நாடு முழுவதிலும் மோடி புயல்

தமிழக  தே.ஜ.கூட்டணி அறிவிப்பு கூட்டத்தில்...
தமிழக தே.ஜ.கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில்…

16 வது லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, மோடி புயலின் வேகம் அதிகரிப்பது க்ண்கூடாகவே தெரிகிறது, மார்ச் 14-ம் தேதி வெளியான என்.டி.டி.வி.கருத்துக் கணிப்பின்படி, அவர்கள் ஆய்வு செய்த 319 தொகுதிகளில் 166 தொகுதிகளை வெல்லும் நிலையில் தே..கூட்டணி உள்ளது தெரியவருகிறது. இதில் பாஜக மட்டுமே 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. (இக்கருத்துக் கணிப்பு தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி உருவாகும் முன்னர் எடுக்கப்பட்டது. தமிழகத்திற்கு இக்கணிப்பு பொருந்தாது)

அதாவது தே..கூட்டணியின் வெற்றி வாய்ப்பு சதவிகிதம் 60 சதவிகிதத்தையும் தாண்டியுள்ளது. இதே நிலை தேர்தல் வரை நீடித்தால் பாஜக தலைமையிலான கூட்டணி 300-க்கு மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்பது உறுதி.

காண்க: என்.டி.டி.வி. தேர்தல் கணிப்புகள்

பாஜகவுக்கு சாதகமான காற்று வீசுவதற்குச் சான்றாக, பல மாநிலங்களிலும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் ஒருகாலத்தில் தீண்டத் தகாத கட்சியாகக் கருதப்பட்ட பாஜக, இப்போது திமுகஅதிமுக கூட்டணிகளுக்கு நிகராக பெரிய கூட்டணியை உருவாக்கி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தே.ஜ.கூட்டணி தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பு விழாவில்,  ‘கேப்டன்’ விஜயகாந்த், மருத்துவர் அன்புமணி ராமதாஸ், வைகோ, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து ஊடகங்களின் ஹேஸ்யங்களை முறியடித்தபோது மோடி புயலின் விளைவை உணர முடிந்தது. இதைவிட பல அரிய அரசியல் நிகழ்வுகளை நாடு முழுவதும் காண முடிகிறது.

தலித் தலைவர் உதித்ராஜின் வருகை
தலித் தலைவர் உதித்ராஜின் வருகை

குறிப்பாக, பீகாரில் லோக்ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பஸ்வான் தே..கூட்டணியில் சேர்ந்தது பெரும் அரசியல் திசைமாற்றத்தை வெளிப்படுத்தியது. 2003-ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் சென்ற இவரது மீள் வருகை, தலித் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு பெருக வழிவகுத்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவில் இந்திய குடியரசுக் கட்சியின் ராம்தாஸ் அதவாலே, .பி.யில் தலித் தலைவர் உதித்ராஜ் ஆகியோரின் வருகை பாஜகவின் பலத்தை அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியும் பாஜக அணியில் சேர்ந்துள்ளது.

மகராஷ்டிராவில் ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா, சுவாபிமானி பக்ஷா ஆகிய கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. ஏற்கனவே இங்கு சிவசேனை வலுவான தோழமைக் கட்சியாக உள்ளது. போதாக்குறைக்கு, சிவசேனாவில் இருந்து பிரிந்து மகராஷ்டிர நவநிர்மான் சேனாவை நிறுவிய ராஜ்தாக்கரே, மோடி பிரதமராவதற்கு தனது கட்சி உதவும் என்று அறிவித்துள்ளார். பாஜக போட்டியிடும் பல தொகுதிகளில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

பாஜக ஆளும் கோவாவில், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஏற்கனவே கூட்டாளியாக உள்ளது. இங்கு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு மீதான நல்லெண்ணமும் பாஜகவின் வெற்றிக்கு உதவும்.

தெலுங்கானா பிரச்னையால் காங்கிரஸ் கட்சி நிலைகுலைந்துள்ள ஆந்திரப் பிரதேசத்திலும் தே..கூட்டணி நல்ல நிலையில் உள்ளது. இங்கு பாஜகவுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசமும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் போட்டி போட்டன. இறுதியில் தெலுங்குதேசம் கூட்டணியில் ஐக்கியமாக உள்ளது. இக்கட்சி ஏற்கனவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தோழமைக் கட்சியாக இருந்தது. அதேபோல, தெலுங்கானா பகுதியில், தனி மாநிலத்திற்காகப் போராடிய தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ் மோடி அணியில் இணையப் போவதாகத் தகவல். தவிர, சீமாந்திராவில், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் துவங்கியுள்ள ஜனசேனா கட்சியும், ஜெயபிரகாஷ் நாராயணனின் லோக் சதா கட்சியும் கூட தே.ஜ.கூட்டணியில் சேர உள்ளன. மொத்தத்தில் சென்ற முறை காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க பெருமளவில் உதவிய ஆந்திராவில் இப்போது பாஜக அலை வீசுகிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் கூட, தேர்தலுக்குப் பிறகு மோடியை ஆதரிக்க வாய்ப்புள்ளது.

என்.டி.டி.வி. தேர்தல் கருத்துக் கணிப்பு
என்.டி.டி.வி. தேர்தல் கருத்துக் கணிப்பு

பாஜக ஆண்ட மாநிலமான கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது கர்நாடக ஜனதா பக்ஷா கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டார். பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவனர் ஸ்ரீராமுலுவும் பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டார். பிரிந்துசென்ற பாஜகவின் தலைவர்கள் பலரும் தாய்க் கட்சியில் சங்கமிப்பதன் விளைவாக பாஜகவின் வலு அதிகரித்துள்ளது. இது வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.

தமிழகத்தில் மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தேசிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை பாஜகவுடன் தேர்தல் கூட்டணி கண்டுள்ளன. பாண்டிசேரியில், மாநில முதல்வர் ரங்கசாமியின் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தே..கூட்டணியில் அங்கமாகிவிட்டது. தமிழகத்தில் மேலும் பார்வர்டு பிளாக் (வல்லரசு), புதிய மார்க்சிஸ்ட் கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.

கேரளத்திலும் கூட, கேரள புலைய மகா சபா பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. நாராயணகுருவின் வழிவந்த எஸ்.என்.டி.பி. இம்முறை தனது அரசியல் சாரா நிலைப்பாட்டை (காங்கிரஸ் சார்பு) மாற்றிக்கொள்ளும் என்றும் தெரியவருகிறது. எல்லாம் மோடி செய்யும் மாயம்.

ஹரியானாவில் பஜன்லாலின் ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் கட்சியும் தே..கூட்டணியில் உள்ளது. தவிர, சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சி பாஜகவின் நட்புக் கட்சியாக உள்ளது. பஞ்சாபில் நெடுநாள் கூட்டாளியான சீக்கிய மக்களின் ஆதரவு பெற்ற சிரோமணி அகாலிதளம் பாஜகவின் நமபகமான துணைவனாக உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களிலும் இம்முறை மோடி சூறாவளி பலனைத் தரத் துவங்கியுள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கிறது. தவிர பி..சங்மா (தேசியவாத காங்கிரஸ்) தேர்தலுக்குப் பிந்தைய நட்புக் கட்சியாக மாறவும் வாய்ப்புள்ளது.

நாகலாந்தில் நாகா மக்கள் தேசிய முன்னணி தே..கூட்டணியில் சேர்ந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் கூர்க்கா மக்கள் விடுதலை முன்னணி பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கெகாங் அபாங் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருப்பது நல்ல அறிகுறி. மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களிலும் பழங்குடியினரின் கட்சிகள் சில பாஜக பக்கம் சாய்கின்றன.

அஸ்ஸாமில் அஸாம் கணபரிஷத் தலைவர்கள் பலர் கூண்டோடு பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். அங்கு இப்போது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாஜக உருவெடுத்துள்ளது. அஸ்ஸாம் கணபரிஷத் கட்சியும் தே..கூட்டணியில் சேர பேச்சு நடத்துகிறது.

அயோத்தி நாயகனின் மறுபிரவேசம்
அயோத்தி நாயகனின் மறுபிரவேசம்

உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பாஜகவுடனான ஊடல் தீர்ந்து, தனது ஜனகிராந்தி கட்சியைக் கலைத்துவிட்டு தாய்க் கட்சியில் சங்கமித்துவிட்டார். மேலும் பல சிறிய கட்சிகள் உ.பி.யில் தே..கூட்டணியில் சேர்ந்துள்ளன. குஜராத்தில் மோடியின் முன்னாள் சகாக்களும் அதிருப்தியால் பிரிந்து போனவர்களுமான கேசுபாய் பட்டேல், கோர்தன் ஜடாபியா ஆகியோர் தனிக் கட்சிகளை கலைத்துவிட்டு தாய்க் கட்சியில் இணைந்துவிட்டார்கள். பாஜக தனது பலவீனங்களை உணர்ந்து சரிசெய்துகொண்டிருப்பது அக்கட்சியின் வெற்றிவாய்ப்புகளை பல மடங்காக்கி உள்ளது.

உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் பாஜகவின் நட்புக் கட்சிகள் கூடியுள்ளன. ஒடிசாவில் ஆளும் நவீன் பட்நாயக்கிற்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தில்லியில் அகில பாரதீய பாசி சமாஜ் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் லடாக் மக்கள் கட்சியும் காஷ்மீர பாந்தர் கட்சியும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணித் தோழர்களாக மாறும் வாய்ப்புள்ளது.

இவ்வாறாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அருணாசலம் முதல் குஜராத் வரை தே..கூட்டணி வலிமை பெற்று வருகிறது. நாடு முழுவதிலும் எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பாஜகவின் எதிரிக் கட்சிகளிலிருந்து விலகி விபீஷண சரணாகதி அடையும் தலைவர்களின் பட்டியலும் நீண்டுவருகிறது. பீகாரில் லாலுவின் வலக்கரமான ராம்கிருபால் யாதவும், அஸ்ஸாமில் பிரபுல்லகுமார் மொகந்தாவின் வலக்கரமான ஹிதேந்திர கோஸ்வாமியும் சில உதாரணங்கள். தமிழகத்தில் திமுக தலைவரின் மகன் மு.க.அழகிரி வெளிப்படையாக மோடியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டார்.

நாட்டிற்கு நல்லகாலம் பிறந்துவிட்டது. அதன்விளைவாகவே, பாஜகவின் வலுவை அதிகரிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இதற்கு மோடி அலையும் முக்கிய காரணமாகியுள்ளது. 1998- 2004–இல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 23 கட்சிகள் அங்கம் வகித்தன. 2014-இல் அந்த எண்ணிக்கை இருமடங்காகும் நிலைமை காணப்படுகிறது.

எங்கும் வீசும் காவி அலை!
எங்கும் வீசும் காவி அலை!

மறுபுறமோ, காங்கிரஸ் தனது தோழமைக் கட்சிகளை இழப்பதுடன், அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட மறுத்து ஓட்டமெடுக்கும் நிலையைக் காண முடிகிறது. இடதுசாரிகளின் பாஜக எதிர்ப்பரசியல் செல்லாக்காசாகி வருவதையும், மூன்றாவது அணி தேர்தலுக்கு முன்னரே காணாமல் போகும் நிலையையும் அவதானிக்க முடிகிறது. தேர்தல் நாள் நெருங்கும்போது இன்னமும் பல அரசியல் அதிசயங்களை நாடு காணும் என எதிர்பார்க்கலாம்.

 

8 Replies to “நாடு முழுவதிலும் மோடி புயல்”

  1. பாஜகவின் வெற்றிக்கு பின்புலமாக செயல்படுவது காங்கிரசின் ஊழல்களும், அளவுகடந்த அயோக்கியத்தனங்களும் தான். பாஜகவிற்கு குழி பறிக்க திட்டமிட்டு ஆம் ஆத்மியை வளர்த்தால், பாஜக ஓட்டை பிரித்து தாங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டு, ஆம் ஆத்மியை டெல்லியில் வளர்த்துவிட்டனர். கண்ட பலன் என்னவெனில், ஆம் ஆத்மி காங்கிரசின் ஓட்டினை சுத்தமாக உறிஞ்சி எடுத்துவிட்டது.

    ஏப்ரல், மற்றும் மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் இந்தமுறை நாடுமுழுவதும் முதல்முறையாக் வாக்குப் பதிவு 70 முதல் 80 சதவீதம் வரை நடக்க இருக்கிறது. பல அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி ஆகும். இந்த தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து, முலயாம், லல்லு, மாயா, கம்யூனிஸ்டுகள், நிதீஷ்குமார், திமுக ஆகியோர் காணாமல் போகப்போகிறார்கள். குடும்ப அரசியல் இம்முறை ஒழிக்கப்படும். 2ஜி நாயகர்கள் மண்ணைக் கவ்வுவார்கள்.

    தமிழக அரசியலில் ஈடுபட்டு கடந்த 47 வருடங்களாக மன ஊழல் மற்றும் பொருள் ஊழல் இரண்டிலும் கொடிகட்டிப்பறக்கும் திராவிட இயக்கங்கள் முடிவுக்கு வரும். தமிழகம் மற்றும் பாண்டி உட்பட 40 இடத்தில் 30 இடங்களில் அதிமுகவும் பத்து இடங்களில் பாஜக கூட்டணியும் வெல்லும். இந்தியா வாழ்க இந்திய ஜனநாயகம் வாழ்க.

  2. ஹிந்து ஹ்ருதய சாம்ராட் அவர்களுக்கு ஜெய்.

    புளுகுமுட்டை அரவிந்த கேசரிவால் தன் சொத்து விபரத்தை டெல்லி தேர்தலின் போது தவறாக தேர்தல் கமிஷன் பால் சமர்ப்பித்தது

    https://www.niticentral.com/2014/03/20/case-of-perjury-and-fraud-against-arvind-kejriwal-201561.html

  3. வானவில் கூட்டணி என்று சொல்லப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேமுதிகவிற்கு 14 இடங்கள் ஒதுக்கியது சற்றே நெருடலானது. மதிமுகவின் வைகோ நம்பத் தகுந்தவர். அவரிடமுள்ள ஒருகுறை அளவுக்கும் யதார்த்தத்துக்கும் மீறிய புலி பாசம். பாமகவின் நம்பகத்தன்மையும் அளவுக்கு மீறிய ஆசையும் எத்தகைய பலனைத் தரும் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ராஜதந்திர முறையில் பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும். உட்கட்சி பூசல் எனும் வியாதி பாஜகவையும் விட்டு வைக்கவில்லை எனும்போது வருத்தமாயுள்ளது. இரண்டு கழ -கங்களுக்கும் மாற்று என்று தேஜகூ சரியான முறையில் உழைத்தால் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெறலாம்.

  4. காமெடியான கூட்டணி… சிரிப்புதான் வருகிறது… பிஜேபிக்கு இந்த நிலைமையா என மனசு அல்லாடுகிறது… ஆனாலும் தமிழகத்தை தவிர்த்து பார்த்தால் நிச்சயம் பிஜேபி தலைமையிலான ஆட்சிக்கு கட்டியம் கூறுகின்றது காலம். பிரதாப் சார் உங்களுக்கு ஒரு கேள்வி.. ஊழல் என்று பேசும் நீங்கள் ஜெயலலிதாவை விட்டு விட்டது ஏனோ ???

  5. அன்புள்ள sarav,

    ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பர் நம் மூதாதையர்கள். அதுபோலத்தான் இன்று தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் எம் ஜி ஆர் கட்சி உள்ளது. திமுகவினரைப்போலவோ, காங்கிரஸ் கொள்ளையர்களைப் போலவோ , அதிமுகவினர் மீது இப்போது கடுமையான ஊழல் புகார்கள் கிடையாது. நிற்க, அதிமுகவில் குடும்ப ஆட்சி எப்போதும் கிடையாது.( 1991-96 நீங்கலாக ) வரலாறு உணர்த்தும் பாடம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

    அந்தப் பாடம் என்ன ?

    இந்தியா 1947-ஆம் வருடம் சுதந்திரம் அடைந்தபோது, காங்கிரஸ் என்ற கட்சி ஆட்சிக்கட்டில் ஏறியது. அப்போது பல யோக்கியர்களும் கூட அந்த கட்சியில் இருந்தார்கள் என்பது நம்பமுடியாத உண்மை. வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், காமராஜர், கக்கன், என்று தியாகிகளும் கூட இருந்தனர் என்பதை நாடு இனி நம்பாது. 30- ஆண்டுகளில் சனி ஒரு முறை சூரியனை சுற்றிவரும் என்பது அனைவரும் அறிந்தது. சனியின் முதல் சுற்றின் முடிவில், அதாவது 1947- 1977 காலம் முடிந்தபோது, காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு , அவசரநிலை முடிவில், காங்கிரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் சாவுமணி அடித்தனர். ஜனதா கட்சி ஆட்சிப்பீடம் ஏறியது. இது ஒரு முக்கிய மாறுதல். இதற்கு சனியின் நிலை ஒரு காரணம்.

    இரண்டாவது காலக்கட்டத்தில் இந்திராகாந்தி 1984- ஆம் ஆண்டு இறந்தபோது, இராஜீவ் தலைமையிலான இந்திராகாங்கிரஸ் கட்சி , 1984-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு , சுமார் 400-க்கும் மேற்பட்ட இடங்களைப்பெற்றது. சனியின் இந்த சுற்று 1984-2014 இப்போது முடிவடைகிறது. எனவே, 1984-லே உச்சம் பெற்ற காங்கிரஸ் 2014- ஆம் ஆண்டு , அதலபாதாளத்துக்குப் போகவிருக்கிறது. இந்த முறை இருபதிலிருந்து, முப்பதுகூட கிடைக்காது என்று பல்லுப்போன பாட்டி கூட சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

    அரசியல் கட்சிகள் பதவியைப் பிடிப்பதும், பதவியை இழப்பதும் ஒன்றும் புதுமை இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி புதைகுழியில் அமிழ்ந்து கொண்டு இருக்கிறது. காரணம், சர்வாதிகாரம், குடும்ப ஆட்சி, கொள்ளை ஊழல்கள் , மற்றும் உள்கட்சி ஜனநாயகம் இன்மை என்று சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் நாட்டில் வெட்கம் இல்லாத இந்திராகாங்கிரஸ் கட்சி , எவன் முதுகிலாவது ஏறி சவாரி செய்து மத்திய ஆட்சியைப் பிடித்து வந்தது. இம்முறை எவனும் சீந்தவில்லை. எட்டி உதைக்காத குறையாக ஆகிவிட்டது. 1977- மற்றும் 1989- ஆகிய ஆண்டுகளில் தனித்துப்போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து பின்னர் நடந்த தேர்தல்களிலும் தனித்துப் போட்டி இட்டிருந்தால், நிச்சயம் ஆட்சிக்கட்டிலில் ஏறியிருந்திருக்கும். என்ன செய்வது? இன்னமும் ஓரிரு நல்லவர்கள் அந்த கேடுகெட்ட கட்சியில் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய பெரியவர் ஞான தேசிகனைப்போல. அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    நான் மேலே கூறியிருக்கும் சனியின் சுற்று விளைவுகள் உண்மையானவை. பெரியார் திடல் பரிசுத்த ஆவிப்பூசாரி திகவீரமணி போன்றவர்கள் தலைகீழாக சொம்படித்தாலும், காங்கிரசின் அழிவை தடுக்க முடியாது. இந்தியா மீண்டும் ஒரு புதிய காற்றை சுவாசித்து மேலும் மேலும் மலரும். இந்திய ஜனநாயகத்தில் எவ்வளவோ அசிங்கங்கள் இருந்தாலும், எவ்வளவோ நல்ல விஷயங்களும் இருக்கின்றன.

    எமெர்ஜென்சி காலத்தில் நமது ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டது, மக்கள் காங்கிரசை தூக்கி எறிந்து ஜனநாயகத்தை காப்பாற்றினர். இப்போது 2014-லே நாட்டுக்கே காங்கிரஸ் கட்சியால் பேராபத்து வந்துள்ளது. நம் நாட்டை இம்முறையும் மக்கள் நிச்சயம் காப்பாற்றி காங்கிரசுக்கு சாவுமணி அடிக்க போகிறார்கள்.

    இந்தியா மேலும் மேலும் வாழும். மேலும் மேலும் இந்திய ஜனநாயகம் வெல்லும். வையகம் வளமுடன் வாழ்க.

  6. நாடு முற்றிலும் திரு மோடி அலை வீசுகிறது. திரு வைக்கோவுடன் கூட்டு சேர்ந்தீர்கள். பரவாயில்லை. நல்லவர். ஒழுக்கமானவர். பின்னர் ஏனைய்யா போயும் போயும் சாதிக்கார சல்லிகள் பாமக, சினிமாக்கார சல்லி விஜயகாந்த் போன்றவற்றோடு கூட்டணி வைத்து சீட்களை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டீர்கள்? இந்த ஈனர்களை ஏன் வளர்த்துவிடுகிறீர்கள்? சினிமாக்காரனோ சாதிக்காரனோ வளர்ந்தால் இந்த சமுதாயத்திற்கு நல்லதா? திமுக அதிமுக வுக்குத்தான் சரி தப்பு மேல் கீழ் எதுவும் கிடையாது. நமக்கும் அப்படித்தானா? என்ன போங்கள்? 30 சீட்டில் பாரதிய ஜனதாவே தனித்து நின்றிருக்கலாம். மிக நல்ல வாய்ப்பு. வீணடித்து விட்டீர்கள்.

  7. As expected, the BJP alliance is struggling in tamilnadu. Only Vijaykanth has taken to campaign for his alliance candiates. But the other party leaders of the BJP, MDMK & PMK are campaigning only for their party candidates.

    This is against the spirit of the alliance.

    Now Vijaykanth is only doing the same in his 2nd round of camapaign, since other party leaders are not campaigning for his party candidates, which is natural.

    Also, the squabble amongst the BJP leaders is a dampner. Ila ganesan cannot see eye to eye with pon radhakrishnan.

    If the BJP alliance manages to win even a couple of seats in TN, it is a miracle.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *