தேவையா நீ பணிப் பெண்ணே? – 1

ந்தியாவில் பரபரப்படையவும் கொந்தளித்து எழவும் சூடாக விவாதிக்கவும் ஏதாவது ஒரு அவல் தினம் தினம் உருவாகி விடுகிறது. இப்பொழுது மக்கள் கேஜ்ரிவாலின் கோமாளித்தனமான நடவடிக்கைகளை சற்றே மறந்து விட்டு அடுத்த பரபரப்பான நாட்டு நடப்புக்குத் தாவி விட்டார்கள். இப்பொழுது இந்தியாவில் சூடாக விவாதிக்கப் பட்டு அலசப் படும் விஷயம் இந்தியாவின் தூதரக பெண் அதிகாரி அமெரிக்காவில் கைது செய்யப் பட்டு நடத்தப் பட்ட விதம். அடுத்த பரபரப்பான செய்தி வரும் வரையில் இந்த செய்தியே தலைப்புச் செய்தியாக இருக்கப் போகிறது. ஆனால் அடுத்த பரபரப்பான நிகழ்வு வரும் பொழுது இந்த சம்பவம் மறக்கப் பட்டு விடுவதற்கு முன்னால் இந்தியா இந்த சம்பவம் மூலமாக கற்றுக் கொண்டு செயல் படுத்த வேண்டிய பாடங்கள் சில உள்ளன. அதை இந்தக் கட்டுரை அலசுகின்றது.

அமெரிக்காவில் பணிபுரியும் அயல்நாட்டுத் துறை உயர் அதிகாரிகளுக்கு வீட்டு வேலைச் செய்வதற்காக பணியாட்களை இந்தியாவில் இருந்து அழைத்து வரும் சலுகையை இந்திய அரசு அளித்துள்ளது. அதைப் பயன் படுத்தி ஒரு துணைத் தூதரக அதிகாரியொருவர் அழைத்து வந்த பணிப்பெண் தன்னை அழைத்து வந்தவர் தனக்கு படிவத்தில் உறுதியளித்த சம்பளத்தை விடக் குறைவான சம்பளம் கொடுத்ததாகச் சொல்லி புகார் கொடுத்தன் பேரில் அவரை நியூயார்க் நகர அரசு வழக்குரைஞரின் உத்தரவின் பேரில் அமெரிக்க மத்திய அரசின் தேசீய போலீஸ் படை கைது செய்து, விலங்கிட்டு, ஆடை அவிழ்ந்த்தும், அந்தரங்க உறுப்புகளை சோதனை செய்தும், டி என் ஏ மாதிரி எடுத்தும் சிறை வைத்து ஜாமீனில் வெளியே விட்டுள்ளது. இதை இந்தியா கடுமையாக எதிர்த்து எதிர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

devyani-khobragadeஇதில் நமக்குத் தெரிந்து பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையிலேயே நாம் கருத்து தெரிவித்து வருகிறோம். நமக்கு எட்டாத பின்ணணிச் செய்திகள் நமக்கு என்றுமே தெரிய வரப் போவதில்லை. அந்தப் பணிப் பெண்ணை இந்த அதிகாரி எப்படித் தேர்ந்தெடுத்து அழைத்துச் சென்றார்? அந்தப் பணிப் பெண்ணின் கணவரரும் குழந்தைகளும் சரியாக அதிகாரி கைது செய்யப் படுவதற்கு ஒரு நாள் முன்பாக ஏற்கனவே அமெரிக்காவுக்கு எப்படிச் சென்று சேர்ந்தார்கள்? எப்படி அவர்களுக்கு விசா அளிக்கப் பட்டது? யார் கொடுத்தார்கள்? ஜூலை மாதம் ரத்து செய்யப் பட்ட பாஸ்போர்ட் மூலமாக அந்தப் பெண் எப்படி அமெரிக்கா செல்ல முடிந்தது? தூதரக அதிகாரியின் அமெரிக்க வீட்டில் என்ன நடந்தது? அந்தப் பணிப்பெண் எப்படி நடத்தப் பட்டார்? அந்தப் பணிப் பெண் தானாகவே முன் வந்து இப்படி ஒரு புகாரை அளித்தாரா? அல்லது அவரை யாரும் பின்னால் இருந்து இயக்குகிறார்களா? அவரும் அவர் குடும்பமும் இப்பொழுது எங்கு இருக்கிறார்கள்? யாரால் பாதுகாக்கப் படுகிறார்கள்? அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறைக்கு அந்தப் பெண்மணியின் மீது ஏன் இவ்வளவு அக்கறை? அவருக்கும் அவர் க்டும்பத்துக்கும் அமெரிக்க அரசு சாட்சி பாதுகாப்பு அளித்துள்ளதா? இந்த தூதரக அதிகாரிக்கு வேறு ஏதாவது பின்புலம் உள்ளதா? இந்தத் தூதரக அதிகாரி இதற்கும் முன் அல்லது இப்பொழுதும் இந்திய ஈரான் உறவுகளில் வேலை பார்த்து வருகிறாரா? அவரது உண்மையான வேலைகள் என்ன? அமெரிக்க அரசாங்கம் இந்தியாவை வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக வற்புறுத்தும் ஒரு கருவியாக, இந்தியாவின் கைகளை முறுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைதை பயன் படுத்தியுள்ளதா? அல்லது வேறு நாடுகள் அந்தப் பணிப்பெண்ணை வைத்து இந்தக் கைதைத் தூண்டியுள்ளதா? இந்த அதிகாரி கண்காணிக்கப் பட்டாரா? அதற்கு அந்த வேலைக்காரப் பெண் உதவினாரா? யாரால் கண்காணிக்கப் பட்டார் ? ஏன் கண்காணிக்கப் பட்டார்? இது இந்த அதிகாரி மீதான தனிப்பட்ட தாக்குதல் மட்டுமா அல்லது இந்தியாவுக்கு விடப் படும் எச்சரிக்கையா? இந்தக் கைதின் மூலமாக வேறு ஏதும் ராஜாந்திர பரிமாற்றங்கள் ரகசியமான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கின்றதா? அல்லது இந்தக் கைதும் அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே இரு நாடுகளும் திட்டமிட்டுப் போடும் ஏதேனும் நாடகமா? கைது செய்ய உத்தரவிட்ட இந்த வழக்கை கையாளும் நியூயார்க் நகர அட்டர்ணி ஒரு இந்திய அமெரிக்கர், பஞ்சாபி அவருக்கு இந்தியாவின் மீதும் இந்தியர்கள் மீதும் இயல்பாகவே ஏதேனும் வெறுப்பு உள்ளதா? இந்தியாவை வெறுக்கும் பஞ்சாபி பயங்கரவாத அமைப்பினர்களுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? அல்லது தனது இந்தியத்தன்மையை மறைத்து அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக இதைப் போன்ற கைதுகளை நடத்துகிறாரா? போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் எழுகின்றன.

நமக்கு எந்தவொரு கேள்விக்குமே பதில் கிடைக்கப் போவதில்லை. ஆகவே மேலோட்டமான பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பிரச்சினையை நாம் அணுக முடியும்.

இரு பக்கமும் நியாயங்கள் பேசப் படுகின்றன. அமெரிக்காவில் சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். குற்றம் சாட்டப் பட்டு விட்டால் எவரையுமே இப்படித்தான் விலங்கு மாட்டிக் கைது செய்து அழைத்துச் செல்வார்கள். இப்படித்தான் அந்தரங்க உறுப்புகளை சோதனை செய்வார்கள். இப்படித்தான் போலீஸ் ஸ்டேஷனில் பிற குற்றவாளிகளுடன் அமர்த்துவார்கள். இப்படித்தான் உடல் வருடி சோதனை செய்வார்கள். ஆகவே குற்றவாளியாகக் கருதப் படும் இவருக்கும் எந்தவிதமான விதி விலக்கும் தேவையில்லை. இந்தியாவில்தான் அதிகாரிகளுக்கும் செல்வாக்கானவர்களுக்கும் விலக்குகள் உண்டு இந்தியாவில்தான் சட்டத்தை விலைக்கு வாங்கி விட முடியும். அமெரிக்காவில் அனைவரும் சமம், இத்யாதி, இத்யாதிகள் என்பது ஒரு தரப்பு.

இந்த தூதரக அதிகாரி ஆணவம் மிக்கவர். தனக்குக் கீழே வேலை பார்க்கும் பணியாளர்களின் கன்னத்தில் அறைவார். இவரது தந்தை இந்தியாவின் பெரும் ஊழல்களின் ஒன்றான ஆதர்ஷ் ஊழலின் மூலமாக இவர் பெயரில் வீடு பெற்றிருக்கிறார். ஆகவே இவரும் ஒரு ஊழல்வாதி. இவர் கோட்டாவில் இந்தப் பதவியை அடைந்திருக்கிறார். காங்கிரஸ் அரசாங்கத்துக்கு வேண்டப் பட்டவர் என்பதினால் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டிருக்கிறார். இவர் கார்கில் போர் விதவைகளுக்காக வழங்கப் பட்ட வீடுகளை அபகரித்து விற்று பெரும் லாபம் பார்த்தவர். ஆணவம் மிக்கவர். இவர் அந்தப் பணிப்பெண்ணை கேவலமாக நடத்தியிருக்கிறார், குறைந்த சம்பளம் கொடுத்திருக்கிறார் ஆகவே அமெரிக்காவின் கடுமையான கூலிச் சட்டத்தின் படி அவரை கைது செய்தது சரிதான் என்பதும் ஒரு தரப்பு

அவர் தவறு ஏதும் செய்யவேயில்லை என்பதில் இருந்து அப்படியே தவறு செய்திருந்தாலும் அவரை இந்த அளவுக்கு ஒரு பயங்கரவாதியை நடத்துவது போல நடத்தியிருக்கத் தேவையில்லை. இந்திய தூதரக அதிகாரி என்ற குறைந்த பட்ச மரியாதையாவது அளித்து அழைத்து விசாரணை செய்திருக்கலாம். இது திட்டமிட்ட அவமரியாதை. இந்தியாவின் மீதான இளக்காரத்தின் வெளிப்பாடு. இந்தியாவை அமெரிக்கா ஒரு பொருட்டாகவே மதிக்காததன் ஆணவத்தின் உச்சம் இந்த நடவடிக்கை என்பது மற்றொரு தரப்பு.

இந்த இந்திய தூதரக அதிகாரியின் கைதானது முதல் முறை நடப்பதல்ல. இதற்கு முன்பாக சென்ற வருடம் இதே தூதரக அலுவலகத்தின் ஒரு அதிகாரியின் பள்ளிக்குச் செல்லும் பெண் பொய்யான ஒரு குற்றசாட்டின் பெயரில் கைது செய்யப் பட்டு, விலங்கு மாட்டப் பட்டு, ஸ்டேஷனில் வைக்கப் பட்டார். அந்தப் பெண் எந்தவொரு தவறும் செய்யவில்லை. ஆசிரியருக்கு மிரட்டல் மெயில் அனுப்பியது வேறொரு சீனப் பையன் என்ற உண்மை தெரிந்ததும் ஒரு மன்னிப்புடன் அனுப்பி வைத்து விட்டார்கள். இந்திய அதிகாரிகளின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவேயில்லை. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பல முறை விமான நிலையங்களில் உடல் பரிசோதனை செய்யப் பட்டுள்ளார். இந்தியாவின் பல மந்திரிகளும் இந்தப் பரிசோதனைக்கு உள்ளாகிறார்கள். சோனியா, மன்மோகன், சோனியா குடும்பத்தார் இன்னும் சில ப்ரோட்டோக்கால் ஆட்கள் தவிர அனைவருமே இந்தச் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். இவற்றில் பல சோதனைகளும் கைதுகளும் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குத் தெரிந்தே அவர்களின் அனுமதியுடனே நடப்பதாக நம்ப முகாந்திரங்கள் உள்ளன. ஏன்? ஏன் ஒரு நட்பு நாட்டுடன் இத்தகைய மோதல் போக்கை அமெரிக்கா கையாள வேண்டும்? அதற்கான பதிலைத் தேடினால் அது தனியான ஒரு கட்டுரையாகி விடும். இப்பொழுதைக்கு ஆம் அப்படி தொடர்ந்து அவமரியாதைகள் இந்தியா தொடர்பாக நடக்கின்றன. இன்னும் பல நாடுகளும் இதே போன்று நடத்தப் படலாம். ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையுள்ள ஒரு மாபெரும் ஜனநாயக நாடு உலகத்தின் சக்தி வாய்ந்த மாபெரும் ஜனநாயக நாட்டினால் ஏன் இப்படி நடத்தப் படுகிறது?

அமெரிக்காவில் பணியாளர் சட்டங்களும் அவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியச் சட்டங்களும் கடுமையாக அமுலில் இருப்பது உண்மைதான். ஆனால் அதை மீறி குறைந்த பட்ச சம்பளம் அளிப்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்திய தூதரக அதிகாரிகள் போலவே இன்னும் பல நாட்டு அதிகாரிகளும் இதே மாதிரியான குறைந்த பட்ச சம்பளத்தை அளித்து வேலையாட்களை வைத்திருப்பது இருக்கத்தான் செய்யும். தூதரக அதிகாரிகள் மட்டும் அல்லாமல் சிறு கடைகள், ஹோட்டல்கள் வைத்திருப்பவர்கள், தோட்ட முதலாளிகள், ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பவர்கள் என்று ஏராளமான தொழில்களில் ஏராளமான தொழிலாளர்கள் மோசமான பணிச் சூழலிலும் விதிக்கப் பட்டுள்ள சம்பளத்தை விடக் குறைவான சம்பளமும் அமர்த்தப் படுவது அமெரிக்கா முழுவதும் நடந்து வருவதுதான். ஏன் கொத்தடிமைகள் கூட ஒரு சில இடங்களில் இருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள். பாலியல் அடிமைகள் உண்டு. இருந்தாலும் எவரும் புகார் கொடுத்தால் ஒழிய அல்லது உறுதியான ஆதாரங்கள் கிட்டினால் ஒழிய அமெரிக்க போலீஸ் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த விஷயத்தில் அந்தப் பணிப் பெண் புகார் சொல்லாமல் போயிருந்தால் அந்த அதிகாரி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் பட்டிருக்காது. ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இண்ட்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்டின் தலைவரையே பாலியல் குற்றசாட்டில் இதே போன்று அமெரிக்கா கைது செய்துள்ளது. அமெரிக்காவில் சட்ட ஒழுங்கு கறராகப் பேணப் படுவது எல்லாம் உண்மைதான்.

ஆனால், இருந்தாலும் சில விதிவிலக்குகளை அமெரிக்கா பின்பற்றாமலும் இல்லை. உதாரணமாக அதே அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் சட்ட விரோதமாக அமெரிக்க மருத்துவ வசதிகளைப் பயன் படுத்தி ஏராளமான இழப்பை ஏற்படுத்துகிறார்கள் அது கிரிமினல் குற்றம் என்று குற்றம் சாட்டும் அதே அட்டர்னி அந்த ரஷ்ய தூதரக அதிகாரிகளைக் கைது செய்ய துணியவில்லை. ஆனால் இந்திய அதிகாரி என்று வரும் பொழுது உடனடியாக கைது செய்ததோடும் அல்லாமல் விலங்கிட்டு பரிசோதனைகளையும் செய்ய முடிகிறது. இதே குற்றசாட்டு ஒரு சவூதி அரேபிய தூதுவர் மீது சாட்டப் பட்டிருந்தாலோ ஒரு சீனத் தூதுவர் மீது சுமத்தப் பட்டிருந்தாலோ அதை அமெரிக்க வெளியுறவுத் துறை இந்த அளவுக்கு அலட்சியமாக இல்லாமல் வேறு விதமாகக் கையாண்டிருந்திருக்கும். ஆக நாட்டைப் பொருத்து சம்பந்தப் பட்டவர்களைக் கையாளும் விதம் மாறு படும். இன்று இந்த அதிகாரி துணைத் தூதரகத்தில் பணி புரிவதினால் அவருக்கு வியன்னா ஒப்பந்தப் படி விதிவிலக்கு கிடையாது என்று சொல்லும் அதே அமெரிக்கா பாக்கிஸ்தானில் அதன் குடிமக்கள் இருவரைக் கொன்ற அமெரிக்க தூதரக ஊழியரான ரேமேண்ட் ஜேம்ஸ் என்பவருக்கு இதே வியன்னா ஒப்பந்தத்தைச் சுட்டிக் காட்டி விடுதலையைப் பெற்றது அமெரிக்கா. அவர் பாக்கிஸ்தானில் இரண்டு பாக்கிஸ்தானிகளைக் கொன்றிருக்கிறார். அவர் தூதரகத்தில் வேலை பார்க்கும் சாதாரண ஒப்பந்த ஊழியர் மட்டுமே. இருந்தாலும்தன் அமெரிக்கா தன் நாட்டு தூதரக அதிகாரிகள் வேறு நாடுகளில் கொலையே செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வற்புறுத்தி விடுதலையைக் கோரி அவர்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது. கென்யாவில் ஒரு அமெரிக்க தூதரக பணியாளர் அந்நாட்டில் ஒரு பஸ் மீது தன் காரை மோதி பலரைக் கொன்ற பின்னாலும் மறு நாளே அவரை அங்கிருந்து அமெரிக்காவினால் பத்திரமாக மீட்டுக் கொண்டு வர முடிகிறது. அதே அமெரிக்கா ஒரு சிறிய வகைக் குற்றத்திற்காக ஒரு இந்திய நாட்டு அதிகாரியைக் கைது செய்து சிறையில் அடைக்கத் தயங்குவதில்லை.. ஆக தன் நாட்டுக்கு ஒரு சட்டமும் பிற நாட்டினருக்கு இன்னொரு அளவுகோலும் மேற்கொள்ளும் இரட்டை நிலையை அமெரிக்கா எடுத்து வருகிறது என்பது உறுதியாகிறது.

ஆக இங்கு சுட்டிக் காட்டப் பட வேண்டியது தூதரக அதிகாரி குற்றமற்றவர் என்பது கிடையாது. அப்படி அவர் குற்றம் செய்திருக்கும் பட்சத்தில் அவரை இந்திய அரசின் ஒரு முகமாகக் கருதி வேறு விதமாக அமெரிக்கா கையாண்டிருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் திட்டமிட்டு அவமானம் செய்ததுல் உள்நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. அமெரிக்கா தன் நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் வெளி நாட்டில் அல்லது இந்தியாவில் இதே குற்றத்திற்காக அல்லது இதை விட பயங்கரமான கொலைக் குற்றத்துக்காக அந்த அதிகாரியை எப்படி அந்த நாடு அலல்து இந்தியா கையாள வேண்டும் என்று விரும்புமோ அதே உரிமையை சலுகையை இந்திய நாட்டின் அதிகாரிக்கும் அளிக்க வேண்டும். மாறாக தன் நாட்டுக்கு ஒரு விருப்பம்., ஒரு உரிமை, ஒரு சலுகை, ஒரு சட்டம் இந்திய அதிகாரிக்கு வேறு சட்டம் வேறு ஒப்பந்தம் வேறு உரிமை என்று சொல்லுமானால் அந்த இரட்டை வேடத்தை மட்டுமே இந்தியாவும் மக்களும் கடுமையாகக் கண்டிக்க முடியும். அந்த ஒரு அடிப்படையில் மட்டுமே இந்தியத் துணைத் தூதர் மீதான வேறு விதமான நடவடிக்கைகளைக் கோர முடியும். இந்த இரட்டை வேடத்தைச் சுட்டிக் காட்டுவதே இந்தியா செய்யக் கூடியதாக இருக்கும்.

*********

இந்த சம்பவம் பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி அதற்கான தீர்வுகளை நோக்கிச் செல்லும் ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொள்ளப் பட வேண்டும். முதலில் இந்திய அரசு தனக்கும் தன் மக்களுக்கும் பிற நாடுகள் மூலமாக நேரும் அவமரியாதைகளையும், அவமானங்களையும், தாக்குதல்களையும் கையாளும் விதம்.

KALAM_1இந்தியாவின் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பல முறை அமெரிக்கப் பயணங்களின் பொழுது சோதனைக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்க மண்ணில் வைத்து அல்ல டெல்லி விமான நிலையத்தில் கூட விமானத்தின் உள்ளே வைத்து அவரை சோதனை செய்திருக்கிறார்கள். இந்தியாவின் பாதுகாப்பு மந்திரி ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் உடல் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். அதே சமயம் எந்தவொரு அதிகாரத்திலும் இல்லாத சோனியாவின் மகன், மகள், மருமகனுக்கு மட்டும் எந்த நாட்டிலும் எந்தவிதமான பரிசோதனைகளுக்கும் உள்ளாக்கப் படாதவிதமான சிறப்பு அந்தஸ்து அளிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் போற்றுதல்குக்குரிய முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் அவர்களுக்கு அளிக்கப் படாத சிறப்புச் சலுகை ஒரு சாதாரண ராபர்ட் வடோராவுக்கு எப்படி அளிக்கப் படுகிறது? ஒரு சாதாரண எம் பி யான ராகுலுக்கு எந்த அடிப்படையில் வழங்கப் பட்டது? எந்த அடிப்படையில் ஒரு சாதரண எம் பி யான சோனியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப் படுகிறது? ஒரே விமானத்தில் முன்னாள் ஜனாதிபதியும் சோனியாவும் அமெரிக்காவுக்குச் சென்றால் சோனியா க்ரீன் சேனல் வழியாக சகல விதமான ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்தின் வழியாகவும் அப்துல் கலாம் உடல் சோதனைகள் செய்யப் பட்டு சாதாரண வழியாகவும் அழைத்துச் செல்லப் படுமாறான சிறப்பு அந்தஸ்து இந்தியாவில் எதன் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ளது?

தமிழ் நாட்டு மீனவர்கள் தினம் தினம் கடல் எல்லையைத் தாண்டிச் சென்று விடும் நேரங்களில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் படுகிறார்கள். அவர்களை விடுவிக்க இந்திய அரசு எந்தவிதமான முனைப்பான நடவடிக்கையையும் இன்று வரை எடுத்ததில்லை. தினம் தோறும் எல்லையில் ராணுவ வீரர்கள் பாக்கிஸ்தான் ராணுவத்தினால் கொல்லப் படுகிறார்கள். பங்களாதேஷ் ராணுவத்தினரால் கண்கள் தோண்டப் படுகிறார்கள். இதையெல்லாம் இன்று வரை உறுதியாகக் கேள்வி கேட்டு பதில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பு இல்லை. குட்டித் தீவான மாலத் தீவு கூட இந்தியாவை எளிதாக அவமானப் படுத்தி விட முடிகிறது. தினந்தோறும் சீனப் படையினர் இந்தியாவின் உள்ளே ஆக்ரமிப்பு செய்கிறார்கள். இந்தியர்களுக்கு தனி விசா வழங்குகிறார்கள். பாக்கிஸ்தானின் ஐ எஸ் ஐ அமைப்பு இந்தியாவுக்குள் எந்த நேரத்திலும் குண்டுகள் வெடிக்க வைக்க முடிகிறது. பல ஆயிரம் கோடி கள்ள நோட்டுக்களை அனுப்பி இந்தியாவின் பொருளாதாரத்தை குலைக்க முடிகிறது. டென்மார்க்கில் இந்திய தம்பதியினரிடம் இருந்து அவர்கள் குழந்தையினைப் பிரித்து தனியாக வைத்துக் கொள்ள முடிகிறது. கொலைக் குற்றம் சாட்டப் பட்ட இத்தாலி மாலுமிகள் அதன் தூதரகத்தில் தங்க அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். எந்தவொரு நாடும் இந்தியாவை ஏளனமாகவே கருதி நடத்தி வருகிறது. தினம் தோறும் லட்சக்கணக்கான இந்தியர்கள் இஸ்லாமிய நாடுகளில் கடும் சித்திரவதைகளை அனுபவித்து வருகிறார்கள். ஆனால் இன்று வரை எந்தவொரு பிரச்சினையிலும் இந்தியா உறுதியாக தனது நிலையை வெளிப்படுத்தி ஒரு பெரிய தேசமாக தன்னை நிறுவிக் கொண்டதே கிடையாது.

ஆக இப்படி அமெரிக்கா துவங்கி மாலத் தீவு வரை இந்தியா எந்தவொரு நாட்டிலும் மதிக்கப் படுவதில்லை. அவமானப் படுத்தப் படுகிறார்கள். தாக்கப் படுகிறார்கள். ஏன்? ஏன் இந்த அவல நிலை? இதற்கு யார் காரணம்? ஊழலில் ஊறிய அரசியல்வாதிகள், இயங்காத நீதி அமைப்புகள், தன்மானம் சுயமரியாதை இல்லாத ஆட்சியாளர்கள், அதிகாரிகள், சட்டத்தை மதிக்காத கலாசாரம், உறுதியற்ற நிலைப்பாடு, கோழைத்தனம், துணிவின்மை, வெளி நாடுகளுக்குச் செல்லும் பொழுது அந்த நாட்டுச் சட்டங்களை மதிக்காத தன்மை, இவை அனைத்தையும் விட நூறு கோடி மக்கள் தொகையுள்ள இந்திய தன்னை ஆள்வதற்காக இத்தாலியில் இருந்து எந்தவொரு தகுதியும் இல்லாத ஒரு குற்றவாளியை தன் நாட்டை ஆள்வதற்கு அனுமதித்திருக்கும் மக்கள் இவையே இந்தியாவை இன்று உலக அளவில் ஒரு கேவலமான நாடாக, ஏளனத்துக்கு உள்ளாக்கப் படும் ஒரு வாழைப் பழக் குடியரசாக இன்று வைத்துள்ளது. இந்தியாவில் ஒரு ஊழல் சோனியாவுக்கு ஒரு சட்டம் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்களுக்கு இன்னொரு அந்தஸ்து என்று நடத்தப் பட்டால் அமெரிக்கா அந்த நாட்டை எவ்வாறு மதிக்கும்? எவ்வாறு நடத்தும்?

இந்தியாவில் ஊழல்கள் இருக்கலாம், இந்தியா சுய மரியாதையை இழந்து சோனியாவை தலைவராக வைத்துக் கொள்ளலாம், இந்தியா ஊழல்களின் முதல் தேசமாக இருக்கலாம், இந்தியாவில் சட்டங்கள் இல்லாமல் போகலாம், திறமைக்கு மதிப்பு இல்லாமல் இருக்கலாம் இருந்தாலும் ஆயிரம் இருந்தாலும் இன்னொரு நாடு இந்தியாவை அவமானப் படுத்த இந்தியா அனுமதிக்கக் கூடாது என்பதாகவே அனைவரின் எண்ணமுமாக உள்ளது. இங்கு இப்படி கைது செய்யப் பட்டு ஆடை அவிழ்ப்பு சோதனை அந்தரங்க சோதனை நடந்தது அமெரிக்காவில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான இந்தியர்களில் ஒருவராக இருந்திருந்தால் இவ்வளவு எதிர்ப்பும் கோபமும் இந்தியாவில் எழுந்திருக்காது. இங்கு கைது செய்யப் பட்டு விலங்கிடப் பட்டு ஆடைகள் அவிழ்க்கப் பட்டு டி என் ஏ பரிசோதனைக்கு உள்ளானவர் இந்திய அரசின் தூதரக அதிகாரி இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதிப் படுத்தும் ஒரு குறியீடு. ஆகவே அவருக்கு நேர்ந்த அசிங்கம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நேர்ந்த அசிங்கமாகவே கருதப் படும். இங்கு இந்தியாவின் பலவீனங்கள் குறித்தும் ஊழல்கள் குறித்தும் பேசுவதினால் இந்தியா என்னும் ஒரு மாபெரும் தேசத்திற்கு இருக்கும் சுய மரியாதையையும் கவுரவ்த்தையும் மறுத்து விட முடியாது. ஆம் இந்தியா ஊழல் மிகுந்த நாடுதான், ஏழ்மையான தேசம் தான், உரிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியாத ஜனநாயகம் தான் இருந்தாலும் அதற்கென்று ஒரு கவுரவம் உண்டு. அதை அமெரிக்காவும் தேவ்யானிக்கு நேர்ந்தது சரிதான் என்று வாதிடுபவர்களும் மறந்து விடக் கூடாது. இங்கு அவமரியாதை செய்யப் பட்டிருப்பது தேவயானி என்றவொரு தனி நபர் கிடையாது. இந்தியா என்னும் ஒட்டு மொத்த தேசமும் அவமானப் படுத்தப் பட்டதாகவே கருதப் படும்.

indo_us_tiesஒரு தூதரக அதிகாரி என்பவர் ஒரு தேசத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவர் கிரிமினல் குற்றமே செய்திருந்தாலும் அதை அமெரிக்கா வேறு விதமாக கையாண்டிருக்க வேண்டும். அவரை விசாரணைக்கு அழைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்லி அவருக்கு அபராதம் விதித்திருக்கலாம் அல்லது தன் நாட்டுச் சட்டத்தை மீறிய அவரை நாடு கடத்தியிருக்கலாம். அவர் கொலைக்குற்றவாளியோ, போதை மருந்து கடத்துபவரோ பயங்கரவாதியோ கிடையாது. அந்த அளவுக்கு மோசமாக அவரை நடத்தியிருப்பது திட்டமிடப் பட்டு இந்தியாவை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே செய்யப் பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. தேவ்யானியின் பணிப் பெண்ணின் கணவனும் குழந்தைகளும் அமெரிக்காவுக்கு அழைத்து வரப் பட்டுள்ளனர். அவர்களைப் பத்திரமாக அமெரிக்காவில் கொண்டு வந்த பின்னரே தேவயானி கைது செய்யப் பட்டுள்ளார். ஆகவே இது திட்டமிடப் பட்ட ஒரு தாக்குதலாகவே தெரிகிறது. அமெரிக்காவில் பணிப்பெண்ணாக இருக்கும் ஒருவருடைய ஏழ்மையான குடும்பத்துக்கு, மெசாம்பிக்கின் டெல்லி தூதரகத்தில் டிரைவராக பணிபுரியும் அவரது கணவருக்கும் குடும்பத்துக்கும் அவ்வளவு எளிதாக அமெரிக்காவின் விசா கிடைத்திருக்காது. அவர்களுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் அளிக்க திட்டமிட்டு அவர்களைப் பாதுகாக்க முடிவு செய்த பின்னர்தான் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பது இப்பொழுது தெளிவாகிறது. சங்கீதா ரிச்சர்டின் கணவன் மற்றும் குழந்தைகள் எப்படி இந்தியாவில் இருந்து வெளியேற அனுமதிக்கப் பட்டார்கள் என்பதை இந்தியாவின் உளவுத் துறைதான் விளக்க முடியும்.

இவை போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவின் மீது எந்தவிதமான எதிர்ப்புணர்வும் இல்லாமல் வாழும் பெரும்பாலான இந்திய மக்கள் மத்தியில் கடும் கசப்புணர்வையும் வெறுப்பையுமே வளர்க்கும். அநாவசியமாக அமெரிக்கா இந்தியா போன்ற ஒரு பெரும் தேசத்தின் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டுள்ளது. இதை நிச்சயமாக இந்திய மக்கள் ஒபாமா போன்ற ஒரு தலைவரிடம் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்கா இன்று உலகத்தின் மாபெரும் மக்கள் தொகையை தனது முட்டாள்த்தனமான ஒரு காரியத்தின் மூலமாக ஒரே நாளில் தனது வெறுப்பாளர்களாக மாற்றியுள்ளது.

ஆனால் தன் மரியாதையை இந்தியா நிறுவிக் கொள்ளாமல் வேறு நாடுகளிடம் இருந்து மரியாதையை எதிர்பார்க்க முடியாது. சுயமரியாதை இல்லாத தனி மனிதனை பிறர் மதிக்கப் போவதில்லை அது போலவே சுயமரியாதையில்லாத ஒரு தேசத்தை பிற தேசங்கள் மதிக்காது என்பதே கசப்பான உண்மை. இதை நாம் இந்தத் தருணத்திலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்

இன்று வரை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்காத சலுகைகளையெல்லாம் இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கி வந்துள்ளது. இன்று தீடீரென்று விழித்துக் கொள்ள என்ன காரணம்? அப்துல் கலாம் அவமரியாதை செய்யப் பட்ட பொழுதும், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட பொழுதும், மீனவர்கள் கைது செய்யப் பட்ட பொழுதும் விழிக்காத இந்தியா இப்பொழுது தீடீரென்று தர்மாவேசம் கொண்டு சாமி ஆடுவதின் காரணம் என்ன? சோழியன் குடுமி ஏன் ஆடுகிறது? ஏன் என்றால் அங்கே மோடி என்ற ஒரு அசைக்க முடியாத சக்தி நாளைய உறுதியான இந்தியாவை உருவாக்கக் கூடிய சக்தி, உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவுக்கு பெரும் மரியாதையைப் பெற்றுத் தரப் போகும் சக்தி இன்று இந்தியாவில் உருவெடுத்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மோடி கேள்வி கேப்பாரே அவருக்கு பெயர் போய் விடுமே என்ற அச்சத்தில் தேர்தல் கால ஜூரத்தினால் மட்டுமே இன்று இந்தியா எடுத்துள்ள குறைந்த பட்ச நடவடிக்கைகளைக் கூட எடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் அப்துல் கலாம் அவர்களையும், கண் தோண்டப் பட்ட ராணுவ வீரர்களையும் தமிழக மீனவர்களையும் கை கழுவியது போலவே இந்த தேவயாணி கோர்ப்பகடேவையும் இந்திய அரசாங்கம் கை கழுவி விட்டிருக்கும். வரவிருக்கும் தேர்தல் பயமும் மோடி குறித்தான அச்சமும் மட்டுமே இன்று இந்தியாவுக்கு ஒரு பலவீனமான முதுகெலும்பையாவது அளித்திருக்கிறது. மோடியின் எழுச்சி மட்டுமே இது நாள் வரை அவமானங்களைக் கண்டு கொள்ளாத இந்திய அரசாங்கத்தினை விழித்துக் கொள்ள வைத்து லேசாக ஒரு முனகலையாவது எழுப்ப வைத்துள்ளது.

(தொடரும்)

அடுத்த பகுதி

17 Replies to “தேவையா நீ பணிப் பெண்ணே? – 1”

  1. சாதாரண சாமானியன் ஒரு IT project பன்ண போகும்போது இப்படி ஏதும் இல்லயே அங்கு. அது ஏன்? லாலுவுக்கு இங்கு காலை கழுவி விடுவது போல எல்லா அதிகார வர்க்கமும், எங்கும் இருக்க வேண்டும் என்றால் இப்படிதான். இவர்கள் அங்கு அவமானப்படுவதால் இங்கு ஒன்றும் குடி மொழுகி போவது இல்லை.

  2. கை விலங்கு இடப்படவில்லை என்று இன்று ஒரு சைய்தி. சோனியாவிற்கு அங்கு நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால் , இங்கு ஊதி பெரிதாக்கப்படுகின்றதா?

  3. அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சிக்கும் , இன்றைய தேதியில் அமெரிக்காவின் முதல் விரோதியான ஈரான் அதிபர் அஹமத்நிஜாத் கூட அமெரிக்காவிற்கு வந்து கொலம்பிய பலகலைக்கழகத்தில் உரையாற்ற முடிகிறது……மக்களால் மூன்று முறை தொடர்ந்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.நரேந்திர மோதி அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது…… அதை காங்கிரசும் இன்று வரை தட்டிக்கேட்டதில்லை……நாளை மோதி அவர்கள் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்போது அமெரிக்கா என்ன செய்யுமாம் ?

  4. மற்றபடி இந்த தூதரக அதிகாரிகளுக்கெல்லாம் நாம் பெரிதாக வருத்தப்பட வேண்டியதில்லை…… அயல் நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு அவதியுறும் இந்தியர்களுக்காக இந்த தூதரகங்கள் துருமபைக்கூட கிள்ளிப்போடுவதில்லை…… எல்லாம் தண்ட சோறுகள்……..
    அதிலும் இந்த அமமையார் குடும்பம் பல்வேறு பிராடுகளுக்கு பேர்போனது……

  5. //இவர் கோட்டாவில் இந்தப் பதவியை அடைந்திருக்கிறார்.//
    Reveals who are in Tamil Hindu..the threads..

  6. சான்றோன்

    நாம் அந்த தூதரக அதிகாரிக்காக கவலைப் படத் தேவையில்லை ஆனால் இந்தியாவின் பலவீனமான கோழைத்தனமான நிலை குறித்து அவசியம் கவலைப் பட்டே ஆக வேண்டும். அதற்கு இந்த சம்பவம் துணையாக இருக்கட்டும் என்பதற்காகவே நான் மாங்கு மாங்கு என்று இதை எழுதியுள்ளேன். இது ஏதோ அமெரிக்காவில் ஏதோ ஒரு திமிர் பிடித்த ஐ எஃப் எஸ் அதிகாரிக்கு நடப்பதல்ல இந்தியாவின் பலவீனமான தலமையினால் இந்தியர்கள் அனைவரையும் பாதிக்கும் ஒரு நிகழ்வு. அந்த நிலை மாற வேண்டும் என்றால் பலவீனமான ஊழல் காங்கிரஸ் அகற்றப் பட்டு துணிவான உறுதியான மோடியின் தலைமையிலான அரசாங்கம் உருவாக வேண்டும். அதைச் சொல்வதற்காகவும் அதை மக்களிடம் உணர்த்துவதற்காகவுமே இவ்வளவு நீண்ட கட்டுரை தேவைப் பட்டது.

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் முதல்வர் மோடிக்கு அமெரிக்க அரசு விசா மறுத்த பொழுது இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று அன்றே இந்தியா கடுமையாக எச்சரித்திருக்குமானால் இன்று இந்த அவமானம் நேர்ந்திருக்காது அல்லவா? இந்தியாவில் மக்களால் நான்கு முறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு முதல்வருக்கு அமெரிக்கா விசா அனுமதிக்கக் கூடாது என்று இந்தியாவின் காங்கிரஸ், கம்னியுஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கு பெட்டிஷன் போட்டு கெஞ்சிய பொழுது ஏற்படாத அவமானமா இப்பொழுது இந்த தேவயானி கைதில் ஏற்பட்டு விட்டது? ஆக அமெரிக்காவும் இந்தியாவை அவமானப் படுத்தும் உரிமையை அளித்தது இதே கேடுகெட்ட காங்கிரஸ், கம்னியுச தேசத் துரோகக் கட்சிகள்தானே? இந்திய ரா உளவுத் துறையின் அதிகாரியான ரபீந்தர் சிங்கிற்கு அமெரிக்காவில் கள்ளத்தனமாக குடியுரிமை வழங்கப் பட்ட பொழுதே இந்தியா கடுமையாக ஆட்சேபித்திருந்து அவரது நாடு கடத்தலைக் கோரியிருந்தால் இந்த அவமானம் இன்று ஏற்பட்டிருக்காதே? மும்பையில் குண்டுகள் வைக்கத் திட்ட மிட்ட டேவிட் ஹாட்லி என்ற பயங்கரவாதியை விசாரணை செய்யக் கூட அமெரிக்கா மறுத்த பொழுதேயல்லவா இந்தியா தன் உரிமையை நிலை நாட்டியிருக்க வேண்டும். ஆக இத்தனை சம்பவங்களிலும் இத்தனை வருடங்கள் அமெரிக்காவுக்கு ஒரு அடிமை போல நடந்து கொண்டதினால்தானே இன்று இந்தியாவின் தூதரக அதிகாரியை கைது செய்யும் துணிவை அமெரிக்கா பெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவை அவமானம் செய்யும் உரிமையை அளித்தது இந்தியாவின் கேடு கெட்ட காங்கிரஸ் கட்சிதானே? இந்தியாவின் தேச நலன் பாதிக்கப் படும் பொழுதெல்லாம் இந்தியா க்டுமையாக தன் ஆட்சேபத்தைப் பதிவு செய்திருந்து தன் கோபத்தைக் காட்டியிருந்து தனக்கும் முதுகெலும்பு உண்டு என்று நிரூபித்திருக்குமானால் அமெர்க்கா இதைச் செய்ய தயக்கம் காட்டியிருக்கும் அல்லவா? இதை விட பெரிய குற்றமான அமெரிக்க மருத்துவ வசதிகளை முறைகேடாகப் பெற்ற ரஷ்ய தூதரக அதிகாரிகளை அதே நியூயார்க் அட்டர்னியால் கைது செய்ய முடியவில்லையே ஏன்? ரஷ்யா மீதான தயக்கம், பயம், மரியாதை ஏன் இந்தியா மீது இல்லாமல் போனது? அதற்கு யார் காரணம்? ஆக இந்தியாவை கிள்ளுக் கீரையாக அமெரிக்கா முதல் மாலத் தீவு வரை நினைக்க அனுமதி அளித்த குற்றம் பலவீனமான இந்திய அரசாங்கத்தையும் அதன் பலவீனமான காங்கிரஸ் தலமையையும் அதைத் தேர்ந்தெடுத்த மக்களையுமே சாரும். இன்று இந்தியா உலக அரங்கில் அவமானப் பட்டு நிற்கிறது என்றால் அதன் முழுப் பொறுப்பும் பலவீனமான, ஊழல் மலிந்த ஒரு கட்சியை ஆட்சிக்குக் கொணர்ந்த மக்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

  7. it is the right time to restore the russian relationship so that we can teach america a lesson

  8. வாய்சொல் வீர நம் அரசு கடைசி வரை போராடாது பெரிய தலைவகள் அவமானபட்டார்கள் என்ன நடந்தது

  9. ச.திருமலை
    கடுமையான சட்டம் என்று வாய்கிழிய பேசும் சிங்கப்பூரே அமெரிக்கன் மாட்டியப்போது மண்டியிட்டு அவனை அனுப்பியது. இன்று நம் தூதரகம் என் கூவவில்லை? நேர்ரு கர்ஜித்த நமது கனி , நம் மக்களை பற்ரி மூட்சு விடவில்லை. ஏன்?

    ஆனால் நீங்கள் சொல்லவது ஒருவித உண்மை. பலவீன அல்லது பலமான ஒன்று பின்புலம் இருக்கின்றது. வாஜ்பாயி போது பிரமோத் மஹாஜன் மிரட்டலுக்கு இந்தோனிசிய பணியவில்லயா?

  10. அய்யா ரெட்டைமலை அவர்களே,

    பல வருடங்களுக்கு முன்னர் 1985-ஆண்டு என்று நினைக்கிறேன். டெல்லியில் வேலை பார்த்துவந்த கும்பகோணத்துப் பார்ப்பான் ஒருவன் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி மாட்டிக்கொண்டான் என்பது எல்லா பேப்பரிலும் அடைமொழியுடன் அதாவது சாதி பெயருடன் தான் வந்தது. எல்லா சாதியிலும் நல்லோரும், தீயோரும் கலந்துதான் இருக்கின்றனர். எனவே இங்கு விவாதம் சாதிகளைப் பற்றி அல்ல. எனவே வேறு விஷயத்துக்கு மாற்றவேண்டாம். காவல் துறையினர் ஒரு பத்துபேரை கிரிமினல் வழக்குகளில் கைது செய்யும்போது, ஆந்திராவை சேர்ந்த தெலுங்கர்கள் நாலுபேர், கேரளாவை சேர்ந்த மலையாளிகள் மூணுபேர் என்று செய்தி சொல்லும்போது அந்த ஆந்திரக்காரர்களோ, அல்லது மலையாளிகளோ ஏனுங்க எங்கள் மொழி அல்லது, மாநிலத்தின் பெயரை போடுகிறீர்கள் என்று ஆட்சேபிக்க ஆரம்பித்தால் , செய்தியே போடமுடியாது, கற்பனை கதைகள் கூட எழுதமுடியாது. நாடகம் , இலக்கியம், நகைச்சுவை ஒன்றுமே இருக்காது.

  11. சிறப்பான கட்டுரை. பாராட்டுக்கள் திருமலை.

    இதில் மிக மிக முக்கியமானது உங்களுடைய கடைசி கேள்வி, திரு.கலாம் அவர்களுக்கோ ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கோ நடந்தபோது வாய்மூடி கோழைத்தனமாக இருந்துவிட்டு ஒரு தூதரக அதிகாரிக்காக இந்தியா இப்படி போங்கோ பொங்கு என்று பொங்குவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் ?

    அதுவும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கேவலப்படுத்திக்கொண்டு வரும் இலங்கைக்கு நடைபாவாடை விரிக்கும் மன்மோகன் சிங் அரசு ??? மோடியின் வளர்ச்சி மட்டும்தான் காரணம் என்று நம்ப சிரமமாக இருக்கிறது. நீங்கள் எழுப்பியுள்ள உறுதியான பல்வேறு கேள்விகளோடு இதுவும் எனக்கு உறுத்தலாகவே இருக்கிறது. திரைமறைவில் என்னவோ நடக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

    இது தொடர்பாக நம்மவர்களுக்கு அடிப்படையை புரிந்துகொண்டு விவாதிக்கவே தெரியவில்லை. தூதரக அதிகாரிகளுக்கு வியன்னா நெறிமுறைகள் அளிக்கும் விசேஷ சலுகைகள் உண்டு என்ற உண்மை புரியாமல் மாக்கான் தனமாக ‘இந்த நாட்டுல இருந்தா இந்த நாட்டு சட்டத்துக்கு கட்டுப்பட்டுத்தான் ஆகணும்’ என்று, என்னவோ தேவயாணி அமெரிக்க சட்டத்துக்கு எதிராக மட்டும்தான் நடப்பேன் என்று உறுதியோடு செயல்படுவதைப்போல அவரை கேவலமாக விமர்சித்தெல்லாம் உளறிக்கொட்டி இருந்தனர்.

    யாஹூ தளத்தில் இந்த செய்திக்கு வழக்கத்திற்கு மாறாக 25000-க்கும் மேலாக பின்னூட்டங்கள். இங்கும் அதே கதை, வியன்னா நெறிமுறைகள் பற்றி யாருக்கும் தெரியவில்லை போலிருக்கிறது.

    பெரும்பாலும் சாதாரண அமெரிக்க குடிமகன்கள் இந்தியாவை கேவலப்படுத்தி இட்டவை. ‘உங்கள் நாட்டில் பெண்ணாக இருப்பதே பெரும் அபாயம், ஏதோ எங்கள் தேசத்தில் இந்த அளவுக்காவது உங்கள் நாட்டு பெண்ணுக்கு மரியாதை கொடுக்கிறார்களே’ என்று டெல்லி கற்பழிப்பை மேற்கோள் காட்டி. அவமானமாகத்தான் இருந்தது.

    இரண்டு முறை கேட்டிருந்தேன். “இதே தவறை ஒரு அமெரிக்க பெண் தூதரக அதிகாரி இந்தியாவில் செய்திருந்தால், இந்தியா இதே போன்று அவரை நடத்தி இருந்தால் ஒப்புக்கொள்வீர்களா ?” நேர்மையாக எவனும் பதிலளிக்கவில்லை.

  12. ரெட்டைமலை

    நான் தமிழில் தானே எழுதியிருக்கிறேன். உங்களுக்கு எளிய தமிழைப் புரிந்து கொள்வதில் கூடப் பிரச்சினைகள் இருக்கும் போலிருக்கிறது. கோட்டாவில் வந்தவர் என்பது நான் சொல்வது அல்ல. அவரைப் பற்றி குற்றம் சொல்பவர்களின் தரப்பு அது என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். தேவயானியை தண்டிக்க வேண்டும் என்று சொல்பவர்களில் சிலர் இதையும் குறிப்பிடுகிறார்கள் என்று அதை ஒரு தரப்பாகச் சொல்லியிருக்கிறேனே அன்றி அதை கட்டுரையாளராகிய நான் சொல்லவில்லை ஐயா. உங்கள் வாசிப்பில் தவறு இருக்கிறது. என்னையும் தமிழ் ஹிந்துவையும் விமர்சிக்க வரும் முன்னால் கொஞ்சம் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படித்துப் புரிந்து கொள்ளும் அறிவையும் அடிப்படையான வாசிப்பறிவையும் வளர்த்துக் கொள்ளவும். மீண்டும் சொல்கிறேன் கோட்டாவில் வந்தவர் என்று ஒரு சிலர் அவரைச் சொல்லுகிறார்கள் என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன் அது என் தரப்பு அல்ல.

    ச.திருமலை

  13. பொன் முத்துக்குமார்

    நான் இதன் பின்புலத்தில் உள்ள நமக்குத் தெரியாத ரகசியங்களையெல்லாம் எனது முதல் கேள்விகளில் அடக்கியிருக்கிறேன். இப்பொழுது இந்தியா இப்படி வீறு கொண்டு எழுந்ததற்கு முக்கியமான காரணம் இது எலக்‌ஷன் நேரம் என்பதும் மோடியின் அச்சுறுத்தலும் மட்டுமே. இல்லாவிட்டால் பிற சமயங்களில் எத்தனையோ தூதுவர்களும் தலைவர்களும் அவமானப் படுத்தப் பட்ட பொழுது வாழாவிருந்தது போல இதிலும் இருந்திருப்பார்கள். மேலும் இதில் சில தவறுகள் தேவயானி பக்கமும் இந்தியா பக்கமும் இருப்பதினால் கமுக்கமாக அடக்கி வாசித்து முடிக்கவே விரும்பியிருப்பார்கள். ஆனால் இது இந்தியாவில் தேர்தல் சீசன் அப்படி அசட்டையாக இருந்தால் இதுவே ஒரு பிரசாரமாகி காங்கிரஸுக்கு மீதம் இருக்கும் வோட்டுக்களுக்கும் வேட்டு வைத்து விடும் என்பதினால் உஷாராக வீரன் வேஷம் போட்டு நடிக்கிறார்கள். உள்ளுக்குள் வேறு டீல்கள் ஓடிக் கொண்டிருக்கும். தேவயானி வேறு ஏதாவது உளவு வேலைகளில் ஈடுபட்டு அவரது வேலைக்காரர் மூலமாக அதை அமெரிக்கா கண்டுபிடித்ததினால் திரை மறைவில் இந்தக் கேஸில் அவரை கொண்டு வந்திருக்கிறார்களோ என்ற சந்தேகமும் உண்டு. அதையெல்லாம் நான் பூடகமாக முதல் சில கேள்விகளிலேயே கோடி காட்டியிருக்கிறேனே. அதையெல்லாம் மீறி இந்தியாவின் தன்மானம் சுய மரியாதை அமெரிக்காவின் இரட்டை வேடம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இதை அணுக வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறேன். முக்கியமாக இந்த நிலை மாற பலமான உறுதியான ஒரு தலைமை வேண்டும் என்பதையே நான் இந்த சம்பவத்தை உதாரணமாகக் கொண்டு வலியுறுத்துகிறேன். மோடியைத் தேர்வு செய்யுங்கள் என்று சொல்லுகிறேன். முந்தைய பா ஜ க அரசாங்கங்களும் கோழைத்தனமான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். மோடியும் கூட அப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டாகும் இருந்தாலும் அது இந்த அளவு மோசமாகப் போகாது என்பதே என் நம்பிக்கை. நீங்கள் கேட்க்கும் கேள்விகளுக்குப் பதில் வராது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் என்பது இரட்டை வேடமானது அவர்களின் அதிகாரிகளை வெளிநாட்டில் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவதும் அவர்கள் இந்திய அதிகாரிகளை நடத்துவதும் வேறு விதமானவை. இந்தியா ஒரு வலுவான பலமான தேசமாக இல்லாதபடியால் அதை எந்தவொரு நாடும் எளிதாக இளக்காரமாக நடத்தி விட முடிகிறது. மோடி வந்தால் அந்த நிலை மாறும் என்பதே எனது சாராம்சம்

    ச.திருமலை

  14. ராஜன் சரியாக சொன்னிர்கள்! இந்தியாவின் பலவினமான நிலை இந்த உலக அரங்கில் பற்றிய கவலைதான் இந்த விழயத்தில் பிரதானமானது! நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதி பட்டுத்தான் நாபகம் வருகிறது!

  15. ரெட்டைமலை அவர்களே,
    அவர் கோட்டாவில் வந்தவர், ஆதர்ஷில் வீடு லவட்டியவர் என்று எல்லாம் facebook ல் ஓடி கொண்டு இருக்கும் சாமாச்சாரம். அது உண்மைதான . அதில் என்ன உங்களுக்கு கருத்து வேறுபாடு. நிற்க – இன்று முலாயம் அவருக்கு MP ஸீட் தருவதாக சொல்லி உள்ளார். இவருக்கு MP ஆகும் அனைத்து தகுதியும் உள்ளதாகவே நான் கருதுகின்றீன்

  16. இந்திய துணைத் தூதரக அதிகாரி தேவயானி இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி.
    அவர் தவறே செய்திருந்தாலும் அமெரிக்க அரசு முதற்கண் இந்திய அரசின் கவனத்திற்கும் நடவடிக்கைக்கும்தான் கொண்டு வந்திருக்கவேண்டும். அதன்பிறகுதான் நடவடிக்கை எடுத்திருக்வேண்டும். அந்தத் துணிச்சல் அமெரிக்காவுக்கு எப்படி வந்த்து? மனோரிதியாக அமெரிக்காவிடம் அடிமைபுத்தியுள்ளஒருவர் இந்தியாவின் பிரதமராக இருப்பதுதான். அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதே நாளில் இந்திய அரசு பல மில்லியன் டாலர்களுக்கு அம்ரிக்காவிடமிருந்து விமானங்கள் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது ஏன்? ரத்து செய்ய வேண்டியதுதானே? வெனுசிலா நாட்டின் முன்னாள் அதிபர்
    ஹ்யுகோ சாவேஸ் அமெரிக்க எணெணெய் கம்பெனிகளை தேசியமயமாக்குவேன்
    என்று மிரட்டியபோது அமெரிக்கா பணிந்த்தே? அந்த துணிவு ஏன் இந்தியத் தலைவர்களுக்கில்லை?
    சத்யநாத்

  17. //கோட்டாவில் வந்தவர் என்று ஒரு சிலர் அவரைச் சொல்லுகிறார்கள் என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன் அது என் தரப்பு அல்ல//
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? உம்மை யாரேனும் நன்றாக திட்டியதை நான் கட்டுரையாக எழுதி வெளியிட்டுவிட்டு, கேட்டால் உம்மை போல் நான் பதில் கூறலாமா? விஷயத்தின் மைய கருது அதில்லை என்னும்போது, அதை தவிர்த்தலே, நேர்மையான கட்டுரையாளனின் தன்மை. உள்ளே உள்ள குரங்கை அடுத்தவன் மேல் ஏவி விட்டு அதை சொல்வது அல்ல. அதை உம்மிடம் எதிபார்தோம். திருத்திகொள்ள முடியாது என்றால், தொடருங்கள். உங்கள் விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *