ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4

ஹெச்.எஃப்-24 விமானத்தின் வடிவமைப்பு சிறந்து விளங்கியபோதிலும், பிரிஸ்டல் சிட்டலி ஆர்பியஸ் தயாரித்து வழங்கிய அதன் இரட்டை எஞ்சின்கள் வலிமையற்றவையாக இருந்ததால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இப்பொழுது அந்த விமானங்கள் பாரதத்தின் பல விமானதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை ஒரு வெட்கக்கேடு என்று உணர்வதால், விமானப்படைத் தலைமையகமும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனமும் பாராமுகமாகவே இருக்கின்றன

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4

வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.

View More வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!

பிரேசிலில் நடந்து முடிந்துள்ள ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சர்வதேச அரசியலில் பெரும்…

View More பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!

உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம்… உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது “உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்” என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்….

View More உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை

அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

வரலாற்று சம்பவங்கள் என்பவை என்றுமே முடிந்து போன ஒன்று கிடையாது, அது மீண்டும் மீண்டும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் படுகொலைகள். இந்த படுகொலைகளுக்கு பின்னால் யார் இருப்பார்கள் அவர்கள் நோக்கம் என்ன என்பது ஒரு அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட யூகிக்கமுடியும். இதே பிரச்சனைகள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் ஏற்பட்டது. அணுசக்தியில் ஈரான் தற்பொழுது இருக்கும் நிலையில் தான் 1960 ஆம் ஆண்டு இந்தியாவும் இருந்தது. இது போன்ற மரணங்கள் / படுகொலைகள் அப்பொழுது இந்தியாவிலும் நடை பெற்றன

View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1

[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்

“…நாளைய தினம் ரஷ்யாவில் சர்வாதிகாரம் தோல்வியடைந்து அதன் தோல்விக்கான அறிகுறிகளை நான் காணும்போது என்ன நடக்கும்?… ரஷ்ய மக்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக்கொண்டு கொடிய ரத்தக் களறியில் ஈடுபடுவார்கள்…. சொத்துரிமையை ஒழிப்பது என்ற அடிப்படையில் அமைந்த கம்யூனிசத்தைக் கொண்டுவருவதற்கு வன்முறையையும் பகைவர்களைக் கொல்லுவதையும் வழிமுறையாக கடைபிடிக்க கம்யூனிஸ்டுகள் விரும்புகின்றனர்… மனிதர்களை ஒழித்துக்கட்டும் வழிமுறைகளை நீங்கள் கைக்கொள்ளும்போது, உங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் உயிரோடு இருப்பதில்லை… தங்களுடைய தொன்னெடுங்கால மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வரும்வரை அவர்களை ஒருபோதும் உங்கள் மன்னரால் வெற்றிகொள்ள முடியாது… “

View More [பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்

[பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்

“வாரிசு வழி அதிகாரத்தை மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்நாடு அழிந்தே போகும்… கம்யூனிசமும் சுதந்திர ஜனநாயகமும் ஒன்றிணைந்து செயல்படும் என்று கூறப்படுவது அறிவுக்குப் பொருந்தாக் கூற்று… இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை வளர்க்க பிராம்மண இளைஞர்களை நம்பியது ரஷ்யர்கள் செய்த பெரும் தவறு… நான் கம்யூனிசத்தில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை; என் கட்சி எக்காரணத்தைக்கொண்டும் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைக்காது… பௌத்தமதம் மார்க்சுக்கும் அவரது கம்யூனிசத்துக்கும் ஒரு மாபெரும் சவால்…”

View More [பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)

வெளிநாட்டவர்கள் புனித நகரமான ஹரித்வாருக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக ரஷ்யர்கள்… யோகம், ஹாரி பாட்டர் கதைகள் ஆகியவை தீயவை, என்று கத்தோலிக்க சபையின் தலைமை பேயோட்டி தீர்ப்பு … கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்… மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து அங்குள்ள நிலவரம் பற்றியும் மனித உரிமை மீறல்கள் பற்றியும்… அனாதைகள் இல்லத்தில் குழந்தைகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அந்த இல்லத்தின் தலைவி பெண் பாதிரியார்…

View More இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)

கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1

அணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் வரை… மக்களை மதித்துப் பேசாததும், மக்களை தங்கள் நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாததும் அரசுகளின் தவறே. அதை இப்பொழுதும் கூட நிவர்த்தி செய்து விடலாம்….சாலையில் போகும் பாதசாரியை மோட்டார் வாகனங்கள் இடித்துக் கொன்று விடுகின்றன என்பதற்காக சாலையே கூடாது என்பார்களா அல்லது வாகனங்களே இனி ரோட்டில் ஓடக் கூடாது என்பார்களா?…

View More கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1

கூகுள் கொண்ட கோபம்

அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை.

View More கூகுள் கொண்ட கோபம்