இந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்

டந்து முடிந்த குடியரசு தினத்திற்கு முன், மத்திய அரசின் செய்தி ஒலிப்புரப்பு துறை ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.  அந்த விளம்பரம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பாகும்.  இந்த முகப்பில் சோசலிஸ்ட் ( Socialist) மற்றும் செக்யூலர் ( Secular) என்ற வார்த்தைகள் இல்லாத முகப்பை வெளியிட்டு இருந்தார்கள்.  இதன் காரணமாக சிவசேன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜாய் ராவட் என்பவர், நிரந்தரமாகவே இந்த இரண்டு வார்த்தைகளையும் அரசியல் அமைப்பு சட்ட முகப்புரையிலிருந்து நீக்கி விடலாம் என்றார்.  இதையே சாக்காக வைத்துக் கொண்டு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மோடி அரசு ஹிந்துத்துவாவை புகுத்த அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த போகிறது என கூச்சல் போட துவங்கினார்கள்.  இவர்களின் கூச்சல்களுக்கிடையே தமிழகத்திலிருந்து தி.மு.கவும் தனது பங்கிற்கு சில அறிக்கைகளை வெளியிட்டது.   இத் தருனத்தில் செய்தி ஒலிப்பரப்பு துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத்,  அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள வாசகம் பற்றி விவாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது, இந்த விவாதம் மூலாம் நாடு எதை விரும்புகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறியதால், விவாதம் அனல் பறக்க தொடங்கியது.

உண்மையில் 1950-ம் வருடம் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் சோசலிஸ்ட் மற்றும் செக்யூலர் என்ற வார்த்தை இடம் பெற்றதா  என்ற கேள்விக்கு பதில் கூற எதிர்க் கட்சிகள் தயாராக இல்லை. நமது நாட்டு அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க முனைந்து போது, இது பற்றி பெரிய விவாதம் நடைபெறவில்லை.  நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியாவிற்கு என ஒரு அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க டாக்டர் அம்பேத்கார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.  இந்த குழு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் சோசலிஸ்ட், செக்யூலர் என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை.  இந்த இரண்டு வார்த்தைகளும் 1976-ல் சேர்க்கப்பட்ட கால சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

Constitution_of_India_preamble

1976க்கு பின்னர் தான் இந்த இரண்டு வார்த்தைகளும் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில்  சேர்க்கப்பட்டது.  1950-ல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள வாசம்     To constitute India into a Sovereign Democratic  Republic    என்ற இருந்த வாசகத்தை திருமதி இந்திரா காந்தி தனது அரசியல் சுய நலத்திற்காக     Soverign  Socialist  Secular  Democratic Republic   என மாற்றினார்.  இந்த மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன.  1973-ல் உச்ச நீதி மன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் அதாவது கேசவானந்த பாரதி க்கும் கேரள அரசுக்கும் நடைபெற்ற வழக்கு, இந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் தெளிவாக குறிப்பிட்டது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை திருத்த எவருக்கும் அதிகாரம கிடையாது   இந்த தீர்ப்பை அடிப்டையாக வைத்துக் கொண்டு பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு  எடுத்த ஜனநாயக விரோத காரியங்களில் முட்டுக் கட்டை போட்டது.

அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 42-ன் படி இந்த வார்த்தைகள்  இடையில் சேர்க்கப்பட்டன.  டிசம்பர்  மாதம் 18ந் தேதி 1976-ம் வருடம் இந்த சட்ட திருத்தம் நிறைவேறியது.  ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத திருமதி இந்திரா காந்தி, 1975-ல் நாட்டில் அவசர நிலையை அமுல்படுத்தி ஒரு வருடம் கழித்து இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது.  ஆனால் வெளிப் பார்வைக்கு ஏதே இந்திரா காந்தி மதசார்பற்ற தன்மைக்கும் ,சோசலிஸ சிந்தனைக்கும் உரியவர் என்பது போல் பாசாங்கு காட்டியவர்கள் காங்கிரஸ் கட்சிகார்ர்கள்.  இந்த 42வது திருத்த்த்தின் மூலம் வெளியே மதசார்ப்பற்ற மற்றும்சோசலிசம் என்று கூறினாலும், மாநில அரசின் அதிகாரங்கள், உச்ச நீதிமன்றும் மற்றும் உயர் நீதி மன்ற அதிகாரங்கள் அனைத்தும் தடுக்கும் விதமாக அரசியல் சட்ட ஷரத்து 19 மற்றும் பிரிவு 14,21,22 ஆகியவை  திருத்தப்பட்டு அதிகாரங்கள் அனைத்தும் பிரதமரிடம் இருப்பது  போல் சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது.  உண்மையில் திருமதி இந்தரா காந்திக்கு சோசலியத்தின் மீதும், மதச்சார்ப்பற்ற தன்மையின் மீதும் அதிதீவிர நம்பிக்கை இருந்திருக்குமானால் அரசியல் சட்ட திருத்தம் 42-ந் படி இரண்டு வார்த்தைகளை மட்டும் இணைக்க விவாதம் நடத்தியிருக்கலாம்.  ஆனால் இதற்கு மாறாக அரசியல் ஷரத்து 31, 31சி, 39, 55, 74, 77, 81, 82, 83, 100, 102, 103, 105, 118, 145, 150, 166, 170, 1725, 189, 191, 192, 194, 208, 217, 225, 226, 227, 228, 311, 312, 330, 352, 353, 356, 357, 358, 359, 366, 368, மற்றும் 371எஃப் அகிய ஏழாவது அட்டவனையில் உள்ள பிரிவுகள் திருத்தப்பட்டன.  இந்த திருதத்தை மத்திய சட்ட அமைச்சர் ஹெச.ஆர்.கோகலே கொண்டு வந்தார்.  எதற்காக இந்த சட்ட திருத்தங்கள் என்பதை இப்போதாவது காங்கிரஸ் கட்சி விளக்கம் கொடுக்குமா?  ஷரத்து 103, 150, 192, 226 ஆகியவற்றிக்கு மாற்றாக வேறு ஒரு ஷரத்து இணைக்க வேண்டிய அவசியம் என்ன?  மேலும் புதிதாக இரண்டு பிரிவுகள் IV A, XIV A  என உருவாக்கப்பட்டன இத்துடன் 31டி, 32ஏ,  39ஏ என புதிய ஷரத்து  இணைக்கப்பட்டது.  இவ்வளவு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை மறைப்பதற்காகவே, அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் இரண்டு வார்த்தைகளை இணைத்த்து என்பதை மறக்க கூடாது.  இவ்வாறு ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்ட இந்திரா காந்தி கொண்டு வந்த இந்த  இடைச் செருகலை ஏன் நீக்க கூடாது.

ஒரு சர்வாதிகாரியாக மாறுவதற்கு என்ன தேவையோ அதை கனகச்சிதமாக இந்திரா காந்தி செய்து முடித்தார்.  நீதிமன்ற பரிந்துரை இல்லாமல் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் அரசியல் சாசன சட்ட பிரிவை திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.  அரசியல் ஷரத்து 368 திருத்தப்பட்டதால், உச்ச நீதி மன்றம் கேசவானந்த பாரதி வழக்கில் கொடுத்த தீர்ப்பு நீர்த்து போக செய்த்து,  எந்த அடிப்படையிலும் உச்ச நீதி மன்றம் கேள்வி கேட்க முடியாது என்ற வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.   எல்லையில்லா அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது, ( The Parliament was given unrestrained power to amend any parts of the constitution )இதன் மூலம் அரசியல் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம் என்பதாக திருத்தப்பட்டது. 42 வது திருத்த்த்தின் படி நீதி மன்றங்கள் restricted the power of the courts to issue stay orders or injunctions.

சட்ட மன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் ஆயுள் ஐந்தாண்டு என்பதை அரசியல் ஷரத்து 172ஐ திருத்தியதின் காரணமாக ஆறு ஆண்டுகள் என மாற்றப்பட்டன.  பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு , 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் தான் நடைபெற வேண்டும் என்பதற்காக சட்ட திருத்தம்.  2026 வரை பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூட்டுவதற்கு தடை விதிக்கும் விதமாக சட்ட திருத்தம்.

இன்றைக்கு மத்திய அரசு வெளியிட்ட விளம்பரத்தில் இல்லை என்று தெரிந்தவுடன் கூச்சல் போடும் காங்கிரஸ் கட்சியினருக்கும், கம்யூனிஸ்ட் மற்றும் நாட்டு பற்று இல்லாத தி.மு.க. உட்பட்ட கட்சிகள்  அரசியல் அமைப்பு சட்டத்திற்கு அங்கீகாரம் பெறுவதற்கு பாராளுமன்றத்தில் நடந்த விவாத்த்தை தெரிந்து கொள்ள வேண்டும்.  1946-ல் நடந்த விவாத்த்தில் கே.டி.ஷா ஒரு திருத்தம் கொண்டு வந்தார், அந்த திருத்தம் முகப்பில், Secular,  Federal,  Socialist  Nation   என மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.  இதற்கு அம்பேத்கார் கொடுத்த பதில் முக்கியமானது, My objections, stated briefly are two.   In the first place the Constitution……. Is merely a mechanism for the purpose of regulating the work of the various organs of the State.  It is not a mechanism where by particular members or particular parties are installed in office.   என தெளிவாக குறிப்பிட்டதை காங்கிரஸ்கார்ர்கள் படித்திருக்க மாட்டார்கள்.

1977-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தவுடன், ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு இந்திரா காந்தி கொண்டு வந்த அரசியல் சட்ட திருத்தங்களை மீன்டும் கொண்டு வந்த போது, பாராளுமன்றத்தின் மேல் சபையில் தேவையான எண்ணிக்கை இல்லாததின் காரணமாக தோல்வியை சந்தித்து.

SupremeCourtIndia-tஅரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் உள்ளது அரசியல் சட்டமே என்பது போல் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கூறிய பின்னரும் கூட திருத்தம் கொண்டு வர ஏன் முயல வேண்டும்.  இதற்கு உரிய விடை, அவரச நிலையின் போது நடந்த ஒரு சம்பவம்.  அவசர நிலையின் போது, எவ்வித காரணமும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் மீது கைது நடவடிக்கை நடந்தது.  இதை எதிர்த்து, அலகாபாத், ஆந்திர பிரதேசம், பாம்பே, டெல்லி, கர்நாடகா, சென்னை, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற ஒரு பெஞ்ச் அமைத்தது.

இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.என்.ராய், ஹெச்.ஆர். கண்ணா, எம்.என்.பெக், ஒய்..வி.சந்திரசூட், பி.என்.பகவதி ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்  வழக்கை விசாரித்தார்கள்.  இந்த விசாரனையின் போது அட்டார்னி ஜெனரல் நரேன் தேவ்,  பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் அதிகாரம் நிறுத்தி வைக்கப்பட்டதால், இதுபற்றி விசாரிக்க முடியாது என்றார்.   இந்நிலையில் நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா உடனடியாக தலையிட்டு, அரசியல் ஷரத்து 21-ன் படி உயிருக்கு உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது, தங்களின் வாதப்படி இதுவும் நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார்,  சட்ட விரோதமாக உயிரையும் எடுத்தாலும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றார். ( ஆதாரம் ஷா கமிஷன் ரிப்போர்ட் பற்றிய புத்தகம் பக்கம்28) இதன் பின்னர் தான் திருமதி இந்திரா காந்தி 42வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆகவே அதிகாரங்கள் அனைத்தும் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது, தன்னை சர்வாதிகாரியாக நினைத்து விட கூடாது என்பதற்காகவே சோசலிஸ்ட் , செக்யூலர் என்ற இரு வார்த்தைகளையும் முகப்புரையில் இணைத்துக் கொண்டார்.

அரசியல் ஷரத்து 368-ன் படி ஆறு மாநிலங்களை தவிர  காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 42வது அரசியல் சட்ட திருத்த மசோதவிற்கு ஆதரவு அளித்தனர்.  பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்த முழுமையான விவாதம் இல்லாமல  இந்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. 1976-ம் வருடம் செப்டம்பர் மாதம் 1ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது, 1976-ம் வருடம் அக்டேபர் மாதம் 25ந் தேதி முதல் நவம் 2ந் தேதி வரை விவாதம் என்ற பெயரில் நடத்திய நாடகம், எதிர் கட்சி வரிசையில் ஒருவரும் இல்லாமல் தனக்கு தானே விவாதித்த்து ஜனநாயக கேலிக் கூத்தாகும். ஆகவே இந்திரா காந்தியின் அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.  இதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது, மேலும் இது பற்றிய முழு விவாதம் நடைபெற வேண்டும்.

ஏன் இதை நிரந்தரமாகவே நீக்க வேண்டும் என்பதற்கு அதிக காரணங்கள் உள்ளன.  செக்யுலர் அரசியல் கட்சிகள் பதவிக்கு வரும்போது  சட்டத்தின்படி ஆட்சி செய்யாமல், வாக்கு வங்கி அரசியல் நடத்துக்கிறது.  ராஜீவ் காந்தி காலத்தில், ஷா பானு வழக்கு முக்கியமானது, மதசார்பற்ற என்ற வார்த்தையை அரசியல் அமைப்பு சட்ட முகவுரையில் இணைத்தும் கூட, இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற வேண்டி, அரசியல் ஷரத்து 25-ன் படி நடக்காமல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.  சோசலிஸ்ட் என்பதற்கும் கூட நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் தனியார் மயம் என்ற கொள்கையை கடைபிடிக்கும் போது எவரும் வாய் திறக்க்வில்லை என்பதையும் நினைவுப் படுத்த வேண்டும்.

26 ஆண்டுகள் அதாவது 1950 முதல் 1976 வரை இந்த நாட்டில் மதசார்பற்ற தன்மையில் ஆட்சி நடந்தது.  இந்த நாடு ஒரு சோசலிச நாடாகவே இருந்தது.  காரணம் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளது. JUSTICE  Social economic and political –  LIBERTY  of thought expression belief faith and worship   –  EQUALITY   of status and of oppoutunity   என தெளிவாக குறிப்பிட்டு இருப்பதை கண்டு கொள்ளமால், சிறுபான்மையினரையும், ரஷ்யாவையும் திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே  திருத்தம் கொண்டு வரப்பட்டது.   1950-ல் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றியவர்களில் ஒருவர் அல்லாடி கிருஷணசாமி அய்யங்கார், அவர் கூறியதை பார்க்க வேண்டும்  so far as the Preamble is concerned,  Though in an ordinary statute.  We do not attach any imjportance to the Preamble,  all importance has to be attached to the Preamble in a constitutional  statute.   என்று கூறியதை நினைவு கூற வேண்டும்.

இரண்டாவது 1973-ல் நடந்த கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. எஸ்.எம். சிக்ரி, கூறியதையும் கவனிக்க வேண்டும்.  இரண்டு விதமான கருத்துக்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்   ஒன்று Preamble was the part of consititution   இரண்டாவது  Secular nature of the constitution  என்பதையும் தற்போது நினைத்து பார்க்க வேண்டும்  இறுதியாக ஒரு விஷயத்தை நன்கு கவனிக்க வேண்டும்.  1955-ல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் சோசலியம் பற்றிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது, 1955லிருந்து மத்தியில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியிலிருந்தது,  அப்போது அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் செக்யூலர் மற்றும் சோசலியம் என்ற வார்த்தையை  முகவுரையில் நுழைக்க எவரும் சிந்திக்கவில்லை.

ஆகவே தற்போது இது பற்றிய முழு விவாதம் நடத்த வேண்டும்.  அரசியல் காரணங்களுக்காகவும், சிறுபான்மையினரின் ஓட்டுக்காகவும்  செக்யூலர் என்ற பத்த்தை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.  இந்த வார்த்தையை மையப் புள்ளியாக வைத்துக் கொண்டு, அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளை திருத்தியதைப் பற்றி தற்போது எவரும் வாய் திறப்பதில்லை.

2 Replies to “இந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்”

  1. கழக கண்மணிகள் மற்றும் காங்கிரஸ் அறிவிலிகள், கம்யூனிச கைக்கூலிகள் பிடியில் இருந்து இந்தியனை விடுவித்தால் சில காலங்களில் சிந்தனையில் சிறிது முன்னேற்றம் அடைவோம். செயல்களில் வெற்றி பெறுவதும் திண்ணம்.

  2. பொதுவாக எந்த ஒரு சட்டம் திருத்தப்பட்டாலும் அந்த திருத்தப்பட்ட ஷரத்துக்களின் உள்ளே தகுந்த குறியீட்டின் மூலம் திருத்தப்பட்ட வருடம் குறிப்பிடப்படும். ஆனால் இந்திய அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவு இந்த திருத்தம் குறித்த எந்த குறியீட்டையும் கொடுக்கவில்லை. இப்பொழுது காணப்படுவது நோக்கின், இந்த அமைப்பு 1949முதல் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கியதாக தோற்றம் தருகிறது. என்னே நமது சனநாயக சிங்கங்களின் தந்திரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *