வன்முறையே வரலாறாய்… – 11

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

அல்லா ஜிகாத் செய்வதை ஒவ்வொரு முஸல்மானுக்கும் கட்டாய கடமையாக அளித்து, உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆளுகையின் கீழ் வரும்வரை அவன் தொடர்ந்து போரிடவும் உத்தரவிட்டிருக்கிறார் (குரான் 2:193).

மேலும், அல்லா ஒவ்வொரு நம்பிக்கையாளனின் வாழ்க்கையையும் தனதாக சுவீகரித்து, தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஜிகாதினைத் தொடர்ந்து செய்து வரும் – அதனைக் கொண்டு கொல்லவும், அதனால் கொல்லப்படவும் கூடிய – நம்பிக்கையாளனை மட்டுமே சுவனத்திற்குள் நுழைய அனுமதியளிப்பான் (குரான் 9:111).

ஜிகாதில் மரிக்கும் ஒவ்வொரு தியாகியையும் (Martyr) வாழ்த்துவதுடன், அவர்களை நேரடியாக சுவனத்தினுள் நுழையவும் அல்லா அனுமதியளிப்பான் (குரான் 2:154).

Jihad அல்லா நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் உறவுகளை மறுதலித்து (தகப்பன்மார் மற்றும் உனது மகன்கள், உனது சகோதரர்கள் மற்றும் உனது மனைவியர்கள், மற்றும் உனது குலத்தினர்) அத்துடன் உலக இன்பங்கள் அனைத்தையும் விட்டு உதறி அல்லாவின் வழியை மட்டுமே ஒற்றை நோக்கத்துடன் பின்பற்ற ஆணையிடுகிறார் (குரான் 9:24).

முகமது நபி, அல்லா இட்ட இந்தக் கட்டளைகளை தான் பின்பற்றியதுடன், தன்னைப் பின் தொடரும் நம்பிக்கையாளர்களும் அல்லாவிற்குத் தங்களை ஒப்புக் கொடுத்து, அல்லா இட்ட கட்டளைகளான பிரார்த்தனை செய்வது, நோன்பிருப்பது இவற்றுடன் உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகும் வரை ஜிகாதையும் செய்ய வலியுறுத்துகிறார். முகமது நபி மதீனாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு அல்லா இந்தக் கட்டளைகளை முகமது நபிக்குத் தெரிவிக்கிறார். இதன்படி, முகமது நபியும் அவரது சக நம்பிக்கையாளர்களும் காஃபிர்களுக்கு எதிரான வன்முறையக் கட்டவிழ்த்து விட்டுக் கொலைகளும், கொள்ளைகளும் செய்யத் துவங்கினார்கள்.

காஃபிர்களிடம் கொள்ளையடித்த செல்வங்களை வைத்தே முகமது நபியின் இஸ்லாமிய அரசாங்கம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. காஃபிர்களுக்கு எதிரான இந்தச் சண்டைகளில் இறந்த நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக சுவனத்தில் இடம் உண்டு என அறிவிக்கிறார் அல்லா (குரான் 2:154). எனவே சுவனத்திற்குச் செல்வது ஒன்று மட்டுமே ஒவ்வொரு இஸ்லாமிய நம்பிக்கையாளனின் வாழ்க்கையின் இலட்சியமாக உருவாகியது. இதன்படி, ஜிகாதில் இறக்கும் எந்தவொரு நம்பிக்கையாளனுக்கும் சுவனத்தில் இடம் நிச்சயமானதால் அவர்கள் காஃபிர்களுடன் போரிட்டு மரணித்து சுவனத்தில் தங்களுக்கான இடத்தை நிச்சயம் செய்து கொண்டார்கள்.

இதன் காரணமாக, இஸ்லாமிய மதம் உருவாகிய ஆரம்ப நாட்களில் ஏராளமான நம்பிக்கையாளர்கள் சுவனம் செல்லும் நப்பாசையில் ஜிகாதில் இணைந்தார்கள். கரு நிறக் கண்களுடனும், கொழுத்த முலைகளும் கொண்ட கன்னிகள் சுவனத்தில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் காத்திருப்பார்கள் என அறிவிக்கிறார் அல்லா (குரான் 44:51-54, 78:31-33). இதனடிப்படையில் நம்பிக்கையாளர்கள் தங்களது உறவுகளை மறுதலித்து, உலக இன்பங்களைத் துறந்து ஜிகாதினை மட்டுமே தங்களின் இலட்சியமாகக் கொண்டு அல்லாவிற்காக அவர்கள் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள்.

இவ்வாறு ஜிகாதில் தங்களை இணைத்துக் கொண்டவர்களின் வாழ்க்கை முறை உலக இன்பங்கள் துறந்த ஒருவிதமான துறவு நிலையுடன் இருந்தது. பிறருடன் தங்கள் தொடர்புகளைத் துண்டித்து, ஐந்து வேளை தொழுகை செய்வதிலும், சுவனம் செல்வதற்காக ஜிகாது செய்வதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இதுவே முகமது நபி, அவரது காலத்தில் தன்னுடன் இருந்த நம்பிக்கையாளர்களுக்கு காட்டிய வாழ்க்கை முறை.

மேலும், முகமது நபியின் காலத்தில் எல்லா உடல் வலிமையுள்ள, போரிடும் வயதுடைய ஆண்கள் அனைவரும் ஜிகாதில் ஈடுபட வலியுறுத்தப்பட்டார்கள். இஸ்லாமிய அரசாங்கம் வேகமாக பரவிய காரணத்தால், சம்பளம் பெறும் சாதாரண சிப்பாய்களையும் உடன் இணைத்துக் கொண்டது. இருந்தாலும் அல்லா அளிப்பதாகக் கூறிய சுவனம் செல்வதில் ஆர்வமுடைய ஏராளமான இளைஞர்கள் சம்பளம் எதுவும் பெறாமலேயே தங்களை இஸ்லாமியப் படையணிகளுடன் இணைத்துக் கொண்டார்கள். இதுபோன்று சுயமாக தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்கள் காஃபிர்களுக்கு எதிரான போர்களில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களுக்கான ஊதியம் அரசாங்க கஜானாவில் இருந்து அளிக்கப்படாமல், மதக் காரியங்களாக ஒதுக்கப்பட்ட ஜகாத்திலிருந்து (zakat) அளிக்கப்பட்டதுடன், போரில் கிடைக்கும் கொள்ளையிலும் பங்கு அளிக்கப்பட்டது.

முகமது-பின்-காசிம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை வெறும் 6000 அராபிய சிப்பாய்களைக் கொண்டு வெற்றி பெற்ற பிறகு, மேற்கூறிய இளைஞர்கள் முகமது-பின்-காசிமின் படைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு அதனால் கிடைக்கவிருக்கும் கொள்ளைப் பணத்திற்காக சிந்து நோக்கிப் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். இதன் காரணமாக பின்-காசிமின் இஸ்லாமியப் படை நாளுக்கு நாள் அதிகரித்தது. இஸ்லாமிற்காக உயிர் துறந்து சுவனம் செல்வதற்கான ஆவலின் காரணமாக அராபிய முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.

இந்தக் காரணங்களுக்காக 965-ஆம் வருடம் இரான் மற்றும் சிரியாவைச் சேர்ந்த 20,000 முஸ்லிம்கள் ஏறக்குறைய 1000 மைல்கள் பயணம் செய்து பைஸாண்டியத்திற்கு நடந்த போரில் பங்கெடுக்கச் சென்றார்கள். பால்கனில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் போர் தொடுத்த ஒட்டமான்கள் தொலை தூர நாடுகளில் இருந்த முஸ்லிம்களையும் ஜிகாதிற்கென ஈர்த்தார்கள்.

காலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், ஜிகாது செய்யும் வாய்ப்பு குறைந்து போன காலகட்டத்தில் மெதுவாக வன்முறையற்ற வாழ்க்கை முறைக்குத் தங்களை திருப்பிக்கொண்டார்கள். கிறிஸ்தவ மற்றும் பவுத்த மடாலயங்களைப் போலவே இவர்களும் தங்களுக்கென ஆஸ்ரமங்களை அமைத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார் சர் ஹாமில்டன் கிப் என்னும் மேற்கத்திய வரலாற்றாசிரியர்.

பின்னாட்களில் சூஃபிக்கள் என்று அழைக்கப்பட்ட மேற்படி காஜிக்கள் உலக வாழ்க்கையின்பங்களைத் துறந்து, பிச்சைக்காரர்களாக (பக்கிர்), மருத்துவம் செய்பவர்களாகவும் மாறி புகழ், பொருள், விருந்து, பெண்கள், நட்பு என அனைத்தையும் துறந்து எளிய வாழ்க்கை வாழத் தலைப்பட்டார்கள்.

இருப்பினும் இந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள்.

அவர்களைக் குறித்து இனி பார்க்கலாம்.

(தொடரும்)

2 Replies to “வன்முறையே வரலாறாய்… – 11”

  1. தங்கள் சேவைக்கு என் கரம் கூப்பிய வணக்கம்.தமிழகத்தில் நிலவும் றி அறியாமையை நீக்க வந்த பகலவன் போன்றது தமிழ் ஹிந்து இணையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *