கன்னியின் கூண்டு – 1

மூலம்: அயான் ஹிர்ஸி அலி
தமிழில்: அ. ரூபன்

துவங்குவதற்கு முன் :

இஸ்லாம் உலகின் மாபெரும் ஆணாதிக்க மதம். அதில் பெண்களின் நிலை மிகப் பரிதாபகரமானது. ஐந்து வேளை தொழுகை செய்து, நோன்பிருந்து, ஹஜ்ஜிர்க்குச் சென்று, காஃபிர்களைக் கொன்று…இன்ன பிற மதச் சடங்குகளைத் தொடர்ந்து செய்யும் ஒரு இஸ்லாமியனுக்கு சுவனத்தில் 72 கன்னிகளும், அளவற்ற மதுவும் காத்திருக்கிறது. அதே வேளையில், இஸ்லாமிய ஆணைப்போலவே நோன்பிருந்து, தொழுகை செய்யும் பெண்ணுக்கு சுவனத்தில் கிடைப்பது அனேகமாக ஒன்றுமேயில்லை. அதே கிழட்டுக் கணவனைத் தவிர. எழுபத்தியிரண்டு கன்னிகளுடன் கும்மாளமிடும் கணவன் ஒருபோதும் தான் பூவுலகில் மணந்து, கிழடுதட்டிய பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை.

பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் புர்காக்களுக்குள் அடைபட்டு, வீடுகளுக்குள் முடங்கி, பிள்ளைகளைப் பெற்று, மக்கி, மரணித்துப் போகிறார்கள். அவர்களைக் குறித்தான தகவல்கள் அதிகம் வெளியே தெரிவதில்லை. அல்லது தெரியவிடுவதில்லை.

ayaan-hirsi-aliஅயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. தியோடர் வான்-கோ என்ற இயக்குனருடன் இணந்து இஸ்லாமை விமர்சித்து  எடுத்த ஒரு திரைப்படம் காரணமாக தியோடர் வான்-கோ நட்ட நடுத்தெருவில் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியால் கொல்லப்பட்டார். ஹிர்ஸி அலிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஹிர்ஸி அலி எழுதிய “The Caged Virgin” இஸ்லாமியப் பெண்களின் நிலையை தோலுரித்துக் காட்டுகிறது. அந்தப் புத்தகத்திலிருந்து சில சிறிய பகுதிகள் இங்கே.

இஸ்லாமின் துணை கொண்டு உலகின் பிற சமுதாயங்களுக்குள் பரவிய அரேபிய கலாச்சாரம் இன்று மேற்கத்திய கலாச்சாரங்களை விடவும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது கண்கூடு. அதற்கு மூன்று முக்கிய காரணிகளைச் சொல்லலாம். தனி மனித சுதந்திரமின்மை, அறியாமை மற்றும் பெண்களுக்கு அளிக்கப்படாத சுதந்திரம் ஆகியவையே அவைகள். இஸ்லாம் பரவிய பிற கலாச்சாரங்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருப்பதைக் காணலாம். குரானையும், ஹடித்தையும் தங்களின் அடிப்படையான அரசியல், மற்றும் பொருளாதார வழிகாட்டியாகக் கொண்ட நாடுகள் அனைத்தும் அரேபியர்கள் சந்திக்கும் அதே முன்னேற்றமின்மையில் அழுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட அரேபியர்கள் அல்லாத பாகிஸ்தான், இரான் போன்ற நாடுகளில் அதிகமாகவும், இந்தோனேஷியாவின் சிலபகுதிகள், மலேஷியா, நைஜீரியா மற்றும் தான்சானியாவில் ஓரளவிற்கும் தனி மனித சுதந்திரம், அறிவியல் தொழில் நுட்ப அறிவு மற்றும் வளர்ச்சி, பெண்களுக்கான சுதந்திரம் ஆகியவை இல்லாமலேயே போயிருப்பதைக் காணலாம்.

அந் நாடுகள் முன்னேறுவதற்கான வழிவகைகள்  தெரிந்தாலும், அது மிக, மிக மெதுவாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரேபிய கல்வியாளர்களால் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “அரேபிய தனிமனிதவள மேம்பாட்டு” (Arab Human Development) அறிக்கை இதனை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. இன்றைய அரேபிய நாடுகளின் செல்வ வளம், மேற்கத்திய நாடுகளால் தோண்டியெடுக்கப்படும் எண்ணையிலிருந்து மட்டுமே கிடைக்கிறது. அடிப்படையில் அரேபிய பொருளாதார முன்னேற்றம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக, மிகக் குறைவான ஒன்றாகும். அதனை விடக் குறைவான முன்னேற்றம் சஹாரா பாலைவனத்து நாடுகளில் மட்டுமே உண்டு. கல்வி அறிவின்மை அரேபிய நாடுகளில் தொடர்ச்சியாகவும், பரவலாகவும் காணப்படுகிறது.

உதாரணமாக, சின்னஞ்சிறு நெதர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 5000 புத்தகங்கள் பிற மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்யப்படுகின்றன. நெதர்லாந்தினை விடவும் மிகப்பெரும் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் கொண்ட அரேபிய உலகில் ஆண்டிற்கு சராசரியாக வெறும் 330 புத்தகங்கள் மட்டுமே பிற மொழிகளிலிருந்து அரபிக்கு மொழியாக்கம் செய்யப்படுகின்றன.

arab-human-reportஅரேபிய நாடுகளில் மனித உரிமை மீறல் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. அரேபிய ஆட்சியாளர்கள் தங்களின் குடிமக்களை அடக்கி ஆள்வதுடன், அவர்களை தொடர்ந்து ஒருவருக்கொருவர் வன்முறையில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொள்ளவும் தூண்டுகின்றனர். குடிமக்கள் கடுமையாக ஒடுக்கப்படுவதுடன், உலகில் வேறெங்கும் காணவியலாத வகையில் பெண்களுக்கு கடுமையான அடக்குமுறைகள் விதிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுக்கப்பட்டு, எவ்விதமான அரசியல் அமைப்புகளிலும் பங்கெடுக்க அனுமதிக்கப்படாமலும், திருமணம் மற்றும் விவாகரத்து, சொத்துரிமை போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டும், வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக மோசமான சூழ் நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறது.

இதே நிலைமை மேற்குலகிற்கு புலம் பெயர்ந்த முஸ்லிம்களின் மத்தியில் நிலவினாலும் அது இஸ்லாமிய நாடுகளில் காணப்படுவதை விடவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. பெண்களுக்குச் சாதகமான மேற்குலக சட்டங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் தங்களுடன் அவர்களது நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் கொண்டுவந்தார்கள். மேற்கத்தியச் சிறைகளில் முஸ்லிம் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வன் கொடுமையிலிருந்து பெண்கள் தப்பி வாழும் அரசாங்க இல்லங்களில் முஸ்லிம் பெண்கள்  நிறைந்திருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

புலம் பெயர்ந்து மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பு பெறுவதிலும் மிகவும் பின் தங்கியிருக்கிறார்கள். மேற்கத்திய உலகம் தன் குடிமகன்களுக்கு அளிக்கு உயர்தர கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைப் போன்ற வாய்ப்புகள் அவர்கள் பிறந்து வளர்ந்த இஸ்லாமிய நாடுகளில் ஒருபோதும் அளிக்கப்பட்டதில்லை என்பதினை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறாமல் இருக்க முஸ்லிம்களை எது தடுக்கிறது? மேற்கத்திய உலகிற்கும், அவர்களுக்கும் உள்ள இடைவெளியை எதனால் அவர்களால் குறைத்துக் கொள்ள இயலாமல் இருக்கிறது? அவர்களைப் போலவே உலகின் பிற பகுதிகளில் இருந்து வந்து குடியேறிய, பிற மதங்களைச் சார்ந்த மக்கள் இவ்வாறு தங்களுக்கு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு முன்னேறுகின்றனர்? அதைச் செய்ய முஸ்லிம்களால் ஏன் முடியவில்லை?

ஒரு சில இஸ்லாமிய “கல்வியாளர்களின்” கூற்றுப்படி, மேற்கத்திய ஏகாதிபத்தியமும், அதன் தட்பவெப்பமுமே முஸ்லிம்கள் முன்னேற விடாமல் தடை, சுட் செய்கின்றன என்பதாகும். மேலும் உலகில் இன்று காணப்படும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் பலவும் மேற்கத்திய நாடுகளின் வசதிக்கேற்ப திடீரென, செயற்கையான முறையில் அமைக்கப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சர்வாதிகளால் ஆளப்படுகின்றன. இவ்வாறான சர்வாதிகாரிகளால்தான் இஸ்லாமிய நாடுகளின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது என்ற கூற்றை வரலாற்றியசிரியரான Bernard Lewis மறுக்கிறார்.

மேற்குலகினர் மீது அரேபிய இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் ஒருவகையான அதிருப்தியே இஸ்லாமிய உலகின் முன்னேற்றத்தை மெதுவானதாக அல்லது இல்லாததாக ஆக்குகுகிறது எனச் சொல்கிறார் லூயிஸ். மறுமலர்ச்சிக் காலத்திற்கு முந்திய ஐரோப்பா (உ-ம். ஸ்பெயின்) பல நூற்றாண்டு காலம் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அவர்களை ஆண்ட முஸ்லிம்கள் மேற்குலகினரை மிகவும் பின் தங்கிய மூடர்களாகவும், சுத்தமற்றவர்களாகவும், ஒழுங்கும் கட்டுப்பாடும் அற்றவர்களாகவும், கலாச்சாரமற்ற, நாகரீகமற்றவர்களாகவும் எண்ணினார்கள்.

இதற்கு சிறந்த உதாரணமாக ஸ்பெயினைச் சொல்கிறார் லூயிஸ். ஸ்பெயினைப் பிடித்த முஸ்லிம்கள் அதனை 1492-ஆம் வருடம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள்வரை ஆண்டார்கள். ஸ்பானியர்களுக்கு அடிப்படைச் சுத்தம் குறித்து அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே. அழியும் நிலையிலிருந்த பல கிரேக்க, ரோமானிய இலக்கியங்களை முஸ்லிம் ஆட்சியாளர்கள் காப்பாற்றினார்கள். அத்துடன் விவசாய முறைகளையும், நீர் வள மேலாண்மை குறித்தும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் கலாச்சாரத்தை மேம்படுத்தினார்கள்.

இருப்பினும், 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு முஸ்லிம் ஆட்சியாளர்கள் சகிப்புத்தன்மை அற்றவர்களாக மாறினார்கள். புதியவற்றைக் கற்கும் ஆர்வம் குறைந்து, இஸ்லாமிய பழைமைவாதம், மற்றும் தீவிரவாதம் நோக்கித் திரும்பினார்கள். அதே காலகட்டத்தில் மேற்கத்திய உலகம் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர ஆரம்பித்தது. அதன் மக்கள் புதியனவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமுடையவர்களாகவும், உலகின் பல்வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்யவும் தலைப்பட்டார்கள். இதன் காரணமாக அவர்களால் இஸ்லாமிய உலகை மிக எளிதாக எட்டிப்பிடித்ததுடன், அவர்களைத் தாண்டியும் சென்றார்கள். இஸ்லாமிய உலகம் தேக்கமடைந்து பின்தங்க ஆரம்பித்தது.

இதன் காரணமாக இஸ்லாம் தன்னை பழைமைவாதம் மற்றும் தீவிரவாதம் நோக்கித் திருப்பிக் கொண்டது. தீவிரவாத இஸ்லாமை உலகிற்கு அறிமுகப்படுத்திய சையத் குதுப் மற்றும் ஹசன் அல்-பன்னா (Sayyid Qutb and Hassan Al-Banna) போன்றவர்கள் “இஸ்லாமிய உம்மா (அல்லது சமுதாயம்) உலகில் நன்கு வாழ ஒரே வழி, குரானையும், ஹடித்தையும் மற்றும் இறைதூதர் முகமது நபியின் வாழ்க்கை முறையயும் வார்த்தைக்கு வார்த்தை நம்பி நடப்பதால் மட்டுமே முடியும்” என்றார்கள். இஸ்லாமியர்களின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவர்கள் மேற்கூறிய அனைத்தையும் கடைபிடிக்காமல் அதன் வழியிலிருந்து விலகி நடந்ததால் மட்டுமே வந்தது என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் உண்மையில் அவ்வாறு குரானையும், ஹடித்தையும் கண்மூடித்தனமாக பின்பற்றிய அரசியல் தோல்விகளிலேயே உலகெங்கும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் முடிந்திருக்கிறது. அடிப்படையில் சரியான முறையில் இயங்கக்கூடிய ஒரு அரசியலமைப்பு இஸ்லாமில் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. இதனையே நாம் சவூதி அரேபியாவிலும், இரானிலும் இன்று காணலாம். பெரும்பாலான இஸ்லாமியர்கள் அல்லாவின் கட்டளைகளை மதித்து நடப்பதில்லை என்ற தீவிரவாத இஸ்லாமியர்களின் கணிப்பு சரியானதே என்றாலும், இஸ்லாமிய உலகம் ஒருபோதும் தீவிரவாதிகள் சொல்வதுபோல நடந்து கொள்ளவே கூடாது என்பதே என் கருத்து.

ஐந்து கண்டங்களில் பரவியிருக்கும் ஏறக்குறைய 1.2 பில்லியன் முஸ்லிம்களின் பிரச்சினைகளான, முரட்டுத்தனம், அறிவியல் தொழில் நுட்ப அறிவின்மை, பிற மதத்தினரை மதிக்காமல் அவர்களை ஒடுக்குதல், நோய்கள் மற்றும் பரவலாக நிகழும் சமூக அமைதியின்மை போன்றவற்றைத் தீர்க்கும் வழிவகைகள் எவையும் கண்ணில் தெரியவில்லை. அந்தந்த பிராந்தியங்களுக்கேயான பல சிக்கலான காரணிகள் தீர்க்கப்படாமல் காலம் செல்லச் செல்ல உருமாறி, பெரிதாகி அவர்களை அலைக்கழிக்கின்றன.

இதற்குச் சிறந்த உதாரணமாக இஸ்லாமிய உலகம் அதன் பெண்களின் மீது செலுத்தும் அடக்குமுறைகளைச் சொல்லலாம். அடிப்படையில் இது ஒரு பழங்குடி மனோபாவமாக உருவாகிப் பின்னர் இஸ்லாமில் ஒரு கட்டளையாக மாறியது. இதுகுறித்தான தகவல்கள் குரானிலும், ஹடித்திலும் மிக அபூர்வமான முறையிலேயே காணக்கிடைக்கின்றன. இந்த நவீன காலத்திற்கு ஒத்துவராத, பெண்ணைப் பூட்டிவைக்கும் மனோபாவம் முகமது நபி வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டு பின்னர் குரானிலும் ஒரு புனிதமான அங்கமாக ஆக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இதுவே பெண்களின் உடல் மற்றும் கன்னித்தன்மை தங்களால் காக்கப்பட வேண்டிய ஒரு கடமையாக, மயக்கமாக, மனோபாவமாக உலகின் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு சொல்லித்தரப்பட்டு, அதுவே அவர்களின் அழுத்தமான obsession ஆக மாறியிருக்கிறது இன்று. பெண்களின் மீதான தங்களின் ஆளுமையைச் செலுத்தி அடக்கியாளும் முஸ்லிம் ஆண்களின் இச்செய்கையைப் போலவே, உலகின் பல இதர மதங்களிலும் (கிறிஸ்தவ, யூத மற்றும் ஹிந்து) காணப்பட்டாலும், அவை பெண்களின் கல்வியின் மீதான அல்லது அவர்களின் முன்னேற்றத்தின் மீதான ஒரு தடையாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதே உண்மையாகும். இந்த மனோபாவம் காரணமாக முஸ்லிம்கள் உலக சமுதாய வாழ்க்கையில் கொடுக்கும் பெரும் விலை குறித்து அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தாலும் அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் கடமை பெண்களின் உடலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே.

“கன்னித்திரை” கிழிந்த பெண்கள் உபயோகிக்கப்பட்ட பொருள்களைப் போன்றவர்கள் என மீண்டும் மீண்டும் அவர்களால் முஸ்லிம் பெண்களுக்குச் சொல்லப்படுகிறது. ஒரு முறை உபயோகிக்கப்பட்ட அந்தப் பொருள் நிரந்தரமாகவே உபயோகமற்றதாகிவிடும் என அவர்கள் மிரட்டப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஒரு “முத்திரையிழந்த” முஸ்லிம் பெண்ணை எந்த முஸ்லிம் ஆணும் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழ் நிலை உருவாகி, அப்பெண் அவர்களின் பெற்றோர்களின் வீட்டிலியே நிரந்தரமாகத் தங்க நேரிடும்.

அதனையும் விட, அவள் திருமண பந்தத்திற்கு வெளியே எவருடனாவது உறவு கொண்டு கற்பிழந்தால் அவளுக்கும், அவளது குடும்பத்தினருக்கும் காலம் காலமாக தொடர்ந்து வரக்கூடிய ஒரு அவமரியாதையை அவள், அவளது குடும்பத்திற்கு அளிக்கிறாள். அவளைச் சுற்றியுள்ள குடும்பங்கள் அவளைப் பற்றி அவதூறு பேச ஆரம்பிக்கும். மேற்படி குடும்பத்தில் உள்ள பெண்கள் கண்ணில் தென்படும் முதல் ஆணைக் கண்டதும் “பாய்ந்து சென்று” அணைத்துக் கொள்வார்கள் என அவளது குடும்ப மானம் காற்றில் பறக்கும். எனவே அது போன்ற ஒரு செயலைச் செய்த ஒரு பெண் அவளது குடும்பத்தினரால் கடுமையான முறையில் தண்டிக்கப்படுவாள்.

தண்டனையானது அவளை கீழ்த்தரமான பெயரிட்டு அழைப்பதிலிருந்து, வீட்டை விட்டு வெளியே விரட்டியடிப்பது அல்லது வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கப்படுவது அல்லது shotgun wedding எனப்படும் துப்பாக்கி முனைத் திருமணத்தை அவளுடன் உறவு கொண்டவனுடேயே செய்து வைப்பது அல்லது யாராவது ஒரு “நல்ல மனிதனுக்கு” திருமணம் செய்து வைப்பது என்று பல வகைப்படும். குடும்ப ரகசியம் காக்க திருமணம் செய்து வைக்கப்படும் “நல்ல மனிதன்” பெரும்பாலும் ஏழையாகவோ அல்லது மனவளர்ச்சி குன்றியவனாகவோ அல்லது கிழடு தட்டி ஆண்மையற்றவனாகவோ அல்லது இவையனைத்துக் கலந்தவனாகவோ இருப்பது வழக்கம்.

மிக மோசமான சூழ் நிலைகளில் அப்பெண் அவரது குடும்பத்தினராலேயே கொல்லப்படுவதும் உண்டு (Honor killing). ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி, இஸ்லாமிய நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 5000 பெண்கள் இவ்வாறு கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. இஸ்லாமிய நாடுகளிலேயே மிகவும் முன்னேறிய, சுதந்திரமான நாடாக அறியப்படுகிற ஜோர்டானிலேயே கூட இது சகஜமாக நடக்கிறது என்று மேலும் கூறுகிறது அந்த அறிக்கை.

dishonor_murder

இம்மாதிரியான ஒரு நிலைமை தங்களின் குடும்பங்களுக்கு ஏற்படாமலிருக்க இஸ்லாமிய குடும்பங்கள் தங்களால் இயன்ற அளவு கட்டுப்பாடுகளைத் தங்களின் பெண்களுக்கு விதித்து, அவளின் “கன்னித்திரை”க்கு எந்த பங்கமும் வராமலிருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வைக்கிறார்கள். அதற்கான வழிமுறைகள் அவர்கள் வசிக்கும் நாடுகள், சூழ் நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால், எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே. அவளது கன்னித்திரையை கிழித்து, அவளை சிக்கலில் சிக்க வைக்ககூடிய முஸ்லிம் ஆணுக்கு அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதுதான்.

சில வருடங்களுக்கு முன், துருக்கிய நீதி அமைச்சராக இருந்த புரஃபெசர் டோகன் சொயாசியன் (Dogan Soyasian) என்பவர், எல்லா ஆண்களும் கன்னிப் பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்; அதனை மறுப்பவர்கள் அயோக்கியர்கள் என்றார். ஒரு மெத்தப் படித்த, ஒரு நாட்டின் அமைச்சராக உள்ளவரே இவ்வாறு சொல்கையில் சாதாரண முஸ்லிம் ஆண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இஸ்லாமியக் கலாச்சாரத்தின்படி, ஒரு ஆணால் கற்பழிக்கப்பட்ட பெண் தன்னைக் கற்பழித்தவனையே திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுவாள். சிறிது காலம் அவனுடன் குடும்பம் நடத்தியபின் அவள் எல்லாவற்றையும் மறந்து அவனுடனேயே மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவாள் என்றும், அவள் அவ்வாறு திருமணம் செய்து கொள்வது காயங்களை ஆற்றும் என்றும் காரணம் கூறப்படும். ஆனால் ஒரே பெண் பல ஆண்களால் கற்பழிக்கப்பட்டால்?

அவ்வாறு நிகழ்ந்தால் அவளை யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வர மாட்டார்கள். அப்படியே அவளை மணப்பவனும் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல், கீழ்த்தரமாகவே அவளை நடத்துவான்.

இஸ்லாம் ஆண்களை பொறுப்பற்றவனாகவும், எதிர்பாராத நடவடிக்கைகள் கொண்டவனாகவும், அச்ச மூட்டும் பேயைப் போன்றவனாகவும், தெருவில் நடந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் சுய கட்டுப்பாட்டை இழந்து நடப்பவர்களாகவும் சித்தரிக்கிறது. இது எனக்கு என் இளமைக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது.

என்னுடைய பாட்டியிடம் ஒரு ஆண் ஆடு இருந்தது. ஒரு நாள் மாலைப் பொழுதில் நாங்களெல்லோரும் வீட்டின் முன்பிருந்த மரத்தினடியில் விளையாடிக் கொண்டிருந்தோம். மாலை மயங்குவதற்கு முன் மேய்ச்சலுக்குப் போயிருந்த ஆடுகள் ஒரு நீண்ட வரிசையில் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தன. பார்ப்பதற்கு மிக அழகான காட்சி அது. அந்த வேளையில், பாட்டியின் வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த அவளது ஆண் ஆடு, காம்பவுண்டுச் சுவரைத் தாவிக் குதித்து கண்ணில் கண்ட முதல் ஆட்டின் மேல் ஏறி அதனுடன் உறவு கொள்ள முயன்றது.

இது குழந்தைகளான எங்களுக்கு மிகுந்த வருத்ததை அளித்தது. இது ஒரு மோசமான நடத்தை என்று நினைத்து அதனைப் பாட்டியிடம் சொன்னோம். பாட்டி சீற்றத்துடன், “இது உங்களுக்குத் தேவையில்லாத ஒரு விஷயம். பக்கத்து வீட்டுக்காரனின் ஆட்டின் மீது நம் ஆடு ஏறவேண்டாமென்றால் அவன் அவனது ஆடுகளைப் பட்டியில் அடைத்துக் கொளளட்டும். அல்லது அவன் ஆடுகளை வேறு வழியில் கொண்டு செல்லட்டும். என் வீட்டின் முன் வந்தால் என் ஆடு அப்படித்தான் ஏறும்” என்றாள்.

goat-arab-cartoon

இஸ்லாம் தன் மதத்தைச் சார்ந்த ஆண்களை இந்த ஆண் ஆட்டைப் போலவே எண்ணி நடத்துகிறது. சாதாரண முஸ்லிம் ஆண், தனது உடலை ஹிஜாப் எனப்படும் உடலை மறைக்கும் ஆடை அணியாத பெண்ணைக் கண்டவுடன் அவள் மீது பாய்வதறகு எண்ணுகிறான். இது ஒரு வகையான self fulfilling prophecy. அதாவது ஒரு முஸ்லிம் ஆணுக்கு சுய கட்டுப்பாடு என்பது இல்லை. அவன் சுய கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை எனச் சொல்லுகிறது இஸ்லாம்.

எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல அனுமதிக்கிறது இஸ்லாம். ஆக இஸ்லாமில் பிரச்சினைகள் பெண்ணுக்கேயன்றி ஆணுக்கு அல்லவே அல்ல.

மிக இளவயதிலிருந்தே இஸ்லாமியப் பெண்கள் சந்தேகத்துடனேயே நடத்தப்படுகிறார்கள். தங்கள் குடும்பத்திற்கும், சுற்றத்திற்கும் நம்பிக்கையற்றவர்களாக வாழ்வது அவர்களுக்கு துன்பத்தையே வரவழைக்கும் என்று இளவயதிலேயே அப்பெண்கள் கற்றுக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அவர்களைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய ஆண்களை கிறுக்கர்களாகா ஆக்குகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

21 Replies to “கன்னியின் கூண்டு – 1”

 1. இஸ்லாம் மதமென்பது ஒரு பிற்போக்குதனமான மூடநம்பிக்கைகள் மிகுந்த (அதாவது மற்ற மதங்களைவிட) ஆணாதிக்கமிக்க கொலைவெறிபிடித்த காட்டு மிராண்டிகளின் கும்பல்

  1. முஸ்லிம் பெண்கள் அரேபியாவில் 44 பாகை (=degree ) வெப்பத்தில் முக்காடு (=burka ) அணியுமாறு நிர்பந்த படுத்த்படுகின்றனர்
  2. எல்லா பாம்புகளையும் கொல்லுங்கள் அவை பழி வாங்கும் என்று எவர் அஞ்சுகிறாரோ அவர் என்னை சேர்ந்தவர் அல்ல என்று Prophet கூறினா. ( ஆதராம்: Sunan of Abu Dawud book 41 No . 5229. ) இவர் சொல்படி செய்தால் எலிகளின் அட்டகாசம் அதிகமாகி வேளாண் விளைபொருள்கள் எலிகளுக்கு இரையாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த இறைதூதர் ஏன் அல்லாவிடம் கூறி பாம்புகளை இனி படைக்கவேண்டாம் என்று கூரிருக்கலாமே!
  3.காகம் தேவதூதர்களை (=angels ) பார்க்க இயலும் அதேபோல கழுதை “பேய் இறை”யினை (=Satan ) பார்க்க இயலும். (ஆதாரம் Sahib Muslim book 41 No . 6581)
  4. அவர்களுடைய கைகள் மீது அல்லாவின் கை இருந்தது.(ஆதாரம்:குர் ஆன் அத்தியாயம் 48 வசனம் 10)——— அல்லா உருவம் இல்லாதவர் என்று கூறும்போது “அவர் கை மீது இவர் கை” என்று கூறினால் அல்லாவுக்கு கை மட்டும் இருக்கும் போலும்!
  5. குர் ஆன் அத்தியா:51 வசனம்: 47 முதல் 51 வரை::: குர் ஆனில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் அல்லாவின் வார்த்தைகள் என்று கூறுகிறார்களே! மேற்படி வசனத்தில் ” வானத்தை நாம் நம்” என்பது முதல் “படிப்பினை பெறக்கூடும்” என்பது வரை அந்த அல்லாவின் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் அதற்கு பிறகு வரும் “எனவே, ஓடி வாருங்கள்” முதல் எச்சரிக்கை செய்பவன் ஆவேன்” வரி உள்ள வார்த்தைகள் அல்லாவின் வார்த்தைகள் அல்ல அவை நபியின் வார்த்தைகளே ஆகும் என்று சத்தியம் செய்து கூறுகிறேன். அறிவுள்ள எவரும் மறுக்க இயலாது. ஆகவே இப்படி எத்தனை இடத்தில அல்லது முழுக்க முழுக்க தன சொந்த சரக்குகளைதான் அல்லா “இறக்கிய” சரக்கு என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளாரோ?
  (to be continued)

 2. தொடர்ச்சி—
  6. படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? (அத: 52 வசனம் 35 to 36)========= அல்லா மட்டும் எப்படி பிறந்தார்?
  7. அல்லாவிற்கு மட்டும் பெண் மக்கள் உங்களுக்கு ஆன் மக்களா? (அத்தி: 52 வசனம் 38 – 39)=========== பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமா? அதனால்தான் இஸ்லாமிய பெண்களை அப்படி கொடுமைபடுத்துகிறீர்களா?
  8. வானின் வாயில்களை திறந்துவிட்டு மழையை கொட்ட செய்தோம் (அத்தி:54 வசனம் 9-17)====== இது என்ன “மேட்டூர் டேம்” திறந்து விடுவது போல கூறுகிறார்கள் விஞ்ஞானிகள் மழை வருவதற்கு வேறு காரணங்கள் சொல்கின்றனர். நபி வேறு காரணம் கூறுகிறார். அதுதான் எல்லோரும் “மதரசா” வில் படிக்கவேண்டும் அப்போதுதான் புத்தி வளரும் என்று சொல்கிறார்கள். நாம் தான் எதையும் காதில் வாங்கி கொள்ள மறுக்கிறோம்
  9 நபி தன மனைவியராகிய உங்கள் அனைவரயும் மணவிலக்கு செய்து விடுவாராயின் உங்களுக்கு பதிலாக உங்களை விடவும் சிறந்த மனைவியரை அல்லா அவருக்கு வழங்கி விடலாம் . (அத்தி: 66 வசனம் 4- 5)=====அல்லா என்ன கல்யாண தரகரா? அந்த நபிக்கு தன 13 பொண்டாட்டிகளையும் divorce பண்ணிட்டு இன்னும் புது புது இளசுகளாக கட்டி கொள்ள ஆசை போலும் அதற்கும் உதவி செய்ய இந்த அல்லா என்ற புரோக்கர் ரெடியாக இருக்கிறார்.
  10. அவர்கள் தங்கள் வெட்கத்தலங்களை பாதுகாக்கிறார்கள் — அவர்களுடைய மனைவியர் மற்றும் அடிமை பெண்களிடம் தவிர (அத்தி 70, வசனம் 10 – 35)===மனைவியிடம் மறைக்க வேண்டாம்பா அடிமை பெண்ணிடம் கூடவா? அட, மானங்கெட்ட பசங்களா! யாரிடம் வேண்டுமானாலும் திறந்து காட்டுவது என்றால் இது என்ன bioscope படமா?
  11. மதினாவில் இறக்கி அருளப்பட்ட “அந் நஸ்ர்” என்ற 3 வசனங்கள் கொண்ட 110 வது அத்தியாயம் நபி இறப்பதற்கு சுமார் 3 மாதங்களுக்கு முன் இறங்கியதாம். இதற்கு பிறகு ஒரு சில வசனங்கள் இறங்கியபோதிலும் எதுவும் முழு அத்தியாயமாக இறங்கவில்லையாம்! ========சொர்க்கத்தில் தங்க tablet களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள original லிருந்துதான் Gabriel என்ற தேவ தூதன் மூலமாக குர் ஆன் Prophet க்கு அல்லா transmit செய்தாராம். முழு அத்தியாயம் இறங்கவில்லை என்று சொன்னால் பூ உலகில் இருக்கும் குர்ஆன் ஒரு அரைகுறை குர்ஆன் தானே!
  12. முஸ்லிம் அல்லாதாரை திருமணம் செய்து கொள்வது ஆகாது (2 : 221) —மன்னன் அக்பர் ஏன் இந்து பெண்களை மனம் புரிந்தான்? அவன் அல்லா சொல்படி கேட்கவில்லை என்றுதானே அதற்கு பொருள்!
  13. உங்களுடைய மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்கள் ஆவர் (2 : 223)===இதைத்தானே இந்த “அயான் ஹிர்சி அலி” கூறுகிறார். அப்படியானால் அவர் கூறுவது நிஜம்தான்
  14. விதவை பெண்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் (24 : 32)===== அல்லா “செய்து வையுங்கள்” என்றுதான் சொன்னான் ஆனால் அதை நபி தவறாக புரிந்து கொண்டு எத்தனை widows களை மணந்து கொண்டான் என்பதை நபி வரலாறு படித்தால் தெரியும்
  15. கஅபா நோக்கி payanam செய்ய “சக்தி” உடையவர் meethu கடமையாகும். (2 : 96-97)===== சக்தி என்றால் இங்கே பண பலம் என்று அர்த்தம் ஆகவே, பண சக்தி இல்லை எனின் எதற்கு “மக்கா” போகவேண்டும்? அரசிடம் பிச்சை (=ஹஜ் மானியம்) பெற்று போக வேண்டுமா? குரானை நன்கு புரிந்த இஸ்லாமிய நாடுகள் அதனால் தான் அவர்கள் நாட்டில் மானியம் வழங்குவதில்லை. நம் நாட்டில் இன்னும் அதை சரியாக புரிந்து கொள்ளாததால் தான் மான்யம் பெறுவதும் குண்டு வைத்து கொலை செய்வதும் நடக்கிறது

 3. அருமையான பதிவு. வாழ்த்துக்கள். இஸ்லாமியரிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்கள் ஹிந்து பெண்கள் மட்டுமில்லை. முஸ்லிம் சஹோதரிகள் கூட.பெண்ணை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் அனைத்து பெண்களும் காக்கப்பட வேண்டியவர்களே.

 4. சுத்தம் இவ்வளவு மென்மையாகவா இஸ்லாத்தை பற்றி எழுதுவது.

  இந்த முக்காடு என்பது இஸ்லாமிய பெண்கள் தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டது. அதில் உங்களுக்கென்ன பிரச்சனையை என்கிறார்கள் நமது இஸ்லாமிய தோழர்கள்.

  உடல் உறவு கொள்ளாத மனிதன் மன அழுத்தம் அடைந்து மிருகமாகிறான். இது திருவாளர் பீ ஜே சொன்னது.

  என்னது இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்களுக்கு நல்லது சொல்லி தந்தார்களா. பாத்தீங்களா இத தான் இஸ்லாமிய சகோதர்களும் சொல்கிறார்கள்,. குரான் ஒரு அறிவியல் புத்தகம். அதில் ப்ளாக் ஹோலிளிருந்து எல்லாம் விளக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லா அவர்கள் இது காலம் சொல்லிவந்தது உண்மை என்பது வெட்ட வெளிச்சம் பார்த்தீர்களா.

  என்னது இஸ்லாம் பெண்ணுக்கு சுதந்திரம் தரவில்லையா. இஸ்லாத்தில் மட்டுமே விவாகரத்தான ஒரு பெண் மறுபடியும் தன்னுடைய ஒரிஜினல் புருஷனை எப்படி மறு மனம் செய்ய முடியும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து முடிஞ்சு, புதுசா ஒருவனை மணந்து, உறவு கொண்டு, புது கணவன் தலாக் செய்த பிறகு பழைய கனவுனுடன் மறு மனம் செய்ய முடியும். எவ்வளவு ஒரு புரட்சிகரமான திட்டம் பாத்தீங்களா. எது எப்படி செயல் பாட்டுக்கு வந்தது. எல்லாம் நமது ஸல்[அவர் மேல் அல்லாவின் அமைத்தி உண்டாகட்டும்] அவர்களுக்கதனான்.

  இஸ்லாம் மட்டுமே ஒரு ஆன் ஒரே சமயத்தில் நான்கு மனைவிகளை மட்டுமே மணந்து வைத்திருக்க முடியும் என்கிறது. அடிமைகளாக எவ்வளவு பேர் வேண்டுமானாலும் வெச்சுக்கலாம்.
  இந்த நான்கு மட்டுமே என்ற வரையறை மற்ற மதத்தில் எங்காவது இருக்கா? பெண்களுகேதிரான அணிதியை இஸ்லாம் கட்டுப்படுத்துவதை நீங்கள் இதிலிருந்து புரிந்து கொள்ளவில்லையா?

  ஒரு பெண்ணிற்கு திடீர் என்று பண கஷ்டம் அவள் என்ன செய்வாள் பாவம். இஸ்லாம் இதற்க்கு வழி தருகிறது. ஒரு நாள் கணவன். இதை உல்டாவாகவும் சிந்தித்து பார்க்கலாம். இதனால் லாபம் அடைந்த ஹைதராபாத் பெண்கள் எவ்வளவு பேர் தெரியுமா உங்களுக்கு.

  இஸ்லாம் மோசமான மதம் என்றால் ஏன் ஒரு பில்லியன் மக்கள் இஸ்லாத்தை பின் பற்றுகிறார்கள். உலகிலேயே வேகமாக வளரும் மதமாக ஏன் இஸ்லாம் இருக்கிறது.

  அதென்ன பெண்களுக்கு மட்டும் புர்கா என்று நினைக்கிறேர்களா. இஸ்லாம் தெளிவாக சொல்கிறது, பெண் குழந்தைகளும் புர்கா அணிய வேண்டும் என்று. இஸ்லாம் வயதான பெண்களையும், பெண் குழந்தைகளையும் வேறு படுத்தி பார்ப்பதில்லை. இதற்க்கு நபியே சாட்சி.

  உலகிலேயே அரேபியாவில் மட்டும் தான் குற்றங்கள் குறைவு தெரியுமா உங்களுக்கு. [விடுமுறை நாட்களில் கேஸ் கூட ரெஜிஸ்டர் பண்ண மாட்டங்க என்பதெல்லாம் நீங்கள் சவூதி போன தானே தெரிய போவுது, ஒரு ஆளு தொலஞ்சு போன இருவத்தி நாலு மணி நேரத்து பின்னாடி தான் கம்ப்லைண்டே வாங்கும் காவல் துறை சவூதி காவல் துறை மட்டுமே].

  ஒரு பெண் கெடுக்கப் பட்டால் நாடு நிலையான ஒரு நான்கு ஆண்கள் ஆம் இந்த பெண் கேடுக்கப்பட்டால் என்று சொன்னால் போதும் கோர்ட்டு கேசுன்னு அலையை வேண்டாம். உடனே கெடுத்த ஆணுக்கு ஆயிரம் ரூவாய் பைன் அப்புறம் அந்த பெண்ணுடன் திருமணம். அந்த ஆணுக்கு ஏற்கனவே நாள் பொண்டாட்டிகள் இருந்தால் மட்டுமே பிரச்சனை.

  உங்கள் மேல் அல்லாவின் அமைதி இறங்கட்டும். இறைவனே மிகப் பெரியவன். அவனுக்கு இணை வெஇக்காதீர்கல். மேலும் அவன் எல்லாம் அறிந்தவனாகவும் மிகப் பெரியவனாகவும், உங்கள் இறுதி நாளில் தீர்பெழுதுகிரனாகவும் இருக்கிறான்.

  இஸ்லாம் ஒரு மதமல்ல மார்கம்,

  நீங்கள் தொடர்வதால் நானும்

  தொடரும்…..

 5. இந்தக் கட்டுரை படிக்குங்கால் நம் மனக்கண் முன் தோன்றுமொரு காட்சி…………
  வீர ஹிந்து சிவாஜி மன்னன் ஒரு முஸ்லிம் மன்னனை வென்று வீரத் திருமுகத்தின் மலர்ச்சியுடன் வீற்றிருக்கிறார் . அப்போது அவரது படைத் தளபதியானவர் ,”மன்ன தங்களின் வெற்றிக்கு ஒரு பரிசு இதோ…” என்கிறார்.நிமிர்ந்து பார்க்கிறார் பண்பு மிக்க ஹிந்து மன்னவன்,உடன் அவரது வதனம் வாடுகிறது , முகம் பொலிவிழந்து விட்டது.அவரது ஹிந்து ரத்தம் அவரைத் தூண்டி விடுகிறது . உடன் சொல்கிறார் மன்னவன் ‘ சகோதரி வருக ! எனது தளபதி அவர்களின் செயலுக்கு நான் வருந்துகிறேன் அதற்காக என்னை மன்னிப்பாயாக,நீ சகல மரியாதையுடனும் உன் இருப்பிடம் செல்வாயாக ‘என்று கூறி அந்த அழகிய இளம் பெண்ணுக்கு ஒரு சகோதரன் என்ன சீர் செய்வானோ அப்படி செய்து அவளது புனித நூலையும் செல்வங்களையும் பரிசளித்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார் அந்த ஹிந்து சத்ரபதி.
  இதுதான் நமது ஹிந்துப் பண்பாடு.
  ஈஸ்வரன்,பழனி.

 6. எனது 2-8-2013 (நேரம்: 2-32 பிற்பகல்) தேதியிட்ட மறுமொழியின் தொடர்ச்சி———-

  16. அல்லா ஒரு angel ஐ black stone ஆக மாற்றிவிட்டாராம்! அதன் பெயர் Hazrul Aswad ஆகும். அதனை க’ பா இல்லத்தின் வலது பக்கத்தில் வைத்தன. ஹஜ் யாத்திரிகர்கள் இந்த கல்லை KISS செய்வார்கள்==============எத்தனை வாய்கள் அதை முத்தமிடும்.? கன்றாவி! இது சுகாதாரமான செயல்தானா? நாம் கல்லை கடவுள் என்று வணங்கினால் தப்பு என்கிறார்கள் ஆனால் இவர்கள் மட்டும் “கல்லை” பயபக்தியோடு முத்தமிடுவார்கள். பிறகு சாத்தான் என்ற 3 “கல்தூண்கள்” மீது “கல்” எறிவார்கள். அது கல் என்று நன்றாக தெரிந்தும் அதை சாத்தான் என்று கருதுவது மூடத்தனமில்லையா? எல்லாம் “””கல்””” மயம்!
  17. தொழுகைக்கு அழைப்பு (=பாங்கு) loudspeakers மூலம் விடுப்பார்கள். அப்போது அதில் “லா இலாஹ் இல்லல்லாஹ்” என்று ஒரு பகுதி வரும். அதற்கு பொருள் “அல்லாவை தவிர வேறு இறைவனில்லை” ஆகும். இப்படி சொல்லும் நேரத்தில் இந்து ஒருவர் தன வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தால்அவன் மனம் நோகாதா? இவர்கள் மசூதியில் தொழுகை நடத்தும்போது இந்துக்கள் காவடி எடுத்து வந்தால் அது எங்கள் தொழுகைக்கு இடைஞ்சலாக உள்ளது என்று காவடி மீது செருப்பு, சிறுநீர், கற்கள் வீசுகிறார்களே! Tolerance க்கு பெயர் போன இந்து எப்போதாவது நாம் இந்து கடவுளை வணங்கும்போது “அல்லாவை தவிர வேறு ஒரு கடவுள் இல்லை” என்று சொல்லி மனம் நோக செய்கிறானே என complaint செய்கிறானா? அமெரிக்காவில் தொழுகை அழைப்பை loudspeakers மூலம் செய்வதில்லை. நீங்களும் அதேபோல இந்தியாவிலும் அது இல்லாமல் ஏன் செய்யகூடாது? இஸ்லாம் தோன்றியபோது loudspeaker இருந்ததா? அப்போது நபி அது இல்லாமல்தானே அழைப்பு விடுத்தார்? அவர் தன life ல் எப்படி எப்படி வாழ்ந்தாரோ அப்படி அப்படியே அச்சு பிசகாமல் வாழும் நீங்கள் இதில் மட்டும் எதற்கு மாற்றம் செய்கிறீர்கள். அல்லது குர் ஆன் நூலில் எந்த அத்தியாயத்தில் எந்த வசனத்தில் loudspeakers மூலம்தான் அழைப்பு விடவேண்டும் என்று அல்லா சொல்லியிருகிறார்?
  18. “க’பா” வை 7 முறை counterclockwise ல் சுற்றவேண்டுமாம்! Devil என்று கருதப்படும் 3 கல்தூண்கள் மீது 7 pebbles எரியவேண்டுமாம்! ============அது என்ன எல்லாம் 7. ஹஜ் சென்றால் மொட்டை அடிக்கவேண்டுமாம்! ==== நாம் திருப்பதி சென்று மொட்டை அடித்தால் மட்டும் வீரமணி கிண்டல் அடிக்கிறானே இதற்கு மட்டும் வாய் திறவாமல் இருப்பதேன்
  19. நீங்கள் செய்வன அனைத்தையும் அல்லா நன்கு பார்ப்பவனாக இருக்கிறான். ( 2 : 261 – 265) ++++++++ (19 a ) அவர்கள் தம் இழி செயல்களை மனிதர்களுக்கு தெரியாமல் மறைத்து கொள்ளலாம். ஆனால் அல்லாவிடம் மறைக்க முடியாது. அல்லா அவர்கள் செய்கின்ற அணைத்து செயல்களையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கிறான். (4 : 105 – 112) +++++++ (19 b ) ஆயினும் நான் எந்நிலையிலும் உங்களை கண்காணிப்பவன் அல்லன், (11 : 84 – 86)============= தயவுசெய்து 19, 19 a மற்றும் 19 b ஆகிய மூன்றையும் நன்றாக பலமுறை ஊன்றி படியுங்கள். அல்லா ஒரு loose ஆ? அல்லது நபி ஒரு loose ஆ? என்பதை நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
  20. நீங்கள் போதையோடு இறக்கும்போது தொழுகையை நெருங்காதீர்கள்! ( 4 : 43)
  ====== குடிக்கவே கூடாது என்று கறாராக சொல்லாமல். குடித்துவிட்டு போதையோடு இருக்கும்போது வராதே. போதை எல்லாம் அடங்கின பிறகு தாராளமாக தொழுகைக்கு வா என்றால் இது ஒரு நல்ல மதமா?
  21. இறை நிராகரிப்பு ( -நாத்திகர்கள்) போக்கை கொண்டவர்கள் (நரகத்தில்) கொதிக்கும் நீரை குடிப்பார்கள். ( 10 : 4)======= அப்படியானால் வீரமணி கொதிக்கும் நீரை குடித்தே ஆகவேண்டுமா? வேறு வழியே இல்லையா?
  22. காய்ந்த களிமண்ணில் இருந்து மனிதனை படைத்தோம் ( 15 : 26-43) ++++++++
  22 a ) அவன் (=அல்லா) மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான்.( 16 :4-9)======= இந்த 2 வசனங்களையும் படியுங்கள் ஒரு குடிகார சோமாறி மட்டுமே இப்படி மாறி மாறி பேசுவான் வேறு எவனும் அப்படி பேசவே மாட்டான்.
  (தொடரும்)

 7. தொடர்கிறது———————————————————————————————————

  23) எவர்கள் தீய சூழ்ச்சிகளை மேற்கொள்கிறார்களோ அவர்களை பூமி விழுங்கும்படி(அல்லா) செய்திடுவான். ( 16 : 45-47) ==========> முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேஷியாவில் அடிக்கடி பூகம்பம் நடப்பது அதனால்தானோ?
  24) அல்லாவின் திருமுன் எவ்வாறு பணிந்து விழுகின்றன என்பதை ( 16 :48-50 )===> அல்லாவிற்கு உருவம் கிடையாது அவன் எங்கு நிற்கிறான் எங்கு உட்காருகிறான் எங்கு பார்த்துகொண்டிருக்கிறான் என்று எதையும் சொல்லமுடியாது அப்படி இருக்க அவன் திருமுன் பணிந்து விழுகின்றன என்று சொல்வது எங்கோ இடிக்கிற மாதிரி தோணவில்லையா?
  25) உம இறைவன் தேனீக்கு இவ்வாறு “வஹி” (=இறைச்செய்தி) அறிவித்தான். (16 : 68 -69 )========> யார் யாருக்குதான் “வஹி” அறிவிப்பது என்று ஒரு விவஸ்தையே இல்லையா?
  26) விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள். ( 17 : 23-27 )++++++++++ (26 A ) பெண்கள் தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். மேலும் தங்கள் மார்புகள் (=BREASTS ) மீது முந்தானையினை போட்டு மூடி கொள்ளட்டும். சில குறிப்பிட்ட ஆடவர்கள்(=நெருங்கிய உறவினர்கள்) முன்னிலையில் அன்றி பெண்கள் தங்கள் அழகை வெளி காட்ட வேண்டாம்.( 24 : 311)========> இதை குண்டு நடிகை குஷ்பூ மற்றும் கவர்ச்சி நடிகைகள் முமைத்கான், மும்தாஜ். போன்ற Harlots க்கு போய் சொல்லுயா!
  26) அல்லாவை விடுத்து வேறு யாரை கடவுளர்களாக நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களை அழைத்து பாருங்கள் உங்களின் எந்த துன்பத்தையும் அவர்களால் அகற்றிவிட முடியாது மாற்றிவிடவும் முடியாது (16 : 56-56)=======> சில வருடங்களுக்கு முன் ஹஜ் பயணிகள் மெக்காவில் ஜன நெரிசலில் மடிந்து இறந்தார்களே அவர்கள் அப்போது அரே! “அல்லா அல்லா அல்லா” என்று கூப்பிட்டு தொலைக்கவே இல்லையா? அதனால்தான் அவர்களை அம்போ என்று விட்டு விட்டாயா? அல்லது அன்று ஒரு நாள் “casual leave ” ல் இருந்தாயா?
  27) எவன் இப்பிறவியில் குருடனாக இருந்தானோ அவன் மறுமையிலும் குருடனாகவே இருப்பான். (17 : 66 -73 )=======> இது ஒரு கடவுள் பேசும் பேச்சா? அரசாங்கம் குருடன் என்று சொன்னால்கூட அவன் மனம் நோகும் என்று differently -abled person என்று கூறுகிறார்கள். ஒரு கடவுள் இப்படி கொழுப்பு ஏறி பேசினால் அவனை எதால் அடித்தால் தகும்?
  28)கீழ்கண்டவற்றை படித்து இன்புறுங்கள் என்ன அருமையான கற்பனை ஆங்கில கவிஞன் ஷெல்லி மற்றும் நம்மூர் கவிஞன் கண்ணதாசன் எதற்கு?
  (நபியே,) கூறும்: ” என் இறைவனின் வாக்குகளை எழுதுவதற்கு கடலே ink ஆகி விட்டாலும் கடல் நீர் தீர்ந்து போய்விடுமே தவிர என் இறைவனின் வாக்குகள் தீராது. அதுபோல இன்னொரு மடங்கு ink னை கொண்டு வந்தாலும் அதுவும் போதாது. ( 18 : 109) +++++++ 28a ) எழுதப்பட்ட ஏடு சுருட்டபடுவதைபோல நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில் ( 21 : 104-108 )
  29) மறுமை நாள் வந்தே தீரும். அப்போது ( மண்ணறைகளில் (=சவக்குழி) உள்ளவர்களை (=deadbodies ) திண்ணமாக அல்லா எழுப்புவான்.(22 : 3 – 7 )======
  மண்ணோடு மண்ணாகி மக்கி போனவனை எப்படி தாலாட்டு பாடி எழுப்புவாரா?
  Suppose ஒருத்தி கணவன் கொடுமை தாங்க முடியாமல் self -immolation செய்து கொண்டு முழுவதுமாக எரிந்து கரி கட்டையாக ஆகி இருந்தாலோ அல்லது கடலில் குதித்து இறந்து கடல் மிருகங்கள் முழுமையாக தின்று விட்டிருந்தால் அல்லா எங்கே போய் தாலாட்டு பாடுவார்?
  30) உம இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஓராயிரம் ஆண்டுகளுக்கு சமம். (22 : 47-48 )======> ஆமாம்பா! இதை தெரிஞ்சிக்கப்பா!
  31) அந்த அல்லாதானே உங்களுக்கு சிந்திப்பதற்கு இதயத்தை வழங்கி உள்ளான். (23 : 78 – 83)====== மூளை சிந்திக்கிறதா? அல்லது இதயம் சிந்திக்கிறதா? நான் ரொம்ப குழம்பி போயுள்ளேன். யாராவது கூறுங்களேன்.
  32. சிறகடித்து பறக்கும் பறவைகளுக் அல்லாவை துதித்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் தன்னுடிய தொழுகையும் துதி முறைகளையும் அறிந்திருக்கிறது. ( 24 : 41-42 )=======கடவுளே! நான் படிப்பது குர் ஆனா அல்லது COMIC BOOK ஆ?
  (இன்னும் வளரும்)

 8. நல்ல கட்டுரையை ஆசிரியர் மொழி பெயர்த்து தந்துள்ளார். ஆபிரகாமிய மதங்களின் ஆணிவேர் மோசே சட்டங்கள் மோசே எழுதவில்லை என பைபிளை கொண்டு சொல்வதை எல்லோரும் படிக்கவேண்டும்.

 9. தொடர்கிறது ——————————————————————————————————-

  33) நோன்புக்கால இரவுகளில் நீங்கள்உங்கள மனைவியருடன் “கூடுவது”(=intercourse ) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. இனி இரவில் அவர்களுடன் நீங்கள் கூடுங்கள் (2: 187)======> இது என்ன செக்ஸ் புத்தகமா அல்லது மத நூலா?
  34) ஆயினும் ஆண்களுக்கு பெண்களைவிட ஒரு படி உயர்வு உண்டு. ( 2 : 228 )+++ ஒழுக்கமான பெண்கள் கீழ்படிந்தே நடப்பார்கள். அவர்கள் தங்களுக்கு மாறு செய்வார்கள் என்று கணவன்மார்கள் கருதினால் அவர்களை படுகைகளிலிருந்து ஒதுக்கி வையுங்கள் மேலும் அவர்களை அடியுங்கள். அல்லா மேலே இருக்கிறான். (4 : 34-35) =======>இந்த 2 வசனங்களை பெண்ணியவாதிகள் (=Feminists ) கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் மேலும் “அவன் இல்லாத இடமே இல்லை அல்லா அல்லா” என்று ஒரு பாடல் வருகிறது. ஆனால் இந்த வசனத்தில் “அவன் மேலே இருக்கிறான்” என்றுவருகிறதேஎப்படி? 35) பிறருக்கு மனைவியராக இருகின்றவர்கள் போரில் உங்கள் கைவசம் வந்து விட்டால் அவர்கள் உங்களுக்கு மனைவி ஆவதில் தடை இல்லை. இது இறை சட்டமாகும். (4 :24 )=======> தமிழ் பண்பாட்டில் (=இந்து பண்பாடு) போரின்போது குழந்தைகள், மகளிர், வயதானவர்கள், பசுக்கள் ஆகியோரை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டுதமிழர்கள் சண்டை போட்டனர். அது நாகரிகம். போரின்போது அடுத்தவன் மனைவி கிடைத்தால் விடாதே. கோழி அமுக்குகிற மாதிரி அமுக்கு என்று கடவுள் சொல்கிறான். இல்லாத ஒரு கடவுளை “அவன் சொல்கிறான் அவன் சொல்கிறான்” என்று தனது வக்கிரபுத்தி கொண்ட மனதில் தோன்றியதை எல்லாம் கூறி “அவன்” மேல் பழி போட்டு விட்டார் நபி.
  36) திருடுபவர் ஆணாயினும் சரி பெண் ஆயினும் சரி அவர்களின் கைகளை வெட்டுங்கள். ( 5 : 38-41 )=======> இதுதான் ஷரியத் சட்டம். O . K . இந்தியாவில் எந்த முஸ்லிமும் திருடியதே இல்லையா? ஆனால் எந்த ஒரு முஸ்லிமின் கைகள் வெட்டப்பட்டதாக செய்தி எந்த பத்திரிகைகளிலும் வரவில்லையே! அதாவது தனக்கு சாதகம் என்றால் ( ஜீவனாம்சம், பலதாரமணம் போன்றவை) அப்போது ஷரியத் வேண்டும் என்பார்கள். ஆனால் தனக்கு பாதகம் என்றால் (கை வெட்டுவது போன்றவை) அப்போது இந்தியன் பீனல் கோடு போதும் என்பார்கள். 3-8-2013 தேதியிட்ட “தி ஹிந்து” ஆங்கில நாளிதழில் வந்த ஒரு செய்தியினை படியுங்கள். Rice smuggler (=RAHMAN) was detained under Goondas Act. Rahman is the brain behind his brother-in-law KHAJA MOHIDEEN of Mathukarai who was involved in the illicit trade of ration rice. இவனுக்கு எந்த சட்டத்தின் கீழ் தண்டனை கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலே பாராட்டு கூட்டம் நடத்தி ஹஜ் யாத்திரைக்கு முழு அரசு செலவில் அனுப்பலாமா என்று Secularists ( = கருணா, ஜெ, முலாயம், லல்லு போன்றோர் கூறினால் மிக நன்றாக இருக்கும்)
  37) இறை நம்பிக்கை கொண்டவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள் (5 : 51)=======> இது உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் நல்லது. மேற்கண்ட வாசகத்தை அல்லா சொல்கிறான் நான் சொல்லவில்லையப்பா!
  38) அல்லா தனக்கு அரியாசனத்தை ஞாயிறு (=SUN day) அன்றும் ஏழு சுவர்க்கங்களை திங்கள் அன்றும் பூமியினை Tuesday அன்றும் விண்வெளியை புதன் அன்றும் பூமிக்கும் வானத்திற்கும் இடையே உள்ள பொருட்களை வியாழன் அன்றும் sun , moon , stars planets ஆகியவற்றை Friday அன்றும் படைத்து விட்டு சனிகிழமை அன்று rest எடுத்து கொண்டாராம் =====> சண்டே என்பது sun என்ற கடவுளை கௌரவபடுத்த வைத்த பெயர் என்று கிரேக்க புராணம் கூறுகிறது ஆனால் இங்கே அந்த சூரியனை friday அன்றுதான் அல்லா படைக்க போகிறார். ஆனால் அந்த சூரியனை படிப்பதற்கு முன்னாலேயே sunday அன்று தனக்கு அரியாசனம் படைத்தார் என்றால் நம்பும் படியாகவா உள்ளது? அதாவது sun படைக்கப்பட்ட பின்புதான் sunday என்ற பெயரே வரும். அப்படியிருக்க அதற்கு முன்னமே எப்படி சண்டே அன்று அரியாசனம் படைக்க பட்டது என்று கூறமுடியும்? மேலும் அந்த அல்லாவே saturday அன்று rest எடுத்தபோது அவர் வழி நடக்கும் முஸ்லிம்கள் வெள்ளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விட்டு rest எடுப்பதென்?
  (இன்னும் வரும்…….)

 10. இஸ்லாம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் கோட்பாடு என்பதை ஹிந்துக்கள் புரிந்து கொண்டால் அதில் லாஜிக்குக்கு ( logic) இடமில்லை என்பதை உணரலாம் .

 11. மேலும் தொடர்கிறது——————————————————————————————–

  39) மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம் ” உமது கைத்தடியினால் கடலை அடியும். அது உடனே பிளந்து விட்டது( 26 : 60-66) ======> இது புனித (!?) நூலில் வருகிற வசனம். ஒரு கைத்தடியினால் கடலை அடித்தால் அது பிளக்கும் என கூறுவது வீரமணிக்கு ஏற்புடையதாக உள்ளதா?
  40) அல்லாவுக்கு அஞ்சுங்கள். மேலும் எனக்கு கீழ்படியுங்கள் (26 : 141-157)====>அல்லா என்பது third person ல் மற்றும் எனக்கு என்பது first person ல் வருகிறது அப்படியானால் அல்லா என்பது யாரை குறிக்கிறது எனக்கு என்பது யாரை குறிக்கிறது? “அல்லாவுக்கு அஞ்சுங்கள் . மேலும் அவனுக்கு கீழ்படியுங்கள்” என்றல்லவா வார்த்தை இருந்திருக்க வேண்டும்? அல்லது அரபு மொழியில் அப்படித்தான் வருமோ?
  41) அவர்கள் எத்தகையவர்கள் எனில் அவர்களுக்கு மோசமான தண்டனை இருக்கிறது (27 : 1-61)===>எத்தகையவர்கள் எனின் என்ற வார்த்தைக்கு அடுத்து வரும் வார்த்தைகள் சரியாக பொருந்தவில்லையே! இன்னொரு முறை கூட நன்றாக படித்து பாருங்கள்
  42) ஒரு எறும்பு கூறியது:”எறும்புகளே! உங்களுடைய புற்றுக்குள் நுழைந்து கொள்ளுங்கள் சுலைமானும் அவருடைய படையினரும் தெரியாமல் உங்களை மிதித்து விடக்கூடாது இதை கேட்டு சுலைமான் புன்னகைத்தார். (27 : 15-19)===>
  ஒரு எறும்பு பேசுமா? அந்த எறும்பு பேசிய பேச்சை சுலைமான் கேட்கமுடியுமா? அந்த எறும்புக்கு ஒரு மனிதன் பெயர்கூட தெரியுமா? இது என்ன புனித நூலா அல்லது புருடா நூலா? இந்த புண்ணாக்கு நூலை பற்றி நம் புனிதர்களான கருணாநிதி மற்றும் வீரமணி கும்பல் பேசவே மாட்டார்கள் எல்லாம் ஒட்டு!
  43) அ(ரசியின் தூது)வர் சுலைமானிடம் வந்ததும் சுலைமான் கேட்டார் (27 : 38-37) ======> இந்நூலில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் .comma , full stop அனைத்தும் வஹி மூலம் வரபெற்றது எனின் அந்த ஜிப்ரில் ” அ(ரசியின் தூது)வர் ” என்பதை அ – bracket opens – ரசியின் தூது – bracket closes – வர்” என்று பிரித்து பிரித்து கூறினாரா? அல்லது அரசியின் தூதுவர் என்று பிரிக்காமல் அப்படியே கூறினாரா? கடைசியாக கூறியது தான் சரி என்று வாதிட்டால் bracket ஐ நுழைத்தவன் யார்? ஆக, இடைசெருகல் உள்ளன என்பது நிதர்சனமான உண்மை.
  38)அன்றைய நாளில் மலைகள் மேகங்களை போன்று பறந்தோடி கொண்டிருக்கும் (27 : 87 – 90) மலைகள் மேகங்களை போல பறக்குமாம்! நம்புங்கள்
  39) மூஸா அவனை ஓங்கி குத்தினார்.அவன் கதையை முடித்தார். அல்லா மூஸா விற்கு மன்னிப்பு வழங்கினான் ( 28 : 14-17) ====> ஒரு murder க்கு கடவுள் மன்னிப்பா?
  40) இதற்கு முன்பு நாம் (=we ) வேதம் வழங்கி இருந்தோம் (32 : 23-25) ========> நான் (=I ) என்றால் அது அல்லாவை குறிக்கும் நாம் என்றால் plural .அது பல பேரை குறிக்கும். ஒரே கடவுள் எனக்கு ஈடு ஜோடு யாருமில்லை எனும்போது நான் என்றுகூராமல் நாம் என்று சொல்வதேன்? நான் என்று வேறு இடங்களில் கூறியிருக்கும்போது இங்கே மட்டும் நாம் என்று கூறுவதேன்? {நான் இப்போது உங்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் வழங்கி இருக்கிறேன்–(3 : 81-82)}.41) முகமது அல்லாவின் தூதுவராகவும் இறுதி நபியாகவும் இருக்கிறார் (33 : 40)
  ==========> ஏன் இறுதி? இந்த நபருக்கு (=முகமது) பிறகு மக்கள் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் தூய்மையாகவும் வாழ்கிறார்களா? கொலை, கொள்ளை, பொய், மோசடி, குண்டு வெடிப்பு மோசடி, கற்பழிப்பு ஏதும் இப்போது நடக்கவில்லையா? 1400 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றங்களை விட அதிகமாக இப்போது குற்றங்கள் நடக்கின்றன. ஆகவே அல்லாவே உடனே இன்னொரு நபி (ஆனால் நல்ல நபி) ஒருவரை உடனே அனுப்பி வை ஆனால் இப்போதைய விஞ்ஞான முன்னேற்றத்திற்கு ஏற்ப ஒரு தூதுவர் மூலம் வஹி அனுப்பாமல் செல்போன் மூலம் அனுப்புங்கள். ஏன் என்றால் அதை மக்கள் பார்த்து நம்புவார்கள் அது எங்கிருந்து வந்தது என்பதையும் செல்போன் tower மூலம் போலீஸ் துறை மூலம் தெரிந்து கொள்ளமுடியும்.
  42) நபியின் இல்லங்களில் அனுமதியின்றி நுழ்யாதீர்கள் (33 : 53-54)==========> ஆமாம்பா எந்த நேரத்தில் எந்த மனைவியுடன் (13 பேரில்) சல்லாபித்து கொண்டிருப்பாரோ அந்த நேரத்தில் நீங்கள் திடீரென நுழைந்தால் எப்படிப்பா? எரிச்சல் எரிச்சலாக வராது?
  43) அல்லா தான் நாடுவோரை நெறிபிறழ செய்கிறான். மேலும் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான் (35: 8-9)==========> நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் அல்லாவே காரணம் எனும்போது அப்புறம் சாத்தான் மீது ஏன் வீண்பழி போட வேண்டும்?
  44) சூரியன் தனது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். (36 : 37-40)===>
  சூரியன் நகர்கிறது என்று நம்ப நபி விஞ்ஞானி சொல்கிறார்.நாம் நம்பித்தான் ஆகவேண்டும் இல்லை என்று மறுத்தால் உன் வீட்டில் பெட்ரோல் குண்டு விழும்பா. ஜாக்கிரதை.
  45) ஒரு பொருளை படைக்க நாடினால் அல்லா “ஆகுக” என்று கூறுவான் அது உடனே ஆகி விடும் (36 : 77-83)=======> ஆகுக என்று கூறிய உடனே (at once ) அது ஆகிவிடும் என்றால் இந்த உலகை மற்றும் வானத்தை படிக்க ஏன் 6 நாட்கள் (மானிடன் வாழும் உலகு கணக்குப்படி 6000 -ஆனால் அல்லா வாழும் உலகு கணக்குப்படி 6 நாட்கள்) ஆனது என்று விளக்க முடியுமா?
  46) பூமியில் உனது கால்களை கொண்டு உதையும் . இதோ குளிப்பதற்கும் குடிப்பதற்கும் குளிர்ந்த நீர் (38: 41-44) =====> பாலைவன அரேபியாவில் காலால் உதைத்தால் நீர் வருமாம்!
  47) அறிவிலிகளே! ( 39 : 62 – 66) =====> தான் தூயவன் உயர்ந்தவன் என்று கூறிகொள்ளும் ஒரு கடவுளிடம் வரும் வார்த்தைகள் போல் இது தெரியவில்லையே! படிப்பரிவுஇல்லாத ஒருவனின் வார்த்தைகளாக தெரிகிறது.
  48)

 12. மாலையில் சூரியன் எங்கே செல்கிறான்?இந்தக் கேள்விக்கு நபிகள் பதில் சொல்கிறார் : அல்லாவின் காலடியில் தங்கி விட்டு பின் மறுநாள் காலையில் அவர் அனுமதி பெற்று மீண்டும் உதிக்கிறான்.
  நல்ல காமெடி.
  இன்டர்நெட்டில் wafa sultan என்று பார்க்கவும்.
  இந்தப்பெண்மணி இஸ்லாமிய அறிஞர்களை வறுத்து எடுக்கிறார்.

 13. எனது 9-8-13 தேதியிட்ட மறுமொழி வளர்கிறது.————————————————–>

  48) மறுமை நாளில் பூமி முழுவதும் அவனது கைபிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலது கரத்தில் இருக்கும் (30 : 67-70)——————————————->
  உருவம் இல்லாதவனுக்கு வலது கரம் மற்றும் இடது கரமா? பூமி அவனது கைபிடியில் என்றால் அவனது கை எவ்வளவு பெரியதாய் இருக்கணும்?
  49) நபிக்கு 52 வயது இருக்கும்போது குறைஷி தலைவர்கள் அவரை பார்த்து “நீர் உண்மையில் PROPHET என்றால் இந்த நிலாவை 2 ஆக பிளந்து காட்டு” என்று
  சவால் விட்டனர். நம்ம நபி தன கைகளை மேலே நோக்கி PRAYER செய்தார். என்ன ஆச்சர்யம்! நிலா 2 ஆக பிளந்துவிட்டன. ஒவ்வொரு துண்டும் SAFFA மற்றும்
  KAIKAAN என்ற 2 MOUNTAIN களுக்கு மேலே காணப்பட்டதாம்!. .===>நிலா என்ன சப்பாத்தியா? இரண்டாக பிளந்துகொள்ள? கேட்பவன் கேனையனாக இருந்தால் கேழ்வரகில் —– என்று கேட்க தோன்றுகிறது.
  50) முன்னாள் அடிமையும் நபியின் வளர்ப்பு மகனும் ஆன ZAYD என்பவனுடைய மனைவி ZAINAB ஆகும்.. ஒரு நாள் நபி ZAYD ஐ பார்க்க சென்றான். கதவில் திரைதுணி இருந்தது. வீசிய காற்று அததிரையை அகற்றி உள்ளே உடை அணியாமலிருந்த ZAYNAB ஐ பார்த்து விட்டார். அவர் அழகை புகழ்ந்து தள்ளினார்.அதற்கு பிறகு அல்லா (=PIMP = மாமா வேலை செய்பவன்)
  ZAYD கண்ணுக்கு அழகில்லாமல் தெரியுமாறு அவளை செய்து விட்டான்.அதனால் அவன் அவளை DIVORCE செய்து விட்டான்.பின் முகமது நபி அவளை (=தன மகனின் பெண்டாட்டியிநை) 5 வது மனைவியாக DHUL QAADHA ல்( அதாவது ஹிஜ்ர வின் 5 வது ஆண்டில் ) மணம் முடித்தான்
  51) மக்கா காபாவிலிருந்து 7 வானங்களை கடந்து சென்று BAYT AL MAMUR க்கு
  BURAQ என்ற சொர்க்கலோக விலங்கு மீது சென்றார். பிறகு ஜிப்ரில் உடன் SIDRA AL MUNTAHA க்கு சென்றார். பிறகு அல்லாவை நபி பார்த்தாராம்! பிறகு நரகம் மற்றும் சொர்க்கம் ஆகிய இடங்களுக்கும் சென்றார். நபி அல்லாவின் அழகை தன கண்ணார கண்டாராம்! பிறகு அதே விலங்கு மீதே மக்கா வந்து விட்டாராம்! இவை அனைத்தும் ஒரு இரவில் நடந்ததாம்! அல்லா நபியிடம் தினமும் 50 முறை தொழுகை நடத்த வேண்டும் என்றாராம ஆனால் அல்லாவிடம் நம்ம நபி APPEAL செய்தாராம். அதனால் 5 முறையாக மாற்றப்பட்டதாம்
  52) காபா ஆலயத்தில் உள்ள ஹிஸ்ருல் அஸ்வத் என்ற கல் வளையத்திற்கு மேலே வெள்ளி தகடு போட்டு பாதுகாப்பு செய்திருக்கின்றனர். அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில் சுவரில் பதிக்கபட்டுள்ள ஒரு கல் அதிர்ஷ்டகல் என்று அழைக்கபடுகிறது . .
  53) நபி ஹிரா என்ற குகைக்கு போக வீடுகள் மலைகள் போன்றவற்றை கடந்து தான் செல்லவேண்டும். அப்படி போகும்போது அங்கே இருக்கும் கற்களும் மரங்களும் “ஆண்டவனின் தூதர்களே” என்று வாழ்துமாம்!
  54)11-3-2013 தேதிய ஹிந்து செய்திதாளில் வந்த செய்திபடி பாகிஸ்தான் முஸ்லிம் பாடகர் SHIRAZ UPPAL என்பவன் இசையானது UNISLAMIC என்று கூறி இசைக்கு GOODBYE கூறிவிட்டார். THERE IS NO PLACE FOR MUSIC IN iSLAM. SO , I WANT TO BE A GOOD MUSLIM”==============>அப்படியானால் நம்ம இசைபுயல் நல்ல முஸ்லிம் இல்லியோ?

 14. 55) முஸ்லிம்கள் பன்றி கறியினை வெறுப்பார்கள். ஆனாக் பன்றியிளிருந்து எடுக்கும் இன்சுலினை ஊசி மூலம் போட்டுகொள்வார்கள். முஸ்லிம்களில் யாருக்கும் சர்க்கரை வியாதி கிடையாதா?
  56) நபியின் “மாரியா கிப்தியா” என்ற மனைவிக்கு “இப்ராஹிம்” என்ற ஆன் குழந்தை பிறந்தது. ஆட்டுக்குட்டியை அறுத்து குழந்தைக்கு மொட்டை அடித்து அந்த முடிக்கு ஈடாக வெள்ளியை தானம் செய்தார். பிறகு முடியை மண்ணில் புதைத்தாராம்! =========> இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மதம் என்று ஈ வே ரா முதல் வீரமணி வரை சொல்கிறார்களே! அப்படி என்ன பகுத்தறிவினை கண்டு பிடித்து விட்டார்கள் என்று தெரியவில்லை.
  59) இந்துக்கள் எழுத தொடங்கும்போது விநாயகர் சுழி போட்டு விட்டு எழுதுவார்கள். அதே போல முஸ்லிம்கள் 786 என்று போட்டுவிட்டு எழுதுகிறார்கள். ஆனால் அவன் அறிவாளி. ஆனால் இந்து மட்டும் முட்டாளா?
  60) இந்துக்கள் மட்டும் தான் “செய்வினை” (=black magic ), திருஷ்டி கழிவு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று நினைக்க வேண்டாம். 6-6-2013 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்ப்ரஸில் பக்கம் 4 மற்றும்3 ஆவது பத்தியில் வந்துள்ள வாணியம்பாடி முஸ்லிம் ஒருவர் கொடுத்துள்ள விளம்பரத்தை படித்து பார்க்கவும்.
  61) எனது 16 ஆவது point ல் 3 கல்தூங்களை பற்றி கூறியிருந்தேன். அந்த 3 கற்களும் முறையே ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் உஸ்தா மற்றும் ஜம்ரத்துல் உக்பா ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ளன.
  62) கடவுள் இல்லை என்று சொல்லும் கருணாநிதிக்கு அந்த கடவுள் இருக்கும் கோவிலில் தன கட்சியினருக்கு அறங்காவலர் பதவி மட்டும் வேண்டுமா?
  63) யோகா என்றாலே முகம் சுழிக்கிறார்கள் முஸ்லிம்கள். minority தான் எனக்கு priority என நினைக்கும் கருணா தினமும் 5 மணிக்கு எழுந்து யோகா செய்கிறார் என்பது தெர்யுமா?
  இன்னும் தொடரும் , .

 15. Hindhu visvanathan pontravarkal islathai kuritthu arivu illaamal vimarsitthu eluthinaalum islaathai alitthuvida mudiyadhu.

 16. அன்பிற்குரிய திரு சகோதரர் பழனி மதன் (=Palani madan ) என்பவரின் ஆதங்கம் எனக்கு நன்றாக புரிகிறது. அவர் ஒரு இறைவனை நம்புகிறார். நாங்கள் ஒரு இறைவனை நம்புகிறோம். ஆக, நாம் இருவருமே கடவுள் மீது நம்பிக்கை (=ஈமான்) கொண்டவர்கள். திக வினர் மேடை போட்டு இந்து கடவுள்களை கண்டபடி அசிங்கமாக கூச்சநாச்சமின்றி பேசியபோது அவனை ஒரு காஹ்பிர் (=atheist = நாத்திகன் = இறைமறுப்பாளன்) என்று கருதி அவன் நம்மிரு மதங்களுக்கும் பொதுவான எதிரி என்று நினைத்து அந்த பேச்சுகேல்லாம் எங்களோடு சேர்ந்து எதிர்குரல் கொடுத்திருந்தால் உம்மை எம் உடன்பிறவா (=blood brother ) சகோதரனாக பாவித்திருப்போம். ஆனால் கூட்டத்திற்கு நிதி வசூலுக்கு துண்டு ஏந்தி வந்தபோது எத்தனை முஸ்லிம்கள் வாரி வாரி கொடுத்தனர் தெரியுமா? அவன் எங்களை திருடன்(=இந்து) என்றபோது உங்கள் மனசுக்குள் மத்தாப்பு பிரகாசித்தது. எங்களுக்கு அடி வயிறு எரிந்தது. ஒரு பொது எதிரியோடு சேர்ந்தது யார் தவறு? இப்போதாவது திருந்தி அவனை விரட்ட எங்களோடு கை கொடுக்க வருவீர்களா?
  நான் எங்கெங்கே அறிவு இல்லாமல் எழுதி இருக்கிறேன் என்று ஆதாரத்தோடு சுட்டி காட்டி இருந்தால் அவை உண்மை எனின் மனம் வருந்தி உங்களிடம் நான் மனசார மன்னிப்பு கேட்பானே! ஆனால் சுட்டி காட்டாமல் “”அறிவு கெட்டவன்”” என்று பொருள்படும்படி என்னை திட்டி காட்டினீர்கள். நன்றி ஐயா!.

 17. இஸ்லாம் க்ரிஸ்தவம் இரண்டிலுமே அறிவு பூர்வமாக எதுவும் கேட்க முடியாது. கேட்டால் பதில் சொல்ல முடியாது. அதனால்தான் அங்கே அவ்வளவு கடுமை.இஸ்லாத்தில் கேள்வி கேட்டால் தலை போய் விடும். கிறிஸ்தவத்தில் கேள்வி கேட்கக் கூடாது என்றே முன்னெச்செரிக்கையாக மற்றவர்களின் கடவுளர்கள், பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் இவைகளைப் பற்றி பெரும் வெறுப்பை போதிக்கின்றனர்.ஆகவே மதம் மாறுபவர்களின் கவனம் பூராவும் ஹிந்துக்களை வெறுப்பதிலேயே இருக்குமே தவிர கிறிஸ்தவத்தில் என்ன உள்ளது என்பதை அறிய முடியாது.மேலும் மூளைச் சலவை செய்யும் விதமாக பைபிளை மனப் பாடம் செய்வது என்பதை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

 18. பகடு செங்கொடி இறையில்லா இஸ்லாம் அலிசெனாansweringislam isakoran evilbible போன்ற வலைதளங்களுக்கு இணைப்பு வழங்கலாம்.கட்டுரைகளை மீண்டும் வெளியிடலாம்.

 19. டாக்டர் அன்புராஜ் அவர்கள் தெரிவித்துள்ள வலைத்தளங்களை நான் வெகு நாட்களாக முழுவதும் வாசித்து வருகிறேன். சிந்தனையை தூண்டும் பல ஆய்வுக்கட்டுரைகள் அவற்றில் உள்ளன. ஆனால் நமது தமிழ் இந்து தளத்தில், அந்த கட்டுரைகளின் கருத்து சுருக்கம் மட்டுமே தேவையானால் கொடுக்கலாம்.அவற்றின் மறுவெளியீடு தேவையில்லை. அந்த இணைப்புக்களின் முகவரியை கொடுக்கலாம். விரும்புவோர் படித்து பயன் பெறலாம். ஏனெனில் நாத்திகம் இந்து மதத்தின் ஒரு பகுதி தான். இந்துமதம் ஒரு கலைக்களஞ்சியம் , அதன் ஒரு பகுதி தான் நாத்திகம். மனிதன் இறந்தபிறகு , ஆத்திகன் , நாத்திகன் இருவருமே சொர்க்கத்துக்கு தான் போகிறார்கள். ஆனால் தன் கருத்தை ஏற்காத மற்றவரை பயமுறுத்தியும்,கொலை செய்தும், வன்முறையை ஏவியும், மத மாற்றங்களில் ஈடுபடும் ஆத்திகன் , அவன் எந்த மதத்தை சேர்ந்தவன் ஆனாலும் முழு நரகத்துக்கே போகிறான். நாத்திகன் என்ற பெயரில் உலவும் சில போலிகளும் , ஆத்திகத்தை இழிவு படுத்தி பிரச்சாரம் செய்தால் அவர்களும் முழு நரகத்துக்கே போகிறார்கள். ஆத்திகமும் நாத்திகமும் மனித வாழ்வின் இரு பக்கங்களே என்பதை உணர்ந்து , தன் வழியில் போகவேண்டும், தேவைப்பட்டால் வழியை மாற்றிக்கொள்ளலாம் , அதற்காக பிற மதத்தினரை இழிவு செய்யும் ஆபிரகாமிய மதங்கள் ஒரு சாபக்கேடு மட்டுமே. தேவப்பிரியா சாலமன் அவர்களின் கட்டுரைகளும், பகடு, இறை இல்லா இஸ்லாம் ஆகியவை சிறந்த பகுத்தறிவு பெட்டகங்களாக திகழ்கின்றன. உலகெங்கும் சிந்தனை சுதந்திரம் பெருகட்டும், புதிய பூக்கள் பூக்கட்டும், அன்பும் அரவணைப்பும் மனித இனத்தின் அடிப்படை உணர்வுகள் ஆகட்டும். இதற்கு எல்லாம் வல்லான் அருளட்டும்.

 20. இஸ்லாம் ஒரு சிறந்த மதம் !!! இந்த மனிதர்கள் பொய் சொல்லுகிறார்கள் !! காந்தி முஹம்மது நபி ஒரு சிறந்த மனிதர் என்று சொல்லி இருகாரு !! ஜார்ஜ் பெனர்ட் ஷேவ் முஹம்மது ஒரு தலை சிறந்த மனிதன் .. உலகத்தின் பொக்கிஷம் என்று சொல்லி இருகரு 🙂 அதிகம் பெண்கள் இஸ்லாத்துக்கு மாறி வருகின்றார்கள் ,,,

 21. கன்னியின் கூண்டு நூல் வேண்டும்.கிடைக்குமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *