ஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்

ண்மையில் பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி அவர்கள் அரிசோன ஆனைமுகன் ஆலயத்திற்கு வருகை தந்தார்.  இக்கோவிலை ஆகம முறைப்படி கட்ட அவர்தான் வரைபடங்கள் வடிமைக்கிறார்.  அப்பொழுது பக்தஹனுமான் மற்றும் இராம, இலக்குவ சீதை ஆலயங்களுக்கு ஆகம முறைப்படி வடிவமைத்துக்கொடுத்தார்.  மேலும், கோவில் இராஜகொபுரத்திற்கு வரைபடம் தீட்டிக்கொடுத்தார்.  கோவிலில் அவருக்கு சால்வை போர்த்தி அவரது பணி சிறப்பிக்கப் பட்டது.

அவ்வமயம் அவர் இராஜகோபுரத்தைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

“கோவில் கர்ப்பக்கிரகம் கடவுளரின் முகம் போன்றது.  இராஜகோபுரம் அவரது பாதத்திற்கு ஈடாகும்.  இராஜகோபுரத்தை நிறுவுவது கடவுளின் பாதத்தை அமைத்து அவரது அமைப்பை முழுமை அடையச் செய்வதற்கு ஒப்பாகும்.  இந்தப் பணியில் தொண்டாற்ற நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன்.  இக்கனவை நிறைவேற உழைக்கும் அரிசோனா ஆலய அலுவலகர்களுக்கும், பக்தர்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தனது சிறப்புரையை முடித்துக்கொண்டார்.

இடையிடையே தனது கருத்தை வலியுறுத்த ஆகம சாஸ்திரத்தில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களையும் எடுத்துக்காட்டாக இயம்பினார்.

அவர் ஆலய இராஜகோபுரத்திற்காகப் படம் வரைந்துகொண்டிருந்தபோது அவருடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  அதைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆலயக் கோவிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் இருக்கும் என்றார் முத்தையா ஸ்தபதி.  கோபுரத்தின் நிலைகளை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “அது கோவிலின் பரப்பளவையும், மக்கள் தொகையையும் பொறுத்திருக்கிறது.  மக்கள் தொகையைப் பொறுத்தே கோவில் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப் படுகிறது.  அதைப் பொறுத்தே இராஜகோபுரத்தின் நிலைகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் கூறி, தனது ஒவ்வொரு கூற்றுக்கும் ஆகம சாத்திரத்திலிருந்து வடமொழி சுலோகங்களைக் கூறி சான்று காட்டினார்.

agama-temples-muthiah-sthapati

ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்களில், கருவறையிலிருந்து அபிஷேக நீரை வெளிக்கொணரும் கோமுகிகள் காட்டிவிடும் என்றவர், கோமுகிகள் பசுவைப்போலவோ, யாளியைப்போலவோ, சிங்கத்தைப்போலவோ, வராகத்தைப்போலவோ, அல்லது வெறும் குழாயாகவோ, நேராகவோ நிலத்திற்குள்ளோ சென்றிருப்பதைப் பார்த்து கோவில்கள் எப்பிரிவினரால் கட்டப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அதே மாதிரி, கடவுளர்களின் சிலைகளும் எப்படி வடிவமைக்கப்படவேண்டும் என்றும் மேற்கோள்கள் காட்டினார்.  நமது விருப்பப்படி சிலைகளைச் செதுக்கக்கூடாதா என்று வினவியதற்கு, “ஆகம சாத்திரம் அதற்கு அனுமதிப்பதில்லை.  விநாயகர் சிலைகளையே பலவிதமாக வடிவமைக்க சாத்திரங்கள் இருக்கின்றன என்று மேற்கோள்கள் காட்டினார்.  அதுபோலவே, சிவன், பார்வதி, முருகன் முதலிய பல கடவுளர்கள் சிலைகளையும் வடிவமைக்க ஆகம விதிகள் உள்ளன.” என்று பதில் கூறினார்.  அவரது வடமொழி அறிவு என்னை வியக்கவைத்தது.

“தாங்கள் வடமொழி சுலோகங்களை உதாரணம் காட்டுகிறீர்களே?  தமிழில் சிற்ப சாத்திரம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“நானே சிற்ப சாஸ்திரம் என்று ஒரு நூலைத் தமிழில் எழுதி இருக்கிறேன்.  அது சென்னையில் கிடைக்கும்.” என்று கூறினார்.

அதன்பிறகு அவர் காஞ்சி முனிவர் சந்திரகேகர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் (மகாபெரியவாள்) அவர்களுடன் பேசியதைக் குறிப்பிட்டார்.  அவரையே செய்யச் சொல்லி ஒரு திட்டத்தைக் கொடுத்ததாகவும், அதைத் தான் வடிவமைத்ததை ஒரு பாக்கியமாகவும் கருதுவதாகப் பெருமையுடன் பேசினார்.

தான் சிறுவயதில் ஸ்ரீசைலத்திருச் சென்றதையும், அங்கு மலையடிவாரத்தில் நண்பர்களுடன் இரவு தங்கவேண்டி வந்ததையும், அங்கு தூரத்தில் கொள்ளிக்கண்களாக ஒளிரும் புலிகளைக் கண்டதாகவும், அவர்கள் குளிருக்கு மூட்டிய நெருப்பே அவைகளைத் தடுத்து நிறுத்தியதாகவும் சொன்னபோது எனக்கு மேனி சிலிர்த்தது.

“சென்னை வந்தால் அவசியம் என்னை வந்து சந்தியுங்கள்!” என்று சொல்லி விடைகொடுத்தார் பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி.  ஆலயம் பல எழுப்பி, இந்து சமயத்தையும், ஆகம சாத்திரங்களையும், சிற்பக்கலையையும் நிலை நிறுத்திவரும் அவரை வணங்கி விடைபெற்றேன்.

 

31 Replies to “ஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்”

 1. This great Sthapathi (an ardent devotee of SRI SRI SRI SRI MAHAPERIYAVAL ) built a Sri RAMANASRAMAM temples. Mani MANTAPAM at Orikkai and many many hundreds of temples .
  He is a much much blessed person.
  He was appointed as an EXCUTIVE OFFICER in Andhra Pradesh during Sri NT Rama rao as chief ministership.

 2. கோயில்களை தமிழ் முறையில் புனரமைக்கிறேன் பேர்வழி என்று பேரூர் சாந்தலிங்க ராமசாமி கும்பல் காவி உடை தரித்த கறுப்பு சட்டைகளாக கோயில்களை சீரழித்து வருகிறார்கள்.. கொங்கதேசப்பகுதிகளில் இந்த கும்பல் சீரழித்த கோயில்கள் கணக்கற்றவை.. அறநிலையாத்துறை என்னென்ன அக்கிரமங்கள் செய்யுமோ அத்தனையும் இந்த கும்பல் செய்கிறது.. அதிகாரத்தில் இருப்பவர்கள் திராவிட கட்சிகளில் இருக்கிறார்கள்.. பேரூர் கும்பல் திராவிட கும்பலோடு நெருங்கிய தொடர்பில் இருப்பது.. இதனால் ஒவ்வொரு கோயிலை சேர்ந்தவர்களும் தங்கள் கோயில் சிதைவுற்று பழமையும்-ஆகம முறைகளும் அழிந்து போவதை கண்டு மனம் வெதும்பிப் போயுள்ளார்கள்..

 3. பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி அவர்கள் ராஜகோபுரங்களைப் பற்றிய விளக்கம் மிகவும் அருமை.

  பல செய்திகளை தெரிந்து கொண்டேன்.

  கட்டுரையை வழங்கிய திரு ஒரு அரிசோனன் அவர்களுக்கும் வெளியிட்ட தமிழ் ஹிந்து.காம் வலைத்தளத்திற்கும் நன்றி.

  – அ போ இருங்கோவேள்

 4. Dear all
  Mr.sasikumar is very correct in pointing out about this perur sathha lingam actully Thiru.Muthia avl,,
  many times dipomatically escaped from working under this group, I know well,, but cant tell the truth
  in public,,,,,due to the fear of after effects,, from my saying this you can understand the groung reailty

 5. சசிக்குமார் யாரோ செய்த தவறுக்கு பேரூர் சாந்தலிங்க அடிகள் மீது சேறு இறைப்பது தவறு பாவம். அவர் யார்? என்னப்பணி செய்துவருகிறார் என்பதை படித்து, நேரில் கண்டு விசாரித்து எழுதவும். தமிழ் வழிபாடு தவறு என்று ஆதாரத்தோடு விவாதிக்கமுடியாத சிலர்.இல்லாத வர்ணமுறையை இங்கே திணிக்கமுயல்கின்ற சிலர் பேரூர் சுவாமிகள் மீது இப்படி சேறு வீசுகிறார்கள். கொங்கு மண்டலத்தில் பேரூர் சாந்த லிங்கர் திருமடமும் கௌமாரமடமும் சிறப்பான ஆன்மிகப்பணி செய்துவருகின்றன. ஹிந்து தர்ம சம்ரக்ஷணத்திலும் அவை ஈடுபட்டுவருகின்றன.

 6. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
  வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
  தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
  கள்ளப் புலன் அனைத்தும் காளா மணிவிளக்கே .

 7. பேரூர் ஆதீனம் குறித்த சசிகுமாரின் கடுமையான கருத்துக்கள் தக்க ஞானம் இல்லாமை காரணமானதே ஆகும். மிகவும் வருந்தத்தக்கதும் ஆகும்.

  வேதாந்த மரபு போன்ற பல தரிசன மரபுகள் கொண்டதே இந்துமதம். ஒரு மரபு இன்னொரு மரபை இப்படிச் சாடுவது முறையாகாது. சைவ வைணவ மரபுகளுக்கிடையேயான கருத்து மோதல்களில் தீவிரசைவரான மறைமலை அடிகளாரிடம் ஒரு வைணவப் பெரியார் உதிர்த்த (சசிகுமார் உதிர்த்ததுபோன்ற) கடும் கருத்துக்களால் தோன்றியதே இன்றும் தொடர்ந்து வரும் சைவ-வைணவ, தமிழ்- சமஸ்கிருத விவாதங்கள். ஒரு நூற்றாண்டு ஆகியும் ஓயவில்லை.

  பேரூர் ஆதீனம் 1970களில் இருந்தே தாம் முன் நின்று ஏராளமானபேரை தாய்மதம் திரும்ப வைத்து அரவணைத்தவர். அவர் ஆற்றிவரும் சமயத் தொண்டும், சமுதாயத் தொண்டும் கல்வித் தொண்டும் சிறப்பானவை.

  இந்த வலைப் பக்கங்கள் அவர்களது சேவை இன்னதென்று கூறுகின்றன.

  https://sivasiva.in/english/

  எது ஆகம முறை, எது இல்லை என்பதில் கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் நமது துறவியரைக் கண்டபடி ஏசக் கூடாது.

 8. Dear all,

  In this connection to note down the sayings of Sri Thirumuruga Kripananda Variyaar Swamigal. When some body asked him why we cant have slokas in Thamizh, he replied, ” MANTHIRAMAVADHU NEERU ENDRU PADIRUKKIRARGAL, WHY GO AWAY FROM THAT? LET THEM BE IN VADAMOZHI.

  Boss, please note down one thing, when you can learn English and become a poet or writer in that language what stops you from learning Hindi or Samskritam? Our brains are tuned to oppose samskritam and Hindi. Do you know because of English usage, almost all our secrets have been travelled to China? Instead of English and Thamizh lets have Hindi and Thamizh. In TN Courts let there be Thamizh, in TN admin let there be Thamizh, but once step out of TN lets start use the Hindi language instead of English. The pathetic situation in TN is even the Govt. is functioning thro English instead of Thamizh. But lot of ground work will have to be done for this change to happen. A language should not chain us. For this matter in the earlier days say in seventh century eunuchs, maruthuvars and even masons were known the samskritam. That was why they could build beautiful temples and palaces.

 9. எங்கள் வூர் கிரமாதேவியாக விளங்க கூடிய அன்னை ஆதி பராசத்தியின் அம்சமும் சாமுண்டேவரியின் வடிவமும் பொருந்திய ஸ்ரீ செல்லியாரம்மனுக்கு அஷ்டபந்த கும்ப அபிசேகம் நடத்த முன்னிட்டு ஆலயத்தை முழுவதும் புதுதிதாக புனர்பிக்க வுள்ளோம் அதற்கு முன்பு பாலாயம் செய்ய வேண்டி வுள்ளதால் ஸ்ரீ வித்யா ( சக்தி ) வுபாசெர்கள் எங்களுக்கு அறிவுரை கூறி இந்த புண்ணிய காரியத்தை செவ்வனே நடக்க ஆசிர்வதிக்கவும் –மூலவர்- ஸ்ரீ செல்லியாரம்மன் ,
  வூர் – மேட்டமலை,சாத்தூர் தாலுகா , விருதுநகர் மாவடம்,

 10. நீறு என்ற சொல் திருநீற்றைக் குறிக்கும் . இதில் தமிழ் அல்லது சமஸ்க்ரித மந்திரம் எங்கே வந்தது? தமிழில் இருந்து செம்மையக்கப் பட்டதே வடமொழி ( வடு அல் மொழி) . அண்மையில் மறைந்த மகாலிங்கம் அவர்களும், மறைமலை அடிகளார் போன்றோரும் இக் கருத்தைக் கொண்டிருந்தனர்.

 11. “அர்ச்சனை பாட்டே ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழால் பாடுக ” என்று சுந்தரர் தேவாரம் தமிழ் அர்ச்சனையை ஏற்றிப் போற்றுகின்றது.

 12. // கோயில்களை தமிழ் முறையில் புனரமைக்கிறேன் பேர்வழி என்று பேரூர் சாந்தலிங்க ராமசாமி கும்பல் காவி உடை தரித்த கறுப்பு சட்டைகளாக கோயில்களை சீரழித்து வருகிறார்கள்.. கொங்கதேசப்பகுதிகளில் இந்த கும்பல் சீரழித்த கோயில்கள் கணக்கற்றவை//

  இந்தசசிகுமார் யாரோ தெரியவில்லை. சுவாமி என்றோ அடிகளார் என்றோ மரியதைச் சொல்லாற் குறிப்பிடாமல் இருப்பதிலிருந்தே ஏதோ ஒருவகையில் அடிகலாற் பணியின் மீது காழ்ப்புடைய , வருமானம் இழந்த கூட்டத்தைச் சேர்ந்தவர் என ஊகிக்க வைக்கின்றார். தவத்திரு சாந்தலிங்க அடிகலார் திருமடமும் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் தலைமையும் அவருடைய முன்னோரின் பாரம்பரியமும் என்னைப் போன்ற பல்லாயிரவரைத் தமிழ்ச்சைவ நன்னெறியில் ஊக்கத்துடன் வாழச் செய்கின்றன.திருமுறைப் பயிற்சியில் ஈடுபட வைக்கின்றன. சைவசித்தாந்த நூற்களைப் பயில ஊக்குவிக்கின்றன. அடிகளார் பிராமணர் பூசை வழிபாடுகளைச் செய்யும் கோயில்களில் திர்ப்பணி மேற்கொள்வதில்லை. திருமுறைகளின் மேல் பற்றும் அடிகளின் வழி நடப்பதில் விருப்பமும்கொண்டவர்கள் அமைக்க விரும்பும் திருக்கோயில்களுக்கே திருப்பணிசெய்கின்றார். சசிகுமார் போன்றோர் சைவப்பகைவர் திருமுறைகளுக்கு எதிரானவர்கள். அவர்கள் கூற்ருத் தொடைத்தெரியும் ‘டிஷ்யூ’ காகிதமே.

 13. அன்பர்களின் கருத்துரையின் வலது புறத்தில் பல்வேறு நிறங்களில் சதுரக் குறியீடுகள் உள்ளன. அவற்றின் பொருளை விளக்கிட வேண்டுகின்றேன்.

 14. முத்தையா ஸ்தபதியில் ஒரு பக்கத்தை அழகாக காட்டி உள்ளது. இவரை பற்றிய மற்றொரு பக்கத்தை சொல்ல வேண்டும் என்றால்,

  ப சிதம்பரத்திற்கு சட்டமும், வணிகமும் எந்த அளவுக்கு தெரியுமோ, இவருக்கும் அந்த அளவுக்கு ஆகம சாஸ்திரங்கள் தெரியும்… ப. சிதம்பரம் அதை வைத்து எந்த வகையான பிழைப்பை நடத்துகிறாரோ… அதே போன்ற பிழைப்பை தான் இவரும் நடத்து கிறார்.

  உலகிலேயே எளிதாக நம்ப கூடாதவர்கள் என்று ஒரு குழு இருக்கும் என்றால் அது அரசு ஊழியர்களும், அவர்களுடம் இருக்கும் கூட்டம் தான்

  சிதம்பரம் கோயிலுக்கு இந்த பிரகஸ்பதி கொடுத்த அறிக்கை இருக்கிறதே!!!… அதை தஞ்சாவூர் கல்வெட்டு உடன் வைத்து பாதுகாக்க வேண்டும்

  சிலரை சில நாள் ஏமாற்றலாம்… ஆனால் எல்லோரையும் எல்லா நாளிலும் ஏமாற்ற முடியாது. இறைவன் அருளாசி இருந்தால் உண்மை ஒரு நாள் வெளி வரும்….

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறநிலைத் துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் மூன்று வருட பணி நீடிப்பு கொடுக்கப்பட்ட ஆணையர் தனபாலன் அவர்களுக்கு இவர் ஆஸ்தான ஸ்தபதி…

  இவரை பற்றி சொல்ல இது ஒன்று போதுமே….

 15. @சிவஸ்ரீ விபூதிபூஷணம்

  சசிகுமார் எழுதிய வரிகளில் எள் அளவும் தவறு இல்லை என்பதே எனது கருத்தும். என்னை பொருத்த வரை இந்த அடிகளார் என்ற பெயரில் இருக்கும் குழு திராவிட கட்சியின் ஒரு அங்கமே. இவர்களின் திரு** பணிகளை நேரில் சென்று பார்த்து இருக்கிறேன். பல பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். பல ஆதாரங்களை படித்தும் இருக்கிறேன். போலிகளை கண்டு ஏமாறாமல் இருப்பது நமக்கு நல்லது

 16. கோமதி செட்டியாரே நீங்கள் உங்களிடம் உள்ள ஆதாரங்களையெல்லாம் கொண்டு போய் எங்கே வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். பேரூர் சாந்தலிங்க அடிகளாருடைய அருட்பணிகளை எளிமையை நேர்மையை தூய்மையை அடியேன் நேரில் கண்டிருக்கிறேன். அவர்கள் உருவாக்கிய சைவத்திருக்கூட்டத்தின் விரிவை ஆழத்தினை விவரிக்க இயலாது. அவரது ஆன்மிகப்பணி, தர்மசம்ரக்ஷனப்பணி, சைவப்பணி தமிழ் பணி எல்லாம் போற்றத்தக்கவை. ஈவெராவின் அடிவருடிகளும் தமிழ் வழிபாட்டினை ஆதரிப்பவர்கள் அவர்களில் ஒரு சிலர் செய்த திருப்பணிகளில் அபத்தம் நிகழ்ந்தது என்பதற்காக அதன் பழுவை அடிகளார் மீது போடுவது அபத்தம். தமிழ் வழிபாட்டினை மறுக்க துப்பில்லாதவர்கள். எல்லோரும் சிவாச்சாரியார்களாகமுடியும் வேதம் ஓதலாம், ஓதவேண்டும் என்பதை மறுப்பவர்கள். ஒரு சாதியினருக்கே வேதம் ஆகமம் எல்லாம் உடமையாக உரிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற அதர்மிகள் அடிகளார் மீது புழுதிவாரித்தூற்றுவதை அனுமதிக்கமுடியாது. சிவபிரானை இகழ்கின்றோர் மன்னிக்கப்படலாம் ஆனால் சிவனடியார்களை தூற்றும் நிந்திக்கும் பாவத்திற்கு பிராயச்சித்தம் அரிதிலும் அரிது. அதுவும் நடமாடும் கோயிலாக விளங்குகின்ற அடிகளாரை இகழ்கிற பாவத்தினை செய்யாதீர்கள்.

 17. gurubhyo namaha
  i am extremely sad to note the kind of mutual mudslinging in the name of samskrithahindu and
  tamizhhindu. hindus are hindus only

 18. சொல்ல வந்த கருத்தில் மையமிடாமல் சொல்லியவரை தாக்கும் திராவிட விஷம் இங்கே பலர் உடம்பில் பாய்ந்திருப்பது வியப்பு. நீங்கள் எல்லாம் கோயில் என்றால் சர்ச்-மசூதி போல வெறும் கட்டிடங்கள் என்று நினைக்கிறீர்களா..?? யாரோ அன்பர சொன்னார் ஆகமக் கோயில்களில் கை வைப்பதில்லை என்று.. வாருங்கள்.. இன்று.. இப்போது.. எத்தனை சிவபிரானின் ஆகமக் கோயில்களில் பேரூர் கும்பல் விளையாடிக் கொண்டிருக்கிறது என்று காட்டுகிறேன். (உதாரணம்: கத்தான்கண்ணி, பருத்திப்பள்ளி). கிரிமினல்களை சுவாமிகள் அடிகளார் என்று சொல்லி உண்மையான அடியோரை அவமதிக்க மாட்டேன். வீரசைவ மரபை பின்பற்றும் இவர்கள் கோயிலுக்குள் பசுவை விட வேண்டாம் என்று சொன்னவர்கள். இவர்கள் பணி செய்த கோயிலில் திராவ்விட கும்பல் வரவில்லை.. திராவிட கும்பல் தான் இவர்களை கோயில் பணி செய்யவே கூப்பிடுகிறது என்பதை உணருங்கள்..

 19. முத்தையா ஸ்தபதி பற்றி சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் புனரமைப்பை பற்றி மறு ஆய்வை செய்தாலே விளங்கி விடும். நன்றாக இருக்கும் கோயில்களை எல்லாம் புனரமைக்கிறேன் என்று சொல்லி, கோடிக்கணக்கில் காசு பார்த்தவர்.

  இவர் போட்டுக்கொடுக்கும் ஒவ்வொரு திட்டமும், கோயில் நலனை விட, அதில் அதிக பட்ச வருமானம் பார்ப்பதற்காகவே. இவர் மட்டுமல்ல. பெரும்பாலான புகழ்பெற்ற ஸ்தபதிகள் எல்லாருமே இதை செய்து கொண்டிருக்கிறார்கள். 20 லட்சத்தில் முடிக்க வேண்டியதை, 2 கோடிக்கு எஸ்டிமேட் போட்டு, அந்த பட்ஜெட்டை ஒத்துக் கொண்டால்தான் வேலை செய்வேன் என்று கண்டிஷன்.

  இன்னும் சில ஸ்தபதிகள், ஒரு கோடிக்கும் மேல் பட்ஜெட் என்றால்தான் அப்பாயின்ட்மென்டே தருகிறார்கள்..

  கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளில் உள்ள கவுண்டர்கள் பலர், டெக்ஸ்டைல்ஸ் துறையில் பெரும் பணக்காரர்களால இருப்பதால், அவர்களின் ஈகோவை தூண்டிவிட்டு, காசை கறந்து கொண்டிருக்கிறார்கள்.

  மறு பக்கத்தில் கிரானைட் அதிபர்களிடம் ரகசிய கூட்டு வைத்துள்ளார்கள்.. அதிக எஸ்டிமேட்டில் கோயில் கட்டினால், அதிக கற்களை வாங்க வேண்டியிருக்கும் அல்லவா..

 20. //வேதாந்த மரபு போன்ற பல தரிசன மரபுகள் கொண்டதே இந்துமதம். ஒரு மரபு இன்னொரு மரபை இப்படிச் சாடுவது முறையாகாது.//

  ஆம்.. அதுபோல, ஒரு மரபு இன்னொரு மரபை அழிக்க நினைப்பது முறையாகுமா..?? இவர்கள் ஏன் வீரசைவ மரபை எங்கள் மேல் திணிக்கப் பார்கிறார்கள்..?? ஏன் பழமையான கோயில்களை இடித்து சிலைகளை, தூண்களை கபளீகரம் செய்கிறார்கள்? கோயிலின் அமைப்பை மாற்றுகிறார்கள்..? கோயில்களை இடித்து வணிக வளாகங்களாக்குகிறார்கள்?

 21. சிவஸ்ரீ. விபூதிபூஷண் ஐயா… கோமதி செட்டி அவர்கள் வாய்ச்சொல் வீரர் அல்ல.. களத்தில் ஏராளமான கோயில்களைக் காக்க போராடி வருபவர்.. சிவனடியார்களை நிந்திக்கவோ ஒழிக்கவோ நினைக்க நாங்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் அல்ல.. பல நூற்றாண்டு பழமையான கோயில்கள் சீரழிக்கப்பட்டு சிதைக்கப்படுவதை கண்டு வெதும்பி களத்தில்-கோர்ட்டில்- போராடிக் களைத்தவர்கள்.. இவர்களின் வெளிவேஷத்தை நம்பி ஏமாற வேண்டாம்.. ஒரு நாள் பேரூர் கும்பலின் உண்மைகள் அம்பலமாகும்.. அன்று தெரியும்.. யார் பொய்யர் என்று..

  தற்போது நடந்துவரும் கோயில் ‘திருப்பணி’
  https://www.facebook.com/group.siva/posts/979754248718216

  இதோ சமீபத்திய பதிவொன்று
  https://www.facebook.com/group.siva/posts/984567521570222

 22. பேரூர் அதீணம் எங்கள் பகுதியில் உள்ள பல கோயில் சிலையை பின்னம் இருக்கிறது என்று சொல்லி ஆத்துல கொண்டு போயி விட்டுருங்க நு சொல்லி கொடுமுடி அல்லது பவானி கூடுதுறையில் சிலையை விடுறாங்க. அவுங்க போன கொஞ்ச நேரத்துலையே, பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்பதால், அங்க இருக்குற அவுங்க ஆளுங்க, அந்த சிலையை பத்திரமா எடுத்துட்டு வந்து வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்காங்க. அங்கே நம் சிலைகளுக்கு ஏக கிராக்கி. இதை நான் கண்கூடாக பார்த்து உள்ளேன். அதை விடியோ பதிவும் செய்து உள்ளேன்.
  சிலை ஏற்றுமதி செய்து கோடி கணக்கில் பணம் சம்பாரித்தும்விட்டர்கள்.
  பாவம் ஆதீண மடத்தில் உள்ள சிஷ்யர்களுக்கு இந்த விசயம் பற்றி தெரிய வாய்ப்பில்லை.

  திருமுறைகளை போற்றுபவன் நான்.ஆனால், இது போன்றவர்களால் நம் இந்து மதத்திற்கே ஆபத்து.
  கோயிலில் ஆகம் எனபதே இல்லை என்று சொல்கிறார் பேரூர் அதீண தமிழ் வழி அடிகளார். அப்படி என்றால் திருமூலர் சொல்வதை ஏற்று கொள்ளமாட்டார்களா இவர்கள்.

  2.4.3. திருமந்திரம் : வேத ஆகமச் சிறப்பு பற்றி திருமூலர் சொல்லி இருக்கிறார். இவர்கள் கொள்கை பிரமாணர் எதிர்ப்பு என்று தெளிவாக் புரிகிறது. இவர்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. காவி உடையில் ஒரு கருப்பு ஆடு.

  கோயிலில் யார் வேண்டுமானுலும் கருவறைக்கு சென்று பூஜை செய்யலாம் என்று பூஜை செய்ய முற்பட்டு சில இடங்களில், இவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கோயிலுக்கும், ஒரு முறை இருக்கு. ஒரு பாரம்பரியம் இருக்கு, அதை எல்லாம் விட்டுவிட்டு, பழைய கோயில்களை இடிச்சு புதுசா கட்டுங்க நு சொல்லி கோயில்களை அழிப்பதும், கல்வெட்டுகளை அழிப்பதும் யாராலும் ஏற்று கொள்ள முடியாத விசியம்.

  பேரூர் ஆதீனத்தின் நிஜ முகத்திரையை, சமீப காலமாக எல்லாருக்கும் முகநூல் வாயிலாக வெளிச்சம் போட்டு காட்டி கொண்டு இருக்கிறார்கள். சாந்தலிங்க அடிகளார் சற்று அமைதியாக் இருந்தாலும், மருதாசல அடிகளாரின் அட்டகாசத்திற்கு அளவே இல்லை.

 23. சுவாமி பிரதிஷட்டைக்கு ஆகமமுறை மந்திரங்கள் அவசியம். திருமுறை பாராயணத்தால் சுவாமி பிரதிஷ்டை கும்பாபிசேகம் செய்யலாம் என்று எந்த சமயக்குரவர்களும் சொல்லவில்லை.

  சமயக்குரவர்களே! அவர்கள் பாடிய தமிழால் சுவாமி பிரதிஷ்டை கும்பாபிசேகம் செய்யவில்லை.

  பேரூர் வீரசைவ மடம் செய்யும் தமிழ்முறை கும்பாபிசேகங்கள் சமயக்குரவர்களுக்கு விரோதமான, சைவ நெறிக்கு விரோதமான கும்பாபிசேகங்கள். இதனை ஆதரிக்கும் அனைவரும் சைவசமய விரோதிகள். இதனை உணராமல் சில பிதற்றி வருவது மூடத்தனம்.

  இவர்கள் பசுந்தோல் போர்த்திய புலி.

 24. ///வேதாந்த மரபு போன்ற பல தரிசன மரபுகள் கொண்டதே இந்துமதம். ஒரு மரபு இன்னொரு மரபை இப்படிச் சாடுவது முறையாகாது.///

  ///ஆம்.. அதுபோல, ஒரு மரபு இன்னொரு மரபை அழிக்க நினைப்பது முறையாகுமா..?? இவர்கள் ஏன் வீரசைவ மரபை எங்கள் மேல் திணிக்கப் பார்கிறார்கள்..?? ஏன் பழமையான கோயில்களை இடித்து சிலைகளை, தூண்களை கபளீகரம் செய்கிறார்கள்? கோயிலின் அமைப்பை மாற்றுகிறார்கள்..? கோயில்களை இடித்து வணிக வளாகங்களாக்குகிறார்கள்?///

  குறிப்பிட்ட மரபுக்கு மட்டுமே உரித்தானவை என்று நிர்ணயிக்கப்படாத திருக்கோயில்கள் அனைத்துமே எந்த மரபுக்கும் பொதுவானவையே. இவற்றில் சைவத்தின் மீது அத்வைதம் திணிக்கப் படுகிறது என்ற கருத்தை ஆதிசைவர்களான குருக்கள் பரம்பரையினரே கூட வருத்தப் பட்டுக் கொள்கின்றனர்! தவத்திரு பேரூர் ஆதீனம் போன்றோர் தமது மரபின் மீது ஆதிசைவ மரபும், அத்வைத மரபும் திணிக்கப்படுகின்றன என்று வருத்தப் பட்டுக் கொள்கின்றனர். ஆக முத்தரப்பினரும் இதில் ஒரு கருத்தை எட்டுதல்தான் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் வழி.

  ஒரு மரபினர் மற்றொரு மரபிணரக் கண்டபடி ஏசுதல், திராவிடர் கழக, முஸ்லிம், கிறிஸ்தவ இந்து எதிரிகளுக்கு மறைமுகமாகத் துணை போகும் செயலே ஆகும். மல்லாந்து படுத்து எச்சில் துப்புதல் கூடாது என்று முதியோர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

  சிதிலம் அடைந்த திருவுருவை ஆற்றில் இடுவதும் அதைத் திருடி விலைக்கு விற்பதும் பெரும் குற்றங்கள். ஆதாரத்துடன் சிலைத் திருட்டு “கவனிக்கும்” போலீசில் புகார் செய்தலே முறை. ஆனால் இங்கே காஞ்சி சங்கராச்சாரியார் தவிர எவர் மீதும் அப்படிப்பட்ட வழக்குப் பதிய மக்களின் முதல்வர் தயாராக இருக்க மாட்டார். அப்படியே கட்டுமரமும் கூட அதைச் செய்ய மாட்டார்.

  நிற்க, பேரூர் ஆதீனம் பின்பற்றுஇவது வீரசைவ மரபா? சைவ மரபா?

  சைவத் திருமடத்தாரைப் பிற மரபினர் சில பல இடங்களில் தக்க மரியாதையுடன் நடத்தவில்லை என்பது வரலாறு. இன்றைக்குக் குன்றக்குடி ஆதீனம் என்று வழங்கப்படும் ஆதீனம், தொன்மையில் திருவண்ணாமலை ஆதீனம்தான் என்பதும், அதன் தொன்மைத் தலைமையிடத்தில் இன்று சிறு இடம் கூட இல்லை என்பதும் பரவலாகத் தெரியாது. அவர்கள் திருவண்ணாமலையில் இருந்து குன்றக்குடிக்கு இடம் பெயரைக் காரணம்? திருவண்ணாமலைத் திருக்கோயிலில் அவர்கள் மரபு வழியாகச் செய்து வந்த தொழுகைக்கு (பூசை அல்ல – தொழுகை) இடையூறுகள் ஏற்பட்டதே காரணம். அவ்விடயூறுகளைச் செய்தோர், நமது இந்து மதத்தின் பிரிவான பிற மரபினரே ஆவர். அப்படிப்பட்ட சுழலில் காரைக்குடிப்பக்கம் சமயப் பயணமாகச் சென்ற ஆதீனத்தை அங்கிருந்த பக்தர்கள் போற்றித் தொழ அவர்களது அன்பின் வேண்டுகோளை ஏற்று அங்கேயே தமது மடத்தை நிறுவி, திருமூர்த்தங்களையும் கொண்டுவந்து தொடர்ந்து சமயப் பணியாற்றியது வரலாறு. ஆனால் அந்த மடாதிபதிகள் இதைப் பெரிதாகப் பேசவில்லை என்பது போற்றற்குரியது.

  இந்தப் பின்னணியில் அண்மைக்காலத்தில் வாழ்ந்து சிவபதமடைந்த தவத்திரு அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதினம் போல அல்லாது, மக்கள் தொண்டில் தமது கவனத்தைச் செலுத்தி, மிகவும் ஏழ்மையில் இருந்த அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பதில் ஈடுபட்டார். இத் தொண்டை ஆட்சியிலிருந்த கருணாநிதி ஆதரித்த காரணத்தால், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. எது எப்படி ஆயினும் மக்கள் தொண்டால் தமது சிவத்தொண்டு சிறக்க வைத்த அவரது பணிபாதை பின்பற்றத் தக்கது.

  ஆனால், நம்மவர்களோ அப்படிப்பட்ட தொண்டும் துறவும் இணைந்த செயலாளர்களை என்றும் கவனித்தது கூட இல்லை, அவர்களையும் குறைகூற அவரது கருணாநிதி நட்பைத்தான் கையில் எடுக்கின்றனர்.

  நமது துறவியரின் நற்பணிகளைப் பாராட்டி பின்பற்ற நம்மவர்களுக்கு ஈடுபாடில்லை என்பது புரிந்தாலன்றி நமக்கு விடிவு காலம் இல்லை.

 25. இந்து மதம் ஒரு இனத்திற்கும் மற்றும் ஒரு மொழிக்கு மட்டுமே உரியது இல்லை.

 26. Rameswaram Ramanatha swami kovil vatakku therkku kopurathil irumpu kampiyai payanpatuththi RC amaiththu kopuram katta vali kattiyathe thiru. muthaiya stapati than. irumpai payanpatutha agamathil vali ullatha yena kettapothu velinadu senru vittathaga poi sonna punniya purusar.

 27. வேலூர் விருபாட்சிபுரத்தில் தமிழ் முறையில் செய்வதாக கூறி ₹.120000 பெற்றார்,அவர் சொன்ன தமிழ் பாடல்கள் எல்லோருக்கும் தெரிந்தவையே, அரோகரகராஎன. கூறீ கும்பாபிஷேகம் செய்து பணம் பெற்று போனார்,அந்த கோயிலுக்கு பிராமணன் அல்ல, பூசாரி கூட வர மறுக்கிறான்,பூஜை யின்றி கேட்பாரில்லாமல் இருக்கிறது, அவர்களுக்கு உண்மையில் ஆண்டவன் மேல் அக்கறையிருந்தால் தொடர்ச்சியாக தமிழ் வழி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதூ தானே,மேலும் பணம் குறைவாக தரும் கிராம கோயில்களுக்கு போவதில்லை, நிறைய பணம் தரும் பெரிய இடங்களுக்கே வருகிறார்கள், பணம் வாங்காமல் செய்ய வேண்டியது தானே.

 28. எல் பி கணேஷன்
  1. வடமொழியில் கும்பாபிஷேகம் செய்ய ஆகும் செலவைக்காட்டிலும் திரு நெறிய தமிழ் முறையில் செய்யும் குடமுழுக்குக்காகும் செலவு குறைவானது. விசாரித்துப்பாருங்கள். உண்மை இதுதான்.
  2. பணம் குறைவாகக்கொடுத்தால் தமிழ் முறையில் கும்பாபிஷேகத்திற்கு ஆள் கிடைப்பதில்லை என்பது அபத்தம். பல நூறு சிவாச்சாரியார்கள் கிராமக்கோயில்களுக்கும் வசதிக்குத்தக்கபடி குடமுழுக்கு நிகழ்த்துவதை அடியேன் அறிவேன். தமிழ் குடமுழுக்கு நடத்த விரும்புவர் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும்.
  3. தமிழில் குடமுழுக்கு நடத்தினால் கோயிலுக்கு பூசாரி வரமாட்டார் என்பது அபத்தம். இது யாரோ சிலரின் சதி. பயிற்சி பெற்றவர்கள் பலர் உள்ளனர்.
  இறைவன் ஈசன் மொழிகடந்தவன் தமிழ் வடமொழி இரண்டையும் ஏற்பவன். தமிழில் குடமுழுக்கு கூடாது என்பதை ஏற்க இயலாது. எல்லோருக்கும் வேதங்களை சாதி பால் பேதமின்றி கற்பியுங்கள். வேதமும் ஆகமமும் திருமுறைகளும் ஓதத்தெரிந்தபின் மக்கள் முடிவு செய்யட்டும் தமிழா வடமொழியா என்று. இப்போதைக்கு தாமரிந்த மொழிகளில் எல்லோரும் திருமுறைகளை ஓதி ஓதி குடமுழுக்கு ஆற்றட்டும். தென்னாடுடைய சிவனே போற்றி.

 29. எல் பி கணேஷ்
  “அவர் சொன்ன தமிழ் பாடல்கள் எல்லோருக்கும் தெரிந்தவையே”.
  உங்களுக்கு தெரியாதவை மட்டும்தான் மந்திரங்களாக இருக்கவேண்டுமா. இன்றைக்கு ஸ்ரீ ருத்ரம் சிவ சஹஸ்ர நாமம் எல்லோரும் கேட்கமுடியும். இணையக்காலம் இது. மறைந்திருப்பதுதான் மறை என்றக்காலம் மாறிவருகிறது. எல்லோருக்கும் புரியும் வண்ணம் பூசை வழிபாடு யாகம் விழாக்கள் நடத்தப்படவேண்டும். அனைவரும் அதிலே முழுமையாக கலந்து பங்கேற்று இன்புற வேண்டும். அப்படியாக அவை நடத்தப்பட்டால் வடமொழியாகிலும் தமிழ்மொழியாகிலும் அவை ஏற்புடையவை. ஒருசிலரே மந்திரம் சொல்ல பூசையை செய்ய மற்றவரெல்லாம் வெளியில் நிற்பது நன்றாயில்லை. சிவ சிவ

 30. The comments show lack of knowledge of DARSANAS and a certain amount of AHANKARA–Nobody has ever said that GOD SPEAKS only in certain languages. The doubt has already beeen cleared by MIMSAKARAS- who argued that ONE SHOULD NOT GO FOR MEANINGS IN CONTROVERSIAL VEDIC HYMNS since it is the sound that gives effect and not meaning. The problem is if everybody argues that GOD can understand any lanaguage then why should it be restricted to SANSKRIT AND TAMIL. Let KUMBABHISHEKAMS be done in all the WORLD LANGUAGES–Or is it the conclusion that SAIVISM is restricted to TAMILNADU AND TAMIL why should we unnecessarily disturb NORTH INDIANS saying that TEMPLES AND GODS belong only to TAMILNADU. Nobody questions the superiority of Tamil or its age is elder to Sanskrit but it was VEDIC AND VADAMOZHI which has given birth to AGAMAS with GURU PARAMPARA. If Tamil Zealots can fathom GURU PARAMPARA in Tamil without mingling of Sanskrit then OK. We cannot have contradictory views–HAVING PAN INDIAN VIEW THAT SAIVISM BELONGS ONLY TO TAMIL WHICH WAS PREVALENT AND ALSO ASK NORTHERNERS TO COME AND VISIT US. If Tamil is the only language of SAIVISM let it be but it should be limited only to TAMILNADU and one cannot force SIVACHARYAS to adopt it and TAMIL ZEALOTS SHOULD NOT EMPLOY SIVACHARYAS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *