals in different other fields,” Banerjee said, stating that reservation of seats would be introduced in higher education from 2014 educational curriculum.
  She also announced that other avenues of business would also be made available to the minorities including opening of shops and other such small scale enterprises in the districts.
  The chief minister attended the largest Eid prayer gathering on Red Road in the heart of the metropolis. Prayers were held at other places too including at Nakhoda Masjid, the largest mosque in the city.
  Eid-ul Fitr marks the culmination of month-long fasting and prayer during the holy month of Ramzan.
  People of all hues, from little children to aged persons adorned in new dresses, attended the Eid prayers followed by ritual hugs.
  Eid was celebrated with fervour in other parts of the state also.
  In Darjeeling Hills, which has been affected by an indefinite bandh called by Gorkha Janmukti Morcha demanding a separate state, the celebrations remained subdued.
  Source : Indian Express
  Follow HJS on Social Media

 14. அன்பு மதம் என்கிறார்கள். அல்லா அன்புடன் இருக்கச் சொன்னதாய் கதை விடுவார்கள். ஆனால் பயங்கரவாதமே அவர்களின் மதம் என்று சொன்னால் செகுலர் வியாதிகளுக்கு கோபம் வரும். அரசும் கழகங்களும் வால் பிடிக்கும் வரை இந்தத் தீமை அழியாது. ஹிந்துக்களின் ஒன்று பட்ட வோட்டு போடும் தினமே விடிவைக் கொடுக்கும்.

 15. After today’s Eid Namaz an armed mob of 20,000 Muslims marched toward Hindu houses and attacked them, in Kishtwad, J&K.

  Many Hindus were severely injured and some are critical.While this was happening, a mob attacked & burnt shops and housed owned by Hindus. The arson, looting and murders went on for long since the morning Namaz.Until afternoon there was no help from the Govt. Then came police but of no use. Many Hindu youth are in hospitals with bullet injuries in arms && abdomen.

  In the afternoon Govt sent Army there but with no orders to shoot at sight on the killers. The mob went on rampage.
  Army kept on doing flag march and the info from there is that a 20,000 strong mob even looted army weapons.
  VHP International Working President Dr PravinTogadia said, “VHP demands immediate action on
  all 20,000 in the mob that attacked minority Hindus there. It also should be found out who really led such
  a big mob when there should have been security in the valley after Pakistan’s attacks on the LOC. Such
  big violence against Hindus continued all day long and how nobody intervened to really protect the Hindus?”
  VHP also demanded the resignation of the J&K Home Minister for his role in the Kishtwad attacks on
  Hindus. Those who are injured should immediately get adequate compensation. Those whose houses
  were burnt should be given compensation at the marketrate of the house andall materials to rebuild their
  houses. Hindus whose shops were burnt should be compensated with the losses of their goods and shop
  establishment as well as for the loss of probable business.
  In 1990 similar violent tactics were followed by the Kashmiri Separatists to kill and chase away Hindus from Kashmir. Now they have come ahead & on the border of Jammu in Kishtwad, Rajauri, such attacks have been taking place. It is the sole responsibility of the state & the Union Govt to protect every Hindu in J&K failing which the Hon. Supreme Court should take suo motto note and order the army to shoot at sight on those who attack Hindus there.VHP & Hindu Human Righs commission team assisted by a retired police officer, an eminent lawyer, other Hindu organizations & a social worker will visit Kishtwad soon as soon as the curfew is lifted.
  The team should be given all cooperation as Minority Commission is supposed to get. The report will be
  made public.
  VHP, Bajrang Dal in Jammu have protested today & demanded immediate action to protect Hindus and punish attackers.

  __._,_.___

 16. இதுபோல்தான், மதுரையில் ஹிந்துமுன்னணியின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர் அமரர் பெ. இராஜ கோபாலன் அவர்களை, எப்பொழுதும் பரபரப்பாக உள்ள, மதுரை மீனாட்சியம்மன் ஆலய ரதவீத்யில் அமைந்துள்ள தன் வீட்டின் முன்பாகவே, மனைவி மற்றும் பிள்ளைகள் கண்முன்னே போட்டு சண்டாளர்கள், தைரிமாக அவர் செத்தபின்பும் பலமுறை வெட்டி விட்டு சாகாவசமாக சென்றனர். அந்த சொந்தங்களின் உள்ளம் எப்படி துடிதுடித்திருக்கும்! அவர் இஸ்லாமியர்களை, ‘துலுக்கர்கள்’ என்றுகூட சொல்ல விடமாட்டாத சாந்தமே வடிவானவர். நமக்கு வேகத்தோடு கூடிய விவேகம் இப்பொழுது மிக மிக அவசியம். இந்துக்களுக்காக பணியாற்றும் ஒவ்வொருவரும் மிக, மிக எச்சரிக்கையாக செயலாற்றவேண்டிய தருணம். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் நம்மையோ, நமது வீட்டையோ நோட்டமிடுவதுபோல் தெரிந்தால், தாமதிக்காமல் காவல்துறையினருக்கு தெரிவிக்கவேண்டும்.இதுபோல்தான், மதுரையில் ஹிந்துமுன்னணியின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர் அமரர் பெ. இராஜ கோபாலன் அவர்களை, எப்பொழுதும் பரபரப்பாக உள்ள, மதுரை மீனாட்சியம்மன் ஆலய ரதவீத்யில் அமைந்துள்ள தன் வீட்டின் முன்பாகவே, மனைவி மற்றும் பிள்ளைகள் கண்முன்னே போட்டு சண்டாளர்கள், தைரிமாக அவர் செத்தபின்பும் பலமுறை வெட்டி விட்டு சாகாவசமாக சென்றனர். அந்த சொந்தங்களின் உள்ளம் எப்படி துடிதுடித்திருக்கும்! அவர் இஸ்லாமியர்களை, ‘துலுக்கர்கள்’ என்றுகூட சொல்ல விடமாட்டாத சாந்தமே வடிவானவர். நமக்கு வேகத்தோடு கூடிய விவேகம் இப்பொழுது மிக மிக அவசியம். இந்துக்களுக்காக பணியாற்றும் ஒவ்வொருவரும் மிக, மிக எச்சரிக்கையாக செயலாற்றவேண்டிய தருணம். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் நம்மையோ, நமது வீட்டையோ நோட்டமிடுவதுபோல் தெரிந்தால், தாமதிக்காமல் காவல்துறையினருக்கு தெரிவிக்கவேண்டும்.மழை காலம் வந்து விட்டால் சிலருக்கு madras eye வந்து விடுவதை போல ரம்ஜான் வந்து விட்டால் சில அரசியல்(வியா)வாதிகளுக்கு Iftar party என்ற கொடுமையான வியாதி வந்து விடும். இது மத சார்பற்ற நாடு.மற்றும் மதம் ஒரு அபின் என்று கூறும் ஒரு கம்முனிசவாதி கல்யாணசுந்தரம் கூட ஒரு மதவிழாவில் கலந்து கொள்கிறார்.. அப்பா ஞானதேசிகா! நீ எதுக்கு தலைக்கு குல்லாய் போட்டுகொள்கிறாய்? மத சின்னம் அணிந்து கொள்பவன் ஒருவர் மத சார்பின்மைவாதியா? குல்லாய் போடாமல் கஞ்சி குடித்த ஒ.பன்னீர் செல்வத்திற்கு அந்த கஞ்சி அவர் தொண்டைக்கு உள்ளே இறங்காமல் போய் விட்டதா? அல்லது குடித்தபின் அந்த கஞ்சி வாந்தியாக வெளியே வந்து விட்டதா? குல்லாய் அணிவது தப்பில்லை என்று “கஞ்சிக்கு செத்த கயவாளிகள்” கருதினால் “கத்னா” கூட பண்ணி கொள்ளலாமே! அது மட்டும் தப்பா என்ன? நடிகர் விஜயகாந்தே! உன் மனைவிக்கு இனிமேல் பர்தா போட்டு அதன்பின் மேடை ஏற்று. உன் பொண்டாட்டியை தவிர்த்து இன்னும் 3 மனைவிகளை கட்டிகொள். இஸ்லாம் நல்ல மதம் என்றுதானே கஞ்சி குடிக்க போனாய் அப்படியானால் அது கூறும் நல்ல(!?) கொள்கைகளையும் உன் வாழ்கையில் கடைபிடித்தால் என்னவாம்! கஞ்சி குடிப்பதோடு நில்லாமல் இப்போது இன்னொரு புது வியாதி திமுக மற்றும் அதிமுகவில் உண்டாகி உள்ளது. அடுத்த ஆண்டு மற்ற கட்சிகளுக்கும் அவ்வியாதி தொற்றிகொள்ளும்.ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சேலை வழங்கும் உதவி திட்டமாம்! ஏழை மக்களின் பசிகொடுமையை மற்றவர்கள் உணர வேண்டும் என்பதுதான் ரம்ஜான் உண்ணா நோன்புவின் நோக்கம் இந்த ஒரு மாதம் உணர்ந்துவிட்டால் போதுமா? மீதி 11 மாதங்கள் அது பற்றி கவலை தேவை இல்லையா? பணக்கார முஸ்லிம்கள்தான் ஏழை முஸ்லிம்களுக்கு தானம்(அதற்கு அரபியில் “ஜகாத்” என்று சொல்கிறார்கள் என்று நினக்கிறேன். ஆனால் எனக்கு சரியாக தெரியவில்லை) செய்ய வேண்டும் என்பது அல்லாவின் 5 கட்டளைகளில் ஒரு கட்டளை ஆகும். அப்படி இருக்க அரசு மற்றும் கட்சிகள் அதை செய்தால் அவை முஸ்லிம் அரசா அல்லது முஸ்லிம் கூட்டமைப்பா? வோட்டு வங்கிக்காக எதையும் செய்ய துணியும் இவர்கள் இதுவும் செய்வார்கள் இதற்கு மேலும் செய்வார்கள். நமது பொங்கல் பண்டிகையின்போது முஸ்லிம்களை கூப்பிட்டு விருந்து வையுங்கள். அப்போது அவனுக்கு சந்தனம் மற்றும் திருநீறு கொடுங்கள். அதை பயபக்தியோடு வாங்கி நெற்றியில் அணிந்து கொள்கிறானா என்று பார்ப்போம். இதை ஒரு சவாலாக கூறுகிறேன். வரும் பொங்கல் அல்லது தீபாவளி அன்று நம் அரசியல்வாதிகள் இதை செய்கிறார்களா என்று பார்ப்போம்.அன்பு மதம் என்கிறார்கள். அல்லா அன்புடன் இருக்கச் சொன்னதாய் கதை விடுவார்கள். ஆனால் பயங்கரவாதமே அவர்களின் மதம் என்று சொன்னால் செகுலர் வியாதிகளுக்கு கோபம் வரும். அரசும் கழகங்களும் வால் பிடிக்கும் வரை இந்தத் தீமை அழியாது. ஹிந்துக்களின் ஒன்று பட்ட வோட்டு போடும் தினமே விடிவைக் கொடுக்கும்.

 17. அவர்களே குண்டு வைத்து கொண்டு , உலகமெங்கும் , அழிந்து கொண்டு இருகிறார்கள்! திராவிட கட்சிகள் ஒழிந்தால்தான் தமிழகம் வளம்பெறும் , களபிரர் ஆட்சி எப்படி இருண்ட காலமோ , அது போல இந்த வெங்காய கும்பல் ஆட்சி இருண்ட காலம் . ராமானுஜர் போன்ற மகான்கள் வந்தால் தான் நம் நாடு இந்து தர்மம் வளம் பெரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *