சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை

பழ. கருப்பையாவின் “காதலால் சொன்னேன்” என்ற கட்டுரை தினமணியில் (அக்-21) வந்துள்ளது. தன்னுடைய சுயலாபத்தைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாத கடைந்தெடுத்த அரசியல்வாதியான கருப்பையா எழுதும் எந்தக் கருத்தின் மீதும் எப்போதும் எனக்கு மரியாதை இருந்ததில்லை. அவரது அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், ஆதி சங்கரரையும், இந்து ஞான மரபின் மணிமுடியான வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை. இந்தக் கட்டுரையின் மூலம் தனது கலாசார அறிவீனத்தையும், திராவிட இயக்க மூடத்தனத்தையும் கொட்டுமேளம் கட்டி அறிவிக்கிறார் பழ.கருப்பையா. தினமணி போன்ற ஒரு மரியாதைக்குரிய நாளிதழ் இந்த முடைநாற்றம் வீசும் குப்பையைப் பதிப்பித்து தனது தரத்தைத் தாழ்த்திக் கொண்டுள்ளது. இதற்காக அந்தப் பத்திரிகைக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

// கோயில் வழிபாடு என்பதும், கருவறைக்குள் ஆவுடையுள் நிலை கொண்டிருக்கும் லிங்கத்தை வழிபடுவது என்பதும் திராவிட வழிபாட்டு முறைகள்தாம்! ஆரிய முறை வேறு; தீயை வழிபடுபவர்கள் அவர்கள்! “தீயினைக் கும்பிடும் பார்ப்பான்’ என்று தெளிவுபடுத்திக் கூறுகிறான் பாரதி. லிங்கத்தின் மீதோ, முருகனின் மீதோ, திருமாலின் மீதோ நீரைச் சொரிந்து கழுவி, பூவிட்டுப் பூசை செய்வது திராவிட முறை…. லிங்க வழிபாட்டைச் “சிசுன வழிபாடு’ என்று ஆதிசங்கரர் நகையாடினார். பக்தி இயக்கம் திராவிடச் சமயங்களை நிறுவனப்படுத்தியபோது, சிசுன வழிபாட்டைத் தமிழ்நாடு முழுதும் சுற்றிச் சுற்றிப் பரப்பிய ஆரியரான ஞானசம்பந்தரை “திராவிடச் சிசு’ என்று பழித்தார் ஆதிசங்கரர்! //

இந்த 3-4 வாக்கியங்களில் எத்தனை ஆதாரமற்ற பொய்களையும், கீழ்த்தரமான வெறுப்புணர்வையும் அநாயாசமாக உதிர்த்துச் செல்கிறார் பாருங்கள்.

லிங்கம்:

“லிங்கம்” என்பதே அடிப்படையில் சம்ஸ்கிருதச் சொல் தான் – “திராவிட” மொழிச் சொல் அல்ல. அச்சொல் முதன்முதலில் வேத மந்திரங்களில் தான் வருகிறது. இமயம் முதல் குமரி வரை எல்லா சிவபூஜைகளிலும் தவறாமல் இடம்பெறும் “நிதனபதயே நம:” எனத் தொடங்கும் அர்ச்சனையில் “ஊர்த்வாய நம:, ஊர்த்வலிங்காய நம:” முதல் “சிவாய நம: சிவலிங்காய நம:” “பரமாய நம: பரமலிங்காய நம:” வரை லிங்கரூபங்கள் துதிக்கப் படுகின்றன. இம்மந்திரமும், “ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி” என்று தொடங்கி ஐந்து முகங்களுக்குமான மூலமந்திரங்கள் மற்றும் சிவபூஜையில் ஓதும் சகல மந்திரங்களும் யஜுர்வேதத்தின் ஒரு பகுதியான “தைத்திரிய சம்ஹிதா”வில் இருந்தே தொகுக்கப் பட்டவை.

நீரும் நெருப்பும்:

வேத சடங்ககளைக் குறித்து அடிப்படையான அறிவு கொண்டவர்கள் கூட, தீயும் நீரும் (அக்னி, ஆப:) அதில் இணையாகவே பயன்படுத்தப் படுவதை உணர்வார்கள். அக்னேராப: (தீயினுள் நீர்) என்பது வேதவாக்கியம். பஞ்சபூதங்களையும் அவற்றின் இணைவையும் பேசும் ஏராளமான மந்திரங்கள் வேதங்களில் உள்ளன. இன்றும், கலசத்தில் வருணனை ஆவாஹனம் செய்யாமல் எந்த அக்னி கார்யத்தையும் வேள்விச் சடங்கையும் செய்வதில்லை என்பது கண்கூடு. ஆரியர்கள் தீயையும், திராவிடர்கள் நீரையும் வழிபாட்டுக்குப் பயன்படுத்தினார்கள் போன்ற கேனத்தனமான கருத்துக்கள் திராவிட இயக்கக் கற்பனைகளே அன்றி அவற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.

shiva_linga_fire“செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என்பார் சம்பந்தர். பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச் சைவர்கள் உணர்வார்கள். சைவ சமயக் குரவர்கள் போற்றிய மகத்தான மரபை, வெறும் சல்லிக்காசு அரசியல் லாபத்திற்காக அவதூறு செய்யும் பழ.கருப்பையா போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உணருங்கள். கருணாநிதியை எதிர்க்கிறார் என்ற காரணத்தை மட்டும் வைத்து இத்தகைய ஒரு கயமையை சகித்துக் கொள்ள முடியாது.

“தீயினைக் கும்பிடும் பார்ப்பார்” என்று பாரதி கூறியது தீயையும் பார்ப்பானையும் இழிவுபடுத்தி அல்ல, மிகவும் பெருமைப் படுத்தித் தான்.

தீவளர்த்தே பழவேதியர் -நின்றன்
சேவகத்தின் புகழ் காட்டினார்;-ஒளி
மீவளருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையினாலறம் நாட்டினார்

என்று அக்னிகர்ப்பனான முருகக் கடவுளைப் பாடியிருக்கிறார் இதே பாரதி. வேத தெய்வமான அக்னியைப் போற்றி “வேள்வித் தீ” முதலான பாடல்களையும் அழகிய வசன கவிதைகளையும் எழுதியிருக்கிறார். தனது மட்டமான அரசியலுக்காக மகாகவி பாரதியின் ஒரு வரியை உருவி அதைத் திரிக்கிறார் இந்த ஆசாமி.

சிசுனம்:

சிசுனம் என்று இவர் இங்கு எழுதும் சொல் வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण – shiSHNaa) என்ற சொல். அந்தச் சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु – shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி. அதைவிடக் கொடுமை என்னவென்றால், ‘திரவிட சிசு’ என்பது அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தில் (சௌந்தரிய லஹரி, 67), ஒரு மகத்தான புகழுரையாக வருகிறதே அன்று இழிசொல்லாக அல்ல, “ஹிமவானின் புதல்வியே, உன் திருமுலைப்பாலை அருந்தியதால் அன்றோ அந்தத் தமிழ்க் குழந்தை, திரவிட சிசு, அமுதமயமான பாடல்களைப் புனையும் சக்தி பெற்றது!” என்பதே அதன் பொருள். இதில் திரவிட சிசு என்று சம்பந்தரை அல்ல, தன்னையே கவியாகிய ஆதி சங்கரர் குறிப்பிடுகிறார் என்றும் கூறுவார்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் முன்பு, அதன் முதல்நிலைத் தகவல்களைக் கூட அறிந்து கொள்ள முற்படாமல் (அதுவும் இந்த இணைய யுகத்தில்) “ஆரியரான ஞானசம்பந்தரை “திராவிடச் சிசு’ என்று பழித்தார் ஆதிசங்கரர்” என்று எழுதும் மடமையின் எல்லையை எப்படி வசைபாடுவது என்று கூடத் தெரியாமல் திகைத்து நிற்கிறேன்.

மேலும், சிவலிங்கம் பழங்குடி ஆண்குறி வழிபாட்டினின்றும் பிறந்தது என்று மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை சுவாமி விவேகானந்தர் தனது பேருரைகளில் கடுமையாக மறுக்கிறார். பின்னாளில் வாமாசார தாந்திரீகம் ஓங்கியபோது ஆத்மா, ஜீவன், பிரம்மம் என்று எல்லா சமயக் குறியீடுகளுமே ஆண்-பெண் உறவை மையமாக வைத்து விளக்கப்பட்டபோது சிவலிங்கம் பற்றிய உருவகம் இவ்வாறு மாறியதே தவிர அதன் மூலம் அதுவல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார். சிவலிங்க வழிபாட்டின் மூலம் வேத காலத்தில் வேள்விகளில் வணங்கப் பட்ட யூபஸ்தம்பம் (கம்பம்) என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார் –

“The Swami said that the worship of the Shiva-Linga originated from the famous hymn in the Atharva-Veda Samhita sung in praise of the Yupa-Stambha, the sacrificial post. In that hymn a description is found of the beginningless and endless Stambha or Skambha, and it is shown that the said Skambha is put in place of the eternal Brahman. As afterwards the Yajna (sacrificial) fire, its smoke, ashes, and flames, the Soma plant, and the ox that used to carry on its back the wood for the Vedic sacrifice gave place to the conceptions of the brightness of Shiva’s body, his tawny matted-hair, his blue throat, and the riding on the bull of the Shiva, and so on — just so, the Yupa-Skambha gave place in time to the Shiva-Linga, and was deified to the high Devahood of Shri Shankara. In the Atharva-Veda Samhita, the sacrificial cakes are also extolled along with the attributes of the Brahman.

In the Linga Purna, the same hymn is expanded in the shape of stories, meant to establish the glory of the great Stambha and the superiority of Mahadeva.”

(From: Complete-Works / Volume 4 / Translations: Prose / The Paris congress)

// வடநாட்டினர்க்குத் தனி மெய்யியல் கிடையாது. பார்ப்பனரல்லாதாரான விவேகானந்தர் வேறு வகை தெரியாமல் வேதாந்தத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று விட்டுத் தென்னாட்டிலும் இந்து மதம் என்று பேச வந்தபோது “நாங்கள் இந்துக்கள் அல்லர்’ என அவரைத் திருவனந்தபுரத்திலேயே வழிமறித்து அவருடைய கருத்தை விலைபோகாமல் செய்துவிட்டார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. //

மீண்டும், இந்த ஒரு வாக்கியத்தில் எத்தனை அபத்தங்கள்! ஐயோ !

ஆறு தரிசனங்கள் என்றும் (தமிழ் மரபில் அறுசமயம் என்றும்) கூறப்படும் மெய்யியல் துறைகள் – சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சம், வேதாந்தம். இவற்றின் பெயர்களும், இந்த தரிசனங்களுக்கான மூலநூல்களும் எல்லாம் வடமொழி எனப்படும் சம்ஸ்க்ருதத்தில் உள்ளன என்பது உலகறிந்த உண்மை. ஆனால் “வடநாட்டினர்க்குத் தனி மெய்யியல் கிடையாது” என்று ஒரு பேருண்மையை இந்த மேதாவி உதிர்க்கிறார்.

சரி, விவேகானந்தர் தான் வேறுவழியில்லாமல் வேதாந்தத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று விட்டார் (ஆமாமாம், எவ்வளவு எளிய செயல் – பக்கத்து ஊருக்கு பஸ்ஸில் டிக்கெட் எடுத்து கருப்பையா சென்று விடுவது மாதிரி). ஆனால் என்ன ஆயிற்று இந்த இழவெடுத்த தமிழன்கள் திருமூலனுக்கும், மெய்கண்டனுக்கும்? அவன்களும் அல்லவா வேதாந்தம் அத்துவிதம் என்று கூவுகிறான்கள். அந்தத் தமிழ்த் துரோகிகளின் நூல்களை உடனே கொளுத்த ஒரு இயக்கம் ஆரம்பிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் பச்சைத் தமிழர் பழ கருப்பையா?

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி
போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

– திருமந்திரம்

பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்– அண்ணல்தாள்
அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது
அத்துவிதம் என்று அறையும் ஆங்கு.

.. அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே
அத்திவிதி அன்பின் தொழு!

– சிவஞான போதம்

swami-vivekanandar

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த உலக சிந்தனையாளர்களில் ஒருவராக மதிக்கப் படும் சுவாமி விவேகானந்தரின் கருத்தை “விலைபோகாமல் செய்துவிட்டாராம்” மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. ஆமாமாம், உண்மை தான், விலைபோகாததால் தான் இன்று தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஆயிரக் கணக்கில் விவேகானந்த வித்யாலயங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கானவர்கள் விவேகானந்தரது சிந்தனைளைப் பயின்று கொண்டும் அதனால் உத்வேகம் பெற்றும் வருகிறார்கள்! அதைவிடக் கொடுமை, அந்த விலைபோகாத வேதாந்தத்தை எடுத்துக் கொண்டு, தனது நூலின் மையமான தத்துவக் கருவாக்கி மனோன்மணீயம் என்ற ஒரு காவியத்தையே எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் சுந்தரம் பிள்ளை? அதுவும் ஒரு சம்ஸ்கிருத காவியத்தின் தழுவலாக வேறு! உண்மையில் அவரையும் தன்னுடைய நீளமான தமிழ்த் துரோகி பட்டியலில் தான் கருப்பையா சேர்க்க வேண்டும்.

ஏற்கனவே பிரபல சமயச் சொற்பொழிவாளர் ஒருவர் விடுத்த சவடாலுக்கு எதிர்வினையாக “வேத நெறியும் சைவத்துறையும் முரண்படுகின்றவா” என்று ஒரு நீண்ட பதிவை முன்பு எழுதியிருந்தேன். அதே வகையிலான விஷக் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வெகுஜன தமிழ்ச் சூழலில் சுற்றிக் கொண்டிருப்பது அயர்ச்சி ஏற்படுத்துகிறது. இது நமது சாபக்கேடு (அந்தப் பதிவை இங்கே வாசிக்கலாம்)

// இசுடாலின் திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ளவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் இந்துக்கள் என்று சொல்லக் கேட்பதே மேனி முழுவதும் கம்பளிப் பூச்சி ஊர்கின்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது! //

இசுடாலின் கூறியதைப் படித்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி இப்போது இருமடங்காகிறது. இப்படியே அரிப்பு வந்து புழுத்து ஒழிந்து சாகட்டும் திராவிட இயக்கம் என்ற நச்சுக் கருத்தியல். அந்த நன்னாள் வெகுசீக்கிரமே வந்து கொண்டிருக்கிறது.

// திராவிட அடலேறுகளே’ என்று இனம் சுட்டி அழைக்கப்பட வேண்டியவர்கள் “இந்துக்களே’ என்று இல்லாத மதத்தின் பேரில் அடையாளப்படுத்தப்படுவார்களேயானால், அது திராவிட இயக்கத்திற்கு மூடுவிழா நடத்துகின்ற முயற்சியாகிவிடும். //

அப்படியென்றால், இல்லாத மதத்தின் பேரில் “இந்து அறநிலையத் துறை” என்று ஒன்றை எதற்கு உங்கள் இழவெடுத்த அரசு வைத்திருக்கிறது? உங்களது மற்றும் உங்களது பொஞ்சாதி புள்ளைகுட்டிகளின் சான்றிதழ்களில் எல்லாம் மதம் என்பதில் என்ன எழுதுகிறீர்கள் ? உங்கள் குடும்ப திருமணங்களை எந்த மதத்தின் சிவில் சட்டத்தின் கீழ் பதிவு செய்கிறீர்கள்? குடும்ப சொத்து விவகாரங்களை எந்த மதத்தின் சிவில் சட்டத்தின் கீழ் கையாள்கிறீர்கள்? “இல்லாத மதத்தின் பேரால்” ! ஒரு பத்திரிகையில் எழுத இடம் கிடைத்து விட்டால், என்ன வேணுமானாலும் எழுதலாம் என்ற எண்ணமா? தமிழக மக்களை இன்னும் உங்கள் மடத்தனமான இனவாத பிரசாரங்களால் ஏமாற்ற முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் முழு பாதுகாப்புடன் கருணாநிதியை வசைபாடி எழுதுவார் கருப்பையா (அது ஏதோ உயிரைப் பணயம் வைத்து செய்யும் புரட்சி என்று அவரது துணிவைப் பாராட்டும் அப்பாவிகளும் உள்ள தமிழ்நாடு இது). எந்த ஆழமான வாசிப்பும் சிந்தனையும் இல்லாமல், அடித்தளமே ஆட்டம் காணும் தனது அபத்தமான புரிதலை வைத்துக் கொண்டு மகாபாரதத்தைப் பற்றி தாறுமாறாக என்னென்னவோ எழுதி வாசகர்களைக் குழப்புவார். அடுத்த சூட்டிலேயே, துக்ளக் பத்திரிகை தனக்கு அளிக்கும் இடத்தில், ஜாகீர் நாயக் வகையறாக்களே கூச்சத்தில் நெளியும்படி முகமது நபியையும் குரானையும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுவார் (அவர் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளார்கள் என்பது கவனத்துக்குரியது). தமிழ் ஊடக உலகத்திற்கு வாய்த்துள்ள மகாமோசமான பச்சோந்திகளில் ஒருவர் இந்தக் கருப்பையா.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

35 Replies to “சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை”

 1. அண்ணா வணக்கம்..
  தினமணியை படித்த போது பல சந்தேககங்கள் ..(ஆரியரான ஞானசம்பந்தரை “திராவிடச் சிசு’ என்று பழித்தார் ஆதிசங்கரர்…!! ) ஒரு மகான் இன்னொருவரை போய் பழிக்கமுடியுமா….(விலைபோகாமல் செய்துவிட்டார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, தனி மெய்யியல் கிடையாது !!)…இப்பொது தெளிவு பெற்றது..நன்றி..நன்றி..

 2. நல்லவேளையா தினமணியில் அந்தக் கட்டுரையைப் படிக்கலை. ஆனால் சில நாட்கள் முன்னர் இதே கருத்தைத் தொலைக்காட்சி ஒன்றில் குழுமியிருந்த மக்கள் முன்னர் உதிர்த்துக் கொண்டிருந்தார்! 🙂 எல்லோரும் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் பின்பற்றுவது கடினம். 🙂

 3. Jadayu should have sent this as a reply to him in Dinamani itself. They would have published it. Here, or in face book, who will read it except fb friends and here, the regulars? Will he it reach him?
  Essay in Dinamani is read by lakhs of people. Better you sent it there.

 4. விகனின் கிச்சு கிச்சு மூட்டும் சிரிப்பு;


  குறிப்பாக தாத்ரி சம்பவம், முற்போக்கு எழுத்தாளர்கள் மீதான தாக்குதல், ஹரியானாவில் தலித் சிறுவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், கர்நாடாகவில் தலித் எழுத்தாளர் ஒருவர் அண்மையில் இந்து இயக்க ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கண்டும் காணாமல் இருப்பது, குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் இருப்பது போன்றவை இந்துத்வா அமைப்புகளை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

  இந்த முட்டாள் பத்திரிகை விடுங்கள் . வியாபாரிகள் விபச்சாரிகள் . இதில் பின்னூட்டம் போட்ட ஒருவன் கூட சம்பவம் நடந்தது BJP இல்லாத மாநிலம் என்று ஒரு குருமுட்டையும் எழுதவில்லை . இப்படிதான் பழமும் தினமணியில் போகிற போக்கில் கொட்டை போட்டு போயி இருக்கிறது

 5. Pazha Karuppaiah’s article is appearing still in Dinamani. I have just gone back to it and confirmed Jadayu is correct or Dr Anubjraj. Because In this Tamilhindu.com. Dr Anburaj has already copied and pasted the essay. It is being given wide publicity in many face books and other internet Tamil forums because no one has expected it from a man from Amma pasarai.

  Stalin is quoted here, as well as in that essay. I have already copies and pasted The Hindu writing about Stalin’s interview, here in this forum.

  Now, political analysts say Stalin’s efforts for Hindus is to get some fraction of Hindu vote bank; or divert it from BJP and Amma. He is focusing on 2016 assembly elections.

  He may do it from BJP easily, but from Amma, it is impossible. He will bite the dust. Amma has Muslim, Christian and Dalit votes. If Tamil brahmins move away, no problem for her. Their votes are always considered as bonus only. Not main sustenance. Stalin is miscalculating the power of Amma.

  Jadaya is very sanguine that a new TN is emerging free from Dravidian ideology because of Stalin’s stand to woo Hindu votes. I don’t think it is emerging. Long ago, when Dravidian idelogy was taking roots, the Moslem and Christian factors were not dominant. Today they are esp. Moslem factor. Moslem population is increasing now. Christian population is southern districts is substantial. Futher, there was a single entity Dravidian DMK only. So all but Brahmins were lured to it. Now, it is splintered groups and the Muslim, Xian and others are scattered; but moved towards Amma.

  For Hindu orthodox ideology to take new birth among the whole TN and usurp and demolish Dravidian ideology is not difficult as Stalin himself is unconcerned. But it is difficult to nullify and walk out other factors.

  Stalin or no Stalin, your battle field is elsewhere.

 6. கருப்பையா வெறுப்பில் irukkiraar. அவருக்கு எந்த பதவியும் kidaikkavillai.
  அவரது katturai, தி மு கவிற்கு விலை போக தயாராக உள்ளார் என்பதை கருணாநிதிக்கு விடும் kookural. இதற்கு ஏன் தினமணி பாலமாக அமைந்தது என theriyavillai.

 7. அருமையான எதிர்வினை. கருப்பையாக்கு சரியான சாட்டை அடி.

 8. இவனுக யாருனு தெரிச்சுக்க 1896 -1940 Madras high court and privy council judgments பார்த்தலே தெரிஞ்சுகலாம்

 9. திராவிட சிசு என்பதற்கு, சங்கரர் தன்னை தானே அழைதுகொண்டதகவும், சம்பந்தரை கூறியதாகவும் இரு வேறு விளக்கங்கள் சௌந்தர்ய லஹரிக்கு இருக்கிறது. sankarar, திராவிட சிசு க்கு ஞான பால் கொடுத்தது போல உன்னை துதிபவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சௌண்டரிய லஹரியில் உயர்வாக தான் கூறியிருக்கிறார்.

  ஆதி சங்கரர், லிங்கம் வைத்து வழிபடு செய்தவர். பஞ்ச லிங்கங்களை பரமேஸ்வரனிடம் பெற்றுவந்து, அதை தான் ஸ்தாபித்த நான்கு மடங்களுக்கும், சிதம்பரத்திலும் அளித்ததாக சங்கர விஜயம் கூறுகிறது. லிங்க வழிபடு, “குறி வழிபடு” என்று கூறுவது, pasha. கருப்பையாவின் கட்டு கதை. அவரது அரசியல் வாழ்க்கைக்கு அவரே முடிவுரை எழுதிவிட்டார். தி க அவருக்காக காத்திருக்கிறது.

 10. அன்பின் பி எசு

  \\ Stalin is quoted here, as well as in that essay. I have already copies and pasted The Hindu writing about Stalin’s interview, here in this forum. \\

  அது அட்ச்சு வுடுதல். இந்த இசுடாலினார் விநாயகர் சதுர்த்தி பற்றி வாழ்த்து தெரிவித்து பின்னாடி ஜகா வாங்கினது ஏன்? செப்பண்டி. இவர்களது தீரா விட இயக்கம் ஒட்டு மொத்தமாக ஹிந்து விரோத போக்கைக் கைக்கொள்வது ஏன்.

  இங்கு இசுடாலினார் மட்டிலும் எதிர்க்கப்படவில்லை. தமிழகத்தை சின்னாபின்னமாக்கிய தீரா விட இயக்கமும் அதனுடைய ஜாதிக்காழ்ப்பு மற்றும் ஹிந்து மதக்காழ்ப்புக் கருத்துக் கந்தறகோளம் எதிர்க்கப்படுகிறது. தீரா விட இயக்கத்தின் குட்டையில் ஊறிய அத்தனை மட்டைகளும் அதனுடைய சமூஹ விரோதக் கருத்துக்கள் ஹிந்துமத விரோதக் கருத்துக்கள் மற்றும் தமிழகத்தை சின்னாபின்னப்படுத்திய சிறுமை இவையனைத்திற்காகவும் ஒட்டுமொத்தமாக சுவடு கூட இல்லாமல் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும்.

  ஸ்ரீ ஜடாயு எழுதியது, **** இப்படியே அரிப்பு வந்து புழுத்து ஒழிந்து சாகட்டும் திராவிட இயக்கம் என்ற நச்சுக் கருத்தியல்.**** அழிக்கப்பட வேண்டியது ஒட்டுமொத்தமாக தீரா விட இயக்கம் என்பது முக்யம். ஏன் அழிக்கப்பட வேண்டும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

  தீரா விட தீய இயக்கத்தின் பக்த கோடியாகிய நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமானால் பேப்பர் கட்டிங்கை காப்பி பேஸ்ட் செய்வது என்பது இல்லை. இந்த தீய சக்திகளுடைய மிகக் குறிப்பாகப் பகிரப்பட்டுள்ள சமூஹ விரோத ஹிந்து விரோதச் செயல்பாடுகளை.

  \\ Jadaya is very sanguine that a new TN is emerging free from Dravidian ideology because of Stalin’s stand to woo Hindu votes. I don’t think it is emerging \\

  தீரா விடத்தின் முடிவு ஆரம்பமாகி விட்டது என்பதைத் தெரிந்து கொள்ளவும். தமிழகத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலபலக் குமுகங்கள் இந்த தீரா விட தீய சக்திகள் தமிழ்நாட்டை சின்னாபின்னப்படுத்தியது மட்டுமில்லாமல்…………… தமிழராகவே இல்லாத போதும்…………. தமிழர்களைப் போல நடித்து…………. மேலும்ன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தமிழை வாயார வைது………. தமிழ்ப்புலவர்களை இழிவு படுத்தி சகட்டு மேனிக்கு வசவுகள் கொடுத்து…………… தமிழ் இலக்கியங்களை வாயார வைத …………… சிறுமையை உடையவை. மட்டற்ற ஹிந்துமதக்காழ்ப்பையும் ஆப்ரஹாமியத்துக்கு விலை போன சிறுமையும் உடையவை.

  கோவிலில் சென்று வழிபடும் எந்த ஒரு தமிழரும் இப்படிப்பட்ட வெளிப்படையான தமிழ் விரோத ஹிந்துமதக்காழ்ப்பு விரோத தீய இயக்கத்துக்கு எக்காரணம் கொண்டும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்பது பாஜக மட்டுமின்றி தமிழக நலனில் அக்கறை உள்ள ஆப்ரஹாமியத்துக்கு விலை போகாத அனைத்து தமிழ்க் கட்சிகளாலும் ப்ரசாரம் செய்யப்பட வேண்டும்.

  \\ Long ago, when Dravidian idelogy was taking roots, the Moslem and Christian factors were not dominant. \\

  தீரா விட இயக்கங்களின் செயற்பாட்டின் பாற்பட்ட அரை உண்மை.

  \\ For Hindu orthodox ideology to take new birth among the whole TN and usurp and demolish Dravidian ideology is not difficult as Stalin himself is unconcerned. But it is difficult to nullify and walk out other factors. \\

  ஹிந்து ஆர்தொடாக்ஸ் ஐடியாலஜி என்று ஒன்று உலகத்திலேயே கிடையாது. உதிக்கவும் போவதில்லை. ஹிந்துத்வக்கருத்தாக்கம் என்பது சைவம், வைஷ்ணவம், ஜைனம், பௌத்தம், சீக்கியம் மற்றும் எண்ணற்ற நாட்டார் வழிபாட்டினை தன்னுள் கொண்டது. அது தமிழகத்தில் மிக மிக ஆழமாக வேரூன்றியது. ஈரோட்டில் மாரியம்மன் கோவிலின் நிலத்தை க்றைஸ்தவ சபையினர் கபளீகரம் செய்த விஷயத்தில் நகரத்தின் அனைத்து ஹிந்துக்களும் அதை எதிர்த்துப் போராடியமை இந்த தளத்தில் தெளிவாகப் பகிரப்பட்டுள்ளது.

  பக்கத்துக் கேரளாவில் உள்ள கம்முனிஸ்டுகள் ஹிந்து விழிப்புணர்வு என்ற விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளத் துவங்கிவிட்டார்கள். கண்ணன் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்ன? சரஸ்வதி பூஜை என்ன என தகர டப்பா உண்டி குலுக்கிகள் தங்களது ஹிந்து வேர்களை தேட ஆரம்பித்து விட்டனர். இங்கு உள்ள தீரா விட இயக்கங்கள் அனைத்தும் இதுவரை இவை தமிழகத்துக்குச் செய்த தீமைகளை பட்டியலிட்டு மிகக் குறிப்பாக மன்னிப்புக் கேட்கும் வரை தமிழ் ஹிந்துக்கள் இந்த தீரா விட சக்திகள் அனைத்தையும் புறக்கணித்தல் வேண்டும்.

  \\ Stalin or no Stalin, your battle field is elsewhere. \\

  தக்ஷிணாமூர்த்திகாரு வாள்ளு பிட்ட இசுடாலினார் என்ற ஒரு நபர் ஒரு பொருட்டே இல்லை. தமிழ் ஹிந்துக்கள் திட்டமிடவேண்டிய விஷயம் ஒட்டு மொத்த தீரா விட இயக்கமும் அவை தமிழகத்துக்கு இழைத்த தீங்கிற்காக கருவறுக்கப்படுவது.

 11. சிறப்பானக்கட்டுரை. திராவிட இயக்கத்தின் பேச்சாளர்கள் எவ்வளவு சாரமற்று ஆழமற்று இருப்பார்கள் என்பதற்கு பழக்கருப்பையாவின் இந்தக்கட்டுரையே சான்று.
  சைவ வழிபாட்டுமுறைகள் திராவிடர்களுடையவை என்பதை இதுவரை திராவிட இயக்கத்தவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதுண்டா? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றக்கருத்தை மட்டுமே அண்ணா சைவர்களிடம் அதிலும் வேதாந்த சித்தாந்த சமன்வயம் பேசிய திருமூலரிடமிருந்து கடன்வாங்கிக்கொண்டார். அதைத்தவிர ஈவெரா நாயக்கரோ, அண்ணாதுரையோ, கருணா நிதியோ, இல்லை கிவீரமணியோ இதுவரையில் திராவிட வழிபாட்டுமுறைகளான சைவத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்று சொன்னதாக வரலாறு இல்லை. பகிரங்கமாகப் பெருமிதத்தோடு நான் பிராமணர் என்று சொல்லும் ஜெயலலிதா அம்மையாரின் தொண்டரானப்பழக்கருப்பையாதான் முதலாவதாக சொல்கிறார். திராவிட சமயம் என்று சைவத்தை அழைக்கும் கிறிஸ்தவரான தெய்வ நாயகம் இதைசொல்லிவந்தார்.
  மிசநரிகளின் ஆதாரமற்றப்புனைவுகளிலிருந்து தோன்றிய திராவிட இயக்கக் கருத்தியல் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காகவே இன்றும் அவர்களது கருத்துக்களை நாட ஆரம்பித்திருக்கிறது.
  ஏன் அதிமுகவின் பழக்கருப்பையாவுக்கு இந்த தேவை வந்தது. தமிழகத்தில் ஹிந்துத்துவத்தின் வளர்ச்சி திமுகவை மட்டுமல்ல அதிமுகவையும் கதிகலங்க வைத்திருக்கிறது என்று தான் இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் ஹிந்து விழிப்புணர்வு ஓங்கட்டும். ஹர ஹர மஹாதேவ ஷம்போ

 12. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்கும் விவேகானந்தருக்கும் இடையே நடந்த விவாதத்தின் முழு விபரங்களை வெளியிட முடியுமா ?மோட்டாா் சுந்தரம் பிள்ளையை – நடிகா் சிவாஜிகணேசனை – அறிந்த அளவிற்கு மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை யை தமிழ் மக்கள் அறிவாா்களா ? மனோன்மணியம் சுந்தரனாாின் சாதியை கேட்டாராம் சுவாமி விவேகானந்தா். அதனால் விவேகானந்தரை அவர் நேருக்கு நோ் கடுமையாக விமா்சனம் செய்தாராம். இரண்டு பேருக்கும் மிகக் கடுமையாக வாக்குவாம் நடந்ததாம். விபரம் தரலாம். தங்கள் கட்டுரை போதிய தகவல்களை அளிக்கவில்லை. எனக்கு திருப்தி இல்லை. பழ.கருப்பையாவைிற்கு தக்க பதிலடியாக ஒரு கட்டுரை தினமணியில் தாங்கள் எழுத வேண்டும்.

 13. தன்னையும் தன் தொண்டா்களையும் இந்து என ஒப்புக் கொண்டதன் மூலம் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தான் தெளிவு பெற்றுள்ளேன் என்பதை ஒப்புக் கொண்டுள்ளாா். அதாவது He has mellowed down. அனுபவம் மூலம் சாியான பாடம் பெற்றுள்ளாா். இதை வெறும் அரசியல் கோஷத்திற்குப் பயன் படுத்தினால் அது சாியல்ல.இது ஒரு ஓட்டு சேகாிக்கும் கோஷம் அல்ல.ஒரு சமூகத்தின் அடையாளம். எந்த அடிப்படை அடையாளம் ஒரு மனிதனுக்கு தன்நம்பிக்கையையும் சுயமதிப்பையும் சுயகௌரவத்தை அளிக்குமோ அந்த அடையாளத்தை அவன்உணரும் போது அவன் புத்துணா்ச்சி பெறுகின்றான். திருவள்ளுவா் இளஙகோ தொல்காப்பியா் திருமூலா் அகத்தியா் சித்தா்கள் ஆதி சங்கரா் விவேகானந்தா் காந்தி அடிகள் சதரபதி சிவாஜி இராஜராஜன் போன்றவா்கள் என்து முன்னோா்கள் என்று இந்துவான நான் நம்புகின்றேன். எனக்கு வளைந்த கூன் என்றும் இல்லை. மத வெறி பிடித்த கிறிஸ்தவனும் அரேபிய மதத்தவனும் என்னை மிகவும் கண்ணியமாக நடத்துகிறான்.
  இந்து – இந்தியாவை எந்த வகையிலும் சிறுமை படுத்திவிட்டு எவனும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது.ஆனாலும் என்னை ஒரு மத வெறியன் என்று சொல்ல மதவெறியா்களுக்கு துணிவில்லை.காரணம் நோ்மையான எனது வாழ்வு – என்னிடம் இந்துத்துவம் நிரம்பி வழிகின்றதை பிற மத வெறியா்கள் உணா்ந்துள்ளாா்கள்.. பழ கருப்பையா மீது எனக்கு மாியாதை உண்டு.துக்ளக் இதழில் பல கட்டுரைகள் எழுதியதை விரும்பி ரசித்து படித்திருக்கின்றேன்.பாராட்டு கடிதம் எழுதியிருக்கின்றேன். இவரிடமிருந்து நீசத்தனமாக சண்டாளத்தனமான மேற்படி கட்டுரையை படித்து எனக்கு கடுமையான வருத்தம்.வேதனை. ” இந்து ” என்ற இந்த நாட்டின் பாரம்பாியத்தை எச்சில் இலை போலக்கருதி வீசிவிடலாம் என்று இந்த மடையன் நினைக்கின்றான்.
  வரும் தோ்தலை மனதில் வைத்து அல்ல மக்களின் சமூக ஒருங்கிணைப்பிற்கு ” இந்து ” என்ற வாா்த்தையை பயன் படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் முன் வரவேண்டும். நாம் எல்லோரும் இந்துக்ள் நம்பிடம் சாதி சண்டை வரலாமா ? ஒரு இந்து மற்றொரு இந்துவிடம் லஞ்சம் கேடகலாமா ? நமது இந்து பண்பாட்டை நாம் காப்பாற்ற வேண்டாமா ? என்று தமிழக மக்களை இந்து என்ற வாா்த்தை மூலம் இணைக்க திராவிட முன்னேற்ற கழகம் முன்வர வேண்டும். திராவிடம் என்ற சொல் கழக மேடைப் பேச்சு சொல்லாக மட்டுமே கடந்த 50 ஆண்டுகளில் பயன்பட்டு வருகின்றது. மக்களிடம் அது எந்த தாக்கத்தையும் எற்படுத்தவில்லை.என்பதை ஸ்டாலின் அவர்கள் உணா்ந்துள்ளாா். இந்து என்று இந்து சமூக நலன் குறித்த கருத்துக்களை வெளிப்படையாக இவர் பேசினால் நல்ல முஸ்லீம்கள் கிறிஸ்தவா்கள் இவருக்கு தாராளமாக வாக்களிப்பாா்கள். தங்களின் ஊழல் கறைகளை மறைக்கவே திராவிடம் பேசினாா்கள். ஆகவே திராவிடம் என்ற சொல் மதிப்பை இழந்து செல்லாக்காசு ஆக்கப்பட்டது. திரு.மு.க.ஸ்டாலின் உணா்ந்துள்ளாா்.திருந்தியுள்ளாா். I am he has mellow down.

 14. After reading both S/Shri S V Bhooshan and Anbu Raj, I concluded like this.

  Pazha Karuppaiah is in AIADMK. Stalin is DMK. Stalin is hobnobbing with Hindu priests at Thirukoshiyoor and one more temple (Saivam) and from the enthusiasm of the priests in welcoming him, he is catching up with Hindu orthodox votes. Pazha Karuppiah is moving away from it. So, the roles are reversed here. Because PK’s leader openly once owned her caste and that made Tamil brahmins happy. Now, her well known representative, speaking Tamil literature and Tamil Saiva lore, on stage, as a fitting counteract to Karunanithi, is talking atheism, running down Hindu religion and using abusive words. Please remember after Kalimuthu (when he was in AIADMK), only PK is speaking on political stage quoting Puranarooru, Silappadikaram, Kural etc. He has a deep erudtion of ancient Tamil literature – a good antidote to Muka. Amma herself has no contact with Tamil literature as she studied in missionary institution in English medium and her reading is very limited. So, she requires PK. I think PK is speaking all that Jadayu pillories under orders from above. We don’t want brahmin votes, or othodox Hindu votes, or Hindutva groups votes. That is the meaning of PK’s speech. Stalin wants all: to dent BJP. Further, Stalin is not like DMK old guards: literature, religion and castes. Literature and religion require deep reading.

  I think the calculation of Jeyalalitha is to snatch away Dravidian lobby from Karunanidhi at any cost; and take all DMK cadres with her. Karunanidhi is taking MDMK cadres. It should be neturisalied. So, lets us take away DMK loyal cadres – I mean loyal i.e. rooted in Dravidian ideology. DMK will become AIADMK; and AIADMK will become stronger AIADMK chipping away DMK base which is anti-brahminism and anti-Hinduism.

  Pazha Karruppaiah’s surprising attack on Hindu religion, Hinduism venerated leaders and saints, praise of periyars and karunanidhi – all are quite understandable and welcome from the standpoint of AIADMK. It should also be noted that whatever she is, Tamil brahmins will vote her: is what I was told by a Chennai resident. She is aware of it. So, no special efforts are needed to get their votes. Hence, Pazha Karuppaiah’s speech is targetted not at Tamil brahmins or orthodox Hindus, but at loyal DMKs who want antibrahminism.

  The elections 2016 will deal a blow to Stalin and retain Amma for further 5 years. Stalin should immediately change his strategy. I don’t mean he should launch any anti brahminical platform: which he will never. But he should completely ignore the subject. On political tour, he can take his wife and she will on her own visit important temples w/o her husband, a pukka Hindu that she is. This way he can achieve two things: 1. Sending a clear signal to orthodox Hindus (I always use orthodox Hindus, because the general population is not interested in their religion in politics) that Stalin and his family can be trusted. 2. Sending a signal to DMK cadres that their leader didn’t go; and his wife went, because she is unstoppable and wives aren’t important as they are faceless beings in a mega leaders political life. Stalin has not given up their Dravidian ideology. Unless he understands these things, he will fall into a no man’s land where all sides will hate him. Amma will have a smooth ride in 2016 with no one has the strength to come near her solid and strong vote bank.

  So far as writers here are concerned, they may feel vindicated in the burial of DMK and the leaving of its aged chief.

 15. அற்புதமான கட்டுரை.
  நண்பர் ஜடாயுவுக்கு பாராட்டுக்கள்.
  பழ.கருப்பையாவுக்கு சற்று கிறுக்கு பிடித்திருக்கிறது. அதன் விளைவு தான் இந்த உளறல். அவருக்கு ஜடாயுவின் கட்டுரை மனத்தெளிவை அளிக்கட்டும்!

  -சேக்கிழான்

 16. மானம் கேட்ட கலைஞர் டி வி விநாயக சதுர்த்தி, தீபாவளி ஆகியவற்றுக்கு சிறப்பு நிகழ்ச்சி நடத்தி விளம்பர வசூலை செய்துவருகிறது. அதே சமயம் விநாயக சதுர்த்தி , தீபாவளி போன்ற பண்டிகைகளின் பெயர்களை போடாமல் விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி என்று போட்டு வருகிறார்கள். இதனை கடந்த 5 வருடங்களாகவே அனைவரும் அறிவார்கள். வரும் தேர்தலில் திமுகவுக்கு முழு சமாதி கட்டுவோம்.

  ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்றார் அண்ணா. ஆனால் கலைஞரோ ஆதிஷங்கரிடம் நெற்றியில் என்ன ரத்தமா என்றவர். கலைஞர் திருந்தவில்லை. எனவே ஸ்டாலினின் நமக்கு நாமே – என்பது அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சிதான். திமுகவினரின் யோக்கியதை எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

  1.காவிரி நதி நீரில் தமிழ் நாட்டுக்கு முதல் முதலாக துரோகம் செய்து கர்நாடகம் புதிய அனைக்கட்டுக்களை கட்டிக்கொள்ள அனுமதித்தவர் கருணாநிதிதான். அதன் பின் விளைவாக இப்போது தஞ்சை தரணியே பாலைவனம் ஆகிவிட்டது.

  2.கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது, பதவியில் ஒட்டிக்கொண்டு ,மீனவர்களுக்கு நிரந்தர தலைவலியை உருவாக்கியவர் கருணா தான் என்பதை உலகே அறியும்.

  3. பெரியாறு அணைக்கட்டின் தண்ணீர் தேக்கிவைக்கும் உயரத்தை உயர்த்துவது பற்றிய வழக்கை வாய்தா வழக்காக மாற்றியவர்.

  4.தமிழனுக்கு 1-9-1972 முதல் சாராயம் ஊற்றிக்கொடுத்து , பல தலைமுறைகளை பாழடித்த பாவி.

  5.இலங்கை தமிழினத்தை இத்தாலிய மாது சோனியாவுடன் கைகோர்த்து , முற்றிலும் அழித்த படுபாவி

  6. எமெர்ஜென்சியை எதிர்ப்பதாக நாடகம் ஆடி, எமர்ஜென்சி முடிந்து மீண்டும் ஜனதா அரசு கவிழ்ந்தவுடனேயே , நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று ,இந்திராவுக்கு சிவப்புக்கம்பளம் விரித்த பச்சோந்தி.

  7.டூ ஜி மற்றும் சர்க்காரியா என்று தொடர் ஊழல்களின் வித்து.

  8. நிலப்பறி இயக்கத்தை வழி நடத்திய கட்சி திமுகவே.

  9.தமிழகத்தில் மற்ற மக்களை இந்தி படிக்காதே என்று சொல்லி, தன்னுடைய பேரனுக்கு எடுத்த எடுப்பிலேயே மத்திய கேபினெட் அமைச்சர் பதவி வழங்கி , அவனுக்கு இந்தி தெரியும் அதனால்தான் கேபினெட் மந்திரி பதவியை கொடுத்தேன் என்று சொன்ன பதவி பித்தர்.

  10.சில்லறை முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று மேடைகளில் முழங்கிவிட்டு , சில்லறையை வாங்கிக்கொண்டு, பாராளுமன்ற வாக்கெடுப்பில் பச்சோந்தி தனத்தை வெளிப்படுத்திய அயோக்கியர்கள்.

  11. தயாநிதிக்கு இந்தி தெரியும் – அழகிரிக்கு தமிழை தவிர பிறமொழிகள் தெரியாதே – அவருக்கு கேபினெட் மந்திரி பதவி கொடுக்கவில்லையா ? குடும்பத்திற்காகவே கட்சி நடத்தும் நபர் இவர் என்பது திமுகவில் உள்ள நீண்ட நாள் விசுவாசிகள் புரிந்துகொண்டுவிட்டனர்.

  12. எவ்வளவு கோடி பணத்தை திமுக செலவு செய்தாலும் , 2016- தேர்தலில் பூஜ்யம்- என்பது உறுதியாகிவிட்டது. திமுகவினரின் மாய்மாலங்கள் இனி எடுபடாது.

 17. ஆன்மீக அம்மாவின் கட்சி எம் எல் எ ஆக இருந்தாலும் ,பழைய காங்கிரஸ் கவிச்சை இந்த பேர்வழியை விட்டு தொலையவில்லை ,வக்கிர வடிகாலாக இவேரா நாயக்கரின் மீதும் ஒரு காதல் பார்வையை ,புரட்சியாளர் ,புண்ணாக்கு வியாபாரி,என்றெல்லாம் கூறிக்கொண்டு ,வீசி மோகம் கொள்ளவார்,எப்படியோ ஒழியட்டும் .இந்த கட்டுரை ஞான வெளிச்சத்தை ஆன்மீக வரலாற்றில் வீசி ,தமிழனை உய்விக்க எழுதியதாக தெரியவில்லை,
  தனக்கு மந்திரி பதவி கொடுக்காமல் ,தன் ஆயுள் அரசியல் வித்தகத்தை வீணடித்ததால் உண்டான அந்தரங்க காண்டை{ஒரு காண்டா மிருகத்தின் காண்டு! }
  வெளிப்படுத்தி தன் முட்டாள் மூளையிலிருந்து விடுதலை வேண்டுகிறார்!
  அந்த சிசு வியாக்கியானத்திற்கு ஆதாரத்தோடு பலரும் கழுவி ஊற்றுகிறார்கள்,அது நிற்க,
  ஒரு காலத்தில் இதே ஞான வெட்டியான் துக்ளக்கில் ‘ஜெயலலிதாவை’புகழும் வண்ணம் ‘திராவிட சிசு’என்று இரண்டு வார கட்டுரை எழுதியப்போது ,அவரை திருஞான சம்பந்தரோடு இணைத்து எழுதியபோதும் ,இதே அர்த்தந்தானா?அறிஞரே?அம்மாவுக்கு இந்த கட்டுரையை அனுப்பினீரா?

 18. “திராவிட சிசு” பற்றி மட்டுமல்லாது சங்கரர் “திராவிட ஆசார்யர்” பற்றியும் குறிப்பிட்டுள்ளது சிலருக்குத் தெரிந்திருக்காது. சாந்தோக்ய பாஷ்யத்தில் சங்கரர் “த்ராவிடாசார்யர் கூறியது” என்று மேற்கோள் காட்டுகிறார். ப்ருஹதாரண்யக பாஷ்யம் மற்றும் ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்திலும் சங்கரர் காட்டும் மேற்கோள்கள் சிலவற்றைப் பின்னர் வந்த உரையாசிரியர்கள் (ஆனந்தகிரி முதலியவர்) “இது த்ரவிடாசார்யர் கூறியது” என்று தெளிவாக்குகின்றனர். இந்த திராவிடாசார்யர் யார் என்று நமக்குத் தெரியாவிடிலும் அவர் மீது சங்கரரும் மற்ற உரையாசிரியர்களும் வைத்துள்ள மதிப்பு அவர்கள் உரைகளிலிருந்து தெரியவருகிறது.

  இன்னொரு சுவாரசியமான விஷயம்: ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்தில் ஓரிடத்தில் சங்கரர் காட்டும் மேற்கோளைப் பின்னர் வந்த உரையாசிரியர்கள் “இது சுந்தர பாண்டியர் கூறியது” என்கிறார்கள். இவர் யார் என்பதையும் நாம் அறியோம்.

  இனி, சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய “மனோன்மணீயம்” நாடகத்தில் வரும் முக்கிய பாத்திரங்களுள் ஒருவர் சுந்தர முனிவர். பிள்ளையவர்கள் இந்தப் பெயரை அப்பாத்திரத்திற்குச் சூட்டியது தம் குருவான கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளை நினைத்தே. சுந்தர சுவாமிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த அதிவர்ணாச்ரமி. ஸூத சம்ஹிதையை நன்கு கற்றவர் என்றும் தெரியவருகிறது.

  தமிழ் நாட்டில் அத்வைத மரபு பழமையானது. ஆனால் அதை இன்று வரை எவரும் ஆழ்ந்து ஆராயவில்லை என்றே கூற வேண்டும். இது குறித்து தெ. போ. மீ. அவர்கள் 1974-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒரு உரையாற்றியுள்ளார். அதை ” Journal of Madras University (vol. XLVI; no. 2) ” – ல் காணலாம்.

 19. இந்த” யோக்கிய சிகாமணி ”{நான் உணவுக்காகவோ ,உடுத்துவதற்காகவொ ,உயிரை கொல்லுவதில்லை,மது அருந்துவதில்லை ,பொய் பேசுவதில்லை,கேட்டேளா?}இதே தினமணியில் ஹரப்பா ,மொஹஞ்சடாரொ,நகர திட்டமிடல் சிறப்புகளையெல்லாம்
  மெச்சி மேனி உருக புளகித்து , நவீன சென்னையோடு ஒப்பிட்டு கருணாநிதி ஆட்சியில் அதன் பாழாய் போன பவிசை கண்டு ஒப்பாரி வைத்து ,சீரழிந்த சென்னையை காவல் தய்வம் அம்மா காப்பாற்றி,காவிய கால அந்தஸ்தில் வைப்பார் ,என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்.
  அடுத்த சென்னை வளர்ச்சி குழும சீரழிவின் உச்சமாக ,மவுலிவாக்க அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை கண்டும் காணாமல் கமுக்கமாகி விட்டார்.இப்படி எத்தனையோ விதத்தில் மானங்கெட்டவர்தான்,மந்திரி பதவிக்கு பொருத்தமானவர்தான்!ஏனோ ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை.
  சில நாட்களுக்கு முன் ,”புதிய தறுதலை” டிவியில் சாஹித்த அகாதமி தாலி அறுப்பது குறித்த விவாதத்தில் ,நீங்கள் ஏன் எம் எல் எ பதவியை தூக்கி எரியவில்லை?என்றதற்கு குந்தியவாக்கிலேயே ,கோடி அடவுகளை மூஞ்சியில் காட்டினார் பாருங்கள் ,பிறவி நடிகனய்யா நீர்!

 20. பழ.கருப்பையாவின் இந்தப் பொய்கள் குறித்து திண்ணை இதழில் ஒரு அருமையான கட்டுரை வெளியாகி இருந்தது. பல தகவல்கள் நிறைந்த அந்தக் கட்டுரை பழ. கருப்பையாவோடு நின்றுவிடாமல், அவருக்கு முன்பிருந்தே இந்தப் பொய் சொல்லப்பட்டு வருவதையும், அதன் வரலாற்றையும் பேசுகிறது. அந்த சிறப்பான கட்டுரையை திண்ணை இணைய தளத்தில் காணலாம். அதன் லிங்க்: https://puthu.thinnai.com/?p=27515

 21. இக்கட்டுரை அதே தினமணியில் வர வழி காணமுடியுமா?

 22. திராவிட இயக்கத்தைக் காலநிலைக்கேற்றவாறு முன்னெடுத்துச் செல்வதாக எண்ணியோ அல்லது நுனிப்புல் மேய்கிறவர்களால் வழிகாட்டப்பட்டோ, இசுடாலின் திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ளவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் இந்துக்கள் என்று சொல்லக் கேட்பதே மேனி முழுவதும் கம்பளிப் பூச்சி ஊர்கின்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது!******ஒ அப்படியா?********** ஒரு % கூட திராவிட இயக்க கொள்கைகளை பின் பற்றாத அதிமுகவில் MLA ஆகி இதுநாள் வரையில் இருந்து கொண்டு இவர் ஸ்டாலினை கேலி பேசுகிறார்!!!! என்ன ஒரு கொள்கை பிடிப்பு.சி சி

 23. முழுக் கடவுள் மறுப்புக் கொள்கைதான் 1967ல் அண்ணா தலைமையில் தி.மு.க.வை ஆட்சி பீடத்தில் ஏற்றியது.————-இதே கடவுள் மறுப்பு கொள்கை உடைய கருணாநிதி சுமார் 6 முறை தோற்று போனாரே அதற்கும் அந்த கொள்கை தான் கரணம் என்று வைத்து கொள்வோமா? –

 24. பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிந்தார் விவேகானந்தர்.

 25. First of all Adhi Shankaran before the time GhnaSambandhar — He might have meant Him only. Some of the people like karupaih just satisfy their own personal issues they always use Bharathiyar and get some political gain. Hinusiam simply spoiled by these people utterly. People has to accept Tamil is part of Grandham, Grandham more popular than Sanskrit, so many languages such as Singhalam, Thai, Khmer (combodian) etc. and all south Indian langues came from Grandham. Malayalam language is not there when Adhi Shankaran time. It came 1000 years back from Tamil and Sankskit. Tamil is a scripting language of Grandham used in the stones. Just because few people say Grandham is North Indian language, it is own languare

 26. ஐயோ பாவம் award return பண்ணினவங்க !!!!! இனி காசியப்பன் பாத்திரகடையில போயி அவங்கள ஒரு award வாங்க வேண்டியதுதான் ???

  ஒருதலைபட்சமாக கையாளப்பட்ட இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? மீடியாக்களில் மறைக்கப்பட்ட அல்லது வெளிவராத தகவல்கள் என்னென்ன? முதலில் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாத்ரி விவகாரம் தொடர்பான விசாரணையில் வெளியான தகவல்களை பார்ப்போம்.

  கொலை செய்யப்பட்ட அக்லக் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் யாதவ் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி திருடு போனது. கன்றுக்குட்டியை தேடும் பணியில் ராகுல் இறங்கினார். அப்போது அக்லக்கின் வீட்டின் பின்புறம் கன்றுக்குட்டியின் எலும்புத்துண்டுகள் கிடப்பதை கண்டு, அக்லக்குடன் சண்டை போட்டார். அக்லக் மற்றும் ராகுல் இடையே மோதல் நடைபெற்றபோது, அங்கு வந்த அக்லக்கின் மகன், ராகுலை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனால் படுகாயமடைந்த ராகுல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை நடந்த சம்பவங்கள் பற்றி எந்த மீடியா சேனலும் பேசவில்லை.

  அக்லக்-ராகுல் இடையே சண்டை நடந்த விஷயமும், அதனால் ராகுல் தாக்கப்பட்ட விஷயமும் அந்த கிராமம் முழுவதும் பரவுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அக்லக் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அக்லக் உயிரிழந்துள்ளார். கிராம மக்கள் தாக்கியதால் அக்லக் உயிரிழந்த சம்பவம், அடுத்தநாள் மத சாயம் பூசப்பட்டு மீடியாக்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

  ஒரு திருட்டு சம்பவம் மத சாயம் பூசப்பட்டுள்ளதை உணராமல், அரசியல்வாதிகளும் இதில் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம் என குற்றம்சாட்டுக்களை அடுக்கினர். ஆனால், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ராகுல் பற்றிய எந்த அரசியல்வாதியும், மீடியாவும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

  : அடித்துக் கொல்லப்பட்ட அக்லக் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அவர் எதற்காக பாக்., சென்றார்? அவருக்கு விசா உள்ளிட்ட அனுமதிகள் எவ்வாறு கிடைத்தது? பாக்.,ல் இருந்த திரும்பி வந்த உடனேயே அக்லக் கார் வாங்கியது எப்படி? அவருக்கு அந்த அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது? அக்லக்கிற்கு பாக்., உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இல்லை என்பதற்கு ஆதாரம் என்ன? அவர் பாக்.,ல் பயிற்சி பெறவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? அக்லக்கிற்கு பாக்., உடன் இருந்த தொடர்பு பற்றி இதுவரை யாரும் விசாரிக்காதது ஏன்?

  இந்த ஒட்டுமொத்த பிரச்னையும் மத சாயம் பூசப்பட்டு, இந்துக்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், இந்து-இஸ்லாமியர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

 27. பழ கருப்பையா ! மயில் போல தன்னை நினைத்து கொண்டு ஆடும் வான் கோழி ! ஜடாயுவுக்கு ஆயிரம் கோடி நன்றி சொல்ல வேண்டும் ! ஒரு உளறல் இருந்தால் திருத்தலாம் ! முழுவதும் உளறல் மட்டுமே என்ற கருப்பையாவின் கருத்துகளுக்கு மறுமொழி கூறுவதற்கு அதிகமான பொறுமை வேண்டும் ! இவர் அண்ணா தி மு க வை உள்ளிருந்தே கொல்லும் வியாதி ! அம்மா அவர் கட்டுரையையும் இந்த மறு மொழியையும் படித்தார் என்றால் இவரை கட்சியிலிருந்தே விலக்கி விடுவார்கள் !

  மீண்டும் ஜடாயு அவர்களுக்கு நன்றிகள் பல !

 28. இது தினமணி கட்டுரைக்கு நன் அனுப்பிய கமெண்ட் !
  வாய்க்கு வந்ததை எந்த ஆதாரமும் இன்றி உளறி கொட்டி இருக்கிறார் ! பல கட்சி மாறிய பச்சோந்தி ! முருகனை பற்றி சுப்பிரமணிய புஜங்கம் பாடிய , திரு ஆனைக்காவல் சிவனை பாடிய ஆதி சங்கரரை தேவையே இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார் ! வேதமும், தமிழும் சமஸ்கிருதமும் தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களை நல்வழி படுத்தி வந்துள்ளன ! ஆங்கிலேயன் கிறித்தவ மதத்தை பரப்ப ஹிந்துக்களிடம் பிளவை ஏற்படுத்த விஷம தனமாக எழுதியதை வைத்து கொண்டு புலம்பி இருக்கிறார் ! 2016 எம் எல் ஏ சீட்டுக்கு எந்த கட்சி தாவூவரோ இந்த பச்சோந்தி !

 29. திமுகவை ஆட்சி பீடத்தில் ஏற்றியது கடவுள் மறுப்புக் கொள்கை அல்ல. திமுகவுடன் 14- கட்சி கூட்டணி அமைத்தவர்களில் கடவுள் மறுப்பாளர் எவரும் கிடையாது. இராஜாஜி, காயிதே மில்லத் , கம்யூனிஸ்டில் ஒரு பகுதி ஆகியவை உட்பட அந்த 14- கட்சிகளின் எதுவும் நாத்திக கட்சி அல்ல. ராஜாஜியின் கடவுள் நம்பிக்கை உலகம் அறிந்தது. பேரறிஞர் அண்ணாவோ – ஒன்றே குலம் ஒருவனே தேவன் – என்று பெரியாரின் நாத்திகக் கருத்தை மறுத்து திமுக வுக்கு புதிய பாதையை ஏற்கனவே காட்டிவிட்டார். கம்யூனிஸ்டுகளோ கேட்கவோ வேண்டாம் ATHEIST – நாத்திகம் என்பதை அவர்கள் ஏற்காமல் AGNOSTIC – ஆக்ஞேயவாதம் என்று சொல்லப்படும் கடவுள் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி – அதனைப் பற்றி எங்களுக்கு எவ்விதக் கவலையும் இல்லை என்ற பேரறிஞர் இங்கர்சாலின் கருத்தை கொண்டவர்கள் .பழ கருப்பையாவின் அபத்தமான கருத்தை எந்த கட்சி மேடைகளில் பேசினாலும் , தமிழகத்தில் அந்த கட்சிக்கு நிச்சயம் பாடை தான். தனது கருத்து போணியாகாது என்பது தெரிந்ததால்தான் , பெரியார் கடைசிவரை சுதந்திர இந்தியாவில் ஒரே ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. பழ கருப்பையா அவர்கள் வரலாற்றை திரித்து பேசுகிறார். திமுகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது எம் ஆர் ராதாவின் துப்பாக்கி சூடுதான் என்பதே உண்மை. ஸ்தாபனக் காங்கிரசில் இருந்தவரை பழ கருப்பையா பொய்பேச மாட்டார். திராவிட இயக்கங்களில் அவர் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் பித்தம் தலைக்கேறி திரிகிறார். உளறல் மிக அதிகம் ஆகிவிட்டது. தமிழக அரசியலில் பெருந்தலைவர் காமராஜரை 1967- தேர்தலில் தோல்வி அடைய செய்தது , அவருக்கும் காங்கிரசுக்கும் ஆதரவாக தி க வினர் செய்த ஆதரவு பிரச்சாரம் தான்.அதனை மூடி மறைத்து பொய் உரைக்கும் பழ கருப்பையாவை பார்த்து அனைவரும் பரிதாபப்படுகிறார்கள்.

  ஸ்தாபனக் காங்கிரசில் இருந்தவரை இவர் சரியாகத்தான் இருந்தார். அதன் பிறகு தடம் மாறி பல பயணங்களை செய்து இப்போது முற்றிலும் மனநிலை பிறழ்ந்து காணப்படுகிறார். அரசியலில் பொய்களை கூறி பிழைப்பு நடத்துவது திராவிட இயக்கங்களின் வாடிக்கை. அந்த நெடி இவரிடம் ஏறிவிட்டது. ஐயோ பாவம். திராவிட இயக்கம் ஆட்சிப்படிக்கட்டில் ஏறி சிம்மாசனத்தில் அமர்ந்த 1967- தேர்தலை திசை திருப்பியவர் நடிகவேள் எம் ஆர் ராதா. அவர் 12-1-1967 அன்று மக்கள் திலகம் எம் ஜி ஆரை சுட்டு, அதன் விளைவாக , எம் ஜி ஆர் அவர்கள் அரசு மருத்துவமனை ஒன்றில் , காயங்களுக்கு கட்டுப்போட்டு , கட்டுக்களுடன் இருக்கும் புகைப்படத்தை திமுகவினர் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளாக அச்சடித்து ஒட்டி, பரங்கிமலை பாரிவள்ளல் எம் ஜி ஆரை சுட்ட படுபாவிகளுக்கா உங்க ஓட்டு என்று கேட்டுத்தான் பிரச்சாரம் செய்தனர். அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு மூடுவிழா நடத்த , காங்கிரசுடன் கூட இருந்தே குழி பறித்த திராவிடர் கழகத்தை சேர்ந்த எம் ஆர் ராதா அவர்கள் தான் எம் ஜி ஆரை சுட்டு , பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். எம் ஜி ஆர் மீது ஏற்பட்ட அனுதாப அலையில் பெருந்தலைவர் காமராஜர் உட்பட பல முக்கிய தலைவர்களும் தோற்று , காங்கிரஸ் கரைந்து போனது. அதன் பின்னர் கடந்த 50 – வருடங்களாக காங்கிரஸ் மீண்டும் தலை தூக்காமல், எம் ஜி ஆர் காங்கிரஸ் கட்சியை சமாதி கட்டிவிட்டார். இப்போது காங்கிரஸ் என்ற பெயரில் வெறும் எலும்புக்கூடுதான் இருக்கிறது. கடவுள் மறுப்பு என்று சொல்லிக்கொண்டு , இந்துக்களின் மத உணர்வுகளை கேலி செய்துகொண்டு , மத உணர்வுகளை புண்படுத்திக்கொண்டு திரிந்த திராவிடர் கழகத்துடன் கூட்டு வைத்திருந்த காமராஜர் தனது சொந்த தொகுதியிலேயே தோற்றுப்போனார். 1967- இல் காங்கிரஸ் அடைந்த தோல்வி , கடவுள் மறுப்பு கொள்கை உடைய திகவின் கூட்டால் வந்தது. திமுக வெற்றியோ , மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மீது பாய்ந்த எம் ஆர் ராதாவின் துப்பாக்கி குண்டுகளால் , கிடைத்த வெற்றி. திமுகவின் வெற்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தால் கிடைத்தது .

 30. பெரியாரோ, தி மு கவோ கடவுள் மறுப்பு கொள்கைக்காக மக்களிடையே பிரபலம் ஆகவில்லை. ஏனெனில் அத்விகா சொன்னது போல, கடவுள் மறுப்புக்கொள்கை தமிழரிடம் எடுபடாது. அடிப்படையில் தமிழர்கள் ஆதரவாளர்களே. அதாவது கனஃபார்மிஸ்டுகள். அதிலும் கடவுள் என்று வந்துவிட்டால் நகரவே மாட்டார்கள். பின் எப்படி பெரியாரை ஏற்றார்கள்? ஏற்றார்கள் என்றால், அதே பெரியார் அதே பேச்சுக்களை வடமாநிலத்தில் அல்லது கருநாடாகாவில் பேசியிருந்தால் கொல்லப்பட்டிருப்பார். எனவே தான் தமிழர்கள் ஏற்றார்கள் என்றென். ஏன்>

  தமிழர்கள் என்றால், பார்ப்பனர்கள் அல்லா மாற்றோரே. ஏன் ஏற்றார்கள் என்றால் பார்ப்பன எதிர்ப்புக்காகவே ஏற்றார்கள். சமூகத்தில் ஒரு சில விகதாசாரத் தொகையே கொண்ட பார்ப்பனர்கள் சமூகத்தையே ஆண்டார்கள் எல்லாவிடங்களிலும் என்பதைக் கண்ட அவர்கள், அதைப்பற்றி ஒருவர் வந்து பேசியதுமே கூடிக்கொண்டார்கள். பின்னர் அது தி மு கவாக வளர்ந்தது. அவ்வளவுதான்.

  இங்கே கடவுள் மறுப்புக்கொள்கையேயில்லை. தற்போது பார்ப்ப்ன எதிர்ப்பு கவர்ச்சியை இழந்துவிட்டது. அதன் காரணம் தெரியும். முன்பு போல பார்ப்பனர்கள் நீக்கமற நிறைந்து சமூகத்தில் இல்லை. அவர்கள் இடத்தை ஓபிசிக்கள் பிடித்தி விட்டதால், பார்ப்ப்ன எதிர்ப்புக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை பார்ப்பன் எதிர்ப்புக்க்காகவென்றே ஏற்படுத்தப்பட்டது என்பது அரசியல் சமூகவிய்லாளர் பலர் சொல்லிவிட்டார்கள்.

  எம் ஜி ஆர் குண்டடிபடாவிட்டாலும் தி மு கவே வென்றிருக்கும். காரணம் எம் ஜி ஆர் பிரச்சாரப்பயணம் மேற்கொண்டிருப்பார். ம்க்கள் மனங்களில் உயரத்தில் அவர் இருந்த காலமது. அண்ணாவும் இருந்தார். அண்ணா எம் ஜி ஆரைத் தன்னோடு வைத்துக்கவனித்துக்கொண்டார். அது எம் ஜி ஆரை தி முகவில் இறுக்கி வைத்தது. என் தம்பி ஐந்தி விரல்களைக்காட்டிவிட்டால் ஐந்து லடசம் வாக்குக்கள் விழும் என்றார்.

  குண்டடி பட்டதால் எமோசனல் வாக்குகள். குண்டடிபடாவிட்டால் தி மு க பிரச்சார்த்தினால் விழம் வாக்குக்கள் என்பதே காலக்கணிப்பு சொல்லும்.

  சேஷன் சொன்னது: மக்களுக்கு அப்போது காங்கிரசு ஆட்சியில் மேல் கடுமையான கோபம் இருந்தது. கடைகளில் அரிசியே கிடைக்காமல் மக்கள் நொந்து விட பகத்வதசலம் எலிக்கறி சாப்பிடுங்கள் என்றதாக தி மு க பிர்ச்சாரம் கொண்டது.

  ஆக, 3 காரணங்கள்

  காங்கிர்சு ஆட்சியில் அடிப்படைத்தேவைகள் பிர்ச்சினைகளாகின.
  எம் ஜி ஆர் திமுகவில் நன்றாக இருந்து தொண்டாற்றினார்.
  காங்கிரசுக்கு எதிராக வைத்த கூட்டணி பலம்.
  தி மு கவின் அட்டகாசமான பிரச்சாரம்.

  குண்dadiபட்ட நிகழ்ச்சி உதவியது. But மேலும் உதவியது என்றுதான் சொல்லவேண்டும்.

 31. பழ கருப்பயாஹ் சிறு வயதில் கார்அடிபட்ட நாய் குட்டி போல் தனக்கு எற்பட்ட அரசியல் மற்றும் தனிவாழ்வு சிறுமைகளை போக்கும் வடிகாலாக இந்து மத தூற்றுதலை கை கொண்டிர்ருகிறார். இந்த மாதிரி அறிவிளிகளால்தஆன் பெருந்தலைவர் காமராஜர் அரசியல் சருக்குதலை முதன் முறையாக 1967 தேர்தலில் கண்டார். கட்சி மாறி கட்சி மாறி இப்போது ஜெயலலிதாவுக்கு அரசியல் சாவு மணி அடிக்க வந்துள்ளார். கருணாநிதிக்கும் இவருக்கும் உள்ள ஒரே வித்யாசம் அவர் பிறவி மற்றும் ஜாதி சாமர்த்தியத்தை நன்றாக பயன்படுத்திய பச்சோந்தி. கருப்பயாஹ் சாதாரண பச்சோந்தி . நற்றக கல் அடி படுகிறார். படட்டும் நன்றாக. அடுத்தது கலைஞர் முறை.

 32. புது திண்ணை வலைதளம் சொல்கிறது

  எதுகை மோனையோடு பேசவேண்டும் என்பதற்காக விவேகானந்தர் எனும் ஞான தீபத்தைக் கேவலப்படுத்தி இருக்கிறார் பழ. கருப்பையா. ஒருவேளை விவேகானந்தர் அடிமைத்தன்மை இல்லாத சுதந்திரமானவர் என்பதால் அவருக்கு வயிற்றெரிச்சலா? தெரியவில்லை.

  பழ. கருப்பையா அவர்கள் சொன்னது போல விவேகானந்தரிடம் மனோன்மனீயம் அருளிய சுந்தரம் பிள்ளை அவர்கள் உரத்த “ஆணித்தரமான குரலில்” குறுக்கிடவில்லை. சுந்தரம் பிள்ளை அவர்கள் வீட்டில் விவேகானந்தர் பல நாட்கள் தங்கி இருந்தார். அப்போது, சுந்தரம் பிள்ளை அவர்களிடம் அவருடைய கோத்திரம் என்ன எனக் கேட்டிருக்கிறார் விவேகானந்தர். அந்தக் கேள்விக்கு, “நாங்கள் திராவிடர்கள். எங்களுக்கு அதெல்லாம் கிடையாது” என்று கிறுத்துவ ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட ஒரு பொய்யான நம்பிக்கையை, கருத்தைச் சொல்லுகிறார் சுந்தரம் பிள்ளை.

  அதைக் கேட்ட விவேகானந்தர் மிகவும் வேதனை அடைந்தார். “இப்படி எல்லாம் பொய்களை நம்பி வேதங்களின்மேல் உங்களுக்கு இருக்கும் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் வேதங்கள் ஓதிய தமிழர்கள். வேதம் ஓத அனைவருக்கும் உரிமை உண்டு. அதை முற்றிலும் மறந்துவிட்டு, பார்ப்பனர்களுக்கு மட்டுமே அதைக் கொடுத்துவிட்டீர்களே. உங்கள் கடமையை, உரிமையை விட்டுவிட்டீர்களே.” என்று வருத்தப்பட்டார்.

  “இப்படி உங்கள் உரிமையை நீங்களே கைகழுவி விட்டு பார்ப்பனர்கள் அதில் ஆதிக்கம் செய்யும்படி செய்துவிட்டீர்கள்” என்றும் வருத்தப் பட்டு இருக்கிறார். இதுவும் பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்ச்சி.

  விவேகானந்தரோடு பழகியவர்கள் அனைவரும் ஒன்று சொல்லுகிறார்கள். அவரோடு பழகும்போது உங்களுக்குள் மிகுந்த சக்தி ஒன்று புகுந்துகொண்டதை உணர்வீர்கள். விவேகானந்தரை ஒரு சக தோழராக, சமத்துவ உணர்வோடு மட்டுமே பழகுவீர்கள். அவரைவிட நான் தாழ்ந்தவள் என்பது போன்ற உணர்வு எனக்கு வரவில்லை. யாருக்கும் வரவில்லை என்கிறார்கள்.

  மனோன்மணீயம் தந்த சுந்தரம் பிள்ளை அவர்களும் பக்குவமானவர். அங்கனம் நாகரீகம் மிகுந்த இருவர் உரையாடிய நிகழ்வை, சண்டை போலத் திரிக்கிறார் பழ. கருப்பையா. இரண்டு நல்ல நண்பர்களை எதிரியாக்கிப் பார்ப்பது சகுனிகள்கூடச் செய்யாத தவறு.

  வேதம் காக்கும் தமிழர் பற்றி விவேகானந்தர்

  பழ. கருப்பையாவால் வங்காளி என்று பிரித்துப் பேசப்படுகிற விவேகானந்தர் தமிழர்களைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

  இந்தியாவின் உன்னத ஆன்மீக-சமூக எதிர்காலத்தைத் தமிழர்கள்தான் உயர்த்திப் பிடிக்கப் போகிறார்கள். அவர்களால்தான் இந்தியா உயரப்போகிறது என்று விவேகானந்தர் சொல்லுகிறார்.

  அங்கனம் இந்தியர்களுக்குத் தலைமை ஏற்கப் போகிற தூய அத்துவித தமிழ்ச்

  திண்ணை வலைதளத்தில்

  சிங்கம் பழ. கருப்பையா அவர்கள் வீட்டில் இருந்தும் கூட வரலாம்.

  அப்படித் தமிழர்கள்மேல் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்த விவேகானந்தரைப் போற்றுவதா, அல்லது தமிழர்கள் எல்லாம் ஆண்குறியை வணங்கிய ஐரோப்பிய ஆரியர்களின் அடிமைகள் என்று சொல்லுகிற பழ. கருப்பையாவைப் பின்பற்றுவதா என்பதைக் கொஞ்சமேனும் சுயமதிப்பும் சுயசிந்தனையும் உடைய தமிழர்கள் அறிவார்கள்.

  அவர்களிடம் ரேஸிஸமோ கேஸ்டிஸமோ கிடையாது.

 33. tamilanukku saathiyum mathamum kidayathu.tamilanukku iyyargai valipaadum,munnorgal valipaadum,nadugal valipaadum dhan

 34. பழ. கருப்பையாவிற்கு முதுகெலும்பு உண்டெனில், இஸ்லாமிய படஎடுப்பு பற்றியோ கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆள் பிடிக்கும் நரித்தனம் பற்றியோ எழுத முடியுமா. ஏண்டா எல்லோரும் இந்துக்களிடம் வந்தே உரசுறீங்க?

 35. //////ஏண்டா எல்லோரும் இந்துக்களிடம் வந்தே உரசுறீங்க?////

  முஸ்லிம்களிடம் ஒற்றுமை உள்ளது. அவனிடம் உரசினால் ஒட்டு போய்விடும். இந்துக்களிடம் ஒற்றுமை என்பது மருந்துக்கு கூட இல்லை. அதனால் ஒட்டு பறிபோகாது என்பதை நன்கு தெரிந்துதான் அவனவன் உரசி பார்கிறானுங்க. ஒற்றுமை இல்லாமைக்கு காரணம் என்ன என்று பார்த்தால் அந்த பாழாய்ப்போன சாதிதான். ஆகவே சாதி ஒழிந்தால் (இந்து) மத ஒற்றுமை வளரும். சாதி வளர்ந்தால் அந்த மதமே ஒழிந்து என்பது திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *