உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்

Modi-Quote_pink_revolutionசென்ற காங்கிரஸ் ஆட்சியில் பீப் லெதர் தொழிலுக்கு சாதகமாக மாட்டிறைச்சி மையங்கள், பசுவதைக்கூடங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு எழுதப்படாத சட்டங்களாக இந்த தொழில் ஊக்குவிக்கப்பட்டது. சட்டவிரோத பசுக்கடத்தலுக்கு ரயில்களை பயன்படுத்தும் அளவு பகிரங்கமாக நடந்தது. சில ஆண்டுகளிலேயே உலகின் நம்பர் ஒன் பீப் ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு இந்தியா வந்தது. இந்த சாதனைகள்  பாலுக்கு உபயோகமற்ற வயதான மாடுகளையும் எருமைகளையும் மட்டுமே கொன்று செய்யப்பட்டது என்று பொதுமக்களை நம்ப சொன்னார்கள். இதனை பிங்க் புரட்சி என்று நாளேடுகளும், சமூக ஆர்வலர்களும் குறிப்பிட்டு எதிர்த்து வந்தார்கள். அரசியல் கட்சிகளில் பிஜேபி மற்றும் பல ஹிந்து அமைப்புக்களும், இயற்கை நலன் சார்ந்த அமைப்புக்களும் எதிர்த்து குரல் கொடுத்தனர். பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியும் தனது பிரசாரங்களின்போது பிங்க் புரட்சி பற்றி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் தேசத்தின் சொத்தான பசுக்களை அழிவிலிருந்து காப்பது குறித்து அறிவித்திருந்தனர்.

திருசெங்கோட்டு பகுதியில் மோர்ப்பாளையம் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வாரமும் கேரளா மற்றும் பிற பகுதிகளுக்கு கறிக்கு வெட்ட பசுக்கள் இங்கிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவது ஊரறிந்த ரகசியம். மத்திய, மாநில அரசுகளால் இந்த சட்டவிரோத கடத்தலைத் தடுக்க இயலவில்லை. வாரம் மூன்று நான்கு லாரிகள் பசுக்களை அடைத்து ஏற்றிச்செல்லும். வளர்க்க விரும்புவோர் வாங்கச்சென்றால் அவர்களுக்கும் நாட்டுப்பசுக்கள் கிடைக்கும். ஆனால் தற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன; வெளிநாட்டு அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு-ரேக்ளா  தடைசெய்யப்பட்டு காளைகள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. இவை உணர்த்துவது நாட்டுப்பசுக்களின் மீது வெளிநாட்டு சக்திகள் தொடுத்திருக்கும் திரைமறைவு இன அழிப்புப் போரேயாகும்.

illegal_cow_traffickingபசுக்களைக் கடத்தும் லாரிகளைக் காட்டிக்காட்டி ஓட்டுக்கேட்டவர்கள் இன்று பொதுமக்களை எதிர்கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். கிராமப்பகுதிகளில் இந்த சங்கடம் மிக கடுமையாக உள்ளது என்பதே நிதர்சனம். பதவியேற்று ஒரு மாதம் கடந்தும் இதுவரை ஒரு வார்த்தை கூட பிரதமர் பசுக்கள் குறித்து பேசாமையும், பீப் மற்றும் லெதர் நிறுவனங்களுக்கு கிடைத்த சலுகைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதும் ஜீரணிக்க இயலாத உண்மைகளே. கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நவீன பசுக்கொலைக்கூடங்கள்; இருக்கும் பசுக்கொலைக்கூடங்களை நவீனமாக்குவது போன்ற சதிகளுக்கு எதிராக எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. கறுப்பு பணத்தை மீட்க பதவியேற்ற முதல் நாள் கமிஷன் அமைத்த பிரதமரை பாராட்டலாம். கருப்புப்பணம் உருகிவிடப்போவதில்லை. ஆனால் தினம் தினம் மடியும் பசுக்களுக்கு உயிர்கொடுக்க யாரேனும் உள்ளார்களா? இவ்வளவுநாள், இந்த கொடுமைகளுக்கு காரணமென்று காங்கிரசை கைகாட்ட முடிந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு யார் பொறுப்பு? யார் பதில் சொல்வது? அந்த பாவமும் பசுக்களின் ரத்தமும் யாரை கறைபடுத்தும்?

இஸ்லாமிய படையெடுப்புக்களுக்கு முன்னரே ஒரு நாட்டையும் அம்மக்களின் உணர்வுகளையும் தொட்டு பார்க்க முதலில் அந்நாட்டின் பசுக்களை கவர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பசுக்களை மீட்டவர்கள், அப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் தெய்வங்கலாக் போற்றப்பட்டனர். முஸ்லிம் படையெடுப்புக்களை அரசர்கள் தங்கள் நாடுகளை காக்க எதிர்த்தாலும் பொதுமக்களின் கோபம் இஸ்லாமிய படைகள் பசுக்களையும், கோயில்களையும் சீரழிக்க துவங்கிய போதே வெடித்துக்கிளம்பியது. அதனாலயே, பாபர் தனது வாரிசுகளுக்கு இந்தியாவில் நிரந்தர பசுவதை தடை செய்யப்படுவத்தின் அவசியத்தை உணர்த்தியிருந்தார். கிறிஸ்தவ வெள்ளையரின் காலனியாதிக்கத்திற்கு எதிரான முதல் போர் மாட்டுக்கொழுப்பை பயன்படுத்த சொன்னதன் மூலமே ஏற்பட்டது. அதை தொடர்ந்து 1917 பீகார் கலவரம், சாதுக்கள் நடத்திய டெல்லி போராட்டம், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று இன்றுவரை இந்த தேசம் பசுக்களின் பொருட்டு லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவை உணர்த்துவது அன்று முதல் இன்று வரை பசுக்கள் இந்திய மக்களின் உணர்வின் மையம் என்பதும் பசுவதை என்பது சகிப்புத்தன்மையின் எல்லை என்பதுமே.

ban_cow_slaughter_1வெறும் உணர்வுரீதியான எதிர்ப்பு என்பதை தாண்டி, பசுக்களின் ஆரோக்கியம்-சமூக-பொருளாதார ஆளுமை என்பதையும் கணக்கில் கொல்ல வேண்டும். நாட்டுப்பசுக்கள் மூலம் பல ஆயிரம் கோடி உரம், மருந்து மற்றும் பெட்ரோலிய இறக்குமதிகளை குறைக்க இயலும். நாட்டுப்பசுக்களின் மூலம் பெறப்படும் மருந்துப்பொருட்களுக்கு மிகப்பெரிய வணிகச்சந்தை உள்ளது. ஆரோக்கியம், விவசாயம், இயற்கை என்று எல்லா வகையிலும் நாட்டுப்பசுக்களின் வீச்சு அளப்பரியது. இயற்கை வேளாண்மை நாட்டுப்பசுகள் இன்றி சாத்தியமில்லை. இன்றைய நிலையில் பாரதமாதாவை விட கோமாதா முக்கியம். கோமாதாவினால் தான் பாரதமாதா வளமும் புனிதமும் பெறுகிறார். கோமாதாவை நம்பித்தான் பாரதமாதா.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாட்டுப்பசுக்களை (Bos indicus) தேசிய விலங்காக அறிவிக்கவும், பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக நாட்டுப் பசுக்களை மையமாகக் கொண்ட பொருளாதார புரட்சிக்கு வித்திடவும் வேண்டும். நாட்டுப்பசுக்களுக்கு தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் ஆகும்.

கட்டுரை ஆசிரியர் ந.சசி குமார் கொங்கு மண்டலத்தில் பிறந்து வளர்ந்து தற்போது தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்.   தனது மண்ணின் பாரம்பரியம், கலாசாரம், நாட்டுப் பசுக்கள், விவசாயம் ஆகியவற்றில் தீவிர பிடிப்பும் ஈடுபாடும் கொண்டவர்.  இவை குறித்து தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார்.

48 Replies to “உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்”

 1. பிரதமர் மோடி அவர்கள் !பசு வதை ! தடுப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் .யானைகளை கவனிக்கும் முதல்வர் !பசு ! விசயத்திலும் கவனிக்க வேண்டும் .

 2. அம்பாணி அதானி சூறையாடல் சர்க்கார் இது… நாட்டுப்பசு தேசிய விலங்கு .மரண தண்டனை தஅபராதம் தீர்வு

 3. . நான் இந்தியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்டபோது, தமிழ்நாட்டில் பசுவதை தடுக்கப்பட்டிருந்தது. கேரளாவில், இந்துக்கள் மாட்டிறைச்சி உண்ணமாட்டார்கள். இப்பொழுது, இந்துக்கள் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மாட்டிறைச்சி உண்ணும் அவலத்தை அறிந்துகொண்டேன். எப்பொழுது இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துகிறார்களோ, அப்பொழுதுதான் பசுவதை நிறுத்தப்படும்

  முதலில், இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இது நடக்காது போனால், பசுவதையை எங்கும் தடை செய்ய இயலாது. குறிப்பாக, இந்து இளைஞர்கள்தான் மாட்டிறைச்சி உண்பது தவறு, சமயத்திற்கு முரண்பாடானது என்று கருதுவதில்லை.

  இரண்டாவதாக, வெளிநாட்டுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட வேண்டும்.

  மூன்றாவதாக, இந்துக்கள் 80 சதவிகிதத்திற்குமேல் உள்ள மாநிலங்களில் பசுவதை தடை செய்யப்பட வேண்டும்.

  நான்காவதாக, அம்மாநிலங்களிளிருந்து இறைச்சிக்காக பசுக்களோ, எருதுகளோ, எருமைகளோ அனுப்பப்படுவது தடை செய்யப்பட இந்துக்கள் போராட்டம் நடத்தவேண்டும்.

  ஐந்தாவதாக, முஸ்லிம், கிறித்தவ சகோதரர்களை மாட்டிறைச்சி உண்ணுவதை நிறுத்தும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். மத நல்லிணக்கம் கருதி அவர்கள் அதை ஒப்புக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

 4. சரியான சமயத்தில் பகிரப்பட்ட வ்யாசம்.

  VSRC தளத்தில் ஆப்ரஹாமிய மதவ்யாபாரிகள் நமது ஸ்வதேசிப் பசுக்களை அழித்தொழித்து வெளிநாட்டு ரகப் பசுக்களை ஜபர்தஸ்தியாக ப்ரசாரம் செய்யும் அவலம் பகிரப்பட்டுள்ளது. ஹிந்து இயக்க செயல் வீரர்கள் படுகொலை, கொலைகளில் 20 வருஷங்களுக்கும் மேற்பட்டு தேடப்பட்டு வரும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிடிக்கப்பட்டவுடன் விடுதலை, பசுவதை, கோவில் நிலங்களை ஆப்ரஹாமியர்கள் அபகரிப்பு, ஹிந்துக்கோவில் விழாக்களை முஸல்மாணியர் அடாவடியாக தடுப்பது……….பாரம்பர்யமிக்க கோவில்கள் சர்க்காரால் அபகரிக்கப்படல்………… சிற்பங்கள் மற்றும் கற்றூண்கல் புனருத்தாரணம் என்ற பெயரால் மணல்வீச்சால் பாழ்படுத்தப்படல்…………பாரம்பர்யமிக்க கோவில் கதவுகள் பெயர்த்தெடுக்கப்பட்டு புதிய கதவுகள் பொறுத்தப்பட்டு அதில் இனவெறி ஈ.வெ.ரா மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரர்களிடமிருந்து பணம் பெற்ற மதவ்யாபாரி ரெவரெண்டு தெரசாள் போன்றோரின் முகங்கள் பதிக்கப்படல்………….தமிழகத்தில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக்குடிமக்களாக ஆக்கப்பட்டுள்ளார்களோ என்று எண்ணுமளவுக்கு நிலமை சென்று கொண்டிருக்கிறது.

  ஸ்ரீ செந்தில் அவர்கள் உச்ச ந்யாயாலயம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்ததை கடுமையாக ஆக்ஷேபித்து விஜயவாணியில் வ்யாசம் எழுதியுள்ளார். அதை ஸ்ரீ சசி குமார் அவர்கள் பகிர்ந்துள்ளார்கள்.

  அதையடுத்து ஸ்ரீமதி ராதா ராஜன் அவர்கள் ஜல்லிக்கட்டு என்பது குரூரம் மிகுந்த ஒழிக்கப்பட வேண்டிய தமிழ் கலாசாரம் / பாரம்பர்யம் என்று இரு பாகங்களாலான ஒரு வ்யாசம் சமர்ப்பித்துள்ளார்.

  ஒரு சில ந்யாயமான கருத்துக்களையும் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய கருத்துக்களையும்…………..கிட்டத்தட்ட அமுதத்தையும் விஷத்தையும் கலந்தது போன்ற பாங்கில் பகிரப்பட்ட வ்யாசம்.

  இரண்டாவது பாகத்தில் பிங்க் புரட்சி என்ற பெயரில் நமது பசுக்கள் அண்டை மாகாணமான கேரளத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு மாமிசத்திற்காக வெட்டப்படும் அவலத்தை விவரித்து அதை எதிர்ப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று மிக விரிவாக கருத்துப்பகிர்ந்துள்ளார். இது மிகவும் போற்றப்பட வேண்டிய செயல்பாடு.

  ஆனால் ஜல்லிக்கட்டு என்பது குரூரம் மிகுந்த ஒழிக்கப்பட வேண்டிய தமிழ் கலாசாரம் / பாரம்பர்யம் என்று ஸ்ரீமதி ராதா ராஜன் அவர்களால் விஷமத்தனமாக இழிவு செய்யப்பட்டமை மிகக் கடுமையாக நிந்திக்கப்பட வேண்டிய விஷயம். ஜல்லிக்கட்டு என்ற பாரம்பர்யமிக்க கோவில் வழிபாடுகளுடன் சம்பந்தப்பட்ட சடங்கில்…… பங்கெடுக்கும் காளைகளுக்கு நிகழும் விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதிலும்…….. அவை ஆராயப்பட்டு இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது…… என்பதிலும் மறு கருத்து இருக்க முடியாது. ஆனால் முற்று முழுதாக ஜல்லிக்கட்டு என்ற சடங்கு சம்ப்ரதாயமே ஒழிக்கப்பட வேண்டும் என்று கூவுவது மதிஹீனமான செயல்பாடு. உச்ச ந்யாயாலயத்தில் தீர்ப்புக்கு எதிராக Review Petition தாக்கல் செய்யப்பட்டு இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முயற்சி எடுக்கப்பட வேண்டும்.

  கோவில் வழிபாடுகளுடன் சம்பந்தப்பட்ட இந்த சடங்கை ஜல்லிக்கட்டு விளையாட்டு என்ற படிக்கு முன்னெடுத்து…… பாரம்பர்யமிக்க கோவில் வழிபாடுகளுடன் சம்பந்தப்பட்ட ……..ஒரு சடங்கு சம்ப்ரதாயத்தை …….விளையாட்டு என்று சித்தரித்ததிலிருந்தே……. இதை தடை செய்ய முயன்ற ஆப்ரஹாமிய சக்திகளின் விஷமத்தனம் வெளிப்படுகிறது என்றால் மிகையாகாது. ந்யாயாலயம் இதை ஹிந்து மத வழிபாடுகளுடன் சம்பந்தப்படாது ஒரு விளையாட்டு என்ற ரீதியில் விசாரணை செய்து தீர்ப்பும் வழங்கியுள்ளது. நிச்சயமாக மறுபரிசீலனைக்கு உகந்த தீர்ப்பு.

  இது மட்டிலும் போதாது என்று புலால் உண்ணும் ஹிந்துக்கள் புலால் உண்பதை விட்டொழிக்கும் வரை மோக்ஷம் அடைவதற்கு அருகதை அற்றவர்கள் என்றும் ஜாதி மேட்டிமை மிக ஸ்ரீமதி ராதா ராஜன் தனது வ்யாசத்தின் முதலாம் பாகத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார். எந்த வைதிக சாஸ்த்ரங்களிலும் இவ்வாறு சொல்லப்படாத ஒரு விஷயத்தை ஜாதி மேட்டிமை மிகப் பகிர்ந்ததும் மிகக் கடுமையாக நிந்திக்கப்பட வேண்டிய விஷயம்.

  ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்டு புலால் உண்ணாமையை ப்ரசாரம் செய்வது என்பது போற்றப்பட வேண்டி விஷயம்.

  ஆனால் ஹிந்து மதத்தில் புலால் உண்பவர்கள் மோக்ஷத்திற்கு அருகதை அற்றவர்கள் என்ற படிக்கு ஒரு துஷ்ப்ரசாரம் செய்வது மிகக் கடுமையாக நிர்தாக்ஷண்யமாகக் கண்டிக்கப்பட வேண்டிய அவலம். வேதத்திலேயே ம்ருக வதைகளுடன் கூடிய வேள்விகள் சொல்லப்பட்டுள்ளன என்பது மறுதலிக்க முடியா விஷயம்.

  மிக விரிவாக விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்.

 5. I have asked this question on many Right Wing forums and have not received an answer yet. In fact, most of the right wing websites simply refused to approve my comment. Let’s see if Tamil Hindu has the intellectual honesty to publish my comment and give a reply.

  To those of you who are protesting against cow slaughter, I have a simple, straight forward question.

  Do you guys oppose dairy farming too? If not, why not? It’s been proven that dairy farming is an inhuman, cruel, barbaric practice that tortures cows beyond imagination. Here’s a reference link – https://www.rediff.com/news/2000/apr/11inter.htm

  Any answers?

 6. தாய்க்கு நிகரான பசுக்களைக் கொன்று சாப்பிட உண்மையான இறைபக்தி உள்ளோர்க்கும் நமது நாட்டை நேசிப்பவர்களுக்கும் நல்லோர்களுக்கும் மனமே வராது. ஒரு மஹா பாவகரமான செயல் பசுவதை. அரசு பசுவதையை கண்டும் காணாமல் இருந்தால் அவர்களுக்கும் பாவம் வந்து சேரும் என்பது உறுதி. பசுவதைக்கு எதிராகவும் இந்துக்களுக்கு பசுக்களின் மாண்பினை புரியவைப்பதர்க்கும் ஒரு பேரியக்கம் தொடங்கப்படவேண்டும். இந்துக்களின் மத்தியிலும் ஒரு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பசுவதையை ஆதரிக்காத மற்றும் மாட்டிறைச்சியை உண்ணாத பிற மதத்தவரையும் அறிந்து போற்றி கவுரவிக்கலாம்.

 7. As long as sellers are available buyers will be there. Who will take care of the old animals,? Is there any solution without financial implication?

 8. இந்து மதத்தையும் அதன் நம்பிக்கைகளையும் ஒரு பொதுவான நிலையில் இருந்த பார்க்க நாம் அனைவருமே பழகிக் கொள்ளவேண்டும். பாரதமாதாவின் புதல்வர்களில் 25 சதவிகிதம் மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆவர். அவர்களுக்கு மாட்டு மாமிசம் உண்பது வழக்கம். அவர்கள் மேல்தட்டுக் குடியினர் போல வசதி வாய்ப்பில்லாத காரணத்தாலும் பாரம்பரிய வளக்கத்தாலும் இதை வெகு இயல்பாகவே கருதுகின்றனர். மாட்டுத் தோலால் ஆன சங்கீதக் கருவிகள் செய்து பிழைப்பவர்களும் அவற்றை வாசிப்பவர்களும் கூட இதில் உண்டு.

  பசுப் பராமரிப்பும் சரி, தொழுகையும் சரி பிராமணர்களுக்கு உணர்வு பூர்வமான விஷயம். ஆனாலும் அவர்கள் இந்த விஷயத்தில் ஒரு நீக்குப் போக்கான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மில் 25 சதவிகிதப் பேரை அன்னியப் படுத்தி விடுவோம். ஏற்கனவே அவர்களுக்குச் செய்யப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளால் பாதிக்கப் பட்டவர்கள் என்பதை மனதில் வைக்க வேண்டும்.

  நாட்டுப் பசு என்ற பசு இனத்தைக் காப்பதற்கு ஆவன செய்யலாம். ஆனால் ஒரேயடியாக கடும் நிலைப்பாட்டைப் போதிப்பது மிகவும் தவறு. கண்டிக்கப் படவேண்டியதும் கூட.

 9. இந்து அமைப்புகள் நிதி திரட்டி கேரளா தமிழக எல்லைப் பகுதிகளில் பசு பராமரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு கடத்தப்படும் பசுக்களை இந்த நிலையங்கள் விலைக்கு வாங்கி இறக்கும் வரை பராமரிக்கலாம்.

 10. மணிப்ரவாள மகா சக்கரவர்த்தி திரு. கிருஷ்ண குமார் அவர்களுக்கு….

  //வேதத்திலேயே ம்ருக வதைகளுடன் கூடிய வேள்விகள் சொல்லப்பட்டுள்ளன என்பது மறுதலிக்க முடியா விஷயம்.//

  மறைகளில் விலங்குகளை வதைத்து செய்ய படும் வேள்விகள் கூறப்பட்டுள்ளன என்று தாங்கள் கூறும் போது, நிச்சயம் அதில் பசு மாட்டையும் வெட்டி பலியிட்டு இருக்க வேண்டும் என்றாகிறது. உண்மையும் அதுதான், அதற்க்கான சான்றுகளும் காணக்கிடைக்கின்றன. நிலை இப்படி இருக்கையில் “பசு” எப்போது புனிதமாகியது? யாரால் புனிதமாக்கபட்டது? எதற்க்காக புனித மாக்க்கபட்டது,அதாவது யாருக்கு எதிராக ஆயுதமாக்க “பசு”விற்கு புனித போர்வை போர்த்த பட்டது? யாகத்தில் பசுவை பலியிட்டு தேவர்களுக்கு அவிசாக பலியிட்டார்கள் எனும் போது, திடீர் என்று பசு மாடு கோ மாதா அவதாரம் எடுக்க காரணம் யாது? தயவு கூர்ந்து என் ஐயங்களுக்கு விடை தரவும்.

 11. Respected “An Unknown Man”!

  You have raised a very good point. I thank ‘Tamil Hindu’ for publishing your comment.

  I went to the link you provided and read through the whole interview given by Maneka Gandhi. I would like to provide some counterpoints.

  1. Milk is not digested as is in the human body. It is converted into yogurt/buttermilk by the acid in our stomach and the millions of bacelli that make our stomach as their home.

  2. Originally, the cows grazed in the meadows, at all kind of vegetations that are good, and had a healthy life. Howver, now-a-days, milk-production has become an industry. Industry want to maximize their profits. Toward that effort, they create all kind of unhealthy conditions for the animals, and convert the cows, which gave milk to human beings to a milk-producing machine without any good life of their own.
  2a. If we condemn these practices of the dairy industry, it is a good point.

  3. Since the dairy industry wants to boost their profits, they imported cows that produce more milk. They occupy the same little stall described, and produce more milk. What do with the native cows? Kill them off for meat. Million of native cows meet this unfortunate fate.

  4. Because the cows are kept in an unhealthy condition, they are injected and fed with antibodies and other untold medicines to keep them healthy. Of course, the milk produced by them contain all those antibodies, hormones, and other unhealthy chemicals. People who drink that poisoned milk get poisoned, too. Awareness of these facts made concerned citizens to protest against these practices. Nowadays, organic milk, which is obtained from cows which are fed no antibodies, no harmores, etc., are sold in USA. Moreover, the rBST hormore to boost the production of milk in cows is not used by many diary industires in USA and the milk cartons label them as ‘no rBST’, and/or “organic”.

  5. These unhealthy ingredients exists not only in milk, but also in eggs, chicken, meat, grains, etc., that are produced using those industries. The chicken do not even see light of the day, and mature in 45 days to produce more meat.
  5a. Eating eggs from country hens that move around freely, meat from animals that roam around freely are much better and healthy than any commerially available products.

  6. We are all slowly poisoned by industries who are only after profit-at-cost, and they do not serve the human kind.
  6a.Realizing these facts beforehand, our Hindu ancestors laid down good habits as religious practices. We started to follow Western practices, which now being slowly thrown away by Westerners.

  7. Many people like me in USA, who are aware of all these unhealthy and cruel conditions and practices meted out to animals, oppose dairy farming, meat production in an industrial way. Because of these awareness and protests, organic farming, organic milk, organic eggs, etc. are being now produced and sold in USA. many people (irrespective of reigion, race) are becoming Vegans by choice in USA, They do not even use diary products, and eschew meat.

  I sincerly feel that present day India, which looks to West for anything, start following the awareness of West regarding the point raised by “An Unknown Man”.

 12. உயர்திரு தாயுமானவன் அவர்களுக்கு,

  // “பசு” எப்போது புனிதமாகியது? யாரால் புனிதமாக்கபட்டது? எதற்க்காக புனித மாக்க்கபட்டது,அதாவது யாருக்கு எதிராக ஆயுதமாக்க “பசு”விற்கு புனித போர்வை போர்த்த பட்டது? யாகத்தில் பசுவை பலியிட்டு தேவர்களுக்கு அவிசாக பலியிட்டார்கள் எனும் போது, திடீர் என்று பசு மாடு கோ மாதா அவதாரம் எடுக்க காரணம் யாது? //

  மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்கள் அளவு மேற்கோள்களுடன் விளக்கம் தர இயலாவிட்டாலும், எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்.

  1. வேத காலத்தில் பசுவை வேள்வியில் பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது என்று ஒரு சாராரும், இல்லை என்று மறு சாராரும் சொல்லுகிறார்கள். இல்லை என்று சொல்பவர்களின் லிங்க் கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

  https://www.facebook.com/notes/ami-hindu-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81-/there-is-no-beef-in-vedas/200127250001155

  2. கீழ்க்கண்ட லிங்க் திறந்த மனப்பான்மையுடன் பசு பலியைப் பற்றி விளக்குகிறது.

  https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=5262

  3. பசு இந்து சமயத்தில் ஏன் புனிதமாக்கப்பட்டது, அதன் வரலாறு என்ன என்று கீழ்கண்ட லிங்க்கள் விளக்குகின்றன.

  https://en.wikipedia.org/wiki/Cattle_in_religion
  https://www.bhagavad-gita.org/Articles/holy-cow.html
  https://www.speakingtree.in/spiritual-blogs/seekers/philosophy/how-did-the-cow-become-sacred-in-india
  https://www.hitxp.com/articles/history/origin-cattle-holy-cow-slaughterhouse-beef-conspiracy-india/

  4. இந்து சமயம் வேதங்களும், ஆகமங்களும், நன்னெறி நீதி முறைகளும் அடங்கியது. காலத்திற்குத் தகுந்தவாறு, சமயமும் தூய்மை பெற்றுப் புத்துயிருடன் திகழ்கிறது.

  5. எப்படி நாம், மாட்டு வண்டி, அகல் விளக்கு, குடிசை வீடு காலத்திலிருந்து மாறி வந்திருக்கிறோமோ, அதே போல, மிருகபுலிகளும் நிறுத்தப்பட்டன. நமக்கு தன் குருதியையே பாலாக்கித் தந்த பசுவைத் தாயெனப் போற்றத் தலைப்பட்டனர் நமது இந்துக்கள். எனவே, தாய்க்கு உரிய மரியாதையை பசுவிற்கு வழங்கவும் தலைப்பட்டனர். நம்மைப் பாலூட்டி வளர்த்த தாய் இப்பொழுது நமக்குத் தேவை இல்லை என்பதற்காக, தாயை கொலை செம்வோமா நாம்? அந்த ஒரு நன்னெறியே நம்மை, குறிப்பாக இந்து சமயத்தோரை, பசுவை ஒரு புனிதமான மிருகமாக வணங்க வைத்தது.

  6. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாட்டிறைச்சி உண்ணலாம் என்று வேதமே இயம்பி இருக்கிறதே, இப்பொழுது நாம் இருக்கு வேத (Rig Veda) வாக்கு ஒன்றின்படி ஒழுகலாம் என்பது சரியான விவாதமாகப் தோன்றவில்லை.

  நான் கொடுத்திருக்கும் வளையங்களுச் சென்று, கட்டுரைகளை படித்துவிட்டு, கருத்தை எழுதுமாறு தாயுமானவன் அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.

 13. வேதத்தைப் பற்றி ஒன்றும் அறியாதோர் ஆளாளுக்கு ஒரு கட்டுக்கதை சொல்லி வருகின்றனர். மிருக பலி என்பது நடைமுறையில் இருந்தாலும் அது சரியாகாது. தமிழ் நாட்டில் அரசே டாஸ்மாக் என்ற சாராயக்கடையை நடத்தி வந்தாலும், மதுப்பழக்கம் கெட்டது என்று , நம் அரசியல் தலைவர்கள் சொல்வதில்லையா ? இந்துக்களுக்கு வேதம் ஒரு முழு வழிகாட்டி அல்ல. வேத நிராகரிப்பாளர்களும் இந்துக்களே ஆவார்கள்.

 14. கீழ்க்கண்ட வலையம் “வேதங்களைப் பற்றிய தவறான புரிதல்” (Misconceptions on Vedas) என்ற அருமையான கட்டுரையை, தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்துள்ளது. இருக்கு வேதம் (Rig Veda) கூறுவதை எப்படி தவறாக மொழிபெயர்க்கிறார்கள் என்று Shiksha (Phonetics), Vyakarana (Grammar), Nirukta (Philology), Nighantu (Vocabulary), Chhanda (Prosody), Jyotish (Astronomy), Kalpa and so on that are critical for correct interpretation of the Vedas கூறுகிறது. அந்தக் கட்டுரை சொல்வதை ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளவிட்டலும், கட்டுரைகளை ஒரு முறையாவது படிப்பது வேதங்களைப் பற்றிய தவறான புரிதல்கள் என்ன என்றாவது அறிந்துகொள்ள உதவுகிறது.

  https://www.vedicgranth.org/misconceptions-on-vedas

 15. பாபா சாகேப் அம்பேத்கர் இந்து மதத்துக்கு இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற சேவை செய்தவர்களுள் முக்கியமானவர் என்றால் அது மிகையாகாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்காக அவர் அமைதி வழியில் நடத்திய போராட்டம் சரித்திரமாக நிலைத்து நிற்கிறது. அவரால் பெறப்பட்ட உரிமைகளில் முக்கியமான இட ஒதுக்கீடு மத மாற்றத்துக்குப் போடப்பட்ட அணையாகும், அதுவும் இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கும் முன்னரே போடப்பட்டதால்தான் இப்போதும் தலித் இந்துக்கள் பெருமளவில் மதம் மாற்றப்படவில்லை.

  எத்தனையோ பிராமணர்கள் இன்றும் கூட சமஸ்கிருத அறிவு பெறவில்லை. ஆனால் அம்பேத்கர் தலித்துக்கள் எழுதப் படிப்பது அரிதான காலத்திலேயே முறைப்படியான கல்வியும், சட்டப் படிப்பும் படித்ததுடன், சமஸ்கிருதத்தில் இருக்கும் நமது பல சாஸ்திரங்களையும், மறை நூல்களையும் படித்து எப்படி அவை தலித்துக்களைத் தாழ்மை செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை விரிவாக ஆராய்ச்சிக் கட்டுரைகளக எழுதி இருக்கிறார். கடின உழைப்பு.

  இந்த பசு விவகாரத்தில் அவரது ஆராய்ச்சி சொல்வதை அவசியம் அனைத்து இந்துக்களும், குறிப்பாக பசுவதை குறித்துக் கவலை கொள்பவர்களும் கவனத்தில் வைத்துத்தான் எந்தக் கருத்தையும் எடுக்கவோ முன்வைக்கவோ வேண்டும், அதுதான் இந்து ஒற்றுமைக்கு ஆதரவாக இருக்கும், பாரத தேச நன்மைக்கு அடித்தளமாக அமையும்.

  வேதங்கள்/ சாஸ்திரங்கள் சொல்வதும், ஆதிப் பழக்கங்களும் இக்கட்டுரையின் கருத்துக்கு ஆதரவாக இல்லை என்பதோடு அன்றி, மாட்டு மாமிசம் உண்பதுதான் தீண்டாமையின் ஒரு முக்கியக் காரணம் என்பதையும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆதாரப் பூர்வமாக நிறுவி இருக்கிறார். தீண்டாமையின் முக்கியக் காரணி என்பது ஒன்று இருந்தால் அதை நீக்குவதுதான் பாரத தேசத்துக்கும், இந்து சமுதாயத்துக்கும் நல்லது என்பதை ஈவ்ரும் ஏற்பர். வெறுமே உணர்வுகளை மட்டும் வைத்து எழுதுவதும், பேசுவதும், நடந்து கொள்வதும் தலித்துகளை மேலும் கொடுமைக்கு ஆளாக்கும் என்பதை உணரவேண்டும். அரவிந்தன் நீலகண்டன் போலத் தீண்டாமைக் கொடுமை நடக்கும் இடத்துக்கு நேரில் போகிறவர்களின் பார்வையும், அப்படிப் போகாமல் அறைக்குள் இருந்து பிரசினைகளை அலசுவோர் பார்வையும் வித்தியாசப் படுகிறது என்பதை உணரவேண்டும்.

  தமிழ்நாட்டில் பறையன் என்ற பிரிவினர் பறை என்ற தோல்கருவியை உபயோகிப்பவர் ஆவர். புலையர் என்பவர் மாட்டு மாமிசம் உண்பவர் ஆவர். நம் சமுதாயத்தினர் குறித்த முழுப் பார்வை அவசியம். பசு அதிமுக்கியம் என்று கூறும் போது மனிதன் முக்கியமா என்பதையும் சிந்திக்க வேண்டாமா? எது எப்படி ஆனாலும், நாம் அனைவரும் சேர்ந்துதான் வாழமுடியுமே அல்லாது ஒருவர் நீங்க மற்றவர் வாழுதல் இயலாது. We can only co-exist.

  அம்பேத்காரின் ஆராய்ச்சிக் கட்டுரையை இங்கே படியுங்கள்:

  https://www.outlookindia.com/article/Untouchability-The-Dead-Cow-And-The-Brahmin/217660

  2002 ஆம் ஆண்டு ஹரியானாவில் ஐந்து தலித்துக்களைக் காவலர்கள் வெட்டிப் படுகொலை செய்யக் காரணம் அவர்கள் பசுவைக் கொன்றுவிட்டார்கள் என்ற வதந்தியே. அப்போது மத்திய அரசு பா.ஜ.க.தலைமைய்லான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு. தேசிய தலித் மனித உரிமை அமைப்பு அளித்த அறிக்கை இந்தக் கொடுமைக்குக் காரணியாகச் சொல்லப்பட்ட பசுவதைக்கு ஆதாரமே இல்லை என்று சொல்வதையும் படியுங்கள். அந்த அறிக்கை தவறாகவே இருந்தாலும், ஒரு பசுவைக் கொன்றது உண்மையே ஆனாலும், அதற்கு ஐந்து மனிதர்களைக் கொல்லவேண்டுமா? அது நியாயமா? அவர்கள் பாரத மாதாவின் புதல்வர்கள் இல்லையா? அவர்கள் பெற்ற குழந்தைகளுக்குத் தகப்பன் இல்லையா?

  https://www.ambedkar.org/News/News110602.htm

  எது எப்படி ஆனாலும் கடந்த காலத் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்த எனது தலித் சகோதரனது உரிமைகளுக்கு பின்னரே எனது எந்த உரிமையும் அனுபவிப்பேன் என்று எண்ணுவதுதான் சாத்வீகமான உயரிய தர்ம சிந்தனை. அது பசுவே ஆனாலும் சரி.

 16. அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்,

  \\ மணிப்ரவாள மகா சக்கரவர்த்தி திரு. கிருஷ்ண குமார் அவர்களுக்கு… \\

  என்னுடைய மொழிநடையை கலப்பு மொழிநடை என்றே அடையாளப்படுத்தியிருக்கிறேன்.

  மணிப்ரவாளம் என்றறியப்படும் மொழிநடையில் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் என்ற இரு பாஷைகள் மட்டிலும் உண்டு.

  என் கலப்பு மொழிநடையில் உர்தூ, ஃபார்ஸி, ஆங்க்லம் இவையும் உண்டு. மணிப்ரவாளத்தில் இவை சாத்யமன்று.

  என்னை விளிக்க தாங்கள் உபயோகப்படுத்திய அடைமொழியின் படி…..

  உங்களுக்கு மணிப்ரவாளம் என்றால் என்ன என்று தெரியாமல் இருக்க வேண்டும்.

  அல்லது அர்த்தமற்ற பகடியாக இருக்க வேண்டும்.

  ஹேது முன்னம் சொல்லியது என்றால் விளங்கிக் கொள்ளவும்.

  ஹேது பின்னர் சொன்ன விஷயமானால் அர்த்தமற்ற பகடிகளை தெருவில் நடக்கையில் மேல் விழும் தூசி போல் விலக்கிச் செல்வது என் வழக்கம்.

  மொழிநடை பற்றி பகிரப்படும்……..வாஸ்தவத்தில் கருத்துள்ள அன்பர்களின் (தாங்கள் உள்பட) அர்த்தமுள்ள கருத்துக்களை உள்வாங்கியே மேலே எழுதுகிறேன்.

 17. \\\\ மறைகளில் விலங்குகளை வதைத்து செய்ய படும் வேள்விகள் கூறப்பட்டுள்ளன என்று தாங்கள் கூறும் போது, நிச்சயம் அதில் பசு மாட்டையும் வெட்டி பலியிட்டு இருக்க வேண்டும் என்றாகிறது. உண்மையும் அதுதான், அதற்க்கான சான்றுகளும் காணக்கிடைக்கின்றன. \\

  அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்,

  உங்களுடைய கருத்துக்களை வாசிக்குங்கால் தாங்கள் வேதநூற்களை ஆதியோடந்தம் கசடறக்கற்று அதில் பாரங்கதமும் பெற்றதாகத் தெரிகிறது. சிறியேன் கற்றதோ சொல்பம். பாரங்கதம் என்பதெல்லாம் லவலேசமும் கிடையாது.

  அப்படியிருக்க விஷயத்தைக் கரைத்துக் குடித்துவிட்டு நக்கீரன் பத்ரிகையில் எழுதிய தாத்தாச்சாரியார் போல நீங்கள் கருத்துக்கள் பகிர்ந்து விட்டு மேல் கேள்விகளையெல்லாம் கேட்டால் ஒரு நிரக்ஷரகுக்ஷியிடம் அமரகோசத்தை ஆதியோடந்தம் ஒப்பி என்று சொல்வது போல் இருக்கிறது.

  \\ உண்மையும் அதுதான், அதற்க்கான சான்றுகளும் காணக்கிடைக்கின்றன. நிலை இப்படி இருக்கையில் “பசு” எப்போது புனிதமாகியது? யாரால் புனிதமாக்கபட்டது? எதற்க்காக புனித மாக்க்கபட்டது,அதாவது யாருக்கு எதிராக ஆயுதமாக்க “பசு”விற்கு புனித போர்வை போர்த்த பட்டது? யாகத்தில் பசுவை பலியிட்டு தேவர்களுக்கு அவிசாக பலியிட்டார்கள் எனும் போது, திடீர் என்று பசு மாடு கோ மாதா அவதாரம் எடுக்க காரணம் யாது \\

  சிவ சிவா! கேழ்வியும் யானே பதிலும் யானே என்றும்…………. சம்சயமும் யானே சம்சய விமோசனமும் யானே……….என்று தாங்கள் செப்பிவிட்டு, ********தயவு கூர்ந்து என் ஐயங்களுக்கு விடை தரவும்.******* என்று சொல்வது சும்மனாச்சிக்கு தானே.

  கசடறக்கற்றறிந்த தாங்கள்…………… உண்மை எது பொய் எது என்றறிந்த தாங்கள்……………சம்சயமெல்லாம் கொள்ளத்தகுமோ?

  கடந்த திகதியன்று என் கணினி யந்த்ரம் வேலை செய்தாலும் அந்தரிக்ஷம் சார்ந்த ப்ராட்பேண்டில் கோளாறு போலும். தங்கள் ப்ரச்னங்களை வாசிக்க வாய்ப்பில்லாது போனது.

  இன்று சரியான க்ரஹசாரம் போலும். ஏகாதசியும் அதுவுமாக நாளும் கிழமையுமாய்……. பசு – பலி — எனத் தாங்கள் நிரக்ஷரகுக்ஷியாகிய அடியேனைப் போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கியதை வாசித்து ……… வ்யாக்யானாதிகளை வேறு சிறியேனிடம் கேட்டு………………….ஙே என்று நான் முழி பிதுங்க……..சிவ சிவ சிவா!!!!!!! எல்லாம் என் தீயூழ் போலும்.

  நாளென் செயும் வினைதான் என் செயும் ……………… கந்தர் அலங்காரம் பாராயணம் செய்து

  வேலும் மயிலும் சேவலும் துணை என்று ஆறு முறை சொல்லி……………

  முடித்ததும்………………

  நினைவில் வந்தது……………….

  சிவனடியார் செயல்களெல்லாம் நன்மைக்கே என்று……………..

  பாருங்கள் நீங்கள் போட்ட போட்டில் கந்தர் அலங்காரம் என்ன வேலும் மயிலும் சேவலும் துணை என்று பாராயணம் என்ன.

  சிவனடியாரான உங்கள் கடாக்ஷம் பரிபூர்ணமாக இருக்க வேண்டும். அம்புட்டு தான். சிறியேன் அம்பேல்.

  (பி.கு : தேவரீர் தமிழறிஞர் என்று மட்டிலும் சிறியேன் அறிந்திருந்தேன். ஆனால் இன்று வேத வேதாந்தங்கள் கசடறக்கற்றறிந்த ஞானி என்றும் அறிந்து கொண்டேன். சிவனடியார்களுக்கு சிறியேனின் வணக்க பூர்வ நமஸ்காராதிகள் என்றுமுண்டு. அத்யதிகமாக வித்வத் சமூஹத்திற்கு சிறியேனின் வினய பூர்வ தெண்டன் பல கோடி)

 18. திரு. அரிசோனன் ..

  தாங்கள் கொடுத்த லிங்குகள் அனைத்தும் “வேலிக்கு ஓணான் சாட்சி” என்கிற ரகமாக தான் இருக்கிறது.. எப்பாடு பட்டேனும் வேதங்களில் மாட்டிறைச்சி உண்பதை பற்றி எங்குமே குறிப்பிடவில்லை என்று நைச்சியமாக நிறுவுவதிலேயே கூறியாக இருக்கும் அதே வேளையில் நிதர்சனமான உண்மையை கோட்டை விடுகிறார்கள் ..

  கோ மாதா வழிபாடு என்பது வேதத்திலோ அல்லது உபநிடததிலோ எங்குமே காணப்படவில்லை. இதிகாசங்களான ராமயணத்திலும், மகாபாரதத்திலும் கூட எங்குமே அது பற்றிய ஒரு சின்ன செய்தி கூட இல்லை. நிலை இப்படி இருக்க கோ மாதா என்ற சொலவடையும், வழிப்பாடும் எப்போது, யாரால், எதற்காக புகுத்த பட்டது. பால் கொடுக்கும் நன்றிக்கடனுக்காக தான் என்றால், அப்போது காளை மாடு மனித குலத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லையா? ட்ராக்டர் வருவதற்கு முன்பு வரை மனிதனுக்கு நிலத்தை உழ உதவி செய்தது எது? காளை மாடு மட்டும் இல்லை என்றால் மனிதன் உணவில்லாமல் எப்போதோ செத்தே போய் இருப்பானே!!!. அதற்காகவெல்லாம் ஏன் இந்த ராமகோபாலன் வகையறாக்கள் எந்த குரலும் கொடுப்பதில்லை? “கோ சம்ரக்ஷன சால” அமைக்க வேண்டும் என்று கொக்கரிப்பது போல் “ரிஷப சம்ரக்ஷன சால” அமைக்க வேண்டும் என்று எந்த ஆர்.எஸ்.எஸ் சாம்ப்ராணிகளும் இது வரை ஏன் குரல் எழுப்ப வில்லை.

  வேதங்களில் மாட்டிறைச்சி உண்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வரலாற்றை மறைத்து கூற நினைக்கும் இப்போதிருக்கும் இந்துதுவாவாதிகளுக்கோ அல்லது நீங்கள் கொடுத்த லிங்குகளுக்கோ எந்த வேறுப்படும் இல்லை, ஒன்றை தவிர, அது சுவாமி விவேகானந்தரை எதிர்ப்பது ஒன்று மட்டுமே.. வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டு கறியை வெட்டு வெட்டியதை இவ்வாறு குறிப்பிடுகிறார் விவேகானந்தர்.

  “You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it.”

  [The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]

  அதே புத்தகத்தில் 174 வது பக்கத்தில் ..

  “There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin;”

  ஆக, விவேகானந்தரே ஒப்பும் கொள்ளும் போது இவர்கள் யார் அவரை மறுதலிக்க.. மேலும், விவேகானதர் கூறியதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்.

  வேத கால பார்பனர்கள் கோ மாமிசம் உண்டார்கள் என்பதை வரலாற்று பூர்வமாக நிருப்பித்தவர்கள் யாரும் இந்து மத எதிர்ப்பாளர்கள் கிடையாது. இந்து மதத்தை நேசிக்கின்ற சமற்க்ருத மொழியில் புலமை பெற்ற அறிஞர்கள் தான் அனைவரும்.

  மேற்சொன்ன அனைத்திற்கும் இந்த இணையத்தில் தக்க சான்றுகள் கிடைக்கின்றன திறந்த மனதோடு படியுங்கள்.. எந்த அவதூறுகளோ, அல்லது நீங்கள் குறிப்பிட்ட லிங்கில் இருப்பதை போன்று யாரும் சொற்குற்றம், பொருட் குற்றமாகவெல்லாம் யாரும் ஆய்வு செய்ய வில்லை.

  https://beef.sabhlokcity.com/

  மனம் திறந்து படியுங்கள்.. இதை ஆதாரமாக கொண்டு ஆர். எஸ். எஸ் மற்றும் பிஜேபியை அம்பலப்படுத்த விவேகானந்தரை போன்று இந்துப் புருசனாக நீங்கள் வரவேண்டும்.

  மீண்டும் அடுத்த பதிவில்…..

 19. திரு. கிருஷ்ண குமார்..

  சும்மா சொல்ல கூடாது செமையா பகடி செய்றீங்க… இருந்தாலும் சந்தானத்தின் பாணியில் “என்ன கலாஷ்டாராமா” என்று கூறி விட மனமில்லை. கிட்ட தட்ட ஒரு மணி நேரம் நன்றாக சிரித்தேன். நல்ல “ஹாஸ்ய வைத்தியம்” போச்சு அருணகிரியாரின் காத்து என்னை தீண்டி விடாது போல.

  //அப்படியிருக்க விஷயத்தைக் கரைத்துக் குடித்துவிட்டு நக்கீரன் பத்ரிகையில் எழுதிய தாத்தாச்சாரியார் போல நீங்கள் கருத்துக்கள் பகிர்ந்து விட்டு………….//

  தாதாச்சாரியாரின் நூல்களை மட்டும் படித்து விட்டு கேள்வி கேட்கும் அளவிற்கு என்னை நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் என்ன செய்வது ..நான் அதிகம் நேசிக்கும் சுவாமி விவேகானந்தரும், திரு. கிருஷ்ண குமார் அவர்களும் இது தொடர்பாக கூறியதை வைத்து பின்பு வேத கருவூலத்தை உங்கள் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஆராய்ச்சி செய்து அப்புறம் கேட்கப்பட்டது தான் மஹாசயரே…

  //கசடறக்கற்றறிந்த தாங்கள்…………… உண்மை எது பொய் எது என்றறிந்த தாங்கள்……………சம்சயமெல்லாம் கொள்ளத்தகுமோ?//

  ஆனானப்பட்ட சிவா பெருமானுக்கே சந்தேகம் வரும் போது. சுப்பன் எனக்கு வராதா? அதெல்லாம் தகும், கேள்விக்கு பதில் என்ன ? அதை கூறவும்..

  //கடந்த திகதியன்று என் கணினி யந்த்ரம் …………………………………………………………………………………………… தாங்கள் நிரக்ஷரகுக்ஷியாகிய அடியேனைப் போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கியதை வாசித்து ……… வ்யாக்யானாதிகளை வேறு சிறியேனிடம் கேட்டு………………….ஙே என்று நான் முழி பிதுங்க……..சிவ சிவ சிவா!!!!!!! எல்லாம் என் தீயூழ் போலும்.//

  இன்னைக்கு.. சமயலில் நெய் வழக்கத்தை விட தூக்கலாக இருக்கிறது.. வடமொழி வார்த்தைகள் எப்போதும் விட இன்று அதிகமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அது சரி நீங்கள் நல்லவர் உங்களை பிடித்திருக்கும் கொடுந்தமிழ் வியாதி அப்படி? வாழ்க அருணகிரி.. நான் வாழ்க தான் சொன்ன.

  மணிப்ரவாள மஹா சக்கரவர்த்தி- இது உங்களுக்கு, உங்களுடைய தமிழ் பற்றை பார்த்து நான் உளமார் கொடுக்கும் பட்டம், பகடி எல்லாம் கிடையாது. ஏற்று கொள்ளுங்கள் இல்லையேல் என் மனம் நோகும்:(

 20. <>

  மறை வேள்விகளில் கொடுக்கப்படுவதால் பசு புனிமற்றதாக எப்படி ஆகும்.

  மறை வேள்விகளில் கொடுக்கப்படும் அவிர்பாகம் பற்றி மறையோர் கருத்தென்ன?

  மகாபாரதம் நரபலி கொடுத்தால் வெற்றியென்று சொல்ல அதற்கு தானே தயாராகி வரும் பாத்திரங்கள் பற்றி கூட பேசுகிறது.

  எல்லாரையும் கொன்றுவிடலாமா?

 21. திரு. அரிசோனன் ..

  தாங்கள் கொடுத்த லிங்குகள் அனைத்தும் “வேலிக்கு ஓணான் சாட்சி” என்கிற ரகமாக தான் இருக்கிறது.. எப்பாடு பட்டேனும் வேதங்களில் மாட்டிறைச்சி உண்பதை பற்றி எங்குமே குறிப்பிடவில்லை என்று நைச்சியமாக நிறுவுவதிலேயே கூறியாக இருக்கும் அதே வேளையில் நிதர்சனமான உண்மையை கோட்டை விடுகிறார்கள் ..

  கோ மாதா வழிபாடு என்பது வேதத்திலோ அல்லது உபநிடததிலோ எங்குமே காணப்படவில்லை. இதிகாசங்களான ராமயணத்திலும், மகாபாரதத்திலும் கூட எங்குமே அது பற்றிய ஒரு சின்ன செய்தி கூட இல்லை. நிலை இப்படி இருக்க கோ மாதா என்ற சொலவடையும், வழிப்பாடும் எப்போது, யாரால், எதற்காக புகுத்த பட்டது. பால் கொடுக்கும் நன்றிக்கடனுக்காக தான் என்றால், அப்போது காளை மாடு மனித குலத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லையா? ட்ராக்டர் வருவதற்கு முன்பு வரை மனிதனுக்கு நிலத்தை உழ உதவி செய்தது எது? காளை மாடு மட்டும் இல்லை என்றால் மனிதன் உணவில்லாமல் எப்போதோ செத்தே போய் இருப்பானே!!!. அதற்காகவெல்லாம் ஏன் இந்த ராமகோபாலன் வகையறாக்கள் எந்த குரலும் கொடுப்பதில்லை? “கோ சம்ரக்ஷன சால” அமைக்க வேண்டும் என்று கொக்கரிப்பது போல் “ரிஷப சம்ரக்ஷன சால” அமைக்க வேண்டும் என்று எந்த ஆர்.எஸ்.எஸ் சாம்ப்ராணிகளும் இது வரை ஏன் குரல் எழுப்ப வில்லை.

  வேதங்களில் மாட்டிறைச்சி உண்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வரலாற்றை மறைத்து கூற நினைக்கும் இப்போதிருக்கும் இந்துதுவாவாதிகளுக்கோ அல்லது நீங்கள் கொடுத்த லிங்குகளுக்கோ எந்த வேறுப்படும் இல்லை, ஒன்றை தவிர, அது சுவாமி விவேகானந்தரை எதிர்ப்பது ஒன்று மட்டுமே.. வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டு கறியை வெட்டு வெட்டியதை இவ்வாறு குறிப்பிடுகிறார் விவேகானந்தர்.

  “You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it.”

  [The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]

  அதே புத்தகத்தில் 174 வது பக்கத்தில் ..

  “There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin;”

  ஆக, விவேகானந்தரே ஒப்பும் கொள்ளும் போது இவர்கள் யார் அவரை மறுதலிக்க.. மேலும், விவேகானதர் கூறியதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்.

  வேத கால பார்பனர்கள் கோ மாமிசம் உண்டார்கள் என்பதை வரலாற்று பூர்வமாக நிருப்பித்தவர்கள் யாரும் இந்து மத எதிர்ப்பாளர்கள் கிடையாது. இந்து மதத்தை நேசிக்கின்ற சமற்க்ருத மொழியில் புலமை பெற்ற அறிஞர்கள் தான் அனைவரும்.

  மேற்சொன்ன அனைத்திற்கும் இந்த இணையத்தில் தக்க சான்றுகள் கிடைக்கின்றன திறந்த மனதோடு படியுங்கள்.. எந்த அவதூறுகளோ, அல்லது நீங்கள் குறிப்பிட்ட லிங்கில் இருப்பதை போன்று யாரும் சொற்குற்றம், பொருட் குற்றமாகவெல்லாம் யாரும் ஆய்வு செய்ய வில்லை.

  https://beef.sabhlokcity.com/

  மனம் திறந்து படியுங்கள்.. இதை ஆதாரமாக கொண்டு ஆர். எஸ். எஸ் மற்றும் பிஜேபியை அம்பலப்படுத்த விவேகானந்தரை போன்று இந்துப் புருசனாக நீங்கள் வரவேண்டும்.

  மீண்டும் அடுத்த பதிவில்…..

 22. தாயுமானவன்

  பசு என்பது சமஸ்க்ருத பதம் அதற்கு அர்த்தம் நாலு கால் பிராணி. பசு மாடு இல்லை. தமிழில் தான் பசு என்றால் பசு மாடு.
  எல்லா யாகங்களிலும் நாள் கால் பிராணிகளை தூக்கிப் போட்டு யாகம் செய்யப் படவில்லை. இந்த பழக்கம் புத்தர் காலத்திற்கு சற்று முன் அதிகமாக இருந்தது.

  யாகம் செய்தவர்கள் அதிகமாக பசு மாட்டை வளர்த்தார்கள், கொல்வதற்காக அல்ல, யாகத்திற்கு அதிக பசு நெய் வேண்டும் அதற்காக.

  நமக்கு நமது புவிக்கு அதிக பயன் தருவது எல்லாமே புனிதம் தான் சார். வாழை புனிதம், மா புனிதம் , மஞ்சள் புனிதம், பசு மாடும் புனிதம்.

 23. பசு , பதி,பாசம்- என்று நமது சித்தாந்தத்தில் சொல்லப்படுகிறது. அது சொல்லும் பசு என்பது ஆன்மாவை குறிக்கிறது. பசுவை பலி கொடுத்தல் என்பது ஈகோவை ( ego ) அதாவது கர்வத்தினை பலி கொடுக்கவேண்டும் என்பதே உண்மைப்பொருள். படித்தவன் பாட்டைக் கெடுத்தான் , எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்று சொல்வார்கள்.மேலே நடந்துள்ள விவாதத்தின் கருப்பொருளை படித்தால் , இந்து மதத்தின் விசாலம் புரிகிறது. ஆளாளுக்கு குறுக்கு சால் ஓட்ட நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி, சுதந்திரம், மற்றும் எல்லையில்லா கருத்தாக்கம் நமது மதத்தின் ஜீவநாடி. ஆன்மிகம் என்பது எல்லைவகுக்க முடியாத விஷயம். அதற்கு எவனோ அதை சொன்னான் இதை சொன்னான் என்று சொல்லி, பிற பிரிவுகளை சேர்ந்தவரை , என் வழிக்கு வந்துவிடு இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என்று சொல்லி , பல கோடி ஷியாக்களையும், அகமதியாக்களையும், பிற மதத்தினரையும் தொடர்ந்து கொன்றுவரும் , வஹாபி சன்னி தீவிரவாதிகள் சிறிதாவது சிந்திப்பார்களா ? அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

 24. பசு என்பது தமிழ் சொல்லே ஆகும். தமிழிலிருந்து வட மொழிக்கு சென்ற சொல் ஆகும். பசு என்றால் ஜீவன் , ஆன்மா, உயிர் என்று பொருள். நாலுகால் கால்நடை ஆகிய பசு மாட்டினையும் அது குறிக்கும். பல பொருள் குறித்த ஒரு உரிச்சொல் ஆகும்.

 25. சத்திரியன் சண்டையில் கொல்லும் போது என்ன கருதுகோளோ அதே கருதுகோல் தான் ஸ்ரௌத்ததிலும்.
  மனிதர்களை கொன்று குவித்துள்ளார்கள் இந்த சத்திரியர்களின் முன்னோர்கள் என்று கேட்பது போல் உள்ளது. 🙂

 26. தாயுமானவன் அவர்களுக்கு

  தாங்கள் சுவாமி விவேகானந்தரது கருத்துக்களை மேற்கோள் காட்டியது மகிழ்ச்சியே, ஏற்புடையதே. ஆனால் தாங்கள் கொடுத்திருக்கும் தொடுப்புக்கான தளமான sabhlokcity.com என்பது நம்பிக்கைக்கும், நாணயத்துக்கும் உரிய தளம் அல்ல. அதன் நோக்கம் என்ன என்பதை அந்தத் தளத்தில் சஞ்சீவ் என்பவர் கூறுகிறார்:

  ///Unlike this idea of liberty, the idea of Hindutva is fraught. It claims that there is something different about Indians – their “Hindutva”. This idea takes inspiration not from Locke and Jefferson but from Hitler’s racist idea of a German (Aryan) identity.

  Hindutva is a FUNDAMENTALLY ILLIBERAL IDEA. Reading Savarkar, Golwalkar and others who founded this idea makes it clear that they were not looking for liberty but for RACIST AGGRANDISEMENT.

  Hindutva is a collectivist idea, a group idea, an idea also based on religion – the so-called “Hinduism”. I use the term “so-called” because it Hindutva has NOTHING to do with Hinduism as I know it (and yes, I do know a bit about the religion into which I was born). Hindutva is a shallow racist and hateful idea that makes use of mythologies (such as Ramayana) not to promote good behaviour and good character, but because that’s the way for its promoters to gain political power. Hindutva has NO basis in either the history or philosophies of India.
  No matter how one looks at this idea, it is DANGEROUS AND HARMFUL.

  Let’s oppose Hindutva and BJP tooth and nail.

  Let’s insist on liberty for all Indians in India – regardless of their beliefs (if any), gender (if any) or language/ colour/ other superficial distinction/s.

  Hindutva, I’m your GREATEST ENEMY. This dangerous and vicious idea must LEAVE my motherland. Let’s revert India to the state of liberty when it was genuinely a great place to live.///

  இப்படிப்பட்ட அடிப்படைக் கண்ணோட்டம் கொண்ட ஒரு தளத்தில் எழுதப்படுபவை எத்தனை அளவுக்கு நம்பத்தக்கதாக இருக்கும்? It will be biased and coloured to present the presenter’s view point and not aimed at establishing the truth.

 27. தாயுமானவன் அவர்களுக்கு

  அதே சப்லோக் தளத்தில் வேறு பகுதிகளில் உள்ள கட்டுரைகள் சில Islamhinduism என்ற தளத்தில் இருந்து எடுத்து மறு பதிப்பு செய்யப்பட்டவை. இந்த Islamhinduism என்ற தளம் Abdullah Rahim என்ற ஓர் இஸ்லாமியரால் நடத்தப் படுவது. தக்கியா என்ற குரான் தத்துவத்தினைப் பின்பற்றி இந்த இஸ்லாமியர் இந்தத் தளத்தை நடத்துகிறார் என்று நம்ப இடம் இருக்கிறது.

 28. தாயுமானவன் அவர்களுக்கு

  இந்தப் பசுப் பாதுகாப்பு விஷயத்தில் ஆர். எஸ்.எஸ்ஸும் சரி விஸ்வ ஹிந்து பரிஷத்தும் சரி, ஒருவிதமான நீக்குப் போக்கான அனைத்து இந்து சமுதாயத்தையும் அனுசரித்துப் போகும்படியான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. கிருஷ்ணகுமார் அவர்களின் முதல் மறுமொழியை நீங்கள் படித்தால் இதனை உணரலாம். அது போலவே நான் எனக்குத் தெரிந்த சிலரிடம் உரையாடியபோதும் இதுபோன்ற ஒரு மன ஓட்டத்தை என்னால் உணர முடிந்தது. எனவே ஒரேயடியாக ஆர்.எஸ்.எஸ்ஸையும் வி.எஹ்.பியையும் இது குறித்துக் குறை கூற வேண்டாம்.

 29. திரு மோதி தேர்தலுக்கு முன்பு மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகமாகிவிட்டது என்றெல்லாம் பேசினார் . காங்கிரஸ் கட்சியினர் குஜராத்தில் இருந்தும் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்று ஆதரங்களுடன் கூறியவுடன் , மோதி இவ்விஷயத்தைப் பற்றி பேசுவதை விட்டு விட்டார் .

  அரசாங்கம் (எந்த கட்சி அரசாங்கமாக இருந்தாலும் ), இந்த ஏற்றுமதியை குறைக்கவோ அல்லது நீக்கவோ முயற்சியே செயாது . அரசாங்கத்திற்கு அன்னியச் செலவாணி தேவை.

 30. ‘கோ மாதா வழிபாடு என்பது வேதத்திலோ அல்லது உபநிடததிலோ எங்குமே காணப்படவில்லை. இதிகாசங்களான ராமயணத்திலும், மகாபாரதத்திலும் கூட எங்குமே அது பற்றிய ஒரு சின்ன செய்தி கூட இல்லை’
  ‘ ராமனை காட்டிற்கு அனுப்ப உடந்தையாக இருந்தவன் …….பசுவை உதைத்துத் தள்ளிய பாவம் அவனை அடையட்டும்” இளம் கன்று உடைய பசுவின் பாலை தான் கறந்தவன் அடையும் பாவத்தை அடையட்டும். ‘ இப்படி பசுவைப்பற்றி மூன்று இடங்களில் வருகிறது
  பல வித பாவங்களை பட்டியலிடும் பரதன் சொல்லில்.

  ஊரிலிருந்து வரும் போது தந்தை மரணம் , தமையன் கானகம் சென்றது என்று அவன் பாச மனதிற்கு இடி மேல் இடி. கோசல்யைத் தாயிடம் அவன் சொல்வது இது.
  இது ரொம்ப ரம்ப மேலோட்டமாக ராமாயணத்தை [ அதுவும் அவ்வபோது இத்தளத்தின் கட்டுரை , மற்றும் மறுமொழிகள் படித்த பின்:-) நன்றி பல. ] படிக்கும் எனக்கே தெரிகிறது.

  https://www.valmikiramayan.net/utf8/ayodhya/sarga75/ayodhya_75_frame.htm

  தந்தை சொல்லை கேட்பது எவ்வளவு முக்கியம் எனத் தன தாயிடம் சொல்லும் ராமன் ஒரு முனிகுமாரன் தந்தை சொல்லைக் காப்பாற்றுவதற்காக பசுவையே கொன்றதாக கூறுகிறார். அதாகப்பட்டது பித்ரு வாக்ய பரிபாலனதிற்காக பெரும் பாவம் எனப்படும் பாவத்தையே செய்கிறார்கள் என்று சொல்லி தான் கானகம் செல்வதை தாயிடம் சொல்லி தேற்றுகிறார்.
  சாய்

 31. உயர்திரு தாயுமானவன் அவர்களுக்கு,

  மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்வோம். இளைஞராக இருக்கும்போது ஆட்டிறைச்சி உண்டார். பின்னர், அந்த ஆடு தன் வயிற்றில் இருப்பதுபோன்று உணர்ந்து, உயிர்வதை செய்யலாகாது என்று உணர்ந்து, இறைச்சி உண்ணுவதை விட்டார். அதுபோல, தன்னுடைய குறைகளையும் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகி, சத்தியசோதனை என்ற நூலையும் எழுதினார். குறைகளுக்கு மேலாக எழுந்த அவரை “மகாத்மா” என்று அனைவரும் போற்றுகிறோம்.

  நீங்கள் கொடுத்திருப்பது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். (பசு பற்றி மற்றவர்களின் விளக்கங்களை ஒதுக்கி விட்டாலும்கூட!). இந்து மதம் staticஆக ஒரே இடத்தில் நின்று தேங்காது வளர்ந்து வருகிறது (evolves). காலம் வளர வளர, கொள்கைகள் மாறுகின்றன. இறைச்சி உண்டவர்கள், இறைச்சி உண்ணுவது சரியல்ல என்று உணர்ந்து, உயிர்வதை தகாது என்று தீர்மானித்தால், அதைப் போற்றவேண்டுமேதவிர, தூற்றல் எந்த விதத்தில் நியாயமாகும்? காந்தி சிறு வயதில் இறைச்சி உண்டார் என்று அவரை மகாத்மாவாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வாதிப்போமா?

  இன்றைய தினத்திலும், தென்னாட்டில் சைவ உணவு உண்ணும் ஒரு வகுப்பார், வடநாட்டில் மீன் உண்ணுகிறார்கள். இடத்திற்குத் தகுந்தபடி, சூழ்நிலைக்குத் தகுந்தபடி பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. “புலால் மறுத்தல்” செந்நாப்போதார் திருவள்ளுவரால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறம் எனச் சிறப்பிக்கப் பட்டது.

  பலதாரம் மணந்த தமிழர்கள் இப்பொழுது ஒரு தாரத்தையே தரிக்கிறார்கள். குடுமி வைத்துக்கொண்டு, வேட்டியும், துண்டும் அணிந்து, மாட்டு வண்டியில் சென்று வந்த நாம் கிராப் வைத்துக்கொண்டு, பாண்ட்டும் சட்டையும் அணிந்து, காரில் பவனி வருகிறோம். காலம் மாற மாற, நாமும் மாரத்தான் செய்கிறோம்.

  ஆக, வேதத்தில் சொல்லிய வார்த்தைகளை literal ஆக எடுத்துக்கொண்டு பேசுதலோ, அல்லது, வேதத்தில் உயிர்ப்பலி இருந்ததால், இப்பொழுது இருப்பதால் என்ன கெட்டுவிட்டது என்று பேசுதலோ முறையாகுமா?

  தற்பொழுது இந்துக்களுக்கு பசுவோ, காளையோ, புனிதமானது. (பசு என்றால் பெண்பால் மட்டும் அல்ல, காளையும் அதற்கு உட்பட்டதே. இவ்விடம் பசு என்பதை மாட்டினம் என்றே பொருள் கொளல் வேண்டும். பசுவையும், காளையையும் பிரித்துப் பொருள்கொண்டு வாதிடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.)

  எனவே, தற்காலத்திய இந்துக்களின் வழிபாட்டிற்குப் பாத்திரமான மாட்டினத்தைக் கொல்லவேண்டாம், அவர்களின் மணாதைப் புண் படுத்த வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டாலும், எள்ளி நகையாட வேண்டாம் என்பதுடன் எனது விளக்கத்தை நிறைவு செய்கிறேன்.

  எனக்கு விவேகானந்தர் மீது மிக்க மதிப்பு உண்டு. அவர் மூலம்தான் அமெரிக்காவில் இந்து சமயம் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்து எதிர்ப்புக்குத் துணிவுடன் குரல் கொடுத்த குன்றாத இமயம் அவர் என்பதில் உங்களுடன் நானும் உடன்படுகிறேன்.

  ஆனால், //இதை ஆதாரமாக கொண்டு ஆர். எஸ். எஸ் மற்றும் பிஜேபியை அம்பலப்படுத்த விவேகானந்தரை போன்று இந்துப் புருசனாக நீங்கள் வரவேண்டும்.// என்ற உங்கள் கூற்றுடன் எனக்கு உங்களுடன் உடன்பாடில்லை.

  ஏனெனில் ஆர்.எஸ்.எஸ். ஒரு சமய முன்னணி. முஸ்லிம் லீக், கிறித்துவ முன்னணிகள் போல அதுவும் ஒரு குழு. பிஜேபி ஒரு அரசியல் கட்சி. இந்தியாவில் அவை அனைத்துக்கும் செயல்பட உரிமை இருக்கிறது. அவற்றிற்கு எதிரான கருத்துக்களைப் பகிரவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸும், பிஜேபியும் செயல்படுவதால்தான் நீங்களும், மற்ற இந்துக்களும் தங்கள் உரிமையைக் கொஞ்சமாவது இந்தியாவில் நிலைநாட்ட இயலுகிறது.

  விவேகானந்தர் அளவுக்கு என்னை உயர்த்தாதீர்கள். அவர் மகாபுருஷர். நான் அவர் கால் தூசுக்கும் சமமற்றவன்.

  வணக்கம்.

 32. திரு. அடியவன்…

  //ஆனால் தாங்கள் கொடுத்திருக்கும் தொடுப்புக்கான தளமான sabhlokcity.com என்பது நம்பிக்கைக்கும், நாணயத்துக்கும் உரிய தளம் அல்ல//

  இந்துத்துவ கொள்கைகளை விமர்சனம் செய்தால் அது நம்பிக்கைக்குரிய தளம் அல்ல என்று அர்த்தமா.. சரி, அதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்.. வேத காலத்தில் ஆரியர்கள் பசுமாட்டை பலியிட்டு அதன் இறைச்சியை யாகத்தில் ஹவிசாக படைத்தார்களா இல்லையா என்பது தான் இப்போதைய ஆராய்ச்சி.

  அதற்க்கான, ஆதாரங்களை வேதங்களில் இருந்தே எடுத்து காட்டி உள்ளனர். அதை படித்து பார்த்து அது குறித்து நீங்கள் பரிசீலனை செய்து அதன் மீது தங்களின் விவாதத்தை நடத்தலாமே. அனைத்தும் ஆதாரங்கள் தான். இந்த தளத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் இதை முயற்சி செய்யுங்கள்..

  https://www.hindu.com/2001/08/14/stories/13140833.htm

  அல்லது சமுக விஞ்ஞானி மகாதேவ சக்கரவர்த்தி அவர்களின் ஆய்வுகளையும் பார்க்கலாமே.

  https://www.srimatham.com/uploads/5/5/4/9/5549439/beef_in_ancient_india.pdf

  ஒன்றை மட்டும் கூறுகிறேன். என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்து மதம் கோ மாமிசத்திற்கு எதிரானது என்று கூறுவது சகிக்கவொன்னாத வரலாற்று மோசடி. வேத காலத்தில் பசு மாமிசம் உண்டதர்க்கான ஆதாரம் வேதத்தில் தொடங்கி ஆயுர்வேத மருத்துவம் முதல் மனு தர்மம் வரை நிறையவே இருக்கின்றது. நிலைமை இப்படி இருக்கும் போது பசு மாட்டின் இறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் முதல் இங்கிருக்கும் ராமகோபாலன் வரை கூப்பாடு போட்டு புனித பசுக்களாக தங்களை காட்டி கொள்வது தான் வரலாற்று நகை முரண்..

  சரி உங்கள் வாத படி நாட்டு பசு கோமாதாவாக இருந்து விட்டு போகட்டும். ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற நாடுகளில் இருந்து கோ மாமிசத்தை இறக்குமதி செய்து சாப்பிடுவதால் என்ன புனிதம் கெட்டு போகிறது. அதற்க்கும் இங்கு தடை. மதத்தின் பெயரை சொல்லி மக்களை குறிப்பிட்ட உணவை சாப்பிட கூடாது என்று அதிகாரம் செய்ய யாருக்கும் இங்கு உரிமை கிடையாது. இந்தியா ஜனநாயக நாடு இங்கு உணவிற்கும் சுதந்திரம் வேண்டும்.

 33. கதிரவன்

  //
  பசு என்பது தமிழ் சொல்லே ஆகும். தமிழிலிருந்து வட மொழிக்கு சென்ற சொல் ஆகும். பசு என்றால் ஜீவன் , ஆன்மா, உயிர் என்று பொருள். நாலுகால் கால்நடை ஆகிய பசு மாட்டினையும் அது குறிக்கும். பல பொருள் குறித்த ஒரு உரிச்சொல் ஆகும்.
  //
  பசு ஆன்மாவை குறிக்கும் என்பது சைவ சித்தாந்தத்தின் பரி பாஷை இதை பொதுவாக அந்த அர்த்தத்தில் எடுக்க இயலாது. இதை வைத்துக் கொண்டு தமிழ் சொல் என்று எப்படி சொல்கிறீர்கள்.
  எப்படி தமிழிலிருந்து வேதத்திற்கு அந்த சொல் போயிற்றா. சமஸ்க்ரிதத்தில் அது ஷகாரம் “பஷு:” (இந்த ஷாகாரம் தான் கூகிள் தருகிறது, யா வர்கத்தின் ஐந்தாவது எழுத்து) பசு இல்லை. மேலும் சமஸ்க்ரிதத்தில் பசு என்பது ஆண் பால்.

 34. <>

  அதெல்லாம் இல்லீங்க.
  ப்ரஹ்ம ஹத்தி மிகப் பெரிய பாவம். ஆனா ராமர் அதைத் தான் ராவணனை கொன்று செய்தார். 🙂
  இதை மாதிரி குறிப்புகளை வச்சுத் தான் நீங்களும் ஜல்லியடிக்கறீங்க.

 35. // இந்தியா ஜனநாயக நாடு இங்கு உணவிற்கும் சுதந்திரம் வேண்டும். //

  இறந்த பசுவை உண்பதால் இவ்வுரிமை நிலைநாட்டப்படுமா? 😉

 36. // வேத காலத்தில் பசு மாமிசம் உண்டதர்க்கான ஆதாரம் வேதத்தில் தொடங்கி ஆயுர்வேத மருத்துவம் முதல் மனு தர்மம் வரை நிறையவே இருக்கின்றது. //

  காட்டுங்க. யாகங்கள் எத்தனை வகை. பிராமணர்கள் செய்பவை எவை? சத்திரியர்கள் செய்பவை எவை?

  எவை கலிகாலத்திற்கு உரியது? முந்தைய யுகத்தில் செய்யக் கூடியவை எவை? எல்லா காலத்திலும் எல்லா யாகங்களும் செய்யலாமா? விவேகானந்தர் என்ன சொல்றார்?

  ஒரு காலத்தில் வழக்கில் இருந்தால் அதை மாற்றக் கூடாதா? மரண தண்டைனைக்கு எதிராகவே இப்போ குரல் வருதே?

  மனிதனின் உண்ணும் உரிமை மாட்டின் வாழும் உரிமையை மீறியதா?

 37. // ஒன்றை மட்டும் கூறுகிறேன். என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்து மதம் கோ மாமிசத்திற்கு எதிரானது என்று கூறுவது சகிக்கவொன்னாத வரலாற்று மோசடி. //

  அதெல்லாம் இல்லீங்க. வரலாறுங்கறது வேத காலம் மட்டும் இல்லை. தோற்றக் காலம் தொடங்கி இன்று வரை. 😉
  ப்ரஹ்ம ஹத்தி மிகப் பெரிய பாவம். ஆனா ராமர் அதைத் தான் ராவணனை கொன்று செய்தார். 🙂
  இதை மாதிரி குறிப்புகளை வச்சுத் தான் நீங்களும் ஜல்லியடிக்கறீங்க.
  1900 த்துல பல தாரம் சாதாரணம். இப்போ?
  ராமரோட அப்பாக்கே பல தாரம்னாலும் ராமரை பார்த்து நிறைய பேரு ஒரு பொண்டாட்டியோட வாழல?
  இதெல்லாம் வரலாற்று மோசடியா?

 38. ஒரு காலத்தில் பிராமணர்கள் உண்டார்கள் இன்று இல்லை யென்றால் அவர்கள் காலத்திற்கேற்ற படி தங்களை பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாதா? they are evolving with time?
  அவர்கள் பக்குவமற்ற பழைய நிலைக்கே போக வேண்டியதேன்?
  வள்ளுவரை படித்தார்கள். புலால் மறுத்தல் என்று அவர் எழுதியதில் நியாயம் இருப்பதாக தோன்றியது. மாறினார்கள். எத்தனை தமிழ்க் குடிகள் தமிழ்மறை தந்த வள்ளுவர் வழி பற்றி நிற்கிறது?

 39. திரு. அரிசோனன்…

  காந்தியை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள்.. புலால் உணவை சாப்பிட கூடாது என்று வெளியில் இருந்து யாரும் அவரை கட்டாயப்படுத்த வில்லை.. அவராகவே மனம் மாறி கை விட்டார். ஆனால், இங்கு நிலை அப்படியா. மாடிறைச்சியை சாப்பிட வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியது இங்கிருக்கும் பெருவாரியான மக்கள் தானே ஒழிய ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி போன்ற மத அடிப்படைவாத அமைப்புகளும், பா.ஜ க என்கிற ஒட்டு கட்சியும் அல்ல. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்னும் பட்சத்தில் இந்நாட்டு மக்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும், சாப்பிட கூடாது என்று முடிவெடுக்க இவர்கள் யார் என்பது தான் என் கேள்வி?

  //இந்து மதம் staticஆக ஒரே இடத்தில் நின்று தேங்காது வளர்ந்து வருகிறது (evolves). காலம் வளர வளர, கொள்கைகள் மாறுகின்றன. இறைச்சி உண்டவர்கள், இறைச்சி உண்ணுவது சரியல்ல என்று உணர்ந்து, உயிர்வதை தகாது என்று தீர்மானித்தால், அதைப் போற்றவேண்டுமேதவிர, தூற்றல் எந்த விதத்தில் நியாயமாகும்..//

  மன்னிக்க வேண்டும் நான் யாரையும் தூற்றவில்லை. உண்ணும் உணவு என்பது அவர் அவரின் மன,உடல் பக்குவத்தை பொருத்தது. ஒருவருக்கு கோ மாமிசம் சாப்பிடுவது பிடிக்கவில்லை என்றால் விட்டு விடலாம். அதற்காக , அதை உண்பவரை ஏதோ அறுவெறுப்பாக முகம் சுழிக்க பார்ப்பது, அவரை சமுகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க நினைப்பது போன்றவைகளை தான் நாம் எதிர்ப்பது. மதத்தின் பெயரை சொல்லி ஒருவரை சிறுமை படுத்துவதை யாரும் அனுமதிக்க முடியாது.

  கோ மாமிசம் தொடர்பாக நான் உணர்வு பூர்வமாக அணுகுவதை விட, உரிமை பூர்வமாக அணுகுவதையே சரியென எண்ணியதால் தான் மேற்கண்ட விவாதங்களை முன்வைத்தேன். இன்னும் வேத, உபநிடத மந்திரங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசுவதற்கு விடயங்கள்(ஆதாரப்பூர்வமாக) பல இருப்பினும் யார் மனதும் புண் படுவதை நான் விரும்பவில்லை. ஆகவே, இந்த விவாதத்தை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன். இந்த விவாதத்தின் மூலமாக யார் மனதாவது புண்பட்டு இருப்பின் குறிப்பாக என் ஆப்த மித்ரர் ஸ்ரீ.கிருஷ்ண குமார் அவர்களுக்கும் என் வருத்தத்தினை தெரிவித்து கொள்கிறேன்.. நன்றி

  தென்னாடுடைய சிவனே போற்றி.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…

 40. தாயுமானவரே

  கட்டுரையின் நோக்கம்: அதிக எண்ணிக்கையில் பசு வதை நடப்பதை சுட்டிக் காட்டுதல். அதை தடுத்தல்

  உங்களது எண்ணம்: வேத வேள்வியில் பசுவை தூக்கி போட்டு கொன்றார்கள். பசு வதை பற்றி பேச நீங்கள் யார். மோகன் பகவத் யார். இந்தியாவில் வர்ணாஸ்ரம தர்மம் இருந்தது அதையும் தான் மோகன் பகவத் எதிர்கிறார் அதற்காக நீங்கள் யார் என்று கேட்பத.
  ஒரு பேச்சுக்கு பசுவை வேள்வியில் எரித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம், அதற்காக இன்று பசு வதையை எதிர்ப்பது தவறா. எங்க தாத்தா திருடினாருங்கரத் துக்காக நான் திருட்டை கண்டிப்பது தவறா. மோகன் பகவத் பற்றி உங்கள் பேச்சு இப்படி தான் இருக்கு.

  இன்னொன்று: ஏதோ தினமும் ஒரு பத்தாயிரம் மாட்டை வேள்விகளில் தூக்கி போட்டு த்வம்சம் பன்னாப்போல பேசறீங்க. வேள்வியில் பசு மாட்டை எரித்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம் அது எந்த எண்ணிக்கையில் இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? இன்றைய அவலம் பசு வதை மிக அதிக அளவில் பரவி இருப்பது தான்.

  இவ்வளோ ஆராய்ச்சியாளர்கள் இவ்வளோ ஆராய்ச்சி பண்றாங்களே, யாரவது மீமாம்ச காரர்களை பார்த்து உண்மை என்ன என்று விசாரித்தது உண்டா. இந்த விசயத்தின் உண்மை என்ன, எந்த மிருகத்தை எரித்தார்கள் என்பதெல்லாம் இவர்களுக்குத்தான் அத்துப்படி. அது அவர்களது subject matter

  நீங்கள் கொடுத்த லிங்கில் pdf download ஆகமாட்டேங்குது. படித்துவிட்டு சொல்கிறேன்.

  ஹிந்துவில் வந்ததை படித்தேன் செம சிறிப்பு வருது. அதுவும் தைத்ரிய பிராமணம் சொல்லும் அதோ “atho annam via gauh”. சூபரு.
  அது ஆகாசாத் வாயு: (ஆகாசத்தில் இருந்து வாயு) என்று தொடங்கி ப்ருதிவ்யாஹ் ஒஷதீப்ய: (பூமியில் இருந்து செடிகள்), ஒஷதீப்யோ அன்னம் (செடிகளில் இருந்து அன்னம்) என்று சொல்கிறது, தஸ்மாத் அன்னம் பஹு குரிவீத (அன்னத்தை பெருக்குங்கள்). ஹிந்துவின் கூற்றுப்படி, பசு மாட்டை பெருக்குங்கள் 🙂

  இதை எல்லாம் விடுங்கள். முன்னாள் என்ன வேண்டுமானாலும் இருந்து விட்டோ போகிறது. மோகன் பகவத் பசு வதை தடுக்க வேண்டும் என்பதில் என்ன தவறு?

 41. அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்

  \\ வாழ்க அருணகிரி.. நான் வாழ்க தான் சொன்ன. \\

  வாழ்க. வாழ்க. வேறேதாவது சொல்லியிருந்தாலும் திருப்புகழமுதத்தையே நினைவில் நிறுத்துவோம் 🙂

  அது வேற விஷயம்.

  நிற்க.

  ஸ்வாமின், நீங்கள் எங்கள் வள்ளல் பெருமானை வாழ்த்தியதால் அவர் உகந்தேத்தும் சம்பந்தப்பெருமான் கூடவே நினைவில் நிற்கிறார்.

  நமக்கு (அதாவது எனக்கு – உங்களுக்கு என்று சொல்ல வரவில்லை) சரியாகத் தெரியாத விஷயமான வேதம் என்ன சொல்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். திருமுறை (யும்) நீங்கள் கசடறக்கற்றதாயிற்றே. சம்பந்தப்பெருமான் வாக்கு :-

  வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
  வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
  ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
  சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

  இதற்கு மேலேயும் ஏதும் சொல்லவும் வேணும்? ||||

 42. தாயுமானவன் அவர்களுக்கு

  நீங்கள் எனது மறுமொழிகளைப் படிக்க வில்லையா? எனது ஜூன் 23 தேதிய பதிவைப் படியுங்கள். அதில் நான் பாபாசாகேப் அம்பேத்கரது ஆய்வுக் கட்டுரைகளின் தொடுப்பைக் கொடுத்து அது குறித்த எனது கருத்தையும் கூறி இருக்கிறேன். பின்னர், நீங்கள் சுவாமி விவேகானந்தரது கூற்றை மேற்கோள் கூறியதையும் ஏற்கிறேன் என்றேன். என்னைப் பொருத்த மட்டில் பாபாசாகேப் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரது கூற்றுக்களை ஏற்கிறேன், ஆனால் ஸ்ப்லோக் சஞ்சய் அல்லது இஸ்லாம்ஹிந்துயிசம் அப்துல்லா ஆகியோரது கருத்துக்கள் சந்தேகத்துக்கு உரியது, நம்பிக்கைக்கும் நாணயத்துக்கும் உரியன அல்ல எனபதைக் கூறி இருக்கிறேன். அதிலும் அதன் காரணம் அவர்களுக்கு உள்ள Bias என்பதையும் பதிந்திருக்கிறேன்.

  இப்போது கூட, நான் ஹிந்துத்துவாவைக் குறை கூறியவரை ஏற்காததால் உங்களுக்கு என்மீது ஒரு பாரபட்சம் ஏற்பட்டு அதனால் என் கருத்து என்ன என்று அறியாமலே என்னிடம் நீங்கள் வாதம் புரிகிறீர்கள்! பசு மாமிசம் குறித்து வேதம் கூறுவது பற்றி உங்கள் கருத்தும் என் கருத்தும் கிட்டத்தட்ட ஒன்றுதான்! ஆனால், அணுகுமுறையில்தான் வித்தியாசம். நான் சொல்வதெல்லாம் இந்த விஷயத்தில் பாபாசாகேப் அவர்கள் தமது சிறுபிராயத்திலிருந்தே தாழ்த்தப்பட்ட கொடுமையே அவரே அனுபவித்ததால் அவர் சொல்லுக்கு இருக்கும் மரியாதை, நீங்கள் சுட்டும் சப்லோக்கின் சஞ்சய்க்கோ, இஸ்லாம் ஹிந்துயிசத்தின் அப்துல்லாவுக்கோ என்னிடமிருந்து கிடைக்காது, ஏனெனில் இந்த இருவரும் உள் நோக்கத்தோடு புரட்டு வேலை செய்பவர்கள். ஆனால் பாபாசாகேப் உண்மையாக தலித் விடுதலைக்கு ஆக்கபூர்வமாக ஆராய்ச்சி பூர்வமாகப் போராடியவர், வெற்றியும் கண்டவர். இந்து மதத்தின் மறு மலர்ச்சிக்கு அதன் மூலம் வித்திட்டவர். அவர் வெறுத்துப் போய் புத்தத்தைத் த்ழுவுகிறேன் என்றபோதும், இந்த சஞ்சய் போல அன்னிய மதமான கிறிஸ்தவத்துக்கோ, அப்துல்லாபோல அன்னிய மதமான இஸ்லாத்துக்கோ வால் பிடிக்க வில்லை.

 43. பசுக்களை காக்கவேண்டும் என்ற நோக்கில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அன்புக்குறிய நண்பர் சசிகுமார் அவர்களைப்பாராட்டுகிறேன். ஆனால் இந்தக்கட்டுரையின் மையக்கருத்தினை விட்டுவிட்டு விவாதம் வேறு எங்கோ கொண்டுசெல்லப்பட்டுவிட்டது துரதிருஷ்டமானது.வேதகாலத்தில் பசு வேள்வியில் பலியிடப்பட்டதே என்று ஒரு சிலர் விவாதத்தினை திசைதிருப்பியிருக்கிறார்கள். அவர்களிடம் அடியேன் கேட்பதெல்லாம் ஒன்று தான் நாம் நாட்டுப்பசுவை பசுவினங்களை இழந்திருக்கிறோமே அதனால் நம்முடைய வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதாக சொல்கின்றன்றே அது பொய்யா?
  நம்முடைய நாட்டுப்பசுவினங்களின் பால் அன்னியப்பசுக்களின் பாலைவிட உயர்ந்தது உடல் நலத்திற்கு ஏற்றது என்பது பொய்யா? நமது நாட்டுப்பசுக்களைக்காப்பாற்றாவிட்டால் விவசாயம் படுபாதாளத்திற்கு போகும் என்பது பொய்யா?
  பாரத நாட்டினை அதன் மக்களைக்காக்கவேண்டுமென்றால் அதன் பாரம்பரிய வேளாண்மை, மருத்துவ முறைகள்,பண்பாடு, ஆன்மிகம், சமயங்கள் இவையெல்லாம் காக்கப்படவேண்டும். இவற்றினைக்காக்கவேண்டுமானால் நம்முடைய பாரம்பரிய பசுக்களையும், கால் நடைகளையும் காக்கவேண்டும். இதுவே அடியேனின் நிலைபாடு. இந்தியா என்ற பெயரைமட்டும் வைத்துக்கொண்டு எல்லாவற்றிலு அன்னியமானவர்களால் அவர்தம் சிந்தனைகளால் நாடு உயராது. ஏன் மீண்டெழாது. வந்தே பாரத மாதரம் வந்தே கோமாதரம்.

 44. ஆசிரியர் ந.சசிகுமார் அவர்கள் நமது நாட்டுப் பசு இனங்களைக் காப்பதன் அவசியத்தை முன்வைத்து இக்கட்டுரையை எழுதி உள்ளார். இப்பதிவு கிராமப்புற விவசாயம்,தற்சார்பு, நஞ்சில்லா வேளாண்மை ஆகியவற்றிற்க்கும் நாட்டுபசு இனங்களுக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டி நாட்டுப்பசுக்கள் அதன் மாமிசத்தின் தன்மைக்காக குறிவைத்துக் கொல்லப்படுவதைத் தடுக்க வலியுறுத்துவது நன்றாகத் தெரிகிறது. நிலைமை இப்படியிருக்க ஏழைகளின் உணவு சுதந்திரமும், வேதங்களும் இங்கு விவாதப்பொருளாக்கப்படுவது சரியான புரிதல் இல்லாததினாலோ?

  சரி என் பங்கிற்கு கோ மாமிசம்பற்றி வேதங்களில் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கருத்தின் LINK கையும் இங்கு பதிவிட்டுவிடுகிறேன். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது ஆனால் இக்கட்டுரை சரிஎன்று எனது மனதிற்குப் படுகிறது.
  https://www.gnanaboomi.com/vedas-shun-beef

 45. தாயுமானவன்

  ஆதார்பூர்வம் என்று நீங்கள் காட்டுவது ரெண்டு மூணு சுட்டிகளை. அந்த சுட்டிகள் அனைத்திலும் அபத்தங்கள் அநேகம்.
  நீங்கள் உணர்வு போர்ர்வமாகவும் எழுதவில்லை சிந்தித்து ஆராய்ந்தும் எழுதவில்லை. எதோ வேத உபநிஷத்துகளின் மீதுள்ள வெறுப்பு அல்லது சலிப்பு 🙂 போல் தான் தோன்றுகிறது.

 46. வேதத்தில் ஒரு மந்த்ரம் அதன் அர்த்தம்

  நூற்றியெட்டு பசுக்களை அடுக்கினால் சூரியனை தொட்டுவிடலாம் என்று 🙂

  இங்கு பசு என்றால் பசு மாடா. பசு என்றால் பூமி சார் எர்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *