காதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும்

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்தாலே போதும். 14-ஆம் தேதிதான் காதலே பிறப்பெடுத்தது போல கத்தல்கள். அந்த நாளில் காதலர்கள் ஒன்றுசேர்ந்து விடவேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்களோ இல்லையோ, வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் வியாபாரிகள் கூவத் தொடங்கிவிடுவார்கள். ஊடகங்களும், எஃப்.எம். ரேடியோக்களும்  ‘காதலர்கள் தினக் கொண்டாட்டங்கள்’ என்று அலறத் துவங்கிவிடும்.

Valantine
காதலர் தினத்தை யாராவது மறுத்தால் போதும். இருக்கவே இருக்கிறது, கருத்து சுதந்திரம் என்ற ஆயுதம். காதலர் தினத்தை ஹிந்துத்துவர்கள் எதிர்த்தால் போதும்.  “இவர்கள் என்ன கலாசாரக் காவலர்களா?” என்று எதிர்க்கேள்வி எழும்.  ஹிந்து மதத்தில் காதலுக்கு இடமில்லை என்ற கூக்குரல் வேறு.

உண்மையில், உலகத்தில் உள்ள மதங்களில் ஹிந்து மதத்தைப் போல வேறு எந்த மதத்திலும் காதலுக்கு ஆதரவான கருத்துக்களையும், பண்டிகைகளையும் காண முடியாது.

தங்களது வழக்கமான பாணியில், காதலுக்கும் ஆண்டுக்கு ஒரே ஒரு நாளைத் தந்துவிட்டு ஒதுங்கிவிட்டது மேற்கத்திய உலகம். ஆனால் ஆண்டு முழுவதும் காதலைக் கொண்டாடுகிறது ஹிந்து மதம்.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி முடிய பத்து நாள்கள் சிவாலயங்களில் கொண்டாடப்படும் வசந்த உற்சவத்தை நமது பாரம்பரிய காதலர் திருவிழாவாகச் சொல்ல முடியும். ஹிந்து மதத்தின் காதல் தெய்வமான மன்மதனைத் தகனம் செய்வதும், பிறகு அவனை சிவபெருமான் உயிர்ப்பிப்பதுமாக 10 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் இளைஞர்களும், இளைஞிகளும் சங்கமித்து தெய்வ பக்தி கலந்த காதலை வளர்த்துக் கொள்கிறார்கள்.

காதலுக்கு ஒருநாள் அல்ல, பத்து நாள்கள் கொடுத்தவர்கள் நமது முன்னோர்கள். வெறும் காதலர் தினக் கொண்டாட்டம் அல்ல, காதலுக்கான  வெற்றி தினமாக பங்குனி உத்திரத்தைச் சொல்ல முடியும். ராமர் – சீதை திருமணம்,  ராதா – கிருஷ்ணர் கல்யாணம் போன்ற உற்சவங்கள் நடைபெறுவது பங்குனி உத்திரத்தில் தான்.

அதுமட்டுமல்ல…. ஹிந்து மத தெய்வங்களான சிவன் – பார்வதி, வள்ளி – முருகன், ராதா – கிருஷ்ணன், வெங்கடாஜலபதி – பத்மாவதி என்று பலரும் காதல் திருமணங்கள் தான். அவர்கள் காதல் திருமணம் செய்தது மட்டுமல்ல. திருமணத்துக்குப் பின்னர் வரும் குடும்பக் கோலத்திலும் நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

maxresdefault
ஹிந்து மதத்தைப் போற்றுபவர்களும் காதலுக்குத் துணை நிற்கவே செய்கிறார்கள். ‘காதலுக்கு எதிரிகள்’ என்று நவீன யுகக் காவலர்களால் முத்திரை குத்தப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் மத்தியிலும்  காதல் திருமணங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நடக்கவே செய்கின்றன.

இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற ஆபிரஹாமிய மதங்கள் காதலுக்கு நண்பர்கள் போன்று சித்தரிக்கப்படுவது தான் கேலிக்கூத்து.
கிறிஸ்தவர்களால் வணங்கப்படும் ஏசுவுக்கு திருமணம் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். கத்தோலிக்கப் பாதிரியார்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் உரிமையில்லை. பிற்காலத்தில், புரோட்டஸ்டண்ட் பிரிவு ஏற்படுத்தப்பட்டதும் அவர்கள் செய்த முதல் வேலை பாதிரியாருக்குத் திருமணம் செய்து வைப்பது தான். அதற்குக் காரணம், காதல் அல்ல. காமம் தான்.

திருமணம் செய்து கொள்ளாத பாதிரியார்களால் சிதைக்கப்படும் கன்னியாஸ்திரீகளும், இளம்பெண்களும் ஏராளம். விவரம் தெரியாத வயதில் தங்கள் கிறிஸ்தவப் பெற்றோரால் ‘கன்னியாஸ்திரீகளாக’ அர்ப்பணிக்கப்படும் பெண் குழந்தைகளின் கதை ஒவ்வொன்றும் துயரமும், ரத்தமும் பதிந்தது.

ஏதோ வெளிநாட்டுப் பாதிரியார்கள்தான் காமக் களியாட்டங்கள் நடத்துகிறார்கள் என்பதில்லை. கேரள கன்னியாஸ்திரீகள் படும் பாடுகள் நாவல்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் அருகே ஓமலூர் கிறிஸ்தவப் பள்ளியில், சுகன்யா என்ற மாணவி சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்திகள் கிறிஸ்தவப் பாதிரியார்களின் கயமைத்தனத்தை உணர்த்தின. ஏசுவின் பெயரால் சிதைக்கப்படும் காதல்கள் கிறிஸ்தவத்தில் ஏராளம். அதனால் தான் கிறிஸ்தவத்தைக் கடைப்பிடிக்கும் மேற்கத்திய நாடுகளில் காதலை விட காமமே பிரதானமாக முதலில் நிற்கிறது.

முகமதியர்களைக் கேட்கவே வேண்டாம். அவர்களின் இறை தூதரான முகமது நபியே ஏராளமான பெண்களை வைத்திருந்தவர் தான். பெண்ணடிமைத்தனம் அந்த மதத்தில் ஊறிப் போன ஒன்று. முஸ்லிம் ஆண்கள் பல தாரங்களை வைத்திருக்கவும், விருப்பப்பட்டால் ‘தலாக்’ செய்யவும் குரான் அனுமதிக்கிறது. பெண்கள் பர்தா போட வேண்டியது மதக் கட்டாயம். நவீன காலத்தில் கூட முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்குத் தயாராக இல்லை. சமீபத்தில் அமெரிக்க அதிபர் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த நேரத்தில். அவரது மனைவி மிசேலுக்கு சவூதி அரசு தக்க மரியாதை செய்வதற்குக் கூட தயாராக இல்லை.

பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் இந்த மதங்கள் காதலை ஏற்கவா செய்யும்? இந்தியாவில் ஆபிரகாமிய மதங்கள் காதல் என்ற போர்வையில் மதமாற்றங்களையே செய்கின்றன. முஸ்லிம்களின் ‘லவ் ஜிகாத்’ மூலம் ஹிந்துப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கும் காதல் என்ற போர்வையில் மதமாற்றம் மட்டுமே குறி. ஒருவேளை உண்மையிலேயே கிறிஸ்தவர்களோ அல்லது முஸ்லிம்களோ மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை காதலித்துத் திருமணம் செய்தால், அவர்களைக் கொல்லவும் தயங்குவதில்லை. இதற்கு தமிழகத்திலேயே ஆயிரம் உதாரணங்கள் சொல்ல முடியும்.

வாலண்டைன் தெவசத்துக்கு வருவோம்.

மூன்றாம் நூற்றாண்டில் ரோம் நகரத்தை ஆண்ட இரண்டாம் க்ளாடிஸ் என்ற மன்னன் காதலுக்குத் தடை விதித்தாராம். உடனே அந்நாட்டு இளைஞர்களும், இளைஞிகளும் வெகுண்டெழுந்தார்களாம். அவர்களுக்கு ஆதரவாக வாலண்டைன் என்ற பாதிரியார் களம் இறங்கினாராம். அவரும் ஒரு கல்லூரி மாணவியைக் காதலித்தாராம். பாதிரியார்கள் என்ன வேலையெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள். திருமணமே செய்து கொள்ளக்கூடாத பாதிரி, காதலுக்குக் கொடி பிடித்தால் அரசுக்கு கோபம் வரத்தானே செய்யும்? வாலண்டைன் பாதிரியைத் தூக்கிலிட்டது. அந்த தெவச நாள் தான் பிப்ரவரி 14.

நம்மூர்களில் அசுரர்கள் செத்தால் தான் கொண்டாடுவோம். பாதிரியாரின் தெவசத்தை மக்கள் அங்கு கொண்டாடுகிறார்கள். ஒருவேளை பாதிரியார்களுக்கு எதிராக மேற்கத்தியம் செய்யும் சதியோ?

உண்மையில் இது வாலண்டைனுக்கு தெவசம் அல்ல. Lupercalia என்ற வசந்த விழா தான் பெயர்மாற்றம் செய்யப்பட்டது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

பிப்ரவரி 14-ஆம் தேதி காதலைக் கொண்டாடுவது ஏற்புடையதா? யாரோ ஒருவனைக் காதலித்து யாரோ ஒருவனை திருமணம் செய்வது தான் நவீன காலத்தில் காதல் என்று அழைக்கப்படும் கருமாந்திரம்.

பெற்றவர்களையும், மற்றவர்களையும் விடுங்கள். காதலர் தினம் போன்ற கன்றாவிகளால் தங்களை இழந்து, வேறு ஒருவனைத் திருமணம் செய்ய நேரிட்டால் பெண்கள் மனது என்ன பாடுபடும்?

உண்மையான காதலைக் கொண்டாடுங்கள்! அதிலும் நம்மவர் தினங்களைக் கொண்டாடுங்கள்.

ஹிந்து மதம் காதலுக்கு எதிரி அல்ல. மாமா வேலைகளுக்கு மட்டுமே எதிரி.

.

13 Replies to “காதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும்”

  1. சமயத்தில் வந்த பொருள்பொதிந்த கட்டுரை. நமது பத்திரிகைகளும் டி.வி சேனல்களும் வெள்ளைக்கார மோகத்தையே நாகரீகமெனப் பரப்புகின்றன.பல விஷயங்களின் பின்னணி தெரிந்தால், புத்தியுள்ள எவனும் தானாகவே அவற்றைத் தள்ளிவிடுவான்.

    உலகம் ஆண்-பெண் என்ற இரு பெரும் துருவங்களுக்கிடையே செயல்படுகிறது. பெரிய ஞானிகளும் சிவம்-சக்தி என்று இவற்றைப் போற்றுகின்றனர். சக்தியின்றி சிவம் செயல்பட இயலாது என்கிறார் துறவியர்க்கரசர் சங்கரர். சிவ-சக்தி சொல்லும் பொருளும் போல் என்றும் பிரியாதவர் என்கிறார் காளிதாசர். மாணிக்கவாசகர் இன்னும் ஒருபடி மேலேயே போகிறார்.

    தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
    பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ
    பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
    விண்பால் யோகெய்தி வீடுவர் காண் சாழலோ.

    ஒருபக்கம் கிறிஸ்துவமதம், ஆண்-பெண் உறவையே புனிதமற்றதாகக் ( Sin) கருதுகிறது,இன்னொரு பக்கம் இஸ்லாம் விதிமுறை- நிதானம்- இல்லாத நிலையை போதிக்கிறது. எல்லாவற்றையும் வியாபாரமயமக்கும் மேலை நாகரிகம் இதிலும் சுரண்ட முற்படுகிறது. ஆங்கிலப் படிப்பு படித்து மூளை சலவையான ஹிந்துக்கள் உண்மையறியாது மயங்குகின்றனர். இத்தகைய கட்டுரைகள் அவர்கள் கண்களைத் திறக்கவேண்டும்.

  2. இராதைக்கும் கண்ணனுக்கும் திருமணம் நடந்த தாகக் குறிப்புகள் உண்டா?

  3. Why then we are having only arranged marriages imaongst Hindus.? This was actually a custom introduced by Moghuls like having a lady’s head covered. We had ghandharva vivaham. Why not celebrated Vasanth panchami as Lovers week by Hindu organisations? Why not oppose Khap panchayats? Why not encourage mixed marriages amongst lovers amongst Hindus?

  4. எந்த மத போதகர்களையும் நம் எக்காலத்திலும் தரக் குறைவாகப் பேச வேண்டாம்.
    கட்டுரையின் கருத்து நன்றாக உள்ளது

  5. அனந்த பாலகிருஷ்ண சர்மா அவர்களின் காதலர் தின எதிர்ப்பு கட்டுரை
    அருமையாக இருந்தது.
    காதலர் தினம், அட்சயதிருதியை, போன்றவை ஒரு சில கூட்டங்களால் உள்
    நோக்கத்துடன் திட்டமிட்டு பரப்பப்படும் விழாக்கள் இவை காலப்போக்கில்
    காணமல் போய்விடும்.கவலைபடதேவையில்லை.

  6. This is in reply to captainjohann.
    There have been many types of marriages in India. THOLKAPPIAM speaks of 8 types of marriages: it says: மறையவர் தேயத்து மன்றல் எட்டனுள். Gandharva marriage is only one of them- what is called love marriage. But this ‘love’ is not due to physical attraction, but the natural attraction between two people of comparable status, mediated by destiny- not any one running away with anyone as depicted in modern novels and movies.

    Tholkappiam speaks of arranged/fixed marriages and love marriages : கற்பு மணம் மற்றும் காதல் மணம். It clearly considers love marriage superior because it involves greater self- discipline, voluntarily undergone by the partners, in contrast to the arranged marriage where the discipline is imposed by society, especially as represented by the elders.

    It also says that when people failed to observe the discipline, and resorted to falsehood and fraud, rites and rituals had to be introduced:
    பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

    Tholkappiam also says that only those marriages are recognised as கற்பு Karpu marriages where the rituals have been observed/gone through:
    கற்பெனப் படுவது கரணமொடு புணர்தல்.

    Today, we find that whether in the West where they are supposed to marry on or for love, or in India among the English-educated new generation, divorce is increasing. Divorce defies the logic of love!
    But traditional India is still largely in good shape. The marriage may look arranged, but secretly, the people do fall in love! That is why the boy and the girl see each other formally. After all, who will marry anyone unless there is an underlying heart throb?

    As celluloid poet Sahir Ludianvi wrote:
    Ishq dilon ka mael hai payare , yeh nazron ka khel nahin..
    Ishq ki baazi seedhi baazi, dil jeeton aur dil haaron
    Is saudae mae oh dil waalon
    khona kya aur paana kya?

    [Love is the meeting of hearts, and not mere play of sights.
    The stakes in love are straight. It is the heart which wins or loses.
    Who then can say what is gained or what is lost?]
    if modern lovers display this attitude life long, who will oppose love marriage?

    So, let us not speak as if so called love marriage is all rosy, and arranged marriage is full of thorns! If the partners realise their commitment to each other and understand that it is not a contract of convenience, but a sacrament till death do them part, , true love can blossom!

  7. Just one correction. Tholkappiam speaks of கற்பு and களவு மணம்.,which is obviously the equivalent of காதல் மணம்.

  8. சும்மா ஊர் சுற்றுவதற்கும் ஒழுக்கக் கேட்டில் ஈடுபடுவதற்கான தினம்தான். காதலர் தினம்.. தன்காலில் நின்று பொருளீட்டும் ஒரு ஆண் காதல் செய்து(உண்மையாக) மணம் புரிந்து கொள்வதை பெரும்பாலும் யாரும் குறை சொல்வதில்லை. ஆனால் எதிர்காலம் என்ன என்று தெரியாத நிலையில் பதின் பருவத்தினர் ஈடுபடுவது வெறும் பாலினக் கவர்ச்சி என்று சொன்னால் அது நூறு சதவீத உண்மையே. அப்போது அவர்களின் பெற்றோர் அதனைக் கண்டித்தால் தற்கொலைசெய்து கொளவது, ஓடிப்போவது என்பது அறிவற்ற செயலே . ஆனால் நமது ஊடகங்கள் காதலர் தினத்தை ஊதிப் பெரியதாக்கி காசு பார்க்கின்றன. காதலை உயர்த்திப் பிடிக்கும் திரைப்பட இயக்குநர்கள் தங்கள் மகள் தகுதியில்லாத வனை காதலித்தால்(!?) உடனே காவல் துறையை நாடுகின்றனர். காதல் திருமணத்தை ஆதரிக்கும் கட்சிக் காரர்கள், பேச்சாளர்கள் எவ்வளவு பேர் தங்கள் பிள்ளைகளின் காதலை ஆதரிப்பர் என்று ஆய்வு செய்தால் உண்மை விளங்கும். பெரும்பாலான காதல் திருமணங்கள்(ஜாதிஎல்லையைத் தாண்டி) பொருளாதார அளவு கோலை வைத்தே நடக்கின்றன என்கிற உண்மை எவ்வளவு பேருக்குத் தெரியும். ஸமூகத்தின் மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு எல்லாவற்றிலும் விதிவிலக்குண்டு. நடுத்தர வர்க்கம் பல கட்டுப்பாடுகளின் நடுவிலேதான் வாழ வேண்டியுள்ளது. தங்கள் மகள்/மகன் வாழ்க்கை நன்கு அமையவேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பு. அதனால் காதல் திருமணம் சரி வருமா என்று யோசிப்பதில் தவறில்லை. ஆனால் காதலர் தினம் என்பது ஒழுக்கக்கேடுகளுக்கு ஒரு வடிகாலாய் அமையக்கூடாது என்பது கூறுவதில் எந்தத் தவறுமில்லை. பள்ளி செல்லும் மாணவர்/மாணவியர் தங்கள் நல்வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும் கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். வாழ்க்கையை செம்மையுற அமைத்துக் கொள்ள வேண்டும்

  9. //1 கொரிந்தியர் 7:26மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.
    28நீங்கள் திருமணம் செய்துகொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
    29அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். //
    உலகம் மிகச் சீக்கிரம் அழிஅய்ப் போகிறது திருமணமே அவசியமில்லை என்பது தூய பவுல் கடிதம் சொவது.

  10. இதே பவுல் பெயரில் யாரோ எழுதியது என
    //1 திமொத்தேயு 3:2 சபைக் பாதிரியாக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு பெண்ணின் கணவராய், அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவராயும் இருக்க வேண்டும்.//
    கத்தோலிகம் என்றும் பாதிரிகளை மணம் செய்ய அனுமதிக்கவில்லை

  11. I don’t understand Mr.Sharma what his objective of the article is. He started with something and dragged some religions. He tried to substantiate his points and miserably failed. Valentine day is not claimed by anybody that it belongs to one religion. All religion has history of romance. Then why the writer bothers much about Valentine day. Let the young lovers enjoy the day. Who wants all these history. The article is mere waste. Don’t irritate by dragging other religions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *