பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்

பாட்னா காந்தி மைதானத்தில் 28ம் தேதி மோடி பேசினார். அதற்கு முன்பாக 7 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.

நான் அன்றைய நிகழ்சியை இணையம் மூலமாக சில டி விகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். பீஹார் ஏதோ அந்நிய நாடு என்பது போல பீஹாருக்குள் மோடி நுழையக் கூடாது என்று நிதிஷ் குமார் பா ஜ கவுடன் கூட்டணி வைத்திருந்த காலம் முதலாகவே எதிர்த்துக் கொண்டிருந்தார். முஸ்லீம் ஓட்டுகளுக்காக மோடியைக் கடுமையாக அவமரியாதை செய்து கொண்டிருந்தார் நிதிஷ். பீஹாரிகள் மும்பைக்கு வரக் கூடாது என்று சொன்ன சிவசேனாக் காரர்களை கடுமையாக கண்டித்த அதே நிதிஷ் மோடி பீஹாருக்குள் நுழையக் கூடாது என்று மிரட்டிக் கொண்டிருந்தார். மோடி பிரதம வேட்ப்பாளராக அறிவிக்கப் பட்டவுடன் முஸ்லீம் ஓட்டுக்களை அள்ளும் நோக்கத்துடன் கூட்டணியில் இருந்து பிரிந்து கொண்டு சென்றதுடன் தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலையை மேற் கொண்டு வந்தார் நிதிஷ். பாக்கிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறல்களை தன்னால் கண்டிக்க முடியாது என்று மறுத்தார். ராணுவத்தில் பலியான வீரர்களுக்கு அதுதானே வேலை இதற்கு எதற்காக அனுதாபம் என்று தன் மந்திரியை விட்டு ராணுவத்தினரை அவமானம் செய்தார். பாக்கிஸ்தானைக் கண்டித்தாலே தனக்கு முஸ்லீம் ஓட்டுக்கள் விழாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மேலும் மேலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஆதரித்து வந்தார். நேபாளத்தில் பயங்கரமான தீவீரவாதியான யாசின் பட்கலை கைது செய்ய மத்திய அரசு பீஹார் போலீஸின் உதவியை நாடிய பொழுது பீஹார் போலீஸ் எந்தவிதமான இஸ்லாமிய பயங்கரவாதியைக் கைது செய்யவும் உதவி செய்யாது என்று அறிவித்து மறுத்து விட்டார். அதனால் அன்று பல பயங்கரவாதிகள் தப்பி விட்டனர்.

patna-bomb-blast-1

மேலும் இன்று குண்டு வைத்தற்காக பிடிபட்டவர்களில் சிலர் நிதிஷ் கட்சியின் முக்கிய தலைவருக்கு நெருக்கமானவர்கள் அவரது கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்ற செய்தியும் வந்துள்ளது. ஆக திட்டமிட்டே பட்கலின் கூட்டாளிகளுக்கு அனுசரணையாக ஆதரவாக நிதிஷ்குமார் செயல் பட்டிருக்கிறார் என்பது உறுதியாகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியின் பிரதம வேட்ப்பாளருக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் சென்று அமைதியாக பிரசாரம் செய்யும் உரிமை இருக்கிறது. அந்த குறைந்தபட்ச உரிமையைக் கூட அளிக்க மறுத்து வந்தார் நிதிஷ்குமார். மோடியின் நிகழ்ச்சி நடக்கவிருந்த அதே நாள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்து தடங்கல் விளைவிக்க எண்ணினார். ஆனால் நிதிஷின் அரசியலுக்கு துணை போக விரும்பாத ஜனாதிபதி தனது நிகழ்ச்சியை மாற்றி அமைத்துக் கொண்டு சர்ச்சையில் இருந்து தப்பி நிதிஷின் முகத்தில் கரி பூசினார். எல்லாவிதமான தடுப்பு முயற்சிகளும் வேலை செய்யாத கடைசி நிலையில் மோடியின் பிருமாண்டமான கூட்டத்தை நிறுத்தும் கடைசி முயற்சியாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் துணையை நாடியிருக்கிறார் நிதிஷ். எந்த யாசின் பட்கலின் ஆதரவாளர்களை விடுவிக்க உதவி செய்தாரோ அவர்களைக் கொண்டே பெரும் நாசத்தை விளைவிக்க மறைமுகமாக திட்டமிட்டிருக்கிறார். அன்று அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் மிரண்டு போய் தள்ளு முள்ளு நடந்திருக்குமானால் பல ஆயிரம் பேர்கள் மிதி பட்டு செத்துப் போயிருப்பார்கள். பழியை எளிதாக மோடியின் மீது சுமத்தியிருந்திருக்கலாம். அல்லது குண்டு வெடிப்பை கண்டு வெகுண்டு எழுந்து முஸ்லீம்களைத் தாக்கிக் கொன்றிருந்தாலும் பழியை மோடியின் மீது போட்டிருக்கலாம். குறைந்த பட்சமாக மோடியின் நிகழ்ச்சியாவது நிறுத்தப் பட்டிருக்கும். இனி எதிர்காலத்தில் மோடி எங்குமே பேச முடியாத நிலை உருவாகியிருக்கும். மோடியின் பிரமிப்பான வளர்ச்சியை தடுக்க மிகத் தந்திரமாக திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார் நிதிஷ்குமார். நிகழ்ச்சி அன்று தான் ஊரில் இல்லாதது போலவும் தனக்கும் வெடிப்புகளுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் ஒரு அலிபியை உருவாக்கி வைத்திருக்கிறார்.

patna-bomb-blast-2
குண்டுவைத்து ஓடும் இஸ்லாமிய பயங்கரவாதியை பாய்ந்து கைது செய்யும் போலீஸார்

போலீஸ்காரர்களை மீறி இவ்வளவு குண்டுகளை பயங்கரவாதிகள் வைத்திருக்க முடியாது. இந்தியா முழுவதற்கும் திறமையான ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகளை அளிக்கும் மாநிலம் பீஹார். அந்த போலீஸ் இப்படி அலட்சியமாக இருந்திருக்க நியாயமில்லை. எந்தவிதமான குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க பிடிவாதமாக மறுக்கச் சொல்லி உத்தரவு இருந்திருக்கிறது. குஜராத் போலீசுக்கு எந்தவித உதவியையும் அளிக்க மறுத்திருக்கிறார்கள். ஆக இந்த குண்டு வெடிப்புகளினால் முழு லாபத்தையும் அடைவதற்காகவும் மோடியை முழுதாக ஒடுக்கி முடக்கி அழிக்கவும் முஸ்லீம் ஓட்டுக்களை ஒட்டு மொத்தமாக அள்ளுவதற்காகவும் இஸ்லாமிய பாக்கிஸ்தானிய பயங்கரவாதிகளுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்து திட்டமிட்டு நயவஞ்சகமாக இந்த மாபெரும் துரோகத்தை நிதிஷ் குமார் இழைத்திருப்பதாகவே நம்ப வேண்டியுள்ளது. ஏற்கனவே பாக்கிஸ்தான் ராணுவத்தையும், பட்கல் தீவீரவாதிகளையும் ஆதரித்ததின் மூலமாக தான் எவ்வளவு கீழ்த்தரமாகவும் செல்ல முடியும் என்பதை நிரூபித்திருக்கும் நிதிஷ் குமார் இதையும் செய்திருக்கவே வாய்ப்புகள் உள்ளன.

நிதிஷ்குமாரின் இந்த தூரோகம் நிரூபிக்கப் படமால் போகலாம். ஆனால் பீஹார் மக்கள் இந்த தேசத் துரோகிக்கு தக்க பாடம் அளிக்க வேண்டும்.

நிதிஷ்குமாரின் அரசுக்கு பல உளவுத் தகவல்கள் வந்தும் அனைத்தையும் புறக்கணித்து விட்டு திட்டமிட்டே ஒரு படு பயங்கரமான நாச வேலையை அன்று நிதிஷ் குமார் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தவிருந்த அத்தனை சதித் திட்டங்களையும் நாசகார வேலைகளையும் மீறி கூட்டம் கூடியது. குறைந்தது மூன்று நான்கு லட்சம் மக்கள் அங்கு கூடியிருந்தனர். இந்த இணைப்பில் படங்களைப் பார்க்கவும். அலை அலையாக மக்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். பாட்னா நகரம் முழுவதுமே மனிதக் கடலினால் சூழப் பட்டிருந்தது. படகுகள் மூலமாகவும், ரெயில்கள் மூலமாகவும், கார், பஸ்கள் மூலமாகவும் வந்து குவிந்து கொண்டேயிருந்தனர் என்று நிகழ்ச்சியை ரிப்போர்ட் செய்யச் சென்றிருந்த நிருபர்கள் அவர்களின் சார்பு நிலையையும் மீறி பிரமித்துப் போய்ச் சொல்லுகிறார்கள்.
namoinpatna_1
இத்தனை லட்சம் பேர்கள் காசு கொடுத்தோ பிரியாணி பொட்டலம் கொடுத்தோ அழைத்து வரப் பட்டவர்கள் அலல்ர். தானாக இந்தியா ஒரு முக்கியமான மாற்றத்தின் முனையில் நிற்கின்றது அந்த மாற்றத்தினை நிகழ்விக்கவிருக்கும் ஒரு தலைவருக்கு தங்களது நேரடியான தார்மீக ஆதரவை அளிக்க வேண்டும் என்ற உந்துதலுடன் அங்கு கூடினார்கள். எப்படி ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அதே காந்தி மைதானத்தில் லட்சக்கணக்கான பீஹாரிகளின் ஆதரவு கூடியதோ அதே உணர்வுடனும் அதே தேசபக்தியுடனும் மோடியைக் காண பல லட்சம் மக்கள் திரண்டு வந்து கொண்டேயிருந்தார்கள். பத்து லட்சம் பேர்கள் அங்கு உறுதியாகக் கூடியிருப்பார்கள். என் தந்தை தனது தந்தையின் தோளின் மீது அமர்ந்து லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் நடுவே காந்தியைப் பார்க்கச் சென்ற கதையைச் சொல்லுவார். அந்த உணர்வை மோடியின் இந்தக் கூட்டத்தில் என்னால் அன்று உணர முடிந்தது.அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடியிருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால் என் டி டி வி என்னும் அயோக்கியத்தனமான டி வி அங்கு வெறும் ஐம்பதினாயிரம் பேர்களே கூடியுள்ளார்கள் என்றும் பி ஜே பிக்கு பெரும் சரிவு என்றும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் நூறு பேர்கள் கூட இல்லாத டெல்லி ராக்க்கூழின் கூட்டத்திற்கும் அதே ஐம்பதினாயிரம் பேர்கள் கூடியதாகக் கூசாமல் பொய் சொன்னார்கள். எந்தவித மனசாட்சியும் குறைந்த பட்ச நேர்மையும் அறமும் இல்லாமல் அனைத்து ஊடகங்களும் கூசாமல் மனதறிந்தே பொய் சொல்ல முடிந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு சிறு குழந்தை கூட அங்கு கூடியிருக்கும் கூட்டம் லட்சக்கணக்கில் என்று எளிதாகச் சொல்லி விட முடியும் கண் தெரியாதவரினால் கூட உணர்ந்து விட முடியும் ஆனால் இந்த என் டி டி வி போன்ற டி விக்கள் எந்தவிதமான பொய்யையும் கண் முன்னால் தெளிவாகத் தெரியும் பொழுது கூட கூசாமல் சொல்வார்கள் என்பது அன்று நிரூபிக்கப் பட்டது.

இதைப் போன்ற தொடர் குண்டு வெடிப்புகள் பிற கட்சிக் கூட்டங்களிலோ ஒரு திருவிழாக் கூட்டத்திலோ நிகழ்ந்திருந்தால் அங்கு பிரளயமே வெடித்திருக்கும். மக்கள் அச்சத்தில் வெளியேற முயன்று பெரும் நெரிசல் ஏற்பட்டு பல ஆயிரம் பேர்கள் உயிர் இழந்திருப்பார்கள். அன்று அது போன்ற ஒரு அசம்பாவிதம் பெரும் அழிவு மிகப் பெரும் நாசம் ஏற்பட்டு அத்துடன் மோடியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வர வேண்டும் என்பதே சதிகாரன் பயங்கரவாதி தேசத் துரோகி மனித குல விரோதி நிதிஷ்குமாரின் திட்டமாக இருந்தது. ஆனால் மோடி அன்று அழைத்த பகவான் கண்ணன் அவருக்கு அன்று உறுதுணையாக இருந்திருக்கிறான். அது ஒரு தெய்வீகச் செயல் அன்று வேறு எதுவும் இல்லை. ஆண்டவனின் பரிபூரண அருளால் பி ஜே பி தலைவர்களும் தொண்டர்களும் அபாரமான முதிர்ச்சியுடன் நடந்து கொண்டதே அங்கு பேரழிவு நடைபெறாமல் காப்பாற்றியது.

namoinpatna_2

முதலில் குண்டு வெடிப்பு பற்றி மோடி உட்பட எவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தன்னைச் சுற்றி குண்டுகள் வெடித்த பின்னரும் மோடி அசாத்தியமான மன உறுதியுடனும், பொறுமையுடனும், அமைதியுடனும் காணப் பட்டார். ஒரு சிறு பதட்டம் கூட இல்லாத ஒரு கர்ம யோகியாகக் காட்சியளித்தார். கீதையை முழுதாக உள்வாங்கிய ஒரு மாமனிதராக அன்று ஒரு மாபெரும் தலைவருக்குரிய அசாத்தியமான தலமைப் பண்பை கடைப் பிடித்தார். அன்று அவர் குண்டு வெடிப்புகளையோ அதில் நிதிஷ் குமாரின் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் குறித்தோ ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் கூட அது மாபெரும் கலவரத்துக்கு இட்டுச் சென்றிருக்கும். அஞ்சலி செலுத்துவதைக் கூட அதன் காரணமாகச் செய்யாமல் விட்டு விட்டார். அன்று அவரும் பிற பா ஜ க தலைவர்கள் அவர்களுக்கு மேலாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் காட்டிய பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் மக்களின் மனப்பக்குவம் மீதும் மாபெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டன.

ஐயோ கொல்கிறார்களே என்னைக் கொல்கிறார்களே என்று கருணாநிதி போல நாடகம் போட்டு உணர்ச்சியைத் தூண்டவில்லை. என் பாட்டியைக் கொன்றார்கள், அப்பாவைக் கொன்றார்கள் என்னையும் கொல்வார்கள் என்று சிறுபிள்ளை போல ஒப்பாரி வைக்கவில்லை. அடிபட்டவர்களை மேடைக்கு அழைத்து வந்து ரத்தத்தைக் காட்டி பிணத்தைக் காட்டி ஓட்டு கேட்க்கவில்லை. மோடி செய்ததெல்லாம் மிக அர்த்தமுள்ள ஒரு பேருரை ஒன்றே. அவரது ஒவ்வொரு மேடைப் பேச்சுகளும் முந்தைய பேச்சுக்களை மிஞ்சும் வண்ணம் ஜொலிக்கின்றன. பீஹாரின் தேவைகளை அதற்குச் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டார். நிதிஷ்குமாரின் துரோகங்களை அவரது பெயரைக் கூடச் சொல்லாமல் நாசுக்காக அழுத்தமாகக் குறிப்பிட்டார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார். பீஹாரின் பங்களிப்புகளை குப்தர் காலம் முதல் ஜெ பி காலம் முதல் சொல்லி எப்படி லாலுவின் ஆட்சியில் அதன் மேன்மை அழிந்தது என்பதையும் அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் அழுத்தமாகச் சொன்னார். இந்தியாவின் மகத்தான மேன்மைகளையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், வரலாற்றையும், அரசியலையும் புரிந்து கொண்ட ஒரு அறிஞரின் உரையாக அந்த எழுச்சி மிக்க உரை அமைந்திருந்தது. இற்தியாக அவர் வந்தே மாதரம் சொன்ன பொழுது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் அவருடன் இணைந்து உரகக்ச் சொன்ன பொழுது இந்தியாவின் எதிர்காலம் குறித்து என்றுமில்லாத ஒரு நம்பிக்கை என் மனதின் ஆழத்தில் அன்று தோன்றியது.

“பாட்னாவில் நரேந்திர மோதி உரையாற்றி முடித்து விட்டார். வழக்கம் போலவே மோடி மிக உணர்ச்சி கரமாகப் பேசினார்.. சீதா மாதாவின் பூமி, புத்தர் மகாவீரர் குருகோவிந்த் சிங் ஆகிய அவதார புருஷர்களின் பூமி பீகார் என்று இயல்பாக அந்த மண்ணின் பண்பாட்டுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். லாலு பிரசாத் யாதவ் சமீபத்தில் விபத்துக்கு உட்பட்ட போது, மோதி அவரிடம் நேரடியாகப் பேசி நலம் விசாரித்ததை லாலு ஊடகங்களிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாராம்.. யது வம்ச திலகன் ஸ்ரீகிருஷ்ணன் அல்லவா துவாரகையில் வந்து ஆட்சி செய்து எங்கள் பூமியையே உய்வித்தான்? எனவே என்னதான் எதிரணியில் இருந்தாலும் அவரிடம் இயல்பான சினேகமும், யது வம்சத்தவரிடம் என்றென்றைக்குமான நன்றியுணர்வும் குஜராத்தியான எனக்கு இருக்காதா என்ன? என்று சமத்காரமாக இதைக் குறிப்பிட்ட போது கூட்டத்தில் கரவொலி பறந்தது.

narendra-modi-rally-patna

வறுமை ஒழிப்பு என்பது பற்றித் தான் மையமாக இன்று பேசினார். ரயிலில் டீ விற்பவர்கள் படும் கஷ்டங்களை தனது சிறுவயது அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன் என்று சாவதானமாக மோதி சொல்ல ஆரம்பித்தபோது அவ்வளவு பெரிய கூட்டத்திலும் முழு அமைதி..இந்த மனிதன் நம்மில் ஒருவன், நமக்காகப் பாடுபடுவான், இவனது வெற்றியில் தான் நமது எதிர்காலம் உள்ளது என்று அந்தக் கூட்டத்தில் இருந்த கணிசமான அளவு இளைஞர்கள் கட்டாயம் உணர்ந்திருப்பார்கள்.

ஏழை முஸ்லிம்களே, நீங்கள் போராட வேண்டியது ஹிந்துக்களுடனா வறுமையுடனா? ஏழை இந்துக்களே, நீங்கள் போராட வேண்டியது முஸ்லிம்களுடனா வறுமையுடனா? – என்று கேள்வி எழுப்பினார்.. வாருங்கள், அனைவரும் இணைந்து வறுமையை ஒழிக்கப் போராடுவோம் என்றார்.

கடந்த சில மாதங்களாக மோதியின் கூட்டங்களைத் தொடர்ந்து வருபவர்கள் ஒன்றைக் கவனித்திருக்கக் கூடும். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் எப்படி ஒரு உள்ளார்ந்த பந்தத்தை அங்கு வந்து பேச்சைக் கேட்பவர்களிடமும், அதை உலகெங்கும் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களிடமும் ஏற்படுத்திக் கொள்கிறார் என்பது தான் அது.

என்ன இருக்கிறது இந்த மனிதரிடம்? உண்மை, உழைப்பு, நேர்மை. ஒரு மாபெரும் மக்கள் தலைவனுக்குரிய எளிமையும் இனிமையும் கலந்த கம்பீரம். வாராது வந்த மாமணி போன்ற இந்த மகா தலைவனை இந்தியாவின் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கத் தவறினால், அது வரலாற்றின் சாபம் அன்றி வேறில்லை.

இன்னொரு பக்கம் அங்கே ராக்கூழ் காந்தி என்ற கரப்பான் பூச்சி தில்லியில் காகிதத்தைக் கடித்துக் கொண்டிருப்பதை தொலைக்காட்சிகளில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ராக்கூழுக்கு மட்டுமல்ல, அவரது பேச்சை எழுதுபவர்களுக்கும் கூட ஒரு மண்ணும் தெரியாது போலிருக்கிறது… மீண்டும் மீண்டும் சுய பெருமை, கேனத் தனமான உதாரணங்கள் அல்லது அபத்த உளறல் தானா? வரலாறு, பண்பாடு, மக்கள் பிரசினை என்று எதுவுமே இந்த ஜன்மங்களுக்குத் தோன்றுவதில்லையா என்ன? மோடியின் உரைகளைக் கேட்டும் கூட இவர்கள் ஏன் திருந்துவதில்லை, ஏன் அதில் பாதி அளவுக்காவது தேறும் ஒரு உரையை ராக்கூழுக்கு எழுதிக் கொடுக்கக் கூட இவர்களால் முடியவில்லை?

அது தான் உண்மையான தேசபக்த வீரனுக்கும் கூலிக்கு மாரடிப்பவனுக்கும் உள்ள வித்தியாசம்.”

பேஸ்புக்கில் ஜடாயு

மக்கள் எந்தவிதமான வன்முறையும் கலவரமும் இல்லாமல் அமைதியாக எவருக்கும் இடையூறு விளைவிக்காமல் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்று அக்கறையுடன் அவர் அன்று விடுத்த கோரிக்கை இந்தியாவுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்துள்ள ஒரு கொடை அவர் என்பது உறுதியானது. அவரையும் இந்தியா தவற விடுமானால் அதற்கு மன்னிப்பே இல்லாமல் போய் விடும். ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னும் வாராது போல வந்த மாமணியைத் தோற்பதற்கு இந்தியாவுக்கு நேரமும் வளமும் கிடையாது.

மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் அமைதி, ஒற்றுமை குலைந்து விடும் என்று சொல்பவர்களும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் மத நல்லிணக்கம் கெட்டு விடும் என்று சொல்பவர்களும் மோடியை வெறுக்கும் எவரும் இந்தியா என்னும் தேசத்தை வெறுக்கும் மானுடத்தை வெறுக்கும் சுயநலம் பீடித்த தூரோகிகளாகவும் மனித குலத்தின் எதிரிகளாக, ஜனநாயகத்தை எதிர்க்கும், இந்தியாவையே ஒட்டு மொத்தமாக அழிக்க நினைக்கும் நயவஞ்சகக் கும்பலாக மட்டுமே இருக்க முடியும் என்பது உறுதி.

14 Replies to “பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்”

 1. வணக்கம்
  தாமரைக் குளத்தை மூடு முன்னர் சிந்தியுங்கள்
  விஷயம் கீழே
  https://www.hindu.com/2009/04/12/stories/2009041250950200.htm

  Akathethara’s Indira Gandhi connection

  She visited the Hemambika temple where the idol is a pair of hands to express her gratitude to the deity for her poll win.

  HELD HIGH: At the Kallekulangara Hemambika temple.

  Akathethara, nearly 5 km from Palakkad town, on the route to the Malampuzha Dam, recalls the visit of the former Prime Minister Indira Gandhi whenever elections approach.

  Nearly 27 years ago, Mrs. Gandhi visited Akathethara for prayers at the Kallekulangara Hemambika temple.

  She came here when she was returned to power after tasting defeat in the post-Emergency elections. In that successful poll-run, her symbol was ‘hand’ that brought her luck.

  The idol at Hemambika is a pair of hands, symbolising security and fearlessness.

  When the then Chief Minister K. Karunakaran and Soundara Kailasam, wife of Justice Kailasam, told her of the temple with the hands as the idol, Mrs. Gandhi wanted to visit it.

  The visit took place on December 13, 1982. From the helipad set up especially for her visit, she went directly to the temple and stayed there for a long time.

  The visit was an expression of gratitude to the deity, which was her symbol and had brought her luck. She also inaugurated a rural drinking water supply scheme at Akathethara panchayat.

  Akathethara, which has a close connection with the royal families of Palakkad, gave Mrs. Gandhi a royal welcome.

  The representative of the ‘Raja’ of Palakkad presented her a golden locket with hand ingrained.

  The people of Palakkad preserve golden memories of that visit, especially when they go through the din and dust of election campaigns.

  G. Prabhakaran

 2. திருவாளர் மோடியைத்தவிர வேறு யாரையும் நமது நாட்டின் பிரதமராக என்னால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

 3. சூரியனின் ஒளியை சிறு மேகம் மறைக்க இயலாது. பகவன் கட்டளைப்படி சூரியன் தன் கடமையை செய்தவரும். இது நியதி. மோடியின் எழுச்சியை அதாவது மக்கள் எழுச்சியை தடுக்க இயலாது. சிறு சிறு சலசலப்புகள் தண்ணிரில் போட்ட உப்பை போல் கரைந்துவிடும்.

 4. நாடு மற்றொரு சுதந்திர போராட்டத்தை எதிர் நோக்கியுள்ளது.

 5. மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் contonment Board ன் vice president ஆன Abishek Chowksey என்ற மகா அறிவாளி ஜபல்பூரிலுள்ள குளங்களில் உள்ள தாமரை பூக்களை (சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால்) மூடி மறைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறான்.

  காங்கிரஸ்காரர்களே இப்படித்தான் விவஸ்தை இல்லாமல் (திக் விஜய் சிங் என்ற கிறுக்கு பிடித்த கிறிஸ்தவ காங்கிரஸ்காரன் போலவே அனைவரும்) இருப்பார்கள் போலும். நம் தமிழ்நாட்டில் ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

  ஜபல்பூர் காங்கிரஸ்காரர்களைப் போல திமுகவின் சின்னம் sun என்பதால் அந்த சூரியனையே மறைக்க சொல்லுவார்களா? சோனியா காந்தி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்ற பின்னர் தான் அதில் எல்லோரும் பைத்தியக்காரர்களாக மாறிவிட்டார்கள்.

  ஆண்டவா! இந்த நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்று.

 6. இஸ்லாமிய பயங்கர வாதிகளுக்கு இந்தியா முதல் பலியாக உள்ளது. இந்த உலகம் அடுத்த பயங்கரவாதத்தைச் சந்திக்க உள்ளது. அனைவருக்கும் எச்சரிக்கை தேவை. இந்தக் கொடுமைக்காரர்கள் அப்பாவி மக்களை கொன்று குவிப்பார்கள். நமது நாட்டில் உள்ள போலி மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட வேண்டும். மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு ஏன்? இந்தியாவை இந்து நாடாகப் பிரகனப்படுத்திவிட்டு சிறுபான்மை மதத்தினருக்கு சிறு ஒதுக்கீடு தரலாம். இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

 7. நான் முன்னரே சொன்னது போல, வீசுகின்ற அலையில் பா.ஜ.கவுக்குத் தனியாகவே 325 பாராளுமன்ற இடங்கள் கிடைக்கும். தமிழ்நாடு கணக்கில் கொள்ளாமலே தனிப் பெரும்பான்மைக் கிடைக்கும்.

  வெற்றிக்குத் தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.

  இதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் பொய் மூட்டையான ஜெயலலிதா ஆதரவில்தான் பா.ஜ.க வெல்ல முடியும் என்ற அண்டப் புளுகை நம்பி அவருடன் கூட்டு வைத்து விடக் கூடாது. இரு இந்து விரோத, இந்துவிரோத, சந்தர்ப்பவாத, நம்பிக்கைத் துரோக, ஊழல் மலிந்த கழகங்களிடமிருந்து தமிழ்நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க வாராது வந்த மாமணி போல வந்த வாய்ப்பை சோ போன்றவர்களின் பேச்சைக் கேட்டு ஏமாந்து நழுவ விடக் கூடாது.

  பா.ஜ.க தனியாகத் தனது தலைமையில் ம.திமு.க. தேமு.தி.க வை வைத்துக் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டுக்குச் சுதந்திரம் நிச்சயம். தமிழ்நாட்டின் முடிவுகள் எப்படி ஆனாலும் பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மை பெறும் என்பது திண்ணம்.

 8. I got the message and call from Gujarat. Kindly read this and act accordingly
  Dear All,
  This is a very serious matter concerning Hindus and hence no media, newspapers or TV news channels is discussing it.

  Forward this message to a minimum of twenty people on your contact list; and in turn ask each of them to do likewise.

  In three days, most people in India will have this message.

  “Prevention of Communal and Targeted Violence Bill” (PCTV Bill)

  Read carefully what Dr. Subramanian Swamy has analysed about that Bill:

  Minority institutions including Jamait-e-Ulema are forcing Congress for passing this bill. Congress wants this bill to win 2014 election with ‘Minority’ votes.

  Salient features of The Prevention of Communal and Targeted Violence Bill- PCTV Bill :-

  1) Based on the presumption that all ‘Hindus are Criminals and Rioters’ ,this law can be invoked only against Hindus by minorities. (the bill defines Muslims, Christians etc. as “the Minority Group” in (sec 3.e))

  2) Merely a complaint will be sufficient to file a FIR and the Hindu against whom the complaint is made, will be immediately arrested and assumed guilty UNLESS PROVEN otherwise (In normal criminal procedure, an accused is assumed innocent unless proven guilty);

  3) All crimes under this Bill are Cognizable and Non-bailable [Clause 56 of may 2011 version];

  4) It can trigger a new wave of extortion by minority groups against Hindus, the majority of whom are the working and business class. This will have colossal negative repercussions for the Indian economy.

  5) Section 129 states that for prosecution of offences under Sec 9 there will be no limitation of time. It means a ‘Minority’ can reopen all cases against Hindus, all past cases right from 1950 onwards.

  6) Under Sec. 42, A minority witness giving false statement before National authority CANNOT be prosecuted for giving FALSE evidence against a Hindu.
  ___________________________

  Summary ?
  Just like Pakistan, Bangladesh or Kashmir,
  Hindus will be left with 3 options:
  (i) Convert
  (ii) Flee
  (iii) Suffer entire life

  So oppose this Anti-Hindu, Anti-Bharat Bill by making all Hindus aware of its dangers and unite to fight it and remove the Anti-Hindu & Anti-Bharat party who drafted this bill, or be prepared for above 3 options left for you & your children.
  ___________________________

  (NAC download link for bill- https://nac.nic.in/pdf/pctvb.pdf)
  – – – – –
  Once again reminding you to take this matter very seriously, understand and discuss with your family & friends & share to spread awareness.

  Forward this message to a minimum of twenty people on your contact list; and in turn ask each of them to do likewise.

  In three days, most people in India will have this message.
  Sent on my BlackBerry® from Vodafone

 9. எந்த முஸ்லீம் அமைப்புமோ, தலைவர்களுமோ இந்த குண்டுவெடிப்பைக் கண்டனம் செய்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.
  மத்திய அரசின் தலைகள் எதுவுமே கூட கண்டனம் செய்யவில்லை.மாறாக, அவர்கள் மோடியைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
  நிதீஷின் நடவடிக்கைகளில் இருந்த அலட்சியம், ஆபத்தானது என்பதையும் முஸ்லீம்களோ, மத்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ ஒரு வார்த்தை சொல்லவில்லை.
  இந்த அலட்சியம் தவறு, நமக்குப் பேர் கெடும் என்று கூட சொல்ல அவர்கள் யாரும் தயாராயில்லை.

  கடைசியாக, மோடியே, தேர்தல் நெருங்க நெருங்க, தன்னை முஸ்லீம் எதிர்ப்பாளன் என்ற எதிர்க்கட்சி பிரசாரத்திலிருந்து காபபாற்றிக்கொள்ள தேவைக்கு அதிகமாகவே வெளிப்பட முஸ்லீம்களை சமாதானப் படுத்துவதில் இறங்குவாரோ என்ற் பயத்திற்கான அடையாளங்கள் இப்போதே தெரியத் தொடங்கியுள்ளன.
  இது பிரசார தந்திரமா, இல்லை கொஞ்சமாவது அவர்களைச் சமாதானப்படுத்தாவிட்டால் காரியம் நடக்காது என்று எண்ணத் தொடங்கிவிட்டாரா என்பது தெரியவில்லை. – ஜெயலலிதாவும் தெலுகு தேச நாயுடுவும் உதாரணங்கள்.

 10. ஸ்ரீ வெங்கட் சுவாமிநாதனின் பயம் நியாயமானதே. சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டியதில்லை. ஆனால் 60 வருட காலங்களாக காங்கிரஸ் முஸ்லிம்களை வெறும் வோட் வங்கியாகவே கருதிவந்துள்ளது. அதன் தீய விளைவுகளை பாரதம் அனுபவித்து வருகிறது. பாஜக தவிர எந்தக்கட்சிக்கும் தேசத்தின் மேல் பற்று இல்லை என்பது உள்ளங்கைநெல்லிக்கனி. மோடி உறுதியாக நின்று வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி வெற்றி பெறவேண்டும். அனைவரும் சமம் என்று அரசியலமைப்பு சட்டம் கூறினாலும் சிறுபான்மை பெரும்பான்மை என்று பிரித்து கேவல அரசியல் நடத்தும் கட்சிகளை தோற்கடித்து பாஜகவை அறிதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செயவேண்டும். தேச நலனில் அக்கறையுடையோர் உறுதியுடன் செயல்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

 11. கட்டுரை ஆசிரியர் திருமலை அவர்கள் எங்களை நேரடியாக பாட்நாவுக்கே அழைத்துச் சென்று விட்டார்.அருமை அருமை. நன்றிகள் பல.
  ஈஸ்வரன்,பழனி.

 12. வாராது வந்த மாமணியைக் காண வந்த மாபெரும் மக்கள் வெள்ளமும் என்ன சும்மா லேசுப்பட்டதா.தலைவனின் மனம் எப்படியோ அப்படியே .
  ஈஸ்வரன்,பழனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *