இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்?

இந்தியக் குடும்ப அமைப்புமுறை சரியானதா, அல்லது மேற்கத்திய நாடுகளில் உள்ள சுதந்திரமான முடிவுகள் — அதாவது பிடிக்கவில்லையெனில் கணவனும் மனைவியும் பிரிந்துகொண்டு, சுதந்திரமாக வாழ்தல் சிறந்ததா? பெண்ணியம் பேசுதலோடு விவாதத்தை நிறுத்திக் கொள்ள  வேண்டுமா, அல்லது பெண்ணியத்தைக் குடும்ப வாழ்க்கைமுறையில் கொண்டுவர இயலவில்லையா?  குடும்பத்தின் அங்கத்தினரான குழந்தைகளின் எதிர்காலம் குடும்ப வாழ்க்கையில் சிறந்ததா, அல்லது பிரிந்து வாழும் வாழ்க்கை முறையில் சிறந்ததா? எதிர்கால சந்ததிகளுக்கு எந்த வளர்ப்புமுறை அவர்களுக்குப் பாதுகாப்பானது, நல்லது? வெறுமனே பெண்ணியம்பற்றி கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடாது இதைப்பற்றியும் சேர்த்தே  விவாதிப்பதுதான் சரியாக இருக்கும்.

குறிப்பாக, இன்று இந்தியாவில் முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சொல்வது இதுதான்:  “குடும்ப அமைப்பு முறையில் பெண்களுக்கான சுதந்திரம் பறிபோகிறது. உரிமை மறுக்கப்படுகிறது. அதுவாவது பரவாயில்லை, அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு உரிமையும் சுதந்திரமும் வேண்டுமெனில் இந்திய குடும்ப அமைப்புமுறை உதவாது. பெண்கள் விட்டுக்கொடுப்பதையே இந்த குடும்ப அமைப்புமுறை செய்துள்ளது. அங்கு ஆண், பெண்ணுக்கான அத்தனையையும் முடக்குகிறான். ஆகையால் பிடிக்கவில்லையெனில் வெட்டிவிடு!”

இந்த கருத்தாக்கமே அவர்களால் முன்வைக்கப்படுகிறது.

அதற்கு அவர்கள் மேற்கத்திய நாடுகளை உதாரணமாக மேற்கோள் காட்டுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சுதந்திரம் அங்கு அவர்களுக்கு இயல்பாக உள்ளது. பெண்ணியம் பேண பெண்ணுரிமை கிடைக்க மேற்கத்திய வாழ்க்கை முறையே சிறந்தது என்பதை முன்னிறுத்துகிறார்கள். மதிக்கப்படுகிறார்களா அல்லது பிடிக்கவில்லையெனில் பிரிந்து வாழ்வதையே நிம்மதி எனக் கருதுகிறார்களா?

ஆனால் ஒரு விஷயம் அதைவிட முக்கியமானது. அது பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது! மணமுறிந்த அல்லது  திருமண வாழ்க்கையை விட்டு வெளியேறியவர்களின் குழந்தைகளின் மன அழுத்தம், கல்வி ஆர்வம், குழந்தைகள் மீதான அக்கறை, வளர்ப்பு முறை, அவர்களின் நடவடிக்கைகள்,  அதையொட்டிய சமூகச் சீர்கேடுகள்பற்றிப் பேசாமல், வெறுமனே பெண்ணியம் கிடைக்க முற்போக்குவாதிகள் வைக்கும் ஆலோசனைகள் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டியது. இவற்றையெல்லாம் இம்மியளவுகூட கணக்கில் எடுத்துக்கொள்ளாதது எவ்வாறு என்கிற கேள்வியை இந்தியன் ஒவ்வொருவனும் கேட்க வேண்டும்.

அது ஒருபுறம் இருக்கட்டும். மேற்கத்திய நாடுகளைப்பற்றிய தகவல்களை நாம் முதலில் அறிந்து கொள்வோம். முழுமையான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமல் மேலை நாட்டில் ஒரு பெண் தண்ணியடிப்பதற்கும், சிகரெட் குடிப்பதற்கும் சுதந்திரம் உள்ளது என்பதை நியாயப்படுத்துபவர்களிடம், “அவ்வாறானால் அங்கு ஏன் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை? அங்குள்ள ஆணோ, பெண்ணோ குடும்பவாழ்க்கையை அனுசரிப்பதில் சிக்கலா?” என்ற அடிப்படைக் கேள்வியைக்கூட எழுப்பாமல், மேலைநாட்டில் பெண்ணுக்குக் கிடைத்த அளவிற்காகவாவது இங்கும் பெண்கள் தம்வாழ்க்கை சார்ந்து முடிவெடுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று எவ்வாறு கேள்வி எழுப்புகிறார்கள்?

மேலை நாட்டு சமூகத்தின் தற்போதைய நிலை  என்ன? அங்குள்ள அரசாங்கம் திருமணமற்ற வாழ்க்கையை  எவ்வாறு பார்க்கிறது?  அங்குள்ள நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என்ன கருத்துரைக்கிறார்கள் என்பதை விளக்குகிறேன்.

குழந்தைகள் பிறக்கும்போது பெண்ணுக்குத்  திருமணம் ஆகாமல் இருந்தால் அதை OUTSIDE WEDLOCK CHILD BIRTH என சொல்கிறார்கள்.

2011 ஆம் ஆண்டில் OECD நாடுகளின் Proportion of  OUT OF WEDLOCK CHILD BIRTH தரவுகளுக்கான லிங்க் இங்கே தரப்பட்டுள்ளது. பின்லாந்து, நெதர்லாந்து, லத்வியா, பெல்ஜியம், ஐக்கிய ஐரோப்பா(UK), டென்மார்க், நியுசிலாந்து, பல்கேரியா, பிரான்சு, ஸ்லோவேனியா, ஸ்வீடன், நார்வே, மெக்சிகோ, எஸ்தோனியா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பெண்கள் 40% லிருந்து  65% திருமணமாகமலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அல்லது குழந்தைபெறும் போது சட்டப்படி திருமணமாகாதவர்கள்!

https://www.oecd.org/els/family/SF2_4_Births_outside_marriage_and_teenage_births.pdf

2013 ஆம் ஆண்டின் கணக்கின் படி, USA வில் 41%  குழந்தைகள் Outside Wedlock child birth முறையில் பிறந்துள்ளார்கள். இதில் 73%  Blacks , 53% Latino பிரிவைச்  சார்ந்த குழந்தைகளாகும். 10-19 வயதுக்குட்பட்ட பெண்களின் பங்களிப்பு 7% ஆகும்.

UK (48% as per 2012), Denmark (52% as per 2014), Norway(55% as per 2014), Sweden (54% as per 2014) குழந்தைகள் திருமணமாகாமலேயே பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.

https://www.dailymail.co.uk/news/article-2103235/Most-children-U-S-born-wedlock.html

நமக்கு முன்னோடி இங்கிலாந்துகாரர்கள்தானே. ஆகையால் UK திருமணமற்ற வாழ்க்கை முறையை எவ்வாறு அணுகுகிறது? அங்குள்ள நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் திருமண வாழ்க்கை முறிவினாலும், முறையற்றும் அதிக அளவில் குழந்தைகள் பிறப்பதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்/பாதிக்கப்படுகிறது என்று கருத்துரைத்துள்ளார்கள்.

அதற்கான லிங்க்:

https://www.telegraph.co.uk/news/politics/10172627/Most-children-will-be-born-out-of-wedlock-by-2016.html

“The results carry concerning consequences, with researchers finding children born out of wedlock are more likely to struggle in school or suffer emotional and behavioural problems.” இவ்வாறு சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், தரவுகளின் அடிப்படையில் இவ்வாறும் சொல்லப்பட்டுள்ளது.

Susan L. Brown from Bowling Green State University found that children born to married couples, on average, ‘experience better education, social, cognitive and behavioral outcomes’.

அதற்கான லிங்க்.
https://www.dailymail.co.uk/news/article-2103235/Most-children-U-S-born-wedlock.html#ixzz3nA8j9Jha

Read more: https://www.dailymail.co.uk/news/article-2103235/Most-children-U-S-born-wedlock.html#ixzz3nA7lLiSI
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

இதைச் சொன்னால் போதுமா?  அரசு என்ன செய்ய வேண்டும் என்பதல்லவா முக்கியம். அரசு சொல்கிறது,

Married Couples to be offered TAX BREAKS before the next election.  டேவிட் கௌக் என்கிற நிதி அமைச்சர் காமரூனுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார். முன்னாள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் டிம்மும் அதே கருத்தைப் பிரதிபலிக்கிறார். அதாவது குடும்பங்களற்ற குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும், அதைச் சரிப்படுத்தும் பொருட்டு திருமணமாகி ஒன்றாகவாழ்ந்து குழந்தைகளை வளர்ப்பவர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படவேண்டும் என்கிறார். சைனா ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அதிக வரியைத் தீட்டுவது போல.

அதற்கான லிங்க்:

https://www.telegraph.co.uk/news/politics/10140080/Married-couples-to-be-offered-tax-breaks-before-the-next-election.html

இது எதைக் காட்டுகிறது?

எதிர்கால சந்ததியின் நலனைக் கருத்தில் கொண்டு குடும்பங்களாக செயல்பட வலியுறுத்திச் சொல்வதுபோல்தானே உள்ளது? அங்குள்ள நிபுணர்கள் பாடம் கற்றுக்கொண்டு அவ்வாறு சொல்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்காகத் தங்களின் கனவுகளைத் தியாகம் செய்கிற  ஆணும் பெண்ணும் பிரியவேண்டும் என இங்குள்ள முற்போக்குவாதிகள் கருத்துரைக்கிறார்கள்.

2011 ல் UK வில் இருநாட்களாக கலவரம் ஏற்பட்டது. அதையொட்டி பெருமளவில் திருட்டுகள் நடந்தேறின. இதற்கு UK அரசு அமைத்த கமிட்டி என்ன காரணம் கொடுத்தது தெரியுமா?

ஏழ்மை காரணமாகவோ, வேலை வாய்ப்பின்மை காரணமாகவோ, இனப் பிரச்சினை என்றோ இந்தத் திருட்டையும் வன்முறையையும் பார்க்க இயலாது. இது பொறாமையின் விளைவாக ஏற்பட்ட ஒரு விஷயம். அதைச் சரிசெய்ய அரசுக்குக் குழு பரிந்துரைத்த விஷயங்களில் மிக முக்கியமானது. குடும்பங்களைக் கருத்தில் கொண்டு , குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கல்வியை, வேலை வாய்ப்பை எவ்வாறு வழங்குவது? குழந்தைகளும் இளைஞர்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் இவை நடந்தது என்றும், அதற்காக அரசு என்ன முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதைப் பற்றியே பெரும்பாலும் பேசியுள்ளார்கள்.

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/211617/Govt_Response_to_the_Riots_-_Final_Report.pdf

இங்கிலீஷ்காரனின் பாணியில் சொல்வதானால் திருமணமாகாமல் ஒரு குழந்தை பிறந்தால் BASTARD / illegitimate என்று அழைப்பார்கள். இது அகராதி தரும் விளக்கம். அவ்வாறானால் இன்று மேற்கத்திய நாடுகள் பாதிக்கு மேலாக இவ்வகையில் பெறும் குழந்தைகளை எவ்வாறு அழைப்பார்கள்?

இந்தியப் பெண்களுக்கு மேலைநாட்டைப் போல சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்று கேட்டால் இல்லை என்று சொல்வதில் தயக்கமில்லை. ஆனால் இந்தியச் சமூகத்தை அதன் கடந்தகால வரலாற்றிலிருந்து நோக்கினால் பெண்களுக்கான சுதந்திரம் குடும்பஅமைப்பு முறையைப் பேணிக்கொண்டே வழங்கி வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அவ்வகையில் பார்த்தால் இயல்பாகவே காலத்தின் சூழ்நிலையையும், தேவையையும் பொறுத்து பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு என முன்னேறிவந்துள்ளதைக் காண இயலும்.

ஆண்கள்தான் பெண்ணை அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்பது மிகமுக்கியமான குற்றச்சாட்டு. ஆண்கள்தான் காரணமென எடுத்துக் கொண்டால்கூட அடிப்படையில் இன்னொரு கேள்வியும் தொற்றி எழுகிறது.

B.R. மஹாதேவன் தமது கட்டுரையில் அத்தகைய ஒரு கேள்வியை எழுப்புகிறார். //ஆணாதிக்கம் என்பது ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு குழந்தையையும் அந்த ஆணாதிக்கக் கருத்துகளுடன் வளர்த்தெடுத்தது ஒரு பெண்தான். அந்தவகையில் கடந்தகால வாழ்க்கை வேதனை நிறைந்தது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், அந்தக் குற்றத்தைச் செய்ததில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு. அப்ரூவராக மாறித் தப்பித்துக் கொள்வதுகூடச் சாத்தியமில்லாத வகையிலான குற்றம். பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும்பங்கு ஒரு தாய்க்குத்தான் என்றுள்ள போது, முழுக்கமுழுக்க ஆணின்மீது மட்டுமே பெண் அடிமையாக்கப்பட்டுள்ளாள் என்பது எவ்வாறு பொருந்தும்?//

அப்படியான சூழலை ஆண்கள்தான் உருவாக்கினார்கள் என்றால் பெண்கள் அதைப்புரிந்து வருங்கால சமூகம்(பெண் குழந்தைகள்) பலன்பெறும் வகையில் வளர்க்காமல், இருந்தமையும்/இருப்பதற்கும் காரணமான பெண்களை அடிமுட்டாள்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?  இந்தியக் குடும்பஅமைப்பு முறையினால் பெண்கள் முன்னேற்றம் அடையவில்லை என்று யாரும் சொல்லிவிட முடியுமா?  சில விடயங்கள் தாமதமாக அமைந்தாலும் அதன் அடிப்படை எதிர்கால சந்ததியினரைக் கணக்கில் கொண்டே அமைய  வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் குடும்பஅமைப்பு முறையால் ஆண்களுக்குக் கூடுதல் சமூகப் பொறுப்பையும் இதே இந்திய சமூகம் வழங்கியுள்ளது. இன்னமும் “வேலைக்குச் செல்வதே புருஷ லட்சணம்” என்பதைத்தான் இந்தியப் பெண்களும் சமூகமும் எதிர்பார்க்கிறது என்பதை நாம் பொருட்படுத்துவதில்லை. திருமணத்திற்கு முன்பாகவே ஓர் ஆண் தனக்கான பணியை உறுதிசெய்யவேண்டிய அவசியத்தையும் சமூகம் வைத்துள்ளது. அதையும் ஆண்சமூகமே வைத்துள்ளதுபோலத் தோன்றினாலும், பெண்ணும் எதை எதிர்பார்க்கிறாள் என்பதும் அவசியம் கேட்கப்பட வேண்டியது.

குடும்பஅமைப்பில் உடனடியான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும், நீண்டகால நலன், எதிர்கால சந்ததிகளின் நலன் என்ற அடிப்படையில் பார்த்தால் குடும்பத்தோடு கூடிய பெண்ணியம் பேசுதலையே நான் வரவேற்பேன். பிடிக்காவிட்டால் வெட்டிவிடுவதல்ல வாழ்க்கை. அது சுயநலம் பேணுவதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அனுசரித்தும், அக்கறையோடும், புரிதலோடும் வாழ்ந்துமுடிப்பதே சிறப்பான வாழ்க்கை. தற்போதைய நிலையில் பெண்கள் அதைக் கூடுதலாக செய்துகொண்டிருக்கலாம். தீக்குளித்தலைத் நீக்கிய அதே ஆண்சமூகம் அங்கிருந்து கல்வியிலும், வேலைவாய்ப்பு வரைக்கும் கொண்டுவந்துள்ளார்கள்.

வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க இல்வாழ்க்கையே நல்வாழ்க்கை. அதைப் பேணிக்கொண்டே பெண்ணியம் பேசுவதே நாட்டிற்கும் வீட்டிற்கும் நலம்பயக்கும்.

References:

https://www.telegraph.co.uk/news/politics/10172627/Most-children-will-be-born-out-of-wedlock-by-2016.html

https://www.telegraph.co.uk/news/health/news/11564624/Most-births-will-be-out-of-wedlock-within-10-years.html

https://www.telegraph.co.uk/news/politics/10140080/Married-couples-to-be-offered-tax-breaks-before-the-next-election.html

https://www.telegraph.co.uk/news/politics/10172627/Most-children-will-be-born-out-of-wedlock-by-2016.html

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/211617/Govt_Response_to_the_Riots_-_Final_Report.pdf

https://docs.google.com/spreadsheets/d/1BJtu1MvWP3kgFk6cdQE2sl0_4fb5sWTcR43bzn4nUGo/edit#gid=0

https://www.cdc.gov/nchs/data/nvsr/nvsr61/nvsr61_04.pdf

https://www.oecd.org/els/family/SF2_4_Births_outside_marriage_and_teenage_births.pdf

8 Replies to “இந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்?”

  1. ஸ்ரீ லட்சுமணப்பெருமாள் குடும்ப அமைப்பின் சிறப்பை விளக்கியுள்ளார். மேற்கத்திய நாடுகளைப்போல குடும்ப அமைப்பினை சிதைத்துவிட்டு சுயேச்சையாகத்திரியும் விலங்குகளைப்போல மனிதர்களை மாற்றும் முயற்சி எந்த அளவுக்கு அபத்தமானது என்பதை நாம் சிந்தித்து உணர்வது நல்லது.
    சமூகத்தின் அடிப்படை அலகு தனிமனிதர் என்பது ஐரோப்பிய சிந்தனை. நம்முடையபாரத நோக்கில் அடிப்படை அலகு குடும்பமே. குடும்பத்தினை அழித்துவிட்டு தனிமனிதர்களை அவர்களது மிருக இச்சைகளையும் வெறிகளையும் வைத்து சமூகத்தினைக் கட்டியமைப்பதுதான் இடது சாரிகள் வலதுசாரிகள் ஆகிய இரு மாறுபட்ட மேற்கத்திய சிந்தனையாளர்களின் முயற்சியாகும். தனிமனிதனை மையமாகக் கொண்ட சமூக அமைப்புகளை நோக்கிய மேற்கத்திய சமூகத்தின் மாற்றம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவர்களின் மன நலத்தினைப்பற்றிய ஆய்வுகள் நமக்கு சொல்கின்றன. குடும்பம் என்ற சமூக அமைபின் அடிப்படை அலகு சிதைந்தால் மக்கள் போதை அடிமைகளாய், காமவெறியர்களாய், மன நலம் குன்றியவர்களாய் மாறிவிடுவார்கள் என்பதை மேற்கத்திய நாடுகளில் இருந்து நாம் கற்கவேண்டிய பாடமாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போராட்டக்களமாகக் குடும்பத்தைக்கண்டதன் விளைவு குடும்பத்தின் சிதைவு. தன் குழந்தைகளின் நலனைவிட தனது சுகம் இன்பம் அதிகாரம் பெரிதென்று கற்பித்த ஐரோப்பிய மானுட மையசிந்தனைப்போக்கை நிராகரிக்கவேண்டும்.

  2. குடும்ப அமைப்பை அதை மையமாகக்கொண்டிருக்கிற உறவுகளின் வலையத்தினை சிதைப்பதை சந்தைப்பொருளாதாரத்தின் நோக்கமாகவே நாம் உணரவேண்டும். குடும்பம் என்ற ஒருக் கட்டமைப்பை சிதைத்தால் சாப்பாட்டிலிருந்து அனைத்துக்கும் மனிதன் சந்தைக்கு காசுகொடுத்துதான் மனிதன் நாடவேண்டும். சந்தை நிறுவனத்தின் பகுதிகளாக ஹோட்டல், பள்ளி, மருத்துவமனை(உடல் மனம் இரண்டுக்கும்), சந்தாவாங்கும் சர்ச், வியாபார நிறுவனங்கள், வங்கிகள் எல்லாம் இயங்கும். இவற்றின் செயல்பாடுகள் இப்போதுள்ளதைவிட பன்மடி அதிகமாக இருக்கும். தனி நபரின் வருவாயும், நாட்டுவருவாயும் அப்படியே அதிகமாக இருக்கும். ரோஸ்டோ என்னும் அமெரிக்க பொருளாதார மேதை சொன்னபடி ஹை மாஸ்கன்சம்சன் சொசைட்டியாக உலகமெல்லாம் இருக்கும். கட்டற்றப் பேரளவு நுகர்வு அங்கே இருக்கும். அளவில்லாமல் பன்றிகளைப்போன்று அனைத்துப்புலன் களையும் பயன்படுத்துகிற நிலையை அடைவதுதான் வளர்ச்சி முன்னேற்றம் என்று நம்பினால் அவர்கள் போனப்பாதையில் போனால் அதே நிலை இங்கேயும் வரும். அமெரிக்காவில் பொருளாதாரம் பயின்ற உலகவங்கி பன்னாட்டுக்கம்பெனியின் ஆதரவாளர்களைப்பொருளாதார கொள்கை ஆலோசகர்களாக்கொண்டால் அதே கதி இந்தியாவுக்கும் வரும். ஹர ஹர

  3. நம் நாட்டிலேயே எது தேவையோ அதைப் பார்க்காமல் அவர்களுக்கு எது சௌகரியமோ அதைத் தான் பார்ப்பார்கள். அவர்களைப் போல் சுத்தமான சுற்றுப்புறம் பேணுதலையும், குப்பைகளைக் கண்ட இடத்திலும் போடாமல் இருப்பதையும், எச்சில் துப்பாமல் இருப்பதையும் செய்ய மாட்டோம். போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற மாட்டோம். ஆனால் இதில் மட்டும் பெண் சுதந்திரம் என வாய் கிழியப் பேசுவோம். ஏனெனில் இது நம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைக் கொண்டது. குடிநீரில் சாக்கடை நீர் கலந்தாலும் பேசாமல் போவோம். நம் பங்குக்கு நம் வீட்டுச் சாக்கடை நீரையும் அதில் சேர்ப்போம். பொதுநலம் நமக்கு எப்போவும் கடைசி தான்! இது தான் இந்தியா! 🙁

  4. Indian culture is Hindu culture: it exists outside individual or against individualism, as correctly pointed out by Shivshree Vibuthi Bhushan and also under the integral humanism of DD Upadhyaya.

    The community culture or non-individual culture is primitive i.e. it comes from the time man settled in groups and invented family unit. Indian culture continues it unchanged. Western man was also a hunter-gatherer first, and settled in groups in family units and, there was no change between the two cultures for a long, long time. Change came during the Renaissance in the West. In that mega social movement that spread across Europe, which originated from the opposition to the Roman Church, the Western man accidentally discovered Individualism. Art and thought became individual-centric and he discovered that from such centre could come extraordinary achievements for human kind, in arts and science. The benefits to humanity were found to be great. It was also very satisfying to an individual as it affords him feeling of self-worth. When thoughts and ideas sprang from individuals, it created thinkers and philosophers with new ideas which created what is now called Western culture in its positive sense. Thus, it continues. The defects Mr Lakshmana Perumal points out are off-shoots. Like side effects of a good medicine. Everything comes with an expense.

    Indian culture can continue its ancient tradition of being a community culture. But it should realise that it cannot outrun the Western culture in reaping the benefits of individualism in the positive sense. Hence, we borrow all that science gives – till today.

    Regarding women, every individual has potential to contribute to the progress of society and also, get the feeling of self-worth. He or she will feel happy when doing a thing on his or her own and see it to reach fruition and get satisfaction to his/herself. Like one cooks a new dish and finds it come out well and seeing others taste its sweetness. This is possible only through individualism. Both men and women feel happy to be on their own and achieve. When men are supported from society to be individualist, women aren’t cooped up in domestic life of responsibilities to others. So, men gets his share of being an individual, women lacks it, not on her own efforts, but imposed. The potential of half of the humanity i.e. women force, lies untapped. This is bad for humanity.
    We today have a woman heading DRDO. She did not come to the post through any community thinking but individual thinking because science demands a concentrated work in labs. One woman only. All others are men in science. Similarly, in all walks of life mostly: the human resources from women are not cultivated and encouraged. They go waste.
    Marriage should liberate women. It is not possible in the conventional set up. In the West, women want to get the same happiness as men by being individuals. Then they want to contribute. The conventional marriage does not help. So, they break free. Or, want to have a marriage which allows, rather than, hinders their growth as individuals.

    Religion of all countries and times hate people to be individualistic. They fear individualism because only on community thinking they can survive. Temples, mosques, churches, synagogues, gurudwaras, viharas etc. have been built on huge expenditure and hope for groups. The religions desire to keep humans in bondage for which community thinking is sine qua non.
    Hindu society is like any other religious society. It should prevent people from being individuals and aping the Western way. Still, we note they were individuals in the religion in the past but they are not of fist importance; or made into icons and set aside for worship by masses: Mahans, sithars, Alvaars, Nayanmaars etc: a few among crores of Hindus. The organised religions want to capture the masses: numbers do matter for organisation to thrive.

    In the west, not only married life, but religious life, (which Mr Lakshmana Perumal has failed to notice) is in danger of extinction. Atheism or agnosticism are spreading fast. Because organised religion enslaves minds and hinder independent thinking.s. More individualism, less religion. Religion has to fear therefore.

    We. Indians, want our religion, our family lives, want our women to tend children and men to earn. That is to say, the conventional set-up came down to us from our ancestors, to flourish everywhere. Let it continue: no problem. For that, we ought to ensure that the West does not peep into our households and impact impressionable minds. Possible?

  5. இன்றைய நாட்களில் நமது சமுதாயத்திற்கு மிகவும் தேவையான பதிவு. நன்றாக ஆராய்ந்து இந்த வ்யாசத்தை அளித்துள்ள ஸ்ரீ லட்சுமண பெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    \\ சமூகத்தின் அடிப்படை அலகு தனிமனிதர் என்பது ஐரோப்பிய சிந்தனை. நம்முடையபாரத நோக்கில் அடிப்படை அலகு குடும்பமே. \\

    நான் அழுத்தம் திருத்தமாக சொல்ல விழைந்த கருத்து. மிக நேர்த்தியாக ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசயர் அவர்கள் தெரிவித்திருக்கிறீர்கள்.

    அடிப்படை அலகு நமது ஹிந்துஸ்தானிய சமூஹத்தில் குடும்பம் என்ற படிக்கு …….அந்தக் குடும்பத்தின் தேவைகளை ஒத்து …..குடும்பத்து அங்கத்தினர்களின் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுகிறது. பெண்மணிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை முற்காலத்தில் குறைவாகவே அளிக்கப்பட்டது. ஆனால் இன்றைய குடும்பங்களில் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களில் பெண்மணிகளும் ஆண்களுக்கு இணையாக முன்னேறி வருகின்றனர் என்பதை மறுக்கவே முடியாது.

    ஆணா பெண்ணா என்று கேள்வி கேட்டு ஒரு குடும்பத்தை பிளக்க முயற்சிக்கும் முற்போக்கு அறிவிலித்தனத்துக்கு சரியான பதில் …………ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஆதாரமாக ஒருங்கிணைந்து தாமும் சுகமாக வாழ்ந்து அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் உறுதி செய்யும் ஒரு அருமையான சமூஹ ஏற்பாடு குடும்பம்.

    மதங்கள் மொழிகள் தேசங்கள் கடந்து இந்த அருமையான சமூஹ ஏற்பாடு தரும் சமூஹப்பாதுகாப்பை யாரும் மறுக்க முடியாது. முற்போக்கு என்ற பெயரில் மட்டற்ற தனிநபர் சுதந்தரத்தை அனுபவித்து சீரழிந்த சமூஹத்தையும் சமூஹச் சீர்கேடுகளையும் அனுபவித்த பரங்கியர் நாடுகள் குடும்பம் என்ற சமூஹ அமைப்பினை மீள்பரிசீலனை செய்வது நெகிழ்வளிக்கிறது.

  6. BS
    “Indian culture is Hindu culture: it exists outside individual or against individualism”,
    திரு பி எஸ் போன்றவர்கள் தமிழில் மறுமொழி எழுதுவது அவசியம்.
    இந்தியப்பண்பாடு ஹிந்துப்பண்பாடு. தனிமனிதனுக்கு புறத்தே அது இருக்கிறது அல்லது தனிமனிதமையக்கருத்தியலுக்கு எதிரானது என்று ஸ்ரீ பி எஸ் கருதுகிறார்.
    முதலில் இந்திப்பண்பாடு என்பது ஹிந்துப்பண்பாடு என்பது சரி. ஹிந்து என்பது அனைத்து இந்திய வைதீக வைதீகமல்லாத தரிசனங்களையும் தோற்றுவித்த பண்பாட்டு அடித்தளம்.ஆனால் அது தனிமைதனுக்கு வெளியே இருக்கிறது என்பது அபத்தம். பண்பாடு என்பது விழுமியங்கள் மற்றும் ஆழ்ந்த நம்பிக்கைகளின் தொகுதியாகும். அவை மனித மனங்களில் இருந்தால்தான் சமூகம் இயங்கமுடியும். ஆகவே மனிதனுக்குப்புறத்தே உறவுகள் சமூக அமைப்பு இறுந்தாலும் பண்பாடு தனிமனிதர்களின் அகத்தேதான் உள்ளது.
    இந்தியப்பண்பாடு தனிமனிதமையக்கருத்தியலை சமூகவாழ்வில் ஏற்கவில்லை. சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம்தானே அன்றி ஒற்றைத்தனிமனிதன் அல்ல. ஆனால் ஆன்மிக அனுபவம் என வருகின்றபோது நம்முடைய சமயங்களும் தத்துவங்களும் தெளிவாக அது தனிமனிதனுடைய அக அனுபவமாகவே அனுபூதியாகவே அதனை வலியுறுத்துகின்றன. ஒவ்வொருவருடைய ஆன்ம விடுதலைக்கு அவரது தனிப்பட்ட அனுபூதி அவசியம் என்று வழிகாட்டுகின்றன. ஆன்ம விடுதலையைப்பொறுத்தவரையில் உலகிலேயே நமது சித்தாந்தங்கள் கொடுத்த சுதந்திரத்தினை யாரும் இனிவரை அளிக்கவில்லை. இன்னும் அந்த சுதந்திரத்தினை எந்தவொரு அன்னிய நெறியும் புதிதாகத்தோன்றி அளிக்கமுடியும் என்றும் உறுதியாக சொல்வேன்.

  7. இந்திப்பண்பாடு என்பதை இந்தியப்பண்பாடு என்று மாற்றிவிடும் படி ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

  8. மனித இனம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம், வளர்ச்சி மிக,மிக குறைவு. நம் இனம் வளர்ந்த, அறிவொளி பெற்ற சமூகமாக மாறுவதற்கு இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. மனித இனம் தற்போது வகுத்துக்கொண்டிருக்கும் குடும்ப முறை, திருமண பந்தம், ஒருவனுக்கு ஒருத்தி, அரசாங்க அமைப்பு போன்றவைகளெல்லாம் பரிணாம வளர்ச்சியின் இடைப்பட்ட காலத்துக்கான தற்காலிக சமூக கட்டமைப்புகள் மட்டுமே. இவை நிரந்தரமல்ல. நம் இனம் பரிணாம வளர்ச்சியில் முன்னேறும்போது இவைகளெல்லாம் காணாமல் போய்விடும். வளர்ந்த நாடுகள் என்று நாம் சொல்லும் மேற்கத்திய நாடுகள் இந்த முன்னேற்ற பாதையில் கீழ்கத்திய நாடுகளைவிட சற்று முந்தியிருக்கிறார்கள். இந்த முன்னேற்றம் கீழ்கத்திய சிந்தனையில் ஊறியிருப்பவர்களுக்கு ஒழுக்கம் கெட்டதாக, குடும்ப அமைப்பு சீர்குலையும் அவலமாகத்தான் தோன்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *