பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில் பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்றதுடன், மொத்தத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றுள்ளது. அதேசமயம், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் மட்டும் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது.
இம்முறை நாடு முழுவதுமே பாஜக வலுவாகக் காலூன்றி உள்ளது. மோடியே சொன்னது போல, இது காங்கிரஸுக்கு எதிரான அலை மட்டுமல்ல, பாஜகவுக்கு ஆதரவான அலையும் கூட. அதனால் தான் இதுவரை கணக்கைத் துவங்காத பல பிரதேசங்களிலும் பாஜக வெற்றி கண்டுள்ளது.
மணிப்பூர், மிசோரம், சிக்கிம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே. பெரிய மாநிலங்களில் கேரளத்தில் மட்டுமே பாஜகவால் சாதிக்க முடியவில்லை. தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் பெரும் வெற்றி பெறாவிட்டாலும், தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது பாஜக.
ஆந்திரத்தின் சீமாந்திரா பகுதியில் பாஜக- தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், தெலங்கானா பகுதியில் அம்மாநிலத்தின் உதயத்திற்குப் போராடிய தெலங்கானா ராஷ்டிர சமிதி பெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்பார்த்தது போலவே, இம்மாநிலத்தின் இரு பகுதிகளிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளது. மாறாக பாஜக இரு பிரதேசங்களிலும் தனது வெற்றிகளை உறுதியாகப் பதிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் தே.ஜ.கூட்டணி 37.6% வாக்குகளுடன், 19 தொகுதிகளில் வென்றுள்ளது.
கேரளத்தில் 10.3% வாக்கு:
கேரளத்தில் பாஜகவின் தோல்விக்குக் காரணம் தெளிவு. அம்மாநிலத்தின் மக்கள் விகிதாசாரம் சிறுபான்மையினரின் ஆதிக்கத்துக்கு உகந்த்தாக இருப்பதே அங்கு பாஜகவின் வெற்றிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளது.
இருந்தும் இம்முறை கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 15470 வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபால் தோல்வியுற்றார். இம்முறை கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை: 18,56,750 (சதவிகிதம்: 10.3%).
கேரளத்தில் மார்க்சிஸ்ட்-5, இந்திய கம்யூனிஸ்ட்-1, ஆதரவு சுயேச்சைகள்-2 உள்பட இடது முன்னணியில் 8 தொகுதிகளில் வென்றுள்ளனர். காங்கிரஸ்-8, முஸ்லிம் லீக்-2 கேரள காங்கிரஸ் (மோனி பிரிவு)-1, ஆர்எஸ்பி (போட்டிப் பிரிவு)-1 உள்பட ஜனநாயக முன்னணியில் 12 தொகுதிகளில் வென்றுள்ளனர்.
இம்மாநிலத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் இருப்பதால், அவர்களே தேர்தல் களத்தைத் தீர்மானித்து வருகிறார்கள். தவிர, காங்கிரஸுக்கு மாற்று இடது முன்னணியே என்ற நிலை இங்கு நீடிக்கிறது. இம்மாநிலத்தில் பாஜக வெல்ல இன்னமும் தொலைதூரம் செல்ல வேண்டும் என்பது நிதர்சனம். ஆனாலும், அங்கு பாஜகவின் தோல்வி கௌரவமானதாகவே கணிக்கப்படுகிறது.
ஒடிசாவில் அரசியல் மாற்று:
ஒடிசா மாநிலத்திலோ, இம்முறை பெரும் அரசியல் மாற்றத்திற்கான கால்கோள் இடப்பட்டுள்ளது. இதுவரையிலும் ஆளும் பிஜு ஜனதாதளத்திற்கு (பிஜேடி) அரசியல் மாற்றாக இருந்த காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அந்த இடத்தை பாஜக நெருங்கியுள்ளது.
இம்மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பாஜக ஓரிடத்தில் வென்றுள்ளது. மீதமுள்ள அனைத்து இடங்களிலும் பிஜேடி வென்றாலும், இரண்டாவதாக 9 இடங்களில் பாஜக வந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை: 46,38,619. (சதவிகிதம்: 21.5%) இங்கு 26 சதவிகிதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் ஓரிடத்திலும் வெல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
ஒடிசாவில் பிஜேடி பாஜகவுடன் நட்புக் கட்சியாக இருந்த காலத்தில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. இப்போது பத்தாண்டுகளாக பிஜேடி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட சூழலில், பாஜக தன்னை பிஜேடிக்கு மாற்றாக வளர்த்துக் கொண்டுள்ளது.
வருங்காலத்தில் இம்மாநிலத்தில் பாஜக சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. குஜராத் மாநில அரசியல்நிலை இதேபோலத் தான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது.மிக விரைவில் பாஜகவின் தோழமைக் கட்சியாக மீண்டு பிஜேடி கட்சி மாற வாய்ப்புள்ளது.
மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆர்ப்பாட்டமற்ற அரசியலும், குற்றச்சாட்டுகள் அதிகம் எழாத ஆட்சி நடத்தியதும், இம்மாநிலத்தில் அவரது ஆட்சியை நீடிக்கச் செய்ததுடன் (117/147) , அதிக எம்.பி.க்களையும் அளித்துள்ளது. இங்கு பாஜகவுக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.
வங்கத்தில் ஊடுருவிய பாஜக:
இதுவரையிலும் பாஜக மேற்குவங்க மாநிலத்தில் தனித்து நின்று தனது சக்தியைப் பெருக்கிக் கொண்டதில்லை. இம்மாநிலமும் கிட்டத்தட்ட கேரளம் போன்ற சிறுபான்மையினர் ஆதிக்கம் மிகுந்த மாநிலமே. தவிர, பங்களாதேஷிலிருந்து ஊடுருவிய கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் (உத்தேச மதிப்பீடு: 2.5 கோடி) மேற்கு வங்கத்தில் (அசாமிலும் தான்) இந்தியக் குடிமகன்களாகவே மாறிவிட்டனர். அவர்கள் இதுவரையிலும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்களாக இருந்தனர். சமீபகாலமாக இவர்களின் ஆதரவு மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்து வருகிறது.
இம்மாநிலத்தின் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பாஜக 2 இடங்களில் வென்றுள்ளது. இம்மநிலத்தில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை: 86,91,765. (சதவிகிதம்: 16.8%). இங்கு 3 தொகுதிகளில் பாஜக இரண்டாமிடம் பெற்றது. தனித்து நின்று இத்தனை வாக்குகளைப் பெற்றிருப்பது பாஜகவுக்கு தெம்பூட்டுகிறது. இதற்கு மோடி அலையே காரணமாகி உள்ளது.
ஒருகாலத்தில் இங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் 4 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் 34 தொகுத்களில் வென்றுள்ளது. 22.7 % வாக்குகள் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வென்றுள்ளது. இம்மாநிலத்தில் இடதுசாரிகள் படுதோல்வியுற்றுள்ளனர் என்றால் மிகையில்லை. சட்டசபைத் தேர்தலின்போது அக்கட்சி மீது நிலவிய அதிருப்தி இன்னமும் அகலவில்லை என்பது இத்தேர்தலில் உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் பரவாயில்லை:
கேரளா, ஒடிசா, மேற்குவங்கம் போலல்லாது, பாஜக தமிழகத்தில் தனித்து விடப்படவில்லை. இங்கு பாஜகவே முனைந்து ஏற்படுத்திய தேசிய ஜனநாயக்க் கூட்டணி, இரு பிரதான திராவிடக் கட்சிகளுக்கு தேர்தலின்போது சவாலாக உருவெடுத்தது. விஜயகாந்தின் தேமுதிக, ராமதாஸின் பாமக, வைகோவின் மதிமுக, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக கட்சி ஆகிய 6 கட்சிகளுடன் இணைந்து 7 கட்சிக் கூட்டணியை பாஜக உருவாக்கியது. புதுவையில் இக்கூட்டணி செயல்படாவிட்டாலும், அங்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமியின் என்ஆர்.காங்கிரஸ், பாஜகவின் கூட்டாளியானது.
இத்தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி 2 இடங்களில் வென்றது. பாஜக (கன்னியாகுமரி), பாமக (தர்மபுரி) ஆகிய இடகளில் முறையே பொன்.ராதாகிருஷ்ணனும், அன்புமணி ராமதாஸும் வென்றனர். தமிழகத்தில் பாஜகவுக்கு மட்டும் தனியே வாக்களித்த மக்களின் எண்ணிக்கை: 22,22,090 (சதவிகிதம்: 5.5%). தவிர, தேமுதிக (5.1%), பாமக (4.4%) மதிமுக (3.5%) கட்சிகளும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளன. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வாக்குவிகிதம்: 18.5%.
கோவை, பொள்ளாச்சி, வேலூர் தொகுதிகளில் பாஜகவும், விருதுநகர், ஈரோடு தொகுதிகளில் மதிமுகவும், திருப்பூரில் தேமுதிகவும் இரண்டாமிடம் வந்துள்ளன. அதிலும் கோவை, வேலூர் தொகுதிகளில் குறைந்த வித்தியாசத்தில் தான் பாஜக தோற்றுள்ளது. 1.80 கோடி வாக்குகள் (சதவிகிதம்: 44.3%) பெற்ற அதிமுக 37 இடங்களில் வென்று லோக்சபையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதேசமயம் 96 லட்சம் (சதவிகிதம்: 23.6%) வாக்குகள் பெற்ற திமுக படுதோல்வியுற்றுள்ளது.
புதுச்சேரியில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் காங்கிரசிடமிருந்த தொகுதியைக் கைப்பற்றி இருக்கிறார். இத்தனைக்கும், இங்கு பாமக கூட்டணி தர்மத்தை மீறிப் போட்டியிட்டு, அதனை தேமுதிக ஆதரித்தது. மொத்தத்தில் பாஜக தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும், பரவாயில்லை என்று கூறத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளது எனலாம்.
ஜெயலலிதா வென்றதன் ரகசியம்:
தமிழகத்தில் அதிமுகவின் வெற்றிக்கு, இலவசத் திட்டங்கள், ஒருங்கிணைந்த பிரசார அணுகுமுறை, ஜெயலலிதாவின் தலைமை, திமுக மீதான அதிருப்தி அகலாமை, காவிரி, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் விவகாரம், மீனவர் பிரச்னை போன்ற தமிழகம் சார்ந்த ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஆகியவை காரணம் எனலாம்.
மாறாக, பிரதான எதிர்க்கட்சியான திமுக பல சில்லறைக் கட்சிகளைக் கூட்டணி சேர்த்தும் பயனின்றிப் போனது. அக்கட்சியை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னமும் துரத்துகிறது. தவிர, சென்ற திமுக ஆட்சியில் அக்கட்சியினர் நடத்திய அராஜகம் போல தற்போதைய அதிமுக ஆட்சியில் நிலவரம் இல்லை என்பதே மக்களின் திருப்திக்கு வழிவகுத்துள்ளது.
ஊழலைப் பொருத்த வரை, திமுக ஆட்சியில் இருந்த்தை விட அதிமுக ஆட்சியில் ஊழல் பெருகியிருந்தாலும், சாமானிய மக்களை திமுக அரசு பாதித்த அளவிற்கு அதிமுக அரசு பாதிக்கவில்லை. மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஆகிய பிரச்னைகள் இருப்பினும், அதனை மக்களிடம் கொண்டுசென்று ஆளும்கட்சியை வீழ்த்தும் அளவிற்கு எதிர்க்கட்சிகள் இங்கு சக்தி வாய்ந்ததாக இல்லை. அதிமுகவின் கடைசிநேர பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் திறன் கூட இல்லாமல் எதிர்க்கட்சிகள் திணறின.
சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பெரும்பான்மையோர் அதிமுகவினர் என்பது அக்கட்சிக்கு சாதகமாக இருந்தது. அவர்கள் அனைவரும், வெற்றி பெறாவிட்டால் கட்சித்தலைமை எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைக்கு அஞ்சி கடுமையாக உழைத்தனர். தவிர ஆளும்கட்சி என்ற அந்தஸ்து அக்கட்சிக்கு ‘பலவகைகளில்’ உதவியது. இவையும் அதிமுகவின் வெற்றிக்கு பிரதான காரணம்.
அதிமுக தலைவி ஜெயலலிதா தனது பிரசாரத்தில் மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு இழைத்த அநீதிகளை பொருத்தமாக முன்வைத்தார். மின்வெட்டிற்கும் கூட மத்திய அரசே காரணம் என்று அவர் சொன்னதை மக்கள் நம்பினர்.
நாடு முழுவதும் மோடி காங்கிரஸுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திய வேளையில், தமிழகத்தில் தன்னையே முன்னிறுத்தினார் ஜெயலலிதா. அவரது தன்னம்பிக்கை மிகுந்த செயல்பாடும், அதிமுகவின் நிறுவன அமைப்பும் இணைந்து, மோடியை விட லேடியே தமிழகத்திற்குப் போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டன. தமிழக அதிமுகவினர் தங்கள் தலைவியை பிரதமர் வேட்பாளராகவே பிரசாரம் செய்தனர். அதற்கும் குறிப்பிட்ட பலன் இருந்தது.
தவிர பாஜகவின் புதிய உத்வேகம், சிறுபான்மையினரின் வாக்குகளை திமுகவிடமிருந்து மடைமாற்றி அதிமுகவுக்கு செல்லக் காரணமானது. இதுவும், திமுகவின் படுதோல்விக்கும் அதிமுகவின் வெற்றிக்கும் ஒரு காரணம். திமுக கூட்டணியில் இடம்பெற்ற முஸ்லிம் கட்சிகள் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிட்டபோதும் அதிமுக அக்கட்சிகளை வென்றுள்ளது. திமுகவுக்கு வாக்களித்து வாக்குகள் சிதறுவதை சிறுபான்மையினர் தவிர்த்துள்ளனர் என்பது, அதிமுக பெற்றுள்ள வாக்குசதவிகித அதிகரிப்பில் புலப்படுகிறது.
பணபலமும் அதிகார பலமும் அதிமுகவை வெற்றிக்கோட்டை நோக்கி விரைவாக அழைத்துச் சென்றுள்ளன. இதுமட்டுமே காரணம் என்று கூறமுடியாவிட்டாலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்திருப்பதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளது. அதன் தாக்கமும் இருக்கவே செய்தது.
தே.ஜ.கூட்டணியின் பலவீனம்:
இவை அனைத்தையும்விட, மோடியை முன்னிறுத்திய பாஜக கூட்டணி, தமிழகத்தில் ஒத்த சிந்தனையுடன் இயங்கவில்லை. மோடி முன்னிலையில் ஒரே மேடையில் அனைத்து கூட்டணிக் கட்சியினரும் ஏறும் காட்சியைக் காணவே முடியவில்லை. மிகத் தாமதமாக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமை வடிவம் பெறவில்லை. தேமுதிக, பாமக ஆகியவற்றிடையே கடைசிவரை நிலவிய உரசல் சரியாகவே இல்லை. ஆகவே கூட்டணிக் கட்சிகள் மனப்பூர்வமாகப் பணியாற்றவில்லை.
பாஜக கூட்டணியில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மட்டுமே மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்தனர். வைகோ விருதுநகரிலும், ராமதாஸ் தர்மபுரியிலும் முடங்கினர். பாஜக மாநிலத் தலைவர்களோ, வெற்றிவாய்ப்பு இல்லாதபோதும் வீம்புப்பிடியாக தேர்தலில் போட்டியிட்டு, அற்புதமான பிரசார வாய்ப்பை நழுவவிட்டனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் தவிர்த்த மாநில அளவில் பிரபலமான பாஜக தலைவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், பாஜக மேலும் பிரபலம ஆகியிருக்கும்; மேலும் சில இடங்களில் வெற்றியும் கைகூடி இருக்கும்.
கோவையில் ஆரம்பத்தில் நிலவிய கோஷ்டிப்பூசலே பாஜகவை கடைசிவரை தொடர்ந்தது. நீலகிரியில் பாஜக வேட்பாளர் செய்த தவறு கட்சியின் மதிப்பை குலைத்தது. இவையும் பாஜகவின் தோல்விக்குக் காரணங்கள்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், திமுக களத்தில் காட்டிய சோர்வு, பாஜக கூட்டணியின் இயலாமை, ஆளும்கட்சி என்ற சிறப்புத் தகுதி, பணபலம், மற்றும் ஜெயலலிதாவின் நிகரற்ற தலைமை ஆகியவையே அதிமுகவின் அபரிமித வெற்றிக்கு வித்திட்டுள்ளன. ஜெயலலிதாவின் வெற்றியிலிருந்து பாஜக கற்க வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன.
(குறிப்பு: தேர்தல் முடிவு புள்ளிவிவர வரைபடங்களுக்கு நன்றி: கேபிகே போல் கிராஃபிக்ஸ்).
.
நல்ல அலசல். பாராட்டுக்கள்.
தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் பி ஜே பி பொது கூட்டம் மூலம் மக்களை காண்கினர் கிராமங்களில் வளர்ச்சி இல்லை என்பதுதான் உண்மை நிலவரம் திறமையான பேச்சாளர்கள் உள்ளனர் கட்சியை வளர்க்கவேண்டும் அகில பாரத அளவில் தலைவர்கள் வருகை தரவேண்டும்
தமிழ்நாட்டில் வீசிய மோடி அலையையும் தனக்குச் சாதகமாக ஜெயலலிதா சாமர்த்தியமாக திருப்பி விட்டார். ஆரம்பகட்டப் பிரசாரங்களில் உங்கள் வாக்குகளைத் தோற்கும் அணிக்குப் போடாமல் எனக்குப் போட்டால் நல்ல மத்திய அரசு அமைய, நாம் கேட்பவற்றக் கொடுக்கும் மத்திய அரசு அமைய ஏதுவாகும் என்று சொல்லி மறைமுகமாக அதிமுகவுக்குப் போட்டால் வெல்லும், பா.ஜ.க ஆணைக்குப் போட்டால் அந்த அணி வெல்லும் அணி அல்ல என்ற தோற்றத்தை உருவாக்கி, அதிமுகவுக்குப் போடுவதும் பா.ஜ.க கூட்டணிக்குப் போடுவதும் இறுதியில் மோடி தலைமையிலான அரசுக்கே ஆதரவாகும் என்றும் பதிய வைத்தார். பின்னர் கடைசி கட்டத்தில் தனது பேச்சை மாற்றியதில் முஸ்லிம்கள் வாக்குகளைத் தனது பக்கம் திருப்ப வைத்தார். ஆக Double கேம் விளையாடினார்.
அதுதவிர, முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஜவகரிருல்லா, ஜைனுல்லாபுதீன் வகையறாக்களை விரும்பவில்லை என்று, திமுகவினரே கருணாநிதியின் Facebook பக்கத்தில் எழுதி இருப்பதைப் பாருங்கள்.
https://www.facebook.com/Kalaignar89/photos/a.472173099461567.113906.470872276258316/786655031346704/?type=1
//// தலைவர் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டி இதை எழுதுகிறேன்.
1. கோவையில் கழக ஆட்சி நடக்கும்போது குண்டுவெடித்த அல்-உம்மா இயக்கத்தை நிறுவிய ஜவகரிருல்லா இப்போது பெயர் மாற்றி மனிதனேய மக்கள் கட்சி என்று வைத்து எம்.எல்.ஏ ஆக இருந்துகொண்டு திமுகவுடன் கூட்டணி வைத்து, கோவையில் தலவருக்கு வலப் புறம் அவரை இருக்க வைத்துத் தலைவர் சொன்னது: “இந்தத் தமிழ்நாட்டில் மோடிகள் உள்ளே நுழைய விட மாட்டோம்” அப்போது ஜவகரிருல்லா போன்ற பழமை, அடிப்படை, தீவிர, பயங்கரவாத முஸ்லிம்களுக்கு அது இனிக்க, அவர்கள் எல்லாரும் உங்களைப் பாராட்டினார்கள், அன்று அதிமுக பக்கம் இருந்த பி.ஜைனுலாபுதீனின் தவுகீத் ஜமாத் கூட உடனே திமுக அணிக்குத் தாவி விட்டது. தேர்தலுக்கு முதல் வார வெள்ளியன்று மசூதிகளில் திமுகவுக்கு வாக்களிக்கச் சொல்லிவிட்டோம் என்றார்கள். அடுத்து வந்த ஞாயிறன்று சர்ச்சுகளில் திமுகவுக்கு வாக்களிக்கச் சொல்லிவிட்டோம் என்றார்கள். தலித் வாக்குகள் சேர்த்து நாற்பது சதவிகிதம் வாக்குகள் நமக்கே என்று சொல்லி சொல்லி மகிழ்ந்தோம். ஆனால், வாக்கு எண்ணிக்கையைப் பார்த்தால் இவர்கள் எல்லாரும் திமுகவுக்குப் போட்டதாகத் தெரியவில்லை. கவிழ்த்து விட்டார்கள். இப்போது மோடி நீங்கள் சொன்ன கடுஞ்சொல்லை மனதில் வைத்து ஜெயாவை சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆக ஆதரித்துவிடுவாரோ என்ற அச்சம் எழுகிறது. நீங்கள் இந்துக்களைக் கண்டபடிச் சகட்டுமேனிக்குத் திட்டிப் பேசும்போது ஜவகரிருல்லாக்களும் ஜைனுல்லாபுதீன்களும், எஸ்ரா சர்க்குணங்களும் கை தட்டி உற்சாகப் படுத்துவார்கள், நீங்களும் ஏமாந்து விடுகிறீர்கள். கடைசியில் கடுஞ்சொல் பேசியதன் விளைவுகளை அனுபவிப்பது நீங்களும், உங்கள் மகன், மனைவி,மகள்களும்தான் என்பதை யாராவது உங்களிடம் சொல்ல வேண்டும் என்பதால்தான் இதைச் சொல்கிறேன்.
2. இல்லாத மதவாத பூதத்தை அளவுக்கு அதிகமாக உருவகப் படுத்தி, மோடியை மதவாதி என்று வசை பாடுவது கட்சிக்கு நல்லதல்ல. மும்பையிலும், கோவையிலும், சென்னையிலும், மதுரையிலும், பிற இடங்களிலும் குண்டு வெடிப்புகள் நடந்திருக்கின்றன. முஸ்லீம் லீக் என்று மதத்தின் பெயரால் கட்சி இருக்கிறது, முஸ்லீம்கள் குறைந்தபட்சம் 23 அமைப்புகளை வைத்து அவ்வப்போது “விஸ்வரூபம்” எடுத்து தமிழ் நாட்டையே பயம் கொள்ள வைக்கிறார்கள். அமெரிக்காவில் எவனோ எடுத்த பத்து நிமிட திரைப் படத்துக்கு இங்கே அண்ணாசாலையை அடைத்து அவர்கள் ஆட்களைத்திரட்டி மறியல் செய்ததுதையும், அமெரிக்க தூதரகத்தை தாக்கி அச்சுறுத்தியதையும் மக்கள் விரும்பவில்லை. அப்படி இருக்க, அந்த அராஜகத்தை எந்த அரசியல் கட்சியும் கண்டிக்க வில்லை. தூதரகத்துக்குப் பாதுகாப்பு என்ற பெயரில், செய்யப்பட்ட ஏற்பாடுகளால், அந்தப் பக்கமே வாகனங்கள் செல்ல விடாமல் மூன்று மாதங்களுக்கு அண்ணா மேம்பாலம் நெரிசலில் சிக்கியது. அதைப்பற்றி எந்தத் தலைவரும் வாயே திறக்க வில்லை. இப்படியெல்லாம் அச்சுறுத்தும் அவர்கள் உங்களுக்கெல்லாம் மதவாதிகளாகத் தோன்றவில்லை. முன் எப்போதும் இல்லாத படி முஸ்லிம் பெண்கள் பர்தாவுடன்தான் வெளியே வரவேண்டும் என்று அடிப்படைவாதிகள் வற்புறுத்த அவர்கள் அப்படி நடமாடுவது, மற்ற மக்கள் மனதில் ஆழப் பதிகிறது. விஜய் டி.வியின் “நீயா நானா”வில் முஸ்லிம் பெண்களை பர்தா அணியும்படி சமீபகாலங்களில் கட்ட்டாயப் படுத்துவது சரியா? என்ற விவாதம் நடக்க உள்ளாது என்று அறிவிப்பு வெளியிட்டவுடன், அந்த அலுவலகத்தை ஆயிரக் கணக்கில் முற்றுகையிட்டு அச்சுறுத்தி, நிகழ்ச்சியை நிறுத்தியது மற்ற சமுதாயத்தினரை பெரும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. இதை எல்லாஉம் வெளியே சொல்வதில்லை, ஆனால் தேர்தல் போன்ற சமயம் வரும்போது நிச்சயம் காட்டி விடுவார்கள். எனவே பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் இப்போது சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள், இப்போது இருக்கும் சில முஸ்லிம் அடிப்படைவாதத் தலைவர்களால், நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளையக் கூடும் என்ற அச்சம் தலை தூக்கி உள்ளது. உங்கள் கட்சியில் இருக்கும் முன்னணியினரிடமே தனிப்பட்ட முறையில் பேசிப் பாருங்கள். சொல்வார்கள். உண்மை நிலை இப்படி இருக்கையில், நீங்களும் பிரசாரத்தில் மோடிகளை தமிழ் நாட்டுக்குள் விட மாட்டோம் என்று கோவை குண்டுவெடிப்புக்குக் காரணமான அல்-உம்மா நிறுவனரை, அருகில் அமரவைத்துக் கூறுவீர்களே ஆனால், அதன் தாக்கம் இந்துக்கள் மனதில் என்ன எனச் சிந்தியுங்கள். அடிப்படைவாதிகளை நீங்கள் ஆதரிக்க, பர்தா அணியக் கட்டாயப்படுத்தப் பட்டு, இஸ்லாத்தின் பெண்ணடிமை குறைகளை முன்னிறுத்தித் துன்பப்படும் முஸ்லிம் பெண்கள் உங்கள் அணிக்கு எதிராக, அதிமுகவுக்கு வாக்களிக்க முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது வெளியே வரவே வராது. இது அமைதியான ரகசியப் புரட்சி ஆகும். குஷ்புவைக் கேட்டுப் பாருங்கள், ஒரு முஸ்லிம் பெண்ணின் மனம் இந்த சூழலில் எப்படி இருக்கும் என்பதைச் சொல்வார்.
அல்-உம்மாவின் ஜவகரிருல்லாக்களும், தவுகீத் ஜமாத்தின் ஜைனுலாபுதீன்களும், கிறிஸ்தவப் போதகர் எஸ்ரா சற்குணங்களும் கைதட்டுவதற்காக நீங்கள் சொல்லும் கடுஞ்சொற்களால் வருகின்ற பின்விளைவுகள், “இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்ம ஒடம்ப ரணகளமாக்கிட்டாங்கடா” என்ற கைப்புள்ள வடிவேலின் வசனங்களை நினைவு படுத்துகின்றன.
3. வேலூர் தொகுதியில் திமுகவினர் எப்போதுமே நிற்கக் கூடாது என்பதை முஸ்லிம் லீக் சொல்கிறது. நீங்களும் அதை ஏற்கிறீர்கள். பின் அங்கே திமுக எதற்கு? வேலூரில் திமுகவைக் கலைத்து விடலாமே?
4. சிறுபான்மையினர் அனைவரும் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னதன் விளைவு, இந்துக்கள் ஆதரவு கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பது உண்மை. உணர்வு பூர்வமான விஷயங்களில் அணுகுகையில் அது இருமுனைக் கத்தி போன்றது என்பதை மறந்து விடக் கூடாது. 1980களில், “வன்னியர் வாக்கு அன்னியருக்கு இல்லை” என்று ராமதாஸ் கட்சி பரப்புரை செய்தபோது, “அன்னியர் வாக்கு வன்னியருக்கு இல்லை” என்ற எதிர்வினை எழுந்ததை நினைவில் இருத்துங்கள்.
5. அழகிரி அண்ணனுக்கு நடந்ததைத் தொண்டர்கள் அவ்வளவாக ரசிக்க வில்லை. கட்சிக் கட்டுப்பாடு, தலைவரின் முதிர்ந்த வயது, அனுபவம், செய்த தொண்டு இவற்றை மனதில் இருத்தி தொண்டர்கள் இதனைப் பெரிய அளவில் முன்னெடுக்க வில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் மீதுள்ள மரியாதை மட்டுமே காலா காலத்துக்குக் கழகத்தைக் காப்பாற்றிவிடுமா என்றால், அதில் ஐயம் எழுகிறது. அடுத்த தலைவர் மீது மரியாதையும் நம்பிக்கையும் இருந்தாலன்றி, இன்றைய தலைவர் மீதுள்ள மரியாதை முழுமையாக அடுத்த தலைவருக்குக் கிடைப்பது நிச்சயம் இல்லை. அதிலும் கூடத் தளபதி தன்னுடன் பொன்முடியையும், அதிமுக வரவான எ.வ.வேலுவையும் வைத்துக் கொண்டு அவர்கள் சொல் பேச்சைக் கேட்டு எடுக்கும் நடவடிக்கைகளைத் தொண்டர்கள் விரும்பவில்லை. மேலும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் வேலுவின் குறுக்கீடுகளை விரும்பவில்லை. அவர்கள் தலைவரின் மீதுள்ள மரியாதை காரணமாக பொறுத்துப் போகிறார்கள். அவ்வளவுதான். அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்குத் திமுகவில் கொடுக்கப் படும் முக்கியத்துவம் அதிமுகவில் நடக்குமா என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். பேசுகிறார்கள். எ.வ.வேலு உங்கள் வண்டியிலேயே எங்கு போனாலும் வந்து போவது போல, திமுகவிலிருந்து போன பரிதியோ, ரித்தீஷோ ஜெயா வண்டியில் தொங்கிக் கொண்டாவது போகமுடியுமா ? எ.வ.வேலு போன்றவர்களை மாவட்ட செயலாளர் ஆக்கி உண்மையான திமுக தொண்டர்களை அவமானப் படுத்தி விட்டீர்கள்.
6. நல்லதைச் சொல்லுகிறேன். கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம், உரிமை. உங்கள் நடவடிக்கைகளின் விளைவுகளும் உங்களையே சாரும்.
மோடிஜி அவர்கள் தமிழை குஜராத்திஇல் எழுதி பேசவேண்டும்: அவர் தமிழர்களை கவர அதுதான் சிறந்தவழி.
நமது தமிழகத்தைப் பற்றி மட்டுமே நாம் சிறிது எண்ணிப்பார்ப்போம். நாடு முழுவதும் மோடி பற்றிய ஒரு புரிந்துணர்வு இருந்தது. தமிழகத்திலும் அப்படித்தான். அந்த விளைவுகள் உணரப்படாதது ஏனென்றால் தமிழகத்தில் இடைத்தேர்தல் சமயத்தில் விதைக்கப்பட்ட திருமங்கலம் பார்முலாவும், அந்த பார்முலாவைப் பற்றி நமது மீடியாக்கள் உருவாக்கிய சித்திரமும் தான். பொதுவாக ஒரு சட்டசபை அல்லது லோக்சபை இடைதேர்தல் நடக்கும் போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் மனநிலை நம் வாக்காளர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் ஆளுங்கட்சிக்கு இன்னமும் சட்டசபையில் ஆயுட்காலம் இருக்கிறது எனவே நம் தொகுதிக்கு ஏதாவது நல்ல பலன் கிடைக்கும் என்று நினைப்பது வழக்கம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியை தழுவுவது என்பது , பொதுதேர்தலுக்கு இன்னமும் குறைந்த காலம் மட்டுமே உள்ளது என்னும்போது, ஆளுங்கட்சி மீது கடுமையான அதிருப்தி இருந்தால் அப்போது மட்டுமே எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பார்கள். 2011- தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது ஆளுங்கட்சியினர் எவ்வளவு பணத்தினை வாக்காளப்பெருமக்களுக்கு வாரி வழங்கினார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் ஆளுங்கட்சி வெற்றிபெறமுடியவில்லை . ஆளுங்கட்சியின் பணத்தினை வாங்கிக்கொண்டு , எதிக்கட்சிக்கே வாக்களித்து அதனை ஆளுங்கட்சியாக மாற்றிவிட்டனர். டூ ஜி , மின் தட்டுப்பாடு, குடும்ப அரசியலும், குடும்ப அதிகார துஷ்பிரயோகமும், என்று பல பிரச்சினைகளால் வெறுப்படைந்திருந்த மக்கள் திமுகவை கடாசி வீசிவிட்டனர். எனவே எவ்வளவு பணம் கொடுத்தாலும் நம் மக்கள் ஏமாறமாட்டார்கள் என்பது தெளிவு. தோற்றுப்போன கட்சியினர் , தங்கள் பணமும் போய், ஓட்டும் கிடைக்காமல் தோல்வி அடைந்து விட்டோமே என்ற வயிற்று எரிச்சலில் புலம்புவது வழக்கம். தோல்வி அடைந்தவுடன் தமிழக வாக்காளர்களுக்கு சாபம் விடுவது சிலரின் வழக்கம். இப்படித்தான் ஒவ்வொருமுறை எம் ஜி ஆர் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருந்த போதும், அட்டைக்கத்தி, மலையாளி, நடிகன் நாடாளமுடியுமா , சினிமாக்கவர்ச்சி, தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் என்றெல்லாம் பல காரணங்களும் , வசவுகளும் வெளிவரும். வழக்கம் போலவே இந்த தேர்தலிலும் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த 200 ரூபாயால் அதிமுக பெருவெற்றி பெற்றது என்று யாராவது நினைத்தால் அவர்களை விட முழு மூடர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த 200 ரூபாயை விட மிக அதிகமாக தஞ்சை, நீலகிரி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் சார்பில் பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் ஏன் ஜெயிக்க முடியவில்லை ? ஏனெனில் வெற்றியை தீர்மானிப்பது பணம் அல்ல. வாக்காளர்களிடம் அரசின் மீது இருக்கும் திருப்தி அல்லது அதிருப்தி இவை மட்டுமே வெற்றியை தீர்மானிக்கின்றன.
ஜனவரி 1989-லே திமுக எம் ஜி ஆர் மறைவுக்கு பின்னர் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறியது.27-1-1989 அன்று முதல்வராக வள்ளுவர் கோட்டத்தில் பதவி ஏற்றார் கலைஞர். 11-3-1989 அன்று நடைபெற்ற மதுரை மற்றும் மருங்காபுரி இடைத்தேர்தல்களில் ( அதாவது ஆட்சிக்கு வந்து 45 நாள் கூட ஆகாத நிலையில்) ஆளுங்கட்சியான திமுக தோற்று அதிமுக வெற்றி பெற்றது. ஏனெனில் திமுகவை விட அதிமுக பெரிய கட்சி. அதிமுகவின் இரு கோஷ்டிகளான ஜெயா- ஜானகி அணிகள் இணைந்தவுடன் திமுக பின்னுக்கு தள்ளப்பட்டது. அதே வருடம் 1989- நவம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக அணியே வென்றது. திமுக அணி தோற்றுப்போனது. பணம் கொடுத்து தோற்பது அரசியல்வாதிகள் தான். மக்கள் பணம் கொடுத்தாலும் ஏமாறமாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. பாஜக தோற்றதற்கு, பாண்டியில் செய்த பாமக-விஜயகாந்த் குழப்பத்தால் மக்கள் நம்பிக்கையை இழந்ததும், ராமதாஸ் அவர்கள் அவருடைய மகன் போட்டியிட்ட தருமபுரி தவிர மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்யத் தவறியதும் முக்கிய காரணங்கள்.
திமுக கூட்டணி தோற்றதற்கு முக்கிய காரணம் மத்தியில் யார் அரசு அமைக்கும் பொருட்டு திமுகவுக்கு நாம் ஓட்டுப்போடவேண்டும் என்பதை கடைசிவரை அவர்களால் தெளிவு படுத்த முடியவில்லை. காங்கிரஸ் மீண்டும் மத்தியில் அரசு அமைக்க திமுக கை கொடுக்கும் என்று மக்கள் சந்தேகப்பட்டனர். எனவே காங்கிரசுடன் சேர்ந்து திமுகவை துடைத்து எறிந்துவிட்டனர். காங்கிரசுடன் உறவு முறிந்தது என்று நாடகம் போட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய திமுக , தன்னுடைய மகள் கனிக்கு இராஜ்யசபா உறுப்பினர் தேர்தலுக்காக மீண்டும் சொக்கத்தங்கத்திடம் போய் விழுந்ததே, அவர் கட்சி மக்கள் நம்பிக்கையை இழக்க ஒரு முக்கிய காரணம் ஆகிவிட்டது. ஒரே ஒரு ராஜ்ய சபா பதவியை குடும்ப உறுப்பினருக்கு பெற்றுத்தந்து விட்டு, திமுகவை லோக்சபாவில் ( மக்கள் அவையில்) பூஜ்யம் ஆக்கி விட்டார் திமுக குடும்ப கட்சித்தலைவர்.
தயாநிதி மாறன், இராசா ஆகியோர் பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதவி விலக நேர்ந்தபோது, ஏற்பட்ட இரண்டு அமைச்சர் பதவியை ,கடைசிவரை மற்ற திமுக எம் பிக்களில் யாருக்குமே கொடுக்காமல் , காலியாகவே வைத்திருந்ததால், இந்த கட்சி குடும்ப கட்சிதான் என்ற உண்மை பட்டவர்த்தனமாக / அப்பட்டமாக திமுக தொண்டனுக்கு தெரிந்து போய்விட்டது. நமது தமிழக பத்திரிகை உலகமும், மின் ஊடகங்களும் மூடி மறைக்கும் அல்லது சொல்லத்தயங்கும் ஒரு உண்மை, மோடி ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரும், நீண்டகால திமுக குடும்பங்களில் பலவும் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டு விட்டனர் என்பது தான். அதற்கு ஈழ இன அழிப்பில் முக்கிய பங்காற்றிய காங்கிரசுடன் ஒன்பது வருடம் திமுக கை கொத்து இருந்தது என்பது தான்.
2011- தேர்தலின் போது, திமுகவினர் மீது தமிழக மக்கள் கொண்ட வெறுப்பு குறையாமல் திமுக தலைவரின் செயல்பாடுகள் அமைந்தன. ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய அமைச்சர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததும், மைனாரிட்டி மத கட்சி தலைவர்களின் ஆதரவால் தான் மீண்டும் வெற்றிபெறமுடியும் என்று தப்பு கணக்கு போட்டதும் திமுகவை சுத்தமாக கவிழ்த்து விட்டது. திமுகவின் நீண்ட கால ஆதரவாள நண்பர் நிச்சயம் இருபது இடம் எங்களுக்கு என்று ஏப்ரல் 21-ஆம் தேதிவரை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஏப்ரல் 22-அன்று முகம் சுருங்கி காணப்பட்டார். எல்லா இடமும் தோத்துடும் என்று எங்க கட்சிக்காரர்களே சொல்லுறாங்க சார் என்றார். திமுகவினரில் பலருக்கும் இந்த உண்மைகள் தெரிந்திருந்தன. அவர்களால் வெளியே சொல்ல முடியாது. ஆனால் பத்திரிகைகளில் பலவும் உண்மைகளை மூடி மறைத்தன.
திரு . ஜெயா அவர்கள் தமிழகத்தின் உண்மை நிலையை தனியாக எடுத்து சென்றது,,, தமிழர்களின் உண்மை பாதிப்பை ,,,, , தேசிய கட்சிகள் தமிழனை புறம் தள்ளுவதே வெற்றிக்கு காரணம் ,,,, நாம் என்ன சங்க வேலைகள் செய்தாலும் பாதிப்பை மீடிய முலம் பார்பவர்கள் பாதிப்பவர்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் ,,,,, சில பேர் பதவிக்காக போலியாக தேசியம் பேசி தமிழை நசுக்குவது ,,, ஜனநாயகத்தில் வெற்றி பெறுவது மட்டும் இல்லை ,,,,,,மக்கள் நம்பமாட்டர்கள் ,,,, நாம் தான் களத்தில் பாதிக்க படுவோம் !!!!!
தினமலர் செய்தி ஒன்று இதோ:
https://election.dinamalar.com/m/photo_gallery.php?cat=1168&id=118837
இப்படியும் நடக்கிறது
கோவை மாவட்டத்தில் இந்த அநியாயம் நடக்கிறது. மோடி வேடம் இட்டு அ.தி.மு.க.,விற்காக, வாக்கு சேகரிக்கிறார்கள். மேலும் மோடி பிரதமராக அம்மாவுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர்.
அருமையான அலசல் கட்டுரை!. கேரளா தவிர்த்து, கிழக்குக் கரையோர மாகாணங்களில் பா.ஜ.க அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. இதற்கு காரணம் இங்கெல்லாம் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. கேரளத்தில் காங்கிரஸ் மீது அவ்வளவாக குறிப்பாக உம்மன் சாண்டி மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லாத காரணத்தால் இந்தியாவிலேயே இங்கு மட்டும் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இன்னொன்று, ஆசிரியர் பஞ்சாபை விட்டுவிட்டார். அங்கு ஆளும் சிரோன்மணி அகாலிதள கூட்டணி மொத்தமுள்ள 13 இடங்களில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதில் பா.ஜ.க.வின் பங்கு 2. காங்கிரஸ் மூன்றிலும், ஆம் ஆத்மி கட்சி நான்கு இடங்களிலும், வெற்றி பெற்றிருக்கிறது. ஆம் ஆத்மி 432 தொகுதிகளில் போட்டியிட்டு, இந்த 4 இடங்களில் வெற்றி பெற்றது ஆளும் கூட்டணி மீதுள்ள அதிருப்தியையே காடுகிறது. அடுத்த வருடம் பஞ்சாபிற்கு சட்ட மன்ற தேர்தல் வருகிறது. பா.ஜ.க. இந்த மாநிலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பாஜகவின் தலைமையிலான தேஜமு ஏன் ஒரு சில மாநிலங்களில் வெற்றிபெற இயலவில்லை என்பதை சேக்கிழார் நன்கு பகுத்தாய்வு செய்துள்ளார். அதிலும் தமிழகத்தில் விளைந்த தேர்தல் முடிவுகளுக்கு அவர் சொல்லும் காரணங்கள் துல்லியமாகத்தெரிகின்றன. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நற்பணிதொடரட்டும். கீழ்கண்டவற்றில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
1. ஸ்ரீ நரேந்திர மோதியை மோடி என்று எழுதாமல் மோதி என்று எழுதுவது சரியானது.
2. வங்கத்தில் பாஜகவின் ஊடுருவல் என்று சொல்லாமல் வளர்ச்சி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.பரவல் என்பது கூட பரவாயில்லை. அன்னியர் அன்னிய கருத்தியல்கள் தானே ஊடுருவவேண்டும்.
3. ஒடிசாவில் பாஜகவும் காங்கிரசும் சம இடத்திலே இருக்கின்றன.இன்னமும் காங்கிரசை பாஜக முந்தவில்லை. ஒடிசாவில் காங்கிரஸ் பாஜகவைக்காட்டிலும் அரை சதம் ஓட்டுவீதத்தில் முந்தி உள்ளது. காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவளரவேண்டுமானால் பிஜேடியோடு எதிர்த்து நிற்பதே நல்லது.
ஒட்டுமொத்தத்தில் பாஜக வின் தேஜமு வெற்றி பெறாத மானிலங்களில் கூட வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது உண்மை. அது அடுத்ததேர்தலில் உச்சத்தினை எட்டும் என்பதே நமது விருப்பம்.
சில மாநிலங்களில் பிஜேபி வெற்றிமுகம் காட்டவில்லை என்பது உண்மை. மற்ற மாநிலங்களை பற்றி நமக்கு தெரியாது. ஆனால் தமிழ் நாட்டில் பிஜேபி தற்போதைக்கு ஒரு வலுவான சக்தியாகவும் பிறகு ஆட்சியை பிட்க்கும் கட்சியாகவும் வளரவேண்டும் என்றால் அதற்கு எனது ஆலோசனைகள் கீழே:—
1. அடுத்து தமிழக பிஜேபி தலைவராக திரு எச் ராசாவையே தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் நன்றாக ஆணித்தரமாக (மேடைகளில் & டிவி விவாதங்களில்) பேசுகிறார். மேலும் அவர் ஒரு நடுத்தர வயதுடைய இளைஞர். கட்சியை வளர்க்க கடுமையாக உழைக்க அவரது வயது இடம் கொடுக்கும். ஆகவே அவர்தான் அடுத்த தலைவராக வரவேண்டும். (மற்றவர்கள் எல்லாம் வழ வழா கொழ கொழா. அதனால் ஏதும் பயனிருக்காது. – திரு மோடியின் பிரதிபலிப்பு ராஜாவிடம் உள்ளது )
2. தமிழக பிஜேபி க்கு முதலில் “தாமரை நெஞ்சம்” என்ற ஒரு தமிழ் தினசரியை துவக்குங்கள். அடுத்து “Lotus ” என்ற பெயரில் English Weekly வேண்டும். “வெள்ளை தாமரை” என்ற பெயரில் fortnightly வேண்டும். பத்திரிக்கை பலம் இல்லாமல் தமிழ் நாட்டில் வளர முடியாது என்பதை எப்போது உணர்கிறீர்களோ அப்போதே உங்கள் வளர்ச்சி பயணம் தொடங்கிவிடும். எனது கோரிக்கையை (திரு எச். ராஜா அவர்களே) இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடாதீர்கள்.
3. தமிழ் மொழியில் ஆர்வமும் நல்ல குரல் வளமும் உள்ள ஒரு 50 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பேச்சு பயிற்சி கொடுங்கள். பிறகு அவர்களை முழு நேர பேச்சாளர்களாக ஆக்கி தமிழகம் முழுவதும் பிஜேபி கட்சியின் பிரச்சார மேடைகளில் பேச அனுமதிக்க வேண்டும்
4. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை கட்சி பொதுகூட்டம் தவறாமல் நடத்த வேண்டும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மாநிலம் பூரா சுற்ற வேண்டும். சும்மா சென்னையில் உட்கார்ந்து கொண்டு டிவி விவாத நிகழ்சிகளில் மட்டும் கலந்து கொண்டால் கட்சி சத்தியமாக வளராது.
5. பிஜேபி ஆதரவு டிவி என்று சொல்லபடுகிற Lotus நியூஸ் டிவி நமது கட்சிக்கு “அவ்வளவு” ஆதரவாக இருப்பது போல தெரியவில்லை. ரொம்ப தண்டம். ஒன்று அவர்களை திருந்த சொல்ல வேண்டும் அல்லது வேறு ஒரு டிவி சேனலை துவக்க வேண்டும். முடியாது என்று சொல்வது முட்டாள்களின் அகராதியில் மட்டும் இருக்கும் ஒரு பிடிக்காத வார்த்தை.
6. ராமதாஸ் போன்று நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனைகள் ஆனாலும் அவற்றிற்கு கருத்து (அதாவது ஆதரவு அல்லது எதிர்ப்பு) தெரிவிக்க வேண்டும். சும்மா தூங்கி கொண்டிருக்க கூடாது. செய்தி தாள்களில் அனைவரும் கூறிய கருத்துக்கள் வரும் ஆனால் பிஜேபி தலைவர்கள் பற்றி செய்தியே இருக்காது. என்ன காரணம்?
7. அனைத்து கட்சி கிளைகளுக்கும் “தீவிர உறுப்பினர் சேர்ப்பு” முயற்சியில் ஈடுபடவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும்.
8. கட்சி தொண்டர்கள் உறுப்பினர்களை சேர்ப்பது என்பது சுலபமல்ல. மக்கள் 1000 கேள்விகளை கேட்பார்கள். ஆகவே கட்சி தலைமை ஒரு சிறு கையேடு தயாரித்து ஒவ்வொரு கிளைக்கும் ஒரு 20000 பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும். அதில் 1)ஆர்.எஸ்.எஸ் பற்றி மக்களிடம் உள்ள தவறான எண்ணங்களுக்கு பதில் அளிக்கும் விதமான ஆதாரபூர்வமான பதில்கள் (முடிந்தால் போட்டோ வுடன்), 2)காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் எந்த தொடர்பும் இல்லை 3) காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தவறான கொள்கைகள் (நேரு காலம் தொடங்கி சோனியா காலம் வரை) 4) இது தமிழ்நாடு என்பதால் இங்கே ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில கட்சிகளின் தவறான கொள்கைகள் 5) மதசார்பின்மை பற்றிய தவறான கருத்துக்கள் 6) இன்னும் நான் இங்கே குரிப்பிடாதவை ஏதேனும் ஆகியவை அடங்கி இருக்க வேண்டும். இந்த சிற்றேட்டை (booklet ) மக்களிடம் கொடுத்து உண்மை நிலைதனை உணர செய்து விட்டு பின் அவர்களிடம் உறுப்பினராக சேர சொன்னால் மனம் உவந்து சேருவார்கள். அதை விட்டு வெறுமனே கட்சியில் சேருங்கள் என்றால் “போங்கப்பா நீங்கள் மதவாதிகள் ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கர வாத அமைப்பின் ஆட்கள்” என்று நம்மை உதாசீன படுத்துவார்கள். இதற்கு காரணம் திக மற்றும் திமுக ஆகியவை செய்த பொய் பிரச்சாரங்களே. அதை முறியடிக்க இதுதான் உகந்த வழி. தமிழக பிஜேபி செய்யுமா? எதோ வேலை வெட்டி இல்லாதவன் எழுதுகிறான் என்று உங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொள்வீர்களா?
9. எங்க ஊரில் 5 ரூபாய் கொடுத்து உறுப்பினர்களை சேர்த்தார்கள். சேரும்போது “உறுப்பினர் விண்ணப்ப ரசீது” (மஞ்சள் வண்ண பேப்பரில் செம்மண் கலரில் பிரிண்ட் செய்த ஒரு சீட்டு) என்று ஒன்று தந்தார்கள். ஆனால் உறுப்பினர் அட்டை ஒன்றை இதுவரை தரவில்லை. உறுப்பினர் விண்ணப்ப ரசீதுதான் உறுப்பினர் அட்டையா? விளக்கம் தேவை.
10. கட்சி தொண்டர்களை மதிக்க வேண்டும். அவர்களை தட்டி கொடுத்து வேலை வாங்க வேண்டும். அவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர்களது கருத்துக்களை செவி சாய்த்து கேட்கவேண்டும். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று இருக்க கூடாது. காங்கிரஸ் கட்சி போல (தொண்டர்களோடு சிறிதும் தொடர்பில்லாமல் இருந்தால்) நடந்தால் கட்சி வளராது. ஒரு செடி வளர்வதற்கு நீர் எப்படி அவசியமோ அப்படிதான் ஒரு கட்சி வளர்வதற்கு அடிமட்ட தொண்டர்கள் அவசியம். No cadre. No leader.
திரு எச். ராஜா அவர்களே! நீங்கள்தான் தமிழக பிஜேபி தலைவர் என்பது 99.9% உறுதியாகிவிட்டது. அதனால் எனது அட்வான்ஸ் congrats !!! எனது கருத்துக்கள் மீது கவனம் செலுத்தினால் கட்சி வளர வழி பிறக்கும் திரு மோடியை போல கட்சி வளர்ப்பில் நீங்கள் தீவிரம் காட்டுவீர்கள் என நம்புகிறேன்.
இரண்டே இரண்டு கட்சிகள் மட்டும் ஆதிக்கம் செய்யும் மாநிலங்கள் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், ஹிமாச்சல்பிரதேசம், சத்தீஷ்கர் , உத்தராஞ்சல் அல்லது உத்தராகண்ட் , ஆகியவை. இந்த மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் போட்டியிடுகின்றன. இதர உதிரிக்கட்சிகளான மூன்றாவது அணி என்பது சுயேச்சை பட்டியலில் தான் சேரும். வெற்றிபெறும் கட்சி 51 சதவீதமும், தோற்கும் கட்சி 49 சதவீத ஓட்டுக்களையும் வாங்கும். அதே போல இரண்டு அணிகளாக எல்லா கட்சிகளும் குழுசேர்ந்து போட்டியிடும்போதும் இப்படி 51 வாங்கியவர் வெற்றியும், 49 வாங்கியவர் தோல்வியும் அடைவது இயல்பு.
இரண்டு கட்சிக்கு மேல் அல்லது இரண்டு அணிகளுக்கு மேல் போட்டியிட்டால் , சுமார் 25-30 சதவீதம் ஒட்டு வாங்கியவர் கூட வெல்ல வாய்ப்பு உண்டு. இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் சுமார் 7 கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக தனியாகவும், திமுக நாலு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், பாஜக ஐந்து கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்தும், இவை தவிர மீடியாக்களின் தத்துப்பிள்ளையான ஆம் ஆத்மி, அனைவராலும் கைவிடப்பட்டு தனியாக அழுதுகொண்டே நின்ற அனாதைக் காங்கிரஸ், அம்மா அவர்களால் நைசாக கழற்றி விடப்பட்ட இரு கம்யூனிஸ்டுகள் . சில தொகுதிகளில் மாயாவதி கட்சியும், சில தொகுதிகளில் முலாம் சிங்கு கட்சியும் கூட போட்டியிட்டன. இப்படி பல்முனை போட்டி இருக்கும் போது, வெற்றிபெறும் வேட்பாளர் 25 சதவீதம் ஓட்டுக்களை வாங்கியே ஜெயித்து விடுவார். இதுபோல பல முறை நடந்திருக்கிறது.
பல முனைப் போட்டி இருக்கும்போது, ஐம்பது சதவீதத்துக்கு மேல் ஓட்டு வாங்கி வெற்றிபெறுவது என்பது மிக கடினம். பலமுனை போட்டி நிலவிய தமிழகத்தில் இந்த தேர்தலில் எம் ஜி ஆர் கட்சி ஆறு தொகுதிகளில் ஐம்பது சதவீதத்துக்கும் மேல் ஓட்டுக்களை வாங்கி சாதனை புரிந்துள்ளது. கரூர் , மயிலாடுதுறை ( மாயவரம்), நாமக்கல், தஞ்சாவூர், தேனீ, திருவள்ளூர் , ஆகியவையே அந்த தொகுதிகள். கரூர், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக வெற்றி என்றுதான் கருத்துக்கணிப்புக்கள் நமது மீடியாக்களால் தெரிவிக்கப்பட்டது. மீடியாகளின் கருத்துக்கணிப்பை பொய்யாக்கி இந்த தொகுதிகளில் ஐம்பது விழுக்காடுகளுக்கும் கூடுதலான ஓட்டுக்களை வாங்கி அதிமுக பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
மீடியாக்களின் செல்ல வளர்ப்பு பிராணியான ஆம் ஆத்மி , தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் நோட்டாவுக்கும், சுயேச்சைகளுக்கும் கீழே ஓட்டு வாங்கி ஜாமீன் தொகையை பரிகொடுத்ததுஎ
கம்யூனிஸ்டுகளும் தேவை இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு காணாமல் போனார்கள். ஜாமீனும் பறிபோனது. எம் ஜி ஆர் கட்சி கொடுத்த இரண்டு இடங்களை வாங்கிக்கொண்டு , அந்த கூட்டணியை ஏற்றிருந்தால், நிச்சயம் கம்யூனிஸ்டுகளும் இரண்டு இடங்களை வென்றிருக்கலாம். சிறிய மீனை வீசி பெரிய மீனை பிடிப்பதுதான் அரசியல். கம்யூனிஸ்டுகளின் கொள்கையும் தோல்வி, நடைமுறைகளும் தோல்வி. இனியாவது திருந்துவார்களா ?
இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை துல்லியமாக முன்கூட்டியே கணித்து ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிக்கைகளின் வாசகர்களில் சிலர் பரிசு பெற்றுள்ளனர். அந்த விவரங்கள் வேண்டுவோர் அந்த பத்திரிக்கைகளை வாங்கிப் படித்து அறிந்து கொள்க. இங்கு என்ன விஷயம் எனில், தமிழக அரசியல்வாதிகளில் திமுக ஒரு இடம் கூட ஜெயிக்காது என்று துல்லியமாக சொன்னவர் திரு மு க அழகிரி மட்டுமே. அவர் ஏதோ சொத்து தகராறு காரணமாக இப்படி சொன்னார் என்று சிலர் கூறுகிறார்கள். அது நமக்கு தேவை இல்லை. ஆனால் தமிழக அரசியல்வாதிகளில், திமுக கூட்டணி போட்டியிடும் 40- இடத்திலும் தோற்கும் என்று சரியாக கூறியவர் அவர் மட்டுமே. தமிழக முதல் அமைச்சர் கூட தன்னை சுற்றி உள்ளவர்களிடம் -‘ அதிமுக 33, பாஜக கூட்டணி 5, திமுக 2’- என்று சொல்லியதாக ஜூனியர் விகடன் தெரிவித்திருந்தது. எனவே தமிழக முதல்வரால் கூட திமுக சைபர் என்று சரியாக கணிக்க முடியவில்லை.
நமது தளத்தில் மறுமொழி இடும் அன்பர்களில் ஒருவர் அதிமுக வென்ற 37- எம்பிக்களை துருப்பிடித்த 37 ஆணிகள் என்று சொல்லி கருத்து எழுதியிருந்தார். ராஜ்ய சபையில் பாஜக வுக்கு பெரும்பான்மை இல்லாததால், அதிமுக மற்றும் இன்னபிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று திரு மோடி அவர்கள் சமாளிப்பார். மேலும் 543 எம்பிக்கள் உள்ள லோக்சபாவில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டிய சில மசோதாக்களையும் கூட அதிமுக 37 எம் பிக்களின் ஆதரவு பெற்று நிறைவேற்றிக்கொள்ளலாம். துருப்பிடித்த ஆணிகள் அல்ல. அவை நிச்சயம் பயன்படும். 2/3 பங்கு என்பது 362. இப்போது பாஜக கூட்டணிக்கு உள்ள 336 போக இன்னமும் 26 தேவைப்படும். அப்போது ஒரிஸ்ஸாவின் நவீன் பட்நாயக் ஆதரவு கொடுத்தால் கூட, 336+20=356 தான் ஆகிறது. 2/3 பெரும்பான்மைக்கு ஆறு குறைகிறது. ஆனால் எம் ஜி ஆர் கட்சி ஆதரவு கிடைத்தால் 336+37=373 ஆகிவிடும். எனவே அதிமுக எம்பிக்களின் ஆதரவை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிமுக ஆதரவு பாஜகவின் செயல்திட்டங்களுக்கும் மத்திய அரசின் சாதனைகளை மேம்படுத்தவும் நிச்சயம் தேவைப்படும்.
ஸ்ரீ பெரும்புதூர் எனப்படும் திருப்பெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் திரு ஜெகத்ரட்சகன் அவர்கள்தான் வெல்லுவார் என்று அனைவரும் கருதினர். அங்கு உள்ள ஒரு திருக்கோயிலுக்கு நான் குடும்பத்துடன் ஏப்ரல் மாதம் தேர்தலுக்கு ஒருவாரம் முன்னர் சென்றிருந்தேன். அப்போது குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர் , நக்கீரன் ஆகிய தமிழ் வாரப் பத்திரிகைகள் மற்றும் வாரமிருமுறை பத்திரிக்கைகளை வைத்துக்கொண்டு , அவற்றில் வந்த தேர்தல் கணிப்புக்களை ஒரு டீக்கடை வாசலில் நாலு ஐந்து நண்பர்கள் அலசிக்கொண்டிருந்தனர். நானும் அங்கு தேநீர் அருந்த நேரிட்டது. அந்த நண்பர்களில் ஒருவர் சொன்னார் இந்த பத்திரிகைகள் எல்லாமே திமுக வேட்பாளர் தான் இந்த தொகுதியில் வெற்றிபெறுவார் என்று கணித்துள்ளன. இதனை நம்பி யாரும் பந்தயம் கட்டாதீர்கள். பந்தயம் கட்டினால் தோற்றுவிடுவீர்கள் , 2011-சட்டசபை தேர்தலில் நீ மோதிரம் இழந்தாய் இதே பத்திரிகை கணிப்பை நம்பி என்று ஒரு வாரமிருமுறை இதழை தூக்கி காண்பித்தார். என்னடா இவர் இப்படி சொல்கிறாரே, பத்திரிக்கைகளின் கணிப்பு தவறா என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் தான் தெரிந்தது , அந்த இளைஞர் சொன்னதே சரி என்று. பத்திரிகை கணிப்புகள் ஒரு அளவுக்கு தான். எப்போதாவது சரியாக அமையும்- எப்போதும் அல்ல. ஏனெனில் மக்களின் நாடியை பிடித்து பார்த்து அறிவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.
வெள்ளையர்கள் நம்மை பிரித்து ஆண்டார்கள். நம் இந்திய மக்களை இனம், மதம் , மொழி, ஜாதி , நிறம் என்று பல்வேறு வகைகளில் பிரித்து நமக்குள் சண்டையை உருவாக்கி ஆதாயம் பெற முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களை கண்டறிந்து அவர்களை முற்றிலும் புறக்கணிப்போம். அப்போது நம் நாட்டின் முன்னேற்றம் உறுதிப் படும். அனைவரும் இந்தியர் என்ற உணர்வே மேலோங்கவேண்டும். வன்முறையை கையாளுவோரையும், அவர்களுக்கு ஆதரவு கொடுப்போரையும் நம் மக்கள் பல தேர்தல்களில் புறந்தள்ளியுள்ளனர். இந்த தேர்தலில் அந்த ஜாதிக்கட்சிகள் மற்றும் வெறியர்களுக்கு நம் மக்கள் சாவுமணி அடித்துள்ளனர். இனிமேலாவது அரசியல்வாதிகள் திருந்தட்டும்.
நமக்கு தெரிந்த ஒரு வெளிநாடு வாழ் தமிழ் அன்பர் தனது முகநூலில் (facebookpage ) பாராளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் பாண்டி உட்பட 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு புள்ளியியல் ஆராய்ச்சிகள் செய்து, அதாவது சென்ற தேர்தல்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் வாங்கிய வாக்கு, மற்றும் புதியதாக சேர்ந்த வாக்காளர் மனநிலை என்றெல்லாம் கணக்கு பண்ணிக்கொண்டிருப்பார். திமுக இவ்வளவு, அதிமுக இவ்வளவு, விஜயகாந்த் கூட்டணி இவ்வளவு, கடும் இழுபறி இவ்வளவு என்றெல்லாம் ஜமாய்த்துக் கொண்டிருந்தார் .
எனக்கும் ரொம்ப ஆர்வமாக இருந்தது எனவே படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கட்சிவாரியான வாக்கு சதவீத புள்ளிவிவரங்களை கூட்டினேன். பாஜக கூட்டணி, அதிமுக , திமுக கூட்டணி, காங்கிரசு, கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி என்று சில்லறைகளை சேர்த்து 110 சதவீதத்துக்கும் மேல் போய்விட்டது. சரி ஏதோ டைப் ரைட்டிங் மிஸ்டேக் என்று விட்டுவிட்டேன்.
பாஜக கூட்டணி 225 கூட வராது என்று புலம்பிக் கொண்டிருந்தார். திமுகவுக்கு தான் ஏன் ஒட்டுப்போடுகிறேன் என்று ஒரு பக்கப் புலம்பல் வேறு. அவர் உண்மையிலேயே வெளிநாட்டிலிருந்து இந்தியாவந்து தேர்தலில் வாக்களித்தாரா என்பது பற்றி மூச்சு கூட அவர் விடவில்லை. மேலும் காங்கிரஸ் அடிவருடியான அவர் திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்படாததால் , காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதால் தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு பயனும் இல்லை என்றுசொல்லி தான் திமுகவுக்கே ஓட்டுப் போடவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டுக் கட்டுரைகள் போல மிக நீண்ட கடிதங்கள் எழுதிப் பொழுது போக்கினார். இன்னும் இரண்டுநாள் தான், இன்னும் 24 மணிநேரம் தான் இருக்கு , பாஜக 180-190 தான் வரும், அதாவது வாஜ்பாய் கால ஸ்கோரான 182 முதல் அஞ்சு கூடவோ அஞ்சு குறையவோ வரும், எப்படிப் போனாலும் 200-ஐ தாண்டாது என்று நாளும் ஒரு கடிதம் வந்துகொண்டிருந்தது.
மோடி அவர்களைப் பற்றி மிகவும் கர்ணகொடூரமாக திட்டி எழுதுவதில் ஒரு வக்கிரத்தனமான மகிழ்ச்சி அடைந்துகொண்டிருந்தார். எவ்வளவு ஊழல் ஆனாலும் காங்கிரஸ் வந்துவிடும் என்ற நம்பிக்கையும் , காங்கிரஸ் தோற்றுப்போவது நன்கு தெரிந்தவுடன் ஏப்ரல் மூன்றாம் வாரத்தில், காங்கிரஸ் எப்படியும் 150 வந்துவிடும், மூன்றாம் அணி மொட்டைத்தலையர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கும் ஏனெனில் 3-ஆம் அணிக்கு 200-க்குமேல் வரும் என்றெல்லாம் எழுதி தள்ளிக்கொண்டிருந்தார். ஓட்டு சதவீதம் தான் 100-க்கு பதிலாக 110-க்கு மேல் போய்விட்டது அவர் போட்ட மொத்த பாராளுமன்ற எம் பிக்கள் எண்ணிக்கையாவது 543-க்குள் வருகிறதா என்று கூட்டிப் பார்த்தால் அது 575க்கு போய்விட்டது அதாவது 32 அதிகம். இந்த புலம்பல் கேசை என்ன செய்வது என்று விட்டு விட்டேன். தேர்தல் முடிந்து முடிவுகள் வந்தவுடன் ஒரு மூணு நாள் அவர் ஞாபகமே எனக்குவரவில்லை. நாலாவது நாள் நம் நண்பரின் முகநூலை நுழைந்து பார்த்தால், எனக்கு தலை சுற்றல் வராத குறைதான்.
அடித்தாரே ஒரு பல்டி. தமிழினத்தலைவி அம்மா அவர்கள் மாபெரும் வெற்றி. தன்மானத்தமிழன் அம்மா தலைமையில் மோடி அலையை தூள் தூளாக்கி தடுத்து நிறுத்தினான்- வடவர் கனவு தகர்க்கப்பட்டது இந்தியா முழுவதும் பெரு வெற்றி பெற்றுவிட்ட வடவர் கட்சியாம் பாஜகவை தமிழ் அம்மா, வங்காள அம்மா, கேரளா அய்யா, ஒரிசா பெரியவர் ஆகியோர் புறங்கண்டு முறியடித்தனர் என்று சொல்லி , எம் ஜி ஆர் கட்சி முதல்வருக்கு ஒரே பாராட்டுமழை. இவர் திமுகவுக்கு ஓட்டுப் போடுவது ஏன் என்று இரண்டு பக்க கடிதம் எழுதியது இன்னமும் அவரது தளத்தில் அப்படியே இருக்கிறது.
அதைவிட கொடுமை என்னவென்றால், அம்மா இல்லையென்றால் தமிழகத்திலும் பாஜக கடைவிரித்திருக்கும் , அதனை செயல் இழந்த மஞ்சளாரால் தடுக்க முடியாது, அம்மாவாலே மட்டுமே முடியும் .இதனை நன்றாக புரிந்துகொண்டுவிட்ட தமிழக வாக்காளப் பெருமக்கள் அதிமுகவே சரியான சாய்ஸ் என்று தீர்மானமாக வாக்களித்து , மோடியை உள்ளே நுழையாமல் விரட்டி விட்டனர் என்று எழுதி மகிழ்ந்திருந்தார். மோடியின் தமிழக கனவு தகர்ந்தது என்று ஒரே அம்மா புராணம் தான். திமுகவினர் அனைவரும் தமிழக நலன் காக்க அம்மா கரத்தை வலுப்படுத்தி உலகத்தமிழர் கரங்களை உயர்த்துவோம் என்று மங்களம் பாடி விட்டார். எனக்கு இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை.
காங்கிரஸ் ஆதரவாளரான அவர் காங்கிரஸ் அம்பது இடம் கூடப்பெறாமல், 44 லேயே நின்று எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போனது பற்றி வாயே திறக்கவில்லை. மூச்சு கூட விடவில்லை. இன்டர்நெட்டில் இப்படி எத்தனை வெளிநாடு வாழ் போலிகளோ ?
நமது தளத்தில் தேர்தல் கணிப்புக்கள் பற்றி பலரும் எழுதிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். இன்று வீட்டில் உள்ள பழைய பேப்பரை எடுத்து அடுக்கி கடையில் போடுவதற்காக சென்றேன். நிறுத்து காசை வாங்கிக்கொண்டு , அங்கே எனக்கு அடுத்ததாக ஒருவர் கொண்டுவந்த பழைய பேப்பர் கட்டில், ஒரு ஜோதிடர் சங்க அமைப்பின் மாதப்பத்திரிக்கையில் வந்த 2014- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றிய கணிப்பு படித்தேன். அனைவரும் வயிறார சிரித்தோம். இதோ அந்த கணிப்புக்கள்:- வாக்கு என்னும் தேதிய கிரகநிலைகளின் படி, அதாவது 16-5-2014 வெள்ளி கிழமை காலை 8 மணிக்கு உள்ள கிரக நிலைகளின் படி,
ஜே ஜெவுக்கு தோல்வியைக் குறிக்கிறது.
முகவுக்கு வெற்றியை குறிக்கிறது.
நரேந்திர மோடியின் கூட்டணி மெஜாரிட்டி பெறும். என்று எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள படி , முகவுக்கு வெற்றியும் கிடைக்கவில்லை, ஜெயலலிதாவுக்கு தோல்வியும் கிடைக்கவில்லை. உண்மையில் ஜெயாவுக்கு பெருவெற்றியும், கலைஞருக்கு பெரிய தோல்வியும் கிடைத்துள்ளன.
மத்தியிலும் நரேந்திர மோடியின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தான் எழுதியுள்ளனர். ஆனால் உண்மை என்னவெனில் , பாஜக தனியாக கூட்டணி இல்லாமலேயே தனி பெரும்பான்மை பெற்று விட்டது. ஜோதிட சங்க பத்திரிகையில் வரும் கணிப்பே இந்த லட்சணம் என்றால், சாதாரண ஜோதிடர்களின் கணிப்பை என்ன சொல்ல ? இவர்களெல்லாம் இதுபோன்ற அபத்தமான கணிப்புக்களை வெளியிடாமல் இருப்பதே உத்தமம். என்ன செய்வது ? தமிழ் நாட்டைப் பிடித்த சாபக்கேடுகள். இவர்களால் ஜோதிடம் என்ற சப்ஜெக்டுக்கே கெட்ட
பெயர் தான் வரும்.
அமித்ஷா போன்ற திறமையானவர்களை மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு, கேரளம்,மேற்கு வங்கம் மற்றும் ஓடிசாவில் இனி வரவிருக்கும் தேர்தல்களில் அதிக இடங்களில் வெல்வது நிச்சயம்.
அன்புடன்,
ஆரோக்யா
‘வாக்கு என்னும் ‘- என்பது தவறான க்ளிக் செய்ததால் வந்த பிழை. அதனை வாக்கு எண்ணும்- என மாற்றிப் படிக்க வேண்டுகிறேன்.
மனிதனுக்கு இரத்தக்கொதிப்பு , இரத்த அழுத்தம் ஆகியவை குறைவதற்கு நல்ல நகைச்சுவை நிறைய உதவும். இந்திரா குடும்ப கட்சியின் தமிழக தலைவர் திரு ஞான தேசிகன் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று திரு வள்ளல் பெருமான் முன்னாள் எம் பி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ள காரணங்கள் ஒரே சிரிப்பாக இருக்கிறது.
1. சத்திய மூர்த்தி பவனத்துக்கு அடிக்கடி செல்கிறாராம் ஞானதேசிகன். ஆனால் தொண்டர்களை அடிக்கடி சந்திக்கவில்லையாம். வள்ளல் பெருமான் சொல்வதைப் பார்த்தால், இந்திரா குடும்ப கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் ஆவிகளுடன் பேசும் திறன் படைத்தவராக இருந்தால் தான், காங்கிரஸ் தொண்டர்களுடன் பேச முடியும்.
2. எதிர்க்கட்சி என்ற அங்கீகாரம் கூட பெறமுடியாத அளவுக்கு படுதோல்விக்கு சோனியாவும், அவரது அருமை புதல்வன் இராகுல் அவர்களும்,காங்கிரஸ் மற்றும் திமுகவின் இமாலய ஊழல்களும், தமிழக மக்களால் சட்டசபை தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பின்னரும் திமுக தலைவரின் சிறிய மகளுக்கு இராஜ்யசபை தேர்தலில் ஆதரவு அளித்த காங்கிரஸ் மேலிடமும் அல்லவா காரணம் ? அப்படி இருக்க, சோனியாவும், இராகுலும் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து ஒரு ஐந்து வருடத்துக்கு விலகவேண்டும் என்று சொல்லியிருந்தால் ஒரு அர்த்தம் இருக்கும்.
3.இந்திரா குடும்பக்கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும் கர்நாடகம், அஸ்ஸாம், அரியானா , ஆகிய மாநிலங்களில் கூட படுதோல்வி அடைந்ததற்கு ஞானதேசிகனைப் பொறுப்பாக்குவது எப்படி பொருந்தும் ?
4.காங்கிரசின் ஊழல் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் பேரலை வீசியது. அந்த அலையின் விளைவாக நரேந்திர மோடியின் தலைமைக்கு பேராதரவு கிட்டியது. தமிழகம், மேற்குவங்காளம், ஒரிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்ப்பு அலையை அந்த மாநிலக்கட்சிகள் ஆகிய எம் ஜி ஆர் கட்சி, மமதா ,நவீன் பட்நாயக், டி ஆர் எஸ் ஆகியவை நன்கு பயன்படுத்திக்கொண்டன.
5.கேரளத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு காரணம் , கம்யூனிஸ்டுகள் காங்கிரசின் ஏஜென்டுகளே என்பதை அம்மக்கள் உணர்ந்ததாலும், உலகெங்கும் கம்யூனிசம் இனி போணியாகாது என்ற உண்மை கேரளா மக்களுக்கு சிறிது சிறிதாக உரைக்க தொடங்கிவிட்டதாலும் தான்.
6.ஆந்திர மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் தெலுங்கானாவை பிரித்து தனியாக வழங்கிய போதிலும், திரு கே சந்திரசேகர ராவ் அவர்கள் காங்கிரசுடன் கூட்டணி சேர ஏன் மறுத்தார் தெரியுமா ? காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் அவர் இன்று ஆட்சியை பிடித்திருக்க முடியாது. எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்க வேண்டும். காங்கிரசுக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீசும்போது, காங்கிரசுடன் சேர்ந்தால் நாம் காலிஆகிவிடுவோம் என்ற உண்மையை புரிந்துகொண்டதால் தான் , கேசிஆர்-காங்கிரசுக்கு பால் ஊற்றிவிட்டு, எள்ளும் தண்ணீரும் போட்டு தப்பித்துக்கொண்டார்.
7.தேவை இல்லாமல் ஞானதேசிகனை வம்புக்கு இழுக்கும் திரு வள்ளல்பெருமான் போன்ற பழைய காங்கிரஸ்காரர்களுக்கு , ஒரு வேண்டுகோள். நானும் பழைய காங்கிரஸ்காரன் தான். பெருந்தலைவர் காமராஜர் காலக் காங்கிரஸ் என்பது வேறு. இப்போது இருக்கும் காங்கிரஸ் என்பது இந்திராவீட்டு சமையல் கட்டு கட்சி. இந்த காங்கிரஸ் இனி உருப்படாது. உண்மையான காங்கிரஸ் காரர்கள் , பாஜகவில் சேருவதே நல்லது. பாஜகவில் சேரவிரும்பாதோர் வேறு புதிய கட்சியை துவக்குங்கள். சோனியா தலைமையிலேயே அந்த கட்சி இருந்தால் ,
இனி அவ்வளவுதான் . பாவம். நாம் சொல்வதெல்லாம் காங்கிரஸ் காரர்கள் காதில் ஏறுமா ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இந்த தேர்தலின் பொது தமிழகம் முழுவதும் ஒரு முறை சுற்றிவந்தபோது எனக்கு கிடைத்த சில காட்சிகளை இங்கே பதிவு செய்கிறேன். மின்சாரத் தட்டுப்பாடு, பஸ்கட்டண உயர்வு ,மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவை காரணமாக அம்மா ஆட்சியின் மீது சிறிது அதிருப்தி இருப்பதை மக்கள் தங்கள் பேச்சினூடாக வெளிப்படுத்தினார்கள்.
காங்கிரஸ் ஊழல்கள் பற்றி பலருக்கும் ஊடகங்கள் மூலமாக தெளிவாக தெரிந்திருந்தது. காங்கிரசு இனி இருக்ககூடாது – வேறு யாருக்காவதுதான் ஓட்டுப்போட வேண்டும் என்று அனைவரும் சொன்னார்கள். மோடிக்கு ஓட்டுப்போட்டுவிடுவது நல்லதுதானே என்று சொன்ன போது,
மோடி நல்லவராக இருக்கலாம் ஆனால் அவர் கூட இருக்கும் ராமதாசு வேண்டாம் சார், அவரு ஜெயிச்சா மீண்டும் ஏதாவது சாதி சண்டை வரும் , எனவேதான் எங்க சாதிக்காரரான திருமா, கிருஷ்ணசாமி போன்ற சாதிக்கட்சி நடத்துவோரைகூட நாங்கள் இனிமேல் ஆதாரிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துவிட்டோம்.எனவே அம்மா கட்சிக்குத்தான் ஓட்டுப்போடப் போறோம்- என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள். 1000- பேரில் 4 பேர் மட்டுமே மீண்டும் கைக்கு அதாவது காங்கிரசுக்கு ஓட்டுப் போடப்போவதாக கூறினார்கள். காங்கிரசு எல்லா இடத்திலும் டெபாசிட் காலியாகிவிடும் என்று அனைவரும் ஒட்டுமொத்தமாக கூறினார்கள். இதனை காங்கிரஸ்காரர்களும் தெளிவாக உணர்ந்தே இருந்தனர்.
தமிழ் நாட்டில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், ஒரு இடத்தில் காங்கிரசுக்கு டெபாசிட் திரும்ப கிடைத்துவிட்டதாக பத்திரிகைகளில் படித்த காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு இடத்தில் மட்டும் எப்படி டெபாசிட் திரும்ப கிடைத்தது என்று ஆராய்ச்சி செய்து ஒரு உண்மையை கண்டுபிடித்தனர். வேட்பாளர் வசந்தகுமார் திரு குமரி அனந்தனின் சகோதரர். பெரிய வியாபாரி. அவர் தனது வியாபாரத்தில் உள்ள பணியாளர்களைப் பயன்படுத்தி, வீடுவீடாக நோட்டீசு கொடுத்து, கடுமையான பிரச்சாரம் செய்து டெபாசிட்டை திரும்ப வாங்கிவிட்டார். மற்றபடி காங்கிரசாரால் அல்ல.
காங்கிரசுக்கு கிடைக்கப்போகும் வாக்குகளின் எண்ணிக்கை கம்யூனிஸ்டுக்கும் கீழேபோய்விடும் என்று எல்லோரும் சொன்னார்கள். என் நெருங்கிய நண்பர் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மிக்கும் கீழே போய்விடும் என்று அடித்து சொன்னார். ஆனால் கம்யூனிஸ்டுகளும், ஆம் ஆத்மியும் தலா அரை சதவீதம் தான் வாக்குகளை பெற முடிந்துள்ளது. ஆனால் காங்கிரசுக்கு 4 சதவீதத்துக்கும் மேலாக ஓட்டுக் கிடைத்து விட்டது. நிச்சயம் காங்கிரசுக்கு அரை சதவீதத்துக்கும் கீழாகத்தான் ஓட்டுக் கிடைக்கும் என்று பல காங்கிரஸ்கார்கள் கூட எதிர்பார்த்தனர்.
என் மனதில் என்ன தோன்றியது என்றால், அரை சதவீதம் கூட ஓட்டு வாங்க தகுதியில்லாத காங்கிரஸ் கட்சிக்கு நாலரை சதவீதம் ஓட்டு கிடைத்திருக்கிறது என்றால், பெரியவர் திரு ஞானதேசிகனைப் போன்ற நல்லவர்கள் ஓரிருவர் இன்னமும் காங்கிரஸ் கட்சியில் மிச்சம் இருப்பதாலோ என்ற எண்ணமே மேலோங்கியது. காங்கிரசில் மிச்சம் மீதி இருக்கும் நல்லமனிதர்கள் அனைவரும் காங்கிரசை விட்டு விலகி பாஜகவில் சேருவது நாட்டுக்கு நல்லது. அப்படி பாஜகவில் சேரவிரும்பாதவர்கள் காங்கிரசின் தலைமையை இந்திரா குடும்பத்திலிருந்து மாற்றினால் தான் காங்கிரஸ் இனி தேறும். இந்திரா குடும்ப தலைமையை மாற்றாவிட்டால் காங்கிரசின் எதிர்காலம் இனி பூஜ்யம் தான். எந்த கட்சி ஆனாலும் குடும்ப அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை. இதனை காங்கிரசும், திமுகவும் புரிந்து கொண்டால் அவர்கள் தலை தப்பும்.
100% we get 30 seats in M L A ELECTION TAMIL NADU
லக்னோ:
உ.பி., மாநிலம் பவாவுனில் இரண்டு இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளிகளாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது என போலீஸ் டி.ஜி.பி., கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் நார்கோ அனாலிசிஸ் மற்றும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், இந்த கொலைக்கு பின்னணியில் வேறு காரணம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இரண்டு பெண்களில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், இது கவுரவ கொலையாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது கூறினார்.-
டூ ஜி -வழக்கிலும் இதேபோல நார்கோ அனாலிசிஸ் மற்றும் உண்மை கண்டறியும் சோதனை ஏன் செய்யவில்லை ? பல உண்மைகள் வெளியாகுமே ? கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியாவது அரசுக்கு திரும்ப கிடைத்தால் நல்லது தானே ? இவ்வளவு நாள் காங்கிரஸ் திருடர்கள் இதனை செய்யவில்லை. மோடி அரசாவது டூ ஜி வழக்கில் உண்மை கண்டறியும் பரிசோதனை செய்ய உடனே நீதிமன்றத்தின் அனுமதி பெற்று செயலில் இறங்கி வெற்றிபெறவேண்டும். திமுக மற்றும் காங்கிரஸ் காரர்கள் மூலம் வெளிநாடு சென்ற பணம் திரும்ப அரசுக்கு கிடைக்க வழி வகுக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக விஜயகாந்த் காங்கிரஸ்/ திமுக ஆகிய இருகட்சிகளுடன் சேர்ந்து வலுவான கூட்டணி அமைக்கப் போவதாக சில அரசியல் கணிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். திமுக 25 காங்கிரஸ் 10 விஜயகாந்த் 12 உதிரிக்கட்சிகளான வி சி, பு தஆகியவை 2 ஆகமொத்தம் 49 விழுக்காடு ஓட்டுக்களுடன் 40-ம் நமதே என்ற பாணியில் பெருவெற்றி என்றெல்லாம் எழுதித்தள்ளி மகிழ்ந்தனர். காங்கிரசை காலி செய்யவேண்டும் என்று அம்மா திட்டமிட்டார். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக , உச்ச நீதிமன்றம் ராஜீவ் கொலைவழக்கு கைதிகளை விடுவிக்க , கிரிமினல் புரசீஜர் கோடு நடைமுறைகளை பின்பற்றி , சம்பந்தப்பட்ட மாநில அரசே முடிவு எடுக்கலாம் என்று சொல்லி அறிவித்தது. இதுதான்டா சாக்கு என்று ஆறேழு பேரையும் விடுவிக்கப்போவதாக அமைச்சரவை தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி, காங்கிரஸ் தலையில் பெரிய பாறையை தூக்கி போட்டுவிட்டார். அம்மா போட்ட போட்டில், காங்கிரஸ் முகம் சிதைந்து மூளை உருகி , ரோட்டில் அடிபட்டுக்கிடக்கும் பன்றி போல ஆனது. இந்த சூழலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் நமது எதிர்காலம் பாழாகிவிடும் என்பதை உணர்ந்த ஸ்டாலின், விஜயகாந்த் இருவருமே காங்கிரஸ் கூட்டணி கூடாது என்று முடிவெடுத்து வெவ்வேறு வியூகங்களை வகுத்தனர். திமுக காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 36 தொகுதிகளில் ஜாமீன் தொகை பறிபோய்விடும் என்பதை உணர்ந்த ஸ்டாலின் திமுகவுடன் உதிரிகளான வி சி, பு த ,மு லீ , ஆகியோருடன் சேர்ந்து 40 இடங்களிலும் போட்டியிட்டார்.
விஜயகாந்த் காங்கிரசுடன் பேரம் பேசி, ஒரே ஒரு மேட்டர் மட்டும் இழுபறியாக இருந்ததால், காங்கிரஸ் கூட்டணி முடிவாகாத அந்த சமயத்தில், ராஜீவ் கொலையாளிகள் விடுதலை அறிவிப்பு ,விஜயகாந்த் – காங்கிரஸ் கூட்டணி கனவு ஊமையன் கண்ட கனவானது.
கருணாநிதி பேச்சைக் கேட்டு, காங்கிரசுடன் கூட்டு வைத்திருந்தால், இந்நேரம் திமுக சுத்தமாக காணாமல் போயிருக்கும். பத்து சதவீத வாக்கு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கும்.ஸ்டாலின் இந்த அளவாவது திமுகவை காப்பாற்றி விட்டார்.
பொது மக்கள் விஜயகாந்தை ஏன் சைபர் ஆக்கினார்கள் என்றால் பாஜக கூட்டணி நடத்திய திருச்சி பொதுக் கூட்டத்தில் திரு நரேந்திர மோடி அவர்களுடன் சேர்ந்து மேடை ஏறியிருந்தால் நிச்சயம் ஒரு இடமாவது கிடைத்திருக்கும். மேலும் பாஜக கூட்டணி ஏற்படுவதற்கு முன்னால் , இவர் காங்கிரசை கண்டித்து ஒண்ணும் வாய் திறக்கவில்லை. எனவே காங்கிரஸ் எதிர்ப்பாளர் என்று தன்னை அடையாள படுத்திக்கொள்ளாத இவருக்கு ஓட்டுப்போட்டால் இவர் தேர்தலுக்கு பிறகு கூட , இழுபறி நிலை வந்தால், காங்கிரஸ் பக்கம் போய்விடுவாரோ என்ற பயம் மக்கள் மனதில் இருந்தது. அதனாலேயே இவருக்கு ஒட்டு குறைந்து, சீட்டு கிடைக்காமல் போனது.