பிகார் மாநிலம், பாட்னாவில், அக். 27-இல் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹூங்காரப் பேரணி (கர்ஜனைப் பேரணி) மீது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மாபெரும் பேரணியைக் குலைக்க சதிகாரர்கள் நடத்திய இந்த விபரீதத் தாக்குதலில் மோடி இறைவன் அருளால் தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. சுயநல அரசியல்வாதிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் இணைந்து நடத்திய இந்தச் சதிராட்டத்தை பாஜகவினர் தங்கள் பெருந்தன்மையான அணுகுமுறையாலும், நிதானத்தாலும், உயரிய கட்டுப்பாட்டாலும் தவிடுபொடி ஆக்கியுள்ளனர்.
ஒரு முன்னோட்டம்:
பிகார் தலைநகரமான பாட்னாவில் பாஜகவின் கர்ஜனைப் பேரணியை நடத்துவதாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்த நிகழ்வு தேசிய ஊடகங்களின் கவனத்திற்கு உள்ளானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியபிறகு, அக்கட்சியின் முதல்வர் நிதிஷ்குமார் ஆளும் பிகாரில் பாஜக நடத்தும் பேரணி என்பதாலும், நிதிஷ் விஷமாக வெறுக்கும் மோடி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாலும், பேரணிக்கு முன்னரே இக்கூட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மோடி கடந்த ஒரு மாதத்தில் நாடு முழுவதிலும் சென்று நடத்திவரும் எந்த பிரசாரக் கூட்டத்திலும் லட்சக் கணக்கான மக்கள் திரண்டு ஆதரவளித்து வருகின்றனர். ஹைதராபாத், திருச்சி, சண்டிகர், போபால், கான்பூர், உதய்ப்பூர், அஹமதாபாத் என மோடி எங்கு சென்றாலும் அது தலைப்புச் செய்தியாகும் வகையில் மக்கள் கூட்டம் லட்சக் கணக்கில் திரள்கிறது. இதுவரை நடைபெற்ற அனைத்துப் பேரணி சாதனைகளையும் பாட்னா முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல, பாட்னா கர்ஜனைப் பேரணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று ஊடக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் அனைவரும் அறிந்தது. பாட்னாவில் பாஜக பேரணி பெறப் போகும் வெற்றி, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட நிதிஷுக்கு தெரியாமல் இருக்க முடியாது. இதை அவர் ஒரு கௌரவப் பிரச்னையாகவே பார்த்தார்.
இதற்கு முன், பாட்னாவின் காந்தி மைதானத்தில் 1973-ல் நடைபெற்ற ஜெயபிரகாஷ் நாராயணனின் முழுப் புரட்சிப் பேரணியில் தான் அளவு கடந்த கூட்டம் வந்தது. அதில் பங்கேற்று இந்திரா காந்திக்கு எதிராக போராடியவர்கள் தான் இன்று பல கட்சிகளில் முன்னணி வகிக்கும் சரத் யாதவ், நிதிஷ் குமார், முலாயம் சிங் யதவ், லாலு பிரசாத் யாதவ், சுஷீல்குமார் மோடி உள்ளிட்ட பலரும். இதே இயக்கத்தில் குஜராத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர் தான் மோடியும். பல தேசத் தலைவர்களை உருவாக்கிய மாபெரும் தலைவரின் பேரணி அது.
அதற்குப் பிறகு லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், பாஜக, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆகியவை இதே மைதானத்தில் பெரும் பேரணிகளை நடத்தி இருக்கின்றன. ஆனால், அவற்றில் கூடுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியதில்லை. இத்தனைக்கும் லாலுவும் நிதிஷும் ஆட்சியில் இருக்கும்போது தான் அங்கு மாநாடு நடத்தினர். மாறாக பாஜக-வோ, உற்ற கூட்டணி நண்பனாக இருந்த நிதிஷால் முதுகில் குத்தப்பட்டு, உறவு கசந்த நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் உள்ளபோது இப்பேரணியை நடத்தி இருக்கிறது.
இந்தப் பேரணிக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளே மிகவும் பிரமாண்டமாக இருந்தன. பேரணிக்காக 8 சிறப்பு ரயில்கள் முன்பதிவு செய்யப்பட்டன. அவை மாநிலம் முழுவதிலும் இருந்து மக்களை அழைத்து வந்தன. தவிர 3,000 பேருந்துகள், 10,000க்கு மேற்பட்ட சிறு வாகனங்கள், கங்கையைக் கடக்க நூற்றுக் கணக்கான படகுகள் தொண்டர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சுமார் 5 லட்சம் மக்கள் எதிர்பார்க்கப்பட்டனர். அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறும் வகையில் பாஜகவினரே நம்ப முடியாத வகையில், ஜெ.பி.யின் பேரணியையே முறியடிக்கும் வகையில் நடந்து முடிந்திருக்கிறது, மோடி பங்கேற்ற பாஜகவின் கர்ஜனைப் பேரணி.
இந்தப் பேரணி மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள், நமது வெறுப்பு அரசியல் எவ்வளவு தூரம் வேரோடியுள்ளது என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கின்றன. ஆனால், மதச்சார்பின்மை பேசும் கயவர்களின் அத்துமீறல்களுக்கு காந்திய வழியிலேயே பாஜக பதில் அளித்திருக்கிறது. இந்த நாகரிகமான செயல்பாட்டின் காரணமாகவே, பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் பாஜக வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
நடந்தது என்ன?
பெருகிவரும் பாஜகவின் செல்வாக்கால் நிலைகுலைந்துள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளும் சுயநல அரசியல்வாதிகளும் இணைந்து நடத்திய நாடகமே பாட்னா குண்டுவெடிப்புகள் என்று சொல்லலாம்.
குற்றம் செய்பவனை விட அதற்கு உடந்தையாக இருப்பவன் தான் அபாயகரமானவன். அந்த வகையில் பாட்னா குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ள இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் செயல்பாட்டிற்கு உறுதுணை புரிந்துள்ள ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் கொடும் குற்றவாளிகளே. அங்கு அக். 27-இல் நிகழ்ந்த நிகழ்வுகளை வரிசைக்கிரமமாகப் பார்த்தாலே, சதியின் பெரும் வட்டம் புலப்படுகிறது.
அன்று (அக். 27) காலை, 9.30 மணியளவில் பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையில் ஒரு குண்டு வெடித்தது. அங்கிருந்து காயத்துடன் தப்பியோடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். குண்டுகளுடன் கழிவறை வந்த அவன், தவறுதலாக குண்டு வெடித்ததில் காயம் அடைந்துள்ளான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக பேரணியைக் குலைப்பதற்காக சுமார் 18 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த உள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அதுகுறித்து காவல்துறை பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை. ஆயினும், இத்தகவல் குஜராத் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி வரும்போது தொடர் குண்டுகள் வெடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. அதையடுத்து மோடியை பாட்னா செல்ல வேண்டாம் என்று அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதனை மோடி ஏற்கவில்லை. அவர் தனி விமானத்தில் பாட்னா கிளம்பிவிட்டார்.
அடுத்த குண்டுவெடிப்பு காந்தி மைதானத்தில், உத்யோக் பவன் அருகே ஆயிரக் கணக்கான மக்கள் கூட்டத்தின் இடையே, மோடி வருவதற்கு சற்று முன்னதாக, காலை 11.40 மணியளவில் நடத்தப்பட்டது. ஆனால், அதனை வாகனத்தின் டயர் வெடித்ததாக காவல்துறையினர் கருதி இருக்கின்றனர். சம்பவ இடத்தில் ரத்தக் காயத்துடன் கிடந்த பலரை பாஜக தொண்டர்களே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதல் குண்டுவெடிப்புக்கும் இரண்டாவது குண்டுவெடிப்புக்கும் இடையே 2 மணிநேர இடைவெளி இருந்தும் மாநில போலீசார் செயல்படத் தவறினர். அல்லது, மேலிடக் கட்டளைக்காகக் காத்திருந்தனர். அதனாலேயே, சதிகாரர்கள் காந்தி மைதானத்திற்குள் ஊடுருவி குண்டுகளை வெடிக்க முடிந்தது.
பல லட்சம் மக்கள் கூடிய இக்கூட்டத்திற்கு அனுப்பப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,000 மட்டுமே. அவர்களோ, டிராஃபிக் பணிகளில் தான் ஈடுபட்டனர். மைதானத்தின் எந்த இடத்திலும் குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் வைக்கப்பட்டிருக்கவில்லை. பாதுகாப்புப் பணிக்கு மைதானத்தில் தலைமை வகித்தவர் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) மட்டத்தில் இருந்த பெண் அதிகாரி மட்டுமே. (திருச்சியில் நடைபெற்ற பாஜக இளந்தாமரை மாநாட்டிற்கு ஏடிஜிபி தலைமையில் பெரும் போலீஸ் பட்டாளமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது) மைதானத்தில் எங்குமே கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்படவும் இல்லை. இவை அனைத்துமே, பாஜக பேரணியில் காவல்துறை விட்டிருந்த பாதுகாப்பு ஓட்டைகள் என்பதை இப்போது அனைவருமே கூறத் துவங்கி இருக்கின்றனர்.
மூன்றாவது குண்டு காந்தி மைதானத்தின் அருகே திரையரங்கு முன்பு மதியம் 12.05 மணியளவில் நடைபெற்றது. நான்காவது குண்டு அதன் அருகிலேயே 12.15 மணியளவில் நடத்தப்பட்டது. ஐந்தாவது குண்டு வங்கி அருகில் 12.20 மணியளவிலும், ஆறாவது குண்டு குழந்தைகள் பூங்கா அருகே 12.20 மணியளவிலும் நடத்தப்பட்டன. இதன் காரணமாக ஆங்காங்கே புகைமூட்டமாகக் காணப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்புகளில் ஐவர் பலியாகினர். குண்டுகள் வெடித்த இடங்கள் அனைத்துமே பாஜக பேரணிக்காக வந்தவர்கள் குழுமி இருந்தனர்.
இதனிடையே, பாட்னா விமான நிலையம் வந்துசேர்ந்த மோடியிடம், அங்கு சென்ற பாஜக தலைவர்கள் ராஜீவ் பிரதாப் ரூடியும் ஷாநவாஸ் உசேனும் நிலைமையை விளக்கினர். அங்கு மோடியைக் காத்திருக்கவைத்து, சிறிதுநேரம் தாமதமாக மேடைக்கு அழைத்து வந்தனர்.
மோடி மேடை ஏறுவதற்கு (மதியம் 1.05 மணி) சற்று முன்னரும் கூட, மைதானத்தில் மேடையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஒரு குண்டு வெடித்துள்ளது. அதில், அதே இடத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடலில் வெடிகுண்டுகள் கட்டி வந்திருப்பது தெரியவந்தது.
அதாவது, மைதானத்தின் பல இடங்களில் தொடர் குண்டுகளை வெடிக்கச் செய்து, கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தி பயங்கர தள்ளுமுள்ளுவை ஏற்படுத்தி, அந்த நேரத்தில் மேடை மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தெய்வாதீனமாக, குண்டுவெடிப்புகளால் பீதி அடைந்து கூட்டம் கலையாமல் அதே இடத்தில் இருந்தது. சதிகாரர்கள் நினைத்தது போல அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மக்கள் அங்குமிங்கும் ஓடியிருந்தால், கூட்ட நெரிசலில் சிக்கியே நூற்றுக் கணக்கானோர் மாண்டிருப்பார்கள்.
இறையருளால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மோடியைக் கொல்லவந்த மனித குண்டு மேடையை நெருங்கும் முன்னரே குண்டுவெடித்து பலியானான். பாஜக தொண்டர்களின் கட்டுப்பாடும் லட்சிய உறுதியும் தான் அசம்பாவிதத்தைத் தவிர்த்துள்ளன எனில் மிகையில்லை. எல்லாப் புகழும் சங்கத்திற்கே!
பேரணி நடைபெற்ற மைதானத்தில் இருந்து வெடிக்காத குண்டுகளை 6 இடங்களில் தொண்டர்களின் உதவியுடன் போலீசார் மீட்டுள்ளனர். அவை அனைத்துமே குறைந்த சேதத்தை உருவாக்கும் நாட்டு வெடிகுண்டுகள் என்று மாநில டி.ஜி.பி சொன்னார். பேரணி முடிந்து 2 நாட்கள் கழிந்த பிறகும் கூட, மைதானத்தில் இருந்து 5 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாருடைய தோல்வி?
இந்தத் தொடர்குண்டு வெடிப்புகள் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியைக் குறிவைத்து நடத்தப்பட்டவை என்பது தெளிவு. அதே சமயம், மக்களிடம் பீதியை உருவாக்கி கூட்ட நெரிசலால் நூற்றுக் கணக்கானோரைக் கொன்று, பாஜக மீது தீராப் பழியை ஏற்படுத்தவும் சதி திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை (அக். 30), பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூவருமே, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. அதில் ஒருவன் அளித்த வாக்குமூலத்தில், கர்ஜனைப் பேரணியில் குண்டுகளை வெடித்து நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவை ஏற்படுத்துவதே தங்கள் திட்டம் என்று கூறி இருக்கிறான். தவிர, மைதானத்தில் குண்டுகளை வைக்க 18 பேர் சென்றதையும் அவன் உறுதிப்படுத்தி இருக்கிறான்.
மீட்கப்பட்ட வெடிகுண்டுகள் அனைத்துமே குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் டைமருடன் இணைக்கப்பட்டிருந்தன. ஆக, இந்தச் சதி பெரிய அளவில் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது தெளிவாகி உள்ளது. இதற்கென பெரும் பயங்கரவாதக் குழுவே இயங்கி உள்ளது. பிடிபட்டுள்ளவர்கள் பொம்மைகள் மட்டுமே. அவர்களை இயக்கிய தலைவர்கள் ரகசிய இடங்களில் பதுங்கி உள்ளனர்.
இவ்வாறு தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத் துறை (IB) பிகார் அரசை அக். 1-லேயே எச்சரித்துள்ளது. அதன் பிறகும் அக். 23-ல் மீண்டும் விசேஷ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உளவுத் துறையிடம் இருந்து எந்தத் தகவலும் பெறப்படவில்லை என்று பிகார் ஏடிஜிபி ரவீந்திரகுமாரும், மாநில முதல்வர் நிதிஷ் குமரும் மறுத்துள்ளனர். எனினும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே, உளவுத் தகவலும் எச்சரிக்கையும் பிகாருக்கு அளிக்கப்பட்டன என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்தக் குண்டுவெடிப்புகள் உளவு அமைப்புகள் மற்றும் காவல்துறையின் ஒட்டுமொத்தத் தோல்வி என்று முன்னாள் முதல்வர் சுஷீல்குமார் மோடி கண்டித்துள்ளார்.
பாஜக பேரணி செய்திகளில் முதன்மை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக சில அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதில் அவர்கள் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. 7 லட்சம் மக்கள் திரண்ட அரசியல் பேரணி என்பது இந்தியாவில் பெரும் சாதனைச் செய்தியாக இருந்திருக்கும். ஆனால், தொடர் குண்டுவெடிப்புகளால் மாநிலம் முழுவதும் மோடியையும் பாஜகவையும் சதிகாரர்களே மிக அதிகமாக பிரபலப்படுத்திவிட்டார்கள் என்பது தான் உண்மை. தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது நிதீஷுக்குத் தெரியாது போல!
இந்த இடத்தில், இந்தப் பயங்கர நிகழ்வுக்கு பொறுப்பாளி யார் என்ற கேள்வி எழுகிறது. உளவு சொல்வதுடன் தனது பொறுப்பு முடிந்துவிட்டதாகக் கருதும் மத்திய உளவுத் துறையா? ஒவ்வொரு குண்டுவெடிப்புக்குப் பிறகும் இதுகுறித்து ஏற்கனவே எச்சரிக்கப்பட்டதாக அறிக்கை விடும் மத்திய உள்துறை அமைச்சரா? தகவல்கள் கிடைத்தும் செயலற்று வேடிக்கை பார்த்த பிகார் மாநில காவல்துறையா? போலீசாரை செயல்படாமல் தடுத்து முடக்கிய சுயநலவியாதியான மாநில முதல்வர் நிதிஷ்குமாரா? யார் இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளுக்குக் காரணம்?
‘வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள்; தோல்வி ஓர் அநாதை’ என்று ஒரு பழமொழி உண்டு. என்ன தான் மதச்சார்பின்மை பேசி முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குவங்கியைக் குறிவைத்து இயங்கினாலும், ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பு பெருகுவது தெரிந்தவுடன், பல்டி அடிப்பது சுயநல அரசியல்வாதிகளின் இயற்கையான குணம். அதுவே தற்போதும் நடக்கிறது. பாட்னா குண்டுவெடிப்புக்கு அடுத்தவர் மீது பழி போடவே இப்போது அதில் தொடர்புடைய ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றனர். ஆனால், அரசு நிர்வாகத்தின் ஒட்டுமொத்தத் தோல்வியாகவே இந்த நிகழ்வுகளைக் காண வேண்டியுள்ளது. அதற்கு நிதிஷ்குமாரின் மோடி வெறுப்பே அடிப்படைக் காரணம் எனில் தவறில்லை.
நிதிஷ்குமாரின் கொடியமுகம்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோதே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது வெறுப்பை உமிழ்ந்தவர் தான் பிகார் முதல்வர் நிதிஷ்குமார். இதற்கு மோடிக்கு மக்களிடம் பெருகிவந்த செல்வாக்கே காரணம். உயர்ந்த தலைவர்களும் கூட பொறாமையால் வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். நிதிஷும் இதற்கு விலக்கல்ல.
தே.ஜ.கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இருந்தபோது பிகாரில் மட்டும் தேர்தல் பிரசாரத்தில் மோடி ஈடுபட அறிவிக்கப்படாத தடையை நிதிஷ் விதித்திருந்தார். கூட்டணி தர்மத்துக்குக் கட்டுப்பட்டும், லாலுவின் ஊழல் ஆட்சியால் ஏற்பட்ட மாநில வீழ்ச்சியை சரிசெய்யவும் பாஜக பொறுமை காத்தது; பல்வேறு அவமதிப்புகளையும் பாஜக தாங்கிக் கொண்டது (இதை பாட்னா பேரணியில் மோடியே குறிப்பிட்டார்).
தனிப்பட்ட பொறாமை மட்டுமல்லாது, மோடியை எதிர்த்தால் பிகாரில் உள்ள 25 சதவீத முஸ்லிம் வாக்குகளை எளிதாகக் கவர்ந்து விடலாம் என்று ‘செக்யூலர்’ கனவும் கண்டார் நிதிஷ். அதற்காகவே, முஸ்லிம் பயங்கரவாதிகள் மீது கருணையுடன் நடந்துகொண்டார்.
மோடியைக் கொல்லவந்ததாக என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணுக்கு வக்காலத்து வாங்கிய நிதிஷ், இஷ்ரத் பிகாரின் மகள் என்று சொன்னதை யாரும் மறந்திருக்க முடியாது. பிகாரின் மகள் எதற்காக சந்தேகத்திற்குரிய முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் இருந்தாள் என்பதற்கு அவரிடம் பதில் இல்லை.
பாஜகவின் கர்ஜனைப் பேரணிக்கு 2 மாதங்கள் முன்னரே முன்பதிவு செய்தபோதும், மைதானத்தின் பாதிப் பகுதியில் மட்டுமே நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. தொடர்ந்த, தீவிர முயற்சிகளுக்குப் பிறகே, இரு வாரம் முன்னதாக, முழு மைதானத்திலும் நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைத்தது.
கர்ஜனைப் பேரணி நடத்தப்படும் அதே நாளிலும் அதற்கு முதல் நாளிலும், (அக். 26, 27) ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கும் வகையில் சபாநாயகர்கள் மாநாடு நடத்தவும் முயற்சி நடைபெற்றது. அதன்மூலமாக பாஜகவின் பேரணிக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைக் குறைக்கவும், பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறி தட்டிக் கழிக்கவும் மாநில அரசே இந்தச் சதியில் ஈடுபட்டது. அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முகர்ஜியிடம் நேரில் சென்று இதை விளக்கியவுடன், இந்தச் சதிக்கு உடன்பட அவர் மறுத்துவிட்டார்; அவரது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
பாட்னா பேரணிக்கு வரும் குஜராத் முதல்வர் மோடிக்கு ஆபத்து இருப்பதால் மாநிலக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குண்டு துளைக்காத இரு எஸ்.யு.வி. வாகனங்களில் ஒன்றைக் கொடுக்குமாறு குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகள் நிதிஷ்குமாரிடம் கோரினர். ஆனால், அதற்கு நிதிஷ் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக காவல்துறையிடம் இருந்த பழைய குண்டு துளைக்காத அம்பாசிடர் வாகனத்தையே மாநில அரசு அளிப்பதாகக் கூறியது. இது சக முதல்வரின் பாதுகாப்பு குறித்த நிதிஷின் அக்கறையற்ற தன்மையை வெளிப்படுத்தியது.
பாஜக பேரணி நடைபெறும் நாளில் ஐக்கிய ஜனதாதளத்தின் ‘சிந்தன் ஷிபிர்’ என்ற பெயரிலான 2 நாள் செயற்குழுக் கூட்டத்தை ராஜ்கிர் நகரில் ஏற்பாடு செய்த மாநில முதல்வர் நிதிஷ், அங்கு அனைத்து போலீஸ் உயரதிகாரிகளும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். லட்சக் கணக்கான மக்கள் திரண்ட பாஜக பேரணிக்கு ஏ.எஸ்.பி. தலைமையில் 5,000 போலீசாரை மட்டுமே அவர் ஏற்பாடு செய்திருந்தார். எந்த ஒரு முட்டாளும் கூட இவ்வாறு செய்யத் துணிய மாட்டான்.
மத்திய, மாநில உளவுத் துறைகள் அளித்த தகவல்களையும் அவர் அலட்சியப்படுத்தி இருக்கிறார். முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, வேண்டுமென்றே பாஜகவை தரக்குறைவாக மதிப்பிடுவதாக அவர் காட்டிக் கொண்டிருக்கிறார். முதல்வரின் உத்தரவுக்காக மாநில காவல்துறை காத்திருக்க நேர்ந்ததால் தான் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
ஜூலை 7-ம் தேதி புத்த கயாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலிலேயே இந்திய முஜாஹிதீன் தொடர்பு அம்பலமானது. மியான்மரில் (பர்மா) இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கவே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதே தீவிர நடவடிக்கை எடுத்திருந்தால் சதிகாரர்களை முடக்கி இருக்க முடியும்.
பெங்களூர், சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக, கஃபீல் அக்தார் என்ற இஸ்லாமிய பயங்கரவாதியை கர்நாடக போலீசார் பிகாரின் தர்பங்கா மாவட்டத்தில் கடந்த மே 12-இல் கைது செய்தனர். அதற்கு முதல்வர் நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சட்டவிரோதமான கைது என்று அதை வர்ணித்தார்.
அதே தர்பங்காவில், கடந்த ஆகஸ்டு மாதம் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) யாசின் பட்கல் என்ற பயங்கரவாதியை கைது செய்தது. அவன் தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவன். இவன் பல ஆண்டுகளாக பாட்னாவில் சுதந்திரமாக உலவி இருக்கிறான். அவனைக் கைது செய்ய பிகார் மாநில போலீசார் ஒத்துழைக்கவில்லை. நிதிஷ் உத்தரவு காரணமாக, பிகார் போலீசார் உதவவில்லை. அப்போது பட்கலுடன் இருந்த பலர் தப்பிச் சென்றனர். அவர்கள் தான் இப்போது பாட்னாவில் குண்டுகளை வெடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக தர்பங்காவில் ஒரு பெரிய பயங்கரவாத பயிற்சிப் பட்டறையே இயங்கியுள்ளதை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டறிந்து எச்சரித்த பிறகும், மாநில முதல்வர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றால், அவர் வேண்டுமென்றே செயல்பட்டதாகத் தான் கருத முடிகிறது. சகவாச தோஷம் அவரை ஆட்டிப் படைக்கிறது. பாஜகவுடன் தோழமை கொண்டிருந்த வரை சிறந்த முதல்வராக புகழ் பெற்றிருந்த அவர், கூட்டணியை முறித்து காங்கிரஸ் பக்கம் சாய ஆரம்பித்ததில் இருந்தே அவரது புகழ் மங்கிவிட்டது. இப்போது அவரது சுயரூபமும் தெரியத் துவங்கி இருக்கிறது.
31-அக்டோபர்-2013 அன்று திருப்பூரில் பீகார் குண்டு வெடிப்பைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த போது மாவட்ட இளைஞரணி தலைவர் திருப்பூர் பார்த்திபன் தொண்டர்களிடையே ஆற்றிய உரை. மோதியைக் கொல்ல நடந்த சதி பற்றி அருமையாக எடுத்துரைக்கிறார்.
இனியேனும் பாடம் கற்பார்களா?
பாட்னாவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தாலும், குண்டுவெடிப்புகளின் சேதத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. இப்போதும் கூட சுயநல அணுகுமுறையுடன் அரசியல்வாதிகள் செயல்படுவது நாட்டிற்கு நல்லதல்ல.
பாட்னா குண்டுவெடிப்புகளை பிரதமரும் ஜனாதிபதியும் கண்டித்துள்ளனர். தமிழகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவிர வேறு எவரும் இதனைக் கண்டிக்கவில்லை. நமது அரசியல்வாதிகளின் கொழுத்த மௌனம் அயர்ச்சி அளிக்கிறது.
மோடிக்குக் குறிவைத்து பயங்கரவாதிகள் செயல்பட்டிருப்பது அமபலமாகியுள்ள நிலையில், அவருக்கு கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்தார். அதை உள்துறை அமைச்சர் ஷிண்டே நிராகரித்திருக்கிறார். இன்று நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிலேயே பயங்கரவாதிகளின் முக்கிய இலக்காக இருப்பவர் மோடி மட்டும் தான். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல் மத்திய அரசு தட்டிக் கழிப்பது அபத்தம். ராஜீவுக்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பை அன்றைய பிரதமர் வி.பி.சிங் அரசியல் காழ்ப்புணர்வால் விலக்கிக் கொண்டது தான் நினைவுக்கு வருகிறது. எனவே, மோடிக்குத் தேவையான பாதுகாப்பை பாஜகவே அதிகரிக்க வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தின் முஷாபர் நகரில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே பாட்னா குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக இந்திய முஜாஹிதீன் இயக்கம் அறிவித்துள்ளது. முஷாபர் நகரில் நடைபெற்ற கலவரத்திற்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத போதும், நமது சுயநல அரசியல்வாதிகள் செய்த விஷமத் தனமான பிரசாரத்தால் முஸ்லிம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். எனவே பாட்னா குண்டுவெடிப்பில், போலித்தனமான மதச்சார்பின்மை பேசி சமூகத்தில் பிளவை ஏற்படுத்திய அனைவருக்கும் பங்குண்டு.
பாட்னா பேரணிக்கு முன்னதாக, பிகாரில் மோடி நுழைந்தால் கைது செய்ய வேண்டும் என்று பேசினார் அம்மாநில அமைச்சர் ராம்கிஷோர் சிங். ‘லாலு முதல்வராக இருந்தபோது அத்வானியின் யாத்திரையை தடை செய்தார். அதுபோல செயல்ப்டும் துணிவு நிதிஷுக்கு இல்லை’ என்று திருவாய் மலர்ந்தருளினார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி. இவர்களுக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியுமா என்பதே ஐயமாக உள்ளது. மோடியின் ஜனநாயக, பிரசார உரிமையைத் தடுக்க முயன்று அதன்மூலமாக சமூகத்தில் பிளவு ஏற்படுத்தி வாக்குகளை அறுவடை செய்வதே சுயநலவாதிகளின் நோக்கம். இதனை ஊடகங்கள் ஊக்குவிக்கக் கூடாது.
இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு சங்க பரிவார் அமைப்புகளே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் சத்யவிரத சதுர்வேதி கூறி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இக்கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தா? அவர் மீது சட்டப்படி மானநஷ்ட வழக்கு தொடர பாஜக ஏற்பாடு செய்ய வேண்டும்.
சில பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூட, இதேபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஊடக தர்மம் என்று ஒன்றிருந்தால் இத்தகைய புழுதி வாரித் தூற்றும் நடவடிக்கைகளில் ஊடகங்கள் இறங்கக் கூடாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவோருக்கு மக்களே உரிய காலத்தில் உரிய தண்டனை கொடுப்பார்கள்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகும் பொதுக்கூட்டத்தை பாஜக ரத்து செய்யாமல் நடத்தியது தவறு என்றும் கூட காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். இதுவே அவர்களின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. கர்ஜனைப் பேரணி நடந்துவிடக் கூடாது என்பது தான் அவர்களின் ஆசை. அது நிறைவேறாததால் புலம்புகிறார்கள். இந்நிலையில் மோடியின் அணுகுமுறையே குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார் திக்விஜய் சிங். இந்திராவும் ராஜீவும் கொல்லப்பட்ட்து அவர்களின் தவறான அணுகுமுறைகளால் தான் என்று காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமா? திக்கி போன்ற அரைவேக்காடுகளால் தான் காங்கிரஸ் அழியப் போகிறது.
இத்தனைக்கும் பிறகும் நமக்கு நம்பிக்கை தருவது, நரேந்திர மோடியின் பாட்னா உரை தான். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வறுமையை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற அவரது அறைகூவல், சுயநல அரசியல்வாதிகளுக்கும் மதவெறியர்களுக்கும் விடுக்கப்பட்ட சவால்.
இந்த சவாலில் நிச்சயமாக தேசவிரோதிகள் வெல்லப் போவதில்லை. ஏனெனில் நாடு ஓர் அற்புதமான மாற்றத்திற்குத் தயாராகி விட்டது. நாட்டின் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தடுக்க நடக்கும் எந்த சதியும் முறியடிக்கப்படும். அதை உலகம் விரைவிலேயே உணரும்.
.
இந்த இஸ்லாமிய தீவிர வாதிகளுக்கு கைலாகு கொடுக்கும் நிதீஷ், இந்திரா குடும்ப கட்சி, முலயாம் சிங்கு, ஆகியோர் நம் மக்களால் விரைவில் தூக்கி எறியப்படுவார்கள். வஹாபிய வெறிக்கும்பல் விரைவில் தானே அழியும் காலம் வந்து விட்டது. சேக்கிழானின் நல்ல தொகுப்புக்கு நன்றி.
பட்னாவில் கூடிய மக்களின் முதிர்ச்சியையும், பயமின்மையும் நாம் பாராட்டவேண்டும். சிறிய தள்ளு முள்ளு ஏற்பட்டாலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் போயிருக்கும். இது மோடியை கொலைசெய்யப் போட்ட திட்டம். இறைவன் காப்பாற்றினார்.
வான் இடிந்து விழுந்தபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று அன்று பாடினான் தேசிய கவி பாரதி பாரதத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைப்பவேர்களை வேரோடு அளிப்போம் என்று சத்தியம் செய்வோம். தேச விரோதிகள் கொட்டம் பாரத போரில் கௌரவர்கள் போல் வேரோடு அழிந்து போகும். .
நிதீஷ் குமார் காழ்ப்புணர்ச்சியுடனேயே இந்த பிரச்னையை அணுகுகிறார்.இதே மனநிலை காங்கிரஸ்காரக்ளுக்கும் உள்ளது. சராசரி ஒரு முக்கிய விருந்தாளிக்கு அளிக்கும் பாதுகாப்பையும் அளிக்காமல், காட்டமாகவே பேசுவதால் அவர்களின் உள்நோக்கம் நன்கு தெரிந்து மக்கள் அவகளுக்கு நல்லதொரு பாடம் கர்ப்பிப்பார்கள்!
No use in simply writing and talking. Fast action is the need of the hour. All HINDUS,the world over should rise as one man to put an end to this anti Hindu terrorism.
excellent article. keep writing
srri. modi should come as a PM till his life to save india
பொருளாதாரத்தில் நாட்டை ஒரு சீக்காளி நிலைக்கு மாற்றியுள்ள கொள்கை அற்ற கோமாளிகள் மக்களை ஏமாளிகள் என்று நினைத்துக் கொண்டு ஆட்டம் போடும் ஊழல் பெருச்சாளிகள் அழிந்து ஒழிய இந்த தீபாவளி நன்னாளில் ஒரு சபதம் மேற்கொள்வோம். இந்த தீபாவளியைப் பொருத்தவரை ஒரு இருண்ட தீபாவளியே. காங்கிரஸ் என்ற நரகாசூரைனை அழித்து திருமால் என்ற மோடி வெற்றி வாகை சூடப் போகும் அடுத்த தீபாவளியே நமக்கு ஒளி பொருந்திய இனிய தீபாவளி. ஆகவே இந்திய மக்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டுக்கு எனது advance தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நாட்டில் இன்று நிலவும் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பணவீக்கம், ஊழல், லஞ்சம், குடிநீர் பஞ்சம், விண்ணை முட்டும் விலைவாசி, விவசாயிகள் தற்கொலை, பட்டினி சாவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் மதசார்பின்மை ஒன்றே மாமருந்து என்று நினைத்துகொண்டு உள்ளத்தில் மதவாதம் வைத்துகொண்டு உதட்டில் மட்டும் வீண்வாதம் செய்து வருகின்றனர் கம்யூனிஸ்ட்கள் தனது மெகா ஊழல்களை மூடி மறைக்க ஊரை அடித்து உலையில் போடும் உலக மகா ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த காங்கிரஸ் மதசார்பின்மை என்ற முகமூடியை அணிந்துகொண்டு தங்களது அரசு ஒரு “secular Govt ” என்று வாயளவில் கூறிக் கொண்டு ஆனால் செயலளவில் அதற்கு ஒரு “peculiar meaning ” னை தந்து வருகின்றனர்.
பாதரசம் (Mercury ) பார்ப்பதற்கு திரவ வடிவில் இருக்கும். ஆனால் அதனை ஒரு Metal என்று அறிவியல் அறிஞர்கள் கூறுவர். அது போல காங்கிரஸ் மேலோட்ட பார்வைக்கு secular party போல தோன்றும். ஆனால் உண்மையில் அது ஒரு பக்கா communal party
1. வாக்கு வங்கியை மனதில் கொண்டு (ரகுராம் ராஜன் துணை கொண்டு) இஸ்லாமிய வங்கியை கொண்டு வர எத்தனிப்பதுதான் காங்கிரஸ் எத்தர்களின் மதசார்பின்மையா?
2.கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மிசோரம் மாநில தேர்தலின் போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பைபிள் படி ஆட்சி நடக்கும் என்று அந்த மாநில மக்களுக்கு உறுதிமொழி அளித்த ஒரு கத்தோலிக்க பெண்ணின் கணவரான ராஜிவ காந்தி ஒரு மதசார்பின்மைவாதியா?
3. Common civil code வேண்டும் என்று கூறும் பிஜேபி ஒரு மதவாத கட்சி என்றால் அரசியல் சாசன சட்டத்தில் கூறியபடி அதனை ஏன் இன்னும் கொண்டு வரவில்லை என்று கேள்வி கேட்ட Supreme court ம் மதவாதிதானா?
4. பள்ளியில் மாணவர்களுக்குள் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் வர கூடாது என்று uniform கொண்டு வந்தார் காங்கிரஸ்காரர் காமராஜர். ஆனால் அதே காங்கிரஸ்காரர்கள் இன்று பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு education loan assistance தந்தும் அதை ஏழை இந்து மாணவர்களுக்கு தர resistance தரும் காங்கிரஸ் மதசார்ப்பின்மைவாதியா?
5. Minority களுக்கு தரும் சலுகைகளை இந்து (ஏழை) களுக்கும் கொடு என்று கேட்டால் அது மதவாதமா? அல்ல அல்ல. அது காங்கிரஸ் பிஜேபி மீது சுமத்தும் அபவாதம்.(=பழிச் சொல்) முஸ்லிம் ஒரு சவலை குழந்தையாம்! அதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆண்ட பரம்பரை என்று ஆணவம் பேசும் ஆர்காட் நவாப் Bollyhood யை ஆட்டிபடைக்கும் தாவுத் இப்ராஹிம், 1800 கோடிக்கு சொந்தக்காரன் ஆன் நடிகர் சாருக் கான், தோல், பீடி, மீன் தொழில் செய்து பணத்தில் புரளும் பணக்கார முஸ்லிம்களும் சவலை குழந்தைகளா? ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு எல்லா மதத்திலும் உள்ளது. . அப்படியிருக்க ஒரு மதத்தில் உள்ள அனைவரும் ஏழைகள் என்று (ஒட்டு வங்கிக்காக வேண்டி) மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது மதவாதமா? அல்லது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறுவது மதவாதமா?
6.ஒரு மதசார்பின்மை நாட்டில் “minority கமிஷன்” எதற்கு? ” மனிதர் கமிஷன்” தானே தேவை! முஸ்லிம்களுக்கு மட்டும்தான் வாய் வயிறு உள்ளதா? முஸ்லிம்கள் மட்டும் தான் மக்களா? மற்றவர்கள் அனைவரும் மாக்களா? மனிதர்களை மனிதர்களா பார்க்காமல் (மதங்கள் மூலம்) மக்களை பிரித்து பார்க்கும் காங்கிரஸ் தான் மதவாத கட்சி.
7. Secularism ஒரு அற்புத கொள்கை என்று முஸ்லிம்கள் நினைத்தால் அதனை ஏன் பாகிஸ்தானில், ஈராக்கில், ஈரானில், ஆப்கானில், அராபியாவில் பின்பற்றவில்லை? இந்தியாவில் அந்த கொள்கை முஸ்லிம்களின் ஜன தொகை இந்துக்களின் ஜன தொகையை விட ஒரு குறிப்பிட்ட அளவு அதிகரிக்கும் வரை இருக்கும்.அப்புறம் பாகிஸ்தான் மாதிரி இந்தியாவும் ஒரு இஸ்லாமிய நாடாகி விடும் ஆகவே அது வரை அவர்களுக்கு அது நல்ல கொள்கை. ஆனால் பாகிஸ்தானுக்கு மட்டும் அது ஒரு கெட்ட கொள்கை. சிரியா நாட்டு அரசியல் சாசனத்தில் அதன் president சிரியா நாட்டு (அதிலும் அராபிய) முஸ்லிம்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி பதவியில் 3 முஸ்லிம்கள் இருந்தனர். இப்போதும் உதவி ஜனாதிபதி ஒரு முஸ்லிம்தான்.அந்த வெள்ளையனை போராடி வெளியேற்றினோம். அனால் இந்த (சோமநாதபுர கோவில்) கொள்ளையன் நம் கூட இருந்தே நம்மை குழி பறிக்க போவதை அறியாமல் அப்பாவி இந்துக்களால் எப்படி சிரிக்க முடிகிறது?
8. பாராளுமன்றத்தில்; ஒரு மசோதா நிறைவேறிட Majority தேவை. அங்கே Majority has the authority ஆனால் நாட்டில் minority க்குதான் எதிலும் priority
9. உலகிலுள்ள 56 முஸ்லிம் நாடுகளில் கூட ஹஜ் மானியம் தராத நிலையில் மதசார்பற்ற நாடு என்று மார் தட்டி கொள்ளும் இந்தியாவில் மட்டும் மானியம் தரும் காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சியா?
10. கடைசியாக ஒன்றே ஒன்று மட்டும் சொல்லி கொள்ள ஆசைபடுகிறேன்.
‘இரவு நேரத்தில்’ மனைவியிடம் “மயக்கும் மானே!, தித்திக்கும் தேனே! முத்தே! முக்கனிச்சாரே! மாணிக்கமே! மரகதமே! தென்றலே! தீந்தமிழே! என்று கணவன் இசைபாடுவான். காரியம் முடிந்த அடுத்த நாள் பகற்பொழுதில் “என்னை பிடித்த தரித்திரமே! ஏழரை நாட்டு சனியனே! வாலாட்டும் குரங்கே! சீழ்பிடித்த சிரங்கே! என்று வசை பாடுவான். அது போலத்தான் தனக்கு தேவைப்படும்போது பிஜேபி உடன் (காங்கிரஸ் தவிர்த்து ஏறக்குறைய) அனைத்து கட்சிகளும் உறவு வைத்து கொள்ளும்போது பிஜேபி ஒரு “தீண்டதாகாத கட்சி”அல்ல என்று கொஞ்சி குலாவும். தனக்கு தேவைப் படாதபோது அது ஒரு மதவாத கட்சி என்று பட்டம் சூட்டி அவர்களுக்கு அப்போதைக்கு அது “வேண்டத்தகாத கட்சி” ஆகிவிடும்.
வரும் மோடியின் இந்தியாவுக்கு முன்னதாக தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் கூறி இணைகிறேன்.
ஈஸ்வரன்,பழனி.
This is site is nothing but BJP/RSS site.
Mr KMV
“This is site is nothing but BJP/RSS site.”
LOL. So, what is wrong? Do you want Tamil Hindu to be a Congress site or a mouth piece for Dravidian parties and Pseudo secularists?
திருவாளர் KMV என்பவர் எழுதியுள்ள மறுமொழியை மீண்டும் படியுங்கள். “This is site is …………” இவர் ஆங்கிலத்தை சரியாக புரிந்து கொள்ளாததால்தான் அதை தவறாக எழுதியுள்ளார். அதே போலத்தான் இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ளாததால்தான் KMV (இவர் ஒரு முஸ்லிமோ?) போன்றவர்கள் தவறாக பேசி வருகிறார்கள். Secularism என்பது இஸ்லாமுக்கு ஆதாரமாகவும் இந்துமதத்திற்கு சேதாரமாகவும் இருக்க வேண்டும் என்பது போலி மதசார்பின்மைவாதிகளின் dictionary யில் உள்ள meaning . புதிய போப் பொறுப்பேற்றபோது கிறிஸ்தவர்களுக்கும் பக்ரித் பண்டிகையின்போது முஸ்லிம்களுக்கும் வாழ்த்து சொல்லும் கருணாநிதி தீபாவளிக்கு மட்டும் வாயடைத்து போனதேன்? தனக்கு இந்துக்கள் ஒட்டு மட்டும் வேண்டும் ஆனால் அவர்களின் சுக துக்கங்களின்போது வாழ்த்தோ வருத்தமோ தெரிவிக்ககூடாது அப்படித்தானே? ஆனால் தனது டிவியில் மட்டும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதென்? தீபாவளிக்கான புராண கதை பொய் அதனால் வாழ்த்து சொல்லமாட்டேன் என்றால் பக்ரித் கதை மட்டும் உண்மையோ? கருணையுள்ள கடவுளின் (அல்லா) கட்டளைப்படி நபி ஒருவர் தனது மகனை வாளால் வெட்டபோய் அங்கே ஒரு ஆடு வெட்டபட்டிருக்கிறது இது என்னடா மாயாஜாலம்! இதற்கு பெயர் தியாக திருநாளா? ஊரை ஏமாற்றிகொண்டிருக்கும் உங்களை தோலுரித்து காட்ட இந்துக்களிடம் ஒரு daily newspaper இல்லை. ஒரு நல்ல டிவி சேனல் இல்லை. அவை இருந்தால் இவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றலாம். இயலாமைக்கு வருந்துவதை தவிர வேறு என்ன செய்ய?
The only political leader rasied his voice for Modi after patna incident is Vaiko. And he correctly pointed out how BJP leaders and Modi handled that incident and avoided voilence.
Actually TN BJP or even All India BJP should have thanked Vaiko for that support. Dont’ know whether it was brought to Modi’s notice.