தமிழகத்தில், பா.ஜ.க. கூட்டணியின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, நடந்த தவறுகளிலிருந்து பாடம்கற்பதும், கற்றபாடத்தை செயல்படுத்துவதும் பா.ஜ.க. வின் எதிர்காலத்துக்கும், நாட்டின் நன்மைக்கும் மிகவும் முக்கியம்.
இங்கு மிகப்பெரிய சந்தேகம், முதலில் பா.ஜ.கவினருக்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதா என்பதே. உண்மையிலேயே அப்படிப்பட்ட எண்ணம் இருந்தால் அவர்கள் உடனே தங்களை சுய பரிசோதனைக்கு (ஸ்வாத்யாயா) உட்படுத்திப்பார்ப்பது நல்ல தொடக்கமாக இருக்கும்.
தமிழக பா.ஜ.க. வானது இன்றைய நிலையில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்த சிந்தனையே இல்லாமல் இருப்பதாகத் தோன்றுகிறது. தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விழையும் ஒரு கட்சி இதைப்போன்றதொரு அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லதல்ல. ஆட்சியில் இல்லாதபோது எப்படி செயல்படுவது என்பதையும், தீவிரமாக விமர்சிக்கப்படும்போது அதை எதிகொள்வது எப்படி என்பதையும் கலைஞரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டல்லவா?
தமிழகத்தில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணியினரும் தோல்விக்கான உண்மையான காரணம் புரியாமல் திணறுவது நன்றாகத் தெரிகிறது. தேசம் முழுவதும் மோதி அலை வீசியபோதிலும் தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்தும் எதிர்பார்த்த வெற்றி கிட்டாதது எதனால்?
தேர்தலின் ஆரம்பகட்டத்தில், மோதி அலை தமிழகத்தில் வேலை செய்யும் என்று தமிழக பா.ஜ.கவினரே முழுமையாக நம்பியதாகத் தெரியவில்லை!. அந்த அவநம்பிக்கையின் வெளிப்பாடே கூட்டணி அமைக்க ஏற்பட்ட தாமதமும், இழுபறியும். ஒரு கட்டத்தில் மெகாகூட்டணி அமைக்கப் பெரும்பாடுபட்ட தமிழருவிமணியன் விரக்தியின் விளிம்பிற்கே சென்று அறிக்கைவிட்டது தமிழக பா.ஜ.கவின் நம்பகத்தன்மையைக் கெடுத்துவிட்டது. தமிழகத்தில் அடித்த மோதி அலையை மற்றவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ பாஜக உணரத்தவறிவிட்டது. நமக்கே நம்பிக்கை இல்லாதபொழுது நம்மால் பிறரை எப்படி நம்பவைக்கமுடியும்?. மோதி அலையை முதலில் உணர்ந்த அ.தி.மு.க. நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு விட்டது.
சாதுர்யமாக செயல்பட்ட ஜெயலலிதா, பிரச்சாரத்தின்போது முதலில் மோதியை விமர்சிப்பதைத் திட்டமிட்டுத் தவிர்த்தார். அரசியல்வாதிகளின் வெற்று வாய்சவடால்களாலும் செயலற்றதன்மையாலும் வெறுப்புற்றிருந்த நாட்டு மக்கள், செயல்திறன் மிக்க அரசியல் தலைமைக்காக ஏங்கியபடி இருந்தனர். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. தமிழக மக்கள், மோதியின் தலைமையில் நாடு முழுவதும் பாஜக வினர் அதிக இடங்களில் வெற்றிபெறுவார்கள் என்பதை உணர்ந்தனர். மோதி பிரதமராக வரவேண்டும் என்றும் விரும்பினர். அதேசமயம் மோதியால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கமுடியாது என்று காட்சி ஊடகங்கள் செய்த பிரச்சாரமும் மக்கள் மனதில் பதிந்திருந்ததைக் காணமுடிந்தது. தன்னம்பிக்கையில்லாத கட்சியாக தமிழக பாஜகவையும், கூட்டணி அமைக்க இழுபறி செய்ததால், சந்தர்ப்பவாதிகளாகவும், நம்பமுடியாதவர்களாகவும் அதன் கூட்டணியினரையும் மக்கள் பார்க்கத்தொடங்கினர். ஆகவே 2G புகழ் கருணாநிதியை விடவும், குழப்பத்திலிருந்த தமிழக தே.ஜ.கூட்டணியை விடவும், அ.தி.மு.க. எம்.பி. க்கள் மோதிக்கு உதவியாக இருப்பார்கள் என மக்கள் முடிவுசெய்துவிட்டனர். அதற்கேற்றார்போல் மோதிக்கே எங்கள் ஆதரவு !! என்று களத்தி இருந்த அ.தி.மு.க.வினர் மக்களிடம் இடைவிடாமல் சொல்லியபடி இருந்தனர்.
மக்கள் புத்திசாலிகள், கொஞ்சம் சுயநலவாதிகளும் கூட (கட்சித்தொண்டர்களும்தான்), தேர்தல் ஆரம்பிக்கும்பொழுதே சூழ்நிலைகளைக் கனித்து விடுகின்றனர். முதலில் மோதியிடம் நட்புபாராட்டிய ஜெயலலிதா பிறகு அவரை விமர்சனம் செய்ததை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, அரசியலில் இது சகஜம் என்று அவற்றை விட்டுவிட்டனர். இது தேர்தல் களப்பணியினூடே அவர்களிடம் உரையாடியபோது தெரிந்தது.
கட்சிகள் தங்களுக்கு வாக்குவங்கி இருப்பதாக சொல்வது ஒரு பெரிய மாயை என்பது மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம். மேலும் ஒரு கட்சியின் வாக்குவங்கியாகக் கருதப்படுவது அந்தக்கட்சிக்கே பயனளிக்காதபோது, அந்த வாக்குவங்கி அதன் கூட்டணிக்கட்சிக்கு எந்தவிதத்தில் பயன்படும்? கூட்டணி அமைப்பதன்மூலம் அந்தக்கட்சிகளின் வாக்குவங்கிகள் ஒருங்கிணைந்து கூட்டணிக்கு வாக்குகளாக விழும் எனும் கருத்து சுத்த அபத்தம் என்பது இத்தேர்தலில் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
மோதியை நம்பிய தமிழகமக்கள், மோதிக்கு ஜெயலலிதா ஆதரவாக இருப்பார் என நம்பிய அளவு, தமிழக பா.ஜ.க வையும் அதன் கூட்டணி தொழர்களையும் நம்பவில்லை என்பதுதான் சோகம். அதைவிடப் பெரிய சோகம் தமிழக பா.ஜ.க அந்த நம்பிக்கையைப் பெற எதுவும் செய்யவில்லை என்பதுதான்.
ஒருவரது கொள்கை சரியோ தவறோ, மக்கள், வெளிப்படையாகவும் உறுதியாகவும் செயல்படும் தலைவர்களை விரும்புகின்றனர். தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசே மேல் என்று ஒரு பழமொழி தமிழகத்தில் வழங்கிவருவது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
தலைவர் கலைஞரை மக்கள் சிறந்த நிர்வாகியாக, அறிவாளியாகப் பார்த்தாலும் அவரை நம்பமுடியாதவர் என்று நினைக்கின்றனர். அவரது வாரிசுகளுக்கு அப்படிப்பட்ட தகுதிகள்கூட எதுவும் இல்லை! மக்கள் மனதில் தே.மு.தி.கவும், ஆம் ஆத்மியும் இப்போதைக்கு ஒரே தட்டில்தான் உள்ளன. இரு கட்சிகளுமே தங்களுக்கு கிடைத்தவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத்தெரியாதவை. வை.கோ, நேர்மையானவராக இருக்கலாம், வீராவேசமான சிந்தனையாளர் மற்றும் பேச்சாளராகவும் இருக்கலாம், ஆனால் காரியவாதியா?. யதார்த்தமான செயல்வீரராக வை.கோ, தன்னை இன்னும் நிரூபிக்கவில்லை. ஆடிக்காத்தில அம்மியே பறக்கும்போது… இந்த சாதிக்கட்சிகளைப்பற்றி சொல்ல எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்றபடி காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் காலாவதி ஆகி வெகுகாலம் ஆகிவிட்டது, ஆக்சிஜன் டியூப் திடீரென்று எடுக்கப்பட்டதால் அவர்களது மறைவுவும் திடீர் என்று நிகழ்ந்ததைப் போல் தோன்றுகிறது.
ஆக இன்று தமிழகத்தில் உறுப்படியானதாகத் தெரிந்தது அ.இ.அ.தி.மு.க தான். கூடவே நடந்த வினியோகம் எப்பொழுதாவது வாய்க்கும் யோகமாக ஆனது. மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.
இந்த சூழலில் தமிழக அரசியலில் ஒரு ஆற்றல் வெற்றிடம் நிலவுவதை நம்மால் உணரமுடிகிறது. அந்தவெற்றிடத்தை நிரப்புவது யார்?
இந்த கேள்வியின் பதிலில்தான் தமிழகத்தின் நல்வாழ்வும், தேசத்தின் வளமையான முன்னேற்றமும் உள்ளது. அந்த இடத்துக்கான போட்டியாளர்கள் யார்?யார்?
- பா.ஜ.க
- இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் மதவாத, தீவிரவாத சுயனல இயக்கங்கள்.
- முற்போக்காளர்களாகக் கூறிக்கொண்டு, இனத்தையும், சமுதாயத்தையும், இயற்கையையும் காப்பவர்களாகக் காட்டிக்கொண்டு, சுயனலவாத கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் கையாள்களாக இருக்கக்கூடிய அமைப்புகள்.
இந்தப் பட்டியலைப் பார்த்தாலே தமிழகம் சந்தித்துக்கொண்டிருக்கும் அபாயம் புரியும்.
ஆகவே முதலில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த வெற்றிடத்தை நிரப்புவது தமிழக பா.ஜ.க வின் கடமை. அதன்பிறகு ஆட்சியமைக்கும் அளவுக்கு கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்தவேண்டும்.
இந்த நிலையை அடைவதற்க்கு 5 வருடத்துக்கு ஒருமுறை சென்று மக்களைப் பார்க்கும் பழக்கம் ஒத்துவராது. கட்சி இங்கு துடிப்புடனும் தனித்தன்மையுடனும் செயல்பட்டாக வேண்டும். அமைப்பை வலுப்படுத்தவேண்டும். தேசப்பற்றுள்ள, இளைஞர்களையும் பல தரப்பட்ட மக்களையும் கட்சி தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். முதலில் மோதியைப் போன்றதொரு துடிப்பான இளைய தலைமை தமிழகத்துக்கு தேவை. தேசியத்தோடு இணைந்து செல்லக்கூடிய தனித்தன்மைவாய்ந்த தலைவரையே தமிழகமக்கள் விரும்புகின்றனர். அத்தகைய தலைவரை கட்சி முன்னிறுத்தவேண்டும். மூத்தவர்கள் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளலாம், அவர்கள் தேர்தலின்போதுமட்டும் வந்து, கிடைக்கும் பதவியில் அமர்ந்து கொள்ளளாம். கொஞ்சம் கசப்பு மருந்துதான்! என்ன செய்ய? தனிமனிதர்களின் அர்ப்பணிப்பும், தியாகமும் இல்லாமல் சமுதாயங்கள் வாழமுடியாது.
கட்சி, மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்துப் போராட வேண்டும், தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் அதே வேளையில், தமிழகத்தின், தமிழரின் தனித்தன்மையைப் பாதுகாக்கவும் போராட வேண்டும். மக்களின் கட்சியாக கிராமந்தோரும் தீவிரமாகச் செயல்படவேண்டும். கட்சியின் குரல் உயர்ந்து கேட்கவேண்டும். தமிழகத்துக்கு அதிரடி அரசியல்தான் இப்போதைக்கு சரி. அமைதியான மனதோடு, தெளிவான குறிக்கோளோடு அதிரடியாக, துடிப்பாக செயல்பட்டால் 2019 ல் குறைந்தது 30 தமிழக பா.ஜ.க எம்.பி க்களைப் பார்க்கலாம். அதுவே தமிழகத்துக்கும், தமிழருக்கும், பாரத நாட்டுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமையுமாகும். நல்லதே நடக்கட்டும்.
வணக்கம்
நல்ல பயனுள்ள பதிவு. என் கருத்தையும் பதிவிட விரும்புகிறேன்.
1.முதலில் கிராமப் புறப் பகுதிகளில் பா ஜ க பற்றித் தெரியாதவர்கள் அதிகம்.
2.நகர்ப்புறங்களிலும் கிராமப் பகுதிகளிலும் அடித்தள வேலைகள் எதனையும் பா ஜ க செய்வதில்லை.
3.மக்களைச் சந்திக்கும் வழக்கம் அறவே இல்லை.
4. ஊடக வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவில்லை. இருக்கும் ஒன்றே ஒன்றான லோட்டஸ் தொலைக் காட்சியும் கம்பி வடத்தில் வருவதில்லை, மாற்று மதத்தினர் குறைந்தது 5 தொலைக் காட்சிகளையாவது தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள்,
5. கடந்த பா ஜ க ஆட்சி நடந்த போதும் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஒருவரும் அவர் மனைவியும் மட்டுமே ஆக்கிரமித்திருந்தார்கள். தங்க மங்கை என்ற பெயரில் அந்தப் பெண்மணியே வந்து அடிக்கடி ஏதாவது கூறிக் கொண்டிருப்பார். திருமதி வானதிசீனிவாசன் மற்றும் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் போன்ற சிறந்த பேச்சாளர்களை மற்ற தொலைக்காட்சிகள் பேட்டி எடுப்பது போல் லோட்டஸ் செய்வதில்லை. செய்திகள் 100 என்ற தலைப்பில் அடிக்கடி தொலைக்காட்சி நேரம் வீணடிக்கப் படுகிறது, நான் அறிந்தவரையில் லோட்டஸ் தொலைக்காட்சியில் எட்டாம் அறிவு என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டுமே சிலர் பார்க்கின்றனர், T.R. RATE கூட வேண்டுமானால் முக்கியமான நிகழ்ச்சிகள் youtube போன்றவற்றில் தரவேற்றப் படவேண்டும். அப்பொழுது தான் விடுபட்ட நிகழ்ச்சிகளைக் காண முடியும் இல்லாவிட்டால் மக்கள் அதனை ஒதுக்கி விடுவார்கள். இந்த நாட்டின் வரலாற்றையும் புராதனப் பெருமையையும் எடுத்துக் கூற வேண்டும், செய்வார்களா?
அன்புடன்
நந்திதா
இல கணேசனை தவிர மற்ற தலைவர்கள் மக்களிடும் பரிச்சியம் இல்லை இந்த தேர்தலுக்கு பின் பல திறமை வாய்ந்த பேச்சாளர்கள் மக்கள் மனதில் உள்ளனேர் இவர்கள் பட்டி தொட்டு பிரச்சாரம் செய்தால் பி ஜே பி நல்ல எதிர்காலம் கிடைக்கும் மோடி ஆட்சியால் ஏற்படும் பலன்களை கொண்டு செல்லலாம்
இதுவே பிஜேபி கு தமிழக அரசியல் செய்ய சரியான சந்தர்பம். திமுக அழிவு நிலைக்கு சென்று கொடிருக்கிறது. ஜெ எதனை நாள் பதவியில் இருப்பார் என்பது சந்தேகம் கோர்ட் கேஸ் அவருக்கு பாதகமாக அமையும். பபிஜேபி கு மத்தியில் தனி மஜோரிட்டி irukkirathu, ஜெயை நம்பி இல்லை. தமிழகத்தில் எதிர்ப்பு அரசியில் செய்ய தகுந்த தருணம். இதைவிட்டால் வேறு தருணம் இல்லை இதை புரிந்து கொண்டு பிஜேபி தலைமை செயல் பட வேண்டும் .
(1)///// முதலில் பா.ஜ.கவினருக்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதா ///// — ABSOLUTELY NOT
(2) /////////தமிழக பா.ஜ.க. வானது இன்றைய நிலையில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்த சிந்தனையே இல்லாமல் இருப்பதாகத் தோன்றுகிறது/////// —-There you are.
.////////ஆகவே முதலில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த வெற்றிடத்தை நிரப்புவது தமிழக பா.ஜ.க வின் கடமை//////// —There is none to understand this in the TN BJP
//////முதலில் மோதியைப் போன்றதொரு துடிப்பான இளைய தலைமை தமிழகத்துக்கு தேவை. ////// MY CHOICE is Mr H RAJA .(karaikudi)
/////கிராமந்தோரும் தீவிரமாகச் செயல்படவேண்டும்.////// When there is no mass base for the BJP, how can you be very active in the villages? Impossible.
தமிழக பிஜேபி க்கு யோசைனை சொல்வதும் ஒரு பாழும் சுவற்றிற்கு முன் நின்று பேசுவதும் ஒன்று. குட்டைக்குள் கல் எறிந்தால் அங்கே ripples ஏற்படும். மலை மீது ஏறி நின்று கத்தினால் அங்கே echo உண்டாகும். ஆனால் தமிழக பிஜேபி க்கு நல்ல யோசனை சொன்னால் there will be no response . We had better keep mum.
இந்துக்களின் மரமண்டைக்கு உரைக்கும் வண்ணம் அறிய, தெளிய வேண்டிய விஷயங்கள் ஏராளம், ஏராளம். மற்ற (உ.ம் ஹைந்தவ கேரளம்) வலைதளங்களில் உள்ளதை தமிழாக்கம் செய்தாவது கொடுக்கலாமே? கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை சொல்லவேண்டும் என்றால், பொன் ராதாக்ருஷ்ணனை அல்லது இல கணேசனை பார்த்து ஆலோசனை சொல்லுங்கள். இங்கே எழுதி என்ன பிரயோஜனம்? இந்துக்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்கள் அல்லவா இங்கு அறிய தரவேண்டும்?
ஐயா, முதலில் தமிழக ப.ஜ.க வினருக்கு நல்ல தமிழில் பேச பயிற்சி எடுக்க செய்யுங்கள். அழுத்தம் திருத்தமான தமிழ் எந்த பேச்சாளருக்கும் வரவில்லை. இங்கிலீஷ் கலந்த ‘தங்க்லீஷ்’ அல்லது மனிப்ரவாள தமிழ், இல்லை என்றால், பார்ப்பன தமிழ். இந்த வகை தமிழால், சென்னை நகர எல்லையை தாண்ட இயலாது. ஊர்ப்புறங்களில் இந்த கட்சி வேருன்றாததற்கு காரணம், பெரும்பான்மை தமிழ் மக்களை இவர்கள் சென்று அடையாததே.. [ஒரு வேண்டுகோள். உள்ளூர் தலைவர்களை ஊக்குவியுங்கள். வலிமை/செல்வாக்கு மிக்க உள்ளூர் தலைவர்கள், தொண்டர்களால்தான், இன்னும் /இன்றும் திராவிட இயக்கங்கள் வலிமையோடு உள்ளன. திணிக்கப்பட்ட தலைவர்கள், டெல்லிக்கு காவடி எடுக்கும் தலைவர்கள்/தொண்டர்களை தமிழர்கள் விரும்புவதில்லை. நல்ல தமிழில் ‘வணக்கம்’ என்று சொல்லுங்கள். அது என்ன ‘நமஸ்காரம்’? இப்படிப்பட்ட சொல்வழக்குகளால் காங்கிரஸ் தனிமைப்பட்டது போல நீங்கள் தனிமைபடாதீர்கள். ‘ஜி’ என்று விளிப்பதற்கு பதில் நல்ல தமிழில்’ஐயா’ என்று விளித்தால் நெருக்கம் கூடும். செயற்கையாக நம்மை வடக்கத்தியானகளாக கண்பித்துகொள்ளல் என்ன பயனைத்தரும்?
கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கும் சில விஷயங்களை உண்மையில் ஆய்வு செய்ய வேண்டும். தேர்தலுக்கு முன் மோடி அலையினால் தமிழகத்தில் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தால், அது மிகப் பெரிய தவறாகும். வட புலத்தில் குறிப்பாக உத்திர பிரதேசத்தில் பா.ஜ.க. 71 இடங்களை பிடித்த்து என்றால் அது மோடியின் அலை என்றால் மிகையாகாது. மோடி அலை எப்ப்போது கை கொடுக்கும் என்பதை சந்தித்துப் பார்க்க வேண்டும். உத்திர பிரதேசத்தில் பா.ஜ.க 2004 மற்றும் 2009-ல் தோல்வி அடைந்த தொகுதிகளை சற்று ஆய்வு செய்ய வேண்டும். வெற்றி பெற்ற 10 தொகுதிகளை விடுத்து பார்த்தால் நன்கு புரியும், அதாவது, 35,000 முதல் 50,000 வாக்குகள் வித்தியாத்தில் தோல்வியடைந்த தொகுதிகளின் கணக்கு என்பது 35 தொகுதிக்கு மேல், மேலும் 2004 மற்றும் 2009-ல் மாயாவதி பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை வாக்குகளை களவாடியது, மாயாவதியின் மீதும், முலாயம் சிங்கின் மீதும் வெறுப்பு கொண்ட வாக்காளர்களை பா.ஜ.கவிற்கு மாற்ற எடுத்த நடவடிக்கை. இதன் காரணமாகவும், இறுதியாக முஸப்பாரபுர் பகுதியில் நடந்த கலவரமும் ஒரு காரணம் என்பதையும் மறந்து விடக் கூடாது. அதாவது ஜாட் வாக்குகளை அதிக அளவில் பெற்றுள்ளோம் ஆனால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சயின் வாக்கு சதவீதம் 2.3 சதவீதம் என்பது கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள், இங்கு பல பாராளுமன்ற தொகுதியில் 2009-ல் பெற்ற வாக்குகளை பார்த்தால் நன்கு தெரியும், கூட்டணியின் காரணமாக வெற்றி பெறுவோம் என்பது சற்று அதிக கற்பனையின் வெளிப்பாடு. மேலும் கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் ஒருங்கினைந்து நடக்க வில்லை. வட மாவட்டங்களில் கனிசமான வாக்குகள் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, தன்னை முழுமையாக தேர்தல் பணிகளில் ஈடுபாடு காட்டவில்லை. கூட்டணி கட்சிகளின் கற்பனையின் காரணமாக தவறாக கணித்தால் தோல்வியை சந்தித்தோம். மோடியின் அலையினால் 2009-ல் கோவையில் பெற்ற வாக்குகளை விட பல மடங்கு அதிகமாக 2014-ல் பெற்றுள்ளோம். பாரதிய ஜனதா கட்சி நின்ற 7 தொகுதிகளில் 2009 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகம் பெற்றுள்ளோம் இது மோடி அலையினால் கிடைத்த்து என்பதை மறந்து விடக் கூடாது.
அதிமுக மோடியின் இன்னொரு முகம் என்ற பொருள்பட ஒரு தமிழக அரசியல்வாதி பேட்டி அளித்துள்ளார். தமிழக வாக்காளப்பெருமக்களில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அம்மா கட்சிக்கே வாக்களித்தனர். ஏனெனில் அம்மா தனது தேர்தல் கூட்டங்களில் காங்கிரசை கிண்டல் மற்றும் கேலி செய்தும், கடுமையாக தாக்கியும், தமிழகத்துக்கு காங்கிரசார் செய்த துரோகங்களையும், காங்கிரசின் கூட்டணிக்குடும்பக்கட்சி அடித்த கொள்ளைகளையும் பட்டியலிட்டு , நாடெங்கும் வீசிய காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வை தனக்கு சாதகமாக ஒரு புயலைப்போல மாற்றிவிட்டார்.
மாறாக திமுகவினர் சிறிதும் யதார்த்த நிலை புரியாமல், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்களை மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தி வைத்ததுடன், சிறிதும் கூச்சமில்லாமல் தன்னுடைய மகளை மீண்டும் பிரச்சாரத்துக்கு அனுப்பிவைத்தார். இது தேவையா ? பிரதமரால் கடுமையான அதிருப்தி தெரிவிக்கப்பட்டவரை மீண்டும் எம் பி பதவிக்கு வேட்பாளராக்கினால் , அவர்களுக்கு வாக்களிக்க நம் தமிழக மக்கள் இன்றைய இன்டர்நெட் யுகத்தில் ஏமாளிகள் அல்ல.
ஜெயலலிதாவின் மீது இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு கூட, திமுகவினரால் போடப்பட்ட வழக்கு தானே, இவர்களைப் பற்றி நமக்கு தெரியாதா என்ற மனநிலையே வாக்காளர்களிடம் காணப்பட்டது. இலங்கை தமிழரின் மூன்று லட்சம் ஆவிகளும் திமுகவை துரத்தி, துரத்தி அடித்தன. பகுத்தறிவு என்ற பெயரில் மோசடி செய்வோரை தினகரன் பத்திரிகை ஊழியர்கள் ஆவியும், இன்னபிற ஆவிகளும் தொடர்ந்து துரத்துகின்றன. என்ன செய்வது ?
ஜெயாவின் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய ஜெயா தரப்பு வழக்கறிஞரின் விவாதங்கள் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. அவற்றை படித்துப் பார்க்கும்போது,
1. இந்த வழக்கில் எப் ஐ ஆர் போட்டதே, விதிமுறைகளின் படி போடவில்லை என்ற வாதமும் மேற்கோளாக மேதகு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் திரு சதாசிவம் அவர்கள் தலைமையில் நடந்த அமர்வில் இதே போல ஒரு வழக்கினை தள்ளுபடி செய்துள்ள முன் உதாரணத்தை காட்டி , வழக்கின் அடிப்படையே கோவிந்தா ஆகிவிடும் போல தெரிகிறது.
2. பினாமிகள் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ள குற்றச்சாட்டும் அதே போல கோவிந்தா ஆக வாய்ப்புக்கள் ஏராளம் என்பது ஜெயா வழக்கறிஞரின் வாதங்களை படிக்கும் போது புரிகிறது.
3. கலைஞர் ரொம்பவும் எதிர்பார்க்கும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கு அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தால் யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள்.
4. ஜூலை இரண்டாம் தேதி திறக்கும் டூ ஜி சிறப்பு நீதிமன்றம் புதிய வழக்குகளில் திமுக தலைவருக்கு வேண்டிய உறவினர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகிவிட்டது.
I heard Amith Shah is coming to Tamil nadu and travelling to South India States to Build BJP here before next assembly elections.
TN BJP should address & fight for local issues in order to gain the confidence of our People, should not wait for election to go to the streets.
It has to be very active & Re build..
Jai Sri Ram
முதலில் கலைஞரை சிறந்த நிர்வாகி என்று மக்கள் கருதுவதாக தீரன் அவர்கள் சொல்லுவது நகைச்சுவையாகத் தெரிகிறது. தமிழக மக்கள் ஒரு போதும் அவ்வாறு கருதியதில்லை. இந்நாள் முதல்வர் தனது முதல் ஆட்சியின்போது செய்த தவறுகளின் விளைவாகத்தான் அவரைத் தேர்ந்தெடுத்தனர். அடுத்தத் தேர்தலில் கூட்டணி அவருக்குக் கை கொடுத்தது. அவ்வளவுதான். தற்போது அப்படியல்ல. திமுக கிட்டதட்ட திவாலாகிவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த சட்ட மன்றத் தேர்தலிலும் திமுக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.
பாரதீய ஜனதாவை எடுத்துக் கொண்டால் ஆசிரியர் சொல்வது போல் அமைதியாக இருப்பதாகத் தான் தோன்றுகிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அமைச்சர்கள் ஆனந்தகுமாரும், சதானந்த கவுடாவும் தாங்கள் இந்தியா முழுமைக்கும் அமைச்சர்கள் என்பதை மறந்து விட்டு தாங்கள் சார்ந்த மாநிலம் சார்பாக பேசுகிறார்கள். இதில் மூத்த அமைச்சரான வெங்கையா நாயுடுவும் சேர்ந்து கொண்டார். தான் ராஜ்ய சபா உறுப்பினராக கர்நாடகாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றியாம்!. ஆந்திரத்தில் பாலாறு தடுப்பணை விவகாரத்திலும் தர்மசங்கடம்தான். அங்கு தமிழகத்தைக் காட்டிலும் பாஜக வலுவாக உள்ளது. மேலும் மத்தியக் கூட்டணியிலும் தெலுங்கு தேசம் அங்கம் வகிக்கிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் இன்னும் தீர்ப்பு அமல்படுத்தவில்லை. இந்த விஷயங்களிலெல்லாம் ஓங்கி குரல் கொடுக்கிற நிலையில் தமிழக பாஜக இல்லை. அப்படியே கொடுத்தாலும் யாரும் நம்பத் தயாரில்லை.
தற்போது தமிழ் நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினைகள், தண்ணீர்ப் பிரச்சினை, மின்சாரப் பிரச்சினை, மற்றும் மீனவர்ப் பிரச்சினை. இந்த மூன்றிலும் தெளிவான, நிரந்தரமான, காங்கிரஸ் அரசிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டக்கூடிய தீர்வினை அடைந்து அதை அமல்படுத்தி அதற்கான பயனைத் தமிழகம் அனுபவிக்கும்போதுதான் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும்.
தற்போது இந்தப் பிரச்சினைகளில் இந்நாள் முதல்வர்தான் தமிழக மக்களுக்காக போராடுபவராகத் தெரிகிறார். அதுதான் உண்மையும் கூட.
நதிகளைத் தேசிய மயமாக்குதல், மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு அதிக மின்சாரம், அதிக மின்பாதைகள், தமிழகத்தில் அடிப்படைக் கட்டுமானங்களை அமைத்தல், இரயில்வேயில் தமிழகத்திற்கு அதிகத் திட்டங்கள், விலைவாசியை கட்டுக்குள் வைத்தல், பெட்ரோல், டீசல் விலையை வரைமுறை செய்தல் போன்றவற்றை செய்தால் (அதாவது காங்கிரஸ் அரசிலிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டக் கூடிய அளவில்) பாஜகவிற்கு ஆதரவு பெருகும்.
முதலில் தாங்கள் சார்ந்திருப்பது ஒரு தேசிய கட்சி என்பதை மேல் சொன்ன பாஜக அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்த வேண்டும். அனாவசியமாகப் பேசுவதை நிறுத்துவதற்கு ஆணையிட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் பாஜக அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அதன் தலைவர்களுக்கு பல திறமைகள் இருந்தாலும், களத்தில் இறங்கி வேலை செய்ய மற்ற கட்சியையே நம்பியுள்ளார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். இன்னும் இந்துத்துவம், மத மாற்றம், அந்நிய சக்திகள் போன்றவற்றை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல் முக்கியப் பிரச்சினைகளில் தங்கள் நிலைப் பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
குறிப்பாக மோடி மற்றும் வரவிருக்கும் தேசியத் தலைவர் தமிழக பாஜக வளர்ச்சியில் உத்தரப் பிரதேசத்தில் செய்தது போல் சிறப்புக் கவனமெடுத்துச் செய்ய வேண்டும்.
நன்றி!
பிஜேபி உடனடியாக ஒரு செயல் திட்டத்தை தொடங்கியாக வேண்டும். நாளை தேர்தல் அறிவிக்கப்படுவது போல நினைத்து வரும் 2016 சட்ட சபையில் குறைந்தது 30 தொகுதிகளை குறி வைத்து களம் இறங்க வேண்டும். மக்கள் நம்ப தயார். முன்னினை ஏற்று மக்களை சந்திப்பதும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் மட்டுமே தேவையான ஆரம்பம்.
திமுக – எம் ஜி ஆர் திமுகவில் இருந்தவரை மக்கள் விரும்பும் ஒரு இயக்கமாக இருந்தது. எம் ஜி ஆர் விலக்கப்பட்ட பின்னர், 1972-க்குப் பிறகு, எம் ஜி ஆர் உயிருடன் இருந்த 1987- வரை மக்கள் திமுகவை ஓரம் கட்டிவிட்டனர். 2014- ஆம் ஆண்டு வரையிலும் , ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை – என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிமுக தலைவியின் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்ட போதுமட்டும் ஒரு மாற்று ஏற்பாடாக , வேறு வழி இல்லாமல் தான் திமுக ஆட்சியில் அமரவைக்கப்பட்டது. மற்றபடி கலைஞர் சிறந்த நிர்வாகி என்று கருதி யாரும் ஓட்டுப்போடவில்லை. அவர் நிர்வாக லட்சணம் எங்களுக்கு அல்லவா தெரியும் ?
1. காவிரியில் கர்நாடகம் கூடுதல் அணைக்கட்டுக்களை கட்டிக்கொள்ள அனுமதி தந்த மூடத்தனத்தை செய்தார். அதுவும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்தாபனக் காங்கிரஸ் எம் எல் ஏ திரு கருத்திருமன் அவர்கள் புதிய அணைகள் கட்டப்பட்டால் எதிர்காலத்தில் என்ன அபாயம் வரும் என்று சுட்டிக் காட்டியும், அதனை உதாசீனப்படுத்தினார். அதன் விளைவாக இன்று தமிழகம் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது என்ற நிலையை உருவாக்கினார்.
2. கச்சத்தீவு பிரச்சினையில் இந்திரா காந்தி தமிழகத்துக்கு துரோகம் செய்து , இராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது, பதவியை ராஜினாமா செய்யாமல் , ஒட்டுண்ணி, சாறுண்ணி போல , பதவியில் தொங்கிக்கொண்டு தமிழக நலன்களை காவு கொடுத்தார்.
3. சாதியற்ற சமுதாயம் அமைப்போம் என்று கூறிக்கொண்டே சமதர்ம சமுதாயம் என்றெல்லாம் பொய்க்கதைகளை . பெரியாரைப்போலவே கூறிக்கொண்டு , 2001- தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள சாதிக்கட்சிகள் அனைத்தையும் தனது அணியில் சேர்த்து , தொகுதிகளை வாரி வழங்கி, கோவிந்தா ஆனார். சொல் ஒன்று செயல் வேறு என்பதே பெரியாருக்கும் இவருக்கும் உள்ள ஒரே அடிப்படை குணநலம்.
4. தாய் மொழி வழிக்கல்வி உலகிலேயே உயர்ந்தது என்பது உலகெங்கும் அறிஞர்கள் அறிந்த உண்மை. ஆனால் திமுகவினர் இவர் தலைமையில் , ஆங்கிலம் கேடயம், இந்தி அரக்கி என்று சொல்லி, தமிழ் தாயை அழித்து , ஆங்கில வழிக்கல்வியை அரியணை ஏற்றி , இன்று அனைவருமே தமிழ் எங்கே இருக்கிறது ? என்று கேட்கும் நிலையை உருவாக்கி விட்டார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன வரை தலைவர் என்று சொல்லும் இவரைப்போன்ற அரசியல்வாதியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
5. இவர் சிறந்த நிர்வாகி என்று சொன்னால் , நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று பொருள். 10 முதல் 15 பெர்செண்ட் கமிஷனில் அரசுப்பணத்தின் மூலம் சில கட்டிடங்கள் பாலங்களை இந்தியாவில் எல்லா மாநில அரசும் கட்டிக்கொண்டுதான் உள்ளது. இதில் என்ன நிர்வாகத்திறன் வாழ்கிறது. கலைஞரிடம் நிர்வாகத்திறன் என்பது , ஆளுங்கட்சியிடம் பெட்டி வாங்கும் சில மூடப்பத்திரிக்கையாளர்கள் திட்டமிட்டு செய்யும் பொய்ப்பிரச்சாரம். வீரமணி, சுபவீ, நக்கீரன் கோபால் போன்ற ஜால்ராக்கள் மட்டுமே இவரை ஒரு நிர்வாகி என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள்.
விவரம் அறிந்த மக்கள் இவரை மிகக் கேவலமான அரசியல்வாதியாக மட்டுமே கருதுகிறார்கள்.
தங்கள் குடும்பத்தை சேர்ந்த மகன் மகள் பேரன் பேத்தியை அரசியலுக்கு கொண்டுவந்து பதவி வழங்குவது ஒன்றும் பெரிய சாதனை அல்ல. நிர்வாகத்திறமையும் அல்ல.பல அரசியல்வாதிகளும் செய்யும் காரியம் தான்.
1. சரத் பாவர் தன் மகள் சுப்ரியா சுலே- வை தேர்தலில் நிறுத்தி மக்கள் வாக்கு வாங்கி , பாராளுமன்ற லோக்சபா எம் பி ஆக்கியுள்ளார். இவரைப்போல காங்கிரஸ்காரன் மற்றும் காங்கிரஸ்காரி காலில் விழுந்து , அவர்கள் ஆதரவுடன் கொல்லைப்புற வழியாக தன்னுடைய மகளை எம் பி ஆக்கவில்லை. மேலும் ராஜ்யசபை எம் பி ஆக சுப்ரியா சுலே இருந்தபோது கூட, காங்கிரஸ் ஆதரவுடன் எம் பி ஆகவில்லை. தன்னுடைய என் சி பி கட்சி மூலமாகவே ராஜ்யசபா எம் பி ஆக்கினார்.
2. மாட்டுத்தீவனம் புகழ் லல்லு கூட தன்னுடைய மனைவி , மகள் மிசா பாரதி இருவரையும் லோக்சபா தேர்தலில் நிறுத்தி எம் பி ஆக்க முயற்சித்தார்.. கொல்லைப்புற வழியாக பதவியைப் பெற லல்லு கூட முயற்சிக்கவில்லை.
3. முலயாம் சிங்கு கூட தன் மகனையும், மருமகளையும் லோக்சபா தேர்தலில் நிறுத்தி பொதுமக்கள் வாக்குகளைப் பெற்று மட்டுமே எம் பி ஆக்கினார். காங்கிரஸ் காரன் தயவுடன் எம் பி ஆக்கவில்லை.
எனவே கலைஞர் ஒரு சிறந்த நிர்வாகி அல்ல. பதவிப் பித்தர் மட்டுமே. அவசரநிலைக் காலத்தில் பல கொடுமைகள் செய்த இந்திராவை கடுமையாக ஏசியவர், 1979-லே மீண்டும் இந்திராவுடன் கூட்டணி கண்டு , தன்னுடைய கட்சியை மற்றும் கொள்கைகளை காவு கொடுத்து , குடும்ப நலன்களை காத்துக்கொண்டார். தமிழின நலன்களை புறக்கணித்த சுயநலம் மட்டுமே இவரிடம் உள்ளது.
நந்திதாவின் கருத்துக்கு:—- பிஜேபி காரர்கள் மக்களை சந்திப்பதில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. என்ன பயமோ? யாருக்கு தெரியும்? அவர்களை ஊர்களில் பொதுக்கூட்டங்களில் எல்லாம் பார்க்க முடியாது. அவர்களை பார்க்கவேண்டுமானால் டிவி விவாத மேடைகளில் மட்டும் பார்க்கலாம். இப்படி இருந்தால் கட்சி வளருமா? அடுத்து ஊடகம். ஒரு தமிழ் தினசரி கிடையாது. ஒரு உருப்படியான electronic media கிடையாது. Lotus டிவி என்று ஒன்று இருப்பதும் ஒன்று. அது இல்லாததும் ஒன்று. 100 செய்திகள் என்று அடிக்கடி ஒளி பரப்புகிறார்கள். 34 வது செய்தியாக ஒன்றை சொன்னால் அதையே 82 வது செய்தியாக மீண்டும் சொல்லுவார்கள்(repetition ) இப்படிப்பட்ட நிலையில் 100 செய்தி தேவையா? இவர்களுக்கு விளம்பரமாவது வருகிறதா? இப்படிப்பட்ட ஒரு டிவி க்கு எப்படி வரும்? கட்சிகாரர்கல்தான் எந்த ஒரு ஊருக்கும் சென்று மேடைகளில் பேசுவதில்லை. At least அவர்கள் அத்திபூத்தாற்போல எங்காவது பேசிய பேச்சுகளையாகிலும் ஒளி பரப்பலாம் (இமயம் டிவி போல). விவாத மேடை என்று ஒரு நிகழ்ச்சியை துவக்கி அதில் ஒரு பிஜேபி காரர்களை பேசவைக்க்கலாம் (ஜெயா டிவி போல) ஆனால் எதையும் செய்யாமல் ஒரு உப்பு ஊறுகாய்க்கும் உதவாத நிகழ்சிகளை ஒளி பரப்பிகொண்டிருக்கிறார்கள். இந்த டிவி உருப்படுமா?
மோடி பிரதமாராக வேண்டும் என்று நினைத்துதான் அவரை மக்கள் அனைவரும் ஆதரித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் டீசல் விலை, ரயில் கட்டணம் என்று வரிசையாக ஏற்றினால் எந்த மக்களுக்குத்தான் வெறுப்பு ஏற்படாது? காங்கிரஸ் காரன் வேண்டாம் என்று நினைத்து இவரை கொண்டுவந்தால் இவரும் காங்கிரஸ் பாணியிலேயே நடந்தால் அப்புறம் இவர் எதற்கு? ரயில் கட்டணம் அவசியம் என்றால் அதற்கான காரனத்தையாகிலும் மக்கள் அறியவேண்டும் என்று கருதி பொது கூட்டங்கள் போட்டு விளக்கினார்களா? கிடையாது. மக்களுக்கும் கட்சிகாரர்களுக்கும் தொடர்பு என்பதே கிடையாது. கட்சி எப்படி வளரும்? நாம் நமது கருத்துக்களை கட்சிக்கு (தமிழ்நாடு பிஜேபி) மெனக்கெட்டு எழுதி அனுப்பினால் அதை கண்டு கொள்ள அங்கே ஆளில்லை. அதற்கு acknowledgement செய்ய கூட அவர்களுக்கு அக்கறை இல்லை. கேவலம் சில நடிகைகள் கூட அவர்களது ரசிகர்களுக்கு கைப்பட கடிதம் எழுதி அனுப்புகிறார்கள்.
உயர்திரு செம்பியன் தமிழ்வேல் அவர்களே,
//முதலில் தமிழக ப.ஜ.க வினருக்கு நல்ல தமிழில் பேச பயிற்சி எடுக்க செய்யுங்கள். அழுத்தம் திருத்தமான தமிழ் எந்த பேச்சாளருக்கும் வரவில்லை. இங்கிலீஷ் கலந்த ‘தங்க்லீஷ்’ அல்லது மனிப்ரவாள தமிழ், //
… மிக நல்ல கருத்து, ஒப்புக்கொள்கிறேன்.
//இல்லை என்றால், பார்ப்பன தமிழ்.// … இங்கு உங்களிடம் சாதிவெறி (brahmin baiting) தெரிகிறாற்போல் இருக்கிறதே! நான் தவறாகப் புரிந்துகொண்டேன் என்றால் வருந்துகிறேன்.
நீங்கள் சொல்லவந்த கருத்து, உங்களின் நோக்கம், பேசும் தமிழைப் பற்றித்தான். தமிழர்களை இனம் பிரிப்பது அல்ல. பிராமணர்கள்/பார்ப்பனர்களும் தமிழர்கள்தான். சாதி வேறுபாடு கட்டக்கூடாது என்ற தமிழ் இந்துவில் சாதிப் பிரிவினையை உண்டுபண்ண முயற்சி செய்யாதீர்கள்.
தலைவர் காமராஜ் பாமர மக்கள் பேசும் தமிழில் பேசி அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தார்; அண்ணாத்துரையும், கருணாநிதியும் சொல்லலங்காரம் மூலம் மக்களைக் கவர்ந்தார்கள். தமிழ் பலவிதமான அசைவுகளில் பேசப் படுகிறது. எந்த அசைவு என்பது முக்கியம் அல்ல, அது மக்களைக் கவருகிறதா, கருத்துக்கள் மக்களிடம் போய்ச் சேருகிறதா என்பதுதான் முக்கியம். உங்களுடைய ஒரு சொற்தொடர் என்னிடமிருந்து இந்தவிதமான மறுமொழியை வரவழைத்ததிலிருந்து, தெரிந்து கொள்ளுங்கள். கவனக்குறைவாக எழுதினால், பேசினால் நமது கருத்து, நோக்கம் போய்ச்சேராது, பலனைக் கொடுக்காது.
நாம் என்ன சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். அசைவு முக்கியம் அல்ல.
வணக்கம்.
கட்சிகள் தங்களுக்கு வாக்குவங்கி இருப்பதாக சொல்வது ஒரு பெரிய மாயை என்பது மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம். – false. There is a vote bank for AIADMK. If you see the percentage of the vots polled by the parties in all the elections, you will realise that.
ஆக இன்று தமிழகத்தில் உறுப்படியானதாகத் தெரிந்தது அ.இ.அ.தி.மு.க தான். கூடவே நடந்த வினியோகம் எப்பொழுதாவது வாய்க்கும் யோகமாக ஆனது. மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். – False.
All parties including DMDK distributed money to voters. If money was a major criterion, then difference between the 1st & 2nd places would not have been in lakhs.
There was no wave for Modi in TN even initially. Yes, people had a good opinion, but then they were not ready to vote for him. That was bcos there was no major disenchanted with JJ. By & large, her govt has earned a good name. Also, JJ has always strongly defended the state’s rights.
Coming to the BJP, how many people down south, specially in the villages, know about BJP?. Even in chennai, how many public meetings have they conducted? Have they raised any demonstrations or protests for issues affecting the public? Never.
Now, talking of Modi’s rule, he came with high expectations. He gave speeches that issues concerning the common man would be addressed first.
But what does he do? He issues a circular that hindi would be language of correspondence between govts. knowing well that it is a touchy subject with non hindi speaking states. Forgeht this, there will be a translation of all the documents which is time consuming & a waste of money.
Is it that improtant at this juncture?
Then, the rail fares are hiked. Ok. U say that it is the fault of the previous congress govt, so harsh decisions have to be taken, but at the same time, has there been any mention of improving the appalling facilities in trains? People are ready to pay more, but even basic facilities like toilets are in a patheric condition even in the so called AC compartments in many trains.
BJP cried fowl that the congress did not control the fuel hike. Now, they have done the same thing. In what way, have they given the confidence that they are different from the congress?
Simply kissing the floor & asking ministers not to fall at his feet will not take Modi anywhere.
People expect action, not rhetroic.
தமிழக பாஜக தலைவர்களை ஒட்டுமொத்தமாக மாற்றினால் ஒழிய இங்கு பாஜக வளர வாய்ப்பே இல்லை… தேர்தலில் போட்டியிட்ட தலைவர்கள், போட்டியிடாத நிர்வாகிகள் என்று பலரும் பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தவிர சுய ஒழுக்கம் என்பது இவர்களில் பலருக்கு இல்லை என்பது பெரும்பாலான தொண்டர்களும், பிற அரசியல்கட்சி தலைவர்களும் அறிந்தது தான்.
பொன்.ராதாகிருஷ்ணன் இந்து மாணவர்களுக்கு சம நீதி,நிதி வேண்டும் என்று நடத்திய போராட்டத்தை தவிர மக்கள் போராட்டத்திற்காக தமிழக பாஜகவினர் இதுவரை நான் அறிந்தவரை ஏதும் செய்யவில்லை.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் பலர் விடுதலையானார்கள். அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித்தரவேண்டும் என்ற எண்ணமோ, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டுமோ என்ற எண்ணமோ, கோவை குண்டுவெடிப்பின் மூலம் ஆட்சியை பிடித்த பாஜகவிற்கு குறிப்பாக தமிழக பாஜகவிற்கு இதுவரை இருந்ததில்லை.
கட்சிக்காக உயிரிழந்த தொண்டர்களை மதிக்காத எந்த கட்சியும் வளரவோ, ஆட்சியை பிடிக்கவோ முடியாது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை இந்து இயக்கங்களின் பலத்தை மட்டுமே நம்பியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்சின் வளர்ச்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு இல்லையென்பதால் தமிழக பாஜகவின் வளர்ச்சியும் இல்லை.
சரி விட்டுத்தள்ளுங்க. அவங்களுக்கே இல்லாத அக்கறை நமக்கெதுக்கு ? 🙂
///////இது தவிர சுய ஒழுக்கம் என்பது இவர்களில் பலருக்கு இல்லை என்பது பெரும்பாலான தொண்டர்களும், பிற அரசியல்கட்சி தலைவர்களும் அறிந்தது தான்./////// உண்மையா? நான் இதுவரை பிஜேபி தலைவர்கள் திறமை இல்லாதவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். இது என்ன புது குற்றசாட்டு? இது உண்மை என்றால் திரு செந்தில் அவர்கள் அவற்றை புட்டு புட்டு வைக்கலாமே! நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
//////கட்சிக்காக உயிரிழந்த தொண்டர்களை மதிக்காத எந்த கட்சியும் வளரவோ, ஆட்சியை பிடிக்கவோ முடியாது./////// உயிரிழந்த தொண்டர்களை மட்டும் உயிருள்ள தொண்டர்களையும் அவர்களின் கருத்துக்களையும் (தமிழக) பிஜேபி மதிக்கிற பழக்கம் அவர்களின் வரலாற்றிலேயே கிடையாது. தொண்டர்களுக்கு இவர்களை பிடிக்கணும். அப்போதுதான் இவர்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும். பிஜேபி துவக்கி சற்றேற குறைய 35 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் ஒரு பிஜேபி எம்.எல்.எ வை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு கட்சியை வளர்க்க முடியவில்லை என்றால் இவர்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் பிஜேபி ஆபிசில் பெட், தலை அணை போட்டு தூங்கி கொண்டிருகிரார்களா?
இதை எல்லாம் தமிழக பிஜேபி காரர்கள் படிப்பார்களா? இவற்றை படித்த பிறகாகிலும் கொஞ்சமாவது திருந்துவார்களா? அல்லது அவர்கள் இவற்றை படிக்க வாய்ப்பில்லை என்றால் இவற்றை நாம் இங்கே எழுதுவது criminal waste . விழலுக்கு இறைத்த நீர். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உள்ளங்கள் வாழ்ந்தென்ன லாபம்? இவற்றை எல்லாம் நான் நல்ல எண்ணத்தில் தான் சொல்லுகிறேன். கட்சி வளர வேண்டும் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வளர வேண்டும் என்று தான் இவற்றை எல்லாம் கூறுகிறேன். தவறான எண்ணத்தில் சொல்லவில்லை.
இங்கே பரப்புரை நிகழ்த்தியவர்கள் எல்லாம் திமுக திவால் ஆகிவிட்டதாகவும் .இனி எந்த எதிர்காலமும் கிடையாது என்பது போன்ற மாயை தோற்றத்தை உருவாக்க முயன்று உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் திமுக ஆட்சியின் காலத்தில் நடந்த நல்ல விசயங்களை திட்டமிட்டே மறைக்கும் அம்மா புகழ் பாடிகள். இப்போது பீற்றிக்கொள்ளும் அம்மா மருந்தகம் 70 களில் கூட்டுறவு அன்காடிகளான சிந்தாமணி காமதேனு அமராவதி காவேரி பொதிகை வைகை என பெயரிடப்பெற்ற சூப்பர் மார்கெட்களில் மலிவு விலையில் கிடைத்தது . நடுத்தர மக்களின் கனவான மின் விசிறி ரேடியோ போன்ற மின் சாதான பொருட்கள் சைக்கிள் போன்றவையும் விற்கப்பட்டன . தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை கால தேவைகளான மளிகை துணிமணி பட்டாசு போன்றவை சலுகை விலையில் கிடைக்கும் .குறளகம் , coop -tex பட்டு மாளிகை மற்றும் மேலே குறிப்பிட்ட கூட்டுறவு அங்காடிகள் சொந்த கட்டத்திலேயே இயங்கின .இவற்றை எல்லாம் திட்டமிட்டு அழித்த பெருமை அதிமுக அரசுகளையே சாரும் . திரு கதிரவன் இதையெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை மேலும் அவர் சொத்து குவிப்பு வழக்கு நேர்மையாக நடக்க வேண்டும் என நினைக்கிறாரா அல்லது நீதி செத்து போக வேண்டும் என்று நினைகிறாரா என்று தெரியவில்லை FIR பற்றி 18 ஆண்டுகளுக்கு பிறகுதான் தெரிய வருகிறதா ? மேலும் திமுக போட்ட வழக்கிற்கு இப்படி ஓடி ஓடி 18 ஆண்டுகளை என் கடத்த வேண்டும் . கருணாநிதியை எல்லா விசயத்திற்கும் குறை கூறி பிராண்டுவதிலேயே ஆட்சி காலத்தை ஓட்டி விடாலாம் என நினைத்து தமிழக மக்களை ஏமாற்றும் வேலை எவ்வவளவு காலந்தான் தொடர முடியும் ? அண்டை மாநிலங்களுடன் சும்மோக உறவை வளர்த்து பேச் வார்த்தை நடத்தி விட்டுகொடுத்து தண்ணீர் பெற்று தந்தது திமுக ஆட்சிகாலம் . ஆணவ போக்கை கடை பிடித்து சண்ட மாருதம் கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது அம்மாவின் ஆட்சிகோலம் . இலங்கை தமிழர்கள் இருக்கட்டும் இங்கு அகதிகளாக வந்தவர்கள் இன்னும் அடிமைகளாக தானே நடத்தி வருகிறோம் . மூன்று ஆண்டுகளாக முன்னூறு முறை கடிதம் எழுதியதை தவிர இந்த அரசு என்ன்ன கிழித்துவிட்டது கதிரவன் அவர்களே . மிட்ட மிராசு பிள்ளைகள் மட்டுமே கல்லூரி செல்ல முடியும் என்கிற காலத்தில் தாலுக்கா தோறும் அரசு கலைகல்லுரிகள் கண்டது திமுக ஆட்சி . குடும்ப அரசியல் யார் தான் நடத்த வில்லை ? அப்போதைய நேரு குடும்பம் முதல் இப்போதைய சந்திரசேகர ராவ் சந்திர பாபு நாயுடு வரை குடும்பம் தானே அரசியல் செய்கிறது . திராவிட கட்சிகளை தவிர பாஜக போன்ற மதவாத பெருமுதலாளிகள் தாங்கி பிடிக்கும் கட்சிகளுக்கு இங்கே வேலை இல்லை
Pandian,
Cooptex is still functioning & doing well & so is kamadhenu super market.
Even assuming that these were neglected during the ADMK regime, Mu.Ka came to power in 1989, 1996 & 2006. Why did he not revive it?
Rajaji pleaded with Mu.ka to implement prohibition. Did Mu.ka agree?
What happened to the veeranam scheme?
When he was CM, Katchatheevu was awarded to Sri lanka by the then PM Indira Gandhi. He kept quiet.
Karunanithi had good relations with other states? Ok, but what was the result? Did we get anything out of it?
He installed Tiruvalluvar statue in bangalore & Samakyar statue in chennai. Did we get cauvery water?
His party was part of the central govt for 10 years. Did he get the gazetted order that Karnataka should give 210 tmcft of cauvery water to TN implemented?
In the sri lankan tamils issue, what did he do? A 3 hr fast between breakfast & lunch.
Every party promotes family rule, yes. But mu.ka’s family is everywhere – politics, cinema, real estate, media.
Sumangali cable vision (SCV) owned by Dayanithi Maran threatened other cable TV operators. In cinema, many producers & distributors could not release their films bcos all the theatres were blocked by the DMK family. Do you know that close to 200 films are still lying in the cans?
When Indira Gandhi came to madurai in 1976, a knife was thrown at her. Mu.ka, anbazhagan & others were listed as acucused. Do you know when the verdict came? In 2002. By that time, India Gandhi was dead & gone.
BJP is communal, ok.
DMK is secular? When karunanithi was asked whether Stalin will be his successor, he replied ” DMK is a party, not a Sankara Madam”. Why drag Sankara Madam here?
He goes & drinks kanji during ramzan, but refuses to come to vinayaka chathurthi festival. This is secularism?
Hindu means thief – he has said. This is secularism? The case is still in court.
DMK makes fun of Hindu Gods, criticise only Hinduism & not say a word about other religions?
This is secularism? I did not know that.
DMK has alliance with muslim league. Miuslim league is not a communal party? Are non muslims members in that party?
Tamizhargal maanamkettavargal, pindaigalai thinnum ponangal – these are the words used by mu.ka whenever he loses an election.
Ivar Thamizh ina thalaivara?
அன்புடையீர் வணக்கம்
தேர்தல் முடிந்து நாம் கண்ட கனவு நனவாகிவிட்டது நரேந்திர தாமோதர் தாஸ் மோடி அவர்கள் பிரதமர் ஆகிவிட்டார்கள்♦என்னால் நம்பிக்கையோடு உறுதியளிக்க முடியும் பாரத நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சனைகள்,முக்கியமான தேசிய வாழ்வாதார பிரச்சனைகளான நதிநீர் ,எல்லை பாதுகாப்பு,இலங்கைத் தமிழர் நலன், பொருளாதாரம்,விலைவாசி,மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் இன்னும் பல விஷயங்களில் மோடி அரசு மிகுந்த சிரத்தை எடுத்து பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்ல ஆரம்பித்துவிட்டது♦
நிச்சயம் நல்ல தொடக்கம் நாளை நிச்சயம் நன்னாளே என உறுதியளிக்கிறோம்♦
ஆனால் தமிழக பாஜகவைக் குறித்த திரு தீரன் அவர்களின் பதிவு என் உள்ளத்தில் தீர்க்கமான வேதனையை ஏற்படுத்தியது♦தமிழக பாஜகவில் துடிப்புடனும் தனித்தன்மையுடனும் செயல்படவல்ல இளைஞர்கள மற்றும் செயல்வீரர்களை புதிதாக பலரை கட்சிக்குள் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியம் என்ற திரு தீரன் அவர்களின் கருத்து சரியானதே♦ஆனால் ஏற்கனவே அர்பணிப்பு உணர்வோடு தம்மை பாஜக என்ற பேரியக்கத்தில் கட்சி ஆட்சியில் இல்லாத காலகட்டத்திலும் கொள்கையின் பால் கொண்ட ஈர்ப்பால் தம்மை இணைத்துக் கொண்டு,என் பயன் பணி செய்து கிடப்பதே….கட்சிப் பணி தாருங்கள் செய்கிறோம் என்ற தயார்நிலையில் தகுதி வாய்ந்த இளைஞர்களும் திறமைிகு செயல்வீரர்களும் பல்லாயிர்கணக்காணோர் ஏற்கனவே உள்ளனர்.அவர்களை முறைப்படி பாகுபாடில்லாமல் பயன்படுத்தினாலே உடனடியாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் நம்பிக்கைக்குரிய மாற்றாக பாஜகவை அதிக வீர்யத்தோடு உருப்பெற செய்ய இயலும்.”நல்லதோர் வீணை செய்தே அதை நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி!!!எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் ..வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே!!” என்ற பாரதியின் புலம்பல் என் உள்ளத்தில் எதிரொலிக்கிறது.
இருக்கும் செயல்வீரர்களின் கால்களை முடக்காமல் நடக்க அனுமதித்தாலே தமிழக பாஜக எழுந்து நின்றுவிடும்!!! பாரத் மாதாவிற்கு ஜெயம்♦
L. Victoria Gowri
தமிழ் இந்துவில் வரும் சில வாசகர் மறுமொழிகள் மிகவும் சிறந்த ஜோக்குகளாக திகழ்கின்றன.
மேலே திரு டி வி எஸ் பாண்டியன் தன் கடிதத்தில் திமுக செய்த நல்ல விஷயங்களை மறைப்பதாக சொல்லி , நல்ல நகைச்சுவையை வழங்கியுள்ளார். திமுக செய்த நல்ல செயல்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளவற்றை ஒவ்வொன்றாக விவாதிப்போம்:-
1. கூட்டுறவு அங்காடிகளில் இன்னமும் மருந்து விற்பனை நடை பெற்றுக்கொண்டுதான் உள்ளது. அதனை யாரும் தடை செய்யவில்லை. கூட்டுறவு அங்காடிகளில் மருந்துப் பொருள் விற்பனை நடப்பதை யாரும் மறைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கி இன்றுவரை நடந்துவருகிறது. திமுக ஒன்றும் புதியதாக செய்யவில்லை.
2. சுட்டிக்காட்டப்பட்ட அநீதிகளுக்கு நிவாரணம் தேடவேண்டும் என்பதே நமது நோக்கம். குறளகமும், கோ ஆப்டெக்சும் இன்னமும் நன்கு செயல்பட்டு வருகின்றன. இவர் அங்கு போய்ப் பார்க்கவில்லை என்று தெரிகிறது. பொய்க் குற்றச்சாட்டு.
3. காவிரித் தண்ணீரை கோட்டைவிட்ட திமுகவைப் பற்றி, பதில் சொல்ல வழி இல்லாமல், திமுக காவிரித் தண்ணீர் பெற்றுத் தந்தது என்று ஒரு பெரும் பொய்யை சொல்வது ஒரு அசிங்கம்.
4. இலங்கை தமிழரை இன்னும் அடிமையாக வைத்துள்ளோம் என்று சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. அது சரி இலங்கைத் தமிழர்கள் திமுக ஆட்சியில் என்ன காரணத்தால் சுதந்திரம் கொடுக்கப்படவில்லை ?
5. காவிரி நதி நீர் தீர்ப்பாயம் கொடுத்த இறுதித் தீர்ப்பு , மத்திய அரசின் அரசிதழில் 2007-ஆம் ஆண்டு முதல் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டு சுமார் ஐந்து வருடம் கழித்து தான், அதுவும் அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர் தான் அரசிதழில் வெளியிடப்பட்டது. திமுக நன்கு தூங்கி வழிந்தது.
6. அரசுக்கல்லூரிகள் என்ன லட்சணமாய் செயல்படுகின்றன என்பது நாடறிந்த உண்மை. 2006-2011 திமுக ஆட்சியில் சென்னை சட்டக்கல்லூரி வாசலில் காவல்துறை அலுவலர்கள் கண்முன்னேயே , சட்டக்கல்லூரி மாணவர்கள் கட்டைகளாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்ட காட்சியை நாடே பார்த்தது. பாண்டியன் அவர்களே, தாங்களும் அங்கேதான் படித்தீர்களா ?
7. நேரு தான் உயிரோடு இருந்த காலம் வரை, அமைச்சரவையில் தன்னுடைய குடும்பத்தினரை சேர்க்கவில்லை. நேரு மறைந்த பின்னர், திரு லால்பஹதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது தான் இந்திரா காந்தி தகவல் ஒலிபரப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். கருணா அவர்கள் தான் மகன்கள், மகள், பேரன் என்று அனைவரையும் பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்தார். சந்திரசேகர ராவும், கலைஞரை பார்த்து தான், இப்போது 2014-இல் தான் குடும்பத்துக்கு மந்திரி பதவி கொடுத்துள்ளனர். மிகக் கெட்ட முன் உதாரணங்களை ஏற்படுத்தியது திரு மு க அவர்கள் தான்.
8. சொத்துக்குவிப்பு வழக்கு நீண்ட காலமாக நடந்துவருவது உண்மை தான். கருணா அவர்கள் தேவை இல்லாமல் , திமுக சார்பில் பல மனுக்களைப் போட்டு, அந்த வழக்கை அரசு விரைந்து நடத்த முடியாதபடி பல தேவை இல்லாத இடையூறுகளை உருவாக்கினர். அது சரி, திமுக சார்பில் சில வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வருகிறார்களே, இந்த தாமதத்தை தடுக்க அவர்கள் என்ன செய்தார்கள் ? மீண்டும் நல்ல தூக்கம் தானா ? திமுக வழக்கறிஞர்கள் அவ்வளவுதானா ? அது சரி, திமுக 1996-2001, 2006-2011 ஆகிய காலக் கட்டங்களில் சுமார் பத்துவருடம் அரசு நடத்தியதே, அப்போது வழக்கை விரைந்து நடத்தியிருக்கலாமே ? யார் தடுத்தனர். திமுக அரசு போட்ட சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இதற்குமேல் வேண்டாம்.
9. முதல் தகவல் அறிக்கை பற்றி வழக்கறிஞர்கள் இப்போது புதியதாக சொல்வது போல திரு பாண்டியன் கருதுகிறார். உண்மை என்ன வெனில், மாண்புமிகு உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்கள் அளித்துள்ள ஒரு தீர்ப்பு, இதேபோல முதல் தகவல் அறிக்கை சரியில்லை என்ற அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சாதகமாக முடிவு வந்துள்ளது. எந்த வழக்கிலும் தங்கள் வழக்கில் உள்ள உண்மைகளைப் போல, ஒப்புநோக்கத்தக்க வேறு ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு வந்தால், அதனை சுட்டிக் காட்டுவது வழக்கமான ஒன்று தான். நீதிபதி திரு சதாசிவம் அவர்கள் அளித்த தீர்ப்பு 18- வருடம் முன்பு வந்தது அல்ல. சமீபத்தில் வந்தது அல்ல.
மொத்தத்தில் திரு பாண்டியன் அவர்களின் வாதம் மிகவும் சொத்தையாக உள்ளது. நல்ல வழக்கறிஞரை பிடியுங்கள். எங்கள் அப்பன் குதிருக்குள் மட்டும் இல்லை என்று சொல்வது போல இருக்கிறது. தமிழகத்துத் தமிழருக்கும் , இலங்கை தமிழருக்கும் செய்யப்பட துரோகங்களை மூடி மறைக்க முயலும் உங்கள் செயல் நமக்கு வருத்தமாக இருக்கிறதய்யா.
” சமீபத்தில் வந்தது அல்ல. “- தட்டச்சுப்பிழை. “சமீபத்தில் வந்ததுதான்”- என மாற்றிப் படிக்கவேண்டுகிறேன்..
திரு.ஆரிசோனன் , வணக்கம். நான் பார்ப்பன தமிழ் என்று சாதி வெறுப்பில் குறிப்பிடவில்லை. உண்மையைத்தான் இயம்பினேன். செம்மையான தமிழ் இருக்க, அவாள், இவாள், சொன்னாள் போயிண்டிருந்தோம் ,வந்திண்டிருந்தோம் என்ற ஒரு சார்பான வழக்கு தமிழ் [அதாவது குறிப்பிட்ட இனத்தில் புழங்கும் கொச்சை மொழிவழக்கு] எதற்காக பொது மேடைகளில் பயன்படுத்தப்படவேண்டும்? நல்ல தமிழை பயன்படுத்தலாமே என்று தான் கூறுகிறேன். இப்படி பேசுவதால், இந்த தலைவர்கள், பெரும்பான்மை தமிழக மக்களுக்கு அந்நியமாகவே தெரிகிறார்கள். இனத்தோடு இரண்டறக்கலக்காத எந்த கட்சித்தலைவரும், தொண்டர்களும், அந்த இன மக்கள் உள்ள பகுதிகளில் நிலைபெற முடியாது என்பது நிலைநாட்டப்பட்ட ஒன்று. இரண்டாவதாக,பார்ப்பனர்கள் உள்ளூர தங்களை தமிழர்களாக எண்ணியதோ, இயங்கியதோ இல்லை. பார்ப்பனரல்லாத, தமிழ் பேசும் மக்களைத்தான் ‘தமிழாள்’, என குறிப்பிடுவர். அக்கிரகாரத்து அந்தணனாகிய எனக்கு இவர்களது போக்கு தெரிந்ததால்தான் இந்த பதிவை இட்டேன். மற்ற மொழிக்காரர்களுடன், அவர்களது மாநிலத்தில் இரண்டற கலந்து இயங்கும் பார்ப்பனர்கள் தமிழகத்தில் மட்டுமே இனத்தோடு ஒட்டாமல், தனித்து இயங்குகின்றனர். மூன்றாவதாக இங்கு பா.ஜ.க என்பது ‘ஐயர் கட்சி’ என்ற அளவிலேயே ஊர்ப்புறங்களில் அறியப்படுகிறது. இது பலத்த பின்னடைவைத்தரும். இந்த குறையை சரி செய்ய தமிழக பா.ஜ.கா வினர் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?? மண்ணின் மைந்தர்களோடு இணைந்து எந்த பணியை பா.ஜ.கவினர் மேற்கொண்டார்கள்? [தாம்பிராஸ்-ல் இணைந்து சமஷ்டி உபநயனம், ருக்மிணி கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாது ஒன்றுதான் பாக்கி. புரிந்து கொள்வீர்கள் என நிலைக்கிறேன். -செம்பியன் தமிழவேள்.
இப்படி ஜனங்க பிஜேபி பற்றி என்னென்னமோ இங்கே எழுதுகிறார்களே!. அவை தவறாக இருக்குமானால் அவற்றிற்கு உரிய பதில் எழுதி உண்மை நிலையை மக்கள் அறியச் செய்யலாம் என்று எந்தவொரு தமிழக பிஜேபி தலைவருக்கும் தோன்றவே இல்லையே! அவர்கள் இதை படிக்காமலா இருப்பார்கள்? கண் இருந்தும் குருடர்களாக வாயிருந்தும் ஊமைகளாக காது இருந்தும் செவிடர்களாக இருக்கிறார்களே! பிஜேபி தலைவர்கள் மர்ம மனிதர்களா?
ஆட்சிக்கு வந்தவுடன் 0-50 காசு டீசல் விலையை ஏற்றினார்கள். பிறகு ரயில் கட்டணத்தை ஏற்றினார்கள். சமீபத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் விலைகளை ஏற்றினார்கள். கட்சததீவில் இந்தியர்கள் மீன் பிடிக்க உரிமை இல்லை என்று கோர்டில் தெரிவித்தார்கள்.. இப்போது எரிவாயு உருளையை 250 ரூபாய் உயர்த்த திட்டம் என்று செய்தி வந்துள்ளது. இப்படி ஒவ்வொன்றாக இடி மேல் இடியாக வருகிறது. விரைவில் நடக்க உள்ள சில சட்டசபை தேர்தல்களில் இதன் தாக்கம் இல்லாமலா போகும்? இப்படிப்பட்ட நிலையில் மகாராஷ்ட்ராவில் பிஜேபிகாரர்கள் சிவசேனாவின் உதவி தேவை இனி தேவை இல்லை என்று (((பாராளுமன்ற தேர்தல் முடிவு வெற்றி களிப்பில்)) திமிராக பேசுகிறார்கள். பிரதமர் மோடியோ பேசுவதெல்லாம் நல்லதே பேசுகிறார். ஆனால் செய்வதெல்லாம் கெட்டதே (அதாவது விலை ஏற்றம்) செய்கிறார். பிஜேபிகாரர்கள் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். பிஜேபியே எதிர்பார்க்காத அளவிற்கு (கருத்து திணிப்பையும் மீறி) மக்கள் பெரும்பான்மையை கொடுத்திருக்கிறார்கள். இந்த பெரும்பான்மையை தன இஷ்டத்திற்கு எதையும் செய்யவா மக்கள் கொடுத்தார்கள்? அந்த நல்ல மக்களுக்கு மனம் அறிந்தே துரோகம் செய்யலாமா? சட்டசபை தேர்தலில் தோல்வி வந்தால்தான் அவர்கள் உணர்வார்கள். அதுவரை உணரவே மாட்டார்கள்.
டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க போகும் பிஜேபி பிரமுகர்களுக்கு சில அறிவுரைகளை அளிக்க வேண்டும்.
நேற்று ஒரு டிவி யின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற (மூர்க்க குணங்க்கொண்ட) அமெரிக்கை நாராயணன் என்ற நபர் வேண்டுமென்றே “மோடிஜி…….” என்று பல முறை கூறுகிறார். அதை பற்றி கேட்டால் நான் மரியாதையோடுதானே கூறுகிறேன் என்று திமிராக பதிலளிக்கிறார். மரியாதை கொடுக்கும் மூஞ்சியை பாருங்கள். நமது வீட்டிற்கு ஒரு வரும்போது “வாங்க” என்று கூறுவதற்கும் “வா…ங்க……” என்று இழுத்து சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எதோ கிண்டல் செய்து கூப்பிடுவது போல இருக்கும்.இப்படி கூப்பிட்டால் வந்தவர் ஓடியே பொய் விடுவார். நான் ஒரு தமிழன் என்று பெருமை பட்டுக்கொள்ளும் அந்த நபர் எதற்கு வடநாட்டவர்கள் போல “”ஜி”” போட்டு பேசவேண்டும். இத்தனை நாள் சொல்லிவந்தது போலவே வெறும் மோடி என்று சொன்னாலே போதும் நாராயணா!. உனது போலித்தனமான மரியாதையை யாரும் எதிர் பார்க்கவில்லை.
அடுத்து விளவங்கோடு MLA விஜயதாரணி என்ற நபர் சத்தியம் டிவி யில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பிஜேபி சார்பில் பங்கேற்ற திரு சிதம்பரம் என்பவரை பார்த்து “கண்டபடி உளறாதீர்கள்” என்று கூறுகிறார். சிதம்பரமும் அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சிரித்துகொண்டிருக்கிறார். அந்த நபரை பார்த்து யாராவது ஒரு சின்ன வார்த்தை சொல்லிவிட்டால் “நான் ஒரு எம்.எல்.ஏ” – “கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் இப்படிப்பட்ட வார்த்தைகளை கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று எகிறி குதிப்பார். ஒரு MLA க்கு மட்டும்தான் சூடு சுரணை உள்ளதா? MLA ஆக இல்லாத .சிதம்பரம் (பிஜேபி காரர்) என்பவருக்கு சூடுசுரணை கிடையாதா? ஒரு டிவி நிகழ்ச்சியில் “உளறாதீர்கள்” என்று சொல்வது நாகரிகமான வார்த்தையா?
மேலும் பிஜேபி காரர்கள் மற்றவர்கள் பேசும்போது எக்காரணம் கொண்டும் குறுக்கிடக் கூடாது. அதே போல இவர்கள் பேசும்போது எதிராளிகள் குறுக்கிட்டால் கடுமையாக எதிர்க்கவேண்டும். நாமும் தவறு செய்யகூடாது. மற்றவர்கள் செய்தாலும் அதை கண்டிக்க வேண்டும். விஜயதரணி என்பவர் எப்போதுமே குறுக்கிட்டு பேசும் நபர். அதே போல மற்றவர்களுக்கு நேரம் தராமல் இவரே பேசுவார். அமெரிக்கை நாராயணன் குறுக்கிட்டு பேசாவிட்டாலும் பிஜேபிகாரர்கள் பேசும்போது “பொய்” “தப்பு” என்று comment கொடுத்துகொண்டே இருப்பார். அப்போது “ஒன்று நீங்கள் பேசுங்கள் அல்லது என்னை பேச விடுங்கள்” என்று முகத்தை கடுப்பாக காட்டவேண்டும்.
பொதுவாக விவாதத்தின் போது 4 நபர்களை அழைக்கிறார்கள். அதில் ஒருவர் பிஜேபி. மற்றவர்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அடுத்து ஒரு பத்திரிக்கையாளர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்யை சேர்ந்த இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துகொண்டு பிஜேபி க்கு எதிராகத்தான் பேசுவார்கள் பத்திரிக்கையாளர் சிலநேரம் பிஜேபி க்கு லேசாக ஆதரவு நிலையில் பேசுவார். சில நேரம் எதிராக பேசுவார். அப்போது பிஜேபி தனித்து விடபடுவார். அந்த 3 பேரின் குற்றசாட்டுகளுக்கு இவர் (பிஜேபி) பதில் சொல்ல ஒரே அளவு நேரம்தான் (மற்ற ஒவ்வொரு நபருக்கும் ஒதுக்குவதை போல) ஆகவே இவருக்கு ஆதரவாக பேச இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற கட்சிகள் நபர்களையும் அல்லது பிஜேபி ஆதரவு பத்திரிக்கையாளர் ஒருவரை அழைக்க வேண்டும் என்று தைரியமாக அவர்களிடம் கூறவேண்டும். ஒருவரை 3 பேர் சேர்ந்து தாக்குவதுதான் சமநிலையா? நன்கு யோசியுங்கள் பட்டி மன்றங்களில் நடுவருக்கு இரண்டு பக்கங்களில் 3 பேர் இருக்கிறதை போல விவாத நிகழ்சிகளில் ஒரு கருத்திற்கு ஆதரவாக 2 பேரும் எதிராக 2 பேரும் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.
பங்கேற்கும் பிஜேபிகாரர்கள் விவாதம் சம்பந்தமான அனைத்து கருத்துகளையும் finger tip ல் வைத்திருக்க வேண்டும். அபோதுதான் விவாதம் நன்றாக இருக்கும். ஏனென்றால் விவாதத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனதில் பிஜேபி பற்றி தவறான impression ஏற்பட கூடாது. ஆகவே பார்த்து நடந்து கொள்ள வேண்டும். அதற்கு பிஜேபி தலைமை பங்கேற்பாளர்களுக்கு நிறைய training தர வேண்டும். நான் சொல்வதை காது கொடுத்து கேட்பார்களா? அல்லது இவனுக்கு வேறுவேலை ஏதுமில்லை என்று குருடர்களாக செவிடர்களாக இருப்பார்களா?
பாஜகவின் எதிர்கால நடவடிக்கைகள் எந்த திசையில் எப்படி அமையவேண்டும் என்ற விவாதம் இங்கு எழுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்ற விஷயத்தை பல கோணங்களிலும் பார்க்கலாம்.
1. தேர்தல் முடிந்தவுடன் தமிழனுக்கு அர்ச்சனை நிறையக் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். என்னடா தேர்தல் முடிவுகள் வந்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது . புதுடெல்லியில் இருந்து களப்பிரர் ஆட்சி ஒழிந்து, புதிய ஆட்சி வந்தபிறகு ஒரு சத்தமும் காணோமே, ஒருவேளை நமது தலைவருக்கு வயது மிக அதிகம் ஆகிவிட்டதால், மறதி அதிகரித்துவிட்டதோ ? என்று நினைத்தேன். தலைவர் இப்போது செயல்படாமல் ஒதுங்கிக் கொண்டு, தன்னுடைய தளபதியாக செயல்படும் மகன் மூலமாக , தன்னுடைய சாபங்களை தமிழனுக்கு வழங்க ஆரம்பித்து விட்டார்.
தேர்தலில் திமுக தோற்கவில்லை, மக்கள் தான் தோற்றுப்போனார்கள்= மக்கள் செய்த தவறுக்கு நாம் என்ன செய்யமுடியும் ?- என்று தளபதி அவர்கள் மொழிந்துள்ளார். அதுசரி, எப்போதும் திமுக தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, தவறு செய்யாதவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கும் என்ற குற்றச்சாட்டை உண்மை என்று நிரூபித்து வருகிறது திமுக.
மக்கள் தவறு செய்துள்ளதாக சொல்லிக்கொண்டு, திமுகவின் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் இதர பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம் ? மக்கள் மீது இனிமேல் திமுகவால் நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த வயிற்று எரிச்சலில், கட்சிக்காரன் மீது பாய்வது கண்டு, எல்லோரும் சிரிக்கிறார்கள். இப்போது விஷயத்துக்கு வருவோம்.
வரும் சட்டசபை தேர்தலில், பாஜக திமுக அணியில் சேருமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்று சிலர் கேட்கிறார்கள். 2016- சட்டசபை தேர்தலில் இன்று உள்ள நிலையில் , அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து , தனியாகவே 200-இடங்களுக்கு மேல் பிடித்து விடும். எஞ்சிய 34- இடங்களில் பாஜக கூட்டணி கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. பாஜகவும், வைகோவும், விஜயகாந்தும் இணைந்து கூட்டணி அமைத்தால் இந்த 34-ஐ பிடிக்க வாய்ப்பு உள்ளது. திரு அன்புமணி அவர்களிடம் கிடைக்கும் ஒத்துழைப்பு பெரியவர் இராமதாசிடம் கிடைக்கவில்லை என்பதை புரிந்து கொண்டால், பாமகவை இனியும் நம்புவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. திமுகவுடன் கூட்டணி போட்டால் மீண்டும் சைபர் தான் என்ற நிலை தான் உள்ளது.
2. கூட்டணி வேண்டாம் தனித்து போட்டியிடலாம் என்ற முடிவை தமிழக பாஜக எடுத்தால் நிச்சயம்10- 15 எம் எல் ஏக்கள் கிடைப்பார்கள். ஏனெனில் 1977- சட்டசபை தேர்தலில் திரு மொரார்ஜி தலைமையிலான ஜனதா கட்சி அரசு மத்தியில் இருந்த காலக் கட்டத்தில், எம் ஜி ஆர் அவர்கள் முதல் முதலில் முதல்வர் ஆக வெற்றி பெற்றபோது, ஜனதாக் கட்சிக்கு தமிழக சட்டசபையில் 10- எம் எல் ஏக்கள் கிடைத்தனர். அதேபோல நிச்சயம் 10-15 எம் எல் ஏக்கள் நிச்சயம் கிடைப்பார்கள் .ஏனெனில் மத்திய ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போட்டால் , மத்திய அரசு நம் தொகுதிக்கு ஏதாவது நல்லது செய்து கொடுப்பார்கள் என்ற எண்ணம் தமிழக வாக்காளர்களில் ஒரு ஐந்து சதவீதம் பேருக்கு உண்டு. எனவே இப்போதே தீர்மானம் செய்துகொண்டு செயல்பட்டால் , பாஜக கூட்டணி நிச்சயம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட எதிக்கட்சி கூட்டணியாக தமிழக சட்டசபையில் உருவெடுக்கும்.
3. இப்போது பாஜகவுக்கு இளைஞர்கள் ஆதரவு கூடி இருக்கிறது. ஆனால் அம்மா கட்சியை தோற்கடிக்கும் அளவுக்கு அது அதிகமாக இல்லை. சற்றே மேம்பட்டுள்ளது என்று வேண்டுமானால் கூறலாம். ஜெயலலிதா காலத்திலேயே பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று எந்த தமிழனும் நம்பவில்லை. மேலும் தமிழகத்தில் மொழி சிறுபான்மையினரான இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் , உருது ஆகியவை பேசும் வாக்காளர்களிடையே அதிமுகவுக்கு 90 % ஆதரவு உள்ளது.
4. குரங்கு கூட்டமான மூணாவது அணி என்பது தமிழகத்தில் கடலுக்கு அடியில் புதைந்து விட்டது. ஆனால் அந்த குரங்கு கூட்டத்தின் பல குழுக்களான கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி போன்றவை பாஜகவுக்கு எதிராக அம்மா கட்சிக்கு குடைபிடித்து மறைமுக ஆதரவு கொடுத்து வருவதால், வரும் சட்டசபை தேர்தலில் , இந்த 2014- தேர்தலை விட சுமார் 25-30 லட்சம் வாக்குகளை அதிமுக அள்ளிச்செல்லும்.
5.1972-லே கள்ளுமற்றும்சாராயக்குடிக்கு கலைஞரால் பயிற்சி அளிக்கப்பட தமிழன் டாஸ்மாக் வாசலில் பிணம் போல தொடர்ந்து விழுந்து கிடக்கிறான். தமிழனின் குடியை அழித்த திராவிட இயக்க தலைவர்கள் , அயல் நாடுகளில் தங்கள் ஊழல் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகளை அயல்நாடுகளில் தொழில் அதிபராக்கி விட்டனர். சாதாரண குடிமகன் நெற்றியில் ஏமாளி என்று எழுதி ஒட்டாதது தான் பாக்கி.
6. திராவிட இயக்க மோசடிகளில் இருந்து தமிழனுக்கு விடிவே கிடைக்காதா என்று உண்மையான பழைய ஸ்தாபனக் காங்கிரஸ் தொண்டர்களும், காமராஜ் பக்தர்களும் ஏங்குகிறார்கள். கடவுள் இருந்தால் தமிழகத்தை காக்கட்டும்.
///////திராவிட இயக்க மோசடிகளில் இருந்து தமிழனுக்கு விடிவே கிடைக்காதா என்று உண்மையான பழைய ஸ்தாபனக் காங்கிரஸ் தொண்டர்களும், காமராஜ் பக்தர்களும் ஏங்குகிறார்கள்//////// காமராஜரின் உண்மையான தொண்டர்கள் அன்னை ( sorry ) அன்னியர் சோனியாவின் பின் நின்றால் நிச்சயம் காமராஜரின் கனவுகள் இந்த ஜென்மத்தில் நிறைவேறாது. மேலும் திராவிட இயக்கத்தை அழித்தொழிக்க முடியாது. ஆகவே அவர்கள் பிஜேபி யில் சேர்ந்து பணியாற்றுவதே நல்லது. காமராஜரைப் போன்று குடும்பம் முக்கியம் என்று பாராமல் நாட்டுநலனே முக்கியம் என்று பாடுபடும் மோடி பின்னால் அணி வகுத்து நிற்பதே நல்லது.
சோனியா என்பவர் யார்? King Maker எனப்படும் காமராஜர்தான் இந்திராகாந்தியை பிரதமராக ஆக்கினார். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல காங்கிரஸ் கட்சியை உடைத்து இந்திரா காங்கிரஸ் என்று ஒரு கட்சியை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சியை வளர்த்த மாபெரும் தலைவர்களை சிறையில் அடைத்தார். அந்த Emergency யின் போதுதான் காமராஜர் மனம் தாளாமல் காந்திஜெயந்தி அன்று உயிர் துறந்தார். அவருடைய (மேனாட்டு) மருமகள் தான் இந்த சோனியா என்பதை மறந்து விடாதீர்கள்.
காமராஜரை இந்த கருணாநிதி எந்த அளவிற்கு கேவலபடுத்தினார் என்பதை யாரும் மறக்க முடியாது. அவரது முதுகு தோலை உரித்து போட்டால் பல டமாரங்களை செய்யலாம் என்று காமராஜரை மட்டுமல்லாது அவரது அன்னையையும் கூட “”அவர் கருவாடு விற்பவர்” என்று கேவலபடுத்தியவர். அவரது வாடகை வீட்டை சொந்த வீடு என்று “ஏழை பங்காளர் வாழும் மாளிகையை பாருங்கள்” என்று போஸ்டர் அடித்து ஒட்டியவர்தான் கருணாநிதி. ஆனால் இன்று ஜூலை 15 னை கல்வி நாளாக அறிவித்தேன் என்று பெருமை படுகிறார். இப்படிபட்டவரோடு கூட்டணி வைத்து கொள்ள துடிக்கும் ((சோனியா)) காங்கிரஸ் கட்சியில் காமராஜர் தொண்டர்கள் இருந்தால் அது அவருக்கே செய்யும் பச்சை துரோகமாகும். எனவே அவரது தொண்டர்கள் இனியாவது உணர்ந்து செயல்படுவார்களா?