பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை நீக்கி புதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி செய்வதாகவும், இது ஜனநாயக விரோதமானது என்றும் காங்கிரஸ் கண்டனக் குரல் எழுப்பி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு இப்போது புதிதாகச் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு அல்ல. இதற்கு முன்பும் இதுபோன்றதொரு நிலைமை இந்திய நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்களை நீக்குவது அரசியல் கட்சி நோக்கத்தில் செய்யப்படுகின்றன என்பது குற்றச்சாட்டு.
1977இல் இந்திரா காந்தியின் ஆட்சி தோல்வி அடைந்து, பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்த பின்னர் இந்திரா காந்தி அரசியல் ஆதாயத்துக்காக நியமித்த பல கவர்னர்கள் நீக்கப்பட்டார்கள். அந்த இடத்திற்கு ஜனதா கட்சி புதிய கவர்னர்களை நியமித்தது. அப்படி தமிழ் நாட்டுக்கு நியமிக்கப்பட்டவர் பிரபுதாஸ் பட்வாரி என்பார். இவர் ஒரு சர்வோதயத் தலைவர். மது அருந்துவதோ, மாமிசம் சாப்பிடுவதோ இவருக்குப் பழக்கம் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் இவர் கவர்னராக இருந்த காலத்தில் இவரது கவர்னர் மாளிகையில் விருந்தினராக வந்து தங்கும் தலைவர்களுக்கும் மேற்படி சங்கதிகள் பரிமாறப் படுவதில்லை.
ஒரு முறை அப்போதைய ஜனதா கட்சியின் அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் சென்னை வந்தபோது அவர் விரும்பிய வகையில் அவர் உபசரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சர்வோதயத்தில் நம்பிக்கையுடைய பட்வாரி தன் கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். காங்கிரஸ் (O) என்று அழைக்கப்பட்ட பழைய காங்கிரசில் இருந்தவர் பட்வாரி; மொரார்ஜி தேசாய்க்கு மிகவும் நெருக்கமானவர்.
1980இல் மீண்டும் இந்திரா காந்தி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த அடுத்த கணம் இவர் ஜனதா அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்களை விலகச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். பிரபுதாஸ் பட்வாரிக்கும் அப்படிப்பட்ட நெருக்கடி தரப்பட்டது. குறைந்தது மூன்று முறையாவது மத்திய அரசு பிரபுதாஸ் பட்வாரியை ராஜிநாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியது. ஆனால் பட்வாரி ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் (இ) அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பட்வாரிக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் புகார் மனுவொன்றை கொடுத்தனர். அதே நேரத்தில் 1981 ஆகஸ்ட் 8இல் ராஜஸ்தான் கவர்னராக இருந்த ரகுகுல திலக் என்பார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரது பதவி நீக்கத்துக்கு அன்றைய இந்திரா அரசு சரியான பதிலோ விளக்கமோ அளிக்கவில்லை.
மேற்கு வங்கத்தின் கவர்னராக இருந்த டி.என்.சிங் 1981 டிசம்பரில் தன்னுடைய பதவிக் காலம் முடிவடையும் முன்பாகவே ராஜிநாமா செய்துவிட்டார். திரு டி.என்.சிங் தானாகவே ராஜிநாமா செய்யவில்லை, மத்திய அரசின் வற்புறுத்தலால் பதவி விலகினார் என்று சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மத்தியில் ஆண்ட இந்திரா அரசின் முடிவுகளை கண்மூடித் தனமாக மே.வங்கத்தில் அமல்படுத்த டி.என்.சிங் ஒத்துழைக்க மாட்டார் என்பது அவர்களின் முடிவு.
இவரும் ஜனதா அரசால் நியமிக்கப்பட்டவர், ஸ்தாபன காங்கிரசில் ஒரு தலைவராக இருந்தவர். இதில் என்ன புதுமையென்றால் பட்வாரி, ரகுகுல திலக் போல டி.என்.சிங் வெளியேற்றப்படவில்லை, மாறாக மே.வங்கத்துக்கு பதிலாக ராஜஸ்தானுக்குப் போகலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது, அதனை ஏற்காத டி.என்.சிங் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வெளியேறி விட்டார்.
ஹெச்.ஆர்.கன்னா என்பவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். இவர் கவர்னர்கள் இப்படி வெளியேற்றப்படுவதை கடுமையாகச் சாடினார். மத்தியில் மாற்று அரசு அமையும் போதெல்லாம் ஆளும் கட்சிக்குச் சார்பாக முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் நீக்கப்படுவதும், தங்களுக்குச் சார்பான புதிய கவர்னர்கள் நியமிக்கப்படுவதும் அரசியல் குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்பது அவரது வாதம். இப்படி அரசியல் சார்பு இல்லாத கவர்னர்கள் பந்தாடப்படுவது நீடித்த அரசியல் ஸ்திரத் தன்மைக்கு ஆபத்தாகப் போகும் என்றார் அவர். கவர்னர் பதவியின் கெளரவமும், அந்தஸ்தும் பாதிக்கப்படும் என்றார் அவர். இன்றைக்கு பேசப்படும் கவர்னர்கள் மாற்றம் அன்றே, அதாவது இந்திரா காந்தியின் ஆட்சி காலத்திலேயே கெடுபிடியாக அமல்படுத்தப்பட்டு தங்கள் சார்புடையவர்களை கவர்னர்களாக நியமிக்கும் பழக்கம் உருவானது. இது வரலாறு.
அரசியல் சட்டப் பிரிவுகள் 200, 356, 239(2), 371 ஆகியவைகளின்படி கவர்னர் எனும் பதவி மத்திய அரசின் பிரதிநிதியாக மாநிலங்களில் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை வலியுறுத்துகின்றன. ஆகவே புதிய ஆட்சி அமைந்ததும், அந்த ஆட்சியின் கொள்கைகள் மாநிலத்திலும் செயல்படுத்தபட வேண்டுமென்பதற்காக, மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர்கள் தங்களுக்கு சாதகமானவர்களாக இருக்க வேண்டுமென்று மத்திய ஆளும் கட்சி நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும். இப்படி கவர்னர்களைப் பந்தாடும் பழக்கத்தை முதன்முதலாகக் நிர்தாட்சண்யமாகக் கொண்டுவந்த இந்திரா காந்தியையோ, அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியையோ குறை சொல்லாமல், இன்று அதே காங்கிரசார் பா.ஜ.க.வை எதிர்த்து குரல் எழுப்புவது ஏன்? கொள்ளு என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றதும் வாயை மூடிக் கொள்வது காங்கிரசாரின் கைவந்த கலை.
காங்கிரஸ் ஆட்சியில் கவர்னர்களுக்கு மட்டுமல்ல , ஐ எ எஸ் அதிகாரிகளுக்கும் ஏகப்பட்ட அவமரியாதையும், அவர்களுக்கு துரோகமும் இழைக்கப்பட்டது.
1. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் ஐ எ எஸ் அதிகாரி அவர்மீது எவ்வித தவறும் இல்லாதபோதும் , அரசியல் காரணங்களுக்காக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு , பின்னர் மீடியாவில் உ பி ஆளுங்கட்சியின் முழு ஊழல்களும், முறைகேடுகளும் வெளியான நிலையில் ஆளுங்கட்சிக்கு பெயர் மேலும் கெட்டுவிடும் என்று பயந்து, அந்த பெண் அதிகாரி பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஐ எ எஸ் அதிகாரிகளின் காவலனாக செயல்படவேண்டிய மத்திய காங்கிரஸ் அரசு நியாயமாக செயல்படாமல் மாமா வேலை பார்த்து, அசிங்கமாக செயல்பட்டு , கேவலத்தில் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது என்பதை நிரூபித்தனர்.
2. இதே போல, சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது விசாரணைகள் செய்த ஒரு ஆண் ஐ எ எஸ் அதிகாரி மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி காங்கிரஸ் ஆண்ட அரியானா அரசு மெமோ கொடுத்து , மிரட்டியது. கெம்கா என்ற அந்த அதிகாரி கடைசியில் பதவியில் இருந்து விலகி விட்டார்..
3. இது போல, இன்னமும் எழுதிக்கொண்டே போகலாம் . பக்கம் போதாது. எனவே தான் முலயாமின் ரவுடிகள் கட்சிக்கும், சோனியாவின் ஊழல் மற்றும் சர்வாதிகார அரசுக்கும் மக்கள் குழிதோண்டி புதைத்தனர். வரும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி உ பியில் சட்டசபை தேர்தலில் புதைகுழிக்கு அனுப்பப்படும்.
4. இனிமேல் தமிழ் இந்துவில் காங்கிரஸ்காரனின் அயோக்கியத்தனங்கள் பற்றி எழுதி வீணடிக்கவேண்டாம். ஏனெனில் இன்று உள்ள இந்திரா குடும்ப கட்சி என்பது ஒரு கேப்மாரிகளின் கட்சி. கொள்ளையர்கள் மற்றும் மானங்கெட்டவர்களின் கட்சி. அந்த கட்சி ஏதாவது நல்லது செய்துள்ளார்களா என்று பூதக்கண்ணாடி வைத்துத்தான் பார்க்கவேண்டும். அப்படி ஏதாவது நல்லது செய்தாலும் கூட , கெட்ட நோக்கங்களுக்காகத் தான் ( with bad intentions ) செய்திருப்பார்கள்.
5. பழைய விவரங்களை திறம்பட தொகுத்து அளித்த திரு தஞ்சை வெ கோபாலன் அவர்களுக்கு நமது பணிவான வணக்கங்கள்.
பிரபுதாஸ் பட்வாரி பேசுவதாக வெளியிடப்பட்டு புகைப்படம் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடந்த நிகழ்ச்சி போலத் தோன்றுகிறது. படத்தில் துணைத்தலைவர் பூஜ்ய ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தர்,ஸ்ரீமத் சுவாமி தன்மயானந்தர் ஆகியோர் உள்ளனர்.
அரசியல் சட்டப் பிரிவுகள் 200, 356, 239(2), 371 ஆகியவைகளின்படி கவர்னர் எனும் பதவி மத்திய அரசின் பிரதிநிதியாக மாநிலங்களில் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை வலியுறுத்துகின்றன. ஆகவே புதிய ஆட்சி அமைந்ததும், அந்த ஆட்சியின் கொள்கைகள் மாநிலத்திலும் செயல்படுத்தபட வேண்டுமென்பதற்காக, மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர்கள் தங்களுக்கு சாதகமானவர்களாக இருக்க வேண்டுமென்று மத்திய ஆளும் கட்சி நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்
மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர்கள் தங்களுக்கு சாதகமானவர்களாக இருக்க வேண்டுமென்று – what do you mean by this?. He should be a stooge to the central govt? This is what the congress did.
Why is the BJP doing the same thing now?
While the President of India is “elected”, Governor is a “selected” by the incumbent Central government. That is why there have been many instances when governors appointed by previous government are removed by incoming government. The reasons are more political.
The Governor reports to the President. Earlier eminent persons were nomincated as Governors. Later the congress party started the practice of nominating politician who have lost elections, thereby lowering the dignity of ther post.
The BJP should have let the current GIvernors run their full term. Let them not commit the same mistake that the congress did.