சனி பிடித்த குரு

சூரியனுக்கு அருகே தான் பாறை கிரகங்கள் உருவாகும்.ஆனால் சூரியனுக்கு இத்தனை தொலைவுக்கு அப்பால் பாறை கிரகங்கள் உருவானது எப்படி என மண்டையை பிய்த்து கொண்ட விஞ்ஞானிகள் யுரானசும், நெப்டியூனும் தற்போது உள்ள இடங்களில் உருவாகியிருக்க சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.இந்த கிரகங்கள் சூரியனுக்கு அருகே உருவானவை.முன்பு இவற்றின் பாதை அருகே ஜூபிடரும், சாடர்னும் (குருவும் சனியும்) ஒரே நேரத்தில் வந்தன.அப்போது அவற்றின் ஈர்ப்பு விசை இந்த இரு கிரகங்களையும் சூரிய குடும்பத்தை விட்டு உந்தி தள்ளியது…. தியாவையும், பூமியையும் மாங்கனியாக கற்பனை செய்து கொள்ளுங்கள் மாங்கனிக்கு நடுவே கொட்டை, மேற்புரம் கெட்டியான பழம்,அதை மூடும் தோல்..அதே மாதிரிதான் பூமிக்கும், தியாவுக்கும் நடுவே இரும்பு கோர்.அதை சுற்றி பாறை போன்று இறுகிய மேன்டில், மேற்புரம் ஜுஸ் போல இளகிய திரவ நிலையில் இரும்பு.அதற்கு மேற்புரம் மீண்டும் பாறை.அதற்கு மேலே நாம்…

View More சனி பிடித்த குரு

காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி

1959ம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவின் பானுமதிக்கு அளித்த பேட்டியில் சேகுவேரா “லத்தீன் அமெரிக்காவில் மக்கள் கடும் ஏழ்மையால் துன்பபடுகிரார்கள். உங்கள் ஊரில் காந்தி இருந்தது போல் எங்கள் ஊரில் அவர்களை நல்ல வழிக்கு கொன்டுவர தலைவர்கள் இல்லை. அதனால் நான் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது” என்றார். காந்தியின் சத்தியாகிரகம், அகிம்சை அனைத்தும் அவருக்கு பிடித்ததாக கூறினார். ஊருக்கு திரும்பியதும் காஸ்ட்ரோவுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு பதில் இப்போது ரஷ்யா மூன்றாம் உலகநாடுகளை சுரண்டுவதை லேட்டாக புரிந்துகொண்டார். ரஷ்யா அவருக்கு உதவ மறுத்துவிட்டது. காங்கோவில் நடந்த போராட்டம் தோற்று, பொலிவியா திரும்பினார்…

View More காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி

ஜானகியின் காதல்

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர். அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இங்கிலாந்து சென்றதும் உனவு பிரச்சனை அவரை வாட்டி எடுத்தது. அது உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன் 33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார்… அதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. ‘நான் இறந்தாலும் என் கணிதம் உன்னை காப்பாற்றும்” என மரணதருவாயில் இராமானுஜன் கூறியிருந்தார்….

View More ஜானகியின் காதல்