மால்டாவும் தாத்ரியும்…

சரித்திரம் என்பது அனுபவங்களின் விளைநிலம். அதன்மீது தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் சரித்திரம் தந்த அனுபவங்களிலிருந்து எந்தப் பாடமும் கற்காதவர்கள் தொடர்ந்து துயரங்களையே அறுவடை செய்வர். இதற்கு நமது நாடு மிகச் சரியான உதாரணம்.

மேற்கு பஞ்சாபில் நிகழ்ந்த மாபெரும் படுகொலை- பிரிவினைக்கு வித்து
மேற்கு பஞ்சாபில் நிகழ்ந்த மாபெரும் படுகொலை- பிரிவினைக்கு வித்து- 1947

துருக்கி நாட்டில் கலிபா மாற்றப்பட்டதற்காக பாரதத்தில் முஸ்லிம்களால் (1919) நடத்தப்பட்ட கலவரங்களால் நாம் அப்போது பாடம் கற்காததன் விளைவே 1947-இல் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் பாரத மக்கள் மீது முஸ்லிம் லீக் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் ஆனது. அதன் விளைவே பாகிஸ்தான் பிரிவினை. அதன் பிறகும், சுதந்திர இந்தியாவில் பல மதக் கலவரங்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஆனால் இதுவரை நாம் பாடம் கற்கவில்லை.

‘ஒரு சாதாரண முஸ்லிம் வெறியன்; ஒரு சாதாரண ஹிந்து கோழை’ என்று மகாத்மா காந்தி சொன்னதை இன்னமும் நாம் நிரூபித்து வருகிறோம். மக்கள் மட்டுமல்ல, நமது அரசியல் கட்சிகள், நமது ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரிடமும் இந்த ‘இஸ்லாம் ஃபோபியா’ அச்சம் அழுத்தமாக வேரூன்றி இருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு முறை இஸ்லாமின் பெயரில் ரௌடிகள் அத்துமீறும்போதும், தவறிழைப்பவர்களைக் கண்டிக்காமல், பாதிக்கப்படும் ஹிந்து மக்களுக்கே புத்திமதி சொல்லப்படுகிறது.

துஷ்டனைக் கண்டால் தூர விலக வேண்டியது தானே? என்று, இந்த அக்கிரமங்களை எதிர்க்கும் ஆண்மையுள்ளவர்களுக்கு அறிவுரையும் கூறுகிறார்கள் மெத்தப்படித்த மேதாவிகள். இப்படியே போனால் கடைசியில் என்ன ஆவோம் என்று கேட்டால் அவர்களிடம் எந்த பதிலும் இருக்காது. ஆனாலும் முஸ்லிம் குண்டர்களைக் கண்டிக்கவோ விமர்சிக்கவோ அவர்களுக்கு பயம். இதற்கு ஒரு முகமூடி தான் மதச்சார்பின்மை.

ஒவ்வொரு முறை மதக்கலவரங்கள் நடைபெறும்போதும், மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், மேதாவிகளின் முகத்திரை கிழிகிறது. ஆனால், மக்கள் இந்த நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்பதாகத் தெரியவில்லை.

அண்மையில் மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டம், காளியாசாக் கிராமத்தில் 2016, ஜனவரி 3-இல் நடைபெற்ற திட்டமிட்ட வன்முறை, நமது நாடு எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் மிக ஆபத்தான சவாலை முன்கூட்டியே நமக்குக் காட்டியிருக்கிறது.

கமலேஷ் திவாரி
கமலேஷ் திவாரி

அகில பாரத ஹிந்து மஹா சபா என்ற அமைப்பின் தலைவரான கமலேஷ் திவாரி, இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி பற்றி அவதூறான கருத்து ஒன்றை சொன்னதற்காக இப்போது உ.பி. மாநில சிறையில் இருக்கிறார். அவரைக் கண்டித்து மால்டாவில் 30,000 முஸ்லிம்கள் திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறை வடிவம் பெற்றது.

இந்த வன்முறையால், காளியாசாக் காவல் நிலையமும் அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகமும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. 24 போலீஸ் வாகனங்களும் எல்லைப் பாதுகாப்புப் படை வாகனம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டன. பலநூறு வீடுகளில் கும்பல் புகுந்து கொள்ளையடித்தது. இதைத் தடுக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்த இந்த வன்முறைக்குக் காரணம் அஞ்சுமன் அஹ்லே சுன்னத் ஜமாஅத் என்ற தீவிரவாத அமைப்பு. இதற்கு பின்புல அரசியல் ஆதரவு தர ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. எல்லாம் ஒட்டுமொத்த ஓட்டு படுத்தும் பாடு!

கமலேஷ் திவாரிக்கு எதிரான பேரணி
கமலேஷ் திவாரிக்கு எதிரான பேரணி

2015, அக்டோபரில் மாட்டிறைச்சி உண்டார் என்பதால் ஒரு இஸ்லாமியர் உ.பி.யில் கொல்லப்பட்டபோது நமது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்ததை நாடறியும். அந்த நிகழ்வை வைத்துக்கொண்டு மோடி அரசை கடுமையாக விமர்சித்த அவர்கள், இப்போது எங்கே போனார்கள்? கும்பலாகத் திரண்டு வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தான் தாத்ரியிலும் நிகழ்ந்தது. அதன் எண்னிக்கை தான் வித்தியாசம். இப்போது, மால்டா மாவட்டம் பற்றி எரிகிறபோது, இதை ஊதிப் பெரிதாக்காதீர்கள் என்று உபதேசம் செய்கிறார்கள் இந்த வீணர்கள்.

பங்களாதேஷை ஒட்டிய மாவட்டமான மால்டாவுக்கு மதக்கலவரங்கள் புதியதல்ல. டெகங்கா (2010), கன்னிங் (2013) கலவரங்கள் மாநில அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவை. பங்களாதேஷிலிருந்து ஊடுருவிய முஸ்லிம்கள் பலர் இந்திய குடியுரிமை பெற்று மால்டா மாவட்ட மக்கள் தொகையில் 50 சதவீதத்தை விட அதிகமாகப் பெருகியது தான் பிரச்னையின் ஆணிவேர்.

இப்போது மால்டாவும் (காளியாசாக்) சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டது; இஸ்லாமியர்களின் மிரட்டல் அரசியலுக்கு உதாரணங்களுள் ஒன்றாக சேர்ந்துவிட்டது. ஏற்கனவே, ஏதோ ஒரு வெளிநாட்டில் முகமது நபி குறித்து வரையப்பட்ட கேலிச்சித்திரத்துக்காக நமது சென்னையின் மவுன்ட் ரோட்டில் முஸ்லிம் குண்டர்களால் வன்முறையாட்டம் ஆடப்படவில்லையா? ஃபிரான்ஸில் பர்காவுக்கு தடை விதித்ததற்காக காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சுகள் நடக்கவில்லையா?

பொதுச் சொத்துகள் சேதம்
பொதுச் சொத்துகள் சேதம்

இஸ்லாமியர்கள் உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் இப்படித் தான் இயங்குகிறார்கள். இன்று ஃபிரான்சும், பெல்ஜியமும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொண்டு கண்கொத்திப் பாம்பாக விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் வரும் பயணிகளை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த அச்சமே இஸ்லாமிய அமைப்புகளின் பலம்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்தவே இந்த வன்முறை மால்டாவில் அரங்கேற்றப்பட்டுள்ளது. வன்முறையாளர்கள் மோடியைக் கீழ்த்தரமாக விமர்சித்தும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் கோஷமிட்டிருப்பதில், அவர்களின் பின்னணி புரிகிறது. இவர்களைத் தட்டிக் கேட்க மாநில முதல்வர் மமதாவுக்கு திராணி இல்லை. தவிர, அவரே வாக்கு வங்கி அரசியலில் சோரம் போய்விட்டார்.

நாடு முழுவதும் பாஜக தவிர்த்த கட்சிகளிடம் கானப்படும் ஊசலாட்ட மனநிலையின் வெளிப்பாடு இது. இதை நன்கு உணர்ந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தேச விரோதப் பிரசாரத்தை எந்தத் தடையுமின்றி கட்டவிழ்த்து விடுகின்றன. இதைக் கண்டிக்க வேண்டிய ஊடகங்களும் வாய் பொத்தி மௌனம் சாதிக்கின்றன. இந்த கலவரத்தில் பாஜகவுக்கு எதிராக ஏதும் இல்லாததால் அவர்கள் அமைதி காக்கிறார்கள் போலிருக்கிறது.

ஓட்டு படுத்தும் பாடு!
ஓட்டு படுத்தும் பாடு!

காளியாசாக் கிராமத்தில் வன்முறை வெறியாட்டம் முடிந்து ஒருவாரம் ஆகியும் கடைகள் இன்னமும் திறக்கப்படவில்லை. (ஜன. 10 நிலவரம்). வீடுகளை விட்டு வெளிவரவே உள்ளூர் ஹிந்துக்கள் அஞ்சுகிறார்கள். 144 உத்தரவும், அதிரடிப் படையினர் குவிப்பும் தான் இப்போது அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

எனவே, அரசின் கடமைகளை உணர்ந்து கலவரக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை மமதா நிலைநாட்டவேண்டும். தற்போது பெயரளவுக்கே வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 130 ரௌடிகளில் 10 பேர் மீது மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டி இருக்கிறது. இதை தட்டிக்கேட்ட மாநிலத்தின் ஒரே பாஜக எம்.எல்.ஏ.வான ஷமிக் பட்டாச்சார்யா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இது தான் ஜனநாயக இந்தியாவா?

நெருப்புடன் விளையாடுவோர் தீக்காயம் அடைவது உறுதி. பஞ்சாபில் பிந்தரன்வாலேவை வளர்த்துவிட்ட இந்திராகாந்தி சீக்கிய அடிப்படைவாதத்துக்கே பலியானார் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் லாபங்களுக்காக நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பணயம் வைப்பவர்கள், பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். இதை மேற்கு வங்க மக்கள் உணராதவரை, இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்; மோசமான அனுபவங்கள் சரித்திரத்தில் பதிவாகிக் கொண்டே இருக்கும்.

.

2 Replies to “மால்டாவும் தாத்ரியும்…”

  1. ஐயா

    உண்மை நிலவரங்களை கலங்காமல் எடுத்துரைத்ததற்கு நன்றி. தொடரட்டும் உங்களின் அரிய பங்களிப்பு. கர்நாடக எழுத்தாளரால் எழுதப்பட்டு பல தடைகளை மீறி பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட “அதர்வணா” என்ற அருமையான புத்தகத்தை அவசியம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வோர் இந்துவும் படிக்க வேண்டும். கடவுள்தான் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.

  2. அதித ஆன்மீகமும், உண்மைகளை மறைத்து, பொய்களை அவிழ்த்துவிட்ட கிருத்துவ மிஷினரி(நரி)களும், அடக்கியாண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளரின் சாமர்த்தியமும் இந்தியர்களை கோழையாகியது. சுதந்திரத்திற்கு பிறகு மத்தியில் உண்மையான இந்து ஆட்சியில்லாமல் போனதும், மத்திய அரசு இந்து விரோத ஆட்சி நடத்துகிறது என்று தெரிந்தும் பதவி மோகத்தில் வாக்களித்த மக்களுக்கு துரோகம் துரோகம் செய்த பாராளுமன்ற/மாநில உறுப்பினர்களும் தேர்தலில் வாக்குக்காக பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி விரக்தியடைய செய்துவிட்டனர். தமிழ்நாட்டில் இலவசங்களை அளித்து, மக்கள் மூளையை மழுங்கடித்து, பிச்சைக்காரர்களாக, முட்டாள்களாக ஆக்கிவிட்டனர் திராவிட ஆட்சியாளர்கள். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவரை பின்பற்ற பத்து முட்டாள்கள் போதும் என்றர். அவரது சிஷ்ய கோ(கே)டிகள் ஆட்சியை கைப்பற்றி மாநிலத்தையே முட்டாளாக்கிவிட்டர்கள். இன்றைய தலைமுறை விழித்துக்கொண்டுவிட்டது. ஆட்சியாளர்களும், அந்நிய மதத்தினரும் மாறாவிட்டால் வருங்காலத்தில் மிக மோசமான நிலை உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *