ராகுல் காந்தியின் காமெடி பேட்டி

27.1.2014 ந் தேதி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராக உள்ள திருவாளர் ராகுல் காந்தி டைம்ஸ் நௌவ் (Times Now ) தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், உண்மைக்கு மாறாக மோடி மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் தனது அனலை கக்கியுள்ளார்.  பொதுவாக காங்கிரஸ்காரர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி என்றாலே, பயம் கலந்த கோபத்தை வெளிப்படுத்துவர்கள், இதில் ராகுல் காந்தியும் விதிவிலக்கல்ல.  அவரின் பேட்டியில் பல்வேறு விஷயங்களுக்கு விளக்கம் அளிக்கலாம் என்றாலும், மோடி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே பதில் கொடுக்கலாம்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளரை பற்றிய தங்களின் கருத்து என்ன What is the Congress Vice President’s view of the BJP Prime Ministerial candidate ) இந்தக் கேள்விக்கு ராகுல் காந்தியின் பதில் வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்போம்  (I think we will defeat the BJP in the next election )  வரும் கால பிரதம மந்திரி என கூறும் காங்கிரஸ் கட்சியினரை பார்த்து வேதனை படுவதை தவிர வேறு ஒன்றும் கிடையாது.  இதை போலவே பல கேள்விகளுக்கு பதில் வேறாக இருந்தது என்பதை பார்க்கும் போது சிரிப்பதை தவிர வேறு வழியில்லை.

2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தை பற்றி பிரதம மந்திரி தெரிவித்த கருத்தை தாங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? (the mass massacre of the innocent citizens on the streets of Ahmedabad.  Do you agree with your PM when he says that  )இதற்கு நேரிடையாக பதில் கூறாமல், பிரதம மந்திரி கூறுவது உண்மை, குஜராத்தில் நடந்துள்ளது, மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்  எப்படி நீங்கள் நரேந்திர மோடி மீது குற்றம் சுமத்துகிறீர்கள்  எப்படி மோடி பொறுப்பு ஏற்க முடியும்.  இதற்கு அறிவுசிகாமனி ராகுல் காந்தியின் பதில் சம்பவம் நடக்கும் போது குஜராத் முதல்வராக இருந்தார். (He was CM when Gujarat happened)

Rahul-comedy-2வரலாறு தெரியாமல் ராகுல் காந்தி உளறி கொட்டியிருக்கிறார். 2002க்கு முன்பாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ள வகுப்பு கலவரத்தின் போது காங்கிரஸ் கட்சியே ஆளும் கட்சியாக பல மாநிலங்களில் இருந்தது என்பதை மறந்து விட்டு பதில் கூறியுள்ளார்.  1969-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அகமதாபாத் நகரில் 25 இடங்களில் நடந்த வகுப்பு கலவரத்தில் 512க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள், p, வகுப்பு கலவரம் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது, முதல்வர் ஹி;த்தேந்திர தேசாய்.. இந்தக் கலவரத்திற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி பி.ஜெக்மோகன் ரெட்டி தனது அறிக்கை அளித்த போது அதில்  . ; “ Most of the  Congressmen participated directly or indirectly in the riots and called Muslims are anti- national.   ‘  என குறிப்பிட்ட பின்னும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ராகுல்காந்திக்கு தெரியுமா என தெரியவில்லை.

1969-ல் ஏற்பட்ட கலவரத்தை போலவே உத்திர பிரதேசத்தில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொரதாபாத் நகரில் ஈத் பண்டிக்கையின் போது நடந்த கலவரத்தில் 1500லிருந்து 2000 பேர்கள் வரை கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.   இந்த கலவரத்தை அடக்குவதற்கு அனுப்பட்ட பி.ஏ.சி எனும்   காவல் துறையினர் குறிப்பிட்ட இடத்தில் 15 இஸ்லாமியர்களை கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து போது,  அது பற்றி விசாரனை நடத்த வேண்டும என்ற கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை. .

1964 ம் வருடம் ரூர்கேலா, கல்கத்தா, ஜாம்ஜட்பூர் போன்ற நகரங்களில் இந்து முஸ்லீம் களிடையே மிகப் பெரிய கலவரம் மூன்டது.  இந்தக் கலவரத்தில் 2,500க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள், கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள்.  இந்த கலவரத்திற்கு ஆதரவாக அன்றைய ஆட்சியாளர்கள் துணை புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.   1967-ம் வருடம் முதல் 2002வரை 17 வகுப்பு கலவரங்கள் நடைபெற்றுள்ளன.  ;. இந்த கலவரத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் கலவரத்தை தூண்டியவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.  இஸ்லாமியர்களை தேச விரோதிகள் என்ற குற்றச்சாட்டையும் காங்கிரஸ்காரர்கள் முன் வைத்தார்கள்  (Most of the congress men participated directly or indirectly in the riots  and called the Muslims anti-national  Mjhuk;  “ communal Riots in India  A Chronology (1947-2003) B.Rajeshwari   page no.6  ) 1985-ல் அதே அகமதாபாத் நகரில் கலவரம் வெடித்து300க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட போது முதல்வராக இருந்தவர் எம்.எஸ்.சோலங்கி காங்கிரஸ்காரர். 1992-ல் சூரத்தில் நடந்த கலவரத்தில் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள், அப்போது முதல்வராக இருந்தவர் சிம்மன்பாய் பட்டேல

1989-ல் பிகார் மாநிலத்தில் பாகல்பூரில் நடந்த வகுப்பு கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,161 என்றும் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது, அப்போது பிகாரில் ஆட்சியில் இருந்த்து கட்சி காங்கிரஸ் கட்சி, முதல்வராக இருந்தவர் எஸ்.என்.சிங் என்பவர்.  1993-ல் மகாராஷ்ட்ர மாநிலத்தில் மும்பை மாநகரில் நடைபெற்ற கலவரத்தில் 872 பேர்கள் கொல்லப்பட்டார்கள், அப்போது மாநில முதல்வர் சுதாகரராவ் நாயக், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்.  1990-ல் ஆந்திராவின் முதல்வராக இருந்த சென்னா ரெட்டி ஆட்சியின் போது ஹைதராபாத் நகரில் நடந்த கலவரத்தில் 365 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.  1980 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொரதாபாத் நகரில் ஈத் தொழுகையின் போது, போடப்பட்ட பந்தல் சரிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்,  இந்த சம்பவத்தில் தொழுகையின் போது, பன்றி ஒன்று கூட்டத்தில் புகுந்ததை, தடுக்க தவறிய காவல் துறையினர் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்களை நடத்தி கலவரத்திற்கு வித்திட்டார்கள். இந்த கலவரத்தில் 2,500க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், அப்போது ஆட்சியில் இருந்தவர் திருவாளர் வி.பி.சிங, காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்.

இந்தியாவில் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அதாவது 1966 மற்றும் 1967லிலும், 1980 மற்றும் 1984லிலும் 15 மாநிலங்களில் 337 வகுப்பு கலவரங்கள் நடந்தன.  ஆனாலும் அவருக்கு பாரத ரத்ன விருது வழங்கப்பட்டது.  அதே போல் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் 16 மாநிலங்களில் நடந்துள்ள வகுப்ப கலவரங்களின் எண்ணிக்கை 291 ஆகும். இவருடைய ஆட்சியில் 1984-ல் டெல்லியில் நடந்த மிக கொடுமையாக காங்கிரஸ் கட்சியினரே குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் சீக்கியர்களை கொன்று குவித்த சம்பவம் நடைபெற்றது.

இரண்டாவது பிரதம மந்திரி வேட்பாளர் பற்றிய கேள்விக்கு பதில் கூற முன் வரவில்லை. இந்த கேள்விக்கு கூட நேரிடையான பதில் கிடையாது.  ராகுல் காந்தி கூறிய பதில் எவ்வளவு குழப்பாகம இருந்த்து என்பதை பாரக்க வேண்டும், இந்த நாட்டில் பிரதம மந்திரி தேர்வு செய்வது என்பது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக என்று கூறியவர்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் நான் கூறியது, காங்கிரஸ் கட்சி என்னை தேர்வு செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன், என்று கூறி விட்டு, அரசியல் சாசனத்தை கூறி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். (Rahul: See, if you look at the speech I gave at AICC a few days back. The issue is basically how the Prime Minister in this country is chosen. The way the Prime Minister is chosen in this country is through the MPs. Our system chooses MPs & MPs elect Prime Minister. I said pretty clearly in my speech in AICC, that if the Congress party so chooses & Congress party wants me to do anything for them, I am happy to do that. It’s respect for the process. In fact announcing your PM prior to an election, announcing your PM without asking the members of Parliament, is not actually written in the constitution )மாறாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றியே விளக்கம் கொடுத்தார்.  ஆனால் திருவாளர் ராகுல் காந்திக்கு சில விஷயங்களை கோடிட்டு காட்டினால் சரியாக இருக்கும்.,2004-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிக இடங்களை பெற்றது.  அச் சமயம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி சோனியா காந்தியை தங்களது கட்சியின் பாராளுமன்றத் தலைவராக தேர்வு செய்தனர். பின்னர் தங்களது கூட்டணி கட்சியின் தலைவர்களிடமிருந்து,  சோனியா காந்தி பிரதம மந்திரி பதவிக்கு ஆதரவு கொடுக்கும் கடிதங்கள் பெறப்பட்டன. திருவாளர்கள் கருணாநிதி, சரத்பவார், லர்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் வலது, இடதுசாரி கட்சியின் தலைவர்களின் கடிதங்களை பெற்றுக் கொண்டு குடியரசு தலைவரை பார்க்க சென்றார்கள்.

Rahul-comedy-3முக்கியமாக இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும் ஒன்று குடியரசு தலைவரை சந்திக்கும் முன் இரண்டு இடங்களில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் திருமதி சோனியா காந்தி பேசினார். ஓன்று கட்சியின் அலுவலகத்தில் பல பத்திரிக்கையாளர்கள் சோனியாவிடம்,  பிரதம மந்திரி பதவிக்கு யாரை தேர்வு செய்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ‘ கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக என்னை தேர்வு செய்து இருக்கிறார்கள்.  நாடாளுமன்ற குழு தலைவரை தான் பிரதம மந்திரி பதவிக்கு சிபாரிசு செய்யப்படும் என்பதுதான் நடைமுறை ‘என்ற விளக்கத்தை தெரிவித்தார. குடியரசு தலைவர் மாளிகையின் முன் பத்திரிக்கையாளர்களிடமும் இதையே தெரிவித்தார்.  ஆனால் குடியரசு தலைவரை சந்தித்த பின்னர் கதை மாறியது, களமும் மாறியது, மன்மோகன் சிங் பதவிக்கு வந்தார்.  2004லிருந்து இன்று வரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி செய்து வரும் பொய் பிரச்சாரம், பிரதம மந்திரி பதவியின் மீது சோனியா காந்திக்கு ஆசை கிடையாது. என்று கூறுவது வேடிக்கையானது. மேலும் திருவாளர் ராகுல் காந்தி பேட்டியின் போது தெரிவித்த வார்த்தை    members of parliament are to be elected by the population and members of parliament are to be elect the Prime Minister.  All I am doing is respecting that process.   இதற்கு பொறுத்தமாகவே மன்மோகன்சிங் தேர்வு செய்யப்பட்டார என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும். ஏன் என்றால் தேர்தலில் நிற்காமல், கொள்ளைப்புற வழியாக உள்ளே நுழைந்தவர் என்பதை மறந்து விட்டு பதில் கூறியிருக்கிறார்.

மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். தனது பாட்டி இறந்த சம்பவத்தை வேதனையோடு குறிப்பிட்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி செய்த கொடுமையை பற்றி தெரிந்து கொள்ளவில்லை.  1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கொலை வெறி தாக்குதலை,2002-ல் குஜராத்தில் நடைபெற்ற வகுப்பு கலவரத்துடன் ஒப்பிட்டு பேசுவதே தவறு.  நீதி மன்றங்களில் மோடி மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது என் பல் வேறு சந்தர்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் வெடித்தவுடன் குஜராத்தில் ராணுவம் உடனடியாக வரவழைக்கப்பட்டது  இதற்கு மாறாக டெல்லியில் கலவரம் நடைபெற்ற போது ராணுவம் வரவழைக்கப்படவில்லை.  குஜராத்தில் துப்பாக்கி சூடு பல இடங்களில் நடத்தப்பட்டன, நூற்றுக்கணக்கான இந்துக்களும் துப்பாக்கி சூட்டில் இறந்து இருக்கிறார்கள்.  டெல்லியில் நடந்த கலவரததை அடக்க ராணுவமும் அழைக்கப்படவில்லை, கலவரகாரர்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தப்படவில்லை. விசாரனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இரண்டு கருத்துக்களை முன் வைத்தால் நன்கு விளங்கும். the acts of violence were organized with the support from the then Delhi Police officials and the central  government headed by  Indira Gandhi son Rajiv Gandhi.  2nd verson  congress leaders met with local supporters to distribute money and weapons.     1984-ல் நடைபெற்ற கலவரங்களுக்கு நியமிக்கப்பட்ட விசாரனை கமிஷன் எத்தனை என்பதும், அதன் முடிவு பற்றிய அறிக்கைகளை கூட முழுமையாக வெளியிடவில்லை என்பதும் ராகுல் காந்திக்கு தெரியுமா என தெரியவில்லை.

ராகுல் காந்தி அவர்களே, தாங்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு மோடி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பேசியிருந்தீர்கள்.  தாங்கள் 1984-ல் டெல்லில் நடந்த கலவரத்திற்கு தாங்கள் பகிரங்க மன்னிப்பு கோருவீர்களா என்ற கேள்விக்கு பதில் வேடிக்கையாக அமைந்த்து. Rahul: I do not take my anger which existed on 2 individuals who did something evil and wrong and overlay it on millions of people. I think that’s criminal. Did the Sikh riots take place in Delhi? Absolutely. Were they completely wrong? Absolutely.
மேற்படி பதில் வேடிக்கையாக இருக்கிறது.  கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல்  காமடி செய்துள்ளார்.

1984-ல் நடந்த கலவரத்திற்கு காரணமான காங்கிரஸ் கட்சியினர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.  கேள்வி கேட்டவர் திரும்ப திரும்ப எந்த காங்கிரஸ் கட்சியினர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிய படுத்துங்கள் என்று கேட்டால் பதில் கூற வில்லை.

Arnab : Were Congressmen involved?

Rahul : Did innocent people die? Absolutely

Arnab : Were Congressmen involved?

Rahul : Some Congress men were probably involved

Arnab : Has justice been delivered to them?

Rahul : There is a legal process through which they have gone through

Arnab : You admit some Congressmen were probably involved

Rahul : Some congressmen have been punished for it  மேற்கண்ட பதில் எவ்வளவு முட்டாள் தனமாக அமைந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும்.  இப்படிப் பட்டவரைதான் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் வேட்பளாராக அறிவிக்க இருந்த்து.  கட்சியில் சித்தாந்தங்கள் பற்றாக் குறையாக மாறிவிட்டது என்றால், வரலாறு தெரிந்த, விவேகம் உள்ள தலைவர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது என்பதையே இது காட்டுகிறது.

Rahul-comedy-1

ஊழல் சம்பந்தமான கேள்விக்கு பதில் கொடுத்த போது கூட உண்மைக்கு மாறான கருத்துக்களையே ராகுல் காந்தி முன் வைத்தார்.  Rahul: I’m sorry the Congress party wherever we have had issues of corruption we have taken action    மேற்படி பதிலில் நம் மனதில் எழும் சந்தேகங்களை கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம். 2004லிருந்து இன்று வரை வெளிச்சத்திற்கு வந்த ஊழல்களில் காங்கிரஸ் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒரு சம்பவத்தை ராகுல் காந்தி தெரிவிப்பார என்பது தெரியவில்லை.  2008-ம் ஆண்டு அனு ஒப்பந்தம் கையெழுத்து ஆனவுடன், மத்திய அரசுக்கு இடதுசாரிகள் கொடுத்த ஆதரவை விலக்கி கொண்டார்கள்.  தனது அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசை காப்பாற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்த வழக்கில் இன்று வரை ஒருவரும் தண்டிக்கப்படவில்லை,.   இதை விட மோசமானது 2ஜி அலைக் கற்றை ஊழலில், பிரதம மந்திரிக்கு தெரிந்தே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறிவருவதை, பிரதம மந்திரி மறுக்கவில்லை.

3.1.2008ந் தேதி ராசாவின் பகல் கொள்ளைக்கு மறைமுகமாக அனுமதி கொடுத்தவர் பிரதம மந்திரி என தெரிந்த பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. 25.10.2007ந் தேதி தொலை தொடர்புத் துறையின் செயல்பாடுகளுக்கு செயலாளர் டி.எஸ்.மாத்தூர், உறுப்பினர் (நிதி) மஞ்சு மாதவன் ஆகிய இருவரும் புதிய உரிமங்கள் வழங்குவதற்கான முறை ஒளிவு மறைவற்று இருக்க வேண்டும் என்றும், பின்னர் ஒரு கட்டத்தில் சட்ட G+ர்வமாக செல்லத்தக்கதாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டும் கூட பிரதமர் தவறு நடக்கும் போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.  1.11.2007-ல் அன்றைய சட்ட அமைச்சர் இந்த விஷயத்தை முதலில் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆராய வேண்டும்.  அடுத்து சொலிட்டர் ஜெனரலின் கருத்து கேட்டறியப்பட வேண்டும் என்ற பரிந்துரையை ஏன் செயல்படுத்தவில்லை.  இது போலவே பல்வேறு காலகட்டங்களில் தவறுகள் நடக்க பிரதமரே காரணமாக இருந்திருக்கிறார்.

திருவாளர் ராகுல் காந்தி கூறியிருப்பது போல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவில்லை.  ஆ.ராசா பதவியை ராஜினாமா செய்த வரலாறு ராகுல் காந்திக்கு தெரியவில்லை.  பாராளுமன்றம் முடக்கப்பட்டதும், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த பின்னர், நீதி மன்றம் தெரிவித்த கருத்தின் காரணமாகவும் பதவியை ராஜினாமா செய்தார் என்பது உலகறிந்த உண்மையாகும்.  ஆகவே ஊழல் நாயகர்கள் கல்மாடியாகட்டும், பவன்குமார் பன்சாலாகட்டும், அஸ்வின் குமாராகட்டும் பலத்த எதிர்ப்பு எதிர்கட்சிகளிடமிருந்து வந்த்தாலும், நீதி மன்றங்களில் குட்டு வைக்கப்பட்டதாலும் மே இவர்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள் என்பதை மறந்து விட்டு பதில் கூறி இருக்கிறார்.

14 Replies to “ராகுல் காந்தியின் காமெடி பேட்டி”

 1. தமிழ் ஹிந்து ஆசிரியருக்கு,

  வணக்கம்.

  முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த மாபெரும் அயோக்கியத்தனம், “இந்திரா பிரியதர்ஷினி” யின் பெயரை, அவரது திருமணத்திற்குப் பின்னர், இந்திரா பிரியதர்ஷினி ஃபெரோஸ் கான்” என்று குறிப்பிடாமல், மோகந்தாஸ் கரம் சந்த் காந்தியின் பெயரின் வாரிசு என்பது போல ஒரு மாயை உருவாக்குவாக்கி ஒட்டு மொத்த இந்திய மக்களையுமே ஏமாற்றுவதற்காக, இந்திரா ”காந்தி” என்று குறிப்பிட்டு, அந்த அயோக்கியத்தனத்தை அனைவருமே ஏற்றுக்கொண்டு, இன்று வரை அனைத்து பத்திரிகைகளும், பொது மக்களும் “காந்தி” என்றே குறிப்பிட்டு வருகின்றார்கள்.

  தமிழ் ஹிந்து வும் இந்த இந்த காமெடியனை ராகுல் ”காந்தி” என்று குறிப்பிட வேண்டுமா?

  அல்லது காந்தி என்றால் “அயோக்கியர்களின் பரம்பரை” என்று எடுத்துக் கொள்ளலாமா?

  தயவு செய்து இனி, இந்த காமெடியனை (இதன் மூலம் சார்லி சாப்ளினையோ, என்.எஸ்.கே., அல்லது நாகேஷ் போன்றவர்களை நான் அவமானப்படுத்தவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்), இந்த முட்டாளை “ராகுல்” என்று குறிப்பிட்டால் போதுமே?

 2. மிக நல்ல கட்டுரை. ஆனால் இதற்காக சரவணன் தனது சக்தி மற்றும் நேரத்தை வீணடித்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. ராகுல் காந்தி பேட்டியின் சுட்டியை கொடுத்து அதில் empower, ideology, system போன்ற வார்த்தைகள் எத்தனை முறை வருகின்றன போன்ற போட்டிகளை வைத்திருக்கலாம்., பொழுது போக்காக இருக்கும்.

 3. Anyway he is not fit to sit in PMs post,suggesting him as PM is ridiculous and INDIA has got immence unlimited better brains.it will take at least 25 yes for Rajive gandi to Gail political knowledge and another 25 yes for him to understand Nations financial knowledge.
  SRINIVASA

 4. மோடியை ‘தேநீர்” விற்றவன் என்று விமர்சித்து, அவர் பிரதமர் ஆக முடியாது என்று மணி சங்கர ஐயர் சொன்னார். காங்கிரஸ் கூட்டத்தில் தேநீர் விற்க வேணுமானால் அனுமதி தருவேன் என்றார். மோடி ஒன்று சொல்லியிருக்கலாம். இவர் ஐயர் என்பதால் எங்க வீட்டு தேவசம் செய்ய இவருக்கு அனுமதி தருகிறேன் என்று. எதிர் விளைவுகளைக் கண்டு அஞ்ச மாட்டேன் என்று மார் தட்டினார். ஆனால் தான் பேசியது எத்தனை கேவலம் என்பதை அந்த படித்த மனிதன் உணரவில்லை. அப்படிப்பட்ட கட்சியின் துணைத் தலைவர் எப்படி இருப்பார்? இந்தியா முழுவதிலுமுள்ள காங்கிரசாருக்கு மோடி போபியா பரவி விட்டது. யாரைப் பார்த்தாலும் மோடி என்றதும் ஆத்திரம் தலைக்கேறி என்னவெல்லாமோ பேசத் தொடங்குகிறார்கள். பாஜக மதாவாதிகல் என்று கோபுரத்தின் உச்சியில் நின்று கத்துகிறார்கள். ஆனால் இவர்களைச் சுற்றி இருக்கும் ஆட்கள் அத்தனை பெரும் மாத வெறியர்கள். முதலில் மதவாதம் என்றால் என்ன என்பதை இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எனக்குத் தெரிந்து கர்ம வீரார் காமராஜர் காலம் வரை எந்த காங்கிரஸ்காரரும் ஜாதியைச் சொல்லி பிறரை இழிவு செய்ததில்லை. ஆனால் நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஒரு ஜாதியை, திராவிட இயக்கத்தார் சொல்லும் வார்த்தையால் சொல்லிப் பேசியதைக் கேட்ட மாத்திரத்தில், நினைவு தெரிந்த நாளாக காங்கிரஸ் அனுதாபியாக இருந்த நான் அந்த வினாடி முதல் காங்கிரசின் முதல் எதிரியானேன். ஜாதி வெறியர்களும், மத வெறியர்களும், பதவி வெறியர்களும் நிரம்பிய கட்சியினர் பிறரைப் பார்த்து இழிவாகப் பேசுவது கேவலம். “ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை”.

 5. ம்……..கள்ளங்கபடறியா கிள்ளைமொழி பேசும் பாலகனான ராக்கூழ் காந்தியை தன் தொலைக்காட்சி வாயிலாக தொல்லைப்படுத்திய ஸ்ரீ அர்ணாப் கோஸ்வாமி பெரும் குற்றமிழைத்தவர். என்.எஸ்.க்ருஷ்ணன், காளி என். ரத்னம், முட்டக்கண்ணு ராமசந்த்ரன், டணால் தங்கவேலு முதல் சமீபத்திய கவுண்டமணி செந்தில் மற்றும் வடிவேலு போன்ற காமெடியன் கள் ராக்கூழுடன் போட்டியிட்டால் மண்ணைக் கவ்வ வேண்டும் போல.

  காங்க்ரஸ் முழுதுமே காமெடியன் களின் கூடாரம் தான். டிக்கி ராஜா எனும் திக்விஜய் சிங்க் புதுச்சேரி நாராயணசாமி டி.ஏ.மதுரம் மனோரமா போன்றவர்களை தோற்கடிக்கும் ரேணுகா சௌத்ரி. இவர்களெல்லாம் காங்க்ரஸ் கோமாளிக் கூடாரத்தின் குலாம் (ஜேக்) என்றால் இவர்களின் தலைவனான ராக்கூழ் காந்தி இவர்களின் பாத்ஷா (கிங்க்).

  எங்கிருந்தோ என்னை ஏன் இந்த கும்பலில் சேர்க்கவில்லை என்று மனமோகன சிங்கனார் மியாவ் மியாவ் என்று கத்துவது வேறு கேழ்க்கிறதே. இத்தாலி ராஜாமாதாவிடமிருந்து இப்படியெல்லாம் மியாவ் மியாவ் என்று கத்துவதற்கு அனுமதி வாங்கியிருக்கிறாரா என்று கேழ்வியெழுமே!!!!!! வாஹேகுரு சிங்கனாரைக் காப்பாற்று.

 6. ஒரு மதத்துக்கு ஒரு நாடு என்று உலகில் எங்குமே இருக்க முடியாது. மனிதர்கள் மதம், மொழி, கலாச்சாரம், உணவுப் பழக்க வழக்கங்கள், கடவுள் நம்பிக்கை என்று பலவேறு சுவைகளை பெற்றவர்கள். மதம் அல்லது மொழி ஒரு மனிதக் கூட்டத்தை ஒற்றுமைப் படுத்த முடியாது. மதத்தின் அடிப்படையில் நாட்டைப்பிரித்த பாகிஸ்தானிய நாய்கள், வங்காள மொழிபேசும் பத்து லட்சம் இஸ்லாமியர்களை கொன்று , அதன் பின்னரே வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மதம் என்பது மனித இனத்தை ஒற்றுமைப்படுத்த முடியாது என்பது தெளிவு. அதே போல, ஒரு மொழி பேசும் மனித இனம் , மொழியின் அடிப்படையில் ஒற்றுமையாக இருக்க முடியாது. உதாரணமாக , சேர , சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், அனைவரும் தமிழ் மொழிபேசினாலும், ஒரே நாடாக இல்லாமல், பல நாடுகளாக பிரிந்து தான் இருந்தனர். ஆந்திரா மாநிலத்தில் சுமார் 9 கோடி மக்கள் தெலுங்கு பேசும் மக்கள். 1955-56 ஆம் ஆண்டில், பழைய மதராஸ் ராஜதானியில் இருந்து ஆந்திரப்பிரதேசம் என்ற பெயரில் புதிய மாநிலம் தெலுங்கு பேசும் மக்களை கொண்டு உருவாக்கப்பட்டது. சுமார் 57 வருடங்கள் ஆன பின்னர் ,இப்போது தெலுங்கானா , சீமாந்திரா என்ற பெயர்களில் பிரிவினை செய்ய வன்முறை, அமைதி இன்மை தலைவிரித்தாடுகிறது. தெலுங்கு மொழி , அந்த மொழி பேசும் மக்களை ஒற்றுமைப் படுத்த முடியவில்லை. எனவே மதம், மொழி ஆகியவை மக்களை ஒற்றுமைப் படுத்த முடியாது. சில ஆபிரகாமிய மூடர்களும், வெறியர்களும் உலகம் முழுவதும் ஒரே மதத்தைப் பின்பற்றவேண்டும் என்று அறியாமையாலும், பகுத்தறிவு இல்லாததாலும் , ஷியா, அகமதியா, பஹாய், மற்றும் 90 -க்கும் மேற்பட்ட வகைகள் உள்ள கிறித்தவர்கள் ஆகியோரை , வஹாபிகள் கோடிகணக்கில் கொன்று குவித்து , உலகில் வன்முறை வெறியாட்டம் ஆடுகின்றனர்.

  இப்போதைய காங்கிரஸ் ஒரு வஹாபி அஜெண்ட் ஆகும். எனவே இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

 7. ராபர்ட் வதேரா டி.எல்.எப் உடன் சேர்ந்து உத்தரகண்டிலும், ஹிமாசலிலும் செய்த ஊழல் விஷயத்தில் காங்கிரஸ் எடுத்த எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?

  இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த கெம்கா என்ற அதிகாரி மீது எடுக்கப் பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து ராகுலின் கருத்து என்ன?

 8. விஜய் தி.வியில் சிவகார்த்திகேயன் பிரபலமாகக் காரணமாக அமைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று – அது இது எது என்ற நகைச் சுவை நிகழ்ச்சி.

  அந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதி – மாற்றி யோசி – நடத்துனர் கேட்கும் கேள்விக்குச் சம்பந்தமில்லாமல் பதில் தரவேண்டும்.

  அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது போலவே இருந்தது அர்னாப் எடுத்த ராகுல் பேட்டி.
  கேள்விக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் ஒவ்வொரு பதிலும் அமைய, சிரிக்காமல் பேட்டி எடுத்த அர்னாப் திறமை சாலி. அப்படியும் ஓரிரு சமயம் மெல்லிய புன்னகையை வீசி அர்னாப் தப்பித்தார்.

  ‘உன் கல்வித் தகுதி என்ன’ என்ற கேள்விக்குப் பதிலாக அர்நாப்பை நோக்கி ‘உன் கல்வித் தகுதி என்ன’ என்று கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ராகுலை முன்னிறுத்தும் காங்கிரஸ்காரர்களை நினைத்தால் வெறுப்பே மிஞ்சுகிறது.

  எகனாமிக்ஸ் அல்லது வரலாற்றுப் பாடப் பரிட்சையில் விடை தெரியாத மாணவன் பக்கத்தை நிரப்பச் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பதிலைப் பக்கம் பக்கமாக எழுதிவிட்டு வருவது போல ராகுலின் ஒவ்வொரு பதிலும் அமைந்தது.

 9. தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவியர்கள் கடந்த 10 நாட்களாக தேனி மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், இந்தியாவின் அடுத்த பாரத பிரதமர் நரேந்திரமோடி தான் வரவேண்டும். மோடி வந்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

  இந்த கல்லூரி மாணவ–மாணவியர்கள் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 16 கல்லூரிகளில் 4,826 மாணவ–மாணவியர்கள் கலந்து கொண்டதில், 4,159 பேர் மோடி தான் பிரதமராக வேண்டும் என்று தங்களது கருத்தினை பதிவு செய்துள்ளனர்.

  அதுபோல 11,200 பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்து கணிப்பில், 9,600 பேர் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என்று தங்களது கருத்தினை பதிவு செய்துள்ளனர். நிச்சயம் இந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி தாக்கம் காரணமாக , பாஜக அணி தமிழகத்தில் நிச்சயம் பெரு வெற்றி பெற வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

 10. கல்லூரி மாணவர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில் 4159 / 4826 அதாவது 86.179 % மாணவர்கள் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

  பொது மக்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில் 9600/ 11200 அதாவது 85.714 % மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்புக்கள் மாதிரி வாக்கெடுப்பு தொடர்பான சரியான சாம்பிள் ( மாதிரி) மூலம் எடுக்கப்பட்டது ஆகும். இம்முறை தமிழகம் நல்ல பாதையில் பயணிக்க இருக்கிறது என்பது உறுதி. கழகங்களுக்கு இம்முறை அதிர்ச்சி வைத்தியம் கிடைக்க உள்ளது.

 11. Dear All
  After the interview(of raghul) the whole social media makes
  makes fun of him & to everybody”s surprise, the ignorance of
  raghul has come out. I watched the interview and wanted raghul
  to go to school from LKG. VN.AVN.

 12. முதலில் அவர் ராகுல் காந்தி அல்ல, ரௌல் வின்சி, அது தான் அவரது பெயர், நாம் முதலில் அவரை அவரின் உண்மை பெயரில் விளிக்க தலை படுவோம், அதுவே அனைவருக்கும் கண் திறப்பாக அமையும்.

 13. Arnab Goswami came home tired and irritated.
  His wife asked him, ‘Shall we have dinner?’
  Arnb replied, ‘The moon is white.’
  His wife was confused. She said, ‘Shall we go out for
  dinner?’
  Arnab replied, ‘Traffic signal consists of Red, Yellow
  and Green color.’
  His wife was surprised and worried. She said, ‘Shall we
  have Chinese food today?’
  Arnab replied, ‘A Zoo has many animals.’
  Now his wife could not take it anymore. She said, ‘Why
  are you not answering my questions? Why are you giving some irrelevant answers? I am getting fed up…’
  Arnab replied compassionately, ‘Sorry Darling. I just wanted to make you experience what I have
  undergone in the last two hours in the studio. I have just now recorded first ever interview of Pappu, aka Rahul Gandhi. (Praveen Shukla- Hinduvoice)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *