கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2

ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்  (1853–1924) தென்னிந்தியாவில் சமீபகாலத்தில் வாழ்ந்த மகான்களில் முக்கியமானவர்.  வேதாந்த ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்த துறவி இவர். அவர் மலையாளத்தில் எழுதிய கிறிஸ்து மத சேதனம் என்ற நூலின் ஆங்கில-வழி தமிழ் மொழியாக்கம் இது.

முந்தைய பகுதி

தொடர்ச்சி..

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் முன்னுரை:

மஹாஜனங்களே! சாமானியரும் கிறிஸ்தவமதத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது இந்த நூலின் நோக்கமாகும். கிறித்தவப் பாதிரிமார்களும் அவர்களது ஊழியர்களும் ஆதாரமில்லாமல் ஹிந்துமதத்தினையும், வேதங்கள், உபநிஷதங்கள் [ஸ்மிருதிகள்] போன்ற புனிதநூல்களையும் ஆதாரமில்லாமல் இழிவாக விமர்சித்துவருவதைக் கண்டும், கேட்டும் வருகிறோம். அவர்கள் ஹிந்துமதத்தினை இழிவுபடுத்தும் அஞ்ஞானக்குடாரம்(கோடாரி), திரிமூர்த்தி லக்ஷணம், குருட்டுவழி, சத்குருலாபம், சத்யஞானோதயம், சமயப்பரிக்ஷை, சாஸ்த்ரம், புல்லெலிக்குஞ்சு என்ற பெயரில் பலநூல்களை எழுதி வெளியிட்டுவருவதையும் கண்டோம். மேலும் அவர்கள் சாணார், புலையர், பறையர், போன்ற சாதிகளைச்சேர்ந்த மக்களை ஆசைகாட்டி கிறிஸ்தவத்திற்கு மதமாற்றி, அவர்களை நரகக்குழியில் தள்ளுகிறார்கள்.

மிசனரிகளின் பொல்லாத செயல்களைக்கண்டும் கேட்டும், நாம் அவற்றைத்தடுக்க எதையும் செய்யாமலிருப்பது முறையோ, தர்மமோ அன்று.  நமது செயலற்ற தன்மையின் விளைவாக, நமது சமூகம் ஏற்கனவே தனது மூன்றில் ஒருபங்கு மக்களை இழந்துவிட்டது. இன்னமும் இந்த இழப்பு தொடர்கிறது. நமது செயலற்றத்தன்மை பலதலைமுறைகளுக்கு நமது மக்களின் இகபர சௌபாக்கியங்களை இல்லாததாக்கிவிடும் அபாயம் உள்ளது.

ஆகவே, அறிஞர்களாகிய ஹிந்துக்கள் தமது சுய நலத்தினைத் துறந்து, ஒன்றிணைந்து தமது எளியமக்களுக்கு கல்வியறிவு புகட்டுவது மேன்மையான செயலாகும். மதமாற்றம் என்னும் அபாயத்தினைத் தடுத்துநிறுத்துவதற்கும், நமது மக்களின் இகபர நலத்தினைப் பேணுவதற்கும் இது அவசியம் வழிவகுக்கும்.

இதைவிடப் போற்றுதற்குரிய புண்ணியகாரியம் ஏதுமில்லை என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

தவம், தானம், ஜபம், யக்ஞம், வேத அத்யயனம்(ஓதுதல்) ஆகியவற்றை உங்களுடைய சுயநலத்திற்காகச் செய்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா! ஆனால் மிஷனரிகளின் மதமாற்றத்தினைத் தடுக்கும் உங்களதுசெயல்கள் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் பெரும் புகழைக் கொடுப்பதோடு, அறியாமையில் இருக்கும் மக்கள் கிறிஸ்தவப் படுபாதாளத்தில் விழுவதிலிருந்துக் காப்பாற்றவும் முடியும்.

ஹிந்து மலையாளிகளைக் கேட்கிறேன். உங்களுடைய சுயநலத்தைமட்டும் பார்த்தால் நீங்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளாகமாட்டீர்களா?hindu5

இனிமேலாவது கல்வியறிவுபெற்ற எல்லாக ஹிந்துக்களும் தமது செயலற்றத் தன்மையை விடுத்து, தமது அறிவு, ஆற்றல், செல்வம், ஆகியவற்றை கிறிஸ்தவ மிஷனரிகளின் தீயநடவடிக்கைகளைத் தடுக்கமுயல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒரு அணில்கூடத் தன்னால் இயன்றதைக் கொடுக்கிறது”. “மஹாலக்ஷ்மி நேர்மையாகப் பணியாற்றுபவர்களுக்கே அருள் புரிகிறாள்” என்ற முதுமொழிகளால் உத்வேகம்பெற்று, என்னிடம் குறைவான நிதியாதாரம் இருந்தாலும்கூட இந்த நூலை வெளியிடுகிறேன்.

கிறிஸ்துமதச்சேதனம் [கிறிஸ்தவமத நிராகரிப்பு] என்ற இந்த நூல் மதமாற்றத்தினைத்தடுக்கும் நமது உயரிய நோக்கினை அடைவதற்காக நாம் எடுத்துவைக்கும் முதல் அடியாக அமைகிறது. பெரியோர்களே! உங்களுக்கு இந்தநூலை அர்ப்பணிக்கின்றேன். இந்தநூலில் என் கருத்துக்களிலும் வாதங்களிலும் காணப்படுகின்ற குற்றம் குறைகளைக் கண்டு, சுட்டிக்காட்டினால் அடியேன் பாக்கியம் அடைந்தவனாவேன்.

— ஷண்முகதாசன் [சட்டம்பி சுவாமிகள்]

(தொடரும்)

5 Replies to “கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2”

  1. Christhavargalin madha matram ottimotha thesathin ayivirkana, kalachara,panpatirku ethirana maraimuga por….idhai nam ovviru kovilgalilum pakthargalidam vilakki viyipunarvai earpaduthavendum….nam bakthi ilakiyangalai sunday thorum ellorukkum sollithandhu avargalukku madha matrathin abayathai vilakki sollavendum….veedu veedaga sendru adhan theemaiyai kooruvadharkku thani kuyukkal amaikkavendum

  2. மத மாற்றத்தை பற்றி கவலைப்படுவது யார்? அதனை முதலில் உறுதிபடுத்தவேண்டும் மத தலைவர்கள் கவலைபடுவதில்லை அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அள்ள அள்ள அட்சய பாத்திரம் போல் பணம் வருகிறது அதனால் எந்த மாற்றும் வந்தாலும் கவலை படுவதில்லை தலித் வீட்டில் பாத பூஜைக்கு செல்வதில்லை ஆனால் அவர்கள் வழங்கும் பொருள் பணம் தீண்டத்தகாதவை அலல அரசிஎல் கட்சிகளிலும் நிரந்தர தலைவர்கள் மேல்ஜாதி மக்களே? அங்கேயும் புரட்சி தோன்றவேண்டும் தலித்துகளை ஆதரிக்கும் ஒரே இயக்கம் ஆர் எஸ் எஸ் தான் இதனால் மதமாற்றம் குறைந்துள்ளது

  3. நல்ல முயற்சி, வரவேற்கிறேன். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுவது மட்டுமே இத்தகைய விஷயங்களில் பலனை தரும். கிருத்தவனான நான் தெரு முனை மிஷனரி பிரசாரங்களை சிறுவயதிலிருந்தே வெறுத்திருக்கிறேன். அந்த பேச்சு என் சக இந்து நண்பர்களின் முகங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் விரும்பத்தக்கதல்ல, அது அவர்களின் மனதில் ஏற்படுத்தும் அசொவ்ய்கர்யமான எண்ணங்களின் வெளிப்பாடு. அவர்களுக்கு அந்த அசொவ்கர்யம் மட்டுமே தெரியும் அதற்கான காரணமும் புரியாது, விளக்கவும் தெளிவிருகாது. இந்து மதத்தின் கோட்பாடுகளோ தத்துவங்களோ தெரியாது, அந்த கிறித்துவ பிரசாகர் சொல்லும் கருத்துக்களுக்கு எதிர்வினை சொல்லவேண்டும் என்ற அவா இருந்தாலும், சொல்ல இயலாது. இந்து மதம் வெகுஜனங்களால் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மதம் என்றே நினைகிறேன். கிருத்துவமும் இஸ்லாமும் தங்கள் கோட்பாடுகளை தங்கள் மதத்தினருக்கு சிறு வயதிலிருந்தே போதிகின்றன , நம்பிக்கையை வளர்கின்றன. இது போன்ற அமைப்போ செயல்பாடோ இந்து மதத்தில் இல்லை. பன்முகத்தன்மை கொண்ட இந்து மதத்தில் இதை கொண்டுவருவது சவாலானது. ஆனாலும் இதை செய்தாக வேண்டும். இது இரண்டு விதங்களில் நன்மை பயக்கும், முதலில் இந்துக்களுக்கு இந்து மதத்தினை தெளிவாக விளக்கும், இரண்டு தெளிவு பெற்ற அந்த மக்கள் மூலமும் (அல்லது அந்த அமைப்பின் மூலமோ) பிற மதத்தினரிடமும் இந்து மதத்தினை பற்றிய தெளிவை வளர்க்கும். இந்தியாவில் நிலவி வரும் மத பிரச்சனைகளுக்கு இத்தகைய முயற்சி முற்றுப்புள்ளி வைக்கும்.

  4. Joe on September 25, 2015 at 6:46 pm
    “நல்ல முயற்சி, வரவேற்கிறேன். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுவது மட்டுமே இத்தகைய விஷயங்களில் பலனை தரும்”.
    மிக்க நன்றி ஸ்ரீ ஜோ. கருத்தைக்கருத்தால் எதிர்கொள்ளுவது என்போதும் எம்முடையப்பாரம்பரியமாக பண்பாடாக இருந்திருக்கிறது. விவாதம் எப்படி செய்யவேண்டும்? மொழியை எப்படிப்புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கே தர்க்கம், நியாயம் மீமாம்சம் ஆகியவற்றைத்தந்த தேசம் இது. அன்னியத்தாக்குதல்களுக்கு உள்ளான போதுகூட அந்த மரபு தொடர்ந்தது. அந்த மகோன்னத மரபில் ஆழ்ந்து சிந்தித்து விவாதித்து வாழ்வதைப்பெருமையாகவே நினைக்கின்றேன்.

  5. Joe on September 25, 2015 at 6:46 pm
    “கிருத்தவனான நான் தெரு முனை மிஷனரி பிரசாரங்களை சிறுவயதிலிருந்தே வெறுத்திருக்கிறேன்”.
    மிக்க மகிழ்ச்சி.
    ஜோ
    “அந்த பேச்சு என் சக இந்து நண்பர்களின் முகங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் விரும்பத்தக்கதல்ல, அது அவர்களின் மனதில் ஏற்படுத்தும் அசொவ்ய்கர்யமான எண்ணங்களின் வெளிப்பாடு. அவர்களுக்கு அந்த அசொவ்கர்யம் மட்டுமே தெரியும் அதற்கான காரணமும் புரியாது, விளக்கவும் தெளிவிருகாது. இந்து மதத்தின் கோட்பாடுகளோ தத்துவங்களோ தெரியாது, அந்த கிறித்துவ பிரசாகர் சொல்லும் கருத்துக்களுக்கு எதிர்வினை சொல்லவேண்டும் என்ற அவா இருந்தாலும், சொல்ல இயலாது”. ஹிந்துக்கள் மிஷ நரிகளோடு உரையாடுவதில்லை. காரணம் நாகரிகம் பண்பாடு. குரைக்கிற நாயைக்கல்லால் அடிக்கக்கூடாது ஒதுங்கிப்போகவேண்டும் என்ற மனோபாவம்தான். ஹிந்துக்களில் தமது சமயத்தின் தத்துவங்களை ஆழமாகக்கற்றவர்கள் குறைவு. ஆனால் கல்வியறிவு இல்லாத ஹிந்துக்களும் கூட ஹிந்து சமயத்தின் ஆழமான சத்தியங்களை உள்வாங்கி இருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான உண்மை. ஆகவேதான் பொய்யையும், புனைவையும், அச்சத்தையும், ஆசையையும் ஊட்டிக்கிறைஸ்தவர்கள் மதம் மாற்றுதலில் ஈடுபட்டார்கள் இன்னமும் ஈடுபடுகிறார்கள். ஹிந்துக்களில் ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர்களை மட்டுமல்ல கொஞ்சம் தெளிவு உடையவர்களைக்கூட கிறிஸ்தவர்களால் எதிர்கொள்ளமுடியாது. தமது அடிப்படைகளை, கற்பிதங்களை, புனைவுகளை மற்றவர்கள் கேள்விக்கு உள்ளாக்குவதைப்படிக்கவோ கேட்கவோ கிறிஸ்தவர்களுக்கு செவிப்புலனோ அதனை மறுப்பதற்கு ஆழ்ந்த தர்க்கத்திறனோ கிடையாது. ஹிந்து சமயங்கள், தத்துவங்களைப்பற்றி மிகத்தவறான திரிபு வாதங்களைமட்டுமே அவர்களால் முன்வைக்கப்படும்.
    அறிவார்ந்த ஜோ இந்தவிவாதத்தில் கலந்துகொள்ளவேண்டும். கிறைஸ்தவம், அதன் அடிப்படை நம்பிக்கைகள் ஆகியவை பற்றிய விவாதத்தில் துணிவோடு பங்கேற்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *