இந்தியப் பொருளாதார வரலாறு- தெரியாத பக்கம்

சுயநிந்தனை செய்யும் ப.சிதம்பரமும்,பெருமிதம் கொள்ளச் செய்யும் மோடியும்
சுயநிந்தனை செய்யும் ப.சிதம்பரமும்,
பெருமிதம் கொள்ளச் செய்யும் மோடியும்

தேர்தல் காலங்களில் பலவிதமான விஷயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்படுவதும் காரசாரமாக விவாதிப்பதும் வழக்கமான நடைமுறை தான். தற்போதைய தேர்தலின் வேகம் ஆரம்பிக்கும் முன்னரே தொடங்கி  பாஜக பிரதமர் வேட்பாளரும் மத்திய நிதியமைச்சரும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து அவ்வப்போது தங்களின் கருத்துக்களைப் பரிமாறி வருகின்றனர்.  ஒருசமயம் சென்ற நவம்பர் மாதம்,  ‘இந்திய வரலாற்றில் மிகப் பெரும்பாலான மக்கள்  ஏழைகளாகவே இருந்துள்ளனர்.  சிலர் மட்டுமே அரசர்களாகவும் நிலக்கிழார்களாகவும் வசதியாக வாழ்ந்துள்ளனர்’ என நிதியமைச்சர்  கூறினார்.

அதற்கு முன்னர், நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு இந்தியாவை ஐயாயிரம் வருடத்திய ஏழை நாடாகச் சித்தரித்திருந்ததாக  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறை கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியபோது தான் சிதம்பரம் மேற்கண்டவாறு சொல்லிருந்தார். கூடவே  நரேந்திர மோடி வரலாற்றைப் படிக்க வேண்டும் எனவும் அவர் கிண்டலடித்திருந்தார்.

மேற்குறிப்பிட்ட இரு முக்கிய தலைவர்களின் கருத்துக்கள் குறித்து கடந்த ஐந்து   மாதங்களாக பொதுவெளியில் எந்தவிதமான விவாதங்களும் தொடர்ந்து எழவில்லை. எனவே அந்தக் கருத்துப் பறிமாற்றம் அப்படியே நின்று விட்டது. அதிலுள்ள அரசியலை ஒதுக்கிவிட்டு அந்தப் பொருள் குறித்து உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் தொன்மை வாய்ந்த நமது நாட்டின் பொருளாதார வரலாறு குறித்து முற்றிலும் மாறுபட்ட இருவேறு கருத்துகள் நிலவுவது நம்மிடமுள்ள  பெரிய குறைபாட்டையே காட்டுகிறது.

ஒரு நாட்டின் எதிர்காலம் குறித்து வெவ்வேறு விதமான கணிப்புகள் இருக்கலாம். நிகழ்கால நடைமுறைகள் குறித்து சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் நடந்து முடிந்த வரலாறு குறித்து எப்படி முற்றிலும் வேறான கருத்துக்கள் இருக்க முடியும்?

சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு ஆண்டுகளைக் கடந்து வந்த பின்னர் இன்னமும் முந்தைய காலப் பொருளாதார நிலை பற்றிய அடிப்படை விஷயங்களில் எவ்வாறு மாறுபட்ட கருத்துகள் நிலவ முடியும்? வளர்ந்த நாடுகள் ஏதாவது ஒன்றிலாவது  இந்த  மாதிரி குழப்பத்தைப் பார்க்க முடியுமா?

ஐரோப்பியர்கள் தங்களது காலனியாதிக்க காலத்தில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளின் வரலாறுகளையும் அவர்களுக்குத் தக்கபடிஎழுதினார்கள் என்பது அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அந்த வரலாறு அவர்கள் மட்டுமே மேலானவர்கள் என்கின்ற எண்ணத்தை உருவாக்கவும்,  பிற நாட்டு மக்கள்  எந்த விதமான சிறப்புக்கும் சொந்தமில்லாவர்கள் என்கின்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கவும் கடைப்பிடிக்கப்பட்ட உத்தியாகும். அப்போது கல்வி, கலாசாரம், தொழில், பொருளாதாரம் எனப் பல விஷயங்களிலும்  ஐரோப்பிய நாடுகளே  முன்னிலைப்படுத்தப்பட்டு, மற்ற நாடுகளின் உண்மை நிலைகள் மறைக்கப்பட்டன.

அர்த்த சாஸ்திரம் வழங்கிய சாணக்கியர்
அர்த்த சாஸ்திரம் வழங்கிய சாணக்கியர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வந்த தேசியக் கல்வி முறையை அழித்து புதிய முறையைத் திணித்தார்கள். அதன்படி கல்வியின் அடிப்படையும் நோக்கமும் மாறிப் போயின. நமது நாட்டின் செயல்பாடுகள், உண்மையான வரலாறு என எல்லாமே கல்வித் திட்டத்திலிருந்து விலகிப் போயின. நாடு சுதந்தரம் பெற்ற பின் கல்வித் திட்டத்தை மாற்றுவதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தியும் அது இன்று வரை நடைபெறவில்லை. எனவே கல்வி குறித்த விஷயங்களில் மேற்கத்திய தாக்கங்களே இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நீண்ட பாரம்பரியமுள்ள இந்தியாவுக்கெனப் பல துறைகளிலும் ஒரு வரலாறு இருந்திருக்க வேண்டும் என்பது பற்றி,  கல்வி நிறுவனங்கள் யோசிப்பது கூட இல்லை.

அதுவும் பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நமது நாட்டுக்கு என நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும்  முன்னிலையில் இருந்து வருகின்றன.ஆகையால் அதை வைத்துக்கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில் நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற்புரட்சியில் தொடங்கியே உலகில் பொருளாதார  வளர்ச்சி ஆரம்பித்ததாக  போதிக்கிறது.

மேலும் நாம் சுதந்திரம் வாங்கும்போது இந்தியா ஒரு பெரிய ஏழை நாடாகவே இருந்தது. எனவே நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே முன் காட்டப்படுகிறது. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விஷயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக சிலப்பதிகாரம் அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது, எப்படி  பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.

உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் நூலாக  ‘அர்த்த சாஸ்திரம்’ கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மௌரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது.  விவசாயம்,  ஜவுளி,  பிற தொழில்கள், வியாபாரம்,  ஏற்றுமதி,  இறக்குமதி,  வரிக் கொள்கை,  ஊதியம்,  நுகர்வோர் நலன் எனப் பல விஷயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது. பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவங்களும் இல்லாமல் அப்படிப்பட்ட  நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இந்தியாவுக்கு தொடர்ந்து பல நாடுகளிலிருந்து வெளி நாட்டவர்கள் வந்துகொண்டு இருந்துள்ளனர். பிந்தைய காலங்களில் தொழில் மற்றும் பணி நிமித்தமாக ஐரோப்பியர்கள் பலர் நமது நாட்டுக்கு வந்து தங்கியிருந்தும்  பார்த்தும் சென்றுள்ளனர். அவர்களில் பலர் இந்திய வாழ்க்கை முறை, சமூகம், கலாசாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளனர். அவை பெரும்பாலும் இந்தியா மேற்கத்திய நாடுகளை விடப் பலவகைகளிலும் சிறப்பாக இருந்ததாகவே சொல்கின்றன.

ஆயினும் அண்மைக் காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக பலஅறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமன்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன.

அறிவுலகில் நமக்கு நாமே எதிரி!
அறிவுலகில்
நமக்கு நாமே எதிரி!

அவை உலகப் பொருளாதாரம் என்பதே ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை உறுதியாக மறுக்கின்றன. ஐரோப்பிய  நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான  அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து முன்னரே பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகியவையே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை நிறுவுகின்றன.

அவற்றில் முக்கியமாக உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு ( Organisation for Economic Cooperation and Development) வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபலபொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை. உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றைப் புள்ளி விபரங்களுடன் அவை முன் வைக்கின்றன. இன்று வரைக்கும் அந்த ஆய்வுகளின் முடிவுகள் யாராலும் மறுக்கப்பட இயலாதவையாக உள்ளன.அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழிகோலப்பட்டுள்ளது.

அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் பொது யுகம் தொடங்கிய காலத்தில், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன.  அப்போது உலகின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ( 32.9 விழுக்காடு) இந்தியாவிடம் இருந்துள்ளது. இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும்  சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன.

உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல்நிலைக்கு செல்ல முடியாது. அப்படியெனில் பொது யுகம் தொடங்குவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகள் இருந்திருக்க வேண்டும்.

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து- சரஸ்வதி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள் கூட, அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான அடையாளங்கள் ஆகியவை குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர். பொதுயுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விபரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக் கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளிவிவரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக வர்த்தகத்துக்கு ஆதாரம் அளிக்கிறது-  சிலப்பதிகாரம்
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக வர்த்தகத்துக்கு ஆதாரம் அளிக்கிறது- சிலப்பதிகாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச்சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொதுயுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டு வரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல்நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது.  1600ல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700ல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை  1820 இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே கடந்த இரண்டாயிரமாண்டு காலப் பொருளாதார  வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.

பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக்காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர்கொண்டது  என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார். அப்போதுதான் முதல்தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டது.

1750ல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக்  கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900 ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது. 1800லிருந்து 1850 வரைக்குமான  ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலைவிட்டுச் சென்றுவிட்டனர் என பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நௌரோஜி குறிப்பிட்டுள்ளார்.

சமகாலத்தில் பணக்கார நாடுகளாகக் கருதப்படும் மேற்கத்திய நாடுகள் உலகப் பொருளாதார வரைபடத்தில் பதினாறாம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் தலையைக் காட்டுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம்  தொடங்கியே அவை குறிப்பிடத்தக்க பொருளாதார பலத்தைப் பெறும் பாதையில் பயணிக்கின்றன. மேலும் அண்மைக் காலமாக அந்த நாடுகள் வீழ்ச்சியைக் கண்டுவருவது அவர்களே ஒப்புக்கொள்ளும் விஷயமாகும். அதே சமயம் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் உலக அளவில் மீண்டும் மேலெழுந்து வரத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் என கணிக்கப்படுகிறது.

உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதேசமயம் நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த சமயத்திலாவது நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த  சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

வரலாறு குறித்த தெளிவான பார்வையில்லாத சமூகத்தைக் கொண்ட எந்த நாடும் எதிர்காலத்துக்கான பொருத்தமான கொள்கைகளை வகுக்க இயலாது. அதிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பவர்களுக்கே அடிப்படையான வரலாற்று உண்மைகள் கூடத் தெரியாமல் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

.

20 Replies to “இந்தியப் பொருளாதார வரலாறு- தெரியாத பக்கம்”

  1. இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான கட்டுரை இது. பேரா. கனகசபாபதிக்கு மிக்க நன்றி. அவர் போன்றவர்கள் மேலும் உண்மையான விவரங்களைத் தரவேண்டும். இது ஒரு கட்டுரையோடு நிற்க முடியாத விஷயம். பாரதம் உலகின் முதன்மை நாடாக வருவதை விரும்புவதாகச் சொல்லிக்கொண்டு, அதே சமயம் வெளிநாட்டு வருடிகளாகப் பொய்யையையும், புரட்டையும் அள்ளி வீசிக் கொண்டிருபவர்களின் முகத் திரையை கிழித்து எறிய மேலும் விவரங்கள் வேண்டும்; இதில் தொடர்பு கொண்டோர் பலரும் பங்கெடுக்க வேண்டும். பேரா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் – ராமன் எஸ்

  2. அருமையான விபரங்களுக்கு நன்றி ஸ்ரீமான் கனகசபாபதி.

    பசி மந்த்ரியின் பொருளாதாரம் பற்றிய சாரித்ர ஞானத்தை ஒரு ரெவின்யூ ஸ்டாம்பின் விஸ்தீர்ணத்தில் எழுதி விடலாம் என்று தான் உள்ளது அவர் ஹிந்துஸ்தானத்து பொருளாதாரத்தைப் பற்றி விதேச மண்ணில் இகழ்ந்து பேத்தியுள்ளது.

    ஹிந்துஸ்தானத்துக்கு விஜயம் செய்த சீன தேசத்து யாத்ரிகர்களும் தங்களது ப்ரயாணக் குறிப்புகளில் ஹிந்துஸ்தானத்துப் பொருளாதார விஷயம் பற்றி ஏதும் குறிப்புகள் விவரமாகக் கொடுத்துள்ளனரோ என்பதும் விவரமாகப் பதியப்பட வேண்டியது.

    ஈராயிரம் வருஷமுன்னர் தமிழகத்தில் செழித்த பொருளாதாரம் என்ற விஷயமும் பழந்தமிழ் நூற்கள் வழியாக விவரமாகப் பதியப்பட வேண்டிய விஷயம்.

    இடதுசாரி கம்யூனிஸ மதம் என்பது — அரசியல் ரீதியாக — ஹிந்துஸ்தானத்தில் — காரல்மார்க்ஸ் இத்யாதி துர்தேவதைகள் வாசம் செய்யும் அபரலோகத்தை அடையும் தருணம் சமீபத்துள்ளது என்பது குதூஹலிக்க வேண்டிய விஷயம். அறிவுசீவித்தளம், மீடியா, சினிமா, ட்ராமா — இத்யாதி பொழுதுபோக்குத் துறைகளில் இந்த பயங்கரவாத மதத்தினரின் மிச்ச சொச்சம் தொடருகிறது.

    தேர்தல் என்பதை நூதன யுகத்து விக்ஞானக் கருவிகளான கணினி, செல்ஃபோன், 3D ப்ரசாரம் — இத்யாதிகள் சார்ந்து — மிகத் திறமையுடன் — well planned — professional attitude — உடன் — தேச ஒற்றுமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் — தங்கள் வாழ்நாளில் ஐந்தாறு மாதங்களை கட்சிப்பணிக்கு ஈந்த பொறியில வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள், பட்டயக்கணக்காளர்கள் — இத்யாதி professionals களின் அர்ப்பணிப்புடன் — எப்படி ஒரு தேர்தல் பணியை — திறமையாக நடத்த முடியும் என்பதை பாஜக தேர்தல் பணியாளர்கள் நடத்திக்காண்பித்துள்ளார்கள். காண்பித்து வருகிறார்கள்.

    இதே அர்ப்பணிப்புடன் திட்டமிடலுடன் — இடதுசாரி பயங்கரவாதம் — என்ற மதத்தின் மிச்ச சொச்ச எச்சங்களை — இவர்களது இருப்பு கோலோச்சும் துறைகளில் — இந்த பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்தால் தான் — ஹிந்துஸ்தானத்தின் மதநல்லிணக்கம் பொருந்திய வளர்ச்சி என்பது சாத்யம் என்பது வலது சாரி சக்திகள் உணரவேண்டிய தருணம் அடுத்தது.

  3. //இடதுசாரி கம்யூனிஸ மதம் என்பது — அரசியல் ரீதியாக — ஹிந்துஸ்தானத்தில் — காரல்மார்க்ஸ் இத்யாதி துர்தேவதைகள் வாசம் செய்யும் அபரலோகத்தை அடையும் தருணம் சமீபத்துள்ளது என்பது குதூஹலிக்க வேண்டிய விஷயம். //

    கம்யூனிசக் கொள்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும், வர்க்க சமுதாயத்தையும் ஒழிப்பது தான் அதன் நோக்கம். சோவியத் ரஷ்யாவிலும், சீனவிலும் ஏற்பட்ட பினனடைவுக்குக் காரணம் கம்யூனிசக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளும், ஏகாதிபத்தியங்களின் சதியும் தான்.

    ஆனால் முதலாளித்துவம் அடிப்படையிலேயே தவறானது. சுரண்டல், தனியுடமை(Accumulation of Wealth) இவை இரண்டும் முதலாளித்துவத்தின் அடிப்படை. இவை இரண்டும் இல்லாமல் முதலாளித்தும் வாழவே முடியாது. முதலாளித்துவத்தை சரியாக நடைமுறைபப்டுத்தினாலும், தவறாக நடைமுறைப்படுத்தினாலும் அவ்வமைப்பில் ஏற்றத்தாழ்வு இருந்தே தீரும்.

    ஆனால் கம்யூனிசக் கொள்கையை சரியாக நடைமுறப்படுத்தினால் அது சமுதாயத்தை பூலோக சொர்க்கமாக மாற்றும்.

    ஹ்ம்ம்.. ஒரு வகையில் உண்மை தான். நீங்கள் குறிப்பிடுவது போன்று அரசியல் ரீதியாக போலி கம்யுனிஸ்டுகள் எப்போதோ வீழ்ந்து விட்டனர். இதன் அறிகுறி யாதெனில் உண்மை கம்யுனிசம் இந்தியாவில் வருவதற்கான அறிகுறிகள் நெருங்கி விட்டன என்பதாகும். மத வெறியர்களுக்கும், மக்களை கூறுபோடுபவர்களுக்கும் காரல் மார்க்ஸ் என்றுமே துர்தேவதை தான். தமிழ்ஹிந்து தளத்தில் கொஞ்சமாவது ஜனநாயகம் இருக்கும் என்று நம்பி இந்த மறுமொழியை வெளியிடுகிறேன். வெளியிடுவீர்களா.

  4. அன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய திரு ராகுலன் அவர்களே,,

    1. மக்களை கூறுபோடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். எனவே கம்யூனிஸ்டுகள் தான் துர்தேவதை என்று சிலர் சொல்வது உண்மை தான் என்று எனக்கு உணர்த்தியமைக்கு நன்றி அய்யா. முதலாளி, தொழிலாளி என்று கூறுபோடுவது கம்யூனிஸ்டுகள் தான். இந்தியாவில் மதவாதிகளை உருவாக்கியதே கம்யூனிஸ்டுகள் தான். எனவே, மதவாதிகள், மதவாதி இல்லாதோர் என்று கூறு போட்டவர்கள் கம்யூனிஸ்டுகளே . எனவே கம்யூனிசம் என்பது கூறு போடும் கொள்கை மட்டுமே. எனவே தங்கள் கூற்றுப்படியே அது ஒரு துர்தேவதை தான்.

    2. சுரண்டல், தனியுடைமை என்ற இரண்டும் முதலாளித்துவத்தின் தனியுடைமை என்பது முழுப்பொய் , வடிகட்டிய பொய். எல்லா நாடுகளிலும் , எல்லா மொழி பேசுவோரிலும், எல்லா மதங்களை சேர்ந்தவர்களிலும் சுரண்டல் காரர்களும், சொத்துக்குவிப்போரும் உள்ளனர். வரலாற்றில் ஆபிரகாமிய மதத்தினர் பிற மதத்தினர் வாழும் நாட்டில் புகுந்து , அவர்களின் ஊரை கொள்ளையிட்டு, அவர்கள் குடும்ப பெண்களை கற்பழித்து, எல்லோரையும் கொன்று , நிலங்களை , நாடுகளை தனதாக்கி கொண்டதை பல ஆயிரம் ஆண்டு வரலாறு கூறுகிறது. ஆனால் உங்கள் காரல் மார்க்ஸ் அதுபோன்ற ஆக்கிரமிப்பை கண்டித்து எதுவும் கூறவில்லை. வாயை மூடிக்கொண்டு , மதவாதி என்று இந்துக்களை மட்டுமே உங்கள் கம்யூனிஸ்டுகள் சொல்வது ஒரு பித்தலாட்டம் மட்டுமே. கம்யூனிசமும் அப்படியே உள்ளது, கம்யூனிஸ்டுகளும் அப்படியே உள்ளனர் அய்யா.

    3. நீங்கள் சொல்லும் முதலாளித்துவம் என்பது இன்று உலகில் எந்த நாட்டிலுமே இல்லை. 33 கோடிப்பேர் வாழும் அமெரிக்காவில் கூட அது இல்லை. ஏனெனில் முதலாளித்துவம் என்று ஒரு கொள்கையை யாரும் புத்தகம் எழுதி, ( தாஸ் கேபிடலைப் போல) வெளியிடவில்லை. மேலும் நடைமுறை முதலாளித்துவம் என்பது எல்லாக்காலங்களிலும் , காலத்திற்கு ஏற்றவாறு தேவையான மாறுதல்களை செய்துகொண்டு, தானே சமநிலை ( self balancing ) அடைகிறது.
    ஆனால் கம்யூனிசம் என்பது யாரோ ஒரு தலைவர் எழுதிய ஒரு வறண்ட புத்தகம் அய்யா. அங்கு தனி மனிதன் மிருகங்களை விட கேவலமாக கருதப்படுகிறான் என்பதே உண்மை.

    4. முதலாளித்துவம் என்பது இந்த சமுதாயத்தில் மட்டுமல்ல, எந்த சமுதாயத்திலும் இருக்கிறது, ஆனால் அந்த முதலாளித்துவம் சமுதாய நலனை சிறிதாவது கவனித்து செயல்படுகிறது. அதன் விளைவாகவே மனிதவள மதிப்பீடு, ( human resource estimation ) சமூகப் பொறுப்பு ( social responsibility ) ஆகியவை பற்றி, டாட்டா பிர்லா போன்ற பெரும் முதலாளிகளே பிறருக்கு பாடம் நடத்தும் அளவுக்கு தேர்ச்சி பெற்று, கற்பிக்கவும் செய்கின்றனர். அதுபோல கம்யூனிசம் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய முடியாமல், ஒரு குறுகிய எல்லைக்குள் , தனக்குத்தானே ஒரு சிறையை உருவாக்கியுள்ளது அய்யா. அந்த சிறையை விட்டு வெளியே வந்தால் மட்டுமே , கம்யூனிசம் ஒரு பூலோக சொர்க்கத்தினை (தங்கள் கூற்றுப்படி) நிச்சயம் உருவாக்க முடியும்.

    5. கம்யூனிசம் என்பது தொழிலாளர்களை பயமுறுத்தி வாழும் ஒரு இயக்கம் . அவ்வளவே அந்த இயக்கம் உலகெங்கும் விடை கொடுக்கப்பட்டு விட்டது. கம்யூனிசம் என்பது கேரளாவில் ஒரு கம்யூனிஸ்டு தலைவர் பொதுகூட்ட மேடையிலேயே ஒத்துக்கொண்டதைப் போல, எதிர்க்கட்சியினரை கொலை செய்த மற்றும் தன்னுடைய கட்சியிலேயே மாற்றுக்கருத்துக்கள் உடைய, ஒத்துவராதவர்களை போட்டுத்தள்ளிய இயக்கம். தங்கள் உடனேயே கம்யூனிசம் வேறு கம்யூனிஸ்டுகள் வேறு என்று சொல்வீர்கள். முந்திய கடிதங்களிலும் அவ்வாறே தெரிவித்துள்ளீர்கள் அய்யா. இத்தகைய கம்யூனிஸ்டுகளை உருவாக்கியது அந்த கம்யூனிசம் தான் அய்யா. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா ? எனவே கோளாறு விதையில் தான் அய்யா.

    6. முதலாளித்துவத்தினைப் பற்றி ஏராளமான கோளாறுகளை , குற்றச்சாட்டுக்களை கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். நான் மும்பை ( பம்பாய்) சென்று ஒரு மாதம் இருக்க நேரிட்டது. அங்கு நம் தமிழர்கள் பகுதியில் பல ஆயிரம் பேரிடம் கேட்டேன். மின்சார தட்டுப்பாடு என்பதே இல்லை அய்யா. கேட்டால் யாரோ ஒரு தனி முதலாளியின் கம்பெனியிடம் மின் உற்பத்தி மற்றும் வழங்கல் பணி ( generation and distribution of electricity power) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் , எனவே மின்தடை எதுவும் கிடையாது என்றும் அனைவரும் கூறினார். இதேபோல கம்யூனிஸ்டுகள் நாடுகளில் இல்லை என்பதே உண்மை. தாங்களோ இவர்கள் எல்லாம் உண்மை கம்யூனிஸ்டுகள் அல்ல போலி என்று சொல்கிறீர்கள். அய்யா போலிகளை உருவாக்கும் இந்த தத்துவத்தில் பல கோளாறுகள் உள்ளன. ஆகவே தான் போலிகள் உருவாகிறார்கள். என்ன என்ன கோளாறு அந்த தத்துவத்தில் இருக்கிறது என்பதை என்னைப் போன்ற பாமரனுக்கு தெரிந்த அளவில் சொல்கிறேன்.:-

    1.தனி மனிதன் முயற்சி , ஆர்வம் இவற்றுக்கு ஊக்கம் கொடுத்தால் தான் மனித இனம் வளம் பெறமுடியும். தாமஸ் ஆல்வா எடிசன் என்ற ஒரு தனி விஞ்ஞானி மின்சாரத்தினை கண்டுபிடித்ததால் மட்டுமே இன்று மனித இனம் , மின்சாரத்தின் பலன்களை அனுபவிக்கிறது. தனி மனிதனை சுதந்திரமில்லாத அடிமையைப் போல நடத்தும் கம்யூனிச தத்துவம் நன்மைக்கு வழி வகுக்காது. ஒரு தனிமனிதன் என்பவன் மனித இனத்தின் எதிரி அல்ல. சமுதாயத்துடன் சேர்ந்து வாழ விரும்பும் ஒரு அங்கம் – அதாவது ( part of the society ) .எனவே தனிமனிதனை சமுதாயத்தின் விரோதியாகப் பார்க்கும் ஒரு வக்கிரமே கம்யூனிசம் ஆகும். இந்த வக்கிரப்பார்வை விலகினால் தான் கம்யூனிசம் எதிர்காலத்தில் உலகில் இடம் பெறும்.

    2.நீங்கள் சொல்லும் முதலாளிகள் நடத்தும் TATA INSTITUTE OF FUNDAMENTAL RESEARCH- என்ற நிறுவனம் இன்று உலகப் புகழ் பெற்றது. அதற்கு ஈடாக அதனை விட சிறந்த அரசுத்துறை நிறுவனம் ஒன்றை உங்களால் கூற முடியுமா ? ஏனெனில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசு ஏராளம் முதலீடு செய்து ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தாலும், சிறிது காலத்திலேயே அதனை உருப்படாமல் ஆக்கிவிடுகிறார்கள் என்பதே உண்மை. என்ன காரணம் ? அரசு ஊழியர்களும், பொதுத்துறை ஊழியர்களும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் வேறு இடம் போய்விடுவார்கள். அடுத்து வருபவன் தனக்கு முன்னே இருந்தவர் செய்த நற்பணிகளை தொடர மாட்டார் என்பதும் ஒரு உண்மை. கம்யூனிஸ்டு/ பொதுத்துறை/அரசு நிறுவனங்களில் accountability- என்பது கிடையாது. ஒரு அரசு அலுவலகத்தில் , எப்போதும் கோப்புக்களை காணவில்லை என்று தேடிக்கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலக்கரி சுரங்கம் கோப்புகளை காணவில்லை என்று அரசு சொல்லியது அல்லவா ? அது நமது கம்யூனிச தொழில்சங்கன்களால் விளைந்த நிர்வாக சீர்கேடு மட்டுமே. ஏனெனில் பொதுத்துறையில் -accountability- கிடையாது.

    3.எந்த ஒன்றும் ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரு உரிமையாளர் ( owner ) என்று ஒருவர் இருந்தால் தான் சரியாக பராமரிப்பார். நாலு மாதத்திற்கு ஒரு ஓனர் என்று இருந்தால் , சொத்தே காலாவதி ஆகிவிடும். எனவே தனிமனித சொத்து உரிமை என்பது காலத்தின் கட்டாயம். அதனை மறுக்கும் கம்யூனிசம் மனித இனத்தின் விரோதி மட்டுமே. இந்த உண்மையை புரிந்துகொண்டதால் மட்டுமே, சீனாவில் அரசியல் சட்டத்தினையே திருத்தி தனி மனித சொத்துரிமையை அனுமதித்துள்ளனர். அதாவது கம்யூனிஸ்டுகள் திருந்த ஆரம்பித்து விட்டனர்/ ஆனால் கம்யூனிசம் என்பதோ திருந்தாது.

    4. ஒழுங்கின்மையை யார் உருவாக்குகிறானோ, அவனால் ஒழுங்கை உருவாக்க முடியாது. கம்யூனிசம் ஒழுங்கின்மையை உருவாக்குகிறது. எனவே அது ஒரு ஒழுக்கங்கெட்ட கொள்கை மட்டுமே. கம்யூனிசம் என்பது உற்பத்தியை குறைக்க செய்யும் ஒரு வழி. வேலைநிறுத்தம், கதவடைப்பு, வெளிநடப்பு, உள்நடப்பு என்று உளறிக்கொட்டி நாட்டின் பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க செய்யும் ஒரு குழப்பம் கம்யூனிசம்.

    5.ஆப்பிரிக்காவில் உள்ளது போல காட்டுமிராண்டி தனம் உருவாக வேண்டுமானால், கம்யூனிசம் தேவை. நமக்கு அதுவேண்டாம். மனித வாழ்வு சிறக்க தனிமனிதனின் மகிழ்ச்சி மிக முக்கியம். பல கோடிக்கணக்கான தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். தனிமனிதனை அடிமை என்று கருதும் கம்யூனிசம் ஒரு முழு நோய். கம்யூனிசம் என்ற நோய் இந்த உலகைவிட்டே அழியும் நாள் மனித இனத்துக்கு நல்லது.

  5. //இதன் அறிகுறி யாதெனில் உண்மை கம்யுனிசம் இந்தியாவில் வருவதற்கான அறிகுறிகள் நெருங்கி விட்டன என்பதாகும். //

    ஏஞ்செல் டிவியில் ஒருத்தர் ‘ஏசப்பா வரும் நாள் வந்து விட்டது’ என்று தினமும் கூறுவார். அதை விட நகைச்சுவையாக சொல்கிறீர்கள் ராகுலன். புதிதாக இந்தப் பள்ளிக்கு வந்தவர் போலிருக்கிறது. அறுபது- எழுபதுகளிலேயே இதை நாங்கள் பார்த்து முடித்துவிட்டோம். திரு வெள்ளை வாரணன் எழுதிள்ள பதிலை (மிகவும் அதி அற்புதமான பதில்) தயவு செய்து நன்கு படிக்கவும். முக்கியமாக இரண்டாவது பகுதியில் மூன்றாம் பத்தி. இதைவிட கம்யூனிசத்தைப் பற்றி தெளிவாக எழுத முடியாது.

  6. கம்யுனிசம் என்ன என்பதை மிகவும் சுருக்கமாக விளக்க முடியுமா என்று முயற்சிக்கிறேன். “from each according to ability to each according to need ”
    அதாவது நீங்கள் அரிசி எடுத்து வாருங்கள் நான் உமி எடுத்து வருகின்றேன். இரண்டையும் கலந்து ஊதி சாப்பிடலாம். சரியா? என்னது எத்தனை நாளைக்குதான் நானே ( அதாவது நீங்களே ) அரிசி கொண்டு வருவேன் என்றா கேட்டீர்கள் ? யாரங்கே இந்த முதலாளித்துவ வெறியரை சைபீரியா கொண்டு சென்று சுரங்கத்தில் போடுங்கள் !!

  7. Thonda thonda ariya pokkisamaga vilangukirathu. nandri tamil hindu, nandri ganagasabapathy aaiya.

  8. I started viewing and reading the important articles, just a few days back only. Really I admire the inputs given by people like ” VELLAI VARANAN ” ( In fact, he is ” SIGAPPU VARANAN” ) lombasted the communist idealogy…kudos to him. And by the by, the rebuttal and views by Mr.Ranagan is PADU SUPER. I am one of the regular readers of The Hindu; but I am totally against its editorial all the 360 days; semi cooked or baked half truth news reporting or tilting the truth to satiate a few political entity.But once in a way, a rare and good articles are published…for that reason only, I read THE Hindu.Its letters to the Editor column is almost chavunistic towards congress and many a views expressed are without an iota of wisdom or not so scholarly. I feel on day today basis, the news and views of The Hindu to be discussed threadbare and exposed so that the general readers will have a good chance to know the real truth or the reality. …Prof.P.Kanagasabapathy’s article should be read by one and all.. In this regard, I am doing a small bit… notifying “TAMIZ HINDU” to my friends through Face Book. From now on, I cannot go without a day without seeing this site….so capturing by news and contents..I hope a day will come..which is not far off, that majority of the netizens will follow suit. REALLY AN UNBIASED WEB SITE…. I love it.

  9. முதலாளித்துவம் கம்யூனிசம் இரண்டும் உதவாக்கறை கொள்கைகள், உண்மையான ஹிந்துத்துவமே உலக மக்களின் நல்வாழ்வுக்கான வழி.

  10. கமுநிசம் என்றால் என்ன என்று எனக்கு புரியவில்லை. அரசியல்வாதிகள், மக்களை கொள்ளை அடிப்பதுதான் கம்முநிசமா?

  11. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் வரை இந்தியா உலகின் மிக முக்கய பொருளாதார சக்தி. எப்படி சிதம்பரம் இத்தனை ஆண்டுகள் இதனை கூட அறியாமல் நிதி அமைச்சராக இருந்தாரோ? வெட்கக்க கேடு.

    https://infogr.am/Share-of-world-GDP-throughout-history?src=web

  12. கம்யூனிஸ்ட் கொள்கைகள் உலகம் முழுவதும் செத்து போய்விட்டது ! இந்தியாவில் வர வாய்ப்பு இல்லை ! ரஷ்யா நிலைமை விரைவில் , சீனாவுக்கும் வரும் !

  13. sirs, you are all criticising communism without knowing a basic thing. Sources are there. The sources should be divided to all equally. What is the method? Capitalism is to heap the sources to fewer hands by using others’ labour. It only leads only to the corruption. How? The Capitalists with a view to accumulate wealth for themselves use whatever power that is at the helm of affairs by using money power got things done for them. Let us find out a method for making everyone to get the three basic amenities. We are reading news that certain human beings are pushed down to the state of eating their own excreta. This is the outcome of the capitalism. Even after reading this news, we are supporting capitalism. Sirs, don’t forget each one of (y)our work for (y)our survival goes one of fewer capitalists only. Then where is the pride for us?

  14. நூற்றுக்குநூறு கம்யூனிசமும், நூற்றுக்குநூறு முதலாளித்துவமும் (மேற்கு நாட்டுக் கொள்கைகள்) உகந்ததல்ல. நீ சம்பாதிப்பது உனக்கல்ல என்கிறது கம்யூனிசம். உன் உழைப்புப்பலன் உனக்கல்ல என்பது முதலாளித்துவம். இதுதான் மேற்குநாட்டுக் கம்யூனிசமும், முதலாளித்துவமும்,

    “ஊரணி நீர் நிரந்தற்றே உலகவாம்
    பேரறிவாளன் திரு”

    என்பது நமது தத்துவம்.

    ஒருவன் ஈட்டும் செல்வம் ஊரணி நீருக்கு ஒப்பானது, அது அந்த ஊருக்கே பயன்படவேண்டும் என்றுதான் நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்தார்கள். ஈட்டிய இலாபத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள் திரைகடலோடியும் திரவியம் தேடிய நம் நாட்டு வணிகர்கள் (முதலாளிகள்). இந்தியா பணக்கார நாடாக இருந்தது. இங்கு வணிகம் செய்ய அனைவரும் ஓடோடியும் வந்தார்கள்.

    என்று நாம் அந்த நல்லுரைகளை விட்டோமோ, மேற்குநாட்டுக் கொள்கைகளைக் கைக்கொண்டோமோ, அப்பொழுதே நம் நாடு ஏழையாக ஆரம்பித்தது. அதுவே உண்மை.

    எனவே, கண்ட “ism”களை விட்டுத்தள்ளி, நம் முன்னோரின் அறிவுரைப்படி நடப்போமா?

  15. திரு.அரிசோனன்

    //நீ சம்பாதிப்பது உனக்கல்ல என்கிறது கம்யூனிசம்…..//

    புரியவில்லையே… எதை சொல்ல வருகிறீர்கள் உழைப்பையா அல்லது சம்பாதிப்பதையா? எதுவாக இருந்தாலும் எப்படி என்று விளக்க முடியுமா? ……

  16. //நீ சம்பாதிப்பது உனக்கல்ல என்கிறது கம்யூனிசம்//
    communist sampathikka vidava vidadhu.. anna attaya podaradhu ellam unakka unakka unakkaa…….

  17. @ பாண்டியன்…..

    //communist sampathikka vidava vidadhu..//

    அதைத் தான் எப்படி என்று விளக்கிக் கூறுங்களேன்? ஒரு வேளை மூலதனத்தின் சுரண்டலுக்கு எதிராக போராடுகின்ற பொழுது நடக்கும் பணி முடக்கத்தை நீங்கள் அப்படிக் கூறினால் 1947க்கு முன்பு இந்திய மக்கள் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியதிர்க்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுத்தபொழுது பிரிட்டிஷ் அதிகாரிகள் இப்படிக் கூறினார்களாம், “நீங்கள் இவ்வாறு எந்த வேலையையும் செய்யாமல் வெட்டித்தனமாக போராடுவதால் உங்களுக்கு சுதத்திரம் கிடைக்கப் போவதில்லை, அதற்க்கு மாறாக உற்பத்தி பாதிக்கப்பட்டு நீங்கள் தான் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்க நேரிடும்” என்று கூறியது தான் நினைவிற்கு வருகிறது. பிரிடிஷார் கூறியதிலாவது ஒரு சுயநலம் சார்ந்த காரியவாதம் தொக்கி நிற்கிறது, அனால் அதையே இப்போதும் தங்களின் நியாயமான உரிமைகளுக்காக போராடுகின்ற மக்களை பார்த்து இங்கிருக்கும் கை கூலிகள் கூறும் பொழுது பச்சையான பிழைப்புவாதம் தான் துர்நாற்றம் தெறிக்க வழிந்தோடுகிறது.

  18. அதைத் தான் எப்படி என்று விளக்கிக் கூறுங்களேன்?

    ஒரு ஒரு தொழிற்சாலை எப்படி எப்படி இழுத்து மூடப்பட்டது என்று பாருங்கள் அப்போது புரியும். அதற்கான காரணத்தை முதலாளிகள் சொன்னபோது எகிறி குதித்த கம்யூநிஸ்ட் கேரள டீவீ க்கு கொஞ்ச வருடம் முன் கொடுத்த ஸ்டேட்மென்ட் இருந்தது பாருங்கள் அதுதான் காமெடீ கம்யூநிஸ்ட்ன் உட்ச்ச கட்டம்.

  19. //அனால் அதையே இப்போதும் தங்களின் நியாயமான உரிமைகளுக்காக போராடுகின்ற மக்களை பார்த்து //

    என்ன உரிமை. சாயப்பட்டறைக்கு வருடா வருடம் சம்பள உயர்வு கேக்கிரான். அதன் பின்புலம் , தூண்டுதல் கம்யூநிஸ்ட் , அதே சாயகழுவுகள் மனிததோழ் வியாதிக்கு , குடி தண்ணீர் கலவை முதலாளியக் கை காண்பித்து வெட்டு குத்து என்கின்றான் அது பின்புலம் கம்யூநிஸ்ட் . இது ஒரு உதாரணம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *