பெரியாரின் மறுபக்கம் – பாகம் 9 (பெரியார் திடல் கொள்கைக்காக அல்ல! பணத்திற்காக!)

பெரியார் திடல் வரலாறு!

periyar_marubakkam”இந்த பெரியார் திடல் மன்றத்திற்கு ஒரு வரலாறு உண்டு. ஒரு தடவை தந்தை பெரியார் அவர்கள் செயிண்ட் மெமோரியல் ஹாலில் மாநாடு கூட்ட வேண்டுமென்று கேட்டபோது அய்யாவின் கொள்கையை கேட்டுவிட்டு அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படியானால் இங்கேயே ஒரு பொது மண்டபம் அமைப்போம் என்று இந்த மண்டபத்தை அமைத்தார்கள். அப்போது அங்கே இருக்கிற எல்லோரையும் அழைத்து தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்:-

நாங்கள் கேட்டோம், மறுத்துவிட்டார்கள்-உடனே எனக்கு என்ன தோன்றிற்று? பொதுமண்டபம் ஒன்று சென்னையிலே இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் பயன்படவேண்டும். எனக்கு மாறுபட்ட கருத்து உடையவர்கள் கேட்டாலும் கொடுக்கவேண்டும், தைரியமாக.இன்னாருக்கத்தான் என்று இருக்கவேண்டிய அவசியமில்லை. ”பொது மண்டபம்” என்ற முறையிலே-நமக்கு அவர்கள் மறுத்ததற்கு நேர் எதிரிடையாக நீங்கள் நடக்க வேண்டும்…என்று சொன்ன காரணத்தினால்தான் இன்றைக்கு அய்யா அவர்கள் வகுத்த அந்த நெறிப்படி இங்கே அனைவருக்கும் பொதுவுக்குப் பயன்படும்படி இந்த மண்டபம் அமைக்கப்படுகிறது’’ என்று வீரமணி அவர்கள் ‘சங்கராச்சாரி யார்’ என்ற நூலிலே கூறுகிறார்.

மேலும் 31-03-1994 அன்று சன் டி.வி.யில் ரவி பெர்னாட் அவர்கள், ‘‘பெரியார்திடலில் தீ மிதி நடத்த வேண்டும் என்றால் ஒத்துக்கொள்வீர்களா?’’ என்று கேட்டதற்கு வீரமணி அவர்கள், ”தாராளமாக ஒத்துக் கொள்வோம். அதற்கு அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியையும் நாங்கள் நடத்துவோம்” என்றும்

அதைத் தொடர்ந்த கேள்விக்கு ”பெரியார் திடல் எங்களுடைய கட்சியினுடைய மன்றம் அல்ல” என்றும் பதில் கூறியுள்ளார்.

…வீரமணி சொல்கின்ற இந்த பெரியார் திடல் வரலாற்றை ஆராய்ந்தால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் எவ்வளவு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறார் என்பது புலனாகும். மற்றொன்றையும் யோசிக்கும்போது ஈ. வே. ராமசாமி நாயக்கரே, மூடநம்பிக்கை வளர ஏற்படுத்தித்தந்த இடம்தான் பெரியார் திடல் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய இந்த வழி எப்படி தவறானது என்பதை இப்போது பார்க்கலாம்.

மெமோரியல் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்? இடம் கொடுக்காதவர்களுக்குத்தானே நஷ்டம்! அந்த இடம் இல்லையென்றால் வேறு இடத்தில் நடத்தலாம் அல்லவா? அதைவிட்டுவிட்டு அவர் இடம் தரவில்லை. அதனால் பொது மன்றம் ஒன்றை ஆரம்பித்தேன் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் சொன்னது பகுத்தறிவின் செயலா? அதுவும் கொண்ட கொள்கைக்கு ஆபத்து ஏற்படுவதென்றால் அது வீண்வேலை தானே!

உதாரணமாக ஒன்றை நினைத்துப்பாருங்கள்.

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பேட்டியை ஒரு பத்திரிகை அவர்களின் கொள்கைக்கு முரணாக இருப்பதால் வெளியிடவில்லை என்பதற்காக எல்லோருடைய கொள்கைகளையும் சொல்லும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறேன் என்று வீரமணி சொல்வாரா?

இங்கே ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

veramani14.08.98 அன்று கோலாலம்பூரில் வீரமணி தன்னுடைய நிகழ்ச்சிக்கு இடம் கொடுக்காததைப் பற்றி பேசும் போது ”நண்பர்களே கீதையின் மறுபக்கம் நூலை அறிமுகப்படுத்த இங்கு இடம் தர மறுத்தால் இன்னொரு இடத்தில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுப் போகிறோம். புத்தகம் பரவுவதில் எங்களுக்கொன்றும் எந்தச் சங்கடமும் இல்லை. இடம் கொடுத்தவர்களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கக்கூடாது என்ற உணர்வோடு நாங்கள் நடக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இதை ஒரு பெரிய குற்றமாகக் கூடக் கருதவேண்டிய அவசியமில்லை. ஆகா! இந்த இடத்தில் தான் பண்ணவேண்டும். அந்த இடத்தில்தான் பண்ணவேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள்” என்று கூறுகிறார்.

ஆனால் இப்படி பேசியிருக்கின்ற வீரமணி என்ன செய்திருக்க வேண்டும்? ஈ. வே. ராமசாமி நாயக்கரின் வழிப்படி, கொள்கைப்படி, கோலாலம்பூரில் ஒரு பொதுமன்றத்தைக் கட்டி எல்லோருக்கும் பொதுவாக வாடகைக்கு விட்டிருக்கவேண்டுமா? இல்லையா? அதையும் விட்டுவிட்டு ஈ. வே. ராமசாமி நாயக்கரின் வழியையும் விட்டுவிட்டு, இன்ன இடத்தில்தான் பண்ணவேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்று கூறுகிறாரே, அப்படியென்றால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவுவாதி இல்லையா? ஒருவர் இடம் கொடுக்கவில்லை என்றால் மற்றொரு இடத்தில் நடத்திடவேண்டும். அவர்தான் பகுத்தறிவுவாதி என்று வீரமணியே சொல்கின்றபோது ஈ. வே. ராமசாமி நாயக்கர் செய்தது பகுத்தறிவின் செயல் அல்ல என்பது தெளிவாகின்றதே! வீரமணிக்கு இருந்த பகுத்தறிவு கூட ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு இல்லையே!

இது ஒருபுறம் இருக்க,

பொதுமன்றம் ஆரம்பித்ததன் மூலம் இவர்களே இவர்கள் கொள்கைக்கு முரணாக நடந்துகொள்கிறார்கள். எப்படியென்றால் பெரியார் திடலில் அடிக்கடி அற்புத சுகமளிக்கும் தெய்வீக கூட்டங்கள் நடைபெறுகின்றன. காது கேட்காதவர்களுக்கு காத கேட்கவைப்பது, குருடர்களை பார்வையடையச் செய்வத போன்ற நிகழ்ச்சிகள் பக்தியின் பெயரால் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 500 பக்தர்களுக்கு மேல் வருகின்றார்கள். நிகழ்ச்சி நடக்கும்போது மேலும் அங்கே பக்தி ஊட்டப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் போய் விடுகிறார்கள். ஆனால் அடுத்த நாள் வீரமணி சொல்கின்றது போல, மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தினால் அற்புத சுகமளிக்கும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் அல்லது பக்தர்கள் மறுநாள் நடக்கும் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா?

பெரியார் திடலில் தீமிதி விழா நடந்தால் சுமார் 500 பக்தர்களுக்கு மேல் வருவார்கள். ஆனால் அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடந்தால் முதல் நாள் தீமிதி விழாவில் வந்தவர்கள் இதற்கு வருவார்களா? கண்டிப்பாக வரமாட்டார்கள். ஆகவே பெரியார் திடலை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் இவர்களே பக்தியை ஏற்படுத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்! இதுதானா மக்களை பகுத்தறிவுவாதிகளாக மாற்றும் முறை?

பெரியார் திடலில் அடிக்கடி இயேசு ஜீவிக்கிறார் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அடுத்த நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதா? இல்லவே இல்லை! ஆதாரத்தோடு பகுத்தறிவுவாதிகள் இதை நிரூபிக்கமுடியுமா? அப்படி ஒருவேளை நடத்தப்பட்டிருந்தால் இயேசு ஜீவிக்கிறார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எத்தனைபேர் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்?

எலியை வயலில் அனுமதித்துவிட்டு, வயல் பாழாகிறதே என்று அலறிவிட்டு பின்பு எலியை விரட்டுகிறேன் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ-ஏமாற்றுத்தனமோ…

பாம்புக்கு பால் வைத்துவிட்டு ‘பாம்பு ஒழிப்பு’ நிகழ்ச்சி நடத்தினால் அது எவ்வளவு முட்டாள்தனமோ-ஏமாற்றுத்தனமோ…

திரைப்படம் எடுப்பதற்கு பணம் தந்துவிட்டு ”திரைப்படம் ஒழிப்பு” போராட்டம் நடத்தினால் அது எவ்வளவு முட்டாள்தனமோ… ஏமாற்றுத்தனமோ.. அதேபோல்தான் பெரியார் திடலில் பக்தியை பரப்பும் இயேசு ஜீவிக்கிறார் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு இடம் கொடுத்துவிட்டு, அவர்கள் போன பின்பு..(கவனிக்கவும்) அவர்கள் போன பின்பு-அய்யோ! மக்களுக்கு பக்தி பரவுகிறதே, மூடநம்பிக்கை பரவுகிறதே! என்று அலறிவிட்டு, பக்தியை ஒழிக்கிறேன் என்னும் பேரால் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துவதும் முட்டாள்தனமான செயலாகும்.

பகுத்தறிவுவாதிகளே! ஆங்காங்கே கூட்டம்போட்டு மக்கள் பக்தி போதையில் அறிவை இழக்கிறார்கள் என்று உரக்க கத்துகிறீர்களே அந்த பக்தி போதை வளர நீங்கள் வாடகைக்கு இடம் கொடுப்பதன் மூலம் ஒரு காரணியாக இருக்கின்றீர்கள் என்பதை மறுக்கமுடியுமா?

தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றால் அதற்கு மறுநாள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துவோம் என்று வீரமணி சொல்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தீமிதி நிகழ்ச்சி நடந்தால் மூடநம்பிக்கை வளர்கிறது. அதனால்தான் நாங்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்றுதானே அர்த்தம்! பிறகு ஏன் மூடநம்பிக்கை வளர பெரியார் திடலில் முதலில் அனுமதி தரவேண்டும்? தாங்களே அதை வளர்த்துவிட்டு அதை நாங்கள் ஒழிக்கிறோம் பாருங்கள் என்று சொல்வதுதான் பகுத்தறிவா?

எல்லோருக்கும் இடம் கொடுப்பதன்மூலம் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு தெரிகிறதாம்! மெமோரியால் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் அவர் கொள்கையில் வழுவாமல் நிற்கிறார் என்றுதானே பொருள், ஈ. வே. ராமசாமி நாயக்கர் இடம் கொடுக்கிறார் என்றால் அங்கே பண்பாடு எங்கே தெரிகிறது? கொள்கை நழுவல்தானே தெரிகிறது. பண்பாட்டிற்காக என்றால் இலவசமாக கொடுத்திருக்கலாமே! மாற்றுக் கொள்கை உடையவர்களுக்கு கூட தங்களுடைய இடத்தை இலவசமாக தருகிறார்களே என்று மக்கள் இவர்களை புகழ்ந்திருப்பார்களே! ஆனால் உண்மையில் இது பண்பாட்டிற்காக அல்ல.

பெரியார் திடல் பணத்திற்காகவே!

பணத்திற்காக! பணத்திற்காக மட்டுமே!!

தங்களுடைய இயக்கத்திற்கு பணம் சம்பாதிக்கவே ஈ. வே. ராமசாமி நாயக்கர், பெரியார் திடலை கட்டினார் என்பதுதான் உண்மை. இல்லையென்றால் ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய சொந்தப் பணத்தில் இதைக்கட்டியிருக்கலாமே. இதை விட்டுவிட்டு மக்களிடம் பணம் வசூலித்துதானே இந்த மன்றத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கர் கட்டினார். மக்கள் பணம் தரவில்லை என்றால் இதை கட்டியிருப்பாரா ஈ. வே. ராமசாமி நாயக்கர்? தன்னுடைய சொந்தப் பணத்தில் இதைக் கட்டியிருந்தால் பண்பாட்டிற்காக என்று சொல்லலாம். ஆனால் மக்களிடம் வசூலித்த பணத்தில் கட்டிவிட்டு பண்பாட்டிற்காக கட்டினார் என்று சொன்னால் அதை நம்புவன் முட்டாளாகத்தான் இருப்பான். அதனால்தான் ஈ. வே. ராமசாமி நாயக்கரும் தன்னுடைய இயக்கத்திற்கு முட்டாள்கள்தான் வேண்டும் என்றார். அந்த அழைப்புக்கிணங்கித்தான் வீரமணியும் இயக்கத்தில் சேர்ந்தது. தற்போது ஈ. வே. ராமசாமி நாயக்கர் செய்த முட்டாள்தனமான காரியம் என்றும் தெரிந்தும் அதை பண்பாட்டிற்காக என்று வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்!

பெரியார் திடலின் நோக்கம் பண்பாடு அல்ல. பணம் என்பதை இவர்கள் வாடகை அதிகமாக வாங்குவதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதில் இன்னொரு விஷயம்.

பெரியார் திடல் தங்களுடைய கட்சியினுடையது அல்ல என்று வீரமணி கூறுகிறார். அப்படியென்றால் அது யாருடையது? அது யார் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகிறது? அதனுடைய தலைவர், செயலாளர் என்பவர்கள் யார்? அந்த வாடகைப் பணம் யார் வசூலிக்கிறார்கள்? இது போன்ற விஷயங்களை வீரமணி சொல்லியிருக்க வேண்டாமா?

இது எங்கள் கட்சியினுடையது அல்ல என்று வீரமணிதான் சொல்கிறாரே தவிர, அதன் உரிமையாளர் அல்லது பெரியார் திடலை நிர்வாகிப்பவர் இது தி.க. வினுடையது அல்ல என்று இதுவரை ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லையே ஏன்? பெரியார் திடலை விமர்சிக்கும்போது அதை எதிர்த்து வீரமணி மட்டுமே குரல் கொடுக்கிறாரே தவிர அதனை நிர்வாகிப்பவர் அல்லது அதனுடைய தலைவர் குரல் கொடுத்ததில்லையே ஏன்? பெரியார் திடல் எந்த அமைப்பின்கீழ், யாருடைய கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது என்று இனிமேலாவது வீரமணியோ அல்லது அதனை நிர்வாகிப்போரோ சொல்வார்களா?

வீரமணி பெரியார் திடல் எங்கள் கட்சியினுடையது அல்ல என்று கூறுகிறார். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

anaimuthu2
ஆனைமுத்து

திருச்சி வே. ஆனைமுத்து கூறுகிறார்:-

இயக்க நிதி என்பது ”சுயமரியாதை ஸ்தாபன-திராவிடர் கழக நிதியே ஆகும் என்பதையும் அய்யாவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

”சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியவற்றிற்குக்கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன்; கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள்; அல்லது பொது மக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள்; அவ்வளவுதான்”(விடுதலை, தலையங்கம் 26-08-1972) அய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் சென்னை பெரியார் திடல் மனை வாங்கவும், கட்டடங்கள் கட்டவும், ”திராவிடர் கழகக் கட்டட நிதி” என்ற பேரால் தான் கழகத் தோழர்கள் வசூலித்ததும், பொதுமக்களே முன்வந்தும் அய்யாவிடம் ரூபாய் இரண்டரை லட்சம் அளிக்கப்பட்டது.

(நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்)

வே. ஆனைமுத்து சொல்வதன் மூலம் நமக்கு தெரிவதென்ன?

திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திடல் இரண்டும் ஒன்றுதான் என்பதுதானே!

திராவிடர் கழகம் வேறு, பெரியார் திடல் வேறு என்று வீரமணி சொல்வது பொய்தானே!

மேலும் ஒரு கேள்வி.

இந்து முன்னணியோ, ஆர். எஸ். எஸ். அல்லது விஸ்வ ஹிந்து பரிஷத்தோ நிகழ்ச்சி நடத்த பெரியார் திடலை வாடகைக்குத் தருவார்களா?

39 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 9 (பெரியார் திடல் கொள்கைக்காக அல்ல! பணத்திற்காக!)”

 1. அப்பாடா! ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு கூட்டம் நடத்த அனுமதி கேட்டு ஒரு விண்ணப்பம் எழுதியாச்சு

 2. பெரியாரின் மறுபக்கம் என்ற பெயரில் பதிவுகளை இட்டு வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. குறையில்லாத மனிதன் இல்லை. குறை கண்டுபிடிக்காத மனிதனும் இல்லை. நம் நாட்டில் மதமும் , கடவுளும் 2000 வருடத்திற்கு மேலாக இருந்து இருக்கிறது. எந்த மதமும் நம் வாழ்வை உயர்த்தி விட வில்லை. நமக்கு வேட்டி கட்டவும், நம் பெண்களுக்கு ரவிக்கை போடவும் உரிமையை பெற்று தந்தவர் அய்யா. தென் இந்தியாவின் பெர்னாட்ஷா என்று பெரியாரை united nation பாராட்டி இருக்கிறது. 200 வருட மாற்றத்தை 20 ஆண்டுகளில் ஏற்படுத்தியவர் பெரியார்.

  உலகத்தை கட்டி ஆளும் கடவுள்களிடையே , ஒழுக்கும் இல்லாத போது.,அதை ஒரு மனிதனிடம் நீங்கள் எதிர்பாக்கும் போது , அந்த கடவுள்களை விட நான் பெரியாரை மேலானவராகவே பார்கின்றேன்.

  செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகன் , ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் அமர்ந்து கொண்டு கேட்கிறான். அப்படி என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?

  கருத்துக்களை எதிர்கொள்ளுங்கள். வாதிட தயாராக இருக்கின்றேன்.

 3. மகிழ்நன் அவர்களுடைய ப்ளஸ்பாயிண்ட் என்னன்னா அவர் எப்போதுமே நமது கட்டுரைக்கு பதில் சொல்லியது கிடையாது. அதனால் அவர் விமர்சனத்தை விட்டுவிடுவோம்.

  சீனிவாசஸ் அவர்களுக்கு
  மதம் நம் அக வாழ்வை உயர்த்திடவே.

  எமது இந்து மதம் மனிதனை உயர்த்த அரும்பாடு பட்டு வருகிறது. அதனால்தான் உலகில் தொன்மையான பல மதங்கள் அழிந்தும்கூட இந்துமதம் இன்றும் உயிரோடு இருக்கிறது. இந்து மதத்தைப் பற்றி ஆன்மிக பெரியார்கள் எழுதிய புத்தகங்களை படியுங்கள்.

  நமக்கு வேட்டி கட்டவும், நம் பெண்களுக்கு ரவிக்கை போடவும் உரிமையை பெற்று தந்தவர் அய்யா என்று கூறுகிறீர்கள். அதற்கு ஆதாரமாக ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்.

  வேட்டி கட்டவும், பெண்கள் ரவிக்கை போடவும் பெரியார் போராடினாரா? அப்படி என்ன போராட்டத்தை நடத்தினார் பெரியார்? எப்போது நடத்தினார்?

  தாழ்த்தப்பட்ட மக்கள் படித்த்தாலேயே வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரித்துவிட்டது, தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிந்த்தாலேயே துணிவிலை ஏறிவிட்டது என்று தன் உள்ள நஞ்சை உமிழ்ந்தவர் பெரியார்.

  செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகன் , ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் அமர்ந்து கொண்டு கேட்கிறான். அப்படி என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?
  சரியான கேள்விதானே? பெரியார் அப்படி என்ன கிழித்துவிட்டார்?
  சேரன்மா குருகுலத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் பிராமண மாணவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று வாய்கிழிய பேசிய பெரியார், அதே காலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்றிருந்த நிலைமைக்கு ஏன் போராடவில்லை?
  பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் பாடுபட்டாரே தவிர தாழ்த்தப்பட்டோருக்கு அல்ல என்பதை பற்றிய கட்டுரை இந்த தொடரில் வர இருக்கிறது. அதைப் படித்த பின்பு உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்.

  செருப்பு தைக்கும் மகன் இன்று பன்னாட்டு நிறுவனத்தில் அமர்ந்திருக்கிறான் என்றால் அது புரட்சியாளர் அம்பேத்கரின் உழைப்பு, தியாகம், போராட்டம்தான் காரணம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

  தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான போராட்டங்களை பெரியார் நடத்தியதுண்டா?
  உடனே வைக்கம் போராட்டத்தை சொல்வீர்கள். அது காங்கிரசினுடைய போராட்டம். அப்போது பெரியார் இந்து மத த்தை நேசித்தவர், ஆத்திகர், காங்கிரசினுடைய வேண்டுகோளின்படியே இப்போராட்டத்தில் பங்கு கொண்டார். இதை பற்றியும் விரிவான கட்டுரை வர இருக்கிறது. நான் கேட்பது சுயமரியாதை இயக்கம் அல்லது திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக தனியாக போராட்டம் பெரியார் தலைமையில் நடத்தயதுண்டா?

  இன்று தாழ்த்தப்பட்டோர் அனுபவிக்கும் உரிமைகளுக்கெல்லாம் காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்தான். தயவு செய்து பெரியாரை இதில் வம்படியாக இழுத்துவந்துவிடாதீர்கள். அது புரட்சியாளர் அம்பேத்கருக்கு செய்யும் துரோகம். புரட்சியாளர் அம்பேத்கரை படியுங்கள். புரியும்.

 4. Mr Srinivas
  Please read the all the articles in Tamil Hindu on EVR ( I do not want to call him Periyar) and then respond to the points raised. EVR never fought for any liberation of women. Worst still, he married a girl whos was old enough to be his grand daughter.He hated Tamil and Tamilians.( Barbarianas and barbaric language were his kind words) He was a boot licker of the British. He begged the British not to abandon India. He even wanted British to rule at least Tamilnadu after Indian independance.
  I agree with only one point brought to our attention recently in Tamil Hindu, made by another anti hindu ,Bharathi Dasan, of his assessment of EVR. ” Old man( Kezavan EVR) tends to blabber foolish things all the time, just ignore him”

 5. வெங்கடேசன் அவர்களுக்கு ,

  பெரியாரை உயர்த்தி தான் பேசினேன். அம்பேத்கரை நான் தாழ்த்தி பேசவில்லை. இருவரும் மக்களின் அடிமை வாழ்கையை மாற்ற போராடியவர்கள் தாம்.

  ” மதம் நம் அக வாழ்வை உயர்த்திடவே.எமது இந்து மதம் மனிதனை உயர்த்த அரும்பாடு பட்டு வருகிறது. அதனால்தான் உலகில் தொன்மையான பல மதங்கள் அழிந்தும்கூட இந்துமதம் இன்றும் உயிரோடு இருக்கிறது. இந்து மதத்தைப் பற்றி ஆன்மிக பெரியார்கள் எழுதிய புத்தகங்களை படியுங்கள்.” என்று கூறி உள்ளீர்கள். .

  ஏன் அம்பேத்கர் ஆராய்ச்சி செய்யாத வேதமா, உபநிடதங்களா, புராணமா? பிறகு ஏன் அவர் இந்து மத மேன்மையை உணராமல் புத்த மதத்திற்கு மாறினார். இந்து வாக இருப்பதிற்கு செத்து விடுவதே மேல் என்றாரே ஏன்?

  # தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக கடந்த 12 வருடங்களாக ஊடக தளத்தில் குரல் கொடுத்து வருபவர் ‘தலித் முரசு’ பத்திரிக்கை ஆசிரியர் புனிதபாண்டியன். அவரிடம் பெரியாரை பற்றி கேட்ட பொழுது …………..(கீற்று வலை தளத்தில் இருந்து எடுத்தது. )#

  மதமாற்றத்திற்கு தலித்துகள் ஒத்துக்கொண்டாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா? தனக்குக்கீழே ஒருவன் இருக்கிறான் என்ற சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தானே?

  பெரியார் தான் இதை சரியாகச் சொன்னார். பஞ்சமர் பட்டம் பறையனை விட்டுப் போகாதவரை சூத்திரர் பட்டம் உன்னை விட்டுப்போகாது என்றார். பார்ப்பான் தலையில் பிறந்தான், அவன் காலில் பிறந்தான்னு மநுதர்மம் பிரிக்கிறது. பெரியார் சொன்னார், ‘பறையனும் பள்ளனும் தான் சரியாக அம்மா, அப்பாவுக்கு பொறக்க வேண்டிய இடத்தில் பொறந்திருக்கான். சூத்திரன் எல்லாம் விபச்சாரிக்கு பொறந்திருக்கான்’ என்று தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தியும், ஆதிக்க சாதிகளைப் பார்த்து ‘நீ இந்த சாதியில் பிறந்ததற்காய் வெட்கப்பட வேண்டும்’ என்றும் சொல்கிறார். பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் சூத்திரர் என்று சொல்வதற்கு அர்த்தம் இதுதான். ‘உன் சாதியைச் சொல்லி பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை, நீ விபச்சாரிக்குப் பிறந்தவன்’ என்று சொல்கிறார்.

  பெரியார் ஒருபோதும் தலித் மக்களை திட்டினவர் கிடையாது. ஆதாரமே இல்லாமல் சிலர் அவரை தலித் விரோதியாக காட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். அவர் மீண்டும் மீண்டும், ‘இந்துவாக இருக்காதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே!’ என்றுதான் சொன்னார். அதை நிர்வாணத் தன்மையோடு ‘சூத்திரர்களே’ என்று சொன்னார். அதை இவர்கள் ‘கௌரவம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  பெரியார் ‘சுதந்திரமே வேண்டாம், வெள்ளைக்காரனே ஆட்சியில் இருக்கட்டும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நம் நாட்டிற்கு இந்துநாடு என்று பெயர் வைப்பதற்கான சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. பேசாமல் வெள்ளைக்காரனே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றார். இந்த பிறவி இழிவைப் போக்குவதற்கு வெள்ளைக்காரன் காலைக்கூட நக்குவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.

  ‘இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விடும், தொழில் தொடங்குவார்கள், பணம் கிடைக்கும் எல்லாம் சரி என்னுடைய சூத்திரத் தன்மை எப்போது நீங்கும்?’ என்ற கேள்வியைத் தான் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் பெரியார் மீண்டும் மீண்டும் கேட்கிறார்.

  நான் படித்து விட்டேன், உயர்ஜாதியினர் என்று சொல்லக்கூடியவர்கள் வகிக்கும் எல்லா பதவிகளிலும் நானும் வந்துவிட்டேன். இந்தியாவின் முதல் குடிமகனாகவும் பதவி கிடைத்து விட்டது. அதனால் என்னை பிராமணனாக நீங்கள் ஒத்துக்கொண்டீர்களா?

  ————————————————————————————————————————–
  அடிமையாக இருந்த நம்மை எப்படியோ போராடி கோவிலுக்குள் நுழைய வைத்து விட்டார்கள், இப்போது அங்கிருந்து வெளியே வராமல் இந்து மத பெருமையை பாடி கொண்டு இருக்கிறோம்.

 6. திருவாளர் ராமா அவர்களே,

  1) பெரியார் பெண்களுக்காக போராட வில்லையா? என்ன காமெடி செய்கிறீர்கள். 1942 ஆம் அவர் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை படியுங்கள்.” உங்களுக்கு விளங்கும். காதல்,கற்பு, விபசாரம், சொத்துரிமை என்று அவர் கூறிய கருத்துக்கள் இன்று படித்த பட்டம் பெற்ற சிலராலேயே ஏற்று கொள்ள முடியாது. அவ்வளவு முற்போக்கான கருத்துக்கள்.

  2) அவர் திருமணம் செய்ததை பற்றி ஏற்கனவே பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. அவர் இறந்துவிட்டார், இன்று அவர் செய்த திருமணம் பிரச்சினை அல்ல. திருமணம் பற்றிய அவரின் கருத்துக்களை படியுங்கள். முடிந்தால் விமர்சியுங்கள்.

  3) பார்ப்பான் காலை நக்குவதற்கு , british காரன் காலை நக்குவதே மேல்.

  4) பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது , தமிழகத்தில் மட்டும் ஏன் கலவரம் நடக்கவில்லை தெரியுமா? இந்தியாவிலேயே தமிழகம் தான் முற்போக்கு சிந்தனை மக்கள் அதிகம் உள்ள மாநிலம் தெரியுமா? இதற்க்கு காரணம் பெரியார் தான் தெரியுமா?

  5) தமிழை ஏன் திட்டினார் என்றால், புராண புளுகுகளில் இருந்து இந்த அழகிய தமிழை மொழியை பிரிக்க முடியவில்லை என்று திட்டினார். தமிழில் என்ன இருக்கிறது அறிவியல் பூர்வமாக ?. சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

  பெரியாரை பிரித்து விட்டு , தமிழர் வரலாற்றை யாரும் எழுதி விட முடியாது.

 7. சிரிக்காமல் இத யாராவது படிச்சிட்ட பரிசு கொடுக்கலாம்.

  // பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது , தமிழகத்தில் மட்டும் ஏன் கலவரம் நடக்கவில்லை தெரியுமா? இந்தியாவிலேயே தமிழகம் தான் முற்போக்கு சிந்தனை மக்கள் அதிகம் உள்ள மாநிலம் தெரியுமா? இதற்க்கு காரணம் பெரியார் தான் தெரியுமா //

 8. I am not an expert, but my humble opinion is that EVR and DK and its offsprings have done more damage to tamilnadu than any good. In the name of self respect and so and so forth, it has made tamil people immune (soranai ketta) and thats why any one can talk anything about the hindus in the name of securlarism. Why didnt EVR garland Jesus with slippers?

  Every EVR clan quotes that the veda’s says that brahmins were born from the gods head etc etc….fools they are. Which veda says so? These interpretations were written by the westerners and vested folks who wants to disparage Hinduism. The so called words comes in Purusha suktham in a question and answer form. The question is, how does the brahman look, how is his face, how is his body etc. for that the answer says that the face looks like brahmins who give knowledge to the society, the arms are like kshatriyas, who are strong enough to protect the nation, the tighs are like vaishyas, who hold the society intact and the legs are like Sudhras who carry the entiry societies weight on them. Its actually a credit to every community lauding their role in their society. As per the veda’s (even recent Cho’s enge brahmanan? in Jaya tv) in todays world, we cant call anyone a brahmin because, no one practices those traits. So any one working for salary is a sudra. Its not a disgrace, its just a role in the society.

  The EVR ideology is that everyone should become the CEO of a company, whether they have the capability of not, which is practically impossible. An organization should have one CEO, a few board of directors and a lots and lots of worker. And a peon is also needed. EVR and DK’s stand is that the CEO should become a peon and the peon should become the CEO whether he has the capability or not. If the peon is illtreated by the organization, its the people in the organization who are at fault and not the organization or its structure. Similarly any discrimination by upper caste is the peoples fault but not Hinduisms fault.

  But EVR instead of fighting the fault of people, faught against the structure,which doesnt make sense. This has gone to an extent that his so called follwers will drink Ramzan ‘kanchi’ with the traditional ‘kulla’ in the mosque but will criticize that Ram is drunkard. Is this ‘pagutharivu’, is this ‘suya mariyadhai’? If yes, I dont want to be a pagutharivu vaadi….with contradicting nature.

  Sanskrit is such a beautiful language that same sound gives different meaning. So the vested interested used the wrong meaning for their benifits. EVR’s philosophy asks us to close our eyes and think that the world is dark. Whereas the beautiful Hinduism teaches us to see the things in right perspective. Every Guru and the Veda’s and upanishads themselves tells us that, ‘dont just follow what is written in the vedas blindly. Think about it, understand it, research it and only if you are satisfied, then accept it’. Thats the beauty of Hinduism. Can any one show any one religion in the world which boldly says dont accept things if you dont agree with it?

  As I said, EVR’s clan closes their eyes and think that the world is dark. But they are failing to appreciate the wonderul life we have and the great wisdom our country and its religion is giving us.

 9. //பெரியாரை உயர்த்தி தான் பேசினேன். அம்பேத்கரை நான் தாழ்த்தி பேசவில்லை. இருவரும் மக்களின் அடிமை வாழ்கையை மாற்ற போராடியவர்கள் தாம்.

  நீங்கள் அம்பேத்காரை தாழ்த்தி பேசியதாக யாரும் கூறவில்லை. தலித் மக்களின் விடுதலைக்கு உண்மையாக பாடுபட்டவர் அம்பேத்கார், ஈவேரா அல்ல.

  //ஏன் அம்பேத்கர் ஆராய்ச்சி செய்யாத வேதமா, உபநிடதங்களா, புராணமா? பிறகு ஏன் அவர் இந்து மத மேன்மையை உணராமல் புத்த மதத்திற்கு மாறினார். இந்து வாக இருப்பதிற்கு செத்து விடுவதே மேல் என்றாரே ஏன்?

  அம்பேத்கர் சொன்னது நான் இந்துவாக இறப்பதற்கு விரும்பவில்லை என்பது. அவர் மதம் மாறும்முன் சீக்கிய, இஸ்லாமிய, புத்த , கிறித்துவ மத பெரியவர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பின்னர் புத்தமதம் சிறந்தது என்று அதில் சேர்ந்துள்ளார். அப்படியானால் அம்பேத்கார் புத்த மதம் மட்டுமே மேண்மையானது என்று சொல்கிறாரா? மற்ற எல்லா மதங்களும் கடவுள் என்ற கொள்கையை முன்வைக்கின்றன, ஆனால் புத்தமதம் கடவுள் என்ற ஒன்றும் இல்லை என்கிறது. அம்பேத்கார் கடவுள் என்பதை அடிமைப்படுத்தப்படும் ஒரு சாதனமாக பார்த்தார் , அதனால கடவுள் இல்லாத மதத்திற்கு தன் மக்கள் வரவேண்டும் என்று விரும்பினார்.

  அம்பேத்கார் சாத்வீகமான முறையில் சாதிய அடக்குமுறைகளை எதிர்தாரேயன்றி ஈவேரா போல காட்டுமிராண்டி தனமாக நடந்துக் கொள்ளவில்லை. ஈவேரா போக்கில் ஒரு வேகம் இருந்ததே அன்றி விவேகம் இருக்கவில்லை.

  //பெரியார் ‘சுதந்திரமே வேண்டாம், வெள்ளைக்காரனே ஆட்சியில் இருக்கட்டும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நம் நாட்டிற்கு இந்துநாடு என்று பெயர் வைப்பதற்கான சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. பேசாமல் வெள்ளைக்காரனே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றார்.
  இந்துக்கள் 85% இருக்கும் நாட்டிற்கு இந்து நாடு என்று பெயர் வைக்காமல் ஈவேராநாடு என்றா பெயர் வைப்பது?
  அப்படி பெரியாரது கூற்றுப்படி தான் நடந்ததா? வெள்ளைக்காரர்கள் கொள்ளை முடிந்தப் பின் சென்றார்கள். அதன் பிறகு என்ன பார்பனர்கள் சூழ்ச்சி செய்தார்களா? ஆனால் பெரியார் சொல்படி இருந்தால் நாம் இன்னும் இங்கிலாந்தின் அடிமையாகத் தான் இருந்திருப்போம்.

  //இந்த பிறவி இழிவைப் போக்குவதற்கு வெள்ளைக்காரன் காலைக்கூட நக்குவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.
  //பார்ப்பான் காலை நக்குவதற்கு , british காரன் காலை நக்குவதே மேல்.

  அப்பொழுது ஈவேரா தலித்துக்களை வேறொருவன் கால்நக்க தான் வேண்டும் என்று சொல்கிறாரே தவிர, அவர்களின் உரிமையை நிலைநாட்ட விரும்பவில்லை.

  //நான் படித்து விட்டேன், உயர்ஜாதியினர் என்று சொல்லக்கூடியவர்கள் வகிக்கும் எல்லா பதவிகளிலும் நானும் வந்துவிட்டேன். இந்தியாவின் முதல் குடிமகனாகவும் பதவி கிடைத்து விட்டது. அதனால் என்னை பிராமணனாக நீங்கள் ஒத்துக்கொண்டீர்களா?

  ஒரு புறம் ஜாதி இல்லை , அது உயர்வு தாழ்வுகளை சொல்கிறது என்று சொல்லிக்கொண்டே இன்னொரு புறம் என்னை பிராமனன் என்று ஒத்துக்கொள்வார்களா என்பது நகைப்பிற்குறியது. இந்து மதம் வெவ்வேறு வருணங்கள் இருக்கிறது என்றுதான் சொல்கிறதே தவிர எல்லாவற்றையும் ஒன்றாகத்தான் கருதுகிறது. ஒன்று உயர்வு ஒன்று தாழ்வு என்று சொல்வதில்லை. அதன் பின்னர்தான் என்னை அதுவாக ஒத்துக்கொள்வார்களா என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுதைய நிலைமையின் படி ராணுவ வீரர்கள் மட்டுமே சத்ரியன் என்று அழைக்கப்பட தகுதியுள்ளவர்கள் . மற்ற அனைவரும் உழைக்கும் வர்கத்தில் தான் இருக்கின்றனர், பிறகு என்ன நான் பிராமனன் ஆக முடியுமா என்ற கேள்வி? பிராமனர்களே அவர்களது கடமையை விட்டு பல காலம் ஆயிற்று

  //அடிமையாக இருந்த நம்மை எப்படியோ போராடி கோவிலுக்குள் நுழைய வைத்து விட்டார்கள், இப்போது அங்கிருந்து வெளியே வராமல் இந்து மத பெருமையை பாடி கொண்டு இருக்கிறோம்.

  அப்படி நீங்கள் கோயிலில் இருந்து வெளியே வந்தால் அடிமையாக இருந்தவர்களை கோவிலுக்குள் நுழைய வைத்தற்கான போராட்டம் அர்த்தமில்லாமல் போய்விடும். எந்த ஒரு அமைப்புமுறையும் ஒரு நல்ல எண்ணத்தோடுதான் உருவாக்கப்படுகிறது . ஆனால் காலப்போக்கில் அதிலே சில தேவையற்ற கட்டுப்பாடுகள் , அனர்த்தங்கள் உருவாகின்றன . உதாரணம் ஜனநாயகம் மக்களால் … என்று போற்றப்படும் ஒன்று நம் நாட்டில் தவறாக உபயோகிக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தவர் ஆசியாவின் மிகப்பெரிய் பணக்காரர் ஆக முடிகிறது. ஒரு கான்ஸ்டெபிளின் மகன் கூட ஏய் நான் யார் தெரியுமா என்று மார்தட்ட முடிகிறது. அப்பொழுது ஜனநாயகம் என்பதே வேண்டாம் என்கிறீர்களா. அதுபோல வருண முறையால் ஜாதி வளர்ந்தது. ஒரு காலத்தில் அது தவறாக உபயோகிக்கப்பட்டது , அதை சுட்டிக்காட்டி மனிதரை சீர் செய்ய நானக், கபீர், நாராயணகுரு, அம்பேத்கார் போன்றோர் தோன்றியிருக்கின்றனர் அதற்காக இந்துமதத்தையே இழிவுபடுத்துவது என்பது அபத்தம்.

  // பெரியார் பெண்களுக்காக போராட வில்லையா? என்ன காமெடி செய்கிறீர்கள். 1942 ஆம் அவர் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை படியுங்கள்.” உங்களுக்கு விளங்கும். காதல்,கற்பு, விபசாரம், சொத்துரிமை என்று அவர் கூறிய கருத்துக்கள் இன்று படித்த பட்டம் பெற்ற சிலராலேயே ஏற்று கொள்ள முடியாது. அவ்வளவு முற்போக்கான கருத்துக்கள்.

  பெண்ணுக்கு கற்பு என்பதே அடிமைத்தனம் என்று சொன்னவர் ஈவேரா. அப்படி இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசியுங்கள் . குடும்பம் என்ற ஒன்றே இல்லாமல் இருந்திருக்கும் அப்படிப்பட்ட சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகள் கதி என்னவாகும். இதன் மூலம் ஒரு ஒழுக்கமற்ற சமுதாயத்தை உருவாக்க முயன்றவர் ஈவேரா
  ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு என்று ஒன்று உண்டு என்று சொன்னால் அது நல்லது , அதைவிடுது கற்பு பெண்ணுக்கு மட்டுமா அதை தூக்கு என்று சொல்லவது அவரது ஆராயாமல் முடிவெடுக்கும் அறிவை காட்டுகிறது

  // பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது , தமிழகத்தில் மட்டும் ஏன் கலவரம் நடக்கவில்லை தெரியுமா? இந்தியாவிலேயே தமிழகம் தான் முற்போக்கு சிந்தனை மக்கள் அதிகம் உள்ள மாநிலம் தெரியுமா? இதற்க்கு காரணம் பெரியார் தான் தெரியுமா?

  பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது கலவரம் வடமாநிலங்களில் மட்டுமே நடந்தது. மற்ற மாநிலங்களில் கலவரம் ஏற்படாமைக்கு ஈவேராதான் காரணமா?ஆனால் பெரியார் சிலைக்கு ஸ்ரீரங்கத்தில் அவமதிக்கப்பட்டதிற்கு சென்னை அயோத்திய மண்டபத்தில் குண்டர்கள் தாக்கினர் இதற்கு காரணம் யார் தெரியுமா? பெரியார் தான் தெரியுமா.

  5) தமிழை ஏன் திட்டினார் என்றால், புராண புளுகுகளில் இருந்து இந்த அழகிய தமிழை மொழியை பிரிக்க முடியவில்லை என்று திட்டினார். தமிழில் என்ன இருக்கிறது அறிவியல் பூர்வமாக ?. சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

  இதுவும் பைத்தியக்காரத்தனம் ஒரு மொழியில் உள்ள தன் கருத்திற்கு எதிரான புத்தகங்களை தவிர்பதற்கு அந்த மொழியை நீக்க சொன்ன தன்மை. இது கொசுவிற்கு பயந்து குடிசையை எரித்துவிடு என்பது போல உள்ளது. ஈவேராவின் கொள்கைகள் அழிப்பதை தான் அடித்தளமாக கொண்டுள்ளதே தவிர ஆக்கத்தை அல்ல. அவரே ஒரு ஆக்கப்பூர்வமான மனிதராக இருந்தால் , தலித்துகளை உங்களின் எண்ணங்களை உங்களுக்கு தெரிந்த தமிழிலேயே எழுதுங்கள். நான் அதை பிரபலப்படுத்துகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும் அதை விடுத்து அந்த மொழியையே அழித்துவிடு.ஆங்கிலமே போதும் என்று சொன்னது அபத்தம், அவரின் அறிவீனம்.

  ஏதோ ஒரு இஸ்லாமிய மன்னன் குரானை தவிர வேறு புத்தகம் இல்லை என்று அலெக்சாந்திரியா நூலகத்தை கொளுத்தினானாம். சிங்கள வன்முறையாளர்கள் யாழ் நூலகத்தை தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவங்களுக்கும் ஈவேரா சொல்வதற்கும் அதிகம் வித்தியாசம் இல்லை

  பெரியாரை பிரித்து விட்டு , தமிழர் வரலாற்றை யாரும் எழுதி விட முடியாது.

  ஆம் சூரனை பிரித்துவிட்டு வேலனின் வரலாற்றை யாரும் எழுத முடியாது என்பது போல , இசுலாமிய படையெடுப்பை பிரித்துவிட்டு இந்திய சீரழிவை எழுத முடியாது என்பது போல இதுவும் முடியாது.

 10. Mr Ram Kumaran
  Thanks for your incissive,intelligent and prompt ” soodu” reply to Mr Srinivas. Being a doctor, I feel, EVR must have suffered form a Bipolar disorder with illusion of grandeur of himself thrown in. He was a selective “Hindu Ahteist”. Why the Dk/DMK parties do not erect his statues in front of Churches and Mosques?
  I am wondering what other reasons Mr Srinivas will DISCOVER now for EVR”s support of the British?

 11. அம்பேத்கர் கூட இந்த அளவு பெரியாரை விமர்சித்து இருக்க மாட்டார் என்று நினைக்கிறன். ஏன் இருவரும் நண்பர்களாக இருந்தனர்? அம்பேத்கருக்கு தெரியாததா உங்களுக்கு தெரிந்து விட்டது?

  தலித் மக்களின் வாழ்கை முன்னேற்றம் என்பது , பொருளாதார அடிப்படியில் மட்டும் அமைந்தது அல்ல. அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க வேண்டும். சமூக அந்தஸ்து கிடைக்க சாதி இந்துக்களுக்கு , முதலில் தீண்டாமை பற்றிய விழுப்புணர்வு எழ வேண்டும். அப்போது தான் தனக்கு கீழ் சாதியாக சொல்லப்பட்டுள்ள,தலித் மக்களுடன் சமதர்மம் பேச முடியும். ஒரு சூத்திரன் எப்போது பிராமின எதிர்ப்பு பற்றி பேசுகிறானோ, அப்போது அவன் கண்டிப்பாக தலித் முன்னேற்றம் பற்றியும் எண்ண ஆரம்பித்து விடுகிறான். தலித் மட்டும் போராடி பொருளாதார உரிமை மட்டுமே பெற முடியும் , சமதர்மம் பெற முடியாது. இதை நன்கு உணர்ந்தவர் பெரியார்.

  ஒரு தாழ்த்தப்பட்ட பள்ளன் கிறிதவனாக மாறிவிட முடியும், ஒரு கள்ளன் இஸ்லாமியனாக மாறிவிட முடியும், ஒரு பரயன் என்றும் அய்யன் ஆக மாற முடியாது. அதுதான் இந்து மத கட்டமைப்பு. இந்து மத புனித நூலாம் கீதையிலும் இதுதான் சொல்லப்பட்டு இருக்கிறது.

  # ஈவேரா போல காட்டுமிராண்டி தனமாக நடந்துக் கொள்ளவில்லை. ஈவேரா போக்கில் ஒரு வேகம் இருந்ததே அன்றி விவேகம் இருக்கவில்லை#

  freedom should not be given , it must be taken. என்பதை உணர்ந்தவர் பெரியார். சாத்வீகம் எல்லாம் எடுபடாது.உலகிலேயே அகிம்சை வழியில் கெஞ்சி கூத்தாடி சுதந்திரம் பெற்ற நாடு இந்தியாவாக தான் இருக்கும். பக்கத்துக்கு நாடுகளான பர்மா , இலங்கை யை பற்றி சற்று எண்ணி பார்க்கவும். அஹிம்சை என்பது சண்டித்தனம்

  #அம்பேத்கர் கடவுள் இல்லாத மதத்திற்கு தன் மக்கள் வரவேண்டும் என்று விரும்பினார்.#

  இது முற்றிலும் தவறு. அம்பேத்கர், இந்துத்துவம் என்பது சாதிய கட்டமைப்புகளால் ஆக்கப்பட்டது என்பதை உணர்ந்தவர். புத்த மதம் ஆரம்ப காலம் தொட்டே, இந்து மத பார்ப்பனிய கொடுமைகளை எதிர்த்து வந்துள்ளது. சாதி இல்லாத மதத்திற்கு அவர் மாற வேண்டும் என்று விரும்பினார். எனவே தான் புத்த மதத்தை தழுவினார்.

  #அப்பொழுது ஈவேரா தலித்துக்களை வேறொருவன் கால்நக்க தான் வேண்டும் என்று சொல்கிறாரே தவிர, அவர்களின் உரிமையை நிலைநாட்ட விரும்பவில்லை.#

  பெரியார் சொன்னது எல்லா மக்களையும் சேர்த்து தான். தலித் மக்களை மட்டும் அவர் பிரிக்கவில்லை. வெள்ளைக்காரன் போய்விட்டானா? யார் சொன்னது? இன்று பாரத மாதாவை அமெரிக்காவிற்கும், ஜபானிர்க்கும் போகியதிர்க்கு விட்டுவிட்டனர். பார்ப்பனிய சக்தி இந்தியாவை கடைசி வரை வளரும் நாடாவகவே வைத்திருக்கும். இதை நன்கு உணர்ந்தவர் பெரியார்.

  நீங்கள் ஓன்று நன்கு உணரவேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நம்புகிற என் சக மனிதனுக்கு அவன் கோவிலுக்குள் செல்ல உரிமை பெற்று தருவது என் கடமை என்று பெரியார் கருதினார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அனைத்து சாதி மக்களும் அர்ச்சகராகும் உரிமை பற்றி குரல் கொடுத்தவர்.

  இந்து மதத்தை வைத்து கொண்டு மனிதனை சீர் செய்வதா? ஏதோ கொஞ்ச நஞ்சம் இன்று நாம் உரிமை பெற்றதற்கு காரணம், அம்பேத்காரும், பெரியாரும் நடத்திய இந்து மத எதிர்ப்பு போராட்டம் தான்.

  பெரியார் சொன்ன கற்பு பற்றிய விளக்கத்தை இன்று அனைத்து பெண்ணிய ஆதரவு இயங்கங்களும் ஒப்பு கொண்டு விட்டன. அவர் கூறியது பெண்களின் மேன்மைக்குதான் ஒழிய, குடும்பம் வேண்டாம் என்று சொல்லவில்லை. கற்பு பற்றி அதிகம் பேசும் நம் நாட்டில் தான், aids நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். கற்பு என்பது பெண்களின் இரு காலுகிடையில் தான் உள்ளது என்பதை நம் சமூகம் இன்றும் நம்பி கொண்டு இருக்கிறது.

  தமிழை திட்டினார் என்றால் ஏன்? போராடியவருக்குத்தானே வலி தெரியும். தமிழில் இருந்து மூட பழக்கத்தை பிரிக்க முடியவில்லையே? அவ்வளவு புராண புளுகுகள்.
  ஆனால் அதே பெரியார் தான் தமிழில், பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். முழுமையாக தமிழை அன்பு செய்பவருக்கு , நான் அடிமை என்று கூறினார்.

  #பெரியாரை பிரித்து விட்டு , தமிழர் வரலாற்றை யாரும் எழுதி விட முடியாது.#

  தமிழகத்தில் குல கல்வி திட்டத்தை ஒழித்தவர் .காமராஜரை ஆட்சியில் அமர்த்தி 14,000 பள்ளிகளை திறந்தவர் . குடல் இறக்க நோயால் அவதிப்பட்ட போதும் மூத்திர சட்டியை ஏந்தி கொண்டு 93 வயதிலும், பிரச்சாரம் செய்தவர்.இரண்டு முறை தனக்கு வந்த முதல்வர் பதவியை எட்டி உதறியவர். மண்ணில் போக வேண்டிய வயதிலும், மண்ணுக்காக விழுந்தவர். தன் வாழ் நாளில் அவர் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மேடைகளில் ஏறி இருக்கிறார்.

  சமூகத்தில் யாரோ ஒருவர் விமர்சிப்பதால், அவர் களங்கப்பட்டு விட போவதில்லை.

  நம்மால் விமர்சனம் மட்டுமே செய்ய முடியும். மாற்றம் ஏற்படுத்த முடியாது.

 12. #ஒரு தாழ்த்தப்பட்ட பள்ளன் கிறிதவனாக மாறிவிட முடியும், ஒரு கள்ளன் இஸ்லாமியனாக மாறிவிட முடியும், ஒரு பரயன் என்றும் அய்யன் ஆக மாற முடியாது. அதுதான் இந்து மத கட்டமைப்பு.

  இஸ்லாமும் கிறித்துவமும் ஒரு ஆள் சேர்ப்பு நிறுவனங்களாக தான் தம்மை நடத்திக்கொணெடிருக்கின்றன. ஆனால் அப்படி அதில் சேர்ந்த தலித்கள் முழு கிறித்துவர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ நடத்தப்படுகிறார்களா. ஒரு அஷ்ரஃப் முஸ்லிம் இவர்களை தன்னுடன் இணைத்துக்கொள்வார்களா? இன்னும் அஷ்ரஃப் , அஜ்மல் என்று அவர்களும் பிரிவு படுத்திதான் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம் படையெடுப்பின் பொழுது மதம் மாறிய முஸ்லிம்களை நடத்தும் விதமாக அவர்கள் சொன்னது ஒன்றுதான் அவர்கள் எப்படி 5 வேளை தொழ வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள், இஸ்லாத்தின் தத்துவங்களை அவர்கள் அறிந்துக்கொள்ளதேவை இல்லை.

  அம்பேத்கார் சாதிய கொடுமைகளை விடுப்பட இந்து மதத்திலிருந்து மாறினார் சரி. ஏன் மற்ற மதங்களுக்கு அவர் மாறவில்லை . மற்ற மதங்கள் அனைத்தும் கடவுள் என்ற ஒன்றை சொல்கின்றன. ஆனால் புத்தமதம் மட்டுமே கடவுள்
  இல்லை என்று சொல்கிறது.

  புத்த நாடான சிறீலங்காவிலும் ஜாதிபிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன‌

  https://en.wikipedia.org/wiki/Caste_system_in_Sri_Lanka

  அம்பேத்காரும் ஃப்ரீடம் எடுத்துக்கொள்ள பட வேண்டும் என்று கொள்கை உடையவர் ஆனால் அவர் அறிவுபூர்வமாக தன் செயல்களை செய்தார்.

  //கற்பு என்பது பெண்களின் இரு காலுகிடையில் தான் உள்ளது என்பதை நம் சமூகம் இன்றும் நம்பி கொண்டு இருக்கிறது

  பெண்ணிய ஆதரவு இயக்கங்களின் செயல்பாடுகள் கேள்விக்குறிய‌வை. இன்று எத்தனை பெண்கள் 498அ என்ற சட்டபிரிவை துஷ்பிரயோகம் செய்கின்றனர் தெரியுமா? அவர்களுக்கு எதிராக பெண்ணிய ஆதரவு இயக்கங்கள் என்ன சொல்கின்றன? பிறகு வேறெதை கற்பு என்கிறீர்கள்? பெரியார் சொன்ன கற்புப்படி பார்த்தால் எல்லோருக்கும் நோய்வரத்தான் செய்யும் ஒருவனுக்கு ஒருத்தி ,நீயும் ஒழுங்காக இரு , அவளும் ஒழுங்காக இருக்க எதிர்பார் என்று சொல்லாமல் கற்பு என்பது பிற்போக்குத்தனம் நீ எத்தனை பேருடனும் இரு அவளும் எத்தனை பேருடனும் இருக்கட்டும் என்று சொல்வது தான் எய்ட்ஸிற்கு முதல் காரணி.

  //தமிழை திட்டினார் என்றால் ஏன்? போராடியவருக்குத்தானே வலி தெரியும். தமிழில் இருந்து மூட பழக்கத்தை பிரிக்க முடியவில்லையே?
  ஒன்றை நாம் செய்ய முடியவில்லையென்றால் அதை பழிப்பது மூடத்தனமே. a poorworkman blames his tools

  காமராஜரை ஆட்சியில் அமைத்தவர் பெரியார் நல்ல காமெடி. பிறகு ஏன் பெரியாரின் அடிபொடிகள் காமராஜரை எதிர்த்து தோற்கடித்தார்களாம்.

 13. பெரியாரை தூக்கிப் பிடித்து எழுதுபவர்கள் அனைவரும் ஒன்றை தவறாமல் எழுதுகிறார்கள். அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு பெரியார்தான் காரணம், அவர் இல்லையென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியே இருக்க முடியாது என்பது போல எழுதுகிறார்கள்.
  பெரியாரை பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களுக்கு கிடைத்து இருக்கும் இந்த எழுத்து உரிமை கூட அய்யா அவர்கள் சிந்திய வியர்வையில் விளைந்த பூ தான் – என்று கூறி தாழ்த்தப்பட்டவர்களை மட்டம் தட்டுகிறார்கள்.
  அதாவது இவர்கள் சொல்லவருவது என்னவென்றால் பெரியார் ஒருவர் பிறந்திருக்கவில்லை என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் கதி அதோகதிதான்.
  பெரியாரை புகழ்ந்து எழுதுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அவரை புகழும் சாக்கில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தாழ்த்தப்பட்ட தலைவர்களை மறைக்காதீர்கள். வரலாற்றில் நீங்கள் செய்த்தெல்லாம் இதுதான்.
  பெரியார் வேசிகளின் வீட்டில் சல்லாபம் செய்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர்கள்தாம்.
  1. பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-1914)
  2. இரட்டைமலை சீனிவாசன் (1860-1945)
  3. எம்.சி.ராஜா (1883-1945)
  4.பேராசிரியர் என்.சிவராஜ் (1892-1964)
  5. பி.எம்.மதுரைப்பிள்ளை (1858-1913)
  6. டி.ஜான்ரத்தினம் (1846-1942)
  7. பி.வி.சுப்பிரமணியம் (1859-1936)
  8.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை (1878-1938)
  9.வி.தர்மலிங்கம்பிள்ளை (1874-1944)
  10.ம.பழனிச்சாமி (1870-1941)
  11.சுவாமி தேசிகானந்தா (1877-1949)
  12.ஆர்.வீரையன் (1886-1938)
  13.வி.ஐ.முனுசாமிப்பிள்ளை (1899-1955)
  14.எம்.சி.மதுரைப்பிள்ளை (1880-1935)
  15.ஜி.அப்பாதுரையார் (1890-1962)
  16.சுவாமி சகஜானந்தர் (1891-1958)
  17.பி.எம்.வேலாயுதபாணி (1896-1962)
  18. பி.பரமேஸ்வரன் (1909-1957)
  19.எம்.கிருஷ்ணசாமி (1917-1973)
  20. அகில இந்திய அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய பணி அளவிட முடியாத்து.
  – இதுபோன்ற தாழ்த்தப்பட்ட தலைவர்களின் அயராத உழைப்பினாலும் போராட்டங்களாலும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று முன்னேறியிருக்கின்றார்கள். ( இவர்களைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள வேண்டுமானால் அன்புபொன்னோவியம் அவர்கள் எழுதிய மக்களுக்கு உழைத்த பெருமக்கள் என்ற நூலை படியுங்கள்)
  இதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் நடத்திய பத்திரிகைகள் :
  சூரியோதயம் (1869)
  பஞ்சமன் (1871)
  சுகிர்தவசனி (1877)
  திராவிடமித்திரன் (1885)
  திராவிட பாண்டியன் (1885)
  பூலோக வியாசன் (1900)
  தமிழன் (1907)
  ஆதிதிராவிட மித்திரன் (1907)
  ஆன்றோர்மித்திரன் (1910)
  மகாவிகட தூதன் (1886)
  பறையன் (1893)
  விகடதூதன் (1897)
  இல்லற ஒழுக்கம் (1899)
  மதராஸ் டெம்ப்ரன்ஸ்
  ஹெரால்ட் (1899)
  தமிழன் (கோலார்) (1926)
  சாம்பவகுலமித்திரன் (1930)
  ஆதிதிராவிட மித்திரன் (சென்னை) (1939)
  புத்துயிர் (1940)
  இதுபோன்ற எண்ணற்ற பத்திரிகைகள், மாநாடுகள், போராட்டங்கள், கூட்டங்கள் வாயிலாக தாழ்த்தப்பட்டோர் இன்று அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுத் தந்தனர்.
  ஆனால் இன்று பிச்சையெடுத்த பெருமாளு, பிடுங்கித் தின்ன அனுமாரு என்று சொல்லப்படுகிற பழமொழி? போல தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் பெரியார் பெற்றுத் தந்த்துபோல பேசுவது, எழுதுவது யாரை ஏமாற்ற?
  தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன என்பதை இவர்கள் இருட்டடிப்பு செய்வதால்தானே இன்று என்னைப் போல் உள்ளவர்கள் பெரியாரை விமர்சனம் செய்யவருகிறார்கள்?
  தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெரியார் என்னென்ன போராட்டங்களை நடத்தினார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே ஏன்?

 14. Srinivas அவர்களே…
  அரிசி விலை கூடியதற்குக் காரணம் கஞ்சி சாப்பிட்டுக்கொண்டிருந்த பறையன் எல்லாரும் அரிசி சோறு சாப்பிட ஆரம்பித்து விட்டான் என்றும்…

  பருத்தி விலை அதிகமானதற்குக் காரணம் நம்மூர் பெண்கள் எல்லாரும் ரவிக்கை போட ஆரம்பித்தது தான் என்றும் அறிவுஜீவித்தனமாக முழங்கியவர் ஈவேரா.

  அம்பேத்காரையெல்லாம் இங்கே இழுக்க வேண்டியதில்லை. ஜாதிக் கொடுமையினால் புத்த மதத்தைத் தழுவியவர் அவர். ஏனெனில் புத்த மதத்திற்கு போப் கிடையாது. அவர் ஹிந்து மக்களின் அறியாமையால் ஏற்பட்ட மூடநம்பிக்கைகளின் தாக்கத்தைத் தன் வாழ்வில் அனுபவித்தவர். அவர் க்றிஸ்துவத்திற்கு மாறுவதற்கு பதில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சொன்னாலும் சொல்லியிருப்பார்.

  நீங்கள் சொல்வது போல் பள்ளன் க்றிஸ்துவனாக மாற முடியும். ஆனால் அப்படி மாறிய பள்ளனைப் போய் பாருங்கள். அவன் வாழ்வு ஏதாவது வகையில் முன்னேறியிருக்கிறதா என்று. ஒரு பி. சி சான்றிதழுக்காகக் கிறிஸ்தவர்களாக மாறுபவர்களும் உண்டு. மிஷிநரிகளைப் பொறுத்த வரை அது ஒரு கன்வர்ஷன் கேஸ். அந்தப் பள்ளனால் அதற்கு மேல் சர்ச்சில் ஒன்றும் புடுங்க முடியாது என்பது அவனே ஒத்துக் கொள்ளும் உண்மைதான்.

  தமிழ் வரலாறு என்பது ஒரு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று. அதை ஏதோ திராவிட வரலாறு தான் தமிழ் வரலாறு என்பது போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் இன்னும் 50 வருடங்களுக்குப் பிறகு பெரியார் என்பவருடைய பெயர் வீரமணி கோஷ்டியினரிடமும், ஒரு சில இணையப் புலிகளிடம் சிக்கியுள்ள ஒரு ‘கீ வேர்ட்’ ஆக மட்டுமே இருக்கும். ஏற்கனவே தமிழ் நாட்டைத் தாண்டி யாருக்கும் இந்த ‘ரா’ வின் பெயர் தெரியாது. இதைச் சொன்னால் ‘ஐ. நா’ பாராட்டி இருக்கிறது, உனக்குத் தான் உலகம் தெரியவில்லை என்பீர்கள். ஐ. நா என்பது ஒரு குண்டக்க மண்டக்க குழு என்பது அவர்கள் இலங்கையில் எம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப் பட்ட போது கையாலாகாத தனத்தைக் காட்டியதற்கும், பாகிஸ்தான் என்ற ஒரு நயவஞ்சக நரி, சீனா என்ற இன்னொரு நரியுடன் சேர்ந்து கொண்டு இந்தியா மீது தொடுக்கும் மறைமுக தாக்குதல்களைப் புரிந்தும் ஒன்றும் செய்ய இயலாத அமைப்பு. அந்த ஒன்றுக்கும் உதவாதது இன்னொன்றைப் புகழ்வது ஒன்றும் வியப்பில்லை.

  ஈவேரா என்ற பெரியவர் (பெரியார் இல்லை) மீது எனக்கு ஒரு மதிப்பு உண்டு. பார்ப்பனர்கள் என்ற தன்னுடைய பெர்சனல் காண்டை (வென்ஜன்ஸ்) தான் அவர் பயன்படுத்திக் கொண்டார். முட்டாள் தமிழர்கள் அதை நம்பி விட்டார்கள். பார்ப்பனர்கள் தவறு செய்தவர்கள் தான். ஆனால் அவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. இது தான் அடிப்படை உண்மை.

  வெள்ளையன் ஊடுருவும்போது ஜமீந்தார்களும் பிரபுக்களும் அந்தப்புரத்திலிருந்து வெளிவந்து பக்கத்து ஜமீனிடமிருத்து பாதுகாத்துக் கொள்வதற்காக நட்புறவாடினார்கள். அவன் சாமர்த்தியமாக ஆட்சியைப் பிடித்துக் கொண்டு இவர்களை கழட்டி விட்டு விட்டான். பார்ப்பனர்கள் அவனிடம் வேலைக்குச் சேர்ந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, எல்லா ஜாதியினரும் தான். ஆனால் பார்ப்பனர்கள் மூளைத் திறமையினால் (பிறருக்கு மூளையில்லை என்கிறாயா என்ற காதறுந்த ஆர்க்யூமண்ட் வேண்டாம்) பிரகாசிக்க, மற்றவர்களுக்கு இவர்கள் மேல் பொறாமை வந்து விட்டது. இதை Intellectual Caliber க்கு பெயர் போன காஞ்சி மாமுனிவர் சொல்லியிருக்கிறார். அவரும் பார்ப்பனர் தானே என்ற கழுதைத் தனமான வாதமும் செல்லாது, ஏனென்றால் பள்ளன், பறையன் என்றில்லாமல் அனைவரையும் ஈஸ்வர ஸ்வரூபம் என்று சொன்னவர் அவர்.

  பெரியார் செய்த செயல்கள் பயன் அளித்தவை தான். ஆனால் அவரை ஏதோ பெரிய மஹாத்மா என்றெல்லாம் கூத்தாடத் தொன்றவில்லை. அவர் இல்லாவிட்டாலும் நாடு நன்றாகத் தானிருந்திருக்கும். என்ன, திராவிடக் கட்சிகளுக்கு சரியான மிளகாய் கிடைத்திருக்காது, தமிழன் தலையில் அரைக்க! அவன் தான் தலையைக் காட்டிக் கொண்டே அமர்ந்திருக்கிறானே!

 15. ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஸ்ரீனிவாஸ் , தீண்டாமை என்பது இன்னும் தலித் மக்களுக்கிடையே உள்ளது. ஓரு பள்ளன் இன்னொரு பறையனொடு சம்பந்தம் பண்ணுவானா?, அல்லது ஓரு பள்ளன் இன்னொரு சக்கிலியனோடு சம்பந்தம் பண்ணுவானா?, இதற்கு பதில்சொல்லி விட்டு பிறகு வாருங்கள் உங்கள் வியாக்யனத்தோடு.

 16. //ஒரு தாழ்த்தப்பட்ட பள்ளன் கிறிதவனாக மாறிவிட முடியும், ஒரு கள்ளன் இஸ்லாமியனாக மாறிவிட முடியும், ஒரு பரயன் என்றும் அய்யன் ஆக மாற முடியாது. அதுதான் இந்து மத கட்டமைப்பு. இந்து மத புனித நூலாம் கீதையிலும் இதுதான் சொல்லப்பட்டு இருக்கிறது//

  wow…I think even Krishna will not know that he said so in Gita 🙂 Yet another example of half baked views… 🙂 Gita clearly says that a human being is classified as one of the four varnas based on his character and character alone……

  Being a non brahmin and fighting against brahmins is not a big deal. Why dont these (DK clan) people appreciate the legends like Bharathiyar et al who condemned and fought against the casteism being brahmins. Is Bharathi not a much greater reformist than EVR? Then why no DK clan appreciates him and condemns him because of his bhramin birth?

  //இது முற்றிலும் தவறு. அம்பேத்கர், இந்துத்துவம் என்பது சாதிய கட்டமைப்புகளால் ஆக்கப்பட்டது என்பதை உணர்ந்தவர். புத்த மதம் ஆரம்ப காலம் தொட்டே, இந்து மத பார்ப்பனிய கொடுமைகளை எதிர்த்து வந்துள்ளது. சாதி இல்லாத மதத்திற்கு அவர் மாற வேண்டும் என்று விரும்பினார். எனவே தான் புத்த மதத்தை தழுவினார்//

  This casteism is prelevant in Christianity and Islam too… there were articles written in this very site regarding this. Then why didnt EVR fight against this casteism in other religions? why Hindus alone?

  Hindu Philosophy is (which even Gandhi practiced)….the means is as important as the ends. Just to achieve a good end, taking a wrong path doest not justhy the wrong. EVR’s end might be good but his MEANS are definitely wrong. I wrote in one of my comments earlier that EVR didnt uplift the downtrodden, but rather pulled the upscale people down and claimed that he brought equality.

  //சமூகத்தில் யாரோ ஒருவர் விமர்சிப்பதால், அவர் களங்கப்பட்டு விட போவதில்லை//

  Excellent. We are also saying the same thing. Just because some one(EVR) says that Hinduism is evil, it will not be so.

 17. இந்த பெரியாரியம் பேசுபவர்கள் எல்லாம் அவர்கள் மட்டும்தான் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு ரொம்ப அழிச்சாட்டியம் பண்ணுவது உண்டு.
  கற்பு என்பது பெண்ணை அடிமைப்படுத்தும் என்று சொல்லிவிட்டு குடும்பம் வேண்டும், ஒருவனுக்கு ஒருத்தி (திராவிட (தமிழ்) கலாச்சாரம்) னு சொல்வானுங்க.

  இவ்வளவு பெரிய நாடான, அதிக மக்கள் தொகை உள்ள இந்தியாவே அஹிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது பெருமையான விஷயம் அல்லவா? அதனால்தான் உலகுக்கே அஹிம்சா வழிக்கு முன்னோடிகளாக இருக்கிறோம். இப்ப வந்து “பர்மாவ பாரு, பார்டற பாரு”னு சொல்றானுங்க.
  காந்தி வாங்கி கொடுத்த சுதந்திரத்தில் வாழ்ந்து கொண்டு காந்தியையும் / அவர் வழியையும் கிண்டல் பண்ற கூட்டம். பெரியார் அதைத்தானே செய்தார். அந்த ஆளுக்கு முதல்வர் பதவி வந்ததாம், அதை தூக்கி எறிந்தாராம்.
  முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு அனைத்து மாற்றங்களையும் அதிகாரத்தோடு செய்து, சட்டமாக்கி இருக்கலாமே. சுயநலத்துக்காக அதை விட்டு புட்டு, இன்னிக்கு அதை பெரிய தியாகம் செய்தது போல பேசுறானுங்க.
  புராணங்களில் ஆபாசம் சொல்வானுங்க. இன்னிக்கு சினிமாவுல, மாத, வார பத்திரிக்கைல, “internet”ல இருக்கிறதா எல்லாம் ஒண்ணுமே சொல்ல மாட்டனுங்க.
  பெரியாருக்கு வக்காளத்து வாங்கிபுட்டு “மாற்றம் ஏற்படுத்த முடியாது” னு இவனே முரண்பாடா பேசுறான். பெரியார் இத கேட்டார்னா முதல்ல இவன கல்ல கொண்டு எரிஞ்சு கொன்னுடுவார்.

 18. Dar Mr Srinivas
  I am still in the dark regarding EVR’s marriage to a teenage girl, old enough to be his grand daughter. I am ignorant of the facts. I will like to be enlightened on this and I hope you will oblige me on this. Thanks in anticipation.
  By the way , would you marry of your teenage daughter to an old man of EVR’s age, whatever the excuse the other guy comes out with?

 19. பெரியார் பற்றி என் சொந்த கருத்தை தான் இதுவரை கூறினேன். சமூக அக்கறைக்கு பாடு பட்ட ஒரு மனிதனை விமர்சிக்க வேண்டாம் , என்றே எனது கருத்துக்களை வெளியிட்டேன். நீங்கள் நினைப்பது போல் நான் பெரியார்வாதியோ, அல்லது அம்பேத்காரை பின்பற்றுபவனோ அல்ல. நானும் சாதி மறுப்பிற்கு பாடுபடும் ஒரு சாதாரண மனிதன்.

  #“மாற்றம் ஏற்படுத்த முடியாது” னு இவனே முரண்பாடா பேசுறான். பெரியார் இத கேட்டார்னா முதல்ல இவன கல்ல கொண்டு எரிஞ்சு கொன்னுடுவார்.#

  உங்கள் வாதத்தில் கருத்துக்களை விட உணர்ச்சிகளே தெறிக்கிறது. உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.

 20. Dear All,

  E.V.Ramaswamy had never fought for Scheduled Caste People. He always fought for Backward Class people. Even in that fight also his contribution is negligible.

  Please refer Mr.Subbu’s Poga Pogap Therium Part No. 13.

  Regards.

  Mahesh.

 21. Dear Rkw How many churches u entered r u the member of church christianity not speaking abt luxurious r high class life without knowing the christian belief never talk bad abt us wen u write use some respectful words if u have any doubt send me mail i ll reply to u with bible reference Jesus himself born in carpenter family his early followers r fisherman and sinners christianity never speak abt caste r classification oly to groups sinners and born again people pls publish my comments

 22. article in frontline July 18-31 , 2009 under the heading No Entry.

  The situation was no better for Dalits who converted to Christianity at Anumanthanpatti village in Theni district. A young private schoolteacher said the converts were discriminated against. Dalit Christians were not admitted to societies run by other Christians who belonged to the Church of the Holy Spirit; the church car would not go anywhere near the Dalit colony; and Dalit Christians had a separate cemetery and an exclusive hearse, he said.

  Justifying the treatment meted out to Dalits, a retired headmaster of a local school in Anumanthanpatti said, “As Dalits belong to the labour class, they are not pious enough to deserve equal treatment.

 23. Dear Mr.Edwin,

  First of all, let me admit, it was very difficult to understand what you have said, because of lack of punctuation. well, you say Bible or christianity do not talk about caste. No offense meant, I respect all religions as long it doesnt poke its nose in to my freedom.

  But to clarify….Even Vedas or upanishads or gita or any hindu scripture never talks about any caste in Hinduism and as such casteism is not proposed by Hindusim at all. If people bring varna’s here, then there is no fool then those people, because varna’s are not caste. We have been brainwashed by the missionaries and other anti hindus to think that Varnas are caste. Thats not the topic now and so I stop here.

  I dont think any religion,for that matter talks about caste. Its only we people who create these divisions. Can you explain why christianity has Protestant and Catholics? Can a Protestan become a Pope? Can a protestant enter a catholic church or vice versa? Muslims have Shia – sunnie and every damn religion has such divisions and blaming Hinduism alone is stupidity. Our people like to be fools and Its only the DK’s and such clan who benefit by this foolishness of us.

  You said you can quote Bible reference….but do you know that Bible is not the same Bile as it was 1700 years back? It gets updated every few years with additions and deletions…even this site had articles on that….the recent venture is to insert veda’s and upanishad’s quotes in Bible claiming that the Hindu scriptures are offshoot of the Bible. They have gone to such an extent to say that Tiruvalluvar is a desciple of St.Thomas, when St.Thomas’ visit to India itself is still a qestion mark.

  silarai pala naal emathalam, palarai sila naal emathalam. aanala ellorayum ella naalum ematha mudiyathu sir…

 24. Dear Ramkumaran, I feel that you have given very fitting reply to Srinivasan’s allegations. I think Srinivasan is misguided by the propoganda that is spoiling the basic mind-set of many of our fellow tamilians. Why should we stop with just Ambedkar’s reforms. Swamy Dayananda Saraswathi’s (The founder of Arya Samaj)ideas about women’s liberation and Rajaram Mohan Roy’s insistance on widow remarriage are just two pearls in the ocean of reforms by countless reformers. Congratulations for your in-depth analysis and irrefutable evidences.

 25. dear friends,
  can anyone authentically hichlight “” What is this “” PARPANEEYA KODUMAIDAL””? Have these people
  been so tyrant and continuously for 3000-5000 years?What was the real condition of the SaNATANA Dharmists(all castes) under the muslims and british rule?

 26. // தமிழை ஏன் திட்டினார் என்றால், புராண புளுகுகளில் இருந்து இந்த அழகிய தமிழை மொழியை பிரிக்க முடியவில்லை என்று திட்டினார்.//

  மற்ற மொழிகளை விட்டு விடலாம். திராவிட மொழிகளான ‘தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள’ மொழிகளில் ‘புராண புளுகுகள்’ இல்லையா ? அப்படி என்றால் தமிழை மற்றும் ஏன் திட்டினார் ? ஒரு வேலை ‘தமிழ்’ மீது கொண்ட அதீத மொழி பற்று காரணமாக இருக்குமோ ?

  // தமிழில் என்ன இருக்கிறது அறிவியல் பூர்வமாக ?. சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன். //

  சொந்த புத்தி எதற்கு (?) பெரியார் தந்த புத்தி இருக்க என்கிற கூற்று தெளிவாக விளங்குகிறது உங்கள் கேள்வியில். ஈ.வெ.ரா வை விட்டு வெளியில் வந்து யோசித்தால் தெரியும் ‘மொழியில்’ என்ன ‘அறிவியல்’ என்று ?

  மொழி ஒரு கருவி என்று சொல்லும் மற்ற டுபாக்கூர்களின் கேள்வி தான் இது

 27. மொழி ஒரு கருவி மட்டுமே. அதற்கு தெய்வத்தன்மை கொடுத்தது மனிதர்கள். காக்கைக்கு தன் குஞ்சு என்பதைப் போல தம் தாய்மொழியை வானளாவப் புகழ்ந்து உச்சி மோந்து புளகாகிதமும் இறும்ப்பூதுமடைவது பாமரர் செய்வது. பல பெரியவர்களும் செய்வர். சமசுகிருதமோ, தமிழோ – மனிதர்களால் படைக்கப்பட்டவை. சிவபெருமானின் உடுக்கையில் இருபக்கங்களிலிருந்து வந்தவை என பிராமணர்கள் எழுதிக்கொண்டார்கள். இந்தியாவில் 1000க்கும் மேல் மொழிகள் உள. அவற்றுள் எழுத்துருவமும் இலக்கியமும் கொண்ட மொழிகள் ஏராளம். இமயமலை அடிவாரத்து மொழியான பஹாடி மொழிகூட நாட்டுப்பாடல்களும் எழுத்துருவும் கொண்டதுதான். சிவபெருமான் உடுக்கைக்கு இருபக்கங்களே எனின் அவர் பிறமொழிகளைக் கண்டுகொள்ளவில்லையா? ஆக, எனவே சிவபெருமானே தமிழையும் சமசுகிருத்தையும் உருவாக்கினார் எனபது ஒரு சந்தர்ப்ப வாதம். ஏன் சந்தர்ப்பம் என்கிறேன் என்றால், சங்ககாலத்திலிருந்தே சமசுகிருதம் – தமிழ் பிணக்கு இருந்தது. அதை சமநிலைப் படுத்த இப்படிச்சொன்னார்கள்; சைவ்- வைணவப் பிணக்கைத் தீர்க்க – அரியும் சிவனும் ஒன்று; இதை அறியாதவர் வாயில் மண்ணு! – என்று சொல்லிவைத்ததைப் போல 🙂

  ஈ வே ரா தமிழைக் காட்டுமிராண்டிப்பாஷை என்று ஏன் சொன்னார் என்றதற்கு பெரியாரிஸ்டுகள் கொடுத்த விளக்கம் நினைவுக்கு வருகிறது. அவர் காலத்தில் திராவிட இயக்கம் உச்சிக்கு வந்தது; தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் வெளித்தெரிந்தனர். தனித்தமிழ் இயக்கம் பிறந்தது: மறைமலை; தேவநேயப்பாவாணர்; கார்மேக கோனார்; பரிதிமாற்கலைஞர் என முன்னின்றனர். அரசியலில், தமிழைச் சரிவர தெரியாதவர்களும் தமிழ் ஆரவலர் வேடம் போட்டனர். எங்கு காற்றடிக்கறதோ அங்கு போய் சேர்ந்தால் நல்லது என்று இருகரையாளர்கள் (இரட்டை வேடம்போடுபவர்) எப்போதுமுண்டு. இப்படிப்பட்ட திராவிட இயக்கத்து வேடதாரிகள் அளவுக்கு மீறி பேசினர்: தமிழின் தொன்மையைக் கற்காலத்துக்கே கொண்டு போனார்கள்: கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி என்று வாய்ச்சொல் வீரர்களைப் பார்த்து சொன்னார்: அதாவது அவர்களைக் கிண்டலடிக்க— ”…தமிழன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தே தமிழ் தோன்றியதென்றால், தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாசைதானே?” சரியான நெற்றியடி. பின்னர் கொஞ்சம் அடங்கினார்கள். இக்காலத்திலும் எவரேனும் அப்படிப் பீற்றிக்கொண்டு அலைந்தால், இதுவே சொல்லவேண்டும்: அப்படியென்றால் உன் மொழி காட்டுமிராண்டி பாஷைதானே?

  தன் தாய்மொழி கன்னடம்; தான் ஒரு கன்ன்ட பலீஜா நாயுடு என்பதை ஈ வே ரா இரகசியமாக வைக்கவே இல்லை. வெளிப்படையாகச் சொன்னார். இரகசியமாக வைத்துக்கொண்டதாகவும் தாங்களே அவரைக் கன்னடியர் ப்லீஜா நாயுடு என்பதக் கண்டுபிடித்ததாக இங்கு பலர் மேலே எழுதிக்கொண்டிருப்பதை வாசிக்கும்போது நகைச்சுவை மேலிடுகிறது:-) தமிழனாக என்றுமே தன்னைக்காட்டிக்கொண்டு, வேடம் போடாதவர் கன்னடியராயிருந்தாலென்ன? தெலுங்கராயிருந்தாலென்ன? அவரிடம் இருந்த பல குணங்களில் மகத்தானது: வெளிப்படையாகப் பேசுவது. ஆம என்றால், ஆம். இலையென்றால் இல்லை. இதற்கு அவருக்கு உதவியது: எந்த பதவியையும் நினைத்துக்கொண்டு செயல்படாததால். மடியில் கணமிருந்தால்தானே செயலில் திருட்டுத்தனமிருக்கும் ? கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இன்று, பகுத்தறிவாளர்களாக காட்டிக்கொண்டு அரசியல் கட்சிகளும் தொடங்கும் காட்சிகளுக்கிடையில், ஈ வே ரா ஒரு வியப்பான மனிதர்தான் !

 28. // மொழி ஒரு கருவி மட்டுமே. //

  இந்த ஒரு வரியிலேயே பகுத்தறிவு பல்லிளித்து விட்டது. நீங்கள் பெரிய பெரிய விஷயங்களை சொல்கிறீர்கள். நான் எதற்குள்ளேயுமே போகவில்லை

 29. //இந்த ஒரு வரியிலேயே பகுத்தறிவு பல்லிளித்து விட்டது. நீங்கள் பெரிய பெரிய விஷயங்களை சொல்கிறீர்கள். நான் எதற்குள்ளேயுமே போகவில்லை//

  என்ன சொல்லவருகிறீர்கள் என்றே புரியவில்லை. முதலில் எனக்கு பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாது. ஏனென்றால், எனக்குத் தெரிந்தவரை மனிதர்களுக்கு அறிவு மட்டும்தான் இருக்கும். ஆனால் அதை அவரவர் விருப்பப்படி அமைத்துக்கொள்வார்கள். இதைப்போலவே நம்பிக்கையும். மூட நம்பிக்கை என்ற ஒன்று கிடையவே கிடையாது. கேடு செய்யும் நம்பிக்கைகள்; நல்லது செய்யும் நம்பிக்கைகள்: அவ்வளவுதான்.

  பகுத்தறிவு என்ற சொல்லையே நம்பாதவனிடம் என்ன பகுத்தறிவைக் கண்டுபிடிக்க முடியும்? புரியலையே ! 🙁 I don’t go by conventional wisdom, dear. Pl understand me before commenting.

 30. ஒருவனுக்கு வரலாறு தெரியவில்லை என்றால் பரவாயில்லை. ஏனெனில் எல்லோருக்கும் எல்லாம் தெரியாது

  ஆனால் ஒருவனுக்கு அவனுடைய மொழியை பற்றி தெரியவில்லை என்றால் அது ‘சிறுபிள்ளைத்தனம்’ அல்லது அவனுக்கு கிஞ்சித்தும் ‘சிந்திக்கும்’ திறனில்லை என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல இயலாது .

  மொழி புனிதம் என்றால் ஏதோ ‘வாஷிங் பவுடர்’ (அல்லது) ‘சோப்பு’ போட்டு மொழியை பள பள என்று சுத்தமாகி காட்டவேண்டும் போல ‘டுபாக்கூர் பகுத்தறிவாதிகள்’ (ஈ.வே.ரா கோஷ்டிகள்) எதிர்பார்க்கின்றனரா ???

  சரி மொழியில் அப்படி என்ன தான் இருக்கிறது ?? சிந்திக்கவே பிறந்த நமது ‘டுபாக்கூர் பகுத்தறிவாதிகள்’ மொழியை பற்றி என்ன தான் சொல்ல வருகிறார்கள். அதையும் பார்ப்போமே ??

 31. மொழி என்பது ஓர் உடல் மட்டுமே. அதற்குள் உயிரூட்டுவது மனிதர்கள் : எண்ணஙகள்; இலக்கியமென்றால் கற்பனைகள்; ஒருவருக்கொருவர் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள பேச்சுக்கள். — பேச்சு, எழுத்து, கலைகள் வெளிப்படுத்தும் ஆடல் பாடல்கள் – இவற்றால் மனிதர்கள் ஒரு மொழிக்கு உயிர் தருகிறார்கள். அப்படி தரவில்லையென்றால் மொழி சடலம்தான். மண்ணோடு மண்ணாகிப்போகும். அப்படி காணாமல் போன மொழிகள் உலகில் எண்ணிலடங்கா. அண்மையில் அந்தமானில் ஒரு மொழியைப்பேசி வந்த‌ ஆதிகுடிகளில் அனைவரும் அழிந்து பட ஒரு பெண் மட்டும் இருக்க, இந்திய அரசு அவளிடமிருந்து அம்மொழியை அவளும் இறப்பதற்கு முன் பெற்று ஆவணப்படுத்தவேண்டுமென நினைத்து செயல்பட மொழியியலாளர்களை அனுப்ப அவர்கள் போகுமுன்பே அவள் இறந்துவிட அம்மொழி அழிந்தது. எனவே இந்திய அரசு அப்படி அழியும் நிலையில் உள்ள மொழிகளைக்காகக முயற்சிகள் எடுத்துவருகிறது.. மொழிக்குப் புனிதம் மொழியிலிருந்து வராது. தமிழில் உள்ள தேவாரம், திருவாசகம், பாசுரங்கள் – போன்று தெய்வ வணக்கப் பாடலகள் இருப்பதால் மட்டுமே தமிழ், புனிதமாகிறது. ஜயமோகன், ஜயகாந்தன் புதினங்களால், தமிழ் புனிதமாகவில்லை. சிறிது கற்பனை பண்ணிப்பாருங்கள்: தேவாராமு, திருவாசகமும் பாசுரங்களும் எழுதப்படவில்லையென்றால் தமிழின் நிலையென்ன? ஒரு மணிப்புரியின் நிலைதான். அம்மொழி வெறும் பேச்சுக்குத்தான். தானே புனிதம் ஒரு மனிதனுக்குக் கூட வராது. அவன் செய்கைகளிலிருந்து உருவாகும். மொழியும் அப்படித்தான். மொழி ஒரு ”செய்யும் பொருள்’ அன்று; ”செயப்படு பொருள்”. அதற்கென்று ஓரியக்கமும் கிடையாது. இடிச்ச புளிதான்! இயக்கத்தை நாம்தான் கொடுக்க வேண்டும். மொழிக்கு இலக்கணத்தைக் கூட மனிதர்தான் கொடுக்கவேண்டும். தொல்காப்பியத்தை எழுதியது மனிதன். கடவுள் அன்று. பேசவும் எழுதவும் யாருமில்லையென்றால் மொழி ஒரு சடலமே! நாளாக ஆக, நாறி சிதைந்து அழிந்து மண்ணோடு மண்ணாக மக்கும்..
  மொழியை கன்னித்தமிழ்,தெயவமத்தமிழ் புனிதத்தமிழ் என்றெல்லாம் புகழ்ந்துகொண்டேயிருந்தால் தமிழ் வளராது என்பார் சுஜாதா. மொழி தெய்வம் அன்று எனபதுவே அறிவு. பகுத்தறிவு என்றும் அழைத்துக்கொள்ளலாம். தமிழுக்கு வாழ்த்து பாடலாம். தமிழ்த்தாயாக உருவகித்து, தெய்வமாக்கிக் கோயிலெடுத்து (தல்லாகுளம்; மதுரையில்) ஒரு தனிப்பிம்பமாக வைத்து வணங்குவது அறிவார் செயலே அல்ல. பகுத்தறிவு கிடையாது. அப்படிச்செய்பவர்கள் யாரார்? திராவிட இயக்கத்தினர்தான். ஆக அவர்களுக்குப் பகுத்தறிவு இங்கே இல்லை 🙂

 32. திரு BSV நான் உங்களை கேள்வி கேட்கவில்லை. ஈ.வெ.ரா கோஷ்டிகளை தான் கேள்வி கேட்கிறேன்

 33. BSV,

  மொழி ஒரு கருவி மட்டுமே என்று சொல்லும் ஈ.வே.ரா கோஷ்டிக்கு என்னுடைய பதில்

  1) மொழி ஒரு ‘கருவி’ மட்டுமே என்றால் யாரவது உங்களை ‘திட்டினால்’ உங்களுக்கு ஏன் ‘கோபம்’ வருகிறது ? யாரவது உங்களை ‘பாராட்டினால்’ உங்களுக்கு ‘ஏன்’ மகிழ்ச்சி ஏற்படுகிறது ?

  இந்த கேள்விக்கு ஈ.வே.ரா கோஷ்டி பதில் சொல்ல வேண்டும்.

  2) மொழி நம் ‘புலன்களை’ இயக்க வல்லது. மொழியில் உள்ள வார்த்தைகள் நம்மை ‘சிந்திக்க வைக்கிறது’, நம் ‘அறிவை வளர்க்க’ பயன்படுகிறது என்பதை “ஈ.வே.ரா கோஷ்டி” மறுக்கட்டுமே பார்க்கலாம் ??

  மொழி என்பது ‘வெறும்’ கருவி மட்டும் அல்ல! அல்ல!! அல்ல!!!

  மனித புனிதர் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒரு மனிதர் ‘தான் செய்யும் செயல்களின் மூலம்’ புனிதர் என்று போற்றப்படுவதுண்டு

  அதே போல் ஒரு மொழி மனிதர்களின் ‘ஆக்கங்கள்’ மூலம் புனிதமடைகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. இங்கே ‘புனிதம்’ என்பதை மொழியின் ‘சிறப்பு’ என்றே எடுத்து கொள்ள வேண்டும்.

  3) இறுதி கேள்வி

  ஆங்கிலத்தில் இல்லாதது ‘தமிழில்’ என்ன இருக்கிறது என்பது ‘ஈ வே ராவின்’ வாதம்.

  அப்படியெனில் ‘ஈ வே ரா’ கோஷ்டியை சேர்ந்தவர்களில் ”ஈ வே ரா’ சொன்ன பிறகு ‘தமிழை’ படிக்காமல் தானே இருக்க வேண்டும் உண்மை தொண்டன் என்றால் ? நிலைமை அப்படி தான் இருக்கிறதா ?

  நன்றி

 34. ஈ வே ரா ஆட்கள், தனித்தனி பதிவிணையங்கள்தான் வைத்திருக்கிறார்களே தவிர, தமிழ் ஹிந்து போன்ற இந்துத்வாவினரின் இணைய தளத்தில் எல்லாம் வந்து விளக்கங்களோ, விவாதங்களிலோ இணைய மாட்டார்கள்.. முகநூலில் வரலாம். அப்படி அவர்கள் எழுதிய ஒன்றைத்தான் இங்கு குறிப்பிட்டேன். ஆனாலும் இந்துத்வர்கள் முகநூல்களில் தடுப்புக்கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஈ வே ரா ஆட்களை உள்ளே விடுவதில்லை. இந்துத்வர்கள் திராவிட இயக்கத்தைப்பற்றி இந்துத்வர்களிடனேதான் உரையாடுகிறார்கள். உங்களுக்கு விளக்கம் வேண்டுமென்றால், இந்த்துவர் அல்லாதவர் முகநூல்களில் உங்கள் கேள்விகளைப் பதியுங்கள். ஒருவேளை பதிலகள் கிடைக்கலாம்.

 35. BSV,

  நான் சொன்ன கருத்தை குறைந்தபட்சம் ‘நீங்கள் ஒருவராவது’ ஏற்றுகொள்கிறீர்களா ? அதாவது ‘மொழி ஒரு கருவி மட்டும் இல்லை’

  FBல் ஒரு குழு இருக்கிறது. இங்கே கருத்துரையாடல் ‘பெரியாரிஸ்ட்களுக்கும், மத நம்பிக்கை’ உடையவர்களுக்கும் தான் நடக்கும்

  அங்கே விஞ்ஞான ரீதியாக ‘மதத்தில் உள்ளதை’ பற்றி சொன்னால் பெரியாரிஸ்டுகள் அவரை BLOCK செய்துவிடுவார்கள்.

  உதாரணமாக அந்த குழுவில் இஸ்லாமியர் ஒருவர் ‘மண்ணில் இருந்து தான் மனிதன் தோன்றினான்’ என்கிற குரானின் கோட்பாட்டிற்கு ஏதுவாக ‘அமெரிக்கா பல்கலைக்கழத்தின்’ ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருந்தார். ஓரளவுக்கு ‘விஞ்ஞான ரீதியாக’ கருத்துக்கள் அதில் சொல்லப்பட்டு இருந்தது

  உடனே ‘டுபாக்கூர் பகுத்தறிவு ஈ.வே.ரா கோஷ்டிக்கு’ கோபம் வந்து அவரை பிளாக் செய்து விட்டனர்

  வழக்கம் போல் பெரியார் ஒரு மனித புனிதர், அவர் இல்லை என்றால் கல்வி இல்லை, பெண் சுதந்திரம் இல்லை, அவர் தான் தமிழ்நாட்டின் விடிவெள்ளி என்றெல்லாம் சொல்லி கொண்டு இருப்பார்கள்

  நானும் ஈ.வே.ராவை பற்றி சொல்லி பிளாக் செய்யப்பட்டவன் தான். அதனால் தான் வெளியே கேள்விகளை கேட்கிறேன்

  நன்றி

 36. Namaskaram Satish Sir

  “varna’s are not caste”.

  I am one of the people who do not know the difference between Varnas and Caste. What is a Varnam and what is caste (Jaathi).

  “the recent venture is to insert veda’s and upanishad’s quotes in Bible claiming that the Hindu scriptures are offshoot of the Bible. They have gone to such an extent to say that Tiruvalluvar is a desciple of St.Thomas, when St.Thomas’ visit to India itself is still a qestion mark”

  Shocking. Christians have started claiming our yoga postures as “Christian Yoga”. A blatant lie. Bible never says anything about Yoga. The origin of yoga is our own India. Yoga is not an English word. In Melbourne, Christians conduct classes where our yoga postures are taught as Christian Yoga.Every Tom, Dick and Harry claims yoga as if they invented it. Vikram Yoga, is one example. All our inventions are claimed by foreigners as their own.
  Sakuntala

 37. சகுந்தலா அவர்களுக்கு,

  இந்த கேள்வி நீங்கள் வேறு ஒருவரை கேட்டு இருந்தாலும், எனக்கு தெரிந்த சுருக்கமான பதில்

  1) வர்ணம் என்பது குணம் சம்பந்தப்பட்டது. வர்ணம் மாற்றி கொள்ள கூடியது.

  கெளசிகன் என்ற மன்னன் சத்ரியனாக பிறந்து ‘பின்பு’ விஸ்வாமித்திரனாக மாறியது

  2) ஜாதி என்பது அவர் அவர்கள் செய்த தொழில்கள் அடிப்படையில் உருவானது

  மேலும் முழு விவரங்களுக்கு ‘குருஜியின்’ இந்த நீண்ட விளக்கத்தை பொறுமையுடன் படிக்கவும்

  https://www.ujiladevi.in/2013/04/blog-post_23.html

  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *