2004-ம்வருடம் ஆட்சிக்கு வந்து, 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் இவர்கள் நடந்தியுள்ள ஊழல்களின் பட்டியல் ஏராளமானது. இந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள ஊழல் மற்றும் மோசடிகளை பட்டியலிட்டு காட்டினால், மீன்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும், அதே வேளையில் ஏன் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ? என்கின்ற சிந்தனையும் வெளிப்படும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளை தொகையின் அளவு, நாம் வெளிநாடுகளில் பெற்ற கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கொள்ளையடித்த தொகையில் 25 சதவீத கொள்ளை பணத்தை பயன்படுத்தினால் கடன் அடைபடும் என பலர் கூறுகின்றனர்.
மத்தியில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்த போதெல்லாம் ஊழல் என்பது சகஜமானதாகவே மாறிவிட்டது. நேரு காலம் முதல் தற்போது ராகுல் காந்தி காலம் வரை காங்கிரஸ் கட்சி என்றாலே அது ஊழல் கட்சி என கூறும்படி மாறிவிட்டது. வேடிக்கையாக ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டார்கள், All India Congress Committee என்றாலே அது All India Corruption Congress என்பதாக குறிப்பிட்டார்கள். இவர்களின் ஆட்சிக் காலத்தில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் எவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர் பதவி கொடுத்த பிரதம மந்திரிகள் உண்டு. உதாரணமாக நேரு பிரதம மந்திரியாக இருந்த போது, ராணுவத்திற்கு 200 ஜீப் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரிக்க முற்பட்ட போது, ஊழலுக்கு துணை போன கிருஷ்ண மேன்னுக்கு ராணுவ அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. திருடன் கையில் அரசின் கஜானாவின் சாவியை கொடுத்த்து போல.
இந்தியாவில் ஊழலின் பன்முகத் தன்மையை ஆராய கே.சந்தானம் அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 1964ம் வருடம் கே.சந்தானம் அவர்கள் அளித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு முட்டுக் கட்டைகளுக்கு பின்னர் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை பற்றி விசாரிக்க வேண்டுமானால் சி.பி.ஐ யை மட்டும் நம்ப வேண்டியுள்ளது. தற்போது சி.பி.ஐ. என்பது காங்கிரஸ் கட்சியின் எடுபிடி ஏவள் ஆட்களாக மாறிவிட்டார்கள். இதன் காரணமாக பல ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரனைக்கு வராமலே புதைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. விசாரணை என்ற பெயரில் ஆண்டுக்கணக்காக இழத்தடிக்கும் போக்கும் உண்டு. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட தாமஸ் என்பவரை ஊழல் கண்கானிப்பு ஆணைய தலைவராக காங்கிரஸ் நியமனம் செய்தது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால், தானாகவே பதவி விலக வேண்டிய நிர்பந்தம் தாமஸ்க்கு ஏற்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள்
2004-ம் வருடம் முதல் 2013-ம் வருடம் வரை இந்திய திருநாட்டை ஆட்சி செய்து வருவது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாகும். இதில் செய்துள்ள ஊழல்களின் எண்ணிக்கை பட்டியல் போடுவதுடன், சில முக்கியமான ஊழல்கள் பற்றி மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை கூறுவதையும் பார்க்க வேண்டும். முக்கியமாக வெளியே விவாதிக்கப்படும் ஊழல்கள் (1) 2ஜி அலைக் கற்றை ஊழல், (2) நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் (3) காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்துள்ள ஊழல் (4) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் (5) ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல் (6)ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல் (7) பங்கு சந்தை ஊழல் போன்ற ஊழல்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தயாவால் கூட்டணி கட்சியினர் அடித்த கொள்ளைகள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் அடித்த கொள்ளைகளும் உண்டு. இதன் காரணமாக மத்தியில் உள்ள அரசு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மாநில கட்சிகள் அடித்த கொள்ளையை காட்டியே அரசை காப்பாத்திக் கொள்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளைகளின் பரிணாம வளர்ச்சியை சற்றே கானலாம்
2ஜி அலைக் கற்றை ஊழல்
சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல் தொகை முழுவதும் கூட்டினால் கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகை நெருங்க முடியாது. இந்த ஊழல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி கேள்வி கனைகளை தொடுத்த போது, பிரதமர் உட்பட கேபினட் அமைச்சர்கள் அனைவரும், ஊழல் நடக்கவில்லை என்றே வாதிட்டார்கள். சி.ஏ.ஜி அறிக்கை வெளி வந்த பின்னர் தான் இந்த மோசடியில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தெரியவந்தது. இதில் ஒரு லட்சத்த்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு என்ற மதிப்பீடு பலரையும் திகைக்க வைத்த்து.
இது சம்பந்தமாக நிறைய விஷயங்களுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் 2ஜி அலைக்கற்றை தவறாக வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இந்த போது, 2ஜி கோப்புகளை வரவைத்து, தனது அதிருப்தியை ஒரு முறைகூட பிரதமர் தெரிவிக்காத்து ஏன்? அந்த துரதிருஷ்டவசமான முடிவு அமலாக அனுமதித்த்து எவ்வாறு? அலைக்கற்றையின் அளவு குறித்த அமைச்சரவைக் கூட்டத்திற்கான வரையறையில் அலைக்கற்றையின் விலை சேர்க்கப்படாத்து ஏன்? முதல்வரையறையில் விலை இடம் பெற்றிருந்த்தாகவும், தி.மு.க.வின் நெருக்கடியால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது. சட்டத்திற்குப் புற்ம்ப உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அதில் கணிசமான பங்குகளை மற்றொருவருக்கு விற்க எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? அலைக்கற்றையின் சரியான விலையை அறிவதற்காக ஏலம் என்ற ஒளிவு மறைவற்ற முறையை பயன்படுத்துமாறு 2.11.2007ந் தேதி அமைச்சர் ராசாவிடம் கூறிய பிரதம மந்திரி 3.1.2008-ல் அது பற்றி கண்டும் கானாமலும் இருந்த்து ஏன்? 2.11.20007க்கம் 3.1.2008க்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்த்து, அல்லது தி,மு.க. கொடுத்த நெருக்கடி அவ்வளவு கடுமையானதாக இருந்த்தா? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னு வரை பிரதமரிடமிருந்து விளக்கம் வரவில்லை.
திரு அனில் தீருபாய் அம்பானிக்குச் சொந்தமான ஸ்வான் காபிடல் கம்பெனியின் பங்குகள் டி.பி.ரியாலிடி கம்பெனிக்குச் சாதகமாக திடீரென மாற்றம் செய்யப்பட்டன. இந்த மாற்றம் தொலை தொடர்ப்பு துறை அமைச்சர் ராசாவுக்கு சாதகமாகவே செய்யப்பட்டது. இதன் காரணமாக திரு.சுப்பிரமணிய சுவாமி 29.11.2008-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்க்கு ஒரு கடிதம் எழுதினார் ” லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டத்தின் (1988) 19வது பிரிவின் கீழ், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது தனி நீதி மன்றத்தல் வழக்கு தொடர அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தார். இதனால் இதில் நடந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்த்து, இது மட்டுமில்லாமல், பயனிர் பத்திரிக்கையின் நிருபர் கோபி கிருஷ்ணன் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பல கட்டுரைகள் எழுதியதும், இந்த ஊழல் தெருவிற்கு வந்த்து.
இதில் உள்ள மர்மங்கள் சிந்துபாத் தொடர்கதையை போல் நீண்டுகொண்டே போகிறது. காங்கிரஸ் கட்சி தன்னை காத்துக் கொள்ள ராசாவை பலிகடாவாக மாற்றிவிட்டது. பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலேயேயும், அமைச்சர் கபில் சிபில் உட்பட பலரும், ஊழல் நடைபெற வில்லை, தொலை தொடர்ப்பு துறைக்க எவ்வித இழப்பும் எற்படவில்லை என்ற கோஷத்தை மட்டுமே லாலிபாடினார்கள். உச்ச நீதிமன்றத்தின் மூலமாகவும், பொதுநல அமைப்புகள் மூலமாகவும், பாராளுமன்றத்தில் பாராதிய ஜனதா கட்சி உட்பட பல எதிர்கட்சிகளில் தொடர் போராட்டத்தின் காரணமாகவும், அமைச்சர் பதவியிலிருந்து ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே நாட்டிலே நடந்த மிகப் பெரிய ஊழல் 2ஜி என்றால்ஈ அதற்கும் போல் ஊழல் எங்களால் செய்ய இயலும் என்பதை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் தாங்கள் யார் என்பதை காட்டியுள்ளார்கள்.
நிலக்கரி ஊழல்
2011-ம் வருடம் மே மாதம் 12-14 தேதியிட்ட ஒரு தமிழ் வார பத்திரிக்கையின் முகப்பு அட்டையில் 26 லட்சம் கோடி…….. ஸ்பெக்ட்ரத்தை மிஞ்சும் நிலக்கரி ஏழல் அம்பலத்திற்கு வரும் அதிர்ச்சி தகவல்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. ஆனால் 2012-ம் வருடம் செப்டம்பர் மாதம் தான் இது பாராளுமன்றத்தில் பற்றி எரிந்த்து. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் என்ன நடந்த்து என்று எனக்க தெரியாது. தவறே நடக்கவில்லை என்று துறை அமைச்சர் ராசா சொன்னதை நான் நம்பினேன். இதற்கு மேல் எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை. என பிரதமர் தெரிவித்தார். ஆனால் தன்வசம் வைத்திருந்த நிலக்கரி துறையில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது எவ்வாறு தெரியாமல் போனது, விக்கரமாதித்தன் கதையாக மாறிவிட்டது.
2004-ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த சிபுசோரன் ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறை செல்ல அந்த்த் துறையை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். அந்த சமயத்தில் மட்டும் 63 சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. 2004லிருந்து 2010 வரை 168 சுரங்கங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது 113 சுரங்கங்கள். தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் நிலக்கரியின் அளவு 21.69 பில்லியன் டன்கள். இழ்ப்பீடு சம்பந்தமாக அரசு தெரிவித்த கருத்து, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், மின் தேவையையும் கவனத்தில் கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி தவறுகளுக்கு பரிகாரம் தேட அரசு முயல்கிறது.
இதில் 26 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்குறிய கணக்கு, இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 1டன் நிலக்கரியின் விலை ரூ2500 என்றாலும், இதில் உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துச் செலவு போக நிகர லாபம் 1டன்னுக்கு ரூ1250 கிடைக்கும். ஆனால் அரசு தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிலக்கரிக்கு டன் 1க்கு ரூ100 மட்டுமே மத்திய அரசுக்கு ராயல்டியாக கொடுத்தால் போதும் என அரசு அறிவித்த்து. இதனால் 21.69 பில்லியன் டன் விற்பனை செய்தால் அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ26.91 லட்சம் கோடி ரூபாய்.
விதிகளுக்கு புறம்பாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்கள் 36 மாதங்களுக்குள் தனது உற்பத்தியை தொடங்கி விட வேண்டும், வனப்பகுதியில் அமைந்திருந்தால், கூடுதலாக ஆறுமாதம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்பதே விதி, இந்த விதிக்கு மாறாக உரிம்ம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்காமல், வேறு ஒருவருக்கு விற்று கொள்ளையடித்த சம்பவமும் உண்டு.
தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்கு, காங்கிரஸ் அமைச்சர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது பழியை போட்டார்கள். சுரங்க ஒதுக்கீட்டை ஏன் ஏலத்தில் விட வில்லை என்ற கேள்விக்கு, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தின் முதல்வர்கள் ஏலத்தில் விட எதிர்ப்பு தெரிவித்தார்கள் என பிரதமர் நா கூசாமல் பொய் பேசினார். போட்டிசார் ஏலமுறைக்கு பா.ஜ.க. முதல்வரகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மாறாக 2006-ல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் ஏல முறையை ஏற்றன., ஏல வருவாயில் தமக்கு பங்கு வேண்டும் என்பதே அவர்கள் விதித்த நிபந்தனை என்பதை தெரிவிக்க பிரதமர் மறந்து விட்டார்.
தற்போது விசாரனையில் உள்ள விவகாரத்தில், பல்வேறு திருப்பங்கள் நடந்தன. நிலக்கரி ஒதுக்கீடு சம்பந்தமான கோப்புகள் கானவில்லை என உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்த்து. பிரதமரை காப்பதற்காகவே, சட்ட அமைச்சர் தன்னிசையாக சி.பி.ஐ.யின் பிரமான வாக்குமூலத்தை திருத்தியது. ஆகவே மிகப் பெரிய ஊழல் நடந்த போதும் வருங்கால பிரதம மந்திரியாக சித்தரிக்கப்படும் ராகுல் காந்தி வாய் திறக்கவில்லை. ஆகவே இந்தியாவின் ஓராண்டுகால் வரி வருவாய் ரூ9.32 லட்சம் கோடி, இந்த மோசடியின் காரணமாக மூன்றாண்டுகளுக்கு இந்தியர்கள் செலுத்தும் மொத்த வரி பணம் அளவுக்கு இந்த ஒரே ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே மீன்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு லஞ்சம்
2008-ல் அமெரிக்காவுடன் இந்தியா போட்டுக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்காக அரசை ஆதரித்த இடது சாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அரசை காப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்கட்சி உறுப்பினர்களுக்க கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுக்க்பட்ட சம்பவம், இந்த அரசு ஊழலை தவிர வேறு எதுவும் செய்ய வில்லை என்பதை காட்டும் சம்பவமாகும். நேரிடையாகவே பாராளுமன்றத்தில் பணக் கட்டுக்களை காட்டிய பின்னரும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு பதிலாக, பாராளுமன்றத்தில் பணக் கட்டுக்களை காட்டிய பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு ஊழல்
சுமார் 8,000 கோடிக்கு மேல் மக்கள் வரி பணத்தை வைத்து நடந்திருக்கும் இந்தப் பகல் கொள்ளையில் கல்மாடியும், விளையாட்டு ஏற்பாடு குழுவும் மட்டும் பொறுப்பல்ல, இந்த விளையாட்டு போட்டியை அமலாக்தில் பங்கு வகிக்கும் தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும் இதில் தொடர்ப்பு உள்ளது. விஞ்ஞான ரீதியாக கொள்யைடிப்பதில் காங்கிரஸ் கட்சியின் கைதேர்ந்தவர்கள் என்பதை காட்டுவதாக உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அடித்த கொள்ளைகள். சில கொள்ளைகளை பார்த்தாலே இதன் விபரீதம் நன்கு புரியும். அவசர விளக்கு வாங்கும் போது 1 விளக்கின் சந்தை விலை ரூ920 , கல்மாடி வாங்கியது ரூ2,623 ஒரு விளக்கின் விலையில் வாங்கியுள்ளார். ரூ18,000க்கு சந்தையில் விற்கப்படுகின்ற வின்டோ ஏ.சியின். விலை, கல்மாடி வாங்கும் போது ரூ1,18,182க்கு வாங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது, இது போல் 110 வின்டோ ஏ.சி வாங்கப்பட்டுள்ளது, இதில் மட்டும் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
2ஜியை ஜன்பத் ஆதரவு பெற்ற ஊழல் என்றால், 4ஜி எஸ்.பாண்ட் ஊழல் ரேஸ் கோர்ஸ் ஆதரவு பெற்ற ஊழல் என்றால் மிகையாகாது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு 150 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொடுக்கப்பட்டு இருந்த்து. இதற்கு பெயர் எஸ்-பாண்ட் அலைக்கற்றை என்று பெயர். இந்த எஸ் பாண்டிலிருந்து தான் சன், டாடா, ஏர்டெல் என்று பல சேனல்கள் டி.டி.ஹெச் ஒளிபரப்பை நடத்துகின்றன. காலியாக இருந்த எஸ்.பாண்ட்-ஐ வைத்து இஸ்ரோ வியாபரத்தைத் தொடங்கியது, இதில் தான் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 2 லட்சம் கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியே இந்த முறைகேட்டில் மையப் புள்ளி. இஸ்ரோவைச் சார்ந்த டாக்டர் எஸ்.சந்திரசேகர் என்பவர் ஓய்வு பெற்றதும், இன்னும் சிலர் கட்டாய ஓய்விலும் வெளியேறி தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த நிறுவனம் இஸ்ரோ வசம் உள்ள அதிக சக்தி வாய்ந்த 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை தங்கள் வசம் கொண்டு வரம் முயற்சிக்கு வித்திட்டார்கள். 12 வருடங்களுக்கு இவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இஸ்ரோ நிறுவனம் தனது வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் மூலம் இந்த ஒப்பந்த்த்தை செய்து கொண்டது. இந்திய அரசிடம் இருக்கின்ற சென்சிட்டிவ்வான பல துறைகளில் அணுசக்தியை அடுத்து மிக முக்கியமான விவகாரம் விண்வெளி துறையாகும். 2ஜி விவகாரம் விவாத பொருளாக மாறிய போது, 4ஜி விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்த்து. இந்த ஒப்பந்தம் பிரமருக்கு தெரிந்து நடந்த்தா? பிரதமரை ஏமாற்றி விட்டு அவரைச் சுற்றி இருக்கும் லாபி அலைக்கற்றையை முழுங்கியதா? என பத்திரிக்கைகளும், எதிர்கட்சிகளும் குடைய துவங்கின. மிகவும் முக்கியமான துறையான விண்வெளியில் நடந்துள்ள ஒப்பந்தம், என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ஒரு பிரதமர் இருந்தால், நாட்டின் பாதுகாப்பு பற்றி அவருக்கு எந்த அக்கறையும் கிடையாது என்றே அர்த்தம். மேலும் 2005 ஜனவரி மாதம் 28-ல் மன்மோகன் சிங் பிரதமாராக இருந்த போது, தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கி ஓர் ஒப்பந்த்த்தைப் போட்டது, அந்த ஒப்பந்தம் பிரதமருக்கும், அவரது அமைச்சரவைக்கும் சரியாக விளக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.
இந்த ஒப்பந்த்த்தின் படி இரண்டு செயறகைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியாக வேண்டும். இதைத் தான் பிரதமரது அலுவலகம் தெரியாது என தெரிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களிடம், இது பிரதமருக்கு தெரியாது என ஒப்புக் கொண்டார். இது உண்மை என்றால் பிரதமருக்கு தெரியாமல் மறைத்தவர்கள் யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
அரிசி ஏற்றுமதி ஊழல்
ஆனந்த் சர்மா தலைமையில் உள்ள வர்த்தக அமைச்சகம், பாசுமதி அல்லாத அரிசி 1மில்லியன் டன் ஏற்றுமதி செய்ததில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் விதிப்படி 12,500 டன்னுக்கும் ஒரு உரிமம் வழங்கப்பட வேண்டும். இந்த விதிக்கு புறம்பாக 2011 ஜீலை மாதம் 19 தேதி வெளி நாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.எஃப்டி) வெறும் 14 நிறுவனங்களுக்கும், 24 தனி நபர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கியுள்ளார். லட்சக்கணக்கான டன் அரிசி ஏற்றுமதியை ஆறு நபர்களே அனைத்தும் வளைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த்து. 2009 முதல் 2011 வரை மட்டுமே இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி ஏற்றுமதி உரிமங்கள் வழங்கப்பட்டன. அரிசி ஏற்றுமதி உரிமம் வழங்கும் நடைமுறையும் கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளிப்படையானதாக இல்லை. கோட்டாவுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 3,500 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதவிறக்கும் செய்யப்பட்டதால், இணைய தளமே முடங்கிப் போனது. அரசு ஏற்றுமதி அரிசிக்கு டன் 1க்கு 400 டாலர் என விலை நிர்ணயம் செய்த்து, ஆனால் வெளிச்சந்தையில் டன் 1க்கு 530 டாலர் விற்கும் போது 130 டாலர் குறைவாக விலை நிர்ணயம் செய்ததால் அரசுக்கு இழப்பு ரூ650 கோடி, இது அரசியல்வாதிகள் , அமைச்சர்களுக்கு சென்றதாக விசாரனையில் தெரியவந்தது. 12,500 டன்னுக்கு ஒரு உரிமம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தும், விதி மீறப்பட்டு, அகமதாபாத் நகரைச் சார்ந்த அடானி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு 50,000 டன் ஒதுக்கீடு கொடுக்க உரிமம் வழங்கப்பட்டது. மும்பையை சார்ந்த அல் கியாஸ் எக்ஸ்போர்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கும் சேர்ந்து 62,000 டன்னுக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஜே.கே ஜெயின் என்பவருக்கு 16 உரிமங்கள், அஸ்வின் ஷா என்ற நிறுவனத்திற்கு 3 உரிமங்கள், அல் கியாஸ் என்ற நிறுவனத்திற்கு 5 உரிமங்கள், பகாரியா நிறுவனத்திற்கு 8 உரிமங்கள் என அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு அதிக அளவு உரிமங்கள் வழங்கப்பட்டன.
(தொடரும்)
ஈரோடு சரவணன் அவர்களே,
இனிமேல் காங்கிரசின் ஊழல் பற்றி தயவு செய்து எழுதாதீர்கள். அவர்கள் எங்கேயாவது ஓரிடத்தில் ஊழல் செய்யாமல் விட்டு விட்டார்களா என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
காங்கிரஸ் = ஊழல்+, சர்வாதிகாரம்+ குடும்ப ஆட்சி
Irony is even educated people foolishly think BJP is communal and Congress alone can provide secular rule. They forget that BJP is the only party which talked about ‘Common Civil Code’ bring all citizens of India under the same civil rule, but Congress right from day one uses Brisher’s divide and rule policy.
People should think that Congress has ruled India for 60 years and now it talks about empowerment and progress. What they have been doing for 60 long years? Even the educated do not think that line. God only can save this country.
Out of 177 countries surveyed fo corruption (1 the best, and 177 the worst), India stands at 94 in 2013; China stands at 80, Pakistan at 127, Source: https://www.hindustantimes.com/india-news/india-less-corrupt-than-pakistan-ranks-94th-in-world-survey/article1-1158513.aspx
I am sorry for my mistake in the above post. India is listed as 94 out 177 in corruption. By mistake, I gave the number as 127, which for Pakistan.