தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)

TN_election_2016மிழ் நாட்டில் வரும் மே மாதம் 16ம் தேதி மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் முக்கியமான கட்சிகளாக தமிழ் நாட்டின் வழக்கமான கட்சிகளான தி மு க காங்கிரஸ் கூட்டணி, அதிமுக, விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி, பா ஜ க மற்றும் இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர் போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன

இது வெறும் அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல. நம்மையும் நமது வாரிசுகளையும், நமது எதிர்கால சந்ததியினரையும் தனிப்பட்ட அளவிலும் பாதிக்கச் செய்யும் ஒரு முக்கியமான பொது நிகழ்வு ஆகும். ஆகவே இதை எவரும் வெட்டி அரசியல் வம்பாகவோ நம் சொந்த வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத நம் சுயநலன்களுக்குச் சம்பந்தமில்லாத நிகழ்வாகவோ கருதி ஒதுக்கி விட முடியாது. இது நம் அனைவரின் சொந்த வாழ்க்கையின் சகல கூறுகளையும் பாதிக்கப் போகும் ஒரு மாபெரும் ஜனநாயக நடவடிக்கையாகும்.

நமது வேலை, நமது சுற்றுச் சூழல், நமது பாதுகாப்பு, நம் குழந்தைகளின் கல்வி, நம் வேலை வாய்ப்புக்கள், நமது குழந்தைகளின் வேலைவாய்ப்புக்கள், நம் எதிர் கால சந்ததியினரின் கல்வி,வேலை வாய்ப்பு, நம் இயற்கை வளங்கள், நமது இறை நம்பிக்கைகள், நமது வழிபாடுகள், நமது மத நம்பிக்கைகள், நமது தனிப் பட்ட சுதந்திரம், நமது ஒட்டு மொத்தப் பொருளாதாரம், நமது உடல் நலன், நமது மருத்துவச் செலவுகள், நமது பொது ஆரோக்யம், நமது பயணங்கள், நமது ஒட்டு மொத்த அமைதி ஏன் நமது தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை முறைகள் என்று சகலவிதமான தனிப்பட்ட தனி மனிதர்களின் அன்றாட மற்றும் எதிர்கால வாழ்க்கையையே பாதிக்கப் போகும் ஒரு முக்கிய நிகழ்வு இந்தத் தேர்தல்.

இது நம்மை மட்டும் அல்லாமல் நம் குழந்தைகளை மட்டும் அல்லாமல் நம் எதிர்காலத் தலைமுறைகளை மட்டும் அல்லாமல் நிற்பன, நடப்பன, ஊர்வன, பறப்பன, மிதப்பன போன்ற அனைத்து விதமான படைப்புகளையும், காடுகளையும் ,நதிகளையும், மிருகங்களையும், பறவைகளையும்,. நீர்வாழினங்களையும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்தையும் அதன் வழியாக இந்தியாவையும் உலகத்தையும் வெகுவாகப் பாதிக்கச் செய்யப் போகும் ஒரு முக்கியமான தேர்தலாகும். ஆகவே கொஞ்சம், இதைப் படிக்க சில நிமிடங்கள் ஒதுக்கி என் வேண்டுகோளைச் செவி மடுத்து அது குறித்து சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வரவும். எப்படி உங்கள் கல்வி, திருமணம், குழந்தைகள் நலன், வீடு கட்டுதல்/வாங்குதல், வேலை போன்றவற்றிற்கு எல்லாம் அதி முக்கியத்துவம் தருவீர்களோ அது போன்ற ஒரு முக்கியத்துவத்தைத் தயவு செய்து இந்தத் தேர்தல் குறித்தான எனது வேண்டுகோளுக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

***********

தமிழ் நாட்டில் இந்தத் தேர்தலில் நான்கு முக்கியமான கட்சிகள் அல்லது அணிகள் போட்டியிடுகின்றன. அந்த நான்கு அணிகளது சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து எது உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் வாரிசுகளுக்கும், தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், நன்மைக்கும் நல்லதாக இருக்குமோ அந்தக் கட்சிக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுங்கள். எந்தக் கட்சி ஜெயிக்கும் என்பதைப் பார்த்து ஓட்டுப் போடாதீர்கள். எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் நீங்களும், உங்கள் குடும்பமும், உங்கள் எதிர்காலமும், தமிழ் நாடும் ஜெயிக்கும் என்று நினைக்கிறீர்களோ அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள்

நான்கு கட்சிகளின் சாதக பாதகங்கள் ஒரு அலசல்.

திமுக/காங்கிரஸ்/முஸ்லீம் கட்சிகளின் அணி:

1. உலக வரலாற்றிலேயே மாபெரும் ஊழல்களை நிகழ்த்தியவை தி மு க வும் காங்கிரஸும். 2ஜி ஊழல் அவற்றுள் மிகப் பெரியது. அது போக சேது ச்முத்திர மண் தோண்டிய ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், பீரங்கி வாங்கியதில் ஊழல், டெலிஃபோன் லைன் இணைப்பு ஊழல், அந்நியச் செலவாணி மோசடி ஊழல், ஏர்டெல் மேக்ஸிஸ் ஊழல், ஆற்று மண் கடத்தல், கிரானைட் ஊழல், கடல் மண் கடத்தல், நில அபகரிப்பு என்று பல லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள இந்தியச் சொத்துக்களைக் கொள்ளையடித்த உலக மகா கொள்ளையர்கள் தி மு கவும் காங்கிரஸும். இரண்டு கட்சிகளுமே இந்தியாவின் சொத்துக்களைக் கொள்ளையடித்த இந்திய நலன்களுக்கு எதிரான தேச விரோதக் கட்சிகள். வேறு எந்த நாட்டிலும் இவர்கள் கைது செய்யப் பட்டு மரண தண்டனையோ அல்லது வாழ்நாள் முழுக்கச் சிறையோ அளிக்கப் பட்டு நிரந்தரமாக ஜெயிலில் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமே மீண்டும் மீண்டும் இவர்கள் தேசத்தைக் கொள்ளையடிக்கத் தேர்தலில் போட்டி போடுகிறார்கள். இது இந்திய தேசத்தின் சொத்து மட்டும் அல்ல அதில் உங்கள் பங்குகளும் உங்கள் சொத்துக்களும் அடக்கம் என்பதை உணருங்கள்

2. திமுக தமிழ் நாட்டில் பயஙக்ரமான ரவுடிக் கட்சி. சென்ற ஆட்சியின் பொழுது இதன் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் கட்சியின் தலைமைக் குடும்பமும் ஏராளமான தனி நபர்களை மிரட்டியும் கொன்றும் கடத்தியும் அவர்களின் சொத்துக்களை அபகரித்துள்ளன. தனி நபர்கள் சுதந்திரமாக நடக்க முடியாத சூழலை ஏற்படுத்தின. ஒரு தனி நபர் போலீஸைக் கூட அணுக முடியாத பாதுகாப்பற்ற சூழல் தமிழ் நாட்டில் நிலவியது. எதிர்த்தவர்கள் கொல்லப் பட்டார்கள், மிரட்டப் பட்டார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் தமிழ் நாட்டில் தி மு க குண்டர்களினால் நிகழ்த்தப் பட்டன. அவர்கள் எவரும் தண்டிக்கப் படவில்லை. அரசின் ஆதரவுடன் சர்வ வல்லமை படைத்த ஆதிக்கச் சக்திகளாக வலம் வந்தார்கள். அவர்களினால் ஒவ்வொரு தமிழரும் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப் பட்டார்கள். அராஜகமும் கொலைவெறியும் கொள்ளையும் நிகழ்த்தும் கட்சி தி மு க. சென்ற ஆட்சியில் கொலை செய்த, கொள்ளையடித்த, கடத்தல் செய்த, நிலம் அபகரித்த, சொத்து அபகரித்த அதே கொள்ளக் கும்பல்கள்தான் இன்று மீண்டும் போட்டியிடுகிறார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்களது மீதமுள்ள சொத்துக்கள் மட்டும் அல்ல உங்கள் மனைவி பெண்கள் கூட உங்களுக்குச் சொந்தமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் எதையும் எந்த பஞ்சமா பாதகத்தையும் செய்யத் தயங்காத கொடூரமான அயோக்கியர்கள் அவர்களுக்கா உங்கள் ஓட்டு. அவர்களிடமா உங்கள் குடும்பத்தின் உங்கள் எதிர்காலச் சந்ததியினரின் பாதுகாப்பை அடமானம் வைக்கப் போகிறீர்கள் என்று சிந்தியுங்கள்

3. ஊழல், கொலை, கொள்ளை, கடத்தல், சொத்து அபகரிப்பு மட்டும் அல்லாமல் தி மு க கட்சியினர் உங்கள் பிள்ளைகளின் கல்வியிலும் அவர்களது எதிர்கால வாழ்விலும் விளையாடினார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். உலகமே கல்வியில் கடும் போட்டியில் இருக்கும் பொழுது அனைத்து இந்திய அளவில் சிபிஎஸ்ஸி பாடத் திட்டங்கள் மூலமாகக் கல்வியின் தரம் மேம்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் மிகவும் கீழ்த்தரமான எதற்கும் பயனற்ற இந்திய அளவிலான, உலக அளவிலான தேர்வுகளில் கலந்து கொள்ள இயலாத, தன்னம்பிக்கையை வளர்க்காத, சுய அறிவை வளர்க்காத ஒரு கல்வித் திட்டத்தை கொண்டு வந்து உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உங்கள் வருங்காலச் சந்ததியினரின் வருங்காலத்தையும் மொத்தமாக அழித்த அயோக்கியர்கள் தி மு க கட்சிக்காரர்கள் என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் எதிர்கால சந்ததியினரின் எதிர் காலத்தை ஒழித்த ஒரு கயவர்களுக்கா உங்கள் ஓட்டை அளிக்கப் போகிறீர்கள்? சிந்தியுங்கள்.

dmk_true_face_cartoon

4. ஊழல் செய்தார்கள் பல லட்சம் கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்தார்கள், உங்கள் சொத்துக்களை அபகரித்தார்கள், உங்கள் பிள்ளைகளின் கல்வியில் விளையாடினார்கள், உங்களைப் பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தில் வாழ வைத்தார்கள். அது மட்டும் அல்லாமல் பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியம் உள்ள நமது அடிப்படை நம்பிக்கைகளிலும் தலையிட்டார்கள். தமிழ் வருடப் பிறப்பை ஆங்கில வருடப் பிறப்போட்டு ஒட்டி மாற்றினார்கள். இந்துக் கோவில்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தார்கள். இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று அவமதித்தர்கள். இந்துக்கள் பொட்டு வைப்பதை அசிங்கமாகத் திட்டினார்கள். இந்துக்களுக்கு எந்த உரிமையும் இருக்கக் கூடாது என்றார்கள். நம் சடங்குகளை,நமது வழிபாடுகளை கேலி செய்தார்கள் அழித்தார்கள். கோவையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் குண்டு வைத்து இந்துக்களைக் கொல்ல அனுமதித்தார்கள். சகல விதங்களிலும் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக சதி செய்தார்கள் மாற்றம் செய்தார்கள். சேது பாலத்தைத் தனது மகளின் மணல் அள்ளும் கம்பெனியின் லாபத்திற்காக இடிக்க முனைந்தார்கள். கோவில் சிலைகளை மூளியாக்கினார்கள், கடத்திச் சென்று விற்றார்கள். கோவில்களை இடித்தார்கள்.

அது மட்டும் போதாது என்று தங்களது தேர்தல் அறிக்கையில் இந்துக் கோவில் சொத்துக்களை விற்போம் என்கிறார்கள் மாறாக கிறிஸ்துவ முஸ்லீம் சொத்துக்களைப் பாதுகாப்போம் என்கிறார்கள். இந்து மதத்தின் எதிரிகள் இந்து மதத்தை அழிக்க வந்த அரக்கர்கள் தி முகவினர் அவர்களுக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? நாளைக்கு நீங்களும் உங்கள் வாரிசுகளும் குண்டு வைத்துக் கொல்லப் படலாம் அதை ஆதரிக்கும் ஒரு கட்சிக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? உங்களுக்கு நீங்களே குண்டு வைத்துக் கொல்லும் ஒரு தற்கொலை முயற்சி அல்லவா தி முகவுக்கான உங்கள் ஓட்டு? உங்கள் நம்பிக்கைகளையும் மதத்தையும் கோவில்களையும் அழிக்கும் இயக்கத்துக்கா உங்கள் ஓட்டு. கொஞ்சம் நிதானமாக சிந்தியுங்கள்

5. சரி ஊழல் செய்தார்கள், கொள்ளை அடித்தார்கள் கொலை செய்தார்கள், நிலம் சொத்து அபகரித்தார்கள், இந்துக்களைத் திருடர் என்றார்கள் கோவில்களை அபகரித்தார்கள் இவற்றுடன் இவர்களுக்கு ஒரு மாநிலத்தை ஆளும் நிர்வாகத் திறமை ஏதேனும் இருக்கிறதா என்றால் அதுவும் சுத்தமாகக் கிடையாது என்பதே உண்மை. சென்ற ஆட்சியில் கருணாநிதிக்கு தினந்தோறும் சினிமாக்காரர்கள் கூடிக் கூடி விழா எடுத்ததும் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டதும் தன் வாரிசுகளுக்காக உலகத் தமிழ் மாநாடு என்ற காமெடியை நடத்தியதுமே இந்தத் திமுகவினரின் ஆட்சித் திறமை.

தி முகவின் முதல்வர் வேட்ப்பாளருக்கு 94 வயதாகிறது. நிற்கவோ நடக்கவோ உட்காரவோ முடிவதில்லை. கோர்வையாக சிந்திக்கவோ பேசவோ முடிவதில்லை. அவரது மகனான எதிர்கால முதல்வருக்கொ கோர்வையாக எதையும் சிந்திக்கவோ பேசவோ முடிவதில்லை. எழுதி வைத்துக் கொண்டு படிக்கும்  நிர்மூடன் அவர். இவர்கள் நாட்டின் சொத்துக்களையும் இயற்கை வளங்களையும் அழித்தவர்கள். மக்களின் நுண் உணர்வுகளை அவமதித்த மூடர்கள். எந்தவிதமான நிர்வாகத் திறமையும் அற்ற செயல் திறன் இல்லாத மூர்க்கர்கள் மட்டுமே திமுகவினர். இவர்கள் ஆட்சியில் தமிழ் நாடு அனைத்து விதங்களிலும் கீழான இடங்களையே அடைந்துள்ளது. எந்தவிதமான முன்னேற்றத்தையும் இவர்கள் கொண்டு வந்ததில்லை

மாறாக தமிழ் நாட்டினரை குடியர்களாக, பொறுக்கிகளாக, சினிமா பித்தர்களாக, தெய்வ நம்பிக்கை அற்றவர்களாக, தேச நம்பிக்கை அற்றவர்களாக மோசமான கீழ்த்தரமான பிறவிகளாக மாற்றியது மட்டுமே இவர்களது ஒரே சாதனை

ஆகவே மேற்கண்ட அனைத்து குற்றசாட்டுக்களையும் கருத்தில் கொண்டு மே 16 அன்று தயவு செய்து உங்கள் நலனையும், உங்கள் சந்ததியினர் நலனையும், தமிழ் நாட்டின் நலன்களையும், இந்தியாவின் நலன்களையும் ஒட்டு மொத்த மானிட இனத்தின் நலத்தையும் கருத்தில் கொண்டு இந்த அயோக்கியர்களை, திருடர்களை, கொலைகாரர்களைக் கொள்ளைக்காரர்களை தமிழ் நாட்டில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்க ஓட்டுப் போடுங்கள். ம்றந்தும் தி முகவின் உதயசூரியன் சின்னத்திற்கோ காங்கிரஸ் கயவர்களின் கை சின்னத்திற்கோ ஓட்டுப் போட்டு விடாதீர்கள்

அப்படி நீங்கள் திமுகவுக்கு ஆதரவு அளித்தால் அது உங்களுக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டுக்கும், இந்தியாவுக்கும், மானுட இனத்திற்குமே நீங்கள் செய்யும் துரோகமாக இருக்கும். உங்கள் வருங்காலச் சந்ததியினர் உங்களைக் காறி உமிழ்வார்கள். உங்களை என்றுமே மன்னிக்க மாட்டார்கள். நரகத்தில் மட்டுமே உங்களது இடம் உறுதி செய்யப் படும். அந்த நரகம் நீங்கள் வாழும் தமிழ் நாடாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திமுக வைப் புறக்கணியுங்கள்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

3 Replies to “தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 1 (வேண்டாம் தி.மு.க)”

 1. சுதந்திரம் பெற்ற பிறகு வரும் பொதுத்தேர்தலில் இந்த தேர்தல் தமிழகத்திற்கு மிகவும் வித்தியாசமானது நல்லவர்கள் தனியாக,
  நயவஞ்சகர்கள்தனியாக,திருடர்கள் தனியாக, அயோக்கியர்கள் தனியாக,பிரிந்து மக்களை சந்திக்கிறார்கள் இவர்களுக்கு
  வோட்டுப்போடும் வாக்காளர்களை வைத்து மக்களின் தரத்தைக்கூட,எந்த மக்கள்
  எந்த சதவீதத்தில் இருக்கிறார்கள் என்று பிரித்து பார்க்க இந்த தேர்தல் மிகபெரிய
  உதவியாக இருக்கும்.ஆகவே இந்த தேர்தல் அரசியல் வாதிகளின் வெற்றி பற்றி
  தெரிந்து கொள்வதை விட மக்களில் எதனை சதவீதம் பேர் கீழான சிந்தனை உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று அறிய முடியும்.

 2. Grabbing of temple land was introduced by DMK. Always they will aim Hindus. Will he know the history of Bharat. There were no Church or Mosque in the country. Only the Hindu’s temple were demolished and the church or moque had been built. Can u name any church, mosque having a history of 100 years above at least. But the Hindu temples are more than 500 year old. Veermani is doing removal of mangal soothra. Very good initiative. He can also arrange shaving of Beard from our Muslim brother or removal of angi from our brother father. Or will they remove the original tied by them from their wife. In bahrat each and every one had liberty to live as per their culture. There is brotherly approach among all Indians irrespective of HINDU MUSLIM Chrstain It is politician who is destroying every thing for vote

 3. கலாம் என்றால் கலகம்- என்று பேசி,

  -கலாமை ஜனாதிபதி இரண்டாம் முறை ஜனாதிபதி ஆக்கவிடாமல், தடுத்தது .

  -மூப்பனாரை பிரதமர் ஆக விடாமல் தடுத்தது.

  -ஈழ தமிழர்கள் அழிய துணை போனது

  – முல்லை பெரியாறு, காவிரியில் துரோகம்.

  -கச்சத் தீவில் துரோகம்.

  -விளை நிலங்களை அழிக்க மீத்தேன் மற்றும் கெய்ல் திட்ட அனுமதி

  இதற்கெல்லாம் துணை நின்று செய்தது ஏன்?
  தமிழனையும்,தமிழ் மக்களை காக்கவும், முன்னேற்றவுமா ? தன் குடும்பத்தையும் கழக முன்னோடிகளையும் வளமாக்கி கொள்ள வா இல்லை வேறு எதற்கு ?

  -நில அபகரிப்பு, சட்ட ஒழுங்கு சீரழிவு தி மு க வினர், ரவுடிகள் அராஜகம்.
  -பத்திரிக்கை, சினிமா, கேபிள், விமான சேவை தொலைக்காட்சிகளில் ஆதிக்கம்.

  _சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதி

  -தாது மணல் , கிராணை்ட் கொள்ளை
  உணவு கோதுமை, பூச்சிமருந்து ( சர்க்காரியா) , தண்ணீர் (வீராணம்) , செம்மொழி முதல் 2G காற்று வரை ஊழலை நேர்த்தியாக செய்யும் திறமை

  -ஆசியாவின் முதல் வரிசை பணக்கார குடும்பம்

  -தேர்தலுக்கு இலவசங்களை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது,

  கள்ள ஓட்டு, தேர்தலுக்கு பண பட்டுவாடவை திறம்பட அறிமுகப் படுத்தியது.

  மேலே சொன்ன அவ்வளவு சாதனைகளையும் செய்த திமுகவினருக்கு இந்த முறை மக்கள் கடுமையான தண்டனை கொடுப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *