சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வை

இது ஏறக்குறைய 50 நிமிடங்கள் கொண்ட உரை.

சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள் அறிவற்றவர்கள் அல்ல. அவர்கள் எந்த அடிப்படையில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள்?

சனாதனத்தை காப்போம் என்று சொல்வோரும் எந்த சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவோம் என்று சொல்கிறார்கள்?

இந்த இரண்டு தரப்பினருமே சொல்லாமல் விடுகிற விடயங்கள் என்னென்ன?

சனாதனம் என்பது எப்படி பெண்ணடிமைத்தனம், சாதியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு வார்த்தையாடலாக மாறியது?

வரலாறு முழுக்க சனாதனம் என்பது எந்தெந்த அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

இந்த உரை பார்வைகள் பெறவேண்டுமென்பதற்காக இல்லை. எனவே ஆவேசமான தாக்குதல்கள், அர்த்தமற்ற நையாண்டிகள் உங்கள் விருப்பமென்றாலோ பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த விஷயத்திலும் செலவிட முடியாது என்றாலோ இதை நீங்கள் பார்க்காமல் செல்வதே உத்தமம். இது பார்வைகள் பெற அல்ல. எங்காவது உண்மை முழுமையாக பதியப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பதியப்பட்ட வீடியோ. எப்போதாவது இப்படி சில வீடியோக்கள் வெளியிடப்படலாம். இது முழுக்க முழுக்க என் திருப்திக்காக மட்டுமே பதிவு செய்து வெளியிடப்படும் வீடியோ.

One Reply to “சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வை”

  1. எந்த ஒரு தவறான செயலும் தற்காலத்தில்ல் நாடமுறையில் இருந்தால் அதை எதிர்த்து நடக்கும் சீர்திருத்தம் ஏற்பதில் தவறில்லை மாறாக பல் ஆயிரம் வருடத்திற்க்கு முன்பு இருந்த தவறுகளை ஒரு சமூகத்தில் அந்த நடமுறைகள் ஒதுக்கி வைத்தவர்களை இன்று பழி தீர்ப்பது முட்டாள்தனம் … இப்படி வன்மத்துடன் இறங்குவது சிதிருத்தம் அல்ல இன அழிப்பு…. அதை தான் சனாதன எதிர்ப்பு என்ற லேபில் இத்தி வெளிநாட்டு அரசியலை இங்கு வளர்ப்பதற்க்கு கூக்குரலிடும் போலி மதச்சார்பற்ற கட்சி கயவர்களின் அஸ்திரமாக உள்ளது….. தற்போதைய நடைமுறையில் உள்ள பிற மதத்தவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் தைரியம் இந்த போலி சீர்திருத்த வாதிகளுக்கு கிடையாது அவர்கள் எல்லோம் அன்னிய தேசத்து மதத்தை மறைத்து இந்துக்களின் தோலை போர்த்திக் கொண்டு நடிக்கிறார்கள்…. இவர்களின் நோக்கம் இந்து மத அழிப்பு ஒன்றே இலக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *