முகலாயர்களுடைய வரலாற்றைச் சற்றுத் திரும்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்கெல்லாம் புலப்படும். அதாவது ராஜகுடும்பத்தில் அரசபதவி என்றால் உறவுகள் மறக்கப்படும் என்பதுதான் அந்த உண்மை. முந்தைய முகலாயமன்னர்களாலும் சொந்தங்களுடன் போராடித்தான் அரச சிம்மாசனத்தைப் பிடிக்கமுடிந்திருக்கிறது. அங்கு அண்ணன்-தம்பி பாசமோ, அப்பன்-பிள்ளை என்கிற உறவோ குறுக்கே நிற்கமுடியாது. தன் சொந்த மகனாலேயே சிறையிடப்பட்ட ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் சிறையில் இருந்தபடியே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தே 1666 ஜனவரி 22ல் உயிரிழந்தார்.
துரோக வரலாற்றின் அடிச்சுவட்டில் அரசகட்டில் ஏறிய ஒளரங்கசீப்தான் முகலாய மன்னர்களின் கடைசிமாமன்னராக இருந்தார் என்கிறது வரலாறு. துரோகம் எப்போதும் நிலைத்திராது. அதற்குரிய விலையை துரோகிகள் கொடுத்தாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதி.
Author: தஞ்சை வெ.கோபாலன்
பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே… நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி…
View More பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?எப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி
கவி குஞ்சர பாரதி தனது 12ஆம் வயதிலேயே கவிதைகள் இயற்றத் தலைப்பட்டு விட்டார். தமிழில் கீர்த்தனைகளும், பிரபந்தங்களும் கூட இயற்றத் தொடங்கினார். இவர் பாடல்களில் முருகப் பெருமானையே கருப்பொருளாக வைத்து பாடியிருப்பதைக் காணமுடிகிறது… இராமநாதபுரம் சமஸ்தானத்தின் அரசர் சேதுபதி மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவர் “ஸ்கந்தபுராண கீர்த்தனைகள்” எனும் பெயரில் முருகப் பெருமான் மீது பாடல்களை இயற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 55 ஆகியிருந்தது. அதன் பின்னர் இவர் அமைதியாகத் தன் கிராமத்தில் தானுண்டு தன் இசையுண்டு என்று கவிகள் இயற்றிப் பாடிக்கொண்டு வாழ்ந்து வந்தார்…
View More எப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதிஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?
குற்றத்தைத் தடுக்கவோ, குற்றம் செய்தவனை தண்டிக்கவோ, இப்படிப்பட்ட ஆவணங்கள் இரகசியமாக, பிரதியெடுத்தோ, அல்லது திருடியோதான் மக்கள் பார்வைக்கு வரமுடியும். குற்றத்தை விசாரிப்பவர்களுக்கு அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மைதான் முக்கியமானதே தவிர, யார் கொடுத்தது, ஏன் கொடுத்தான், எப்படி எடுத்தான் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது நீதி பரிபாலன செயல்பாடுகளுக்கு எதிரானது. பொது நலத்துக்கும் எதிரானது; ஊழலை ஊக்கப்படுத்துவது போன்றது; ஊழல் வாதிகளைப் பாதுகாக்க விரும்புவது போன்றது…. இந்த நிகழ்வில், நிர்வாகம் தவறு நடந்திருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, தவறு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு திருட்டுத் தனமாக வேலைக்கு ஆர்டர் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தவறுக்கு வெளிச்சம் போட்ட கடைநிலை ஊழியர் ஒருவரை பழிவாங்கத் துடித்தது ஏன்? ஏனென்றால் நிர்வாகத்தின் உயர்ந்த பீடத்தில் இருப்பவர்கள் அறிந்தே இந்த தவறுகள் நடந்தன என்பதுதான்….
View More ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?ஜனநாயக மரபுகளைக் காப்போம்!
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் செயல்பாடுகளில் மக்களை திகைக்க வைத்த செய்தி சோனியா காந்தியின் புதல்வர் ராகுல் காந்தி எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வெளியேறி, அங்கு பத்திரிகையாளர்களிடம் அவையில் ஒரே ஒரு குரல் மட்டும்தான் கேட்கிறது. மற்ற குரல்களுக்கு அங்கு இடமில்லை என்பதுபோல சொல்லியிருப்பதுதான்…. பிரதமர் மோடி தன்னுடைய ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் கண்ணியத்தையும், ஒழுங்கையும், நாட்டு நலனே மற்ற எல்லா நலன்களுக்கும் மேலானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியும் நடந்து காட்டியும் வருகிறார்….
View More ஜனநாயக மரபுகளைக் காப்போம்!புதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி
1977இல் இந்திரா காந்தியின் ஆட்சி தோல்வி அடைந்து, பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்த பின்னர் இந்திரா காந்தி அரசியல் ஆதாயத்துக்காக நியமித்த பல கவர்னர்கள் நீக்கப்பட்டார்கள். அந்த இடத்திற்கு ஜனதா கட்சி புதிய கவர்னர்களை நியமித்தது. அப்படி தமிழ் நாட்டுக்கு நியமிக்கப்பட்டவர் பிரபுதாஸ் பட்வாரி என்பார். இவர் ஒரு சர்வோதயத் தலைவர். மது அருந்துவதோ, மாமிசம் சாப்பிடுவதோ இவருக்குப் பழக்கம் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் இவர் கவர்னராக இருந்த காலத்தில் இவரது கவர்னர் மாளிகையில் விருந்தினராக வந்து தங்கும் தலைவர்களுக்கும் மேற்படி சங்கதிகள் பரிமாறப் படுவதில்லை….
View More புதிய கவர்னர்களை நியமிக்க முயற்சிவிவாத களத்தில் கவர்னர் பதவி
சில மாநில ஆளுநர்கள் மத்திய அரசால் மாற்றப்படலாம்; அந்த இடங்களில் பாஜக மூத்த…
View More விவாத களத்தில் கவர்னர் பதவிமோடி திருமணத்தை மறைத்தாரா?
இதுநாள் வரை நரேந்திர மோடி திருமணமாகாதவர், பிரம்மச்சாரி என்று கருதப்பட்டவர், வதோதரா…
View More மோடி திருமணத்தை மறைத்தாரா?அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்
இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு…. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது….
View More அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்அர்த்தமற்ற புகார்கள்
அடடா! நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும் அறிவித்தார்கள், காங்கிரஸ்காரர்கள் தூக்கம் கெட்டுவிட்டது. உணவு உள் செல்வதில்லை. சதா காலமும், தூக்கத்திலும் கூட மோதி நினைவுதான். கனவிலும் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் பாவம் நரேந்திர மோடி… முன்பெல்லாம் இவர்களை எதிர்த்து நின்றவர்கள் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் நரேந்திர மோதி அதிரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தினம் ஒரு கூட்டம், ஒவ்வொரு மாநிலத்தில் நடத்துவதும், அதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து கேட்டு அவருக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும் இவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது. அதன் எதிரொலிதான் காங்கிரஸ் தலைவர்களின் ஓலம், ஐயய்யோ மோடி எங்களை அப்படிச் சொல்லிவிட்டார், இப்படிச் சொல்லிவிட்டார் என்று புகார்க்காண்டம் படிக்கத் தொடங்கியிருப்பது….
View More அர்த்தமற்ற புகார்கள்