திருஞானசம்பந்தர் உண்ட ஞானப்பால்

தவ ஸ்தன்யம் மன்யே த⁴ரணித⁴ர கன்யே ஹ்ருத³யத:
பய: பாரா வார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
த³யாவத்யா த³த்தம் த்³ரவிட ஶிஶு ராஸ்வாத்³ய ஸததம்
கவீநாம் ப்ரௌடா⁴நா மஜநி கமநீய: கவயிதா

என்பது பிரபலமான சௌந்தர்யலஹரி ஸ்லோகம். இது தமிழில்,

அன்னைநின் குயங்கள் பயந்திடு மமுதை
அகத்தெழு ஞானவா னந்தந்
துன்னிரு நதியாந் துதிகலை வாணி
தோற்றமாய்ச் சொல்லுவது அல்லால்
பின்னையொன் றெனுமோ, பிராட்டிநின் பீரம்
பேணிய பைந்தமிழ்ப் பிள்ளை
பன்னுறு பனுவற் பாவலர் மணியாய்
மனங்கவர் பாவலோ னெனில.

என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

Parvati-Feeds-JnanaSambandharபர்வதராஜ குமாரியே, உனது திருமுலைப்பாலானது வித்தியாமய பாற்கடலாய் பெருகுகிறது என்று நினைக்கின்றேன். ஏதனாலெனில், கிருபை மிக்கவளான உன்னால் கொடுக்கப் பெற்ற திருமுலைப் பாலைப் பருகி தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தப் பிள்ளை புலமை மிகுந்த இசைத்தமிழ்ப் புலவர்களில் தலைமகனாக ஆகி விட்டார்!

பகவத்பாத சங்கரரால் அருளப்பெற்ற இச்சுலோகத்தில் அவர் சீர்காழியில் ஞானசம்பந்தருக்கு மூன்றாம் வயதில் அம்மையும் அப்பரும் வந்து ஞானப்பாலூட்டிய அற்புதத்தை வியந்து பாராட்டுகிறார். தம் அடியவர்கள் பொருட்டு உருவம் தாங்கி வரும் அம்மையப்பரின் திருவுருவம் எம்போன்றோரது என்பு,தசை,குருதி முதலியவற்றால் உருவானதன்று. உடனே தோன்றி மறைந்து விடத்தக்க திவ்யசரீரம் என்பர். இவ்வாறு அருள் வடிவம் தாங்கி எழுந்தருளும் அம்பிகையின் ஸ்தனபாரங்களுக்கு முறையே பரஞானம்(கடவுள் அறிவு), அபரஞானம் (உலகியலறிவு) என்று பெயர் கொடுப்பர் சைவசித்தாந்திகள். இத்தகைய அறிவுகள் உயிர்களுக்கு ஞானஸ்வரூபியான தேவியின் திருவருளாலேயே விளக்கம் பெறுவனவாகும்.

தேவியின் திருவுருவம் ஞானசொரூபம் என்பது ‘சக்தி தன் வடிவே தென்னிற் றடையிலா ஞானமாகும்’ என்ற சிவஞானசித்தியார் வாக்கால் அறியலாம். காளிதாசனுக்கு தாம்பூலமுண்பித்தும் முத்துத்தாண்டவருக்கு பாலடிசில் தந்தும் கல்வி கலை ஞானம் தோற்றுவித்த உலகன்னை சத்புத்திராவதாரமாகிய ஞானசம்பந்த மூர்த்திக்கு சிவாக்ஞைப்படி பொன்வள்ளத்துப் பாலமுதம் உண்பித்தலின் மூலமாக சிவஞான விளக்கமும் அருள்வாக்குச் சித்தியும் நல்கினார்.

முன்பொரு காலத்தில் ஆதிபரமாச்சார்யரான தட்சணாமூர்த்தியின் சந்நதியில் ஸநத்குமாரர் என்ற பெயருடன் விளங்கி ஞானோபதேசம் பெற்ற ஸ்கந்தமூர்த்தியே தென்னாட்டில் சைவசமயத்தினதும், செந்தமிழினதும் வீழ்ச்சி கண்டு அருந்தவச்செல்வரான சீர்காழிச் சிவபாதவிருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் தம் அம்சமாக திருவவதாரம் செய்தார் என்பது சைவமரபு. ஸ்கந்தமூர்த்தியே ஸநத்குமாரர் என்பது,

‘பகவான் ஸநத் குமாரஸ் தம் ஸ்கந்த இத்யா சக்ஷதே!
தம் ஸ்கந்த இத்யா சக்ஷதே!’

என்ற சாந்தோக்கிய உபநிஷத வாக்கியத்தாலும் அறியப்பெறுவதாக ஆன்றோர் கூறுவர்.

திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரவர்கள் தமது ‘சித்த மார்க்கம்’ என்ற நூலில் சித்தர் கூட்டம் என்ற பகுதியில் ‘ஸ்ரீ கைலாய கிரியில் மௌனகுருவாக ஒருவர் குருமார்களுக்குத் தலைவராக விளங்குகிறார் எனவும், அவரெதிரில் நான்கு பிரதான சிஷ்யர்கள் இருக்கிறார்கள் எனவும், அவர்களைச் சேர்ந்த குருமார் கூட்டமொன்றுள்ளதெனவும், அவசியம் நேரும் போது அவர்களிலொருவர் உலகு நோக்கி வந்து அறம் வளர்த்துச் செல்வரெனவும்…’ எழுதியுள்ளார். சைவாகமப்படி பல்வேறு கிரியைகளிலும், யாகங்களிலும் சப்தகுருமார் பூஜிக்கப்படுகிறார்கள். அவர்களுள் ஸ்கந்தர் என்ற குமரனும் ஒருவர். இவ்வாறு ஸநத்குமார- ஸ்கந்த அவதாரமாக ஞானசம்பந்தரைக் கொண்டால், அவர் பொருட்டு அம்மையும் அப்பனும் எழுந்தருளி ஞானப்பால் தந்தருளியமை வியப்பன்று. அவ்வாறன்றி, ஞானசம்பந்தரை பூர்வ ஜன்மங்களில் சரியை, கிரியை, யோக நிலைகளை முடித்து ஞானநிலை அடையும் தகுதியோடு பிறந்த பக்குவான்மா எனக்கொள்ளினும், அகிலாண்ட நாயகி பாலமுதளித்து ஞானோதயம் பெறச் செய்தல் நிகழக்கூடிய அற்புதமே ஆகும். இவ்வாறு தேவியருள் பெற்றவர்கள் அநேகராவர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஞானக்களஞ்சியமாயும், அதிமதுரவாக்விலாசம் உடையவராயும் அன்னை காளியின் அருளாலேயே விளங்கினார் என்பது அவர் வரலாற்றால் அறியலாம்.

gnanasambandarதகுதி மிக்க பக்குவ ஆன்மாக்களுக்கு இறைவனும், இறைவியும் வெளிப்படையாக வந்து அருள்பாலித்தலினால் ஞானம் உண்டாகும் என்று திருமூலர் பெருமானும் கூறுகின்றார்.

‘சத்தியினோடு சயம்புவும் நேர்படில்
வித்தது வின்றியே எல்லாம் விளைந்தன’

‘நின்றனன் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே’

என்பதனாலே, அம்மையும் அப்பரும் எதிரில் வந்த மாத்திரத்தில் ஜீவான்மாவை மறைத்திருந்த திரோதானசக்தியான மாயை நீங்கி விட சர்வக்ஞானமும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்குமாம். இங்கு ஞானசம்பந்தருக்குப் பாலூட்டல் என்பது குரு மந்திரோபதேசம் செய்வது போன்ற வெளித்தோற்றமான ஆத்மசுத்தி கிரியை என்பர். இவ்வாறு பரசிவபெருமானுடைய அருள்நோக்கின் வண்ணம் அம்பாளின் அருள் கடாட்சமும், திருக்கண் நோக்கும், மெய் தீண்டலும், திவ்விய பிரஸாத உணவும், ஞானசம்பந்தப் பெருமானின் தடையற்ற ஞானவிளக்கத்துக்குக் காரணம் என்பர். இதனால், சேக்கிழார் பெரிய புராணத்தில்,

‘சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாக்கும் பாங்கினிலோங் கியஞானம்
ஊவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்’

என்று குறிப்பிடும் வகையில், மாஞானப் பெருங்கடலாக விளங்கியதோடு, தேனினுமினிய சித்தார வித்தாரக் கவி பாடும் செந்தமிழ் முதபெரும் புலவனாயும் ஞானசம்பந்தரை ஆக்கி விட்டது அம்மையின் அருட்பிரசாதமே ஆகும். கட்டுரை ஆரம்பத்திலே சொன்ன ஸ்லோகத்தின் நிறைவு ‘கமநீய: கவயிதா’ என்னும் வாக்காகும். சுகல வித்யா ஸ்வரூபிணியான அம்மையின் அருளால் வாக்விலாசமுண்டாகும். வாக்கில் இனிமை பிறக்கும்.

அஞ்சொன் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொன் மடமொழிச் சீரூடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித் தன் சேவடி போற்றுவார்க்
கின் சொல் அளிக்கும் இறைவி யென்றாரே

என்ற (திரு)மந்திரப்பாடலும் இதற்கு ஆதாரமாகும்.

ஞானசம்பந்தப்பிள்ளையாரே தாம் பெற்ற இப்பேற்றைப் பாடி மகிழ்ந்துள்ளமை படிக்கும் தோறும் இன்பந் தருவதாகும்.

‘போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
காதையார் குழலினன் கழுமல வளநகர்ப்
பேதையாள வளொடும் பெருந்தகை யிருந்ததே’

9 Replies to “திருஞானசம்பந்தர் உண்ட ஞானப்பால்”

  1. Dear Sarma, please write about the sufferings of young hindu babies and children in srilanka, without milk. It is happening in front of your eyes,yet you are not concerned of this fact. Please please write about their plight and appeal to the hindu world for help. You are living in srilanka hence you will have first hand information. Anyone can write about gnanasampanthar and milk. You need not spend your time on this.You being a hindu priest is well qualified to make an appeal on behalf of hindu babies and children suffering without milk .Their mothers too undergo immense suffering by not being able to feed their children.

    What we need now is socially engaged Hinduism. God should come down to earth and give milk to thousands of hindu babies -present day Gnanasampanthars- and save them. God can do it through you sir.

  2. in the first para, you say adi sankara’s comemnts; this means adi sankara was born after gnana sambndar; but many peole icluding kanchi mutt website say that adi sankara was born 800y before christ; may i have your views on this,please.

  3. replto sri rishi
    there are many children ina frica, india who are undernourished not only in sri lanka. the present auhtor knows about it but what he is trying tosay is something diffenrent.

  4. Thiru suryanarayanan

    When someone is hungry he or she should be fed first before preaching religion to him/her. This simple fact was told by religious leaders and I was repeating it in my words considering the place where Thiru Sarma lives. Hope you will understand my position.

  5. அன்பின் ஸ்ரீ ரிஷி

    உலகில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் வாழ்வது என்பது எப்படிக்கொடியதானது என்பதனை அனுபவித்தவன் என்ற படிக்கு இதை நான் எழுதுகிறேன்.

    ஐந்தரை வருஷ காலம் காஷ்மீரத்தின் பல பகுதிகளில் லே முதல் ஸலாமாபாத், ஸ்ரீ நகர், டோடா, ஜம்மு வரை பல பகுதிகளில் இருந்துள்ளேன். ஈழத்தில் தமிழர்கள் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்படுகிறார்களோ அதே அளவுக்கு அல்லது அதை விட மேலாக காஷ்மீரத்தில் ஹிந்துக்களும் சீக்கியர்களும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீர ஹிந்துக்கள் முற்று முச்சூடாக காஷ்மீரத்தை விட்டு புலம் பெயர்ந்து தேசத்தின் வேறிடங்களுக்கு செல்லும் படி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சீக்கியர்கள் எத்தனை கொடுமைகள் நிகழ்ந்தாலும் காஷ்மீரத்தை இன்னமும் விட்டுப் புலம் பெயரவில்லை.

    தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பற்பல இடங்களில் (குறிப்பாக கிழக்கு மாகாணப்பகுதிகளில்) தமிழர்களின் சிவாலயங்ககள் தகர்த்து நொறுக்கப்பட்டும் கூட ஈழத்தை விட்டு தமிழர்கள் புலம் பெயராது இன்னமும் அத்தனை இன்னல்களையும் எதிர் கொண்டு ஈழத்தில் தொடர்ந்து குடியிருப்பது என்பது காஷ்மீரத்தை விட்டு புலம் பெயரா தீரம் வாய்ந்த சீக்கியர்களை எனக்கு நினைவுறுத்துகிறது என்றால் மிகையாகாது. இந்த சஹோதரர்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இவர்கள் வாழ்வில் அமைதியும் வளர்ச்சியும் மேம்பட இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் என்ன செய்கிறோம்; செய்ய விழைகிறோம் என்பதே முக்யமானது என்பது என் தாழ்மையான கருத்து.

    காஷ்மீரத்தில் முஸல்மாணிய சஹோதரர்களுடன் காஷ்மீர நிலைமை பற்றிப் பேச்சு வார்த்தை வரும்போதெல்லாம் காஷ்மீர ஹிந்துக்கள் இன்னல்களை எதிர்கொண்டு புலம் பெயர மறுத்த சீக்கியர்கள் போல் காஷ்மீரத்தில் தொடர்ந்து இருக்கவொண்ணாது புலம் பெயர்ந்து ஓடியதை குத்திக்காண்பிப்பார்கள்.

    மதிப்பிற்குறிய ஸ்ரீ ரிஷி அவர்களாகிய தாங்கள் ஈழத்தில் இருந்த வண்ணம் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு எமது பலகோடி வணக்கங்கள் உரித்தாகுக. உலகத்தில் வேறு பகுதிகளில் குடியிருக்கிறீர்கள் என்றால் ஈழத்துக்கு நீங்கள் புலம் பெயர வேண்டும் என்று உங்கள் உடன் பிறவா தமிழ்ச் சஹோதரனாக அவச்யம் விக்ஞாபனம் செய்வேன். காஷ்மீர ஹிந்துக்களை காஷ்மீரத்துக்கு மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என தற்போதைய சர்க்கார் முயற்சிகள் எடுக்கும் என பலரின் எதிர்பார்ப்பு.

    ஈழத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் இன்னமும் தான் பிறந்த மண்ணை விட்டு விலகாது இன்னமும் அங்கேயே தங்கி கல்வி கற்று தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஸ்ரீ மயூரகிரி ஷர்மா அவர்கள் புலமையும் பெற்றுள்ளார்கள். இதுவே அன்னாருடைய கடும் உழைப்பையும் இன்னல்களுக்கு மத்தியிலும் பிறந்த பொன்னாட்டை விட்டு புலம் பெயராது இன்னல்களை எதிர் கொள்ளும் தீரத்தையும் சித்தரிக்கிறது.

    காஷ்மீரத்தில் இருந்த அனுபவம் வண்டி வண்டியாக காஷ்மீரத்தைப் பற்றி எழுத என்னைத் தூண்டுகிறது. இன்னமும் பூலோக ஸ்வர்க்கம் எனும் கொடும் மானுட நரகமாகிய இந்தப் பகுதியில் பணி செய்ய வாய்ப்பு நேரலாம் என்ற எண்ணம் அதை ஒத்திப்போட மனதை உந்துகிறது.

    ஈழத்தில் இருந்த படிக்கு ஈழத்தைப்பற்றி எதிர்மறையாக எழுதுவது என்பது ஏற்கனவே எதிர்க்கொள்ளும் இன்னல்கள் போதாது என்று மேற்கொண்டு இன்னல்களை விலைக்கு வாங்க வழி. முழு மூச்சாக அரசியலில் ஒரு வ்யக்தி ஈடுபட்டால் அதையும் கூட செய்யலாம் தான். செய்யவும் வேண்டும் தான். அவ்வாறு அரசியலில் ஈடுபட இயலாத ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைக்குறைவின்றி ஸ்ரீ மயூரகிரி ஷர்மா அவர்கள் செய்கிறார்கள் என்றால் நிச்சயமாக அது மிகையாகாது.

    ஆலயப்பணி, தமிழ் கல்வி, தமிழ் இலக்கியப்பணி, தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத இலக்கியப்பகிர்வுகளை உலகோருடன் பகிர்தல், சைவ சித்தாந்தம் சிவனருட் செல்வர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய உரைகள் நிகழ்த்தல் …….. போன்ற பணிகளை குறையில்லாது மிக்க நிறைவுடன் தொடர்ந்து ஸ்ரீ ஷர்மா அவர்கள் செய்து வருகிறார்.

    \\ Anyone can write about gnanasampanthar and milk. \\

    அப்படியா ஐயா, அம்மையப்பனைப் பற்றி யார் எப்படி எழுதினாலும் சரி…… அதில் இருக்கும் ஈசன், உமை என்ற சொற்களை வாசிப்பது கூட எமது நல்லூழ் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் கசடறக்கல்வி கற்று சான்றோர்கள் சொன்ன செய்தியை உளத்தில் வாங்கி உள்ளபடியான வேத வேதாந்தக்கருத்துக்களை உள்ளபடிப் பகிர்வது என்பது எல்லோராலும் ஆகாத கார்யம் என்பது என் பணிவான கருத்து. அப்படி ஒரு பரிச்சயத்தை ஸ்ரீ ஷர்மா அவர்களது வ்யாசங்கள் இந்த தளத்தில் தொடர்ந்து பதிவு செய்கின்றன என்பதும் என் கருத்து.

    ஒரு ஈழ எழுத்தாளர் எழுதிய புத்தக மதிப்புரை வாயிலாக ஈழத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சஹோதரர்களின் நிலை பற்றி ஸ்ரீ ஷர்மா அவர்கள் முன்னமேயே கருத்துப் பகிர்ந்துள்ளார்கள். கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் சார்ந்த ஒரு வ்யாசத்தில் சமூஹத்தின் அனைத்து சஹோதரர்களையும் எப்படி ஒருங்கிணைத்து ஈழத்தில் கோவில் செயல்பாடுகள் நிகழ்கின்றன என்பது போன்ற (தமிழகத்தில் கூட காணக்கிட்டாத ) அருமையான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

    உலகெங்குமேவிய தேவாலயந்தொரும் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானது ஆலயங்களுள் முக்யமானதொரு ஆலயமான கதிர்காமம் பற்றியும் தகவல்கள் பகிர்ந்துள்ளார்கள். அப்போதும் தாங்கள் கதிர்காம ஆலயம் இன்று எப்படி சிங்கள பௌத்தர்களால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டு நிலைகுலைந்துள்ளது என்ற கருத்தினைப் பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது. அது நிதர்சனமான கருத்து. சந்தேஹமேயில்லை. சரிசெய்யப்பட வேண்டிய நிலைமையும் கூட. குறவள்ளிப்பெருமாட்டியின் தாய்வழியைச் சேர்ந்தவர்கள் சிங்கள சஹோதரர்கள் என்ற அரும் செய்தியினையும் அந்த வ்யாசம் மூலம் ஸ்ரீ ஷர்மா அவர்கள் பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது.

    யார் எதைப்பற்றி எழுதினாலும் இன்னமும் எழுத வேண்டிய விஷயங்கள் நிச்சயம் இருக்கலாம். எழுதா விஷயங்கள் ஏன் எழுதப்படவில்லை என்பதனை பதட்டம் நிறைந்த பகுதியில் தீரத்துடன் வாழும் தமிழ்ச்சஹோதரர்கள் அவர்களின் மனோதர்மத்துக்கு உள்ளபடி விடுவது சாலச்சிறந்தது என்பது தாழ்மையான கருத்து. ஏனெனில் இன்னமும் ஈழத்தில் பற்பல இன்னல்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்வது மட்டுமின்றி சைவத்துக்கும் தமிழுக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்கள் என்பதே எனக்கு மிகவும் வியப்பைத் தரும் விஷயம். மதிப்பைத் தரும் விஷயம். எழுதியதில் இருந்து நாம் பெரும் பயன் என்ன என்பதே எனக்கு முக்யம்.

    ஈழத்தில் தமிழர் படும் இன்னல்கள் பற்றியதான தாங்கள் சொல்ல விழையும் விஷயங்கள் மிக முக்யமானவை தான். சிறிதளவும் சந்தேஹமேயில்லை. தாங்களே கூட இது பற்றி வ்யாசங்கள் எழுதி தமிழ் ஹிந்து தளத்தில் பகிர விழைவதைப் பற்றியும் தாங்கள் யோசிக்க வேண்டும் என்றும் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    என் உளத்தில் உள்ள விஷயங்களை……… பதட்டம் நிறைந்த பகுதியில் வாழ்ந்து அனுபவித்தவன் என்ற ரீதியில் பகிர்ந்துள்ளேன். பிழைகள் ஏதும் இருப்பின் எமது க்ஷமா யாசனங்கள்.

  6. \\\ in the first para, you say adi sankara’s comemnts; this means adi sankara was born after gnana sambndar; but many peole icluding kanchi mutt website say that adi sankara was born 800y before christ; \\

    A factual correction.

    The web site you refer to says :-

    “Shri Kanchi Kamakoti Peetham was established by Sri Adi Sankara in the year 482 B.C.”

    It is not 800y before christ.

    The issue has been well debated devoid of acrimony and with outstanding hitoricity and academic background in this website. If you are not aware of it, please go through the following url

    https://tamilhindu.com/2010/12/dating-adi-sankara-history-a-view

    you may go through the contents of the above article. That Acharya Adya Sankara was born at a date 800BCE is quite a new theory. If you have any factual material in that regard, the right place to share the same would be the above url. cause, you have all the related relavant material in and under the discussions of that article

    regards
    க்ருஷ்ணகுமார்

  7. Thiru Krishnakumar Avarkalukku
    I have been reading your opinion since I started reading tamilhindu website about 2-3 years ago. I have no doubt that you are a very knowledgeable person and I admire and respect you for the same. In a similar way I respect Thiru Sarma as well. I am fully aware of the difficulties Thiru Sarma will face if he antoganise the srilankan government. But there are ways to express his views without drawing attention of “others” and I am sure he is aware of it, hence I expected him to make an appeal on behalf of dying babies children and widow mothers. Furthermore he is the only srilankan hindu writes to Tamilhindu website out of hundreds of thousands living all over the world.
    Sir, we have thousands among our srilankan hindu community ready to build temples in srilanka or all over the world, and place their names on top of it to seek publicity. But when it comes to raise their voice in support of hindus or to alleviate their poverty we could see only a very few. This is the reality and due to this reason I am very closer to Swami Vivekananda.
    I am very eager to return to my birth place but due to my social political views I am reluctant to do so now. I am fully aware of the plight of Kashmiri hindus through esamskriti website. They are no different from us.
    I wish to write to Tamilhindu but I haven’t still learnt tamil typing. Hope I will do it sooner.
    There is a book on Destruction of Hindu temples in Sri Lanka published about 15 years ago. I could
    post you a copy if I know your address.
    With deep respect.

  8. வாழ்த்துக்கள் ஸ்ரீ சர்மா அவர்கள். இன்றுதான் தங்கள் கட்டுரையை வாசிக்க சம்ஷயம்
    கிடைத்தது.அருமையாக இருந்தது. கட்டுரையின் நடை நடுத்தர வாசகர்களுக்கானது போன்று இருந்தது எளிய நடை மிக பயனுடைத்து. மற்றும் திரு ரிஷி என்பவருடைய ஆதங்கம் புரிந்துகொள்ளகூடியதே. அப்பணி செய்ய பலர் உண்டு ஆனால் தங்கள் பணி செய்ய ஈழத்தில் நீக்கல் ஒருவரே உண்டு என்பதுவும் மறுக்கமுடியாததது. முடிந்தால் நீங்கள் ஆச்சாரியராக இருக்கும் ஆலயத்தை ஆதாரமாக கொண்டு நமிக்கைக்குரியவர்கள்மூலம் திரு ரிஷி அவர்களின் வேண்டுதலை பரிசீலிக்கலாம்.
    தொட்டீஸ்வரம் தொடர்பான உங்கள் கட்டுரைக்கும் நாம் இதே முறையில்தான் மறுமொழி இட்டிருந்தேன். பூனைக்கு எல்லோராலும் மணி கட்டமுடியாது. உங்களால் முடியும் போல் அபிப்பிராயப்படுகின்றோம்.
    சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி
    சர்வம் சிவமயம்
    சுப்ரமணியம் லோகன்

  9. கற்றறிந்த அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

    கோளறு பதிகத்தில் ‘பர நாரி பாகன்’ என்று உமையை திருஞானசம்பந்தர் எந்தப் பொருளில் பாடினார் என்று தமிழில் கேள்விகள் கேட்டு பதில் பெறத்தக்க TamilKB.com தளத்தில் பற்றிய ஒரு கேள்வியுள்ளது. அதை விவரமறிந்த ஆன்றோர் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *