தேச பக்தர் சுப்ரமணிய சிவா ”காந்தி காங்கிரஸை ஊழல் செய்துவிட்டார்” செய்துவிட்டார் என்று எழுதினார். அதென்ன ஊழல்? சுப்ரமணிய சிவா இந்த கடிதத்தை எழுதி 21 ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர். அம்பேத்கர் எழுதிய நூல் ‘Thoughts on Pakistan’. அதில் பாபா சாகேப் அம்பேத்கர் கூறுகிறார் –
“ஜூன்-9-1920 இல் கிலாபத் மாநாடு அலகபாத்தில் கூடியது. ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த ஒரு மனதாக முடிவெடுத்து அதனை செயல்படுத்த ஒரு உயர்மட்ட குழுவையும் அமைத்தது. ஜூன் 22 1920 இல் முஸ்லீம்கள் வைஸ்ராயிடம் ஆகஸ்ட் 1 1920 -க்குள் துருக்கியில் இஸ்லாமியர் குறைகல் தீர்க்கப்படவில்லை என்றால் (அதாவது கலீபா அரசு மீண்டும் நிலை நிறுத்தப்படவில்லை என்றால்) ஒத்துழையாமை நடத்தப்படும் என தெரிவித்தனர். … ஆகஸ்ட் 1 1920 இல் இல் வைஸ்ராயிடம் மீண்டும் தாக்கீது கொடுக்கப்பட்டு ஆகஸ்ட் 31 இல் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளின் சிறு தொகுப்பு காட்டுவதென்ன?வென்றால் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது கிலாபத் கமிட்டியினால்தான். கல்கத்தா சிறப்பு காங்கிரஸ் மாநாடு செய்ததெல்லாம் கிலாபத் மாநாடு ஏற்கனவே உருவாக்கிய செயல்திட்டத்துக்கு தங்களை இணைத்துக் கொண்டதுதான் – அதுவும் ஸ்வராஜ்ஜியம் என்ப்தற்காக அல்ல மாறாக இஸ்லாமியருக்கு துருக்கிய கிலாபத் விஷயத்தில் உதவுவதற்காகத்தான். இது கல்கத்தா சிறப்பு காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் தெரிகிறது.
காந்திஜியும் அலி சகோதரர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் காந்தி இந்துக்களிடம் இந்தியாவில் சுவராஜ்ஜியத்துக்காக இந்த இயக்கம் செயல்படுவதாக பிரச்சாரம் செய்தார். அலி சகோதரர்கள் உண்மையில் எதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ அதற்காக -அதாவது துருக்கியில் மீண்டும் சுல்தான் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக- இந்த இயக்கம் செயல்படுவதாக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் கிலாபத் ஒத்துழையாமை என்பது சுவராஜ்ஜியத்துக்காக அல்ல துருக்கிக்காக என்பது காந்திக்கு தெரியும். மாடர்ன் ரிவ்யூ பத்திரிகை இந்த அடிப்படை முரணை சுட்டிக்காட்டியது.
ஆனால் இந்த பிரச்சனைகளை குறித்தெல்லாம் கவலைப்படாமல் திருவாளர். காந்தி தன் போக்கில் காங்கிரஸை இழுத்து கொண்டு கிலாபத்துக்கு ஆதரவளிப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்.
என்கிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த வெற்றியை காந்தி எப்படி பெற்றார்? டாக்டர் அம்பேத்கர் அளிக்கும் அடிக்குறிப்பு கவனிக்கத்தக்கது:
இந்த ஒத்துழையாமை இயக்க தீர்மானம் 1886 வாக்குகள் ஆதரவாகவும் 884 வாக்குகள் எதிராகவும் பெற்று நிறைவேறியது.. இங்கு கலந்து கொண்டு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் கல்கத்தாவின் வாகன ஓட்டிகள். அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக பணம் கொடுக்கப்பட்டது என காலமான திரு.தைர்ஸி என்னிடம் ஒரு முறை கூறினார்.
இப்போது சுப்ரமணியசிவாவின் ’காந்தி காங்கிரஸை ஊழல் செய்துவிட்டார்’ என்கிற வார்த்தைகளை படித்துப் பார்த்தால் பொருள் விளங்கும். திருமங்கலத்தின் கல்கத்தா வேர்கள்?
ஆர்.வி என்பவர் வருத்தப்படுகிறார், நேருவை எப்படி நாஸி என சொல்லப்போயிற்று என்று. கிழக்கு வங்க இந்து அகதிகள் விஷயத்தில் நேரு எடுத்த முடிவு நாஸித்தனம் கொண்டதாகவே இருந்தது. குருஜி கோல்வல்கரின் ’இரண்டாந்தர குடிமக்கள்’ என்பதை நியாயப்படுத்தி எழுதிய நீ எப்படி நேருவை நாஸி என சொல்லலாம் என்கிறார் திரு. ஆர்.வி. குருஜி கோல்வல்கர் சொன்னது ஒரு குறிப்பிட்ட சூழலில் – இந்த தேசத்தின் தேசியத்தன்மைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்பதை. ஆனால் நேரு செய்தது இந்தியாவுக்கு அகதிகளாக தாம் தம் குடும்பத்தினர் மானம் மரியாதை உயிர் ஆகியவற்றை காப்பாற்ற சொத்துகளை விட்டு வந்த ஏழை இந்துக்களை மனிதர்களாகவே நடத்தாமல் கோடிக்கணக்கான இந்துக்களை ஒரு பெரும் வதை முகாமுக்குள் தள்ளீயது. இப்படி வரும் அகதிகளுக்கு எந்த உதவியும் செய்யாதே அவர்கள் இங்கு விரும்பப்படவில்லை என்பதை அவர்களுக்கு காட்டு என்று முதலமைச்சருக்கு எழுதுகிறார் மனிதருள் மாணிக்கம். அகதிகளாக இந்தியாவை நோக்கி வந்த கிழக்கு வங்க இந்துக்கள் ’இரண்டாந்தர குடிமக்கள்’ கூட இல்லை. அவர்கள் நேருவிய உலகில் ‘இல்லவே இல்லை’.
இதன் பின்னால் நேருவுக்கே மனதில் நிலைகொண்டிருந்த சில இனவாத கோட்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். இதனை இந்திய விரோத சக்திகள் கடைந்தெடுத்த இலக்கிய நயத்துடன் பயன்படுத்த தயங்கியதில்லை. உதாரணமாக, நேருவியர்களால் பெரிதும் கொண்டாடப்படும் பாகிஸ்தானிய இலக்கியவாதி சதாத் ஹாஸன் மாண்டோ நேருவுக்கு எழுதிய கடிதம். அஸ்ஸலாமு அலைக்கும் என ஆரம்பிக்கும் அந்த நெகிழ வைக்கும் கடிதத்தில் கவித்துவம் வாய்ந்த வரிகளினூடே மனித நேயரான மாண்டோ கூறுகிறார்:
பண்டிட் சகோதரர்களான நமக்குள் இதை செய்து கொள்ளலாம். என்னை இந்தியாவுக்கு அழையுங்கள். நான் உங்கள் வீட்டில் ஷல்ஜாம் ஷாப்தெக் எடுத்து கொள்வேன். எனக்கு காஷ்மீருக்கான முழு பொறுப்பையும் அளியுங்கள். இந்த பக்ஷிகளும் இதரர்களும் முதல்தர ஏமாற்றுக்காரர்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் ஏன் அந்தஸ்தான இடங்களை அளிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காகவா? … நாடு பிரிவினை செய்யப்பட்டது. ராட்க்ளிப் அசிங்க வேலையை செய்ய படேலை பயன்படுத்தி கொண்டார். ஜுனாகட் பிரதேசத்தை நீங்கள் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்து கொண்டிருக்கிறீர்கள். இதை ஒரு காஷ்மீரி ஒரு மராத்தாவின் தாக்கத்தால்தான் செய்திருக்க முடியும். நான் படேலைத்தான் குறிப்பிடுகிறேன். (அல்லா அவரை மன்னிக்கட்டும்)
மேலோட்டமாக பார்க்க முழுக்க முழுக்க தேச பிரிவினைகளுக்கு அப்பால் இதயங்கள் ஊடாடுவது போல எழுதப்பட்டகடிதத்தில் “காஷ்மீர பண்டித குலத்தவருமான நீங்களும் நானும்” எனும் இரட்டையை நுட்பமாக முன்வைக்கிறார் மாண்டோ. இவையெல்லாம் நேருவின் மனதில் என்ன சஞ்சலங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பது தெரியாது. ஆனால் நேருவே இத்தகைய ஒரு உலகப்பார்வை கொண்டவர்தாம். இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் சீனர்கள் குறித்த அவரது வார்த்தைகளின் முழு தாக்கம் பின்னாட்களில்தான் தெரிய வந்தது: There is an aristocracy and well-bredness about the Chinese which is impressive. சீனாவா திபெத்தா என நிலை வரும் போது நேருவுக்கு சீனா மீதான காதலுக்கு சோஷலிஸ மார்க்ஸீய மயக்கம் மட்டுமல்ல காரணம். நேருவுக்குள் இருந்த இந்த ஆழமான ‘well-bredness‘ குறித்த ஈர்ப்பும் காரணமாக இருந்திருக்கக் கூடும்.
கிழக்கு வங்க அகதிகளில் பெரும்பாலானோர் நாமசூத்திரர் எனும் தலித் வகுப்புகளை சார்ந்தவர்கள். அங்குள்ள வனவாசி சமுதாயங்களை சார்ந்தவர்கள். நேருவுக்கு இவர்கள் பெரிதாகப்பட்டிருக்க மாட்டார்கள். நேரு அரசாங்கம் கிழக்கு வங்க அகதிகளை வெறுப்புடன் நடத்துவதற்கு சாதியம் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ரசாக்கர்கள் கன்னியாஸ்திரீகளை கொன்றால் முகம் சிவக்க சினந்த நேருவுக்கு ரஸாக்கர்கள் தொடர்ந்து இந்துக்களை கொன்றும் சூறையாடியும் வந்தது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை பாருங்கள்.
இதைத்தான் நேருவின் நாஸி மனநிலை என்றது. இந்த மனநிலை இன்றைக்கும் நீடிக்கிறது. நேருவிய பத்திரிகையான ஃப்ரண்ட்லைன் சாவர்க்கரின் மன்னிப்பு கடிதத்தை பூதாகாரமாக்கியது. எந்த இணைய நேருவியரும் இதே பரப்புரையைத்தான் செய்வார். பி.ஏ.கிருஷ்ணன் ஒரு விதிவிலக்கு. நேருவிய நாளேடான தி இண்டு ஹிந்துத்துவர்களை கொன்ற போலீஸ் பக்ருதீன் கைதானதும் அவனது தாயார் குறித்த உருக்கமான கதையை அடுத்ததாகவும், அவனது காதல் கதையை அடுத்ததாகவும் வெளியிடுகிறது. கொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு அங்கே இடமில்லை. எழுதி வைத்து கொள்ளலாம் – இணைய நேருவியர்கள் முதல் இயக்க நேருவியர்கள் வரை இன்னும் ஐந்து ஆண்டுகளில் போலீஸ் பக்ருதீனுக்காக மனித உரிமை கோரி விடுதலை விண்ணப்பத்தில் கையெழுத்திடுவார்கள். மதானிக்காக இன்று நேருவியரான பிரசாந்த் பூஷண் களமிறங்குவது போல. நேற்று தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளும் இலக்கிய படைப்பாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு மதானிக்காக கையெழுத்திட்டது போல. கேரளத்தின் மராடு படுகொலைகள் இன்று மறக்கடிக்கப்பட்டது போல.
இந்த கட்டுரைகள் எழுதப்படுவதற்கான முழு உந்துதலை அளித்தவர்கள் இணையத்தில் உலாவும் born-again நியோ காந்தியர்கள். ராமசந்திர குஹாவின், அவரது தமிழ் பிரதியெடுப்புகளின் காந்தியர்கள். இவர்கள் காந்தியை சர்வரோக நிவாரணியாக தூக்கிப் பிடிப்பதே காந்தியத்தின் மீதான பற்றில் அல்ல. காந்தியின் பெயரை உச்சரித்தால் ஒருவித அதிகார பூர்வ அறிவுஜீவி ஒளி இலவசம், பிறகு நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. மந்தையாகிவிடலாம். காந்திய கமிசார்கள் மேய்ப்பர்களாக உங்களைக் கடைத்தேற்றுவார்கள்.
உண்மையில் இந்த ராமசந்திர குஹா பாணி காந்திய மோஸ்தருக்கும் காந்திக்கும் கூட தொடர்பில்லாமல் இருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கத்தின் வரலாற்றாடலில் ஒரு முக்கிய அடுத்த கட்டமாக திகழ்கிறார் – வர்த்தக வெற்றியுடன் குஹா.
குஹா பாணி நியோ-காந்தியர் செய்யும் அப்பட்டமான திரிபுகளையும் ’சத்தியமா’என்று ‘சோதனை’ செய்யலாம்..
நாளை காலையில்.
நட்புக்குரிய நீலகண்டன்,
கனத்த மனதுடன் படித்தேன்.
கிலாபாத் இயக்கம் குறித்த ஒரு நெருடல் – வதைப்பதாக பலர் சொல்லக் கேட்டுள்ளேன். ஆராய்ந்து படிக்கும் அவகாசமோ + ஆஸ்தியோ இல்லாத என்னைபோன்ற அல்ப ஆத்மாக்களுக்கு ஆழமான இந்த தகவல்கள் நிதனாமாக தெரிந்து கொண்டு ஆரவாரமில்லாமல் யோசிக்க வகை செய்கிறது. ” திருமங்கலத்தின் கல்கத்தா வேர்கள் ” அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னமும் வேறென்ன விஷயங்கள் எல்லாம் இருக்கிறதோ நமது காலைத் தேநீரோடு என்ற பதபதைப்பு உள்ளது. மிகுந்த கனத்த மனதுடன் நீங்கள் இவைகளைப் பதிவு செய்கிறீர்கள் என்பது தெரிகிறது. நல்ல விஷயங்கள் நடக்க பிரார்த்தனைகள்.
பராசக்தி துணை.
அன்புடன்,
ஸ்ரீநிவாசன்.
உங்கள் கட்டுரைகள் சரியான சிந்தனை இலக்கை அடைய வாசகர்களுக்கான கலங்கரை விளக்கு மட்டுமல்லாமல் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் கலங்களாகவே விளங்குகின்றன. கிலாபத் இயக்க ஒத்துழையாமை இயக்கத்தின் பின்னிருந்து இயக்கிய மதச் சார்பையும் அன்மை அவலமான திருமங்கலத் தேர்தலின் மூலத்தை சென்ற காலத்தின் கல்கத்தா ஓட்டுனர்கள் வரை கொண்டுசென்ற விதத்தையும் உங்களை அன்றி வேறு யார் இவ்வளவு ஆதாரமாகச் சொல்ல முடியும்?
தேநீரைப் போலவே காலை வேளையின் அவசியமான ஒரு தேவையாக உங்கள் கட்டுரைகள் மாறிக் கொண்டு வருகின்றன. வாழ்த்துக்கள்!
” திருமங்கலத்தின் கல்கத்தா வேர்கள்? “- நெத்தியடி . அரவிந்தன் பாராட்டுக்கள். திருமங்கலம் பார்முலாவை கண்டுபிடித்த பெருமை கூட அண்ணன் அழகிரிக்கு இல்லை என்பதும், நம் தேசப்பிதா செய்த தில்லுமுல்லுகள் தான் திருமங்கலம் பார்முலாவுக்கு அடிப்படை என்பதும் கசப்பான உண்மை. மிகப் பெரியவர்களும் கடுமையான தவறுகளை செய்யக்கூடியவர்களே என்பதற்கு மகாத்மா காந்தி ஒரு சரியான உதாரணம். உண்மை சிறிது கசக்கத்தான் செய்யும். என்ன செய்வது ? கசப்பு மருந்துகள் தான் பல நோய்களை குணப்படுத்துகின்றன. நோய் தொடர வேண்டுமா ? கசப்பு மருந்து சாப்பிட்டு நோய் அகலவேண்டுமா என்பதை காலம் தான் சொல்லமுடியும். சுரணை உள்ளவர்களாக நாம் இருந்தால் சிந்திப்போம். சிந்திக்காமல் இருப்போரும் நம் சகோதரர்களே என்பதை நாம் உணர்கிறோம். கடவுள் அருள்க. இதை நான் எழுதும் போது என் மகன் அருகில் இருந்து, போப்பா நீயும் உன் கடவுளும் என்று என்னை கிண்டல் செய்கிறான். ஆனால் மாணிக்க வாசகரோ ” அருள் செய்தான் தவம் செய்தேன் “-என்கிறார். அதாவது அவன் அருள் புரிந்ததால் தான் தவம் செய்தேன் என்கிறார்.
” அவன் அருளாலே அவன் தாள் வணங்கி “-என்கிறார். எனவே அவன் அருளை ஒவ்வொரு நொடியும் வேண்டி செயல்புரிவோம். நலமே விளைக.
கிலாபத் இயக்கம் பற்றி மலர்மன்னன் அவர்கள் ஒரு பெரிய கட்டுரை எழுதி இருந்தார்.
இன்றைய தேநீரீன் சுவையே இதுதான்;
“காந்தியை சர்வரோக நிவாரணியாக தூக்கிப் பிடிப்பதே காந்தியத்தின் மீதான பற்றில் அல்ல. காந்தியின் பெயரை உச்சரித்தால் ஒருவித அதிகார பூர்வ அறிவுஜீவி ஒளி இலவசம்,”
தமிழ் இந்து , ஆங்கில இந்து என்று எதுவானாலும் , மவுண்ட்ரோடு காம்ப்ளெக்சில் இருந்து வரும் பத்திரிக்கைகளிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. தங்கள் விளம்பர வருமானத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். அவசர நிலைக்காலத்தில் இத்தாலிய மருமகளின் மாமியார் பிரதமராக இருந்தபோது, காங்கிரசுக்கு ஊழியம் செய்தது இந்துப் பத்திரிகை என்பது அனைவரும் அறிந்த உண்மை. போலீசு பக்ருதீனைப்போல கொலைகார நாய்களுக்கு இறக்கம் காட்டும் இந்த மனப்பான்மை , இவர்கள் குடும்பத்தில் யாராவது இத்தகைய தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டால் தான் மாறுமோ என்னவோ யார் கண்டது ? ஏனெனில் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று பெரியோர் சொல்லுவார்கள்.ஜனாப் நேரு செய்த கொடுமைகள் வெளியே வருவதை காங்கிரஸ்காரர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் உண்மையை எவ்வளவு நாள் மூடி மறைக்க முடியும் ? நேரு என்ற போலி முக மூடியும், மகாத்மா காந்தி என்ற கல்கத்தா திருமங்கலமும் வெளியே வந்துவிட்டது. இதனை விமரிசனம் செய்யும் அன்பர்கள் இதுபற்றி திரு அம்பேத்கர் அவர்கள் எழுதிய நூல்களை படித்து உண்மையை அறிவது , அவர்களுக்கு சிறிதாவது தெளிவை ஏற்படுத்தி, நேரு மாயையில் இருந்து வெளிவர உதவும்.
மாசிப் பெரியசாமி அவர்கள் சரியாக சொன்னர். காந்தி பேரை சொல்லி ஊரை ஏமாற்றுவது எளிது . அவர்கலும் நிலம் ஊழலில் மாட்டிக்கொண்டு இருப்பவர்தான , காந்தி உதவுவார். இன்னொருவர் பாருங்கள் மன்னிப்பு கேட்டேன் 6 மாதம் ராஜினாமா என்று போயிவிட்டார் …
அரவிந்தன் நீலகண்டன் ஜியின் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அவருடைய கட்டுரைகளின் வழியாக அம்பேத்காரின் குரலே ஒலிக்கிறது. அரவிந்தன் நீலகண்டன் ஜி அம்பேத்காரின் மறு அவதாரம் என்று சொல்லும் வகையில் அறிவு மிகுந்த ஆய்வுகட்டுரைகளை தொடர்ந்து தருகிறார். அவர் பெங்களூருக்கு வந்தால் அவரது தரிசனத்தை காண ஒடுக்கப்பட்ட மக்கள் காத்திருப்போம். ஜெய் பீம்.
அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி காந்திய வழியில் நடக்கிறார் என்பதை ஆணித்தரமாக ஆதாரங்களுடன் நிறுவியதற்கு நன்றி. வரும் ஜனவரி முப்பது பிறந்தநாளுக்குக் காந்தியைப் போல அழகிரியைப் படம் எழுதிப் போஸ்டர் போட்டுவிடலாம்.
ஆமாம். திரு குகா கட்டுரைகளை படிக்கும் போது என்ன ஒரு மாதிரி உள்ளதே என எண்ணியதுண்டு. The Hindu கட்டுரைகளையும் இப்போது நான் படிப்பதில்லை. உண்மை அறிய எதை தான் படிப்பது , ஊடகம் பார்ப்பது என தெரியவில்லை.
தி ஹிந்து ஒரு நடு நிலை பத்ரிகை இல்லை. காங்கிரஸ் சார்புடையது. மோடி எதிர்ப்பு நிலையுடையது கலாட்டா கச்சேரி தலைப்பில் (21–11–13 இதழில்) அன்னமிட்ட அம்மா நம்மை ஆக்கிவிட்ட அம்மா என்று போடாமல் கை என்று போட்டதில்உள்நோக்கம் தெரிகிறது.. மோடியை பற்றிய ஞானி மற்றும் என். ராம் கட்டுரைகலீருந்து அறியலாம். நேரு காந்தியை பற்றிய நினைவு தற்போது தேவை அற்றது.
மிக்க நன்றி அரவிந்தன் நீலகண்டன். காந்திக்கு “பிதா” என்று தெய்வ பட்டம் கட்டியது தற்செயல் அல்ல அதை ஒரு ப்ராண்டாகவே உருவாக்கினார்கள் என்பதை அவரே அறியவில்லை என்பததுதான் உண்மை; அறியவரும் போது எல்லாமும் அவர் கை விட்டு போய் விட்டது; ஐம்பது வருட சுதந்திரத்துக்கு பிந்திய எழுத்துக்களில் தெய்வத்தை போன்ற நம்பிக்கையை கேள்வி கேட்க ஒரு கல்வி யாளரும் ஊடகத்தில் வெளிச்சத்தில் இல்லை என்பதை காலனிய நேருவிய அடிவருடிகள் உறுதி செய்தார்கள் எனவே துணிஞ்சு உபயோகபடுத்தி ஒரு தலைமுறை காயடிக்கபட்டது; மரத்து போன மக்கள் குமாஸ்தாவாகவே வளர்ந்து தொடர்ந்து காலனியம் வளர உதவி செய்துள்ளார்கள்; இதெல்லாம் என்றைக்கு பள்ளி வரலாறில் வரும் ? இன்னும் எத்தனை தலைமுறை ஆகும்! தனது செயலை மாற்றிக்கொள்ளுமா எலும்புத்துண்டு ஊடகம் ?
நமக்குள் இருக்கும் சுதந்திரம் நாம் வணங்கும் தெய்வத்தை பழிப்பதில் தவறில்லை என்கிறது. தைரியம் இருந்தால் செருப்பு மாலை கூட போட துணிச்சலை தருகிறது. ஆனால் நம்மை நாமே சோதிக்கும் துணிவை தரவில்லை. மேலும், கடந்த 250 வருடங்களின் மாயையை ஆராயும் துணிவை தரவில்லை. மாறாக, கண்ணிருந்தும் குருடராய் வாழ வழிகாட்டியாதே தவிர உண்மையை அறியும் வழி காட்டவில்லை. கிலாபத் இயக்கத்துக்கும் இந்தியாவின் சுதந்திரத்திற்கும் என்ன தொடர்பு என்று காந்தியாலோ அல்லது அவரது வாரிசுகளாலோ என்றும் தெளிவாக்கப்பட்டதில்லை. மாறாக, துருக்கிற்கு செய்த தவறான ஆதரவு இன்று மதவழி அரசியலுக்கு அடிக்கோல் நாட்டியது என்பது மிகையாகாது. எனினும் உண்மையை நோக்க தயக்கம் ஆசிரியர் கூறியது போல ஒரு அங்கீகாரத்தை பெறுவதற்கே என்பதை புலன்படுத்துகிறது.
கட்டுடைத்தல் என்ற பெயரில் சாவர்கரையும் ஸ்ரீ குருஜியையும் அரைகுறை உண்மைகளை எழுதி புழுதியில் போட்டு புரட்ட முயன்றவர்களுக்கு இப்போது வலிக்கிறது; யாரை வேன்டுமானாலும் கட்டுடைக்கலாம் – அதுவும் சரியான வரலாற்று ஆதாரங்களுடன் என்பது இப்போது சிலருக்காவது புரிந்திருக்கலாம்
காந்திஜியிடமாவது இந்த மண்சார்ந்த பார்வை இருந்தது; கொஞ்சம் உண்மை இருந்தது; ஒரு அரசியல் வாதியாக் அவர் சில தவறுகள் செய்திருக்கலாம்; அவை இயல்பானவை, அதாவது பெரிதும் சுயநலம் என்று சொல்லமூடியாது;
ஆனால், நேரு பிரான், இவரிடம் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கச்சொல்லி அவர் தந்தையார் பணத்தைக் காட்டி மிரட்டியதிலிருந்து தொடங்கி இவருடைய சிந்தாந்தங்கள், ஜனநாயக நிர்வாகங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக போலிக் கட்டுமானங்கள்.
-கண்ணன்.
இந்தப் பதிவுகளை அரவிந்தன் நீலகண்டன் என்ற தற்காலத்து குறிப்பிட வேண்டிய சிந்தனையாளரின் வீழ்ச்சியாகவே கருதுகிறேன்.
எனக்குத் தெரிந்த அளவில் காந்தி நேரு பிம்பங்களை – குறிப்பாக நேருவின் பிம்பத்தை – கட்டுடைக்க பிரமாத கஷ்டப்பட வேண்டியதில்லை. காந்தியைக் கட்டுடைக்கிறேன் என்று “முற்போக்கு”, “திராவிட’, “ஹிந்த்துத்துவ” “அறிவுஜீவிகள்” புற்றீசல் போலக் கிளம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அ.நீ.யும் கிளம்புவதில் ஆச்சரியம் இல்லை – ஆனால் அ.நீ. மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
காந்தியைப் பற்றி அ.நீ. சொல்வதில் தகவல் பிழைகள் மற்றும் எதிர்மறை கருத்துக்கள் என்னென்ன?
1. காந்தி “அட்டகாசமான” பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். – அவரது சுயசரிதையைப் படிக்கும்போது அவர் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்தவர் என்று தெளிவாகத் தெரிகிறது. வாங்கிய கடனை அடைக்கவா என்று தெளிவாக நினைவில்லை, ஆனால் வாழ வழி தெரியாமல் தென்னாப்பிரிக்கா போனார் என்பது வரலாறு. இதில் என்ன அட்டகாச சூழல், பணத்தில் கொழித்துப் புரள்தல்? அதுவும் காந்தியின் குடும்பத்தையும் நேருவின் குடும்பத்தையும் ஒரே தட்டில் வைப்பது “அட்டகாசமான” மிகைப்படுத்தல்.
2. // காந்தி-நேரு தலைமைக்குப் பிறகு சாதாரண இந்தியனுக்கு காங்கிரசில் முக்கிய இடம் பெறுவது இயலாமல் போய்விட்டது. // வ.உ.சி.க்கும் சிவாவுக்கும் பாரதிக்கும் காந்திக்கு முந்தைய காங்கிரசில் பெரிய இடம் இருந்தது, காந்திக்குப் பிறகு அவர்கள் போன்ற “சாதாரண” சூழலில் இருந்து வந்த தலைவர்களுக்கு இடமில்லை என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது. திலகருக்கே காந்திக்கு முந்தைய காங்கிரசில் ததிங்கிணத்தோம் என்பது அ.நீ.க்கு தெரியாதாமா? காந்திக்கு முந்தைய காங்கிரஸ் பணக்கார வக்கீல்களின் காங்கிரஸ். மெத்தப் படித்தவர்களின் காங்கிரஸ். காந்தியின் தலைமையின்போது மட்டும்தான் காங்கிரஸ் சாதாரணர்களின் கட்சியாக இருந்தது.
3. காந்தியின் காலத்திலேயே high command இருந்தது என்பது உண்மைதான். ஆனால் யார் அந்த high command? படேல் அல்லவா கட்சியை இரும்புக்கரம் கொண்டு நடத்தினார்? நாரிமன் 1937-இல் பம்பாயின் பிரதமராக வராமல் தடுத்தவர் படேல் அல்லவா? சத்தியமூர்த்திதான் மெட்ராசின் பிரதமராக வந்திருக்க வேண்டும், அதைத் தடுத்ததும் படேல்தான் என்று சாண்டில்யன் எங்கோ சொன்ன நினைவும் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளின் நோக்கம் படேலைக் கட்டுடைப்பதா இல்லை காந்தி நேருவையா?
காந்தி தன் முடிவுகளை காங்கிரசின் மீது சுமத்தவில்லை என்று நான் வாதிடவில்லை. போசுடன் ஒத்துழைக்காதது, காங்கிரசின் தேர்வுகளை ஒதுக்கி நேருதான் பிரதமர் என்று அமைத்தது இரண்டிலும் இது வெளிப்படை. ஆனால் காந்தி moral நெருக்கடி என்பதற்கு மேல் போனதாக எனக்குத் தெரியவில்லை. இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது படேல்தானே!
மீண்டும் சொல்கிறேன், காந்தியின் காலத்தில் மேலிடத்து நிர்ப்பந்தம் என்பது இல்லாமல் இல்லை – குறிப்பாக அவரது கடைசி பத்து ஆண்டுகளில். ஆனால் அவரது காலத்தில்தான் காங்கிரஸ்தான் சாதாரணர்களின் காங்கிரஸ் ஆக இருந்தது.
நிறைய எழுதலாம், ஆனால் பொறுமை போகிறது. தமிழ் ஹிந்து தளம் அனுமதித்தால் ஒரு கட்டுரையாகவே அனுப்புகிறேன். அனுமதித்தால் ஜடாயுவோ இல்லை வேறு பொறுப்பாளரோ என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
“கிலாபத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு காந்தியாரே பணம் பெற்றார் ” என்று ஒருவர் என்னிடம் கூறினார், என்றும் மேற்கோள் காட்டலாம் . கரி பூசுவது என்று முடிவு செய்த பின் முகத்திலா , காலிலா என்ற தயக்கம் ஏன்?
125 varudangalukku mun britainil barrister padika evlavu selavagum enbathum indraya rupai mathipil athu sila kodikalai thodum endra adipadai arivu kooda atra R.V enbavarai patri enna solla.