ஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்

ஆலயக் கோவிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் இருக்கும் என்றார் முத்தையா ஸ்தபதி. கோபுரத்தின் நிலைகளை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “அது கோவிலின் பரப்பளவையும், மக்கள் தொகையையும் பொறுத்திருக்கிறது. மக்கள் தொகையைப் பொறுத்தே கோவில் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப் படுகிறது. அதைப் பொறுத்தே இராஜகோபுரத்தின் நிலைகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் கூறி, தனது ஒவ்வொரு கூற்றுக்கும் ஆகம சாத்திரத்திலிருந்து வடமொழி சுலோகங்களைக் கூறி சான்று காட்டினார்… நமது விருப்பப்படி சிலைகளைச் செதுக்கக்கூடாதா என்று வினவியதற்கு, “ஆகம சாத்திரம் அதற்கு அனுமதிப்பதில்லை. விநாயகர் சிலைகளையே பலவிதமாக வடிவமைக்க சாத்திரங்கள் இருக்கின்றன என்று மேற்கோள்கள் காட்டினார். அதுபோலவே, சிவன், பார்வதி, முருகன் முதலிய பல கடவுளர்கள் சிலைகளையும் வடிவமைக்க ஆகம விதிகள் உள்ளன.” என்று பதில் கூறினார்….

View More ஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்

மீனாட்சி என்னும் இன்பமாகடல்

அன்னைக்குப் பூஜை முடிந்ததும் தீபாராதனை எடுக்க வைத்திருந்த கற்பூரத்திலிருந்து இரு கட்டிகளை எடுத்தார். தனது கண்களில் வைத்துக் கொண்டு அதில் நெருப்புச் சுடரையும் வைத்தார். ஆஹா! கண்கள் பொசுங்கின! பார்வை பறிபோயிற்று! “அம்மா, தாயே, மீனாட்சி,” எனப் புலம்பினார் தீக்ஷிதர்… வீரர்கள் சொன்ன செய்தியால் ஆச்சரியம் அடைந்தார் மன்னர் திருமலை நாயக்கர். திரை மறைவில் இதைக் கேட்டபடி இருந்த மகாராணி, இப்போது தைரியமாக மன்னர் முன் வந்தாள்… . தீக்ஷிதருக்குக் கண்கள் பொசுங்கியதால் தாம் படும் வருத்தத்தையும் வலியையும் விட, மன்னர் படும் துயரம் தாங்கொணாததாக இருந்தது. அடுத்து 61-வது ஸ்லோகத்தைப் பாடுகிறார் “இயற்கை அழகு வாய்ந்ததும், எல்லாவற்றிற்கும் மேலானதும், அறிவுக்கு எட்டாததும், பரம மங்களமானதுமான உனது அழகிய தாமரை மலர் போன்ற பாதத்தை நீ என்மீது இரங்கி எனக்குக் காண்பிப்பாய் என்றாலும், அதைத் தரிசிக்க எனக்கு (புறக்)கண்கள் இல்லையே தாயே!… “

View More மீனாட்சி என்னும் இன்பமாகடல்

ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

மிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன…. கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன… சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே வித கலைப்பாணிகளைப் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் இடையில் கலைரீதியான போட்டியும் இருந்திருக்கலாம்…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்… தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்? இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன? எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன? … பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்…. எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்….

View More அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

கோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்

ஜூலை-1 (ஞாயிறு)  அன்று ரீச் ஃபவுண்டேஷன் அமைப்பு,   கருத்தரங்கம் ஒன்றை கோவையில் நடத்துகிறது. …

View More கோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்

கணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி

ஸ்தபதி ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். மகாபலிபுரத்தில் வாஸ்து வேத அறிவியல் மையத்தை அவர் உருவாக்கினார். மயனை உலக ஸ்தபதிகளின் ஆதி குருவாக அவர் கருதினார். வாஸ்து அறிவியல் பிரபஞ்ச சூட்சுமங்களை கல்லில் வடிக்கும் ஒரு இசைவியக்கம் என அவர் கருதினார்…”கோவிலே வணங்கப்பட வேண்டியதாகும். இந்த அலகின் அளவுகோலே பிரக்ஞைக்கு வடிவம் அளிக்கிறது. அதுவே ஸ்தூல சூட்சும வடிவங்களை கால-வெளியின் கணிதத்தால் சமைக்கிறது”….

View More கணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி