பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ்-இன் (BRICS) ஆறாவது மாநாடு பிரேசிலில் ஃபோர்ட்டாலிசாவில் ஜூலை 15-இல் துவங்கி ஜூலை 17-இல் முடிவுற்றது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிரான வளரும் நாடுகளின் குரல் ஓங்கி ஒலித்தது. குறிப்பாக, பாரதப் பிரதமர் மோடியின் உரை, பிரிக்ஸ் மாநாட்டில் தனிச்சிறப்பாக ஒலித்தது.
இம்மாநாட்டில், ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற பாரதப் பண்பாட்டின் அடிநாதத்தை வெளிப்படுத்தி உலகத் தலைவர்களைக் கவர்ந்துள்ளார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
ஜூலை 16-இல் பிரேசிலியா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் மோடி ஆற்றிய உரையின் சுருக்கம் இது…
.
***
.
மதிப்பிற்குரிய பிரிக்ஸ் மாநாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களே, மரியாதைக்குரிய பிரதிநிதிகளே, பெண்களே, கனவான்களே!
பிரேசிலில் இருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அளித்த விருந்தோம்பலுக்காக பிரேசிலின் குடியரசு தலைவர் ரூசெப், பிரேசில் அரசு, மக்களுக்கு என் நன்றி.
இது என்னுடைய முதல் பிரிக்ஸ் மாநாடு. உண்மையாகவே இது ஒரு செறிவூட்டும் அனுபவம். இங்கு கூடியிருக்கும் உலகத் தலைவர்களின் உள்நோக்குப் பார்வையிலும் தொலைநோக்குச் சிந்தனைகளிலும் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். இங்கிருக்கும் ஒவ்வொரு தலைவருடனும் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றதில் பெருமையடைகிறேன் வரும் நாட்களில் இந்த உறவு மேலும் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.
.
வரலாற்றுத் தருணம்:
வரலாற்றின் முக்கிய தருணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. பொருளாதாரத்திலும் அரசியலிலும் பெரும் குழப்பத்தை உலகம் தற்போது சந்தித்து வருகிறது. உலகின் பல முக்கிய பகுதிகளில் சச்சரவுகளும் நிலையற்ற தன்மையும் அதிகரித்துள்ளன. இவை வறுமையைச் சமாளிப்பதில் உள்ள சவால்களை அதிகப்படுத்துகின்றன. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் நிலையான வளர்ச்சி மாதிரியையும் உருவாக்கவும் இந்நிலை சவாலாக உள்ளது.
அமைதி மற்றும் நிலையான சூழ்நிலையை மீண்டும் கொண்டுவருவதே உலகின் அவசரத் தேவையாகும். இதற்காக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய வழிமுறைகளை நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த அவசிய தேவையைப் ‘பிரிக்ஸ்’ அமைப்பால் பூர்த்தி செய்ய முடியும. நான் இவ்வாறு நம்புவதற்கு காரணம் சர்வதேச அமைப்புகளில் பிரிக்ஸ்-க்கு உள்ள தனித்தன்மையே.
ஏனென்றால் மற்ற அமைப்புகள் (உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்றவை), வளர்ச்சி அடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகவே உள்ளன. ஆனால், பிரிக்ஸ் ‘வருங்காலத் திறன்’ என்ற அளவுகோலைக் கொண்டே நாடுகளை ஒன்றுசேர்த்துள்ளது. பிரிக்ஸ்-இன் அடிப்படை நோக்கம் முன்னோக்கிப் பார்ப்பதே. அதனால், ஏற்கனவே உள்ள சர்வதேச அமைப்புகளில் பிரிக்ஸ் புதிய கண்ணோட்டத்தையும் வழிமுறைகளையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.
அதனால் நம்மிடையிலான உறவும், பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சியும் இந்த அடிப்படை நோக்கத்தைத் தக்கவைப்பதாக இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். அமைதியான, சீரான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதில் பிரிக்ஸ்-இன் குரல் தெளிவாக இருக்க வேண்டும்.
.
உறவை வலுப்படுத்துவோம்!
பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்ற உலகத்தின் முக்கிய சவால்களை எதிர்கொள்ள நமது ஒத்துழைப்பை இன்னமும் பலப்படுத்த வேண்டும். வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உலகக் கருத்தை வடிவமைப்பதில் பிரிக்ஸ் முன்னோடிப் பங்கு வகிக்க வேண்டும். 2015-க்குப் பிறகான வளர்ச்சி செயல்திட்டத்தின் முக்கிய அம்சமாக வறுமை ஒழிப்பு இடம்பெறுவதும் இதில் அடங்கும்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு, சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற உலக அமைப்புகளின் நிர்வாக முறையில் சீர்திருத்தங்களை நாம் உடனடியாக வலியுறுத்த வேண்டும்.
உலக வர்த்தக அமைப்பின் ஆட்சி முறையை வடிவமைப்பதில் நாம் உதவ வேண்டும். வலுவான, சீரான மற்றும் நிலையான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிப்படையான வர்த்தக வளர்ச்சி முறை அவசியம். இது, வளர்ச்சி குறித்த வளரும் நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும்.
உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் செல்வாக்கை பிரிக்ஸ் அடைந்துவிட்டது. நமது நலன்கள் சிறக்க நமது உறவை மேலும் பலப்படுத்த வேண்டும். இந்த வலுவான மன்றத்தை விரிவுபடுத்துவது அவசியம். இந்த மாநாட்டைத் தாண்டியும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயங்க வேண்டும். நமது மாநிலங்கள், நகரங்கள், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையிலான, அடுத்த நிலையிலான பரிமாற்றங்களிலும் நாம் முதன்மையாக விளங்க வேண்டும்.
பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் தொடர்பை மையமாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும். புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கோடு பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மன்றத்தை நிறுவுதல் ஒரு நல்ல முயற்சியாக அமையும். பிரிக்ஸ் மொழிப் பள்ளிகள் ஆரம்பித்தல், மற்றொரு முயற்சியாக அமையும். அதில் நம் அனைவரின் மொழிகளும் கற்பிக்கப்படலாம்.
அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க பெரிய அளவிலான திறந்தநிலை இணையப் படிப்புகளை ஆரம்பிப்பது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும். பிரிக்ஸ் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம், நம் நாட்டில் உள்ள கல்வி வளாகங்களை இணையம் மூலமாகவும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மூலமாகவும் இணைக்க உதவும்.
.
இணைந்து உழைப்போம்!
மரியாதைக்குரியவர்களே, நம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்பதன்மூலம் நாம் ஒவ்வொருவரும் வெற்றிபெற முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய அறிவுத் திறன்கள், ஆதார வளங்களில் பெற்றுள்ள பலத்தை அறிந்து போற்ற வேண்டும்.
நமது அனுபவங்கள், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதன்மூலம் எண்ணற்ற வழிகளைக் கண்டுபிடிக்கலாம். அவையாவன:
• மலிவானதும் நம்பகமானதுமான எரிசக்தி தொழில்நுட்பங்களில் நமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.
• செயற்கைக்கோள், தகவல் தொழில்நுட்பம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்களைக் கொண்டு தரமான கல்வி, சுகாதாரத்தை எளிதில் கிடைக்கச் செய்தல்.
• பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே சுற்றுலாத் துறை மேம்பாட்டின் வளர்ச்சியை வடிவமைத்தல்.
• பேரழிவு மேலாண்மையில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.
• விளையாட்டுகளில் ஒத்துழைப்பும் போட்டிகளும்.
உலக உறவுகளில் பொருளாதார சக்திகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. வர்த்தகம், சுற்றுலாத் துறை, தொழில்நுட்பம், பாரம்பரியம், திறமை போன்ற களங்களுக்கு ஏற்கனவே உள்ள கோட்பாடுகளை மாற்றியமைக்கும் சக்தி உண்டு.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம். இவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பிரிக்ஸ் உருவாக்க வேண்டும். அது நம் அனைவருக்கும் நன்மை செய்யும்.
.
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி:
இரண்டு ஆண்டுகளுக்கு முன் (2012) தில்லி பிரிக்ஸ் மாநாட்டில் கருவாக உருவான புதிய வளர்ச்சி வங்கி என்ற கனவு, இன்று போர்டலீசாவில் நனவாகியுள்ளது. இந்த ‘பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி’, பிரிக்ஸ் நாடுகளுக்குப் பயன்தருவதுடன், பிற வளரும் நாடுகளுக்கும் ஆதரவாக இருக்கும்.
பிரிக்ஸின் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கும் ஏற்பாடானது பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாக்க புதுக் கருவியாக உள்ளது. உலக நிதிச் சந்தைகளில் நிலையற்ற தன்மை அதிகரித்துள்ள வேளையில் இது ஒரு முக்கிய முயற்சியாகும்.
ஏற்றுமதி, கடன் உறுதி முகமைகள் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக வங்கிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவை வேறு சில முக்கியமான நடவடிக்கைகள். இவை பிரிக்ஸ் நாடுகளுக்கு மத்தியிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.
நாம் இன்னமும் லட்சிய நோக்கோடு இருக்க வேண்டும் என்ற நிலையை நாம் அடைந்துவிட்டோம் என்று நான் நம்புகிறேன். உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது.
‘வசுதைவ குடும்பகம்’ அதாவது “உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்” என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன்.
வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த பிரேசில் அதிபர் தில்மா ரூசெப்புக்கும், இந்நாட்டு மக்களுக்கும் மீண்டும் நன்றி.
இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றி உள்ளார்.
நம் பாரத பிரதமர் ஸ்ரீமோடிஜியின் உரையை மிக அற்புதமாக மொழிபெயர்த்து பதிவேற்றியுள்ளார் சேக்கிழான்.
பாரதக்குடியரசின் பிரதமராக வகிக்கும் பாக்யத்தை ஒவ்வொரு பாரதீயனுக்கும் அளித்த மக்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
மிகவும் பெருமைப்படுகிறேன்.
சுவாமிஜியின் சிகாகோ உரை நினைவுக்கு வருகிறது.
வருங்காலத் திறன் என்பதை அடிப்படையாக கொண்டு செயல் படும் அமைப்பு.
நம் தேசத்தின் பிரதமர் இத்தகு உரையாற்றி இருப்பதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது .
உலக வரலாற்றில் பேசக்குடிய மனிதர் இவர்.
Please read the below one
https://www.firstpost.com/world/modis-body-language-wrong-brics-summit-1624101.html
Why PM Modi’s body language was all wrong at BRICS summit
By Khyati Bhatt
It was somewhat disconcerting to watch Prime Minister Narendra Modi’s lacklustre performance in the first speech he gave to an international audience during the recent BRICS summit. While one can understand his nervousness on the occasion, but his apparent discomfort and lack of preparedness in making a speech in English showed that he was not the confident politician we saw during the election campaign. It was not the content of this speech, but his non-verbal behaviours that amounted to give his audience an exit ticket. Here are some of the more glaring ones.
Lack of eye contact: It is a must for any speaker to look into the audience’s eyes to connect with them. Normal eye contact would include looking at any one person in the audience for at least two or three seconds before moving on to another person. A good speaker normally looks around the seated audience, halting every few seconds to make eye contact with any one specific person, and then again moves his eyes around. Modi was so busy reading from his written speech that he barely glanced up for a few milliseconds, spending no time on eye contact whatsoever. This behaviour can get irritating and disengaging for the audience, for they could conclude that the speaker is not actually talking to them. If you must look at your notes, pause, refer to them, look up again and then continue.
Shifting feet: Throughout his speech, Modi shifted from one foot to the other, swinging like a pendulum, making it difficult to watch him with a steady gaze. This behaviour suggests his nervousness and perhaps a desire to be elsewhere. A good strategy for avoiding this shifty tendency is to stand with feet slightly apart. Better still would be to shift your position or stepping slightly forward and backward, after every point is completed.
PM Modi during his speech at the BRICS conference. AFP
PM Modi during his speech at the BRICS conference. AFP
Self touching gestures: Any self touching gestures, like clutching your arms, or touching your face, signify nervousness and apprehension. As Desmond Morris puts it in People Watching, “Self -intimacies are movements that provide comfort because they are unconsciously mimed acts of being touched by someone else.” They are a pseudo replacement for the need to be comforted. In some pictures, Modi can be seen massaging the fingers of one hand with the other, barely one minute into the speech.
Clutching the podium: Clutching the two ends of the podium is an easy way to release tension. But this locks the hands which can otherwise be used to highlight the points that one makes. Anyone who has watched Modi in other speeches back home would know that he is a master at using his hands for effective emphasis and illustration. The larger the audience, the more emphatic would be his hand movements to ensure that the people sitting on the last seats don’t miss his energy. One is only left guessing as to what happened to those hand movements during this particular speech in Brasilia.
Lack of correct expressions: If you turn off the volume, you cannot make out whether Modi is reading out a grocery list or proposing solutions that can take the BRICS nations forward to build a better tomorrow. A good speaker shows the ebbs and tides of emotional variations as his speech proceeds. Forget to show the expected level of enthusiasm and accompanying expressions and you will invite enable the audience to switch off their auditory receptors.
When the camera at the BRICS summit moved around the audience, you could see that the audience was not very impressed. At best, there were a few polite smiles being handed out to Modi. In circumstances like these, serious proposals, like the ones Modi was making, can be lost. It is therefore imperative for any good speaker to be aware of his non-verbal behaviour when he is on the stage. While it would certainly be challenging to focus on your behaviour as well as the content of your speech simultaneously, some practice beforehand can make the difference.
The BRICS summit clearly shows that Modi needs to do some homework on his speeches when he is on foreign soil and speaks English. His normal energy, which makes his Indian audiences hang on to his every word, was missing in Brasilia.
ஐயா திரு நாகராஜன் அவர்களே,
இந்த தளத்தில் முடிந்தவரை தமிழில் எழுதுக. மேலும் இந்தியன் எக்ஸ்பிரெஸ் போன்ற பத்திரிகை செய்தி அல்லது கட்டுரையை அப்படியே பேஸ்ட் செய்யாமல் சிறிது சுருக்கமாக எழுதினால் தங்களுக்கு மிக்க நன்றி உடையவர்களாக இருப்போம். தங்கள் மறுமொழிக்கு நன்றிகளுடன்.,
பிரிக்ஸ் மகாநாட்டில் மோதியின் உரை பெரும்பான்மையோரைக் கவரவில்லை என்பதுதான் FIRSTPOST கட்டுரையின் சாராம்சம். மோதியின் ஆங்கில உரை வாசிப்பு, மோதியின் உடல் மொழி ஆகியவை நன்றாகவே இல்லை. இம்மாதிரி மாநாடுகளில், பேசுபவர் பார்வையாளர்களின் / மேடையில் இருப்பவர்களின் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும் . இதனை மோதி செய்யவில்லை. தன்னுடைய உரையில், கூற வேண்டியவற்றை உணர்ச்சி இல்லாமலேயே கூறினார்.
கேமரா பார்வையாளர்களைக் காட்டிய போது , அவர்களது கவனம் மோதியின் பேச்சில் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
இம்மாதிரி வெளி நாட்டில், அதுவும் ஆங்கிலத்தில் பேசுவதற்கு தகுந்த ஆயத்தம் செய்து கொண்டு வர வேண்டும். தன்னுடைய பேச்சில் எப்போதும் இருக்கும் ஒரு ஈர்ப்பு , மோதியின் BRICS பேச்சில் இல்லை என்பதுதான் FIRSTPOST கட்டுரை கூறியிருக்கிறது.
மோடியின் பேச்சு ராஜீவ் காந்தி மாதிரி இல்லை.
ராஜீவ் காந்தி லண்டனில் படித்தவர், பைலட்ஆக பணி புரிந்தவர்.
அரசியலுக்கு வந்த சிலநாட்களிலேயே அருமையாக பேசுவார். அவருடைய ஆணித்தரமான பேச்சும், ரோஸ் நிறமும், நேரடியாக கண்களை பார்த்துப் பேசும் தரமும் அவரை உலகத் தலைவராகக் காட்டின. விபி சிங் பிரதமராக இருந்து கொண்டு ஒரு மாநாட்டில் பேசினார். அது தென்னாப்பிரிக்காவில் நடந்தது என நினைக்கிறேன். அப்போது ராஜீவ் பேசியது எல்லோருக்கும் பிடித்திருந்தது. விபிசிங் பேசியதை விட அதிக நேரம், அதிக முறை பேசி உலகத் தலைவர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார் ராஜீவ் காந்தி. ஆனால் மோடியோ வெளிநாட்டு தலைவர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் பேச மறந்துவிட்டார்.
ராஜீவ் காந்திக்கு நன்றாகப் பேசத் தெரியுமே தவிர அவரால் ஒரு காஷ்மீர பிரச்சினையையோ, இலங்கைப் பிரச்சினையையோ, காலிஸ்தான் பிரச்சினையையோ அவ்வளவு ஏன், ஒரு உணவு விடுதியில் பரிமாறும் பெண்ணையோ கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. நன்றாகப் பேசக்கூடிய ஒரு வெண்ணையாகத்தான் அவர் இருந்தார்.
ஆக மோடிபோல் தலைவர்கள் எவ்வளவோ மேல். ஜப்பானியப் பிரதமர் பேசுவது கூட பிற நாட்டுத் தலைவர்களுக்கு புரியாது, இனிக்காது. அதனால் ஜப்பானியப் பிரதமர் தகுதி குறைந்தவராக மாட்டார்.
சொல்ல வரும் கருத்து என்ன என்பதுதான் முக்கியம்.கண்டிப்பாக உலகம் வேறு பாதையில் திரும்பும்.