கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6

மற்ற பகுதிகளைப் படிக்க

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்

பகுதி 1

பதிஇயல்

4  கடவுளின் சாயல்

ஓ கிறிஸ்தவ போதகர்களே!

உங்கள் தேவனாகிய ஜெஹோவா மனிதனை தனது சாயலில் தன்னைப்போலவே படைத்தார் என்பதை உங்கள் பைபிள் கீழ்கண்டவாறு சொல்கிறது.

“பின்பு தேவன் நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும், மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும் பூமியின்மேல் ஊறும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்”  — (ஆதியாகமம் 1:26-27).

உங்கள் கர்த்தர் உருவம் அற்றவரா? அல்லது உருவம் உடையவரா? அவருக்கு உருவம் இல்லாமல் இருந்தால் அவர் தன்னைப்போலப் படைத்த மனிதனுக்கும் உருவம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. மனிதனுக்கு உருவம் இருப்பதால் அவரைப் படைத்த ஜெஹோவாவிற்கும் உருவம் இருக்கவேண்டும்.

இங்கே சாயல் என்பது உயிரைக் குறிக்கும் என்று நீங்கள் வாதிடலாம். அப்படியானால் உங்கள் ஜெஹோவா மனிதனின் உடலைப் படைத்தாரா, அவனது ஆன்மாவைப் படைத்தாரா, அல்ல இரண்டையும் படைத்தாரா என்ற கேள்வி எழும்.

உங்கள் பைபிள் தெள்ளத்தெளிவாகவே சொல்கிறது.

பிறகு, தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். தேவனாகிய கர்த்தர் தன் உயிர்மூச்சினை அவன் மூக்கில் ஊதினார். அதனால் மனிதன் உயிர்பெற்றான்.”  — (ஆதியாகமம் 2:7).

உங்கள் பைபிளின் இந்த ஆதியாகம வசனத்தின்படி மனிதனின் உயிர் ஜெஹோவாவின் சுவாச மூச்சு எனப்படுவதால், மனிதனின் உயிர் படைக்கப் படவில்லை என்றும், தனது சாயலில் அவரால் படைக்கப்பட்டது மனிதனின் உடல்தான் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

சாயல் என்பது அறிவு என்று நீங்கள் வாதிட்டால், விடயம் இன்னும் சிக்கலாகும். ஆதி மனிதன் அறிவே உருவாகப் படைக்கப்பட்டிருந்தால் அவன் பகுத்தறிவு உடையவனாக இருந்திருப்பானே. அவனுக்கு அறிவு விளங்கியிருந்தால் நல்லது எது, தீயது என்பதைப் பகுத்தறிந்திருப்பானே! அப்படிப் பகுத்தறிந்திருந்தால் தனது மனைவியின் தவறான கருத்தை ஏற்றிருக்கமாட்டானே? நிச்சயமாக அது நடந்திருக்க வாய்ப்பேயில்லை. எனவே சாயல் என்று சொல்லப்படுவது மனிதனின் உடலைத்தானே அன்றி, அவனது அறிவை குறிக்கவில்லை. மேலும், சாயல் என்பது அறிவைக் குறிப்பதாக இருந்தால், விலக்கப்பட்ட கனியை உண்பதற்குமுன் மனிதனுக்கு இருந்த அறிவுதான் ஜெஹோவாவிற்கும் இருந்திருக்கவேண்டும், அதற்குப் பின்னர் மனிதனுக்கு பகுத்தறிவு அவருக்கு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்தப் பகுத்தறிவும் ஜெஹோவாவிடம் இருந்தது என்று சொல்வீர்களானால் அது இயல்பாக அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. விலக்கப்பட்ட கனியை அவரும் உண்டிருக்கவேண்டும்.

“பகலிலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.”  – (ஆதியாகமம் 3:8).

உங்கள் தேவனாகிய ஜெஹோவா குளிர்ந்த வேளையை விரும்பியபடியால், அவர் வெப்பம் குளிர்ச்சி இன்பம் துன்பம் ஆகியவற்றைப்பகுத்தறிபவர் என்பது தெரிகிறது.

இன்னமும் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை சொல்ல்லலாம். ஆனால் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.

மேற்கண்ட விவாதத்திலிருந்து உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு தெய்வீகத்தன்மைகள் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆகவே அவருக்கு எபிரேய மொழியில் வழங்கப்படும் புகழ்மொழிகளான எலோஹிம் (மஹிமைவாய்ந்தவர், வழிபாட்டிற்குரியவர்), எலியொன் (ஆண்டவர், கடவுள்),  ஜெஹோவா (சுயம்பு,தான்தோன்றி, வாழும்தெய்வம்,மாறாதிருப்பவர்,ஆதியந்தமில்லாதவர்), ஷட்டை (மேலான பிரபு, நீதிபதி) ஆகியவை பொருந்தாது என்பது தெரிகிறது. மேலும் கிரேக்க மொழியிலே அவருக்கு வழங்கப்படும் தியோஸ் (கடவுள்), குரியோஸ் (படைத்தோன்) என்பவையும் அவருக்கு பொருந்தாது என்பதும் தெளிவாகிறது.

இயேசுவின் ஜீவிதம்

ஓ கிறிஸ்தவ போதகர்களே!

உங்களது கர்த்தராகிய இயேசுவும்கூட தெய்வீகத்தன்மை ஏதுமற்றவர் என்பதை நிரூபிப்போம்.

இயேசு வரலாற்றில் வாழ்ந்தவரா?

இயேசு வாழ்ந்ததாக சொல்லப்படுகிற காலகட்டத்தில், ஐரோப்பியக் கண்டத்தில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர் ஜோசபஸ் அற்புதங்கள் பல செய்த இயேசுவைப்பற்றி பதிவு செய்யாதது ஏனோ? மெய்யாகவே இயேசு அந்தக்காலத்தில் வாழ்ந்வராயிருந்து, செத்துப்போனவர்களை உயிர்ப்பிப்பது போன்ற பல அற்புதங்களை செய்திருந்தால் அவற்றை ஜோசபஸ் பதிவுசெய்யாமல் விட்டது ஏனோ? ஒருவேளை இந்த உண்மைகள் அவருக்குத்தெரியவில்லையோ?

ஜோஸஃபஸ்

அப்படியே வைத்துக்கொண்டாலும், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது பகல் இரவானதாக பைபிள் சொல்கிறதே அதையாவது அவர் பதிவுசெய்திருக்கவேண்டுமே? சரி அதைத்தான் அவர் தவிர்த்துவிட்டார் என்றால் அப்போது நிகழ்ந்த பூகம்பத்தை[பூமியதிர்ச்சி]யையாவது அவர் பதிவுசெய்திருக்கவேண்டுமே?

சரி அதைவிடுங்கள், பைபிளில் இயேசுவின் பிறந்தநாள், மாதம், தேதி ஆகியவைகள் குறிப்பிடப்படாதது ஏன்? இயேசுவின் பிறந்த நாளைவிட மிக முக்கியமானதாகக் கருதப்படும் அவரை சிலுவையில் அறைந்த தேதியை பைபிளில் காணமுடியவில்லையே, அதற்கு என்ன காரணம்?

இயேசு பிறந்தபோது புதியதாக ஒரு நக்ஷத்திரம் தோன்றியதாக பைபிள் சொல்கிறதே. அதைக்கொண்டு அவரது பிறந்த திகதியைக் கண்டுபிடிக்கமுடியவேண்டுமே! இந்திய, சீன, பாரசீக, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த எந்த ஒரு வானவியல் அறிஞரும் அத்தகைய ஒரு நக்ஷத்திரம் தோன்றியதைப் பதிவுசெய்யவில்லையே! ஆகவே ஜீசஸ் அதாவது இயேசு என்ற ஒரு மனிதர் பிறந்தார், வாழ்ந்தார் என்பதை உறுதியாகக்கூறுவதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது.

புனிதரா இயேசு?

இயேசு என்ற மனிதர் வாழ்ந்தார் என்றே கொண்டாலும், சாதாரணக் குழந்தைகளுக்கு மாறாக, சிறப்பான எதையும் அவரிடது பிறப்பிலிருந்து காணமுடிகிறதா?

ஒரு தாயின் கருவறையில் வளராமல் அவர் அயோனிஜராய்ப்பிறந்தாரா?

அவர் பிறந்தபோது உலப்புகழ்வாய்ந்த அற்புதம் ஏதேனும் நிகழந்ததா?

இயல்புக்கு மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட தலை, இரண்டுக்கு அதிகமான கைகளோடு அவர் பிறந்தாரா?

அவர் பிறந்தவுடன் எழுந்து நடந்தாரா, போதனை செய்யத்தான் ஆரம்பித்தாரா?

பசி, தாகம், உறக்கம் போன்ற இயற்கை உபாதைகள் ஏதும் இன்றி அவர் வளர்ந்தாரா?

சிசுக்கள் படுகொலை

அவரது பிறப்பு மிகவும் அமங்களமானதாக அமைந்திருந்தது. முதலில் அவரது தாய் மேரியின் கற்பு சந்தேகிக்கப்பட்டது. இரண்டாவதாக, இரண்டுவயதுக்கும் குறைவான மூவாயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டன. அதனால் அவர் பிறந்த பிராந்தியமே துயரத்தில் மூழ்கி இருளடைந்தது. ஆண்டவனின் திருக்குமாரரின் அவதாரம் மக்களைத் துயரத்தில் ஆழ்த்துமா, இல்லை அவர்களை ஆனந்தத்தில் மூழ்கவைக்குமா? நிச்சயமாக அவதாரங்கள் நிகழும்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியடைவார்களே அன்றித் துயரத்தில் மூழ்கமாட்டார்கள்.

ஆகவே, சாதாரண மனிதரைப்போலவே, தனது பூர்வஜன்ம வினைகளின்படியே,  யோனிஜராக ஒரு தாயின் கருவில் இருந்து பிறந்து, மக்களுக்கு துன்பம் விளைவித்தார். வளர்ந்து இறைப்பழி செய்தார், பல இடங்களில் அலைந்து திரிந்த அவர், தமது முப்பத்திமூன்றாவது வயதில், தமது பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, கொடும் வலியைத் தாளமுடியாது, புலம்பித் தவித்து மரணமடைந்தார். இவையெல்லாம், சாமானிய மனிதரையும்விடப் பாவப்பட்ட ஆன்மாதான் அவர் என்பதை நிரூபிக்கின்றன.

இயேசு சர்வக்ஞரா?

இயேசு எல்லாம் அறிந்த சர்வக்ஞரா? முக்காலமும் உணர்ந்தவரா? கீழ்க்கண்ட பைபிள் வசனத்தினைக் காணுங்கள்:

“எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்து கொள்ள முடியாது. இதைப்பற்றி குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவ தூதர்களுக்கும் கூடத்தெரியாது. பிதாமட்டுமே இதனை அறிவார்  — (மாற்கு 13:32}.

எல்லாம் அறிந்தவர் பிதாவாகிய ஜெஹோவா மட்டுமே என்பதை இந்த வசனம் தெளிவாக்குகிறது. தெய்வீகத்தன்மை, இயேசுவாகிய அவரது குமாரருக்கும் இல்லை என்றும் தெளிவுபடுத்துகிறது.

தெய்வீகத் தன்மையோடு  இயேசுவுக்கு பசி, தாகம், மற்றும் இதர பலவீனங்களோடு கூடிய மனிதத் தன்மையும் உண்டு[i].  இயேசு மனுஷகுமாரன் என்றும், தேவகுமாரன் என்றும் சொல்லப்படுவதால் சொர்க்கத்தில் உள்ள தேவதைகளுக்கும், மனிதகுமாரனுக்கும்தான் எல்லாம் அறிந்த தன்மை இல்லை, ஆனால் தேவகுமாரனாகிய இயேசுவுக்கு சர்வக்ஞதை உண்டு என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அதற்கு பைபிளில் ஆதாரம் ஏதும் கிடையாது.

இயேசுவுக்கு திரிகால ஞானம், சர்வக்ஞதை இல்லை என்பதை ஒத்துக்கொள்ளாமல், ஆதாரமில்லாமல் விவாதிப்பது மடத்தனம் என்பதை தொடர்ந்து நிரூபிப்போம்.

தேவகுமாரன் என்ற பதம் மேற்கண்ட பைபிள் வசனத்தில் இல்லை. எனவே அறியாமையை இயேசுவின் தெய்வீகத்தன்மையோடு சம்பந்தப்படுத்தமுடியாது என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் மனிதகுமாரன் என்ற பதமும் இதில் இல்லை.  ஆகவே அறியாமையை அதனோடும் தொடர்புபடுத்துவது சாத்தியமில்லை.

மேலும் இந்த பைபிள் வசனத்தில், கடவுள், மனிதன் என்ற இருபதங்களும் குமாரனோடு இணைத்துப் பயன்படுத்தப் படாததால், அறியாமையை இயேசுவின் மனிதத்தன்மையோடோ தெய்வீகத்தன்மையோடோ சம்பந்தப்படுத்துவது சாத்தியமாகாது. மாறாக, இயேசுவின் தன்மையோடுதான் அது சம்பந்தப்பட்டதாகக் கருதப்படவேண்டும். அப்படிக் கருதினால் தெய்வீகத்தன்மை, மனித்தத்தன்மை தவிர மூன்றாவது ஒருவகைத் தன்மையும் இருப்பதாக நாம் கருதவேண்டிவரும். ஆனால் அது பைபிள் வசனங்களுக்கு முரணானதாகும்.

ஆகவே, இயேசுவுக்கு திரிகாலஞானம், சர்வக்ஞதை, அதாவது எல்லாம் அறிந்ததன்மை இல்லை என்பது உறுதியாகவே தெரிகிறது. இந்தக் கருத்துக்கு ஆதரவாக மேலும் ஒரு ஆதாரத்தைக் காட்டுகிறேன்.

“அப்போது தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அது பழக்காலம் இல்லாதபடியால், அவர் அதனிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.”  — (மாற்கு 11:13).

இந்த பைபிள் வசனத்திலிருந்து இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் என்பதும், அதனால்தான் அவர் மரத்தின் அருகே சென்று, அதில் பழங்கள் உள்ளனவா என்று கண்டறிய வேண்டியிருந்தது என்பதும் புலனாகிறது. ஆகவே அவருக்கு அனைத்தையும் அறியும் திரிகாலஞானம் இல்லை என்பதும் உறுதியாகிறது. . .

இது இயேசு நிகழ்த்திக் காட்டிய உருவகக்கதை என்று நீங்கள் வாதிடலாம். அவர் தூரத்திலிருந்து  அத்திமரத்தைப் பார்ப்பது சொர்க்கத்திலிருந்து வளமையான ஜெருசலம் நகரத்தைக்காண்பதற்கும், அருகில் சென்று கனிகள் உள்ளனவா என்று காண்பது அவர் ஜெருசலத்துக்கு வந்து அங்குள்ள யூதர்களிடம் நீதி, கருணை, நம்பிக்கை ஆகிய நற்குணங்கள் இருக்கிறதா என்று தேடுவதற்கும், அவர் கனிகளைக் காணாமல் இலைகளைக்கண்டது, அவர்களிடம் வெற்றுசடங்குகளையும், நம்பிக்கை இன்மையையும் கண்டதன் உருவகமாகும் என்றும்  நீங்கள் வாதிடலாம்.

Jesus Curses the Fig Treeஇனிமேலும் கனிகொடவியலாமல் போகட்டும் என்று அவர் அந்த அத்திமரத்தை சபித்ததற்கு — இருந்த இடம் தெரியாமல் ஜெருசலம் அழிந்துபோகப்போகிறது என்பதற்கு உருவகமாகும் என்றும் நீங்கள் கூறலாம்.

உங்களது அந்த வாதம் கூட இயேசு சர்வக்ஞர் அல்லர் என்ற எமது கருத்தை வலுப்படுத்துவதாகவே அமையும். எல்லாம் அறிந்த தன்மை என்பது ஜெரூசலத்து யூதர்களைக் காணாமலே அவர்களது நற்குணமற்ற தன்மையை அறிதலாகும். அப்படியன்றி இயேசு ஜெருசலத்துக்கு வந்து, யூதர்கள் நீதி, நேர்மை, நம்பிக்கை இல்லாமல் போலிச் சடங்குளில் மூழ்கி இருப்பதைப் பார்த்து அறியவேண்டியிருந்திருக்கிறது. சொர்க்கத்திலிருந்தே அதை அவரால் அறியமுடியவில்லை. இதையெல்லாம் நேரில் வந்துதான் அறிவதுதான் சர்வக்ஞதை என்றால் எல்லா மனிதரையும் சர்வக்ஞர் என்றுதானே சொல்லவேண்டும்.

ஜெருசலத்தை சபித்த இயேசுவின் செயல் பெரும் அநீதியல்லவா?. யூதமக்களுக்கு நல்ல குணங்களான நம்பிக்கை, நேர்மை போன்றவற்றை அளிக்கவேண்டியது பரிசுத்த ஆவியின் கடமையல்லவா? அதைச் சரியாகச் செய்யத்தவறிய பரிசுத்த ஆவியைத்தானே இயேசு சபித்திருக்கவேண்டும்? கனிதரும் பருவமில்லாததால் பழங்கள் இல்லாமல் இலைகள்மட்டுமே நிறைந்திருந்த அத்திமரத்தை கனிகொடுக்கவில்லை என்று சபித்த இயேசுவின் செயல் விசித்திரத்தில் விசித்திரமன்றோ! சொர்க்கத்திலேயே இல்லாத சர்வக்ஞதை உலகத்துக்கு வந்தபின் இயேசுவுக்கு எப்படி வந்திருக்கமுடியும்?

குறிப்பு:

இயேசுவுக்கு மனிதத்தன்மையும், தெய்வீகத்தன்மையும் ஒரே சமயத்தில் இருந்தன என்பதைப் பெரும்பாலான கிறிஸ்தவ மதப்பிரிவுகள் நம்புகின்றன. ஒரேசமயத்தில் முழுமையான மனிதராகவும், தெய்வமாகவும் இயேசு விளங்குகின்றார் என்பதை அவர்கள் நம்புகிறார்கள்.

 (தொடரும்)

மற்ற பகுதிகளைப் படிக்க

15 Replies to “கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6”

 1. ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் உண்டு, தயை கூர்ந்து தெளிவிக்கவும்.

  பைபிள் வாசகங்களில் Exorcism என்ற ஒரு பகுதியை கொண்டு அவர்கள் ஆவிகளையும் பேய்களையும் ஓட்டுவதாய் கேள்விபட்டிருக்கிறேன். சில ஆங்கில படங்களின் வாயிலாகவும் (உண்மை கதையை படமாக எடுத்தவை) பார்த்திருக்கிறேன். இதை செய்பவர் ஒரு தகுதி வாய்ந்தவராக இருத்தல் வேண்டும் என்றும் கண்டிருக்கிறேன். என் சந்தேகம் என்னவென்றால், இவ்வாசகங்கள் பொய்யாக இருப்பின் அப்பேய்கள் ஏன் ஓட வேண்டும்? இதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன?

  சோட்டனிக்கரை பகவதி கோவிலில் செய்வது போல இது ஏதும் தாந்திரீகமா? தயை கூர்ந்து விளக்கவும்.

 2. பல இடங்களில் எழுத்துப் பிழைகள் கருத்துப் பிழைகளை உருவாக்குவனவாக இருக்கின்றன.
  1. அவருக்கு உருவம் இல்லாமல் இருந்தால் அவர் தன்னைப்போலப் படைத்த மனிதனுக்கும் உருவம் இருந்திருக்கவேண்டும்.
  2. பழம் உண்டால் மரிக்கமாட்டான்.

 3. Truth என்ற அன்பர் இங்கே கிறிஸ்தவர்கள் Exorcism என்ற பைபிளின் வாசகங்களைக்கொண்டு பேய்களை ஓட்டுகிறார்களே? பைபிள் பொய்யாக இருந்தால் பேய்கள் ஆவிகள் ஏன் ஓடவேண்டும் என்று கேட்டுள்ளார்?
  இந்த மொழிபெயர்ப்பினை அடியேன் செய்வதற்கு முக்கியமானக் காரணம் கிறிஸ்தவ ரிலிஜியனைப்பற்றி ஹிந்துக்கள் ஹிந்துத்துவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அதனைப்பற்றி பொது மன்றத்தில் விவாதிக்கவேண்டும். ஆனால் இதுவரை அப்படிப்பட்டவிவாதம் இங்கே நிகழவில்லை.என்றாலும் இந்த நூல் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும்.
  இந்த வினாவை எழுப்பிய நண்பர் இந்த தொடரின் முந்தையபகுதிகளையும் இன்னும் வரப்போகிற பகுதிகளையும் கூர்ந்து வாசிக்கவேண்டும். வருகிறபகுதிகளில் இந்த வினாவுக்கு விடை இருக்கிறது.
  இப்போதைக்கு இந்தவினாவிற்கு என்னளவில் விடையிருக்க முயல்கின்றேன்.
  முதலில் ஆவி பேய் என்ற ஹிந்துக்கருத்துக்கும் அபிராஹாமிய கருத்துக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு. கிறிஸ்தவர்களைப்பொருத்தவரையில் ஆன்மா என்பதே உடல்தான். ஜெஹோவா ஆதாம் ஏவாள் ஆகியோரைப்படைப்பதற்கு முன் உயிர்கள் ஆன்மாக்கள் ஏதும் இல்லை. ஜெஹோவாவின் மூச்சே உயிர். மண்ணைக்கொண்டே அவர் ஆதாமை உருவாக்கினார். அவனது விலா எலும்பிலிருந்து ஏவாளைப்படைத்தார். சபிக்கப்பட்ட அவர்களிடம் இருந்து பிறந்த மனிதர்கள் தொடர்ச்சியாக வந்த ஆன்மாக்கள். ஆக ஆன்மாக்கள் எங்கிருந்து வந்தன என்று கிறிஸ்தவர்களைக்கேட்டால் அம்மா அப்பாவிடம் இருந்து வந்தன என்றுதான் சொல்லமுடியும் ஆகவேதான் செத்துப்போனவர்களில் கிறித்துவை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் மீண்டும் நியாயத்தீர்ப்பு நாளில் உயிர்த்தெழுந்து சொர்கத்தில் வாழ்வர் என்றும் மற்றவர்கள் மீளா நரகத்தீயில் வெந்துகொண்டே இருப்பார்கள் என்றும் பைபிள் சொல்லுகிறது.
  ஹிந்துக்களைப்பொருத்தவரையில் ஆன்மாக்கள் உண்டு. வாழ்வை நிறைவு செய்யாத ஆன்மாக்கள் அடுத்த பிறவி எடுக்கும் வரை ஆவிகளாக அலையும் என்றும் பெரும்பாலானோர் நம்புகிறோம். மறுபிறவியைப்பற்றி பல நூறு ஆய்வுகள் வந்துவிட்டன. எங்கெல்லாம் பழைய ஜென்ம ஞாபகம் வந்தது என்று சொல்லப்பட்டதோ அங்கெல்லாம் அது உண்மை என்றே நிரூபிக்கப்பட்டுள்ளது. மறுபிறவியை நம்பும் ஹிந்துக்களிடம் மட்டுமல்ல மற்றப்பண்பாடுகளில் வாழ்வோருக்கும் மறுபிறவி நினைவு வந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
  ஆனால் கிறிஸ்தவர்களைப்பொருத்தவரையில் பேய் ஆவி என்பது சாத்தான் மட்டுமே. அவனை எப்படி ஏசு வென்றார் என்பதை அடுத்தபகுதியில் படியுங்கள். கிறிஸ்தவர்களால் சாத்தானைத்தவிர ஆவிகள் ஏதும் இருப்பதாக அவர்கள் நம்பவே வழியில்லை. ஆகவே அவைகளை எப்படி அவர்கள் விரட்ட இயலும்.
  அதைவிடுங்கள். பலப்பல ஆவிகள் பேய்கள் இவையெல்லாம் இருக்கிறது என்பது நம்பிக்கையா? இல்லை உண்மையா? இது நம்பிக்கை சார்ந்த விடயம்தான் என்றாலும் பேராசைக்காலஜி இன்றைக்கு ஆன்மாக்களை ஆவிகளைப் படம் எடுக்க முனைந்துகொண்டிருக்கிறது.
  பேய் ஆவி இவைகள் எல்லாம் மன நலமின்மை சார்ந்த விடயங்கள் என்றே நினைக்கிறேன். போபியா எனப்படும் பயம். ஹாலோசினேஸன் எனப்படும் மாயத்தோற்றங்கள் இவையெல்லாம் மன நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படுவதுண்டு.ஆவி பிடித்தவர்களும் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். ஆவி பிடிக்கப்பட்டவர்களும் தங்களை ஆவிபிடித்திருப்பதை நம்புகிறார்கள். ஆவியைவிட பலமான ஏதோ ஒருசக்தியால் தம்மை மீட்கமுடியும் என்று அவர்களில் பெரும்பாலும் நம்புகிறார்கள். அந்தமாதிரி ஒரு நம்பிக்கை இல்லாதவர்களிடம் கூட அப்படி ஏற்படுத்தி அவர்களை குணப்படுத்த முடியும். இந்த முறைதான் நமது மாந்த்ரீகர்கள் கையாளுகிறார்கள். கிறிஸ்தவர்களும் கையாளுக்கிறார்கள். ஆவி பிடிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பயத்தினாலேயே அந்த நிலையை அடைகிறார்கள். ஆகவே அந்த பயத்தினைப்போக்குவதே பெரிய சிகிச்சையாக இருக்கிறது. தியானம், யோகம், ஜபம் போன்ற சாதனைகளை செய்வோர் யாரையாவது பேய்பிடித்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.

 4. ஸ்ரீ க்ரூஷ்ண பிரஸாத் அவர்களுக்கு நன்றி.ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இரண்டாவது பிழையை என்னால் இந்த பகுதியில் காணமுடியவில்லை. பிழைகள் சுட்டிக்காட்டுவது வரவேற்கத்தக்கது. அதை சரிசெய்ய எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
  கிருஷ்ணபிரசாத் நீங்கள் பலதவறுகள் இருப்பதாக சொல்லி ஒன்றிரண்டைமட்டும் சுட்டுவது ஏன். எல்லாத்தவறுகளையும் அவசியம் நீங்கள் சுட்டிக்காட்டுவதே நல்லது. பிழைகளைத்திருத்துவதற்கு வசதியாக இருக்கும். குறைந்தது மூன்று முறையாவது வாசித்துவிட்டுதான் ஈமெயிலில் அனுப்புகிறேன்.
  நன்றி
  சிவஸ்ரீ.

 5. பேய் பிடித்தது, பேயை ஓட்டுவது என்பது பழைய ஏற்பாடு நூல்களில் இல்லாதபோது, அந்த நம்பிக்கை யூதர்களிடம் இல்லாதபோது, எப்படி அந்த நம்பிக்கை யூதரான யேசுவிடம் வந்தது?

 6. பைபிளில் கூறப்பட்டுள்ள கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்ற வாசகமே இந்து மத கோட்பாடுகளை அடிப்படையாககொண்டது
  கேளுங்கள் தரப்படும் என்றால் இறைவனிடம் இடைவிடாமல் நமது கோரிக்கைகளையும்,வேண்டுகோள்களையும், நியாயமான ஆசைகளையும் கேட்க வேண்டும் என்ற மன உறுதியையும்,
  அப்படிகேட்டு கிடைக்கவில்லை என்றால் இன்னும் அதிகமான அதாவது கேட்டதைவிட மன உறுதியுடன் வேண்டுகோள்வைப்பதை தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வாசகமும் அப்படியும் கிடைக்கவில்லை எனில்
  கேட்டும், தட்டியும் தரப்படாத அல்லது நிரைவேற்றப்படாத நம் பிரார்த்தனைகள் ஏன்?
  நடக்கவில்லை என்பதை இன்னும் ஆழமாக சிந்தித்து இன்னும் கடுமையான
  முயற்சியுடன் இறைவனுக்கும் நமக்குமான இடைவெளியை குறைப்பதன் மூலம்
  நாம் நினைக்கும் எண்ணங்களை நிறைவேற்றிகொள்ளலாம் என்பது தேடுங்கள் கிடைக்கும் என்ற வாசகம் கூறுகிறது.
  இந்த வாசகம் ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள
  தமிழ் இலக்கியங்களிலும்,இந்துகதைகளிலும் காணப்படுகிறது அப்படியிருக்கையில்,
  இந்து புறானங்களிப்பற்றியோ, இதிகாசங்களைப்பற்றியோ சொல்லவேண்டியல்லை, ஆக
  கிருஸ்துவ மத கோட்பாடுகள் பெருன்பான்மையானவை இந்து மதத்தை அடிப்படையகக்கொண்டவை.

 7. //அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
  பார்த்தவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்//

  என்பது கண்ணதாசன் திரைப்படப் பாடல்.

  இதுதான் விவிலிய சொற்றொடரும் கொண்டது. எனினும் இங்கொரு இடர்.

  அவ்விடர் : அழைக்கும் குரல் என்பதை ஒலியாகவும், பார்வையை அகக்கட்புலன் வழியாகவும் எடுத்தால் இறைவன் அழைக்கும் குரட் புலன், கட்புலன் இழந்தோருக்கு இல்லாதவராகி இரக்கமில்லாமல் அப்படிப்பட்டோர் படும் அவலத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவன் மட்டுமாகிறான். எனவே குரல், பார்வை எனபன மனத்தாலும் அகச்செயலாலும் என்றும் அவற்றை அறிந்து வருகிறான் இறைவன் என்றும் எடுக்க வேண்டும்.

  இங்கு இன்னுமொரு இடர்:

  மனதால் இறைஞ்சி மன்றாடுவருக்கு மட்டுமே இறைவன் என்றும், தன் நன்ன்டத்தையால் பிறருக்கு இரங்கி உழைத்து வாழுவர் அதனால் வரும் துயரத்தையும் அவர்கள் கேட்டால் மட்டுமே (மனதால்) வருபவன் என்றும் ஆகிறது.

  இறைவன் இருவகையிலும் இறங்கிவருவதாக இருக்கவேண்டும்: ஒன்று மனதால் அல்லலுற்று இறைவனிடம் மன்றாடுபவர். அப்படி மன்றாடாமல் அவலமடைவர் (குழந்தைகள், நாத்திகர்கள்) என்று எல்லாருக்குமே இறைவன் என்று இருக்கவேண்டும். நாத்திகர் ஆத்திகர் என்ற பிரிவு இறைவன் முன் இல்லை எனப்தே திருவாய்மொழியின் முதற்பத்து சொல்லும் செய்தி.

  இல்லாவிட்டால், இறைவன ஒரு விவரம் தெரிந்து சந்தர்ப்பத்தைப் பயனபடுத்தும் வியாபாரி என்றும் அவ்விறைவனை ப் போற்றவே வளர்ந்த வியாபார இயக்கங்களே மதங்கள் எனவும் ஆகும்.

  விவிலியம் என்ன சொல்கிறது என்று சட்டாம்பிகள் சொல்கிறார்?

 8. சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவர்களே,
  தங்களின் விளக்கத்திற்கு நன்றி. நான் இத்தொடரின் முந்தைய மற்றும் வரும் பகுதிகளை அவசியம் படித்து பார்க்கிறேன். அனால் என் கேள்வியின் முக்கிய அம்சம், பேய் இருக்கிறதா இல்லையா என்பது இல்லை. அப்படி ஒன்று இருப்பதாக சுவாமி விவேகானந்தா அவர்களின் வாழ்விலும் உதாரணம் உண்டு, சென்னையிலேயே. அவைகளுக்காக அவர் பிரார்த்தனை செய்தார் என்று படித்திருக்கிறேன்.

  என் கேள்வி, பைபிள் இல் இருப்பவை பொய் என்றால், அந்த வாசகங்களை படிப்பதன் மூலம் அவை எவ்வாறு ஓடுகிறது?

 9. ட்ருத்
  “என் கேள்வி, பைபிள் இல் இருப்பவை பொய் என்றால், அந்த வாசகங்களை படிப்பதன் மூலம் அவை எவ்வாறு ஓடுகிறது?:
  கிறித்தவர்களைப்பொருத்தவரையில் மனித ஆன்மாக்கள் இறந்தபிறகு பேய் ஆவதில்லை. அப்படியிருக்க அவர்கள் அத்தகையப் பேய்களை எப்படி ஓட்டமுடியும். இருப்பது சாத்தான் என்ற வழிதவறிய ஒரு ஏஞ்சல் தான் பேய். அதைத்தான் அவர்கள் ஓட்டுவதாக சொல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பேயோட்டுவதாக சொல்வது ஒரு உளவியல் அணுகுமுறைதானே அன்றி அதில் தெய்வசக்தி எதுவும் இல்லை. இயேசுவே துஷ்ட சக்தியை பன்றிகளின் மீது ஏவிவிட்டே விலக்கினார் என்பது பைபிள் சொல்லும் செய்தி.
  அவருக்கு எந்த வல்லமையும் கிடையாது. சாத்தானை ஓடஓட விரட்டவே இல்லை. அவனுக்கு முன்னே நடு நடுங்கி நின்றார். தேவனும் தேவ குமாரனும் ஒன்று என்றால் சோதிக்கவந்த சாத்தானை ஓங்கி ஒரு அடி அதுகூடத்தேவையில்லை ஒரு பார்வையிலேயே எரித்திருக்கலாமே.
  எங்கள் சிவசக்தி பாலன் அசுரர்களை வடிவேலால் வதைத்தான். சூரபத்மனை திருவுரு மாற்றி தனது அடியவராக்கினான். இதுதானையா சர்வ வல்லமை.
  மரணத்தை வெல்லவேண்டும். செத்துப்போவதல்ல ஞானம்.
  ஹரஹர மஹாதேவ

 10. அன்புக்குறிய பிஎஸ்
  கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்ற கருத்தில் உள்ள இரு இடரல்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
  இறைவனிடம் வேண்டலாமா? எல்லாம் வல்ல இறைவனுக்கே நமக்குவேண்டுவது என்ன என்பது தெரியாதா? என்பது ஒரு பழைய நெடியவிவாதம்தான்.
  ஸ்ரீவைணவம் மர்கட நியாயம் மார்ஜால நியாயம் என்று இருவழிகளைக்குறிப்பிடும். குரங்கின் வழி. பூனைவழி. குரங்குகுட்டிதான் தாயைப்பிடித்துக்கொள்ளவேண்டும். ஆனால் பூனை தனது குட்டியைக்கவ்விச் சென்று பாதுகாக்கும். இந்த இரண்டில் பூனைக்குட்டியைப்போல சரணாகதி அடைந்துவிடுவது உத்தமமானது. ஆனால் அந்த அளவுக்கு உயர்ந்த ஆழ்ந்த நம்பிக்கை தர்க்க அறிவுடைய நமக்கு இல்லையே என்ன செய்வது. குரங்கு குட்டியைப்போல இறைவனைப்பற்ற முயலவேண்டியதுதான். நமக்கு வேண்டியவற்றை இறைவனிடம் வேண்டுவதில் தவறில்லை. இருந்தாலும் நமக்கு எது நல்லது அதைத்தான் இறைவன் அருளுவான் என்று நம்பலாமே.
  இறைவனோடு எப்போதும் பிரியாமல் இணைந்திருத்தல். அவனுக்கு அனைத்து அர்பணித்து துய்த்தல். துய்த்தலில் வரும் த்ருப்தியையும் அவனுக்கே படைத்து வாழ்வையே வழிபாடாக ஆற்றுதல். எதையும் முக்தியையும் கூட அவனிடத்தில் வேண்டாதிருத்தல். இதுதான் வீரசைவம் கூறும் பக்தியாகும். இந்த பக்தியைக்கூட அந்த மஹாலிங்கமாகிய பரசிவத்தின் அருளினாலே அடைய இடையும்.
  சிவசிவ

 11. பைபிள் கதை நாயகர் இயேசு என ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரமே கிடையாது.

  உலகம் முழுதும் வருடம் – காலம் குறிப்பதை பொ.மு, பொ.கா. என பொதுக் காலம் பொதுக்காலத்திற்கு முன் என மாற்றிக் கொண்டு 50 ஆண்டிற்கும் அதிகமாய் ஆகிவிட்டது.(Common Era CE, Before Common Era BCE)
  https://pagadhu.blogspot.in/2015/12/indian-students-must-read-common-era-ce.html

  இந்தியா உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.

 12. Mr Solomon!

  You have a valid point You can send this as a memorandum to the Mrs Smirit Zubain Irani, the Minister of Human Resource Development.

  She is inviting suggestions and comments from the general public and others on her proposed New Education Policy. You can go to her Ministry’s website’s homepage and there, you find it in discussion forum. You can post your suggestions. I sincerely hope your suggestion will receive positive attention.

  In the discussion forum on her Ministry’s website, I have given many suggestions; and I do believe if not all, but a few at least, will be fructified through the NEP – But they are not on elementary education, but on higher education matters.

  Before the last date expires, bravo, go ahead and post therein.

  Merry Christmas! (Since you are a Christian as obvious from your name (in your blog), I am greeting you for your festival.

 13. ஸ்ரீ பால சுந்தரவிநாயகம் “Merry Christmas! (Since you are a Christian as obvious from your name (in your blog), I am greeting you for your festival”. என தேவப்பிரியாஜி அவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத்தெரிவித்திருக்கிறார். கிறிஸ்துவின் வரலாற்றை நிராகரிக்கிற ஒருவர் கிறிஸ்துமசைக்கொண்டாடுவாரா? இல்லை இன்னும் கிறிஸ்தவராகத்தொடர்வாரா? சிந்திக்கவேண்டும் நண்பர் ஸ்ரீ பாலசுந்தரவிநாயகம்.
  ஹரஹர

 14. Most Christians are liberal. Indian Christians are not so – for e.g. Malayalee Christians stopped one drama on Jesus as it was considered offensive. Dan Brown’s book is banned in India. For depicting Selvi Jeyalalitha as Madonna in wall posters, there was a huge demonstration in Tuticorin and elsewhere. Madam pulled up that over enthusiastic AIADMK guy and the posters were taken away.

  The liberal Christians, like liberal Hindus, continue to remain in their respective religion. Even if they don’t follow it, their retain all things Christian. It is common to find Tamil Hindus converted to Christianity retaining their Hindu names. Kavya Vishwanathan, who was accused of plagiarism in USA, is a Christian (former Tamil Brahmin Hindu). Like her, we can find so many Lamxis, Saraswatis, Kannans, Chellappas (a pukka Tamil brahmin name) among Tamil Christians. Sam Chellappa – a Brahmin Hindu, now an evangelist!

  Here, by retaining his name as Devapriayriya Solomon, in his blog always, he gives us understand he remains a Christian, but a modern one who rejects all things which is against reason but follows Christianity to its core. It is possible. Like me, remaining Hindu, while rejecting all things orthodox like Sithars and others did. Rejection is generously permitted in this religion, as you know well.

  It is therefore possible for Christians and Hindus or Sikhs (there are many agonists like Kushwant Singh who don’t believe a single word of Sikhism but retains names and turban), but I wonder whether it is possible in Islam where a person must accept the religion 100% or else, he is not a Muslim.

  Mr Solomon can explain himself in time whether he is a Christian or a Hindu. This will settle all our doubts about him. If Hindu, I will greet him for Hanuman Jayanti tomorrow.

  — Bala Sundara Vinayagam

 15. ஜீஸஸுக்கு பழ சீசன் எப்போது என்ற மானுட அறிவும் இல்லை.சீசனில்லாத நேரத்தில் பழங்கொடாத மரத்தினினின்று பழத்தை எதிர்பார்த்த தன் குற்றமும் புரியவில்லை.தன் குற்றத்தை மறைக்க எந்த குற்றமும் செய்யாத அந்த அப்பாவி மரத்திற்கு தண்டனை கொடுத்த கையாலாகாத் தனமும் தெரியவில்லை. மொத்தத்தில் அன்றைய ராகுல் காந்தி போல இருந்திருக்கிறார் ஜீசஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *