துர்க்கா ஸுக்தம் – தமிழில்

யஜுர்வேதத்தில் உள்ள பரம பவித்திரமான ஸூக்தம் இது. துர்கா என்ற சொல்லுக்கு கடக்க முடியாத, செல்லமுடியாத என்பது பொருள். துர்காணி – கடக்கமுடியாத ஆபத்துக்கள். அன்னை மகா பிரகிருதியும் ஆதி சக்தியுமானவள், அறியமுடியாதவள் என்பதனால் இச்சொல் அவளது திருப்பெயராக இலங்குகின்றது… ஜாதவேதஸ் எனும் அக்னிக்கு சோமத்தைப் பிழிந்து அளிப்போம். அறிவுருவான அவன் எமது பகைகளைப் பொசுக்கிடுக. எமது ஆபத்துக்கள் அனைத்தையும் போக்கிடுக கடலைக் கடக்கும் கப்பலென அக்கரை சேர்த்திடுக…

View More துர்க்கா ஸுக்தம் – தமிழில்

தேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி

பகலைப் பிரசவிக்கிறது இரவியென உனது வலது விழி. இரவைப் படைக்கிறது
நிலவென உனது இடது விழி. சிறிதே மலர்ந்த பொற்கமலமென உனது மூன்றாவது விழி பகலுக்கும் இரவுக்குமிடையில் ஊடாடும் அந்தியைச் சமைக்கிறது… செவ்வரியோடிய கண்களில் கருவிழியின் ஒளிதிகழும் தேவியின் பார்வை திரிவேணி சங்கமத்தை ஒத்திருக்கிறது என்று சமத்காரமாகக் கூறுகிறார்.

View More தேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி

காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

காஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்… தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ சதி இத்யாதி) என்று சதிவலை தியரிகளை எடுத்துவிடுவது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. கிராம தேவதையான காஞ்சி காமாட்சியை பிராமணர்கள் அபகரித்து விட்டார்கள் என்பதும் இதேபோன்ற ஒரு அவதூற்றுக் கதையே அன்றி வேறில்லை…

View More காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

தேவிக்குகந்த நவராத்திரி — 5

பார்வதிக்கே எல்லா ஆட்டத்திலும் வெற்றிமேல் வெற்றி. சிவனுடைய உடுக்கை, சிவகணங்கள், நந்திதேவர், முதலான அத்தனை பொக்கிஷங்களும் அவளிடம்- சடைமுடியில் அமர்ந்த பிறைச்சந்திரனையும் விட்டுவைக்கவில்லை அவள். முகத்தில் பெருமிதம்பொங்க, “அடுத்து என்ன?” என்கிறாள். சிவன் இனித்தன்னையே பணயம் வைக்கவேண்டியதுதான் என எண்ணுகிறார்!

View More தேவிக்குகந்த நவராத்திரி — 5

தேவிக்குகந்த நவராத்திரி — 4

நவரசங்களும் தளும்பும் நடனங்களை தேவியும் சிவனும் இடையறாது ஆடிக்களிக்கின்றனர். உலகின் தாயும் தந்தையுமாகிய இருவரும் உயிர்கள்மீது கொண்ட எல்லையற்ற கருணையால் ஒருவரோடொருவர் இணைந்து இந்த நடனத்தை ஆடியபடியே உலகைப்படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளுகின்றனர். இந்த நடனம் நின்றுவிட்டால், உலகம் அழிந்துவிடுமாதலால், உலகம் இடையறாது செயல்பட, அம்மையும் ஐயனும் தொடர்ந்து ஆனந்தநடமிடுகின்றனராம்.

View More தேவிக்குகந்த நவராத்திரி — 4

தேவிக்குகந்த நவராத்திரி – 3

‘ஸ்தனபாரத்தினால் மெல்லிடை சற்றே வளைந்து காண, உதயமாகும் காலைக் கதிரவன்போன்ற லேசான சிவந்த வண்ணத்தில் ஆடையினை அணிந்திருந்த அவள் மலர்க்கொத்துக்களைத் தாங்கிநிற்கும் கொடிபோலக் காணப்பட்டாள். கிழமலர்களாலான ஒரு மேகலை தன் இடையிலிருந்து நழுவும்போதெல்லாம் அதைச் சரிசெய்த வண்ணம் வந்தாள். ஒளிந்திருந்த மன்மதன் அவளைக் கண்ணுற்றதும் தான்கொண்ட நோக்கம் நிறைவேறும் எனத் தைரியமடைந்தான்.

View More தேவிக்குகந்த நவராத்திரி – 3

தேவிக்குகந்த நவராத்திரி — 2

மீனாட்சி அம்மை திக்விஜயம் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறாள். எல்லா மன்னர்களையும் வென்றவள் இப்போது இமயமலையை அடைந்து அங்கிருக்கும் சிவகணங்களின் தலைவனைப் போருக்கழைக்கிறாள். தனது மணாளாகப் போகிறவர் அவரே என்பதை அவள் அறிந்திலள். அவளைத் தடுத்து நிறுத்த இயலாத நந்தி தேவர் சென்று சிவபிரானிடம் முறையீடு செய்ய, அவர் பொருள் செறிந்த சிறுமுறுவல் கொண்டு தாமே எழுந்து மீனாட்சியை எதிர் கொள்ள வருகிறார்.

View More தேவிக்குகந்த நவராத்திரி — 2

தேவிக்குந்த நவராத்திரி — 1

வழக்கமான புலித்தோலும், பாம்பணிகளும் இல்லாமல், மல்லிகை மலர்மாலைகளும் வாசனைத்திரவியங்களும் அணிந்து பேரழகனாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமான்.
தேவாதிதேவன் பல்லக்கில் பவனிவருவதனால் வேதவிற்பன்னர்கள் வேதம், ருத்ரம் முதலியனவற்றை ஓதுகின்றனர்; பூ, பழம் ஆகிய நைவேத்தியங்கள் அடியார்களால் படைக்கப்படுகின்றன. ஆனால், ஈசனின் கவனம் இவை ஒன்றிலுமே இல்லை. அவர் வேறெதிலோ கருத்தைச் செலுத்தியபடி எங்கோ நோக்கியுள்ளார். ஏன் என்னஆயிற்றாம்? யாரும் இதை உணரவில்லை. கூட்டத்தில் ஒருவரே உணர்ந்து கொண்டார். ‘எம்பிரான் உள்ளம் அழகின் சிகரமான தன் மனையாள் பார்வதியிடம் சென்றுவிட்டது. அவளைச் சந்தித்து ஆசையுடன் அளவளாவும் ஆவலில் ஐயன் விரைந்து கொண்டிருக்கிறார்’ என்கிறார் அந்த அடியார்…

View More தேவிக்குந்த நவராத்திரி — 1

“நும்வாய்ப் பொய்யு முளவோ?”

அசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியக் கவி மரபு. சங்ககாலத்திலேயே இது தமிழ்மரபுடன் கலந்து விட்டது… புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும். மகளிர் நகைக்க முல்லை மலரும். ஏழிலைம்பாலை என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். மாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. மகளிர் தழுவ மலர்வது குரவம். இவை ‘தோதகக் கிரியை’ எனப்படும். கவிராட்சச கச்சியப்ப முனிவர் காஞ்சிப்புராணம் இரண்டாம் காண்டம் இயற்கை வருணனியயில் இவற்றை அழகுற அமைத்துப்பாடுகிறார்…

View More “நும்வாய்ப் பொய்யு முளவோ?”

ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2

பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்… பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான் “மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து, தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்” என்று உருகுகின்றார் சடகோபர்…

View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2