குரு உத்ஸவ்

சமகால வரலாற்றின் ஒரு புதிய தொடக்கமாக, செப்டம்பர் 5 குரு உத்ஸவ் நாளன்று நமது பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக தேசத்தின் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பிரத்யேகமாக உரையாற்றுகிறார். அதை, விரும்பினால் மாணவர்கள் பள்ளியிலேயே பார்க்கும் வகையில் வசதியும் செய்யப் பட்டிருக்கிறது. எவ்வளவு அற்புதமான விஷயம் ! நீண்ட காலத்திற்குப் பிறகு, மாணவர்களும் இளைஞர்களும் விரும்பிக் கேட்கும் வகையில் பேசக் கூடிய ஒரு பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார்.. தனது சொற்களாலும் செயல்களாலும் உழைப்பாலும் சிந்தனைகளாலும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தகுதி பெற்ற ஒரு பிரதமர். முதல்வராக ஆன காலத்திலிருந்து தொடர்ந்து பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுடன் உரையாடி வரும் ஒரு பிரதமர். புல்லாங்குழல் ஊதிக் காண்பித்து கிருஷ்ணன் கதை சொல்லி ஜப்பானியப் பள்ளிக் குழந்தைகளின் மனம் கவரத் தெரிந்த ஒரு பிரதமர் ! கொண்டாட வேண்டிய ஒரு விஷயம்.

Gunotsav-Narendra-Modi

குரு உத்ஸவ் – பெயரே மிக அழகாக இருக்கிறது. இது கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பே தவிர “ஆசிரியர் தினம்” என்ற உப்புச் சப்பற்ற பெயரை மாற்றவில்லை என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறிவிட்டார். அட, அப்படியே மாற்றியிருந்தால் தான் என்ன? இன்னுமே சந்தோஷமாக இருந்திருக்கும். இந்த சாதாரண விஷயத்தை வைத்துக் கொண்டு தேசிய, பிராந்திய ஊடகங்கள் மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்துவதைப் பார்த்து பெரும் அயற்சி ஏற்படுகிறது.

‘குரு’ என்ற சொல் ஆன்மீக, சமய ரீதியான பயன்பாட்டைத் தாண்டி எப்போதோ உலகளாவிய ஒரு சொல்லாகி விட்டது.. சங்கீத குரு, கிரிக்கெட் குரு, Guru Hacker, C++ Guru, Management Guru, Marketing Guru எல்லாம் சர்வசாதாரணமாக பயன்பாட்டில் உள்ளது.. (உண்மையில், எல்லா அறிவுத் துறைகளும், கலைகளும், திறன்களும் தெய்வீகமானவையே என்ற இந்து சிந்தனையின் நீட்சி தான் இது) அதே போல, உத்ஸவ் என்பதும் மதரீதியான சொல் அல்ல. கொண்டாட்டம் என்பதற்கான இந்தியப் பண்பாட்டுச் சொல் அது. எல்லாவித கொண்டாட்டங்களையும் குறிக்கும்.. காதி உத்ஸவ், க்ருஷி உத்ஸவ், ஃபிலிமோத்ஸவ், பாரத் உத்ஸவ் எல்லாம் காலங்காலமாக இந்திய அரசு நடத்தி வரும் விழாக்கள்.. எனவே ‘குரு உத்ஸவ்’ என்பது மதரீதியானது என்று கூறுவது முகாந்திரமில்லாதது.

இனிமேல் ஒவ்வொரு வாரமும், மாதமும் இந்திய அரசின் எல்லா அறிவிப்புகளூக்கும் திட்டங்களுக்கும் சுத்தமான சம்ஸ்கிருதப் பெயர்கள் தான் இருக்கப் போகின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் வேலைவெட்டி இல்லாத சில மொழித் தீவிரவாத மண்டூகங்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது. அது ஒவ்வொன்றையும் இவர்கள் எதிர்த்தாகவும் வேண்டும்.. அப்போது அதற்கு ஈடாக ஒரு தமிழ்ச் சொல்லைத் தேடிப் பிடித்துப் போட்டு அந்தச் சொல்லின் சம்ஸ்கிருத இணைப்பு சுட்டிக் காட்டப் படுவதையும் அசடு வழிந்து கொண்டு இஞ்சி தின்ற குரங்காக சமாளித்தாக வேண்டும்.. அல்லது உடனடியாக அது தமிழ்ச்சொல்தான் என்பதற்கு ஒரு கிராக்பாட் தியரி தயாரித்தாக வேண்டும். நிறைய தலைக்கு மேல் வேலை இருக்கப் போகிறது அவர்களுக்கு. பாவம்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

25 Replies to “குரு உத்ஸவ்”

  1. 1) ரஜினிகாந்தும் பிரபுவும் சேர்ந்து நடித்த “””தமிழ்””‘ திரைப்படமான “குரு சிஷ்யன்” ல் வரும் குரு என்ற “சம்ஸ்கிருத” வார்த்தையை எதிர்த்து யாரும் போராட்டம் நடத்தாது ஏன்?

    2) “மாதா பிதா குரு தெய்வம்” என்றுதானே காலங் காலமாக பள்ளிகளில் எங்களுக்கு சொல்லிகொடுத்தார்கள். அப்போதெல்லாம் “குரு” என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு காட்டாதது ஏன்? பிஜேபி ஆட்சிக்கு வந்தால்தான் எதையுமே செய்வீர்களா?

    3) காங்கிரஸ் ஆட்சி “இந்திரா அவாஸ் யோஜனா” என்ற பெயரில் ஒரு திட்டத்தை கொண்டுவந்தபோது அதை எதிர்க்காதது ஏன்? அந்த திட்டத்தை திமுக அரசு அமுல்படுத்தாமல் போராட்டம் நடத்தியதா? அவாஸ் என்பதும் யோஜனா என்பதும் தமிழ் வார்த்தைகளா?

    4) தனது அன்பு மகனுக்கு “ஸ்டாலின்” என்று பெயர் வைத்துள்ளாரே! அந்த பெயரில் வரும் “ஸ்” என்ற எழுத்து தமிழ் எழுத்தா? அந்த காலத்தில் “ராஜாஜி” என்பதை “ராசாசி” என்று முரசொலி எழுதியது போல “ஸ்டாலின்” என்பதை “ச்டாலின்” என்று எழுதுவார்களா?

    5) “கோவில் கொடியவர்களின் கூடாரமாக கூடாது” என்று வீர வசனம் எழுதிய கருணாநிதி தனது ஆட்சியின் போது “கடவுள் இல்லை இல்லவே இல்லை” என்று சொன்ன கயவாளிகளை அரங்காவலர்களாக்கி கோவில் சொத்தை கொள்ளையடிக்க வைத்தாரே? அவர்கள் அறங்காவலர்களாக இருக்கும்போது “கருட உற்சவம்” என்றும் “பிரம்மோற்சவம்” என்றும் கோவிலில் கொண்டாடியபோது “உற்சவம்” என்ற வார்த்தைக்கு அந்த அறங்காவலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன்? கோவிலில் கொள்ளையடிப்பில்தான் கருத்தும் கண்ணாகவும் இருந்தார்களா?

    5 அ) கோவில் நிலத்தை அபகரித்து கல்லூரி கட்டிய அழகிரி என்ற பெயரில் வரும் “கிரி” என்பது தமிழ் வார்த்தையா? (கிரி = மலை; கிரி வலம் = மலை வலம் வருதல்)

    6) “குமாஸ்தாவின் மகள்” என்ற படம் வந்தபோது “குடியரசு” இதழில் மிக பிரமாதமாக விமர்சனம் (review ) எழுதிய சி.என். அண்ணாதுரைக்கு “குமாஸ்தா” என்பது உருது சொல் என்பது தெரிந்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் போனது ஏன்?

    7) ராஜீவ் காந்தி “பஞ்சாயத் ராஜ்” என்ற சட்டத்தை கொண்டுவந்தபோது பஞ்சாயத் என்பது உருது வார்த்தை அதற்கு “ஐம்பேராய ஆட்சி” என்று பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா?

    8)முரசொலியின் தானே கேள்வி கேட்டு தானே பதில் எழுத்துகிறாரே! அதில் பதில் என்பது ஒரு உருது வார்த்தை என்பது அவருக்கு தெரியாதா? விடை என்பதுதான் தமிழ் வார்த்தை.

    9) இவர் (கருணாநிதி) இலங்கை மக்களை காப்பாற்ற (!?!?!?!?) “டெசோ” என்ற அமைப்பை உருவாக்கி உள்ளாரே அது என்ன வார்த்தையப்பா? டாஸ்மாக் என்பது தமிழ் வார்த்தையா? அதை எப்போதாவது எதிர்த்தது உண்டா?

    10) தரணி போற்றும் “””தமிழ்””” நடிகன் என்று கூறப்படும் சிவாஜிக்கு “பராசக்தி” படத்தில் பேச கொடுத்த முதல் வசனம் “Success success ” என்பதுதான். இந்த தமிழ் வசனத்தை எழுதிய புண்ணியவான் தன்னிகரற்ற “”தமிழ்”” மக்களின் தானை தலைவன் கருணாநிதி” தான். தமிழ் வாழ்க!

    11) Last but not least. What is in a name? Rose by whatever name will smell sweet.(William Shakespeare) ஆசிரியர் தினம் என்றால் என்ன, Teachers ‘ Day என்றால் என்ன, குரு உற்சவ் என்றால் என்ன அந்த தினத்தை ஒழுங்காக கொண்டாடுகிறார்களா என்று பாருங்கள். இவர் முதலில் தன பேரன்கள் நடத்தும் (Nine clouds என்றும் giant என்றும்) பட தயாரிப்பு கம்பனிகளின் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றட்டும்

  2. கருணாநிதியை தாக்குவது முக்கிய நோக்கமாக இருக்ககூடாது தமிழ்நாட்டில் பி ஜே பி செல்வாக்கு இழக்கிறது மோடியின் நடவடிக்கைகை தேச ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் சந்தேகம் இல்லை

  3. Honest Man” on September 2, 2014 at 12:25 pm –

    நெத்தியடி. சொரணை இருந்தால் தானே அவர்களுக்கு. சொரணை கேட்ட ஜன்மங்கள். வேறு என்ன சொல்லமுடியும்.

  4. //இனிமேல் ஒவ்வொரு வாரமும், மாதமும் இந்திய அரசின் எல்லா அறிவிப்புகளூக்கும் திட்டங்களுக்கும் சுத்தமான சம்ஸ்கிருதப் பெயர்கள் தான் இருக்கப் போகின்றன.//
    எவ்வளவு அபத்தமான கருது.
    ஒவ்வொரு முறையும் ஜடாயு தனது வடமொழி பிரகடனத்தை விடுவதில்லை.
    தமிழ் இந்து-வும் விடாமல் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடுகின்றது.

    தமிழ் மொழியை தவிர்த்து வடமொழியை உயர்த்தி எழுதுவது என்பது தமிழ் நாட்டில் உள்ள பலருக்கு வேளையாகி விட்டது.

    //தமிழ்நாட்டில் இருக்கும் வேலைவெட்டி இல்லாத சில மொழித் தீவிரவாத மண்டூகங்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.//
    தமிழை ஆதரிப்பது என்பது உங்களுக்கு வேலை வெட்டி இல்லாதாதா?

    என் போன்ற தீவிர தி-க எதிர்பாளர்கள் உள்ளனர். உள்ளார்ந்த தமிழ் பற்றும் சைவ சமயப் பற்றும் உள்ளவர்கள் பலர். உங்கள் கட்டுரை அவர்களை நிந்திக்கும் வகையில் உள்ளது.

    எப்பொழுது தான் நீங்கள் மாறுவீர்கள்?

    சோமசுந்தரம்

  5. //ரஜினிகாந்தும் பிரபுவும் சேர்ந்து நடித்த “””தமிழ்””‘ திரைப்படமான “குரு சிஷ்யன்” ல் வரும் குரு என்ற “சம்ஸ்கிருத” வார்த்தையை எதிர்த்து யாரும் போராட்டம் நடத்தாது ஏன்? //

    காடு வெட்டி குரு என்ற தமிழ் இன உயர்ந்த தலைவர் பெயரை நீங்கள் சொல்லவில்லை.

  6. இனிமேல் ஒவ்வொரு வாரமும், மாதமும் இந்திய அரசின் எல்லா அறிவிப்புகளூக்கும் திட்டங்களுக்கும் சுத்தமான சம்ஸ்கிருதப் பெயர்கள் தான் இருக்கப் போகின்றன.. As sanskrit is directly related only to Hinduism, it is nothing but Hindutva agenda…

  7. “இனிமேல் ஒவ்வொரு வாரமும், மாதமும் இந்திய அரசின் எல்லா அறிவிப்புகளூக்கும் திட்டங்களுக்கும் சுத்தமான சம்ஸ்கிருதப் பெயர்கள் தான் இருக்கப் போகின்றன. ” அருமை .. யானைக்கு யாரும் மண் அள்ளி போட தேவை இல்லை…

  8. ///////கருணாநிதியை தாக்குவது முக்கிய நோக்கமாக இருக்ககூடாது///////
    கசாப்புகடைகாரன் ஒருவன் வள்ளலாரை வாழ்த்தி பேசும்போது சும்மா கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறாரா?

    1. மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிய “தமிழ் வாழ்த்து” பாடலில் வரும் “திலகம்” என்ற வார்த்தை தமிழ் வார்த்தையா?
    2. கலைஞர் டிவியில் “மானாட மயிலாட” என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது. மயில் ஆடும். ஒத்துகொள்கிறேன். ஆனால் மான் ஆடுமா? மான் ஓடுமா அல்லது ஆடுமா? சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுக்காத இவர் ஒரு முத்தமிழ் அறிஞராம்!
    3. கனிமொழியின் மகனுக்கு ஆதித்யா என்று பெயர் வைத்துள்ளனரே! ஆதித்யா என்பது தமிழ் பெயரா?
    4. திமுகவின் சின்னமான உதயசூரியன் என்பது தமிழா? எழு ஞாயிறு என்பது தமிழா?
    5. Sun TV என்பது தமிழா? அந்த டிவியில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் பெயர்கள் கொண்டவையா?
    6, மூச்சுக்கு 300 தடவை “அண்ணா அண்ணா” என்று கூறுகிறீரே! அந்த அண்ணாதுரை தனக்கு என்ன தலைபெழுத்து (=initial ) வைத்து கொண்டார்? C .N . இது தமிழா?
    7. சென்னை வேளச்சேரியில் சீதாபதி நகரில் ராணி தெருவில் இவரது பேத்தி நடத்தும் பள்ளியில் இந்தி கற்று கொடுக்கும்போது இவர் அதை தடுத்தாரா?
    இப்படி பேசுவது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருந்தால் கருணாநிதியை தாக்காமல் தலைமேல் தூக்கி வைத்து ஆடவேண்டும் என்கிறீர்களா?

    ////தமிழ்நாட்டில் பி ஜே பி செல்வாக்கு இழக்கிறது?////
    எதை வைத்து இப்படி சொல்கிறீர்?

  9. ஜடாயு, மிக தவறான கருத்தை வெளியிட்டுள்ளீர்கள். இந்தி பெயர் எது சம்ஸ்கிருதப்பெயர் எது என்று கூட தெரியாமல் எழுதியுள்ளீர்கள். குரு உத்சவ் என்பது சமஸ்கிருதம் அல்ல. இந்தி தான்.

    மத்திய அரசின் பல திட்டங்களுக்கு இந்தியில் பெயர்கள் கடந்த 67- வருடங்களாக இருக்கின்றன. ” இந்திரா ஆவாஸ் யோஜனா “-என்பது சென்ற காங்கிரஸ் ஆட்சியில் சூட்டப்பட்ட ஒரு பெயர் ஆகும். அப்போது கலைஞர் சோனியாவுக்கு சொம்படித்துக்கொண்டிருந்ததால், இந்த kmv – sarav – போன்றோர் அந்த இந்தி சொல்லை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை. பாஜக அரசில் எது செய்தாலும் ஏதாவது முட்டாள் தனமாக விமரிசனம் செய்வது , திமுக சொம்புகளின் பழக்கம். மேலே உள்ள திரு ஹானஸ்ட் மேன்- அவர்களின் கடிதத்தில் , காங்கிரஸ் மத்திய அரசு வைத்த இந்திப் பெயர்களைப் பற்றி தெளிவாக எல்லா விவரங்களையும் கொடுத்துள்ளார். கலைஞர் பேரன், கொள்ளுப்பேரன், பேத்தி, கொள்ளுப்பேத்திகள் மட்டுமே இந்தி படித்து, பேரனைப்போலவே எடுத்தவுடனேயே கேபினெட் மந்திரி ஆகவேண்டும். மற்றவர்கள் பதவி பெறக்கூடாது என்பது இந்த மூடர்களுக்கு எங்கே புரியப்போகிறது. உங்கள் கட்டுரையில் உடனடியாக செய்யவேண்டிய திருத்தம் என்னவெனில்,

    //கடந்த 67- வருடங்களாக நேருகாலம் தொடங்கி , எப்போதும் உள்ள வழக்கம் போல, ஒவ்வொரு வாரமும், மாதமும் இந்திய அரசின் எல்லா புதிய திட்டங்களுக்கும் சுத்தமான இந்திப்பெயர்கள் தான் இருக்கப் போகின்றன.//

    இதில் புதுமை எதுவும் இல்லை. தமிழகத்துக் குல்லுகபட்டர் கலைஞர், சோனியா அரசில் பங்கேற்றிருந்தபோதும் இப்படி தான் இந்தியில் பெயர் வைப்பது வழக்கம். மாநில அரசுகள் மத்திய அரசு திட்டங்களை தங்கள் மாநிலத்தில் நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தும் போது, மாநில மொழிகளில் அந்த திட்டங்களின் பெயர்களை மொழி மாற்றம் செய்து அச்சிடுவது வழக்கம். உதாரணமாக , IRDP -என்றொரு டுபாக்கூர் திட்டத்தை , இந்திரா காந்தி காலம் தொடங்கி பல காலம் மத்திய அரசு நடத்தியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகள் மூலம் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தியில் உள்ளதை தமிழில் மொழிபெயர்த்து, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதேபோல எந்த மத்திய அரசு திட்டமும் , மாநிலங்களில் செயல்படும்போது, மாநில மொழிகளில் பெயர் சூட்டப்பட்டுத்தான் செயல்படுகிறது. ஆந்திராவில் மத்திய திட்டங்களுக்கு தெலுங்கு மொழியில் பெயர் சூட்டப்படுகிறது. இவ்வளவு ஏன் ? குஜராத்தில் கூட , மத்திய அரசின் திட்டங்களுக்கு குஜராத்தி மொழியில் பெயர் சூட்டப்பட்டு தான் செயல்படுத்தப்படுகிறது. இதுதான் உண்மை. டெல்லியில் அந்த விழாக்கள் பல பெயர்களில் இந்தியில் தான் நடத்தப்படுகின்றன ஏனெனில் டெல்லி இந்தி பேசும் மக்களைக் கொண்ட ஊர்.

    காதி உத்ஸவ், க்ருஷி உத்ஸவ், ஃபிலிமோத்ஸவ், பாரத் உத்ஸவ் – ஆகியவை இந்தியில் உள்ள பெயர்கள் தான் . அவற்றை தமிழில் கதர் திருவிழா, வேளாண்மைத் திருவிழா, திரைப்படத்திருவிழா, இந்தியத் திருவிழா என்று தமிழில் பெயர் மாற்றம் செய்துதான் நடத்துகிறார்கள். இந்தவிவரம் புரியாமல் ஒரு வெட்டித்தனமான எதிர்ப்பில் ஈடுபடும் மூத்த தலைவரை என்ன செய்வது ?

    இதில் என்ன அழகு என்றால், சோனியாவுடன் சேர்ந்து கூட்டு ஆட்சி நடத்தியபோது, இவர் கண்ணில் இந்தி தெரியவில்லை. பாஜக ஆட்சியில் வேண்டுமென்றே புலம்புகிறார். பாவம்.

    அன்புள்ள திரு சோம சுந்தரம் ,

    திரு ஜடாயு அவர்களின் கட்டுரையில் என்ன திருத்தம் செய்யப்படவேண்டும் என்ற விவரத்தை மேலே எழுதிவிட்டேன். மேலும், தமிழ்ப் பற்றாளர்கள் என்பது வேறு, வெறியாளர்கள் என்பது வேறு. யாராயினும் பற்றாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும். வெறி இருந்தால் நியாயமாக சிந்திக்க முடியாது. எந்த மாநிலம் ஆயினும் மத்திய திட்டங்களுக்கு , மாநில மொழிகளில் தான் பெயர் சூட்டி, நடைபெறுகிறது. இந்த விவரம் தெரியாமல், தன்னுடைய பெயர் செய்தித்தாள்களில் வராதா என்ற ஏக்கத்தில், பாராளுமன்ற தோல்விக்கு பின்னர் நிலை குலைந்து போயுள்ள அரசியல் வாதிகளுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை மட்டுமே தெரிவித்துக்கொள்ளமுடியும்.

    1967-லே திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறிய காலத்திலிருந்து , இன்றுவரை மத்திய அரசு எல்லா திட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டித்தான் நடத்திவருகிறது. அதில் எவ்வித தவறும் இல்லை. ஏனெனில் மாநிலங்களில் மாநில மொழியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுத்தான் அமல்செய்யப்படுகின்றன.

    ” குரு உத்சவ் ” என்ற இந்தி சொல்லை தமிழில் ஆசிரியர் நாள் – கவனிக்கவும் ஆசிரியர் தினம் அல்ல. ஆசிரியர் நாள் என்று தான் சொல்லி நோட்டீஸ் அடிப்பார்கள். மானங்கெட்ட திமுக அரசுகள் ஆசிரியர் தினம் என்று நோட்டீஸ் அடித்தன. தினம் என்பது தமிழ் அல்ல. சமஸ்கிருதம். நாள் என்பதே நல்ல தமிழ். தமிழ் வாழ்க. தமிழினப்பகைவர்களான திராவிட இயக்கங்கள் ஒழிக.

  10. ஹானஸ்ட் மேனின் மறுமொழிகள் எல்லாமே நெத்தியடி தான். புரிய வேண்டிய நண்பர்களுக்கு புரிந்தால் சரி. ஜடங்களுக்கு எப்படிப் புரியும் ?

  11. //எப்பொழுது தான் நீங்கள் மாறுவீர்கள்?//

    இவர்கள் மாறுவார்கள் என்கிறீர்கள்? எப்போதும் மாற மாட்டார். இவர்களால் தமிழ் மொழி மேலும் தமிழகத்தில் செழிப்புறும். வழக்கம் போல் வட மொழியும் மோடி ஆட்சி போனவுடன் ஓரமாய் போய் உட்கார்ந்து கொள்ளும். 🙂 காலா காலமாய் நாம் பார்த்து வருவதுதானே!

  12. பொதுவாக, தமிழனுக்குத் தமிழ்ப் பற்று கிடையாது. அவன் எந்த சமயத்தவனாக இருந்தாலும் சரி. இந்துக்கள் என்று பார்த்தால், அர்த்தமே இல்லாத பெயர்களை வைப்பது இப்போது பழக்கமாகிவிட்டது. டிவியா, டானியா என்றும் கிரேஸ், லிவேஷ் என்றும் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கின்றனர். கேட்டால் சும்மா வைத்தோம் என்கிறார்கள். தங்களைத் தமிழர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்ளத் தயங்குகிறார்கள். அரிதாக ஒரு சில படித்த professional தமிழர் மட்டும் அன்பரசன், யாழினி போன்ற தூய தமிழ்ப் பெயர்களை சூட்டுகின்றனர். இவர்கள் மட்டும்தான் இனப்பெருமை கொண்டுள்ள மக்கள். They have self respect and pride. கிறிஸ்தவத் தமிழர்கள் பெரும்பாலும் தங்களை வெள்ளைக்காரர்கள் என்றே கற்பனை செய்துகொள்கின்றனர். தமிழுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவர்களின் கருத்து. எல்லோருக்கும் ஆங்கிலப் பெயர்தான். அதிசயமாக ஒரு சிலர் புனிதமலர் , ஆரோக்கியம், ராணி போன்ற பெயர்களை வைத்துள்ளனர். வேறு சிலர் பாதி ஆங்கிலம் பாதித் தமிழ் என்றாவது பெயர் சூட்டுகின்றனர். அதுவாவது பரவாயில்லை. முஸ்லிம் தமிழர்கள், சுத்தமாகத் தங்கள் தமிழ் அடையாளத்தைத் தொலைத்தவர்கள். எனக்குத் தெரிந்து மணவை முஸ்தபா மட்டும்தான் தம் பிள்ளைகளுக்கு எழில் என்றும் தேன்மொழி என்றும் தமிழில் பெயர் சூட்டியுள்ளார். மற்றபடி எல்லா முஸ்லிம்களும் தங்களை அரபுக்காரர்கள் என்றுதான் கருதிக்கொள்கிறார்கள். சாப்பிடுவது சாம்பார் சோறாக இருந்தாலும் தங்களை அரபுப் பாலைவன சேக்குகளாக நினைத்துக்கொண்டு கறுப்புப் பாலைவன ஆடை அணிந்துகொண்டு அரபுப் பெயர்கள் வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். கொஞ்சம் விட்டால் ஒட்டகம் வேண்டும் என்பார்கள். என்னே தமிழரின் அடையாளம்! ஐயகோ!!

  13. A note to tamil hindu.
    If you want to glorify sanskrit, pls do so, but not by degrading tamil.

    Now, coming to the BJP govt, why can’t they be clear in their communication?

    First they issued a circular that all govt correspondence will be in hindi only. Then, when there were protests, they said that it is for hindi speakings states only & that other states can translate it, if necessary.

    Is this not a waste of time & money?

    Also, what are hindi speaking states? In Haryana, the language spoken is Haryanvi which is different from hindi.

    Then they announced that sanskrit week should be observed. When there were protests , they relented & said that it is not compusory. Why this dilly dallying? Why cannot they be firm & clear in their directives?

    In this case, they said that it is compulsory for students to attend school to hear the PM’s speech. Then Smrithi Irani said that it is not compulsory, buy the schools say that the directive they received says it is compulsory.

    Why so much confusion?

  14. I know thiis is unrelated to this topic, but it needs our immediate attention.

    A report today in dinamalar:

    கங்காதரேஸ்வரர் கோவில் நிலம் கிறிஸ்தவ நிறுவனத்துக்கு சென்றது எப்படி?மீட்பதிலும் அறநிலைய துறை அலட்சியம்
    03 செப் 2014

    தமிழக அரசின் தடை ஆணையை மீறி, சென்னை, புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில் நிலம், கிறிஸ்தவ சமய நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில், கோவில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட சொத்துகள் ஏராளமாக உள்ளன. இந்த சொத்துகளை பாதுகாத்து, பராமரிக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள், அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது.இருக்கும் சொத்துகளை நிர்வகிப்பதிலும் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

    சென்னை, புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவிலுக்கு, குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர்களை, அறநிலையத் துறை, அண்மையில் வெளியிட்டது. இந்த பட்டியலில், ‘தி சால்வேஷன் ஆர்மி’ என்ற கிறிஸ்தவ சமய நிறுவனம் பெயரில், வாடகை கட்டணமாக, 5.30 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக, அறநிலையத் துறை அறிவித்தது.இது குறித்து விசாரித்ததில், புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில் தெருவில், கோவிலுக்கு சொந்தமான மனையில், ‘தி சால்வேஷன் ஆர்மி’ நிறுவனத்தின் சென்னை கோட்ட அலுவலகமும், பிரார்த்தனை வளாகமும் அமைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த இடத்துக்கு அந்நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக, வாடகை செலுத்தாத வகையில், 5.30 லட்சம் ரூபாய் நிலுவையில் இருக்கிறது.தமிழக அரசின் உள்துறை, 1958 பிப்ரவரி, 18ம் தேதி பிறப்பித்த அரசாணையின்படி, கோவில் நிலங்களையும், கட்டடங்களையும் இந்து அல்லாத பிற மதத்தினருக்கோ, அவர்களின் பயன்பாட்டுக்கோ அளிக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவில்களுக்கு அருகில் உள்ள அதற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களில், பிற மத நிறுவனங்கள் செயல்பட்டால், விழா காலங்களில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதை தவிர்க்க, பிற மத நிறுவனங்களுக்கு குத்தகை அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அரசு தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளபோது, அதற்கு மாறாக, கோவில் நிலம், கிறிஸ்தவ சமய நிறுவனத்துக்கு சென்றது எப்படி என்பது, புதிராக உள்ளது.

    இது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் செயல் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:கோவில் நிலங்களை பிற சமய நிறுவனங்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விடுவதை தடை செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அப்பட்டமாக மீறும் வகையில், அறநிலையத்துறை செயல்பட்டுள்ளதற்கு, இதுவே சிறந்த உதாரணம்.

    வேறு சமய நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது தெரிந்தும் அதை மீட்க, அறநிலையத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

    இது குறித்து அறநிலையத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அரசாணை தெளிவாக உள்ள நிலையில், பிற சமய நிறுவனத்துக்கு நேரடியாக குத்தகைக்கு வழங்கியிருக்க வாய்ப்பில்லை. குத்தகைக்கு பெற்ற இந்து சமயத்தை சேர்ந்தவர் யாராவது, இந்த நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டிருக்கலாம். இதில், உண்மை நிலவரம் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

    As long as the hindus are not united, these incidents will continue to happen.

  15. ஆக மொத்தம் வெட்டியாக மறுதலிப்புகளை பதிவு செய்து, ஆசிரிய நாள் கொண்டாட்டங்களை நிம்மதியாக நடத்த விடாமல், ஆசிரியர்களையும் மதிக்காமல், பழைய படியே தமிழனை வெறியூட்டி வழி நடத்துவது என்பதில் திண்ணமாக இருக்கிறீர்கள்.

  16. அன்பின் ஸ்ரீ சோமசுந்தரம் ஐயா,

    சில மாற்றுக்கருத்துக்கள்

    \\\ ஒவ்வொரு முறையும் ஜடாயு தனது வடமொழி பிரகடனத்தை விடுவதில்லை. தமிழ் இந்து-வும் விடாமல் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடுகின்றது. தமிழ் மொழியை தவிர்த்து வடமொழியை உயர்த்தி எழுதுவது என்பது தமிழ் நாட்டில் உள்ள பலருக்கு வேளையாகி விட்டது. \\

    எத்துணையோ காலமாக மத்ய சர்க்கார் தன் திட்டங்களின் பெயரை சம்ஸ்க்ருதம் / ஹிந்தி பாஷையில் அறிவிப்பது வழக்கமே. புதிது ஏதும் இல்லை. அந்தந்த மாகாணங்களில் இருக்கும் சர்க்கார்கள் அந்தந்த மாகாண பாஷைகளில் இந்த திட்டங்களின் பெயர்களை மொழியாக்கம் செய்து வருவதும் புதிது அல்ல. இதில் எங்கே உயர்வு தாழ்வு?

    \\\\\\\\ //தமிழ்நாட்டில் இருக்கும் வேலைவெட்டி இல்லாத சில மொழித் தீவிரவாத மண்டூகங்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.//

    தமிழை ஆதரிப்பது என்பது உங்களுக்கு வேலை வெட்டி இல்லாதாதா? என் போன்ற தீவிர தி-க எதிர்பாளர்கள் உள்ளனர். உள்ளார்ந்த தமிழ் பற்றும் சைவ சமயப் பற்றும் உள்ளவர்கள் பலர். உங்கள் கட்டுரை அவர்களை நிந்திக்கும் வகையில் உள்ளது. \\\\\\

    தமிழக சர்க்காரின் மீது….. தமிழ் மொழியன்றி …… ஆங்க்லமோ அல்லது ஹிந்தியோ ………. ஏதாவது மொழியை திணித்தால் அப்போது ஆதரவு எதிர்ப்பு என்று ஏதாவது ஒரு நிலைப்பாடு எடுக்க அவச்யம் வரும். அப்படியான நிலைமை ஏதுமில்லை என்றிருக்கையில் இதில் நிந்தனை பற்றிய பேச்சு எங்கே? அவலை நினைத்து உரலை இடிக்கக்கூடாதல்லவா?

  17. ஆசிரியர் தினம் என்று ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும்போது, குரு உத்சவ் என்று ஒரு சொற்றொடரைத் திணிப்பது மொழித் தீவிரவாதம் இல்லையாம். ஆனால், அத்திணிப்பை எதிர்ப்பது மொழித்தீவிரவாதமாம். நல்லா இருக்குய்யா உங்கள் நியாயம்! தமிழ் இந்து என்ற பெயரை மாற்றி தமிழ்நாட்டு இந்து என்றாவது வைத்துக்கொள்ளுங்கள். தீவிர சைவரான மறைமலை அடிகள் இக்காலத்தில் இருந்திருந்தால், இந்துவாகிய அவரையும் நீங்கள் கிழிகிழி என்று கிழித்திருப்பீர்கள் போலிருக்கிறது.

  18. தி.மு.க. இங்கு தூக்கி எறியப்பட்டது. கவனிப்பார் இல்லை. ஆகவே, விவரம் தெரியாது, கருத்து சொல்லி, தி.மு.க. மாட்டிக் கொண்டது. ஜடாயு அவர்கள் சரியான பதிலடி கொடுத்தார் எனில், ஸ்மிரிதி இராணி அவர்கள் இவர்களது மூக்குடைத்தார். கட்டுரைப் போட்டி என்பதை ஏதோ பெயரையே மாற்றி விட்டார்கள் என கூப்பாடு போட்டார். உதவிக்கு, தி.க. , பா.மா.க. மற்றும் பல. உண்மையில், தெய்வ திருமுறைகள் அழகு தமிழில் உள்ளனவே, ராமலிங்க அடிகள் அருமை தமிழில் எழுதி உள்ளாரே, அதை போற்றுவோம், பாடுவோம், பரப்புவோம் என்பதிற்கு வழி இல்லை. இவர்கள் தமிழ் காக்கின்றார்கள். நாம் நம்ப வேண்டும்.

  19. அட போங்கப்பா உங்களுக்கு வேறு வேலை இல்லை. தமிழை காப்பாற்றுகிற லக்ஷணம் எங்களுக்கு நன்றாக தெரியும். வல்லின மெல்லின வேறுபாடு தெரியாத் தமிழனுக்கு எந்த மொழி தமிழ்நாட்டில் நுழைந்தால் என்ன. கருணா நிதி என்பது தமிழா வடமொழியா ? ஸ்டாலின் என்பது பரிசுத்தமானத் தமிழ் பெயரா? தமிழ் குடித்தாங்கி ராமதாசுவின் மருமகள் பெயர் சௌமியா என்பது தமிழா ? இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இன்றையத் தமிழன் தமிழ் தாய்மொழிதானே எனவே படிக்கவேண்டாம், ஆங்கிலம் அன்னியர் மொழி இந்தியும் சம்ஸ்க்ருதமும் வடவர் மொழி அவை தேவையில்லை என்று முடிவு கட்டிவிட்டான். மொழி என்பது தொடர்புக்குத் தானே என்று நினைக்கும் தமிழர்கள் பலர் வேறு மாநிலங்களில் வசிப்போர் அந்த அந்த மாநில மொழியைக் கற்றுகொள்கின்றனர். கருணாநிதி, ராமதாசு வீரமணி குடும்பத்தினருக்கு வேறு மாநிலத்திற்கு பிழைப்புக்காக செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆயினும் அவர்கள் பிள்ளைகள் பேரன் பேத்திகள் ஆங்கிலவழிக் கல்வியிலும் ஹிந்தியும் படித்து விட்டனர், படித்தும் வருகின்றனர். ஏழைத் தமிழன் எதையும் படிக்காமல் இருந்தால் தான் இவர்கள் பிழைப்பு நடக்கும். எனவே தமிழர்கள் இனிமேலும் ஏமாறாமல் “பகுத்தறிவின் ” துணைகொண்டு இவர்களை புறந்தள்ளி பிழைக்கும் வழியை பார்க்கும் காலமே தமிழனின் போர்க்காலம்.

  20. //இனிமேல் ஒவ்வொரு வாரமும், மாதமும் இந்திய அரசின் எல்லா அறிவிப்புகளூக்கும் திட்டங்களுக்கும் சுத்தமான சம்ஸ்கிருதப் பெயர்கள் தான் இருக்கப் போகின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் வேலைவெட்டி இல்லாத சில மொழித் தீவிரவாத மண்டூகங்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது// ஒட்டு மொத்த தமிழுக்கும் கருணாநிதி AUTHORITY இல்ல . வெலுப்பா இருகுரதால எவலோ ஒருத்திய எங்க அம்மானு சொல்ல முடியதுல SIR .

  21. நாமலே தமிழ அவமதிச்சொம்னா வேற மொழிக்காரன் என்ன வேணும்னாலும் பேசுவான். நீங்க ஒரு தமிழரா இருந்துகிட்டு இப்படி எழுதினது எனக்கு ரொம்ப கேவலமா இருக்கு.

    வாழ்க தமிழ்!!!

  22. If you visit the sites of RSS/ Hindutva groups, you can find that they want to make Sanskrit as the National Language.

  23. “மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிய “தமிழ் வாழ்த்து” பாடலில் வரும் “திலகம்” என்ற வார்த்தை தமிழ் வார்த்தையா?”

    ஹானஸ்ட் மேன் அவர்களுக்கு ஒரு தகவல் தமிழ்த்தாய் வாழ்த்து என்றுதான் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதியிருக்கிறார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அல்ல. அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தில் 15 வடமொழிச் சொற்கள்(சற்றொப்ப) உள்ளன.

    (எடுத்துக் காட்டு) நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கெழில் ஒழுகும் சீராரும் *வதன*மென திகழ்* பரத கண்ட*மிதில் தெக்கணமும் அதில் சிறந்த ”திராவிட” நல் திரு நாடும்

    *” குறியிட்டவை வடசொல்

  24. தமிழ்மொழி வரலாறு குறித்து ஆராய்ந்து பார்க்கட்டுமே….வளர்க்கட்டுமே..
    இந்த தமிழினத்தலைவர்கள்…….
    ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *