மீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்

மீண்டும் காலைத் தேநீருடன் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை. பூரி ஜெகன்னாதர் என்றதுமே பல விஷயங்கள் நினைவுக்கு வரும். நல்ல விஷயங்கள். பெருமை அளிக்கும் விஷயங்கள். ஆனால் Juggernaut என்கிற ஆங்கில வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் பொருள் என்ன? ஆங்கில விக்கிபீடியா இப்படி சொல்கிறது: morning_hindutva “ in current English usage, is a literal or metaphorical regarded as mercilessly destructive and unstoppable. This usage originated in the mid-nineteenth century as an allegorical reference to the Hindu Ratha Yatra temple car, which apocryphally was reputed to crush devotees under its wheels” புரிந்திருக்கும்.  இரக்கமற்ற அழிக்கும் சக்திக்கான உருவக சொல்லாம்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்  உருவானதாம். ஹிந்து ரதயாத்திரையின் போது இந்த ரதத்தின் சக்கரங்களில் பக்தர்கள் நசுக்கப்படுவதாக சொல்லப்பட்ட கதைகளின் விளைவாக ஏற்பட்ட பெயராம்.

சுருக்கமாக சொன்னால், காலனிய கட்டுக்கதையின் விளைவாக ஏற்பட்ட ஒரு அவமரியாதை சொல்.  இப்படி பல பெயர்கள் அவமதிக்கும் சொற்களாக ஆங்கில அகராதிக்குள் ஏறியிருக்கின்றன.  அவற்றுள் ஒன்று இது.  கல்கத்தாவில் வாழ்ந்த கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிக்கு புரொட்டஸ்டண்ட் மிஷினரிகள் அனுப்பிய கூட்டு கோரிக்கைகளில் பூரி ஜெகன்னாதரின் ரதயாத்திரை நிறுத்தப்பட்டே ஆக வேண்டும் என்று அவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.  “இந்து விக்கிர வழிபாட்டின் ஆகப்பெரிய சீர்கேடு” என பூரி ஜெகன்னாதர் ஆலயம் விவரிக்கப்பட்டது.  மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மடிகின்றனர். இந்த தேர் திருவிழாவினால் பெரிய தொத்து வியாதிகள் இந்தியா முழுக்க பரவுகின்றன. ஒழுக்கமின்மை ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கின்றனர்.  ரத யாத்திரையின் போதும் அதைத் தொடர்ந்தும் பார்த்தால் பூரி முதல் கட்டாக் வரையான பாதையெங்கும் செத்துப் போன,  சாகக்கிடக்கும் அப்பாவி மக்களின் பிணங்கள்… இத்யாதி இத்யாதி. இது பின்னர்  இங்கிலாந்தின் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் தொடர்ந்தன.missionaries ‘விரைவில் இந்த விக்கிரகங்கள் பூமியை விட்டே ஒழிந்துவிட வேண்டும். உண்மையான தேவனின் ஆட்சி மலர வேண்டும். அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் உதவ வேண்டும்….’ இத்யாதி.இப்படித்தான் உருவானது ‘Juggernaut’ கதை. ஆனால் உண்மை என்ன? 1813 இல் கிழக்கிந்திய கம்பெனியின் டைரக்டர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையை நேரில் பார்த்திருக்கிறார்.  அவர் பெயர் சார்ல்ஸ் புல்லர். கட்டாக்கில் கும்பெனியின் கமிஷனராக இருந்தவர். அவர் ஒரு விரிவான அறிக்கையை எழுதினார். ’நான்  கட்டாக்கிலிருந்து பூரிக்கு பலமுறை சென்றிருக்கிறேன். ரத யாத்திரை காலங்களிலும் சென்றிருக்கிறேன். அப்படி அவலமான மக்கள் குவியல்களை நான் கண்டது இல்லை.  ரத யாத்திரையின் போது முழுக்க ஒரு முறை பூரியில் இருந்திருக்கிறேன். 1,00,000 மக்கள் இந்தியா முழுவதிலும் இருந்து 1600 மைல்கள் வரை பிரயாணம் செய்து வந்திருந்தார்கள். இதில் பலர் மிகவும் வயதானவர்கள். propaganda தம் முதுமை காலத்தில் இந்த புனித நகரத்தில் உயிர் விட வேண்டுமென்று வந்திருந்தவர்கள். இத்தனை பேரில் ரதத்தின் முன்னால் பாய்ந்து உயிரை விட்டவர் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து ஒருவர்தான்…’ இத்யாதி. அன்றைய தேதியில் மிஷினரிகளின் பொய் பிரச்சாரத்தால் ரத யாத்திரை தடை செய்யப்படவில்லை.  பூரி ஜெகன்னாதர் கோவிலின் நிலங்களை அபகரித்து கொண்ட பிரிட்டிஷ் அரசு அதற்கு பதிலாக கொடுத்து வந்த (நில அபகரிப்புக்கு ஈடாகாத) உதவி தொகையை நிறுத்த முடியவில்லை.[தமிழ்நாட்டின் இந்து அறமற்ற துறை என்கிற பெயரில் கோவில் நிலங்களை கொள்ளையடிக்கும் அரசியல்வாதி மாஃபியாக்களின் முன்னோடி பிரிட்டிஷ் காலனியவாதிகள்தான்.] 1857 கூட பூரி ஜெகன்னாதர் மீது கை வைக்காததற்கு காரணமாக இருக்கலாம். இதையெல்லாம் அருண் ஷோரி தனது ‘Missionaries in India’ நூலில் ஆவணங்களுடன் எழுதியிருக்கிறார். ஆனால் உலகத்தின் பொது புத்தியில் அந்த பிரச்சாரத்தை உண்மையாக்க அவர்களுக்கு முடிந்திருக்கிறது. இன்றைக்கும் கூட நம் ஆங்கிலேய எழுத்தர்கள் எந்த விதமான வரலாற்றுணர்வோ பண்பாட்டுணர்வோ எதுவுமின்றி நம் பண்பாட்டின் ஒரு மகோன்னதமான ஆன்மிக கலை சின்னத்தை கேவலப்படுத்தும் பதத்தை தன் ஆங்கில அறிவை காட்டும் பெருமை என நினைத்து பயன்படுத்துவதை காண்கிறோம்.

தமிழ்நாட்டின் கலை விமர்சக பிதாமகர் வெங்கட் சாமிநாதனின் ’கலை உலகில் ஒரு சஞ்சாரம்’ நூலில் இருந்து ஒரு பகுதி:

பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் ப்ரொஃபுல்ல மொஹந்தி என்ற ஒரிய ஓவியரின் கண்காட்சி டெல்லியில் பார்க்கக் கிடைத்தது. எல்லாம் ஒளி வட்டங்கள். ஒளி வட்டங்களுக்குள் சென்றால்  இன்னும் ஒளிவட்டங்கள்…. இப்படி நீண்ட வசனத்தில் கவிதை வேறு யாரும் செய்ததில்லை. mohantiபாரதியாரின் சொற்கோலத்தின் காட்சிப்பதிவு ப்ரொஃபுல்ல மொஹந்தியின் ஓவியங்கள்…. இதற்கு அடுத்து வந்த கண்காட்சி ஒன்றில் இவரது ஓவியங்களைப் பார்த்த இன்னொரு விமர்சகர் ‘உங்களிடம் Paul Klee இன் பாதிப்பு காணப்படுகிறது’ என்றாராம். அது யார் Clay என்று மொஹந்தி கேட்க அவர் க்ளேயை குறித்து விவரமாக சொன்னாராம். ஒரிய கிராமத்தின் சித்திரக்காரராக இருந்து கட்டிடக் கலைஞராகக் கல்வி கற்ற மொஹந்திக்கு ஐரோப்பிய ஓவிய வரலாறு தெரியாது. பால் க்ளே, வாஸ்ஸிலி, காண்டின்ஸ்கி , மோண்ட்ரியான் எல்லாரும் தத்துவார்த்த சிந்தனைகளால்  பாதிக்கப்பட்டவர்கள். கலையின் ஆத்மீகத் தேட்டம் பற்றிப் பேசியவர்கள்…. போகட்டும். பால் க்ளேயின் பாதிப்பு தனது ஓவியங்களில் இருப்பதைச் சுட்டிக்காட்டியதும், மொஹந்தி நடைத்தூரத்தில் இருந்த தனது அறைக்கு அந்த விமர்சகரைச் கூட்டிச் சென்று, அங்கிருந்த பாரம்பரியக் கிராமியக் கலைச்சித்திரங்களை – கிருஷ்ணன், பலராமன், சுபத்ரா- வரிசையாக மூன்று வட்டங்களாக வட்டத்தில் வரையப்பட்ட பெரிய கண்களும் வாய்களுமான ஓவியங்களைக் காட்டினார்.

வெங்கட் சாமிநாதன் தொடர்கிறார்:

ப்ரொஃபுல்ல மொஹந்திக்கும் அந்தக் கலை விமர்சகருக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணையும் “எங்கள் ஜகந்நாதரும் பலராமரும் சுபத்திரையும் ஆயிரம் வருஷத்திற்கும் மேல் பழமையானவர்கள். puri_jagannathபால் க்ளே இவர்களிடமிருந்து ஆதரிஸம் பெற்றிருக்கக் கூடுமா அல்லது நான் பால் க்ளேயிடமிருந்து ஆதரிஸம் பெற்றேனா?” என்ற கேள்வியும் மிகவும் விசேஷமானவை. நமது முந்நூறு வருட காலனிய மனக்கட்டமைப்புக்கு எதிரானது. “ஆமாம் இதெல்லாம் ஒண்ணும் புதிசில்லை. அந்த காலத்திலேயே ராமர் புஷ்பக விமானத்திலே பறக்கலையா” என்ற கேள்வி கேட்கும் மனக்கட்டமைப்பின் மறுபக்கம்தான் காலனீய மனக்கட்டமைப்பும்.

இந்துக்கள் குறிப்பாக இந்துத்துவர்கள் சிந்திக்க வேண்டிய…இல்லை இல்லை…தியானிக்க வேண்டிய வரிகள். பூமியிலிருந்தே ஒழித்துவிட வேண்டுமென காலனிய மிஷினரிகள் தங்கள் குறுகிய மத வைராக்கியத்துடன் வெறுத்த அதே தெய்வம் கலை உலகிலும் வியாபித்து இன்றும் வாழ்கிறது….ஆம். ’ஜீவிக்கிறார்’ என கொக்ககோலா போல சந்தை பிரச்சாரம் செய்யப்படாமலே  இந்த மண்ணின் தெய்வங்கள் உண்மையிலேயே ஜீவிக்கும் தெய்வங்கள்.

இறுதியாக -ஆனால்-முக்கியமாக

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தொழிலாளர்களை காவு கொண்டிருக்கிறது. வருத்தமான செய்தி. மானுட சோகங்களுக்கு பிறகுதான் அதற்கான காரணங்களைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்கிற சமூக விழிப்புணர்வு கொடுமையானது. ஊர்களில் கோவில் கோபுரத்தை விட அதிக உயரத்தில் வீடுகள் கட்ட மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு கோவில் கோபுரங்களை மறைக்கும் உயர உயர அப்பார்ட்மெண்ட்களை கோவில் நகரங்களிலேயே தங்களை பக்த சிரோன்மணிகள் என்று சொல்பவர்களே கட்டுவதை காண முடிகிறது. sanghலாரி பேக்கர் போன்றவர்களின் மாற்று கட்டிட முறைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பது அவசியம். நிச்சயம் மக்கள் அனைவருக்கும் நல்ல அழகிய வீட்டு வசதிகளை மாற்று கட்டிட முறைகள் மூலம் செய்து கொடுக்க முடியும். அதற்கு நாம் தொழிலாளர்களை கட்டிட மேற்பார்வையாளர்களை பொறியியலாளர்களை பயிற்றுவிக்க வேண்டும். நம் பாரம்பரிய வீடுகள் கட்டும் கலைகளை மீட்டெடுக்க வேண்டும். இடிபாடுகளில் சிக்கிய நம் தொழிலாளர்களை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக களமிறங்கியிருக்கிறார்கள் ஸ்வயம் சேவகர்கள். இன்றைய பாரதத்தில் இயற்கையான பேரிடர்களோ அல்லது இத்தகைய மானுட விபத்துகளோ இயல்பாக  உடனடியாக களமிறங்கி மீட்பு பணிகளில் ஈடுபடுகிறவர்கள் ஆர்.எஸ்.எஸ்காரர்கள்தான். விடுதலைக்கு பின்னான ஏறக்குறைய எழுபதாண்டு வரலாற்றில் மிகப் பெரிய சோகங்களிலெல்லாம் ஆறுதல் அளித்து பாரபட்சம் ஏதுமின்றி மானுட உயிர் காப்பாற்றும் பணியை செய்து வந்துள்ள ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களின் இந்த பணி அனுபவங்கள் அதிலிருந்து அவர்கள் பெற்ற அனுபவ படிப்பினைகள் ஆகியவை தேசிய பேரிடர் களையும் அமைப்புகளால் எந்த அளவு ஆராயப்பட்டுள்ளன? பயன்படுத்தப்பட்டுள்ளன? மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் வணக்கங்கள். ரமலான் நோன்பு தொடங்கியிருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.

நாளை தேநீருடன் மீண்டும் சந்திப்போம்.

7 Replies to “மீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்”

  1. ஸ்ரீ அ.நீ. நல்வரவு.

    \\ பூரி ஜெகன்னாதர் என்றதுமே பல விஷயங்கள் நினைவுக்கு வரும். நல்ல விஷயங்கள். பெருமை அளிக்கும் விஷயங்கள். \\

    நினைவுக்கு வந்த பல நல்ல விஷயங்கள் :-

    ஊர் கூடித் தேர் இழுப்பது என்ற சொல்லாடல் எழுத்து பிசகாமல் நிதர்சனத்தில் இருக்கும் திருவிழா.

    பூரியில் பலபத்ரர் (பலராமர்) ஜகன்னாதர் (கண்ணன்) சுபத்ரா (கண்ணன் மற்றும் பலராமரின் தமக்கை) — இந்த தெய்வங்களது ரதங்கள் இழுக்கப்படுவது…… அனைத்து மக்களின் பங்களிப்புடன்……. சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி……. உகப்பு மிக தங்கள் வீட்டுத் திருவிழா போல நடத்தப்படுகிறது என்றால் மிகையாகாது.

    மோதி சர்க்காரின் உபயம் போலும். காலை கிட்டத்தட்ட 10 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணிவரை DD பாரதியில் தொடர்ந்து ஒளிபரப்பு. ஹிந்தி, ஆங்க்லம், சம்ஸ்க்ருதம் என்று மூன்று பாஷைகளில் மாறி மாறி ஒவ்வொரு சடங்கு சம்ப்ரதாயங்களையும் அழகாக பல சான்றோர்கள் அருமையாக விளக்கினார்கள்.

    ஜகத்திற்கே நாதனான கண்ணன் பூரியில் குடி கொண்டுள்ளதால் அங்குள்ள பூரி மஹாராஜாக்கள் தம்மை ஜகன்னாத ப்ரபுவின் சேவகர்களாகவே 1000 வருஷ காலங்களாக கருதி வந்திருக்கின்றனர். கடவுள் முன் குடிகள் அனைவரும் சமம்; அனைவரும் தெய்வ கைங்கர்யத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற படிக்கு ராஜா ஒவ்வொரு ரதத்திலும் சென்று பரிமள நீர் தெளித்து தங்கப் பூண் போட்ட துடைப்பத்தால் ரதங்களை (குறியீடாக) சுத்தீகரணம் செய்கிறார். இது முடிந்த பின்னர் தாத்காலிகமாக நிறுவப்பட்ட படிக்கட்டுகள் விலக்கப்பட்டு ஒவ்வொரு ரதத்திலும் வெவ்வேறு நிறங்களாலான வெவ்வேறு பெயர்களை உடைய குதிரைகள் (மரச்சிற்பங்கள்) கட்டப்படுகின்றன.

    முதலில் பலபத்ரரின் ரதம் முன்னே செல்கிறது. அதன் பின் சுபத்ரையின் ரதம் செல்கிறது. கடைசியாக ஜகன்னாதப்ரபுவின் ரதம் செல்கிறது. இந்த ரதங்கள் அனைத்தும் குண்டீசா மந்திர் என்று சொல்லப்படும் கோவிலை அடைகின்றன. அங்கு மூன்று தெய்வங்களும் ஏழு நாட்கள் தங்கி தர்சனம் கொடுக்கின்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் ரதம் ஏறி பூரி கோவிலுக்கு சிங்கத்வார் எனப்படும் ப்ரதான வாயில் வழியாக பூரி கோவிலினுள் செல்கின்றனர்.

    கட்டுக்கடங்காத பக்தி பரவசத்துடன் ஆடல் பாடல் மேள தாளங்களுடன் ஹிந்துஸ்தான முழுதிலிருந்தும் மற்றும் பலப்பல வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வெள்ளம். அனைவருக்கும் ரதத்தின் தாம்புக் கயிறைத் தொட்டு ரதத்தை தாங்களும் இழுக்க வேண்டும் என ஆவல். (அதன் மூலம் ஜகன்னாதப்ரபுவின் ஸ்பர்ச சம்பந்தம் கிட்டுமே என்ற பரவசம்!!!!) இப்படி பக்தியுடன் தேச முழுதும் இருந்து பக்தர்கள் வருவதால் உள்ளூர் வாசிகள் அந்த பக்தியை மதித்து பெரும்பாலும் குண்டீசா மந்திருக்கு சென்று அங்கு ப்ரபுவின் வருகைக்கு காத்திருப்பதாக வர்ணனை செய்த சான்றோர் ஒருவர் கருத்துப் பகிர்ந்தார்.

    உக்ரவாதிகள் தொந்தரவு இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு இருந்த படியால் Rapid Action Force என்ற துணைராணுவப்படையும் உள்ளூர் போலீஸும் முழுமையான பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். 40 டிகிரி செல்ஸியஸ் தாபமானம். சமுத்ரக்கரை. நல்ல வெக்கை. ஆனால் பக்தர்களின் சௌகர்யத்தில் அக்கரை உள்ள சர்க்கார் ஆங்காங்கு தண்ணீர் வண்டிகளை நிறுத்தி அதில் உள்ள பீச்சுக்குழாய்களின் மூலம் நாலா பக்கமும் பக்தர்களின் மீது நீரை தொடர்ந்து பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தனர்.

    வெக்கை தாங்காமல் சில பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். உடனுக்குடன்…… உள்ளூர் போலீஸாருடன் சீருடையில் இருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர்கள்…… ஸ்ட்ரெச்சரில் மயக்கம் அடைந்த பக்தர்களை எடுத்துச்சென்று அருகாமையில் உள்ள முதலுதவி மையத்தில் சேர்ப்பித்தனர்.

    மிக அருமையான ஏற்பாடுகள்.

    உத்தரபாரதம் முழுதும் …………… அஹ்மதாபாத், தில்லி, கொல்கத்தா, வாராணசி (காசி) போன்ற பெருநகரங்களில் ஜகன்னாதர் ரத யாத்ரை நேற்று நடைபெற்றது. மதசார்பின்மை பாவ்லாக்கள் இல்லாமல் மமதா பேனர்ஜி அவர்கள் வழிபாடு நிகழ்த்தினார்கள்.

    ஸ்ரீ அ.நீ பகிர்ந்த ……விஷமத் தனமான மிஷ நரிக்கருத்தான ……….தேர்க்காலில் பக்தர் விழும் சம்பவம்…… வர்ணனையாளர் ஒருவராலும் போகிற போக்கில் பகிரப்பட்டது……….. ஒரு பொய்யை தொடர்ந்து உரத்துக்கூறினால் …………… அது நல்லோர் மனதிலும் கூட பதிந்து……… உண்மை என்ற ஸ்தான கௌரவத்தை அடைந்து விட முடியும் போல.

    இது வரை மனதிலிருந்து பலபத்ரர், ஜகன்னாதர், சுபத்ரை விலகவேயில்லை.

    ஜெய் ஜகன்னாத்.

  2. நெடுநாளைக்குப்பிறகு ஸ்ரீ அநீ ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். மிசநரிகள் ஜீவனுள்ள தெய்வம் என்று எப்போதோ செத்துப்போனவரை அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை நம்பவைப்பதற்காக சொல்கிறார்கள். கல்லிலும் மண்ணிலும் சமைக்கப்பட்ட தெய்வ உருவங்கள் ஜீவனற்றவை என்பதாகத்தெரிகிறது அவர்கள் வாதம். இந்த நரிகளின் ஜீவிக்கிறார் ஜீவிக்கிறார் என்று காட்டுக்கூச்சல் போட்டாலும் பெரும்பாலான ஹிந்துக்களுக்கு விக்ரஹாராதனையில் சந்தேகம் வந்ததில்லை. காரணம் நமது வழிபாட்டுமுறை மட்டுமல்ல சமயம் ஆன்மிகம் பண்பாடு யாவுமே உயிரோட்டமுள்ளவை.

  3. மிக அருமையான சிந்தனை. காலணியாக்கமும், எப்பாடுபட்டாவது இந்தியாவின் பன்பாடை அழித்துவிடத்துடித்த ஆங்கிலேய அதிகாரிகளும் எப்படியெல்லாம் நம்மை இழிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், இன்றும் அதையே பெருமையாக பயன்படுத்தித் திரியும் நம்மை என்ன சொல்வது?

    தொடர்ந்து வரப்போகும் கட்டுரைகளுக்கு என் நன்றிகள்.

    ஜெயக்குமார்

  4. நான் தமிழ் இந்து வலைதளத்தில் ஈராக்கில் நடக்கும் கொடுமைகள் மற்றும் பிற இஸ்லாமியர்களை அதிகம் உள்ள நாடுகளில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி என்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தேன். அதற்கு சகோதரத்துவத்திற்கு பதிப்பும் நிலவுவதாக மத துவேச கருத்துக்களை எழுதுவதாகவும் ஒரு நண்பர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கீழே அதனை கொடுத்துள்ளேன்!! இதில் எங்கே மத துவேசம் உள்ளது என்று கூறவும்!!

    சி.மு.நாட்ராயன்:
    “இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களை அமெரிக்க தடை செய்வது சரியானதே! அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களையும் இமாம் களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இரட்டை கோபுரம் தகர்ப்பட்டது போன்று நிகழ்வு மீண்டும் நிகழாலாம்! அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகில் உள்ள வேறுநாடுகளிலும் நடக்கலாம். இஸ்லாமியர்கள் தொழுகை என்ற பெயரில் நடத்தும் சதித்திட்டத்தை கண்காணிப்பதுடன் அதனை தடை செய்ய வேண்டும்!”

    hajanziamdueen Down Voted

    from SHARJAH

    சி.மு. நாட்ராயன் என்கிற இந்த நபர் மதத்துவேஷ கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகிறார். இதன் மூலம் சகோதரத்துவம் நிலவும் நிலையில் குழப்பத்தை உண்டு செய்யும் இவரின் கருத்துக்களை ஆராய்ந்து வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
    about 9 hours ago · (0) · (0) · reply (0)

  5. terrorist எனபதற்கு சரியான பதம் உக்கிரவாதிகள் அல்ல.காடையர்கள் என்பதே .தாங்களும் இந்த சொல்லை பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
    உக்கிரககாடையர்கள் என்றும் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *