தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-2

<< முந்தைய பகுதி

இரண்டாவது சர்ச்சைக்கு வருவோம். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு என்ற சொல்லாடல் பற்றியது. இதுபற்றிய நேர்காணலில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.

பாண்டே : பாம்பையும் பார்ப்பானையும் கண்டா பாம்பைவிட்டுட்டு முதல்ல பார்ப்பானை அடின்னு சொல்லிகொடுத்திருக்கீங்க நீங்க….

வீரமணி : இது வடநாட்டு பழமொழி, ஒருநாளும் பெரியார் சொன்னது இல்ல…

பாண்டே : விடுதலையிலோ, உண்மையிலோ வந்ததில்லையா?

வீரமணி : ஒருநாளும் வந்ததில்லை… அப்படி காட்டிட்டா இந்த பதவியில் இருந்து விலகிவிடுகிறேன்.

இப்படி நடைபெற்ற நேர்காணலில் பாண்டே அவர்கள் மூன்று ஆதாரத் தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.

 1. பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும். (பெரியார், விடுதலை, 29-1-1954)
 2. கடவுளை ஒழிக்கவேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும். (பெரியார், விடுதலை, 19-10-1958)
 3. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பைவிட்டுவிடு, பார்ப்பானை அடி என்றார் பெரியார். (நூல் : இந்துத்துவாவின் படையெடுப்பு)

மேற்கண்ட 1,2 ஆதாரத்தைப் பற்றி பதில் எதுவும் சொல்லாமல் ஒதுக்கிவிட்டு திராவிடர் கழகம் மூன்றாவதாக பாண்டே கொடுத்திருக்கின்ற ஆதாரத்தின் உண்மைத் தன்மையை மட்டும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

பெரியார் எங்கே சொன்னார், விடுதலையில் எப்போது வந்திருக்கிறது என்பதற்கு மேற்கண்ட இந்துத்துவாவின் படையெடுப்பு என்ற நூல் ஆதாரம் தருகிறதா? அப்படி ஒருநூல் யாரால் எழுதப்பட்டது? அதை வெளியிட்டது யார்? வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? தகவல்களை காணோமே? பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தாலோ, திராவிடர் கழகத்தாலோ வெளியிடப்பட்டதா?

இதுதான் திராவிடர் கழகம் கேட்டிருக்கின்ற கேள்வி.

இனி விஷயத்திற்கு வருவோம். திரு. பாண்டே கேட்ட கேள்வி என்ன? திரு.வீரமணி அளித்த பதில் என்ன என்பதை பாருங்கள். திரு.பாண்டே பொதுவாக யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லாமல் (முக்கியமாக பெரியாரை குறிப்பிட்டு சொல்லாமல்) கேள்வி கேட்கிறார். ஆனால் வீரமணி அதற்கு பெரியார் அப்படி சொல்லவேயில்லை என்று வலிந்து பெரியார் பெயரை கூறுகிறார். அப்படி பெரியார் பெயரை கூறிவிட்டு அதற்கு விடுதலையில் ஆதாரம் உண்டா என்றுவேறு கேட்கிறார். தன் பதவியை விட்டுவிலகுவதாக கூறுகிறார். ஆனால் பாண்டே கேட்ட கேள்வி, பாம்பையும் பார்ப்பானையும் கண்டா பாம்பைவிட்டுட்டு முதல்ல பார்ப்பானை அடின்னு சொல்லிகொடுத்திருக்கீங்க நீங்க…. என்பதுதான். திராவிட இயக்கத்தவர்கள் சொல்லியிருக்கிறார்களே என்பதுதான் அந்த கேள்வியின் உள்அர்த்தம். அதற்கு பதில் சொல்லாமல் பெரியார் அப்படி சொல்லவேயில்லை என்று கேள்விக்கான பதிலை திசைமாற்றிவிட்டார் வீரமணி. எங்கள் இயக்கத்தவர்கள் யாருமே அப்படி சொல்லியதில்லை என்றுதானே பதில் வந்திருக்க வேண்டும்? அப்படி சொல்ல தைரியம் இல்லாமல் பெரியார் அப்படி சொல்லவில்லை என்கிறார்.

திரு.பாண்டே ”தான் கேட்ட கேள்விக்கான” ஆதாரத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்ட வீரமணி பெரியார் சொல்லியிருக்கிறாரா, விடுதலையில் வந்திருக்கிறதா என்றெல்லாம் திசைமாற்றுவது ஏமாற்றுத்தனத்தை தவிர வேறல்ல. இந்துத்துவாவின் படையெடுப்பு என்ற நூல் முழுக்க முழுக்க இந்துத்துவத்தை விமர்சிக்கின்ற புத்தகம். அந்த புத்தகம் இதோ :

இந்துத்துவ படையெடுப்பு 1 இந்துத்துவ படையெடுப்பு 2 இந்துத்துவ படையெடுப்பு 3

இதை எழுதிய ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிப்பாரா வீரமணி அவர்கள்? அல்லது இதை எழுதிய ஆசிரியர்கள் பொய்யை எழுதிவிட்டனர் என்பதை அவர்களே சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

பெரியாருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் பெரியார் அப்படி பேசியிருக்கிறார் என்பதை சொல்கின்றனர். ஆனால் யாருக்குத்தெரியும் இப்படி ஆதாரம் கேட்பார்கள் என்று!

பெரியார் அப்படி சொல்லவில்லை என்று சொல்கின்ற வீரமணிக்கு நாம் ஒரு ஆதாரத்தை காட்ட விரும்புகிறோம். பெரியார் அப்படி சொன்னதாக சாட்சாத் வீரமணியே சொல்லியிருக்கிறார் என்பதுதான் அது.

கீற்று இணையதளம் பெரியாரிய, இடதுசாரி சிந்தனையுள்ள இணையதளம். அத்தளத்தில் திருமதி வசந்தா கந்தசாமி எழுதிய புத்தகத்தை வெளியிட்டு திரு.வீரமணி பேசிய பேச்சை வெளியிட்டிருக்கிறது. அதில் வீரமணி பேசியதாவது: ‘….பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?…’ என்று பேசியிருக்கிறார்.

கீற்று இணையதள படம்

https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3414-2010-02-11-07-51-34

இந்த ஆதாரம் போதாதா வீரமணிக்கு? இதுவும் பொய் என்றால் கீற்று வெளியிடுகின்ற அத்தனையும் பொய் என்றே நாம் நினைக்கவேண்டும். இதை மறுக்கப்போகிறதா கீற்று இணையதளம்? அல்லது வீரமணிதான் மறுக்கப் போகிறாரா? அதுமட்டுமல்ல, தமிழ்ஓவியா பெரியாரியவாதி. அவரும் இந்த கட்டுரையை தன்னுடைய வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

tamil oviya

https://thamizhoviya.blogspot.in/2008/07/blog-post_4118.html

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ்ஓவியா இப்போது வீரமணிக்கு ஆதரவாக, பெரியார் அப்படி சொல்லவில்லை என்று பதிவிட்டிருக்கிறார் என்பதுதான். முரண்பாட்டின் மொத்த உருவமாக விளங்குபவர்கள் இவர்கள்.

இன்னொரு ஆதாரத்தையும் பார்ப்போம். விடுதலையில் பெரியார் சொன்னதாக வந்திருக்கிறதா என்று கேட்கிறார். விடுதலையில் ஒரு கவிதை வெளிவந்திருக்கிறது. அது இதோ

பெரியார் கைத்தடி

பாம்பையும்

பார்ப்பானையும்

கண்டால்..

பாம்பை விட்டு விடு

பார்ப்பானை அடி..!

பேசியது பெரியார்

கைத்தடி!!

பெரியாரின் கைத்தடி

https://www.viduthalai.in/page-1/77360.html

இதுதான் அந்த கவிதை. பெரியார் பேசியதாகவே இந்த கவிதையில் சொல்லப்பட்டிருக்கிறது, அதுவும் விடுதலையில் வந்திருக்கிறது. இதற்கு வீரமணி என்ன சொல்லப்போகிறார்?

இன்னொரு ஆதாரத்தையும் பார்ப்போம். வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் ஒரு செய்தியை விடுதலை வெளியிட்டிருக்கிறது. அதில் கும்பகோணத்தில் உள்ள திராவிடர் கழக அலுவகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு செய்தியை பதிவு செய்கிறது. வாசலின் வலது புறத்தில் பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி!என்ற வாசகம் எழுதி வைத்துள்ளது.

 வரலாற்றுசுவடுகள்

https://www.viduthalai.in/home/viduthalai/history-/41007-viduthalai.html

விடுதலையில் வந்திருக்கிறதா என்று கேட்கிற வீரமணி இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

பெரியாரியவாதியான அ.மார்க்ஸ் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் இந்த சொல்லாடல் பெரியார் கூறியதாக அவர் கூறுகிறார்.

அ.மார்க்ஸ் வலைதளம்

https://amarx.org/?p=412

அதே மார்க்ஸ் இப்போது என்ன கூறுகிறார் தெரியுமா? ‘பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி’ எனப் பெரியார் எங்கும் சொன்னதில்லை என விவாதத்தில் ஆசிரியர் வீரமணி சொன்னதற்கு எதிராக “ஆதாரம்” காட்டி விட்டதாகப் பசப்பித் திரிவோருக்குக் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் வைக்கும் ஆப்பு…. என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அ.மார்க்ஸ்.

அ.மார்க்ஸ் முகநூல்

கலிபூங்குன்றன் ஆப்பு வைத்திருக்கிறார் என்றால் முன்னர் அ.மார்க்ஸ் பெரியார் சொன்னதாக சொல்லியிருப்பது என்ன? அப்படியானால் அ.மார்க்ஸ் பொய் சொல்லியிருக்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்துவாரா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திரு.தொல்.திருமாவளவன்கூட பெரியார் இந்த சொல்லாடலை பயன்படுத்தியிருக்கிறார் என்று ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=sv4_zDrNK_Q

18.51 நிமிடத்திலிருந்து அந்த சொல்லாடல் வருகிறது. இப்போது வீரமணி என்ன சொல்லப்போகிறார்? திருமாவளவன் பொய் சொல்கிறார் என்று சொல்லப் போகிறாரா? பெரியார் சொல்லாத தை திருமா சொல்லி பெரியாரை கொச்சைப்படுத்துகிறார் என்று சொல்லப்போகிறாரா? அல்லது திருமாவளன் தான் பொய் சொல்லிவிட்டேன் என்று கூறப்போகிறாரா? அதையும் பார்ப்போம்.

திரு. பாண்டே கொடுத்த ஆதாரங்களைவிட அதிகளவு, வீரமணி எதிர்பார்த்த அளவு ஆதாரங்களை நாம் கொடுத்திருக்கிறோம். வீரமணி தன் பதவியை விட்டு விலகுவாரா? ஒருவேளை பதவியில் இருந்து விலகினாலும் விலகிவிடுவார். ஆனால் அந்தப் பதவியில் அவர் மகன் அன்பு வருவார் என்பதில் ஐயமில்லை. பாண்டே திரிபுவாதம் செய்கிறாரா அல்லது திராவிடர் கழகம் மறுப்பு என்ற பெயரில் திரிபுவாதம் செய்கிறதா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  திரு.வீரமணி தான் சொல்லியபடி செய்யப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

(தொடரும்)

32 Replies to “தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-2”

 1. பார்ப்பனை அடி என்று பெரியார் சொன்னதாக நான் கேள்விபட்டிருக்கிறேன் ! ஆனால் பிராமண பெண் மணியிடம் அடி பணிந்து கிடந்தவர்தம் இந்த வீர ( கோழை ) மணி . திராவிட கழக சொத்துக்கள் யாவும் தன மகனுக்கு வர வேண்டும் என்பதற்காக எந்த கட்சி ஆளும் கட்சியோ அது தான் சிறந்த கட்சி என்று பச்சோந்தியாயை திரியும் இவர்கள் ஒரு நாளும் திருந்த மாட்டார்கள் ! —— வாலை நிமிர்த்த முடியாது ! திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது !

 2. Well done.

  You could have given these evidences to Pandey before the interview was aired. The problem is: Pandey gave only the evidence of a book released by Hindutva group. Since Hindutva group is anti-EVR, anyone who saw the evidence on the screen that day, would definitely feel that Pande had no direct source i.e.direct from EVR. Veermani was on the spot that day, if we take only what was shown as evidence.

  Now that you have series of evidences (although all from others like Veeramani or Marx), allow others to give link to your articles here to Marx and Oviaya and Vidudalai.

  However, it would have been better if you trace still deeper and come up with an evidence which clearly shows that the statement was made by EVR. If that comes, all your other evidences will be rendered unnecessary.

  By the way, Venkatesan, it is a caste related problem – i.e. between DK and the Tamil brahmins. It is not about religion. Why are so you concerned with their dignity? Why didn’t you pass all these and ask one of them to write it here?

  Please remember, if such a statement is made against any other community, that community won’t need anyone to come to their support. They would take care of the rest. Why haven’t the community of Tamil parppanars rise in revolt against EVR and Co. ? Why do they need your support?

  The biggest problem of Hindu religion is the confusion between one caste and the whole religion. You haven’t understood it. Please separate the two and concentrate on the religion. Otherwise, others will be right to call Hindu religion Parppana Religion :-[

 3. ஆஹா ஆஹா அற்புதம் போங்கள். ”பொய்மையே பேசி பொழுதினை சுருக்கும் புழுத்தலை புலையனேன்” என்று தன்னையே கீழாக பேசிக்கொண்டார் ஒரு மாமனிதர். எனில், இது போன்ற ஜந்துக்களை என்னவென்று சொல்வது.

 4. கொஞ்சமாவது சூடோ சொரணையோ இருந்தால், வீரமணி முதல் “மலமனுப்பி” மார்க்ஸ் வரை அண்டப்புளுகு ஆகாசப்புளுகு புளுகியதற்காக பொதுவில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

  அப்படி ஆரம்பித்தால் எதற்குத்தான் எவ்வளவுதான் மன்னிப்பு கேட்பது என்கிறீர்களா ? அதுவும் சரிதான்.

 5. உலகிலேயே பகுத்தறிவு என்ற ஒன்றை பொதுமக்கள் பணத்தை திருடுவதற்கும்,பொய்யை மட்டுமே” உண்மையில்” வெளியிடுவதற்கும் பயன்படுத்தும் ஒரு மோசமான கூட்டமே இந்த திராவிட அல்லது திருட்டு கழகத்தினர்..இவர்களை பற்றி விரிவாக அறிவதற்கு,திரு.சுப்பு அவர்களின் “திராவிட மாயை”புத்தகத்தை படித்தாலே போதும்…

 6. தமிழகத்தில் திக என்பது திருடர்கள் கழகம் என்பது தெரிந்த ஒன்று. பின் அவர் தம் தலைவர் எவ்வாறு பேசுவர் என்று எதிர் பார்கிறீர்கள்.

 7. மானம் உள்ளவர்களுக்கான கேள்வி இது…அவன்தான் மானமே இல்லாத மாணமிகு-வாச்சே…….மானங்கெட்டவன்

 8. பொய் திருட்டு புரட்டு எல்லாம் இவனுங்களுக்கு கைவந்த கலை.ஏதோ பொழப்பு ஓடுது.

 9. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கைக்கூலியாக செயல்பட்டு வந்த ஈரோட்டு ராமசாமி முரண்பாடுகளின் மொத்த உருவமே. நமது சமுதாயத்திற்குள் மோதல்களை உருவாக்கி அதன்மூலம் தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்திற்கு உறுதுணையாக ஈவேரா போன்ற பெருந்தனக்காரர்கள் வீட்டு பிள்ளைகளை தங்கள் சுரண்டல் திட்டங்களுக்கு பரங்கியர்கள் பயன்படுத்திவந்தனர் என்பது சரித்திரம்.

 10. அன்புள்ள ம. வெங்கடேசன்,

  இந்தக் கட்டுரைகளை தமிழ் ஹிந்து தளத்தைத் தவிர்த்து வேறு எங்காவது எழுத முடியுமா? இங்கே ரெகுலராக வருபவர்கள் – நான் உட்பட – அனேகமாக இந்தக் கட்டுரைகளை ஆமோதிப்பவர்களே, எங்களுக்கு வீரமணியின் போலித்தனம் பற்றி இனிமேல்தானா தெரிந்து கொள்ள வேண்டும்? Preaching to the choir என்று ஆகிவிடுகிறது. ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்தில் பதிக்க முடிந்தால் கூட இன்னும் பெரிய அளவுக்கு, இதைப் பற்றி எல்லாம் பிரக்ஞையே இல்லாதவர்களிடமும் சென்றடையுமே?

 11. //ஆஹா ஆஹா அற்புதம் போங்கள். ”பொய்மையே பேசி பொழுதினை சுருக்கும் புழுத்தலை புலையனேன்” என்று தன்னையே கீழாக பேசிக்கொண்டார் ஒரு மாமனிதர். எனில், இது போன்ற ஜந்துக்களை என்னவென்று சொல்வது.
  //

  பொன் முத்துக்குமார், அற்புதம் போங்கள்! மாணிக்க வாசகர் தன்னையே கீழாகப்பேசி சிவபெருமானை வழிபடும் பாடலைப்போட்டு மணிவாசகரையும் வீரமணியையும் ஒரே தட்டில் வைத்துப்பேசும் உங்கள் செயல் என்னவென்று சொல்வது?

  மாணிக்கவாசகரின் பாடல்:

  அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே
  அன்பினில் விளைந்த ஆரமுதே
  பொய்மையே பேசி பொழுதினை சுருக்கும்
  புழுத்தலை புலையனேன் தனக்கு
  செம்மையே ஆய சிவா பதம் அளித்த
  செல்வமே சிவ பெருமானே
  இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன்
  எங்கெழுந்து அருளுவது இனியே

 12. Very good proof. Start posting the proofs as videos in youtube. Use twitter and facebook to spead these proofs then only we can expose the dirty DKs. You have prepared the proofs and well presented in this article. Try to spread it as much as possible. Great work. Vazhga Indhu Madham.

 13. /பொன் முத்துக்குமார், அற்புதம் போங்கள்! மாணிக்க வாசகர் தன்னையே கீழாகப்பேசி சிவபெருமானை வழிபடும் பாடலைப்போட்டு மணிவாசகரையும் வீரமணியையும் ஒரே தட்டில் வைத்துப்பேசும் உங்கள் செயல் என்னவென்று சொல்வது?//

  பொன். முத்துக்குமார் !! என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க ! எழுதுவதற்கு முன்னாடி BS அவர்களைக் கேட்டு பின்னர் எழுதி இருக்கலாமே.

  ”You could have given these evidences to Pandey before the interview was aired. //

  இதற்கான பதில் தான் மேலே கொடுத்துள்ளேன். ( பொன் முத்துக்குமார் அவர்கள் எந்த அர்த்தத்தில் எழுதி உள்ளார் என்று தெரிந்தும் அதை மாற்றி அவர் மேல் பழி சுமத்துகிறீர்கள் சபாஷ் !)

  //However, it would have been better if you trace still deeper and come up with an evidence which clearly shows that the statement was made by EVR. If that comes, all your other evidences will be rendered unnecessary.//

  இதற்கு மேல் ஆதாரம் என்றால் பெரியாரைத்தான் நேரில் கேட்க வேண்டும்.

  //By the way, Venkatesan, it is a caste related problem – i.e. between DK and the Tamil brahmins.//

  //The biggest problem of Hindu religion is the confusion between one caste and the whole religion. You haven’t understood it. Please separate the two and concentrate on the religion. Otherwise, others will be right to call Hindu religion Parppana Religion :-[//

  இதையெல்லாம் யாருக்கு சொல்கிறீர்கள் ? தி கா வுக்கு அல்லவா சொல்லவேண்டும் ?

  திரு கிருஷ்ணகுமார் அவர்கள் உங்கள் ரெவரெண்ட் என்றெல்லாம் அழைப்பது தவறோ என்று நினைப்பது உண்டு. இப்போது நீங்கள் ஹிந்து மதத்துக்கும், மாணிக்கவாசகருக்கும் பரிந்து பேசுவதைப் பார்த்தால்………..!!

 14. // பொன் முத்துக்குமார், அற்புதம் போங்கள்! மாணிக்க வாசகர் தன்னையே கீழாகப்பேசி சிவபெருமானை வழிபடும் பாடலைப்போட்டு மணிவாசகரையும் வீரமணியையும் ஒரே தட்டில் வைத்துப்பேசும் உங்கள் செயல் என்னவென்று சொல்வது? //

  BS, நான் சொன்னது அந்தளவுக்கு புரியாமலா உள்ளது ?

 15. rv,

  இவ்வகை கட்டுரைகளுக்கு தமிழ்ஹிந்து தளத்திற்கு வெளியே பிரசுர வசதி உள்ளது என்றா நினைக்கிறீர்கள் ?

  சில சமயம் மிக எளிய பின்னூட்டங்களையே தடை செய்கிற மகானுபாவர்கள் இந்த கட்டுரையையாவது வெளியிடுவதாவது. நல்ல நகைச்சுவை போங்கள்.

 16. //ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்தில் பதிக்க முடிந்தால் கூட இன்னும் பெரிய அளவுக்கு, இதைப் பற்றி எல்லாம் பிரக்ஞையே இல்லாதவர்களிடமும் சென்றடையுமே?//

  அன்புள்ள rv,
  The Hinduவின் உண்மையான பெயர் Anti Hindu.
  அதில் மட்டுமல்ல, எந்த ஒரு தினசரியிலும், மற்ற வாரப்பத்திரிகைளிலும், ஊடகங்களிலும், தமிழ் இந்து.காம் பிரசுரித்தது வெளியிடப்படமாட்டாது — ஏனெனில், அவர்கள் பிழைப்பு கெட்டுவிடும்.

  தெரிந்துகொண்டே இக்கேள்வியை எழுப்பி இருக்கிறீர்களே!

 17. தி.க. வீரமணி உட்பட பொய்யை சொல்லி அதை நிலைநாட்டு விரும்பும் அத்தனை பேருக்கும் ஆணித்தரமான விளக்கம் இந்தக் கட்டுரை. நீங்கள் எத்தனை உண்மைகளை எடுத்துக் கொடுத்தாலும், இந்தக் கருத்துக் குருடர்கள் தவறை தவறு என்று ஒப்புக்கொள்ளக் கூடியவர்கள் அல்ல, அந்த நாகரிகமும் அவர்களுக்குக் கிடையாது. ஜாதி வெறி இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறது. இவர்களிடம் போய் நீங்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும். இவர்கள் இப்படித்தான்.

 18. மானமிகு வீரமணி அவர்களே
  உங்கள் புளுகுக்கு அளவே இல்லையே

  வயதாகியும் ஆட்டம் அதிகமாவே இருக்கு.

  பெரியார் சொத்தை என்று தமிழ் நாட்டுக்கு எழுதி வைப்பீர்கள்

  இளிச்சவாய் தமிழன்.

 19. அன்பின் ஸ்ரீ ம வெங்கடேசன் அவர்கள் பகிரும் ஒவ்வொரு பதிவும் ஆழ்ந்த ஆதாரங்களால் ஆன சம்மட்டியடி கொடுக்கும் பதிவுகள். இந்த வ்யாசத்தொடர் அதில் மற்றொன்று.

  த்ராவிட ஜாதிக் காழ்ப்பாளர்களுக்கும் நகைச்சுவைக்கும் அப்படி பிரிக்க முடியாத சம்பந்தம் போல. சமீபத்தில் தமிழகத்திலிருந்து அரங்கேறிய…………… வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் விழியம்……… மானமிகு கி.வீரமணியார் என்ற சாரங்கபாணிக்கோனார்……… ரங்கராஜ் பாண்டேவுடன் நிகழ்த்திய…………… உரையாடல் என்னும் நகைச்சுவைத் தோரணம்.

  ரங்கராஜ் பாண்டேவுக்கு இந்த நிகழ்ச்சியைத் தயார் செய்ய ஒரு டீம் உழைத்திருக்கிறது என்று தெரிகிறது. மானமிகு சாரங்கபாணிக்கோனார் அவர்கள் கல்யாணப்பரிசு தங்கவேலு காமெடி சீன்களை பார்த்துவிட்டு நேரடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

 20. அண்ணா , ஆதாரங்களால் அடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே!
  தொடர்ந்து அடியுங்கள் !

 21. வெங்கடேசனின் முதற்கட்டுரைக்கு நான் போகவேயில்லை. அங்கு என் பின்னூட்டங்கள் கிடையா.

  இரண்டாம் கட்டுரை – அதாவது இக்கட்டுரைதான் என் பிர்ச்சினை. ஏன் தமிழ்.ஹிந்து.காம் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காக பரிந்து கட்டுரை போடுகிறது? ஏன் வெங்கடேசன் எழுதுகிறார்? இக்கட்டுரை எடுத்துக்கொண்ட சொற்றொடர் எந்த வழியில் இந்துமதத்தோடு தொடர்புடையது? ஒரு குறீப்பிட்ட ஜாதியினர் இழிவுபடுத்துகிறார்கள் என்றால், அஜ்ஜாதியினர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஏன் எதிர்க்கவில்லை? வேறொரு ஜாதியைப்பற்றி இதே மாதிரி சொற்கள் வீசப்பட்டால் அவர்கள் விடுவார்களா? அவர்களுக்கு முடியவில்லையென்றால், தமிழ்.ஹிந்து.காம் அவர்களுக்காக வருமா?

  நேற்று பீஹார் முன்னால் முதல்வர் மாஜியவர்கள் மாளவியாவின் சிலைக்கு மாலை போட்டுச்சென்றவுடன் உயர்ஜாதியினர் அச்சிலையைக் கழுவிவிட்டார்கள் எனச்செய்தி வந்ததே அதைப்பற்றி ஏன் தமிழ்.ஹிந்து.காம் எழுதவில்லை? அதுமதத்தினால் வரும் தீண்டாமையல்லவா? மாஜி (எலிகளை உணவாகக் கொள்ளும்) புலையர் குலத்தவர் என்று தெரிந்து அவர் மீது வீசப்படும் தீண்டாமையல்லவா? தேனியில் ஒரு தலித்துப்பையன் பூஜாரியாக மாரியம்மன் கோயில் வேலை செய்தான். அவனைத் தடுக்க முயன்றோர் தோல்வியுற்று. பின்னர் அவனைக்கொன்றசெய்தி எல்லாச் செய்தித்தாள்களிலும் வந்ததே? அது மதத்தில் வரும் தீண்டாமைக் கொடுமைதானே? அவனுக்காக இத்தளம் ஏன் பரிந்து கட்டுரை போடவில்லை? அவன் தாழ்ந்தவன். மாஜிக்காக ஏன் வரவில்லை? பார்ப்பன்ர் உயர்ஜாதி. உயர் ஜாதிக்கு மட்டுமா கரிசனம் ?

  என் முடிவுரை: இச்சொற்றொடர் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை வைத்துத்தான். அவர்கள் ஒரு தனிஜாதியாக தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் அச்சொற்றொடர் செய்தவருக்குமிடையே உள்ள தனிப்பட்ட சமூஹப்பிர்ச்சினை. இதற்கும் ஹிந்து மதத்துக்கும் தொடர்பில்லை.

  (Edited and published)

 22. பொன். முத்துக்குமார் மற்றும் அரிசோனன்,

  இன்று topical ஆக இருக்கும் விஷயத்தைப் பிரசுரிக்க விடுதலை, முரசொலி தவிர வேறு யாரும் தயங்கமாட்டார்கள், ஆனால் ஆதாரங்களைச் சேகரிக்கத் தேவையான உழைப்பைத் தரமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். தவறாக இருக்கலாம்.

  // எந்த ஒரு தினசரியிலும், மற்ற வாரப்பத்திரிகைளிலும், ஊடகங்களிலும், தமிழ் இந்து.காம் பிரசுரித்தது வெளியிடப்படமாட்டாது // தமிழ்ஹிந்துவும் அப்படித்தான், முதலில் தன் மூலமே பிரசுரிக்கப்பட வேண்டும் என்றுதானே எந்த ஊடகமும் விரும்பும்?

 23. யாருங்க இந்த பிஎஸ் இங்கே நடக்கும் விவாதத்துக்கு சம்பந்தமில்லாமல் உளருகிறார். அதையும் இங்கே வெளியிடுகிறீர்களே. இது அவசியமா? இங்கே கேள்வி பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பைவிட்டுவிடு பார்ப்பானை அடி என்ற கொடுஞ்சொல்லை த்வேசத்தினை ஈவெரா விதைத்தாரா? சொன்னாரா இல்லையா என்பது மட்டுமே. ஆம் ஆம் ஆம் என்று ஆதாரங்களை அடுக்கடுக்காகக்கொடுத்திருக்கிறார் ஆராய்ச்சியாளர் ஸ்ரீ ம வெங்கடேசன். முடிந்தால் ஆதாரங்கள் பொய் என்று நிரூபிக்கவேண்டும். மன சாட்சி இருந்தால் ஒத்துக்கொள்ளவேண்டும். இல்லையா கம் என்று இருக்கவேண்டும். சும்மா சும்ம சம்பந்தமில்லாமல் உளரக்கூடாது.

 24. அன்புள்ள வாசகர்களுக்கு

  நான் இந்த கட்டுரை எழுதியதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவு தரவேண்டும் என்ற காரணத்திற்காகவோ அல்லது தமிழ்இந்துதளம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும்தான் ஆதரவு தரும் என்பதை நிரூபிப்பதற்காகவோ எழுதவில்லை. திரு.வீரமணியின் முரண்பாடுகளை சுட்டிக்காட்டவே இந்த கட்டுரைகளை எழுதினேன். இதில் ஒருகுறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவு தரப்பட்டுள்ளது என்ற தோற்றம் இந்த கட்டுரையில் வெளிவந்துள்ளதா என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். ஒரு பழமொழியை பெரியார் சொல்லவில்லை என்று வீரமணி சொல்லியிருக்கிறார். ஆனால் பலரும் பெரியார் அப்படி பேசியிருப்பதாகவும், சில ஆதாரங்கள் இருப்பதாகவும் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

  அன்புடன்
  ம.வெங்கடேசன்
  கட்டுரை ஆசிரியர்

 25. //நான் இந்த கட்டுரை எழுதியதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவு தரவேண்டும் என்ற காரணத்திற்காகவோ அல்லது தமிழ்இந்துதளம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும்தான் ஆதரவு தரும் என்பதை நிரூபிப்பதற்காகவோ எழுதவில்லை. //

  சரி. தமிழ்.ஹிந்து.காமின் ஆசிரியர் குழுவில் இருப்பவர் என்பதால் இதை தமிழ்.ஹிந்து.காமின் பேச்சாகவே எடுத்துக்கொள்கிறேன். நன்றி திரு வெங்கடேசன்.
  எனினும், தலித்துகளுக்காக இந்துமதத்தில் ஒரு சமமான இடத்துக்காக தொடரந்து கட்டுரைகள் போட்டுக்கொண்டே இருப்பார் என நம்புகிறேன்.

  ஒரு தலித்து பூஜாரிப்பையன் கிராமத்துக்கோயிலொன்றில் இருந்தததால் (தேனி மாவட்டம்) அவன் மிரட்டப்பட்டு தற்கொலை செய்துகொண்டான்.

  இதே மாதிரி ஒரு பார்ப்பனர் அர்ச்சகர் மிரட்டப்பட்டு தற்கொலை செய்திருந்தால்…அது இத்தளத்தில் போடப்பட்டிருந்தால், மாஜிக்கு நேர்ந்த கதி உங்களின் எவரேனுமொருவருக்கு நேர்ந்திருந்தால்….இதே பின்னூட்டக்காரர்கள் சொற்களை அள்ளி வீசியிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் என் தாழ்மையான வேண்டுகோள் இது:

  உங்கள் ஜாதி உங்களுக்கு முக்கியமாக இருக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்கள் ஜாதியைத் தனிப்பட்ட முறையில் எவராவது தாக்கினால், அதை சமூகப்பிரச்சினையாக மட்டுமே பாருங்கள். அதை மதப்பிரச்சினையாக்காதீர்கள். ஏனென்றால், அது இம்மதம் பார்ப்பனருக்கென்று என்றால் மட்டுமே ஓடிவருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

  இப்படி வீரமணிக்கு எதிராக உஙகள் ஜாதி சார்பாக நீங்கள் படும் உணர்ச்சியில் ஒரு சொட்டு அந்த பூஜாரிப்பையனுக்கு என்று படுகிறீர்களோ அன்று நீங்கள் இம்மதத்தை உங்கள் சிரமேத்தி வைக்கிறீர்கள் என்பது தேற்றம். இம்மதம் வாழும். கர் வாபசி தேவையேயிருக்காது. The struggle for equality in the religion for dalits is not over. Please understand that; and lend your voice and support to the struggle wherever and by whichever way possible for you. Your support will make them feel that they are not without hope.

  நன்றி. மீண்டும் சந்திப்போம்.

 26. இந்த BS யாரு என்று தெரியாமலே பதில் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள். திரு கிருஷ்ணகுமார் என்று இருகின்றீர்கள்?

 27. அன்பின் ரெவ ரெண்டு ஜோ அமலன் அவர்களது விதண்டா வாதங்களை மறுப்பதற்கு அன்னார் க்ஷமிக்கவும்.

  \\\ Pandey gave only the evidence of a book released by Hindutva group. Since Hindutva group is anti-EVR, \\\

  பாண்டே கொடுத்த ஆதாரம் ஹிந்துத்வ குழும பதிப்பு என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள். பதிப்பு செய்தது எந்த ஹிந்துத்வக் குழுமம் என்று ரெவ ரெண்டு ஜோ அமலன் ஏசப்பரையோ……… அல்லது கெனாவில் அன்பர் ஈ.வெ.ராம்சாமி நாயக்கரையோ கேட்டு……..தமிழ் ஹிந்து தள வாசகர்களுக்கு அருள் வாக்கு அளிக்கவும்.

  \\\ இந்துத்துவாவின் படையெடுப்பு என்ற நூல் முழுக்க முழுக்க இந்துத்துவத்தை விமர்சிக்கின்ற புத்தகம். அந்த புத்தகம் இதோ : ………….

  ஹிந்துத்வாவின் படையெடுப்பு என்று ஹிந்துத்வத்தை விமர்சிக்கின்ற புத்தகம் ஹிந்துத்வ குழுமங்களால் ரிலீஸ் செய்யப்பட்டது என்று ஆய்வு பூர்வமாக கண்டு பிடித்து…… தமிழ் ஹிந்து தளத்தில் கருத்துப் பகிரும் ………ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களுடைய பஹூத் அறிவு மானமிகு கி.வீரமணியாருடைய பஹூத் அறிவுக்கு சளையில்லாததாகும் என்று வாசகர்காள் அறியக்கடவீர்.

  \\ ஏன் தமிழ்.ஹிந்து.காம் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காக பரிந்து கட்டுரை போடுகிறது? \\

  விதண்டா வாத ப்ரியரான ரெவ ரெண்டு ஜோ அமலன் அவர்களுக்கு வ்யாசத்தின் இந்தப் பகுதிக்கும் ஜாதிக்கும் லவலேசமும் சம்பந்தம் இல்லை என்று தெரியும்.

  ஜாதியின் பெயர் காணப்பட்டதாலேயே அது ஜாதி சார்ந்த வ்யாசம் ஆகி விடாது……… அஃதாகப்பட்டது வாலி என்ற பார்ப்பன கவிஞரையோ அல்லது சங்கராசார்யார் படம் எடுத்த அய்யர் அவர்களை ரெவ ரெண்டு ஜோ அமலன் விதந்தோதி விட்டதாலேயே …..அவர் பார்ப்பன ஜாதிப்பெருமை பேசுபவர் என்று சொல்வது எப்படி பஹூத் அறிவு ஆகுமோ …….அப்படியே……. இந்த வ்யாசத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பார்ப்பனர்களைப் பற்றிச் சொல்லிய வாசகத்தில் உள்ள ந்யாயம் அல்லது அன்யாயம் பற்றி இந்த வ்யாசம் பேசினால் தான்……… இந்த வ்யாசம் ஜாதி பற்றிப் பேசும் வ்யாசம் ஆகும். பார்ப்பனர்களுக்கு ஆதரவாகப் பேசும் ஒரு வ்யாசம் ஆகும்.

  இங்கு விவாதத்தில் உள்ளது……….

  பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி…… என்று இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சொன்னதே இல்லை என்று ……… மானமிகு கி.வீரமணியார் தந்தி தொலைக்காட்சியில் புளுகிய சமாசாரம்.

  ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இப்படிச் சொன்னாரா இல்லையா என்பதை விட………. மானமிகு கி.வீரமணியார் இவ்வாசகத்தை ஈ.வெ.ரா சொன்னதாக …….. முன்னர் சொல்லியுள்ளாரா என்பது முக்கியம்.

  ஸ்ரீமான் ம.வெங்கடேசன் அவர்கள் …….. மானமிகு கி.வீரமணியார் அவர்களே மேற்கண்ட வாசகத்தைப் பெரியார் சொல்லியுள்ளதாக எங்கெங்கெல்லாம் ஆதாரம் உள்ளது என்று புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்.

  ………………

  ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள்……..அதை அப்படியே முழுப்பூசணிக்காயில் போட்டு மறைத்து ………….. உம்முடைய அவதாரக் குசும்புத்தனத்தைக் காட்டி……. இங்கு விவாதிக்கப்படும் விஷயம் ஜாதி சார்ந்தது என்று மடை மாற்றும்……….. அயோக்யத்தனத்தை மானமிகு கி.வீரமணியாரை விட வெட்கம் மானம் குறைந்து செய்ய விழைகிறீர்கள்.

  வீரமணியார் மட்டுமின்றி மார்க்ஸ் அந்தோணிசாமியார், விடுதலைப் பத்திரிக்கையில் பெரியார் இந்த வாசகத்தைச் சொல்லியுள்ளதாக ஆயிருக்கும் ப்ரசுரம், ஓவியா அவர்கள் தானே அப்படியொரு கருத்தைப் பகிர்ந்து…… இன்று அதை மறுப்பது…..

  விவாதத்திற்கான பொருள்……..

  அன்பர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் அப்படி ஒரு கருத்தை சொல்லவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் அப்படி ஒரு கருத்தை சொல்லியதாக இது நாள் வரை கி.வீரமணி முதல் பற்பல ஈ.வெ.ராமசாமி நாயக்க பக்தகோடிகள் ………. இந்தக் கருத்தை எண்ணிறந்த முறை வாந்தி எடுத்துள்ளமை…………. பொய்யாகாது இல்லையா……… குறைந்த பக்ஷம் தாங்கள் இது வரை பொதுதளத்தில் இப்படி தொடர்ந்து பேத்தியுள்ளது தப்பு என்று இந்த பஹூத் அறிவாளர்கள் கண்ணியமாக ஒப்புக்கொள்வார்களா?

  \\ However, it would have been better if you trace still deeper and come up with an evidence which clearly shows that the statement was made by EVR. \\

  அறிவுச் சுடரான ……..மடைமாற்றல் திலகம் ………ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ……..அவர்களது குசும்பு மதி அறிய வேண்டிய விஷயம்………. தேவையான ஆராய்ச்சி ……….. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இதை சொல்லியுள்ளாரா இல்லையா என்பது இல்லை……….. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இப்படித்தான் சொல்லியுள்ளார் என்று த்ராவிட விசிலடிச்சான் குஞ்சப்பனார்கள் இதுவரை பொது தளத்தில் சொல்லியுள்ளார்களா இல்லையா என்பது தான்.

  பேத்துவதையே தொழிலாகக் கொண்ட……….. முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கியான ……… ஜோ அமலன் பினாத்து பினாத்தென்று பினாத்தியதில் கூட எனக்கு வருத்தமில்லை. ஜாதிக்கும் இந்த வ்யாசத்தின் மையக்கருப்பொருளுக்கும் லவலேசமும் சம்பந்தமே இல்லை என்ற போதிலும்……….. ஜோ அமலப் பினாத்தல்களுக்கு சஹோதரர் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் மெனக்கெட்டு நாலுவரி எழுத முனைந்தது சலிப்பளிக்கிறது. கடுப்பளிக்கிறது…………….. ஸ்ரீமான் ம.வெ. அவர்களுடைய ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னர் கடும் உழைப்பு உள்ளது என்று தமிழ் ஹிந்து தள வாசகர்களுக்கும் உலகத்துக்கும் தெரியும்…… எதற்காக இப்படி விழலுக்கு அவர் நீரிறைக்க வேண்டும்.

 28. ரெவ ரெண்டு ஜோ அமலன் அவர்களுக்கு தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடாமலா இருக்கும்

  \\ கர் வாபசி தேவையேயிருக்காது. \\

  கர் வாப்சி ஏன் தேவையில்லை. சில்சாமுக்கு ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ வாக்கு தத்தம் கொடுத்து ஹிந்துக்களையெல்லாம் க்றைஸ்தவர்களாக மாற்ற வேண்டும் என்ற அவாவிற்காகவா?

  \\ The struggle for equality in the religion for dalits is not over \\

  Sure, relentless efforts are required for equality. For that what one needs is dedication. For that one needs participation in RSS Shakas. prove one’s commitment ………… to play, do physical exercise, eat food, sing patriotic songs and do social work with all Hindu brethern…….. and why not even with moslem and christian brethern who also attends many shakas these days……. on a day to day basis……..

  It is this regular bondage of svayamsewaks which make them to work for unity of Hindus and get success in places like uthapuram.

  \\ எனினும், தலித்துகளுக்காக இந்துமதத்தில் ஒரு சமமான இடத்துக்காக தொடரந்து கட்டுரைகள் போட்டுக்கொண்டே இருப்பார் என நம்புகிறேன்.\\ இதே மாதிரி ஒரு பார்ப்பனர் அர்ச்சகர் மிரட்டப்பட்டு தற்கொலை செய்திருந்தால்…அது இத்தளத்தில் போடப்பட்டிருந்தால், மாஜிக்கு நேர்ந்த கதி உங்களின் எவரேனுமொருவருக்கு நேர்ந்திருந்தால்….இதே பின்னூட்டக்காரர்கள் சொற்களை அள்ளி வீசியிருப்பார்கள். \\\

  பொய்யிலே பிறந்து (பொய் அவதாரமெடுத்து) பொய்யிலே வளரும் பேத்தல் பெருமானான ஜோ அமலன் அவர்கள் இந்த தளத்தின் எந்த வாசகர்கள் பார்ப்பனர்களுக்கு பக்ஷபாதமாகவும்……. தலித் சஹோதரர்களுக்கு பாராமுகமாகவும் கருத்துப் பதிந்துள்ளார்கள்……… எப்போது……. எந்த வ்யாசத்தில் …….. என்று குறிப்பாகப் பகிரவும்……..

  அனைத்து ஹிந்துக்களுக்காகவும்…… தலித்துகளுடைய மேன்மைக்காக தொடருந்து கருத்துப்பகிரும் தமிழ் ஹிந்து தள வாசகர்களை ………. ஜாதி சார்புடையவர்களாகவும் தலித் சஹோதரர்களுடைய மேன்மையில் அக்கறை இல்லாதவர்களாகவும் சித்தரிக்க முனையும் …………… க்றைஸ்தவ சார்புடைய ஜோ அமலன் அவர்களுடைய கருத்து ஆதாரமில்லாதது……… பொய்யானது. இழிவான நோக்கமுடையது.

  இதே தளத்தில் ஸ்ரீமான் தொல் திருமாவளவன் அவர்களுக்காக குளவியார் அவர்கள் எழுதிய வ்யாசத்தையும் அதைத் தொடர்ந்த விவாதங்களையும் வாசித்து ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் தனது ஏசப்பரிடம் பொய் பேசுவதற்காக பாவமன்னிப்பு கேட்டுக்கொள்வாராக.

 29. பாதிரி ஜோ அமலன் அவர்களே,
  விவிலியம் நிறத்தையும் இனத்தையும் போதிக்கிறது, அதன்படி திராவிடரகள் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டவர்கள் என ஈராஸ் பாதிரியார் எழுதினார்களே. கோவாவில் கத்தோலிக்கர் 3000 கோவில்களை இடித்ததையும் சர்ச் மத விசாரணை எனச் ச்ய்த சித்தரவதைகளையும் நூலாக்குவதைத் தடுத்ததை தமிழ் மக்களுக்கு சொல்லுன்க்களேன்.

  கிரேக்க புதிய ஏற்பாடு ஏடுகளில் இன்று மிகவும் போற்றப்படும் பேராசிரியர் பார்ட் எர்மான், முழுதும் பிற்கால போர்ஜரி என்கிறார்.
  Forged: Writing in the Name of God–Why the Bible’s Authors Are Not Who We Think They Are
  https://www.amazon.com/Forged-Writing-God-Why-Bibles-Authors/dp/B006QS02F8

  இஸ்ரேல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி – பழைய ஏற்பாடு ஆய்வில் போற்றப்படும் பேராசிரியர் தாமஸ் தாம்சன் ஓட் முழுதும் ஏசுவிற்கு 100 ஆண்டு முன்பு தான் புனையப்பட்டது என்கிறார். பழைய ஏற்பாடு காலத்தில் இஸ்ரேல் என ஒன்று இருந்ததே இல்லை என்கிறார்.
  The Mythic Past: Biblical Archaeology And The Myth Of Israel
  https://www.amazon.com/The-Mythic-Past-Biblical-Archaeology/dp/0465006493
  சாக்கடல் சுருள்கள்படி, இஸ்றேலின் சிறு எல்லை தெய்வம் யாவே தன் ஆலயம் எனச் சொன்னது சமாரிய கெர்சிம் மலைதான்.
  https://indianschristians.wordpress.com/2015/02/03/%e0%ae%aa%e0%af%88%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/
  பைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்
  70% அதிகமான தமிழர் மெய்ய்யலுக்கு விரோதமாய் பாலைவன கிறிஸ்துவ மததிற்கு மதம் மாற்றப்பட்ட பட்டியல் இன மக்கள் கிறிஸ்துவ தியாலஜி படித்தாலும் பாதிரி பதவிகள் மறுக்கப் படுகின்றனவே. தலித் கிறிஸ்துவருக்கு இட ஒதுக்கீடு எனப் பேசுச்ம் சர்ச் அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப பாதிரி, பேராயர் பதவிகளில் முதலில் ஒதுக்கீடு செய்யுங்கள் எனக் குரல் தந்துள்ளீரா.

  இயேசுவின் உளறல்களும் வரலாற்று உண்மைகளும் -https://pagadhu.blogspot.in/

  எனவே மேலுள்ள நூல்களை தமிழ்படுத்தி உண்மையை சர்ச்சிற்கு சொல்லி,
  தன் சாயலில் கடவுள் மனிதனைப் படைத்தார், மனித உடம்பே கடவுள் ஆலயம், தலைமுடி எண்ணிக்கை கடவுள் நிர்ணயித்தது எனச் சொல்லும் விவிலியம், கடவுளுக்கு ஒரு மனிதனை எந்த ஊரில், எந்த நாட்டில், எந்தப் பெற்றோருக்கு எம்மதத்தில் பிறக்க வைக்கவேண்டும் எனத் தெரியாதா.
  கடவுள் விரோத மதமாற்றத்தை தடுக்க குரல் கொடுங்களேன்.

 30. //பாதிரி ஜோ அமலன் அவர்களே,//

  Dev Solomon

  A challenge is thrown at you. If you are a good human, accept it:

  SHOW PROOF THAT I AM A CHRISTIAN.

  //ரெவ ரெண்டு ஜோ அமலன்//

  A challenge is thrown at you. If you are a man, accept it.

  SHOW PROOF THAT I AM A CHRISTIAN.

  Prove yourself here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *