ஆவணி அவிட்டம் எனும் வேதத்திருநாள் சிந்தனைகள்

வேத ரிஷிகளின் விசாலமான ஞானமும், உலக நன்மையையே எப்போதும் கருதும் அவர்களது அருள் நெஞ்சமும் இந்த மந்திரங்களில் வெளிப்படுகின்றன… வெறும் “பூணூல் மாற்றும்” சடங்கு மாத்திரம் அல்ல இது. பாவங்களுக்கான பிராயச்சித்தம், வேத ரிஷிகளுக்கான தர்ப்பணம், ஹோமம் மற்றும் வேதாரம்பம் இதனுள் அடங்கியுள்ளன. ஆண்களும் பெண்களும் அனைத்து வர்ணத்தினரும் வேதம் கற்ற பண்டைய காலகட்டங்களில் இத்தகைய புனிதச் சடங்குகள் அனைவருக்குமானவையாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமில்லை..

View More ஆவணி அவிட்டம் எனும் வேதத்திருநாள் சிந்தனைகள்

திருமகளுக்கென ஓர் அழகிய தமிழ்ப்பாடல்

வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாக, ஶ்ரீ என்ற மந்திரத்தை நேரடியாகக் குறிக்கும் ‘திரு’ என்ற இனிய சொல் தமிழில் உள்ளது. ஆயினும், திருமகளை நேரடியாக விளித்துப் போற்றக் கூடிய துதிப்பாடல்கள் எனக்குத் தெரிந்து எதுவும் பழைய நூல்களில் இல்லை. இந்தக் குறையைத் தீர்ப்பதற்கென்றே சரஸ்வதியின் பெயர் பூண்ட நமது மகாகவி சில பாடல்களை எழுதியிருக்கிறார்.. வறுமையும் உள்ளச்சோர்வும் சோம்பலும் முயற்சியின்மையும் கவிஞரைப் பீடித்திருந்த தருணத்தில் அவற்றை அகற்றி நல்லொளி தரவேண்டும் என்று திருமகளை இறைஞ்சும் இந்தப் பாடல்…

View More திருமகளுக்கென ஓர் அழகிய தமிழ்ப்பாடல்

வால்மீகி-கம்பர் ஒப்பீடு: பிழைகளும் சரியான வழிமுறையும்

சில வருடங்கள் முன்பு ஒரு கம்பன் கழக மேடையில் ஒரு பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் “வால்மீகியின் இராமன் வழிபாட்டுக்கு உரியவன் அல்லவன், அவன் பச்சையான இராமன், கம்பன் தான் இராமனை பண்புள்ள தெய்வமாக ஆக்கினான்” என்றெல்லாம் படு அபத்தமாக உளறியதைக் கேட்க நேர்ந்தது. தமிழ்நாட்டின் பெரும்பாலான “கம்பன்” பேச்சாளர்கள் இப்படித் தான் பேசுவார்கள் சார் என்றார் நண்பர். எனவே தினமலர் ஆன்மீகம் சேனலில் இராமாயணம் குறித்த எனது தொடர் உரையாடலில் இது பற்றிப் பேசியிருக்கிறேன். இதன் வீடியோக்கள் கீழே..

View More வால்மீகி-கம்பர் ஒப்பீடு: பிழைகளும் சரியான வழிமுறையும்

கிறிஸ்தவ “கீர்த்தனைகள்” ஆய்வுக்கு 2026 தமிழ்விக்கி பெ.தூரன் விருது: ஒரு கண்ணோட்டம்

எழுத்தாளர் ஜெயமோகனின் தலைமை மற்றும் வழிகாட்டலில் தரப்படும் தமிழ்விக்கி பெ.தூரன் விருது இந்த வருடம் யோ. ஞான சந்திர ஜாண்சன் என்கிற ஆய்வாளருக்கு அளிக்கப் படுகிறது.. பொதுவான கலை, இலக்கிய, கலாசார செயல்பாடுகளுக்கான தளம் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அமைப்பு ஒன்று இத்தகைய விருதை அறிவிப்பது என்பது கிறிஸ்தவ மதமாற்றச் சூழ்ச்சிகளையும், அதன் பகுதியாக உள்ள கலாசாரத் திருட்டையும் அங்கீகரிப்பதன்றி வேறில்லை. இது பெ.தூரனுக்குச் செய்யப்படும் அவமதிப்பு.. 2021ல் ஒரு மாநாட்டில் இது குறித்து ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரையை நான் சமர்ப்பித்திருக்கிறேன்.. . 

View More கிறிஸ்தவ “கீர்த்தனைகள்” ஆய்வுக்கு 2026 தமிழ்விக்கி பெ.தூரன் விருது: ஒரு கண்ணோட்டம்

வேதாந்தம் : மூன்று உணர்வு நிலைகள்

நமது அன்றாட அனுபவங்களான விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்னம்), ஆழ்ந்த உறக்கம் (ஸுஷுப்தி) ஆகிய மூன்று உணர்வு நிலைகளை (அவஸ்தா-த்ரயம்) குறித்த விசாரத்தின் மூலம் ஆத்ம தத்துவத்தை உணர்தல் என்பது வேதாந்தத்தில் ஒரு முக்கியமான வழிமுறையாகும். அது குறித்த அடிப்படை விளக்கம் இந்த உரை. .

View More வேதாந்தம் : மூன்று உணர்வு நிலைகள்

சக்தி தத்துவம் – ஜடாயு உரை

சக்தி வழிபாடு, தாயன்பு என்னும் அடிப்படை உணர்வு, பூமி, இயற்கை, பிரபஞ்சம், சிவசக்தி இணைவு – ஐக்கியம், பிரம்மம் – மாயை, மஹாமாயை, ஆற்றல்கள், காளி, லலிதா தேவி, சக்தியின் ரூபங்கள் ஆகிய ஆகிய விஷயங்கள் குறித்துப் பேசும் ஆழமான உரை இது. 2026 பிப்ரவரி 6 வெள்ளி மாலை கோயம்புத்தூர் ஶ்ரீ சாரதாம்பாள் கோயில் (ரேஸ் கோர்ஸ் சாலை ) அரங்கில் நிகழ்ந்த உரையின் வீடியோ பதிவு..

View More சக்தி தத்துவம் – ஜடாயு உரை

கம்பனில் காத்திருப்பு – புத்தக அறிமுகம்

நண்பர் ஜகன்னாத் அவர்களின் கம்பராமாயண வாசிப்பு ரசனை, ஆய்வு, சமயம் ஆகிய மூன்று கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியது என்பதை இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இவற்றுக்கிடையில் முரண்பாடுகளை அவர் காண்பதில்லை. இவை மூன்றையும் இணைத்துச் செல்வதாகவே அவரது பார்வை அமைந்துள்ளது. . இதிலுள்ள  பத்துக் கட்டுரைகளில் நான்கு, இராமகாதைக்கெனத் தமது வாழ்வின் கணிசமான பகுதியைச் செலவிட்டு உழைத்த பெருந்தகைகளைப் பற்றி அமைந்துள்ளது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது…

View More கம்பனில் காத்திருப்பு – புத்தக அறிமுகம்

ஶ்ரீ கிருஷ்ணரின் பிரம்ம மோகன லீலையும் அதன் உட்பொருளும்

மனதிற்கினியதும், வசீகரமானதும், ஆழமான தத்துவ உட்பொருள் கொண்டதுமான பிரம்ம மோகன லீலை ஶ்ரீமத்பாகவம் பத்தாவது ஸ்கந்தம் 13-14 அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. மாயத்தால் கண்ணனுடன் விளையாட பிரம்மா பின்பு தானே மாயச்சுழலில் சிக்கி திகைத்து நிற்பதும் இதில் வருகிறது. அதைப் பற்றியது ஜடாயுவின் இந்த உரை…

View More ஶ்ரீ கிருஷ்ணரின் பிரம்ம மோகன லீலையும் அதன் உட்பொருளும்

அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்

அயோத்தி ஸ்ரீராமஜன்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை வைபவம் நம் காலத்தில் நாம் கண்களால் காண நிகழ்ந்த ராம பட்டாபிஷேகம்… ராம் லாலா என்ற குழந்தை ராமர் வழிபாடு அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப் படவில்லை, அதற்கு குறைந்தபட்சம் 500 ஆண்டு பாரம்பரியம் உண்டு… தமிழ்நாட்டில் ராமாயணத்தை எரித்த இந்து விரோத அரசியல் கயவர் கூட்டத்தின் அதர்ம கொள்கைகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. இவை தான் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள். இவற்றை சுயமரியாதையுள்ள தமிழ் இந்துக்கள் எப்போது அகற்றப் போகிறோம்?…

View More அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்

மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…

View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்