சனி பிடித்த குரு

சயன்ஸ் சானலில் சூரிய குடும்பம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். சூரிய குடும்பம் உண்டான போது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்ததாக தெரிகிறது.அவை ஒன்றுடன், ஒன்று மோதி அழிந்து, வலுவான கிரகங்களின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கபட்டு தற்போது உள்ள கிரக அமைப்பு உருவானது.

கிரகங்கள் உருவானது எப்படி? பெருநட்சத்திரம் ஒன்று அழிந்து விண்வெளிதூசு உருவானது.அந்த தூசுகள் ஒன்ரை ஒன்று ஈர்த்துகொண்டு கிரகங்களாக மாறின.ஹைட்ரஜன் வாயு துகள்கள் ஒன்றையொன்று ஈர்த்து கொண்டு சூரியனாக மாறியது.ஈர்ப்பு விசையால் கிரகங்கள் சூரியனை சுற்றி வர துவங்கின.சூரியனுக்கு அருகே உள்ள நாலு கிரகங்களும் பாறையால் ஆனவை (மெர்குரி,வீனஸ், எர்த், மார்ஸ்).ஜூபிடரும் சாடர்னும் வாயுக்களால் ஆனவை.நெப்டியூனும், யுரானசும் பாறையை சுற்றி வாயு என்ற காம்பினேஷனில் ஆனவை.

சூரியனுக்கு அருகே தான் பாறை கிரகங்கள் உருவாகும்.ஆனால் சூரியனுக்கு இத்தனை தொலைவுக்கு அப்பால் பாறை கிரகங்கள் உருவானது எப்படி என மண்டையை பிய்த்து கொண்ட விஞ்ஞானிகள் யுரானசும், நெப்டியூனும் தற்போது உள்ள இடங்களில் உருவாகியிருக்க சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.இந்த கிரகங்கள் சூரியனுக்கு அருகே உருவானவை.முன்பு இவற்றின் பாதை அருகே ஜூபிடரும், சாடர்னும் (குருவும் சனியும்) ஒரே நேரத்தில் வந்தன.அப்போது அவற்றின் ஈர்ப்பு விசை இந்த இரு கிரகங்களையும் சூரிய குடும்பத்தை விட்டு உந்தி தள்ளியது.

மணிக்கு மில்லியன்கணக்கான கிமி வேகத்தில் சூரிய குடும்பத்தை விட்டு தூக்கி எறியப்பட்ட இந்த இரு கிரகங்களையும் அஸ்டிராயிட் பெல்ட் என அழைக்கபடும் விண்கற்கள் பெல்ட் பிரேக் போட்டது போல அடித்து நிறுத்தி வேகத்தை குறைத்து சூரிய குடும்பத்தினுள் தக்க வைத்தது.அதன்பின் சூரியனுக்கு மிக அருகே இருந்த நெப்டியூன் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாக மாறி ஏக்கத்துடன் சூரியனை சுற்றி வர தொடங்கியது.

குருவுக்கு சனி பிடித்தால் விளைவு இப்படிதானே இருக்கும்?:-)

அப்புறம் சூரியனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சூரியனின் மேற்பரப்பில் லிதியம் எனும் வாயு இருப்பதை கண்டு அதிசயித்தனர்.லிதியம் வாயு எங்கே எப்படி வந்தது என ஆராய்ந்ததில் சூரியனுக்கு அருகே முன்பு ஒரு காஸ் ஜெயண்ட் பிளானட் (ஜூபிடரை போல) இருந்ததும் அந்த கிரகம் சூரியனின் ஈர்ப்பு சக்தியால் இழுபட்டு சூரியன் மேல் மோதி தன்னிடம் இருந்த லிதியத்தை சூரியனுக்கு தாரை வார்த்ததாகவும் கண்டுபிடித்தனர்.

நம் நிலவு உருவாக காரனமும் இப்படி ஒரு கிரக மோதல் தனாம்.பூமிக்கு முன்பு தியா என்ர துணை கிரகம் இருந்ததாம்.அது ஒரு நாள் பூமியின் மேல் மோதியது.அப்போது பெரும் அளவில் பாறை துணுக்குகள் விண்வெளியில் வீசப்பட்டன.நாளடைவில் அவை ஒன்றை ஒன்று ஈர்த்து கொண்டு நிலவாக மாறின.

பூமியோடு மோதிய தியா பூமியால் உள்ளிழுக்கபட்டு பூமியின் பரப்பளவை மேலும் அதிகரித்தது.தியாவின் இரும்பு கோரை (அடி) பூமி உள்ளிழுத்து தன் மையத்தில் தக்க வைத்து கொண்டது.

saturn_jupiter

தியா என்பது செவ்வாய் கிரகம் அளவு பெரிய கிரகம்.அது பூமியின் மேல் விழுந்தபோது லட்சகணக்கான அணுகுண்டுகள் வெடித்ததற்கு ஒப்பான விளைவுகள் ஏற்பட்டன.பூமியே பிளந்தது.அந்த சூட்டில் தியாவின் மேற்பரப்பு துண்டு,துண்டாக சிதறி பாறையாக,கல்லாக,மண்ணாக விண்வெளியில் தூக்கி வீசப்பட்டன.

தியாவையும், பூமியையும் மாங்கனியாக கற்பனை செய்து கொள்ளுங்கள் மாங்கனிக்கு நடுவே கொட்டை, மேற்புரம் கெட்டியான பழம்,அதை மூடும் தோல்..அதே மாதிரிதான் பூமிக்கும், தியாவுக்கும் நடுவே இரும்பு கோர்.அதை சுற்றி பாறை போன்று இறுகிய மேன்டில், மேற்புரம் ஜுஸ் போல இளகிய திரவ நிலையில் இரும்பு.அதற்கு மேற்புரம் மீண்டும் பாறை.அதற்கு மேலே நாம்.

இப்படி இரு மாங்கனிகள் ஒன்றின் மேல் ஒன்று பலத்த வேகத்துடன் மோத கியா மாங்கனியின் மேற்புரம் முழுக்க விண்வெளியில் தூக்கி வீசப்பட்டது.பூமியிம் பிளந்தது.தியாவின்நடுவே இருந்த இரும்பு கோர் பூமியின் உள்ளே இழுக்கபட்டது.அது பூமியை துளைத்து கொண்டு உள்ளே போய் பூமிக்கு நடுவே இருந்த இரும்பு கோருடன் கலந்துவிட்டது.

அதபின் தூக்கி வீசப்பட்ட துகள்களில் சில பகுதிகள் பூமியால் ஈர்க்கபட்டு விழுந்தன.தியா பூமியில் விழுந்ததால் உண்டான குழி இதனாலும் பிளேட் டெக்டானிக்ஸாலும் மூடபட்டது . சொல்லபோனால் அதபின் பலமில்லியன் வருடங்களுக்கு பூமியின் மேற்புரம் உருகிய இரும்பாகவும், பாறையாகவும் திரவ வடிவில் இருந்தது,இறுகியது,மாறியது.தியாவின் சில பகுதிகள் புவியீர்ப்பு வெளிக்கு வெளியே சென்றாலும் பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுபட்டு பூமியை சுற்றி வர துவங்கின.தற்போது சனிகிரகத்துக்கு ஒரு வளையம் இருப்பது போல பூமிக்கும் வளையம் உண்டானது.நாளடைவில் அந்த வளையத்தில் இருக்கும் பாறைகள் ஒன்றை ஒன்று ஈர்த்து கொண்டு சுழற்சி வேகத்தில் நிலவாக மாறின.

பிளேட் டெக்டானிக்ஸ் கண்டங்களையே நகர்த்தும் சக்தி வாய்ந்தது. இந்தியா முன்பு ஆபிரிக்காவின் மடகாஸ்கருடன் ஒட்டிகொண்டு இருந்தது.தென்னமெரிக்காவும், ஆபிரிக்காவும் மறுபுறம் ஒட்டிகொண்டு இருந்தன.பிளேட் டெக்டானிக்ஸ் விளைவால் இந்தியா ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியிலிருந்து மெலே தூக்கி வீசப்பட்டு ஆசியாவின் மேல் வந்து மோதியது.அந்த மோதலின் விளைவாக இந்தியாவின் விளிம்பும், ஆசியாவின் விளிம்பும் மேலே உயர்ந்து இமயமலை ஆகின.

இந்தியாவும், இமயமும், கங்கையும் பிறந்த கதை இதுவே!!!!

5 Replies to “சனி பிடித்த குரு”

 1. தியாவோட மேற்பரப்பு தூக்கி எரியப்பட்டது…ஓகே ஆனால் அது ஒன்றோடு ஒன்று இணைய எப்படி சாத்தியமாகியிருக்கும்? வெப்பம் என்றால் அது எப்படி சிறிய பரப்புகளில் தங்கியிருக்கும்.கொஞ்சம் குழப்புது இருந்தாலும் விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்,ஏற்றுக்கொள்வோம்.

 2. உயர்திரு செல்வன் அவர்களுக்கு,

  எளிய தமிழில் ஒரு அருமையான விஞ்ஞானக் கட்டுரையை எழுதியதற்கு எனது பாராட்டுக்கள். இப்படிப்பட்ட கட்டுரைகள் நமது தமிழ் மொழிக்கு அழகு சேர்க்கும், அதைப் பெரும் வளமுடையதாகச் செய்யும். உங்கள் சீரிய பணி தொடர்க என்று வாழ்த்துகிறேன்.
  ====================

  உயர்திரு வடுவூர் குமார் அவர்களே,

  உங்கள் கேள்விக்கு என்னால் இயன்ற அளவு விளக்கம் கொடுத்திருக்கிறேன்.
  1. முதலில் கதிரவனைச் சுற்றி வந்த சிறு துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்த்து இணையத் துவங்கின.
  2. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல அவை பெரிதாகத் தொடங்கின.
  3. பெரிதானதும், அவைகளின் ஈர்ப்புச் சக்தியும் (gravitational pull) அதிகமாகத் தொடங்கியது.
  3. எனவே, பெரிய கோள்கள் சுற்றித் திரியும் சிறிய விண்கற்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டன.
  4. விழும் வேகத்தில், விண்கற்கள் வெடித்துச் சிதறி பெரும் பள்ளங்களை (craters) உருவாக்கின. இன்னும் அதை நாம் இவ்வுலகில் பல இடங்களில் காணலாம். சந்திரனில் நாம் காணும் நிழல்களும் அத்தகையான பெரும் பள்ளங்களே.
  5. இப்பொழுது தியா கோளை எடுத்துக் கொள்வோம்.
  6. அது மிகச் சிறிய விண்கல் அல்ல. அதுவும் ஒரு சிறிய கோளே ஆகும். கதிரவனைச் சுற்றி வந்த அது, பூமியின் ஈர்ப்புச் சக்தியினால், அதை நெருங்கி வந்து அதனுடன் மோதியது.
  7. அந்த மோதலில், இரு கொள்களுமே வெடித்துச் சிதறின. மோதிய வேகத்தில் தியாவின் பெரும் பாகம் பூமியின் உள்ளே சென்றது. அதன், மற்றும் பூமியின் வெளிப் பரப்புகள் துகள்களாகச் சிதறி, பல்லாயிரம் மைல்கள் விரிந்தன.
  8. அத்துகளில் பல பூமியிலேயே திரும்ப விழுந்து நொறுங்கின.
  9. ஆனால், ஒரு பெரிய துகள் மட்டும் தப்பித்து, மற்ற துகள்களை தன்பால் ஈர்க்க ஆரம்பித்தது.
  10. தன்னில் பெரிதாக இருக்கும் பூமியை வலம் வந்தபடியே தனது வடிவத்தைப் பெருக்க ஆரம்பித்த அந்தப் புதிய, ஆனால் உருவில் சிறிய அந்தக் கோள் மைய ஈர்ப்பு திசைக்கு எதிர் செல்லும் சக்தியால் (centripetal force), சிறிது சிறிதாக பூமியை விட்டு விலகிச் சென்று, சந்திரன் என்ற பெயருடன் பூமியை வலம் வரத் துவங்கியது.
  11. அது விலகிச் செல்லச் செல்ல, பல விண் கற்கள், சிறிதும் பெரிதுமாக அதன் மேல் விழுந்து அதன் உருவத்தைப் பெரிதாக்கின.
  12. சந்திரன் இன்னும் பூமியை விட்டு சிறிது சிறிதாக விலகிச் சென்றுகொண்டுதான் இருக்கிறது என்றும், அது ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தூரம் விலகுகிறது என்றும் விஞ்ஞானிகள் கணக்கிட்டு இருக்கிறார்கள்.
  ஒருவழியாக உங்கள் கேள்விக்கு என்னால் இயன்ற அளவுக்கு விளக்கம் அளித்திருக்கிறேன். Bore அடித்திருந்தால் மன்னிக்கவும்.

 3. உயர்திரு வடுவூர் குமார் அவர்களே,

  என் விளக்கத்தில் ஒரு சிறு தவறு இருக்கிறது. 10ம் விளக்கத்தில் centripetal force என்று தவறாக எழுதி விட்டேன். மைய எதிர்ப்பு விசை (centrifugal force) என்று எழுதி இருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.

 4. Hi Selvan, Sorry to type things in English. Just I came across this article and when I cross-referenced against NatGeo your concept on uranus as solid planet is differing from the scientific fact. I’m not sure how or where you got your facts, my guess your pointing to the core rocky area. Please give your update on this in order to I perceive it correctly and pass on to the younger generation

  I’ve given the ref in this link https://science.nationalgeographic.com/science/space/solar-system/uranus-article/

  Thanks,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *